Monday, November 17, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - நவம்பர் 2008

போன முறை புதிர் ரொம்ப எளிதாக இருந்தது என நினைத்து இந்த முறை கொஞ்சம் கடினமாகச் செய்யலாம் என நினைத்துப் புதிர் செய்தேன். ஆனால் இதனை வெள்ளோட்டம் பார்த்த பெனாத்தலும் சரி, வாஞ்சியும் சரி, உம்ம புதிர் ரொம்ப எளிமையாக இருக்கு அப்படின்னு சொல்லிட்டாங்க. ஆக, இந்த மாதமும் எளிமையான புதிர்தான். அடுத்த முறை மேலும் கடினமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!


123
45
6
789
1011
121314

இடமிருந்து வலம்
4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)
5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)
7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)
8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)
10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)
11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)
12. சிறகிலா துருவம்? சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)
14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. (3)

மேலிருந்து கீழ்
1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் (6)
2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் (2,5)
3. சம்போகத்திற்குச் செல்லப் பார் (2)
6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் (4,3)
9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே (6)
13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி (2)



இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.