Tuesday, January 17, 2012

நாகாநீ நல்லா இரு!

இன்று நண்பர் @nchokkan அவர்களின் பிறந்த நாள். எங்கேயோ தொலைவில் இருந்து என்ன பரிசு தருவது?! வருடத்தின் 365 நாட்களுக்கும் தினம் ஒரு பா விளக்கம் தருபவருக்கு வெண்பாவை விட பொருத்தமான பரிசு உண்டா! .

நாக சொக்கநாதன் என்பதவர் முழுப்பெயர் என்பதலால் அவரை செல்லமாக நாகா என விளித்து ’நாகாநீ நல்லா இரு!’ என்ற ஈற்றடியில் ஒரு பத்து வெண்பா எழுதி அனுப்பிவிட்டேன்.

அருமை சொக்கரே, நீர் இன்னும் பல நூற்றாண்டிரும்!

சொக்கன் அதிகாரம்!

(அதி காரமாய் எழுத மாட்டார், அதிகாரமும் செய்ய மாட்டார். அதனால் சொக்கன் அதிகாரம் என்பது பொருத்தமான ஒன்றே இல்லை. ஆனால் வள்ளுவர் பத்து குறள் எழுதினை ஒரு அதிகாரம் எனப் போட்டதனால் நாமும் அப்படித்தானே செய்ய வேண்டியதாய் இருக்கிறது!)

ஆகாத வேலை அதிகம் இருக்குதப்பா

நாகாநீ நல்லா இரு! (1)

போடா வெயிட்டுடன் போகா மயிருமாய்

நாகாநீ நல்லா இரு! (2)

கூடாத நட்புடன் குத்தும் உறவுமின்றி

நாகாநீ நல்லா இரு! (3)

ஆகாது போகுமோ ஆயிரம் புக்குகள்

நாகாநீ நல்லா இரு! (4)

ஓடாய் உழைக்கிறாய் ஓய்வின்றி ஓடுகிறாய்

நாகாநீ நல்லா இரு! (5)

தேனாகப் பேசுவாய் தீந்தமிழ் எழுதுவாய்

நாகாநீ நல்லா இரு! (6)

ஆகா எனும்படி ஆயிரம் புக்கெழுத

நாகாநீ நல்லா இரு! (7)

சீதாவைப் போலச் சிரமத்தில் சிக்காதே

நாகாநீ நல்லா இரு (8)

சாகரமாம் உன்னறிவு சாகசங்கள் செய்வாயே

நாகாநீ நல்லா இரு! (9)

போகங்கள் மூன்றுமே போதாதே நீயெழுத

நாகாநீ நல்லா இரு! (10)

ஆகா / ஆயிரம் காம்பினேஷனில் ரெண்டு குறள் வந்துட்டுது. அதனலா ஒரு போனஸ் வெண்பாவும் போட்டுடறேன்.

மோதா வழியினை மோகிப்பாய் என்றுமே

நாகாநீ நல்லா இரு! (11)

இவற்றை ட்விட்டரில் போட்ட உடன் வெண்பா(ம்)களை அள்ளித் தெளித்தனர் நண்பர்கள் @writerpara @dynobuoy @erode14 @abc_02 @penathal ! இவர்கள் எழுதிய வெண்பாம்கள் இவை

@writerpara

அமர்க்களமாக பாம்போட்டு மகிழ்ந்திடுவோம்/கமர்ஷியல் பர்த்டே இது.

சாகா வரம்பெற்ற சரக்குபல தந்தவனே / நாகாநீ நல்லா இரு.

ராகாடாட்காமில் ராஜாவின் இசைபோல / நாகாநீ நல்லா இரு

வாகா யுனைவாழ்த்த வருடம் ஒருநாள் தந்தாய் / நாகாநீ நல்லா இரு

@dynobuoy

ஆகாவென உலகம் உனை வாழ்திட/ நாகாநீ நல்லா இரு!

சாகாவரம் பெரும் புத்தகங்கள் படைத்திட/ நாகாநீ நல்லா இரு

ஏகா உன் கைவிரல் சோம்பா/ நாகாநீ நல்லா இரு!

பாகா, எழுத்தாம் யானையைப் ஆளும்/ நாகாநீ நல்லா இரு!

சோகா சோம்பா வதன முடைய/ நாகாநீ நல்லா இரு

பாகாய் பதமாய் இனிக்கும் நண்பா/ நாகாநீ நல்லா இரு!

@erode14

வாகா எழுதுவாய் வாசிப்பிலும் கலக்குவாய் / நாகாநீ நல்லா இரு

ஏகாம்பரன் அருளால் ஏற்றங்கள் பெற்றிடுவாய் / நாகாநீ நல்லா இரு

ஆகாத ஒன்றூமே அணுகாதே என்றுமே / நாகாநீ நல்லா இரு

ராகாஸில் லயித்தே ராஜாவினிசை போலே / நாகாநீ நல்லா இரு

நோகாத உடலோடு நீங்காத வளமோடு / நாகாநீ நல்லா இரு

ஸாகாவை உண்டாக்க சாரங்கள் எழுப்பியே / நாகாநீ நல்லா இரு

ஈகாவைப் போலவே இன்பமாய் திரையாய் / நாகாநீ நல்லா இரு

பாகாய் இனித்து பதினாறும் பெற்றே / நாகாநீ நல்லா இரு

வேகாமல் போகாது வெந்திடுமே உன்பருப்பு / நாகாநீ நல்லா இரு

யோகாவில் சேர்ந்தாற்போல் ஓகோவென்றாகிடுவாய் / நாகாநீ நல்லா இரு

பாகாவென்றானைக்கு பரிவான காவலனாய் / நாகாநீ நல்லா இரு

நாகாஸ்திரம் கொண்டு நாற்திசையும் வென்றிடுவாய் / நாகாநீ நல்லா இரு

மோகாஸ்திரம் போட்டாற்போல் வாசகனை வசங்கொண்டே / நாகாநீ நல்லா இரு

மேகாலயாவிலே பொழிகின்ற மழை போல / நாகாநீ நல்லா இரு

.காமில் பாவெழுத நாட்காட்டி பார்க்காத /நாகாநீ நல்லா இரு

சோகாப்பு இன்றியே சுகவாசம் செய்தபடி / நாகாநீ நல்லா இரு

மாகாளி அருளாலே மகளோடும் புகழோடும் / நாகாநீ நல்லா இரு

மாகாளிக் கிழங்கெனவே மகிழ்ச்சியில் ஊறியே / நாகாநீ நல்லா இரு

நீகாமனாய் நின்று நிம்மதியாய்க் நிலங்கண்டே / நாகாநீ நல்லா இரு

ஆகாரக் குறைவின்றி வியாபாரம் நடக்கட்டும் / நாகாநீ நல்லா இரு

ப்ராகாரம் வலம்வந்த ப்ரார்த்தனைகள் பலிக்கட்டும் / நாகாநீ நல்லா இரு

@abc_02

வேகா வெயிலில் வெட்டியா நடக்காம/நாகாநீ நல்லா இரு.

வேகாத இப்பயலோட வெட்டியாப் பேசாம/நாகாநீ நல்லா இரு

@penathal

பாகாய் இனிக்கட்டும் பல்லாண்டு பல்லாண்டு - நாகாநீ நல்லா இரு

போகாத தூரம் பொடிநடையாய் ஆகட்டும் - நாகாநீ நல்லா இரு!

சோகங்கள் எல்லாமே சொல்லிக்காம போகட்டும் - நாகாநீ நல்லா இரு!

தாகம் தணித்திடும் தண்புனலாய் வாழ்ந்திரு - நாகாநீ நல்லா இரு!

வேகமாய் ஆயிரம்நூல் வேண்டியே வந்திடுமே - நாகாநீ நல்லா இரு!

மோகம் அறுக்க முயற்சிகள் செய்யாமல் - நாகாநீ நல்லா இரு!

வாகாக வாழ்க்கை வளைந்திட வாழ்த்துகிறேன் - நாகாநீ நல்லா இரு!

ராகம் இசைத்திட்டே ரத்தபூமி தன்னிலும் - நாகாநீ நல்லா இரு!

மேகம் பொழிந்திடும் மேன்மை அடைந்திடு - நாகாநீ நல்லா இரு!

பாகமாய் வாழ்ந்திடும் பத்தினி புத்திரியோடு - நாகாநீ நல்லா இரு!

Posted via email from elavasam's posterous

Monday, January 09, 2012

புதைபுதிர் - பண்புடன் சிறப்பிதழுக்காக செய்தது

ரொம்ப நாள் ஆச்சு புதிர் போட்டு. நம்ம ஒருபக்கம் ஸ்ரீதர் நாராயணன், பண்புடன் இதழின் சிறப்பாசிரியராகி இருக்கேன். ஒரு புதிர் வேணும்ன்னு கேட்டார். சரி அப்படியாவது விட்டுப் போன புதிர் போடும் பழக்கம் திரும்ப வருதா பார்க்கலாம்ன்னு ஒரு புதிர் போட்டு இருக்கேன்.

நல்லா இருக்கா சொல்லுங்க. வழக்கம் போல விடைகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க. வெறும் விடையைச் சொல்லாம அது எப்படி குறிப்போட ஒத்துப் போகுதுன்னு சொல்லப் பாருங்க. சரியா தவறான்னு சொல்லறது மட்டும் என் வேலை.
புதிருக்கான கட்டங்களும் குறிப்புகளும் கீழே.


1 2 3 4
5 6
78 9
1011 12
13 1415



குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2)

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)


நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)

12.பொன் தலை மாறக் கேடு (4)

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)



  • இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
  • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.


ஸ்டார்ட் மியூஜிக்!


Wednesday, January 04, 2012

இந்த போஸ்ட் உங்கள் சாய்ஸ்! :)

வழக்கமான பல்லவிதான். வெண்பாவில் எதையும் எழுதலாம். சந்தத்தோட எழுதினா படிக்க நல்லா இருக்கும். எளிமையா எழுத முடியும். கரடு முரடா எழுத வேண்டாம். என்னடா இது திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியாச்சான்னு பார்க்காதீங்க. இவ்வளவு நாள் தியரியா சொல்லிக்கிட்டு இருந்ததுக்கு இன்னிக்குப் ப்ராக்டிகல் டெஸ்ட் வெச்சாச்சு. வெச்சது அண்ணன் சொக்கன்.  

வெண்பா பத்திப் படிக்க - இங்க போங்க.

வெண்பா வேண்டாமா? சரி கிரிக்கெட் பத்திப் பேசலாம். 

வழக்கம் போல கிரிக்கெட்டைப் பத்தி எழுதலாம்ன்னு பார்த்தா படுபாவிப் பசங்க அளவே இல்லாம சொதப்பறாங்க. முதல் டெஸ்ட்டில் வழியுவாங்கன்னு எதிர்பார்த்ததுதான். அதுக்கு ஏத்த மாதிரி முதல் இன்னிங்க்ஸில் கொஞ்ச நேர பேட்டிங் தவிர மீதி எல்லாம் வழிசல்தான். 

கிரிக்கெட் புலம்பலை கண்டின்யூ பண்ண - இங்க போங்க

என்னது இதுவும் வேணாமா? 

தமிழோவியம் ஆரம்பிச்சு 10 வருஷம் ஆச்சாம்! அதுக்கு ஒரு வாழ்த்து சொல்ல வேண்டாமா? கட்டாயம் சொல்லணும். வாழ்த்து சொல்ல வேண்டிய இடம் - இது!

Posted via email from elavasam's posterous