Tuesday, December 09, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - டிசம்பர் 2008

இந்த மாதக் கடைசியில் பலருக்கும் விடுமுறை வரும் என்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே இந்த மாதப் புதிர் வெளியிடப்படுகிறது. போன முறையும் புதிர் எளிமையாகவே இருப்பதாகவும் குறிப்புகள் எல்லாம் ஒரு டெம்பிளேட் பாணியில் இருப்பதால் விடுவிப்பது எளிதாகவும் இருப்பதாக வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து இந்த முறை புதிரை சற்றே கடினமாகச் செய்து இருக்கிறேன்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
  • Guinea Pig பெனாத்தலாருக்கும், ஆலோசகர் வாஞ்சிநாதனுக்கும் என் நன்றிகள்.
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.



1
2
345
6





7
89




10
11

12
13
14





15
16


இடமிருந்து வலம்

3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)
6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4)
7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)
8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)
13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)
14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)
15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)
16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)

மேலிருந்து கீழ்

1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)
2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)
4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)
5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)
9. மனைவியின் காலொடித்த குணம் (3)
10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)
11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)
12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4)
13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

151 comments:

  1. சீக்கிரமாப் பதில் சொல்லுங்கப்பா!!

    ReplyDelete
  2. பாத்தேன்..தலை சுத்திப் போனேன்.

    ReplyDelete
  3. //உள்ளேன்//
    நானும் இதையே சொல்லிக்கரேன்.!

    ReplyDelete
  4. நானும் உள்ளேன் அய்யா!

    ReplyDelete
  5. இந்த வாட்டி நல்ல சுவாரசியம். எல்லா விடைகளும் போட்டேன் என்று நினைக்கிறேன். எல்லாம் சரியா தெரியவில்லை.

    இவ
    3. அதிகாரம்
    6. ரயிலடி
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி (இந்த வார்த்தை ரிபீட்டோ உங்க போட்டியில?)
    15. முடியாது
    16. பார்த்திடு

    மேகீ

    1 பிரதாபம்
    2 வலஞ்சுழி
    4 திவசம்
    5 ரசிக்க
    9 தரம்
    10 அதிரடியா
    11 புதுத்துணி
    12 சாம்பார்
    13 சரிபாதி

    ReplyDelete
  6. இந்த முறை படு எளிதாக இருந்தது!!!:-))
    இடமிருந்து வலம்

    3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5) - அதிகாரம்
    6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4) -ரயிலடி
    7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4) - சரக்கு
    8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6) - பரிசுத்தம்
    13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6) - சம்பாதித்து
    14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4) - அம்பாரி
    15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4) - சாதித்து
    16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5) - கூர்ந்திடு

    மேலிருந்து கீழ்

    1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5) - பரம்பரை
    2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5) - வலஞ்சுழி
    4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4) - திவசம்
    5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4) - ரசிக்க
    9. மனைவியின் காலொடித்த குணம் (3) - தரம்
    10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5) - பாதித்திடு
    11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5) - புதுத்துணி
    12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4) - சாம்பார்
    13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4) - சரிபாதி



    நான் முடிச்சுட்டேன்! முடிச்சுட்டேன்! ஆமா, சொல்லிபுட்டேன்!!!

    ReplyDelete
  7. இ.வ
    3.அதிகாரம்.
    7.சரக்கு.
    8.பரிசுத்தம்.
    13.சம்பாதித்து.
    14.அம்பாரி.
    16.பார்த்திடு.

    மே.கீ

    1.பிரதாபம்.
    4.திவசம்.
    5.ரசிக்க.
    9.தரம்.
    10.பாதித்திடு.
    11.புதுத்துணி.
    12.சாம்பார்.
    13.சரிபாதி.

    மீதி மூணும் ரொம்ப கஷ்டம்.

    ReplyDelete
  8. 8.பரிசுத்தம்
    13.சம்பாதித்து
    14.அம்பாரி
    16. பார்த்திடு

    9.தரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  9. இ.வ
    *****
    3. அதிகாரம்
    7.குடுக்கை
    9.தரம் (தாரத்தின் காலொடிக்க தரம் - குணம்)
    13. சம்பாதித்து


    மே.கீ
    ******
    1.அம்பரம்
    12. சாம்பார்
    10. பாதித்திடு

    ReplyDelete
  10. இடமிருந்து வலம்

    3 - அதிகாரம்
    6 - ரயிலடி
    7 - சரக்கு
    8 - பரிசுத்தம்
    13 - சம்பாதித்து
    14 - அம்மாரி
    15 - சாதித்து
    16 - பார்த்திடு

    மேலிருந்து கீழ்

    1 - பிராதாபம்
    2 - வலஞ்சுழி
    4 - திவசம்
    5 - ரசிக்க
    9 - தரம்
    10 - பாதித்திடு
    11 - புதுத்துணி
    12 - சாம்பார்
    13 - சரிபாதி

    6-ம் மற்றும் 12-ம் க்ளூக்கள் நல்லா இருந்தது.

    -அரசு

    ReplyDelete
  11. இடமிருந்து வலம்

    3. அதிகாரம்
    6. ரயிலட்
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    15. பொதிந்து
    16. திடு்க்கிடு

    மேலிருந்து கீழ்

    1. பரம்பரை
    2. வலஞ்சுழி
    4. திவசம்
    5. ரசிக்க
    9. தரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  12. ரீச்சர், நானானி, ராதாக்கா - எல்லாரும் இப்படி அப்பீட் ஆனா எப்படி?

    இதை வெச்சு ஒரு வெவகாரத்தைக் கிளப்ப நினைச்சா இப்படி நீயும் உள்ளேன் ஐயா போட்டுக் கவுத்திட்டியே ஆயில்ஸ்! :(

    ReplyDelete
  13. ஆயில்ஸ், அது அய்யா இல்லை ஐயா!! ஐ தமிழ் எழுத்துத்தான் தைரியமா பயன்படுத்துங்க.

    ReplyDelete
  14. ஸ்ரீதர் நாராயணன்

    குறுக்கெழுத்துப் புதிர் எல்லாம் போடுவீங்களா? சொல்லவே இல்லை!!

    3 6 7 8 13 14 16
    1 2 4 5 9 11 12 13

    இவை அனைத்தும் சரியான விடைகள்

    15 10 என மேகி, இவ ரெண்டுலேயும் ஒண்ணு ஒண்ணு தப்பு. சரி பண்ணிப் போடுங்க.

    ReplyDelete
  15. வாங்க யோசிப்பவரே, இந்த முறை புல் பார்ம் போல!!

    3 6 7 8 13 14 15
    2 4 5 9 10 11 12 13

    இவை அனைத்தும் சரியே.

    16 1 - ஸ்ரீதர் மாதிரி நீங்களும் அதில் ஒண்ணு இதில் ஒண்ணு தப்புப் பண்ணிட்டீங்க. சரி செய்யுங்க.

    ReplyDelete
  16. வாங்க அனுஷா

    3 7 8 13 14 16
    1 4 5 9 10 11 12 13

    என போட்டது எல்லாமே சரி. மத்ததும் அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்லை. கொஞ்சம் யோசிச்சுப் போட்டுடுங்க. சரியா.

    ReplyDelete
  17. வாங்க பீமார்கன்

    8 13 14 16
    9 10 11 12 13

    என போட்டது எல்லாம் சரிதான்.

    ReplyDelete
  18. வாங்க சிபி

    3 13
    9 12 10

    இவை சரி

    7,1 - இவை இரண்டும் சரி இல்லை.

    ReplyDelete
  19. வாங்க அரசு

    வழக்கம் போலக் கலக்கிட்டீங்க. 14 மட்டும் எழுத்துப்பிழையா இல்லை தவறான விடையான்னு சந்தேகமா இருக்கு. அதை மட்டும் இன்னும் ஒரு முறை போடுங்க ப்ளீஸ்.

    நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

    ReplyDelete
  20. வடகரை வேலன், கொஞ்சம் அவசரம் போல!!

    3 7 8 13 14
    1 2 4 5 9 10 11 12 13

    சரியான விடைகள்.

    6 - எழுத்துப்பிழை சரி செய்யுங்க
    15 16 சரி இல்லை

    ReplyDelete
  21. 12.சாம்பார்
    ஒரு போட்டிக்கு ஒரு விடை என்ற அளவிலே நம்ம அறிவு இருக்கு என்னப் பண்ணுறது

    ReplyDelete
  22. சரி வைச்சுக்கோங்க,
    1) பிரதாபம்
    16) பார்த்திடு

    ReplyDelete
  23. தேவு

    ஒண்ணே ஒண்ணு சொன்னாலும் சரியான விடைதான்யா சொல்லி இருக்க!!

    அம்புட்டு எல்லாம் கஷ்டம் இல்லை. கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.

    ReplyDelete
  24. யோசிப்பவரே, ஆல் ஓக்கே!! அடுத்து நீர் ஒரு புதிர் தயார் பண்ணிடும்!! :))

    ReplyDelete
  25. //அடுத்து நீர் ஒரு புதிர் தயார் பண்ணிடும்!! :))//

    பண்ணியாச்சு! நாளைக்கு போஸ்ட் பண்ணிடறேன்!!

    ReplyDelete
  26. உள்ளேன் அய்யா!

    ReplyDelete
  27. இடமிருந்து வலம்

    3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)
    அதிகாரம்

    6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4)
    ரயிலடி (உதவி : மிஸ்டர் யோசிப்பவர்.)

    7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)
    சரக்கு

    8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)
    பரிசுத்தம்

    13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)
    சம்பாதித்து

    14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)
    அம்பாரி (உதவி : மிஸ்டர்.யோசிப்பவர்)

    15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)
    சாதித்து

    16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)
    பார்த்திடு



    மேலிருந்து கீழ்

    1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)
    பிரதாபம்.(குறிப்புதவி : மிஸ்டர் யோசிப்பவர்)

    2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)
    வலஞ்சுழி.(உதவி : மிஸ்டர் யோசிப்பவர்)

    4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)
    திவசம்

    5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)
    ரசிக்க

    9. மனைவியின் காலொடித்த குணம் (3)
    தரம்

    10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)
    பாதித்திடு

    11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)
    புதுத்துணி

    12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4)
    சாம்பார்

    13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)
    சரிபாதி

    ReplyDelete
  28. உள்ளேன் ஐயா, முயற்சி செய்றேன்

    ReplyDelete
  29. மிஸஸ் யோசிப்பவர், எல்லா விடைகளும் சரி!! இப்படி ஒரு கணவன் கிடைக்கக் குடுத்து வெச்சு இருக்கணும்!! இல்லையா! :)))

    ReplyDelete
  30. இ.வ

    6.ரயிலில்(?)
    15.சாதித்து.

    ReplyDelete
  31. இவ்ளோதான் எனக்குத் தெரியுது... இன்னும் முயற்சி பண்ணிட்டிருக்கேன்... :-((

    இவ:
    3 -> அதிகாரம்
    7 -> சரக்கு
    16 -> பார்த்திடு

    மேகீ:
    4-> திவசம்
    5-> ரசிக்க
    13-> சரிபாதி

    ReplyDelete
  32. ச்சின்னப்பையன்

    3 7 16
    4 5 13

    எனப் ப்போட்டது எல்லாம் ச்சரிதான்!!

    ம்மத்ததும் ப்போடுங்க!! :))

    ReplyDelete
  33. இவ்ளோதான் எனக்குத் தெரியுது... :-((
    சரியா பாருங்க...

    இவ:
    3 -> அதிகாரம்
    6-> ரயிலடி
    7 -> சரக்கு
    8->பரிசுத்தம்
    13->சம்பாதித்து
    14->அம்பாரி
    16 -> பார்த்திடு

    மேகீ:
    1-> பரம்பரை
    4-> திவசம்
    5-> ரசிக்க
    9->தரம்
    12->சாம்பார்
    13-> சரிபாதி

    ReplyDelete
  34. இடமிருந்து வலம்
    3. அதிகாரம்
    6. ரயிலடி
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    15. சாதித்து
    16. கூர்ந்திடு

    மேலிருந்து கீழ்
    1. பரம்பரை
    2. வலஞ்சுழி
    4. திவசம்
    5.ரசிக்க
    9. தரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  35. ச்சின்னப்பையரே

    3 6 7 8 13 14 16
    1 4 5 9 12 13

    எனப் போட்டது எல்லாம் சரி!!

    இன்னும் நாலுதானே போடுங்க!!

    ReplyDelete
  36. வாங்க தமிழ்ப்பிரியரே

    3 6 7 8 13 14 15
    2 4 5 9 10 11 12 13
    இவை சரியான விடை

    16 1 இவை தவறு

    ReplyDelete
  37. 1. பரம்பரை தவறானதா? .. :(

    ReplyDelete
  38. 6 ரயிலடி
    15 சாதித்து
    16 பார்த்திப

    ReplyDelete
  39. தமிழ்ப்பிரியரே

    1 தவறான விடைதான். :(

    ReplyDelete
  40. வடகரை வேலன்

    6 15 சரி

    16 - சரி இல்லையே. ஜஸ்டிபிகேஷன் பண்ணுங்க.

    ReplyDelete
  41. தமிழ்ப்பிரியரே

    16 - மேல வேலனுக்குச் சொன்னதுதான்.

    ReplyDelete
  42. இலவசக்கொத்தனார் said...

    சீக்கிரமாப் பதில் சொல்லுங்கப்பா!!
    //


    ரிப்பிட்டேய்ய் !

    ReplyDelete
  43. 16 பார்த்திடு

    ReplyDelete
  44. வேலரே

    இப்போ சரியா இருக்கு!! :)

    ReplyDelete
  45. இ.வ
    6. ரயிலடி
    8.பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14.அம்பாரி
    16. பார்த்திடு

    மே. கி
    1.பரம்பரை
    2. வலஞ்சுழி
    4.சத்தம்
    5.பல்சுவை
    9.தரம்
    10,பாதித்திடு
    11.புதுத்துணி
    12.சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  46. இ.கொ.

    தவற விட்ட இரண்டு விடைகள்.

    இவ 15 சாதித்து
    மேகீ 10 பாதித்திடு

    ReplyDelete
  47. வாங்க சின்ன அம்மிணி

    6 8 13 14 16
    2 9 10 11 12 13

    சரி

    1 4 5 ம்ஹூம்

    ReplyDelete
  48. இ-வ

    3. அதிகாரம்

    8. பரிசுத்தம்

    13. சம்பாதித்து

    14. அம்பாரி
    16.பார்த்திப


    மே-கீ

    9. தரம்

    11. புதுத்துணி

    13. சரிபாதி

    ReplyDelete
  49. இ.வ.
    3. அதிகாரம்
    மே.கி
    4.திவசம்

    ReplyDelete
  50. கொத்ஸ்,

    இந்தமுறை புதிர்கள் முதலில் கொஞ்சம் கடினமாகவே தோன்றியது.. ஆனாலும் எளிமைதான். நான் விடை கண்டுபிடிக்க முடியாதாவை நீங்கலாக...

    இவ:
    3. அதிகாரம்
    6.
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    15. ஆதித்து
    16. பார்த்திடு

    மேகீ:
    1.
    2.
    4. திவசம்
    5. ரசிக்க
    9. தனம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  51. ஸ்ரீதர்

    இப்போ வந்த ரெண்டுமே சரி. எல்லாம் முடிச்சாச்சு போல!

    ReplyDelete
  52. ரீச்சர்

    போட்ட விடைகள் எல்லாம் வெச்சுப் பார்த்தா விவகாரமா இருக்கே!! :))

    3 8 13 14
    9 11 13

    இவை சரியானவை

    ReplyDelete
  53. சின்ன அம்மிணி

    3 4 ஓக்கே!

    ReplyDelete
  54. வாங்க சதீஸ்

    3 7 8 13 16
    4 5 10 11 12 13

    இவை சரியான விடைகள். கொஞ்சம் முயன்று பாருங்கள். மத்ததும் போட்டுடலாம்.

    ReplyDelete
  55. 3.அதிகாரம்
    4. திவசம்

    ReplyDelete
  56. தனது முயற்சியில் சற்றும் மனம்தளராத பீமார்கன் மீண்டும் குறுக்கெழுத்தை முயல்கிறார்!!

    3 4 5 7 15

    எல்லாம் சரியான விடைதான் மாஸ்டர்!

    ReplyDelete
  57. இன்னாப்பா இது திடுதிப்புன்னு போட்டா எப்படி.
    சொரம் அடிக்குது. அதிக நேரம் உக்கார முடியலை. கெடக்கு. இதோ முதல் அமர்வு:

    இடமிருந்து வலம்

    3. அதிகாரம்
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    16. பார்த்திடு

    மேலிருந்து கீழ்

    4.திவசம்

    9. தாரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  58. விட்டுப்போச்சு:
    மேலிருந்து கீழ்
    5.ரசிக்க

    ReplyDelete
  59. வாங்க திவா

    உடம்பு சரி இல்லையா? என்ன ஆச்சு!! உடம்பு சரி இல்லைன்னாலும் மண்டைக்குள்ள மெசின் சரியாத்தான் ஓடுது. போட்டது எல்லாம் சரி!! :)

    3 7 8 13 14 16
    4 5 9 10 11 12 13

    எல்லாம் சரியான விடை. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வந்து மத்ததை முடியுங்க. :)

    ReplyDelete
  60. 16. பார்த்திடு
    ஒன்றுக்கு ‘பரம்பரை’ தவிர வேற ஏதும் தோணலை. இத்தோட விடை வரட்டும் பார்த்துக்கிறேன்.

    ReplyDelete
  61. இ-வ

    3. அதிகாரம்
    6.ரயிலடி
    7.சரக்கு
    8.பரிசுத்தம்
    13.சம்பாதித்து
    14.அம்பாரி
    16.பார்த்திடு

    மே-கி

    1.பரம்பரை
    4.திவசம்
    5.ரசிக்க
    9.தரம்
    11.புதுத்துணி
    13.சாம்பார்
    14.சரிபாதி

    ReplyDelete
  62. தமிழ்ப்பிரியரே

    16 - சரிதான்.

    1 - கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சரியா வரும்! :))

    ReplyDelete
  63. வாய்யா சங்கரு

    ரெம்பிளேற் இல்லாத புதிரா? இது ஓக்கேவா? :))

    3 6 7 8 13 14 16
    4 5 9 11 12 13

    எல்லாம் சரிதான்.

    1 தப்பு

    மத்ததும் சீக்கிரம் வந்து போடும்! :)

    ReplyDelete
  64. நன்றி கொத்ஸ்.. :) இன்னும் கொஞ்சம்தான் பாக்கி இருக்கு.. திரும்பவும் வர்ரேன்..

    ReplyDelete
  65. இ.வ

    3. அதிகாரம்
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    15. சாதித்து
    16. பார்த்திடு


    மே.கி

    4. திவசம்
    5. ரசிக்க
    9. தரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  66. வாய்யா கப்பி

    3 7 8 13 14 15 16
    4 5 9 10 11 12 13

    போட்டது எல்லாம் சரி மாப்ளே!! :))

    ReplyDelete
  67. மே.கீ.
    1. பிரதாபம் ??

    ReplyDelete
  68. சின்ன அம்மிணி

    1 - சரியான விடைதான்!!!

    எதுக்கு இம்புட்டு சந்தேகம்? :)

    ReplyDelete
  69. வாங்க பாலகிருஷ்ணன்

    124 தவிர மற்றவை அனைத்தும் சரியே!

    ReplyDelete
  70. இடமிருந்து வலம்

    3. அதிகாரம்
    6. ரயிலடி
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    15. சாதித்து
    16. பார்த்திடு

    மேலிருந்து கீழ்

    1. பரம்பரை
    2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)- தெரியலங்க

    4. திவசம்
    5. ரசிக்க
    9. தரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  71. chat எல்லாம் கணக்கில சேராதா?
    officila சொன்னாத்தான் excel sheet update -ஆகும் போலிருக்கு.

    14 - அம்பாரி

    -அரசு

    ReplyDelete
  72. மன்னிச்சுக்குங்க அரசு. மறந்துட்டேன். இப்போ சரி பண்ணியாச்சு. மார்க் குடுத்தாச்சு. :)

    ReplyDelete
  73. வாங்க விஜி

    3 6 7 8 13 14 15 16
    4 5 9 10 11 12 13

    இவை சரியான விடைகள்.

    ReplyDelete
  74. 8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    16. பார்த்திடு


    9. தரம்
    12. சாம்பார்
    13. சரிபாதி
    10. பாதித்திடு
    11. புதித்துணி

    ReplyDelete
  75. வாங்க ஏஸ்

    8 13 14 16
    9 10 11 12 13

    என போட்டது எல்லாம் சரி. மத்த விடைகள் எங்க?

    ReplyDelete
  76. பாலகிருஷ்ணன்

    4 சரியான விடை.

    ReplyDelete
  77. இடமிருந்து வலம்
    -----------------
    3. அதிகாரம்
    6. ரயிலடி
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    15. சாதித்து
    16. பார்த்திடு

    மேலிருந்து கீழ்
    --------------
    1. ??
    2. வலஞ்சுழி
    4. திவசம்
    5. ரசிக்க
    9. தரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    ReplyDelete
  78. //வாய்யா சங்கரு

    ரெம்பிளேற் இல்லாத புதிரா? இது ஓக்கேவா? :))
    ///


    ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி டைட் பண்ணிடீங்களே. நாலஞ்சு நல்ல டஃப் தான் இந்தத் தடவை(எனக்கு) :)

    சங்கர்

    ReplyDelete
  79. வாங்க சீனு

    என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்?

    3 6 7 8 13 14 15 16
    2 4 5 9 10 11 12 13

    எல்லாம் சரி. 1 தெரியலையா? ஏன்?

    ReplyDelete
  80. வைரஸ் சுரம்தான் இகொ.
    இப்ப பரவாயில்லை. சுரம் விட்டது. களைப்பு மட்டும்தான் இருக்கு.
    சரி சரி மீதி இதோ:

    இடமிருந்து வலம்
    6. ரயிலடி
    15. சாதித்து

    மேலிருந்து கீழ்

    1. பரம்பரை
    2. வலஞ்சுழி

    ReplyDelete
  81. திவா
    6 15 2 - சரி
    ஆனா 1 இன்னும் தவறு

    ReplyDelete
  82. இ.வ.
    7. சரக்கு

    ReplyDelete
  83. மே.கீ
    5.ரசிக்க

    ReplyDelete
  84. சின்ன அம்மிணி

    5 7 ரெண்டும் ஓக்கே!

    ReplyDelete
  85. இவ:
    3. அதிகாரம்
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    14. அம்பாரி
    16. பார்த்திடு

    மேகீ
    4. திவசம்
    5. ரசிக்க
    9. தரம்
    10. பார்த்திடு
    12. சாம்பார்
    13. சரிபாதி

    இப்போதைக்கு இவ்வளவு தான்:-)

    ReplyDelete
  86. வாங்க கெபி அக்கா

    3 7 8 14 16
    4 5 9 10 12 13

    எல்லாமே சரி. மத்ததையும் சீக்கிரமா போடுங்க! :))

    ReplyDelete
  87. இ.வ.
    6. ரயிலடி
    13. சம்பாதித்து

    மே.கீ
    1. பரம்பரை

    ReplyDelete
  88. கெபி அக்கா

    6 13 ஓக்கே
    1 தப்பு

    ReplyDelete
  89. ம்ம்ம்..எப்படின்னு இன்னும் வொர்கவுட் பண்ணலை. ஸோ..
    மேலிருந்து கீழ்

    1. பாரம்பர

    ReplyDelete
  90. திவா

    1 - இன்னும் தப்பு. கொஞ்சம் வித்தியாசமா யோசிங்க! :)

    ReplyDelete
  91. வெர்க் அவுட் பண்ணிட்டேன்.
    மேலிருந்து கீழ்

    1.பிரதாபம்
    ச்சே! இவ்வளோ சிம்பிள் இப்படி தண்ணி காட்டிடுச்சு! இப்ப போட ஒரு நிமிஷம்தான் ஆச்சு!

    ReplyDelete
  92. ஏனய்யா, தூங்கவே மாட்டீரா??!!
    நாள் முழுக்க பதில் போடறீரு!
    :-))

    ReplyDelete
  93. திவா

    இப்போ சரியாயிடுச்சு!! சொன்னேனே, இது ரொம்ப ஒண்ணும் கஷ்டம் இல்லைன்னு. :))

    ReplyDelete
  94. //ஏனய்யா, தூங்கவே மாட்டீரா??!!
    நாள் முழுக்க பதில் போடறீரு!
    :-))//

    நாள் முழுக்க தூங்க நான் என்ன கவர்மெண்ட் ஆபீஸிலா வேலை பார்க்கறேன். தூங்கறது எல்லாம் நைட்டில்தான்! (சரியாப் படியுங்க - நைட்டில், நைட்டியில் இல்லை!)

    ReplyDelete
  95. இடமிருந்து வலம்:
    3. அதிகாரம்
    6. ரயிலடி
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    15. சாதித்து
    16. பார்த்திடு

    மேலிருந்து கீழ்:
    1. ப்ரதாபம்
    2. வலஞ்சுழி
    4. திவசம்
    5. ரசிக்க
    9. தர்ம்
    10. பாதித்திடு
    12. சாம்பார்
    13. புதுத்துணி

    ReplyDelete
  96. வாங்க மஞ்சுளா, கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா.... :))

    எல்லாம் சரின்னு சொல்ல வந்தேன். ஆனா அந்த 9 மட்டும் சரி இல்லை. அதை சரியாப் போடுங்க.

    11ஆவது விடையைக் காணுமே....

    ReplyDelete
  97. சின்னவரே

    நீங்க தனிமடலில் அனுப்பிய விடைகளை மறந்தே போயிட்டேன்!! மாப்பு ஐயா!!

    3 7 8 13 14 15 16
    4 5 9 10 12 13

    இவை சரியான விடைகள்!

    ReplyDelete
  98. கீதாம்மா

    அவ்வளவு சீக்கிரம் விடைகளை ரிலீஸ் பண்ணிடுவோமா?! :) (உங்களுக்குத்தான் வெயிட்டிங் அப்படின்னு சொல்லி இருந்தா நல்ல பெயர் கிடைச்சு இருக்குமோ!) :))

    3 7 8 13 14 16
    4 5 11 12 13

    இவை எல்லாம் சரியான விடைகள்.

    2 எல்லாம் நீங்க போடாமப் போனா மாப்பே கிடையாது. (6 தப்பா போட்டதுனால வரலைன்னு நினைக்கிறேன். முதலில் ரெண்டை போடுங்க!)

    மத்தது எல்லாமும் முயற்சி செய்யுங்க.

    ReplyDelete
  99. 9. தர்ம
    11. புதுத்துணி
    13. சரிபாதி

    இப்ப சரியா?

    ReplyDelete
  100. ஆஹா, 9 திரும்பவும் தப்புனு நினைக்கறேன்.

    9. தங்க

    இப்ப சரியா?

    (ஏன் இப்படி ஒரு கேள்வி?வீட்டுல ரொம்ப திட்டறாங்களா?! மனைவிக்கு என்ன குணம்னு மண்டை காய விட்டுட்டீங்களே!)

    ReplyDelete
  101. 1. ஒருவேளை கலைத்துப் போடனுமோ?
    ம்ரரைபப இப்படி?
    மண்டை காய்ந்தது தான் மிச்சமா இருக்கு..:))

    ReplyDelete
  102. மஞ்சுளா

    9 தவிர மற்றவை அனைத்தும் சரி!!

    ReplyDelete
  103. மஞ்சுளா என்ன குழப்பி விட்டுட்டீங்க? 13 இவ சரியாப் போட்டு இருக்கீங்க ஆனா 9க்கு தந்திருக்கும் பதில் அதோட இணைஞ்சு வரலையே....

    ReplyDelete
  104. தமிழ்ப்பிரியன்

    மண்டை காயுதா!! பேஷ் பேஷ்!! :))

    1 - இன்னும் தப்புதான்!! :)

    ReplyDelete
  105. //மஞ்சுளா என்ன குழப்பி விட்டுட்டீங்க? 13 இவ சரியாப் போட்டு இருக்கீங்க ஆனா 9க்கு தந்திருக்கும் பதில் அதோட இணைஞ்சு வரலையே....//


    சரி ஒரு வழியா கண்டு பிடிச்சாச்சு.

    9. தரம்

    ReplyDelete
  106. மஞ்சுளா

    இப்போ சரியா இருக்கு. இதுக்கு எங்க தங்கமணியை எல்லாம் இழுத்து ஒரு வழி பண்ணிட்டீங்களே!! :))

    ReplyDelete
  107. //இப்போ சரியா இருக்கு. இதுக்கு எங்க தங்கமணியை எல்லாம் இழுத்து ஒரு வழி பண்ணிட்டீங்களே!! :))//

    நான் முதல்ல நினைச்சதே வேற, மனைவியின் குணம்னு நினைச்சு சொதப்பியாச்சு. ஒரு வேளை தங்கமான குணம்னு சொல்ல வர்றீங்களோன்னு நினைச்சு அடிச்சது அது. :-(

    ReplyDelete
  108. மஞ்சுளாக்கா, அதெல்லாம் வெள்ளாட்டுக்குச் சொன்னது. ரென்சன் வேண்டாம்! :))

    ReplyDelete
  109. 6. ரயிலடி
    2. வலஞ்சுழி
    சரியா? ;)

    ReplyDelete
  110. 3. காரச்சுவை

    1. பிரதாபம்

    ReplyDelete
  111. 3. அதிகாரம்
    6. ரயிலடி
    7. சரக்கு
    8. பரிசுத்தம்
    13. சம்பாதித்து
    14. அம்பாரி
    15. சாதித்து
    16. பார்த்திடு

    1. பிரதாபம்
    2. வலஞ்சுழி
    4. திவசம்
    5. ரசிக்க
    9. தரம்
    10. பாதித்திடு
    11. புதுத்துணி
    12. சாம்பார்
    13. சரிபாதி

    போன முறை எத்தனை சொன்னேன்னு ஞாபகம் இல்லை, அதனால எல்லாத்தையுமே போட்டாச்சு.

    ரிப்பீட்டு இருந்தா கண்டுக்காதீங்க.. :)

    ReplyDelete
  112. நான் கொஞ்சம் தாமதமா வந்தா, நீங்க சீக்கிரம் புதிர் போட்டாச்சா இந்த மாதம்?

    விடைகள்:

    இடமிருந்து வலம்

    3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5) - அதிகாரம்

    6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4) - ரயிலடி

    7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4) - சரக்கு

    8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6) - பரிசுத்தம்

    13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)- சம்பாதித்து

    14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)- அம்பாரி

    15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4) - சாதித்து

    16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)- பார்த்திடு

    மேலிருந்து கீழ்

    1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)- பரம்பரை

    2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)- வலஞ்சுழி

    4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4) - திதி

    5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4) - ரசிக்க

    9. மனைவியின் காலொடித்த குணம் (3) - தரம்

    10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)- பாதித்திடு

    11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)- புதுத்துணி

    12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4)- சாம்பார்

    13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)- சரிபாதி

    10ம் 15ம் விடைகள் சரியான்னு சந்தேகமாவே இருக்கு..

    ReplyDelete
  113. பீ மார்கன்

    சரி சரி!! (6,2)

    சிரிப்பானைப் பார்த்தா பிட் அடிச்ச மாதிரி இருக்கே!! :))

    ReplyDelete
  114. ஏஸ்

    அதுக்குத்தானே கஷ்டப்பட்டு எக்ஸெல் ஷீட் எல்லாம் போடறேன் ஒரு பார்வை பார்க்கறது...

    எல்லாம் சரிதான்!! :))

    ReplyDelete
  115. வாங்க பாசமலர்

    காணுமேன்னு நினைச்சேன்.

    1 தவறான விடை
    4 நாலு எழுத்தில் விடை கேட்டா ரெண்டு எழுத்தில் தந்தா எப்படி?

    மத்தது எல்லாம் சரி. முக்கியமா 10 15 ரெண்டுமே சரி!! :))

    ReplyDelete
  116. வசுப்ரதா

    2 தவிர மற்றவை அனைத்துமே ஓக்கே

    ReplyDelete
  117. அய்யய்யோ.. கொத்ஸ்.. என் நேர்மையை இப்படி சந்தேகிக்காதீங்க..
    இதை நான் வன்மையாகக் கடிக்கிறேன்.. சாரி.. கண்டிக்கிறேன்..

    அது நான் தோராயமா போட்ட பதில்.. அதுக்காகத்தான் அந்த சிரிப்பான்..

    ReplyDelete
  118. முதலில் கண்ணடிச்சீரு. அப்புறம் கடிச்சீரு, இப்போ கண்டிக்கறீரு. நான் என்ன செய்ய!! :))

    உத்தேசமா சொன்னாலும் உருப்படியா சொல்லிட்டீரே!! :))

    ReplyDelete
  119. 1. இன்னும் தெரியவில்லை..
    4. திவசம்..இதுதான் முன்னே எழுதினேன்..

    ReplyDelete
  120. ராமையா நாராயணன்,

    தனிமடலில் தந்த விடைகளுக்கு நன்றி.


    3 7 8 13 14 15 16
    4 5 9 10 11 12 13

    இவை எல்லாம் சரியான விடைகள்.

    ReplyDelete
  121. 15.இ.வ
    சாதித்து
    (இது ஒண்ணைத்தவிர ஒண்ணும் தோணமாட்டேங்குது. எக்ஸ்ட்ரா க்ளூ ஏதாச்சும் உண்டா) பேராசைதான் எல்லாமே போடணும்னு :)

    ReplyDelete
  122. பாசமலர்

    4 இப்போ சரி. இதையே முன்னாடி எழுதி இருந்தா நான் ஏன் மதிப்பெண் இல்லைன்னு சொல்லப் போறேன்?! :))

    ReplyDelete
  123. சின்ன அம்மிணி

    பேராசை பெருநஷ்டமுன்னு யார் சொன்னது?! :))

    15. இப்போ போட்ட விடை சரியானதுதான்!! ஆனா ஏன் இது சரியான விடை அப்படின்னு நீங்க ஒரு பின்னூட்டம் போட்டே ஆகணும்! :)

    ReplyDelete
  124. அடம் பிடிச்சு சாதிக்கறேன்னு ரங்கமணி சொல்வாரு. இதுதான் என் Justification.

    ReplyDelete
  125. இ.வ

    3. அதிகாரம்
    7. சரக்கு
    13.சம்பாதித்து
    14.அம்பாரி
    16.பார்த்திபா

    மேகி.

    1.பராபரம்
    2.இடவலம்
    4.திவசம்
    9.வினைம
    10.பாதிகுத்து
    12.சாம்பார்
    13.சரிபாதி

    ReplyDelete
  126. சின்ன அம்மிணி, உங்க ரங்கமணி அதெல்லாம் சொல்லறாரா? ரொம்பத்தான் தைரியம். எனக்கு இது ஜஸ்டிபிகேஷனாத் தெரியலை.

    ReplyDelete
  127. கிடைச்சுருச்சுய்யா..கிடைச்சுருச்சுய்யா..

    1. பிரதாபம்

    4 மேட்டர்..ஒருவேளை தட்டச்சியபோது என் பக்கம் தவறு நேர்ந்திருக்கக் கூடும்..

    ReplyDelete
  128. பாசமலர்
    1 - இப்போ ஓக்கே!! எவ்வளவு முடியைப் பிச்சுக்கிட்டீங்க!! :))

    4 - மறப்போம் மன்னிப்போம்!! :))

    ReplyDelete
  129. கொத்ஸ்

    என்னோட பதில்கள்
    என்னாச்சு.

    ReplyDelete
  130. பெருசு

    இன்னமும் நம்ம பதிவு பக்கமெல்லாம் வந்துக்கிட்டுதான் இருக்கியா!! :))

    3 7 13 14
    4 12 13

    இவை சரியான விடைகள்!!

    ReplyDelete
  131. பெருசு

    தாஆஆஆமதத்திற்கு மன்னிக்கவும். வேலை வேலைன்னு ஒரு எழவு கழுத்தறுக்குது! :)

    ReplyDelete
  132. 8.பரிசுத்தம்
    16.பார்த்திடு
    6.ரயிலடி
    15.மூடாதது

    மே.கி
    1.ஆரம்பம்
    9.தரம்
    11.புதுத்துணி

    ReplyDelete
  133. பெருசு

    6 8 16 9 11

    சரியான விடைகள்.

    ReplyDelete
  134. கீதாம்மா

    9 சரி

    தனிமடல் பார்க்கவும்.

    ReplyDelete
  135. முதல் விடைகள்

    இ-வ
    3) அதிகாரம்
    7) சரக்கு
    8) பரிசுத்தம்
    13) சம்பாதித்து
    14) அம்பாரி
    16) பார்த்திடு

    மே-கீ

    4) திவசம்
    5) ரசித்து
    9) தரம்
    11) புதுத்துனி
    12) சாம்பார்
    13) சரிபாதி

    ReplyDelete
  136. விடை போடுவதாக உத்தேசம் எதுவுமில்லையா? இந்த புதிர் ரொம்ப நாளான மாதிரி தெரியுதே :-)

    ReplyDelete
  137. ஸ்ரீதர், விடைகளை எழுத உட்காரும் பொழுதெல்லாம் யாராவது புதிதாக விடை சொல்ல வருகிறார்கள். சரி அவர்களுக்கும் நேரம் தரலாமே என விடைகள் வெளியிடுவதை ஒத்திப் போடுகிறேன். முடிந்தால் நாளை செய்யலாம்!

    ReplyDelete
  138. மகேஷ்

    3 7 8 13 14 16
    4 9 11 12 13

    இவை சரியான விடைகள்.

    ReplyDelete
  139. //ஆனா ஏன் இது சரியான விடை அப்படின்னு நீங்க ஒரு பின்னூட்டம் போட்டே ஆகணும்! :)//

    பாருங்க சரியான ஜஸ்டிபிகேஷன் சொல்ல மறந்து போயிட்டேன்.
    மூடு - சாத்து
    திறந்த முதலொடு - முதல் எழுத்து தி

    "சாத்து" க்குள்ள தி எங்க பொருந்தும்னு பாத்தேன் விடை கிடைச்சது. சரின்னு நினைக்கறேன்.

    ReplyDelete
  140. சின்ன அம்மிணி

    நீங்க பாஸ்!! (நான் சொல்வது Pass, வீட்டில் அவரு சொல்லும் Boss இல்லை!) :))

    ReplyDelete
  141. அட இது 150ஆவது பின்னூட்டம்! :))

    ReplyDelete
  142. கொத்ஸ், check this out.. :)
    http://veeruthemudblood.blogspot.com/2008/12/blog-post.html

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!