Wednesday, August 05, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - ஆகஸ்ட் 2009

தொடர்ந்து புதிர்கள் போட்டு வந்ததில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. பெரிய இடைவெளியாகவே விழுந்து விட்டது. இனி இது போல் நிகழாதிருக்க பதிவர்களின் குலதெய்வமாய் விளங்கும் மகரநெடுங்குழைக்காதன் அருள் புரிவானாக.

இந்த மாதக் குறுக்கெழுத்துப் புதிர் இந்தப் பதிவில் மட்டுமல்லாது திண்ணை இதழிலும் வெளி வந்திருக்கிறது. என் முயற்சிகளை கண்டு, அதனை இன்னும் பெரிய வட்டத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கும் திண்ணை நிர்வாகத்தினருக்கு என் நன்றிகள்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
வழக்கம் போல் அல்லாது இந்த முறை மதிப்பெண்களைத் தொகுத்துப் போட நேரம் இல்லாமல் இருப்பதால் அதனைச் செய்யப் போவதில்லை. மன்னிக்கவும். இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.




1
2
34

5
6






7
89


10


11
12




13

1415
16

17



குறுக்கு

3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3)
5 மாலையின் பின்னே ராசி இடை மாற வரும் பொறுப்புணர்வு (5)
6 பாதி திப்பிலி தடுமாறியதைச் சொல்லும் எழுத்து (2)
7 பல் மருத்துவரோடு பலரும் தேடுவது (3)
8 முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5)
11 வேஷம் போட பத்துமாம் என்றதில் குழப்பம் (5)
12 இறந்தவர் சடங்கு நடக்க பெரும்பாலும் ஒலிக்க வேண்டியது (3)
14 குப்பி தா என அப்பாவைக் கேட்கலாமோ (2)
16 முக்கால் கலயம் கலையும் முன் நடராஜர் காலில் விழுந்தவன் (5)
17 ஆலின் காலில் அரைகுறையாய் விழுந்து ஆவதென்ன (3)

நெடுக்கு
1 பர்தாவைக் கலைத்து மொத்தம் தலையிழக்கத் தரும் தின்பண்டம் (6)
2 ஆமைபோல் வீட்டை அழிப்பவன் உகாண்டா தலைவனா? (3)
3 சிவனைக் கூப்பிட்டால் பெரும்பாலும் சுகம் என சேர்ந்திடு (5)
4 லலிதா கொடு எனக் கேட்காமல் நீட்டி முழக்கிப் பாடியது நான் தூங்கவா? (2)
9 சின்னஞ்சிறு செடியா இல்லை துள்ளி வரும் குட்டியா (6)
10 இளமை கதவை சாத்த முதுமை கொண்டு வரும் ரசம் (5)
13 வாராவதி உடைந்த்தால் உறுதி ஆனாதா (3)
15 மேதாவி குதித்தா விழுந்தான் (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

101 comments:

  1. நம்ம பக்கம் வராமல் இருக்கும் அனைவரும் வந்து உள்ளேன் ஐயாவாவது சொல்லுங்கள்!! :)

    ReplyDelete
  2. வாய்யா....கொத்ஸ்.

    உம்மைக் காணோமேன்னு தவிச்சுப்போன மக்களுக்கெல்லாம் 'அவருக்குக் கடப்பாரை அதிகம்'னு சொல்லிச் சொல்லி............

    எனக்கே(!) போர் அடிச்சுப்போச்சு.

    மீண்டு(ம்) வந்ததுக்கு ஒரு வாழ்த்து!

    புதிரை அப்புறமாப் பார்க்கிறேன்.

    டீச்சரையே 'ஆஜர்' சொல்ல வச்சுட்டீங்க.

    ReplyDelete
  3. ஆஜர் ஐயா... (ஐகார குறுக்க காவலர் கவனத்திற்கு :- அய்யா இல்லை) :))

    உள்ளேன் சார்...

    :)

    ReplyDelete
  4. உள்ளேன் ஐயா! நாளை கட்டாயம் பதில்களோடு வருவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். :)

    ReplyDelete
  5. ஆஹா!! ரீச்சர், நீங்கதான் போணி!! ஆரம்பமே பெரும் கைதான்!!

    //டீச்சரையே 'ஆஜர்' சொல்ல வச்சுட்டீங்க.//

    செய்வோமில்ல! :)

    ReplyDelete
  6. //ஆஜர் ஐயா... (ஐகார குறுக்க காவலர் கவனத்திற்கு :- அய்யா இல்லை) :))//

    ஒழுங்க எழுதினதுனால ஒரு மார்க் அதிகம். இப்போ ஓடிப்போ! :)

    ReplyDelete
  7. //உளமார//

    உள்ள மாற எனப் படித்துத் தொலைத்தேன். உம்மைப் பற்றித் தெரிந்ததாலோ என்னவோ!! :)

    ReplyDelete
  8. குறுக்கு
    ---------
    3. சவாலா
    5. தார்மீகம்
    6. லிபி
    7. சொத்தை
    8.
    11. மாம்பத்து
    12. சங்கு
    14. பிதா
    16. முகலயன்
    17. விழுது

    நெடுக்கு
    ----------
    1. பதார்த்தம்
    2. அமீனா
    3.
    4. லாலி
    9. இளங்கன்று
    10. சாத்தமுது
    13. பலம்
    15. தாவி

    ReplyDelete
  9. ஜி3

    வாங்க!!

    3 5 6 7 12 14 17

    1 2 4 10 13 15

    இவை சரியான விடைகள்.

    ReplyDelete
  10. குறுக்கு
    3. வாசலா
    6. லிபி
    7.சொத்தை
    11. பம்மாத்து
    12.சங்கு
    14. பிதா
    18. முயலகன்
    17. விழுது

    நெடுக்கு
    1.பதார்த்தம்
    2. அமீன்
    4. லாலி
    9. இளங்கன்று
    10. சாத்தமுது
    15. தாவி

    ReplyDelete
  11. வாங்க சின்ன அம்மிணி

    6 7 11 12 14 16 17

    1 4 10 15

    சரியான விடைகள்!

    ReplyDelete
  12. 2 அமின்
    3 சொத்தை
    இந்த இரண்டு தான் நமக்கு கண்டு பிடிக்க முடிந்தது. மிக்க நன்றி.
    @ravisuga

    ReplyDelete
  13. குறுக்கு
    3 - சவாலா
    5 தார்மீகம்
    6 லிபி
    7 சொத்தை
    8 ?
    11 பம்மாத்து
    12 சங்கு
    14 பிதா
    16 முயலகன்
    17 விழுது

    நெடுக்கு
    1 பதார்த்தம்
    2 அமீனா
    3 சம்போகம்
    4 லாலி
    9 ?
    10 சாத்தமுது
    13 பாலம்
    15 தாவி

    ReplyDelete
  14. குறுக்கு
    ------

    3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3)
    =சவாலா
    5 மாலையின் பின்னே ராசி இடை மாற வரும் பொறுப்புணர்வு (5)
    =தார்மீகம்
    6 பாதி திப்பிலி தடுமாறியதைச் சொல்லும் எழுத்து (2)
    =லிபி
    7 பல் மருத்துவரோடு பலரும் தேடுவது (3)
    =சொத்தை
    8 முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5)
    =சுகப்படு
    11 வேஷம் போட பத்துமாம் என்றதில் குழப்பம் (5)
    =பம்மாத்து
    12 இறந்தவர் சடங்கு நடக்க பெரும்பாலும் ஒலிக்க வேண்டியது (3)
    =சங்கு
    14 குப்பி தா என அப்பாவைக் கேட்கலாமோ (2)
    =பிதா
    16 முக்கால் கலயம் கலையும் முன் நடராஜர் காலில் விழுந்தவன் (5)
    =முயலகன்
    17 ஆலின் காலில் அரைகுறையாய் விழுந்து ஆவதென்ன (3)
    =விழுது

    நெடுக்கு
    1 பர்தாவைக் கலைத்து மொத்தம் தலையிழக்கத் தரும் தின்பண்டம் (6)
    =பதார்த்தம்
    2 ஆமைபோல் வீட்டை அழிப்பவன் உகாண்டா தலைவனா? (3)
    =அமீனா
    3 சிவனைக் கூப்பிட்டால் பெரும்பாலும் சுகம் என சேர்ந்திடு (5)
    =சம்போகம்
    4 லலிதா கொடு எனக் கேட்காமல் நீட்டி முழக்கிப் பாடியது நான் தூங்கவா? (2)
    =லாலி
    9 சின்னஞ்சிறு செடியா இல்லை துள்ளி வரும் குட்டியா (6)
    =பசுங்கன்று
    10 இளமை கதவை சாத்த முதுமை கொண்டு வரும் ரசம் (5)
    =சாத்தமுது
    13 வாராவதி உடைந்த்தால் உறுதி ஆனாதா (3)
    =பலம்
    15 மேதாவி குதித்தா விழுந்தான் (2)
    =தாவி

    ReplyDelete
  15. நெடுக்கு 9. பசுங்கன்று

    ReplyDelete
  16. ரவிசுகா

    2 - கொஞ்சம் சரி பண்ணனும்.

    3- ஓக்கே

    கொஞ்சம் பழைய பதிவுகளைப் பாருங்க. மேட்டர் புரிஞ்சுடும். எல்லாம் ஈசிதான்.

    ReplyDelete
  17. ஸ்ரீதர் நாராயணன்

    சொன்ன மாதிரியே வந்துட்டீங்க!! உடம்பு சரியில்லையா? :))

    3 5 6 7 11 12 14 16 17
    1 2 3 4 10 15

    இவை சரி.

    13 - குறிப்பை திரும்பப் படியுங்க! :))

    ReplyDelete
  18. சபாஷ் பூங்கோதை!!

    எல்லாமே கரெக்ட்!!

    வாழ்த்துகள்!

    புதிர் எப்படி? எளிமையா இருந்துதா? ரெண்டு வார்த்தை சொல்லிட்டுப் போகலாமே! :))

    ReplyDelete
  19. ஸ்ரீதர்

    9 இப்போ ஓக்கே!

    ReplyDelete
  20. 13 kurippai meendum padithaal 2 ezhuthu pizhai theriyuthu. hehe :)

    ReplyDelete
  21. //13 kurippai meendum padithaal 2 ezhuthu pizhai theriyuthu. hehe :)//

    ஆமாம் விடை தெரியாத போது இதெல்லாம்தான் கண்ணில் படும்.

    ReplyDelete
  22. உள்ளேன் 'கொத்ஸ்’ ஐயா !! :-)

    இப்போதைக்கு சில எளிதில் தெரிந்த பதில்கள்; மற்றவை,கூடிய விரைவில்..

    குறுக்கு

    3. சவாலா
    5. தார்மீகம்
    6. லிபி
    7. சொத்தை
    12. சங்கு
    14. பிதா
    17. விழுது

    நெடுக்கு

    1. பதார்த்தம்
    2. அமீனா
    3. சம்போகம்
    4. லாலி
    15. தாவி

    ReplyDelete
  23. கதிரவன்

    போட்ட வரை அனைத்தும் சரியே! :)

    ReplyDelete
  24. உள்ளேன் கொத்ஸ்
    எப்படி இருந்த ... இப்படி ? :-)

    3 இ-வ - வாசலா ?
    4 மே-கீ - லாலி
    7 சொத்தை (இந்தப் புதிர் அப்படி அல்ல)
    12 சங்கு (விடைல் சடங்கு என்ற வார்த்தையிலேயே உள்ளது )
    14 பிதா
    16 முயலகன்
    17 விழுது

    =====
    2 அமீனா ?
    =====

    பிற பின்னர்

    ReplyDelete
  25. குறுக்கு 8 - சுகப்படு. வார்த்தையை கண்டுபிடிச்சிட்டு விளக்கம் தெரியாம விழிச்சிட்டிருந்தேன். கப்பம் எப்படியோ மறந்தே போச்சு :))

    ReplyDelete
  26. ’பாலம்’ உடைத்தால் ‘பலம்’ = உறுதி. சை... இதுக்கு இவ்வளவு யோசிச்சிருக்கேன்.

    எனக்கு பிடிச்ச க்ளூ ‘முயலகன்’. ‘முக்கால் கலயத்தை கவிழ்த்தால்’ன்னு சொல்லியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். சம்போ + cum-ன்னு விவகாரமா வேற விளையாடியிருக்கீங்க. :))

    ReplyDelete
  27. வாங்க பாலா! ரொம்ப நாள் ஆச்சுதே!!

    3 - குறிப்பை சரியாப் படியுங்க!

    4 7 12 14 16 17 - சரி
    2 - சரி

    சீக்கிரம் மத்தது எல்லாம் போடுங்க. மக்கள் முடிச்சாச்சு தெரியுமில்ல!

    ReplyDelete
  28. ஸ்ரீதர்

    8 - சரி

    மறந்தததை எனக்கு கட்ட வேண்டியதுதான். :)

    ReplyDelete
  29. முதலில் நம்பர் போடுமைய்யா!!

    13 சரி

    எல்லாம் போட்டாச்சு போல வாழ்த்துகள்!!

    பிடித்த குறிப்புகள் - :))

    ReplyDelete
  30. ஆஜர்.பிரசண்ட் சார்.ஐயா.
    மீண்டும் பார்ப்பதில் சந்தோஷம். புதிர் விடுவிக்க இரண்டு நாட்கள் வேண்டும். இது உள்ளேன் ஐயா சொல்ல.:)

    ReplyDelete
  31. குறுக்கு
    3. முதலா
    5. தார்மீகம்
    6. லிபி
    7. சொத்தை
    12. சங்கு
    14. பிதா
    16. முயலகன்
    17. விழுது

    நெடுக்கு
    1. பதார்த்தம்
    2. அமீனா
    4. லாலி
    9. இளங்கன்று
    10. சாத்தமுது
    13. பாலம்
    15. தாவி

    ReplyDelete
  32. வல்லிம்மா

    எல்லாம் நலம்தானே!! இரண்டு நாட்கள் என்ன இரண்டு வாரமே எடுத்துக்குங்க. சரியாப் போடணும். அதான் கணக்கு!!

    ReplyDelete
  33. கெபி அக்கா,

    5 6 7 12 14 16 17
    1 2 4 10 15

    இவை சரியானவை!

    ReplyDelete
  34. across
    3. savAlA
    5. dhArmIgam
    6.libi
    7.soththai
    8. --
    11.pammaththu
    12. sangu
    14. pithA
    16. --
    17.vizuthu

    down
    1. pathArththam
    2.amInA
    3. --
    4.lAli
    9. --
    10. sAththamuthu
    13. --
    15. thAvi


    chandra

    ReplyDelete
  35. வாங்க சந்திரா.

    தமிழில் எழுதி இருந்தா சுலபமா இருந்திருக்குமே.

    3 5 6 7 11 12 14 17
    1 2 4 10 15

    எனப் போட்டது எல்லாமே சரி.

    ReplyDelete
  36. சொல்லாமா கொள்ளாம காணாபோயிட்டு திடீர்ன்னு வந்து புதிர போடுன்னா?? அதெப்படி??!

    டச் விட்டு போகுதில்ல??!

    ReplyDelete
  37. ராதாக்கா

    அதெல்லாம் சைக்கிள் ஓட்டற மாதிரி. எம்புட்டு நாள் ஆனாலும் மறக்கவே மறக்காது.

    சும்மா தைரியமா ஸ்டாண்டை எடுத்துட்டு களத்தில் இறங்குங்க!

    ReplyDelete
  38. கீதாம்மா!!

    6 - வேற இரண்டு எழுத்து வார்த்தைகள் தெரியாதா? :)

    7 12 14 17 2 10 13 15 - எல்லாம் சரி! :)

    ReplyDelete
  39. பார்த்தசாரதி

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே! புதிர் நன்றாக இருந்தது எனப் பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  40. வழக்கம்போல ப்ளா, வழக்கம்போல ப்ளா ப்ளா.. ஆனா வழக்கம்போல ஒரு வரியைக் காணோமே!

    ReplyDelete
  41. வாங்க பெனாத்தலாரே வாங்க. நீங்க வெகேஷன் முடிஞ்சு வர்றதுக்காகத்தான் கொத்ஸ் வெயிட் பண்ணிட்டிருந்தாரா? :)

    //வழக்கம்போல ஒரு வரியைக் காணோமே!//

    எப்பவும் இருக்கற வரி இப்ப மிஸ்ஸிங்-னு சொல்றீங்களா?

    எப்பவுமே இல்லாத வரி இப்பவும் இல்லைன்னு சொல்றீங்களா?

    புதசெவி :))

    ReplyDelete
  42. இன்று காலை மறுபடியும் இந்த நினைவு “எங்கு போனார் இ.கொத்தனார்” அவ்வப்போது பின்னூட்டம் இடும் இடங்களில் கூட கானுமே! என்று,வந்துவிட்டீர்கள்.மகிழ்ச்சி.
    உள்ளேன் ஐயா போடவில்லை.

    ReplyDelete
  43. குறுக்கு
    3.சவாலா
    5. தார்மீகம்
    6. பிலி
    7. சொத்து
    11. பம்மாத்து
    12. சங்கு
    14. பிதா
    16. முயலகன்

    நெடுக்கு
    1. பதார்த்தம்
    2. அமீன்
    3. சம்போகம்
    4. லாபி
    9. இளங்கன்று
    13. பலம்
    15. தாவி

    மீதி 8,17, மற்றும் 10

    ReplyDelete
  44. மன்னிச்சுக்குங்க Sir, officeல PM வர்றாரான்னு பார்த்துக்கிட்டு அவசரத்துல வேற ஒன்னுமே எழுதாம publish அழுத்திட்டேன்.
    புதிர் ரொம்பவே jolly-ஆ interesting-ஆ இருந்த்துச்சு. மிகவும் ரசித்தது- 7 குறுக்கு.

    நம்ம colleague ஒருத்தரையும், இழுத்து விட்டுட்டேன், கூட்டு முயற்சில சீக்கிரம் முடிஞ்சுடுச்சு

    ReplyDelete
  45. //
    9 சின்னஞ்சிறு செடியா இல்லை துள்ளி வரும் குட்டியா (6)//

    இதுக்கு 'இளங்கன்று' தவிர பொருத்தமா வேற யோசிக்கவே முடியலை.

    //2 ஆமைபோல் வீட்டை அழிப்பவன் உகாண்டா தலைவனா? (3)//

    அமினா

    ReplyDelete
  46. கொத்ஸ்
    இப்பவும் உங்கள் பதிவு கண்டு மகிழ்ந்தோம்.

    நேரம் கிடைக்கும் போது
    மீதியை கண்டுபிடிக்கிறேன்.



    குறுக்கு.
    1.மசாலா
    6.லிபி
    7.ஈரோடு
    12.சங்கு
    14.பிதா
    17.விழுது

    நெடுக்கு.
    2.அமீன்
    4.லாலி
    15.தாவி

    ReplyDelete
  47. //வழக்கம்போல ப்ளா, வழக்கம்போல ப்ளா ப்ளா.. ஆனா வழக்கம்போல ஒரு வரியைக் காணோமே!//

    எல்லாம் ஒரு காரணத்தோடதான். தனியாச் சொல்லறேன்! :)

    ReplyDelete
  48. //புதசெவி :))//

    ஸ்ரீதர்

    புரியாததை யவு செய்து விட்டிடவும்!!

    :))

    ReplyDelete
  49. //இன்று காலை மறுபடியும் இந்த நினைவு “எங்கு போனார் இ.கொத்தனார்” அவ்வப்போது பின்னூட்டம் இடும் இடங்களில் கூட கானுமே! என்று,வந்துவிட்டீர்கள்.மகிழ்ச்சி.
    உள்ளேன் ஐயா போடவில்லை.//

    பதிவெல்லாம் ரீடரில் படித்துக்கிட்டுதான் இருந்தேன். ரொம்ப வேலையா இருந்தது. இந்த மாதம் கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும் என நினைக்கிறேன்.

    என்னை நினைவில் கொண்டதற்கு நன்றி! :)

    ReplyDelete
  50. வாங்க தமிழ் பிரியன்!!

    இன்னமும் ‘ப்’ சேர்க்கலை போல!! :))

    3 5 11 12 14 16
    1 3 13 15

    சரியான விடைகள்.

    2 7 - கொஞ்சம் மாத்திப் போடுங்க

    ReplyDelete
  51. சின்ன அம்மிணி

    9 - யோசிச்சுக்கிட்டே இருங்க
    2 - ஒரு எழுத்துப்பிழை இருக்கு போல பாருங்க. :)

    ReplyDelete
  52. வாய்யா பெருசு!!

    6 12 14 17
    4 15

    சரி

    2 - ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்.

    ReplyDelete
  53. 2. அமீனா
    7. சொத்தை

    ReplyDelete
  54. //மன்னிச்சுக்குங்க Sir, officeல PM வர்றாரான்னு பார்த்துக்கிட்டு அவசரத்துல வேற ஒன்னுமே எழுதாம publish அழுத்திட்டேன்.
    புதிர் ரொம்பவே jolly-ஆ interesting-ஆ இருந்த்துச்சு. மிகவும் ரசித்தது- 7 குறுக்கு.//

    சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன். ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க.

    //நம்ம colleague ஒருத்தரையும், இழுத்து விட்டுட்டேன், கூட்டு முயற்சில சீக்கிரம் முடிஞ்சுடுச்சு//

    நம்ம ஊரில் கூட்டணி ஆட்சிதான் நிலைக்கும்ன்னு சொல்லறீங்க. எல்லாத்துலேயும் அரசியல் பேசறாங்கப்பா! :))

    ReplyDelete
  55. தமிழ் பிரியன்

    2 7 ஓக்கே! :)

    ReplyDelete
  56. விடுபட்ட விடைகள் :

    குறுக்கு
    ----------

    8. சுகப்படு
    11. பம்மாத்து
    16. முயலகன்


    நெடுக்கு
    ----------

    3. சம்போகம்
    9. பசுங்கன்று

    தோராயமா க்ளு வைச்சு இந்த வார்த்தையா இருக்குமோனு யோசிச்சு அதுக்கு அர்த்தம் தேடி கன்பார்ம் செஞ்சு... நல்லா இருக்கு இந்த விளையாட்டு :))) நிறைய தமிழ் வார்த்தை புதுசா கத்துக்கறேன் :) தொடர்ந்து போடுங்க :)

    ReplyDelete
  57. ஜி3

    8 11 16
    3 9

    எல்லாமே சரி!!

    நல்லா எஞ்சாய் பண்ணிப் போட்டீங்க போல! வாழ்த்துகள்!!

    மகரநெடுங்குழைக்காதன் மனசு வெச்சு ரொம்ப வேலை செய்ய வைக்காமல் இருந்தால் போடுவதில் என்ன பிரச்சனை! :)

    ReplyDelete
  58. உள்ளேன் அய்யா :)) விடையா...2 நாளாவும்

    ReplyDelete
  59. !!!வெல்கம் பேக்!!!

    !!ஒரு வழியா திரும்பி வந்தாச்சா!!


    குறுக்கு
    3 - சவாலா
    5 - தார்மீகம்
    6 - லிபி
    7 - சொத்தை
    8 -
    11 - பம்மாத்து
    12 - சங்கு
    14 - பிதா
    16 - முயலகன்
    17 - விழுது

    நெடுக்கு
    1 - பதார்த்தம்
    2 - அமீனா
    3 - சம்பூரண
    4 - லாலி
    9 - இளங்கன்று
    10 - சாத்தமுது
    13 - பலம்
    15 - தாவி

    -அரசு

    ReplyDelete
  60. வாங்க அரசு!!

    8 3 9

    இவை மூன்றைத் தவிர மற்றவை அனைத்தும் சரியே!

    ReplyDelete
  61. // உள்ளேன் அய்யா :)) விடையா...2 நாளாவும்//

    வெயிட்டிரலாம்!

    ReplyDelete
  62. இ---வ

    சவாலா
    தார்மீகம்
    லிபி
    சொத்தை
    சுகப்படு
    பம்மாத்து
    சங்கு
    பிதா
    முயலகன்
    விழுது

    மே---கீ

    பதார்த்தம்
    அமீனா
    சம்போகம்
    லாலி
    பசுங்கன்று
    சாத்தமுது
    பலம்
    தாவி

    ReplyDelete
  63. நல்ல எளிதான புதிர்தான். தெரிந்ததை
    விடைகளைப் பரிசோதித்து சொல்லவும் கொத்ஸ் சார்:)
    3,savaal
    10,iLanaRai
    11,pammaaththu,
    12, sanggu

    ReplyDelete
  64. யோவ் சு சங்கர்

    மனுசனாய்யா நீயி!!

    முதல் முயற்சியில் எல்லாமே சரி!! :)

    ReplyDelete
  65. வல்லிம்மா

    3 - ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்

    11 12 - சரி!

    ReplyDelete
  66. நல்ல எளிதான புதிர்தான். தெரிந்ததை
    விடைகளைப் பரிசோதித்து சொல்லவும் கொத்ஸ் சார்:)

    குறுக்கு
    3,சவாலா
    6லிபி
    7சொத்தை,
    11,பம்மாத்து
    12 சங்கு
    14 பிதா
    16 முயலகன்,
    17 விழுது


    நெடுக்கு


    2,அமீன்
    3 சம்போசிவ
    4 லாலி
    9 இளங்கன்று
    10, சாத்தமுது
    13,பாலம்
    15 தாவி

    ReplyDelete
  67. வல்லிம்மா

    அதுக்குள்ள அடுத்த பதிலா!! :)

    3 6 7 11 12 14 16 17

    4 10 15 - சரி

    2 13 - கொஞ்சமே கொஞ்சம் சரி பண்ணனும்

    ReplyDelete
  68. 17. விழுது

    10. சாத்தமுது

    ReplyDelete
  69. தமிழ் பிரியன்

    17, 10 - ரெண்டுமே ஓக்கே!!

    ReplyDelete
  70. தமிழ் பிரியன்

    என்னது இது? தமிழ்தானா? இப்படி எல்லாம் இல்லைங்க.

    சாதாரணமான வார்த்தைதான்!

    ReplyDelete
  71. தமிழ் பிரியன்

    9 தப்பு எனச் சொல்லி இருக்கிறேன். ஞாபகம் இருக்கட்டும்!

    ReplyDelete
  72. ஆகா... 9 தப்பா.. இதை சொல்லவே இல்லை.. நானும் கவனிக்கலை.. மன்னிக்கவும்.

    ஹிஹிஹிஹி உகளி என்றால் மகிந்திரு என்று அர்த்தம்.

    http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=49&table=fabricius&display=utf8

    ReplyDelete
  73. தமிழ் பிரியன்

    உங்க முதல் செட் விடைகளில் சரி எனச் சொன்னதில் 9 இல்லையே!

    உகளி என்றால் மகிழ்ந்திரு என்றால் உகளி இரு என்பது சரி இல்லையே!!

    உகளி இரு என இரு சொற்களாக இருந்தால் (3,2) எனச் சொல்லி இருப்பேனே!! :)

    ReplyDelete
  74. 8. சுகப்படு
    9. பசுங்கன்று

    இப்பவாவது முடிஞ்சதுன்னு சொல்லுங்க வாத்தியாரே!.. :-)

    ReplyDelete
  75. தமிழ் பிரியன்

    இப்போ முடிஞ்சுதுன்னு சொல்லிடலாமா! :))

    வாழ்த்துகள்!! :))

    ReplyDelete
  76. கொத்ஸ்,

    அதிசயமா இருக்கு.. காணாம போயிட்டதா பேப்பர்ல விளம்பரமெல்லாம் வந்துதே...

    வருகைக்கு வாழ்த்துகள்.

    குறுக்கு :

    3. சவாலா
    5. தார்மீகம்
    6. லிபி
    7. சொத்தை
    11. பம்மாத்து
    12. சங்கு
    14. பிதா
    16. முயலகன்
    17. விழுது

    நெடுக்கு:

    1. பதார்த்தம்
    2. அமீனா
    3. சம்போகம்
    4. லாலி
    9. பசுங்கன்று
    10. சாத்தமுது
    13. பலம்
    15. தாவி

    இதுல தார்மீகம் ஊகத்துல போட்டது. ராசி - மீனம்-இடை மாறியதால் மீகம். தார்க்கும் மாலையின் பின்னுக்கும் இருக்கும் கனெக்ஷன இன்னும் கண்டு பிடிக்கல :(

    ReplyDelete
  77. சர்வேசரே

    இந்த மர்ம புன்னகைக்கு அர்த்தம் என்ன?

    ReplyDelete
  78. ஏஸ்!! நீர் சிங்கம்ல்ல!! அதான் சூப்பரா முடிச்சிட்டீரு!!

    மீனிங் தெரியலைன்னா அகராதியைப் பாரும்!!

    http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

    :)

    ReplyDelete
  79. கொத்ஸுன் குறுக்கெழுத்து புதிர் வரலாற்றில் முதன்முறையாக - நானும் ஆன்சர் சொல்லப்போறேன்ன்ன்ன்ன்ன்!!! :)))

    3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3) - சவாலா
    5 மாலையின் பின்னே ராசி இடை மாற வரும் பொறுப்புணர்வு (5) - தார்மீகம்
    6 பாதி திப்பிலி தடுமாறியதைச் சொல்லும் எழுத்து (2) - லிபி
    7 பல் மருத்துவரோடு பலரும் தேடுவது (3) - சொத்தை
    8 முடிவில்லா கிஸ்தியை தீயிலிட்டு மகிழ் (5) - சுகப்படு
    11 வேஷம் போட பத்துமாம் என்றதில் குழப்பம் (5) - சம்பத்து
    12 இறந்தவர் சடங்கு நடக்க பெரும்பாலும் ஒலிக்க வேண்டியது (3) - சங்கு
    14 குப்பி தா என அப்பாவைக் கேட்கலாமோ (2) - பிதா
    16 முக்கால் கலயம் கலையும் முன் நடராஜர் காலில் விழுந்தவன் (5) - முயலகன்
    17 ஆலின் காலில் அரைகுறையாய் விழுந்து ஆவதென்ன (3) விழுது

    நெடுக்கு
    1 பர்தாவைக் கலைத்து மொத்தம் தலையிழக்கத் தரும் தின்பண்டம் (6) - பதார்த்தம்
    2 ஆமைபோல் வீட்டை அழிப்பவன் உகாண்டா தலைவனா? (3) - அமீனா
    3 சிவனைக் கூப்பிட்டால் பெரும்பாலும் சுகம் என சேர்ந்திடு (5) - சம்போகம்
    4 லலிதா கொடு எனக் கேட்காமல் நீட்டி முழக்கிப் பாடியது நான் தூங்கவா? (2) - லாலி
    9 சின்னஞ்சிறு செடியா இல்லை துள்ளி வரும் குட்டியா (6) - பசுங்கன்று
    10 இளமை கதவை சாத்த முதுமை கொண்டு வரும் ரசம் (5) - சாத்தமுது
    13 வாராவதி உடைந்த்தால் உறுதி ஆனாதா (3) - பாலம்
    15 மேதாவி குதித்தா விழுந்தான் (2) - தாவி

    ReplyDelete
  80. வாய்யா ஆயில்ஸு

    உண்மையில் நீர்தானா? இல்லை நான் காண்பது கனவா?

    ஏன்யா இம்புட்டு அறிவை வெச்சுக்கிட்டு நான் வரலை வரலைன்னு சொன்னா எப்படி?

    ரெண்டே ரெண்டு தப்பு - 11கு, 13நெ.

    இதை சரி பண்ணிப் போடு!! மத்தது எல்லாமே கரெக்ட்டு!! :))ஜூப்பரு!!

    ReplyDelete
  81. :( நான் ெயிலாயிட்டேனா???


    பம்மாத்து

    பாலம்

    ReplyDelete
  82. வாய்யா வெண்பா வாத்தி!!

    ரொம்ப நாள் கழிச்சுப் புதிர் போட நேரம் கிடைச்சுதாக்கும்.

    இன்னமும் ஒண்ணு தப்பா இருக்கே!

    ReplyDelete
  83. வெண்பா வாத்தி

    மேட்டர் ஓக்கே! அல்லாமே கரீட்டுப்பா!!

    ReplyDelete
  84. ஆயில் புல்லிங்

    குறுக்கு ஓக்கே. ஆனா நெடுக்கு இன்னமும் நீளமா இருக்கே!! குறிப்பை நல்லாப் படியும்!

    ReplyDelete
  85. ஆஹா

    அட ஆமாம் காலை ஒடைச்சுட்டு சொல்லணும் :)))

    பலம் :)

    ReplyDelete
  86. ஆயில்ஸ்!!

    இப்போ ஆல் ஓக்கே!!

    இனிமே ரெகுலர் அட்டெண்டன்ஸ் உண்டுதானே!! :))

    ReplyDelete
  87. // இலவசக்கொத்தனார் said...

    ஆயில்ஸ்!!

    இப்போ ஆல் ஓக்கே!!

    இனிமே ரெகுலர் அட்டெண்டன்ஸ் உண்டுதானே!! :))///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பாடா :))

    பாஸ் மீ த டிரையிங்க் :))

    ReplyDelete
  88. 2 அமீனா
    4 லாலி
    15 தாவி

    7 சொத்தை
    12 சங்கு
    14 பிதா
    6 லிபி
    17 விழுது

    ReplyDelete
  89. வாங்க சீனா

    2 4 15
    7 12 14
    6 17

    எனப் போட்டது எல்லாமே சரிதான். மற்ற விடைகளையும் சீக்கிரம் போடுங்க.

    ReplyDelete
  90. 10 - சாத்தமுது
    9 - இளங்கன்று
    3 - வாசலா

    ReplyDelete
  91. சீனா

    10 ஓக்கே

    மத்த ரெண்டும் தப்பு.

    ReplyDelete
  92. குறுக்கு - 3 - சவாலா
    11 - பம்மாத்து

    ReplyDelete
  93. 1 - பதார்த்தம்

    13 பாலம்

    9 இளங்கன்று

    5 தார்மீகம்

    16 முயலகன்

    8 கிஸ்தீஇடு

    ReplyDelete
  94. சீனா

    1 5 16 - சரியான விடைகள்

    மற்றவை தவறானவை

    ReplyDelete
  95. அன்புள்ள இ.கொ விற்கு,
    பல நாட்களாக உங்களுடைய பதிவுப் பக்கம் வரவேயில்லை. அதனால் நீங்கள் கு.எ.இட்டது தெரியாமல் போய்விட்டது.இன்றுதான் பார்தேன்.

    குறு: 3.சவாலா 5.தார்மீகம் 6.லிபி 7.சொத்தை 8 ----- 11 பம்மாத்து 12.சங்கு 14.பிதா 16.முயலகன் 17.விழுது(எப்படி?)

    நெடு: 1.பதார்த்தம் 2.அமீனா 3.சம்போகம்(?)4.லாலி 9.இளங்கன்று10.சாத்தமுது13.பலம் 15தாவி

    அன்புடன் ராமய்யா நாராயணன்

    ReplyDelete
  96. ராமைய்யா நாராயணன்

    தங்கள் விடைகளை இப்பொழுதுதான் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    3 5 6 7 11 12 14 16 17 (விடைகள் பதிவைப் பாருங்கள்)

    1 2 3 4 10 13 15

    இவை சரியான விடைகள்!

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!