Thursday, January 06, 2011

பிழை தீர் - பிழைத்தீர்

தெரிந்ததைச் சொல்லலாம் என ஆரம்பித்தக் கொத்தனார் நோட்ஸ் பகுதி பதினைந்து பாகங்கள் வந்துவிட்டது. ஆனால் இது சரி இது தவறு என்று சொல்லுவது எனக்கே கொஞ்சம் போர் அடித்துவிட்டது. அதனால் அதனை இப்பொழுது முடித்துவிடலாம் என்ற முடிவெடுத்து, நிறுத்திவிட்டேன். இறுதி பாகத்தைப் படிக்க இங்கு செல்லுங்கள்.

ஆனால் பிழைகள் பல கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதிகம் பேர் பிழை செய்யும் சொற்களை எடுத்துக் கொண்டு தொடராக இல்லாமல் எப்பொழுதாவது சில பதிவுகள் போடலாம் என எண்ணம். அதே போன்று எழுதியவற்றிலோ அல்லது எழுதாமல் விட்டவைகளிலோ எதேனும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். பதிவிடும் பொழுது அவற்றையும் எடுத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொடருக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. விரைவில் வேறு ஒரு தலைப்பில் அடுத்த தொடர் ஆரம்பிக்கிறேன்.

9 comments:

  1. இறுதி பாகம்" ‍= "இறுதிப் பகுதி" (இங்க வலி மிக அடிக்கணும்); "போர் அடித்து" = "சுவை குன்றி" (இது வலி குறைந்த இடையினம்).

    //பிழைகள் பல கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது// "பிழைகள் பல" என்பதே பெயர்ச்சொல். எனவே, வினைச்சொல் "இருக்கின்றன" என அமைய வேண்டும்.

    //எழுதியவற்றிலோ அல்லது எழுதாமல் விட்டவைகளிலோ// இந்த செயப்படுபொருளிலும் சொற்பிழை உண்டு. "எழுதாமல் விட்டவற்றிலோ" எனவோ, "எழுதாமல் விடப்பட்டவற்றிலோ" எனவோ அமைய வேண்டும்.

    ஸாரி, எப்பவும் போல தான் இன்னிக்கும் எழுந்துகிட்டேன். ஆனாலும், காலையிலிருந்து, ட்விட்டர், அதுஇதுன்னு கொஞ்சம் கெ.பி.த்தனம் ஜாஸ்தியா இருக்கிறது எனக்கே தெரியுது....!

    தொடர்ந்து ஆதரவு உண்டு:-)) நிசமாவே என் கடமை அழுகிறது. கிளம்பறேன்.

    ReplyDelete
  2. கெபி அக்கா

    ஜூப்பரு!! :)

    ReplyDelete
  3. எல்லாத்தையும் கவனமாப் படிச்சு வச்சுக்கிட்டேன். இனிமேல்தான் முதிய நாய்க்குப் புதிய வித்தைகளைப் பயிற்று'விக்க'ணும் இலவசமாய்!

    ஹேவ் அ குட் ப்ரேக்.

    (தமிழில் எழுதுகிறேன், 'பேப்பர்' மாதிரி)

    ReplyDelete
  4. கெ.பி அக்கா, கடமைக்கு என்ன வயசு? :-))

    ReplyDelete
  5. //பிழைகள் பல கண்ணில் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. //
    இருக்கின்றன?

    ReplyDelete
  6. ஹிஹி கெ.பி அக்கா இருக்கின்றன வை பாத்துட்டாங்கன்னு நான் பாக்கலேன்னு....ஹிஹிஹி

    ReplyDelete
  7. சரி, எனக்கு முதல் புத்தகம் இலை வயம். அப்புறம் இப்போத் தான் இலக்கண வகுப்பு முடிஞ்சு போச்சில்ல?? குறுக்கெழுத்துப் போட்டியை ஆரம்பிங்க சீக்கிரம், ரொம்ப போர் அடிக்குது! :D

    ReplyDelete
  8. ungga blog enakku en update akirathe illai?? :( puriyalai!

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!