Monday, January 16, 2006

தகதகதகதக தங்கவேட்டை

மனசாட்சி : முதலிலேயே சொல்லிவிடுகிறேன் இலவசமாய் தங்கமெல்லாம் கிடையாது.
நான் : திருப்திதானே மனசாட்சி. இனிமேலும் இதை யாராவது படிப்பாங்களா? படிச்சாலும் பின்னூட்டம் போடுவாங்களா...சரி வேணாம். ஜோசப் சார் ஏற்கனவே இன்னைக்கு கோட்டாவை எடுத்துக்கிட்டார். விஷயத்திற்கு போவோம்.
இப்போதான் சூரிய தொல்லைக்காட்சியில் (எழுத்துப் பிழை இல்லை) மற்றுமொரு தங்கவேட்டை பாகத்தை பார்த்துத் தொலைத்தேன். (எங்க பேட்டையில் ஒரு நாள் லேட்டா வருங்கோ.)
கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.
"திப்பு சுல்தான் ஆட்சியில் தலைநகர் என்ன?" என்று ஒரு கேள்வி. அதற்கு கல்லூரி செல்லும் ஒரு பெண்ணின் பதில் "நியூ டெல்லி"! மற்றொரு கேள்வி "திருநெல்வேலி நகர் வழியாகச் செல்லும் நதி எது?" இதற்கு ஒரு பள்ளி சிறுமிக்கு பதில் தெரியவில்லை. அதற்கு அவரின் தாயார் தந்த துப்பு இராமநாதபுரம். (தவறான துப்பு).
இவைகள் மட்டும்தானென்று இல்லை, இன்று மட்டும்தானென்று இல்லை. அவ்வப்பொழுது இந்நிகழ்ச்சியை பார்கிறேன். பார்க்கும்பொழுதெல்லாம் இதே கூத்துதான். அறிவியலாகட்டும், புவியியலாகட்டும், வரலாறாகட்டும் இதே நிலைதான். சினிமா சம்பந்தபட்ட கேள்விகளுக்கு மட்டும் சிறுவர் சிறுமியர் மிகச் சரியாக பதிலுரைத்து விடுகின்றனர். இதிலும் இன்று ஒரு சிறுமி கோட்டைவிட்டு விட்டார்.
என் மனதில் சில கேள்விகள்.
1. இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுபவர்கள் ஒரு சரியான எடுமாதிரிதானா (representative sample)? 2. பெரும்பாலும் இச்சிறார்கள் ஆங்கிலத்தில் படிப்பதால் இந்தத் தகராறா? ஆனால் பல கேள்விகளை ஆங்கிலத்திலும் ரம்யா மொழிபெயர்த்துவிடுகிறாரே. 3.பொழுதுபோக்கு என்பதே தொலைகாட்சிதான் என்றாகிவிட்டது. அதில் உபயோகமான விஷயங்கள் எதுவுமில்லாமல் சினிமா என்ற அரைத்த மாவையே அரைப்பது இதற்கு ஒரு காரணமா? 4.பள்ளிகளில் வினாடி வினா நிகழ்ச்சிகளே நடைபெறுவதில்லையா?
இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? உங்கள் கருத்துகளை எழுதுங்களேன்.
மற்றபடி ரம்யா கிருஷ்ணனின் காட்டுக் கத்தல்களும், பகட்டான ஆனால் சுவையற்ற அரங்குகளும், பங்குபெறுபவர்கள் ஒரு சினிமா நட்சத்திரத்தை பார்த்ததால் வழியும் வழிசல்களும், வயதில் முதிர்ந்தவர்களை அழைத்து வந்து பாடச்செய்வதும் ஆடச்செய்வதும் பற்றிச் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை. Lack of Professionalism is very visible in the way this program is visualised and executed.
வெறும் சினிமா பற்றிய கேள்விகளை மட்டுமே கேட்கவில்லை என்பது ஒரு சிறு ஆறுதல்.

16 comments:

  1. அந்தக் கொடுமைய நானும் பாத்தேன்.

    அம்மாவுக்கே விடை தெரியலை. இதுல குளூ வேற குடுத்து மக சொல்ல முடியுமாக்கும்...முதுமலைக் காடு எங்கருக்குன்னு ஒரு கேள்வி. அதுக்கும் விடை தெரியலை. அம்மா சொல்ற குளு கலைஞர் (அதுதான் அட்டைலயும் எழுதீருந்தது.). கொடுமையோ கொடுமை.......

    ReplyDelete
  2. http://penathal.blogspot.com/2006/01/promo-14-jan-06.html#113735119369953209

    paarungga!

    naamum vilambaram panna kaththukittomilla!

    ReplyDelete
  3. தமிழ்நாடு = கலைஞர். அப்படீன்னு அர்த்தமுங்களா?
    அது சரி. நம்ம கேள்விங்களுக்கு பதில் சொல்ல மாட்டேங்கிறீங்களே.
    சுரேஷ், நாமும்ன்னு சொல்லி யாரை ஓட்டரீங்க?

    ReplyDelete
  4. ---அம்மா சொல்ற குளு கலைஞர் ---

    ஜி.ரா. சொல்வதைத்தான் எழுத நினைத்தேன்.

    சென்ற வாரத்த்ஹில் இறுதிக் கேள்வி: 'குருதிப்புனல்' எழுதியது யார்?

    a. நா பார்த்தசாரதி
    b. கமல்ஹாஸன்
    c. இந்திரா பார்த்தசாரதி
    d. (மறந்து போச்)

    பெரும் வாக்குவாதத்திற்குப் பிறகு குழுவினரில் இல்லத்தரசி 'நா பார்த்தசாரதி' என்று விடையளித்தார். ரம்யா கிருஷ்ணன் தவறு என்றவுடன், சுடிதார்-தரித்த, வங்கி-வேலை-பார்க்கும், மிட்-இருபதுகளில் இருப்பவர் 'நான் அப்பவே அடிச்சுண்டேனே... கமல்ஹாசன் தான் என்று' கோபமாக அன்னையை முறைக்கிறார்.

    ரம்யா க்ளுவாக 'நீங்க சொன்னதில் பாதி கரெக்ட்' என்று கொடுத்தவுடன், கலந்தாலோசித்து சரியான விடையை சொல்கிறார்கள்.

    having said all the pulambal,

    ---Lack of Professionalism is very visible in the way this program is visualised and executed.---

    The music, set decors, variety of questions (to a common tamilan), pacy editing, are all screaming professional. What was ur take on KBC questions... Vivek would have spoofed that in 'Kanden seethayai'. Soon he might pick this serial also.

    Do remember that Sun TV caters to நெடுந்தொடர் பிரியர்கள் and not Siddhartha Basu addicts ;-)

    ReplyDelete
  5. பாலா,

    நம்ம வீட்டுல கேபீசி வரதில்லையே. ஆனா அதில் கேள்விகள் கடினமாக ஆகி கொண்டு போவதாக கேள்வி. அமிதாப் will have a better screen presence, I guess. கண்டேன் சீதையய் பார்க்கவில்லை. இந்த வார இறுதியில் பார்க்கிறேன்.


    //Do remember that Sun TV caters to நெடுந்தொடர் பிரியர்கள் and not Siddhartha Basu addicts ;-) //

    நான் இதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இவ்வளவு எளிதான கேள்விகளுக்கு கூட சரியான பதில் தெரிவதில்லையே என்பதுதான் எனது வருத்தம்.

    ReplyDelete
  6. கொத்தனாரே!
    ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள். நம்மூர் மக்கள் இவ்வித நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அத்தியாவசியமான காரணம் அவர்கள் போட்டிருக்கும் Blouseஉம் நகைகளும். 'சாதுர்யம் பேசாதேடி என் ரவிக்கைக்கு பதில் சொல்லடி' என ஜெயாவில் குஷ்புவும் சன் டிவியில் ரம்யா கிருஷ்ணனும் போட்டி போட நம்மவர்கள் 'சபாஷ் சரியான போட்டி' என 'இருப்பிட உருளைக்கிழங்கு'(அதாங்க Couch Potato)விளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதாச்சும் பரவாயில்லை சன் டிவி'காமெடி டைமில்' இவர் எங்க தாத்தா மாதிரி இருக்கார், பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி இருக்கிறார்' என்று தரும் அபத்தமான பதில்களைக் கேட்டால் நம்மாளோட IQவை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  7. வேண்டுமென்றுதான் அந்த ஜாக்கெட் விவகாரத்தை விட்டேன். எங்கே ஜன்னல் வைத்த ஜாக்கெட், வைக்காத ஜாக்கெட் என விவாத நோக்கம் மாறி விடுமோ என்ற பயம்தான். அதையும் போட்டிருந்தால் இன்னும் அதிக பின்னூட்டம் வந்திருக்குமோ என்னவோ. :) இதற்குபின் யாராவது இதைப் பற்றி எழுதுகிறார்களா என்று பார்ப்போம்.

    ஆமாம். அந்த காமெடி டயத்தில் இது நிஜமாலே காமெடிதான். அந்த புகைப்படத்தில் இருப்பவர்க்கு இந்த நிகழ்ச்சி ஒரு அவமதிப்போ என்று கூட தோன்றுகிறது. இப்படியாவது ஒரு நாலு பேர் தெரிந்து கொண்டால் சரிதான்.

    ReplyDelete
  8. வாருங்கள் கௌசிகன். என்ன நோக்கமோ ஒண்ணும் புரியவில்லை. ராபின்சனைப்போலொருவரை இருத்தினால் அவரின் வார்த்தைகளை திரித்து மதச்சாயம் பூசி அவரை துரத்தவே ஒரு கூட்டம் அலையுமே. நம்ம ஊரில் ஒரு satire எழுதுவதற்கே 1000 disclaimers போட வேண்டியது இருக்கிறது.

    ஊடக நண்பர்கள் யாரேனும் இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்களேன்.

    1) கௌசிகன் குறிப்பிட்டது போன்ற முதல் நிலை தேர்வுகள் உண்டா?
    2) அதெப்படி வரும் அணிகள் அனைத்துமே 1 அப்பா, 1 அம்மா, 1 நண்டு, 1 சிண்டு, 1 தாத்தா / பாட்டி என்ற சூத்திரத்தில் அடங்கும்படி அமைகிறது.

    ReplyDelete
  9. கொத்தனாரே, ரொம்ப சுவாரசியமாக இருக்கு ஒங்க "blog". இந்த நல்ல வெலயை மேல வைங்க... (keep up this good work)...ஹி ஹி ஹி

    ReplyDelete
  10. நன்றி ஹரிஹரன்ஸ். மேலே வைக்க முயல்கிறேன். :)

    ReplyDelete
  11. இதையெல்லாம் தூக்கிசாப்பிடறா மாதிரியான விவாதங்கள் சன் ம்யூசிக்கில் போகும். நீங்கள் தவறிக்கூட அதை பார்த்திராத புண்ணியவான் போலும். ஒரு முறை தொலைபேசியில் பேசும் பெண்ணுக்கும் தொகுப்பாளாருக்கும் நடந்த உரையாடல் இது.
    தொ: ஒரு பறவை இன்னொரு பறவையின் கூட்டில் சென்று முட்டையிடும். அது எது?
    நேயர்: தெரியலீங்களே. ஒரு க்ளூ கொடுங்களேன் மேடம்.
    தொ: அது கருப்பா இருக்கும். ஆனா காக்கா இல்லை.
    நே: தெரியலீங்களே. இன்னொரு க்ளூ ப்ளீஸ்.
    தொ: அது "கூ கூ" ந்னு கத்துங்க.
    நே: அப்படியா? தெரியலையே...
    தொ: சரி, பரவாயில்லை. உங்களுக்கு என்ன பாட்டு வேணும்னு சொல்லுங்க.
    நே: (அதுக்குள்ள அங்க பக்கத்துல இருந்த யாரோ ஒரு அறிவு ஜீவி பதிலை சொல்லிட) குக்கூ பேர்ட்தானே? (அப்போ கூட சந்தேகமாத்தான் பதில் வருது அதுலயும் இங்கிலிபீசுல)
    தொ: எக்ஸாக்ட்லி. லவ்லி... ப்ளா ப்ளா...
    இவங்கல்லாம் நிஜம்மாவே முட்டாளா, இல்லை அப்படி நடிச்சு நம்மையெல்லாம் முட்டாளாக்கறாங்களா?

    ReplyDelete
  12. லக்க்ஷ்மி,

    யூ நோ டெல் ஆன்சர், ஐயாம் ஸ்டில் தி கன்பியூஷன். :)))

    ReplyDelete
  13. ஒஹோ! இப்படியெல்லாம் நடக்கிறதா?நான் அவ்வளவாக தொலைக்காட்சி பார்பதில்லை என்பதால் நிலவரம் தெரியவில்லை.
    ஐடம் நம்பர் 3 தான் காரணம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. குமார், இதெல்லாம் வீட்டில் சன் ரீவி புதுசாப் போட்டப்ப பார்த்தது. இப்போ எல்லாம் பாக்கறதே இல்லை. ஆனால் எதுவும் மாறி இருக்காது (ரம்யாவுக்குப் பதிலாக வேறு யாராவது என்பதைத் தவிர) என்பது சர்வ நிச்சயம்.

    ReplyDelete
  15. என்ன இது நட்சத்திர வாரம் பூரா மீள் பதிவுகள் தானா? நல்லா ஏமாத்தறீங்க! :P

    ReplyDelete
  16. கீதாம்மா,

    இது மீள் பதிவு எல்லாம் இல்லை. திடீரென்று இதுக்கு உயிர் வந்திருக்கு. அவ்வளவுதான்.

    தமிழ்மண முகப்பில் முதல் லிங்கா நம்ம பயணக்கட்டுரை இருக்கு பாருங்க. அதான் லேட்டஸ்ட்.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!