Sunday, January 29, 2006

போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்

எல்லோரும் எழுதிட்டாங்க. நான் என்ன புதுசா எழுதப்போறேன். இந்த மாதிரி எதாவது பேர் வச்சா நிறைய பேர் வருவாங்களே. அதான். சரி நம்ம வேலையைப் போய் பார்ப்போமா.

என்ன தமிழ்மணத்திலே இருக்கணும் அதனால இனி மறுமொழிகள் மட்டுறுத்தப்படும். இதனால் நான் உறங்கும் சமயத்தில் இடப்படும் மறுமொழிகள் பதிவில் வர தாமதம் ஆகலாம். இனி word verification தேவையில்லை, அதை இலவசமாகவே எடுத்துவிட்டேன். ஆகையால் உங்கள் ஆதரவை வழக்கம்போல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சில ரீபஸ்கள். காட்டுங்கள் உங்கள் கைவண்ணத்தை. விடைகள் இன்னும் சில நாட்களில்.

1) உலஇளைஞன்கம்
2) ரோஜா ரோஜா ரோஜா
3) பாலமஞ்சரி, ஊர்மிகா, சைந்தவி, பூஷாவளி
4) முருகன் அல்லது விநாயகன்
5) ராஎன்சா
6) கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், ஆயில்யம்
7) பசபிக் ஹைக்கு, அட்லாண்டிக் வெண்பா, இந்து மாக்கடல் கலிப்பா, அரபிக்கடல் ஆசிரியப்பா
8) ஹௌரா எக்ஸ்பிரஸ்
9) கோகிலா கோகிலா
10) சோழ, சேர, பாண்டியர்
11) எம்.குமரன், s/o மஹாலட்சுமி, 7ஜி, ரெயின்போ காலனி, சென்னை-67
12) ராமன், கல்யாண ராமன், தசரத ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன், கௌசல்ய ராமன்

ஒரு க்ளூ. விடைகள் அனைத்துமே திரைப்பட பெயர்கள்.

383 comments:

  1. மட்டுறுதல் சரியாக இயங்குகிறதா என்று ஒரு முயற்சி.

    ReplyDelete
  2. 1.உலகம் சுற்றும் வாலிபன்
    2. Cகிவப்பு ரோஜாக்கள்

    4 சிவகுமர் (??)
    6. நட்சதிரங்கள்
    11. முகவரி
    12. ராமன் ஏத்தனை ராமனடி

    ReplyDelete
  3. 1.உலகம் சுற்றும் வாலிபன்
    2. Cகிவப்பு ரோஜாக்கள்

    4 சிவகுமர் (??)
    6. நட்சதிரங்கள்
    11. முகவரி
    12. ராமன் ஏத்தனை ராமனடி

    ReplyDelete
  4. 1) உலகம் சுற்றும் வாலிபன்
    6) அக்னி நட்சத்திரம்
    9) மீண்டும் கோகிலா
    12) ராமன் எத்தனை ராமனடி

    ReplyDelete
  5. 1.உலகம் சுற்றும் வாலிபன்
    2. Cகிவப்பு ரோஜாக்கள்

    4 சிவகுமர் (??)
    6. நட்சதிரங்கள்
    11. முகவரி
    12. ராமன் ஏத்தனை ராமனடி

    ReplyDelete
  6. 7 கடலோர கவிதைகள்

    ReplyDelete
  7. 1. உலகம் சுற்றும் வாலுபன்
    2. த்ரீ ரோஸஸ்
    3. ??
    4. ??
    5. என் ராசாவின் மனசிலே
    6. பைவ் ஸ்டார்
    7. ??
    8. மும்பை எக்ஸ்பிரஸ்
    9. மீன்Dஉம் கோகிலா
    10. மோவேந்தர்
    11. முகவரி
    12. ராமன் எத்தனை ராமனடி

    ReplyDelete
  8. 2.//ரோஜா ரோஜா ரோஜா
    //
    சிகப்பு ரோஜாக்கள்

    9) கோகிலா கோகிலா
    மீண்டும் கோகிலா

    12) ராமன், கல்யாண ராமன், தசரத ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன், கௌசல்ய ராமன்//

    இராமன் எத்தனை இராமனடி



    ஈஸியானதெல்லாம் சொல்லியாச்சு. இனி பெருசுங்கள்லாம் வந்து மத்தத பத்தி அடிச்சிக்கலாம். :)

    ReplyDelete
  9. 12.ராமன் எத்தனை ராமனடி
    11.முகவரி
    10.மூவேந்தர்
    9. மீண்டு கோகிலா
    8.மும்பை எக்ஸ்பிரஸ்
    2.சிவப்பு ரோஜாக்கள்
    இவ்வளவுதான் இப்போதைக்கு. மீதி இன்னும் சில நாட்களில் :-)

    ReplyDelete
  10. சின்னவன்,

    1,2,7,11, 12 - சரி
    4,6 - தவறு

    ReplyDelete
  11. நாமக்கல் சிபி,

    1,5,6, 9,10,11,12 - சரி
    10 - மூவேந்தர் தானே?
    11 - எப்படிங்க ஹௌரா போற எக்ஸ்பிரஸை மும்பை வண்டியாக்கிட்டீங்க.

    ReplyDelete
  12. ராமநாதன்,
    ஈசியானது மட்டும் போட்டா எப்படி. தப்பாவும் நாலு போட்டாதானே பின்னூட்ட எண்ணிக்கை ஜாஸ்தியாகும்.

    ReplyDelete
  13. மகேஸ்,

    போட்டதுல மும்பை எக்ஸ்பிரஸ் தவிர மீதி எல்லாம் சரி.

    சில நாட்களா? நம்ம தமிழ்மண நண்பர்கள் பத்தி உங்களுக்கு தெரியாது. இன்னும் சில நிமிஷங்களிலே முடிச்சிடுவாங்களே.

    (தமிழ்மண நண்பர்களே, வாய் விட்டுட்டேன். காலைவாரிடாதீங்க.)

    ReplyDelete
  14. 7.கடலோரக் கவிதைகள்

    ReplyDelete
  15. 8.கிழக்கே போகும் ரயில்

    ReplyDelete
  16. 8. Kizhakke Pogum Rayil?

    ReplyDelete
  17. 3.அபூர்வ ராகங்கள்

    ReplyDelete
  18. 7 கடலோரக் கவிதைகள்
    8 கிழக்கே போகும் ரயில்
    3 அபூர்வ ராகங்கள்

    சரியான விடைகள்.

    வாங்க ஜெயஸ்ரீ. காணுமேன்னு பாத்தேன்.

    ReplyDelete
  19. 6. நட்சத்திரம்

    ReplyDelete
  20. ஜெயஸ்ரீ, 6 சரியில்லை

    காயத்திரி, வாருங்கள். 4,6 மீண்டும் முயலுங்கள்

    ReplyDelete
  21. 4. இரண்டில் ஒன்று
    6. ரேவதி

    ReplyDelete
  22. 4. தெய்வ மகன்

    ReplyDelete
  23. 4. இரண்டில் ஒன்று
    6. ரேவதி

    ReplyDelete
  24. இன்னும் ஒண்ணுதாங்க. சீக்கிரம் போடுங்க.

    ReplyDelete
  25. வாங்க கௌசிகன்,

    4. நான் நினைத்தது தெய்வ மகன்தான். ஆனால் சிவகாமியின் செல்வன் நல்லாவே இருக்கு.

    10. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். அப்படி போடு.

    மத்ததுக்கெல்லாமும் வேற கண்டுபிடியுங்களேன்.

    ReplyDelete
  26. ஜெயஸ்ரீ,
    4. சரியான விடை.

    எல்லா பதிலும் வந்தாச்சா?

    ReplyDelete
  27. நாலே நாலு நாள் ஊருல இல்ல.. அதுக்குள்ள ஒரு பதிவு போட்டு...அதுக்கு எல்லாரும் விடையும் சொல்லியாச்சு. ஓகே. ஓகே.

    ReplyDelete
  28. அய்யா கொத்தனாரே...ஸன் டீவி மாதிரி, சினிமா இல்லாமல் எழுத முடியாதய்யா?

    ரொம்பத்தான் துள்ளுதீரே...இத போடுவே பாப்போம்...

    தென்பாட்டுறல்

    ReplyDelete
  29. ராகவன்,

    உங்களுக்காக ஒரு தனிப் பதிவு போடறேன். கவலைப்படாதீங்க. இனிமே ஊருக்கெல்லாம் போனா சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு போங்க. புரிஞ்சுதா? :)

    ReplyDelete
  30. யோவ்,

    நமக்கே புதிரா?

    காற்றினிலே வரும் கீதம்.

    சரியா?

    சினிமா பத்தி போடலைன்னா மக்கள் படிக்க மாட்டேங்கறாங்களே. அவங்க ரசிக்கறத தானே நாம குடுக்கமுடியும். :)

    இண்டஸ்ரிகாரங்க பதிலையே நாமளும் குடுத்தாச்சே.

    ReplyDelete
  31. தூள் கிளப்பிட்டேரே, கொத்தனார் அண்ணே...."காற்றினிலே வரும் கீதம்" மிகவும் சரிதான்வே...

    ReplyDelete
  32. ரொம்ப டாங்ஸுங்கோவ். அது சரி புதிரெல்லாம் போடறதுனால அண்ணன்னே முடிவு பண்ணிட்டீங்களா. நானும் சின்னப்பையந்தானுங்கோ.

    ReplyDelete
  33. கொத்தனாரே,
    ராகவனாச்சும் நாலு நாள் வெளியூர் போனாரு. நான் நேத்து ராத்திரி 8.30 மணி வரைக்கும் ஆயுதம் படம் கூட பாக்காம சொந்த கம்ப்யூட்டர் இல்லாம இண்டெர்நெட் செண்டர்ல பழியா கிடந்தேன். நான் கண் அசந்தா நேரமா பாத்து எல்லாத்தையும் நீங்களே முடிச்சிட்டா எப்படிங்க? ஆனாலும் இது ரொம்ப போங்கு!

    ReplyDelete
  34. கைப்புள்ள, கோவிச்சிக்காதீங்க. எனக்கு தூக்கம் வராத ஒரு ராத்திரி (அன்னிக்கு ராகவன் வெளியூர் போகலைன்னா, உங்க சொந்த கம்ப்யூட்டர் வேலை செஞ்சுதுன்னா / நீங்க கண் அசராம இருந்தீங்கனா) இந்திய நேரப்படி பகலில் ஒரு பதிவைப் போட்டு இவங்களை எல்லாம் பழி வாங்கிடலாம். என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  35. ஒன்று சேர்க்கப்பட்ட விடைகள்

    1) உலஇளைஞன்கம் - உலகம் சுற்றும் வாலிபன்
    2) ரோஜா ரோஜா ரோஜா - சிகப்பு ரோஜாக்கள்
    3) பாலமஞ்சரி, ஊர்மிகா, சைந்தவி, பூஷாவளி - அபூர்வ ராகங்கள்
    4) முருகன் அல்லது விநாயகன் - தெய்வ மகன் / சிவகாமியின் செல்வன்
    5) ராஎன்சா - என் ராசாவின் மனசிலே
    6) கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், ஆயில்யம் - 5 ஸ்டார்
    7) பசபிக் ஹைக்கு, அட்லாண்டிக் வெண்பா, இந்து மாக்கடல் கலிப்பா, அரபிக்கடல் ஆசிரியப்பா - கடலோரக் கவிதைகள்
    8) ஹௌரா எக்ஸ்பிரஸ் - கிழக்கே போகும் ரயில்
    9) கோகிலா கோகிலா - மீண்டும் கோகிலா
    10) சோழ, சேர, பாண்டியர் - மூவேந்தர் / எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    11) எம்.குமரன், s/o மஹாலட்சுமி, 7ஜி, ரெயின்போ காலனி, சென்னை-67 - முகவரி
    12) ராமன், கல்யாண ராமன், தசரத ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன், கௌசல்ய ராமன் - ராமன் எத்தனை ராமனடி

    இலவச இணைப்பு
    தென்பாட்டுறல் - காற்றினிலே வரும் கீதம்

    ReplyDelete
  36. அய்யா கொத்தனாரே, குறுக்கெழுத்துப் புதிரில், cryptic (தமிழில் என்னவோ?) என்றொரு வகை உண்டு. அது போன்று ரீபஸ்ஸிலும் கொள்ளலாமே. உ.ம்.
    உலவாலிபன்கம் - ஸாதா
    பூஇளைங்கன்மி - cruptic.

    சம்மதமா?....

    ReplyDelete
  37. சரிதான் அய்யா. இனிவரும் புதிர்களில் அதிகம் cryptic குறிப்புகளே இருக்க செய்யப்போகிறேன். மக்கள் மூளையைத்தான் கசக்குவோமே.

    ReplyDelete
  38. naalla eluthi irukkada, keep it up I hope you keep this up and do not go in to the vicious circle of "Advise ambujam style blog" .

    ReplyDelete
  39. naalla eluthi irukkada, keep it up I hope you keep this up and do not go in to the vicious circle of "Advise ambujam style blog" .

    ReplyDelete
  40. முத்து,

    அட்வைஸுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். அந்தக் கவலை வேண்டாம்.

    வெற்றி. வெற்றி. வெற்றிகரமான 43-ம் மறுமொழி. இதுதான் நமக்கு இதுவரை வந்ததில் அதிகம்.

    ஜாதி பற்றி இல்லாமல், போலி பற்றி இல்லாமல், உண்மையாகவே இவ்வளவு பின்னூட்டங்கள் வந்தது மகிழ்ச்சி.

    அப்படியே இதை 50 வரை கொண்டு செல்வோமே. :D

    ReplyDelete
  41. சரி கொத்தனாரு. இனிமே பெருமிசன் வாங்கீட்டே ஊருக்குப் போயிட்டு வருவோம்.

    மக்களுக்கு இருக்குற கொஞ்சம் மூளையையும் கசக்கனுமுன்னு முடிவு செஞ்சாச்சா.....சரி...தலையெழுத்தை யாரால மாத்த முடியும்!

    அது சரி அம்பது ஆச்சா?

    ReplyDelete
  42. இல்லீங்களே. 45தான். நமக்கு அந்த அளவு சாமர்த்தியம் பத்தல. ராமநாதன் கிட்ட போய் ட்யூஷன் எடுத்திட்டு வரேன்.

    ReplyDelete
  43. கொத்தனாரே!
    50 பின்னூட்டம் வந்துடுச்சானு பார்க்க விடிஞ்சதும் லாகின் பண்ணிட்டீங்க போலிருக்கு. இன்னும் மூணு தான் பாக்கி. கண்டிப்பா அதுவும் வந்துடும் கவலை படாதீங்க. 50 அடிச்சதும் நம்மளை தனியா கவனிச்சுடுங்க.

    ReplyDelete
  44. பாவை,

    ரொம்ப நன்றி. பாருங்க. அப்படியும் பாருங்க 48தான் வந்திருக்கு. ராமநாதன், குமரன் போன்ற ஹோல்சேல் பார்ட்டிங்களத்தான் பிடிக்கணும் போலிருக்கு.

    ReplyDelete
  45. கைப்புள்ள,

    பாதி பின்னூட்டம் நானே போட்டும் 49 தான் வந்திருக்கு. இன்னும் அரை மணி டயம். யாரும் வந்து போடலைன்னா 50 நானே போட்டிடுவேன். ஆமா.

    ReplyDelete
  46. இதோ 50ஆவது ...

    ReplyDelete
  47. adada.. just miss..

    51!

    everyone finished before I could join:-(

    ReplyDelete
  48. adada.. just miss..

    51!

    everyone finished before I could join:-(

    ReplyDelete
  49. ஜெயஸ்ரீ,

    நம்ம ஸ்டார் பெர்பார்மர் வந்து பொருத்தமா 50 பின்னூட்டம் போட்டுட்டீங்க. நன்றி.

    ReplyDelete
  50. சுரேஷ்,

    ஏன் கவலைப்படறீங்க. இப்போ ஆரம்பிச்சீங்கனா ஈசியா 100-வது போடலாமே. ஹிஹிஹி. ஆனாலும் மனுசனுக்கு ஆசை அதிகந்தாங்க.

    ReplyDelete
  51. மக்களே இதை முயலுங்க

    களை மடு

    கொத்தனார், கம்முன்னு இருவே....

    ReplyDelete
  52. ஸபாஷ், கௌசிகன் ஸார். கொத்தனாரே, ஒங்க வழக்கமான் ஒரு "ஓ" பொடுங்க....ஸாருக்கு

    ReplyDelete
  53. அய்யாக்களே
    இந்த மாதிரி போட்டி வைக்கும்போது விடை எதைபற்றி என்று சொல்லிடுங்க. மண்டை காயுது.
    சரி இதையும் முயற்சி செய்யுங்க.

    1. மணி பேசுமா
    2. தண்ணீர் மழை பூ

    எல்லாம் சினிமா படந்தேன்..

    ReplyDelete
  54. கௌசிகன், பெரியவர் சொன்னா மாதிரி உங்களுக்கு ஒரு 'ஓ'.
    ஹரிஹரன்ஸ், எல்லாரும் அண்ணே, சார்ன்னு சொன்னா எப்படி? அதான் உங்களுக்கு பெரியவர் ப்ரமோஷன்.
    சின்னவன், நீங்க சொல்லறது சரிதான். விடையை கொஞ்சம் வகைப் படுத்தினால் நல்லாதான் இருக்கும். புதிர் போட்டதுக்கு
    நன்றி.

    ReplyDelete
  55. என்ன யாருகிட்டேருந்தும் பதிலைக் காணும்?

    ReplyDelete
  56. சின்னவரே
    இது தமிழ் படம்தானா அல்லது ஆங்கிலமான்னு ஒரு தனிமடல். கொஞ்சம் பதில் சொல்லுங்களேன். இன்னும் ட்ரைதான் பண்ணறோம். விடையை சொல்லாதீங்க.

    ReplyDelete
  57. 1. மௌனமான நேரம்
    2. ஈரமான ரோஜாவே

    சரியா?

    ReplyDelete
  58. கொத்தனார்
    1. சரி
    2. நான் நினைத்தது வேற ஆனா நீங்க சொன்னதும் ஓக்கேத்தான்

    ReplyDelete
  59. சின்னவரே,

    1. இப்படி ஒரு படம் இருக்கா என்ன? பாடல்தான் தெரியும்.
    2. நீங்க நினைத்ததையும் சொல்லலாமே....

    ReplyDelete
  60. மௌன ராகம் நேரம்,கீதம் குழம்பி போய்விட்டேனா ?

    ReplyDelete
  61. நீங்களும் குழம்பி எங்களையும் குழப்பி, இப்படி முடியை பிச்சுக்க வச்சுட்டீங்களே.

    அது சரி. 2-வதுக்கு உங்க விடை என்ன?

    ReplyDelete
  62. கொத்தனாரே!
    உங்க போங்கு நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு போகுது. எங்களையெல்லாம் ஓரங்கட்டிட்டு இங்கே ஒரு தனி கச்சேரி நடக்கறாப்ல இல்ல இருக்கு? திடீர்னு எப்படி 69 பின்னூட்டம் வந்துச்சு, ராமநாதன் உங்களுக்கு வித்தை கத்து குடுத்துட்டாரா என்னானு பார்க்க வந்தேன். கையும் களவுமா பிடிச்சுட்டேன். உட மாட்டேன். இத நான் உட மாட்டேன். யார்டா அங்கே! கூட்டுடா பஞ்சாயத்தை! இதுக்குனு "இலவசக் கொத்தனாரும் போலி டோண்டுவும்"னு ஒரு பதிவு போட்டு கேப்ல கடா வெட்ட போறேன்!
    :)-

    ReplyDelete
  63. கைப்புள்ள,
    இப்ப உங்களால 70 பின்னூட்டம் வந்தாச்சி. ஆமாம். உங்களை யாருய்யா ஓரங்கட்டியது? இந்த வலைப்பூவே உங்களை மாதிரி நண்பர்களுக்குத்தானே. நான் சொல்லியா சின்னவர் வந்து புதிர் போட்டாரு? நீங்களும் வாங்க. புதிரை போடுங்க. இல்லை சும்மா இந்த மாதிரி பின்னூட்டமாவது போடுங்க. யாரு வேண்டாமுங்கறா? நீங்க ஒண்ணு, அதுக்கு நான் மூணு, அப்புறம் நீங்க மறுபடியும் ஒண்ணு. இப்படி போனாத்தானே கணிசமான அளவு பின்னூட்டம் வரும். அத விட்டு போட்டு தனிப்பதிவு அது இதுன்னு பயமுடுத்தறீங்களே. சும்மா இங்கயே எழுதிக்கோங்க.

    ReplyDelete
  64. ஆனா ஒண்ணுங்க. இந்த 'நமக்கு நாமே' திட்டத்துக்கெல்லாம் இராமநாதன்தாங்க குரு.

    'அளவிலா' விளையாட்டுடையார், அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே

    விளக்கம்: 200, 300 என்று ஒரு அளவில்லாமல் பின்னூட்டம் வர செய்யும் விளையாட்டு அவருக்கே உரியது. இந்த விளையாட்டை விளையாட முயலும் எங்களுக்கெல்லாம் அவரே முன்னோடி. அவர் முன் நாங்கள் எதுவுமில்லை. அவர் காலடியில் நாங்களெல்லாம் சரண் அடைகிறோம்.

    கம்பன் மன்னிப்பாராக. ஆமென். :)

    ReplyDelete
  65. ஹிஹிஹி.

    எல்லாரும் விளக்கம் சொல்லறாங்களே. நம்மளும் அப்படியே சொல்லிப்பாக்கலாமேன்னு. வேற ஒண்ணுமில்லை.

    இனிமே குமரன், ராகவன் எல்லாம் வந்து அவங்க அவங்க ஸ்டைலில் விளக்கம் கொடுத்தாங்கன்னா அடியேன் பாக்கியவனாவேன்.

    ReplyDelete
  66. வந்தாச்சு... பின்னூட்ட வளர்ப்பு கலை ஆய கலைகளில் ஒன்றாச்சேப்பா..

    இருந்தாலும் நல்லா முயற்சி செய்யறீங்க கொத்தனார்..

    இனிமே நம்ம பங்குக்கு.

    ReplyDelete
  67. சரி,
    இங்க நிறைய பேருக்கு எப்படி நிறைய பின்னூட்டம் வாங்கறதுன்னு சந்தேகம் இருக்கு போலிருக்கு.

    அதைத் தீர்த்துவைக்க, அந்த சிதம்பர இரகசியத்தச் சொல்றேன். ஆனா வெளியில சொல்லிடகூடாது. ஓகே?

    ReplyDelete
  68. வாங்கய்யா வாங்க. உங்களத்தான் எதிர்பார்த்தேன். இனி 100 தான்

    ReplyDelete
  69. சொல்லிக் கொடுத்தீங்கன்னா கேட்டுப்பேன். ஆனா ராமானுஜர் மாதிரி கோபுரம் மேலேருந்து கூவிடுவேன். நாட்டு மக்கள் நன்மைக்கு.

    ஆனலும் இதெல்லாம் டூ மச்சா தெரியலை :)

    ReplyDelete
  70. //ராமானுஜர் மாதிரி கோபுரம் மேலேருந்து கூவிடுவேன். நாட்டு மக்கள் நன்மைக்கு//
    அப்புறம் ரகசியமா இருக்காதே.. சரி பரவாயில்ல.

    அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயம்.

    ReplyDelete
  71. சொல்லுங்க. சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  72. எல்லாரும் நம்மள போய் பின்னூட்டத்துக்கு பாலோ பண்றீங்க. சில பல பெரிய தலைங்கள்லாம் இருக்காங்க. அவங்களுக்கு முன்னாடி நானெல்லாம் பச்சா. அவங்க "இது ஒரு பதிவு. படிச்சுட்டு பேசாம ஒடிப்போயிடு" அப்டின்னு எழுதிப்போட்டாலே அம்பதாவது கியாரண்டி. அதுக்கப்புறம் எத்தன வரி எழுதறாங்களோ அதுக்கு மல்டிபிள்ஸா பின்னூட்டங்கள் அவங்க மொழியில சொன்ன சீறிப் பாஞ்சு சார்ங்கம் உதைச்சு வரும்.

    சொல்லியுனம் தெரியணுமா? நம்ம தமிழ்மணப் பெரியவர், தருமி, லீகல் அட்வைசர், பமக தலைவர், குழலி அப்புறம் பின்னூட்டம் வளர்ப்பது எப்படி என்று கையேடு போட்ட துளசி டீச்சர் இப்படி நிறைய பேர்.

    ReplyDelete
  73. சரி.. இரகசியத்துக்கு போவோமா??

    இதக் கேட்கறதுக்கு ஒரு பின்னூட்டமால்லாம் யோசிக்கக் கூடாது. சரியா?

    ReplyDelete
  74. 1. உங்க பதிவுக்கு வந்து தப்பித்தவறி யாராவது ஒருத்தர் பின்னூட்டம் போட்டாலும், அவருக்கு தனியா நன்றி சொல்லணும்.

    ReplyDelete
  75. எப்பவுமே கடவுளை தேடி போக நல்ல குரு வேணும்ன்னு சொல்லுவாங்க. அவங்க எல்லரும் இருந்தாக் கூட அங்க கூட்டிட்டு போக நீங்கதான் வேணும். குருப்யோ நமஹ.

    ReplyDelete
  76. பின்னூட்டம் போடலைன்னா எப்படி. இரகசியத்திற்கு போவோம்.

    ReplyDelete
  77. 2. அது வெளிநாட்டு துரைங்களா இருந்தாலும் சரி. மொதல்ல word verification-அ தூக்கணும். ஆனா பாருங்க பின்னூட்ட மட்டுறுத்தல் வந்தப்புறம் துரைங்க வர்றதெல்லாம் குறைஞ்சு போச்சு. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகல. அவங்க கமெண்ட பப்ளிஷ் பண்ணிட்டு அழிச்சிடலாம் (Remove Forever பண்றவங்க இதுக்கு மேல இதப் படிக்கறது வேஸ்ட்).

    ReplyDelete
  78. 1. முதல் பாடம் புரிந்தது. உங்கள் பதிவுகளைப் பார்த்தே தெரிந்து கொண்டேன். செயல் படுத்தீயும் வருகிறேன்.

    ReplyDelete
  79. 3. கொத்தனாரே, நல்ல கேள்வி. பின்னூட்டமே வரலேன்னா என்ன செய்யறது? இருக்கவே இருக்கு, நமக்கு நாமே திட்டம். இதுல ரெண்டு வழி இருக்கு. முதலாவது ரொம்ப சுலபம். test, பின்னூட்டம் வேலை செய்யலேன்னு மயில் மூலம் பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் சொன்னதை பரிசோதிக்க சோதனைப் பின்னூட்டம் அப்படின்னு அடிச்சு வுடலாம். இதுல சோதனை போடறதுக்கு தனித் திறமை வேணும். இந்தியா நேரம் காலை ஆறு மணிக்கு பதிவு போட்டு ஒருத்தரும் பின்னூட்டம் போடலேன்னா, அந்த டைம்-கேப்பில யாரும் உங்க பதிவ படிக்க இல்லென்ன்னு புரிஞ்சுக்கணும். ஆறு மணி நேரம் கழிச்சு சோதனை முயற்சி செஞ்சு பாக்கலாம். புரியுதா?

    ReplyDelete
  80. 2. நம்ம பதிவுக்கு அந்த அதிர்ஷ்டம் எல்லாம் இல்லை. தொரைமாருங்க எல்லாம் வந்ததேயில்லை. :(

    ReplyDelete
  81. 4. பின்னூட்டமே வரல. யாருமே நம்மள கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னா.. வெட்கமேயில்லாம விளம்பரம் கொடுக்கலாம். நிறைய அடி (ஹிட்) வாங்கற பதிவுகளுக்கு போய் உங்களோட கருத்துகளையும் (சம்பந்தமிருக்கோ இல்லியோ) பின்னூட்டமா போட்டுட்டு அதுலேயே உங்க பதிவுக்கும் விளம்பரம் கொடுத்துடலாம்.

    ReplyDelete
  82. 4.1 மேல சொன்னபடி அடுத்தவங்க பதிவுக்கு போனீங்கன்னா, இன்னொரு ராடிகல் டெக்னிக் இருக்கு. அந்தப் பதிவாளர் சொல்றது தப்போ ரைட்டோ, நார் நாரா கிழிச்சு, இன்னா மேன் எழுதற நீயெல்லாம்னு மரியாதையா கேட்டீங்கன்னா.. கண்டிப்பா அந்தப் பதிவ படிக்கற எல்லாரும் உங்க விளம்பரம் மூலமா உங்க பக்கம் வருவாங்க. ஆனா, இது கொஞ்சம் ரிஸ்கி. ஏன்னா, பதிவாளர் விஷயம் தெரிஞ்சவரா இருந்து பதிலடி கொடுத்திட்டா. அப்படியும் கவலையில்லை. அம்பது சதவிகிதமாவது பாவப்பட்டு உங்க பக்கம் வருவாங்க.

    ReplyDelete
  83. 3. ஆமாம். இப்போ புதுசா சுயமா புதுப்பிக்கறா மாதிரி வேற பண்ணிட்டாங்களா. அதனால பதிவு போட்ட உடனே நாமளே ஒரு பின்னூட்டம் போட்டோம்ன்னா அது சீக்கிரம் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில வந்துடும். my 2 cents .

    ReplyDelete
  84. 4. அது நிறைய பேர் பண்ணி பார்க்கறேன். நானும் செய்திருக்கேன். ;)

    ReplyDelete
  85. 5. இது ஒரு அடிப்படை விதி. உங்க பதிவுக்கு முப்பது பின்னூட்டம் வந்தா இருபதாவது உங்களுதா இருக்கணும். ஒருத்தருக்கு பதில் சொல்லும்போது, எல்லாத்தையும் சொல்லிடக் கூடாது. பாதி எழுதிட்டு, அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஆங் சொல்ல மறந்துட்டேனேன்னு அடுத்த பார்ட்-ஐயும் போடணும்.

    ReplyDelete
  86. 4.1 இதுக்கு ஒரு ஐடியா. நாமளே இரண்டு பேர்ல பதிவுகள் போட்டு, மாறி மாறி திட்டிக் கிட்டா என்ன?

    ReplyDelete
  87. 6. நிறைய பேர் எழுதுனாலும், எல்லாருக்கும் நன்றின்னு எழுதுனா அதுக்கு மேல யாரும் வரமாட்டாங்க. சில பேர் அப்படி செய்வாங்க. அவங்க ரேஞ்சே வேற. நாம அப்படியா? அதனால தனித்தனியாத் தான் பதில் போடணும். மறந்துடக் கூடாதுங்கறதுக்காக இன்னொரு தடவை சொல்றேன்.

    ReplyDelete
  88. 5. இதையும் உங்கள மாதிரி சில ஆளுங்கள பாத்தே கத்துக்கிட்டேன். கைப்புள்ளே போட்ட ஒரு பின்னூட்டதிற்கு நான் நைஸா மூணு போட்டேன் பாருங்க.

    ReplyDelete
  89. 6. மீண்டும் ஒரு முறை இதை சொன்னதற்கு ஒரு தனி நன்றி அய்யா. :)

    ReplyDelete
  90. 7. இன்னொரு விஷயம் நினைவில் வச்சுக்கணும். ரிபீட் ஆடியன்ஸ் தான் வெற்றியின் ரகசியம். சூப்பர் ஸ்டாரிலிருந்து எலெக்ஷன்ல ஓட்டுப் போடறவங்க வரைக்கும் எல்லாருக்கும் இது பொருத்தம்.

    ஒருத்தர் வந்து பின்னூட்டம் போடறார்னு வச்சுக்கங்க. அவர் மறுபடியும் ஒரு மணியிலோ அடுத்த நாளோ நீங்க அவர் சொன்னதுக்கு ஏதாவது கருத்து சொல்லிருக்கீங்களான்னு கண்டிப்பா பார்ப்பார். நம்புங்க. நீங்க பெரிசா ஒண்ணும் சொல்லலேனா, சத்தமில்லாம போயிடுவாரு. அதனால, நாம பதில் போடும்போது நன்றியோட நிறுத்தாம அவர வம்புக்கு இழுத்தோ, ஜாலியா கிண்டல் செஞ்சோ போட்டோமுன்னா, கண்டிப்பா அதுக்கும் ஒரு பதில் போடணுமின்னு அவருக்கு தோணும். அவர் போட, நீங்க போட, அந்தப் பதிலுக்கு அவர் போட.. இப்ப ஓடுதே இதே மாதிரி ஓட்டிடலாம். :))

    ReplyDelete
  91. அதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கோம்.

    ReplyDelete
  92. நூறு நூறு நூறு!

    ReplyDelete
  93. 8. உங்க பேர்லேயே விளம்பரமோ டெஸ்ட் பின்னூட்டமோ கொடுக்க வெட்கமாயிருந்தா (இதுக்கெல்லாம் வெட்கப்பட்டா முடியுமா?).. தனியா அந்நியன் மாதிரி ஒரு புது ப்ளாக்கர் கணக்கு தொடங்கி, அம்பி, ரெமோ, அந்நியன் மாத்ரி உங்களுக்குள்ளேயே பேசிக்கலாம்.

    ReplyDelete
  94. நூறு! நூறு! நூறு!

    அடிச்சோமைய்யா! முதல் 50தையே 100-ஆ கன்வேர்ட் பண்ணியாச்சு.

    ப.ம.க வில ஒரு பதவி கொடுங்கப்பா.

    ReplyDelete
  95. 8. நமக்கு வெட்கமெல்லாம் கிடையாதுங்க. எருமைத்தேலுன்னு அம்மா அடிக்கடி திட்டுவாங்க. அப்படியே கொஞ்ச நஞ்ச உணர்ச்சி இருந்தாக் கூட அனானியா போடலாமே.

    ReplyDelete
  96. 7. addendum

    வரவர்க்கு கொக்கிப் போடணும்னு சொன்னோமா? கேள்வியும் கேக்கலாம்? இல்லேனா, அறியத்தந்தமைக்கு நன்றி, சுட்டி ஏதேனும் கொடுக்க முடியுமா?னு கேட்கலாம். அவரும் கண்டிப்பா சுட்டி கொடுப்பாரு. அதுக்கு ஒரு நன்றி. அதுல ஒரு கேள்வி. improv பண்ணனும். இதெல்லாம் பழகப் பழகத்தானா வரும்.

    ReplyDelete
  97. 7.1 சித்திரமும் கைப்பழக்கம்ன்னு சொல்லுவாங்க. இந்தக் கலையும் அப்படித்தான்னு சொல்லறீங்க. பழகிக்கறேன்.

    ReplyDelete
  98. 9. மிகவும் முக்கியமானது இது. பதிவோட தலைப்பு. சும்மா மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான், தமிழ்நாட்டு அரசியல், கில்லி- திரைப்பட விமர்சனம். இப்படியெல்லாம் வச்சா ஒருத்தரும் வரமாட்டாங்க. அதுக்கு பதிலா, 'நீ ஒரு குரங்கு', 'வெட்கம், மானம் சூடு சொரணை இருக்கிறதா', கில்லி ஒரு பல்லி' னு அப்படின்னு யோசிச்சு வக்கணும்.

    ReplyDelete
  99. புரியுது. புரியுது. பிள்ளையாரும் பட்டர் சிக்கனும். இந்த மாதிரித்தானே. வெச்சுடுவோம். இந்த பதிவே அப்படித்தானே - போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்

    ReplyDelete
  100. 10. இதுவும் ரொம்ப முக்கியமானது. அடிப்படை விதி. 4.1ன் கண்ணியமான மாற்றம். விளம்பரம் போடாம, சகட்டுமேனிக்கு எல்லார் பதிவிலேயும் பின்னூட்டம் போடணும். ஒரு சனி, ஞாயிறு இதுக்காக ஒதுக்கினீங்கன்னா போதும். கொஞ்சமே பின்னூட்டங்கள் வந்து தத்தளிக்கற பதிவுகள தூக்கி விட்டீங்கன்னா, அவங்களும் நன்றிக்கடன் திருப்பிச் செலுத்த உங்க பக்கம் வந்து தூக்கி விடுவாங்க.

    ReplyDelete
  101. 11. இதுவும் ரொம்ப முக்கியமானது. பின்னூட்டப் பேராசைப்பட்டு சர்ச்சைக்குரிய விஷயங்கள் பத்தியெல்லாம் பேசக்கூடாது. பேசினா ப்ராண்ட் குத்தி ஓரமா ஒக்கார வச்சுடுவாங்க. நீங்க புது ஐடில வந்தாலும், ப்ராக்ஸி வச்சு கண்டுபிடிச்சுடுவாங்க.

    விஷய அறிவோட எழுதறவங்களுக்கு இது பொருந்தாது.

    ReplyDelete
  102. //ப.ம.க வில ஒரு பதவி கொடுங்கப்பா//
    நானே இன்னும் பீட்டருக்கு வட்டமாத்தான் இருக்கேன். அதுக்குள்ள பதவி வேணுமா..

    டூ டூ மச். தலைவர் பாத்தா தப்பா நினச்சுப்பாரு.

    ReplyDelete
  103. //கொஞ்ச நஞ்ச உணர்ச்சி இருந்தாக் கூட அனானியா போடலாமே.
    //
    குட் குட். இந்த மாதிரி ப்ரைட்டான ஸ்டுடண்ட்ஸ் தான் நமக்கு வேணும்.

    ReplyDelete
  104. 4.1 ஏங்க. ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வருது.

    நாய் ஒண்ணு குரைக்கறத பாத்து ஒருத்தர் பயந்து போய் நிக்கறார். அங்க இருந்த ஒருத்தர் 'சும்மா போங்க. குலைக்கற நாய் கடிக்காது.' அப்படின்னு சொல்லறார். உடனே இவர் 'அது உங்களுக்கு தெரியிது. ஆனா அந்த நாயிக்கும் தெரியணமேன்னு' பின்னூட்டம் போட்டாராம்.

    அந்த மாதிரி தத்தளிக்கற அந்த பதிவாளர்களுக்கும் இந்த விதி தெரியணுமே. தெரிஞ்சி வந்து நம்ம பதிவுல அவங்க மறுமொழியணுமே.

    பதிவாளர்களே, உங்க யாரையும் நான் நாய்ன்னு சொல்ல வரல. ஒரு உதாரணக் கதைதான். நீங்க வழக்கம்போல் உங்க ஆதரவைக் கொடுங்க.

    ReplyDelete
  105. 12. இதுவே கடைசின்னு நினைக்கிறேன். இன்னும் ஏதுனா தோணுனா மெதுவா சொல்றேன். (trade secret எல்லாத்தியும் சொல்லிட்டா எப்படி). உங்கள மாதிரியே வெட்டியா இருக்கற ஒரு பிரண்ட பிடிங்க. யாஹூ சாட்க்கு பதில் இங்கேயே சாட் பண்ணலாம்.

    ReplyDelete
  106. 11. விஷய அறிவுன்னா என்னங்க? ஆமாம். பேராசை பெரு நட்டம். ஒரு பதிவுக்கு நிறைய திட்டு வரும் அப்புறம் போலி டோண்டு கூட வரமாட்டார். Why kill a golden goose? சரிதானுங்க்களே.
    (இப்படி அவங்க சொன்னதையே திருப்பி சொல்லறதும் ஒரு விதிதானுங்களே?)

    ReplyDelete
  107. //தெரிஞ்சி வந்து நம்ம பதிவுல அவங்க மறுமொழியணுமே//

    பண்ணுவாங்க அவங்களாவே. அப்படியும் பண்ணலேன்னா, தனிமடல், யாஹூவெல்லாம் எதுக்கு இருக்கு? "நன்றி கெட்டவனே, துரோகி. அவரசத்துக்கு உதவாத நட்பென்ன நட்புன்னு" உதார் விடலாம். கண்டிப்பா வழிக்கு வந்துடுவாரு.

    ReplyDelete
  108. //ப.ம.க வில ஒரு பதவி கொடுங்கப்பா
    நானே இன்னும் பீட்டருக்கு வட்டமாத்தான் இருக்கேன். அதுக்குள்ள பதவி வேணுமா..

    டூ டூ மச். தலைவர் பாத்தா தப்பா நினச்சுப்பாரு.//

    அழுத பிள்ளைக்குத்தானே பால். நியூ ஜெர்ஸி இல்லைன்னாலும் எடிஸனுக்காவது பொறுப்பாளராகலாமில்லை.

    ReplyDelete
  109. //இப்படி அவங்க சொன்னதையே திருப்பி சொல்லறதும் ஒரு விதிதானுங்களே?) //
    அதே அதே. நல்லா பிக்-அப் பண்ணிக்கிறீங்க. :))

    ReplyDelete
  110. //கொஞ்ச நஞ்ச உணர்ச்சி இருந்தாக் கூட அனானியா போடலாமே.

    குட் குட். இந்த மாதிரி ப்ரைட்டான ஸ்டுடண்ட்ஸ் தான் நமக்கு வேணும்.//

    நல்ல வாத்தியார் அமைஞ்சா மக்கு பையன் கூட பாஸாயிடுவான்னு எங்க வாத்தியார் சொல்லுவார்.

    (அவர் கிளாஸுல ஒரு பையன் பெயிலாயி அவரை பாத்து நீங்க நல்ல வாத்தியார் இல்லையான்னு கேட்டது வேற கதை)

    ReplyDelete
  111. //நியூ ஜெர்ஸி இல்லைன்னாலும் எடிஸனுக்காவது பொறுப்பாளராகலாமில்லை//
    ஒட்டுமொத்த அமெரிக்காவையுமே ஏற்கனவே black-ல குத்தகைக்கு எடுத்திட்டாரு. எதுக்கும் தலைவரோட பதிவுகள்ல போய் ஆதரவு தெரிவிச்சீங்கன்னா, முதல்ல அடிப்படை உறுப்பினர் பதவி கிடைக்கும். அப்புறம் பொறுப்பாளராகலாம். சேரும்போதே சீப் மினிஸ்டர் ஆத்தான் சேருவேன்னா எப்படி?

    ReplyDelete
  112. 12. அதான் காத்திருந்து உங்களைப் பிடிச்சுட்டேனே. ஹிஹி.

    ReplyDelete
  113. //தெரிஞ்சி வந்து நம்ம பதிவுல அவங்க மறுமொழியணுமே

    பண்ணுவாங்க அவங்களாவே. அப்படியும் பண்ணலேன்னா, தனிமடல், யாஹூவெல்லாம் எதுக்கு இருக்கு? "நன்றி கெட்டவனே, துரோகி. அவரசத்துக்கு உதவாத நட்பென்ன நட்புன்னு" உதார் விடலாம். கண்டிப்பா வழிக்கு வந்துடுவாரு.//

    இந்த மாதிரி தனி மடலுக்கெல்லாம் template இருந்தா குடுங்க.

    ReplyDelete
  114. //இப்படி அவங்க சொன்னதையே திருப்பி சொல்லறதும் ஒரு விதிதானுங்களே?)
    அதே அதே. நல்லா பிக்-அப் பண்ணிக்கிறீங்க. :)) //

    அதே நல்ல வாத்தியார் கதைதான்.

    ReplyDelete
  115. //நியூ ஜெர்ஸி இல்லைன்னாலும் எடிஸனுக்காவது பொறுப்பாளராகலாமில்லை
    ஒட்டுமொத்த அமெரிக்காவையுமே ஏற்கனவே black-ல குத்தகைக்கு எடுத்திட்டாரு. எதுக்கும் தலைவரோட பதிவுகள்ல போய் ஆதரவு தெரிவிச்சீங்கன்னா, முதல்ல அடிப்படை உறுப்பினர் பதவி கிடைக்கும். அப்புறம் பொறுப்பாளராகலாம். சேரும்போதே சீப் மினிஸ்டர் ஆத்தான் சேருவேன்னா எப்படி? //

    அது யாருங்க அமெரிக்காவையே குத்தகைக்கு எடுத்தது? போய் சைடுல ஒரு sub-lease போட்டுக்கறேன்.
    என்ன இப்படி சொல்லிட்டீங்க. நம்ம கார்த்திக்கை பாருங்க. சேரும் போதே மாநிலத் தலைவர். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். சும்மா ட்ரை பண்ணுவோமே.

    ReplyDelete
  116. ஆக மொத்தம் ஒரு டஜன் விதிகளை கொடுத்து, இதன் படி நடன்னு சொல்லியிருக்கீங்க. அப்படியே செய்யறேன்.

    ReplyDelete
  117. பாருங்க. 50 பின்னூட்டதிற்கு மேலையே போட்டிருக்கோம் வேற யாராவது வந்து பாத்தாங்களான்னு பாருங்க. ரொம்ப மோசம்.

    அப்புறம் நீங்க அந்த கம்பன் கடவுள் வாழ்த்து மேட்டருக்கு ஒண்ணுமே சொல்லலையே. நீங்க சொல்லி அப்புறம் ராகவன், குமரன் எல்லாம் வந்து ஒரு வார்த்தை சொன்னாத்தானே நம்ம மனசு நிம்மதியாகும்.

    ReplyDelete
  118. கொத்தனாரே,
    //வேற யாராவது வந்து பாத்தாங்களான்னு பாருங்க//
    எல்லாரும் பாத்துட்டு செயல்முறையில இறங்கிட்டாங்களோ என்னவோ? விடுங்க. நூறு வேணும்கற நம்ம காரியம் முடிஞ்சதில்ல.

    //கம்பன் கடவுள் வாழ்த்து மேட்டருக்கு ஒண்ணுமே சொல்லலையே//
    நம்ம பத்திய பாட்டுக்கு நாமளே விளக்கம் கொடுக்க நான் என்ன 'அவரா'? இதுக்குமேல அரசியல் வேணாம். :)

    ReplyDelete
  119. சரிங்க. உங்க பாடத்திற்கு ரொம்ப நன்றி.

    கட்சியிலே இருந்துகிட்டே அரசியல் வேண்டாம்ன்னா எப்படி. :)

    ReplyDelete
  120. Informative discussions.

    I have bookmarked this blog as my favorites. Please visit my blog and comment for a prosperous future.

    ReplyDelete
  121. நூறுக்கு மேலே பின்னூட்டம் போயிடிச்சி போலிருக்கே. வாழ்த்துக்கள்.

    இபின்னூட்டத்தின் நகல் என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். அது வருகிறதா என்று பார்த்தே நீங்கள் இதை மட்டுறுத்தவும். அதுவும் நீங்கள் அதர் ஆப்ஷனை வேறு வைத்திருப்பதால் போலி டோண்டு உங்களிடமும் வர வாய்ப்பு உண்டு என்பதற்காகவே இவ்வளவு முன்ஜாக்கிரதை நடவடிக்கைகள். என் தனிப்பதிவின் சுட்டி: http://dondu.blogspot.com/2005/12/2.html

    உங்கள் பதிவில் என் பின்னூட்டம் போட்டொவுடனும் என் சரியான ப்ளாக்கர் எணுடனும் வர வேண்டும். அப்போதுதான் அது என்னுடையது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  122. நன்றி டோண்டு சார்.

    உங்களை எல்லாம் என் பதிவிற்கு வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதாய் இருக்கு. :)

    ReplyDelete
  123. இது ஒரு சோதனை!

    ReplyDelete
  124. நன்றி சுரேஷ். சொன்னபடிய்யே செஞ்சுட்டேன்.

    ReplyDelete
  125. என்னடா கூத்தடிக்கறீங்க. இது உங்களுக்கே அதிகமா தெரியலை?

    ReplyDelete
  126. wow this is really interesting.

    ReplyDelete
  127. கொத்தனாரே!
    வாழ்த்துகள். செஞ்சுரி போட்டுட்டு டபுள் செஞ்சுரி நோக்கி போய்ட்டீருக்கீங்க! காலைல நீங்க லைட்டா டென்சன் ஆன மாதிரி எனக்கு பட்டுச்சு. நான் ஒரு தமாசுக்கு தான் சொன்னேனே ஒழிய நான் மீன் பிடிக்கலை.

    ராமநாதனும் நீங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள விஷயங்களை விவாதிச்சிருக்கீங்க. கபீர்தாஸ் பாடுன பாட்டையெல்லாம் அவர் சிஷ்யகோடிங்க எழுதி வச்சுக்கிட்ட மாதிரி, நாங்கெல்லாம் உங்க அனுமதியோட இந்த முத்துக்களைப் பொறுக்கிக்கிறோம்.

    ReplyDelete
  128. கொத்தனாரே, ஊடு கட்டி அடிக்கிறீங்க போல

    ReplyDelete
  129. இறைவன் மனிதனாய் பிறக்க வேண்டும்
    அவன் கணிணி வாங்கி, தமிழ் பதிவுகள் படித்து
    மண்டை காய வேண்டும்

    - அழகு

    ReplyDelete
  130. வாழ்க வளர்க. தம்பி இராமநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தப் பதிவுக்கு வந்து பதிவையும் மற்றப் பின்னூட்டங்களையும் பார்த்தேன். அருமை. அருமை. அருமையிலும் அருமை. விண்மீன் வாரத்தில் நான் எப்படிப் பின்னூட்டங்களைப் பெற்றேன் என்ற இரகசியத்தை இரகசியமில்லாமல் ஆக்கிய இலவசக் கொத்தனாருக்கும் தம்பி இராமநாதனுக்கும் எனது மனம் எரிந்த சாபங்கள். இலவசமாய் இவ்வளவு தான் தர முடியும் என்பதால் என் பொன்னான நேரத்தை வீணாக்கிய உங்களுக்கு பின்னூட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  131. நேத்து நம்ம கொத்தனாரை, கிரிக்கெட்டில் இறக்கிவிட்டிருந்தா அவுட்டாகாம மானத்தக் காப்பாத்திருப்பாரு போல

    ReplyDelete
  132. யாருப்பா அது அனானி?? நமக்குப் போட்டியா..

    கொத்தனாரே,
    நம்மளோடது தான் 150 வதுதான் இருக்கணும் சொல்லிப்புட்டேன். மாறிப்போச்சு...நடக்குறதே வேற...

    ReplyDelete
  133. இதுதாண்டா நூத்தியம்பது...
    பமகவின் கிரிடத்தில் இன்னொரு வைரம்!


    (இல்ல கொத்தனார் தொலஞ்சார்!!)

    மீண்டும் வருவேன். இருநூற்றைக் கைப்பற்ற..

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  134. கொஞ்ச நேரம் தூங்கி வரத்துகுள்ள இவ்வள்வு கலாட்டாவா ?
    இராம்ஸ்,மேஸ்திரி இது நியாயமா ?
    150 ஆச்சா ?

    ReplyDelete
  135. சாரி அனானி,
    150 ஏற்கனவே இராமநாதர் போட்டுட்டாரு.

    மனச தளரவிடக்கூடாது. இருநூறு இருக்கே!

    ReplyDelete
  136. கைப்புள்ள, டென்சனெல்லாம் ஆகல. கவலைப்படாமல் காலைவாருங்க. :)

    ReplyDelete
  137. மகேஸ், வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  138. அழகு, அப்படி என்னங்க மண்டை காயறா மாதிரி பண்ணிட்டோம். எல்லாம் ஒரு ஜாலிதான். என்ஸாய் பண்ணுங்க.

    ReplyDelete
  139. அய்யா குமரரே, நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு சொல்லணும். அதுக்குத்தான் இப்படி. பாருங்க. இதனால உங்களுக்கு ரொம்ப யோசிக்காம ஒரு பதிவே போட முடிஞ்சது இல்லையா?
    வேணா ஆட்டத்தை அங்க கண்டினியூ பண்ணலாம்.

    ReplyDelete
  140. மகேஸ்,

    நம்ம ஆட்டம் எல்லாம் பின்னூட்டதிலதான். என் கையை காலை அக்தார் பேத்து எடுக்கணும்ன்னு என்னங்க ஆசை?

    ReplyDelete
  141. அனானிக்கு நன்றி. இப்போ 200 வரை கொண்டு போங்க பாக்கலாம்.

    ReplyDelete
  142. குருவே சரணம்.

    நீங்கதான் 150.

    //மீண்டும் வருவேன். இருநூற்றைக் கைப்பற்ற..//

    அப்ப 150லேருந்து 199வரை யாரு போடரது?

    ReplyDelete
  143. சின்னவரே,
    நீங்க தூங்காத நேரத்தில பதிவோ பின்னூட்டமே போட்டா கைப்புள்ள திட்டறாரு. அவரு தூங்காத நேரத்திலே போட்டா நீங்க திட்டறீங்க. உங்களுக்குள்ள பேசி ஒரு அட்ஜஸ்ட்மண்ட் பண்ணிக்குங்க. நானும் கொஞ்சம் தூங்கணும் பாருங்க.

    ReplyDelete
  144. அனானி, மகேஸ், அழகு, கைப்புள்ள, குமரன், சின்னவர், இராமநாதன் - ரூல்ஸ்படி இப்போ நீங்க எல்லாம் இங்க வந்து பதில் போடணும். போடுவீங்களா? காத்துக்கிட்டிருக்கேன்.

    ReplyDelete
  145. super thala..

    super pathivu ...

    ReplyDelete
  146. super pathivu...

    ReplyDelete
  147. super thala
    super pathivu

    ReplyDelete
  148. super thala
    super pathivu

    ReplyDelete
  149. super thala
    super pathivu

    ReplyDelete
  150. super thala
    super pathivu

    ReplyDelete
  151. இலவசக் கொத்தனார் அண்ணா...உங்க பதிவுல இருந்து ஹைஜாக் பண்ணி நானும் ஒரு பதிவு 'கூடல்'ல போட்டுட்டேன். நல்லா போனியாகுது. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  152. குமரன்,
    அண்ணான்னெல்லாம் கூப்பிட்டு நம்மளை ஆட்டத்திலேயிருந்து ரிடையராக வைக்கமுடியாது. நம்ம விளையாட்டு தொடரும்.
    ஆன நல்லதொரு நட்சத்திர வாரம் தந்துட்டு பின்ன ஒரு ரிலாக்சேஷனுக்குத்தானே இந்த கட் பேஸ்ட் பண்ணியிருக்கீங்க. அதனால ஓக்கே. இதுவே வேற யாராவதா இருந்தா....ஹூம்...... ஆப்படிச்சிருக்க மாட்டோம்.....

    ReplyDelete
  153. சரிப்பா. நல்லா புரிஞ்சது. இனி இதுபோலவே பின்னூட்டம் போட்டுடறோம். அடுத்த பதிவு எப்ப?

    ReplyDelete
  154. போடுங்க அனானி. அதுக்குத்தானே இவ்வளவு பெரிய பதிவு. விரைவில் எதிர்பாருங்கள் புத்தம் புதிய வண்ணப் பதிவு.

    ReplyDelete
  155. 174 ஆயிடிச்சு. இன்னும் ஒண்ணு போட்டு 175 ஆக்கிகறேனே.

    ReplyDelete
  156. Hi,
    What should I do to read your blog? It appears boxes for me :-/

    Have a nice day,
    Ponnarasi

    ReplyDelete
  157. Welcome Ponnarasi,

    You need to set the encoding in your Internet Explorer to Unicode (UTF-8). This can found under the view menu.
    View -> Encoding -> Unicode.

    Once this setting is done, you should be able to read this blog properly. Do let me know of your opinion once you read and if you are still unable to read. Do let me know and I will try to help you.

    Enjoy reading.

    ReplyDelete
  158. இருநூறுக்கு கஷ்டப் படுறீங்க போலிருக்கே கொளுத்துக்காரரே(ஹி...ஹி...சும்மா ஒரு சேஞ்சுக்கு)! கூப்பிடுயா வைத்தியரை...10 நிமிஷத்துல 200 ஆயிடும்.

    நான் இப்ப போறேன்...ஆனா திரும்பி...வருவேன்.

    ReplyDelete
  159. மருத்துவர் தமிழ்குடிதாங்கி கூட்டணி பேச்சுவார்த்தைகளிலே பிஸியா இருப்பாரே. அவரைப் போய் இதுகெல்லாம் கூப்பிட்டா வருவாரா?

    ஓ. நீங்க மருத்துவரைச் சொல்லலையா. வைத்தியரை சொன்னீங்களா. அவரு இப்போ மறுபதிப்பு போடறதுல பிஸியா இருக்காரே. எந்த நண்பர் வலைப்பூவில மேஞ்சுகிட்டு இருக்காரோ. (இராம்ஸு, சும்மா டமாஸு.)

    கைப்புள்ள, வருவேன்னு சொல்லியிருக்கீங்களே. சும்மா ஒரு 10 தடவை வந்தா 200 தானா வருது. ஆனா கவனமா இருங்க. 200 நெருங்கம்போது நிறைய பேர் போட்டிக்கு வருவாங்க.

    சீக்கிரம் வாங்க.

    ReplyDelete
  160. 200 போட்டுட்டு தான் அடுத்த பதிவுல கையை வைக்கிறதுன்னு எதாவது வேண்டுதலா? கொஞ்ச நாளா புது சரக்கு ஒன்னும் காணலியே கொத்தனாரே?

    ReplyDelete
  161. என்னங்க. ஒரு ஒரு வாரமா போடலை. நடுவில இங்கயே ஹரிஹரன்ஸ், சின்னவன் எல்லோரும் கொஞ்சம் புதிர் போட்டாங்க. அப்புறம் வைத்தியரும் நானும் கொஞ்சம் விளையாடினோம். சீக்கிரமே அடுத்த புதிர் போடறேங்க.

    ஆனா உங்க ஐடியாவும் நல்லாவே இருக்கே.

    மக்களே. அடுத்த புதிர் வேணுமுன்னா சீக்கிரம் இங்க வந்து பின்னூட்டம் போட்டு டபுள் செஞ்சுரி அடிக்க வழி செய்யுங்கடோய்.

    ReplyDelete
  162. 'நமக்கு நாமே அனானி'யை உபயோகிச்சா 200 என்ன 500 கூட அடிக்கலாமே? உங்க கிட்டேருந்து கத்துக்கிட்டது தானுங்கோ!...ஹி...ஹி

    ReplyDelete
  163. அப்புறம் 180 எப்படி வந்தது... ஹி..ஹி...

    ஆனா 150 தாண்டிய பின் அதெல்லாம் கூடாது. அதனால கைப்புள்ளே அண்ட் டாக்டர் சேர்ந்து 200க்கு கொண்டு போயிடுங்க.

    ReplyDelete
  164. ஆமாம் அனானி. 184தான்.

    ஆனா இப்போ 185 ஆயிடிச்சி.

    ReplyDelete
  165. இது என்ன அனுமார் வால் மாதிரி...என்னால் ஆனது...பிடி ஒரு பின்னூட்டம்.

    ReplyDelete
  166. வாங்க.வாங்க. இப்படி ஒண்ணோட நிறுத்திட்டா எப்படி? கொஞ்சம் பாத்து போடுங்க சாமியோவ்.

    ReplyDelete
  167. மக்களே, இதை முயலுங்களேன்:

    உலஇந்தியாகம்

    இது திரைப்பட பெயர் இல்லை. வழக்கம் போல, கொத்தனாரே, கைகட்டி, வாய் பொத்தி இரும்.

    ReplyDelete
  168. //திரைப்பட பெயர் இல்லை// அது சரி. ஆனா என்னன்னு கொஞ்சம் சொல்லலாமே.

    ரொம்ப இண்டிரஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே.

    ReplyDelete
  169. 200 புடிக்காம விட மாட்டாங்க போல இருக்கே. சீக்கிரம் போடுங்கய்யா அடுத்த புதிருக்கு காத்துக்கிட்டு இருக்கோமில்ல,

    ReplyDelete
  170. india international center????

    something similar to it?

    ReplyDelete
  171. india international center????

    something similar to it?

    ReplyDelete
  172. india international center????

    something similar to it?

    ReplyDelete
  173. கௌசிகன்,
    ரொம்ப சரி. ஆனாலும் உங்களுக்கு எங்கெல்லாமோ மூளை. உங்களுக்கு ஒரு 'ஓ'.
    மத்தவங்களும் போடட்டுமே என்ற எண்ணத்தில் தனி மடல் அனுப்பியதற்கு இன்னுமொரு 'ஓ'.

    ReplyDelete
  174. அனானி,
    பாருங்க. உங்களுக்கு தெரியுது. ஆனா இந்நாட்டு மன்னர்களுக்கு தெரியலையே. இதுக்கப்புறம் 7தானே. போட்டுருவாங்க. கவலைப்படாதீங்க.

    ReplyDelete
  175. இல்லை ஜெயஸ்ரீ,
    ரொம்பவே தமிழான ஒரு பதில். ஆங்கில கலப்பே இல்லை.
    இப்படி ஒரே பின்னூட்டத்தை 3 முறை போட்டு ஓவர்த்ரோவில் டபுள் செஞ்சுரி அடிக்க வச்சுட்டீங்களே.
    உதவிய எல்லோருக்கும் ரொம்ப டாங்ஸுங்கோவ்.

    ReplyDelete
  176. ஹரிஹரன்ஸ்,
    ரபீந்திரநாத் டாகூரின் 'விஸ்வபாரதி' பல்கலைக்கழ்கத்தைச் சொல்றீங்களா? வேற எதுவும் தோணலீங்கோ!

    கொத்தனாரே! கங்கிராட்ஸுங்க!

    ReplyDelete
  177. கைப்புள்ள, வாழ்த்துகளுக்கு நன்றி.
    ரொம்ப கஷ்டப்படறீங்களே. ஒரு க்ளூ தரேன். இது ஒரு செந்தமிழ் பாட்டுங்க.

    ReplyDelete
  178. மீசை, முண்டாசு, கோட். நல்ல விளக்கம் கௌசிகன்.

    இப்போ யாரு போடராங்கன்னு பாப்போம்.

    ReplyDelete
  179. கைப்புள்ள, கொஞசம் நல்லா "பாரு"ங்க ஸார்...புரிஞ்சுடும்...

    ReplyDelete
  180. கெளசிகன், இந்த ஆங்கில ரீபஸ், உங்களுக்காக....

    M CE, M CE, M CE

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  181. யோவ். போதுங்கய்யா. இனிமேலெல்லாம் க்ளு கிடையாது. முடிஞ்சா போடுங்க. இல்லைன்னா தெரியலைன்னு சொல்லுங்க. நாங்க விடையை சொல்லறோம்.

    ReplyDelete
  182. பாருக்குள்ளே நல்ல நாடு

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!