Monday, March 13, 2006

கணக்கொன்று போட்டேன்

அலுவலகத்தில் பணி கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதனால் புதிதாகப் பெரிய பதிவொன்றும் போட முடியவில்லை. ஆனாலும் நண்பர்கள் வருகை இருப்பதை StatCounter மூலம் பார்க்கிறேன். அவர்கள் ஆவலுக்காக ஒரு சிறிய புதிர்.

பி.பி.சி.யில் பாட்டொன்று கேட்டேன் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அந்நிகழ்ச்சியை நடத்துபவர், 'பாட்டொன்று கேட்டேன்' என்று மிக அழகாக சொல்லுவார். அதைப் கேட்டதிலிருந்து அதைப்போலவே ஒரு தலைப்பு வைக்க ஆசை. வைத்தாகிவிட்டது. அவர் சொல்வதைப் போலவே ராகமாய் படித்துக் கொள்ளுங்கள்.

நண்பர் பாலராஜன்கீதா அவர்கள் தனிமடலில் இப்புதிரினை அனுப்பி, வேண்டுமென்றால் பதிவிலும் போட்டுக்கொள்ளுங்கள் என அனுமதியும் தந்தார். நன்றி நண்பரே.

நான் போட அதிக சமயம் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நன்றாக இருந்ததால் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணம். நீங்களும் முயன்று பாருங்களேன். பதிலை மட்டும் தராமல் போட்ட விதத்தையும் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

வழக்கம்போல் விடைகள் உடனடியாகப் பதிவிலிடப்படா. சரியா தவறா என்ற எனது பதிலே பதிவிலிடப்படும். இப்பொழுது புதிர்.

அ + ஆ = இ
ஈ - உ = ஊ
எ = ஏ X ஐ

இங்கு அ முதல் ஐ வரையான எழுத்துகளுக்கு 1லிருந்து 9 வரையான எண்களைப் பொருத்த வேண்டும். ஒரு எழுத்துக்கு ஒரு எண்தான் வரும். எல்லா எண்களும் ஒரு முறை வர வேண்டும். பொருத்திய பின் மேலிருக்கும் சமன்பாடுகள் சரியாக வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.

எங்கே முயலுங்களேன். மறக்காமல் போட்ட விதத்தையும் சொல்லுங்கள்.

117 comments:

  1. மைக் டெஸ்டிங். ஒன். டூ. த்ரீ.

    ReplyDelete
  2. அ+ஆ= இ
    1+7=8

    -

    ஈ-உ=ஊ
    9-5=4

    -
    ஏ*ஐ=எ
    3*2=6

    --
    கண்டிஷன் இ/ஊ= ஐ
    8/4=2
    --

    சரியா??

    ReplyDelete
  3. தூங்கி எழுந்தவுடனேயே மண்டைய பிச்சுக்க வக்கறீரீரே.. உருப்படுவீரா நீர்? மரியாதையா இந்த கணக்குனால போன முடி திரும்ப வர, ப்ரான்ச் ஆயில் என்.எஹெச் பார்சல் அனுப்பு.. சொல்லிட்டேன்.

    இந்த வெட்டிக்குட்டி பதிவுக்கு என்ன டார்கெட்? பத்தாயிரம் பின்னூட்டமா?

    ReplyDelete
  4. மருந்து,

    என்ன உங்களுக்கே உடம்பு சரியில்லையா? புதிர் பக்கமெல்லாம் வறீங்க? என்ன ஆச்சு?

    பாத்து ஒரு நல்ல டாக்டரா போய் பாருங்க.

    ReplyDelete
  5. ஆங். சொல்ல மறந்துட்டேனே.

    நீங்க போட்ட விடை சரியான விடைதான் அய்யா. மறக்காம நிலாக்காவிற்கு ஒரு தனிமடல் அனுப்பி பரிசு வாங்கிக்கோங்க.

    ReplyDelete
  6. வைத்தியரே,
    அதான் சொல்லிட்டேனே. இந்த அனுப்பற சமாச்சாரமெல்லாம் நிலாக்கா டிபார்ட்மெண்ட். அவங்க வரட்டும். சேர்ந்தே கேப்போம்.

    ReplyDelete
  7. //இந்த வெட்டிக்குட்டி பதிவுக்கு என்ன டார்கெட்? பத்தாயிரம் பின்னூட்டமா?//

    உங்க புண்ணியத்துல இப்போ 7 ஆச்சு. இப்படியே ஒரு 10 பேர் வந்தாங்கன்னா 70. 100 பேர் வந்தாங்கன்னா 700.

    இப்போதைக்கு இது போதாது?

    ReplyDelete
  8. ஆனந்த்,

    //அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும். //

    இந்த விதி சரியா வரலையே. மீண்டும் ட்ரை பண்ணுங்க.

    ReplyDelete
  9. 3 * 2 = 6
    4 + 5 = 9
    8 - 7 = 1

    is this right?. there are many answers for this question.

    there are only two possiblities
    where

    (1 <= x >= 9) * (1 <= y >= 9) < 10

    3 * 2 = 6
    4 * 2 = 8

    it was not difficult to find out other 2 combinations, leaving 3,2,6 aside.

    ReplyDelete
  10. Oops. I didnt see that. here we go

    7 + 1 = 8
    9 - 5 = 4
    6 = 3 * 2

    8/4 = 2

    ReplyDelete
  11. ஸ்ருசல்,

    நீங்கள் போட்ட விடை சரியில்லை போல் தெரிகிறதே.

    //அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.//

    இந்த விதி கொஞ்சம் உதைகிறது பாருங்கள்.

    ReplyDelete
  12. ஆனந்த்,

    உங்கள் விடை இப்பொழுது சரிதான். வாழ்த்துக்கள். கொஞ்சம் விடுவித்த விதத்தை சொல்லுங்களேன்.

    ReplyDelete
  13. i did not read your comments properly. just noticed that anand too has given the right answer.


    BTW, i also read your last rule. இ / ஊ = ஐ

    this makes the things pretty simple.

    here it goes

    still for multiplication there are only two options

    3 * 2 = 6
    4 * 2 = 8

    for division, there are only 3 options

    6 / 3 = 2
    6 / 2 = 3
    8 / 4 = 2

    it shows that the result of the addition should either be 6 or 8

    that gives us two options i.e

    1. 3 + 5 = 8 & (this can't be used as 2 * 3 has already been chosen).

    2. 1 + 7 = 8

    so putting together

    2 * 3 = 6
    1 + 7 = 8
    8 / 4 = 2

    and this gives us

    9 - 5 = 4

    right?

    ReplyDelete
  14. சூப்பர் ஸ்ருசல். வாழ்த்துக்கள்.

    இது சரியான விடைதான். உங்கள் விளக்கம் அருமை. விளம்பர பாணியில் சொல்வதானால் - இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். :)

    ReplyDelete
  15. பெனாத்தலாரே,

    நீங்களும் இந்த விதியை விடுட்டீங்களே. மீண்டும் மெயில் போடுங்க.

    ////அது மட்டுமல்லாது இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும். //

    அண்ணான்னு எல்லாம் போட்டு வயசை ஏத்தப்பிடாது.

    ReplyDelete
  16. விடைகள்:
    அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ
    7,1,8,9,5,4,6,3,2

    English is easier to keyin. I think the third equation is the starter எ = ஏ X ஐ. This means that எ should be a single digit number and none of them can be 1. This leaves 6=2X3 (or 3X2) 8=2X4 (or 4X2) for these three. Then it becomes very simple...

    ReplyDelete
  17. சரியான விடை ஹரிஹரன்ஸ். வாழ்த்துக்கள். நீங்கள் தொடங்கிய சமன்பாடில்லாமல் வேறொரு சமன்பாட்டிலிருந்து நான் தொடங்கினேன். ஆயினும் விடை ஒன்றுதான்.

    ReplyDelete
  18. நன்றி இலவசம். Is this solution unique or are there multiple solutions?

    ReplyDelete
  19. இலவசம் நீயும் நம்ம ஹிட்லிஸ்டுல உண்டு.

    http://gundakkamandakka.blogspot.com/2006/03/blog-post_114226313852711072.html

    ReplyDelete
  20. எனக்கு தெரிந்து ஒரு விடைதான் இருக்கிறது. இது வரை வந்த சரியான் விடைகளும் (உங்களுடையதையும் சேர்த்து) அந்த விடைதான்.

    வேறு விடைகள் வருகிறதா என முயலுங்களேன். :)

    ReplyDelete
  21. ஏன்யா கொத்தனார், ஒரு கேள்வி கேட்டா அதுக்கு மறுபடி ஒரு கேள்வியா? மறுமொழி சேக்கும் வித்தையிலே இதுவும் ஒரு வழியோ?

    ReplyDelete
  22. அய்யா பார்த்திபரே,

    கைப்புள்ள கீறப்போ எங்களுக்கு ஒன்னியும் ஆவாது. அவரு டேக் கேர் பண்ணிக்குவாரு.

    உங்க பதிவுல பின்னூட்டம் போட முடியல. அதனால அதுவும் இங்க.

    //ஒண்ணு ரெண்டுன்னு பின்னுட்டம் போட்டா ஆட்டத்துல சேத்திக்க மாட்டேன். குறைந்தது பதிவுக்கு 10-15 ஆவது போடணும். அப்பதான் ஆட்டதுக்கே அலவ்டு. ஓக்கேவா? ரெடி ஸ்டார்ட். //

    ReplyDelete
  23. என்ன பார்த்திபன், நம்ம பேரு உங்க லிஸ்ட்லே வர என்னய்யா பண்ணனம். உங்க ப்ளாக்லே ஒரு கமெண்ட் கூட போட முடியலே :-(

    ReplyDelete
  24. //ஏன்யா கொத்தனார், ஒரு கேள்வி கேட்டா அதுக்கு மறுபடி ஒரு கேள்வியா? மறுமொழி சேக்கும் வித்தையிலே இதுவும் ஒரு வழியோ?//

    ஆமய்யா. ஆமா. (அந்த ஜலதோஷக்காரன் மாதிரியே படிச்சுக்கோங்க)

    பெருசு, நம்ம பதிவெல்லாம் படிக்கிறதே இல்லை போலயிருக்கு. இந்த மாதிரி பேசிக் டவுட் எல்லாம் வரக்கூடாதே.

    ReplyDelete
  25. பெனாத்தலாரே,

    இப்போ சரியா புடிச்சுட்டீங்களே. வெரி குட்.

    கடைசில மீசை, மண்ணுன்னு எதோ எழுதியிருந்தீங்க. அதெல்லாம் சரியா கண்ணுக்கு தெரியலை. அதனால அதைப் பத்தி பேசலை. ஓக்கேவா?

    ReplyDelete
  26. ஆஹா,

    டார்கெட், ஹிட்லிஸ்ட்ன்னு போட்டாக்கூட எப்படிய்யா சேரணும்ன்னு வராங்க பாரு. அஞ்சா நெஞ்சனுங்கய்யா நம்ம ஆளுங்க.

    ReplyDelete
  27. இன்னும் எத்தினி பேர் (கைப்புவோட கையாளுங்க) இருக்கீங்கன்னு ஒரு லிஸ்ட் குடுத்தா எல்லரையும் சேர்த்துடுவேன். ஹரிஹரன் உட்பட

    ReplyDelete
  28. கேட்டா குடுப்போமா? மருத்துவர் ராமநாதனும்தான்னு சொல்லிருவோமா? அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க. அக்காங்.

    ReplyDelete
  29. //மறக்காம நிலாக்காவிற்கு ஒரு தனிமடல் அனுப்பி பரிசு வாங்கிக்கோங்க.//


    ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா...

    :-)))

    இந்தப் புதிரெல்லாம் போட்டு மண்டைய உடைச்சிக்கிற அளவுக்கு இன்னும் நேரம் கிடைக்கலை சாமி....

    அப்புறமா பாக்கலாம்...
    ஒரு தடவையாவது உங்க புதிரை முதல்ல உடைச்சி பேர் வாங்கணும்னு பார்க்கறேன்:-)

    ReplyDelete
  30. //ஒரு தடவையாவது உங்க புதிரை முதல்ல உடைச்சி பேர் வாங்கணும்னு பார்க்கறேன்:-)//

    கவனிக்கற விதத்தில் கவனிச்சா, நீங்க ஆன்லைன் இருக்கிற சமயத்திலே புதிரைப் போட்டு மத்தவங்களுக்கு முன்னாடி உங்களுக்கு சொல்லிடுவேன்.

    மேல கொஞ்சம் போட்டுக் குடுத்தா விடையைக் கூட தனி மடலில் அனுப்புவேன்.

    இந்த மாதிரி யோசிக்கறத விட்டுட்டு.....

    ReplyDelete
  31. அதுக்காக இந்த புதிரின் பதிலை முதலில் போட்ட மருத்துவர் இந்த ஐடியா எல்லாம் ஃபாலோ பண்ணுனார்ன்னு சொல்ல வரலை. இதையும் சொல்லிக்கிறேன். ;)

    ReplyDelete
  32. கொத்ஸ் ! வழக்கம் போல கரக்டா லேட்டா வந்துட்டேன்.

    கரக்டான்னு நீங்கதான் சொல்லனும்

    7 + 1 = 8
    9 - 5 = 4
    6 = 3 * 2
    8 / 4 = 2

    THYAG

    ReplyDelete
  33. தியாக்,

    வழக்கம் போல லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க.சரியான விடைதான். ஆனாலும் வழிமுறை சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கறீங்களே. :)

    ReplyDelete
  34. அ + ஆ = இ -1
    ஈ - உ = ஊ -2
    எ = ஏ X ஐ -3
    இ / ஊ = ஐ -4

    சமன்பாடு 3 மற்றும் 4 ஐ சமப்படுத்த

    இ/ஊ= எ/ஏ=ஐ
    முதல் பத்து எண்களில் 4*2=8 மற்றும் 3*2=6 என்பது மட்டுமே சாத்தியம். எனவே ஐ=2. எ=6, ஏ=3 மற்றும் இ=8, ஊ=4 என எடுத்துக்கொண்டால்

    அ+ஆ=8
    ஈ-உ=4

    அ=7, ஆ=1, ஈ=9,உ=5
    ஐ=2. எ=6, ஏ=3 மற்றும் இ=8, ஊ=4

    ReplyDelete
  35. கொத்தனாரே! தொழில் புத்தியக்காட்டறீரா?
    கொஞ்சம் ஈசியான (?!!) புதிரா போடறமேன்னு முன்னாலயே ப்ளான் பண்ணி விளக்கவுரையெல்லாம் கேட்டு பெண்டு எடுக்கறீங்களா!!

    மக்களே! இது நியாயமான்னு கேளுங்கப்பா

    தியாக்

    ReplyDelete
  36. வாங்க உதயக்குமார்,
    முதல் முதலா நம்ம பக்கம் வந்திருக்கீங்க. போட்ட விடை சரியானது. Crisp விளக்கம். வாழ்த்துக்கள்.

    இனி அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  37. தியாக்,

    இவ்வளவு நல்ல புரிஞ்சு வச்சிருக்கீங்க, ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு 100, 200ன்னு வாங்கலாமில்லை. சீக்கிரம் ஆரம்பிங்கய்யா.

    ஆமாம் அப்படியும் விளக்கம் சொல்லவே இல்லையே. :D

    ReplyDelete
  38. கொளுத்து!
    மேல்மாடி சுத்தமா காலியாயிடுச்சு போலிருக்கு...கணக்கை சால்வ் பண்ண முடியலை...அநேகமா நீரு 400 அடிக்கறதுக்குள்ள கண்டுபிடிச்சிருவேன்னு நெனக்கேன்.

    ReplyDelete
  39. ithellaam jujubi. Namma sishya pillaingale mudichiruvanga...

    ReplyDelete
  40. //மேல்மாடி சுத்தமா காலியாயிடுச்சு போலிருக்கு//

    இதுக்குத்தான்ய்யா அடக்கம் வேணுங்கறது ஒரு நாலு பதிவு 50 தாண்டிருச்சு. ஒரு 100 அடிச்சாச்சுன்னு என்ன ஆட்டம் ஆடற. தகுமாய்யா இதெல்லாம்?

    அந்த தாடி வெச்சவரு கூட 'அடக்கம் அமரருள் உய்க்கும்...'ன்னு பிகிலடிக்கிற சவுண்டுல எதோ சொல்லி இருக்காரு.

    (முழுசா போட்டா குமரன் விளக்கம் கேப்பாரு. அப்புறம் 'அவாளை' விட நான் நல்ல விளக்கம் குடுக்கறேன்னு சொல்லி சண்டை வரும். எதுக்கு வம்பு. ஆமாம் இது எப்படி முடியும்? அடங்காமை ஆப்பு அடித்து விடும். இதானே?)

    தியாக் தம்பியப் பாரு. எவ்வ்வ்வ்வ்வள்வு நல்லவனா இருக்கரு. பாத்து கத்துக்கோ.

    ReplyDelete
  41. //ithellaam jujubi. Namma sishya pillaingale mudichiruvanga...//

    டுபுக்கு, இதெல்லாம் சரி. ஆன அந்த சிஷ்யகேடிங்களுக்கு சொல்லி அனுப்பினீங்களா இல்லையா? யாரையுமே காணுமே. கொஞ்சம் வரச் சொல்லுங்கப்பா. இல்ல சிஷ்ய கேடி எண்ணிக்கை அவ்வளவுதானா?

    இருந்தாலும் கூட நம்ம சந்தானம் மாதிரி உங்களுக்கு ஒரு சீட் கட்டாயம் உண்டுங்க. (ஆமாம், நம்ம இதயத்திலதான்.)

    ReplyDelete
  42. கொத்ஸ்,

    பதிவை இப்போதான் பார்த்தேன்.

    விடை

    அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ
    1 7 8 9 5 4 6 3 2

    எ = ஏ * ஐ என்றால் 2 தான் 2*3 அல்லது 4 * 2
    ஆனால் இ / ஊ = ஐ என்ற சமன்பாடும் சரியாக வரவேண்டும்.

    எனவே ஐ = 2

    ஏ 4 அல்லது 4. இந்த 2 combination முயற்சி செய்தால் மற்றவை சுலபம்.

    ReplyDelete
  43. வாங்க த.தா. ஜெயஸ்ரீ அவர்களே,

    நீங்க போட்டா சரியா இல்லாம போகுமா? சரியான விடைதான்.

    நிலாக்கா வீட்டிற்கு போனீங்களே, சரியா கவனிச்சாங்களா? இல்லைன்னா ஒரு வார்த்தை சொல்லுங்க. :)

    ReplyDelete
  44. ஓ பெரிய சல்யூட் வெச்சிருக்காங்க. ஏதோ உங்க புண்ணியம் ))))

    ReplyDelete
  45. * அ தொடக்கம் ஐ வரை உள்ள எண்கள் 1 தொடக்கம் 9 வரையான எண்கள் என்பதையும், ஒவ்வொரு எழுத்தும் ஒரு எண்ணை மட்டுமே குறிக்கும் என்பதையும் கொண்டு பார்த்தால், எ = ஏ x ஐ என்பதில்
    2 x 3 = 6 அல்லது 2 x 4 = 8 என்பதாகவே இருக்க முடியும். வேறு எதுவும் வர முடியாது. எனவே ஐ = 2 அல்லது 3 அல்லது 4

    * இனி ஐ = இ/ஊ = எ/ஏ

    ஐ 2 ஆனால் இ 8 அல்லது 6 உம் ஊ 4 அல்லது 3.
    ஐ 3 ஆனால் இ 6 உம் ஊ 2
    ஐ 4 ஆனால் இ 8 உம் ஊ 2

    அத்துடன் எ 8 அல்லது 6 உம் ஏ 4 அல்லது 3 ஆகவும் இருக்க வேண்டும்.

    எனவே அ, ஆ, ஈ, உ வுக்கு வரக் கூடிய எண்கள் 1, 5, 7, 9 மட்டுமே.

    1 + 7 = 8 (இ)என்றால், 9 - 5 = 4 (ஊ) சரியாக இருக்கும்.

    ஆனால்
    1 + 5 = 6 (இ)என்றால், 9 - 7 = 2 இங்கே ஊ 3 ஆக இருக்க வேண்டும். ஆனால் இல்லை.

    எனவே

    அ 1, ஆ 7, இ 8, ஈ 9, உ 5, ஊ 4

    என்பது மட்டுமே பொருந்தும்.

    * இனி இ = 8 உம் ஊ = 4 உமாக இருப்பதால் ஐ = 2

    * எனவே எ = 6, ஏ = 3

    எனவே அ 1, ஆ 7, இ 8, ஈ 9, உ 5, ஊ 4, எ 6, ஏ 3, ஐ 2

    ReplyDelete
  46. கலை,

    ரொம்ப சரியான விடை. அருமையான விளக்கம். இப்போதான் நம்ம பக்கம் வறீங்கன்னு நினைக்கிறேன். நன்றி. இனி அடிக்கடி வாங்க.

    ReplyDelete
  47. //ஓ பெரிய சல்யூட் வெச்சிருக்காங்க. ஏதோ உங்க புண்ணியம் ))))//

    சரியா வெச்சாங்களோ தப்பிச்சாங்க.

    நிலாக்கா, நம்ம பேரை காப்பத்தினது ரொம்ப தாங்க்ஸ். பேசினபடி பேமெண்ட் அனுப்பிடறேன். ஹிஹி.

    ReplyDelete
  48. //பேசினபடி பேமெண்ட் அனுப்பிடறேன். ஹிஹி//

    பொது வாழ்வில நம்ம தூய்மையா இருக்குறோம்...என்ன நம்ம பேரைக் கெடுக்கறதுன்னு எறங்கிட்டீரா? :-)))



    (அப்பா... ஸ்மைலி போட்டுட்டேன்)

    ReplyDelete
  49. கொளுத்து,
    நீரு தமிழ் மீடியம் சம்மா குடுத்ததுனால தான் கொஞ்சம் கன்பூசன்ஸ் ஆயிப் போச்சு. அடுத்த தடவை நம்ம எஜீகேசன்ஸையும் திங்க் பண்ணி கஸ்டமான சம்மா கொடுமய்யா...யூ நோ...ஐ ஆம் அண்ட் மை பிரதர் மார்க் ஒன்லி... சிங் இன் தி ரெயின் ஐ ஆம் ஸ்வேயிங் இன் தி ரெயின்...
    நெக்ஸ்ட் மீட் பண்றேன்...வர்ட்டா

    ReplyDelete
  50. அய்யா கைப்பு,

    விஷயம் தெரியலைன்னாலும் இதுக்கெல்லாம் கரெக்ட்டா வந்துடரையே. யூ தெ 50. யூ நோ? கங்கிராட்ஸ். ஹாப்பி?

    பாட்டெல்லாம் பாடுங்க. ஆனா கடைசியில விடையை மட்டும் கோட்டை விட்டுடுங்க. ஹூம்...

    ReplyDelete
  51. //பொது வாழ்வில நம்ம தூய்மையா இருக்குறோம்...என்ன நம்ம பேரைக் கெடுக்கறதுன்னு எறங்கிட்டீரா? :-)))//

    பொது வாழ்விலே நேர்மை, கண்ணியம் எல்லாம் பேசின புலிங்களே இப்போ ரிங் மாஸ்டர் கிட்டே. ரிங் மாஸ்டருங்க எல்லாம் தூய்மையான பேரைப் பத்தி எல்லாம் கவலைப் பட மாட்டாங்களே.

    நீங்க என்ன இதுக்கெல்லாம் போயி....

    ReplyDelete
  52. அ -1 ஆ - 7 இ - 8 ஈ - 9 உ-5 ஊ - 4 எ - 6 ஏ-3 ஐ -2

    ReplyDelete
  53. வாங்க நால்ரோடு அவர்களே, சரியான விடையைத்தான் தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    இந்த பதிவுல நிறைய புதுமுகங்கள் வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.எல்லாரும் இதே போல அடுத்து வரும் பதிவுகளுக்கும் வர வேணும். எல்லோருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  54. வாங்க பாலசந்தர் கணேசன்,
    முதன் முதலா நம்ம பக்கம் வந்திருக்கீங்க. வெல்கம். உங்க விடை சரியான விடைதான். வாழ்த்துக்கள். இனிமேல் அடிக்கடி உங்க வருகை இருக்கும்ன்னு எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  55. கௌசிகன்,
    சரியான விடைதான். நீங்க அதைப் போட்டது எதிர்பார்த்ததுதான்.

    ஆனா உங்க விளக்கம்தான் கொஞ்சம் தலைசுத்திடிச்சு. நான் இவ்வளவு கஷ்டப்படலைங்க. விடை போடும் போது சொல்லறேன்.

    ReplyDelete
  56. இல்லை. இலவச கொத்தனார் அவர்களே,
    நான் அடிக்கடி இங்கு வருவதுண்டு. ஆனால் பின்னூட்டம் இடுவது இதுவே முதல் முறை. வரவேற்றமைக்கு நன்றி. வருகையும் பின்னூட்டமும் தொடரும்.

    ReplyDelete
  57. நன்றி கணேசன். பின்னூட்டம் போட்டாத்தானே வருகை தெரியுது. இனிமே நீங்க எப்பவும் வருவீங்கன்னு சொன்னதுக்கு நன்றி.

    ReplyDelete
  58. இப்ப ரொம்ப நேரங்கழிச்சிப் பாக்குறேன்னு நெனைக்கிறேன். ரொம்பப் பின்னூட்டங்களா இருக்கு. ம்ம்ம்ம்....சரி...நானும் என்னோட மண்டையக் கொஞ்சம் ஒடைக்கிறேன்.

    ReplyDelete
  59. வாங்க ராகவன் அண்ணா,

    உங்களைக் காணுமேன்னு நேத்துதான் பேசிக்கிட்டு இருந்தேன்.

    //ரொம்பப் பின்னூட்டங்களா இருக்கு.//

    ஹிஹி. நம்ம பதிவு வேறெ எப்படிங்கண்ணா இருக்கும்.

    ஆனாலும் பாருங்க. விடையை சொல்லலை. உங்களை மாதிரி லேட் கம்மர்ஸ் மற்றும் இதோ வரேன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆன கைப்பு, நிலாக்கா போன்ற பார்ட்டிங்களிக்கும்தான் வெயிட்டிங்.

    நீங்க நிதானமா யோசிச்சு பதில் போடுங்க.

    ReplyDelete
  60. வர வேண்டியவங்க எல்லாரும் வந்தாச்சா?

    ReplyDelete
  61. ஆச்சுங்க. இந்த புதிருக்கான பதில்களைப் போட்டாச்சு. கொஞ்சம் ஈசியான புதிர்தான். முயன்ற எல்லாருமே சரியான விடைகளைப் போட்டுட்டாங்க. அவங்க அவங்க போட்ட முறையயும் சொல்லிட்டாங்க. ஸோ, நான் தனியா சொல்ல எதுவுமில்லை.

    நான் எப்படிப் போட்டேன்னா, கடைசி விதியை முதலில் எடுத்துக் கிட்டேன்.
    இ/ஊ= ஐ. இதுக்கு இரண்டே இரண்டு சாத்தியங்கள் மட்டுமே உண்டு. 6/3=2 அல்லது 8/4=2.

    முதலில் 6,3,2 என்ற எண்களை எடுத்துக் கொண்டோமானால். முதல் சமன்பாடு 5+1 = 6 என்று மட்டுமே வர முடியும். அப்படியானால் இரண்டாவது சமன்பாட்டிற்கு உகந்த எண்கள் இல்லாமல் போய்விடும்.

    ஆகையால் 8,4,2 என்ற எண்களை முறையே இ,ஊ,ஐ எனக் கொண்டோமானால், அனைத்து சமன்பாடுகளுக்கும் உண்டான விடைகளை கண்டுபிடித்து விடலாம்.

    விடை:
    1+7=8
    9-5=4
    6=3*2
    (8/4=2)

    ReplyDelete
  62. முதலில் போட்ட சிலர் கடைசி விதியைப் பார்க்காமல் விட்டுவிட்டார்கள். அதைச் சுட்டிக் காட்டிய பின் சரியான விடைகளை கண்டுபிடித்து விட்டார்கள்.

    இதுவரை வந்திராத பலர் வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். மீண்டும் வருக வருக.

    கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  63. கொத்ஸ்!
    என்ன அதுக்குள்ள முடிச்சிட்டீங்க........
    கொஞ்சம் பிசியா இருந்ததில ( அதான் நடுல கைப்புள்ளக்கி டூயட் கம்போஸ் பண்ணி ஏகப்பட்ட துட்டு பாத்துட்டோம்ல :-)))
    அப்பறம் பாத்துக்கலாம்னு இருந்தா 63 லயே முடிச்சிட்டீங்களே

    சரி அடுத்த இன்னிங்ஸ்ல பாத்துக்கலாம்........
    அப்படியும் முடிவுரைக்கு ஒன்னு , நன்றியுரைக்கு இன்னொன்னுன்னு போற போக்குல 2 ரன்னா :-)))))))))))))))

    தியாக்

    ReplyDelete
  64. சரி! நன்றி கின்றின்னு அலம்பல் வுட்டது எல்லாம் போதும். அடுத்த பதிவுக்காச்சும் கொஞ்சம் உழைங்க சாமி! எத்தினி நாளு தான் கணக்கும் புதிரும் குடுத்தே மக்களை ஏமாத்த போறீரு?

    ReplyDelete
  65. கொத்தனாரே!
    ////////முதலில் போட்ட சிலர் கடைசி விதியைப் பார்க்காமல் விட்டுவிட்டார்கள். //////////
    நீர் தான் அந்த கடைசி விதியை வேணுமுன்னே மெயின் பில்டிங்குல வச்சு க(கா)ட்டாம பின்னால வச்சிட்டீரே :-))))))))))

    தியாக்

    ReplyDelete
  66. தியாக்,

    நானும் அவ்வளவுதானான்னு எல்லாம் கேட்டுப் பார்த்தேன். ஒரு பதிலும் வராததுனால சரி அவ்வளவுதான் போலன்னு முடிச்சிட்டேன். நீங்க ஒரு வார்த்தை, ஹோல்ட் ஆன்ன்னு சொல்லியிருக்கலாமில்ல?

    இருக்கவே இருக்கு அடுத்த போட்டி. முடிவுரை போட்ட உடனே பார்த்தால் 64 பின்னூட்டம். சரி ரவுண்டா 65 வரட்டுமேன்னு ஒரு நன்றியுரை போட்டேன். நீங்க எல்லாம் நினைச்சா ஒரு 75 வராது? :)

    ReplyDelete
  67. கைப்பு,

    தூங்காம கண் முழிச்சி உங்க டயத்துக்கு புதிர் போடறேன் பாருங்க. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். பெரியவர் டாக்டருக்கு என்னவோ குடுத்து அனுப்பராராம். அது டாக்டருக்குத் தேவை முடிஞ்சதும் நான் வாங்கிக்கறேன். அப்படி என்னய்யா என் உழைப்புல குறையைக் கண்டீரு?

    //எத்தினி நாளு தான் கணக்கும் புதிரும் குடுத்தே மக்களை ஏமாத்த போறீரு?//

    முதல்ல குடுக்கற புதிருக்கு பதிலைப் போடற வழியைப் பாரும். அப்புறமா இந்த நக்கல் எல்லாம் வச்சுக்கலாம். அதுவரை சும்மா பொத்திக்கிட்டு இரும்.

    ReplyDelete
  68. //முதல்ல குடுக்கற புதிருக்கு பதிலைப் போடற வழியைப் பாரும். அப்புறமா இந்த நக்கல் எல்லாம் வச்சுக்கலாம். அதுவரை சும்மா பொத்திக்கிட்டு இரும்.//

    எகத்தாளம் எல்லாம் நல்லா தான் இருக்கு. இந்த மாதிரி சில்பான்சு மேட்டருக்கு எல்லாம் நீரு சதமும், இரு சதமும் அடிப்பீரு. அதை தடுக்க நாங்க செஞ்ச ஒரு சின்ன உள்நாட்டு சதி...இதுவும் எமது திருவிளையாடல்களில் ஒன்று.

    இப்ப பிரிஞ்சுதா நைனா?

    ReplyDelete
  69. //நீர் தான் அந்த கடைசி விதியை வேணுமுன்னே மெயின் பில்டிங்குல வச்சு க(கா)ட்டாம பின்னால வச்சிட்டீரே//

    ஆமா தியாக். வழி தெரியணும்னா நாலா பக்கமும் வந்து பாக்கணமுல்ல. அதான்.

    அவங்க படிக்காம தப்பா போட, அதை நான் தப்புன்னு சொல்ல, அவங்க சரியான் விடயைப் போட, நான் சரின்னு சொல்ல, சிலவங்க நான் பாக்கலைன்னு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டு போட, அதுக்கு நான் பதில் போட... இல்லைன்னா எப்படிங்க?

    ReplyDelete
  70. கொளுத்து!
    நம்ம ப்ளாக் அங்க http://kaipullai.blogspot.com தெறக்குதானு பாருங்க. என் பதிவை என்னாலேயே பாக்க முடியலை. காலையிலிருந்து forbidden you are not authorizedனு டார்ச்சர் குடுக்கறானுக.

    ReplyDelete
  71. கைப்பு,
    ஏழு பேரில் ஒருத்தர் போனால் அது இருக்கும் நமக்கு இழப்பில்லைன்னு ஒரு பெரியவர் சொல்லறார்.
    வாய்ஸ் இருக்கற நானே சும்மா இருக்கேன், வாய்ஸ் இல்லாத பாய்ஸ் எல்லாம் சவுண்ட் விட்டா கேட்குமான்னு கேட்கறார் இன்னொரு பெரியவர்.
    பனங்காட்டு நரிகளின் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்ன்னு இன்னொருத்தங்க சொல்லறாங்க.
    முயல் கண்ண மூடிக்கிச்சுன்னா வானம் இருண்டு போயிடுமான்னு குட்டிக் கதை சொல்லறாங்க வேற ஒருத்தங்க.

    இதையெல்லாம் பற்றி உங்க கருத்தென்ன? இதுக்கும் உங்க போன பின்னூட்டத்துக்கும் நீங்களாவே சம்பந்தன் கற்பித்துக்கொண்டா நான் பொறுப்பாளி இல்லை.

    ReplyDelete
  72. //கொளுத்து!
    நம்ம ப்ளாக் அங்க http://kaipullai.blogspot.com தெறக்குதானு பாருங்க. என் பதிவை என்னாலேயே பாக்க முடியலை. காலையிலிருந்து forbidden you are not authorizedனு டார்ச்சர் குடுக்கறானுக.//

    இல்லைங்க. எனக்கும் Forbidden
    You don't have permission to access / on this server. அப்படின்னுதான் வருது.

    நம்மள வம்புக்கு இழுத்ததால நம்ம பசங்க அவசரப் பட்டு எதனா செஞ்சிருப்பாங்க. கொஞ்சம் நேரம் கழிச்சிப் பாருங்க. நான் சரி பண்ணி வைக்க சொல்லறேன். அதுவரை இங்கயே எதனா பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருங்க. :)

    ReplyDelete
  73. //நம்மள வம்புக்கு இழுத்ததால நம்ம பசங்க அவசரப் பட்டு எதனா செஞ்சிருப்பாங்க.//

    இது வேறயா? நல்லா தான்யா பேசறீரு...இந்த வாய் ஜாலத்துல தான் மக்கள் a,b,c,d அ,ஆ,இ,ஈ க்கு எல்லாம் உம்ம கிட்ட வந்து ஏமாறுறாங்க. நீரு ஏன் ஒரு சீட்டு கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது?

    ReplyDelete
  74. தியாக்,
    பாத்தீங்களா? சடாருன்னு 75 ஆயிருச்சி. போகட்டும். அடுத்து என்ன? ஆங்.. அதேதான். வரீங்களா?

    ReplyDelete
  75. //நீரு ஏன் ஒரு சீட்டு கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது?//

    ஏன்யா இப்படி அடிக்கடி வந்து போயிட்டு இருக்கற ஆளாய் ஒரேடியா ஓடிப்போக சொல்லற? அப்படி என்ன பண்ணினேன்.

    இருக்கட்டும். உம்ம மாதிரி பிட்டு சீட்டு பார்ட்டிங்க எல்லாம் போயிட்டு பெருசா யாராவது மாட்டுவாங்க. அப்ப பாக்கலாம்.

    ReplyDelete
  76. இதை மறந்துட்டேனே. இது பெனாத்தலாரின் முதல் தனிமடல். அவாரால பின்னூட்டமிட முடியாதாமே. எதாவது அபராதம் போடலாமா?

    /இலவசம் அண்ணா,

    உங்க புதிருக்கு விடை பிடிச்சுக்கோங்க, என்னால ப்ளாக்கர் கணக்குலே பின்னூட்டம் இடமுடியாது

    அ + ஆ = இ
    ஈ - உ = ஊ
    எ = ஏ X ஐ

    5 + 4 = 9
    8 - 7 = 1
    6 = 2 * 3

    ஆக,

    1 - ஊ 2 - ஏ 3 - ஐ 4 - ஆ 5 - அ 6 - எ 7- உ 8 - ஈ 9 - இ

    சரிதானே?

    பினாத்தலார்.//

    ReplyDelete
  77. பெனாத்தலாரின் அடுத்த, சரியான விடை. இவைகளைச் சரியான இடத்தில் பொருத்தி படிச்சுக்கோங்கோ மக்களே.

    //அ + ஆ = இ
    ஈ - உ = ஊ
    எ = ஏ X ஐ


    1+7=8
    9-5=4
    3*2=6
    8/4=2

    அ-1, ஆ-7, இ-8, ஈ-9, உ-5, ஊ-4, எ- 6, ஏ-3, ஐ-2

    இப்ப சரியா? ரிவர்ஸ் எஞ்சினியரிங்தான்! இ/ஊ=ஐ யிலேயிருந்து!

    மீசையில் மண் ஒட்டாத பினாத்தலார்!//

    ReplyDelete
  78. இலவசம்,

    எனக்கும் தலை(கைப்பு)யின் வலைப் பூ திறக்க மாட்டேன் என்கிறது.

    என்ன ஆச்சு? கைப்பூவின் வலைப்பூவிற்கு? ஆளாளுக்கு கேள்வி கேகுறாங்கன்னு யாருக்குமே பெர்மிஷன் குடுக்கலையா?

    :-)

    (ம்ஹூம் எல்லால் அந்த பார்த்திபனால வந்த வினை)

    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  79. சிபி,
    எல்லாம் உங்களை என் பதிவிற்கு வர வைக்கத்தான். பாருங்க இல்லைன்னா நீங்க இந்த பக்கம் வறீங்களா?

    நிஜமாலே தெரியலைங்க. அவரை பிளாக்கருக்கு எழுதிப் போட சொல்லியிருக்கேன். கூடவே யாரையாவது அவருக்கு சுத்திப் போட சொல்லணும். கண்ணு பட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  80. கொத்ஸ்!
    உங்க பசங்க காலையிலிருந்து ஒரேயடியா தான் போக்கு காட்டறாங்கய்யா! செம டார்ச்சரா இருக்கு...நீரு என்ன பண்ணுவீரோ ஏது பண்ணுவீரோ எனக்குத் தெரியாது...அடுத்த 5 நிமிசத்துல நம்ம சைட் தொறக்கனும் இல்ல நம்ம பசங்க 'பொருளோட' எடிசனுக்கே வந்துருவாங்க டிரைசைக்கிள்ல!

    ReplyDelete
  81. என்ன கொத்ஸ், இப்ப 100 பக்கம் போய்க்கிட்டிருக்கீரா? எங்கேயேல்லாம் மச்சமய்யா உமக்கு? :-))))

    சபாஷ், வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  82. கைப்பு,

    நான் என்ன செய்யட்டும், எனக்கு உங்க கூட கூட்டணி வைக்க ஆசை இருந்தாலும், நம்ம கட்சிக்காரங்க வேற விதமாப் போறாங்களே.

    பேசாம தேர்தல் கமிஷனருக்கு எழுதி போடுங்க. (அதாங்க பிளாக்கர்). அவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம்.

    மத்தபடி ட்ரைசைக்கிள் எல்லாம் அனுப்பி பயமுறுத்தாதீங்க.

    ReplyDelete
  83. பெருசு,
    அதுக்கெல்லாம் ஞானம் வேணும், ஞானம் வேணும் டோய்.

    இதுக்கெல்லாம் மச்சம் வேண்டாமய்யா. நல்ல மனம் வேண்டும், நண்பர்கள் குழாம் வேண்டும், கொஞ்சம் இம்சை படுத்தவும், கொஞ்சம் வம்பிழுக்கவும் தெரியணும். அப்புறமா யாராவது வந்து வெங்காயம்ன்னு திட்டினா, அசராம போகத்தெரியணும். என்ன கொஞ்சம் தடித்த தோல் வேணும்.

    ReplyDelete
  84. //அப்புறமா யாராவது வந்து வெங்காயம்ன்னு திட்டினா, அசராம போகத்தெரியணும். என்ன கொஞ்சம் தடித்த தோல் வேணும். //

    என்ன சாமி தடித்த தோலா? நம்ம தோலு வெங்காயத் தோலப்பா...திட்டலெல்லாம் வேணாம். ஸ்மைலி போடலைனா, சும்மா புசுக்குன்னு பத்திக்கும். இப்படி இருந்த 100 எங்கே, 10 கூட பாக்க முடியாது. ஹூம்....

    ReplyDelete
  85. அப்போ, உறிச்சி பார்த்தா ஒண்ணும் இருக்காதுன்னு சொல்லுங்க. :)

    பாருங்க. ஸ்மைலி எல்லாம் போட்டாச்சு. இனி கோவப்படக்கூடாது.

    அவங்க பாவம், தூக்கக் கலக்கத்தில ஸ்மைலி போட மறந்துட்டாங்க விட மாட்டேன்னு சொல்லறீங்களே.

    //இப்படி இருந்த 100 எங்கே, 10 கூட பாக்க முடியாது. ஹூம்....//

    அதான் சாலிட்டா, பதிவுக்கு 30-40ன்னு வாங்கறீங்களே. அப்புறம் என்ன இப்படி அலுத்துக்கறீங்க?

    ReplyDelete
  86. ஆனா இது ஒரு இண்டிரஸ்டிங் டாபிக்கா இருக்கும் போல இருக்கே.

    தடித்த தோல் இருக்கறவங்க - விளாம்பழம்

    ரொம்ப சாஃப்டா இருக்கிறவங்க - வாழைப்பழம்

    வெளியில சாஃப்ட், உள்ள கடினம் - மாம்பழம்

    உங்க பங்குக்கு எதாவது சொல்லுங்களேன்.

    ReplyDelete
  87. //அதான் சாலிட்டா, பதிவுக்கு 30-40ன்னு வாங்கறீங்களே. அப்புறம் என்ன இப்படி அலுத்துக்கறீங்க?//

    என்ன இலவசம், நம்மளோட "தினமலர்" கவரேஜே விட்டுடீங்களே...ஹி ஹி ஹி ஹி..

    ReplyDelete
  88. //வெளியில சாஃப்ட், உள்ள கடினம் - மாம்பழம்

    உங்க பங்குக்கு எதாவது சொல்லுங்களேன். //

    வெளியிலே கடினம் உள்ளே ஸாஃப்ட் - வழுக்க தேங்காய்.

    வெளியிலே கடினம் உள்ளே அவ்வளவு சுலபமில்லை ஆனால் சுகம் - பலாப்பழம்

    ..இது எப்படிங்க?

    ReplyDelete
  89. innikullara 100 target pola theriyuthu, hmm.... nadathunga nadathunga, ennoda pangu idhu : Sridhar

    ReplyDelete
  90. நாய்க் கண்ணு, நரிக் கண்ணு, எருமைக் கண்ணு, எலிக் கண்ணு, பெருச்சாளிக் கண்ணு, கழுதைக் கண்ணு எல்லாக் கண்ணும் போடட்டும், நல்லதெல்லாம் நடக்கட்டும், கைப்பூ பிளாகு திறக்கட்டும்.........

    த்தூ...த்தூ..த்தூ....
    (கைப்பு சார்பா நானே துப்பிட்டேன்)

    கண்ணு படப் போகுதய்யா எங்க கைப்புள்ளா.. உனக்கு சுத்திப் போட வேணுமய்யா எங்க கைப்புள்ள.....
    உனக்கு சுத்திப் போட வேணுமய்யா எங்க கைப்புள்ள.....



    (இதன் நகல்:
    http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

    ReplyDelete
  91. கொத்து
    ///////நீங்க ஒரு வார்த்தை, ஹோல்ட் ஆன்ன்னு சொல்லியிருக்கலாமில்ல?/////////////
    அதான் 'கொஞ்சம் பிசியா இருந்ததில' சொன்னனே! இல்லேன்னா ஹோல்ட் ஆன்/ஆப்பு எல்லாம் சொல்லி/வாங்கி யிருப்பேனே!

    தியாக்

    ReplyDelete
  92. கொத்ஸ்!
    ஆனாலும் நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய ஆளு

    63லருந்து 90க்கு ஜெட்டாப் போயிட்டீரு!
    இதத்தான் 'பார்ம் எல்லாம் டெம்பொரரி , க்ளாஸ் தான் பர்மனெண்ட்' ங்கற்து......

    தியாக்

    ReplyDelete
  93. சிபி,

    நானும் இந்த விரலையெல்லாம் நெட்டி முறிச்சு செஞ்சதுல, கைவிரலெல்லாம் உடைஞ்சே போச்சு. அவ்வளவு திருஷ்டி.

    என் கைக்கு மருத்துவரைத் தேடி போகணும்ன்னு நினைச்சேன். அப்புறம், இங்க 90 தாண்டி ஓடுதேன்னு வருவாரேன்னு தோணிச்சு. வெயிட் பண்ணறேன்.

    ReplyDelete
  94. இன்னும் ப்ளாக் தெறந்தபாடில்லை ஓய்! எதோ filer problemனு காரணம் சொல்றானுவ ப்ளாக்கர் காரனுங்க. எதோ 40 நிமிஷம் தான் பிரச்சினை இருந்த மாதிரி பீலா வேற உடுறானுங்க. இதெல்லாம் நம்ம ஊர்ல மட்டும் தான்னு பாத்தா அங்கியும் அதே கதை தான் போலிருக்கு.
    :(-

    ReplyDelete
  95. இந்த தரம் 100 எனக்கு தான்...ஒரு துண்டை போட்டு வையும்...இல்ல கைகலப்பு ஆகிப் போயிரும் சொல்லிட்டேன் ஆமா!

    ReplyDelete
  96. பதிவைவிட பின்னூட்டத்தின் நீளம் அதிகம்.

    அது சரி, இந்த 1=2 அப்படிங்கறத யாராவது ஏற்கனவே போட்டுட்டாங்களா இல்ல அத இந்தவாட்டி நான் (பாலராஜன்கீதாவுக்குப் பதிலா) உங்களுக்கு மெயிலில் அனுப்பாட்டுமா?

    ReplyDelete
  97. ப்ளாக் இல்லாமலேயே கைப்புள்ள அடிச்சான் பாருய்யா நூறு.

    ReplyDelete
  98. யோவ் முந்திரி கொட்டை! என்னோட 99ஐ நூறாக்கிட்டீரே?

    ReplyDelete
  99. தியாக்,
    வெறும் ஆபீஸ் நேரத்துல மட்டும்தான் தமிழ்மணம் பாக்கணும்ன்னு இல்லை. அதுக்கு அப்புறமும் பாக்கலாம். அப்போ ஒரு வெயிட்டீஸ் போட்டுட்டு அப்புறமா ஆபீஸ் டயத்துல நிதானமா பாக்கலாமில்லா.

    ReplyDelete
  100. //என்ன இலவசம், நம்மளோட "தினமலர்" கவரேஜே விட்டுடீங்களே...ஹி ஹி ஹி ஹி..//

    இதை மறந்துட்டேனே. பாத்தீங்களா? வந்து மூணு பதிவு முழுசா போடலை. அதுக்குள்ள தினமலர் கவரேஜ். அதுனால இவ்வளவு ஆட்டம். பாருங்க ஆட்டமா ஆடின கைப்புள்ள எப்படி அடங்கி போய் உக்காந்திருக்குன்னு பாருங்க.

    வாழ்க்கையில் நிதானம் வேணும் ஓய்.

    ReplyDelete
  101. //எதோ 40 நிமிஷம் தான் பிரச்சினை இருந்த மாதிரி பீலா வேற உடுறானுங்க. இதெல்லாம் நம்ம ஊர்ல மட்டும் தான்னு பாத்தா அங்கியும் அதே கதை தான் போலிருக்கு.//

    நீங்கதான் மென் பொருள் வேலை, மென் பொருள் வேலைன்னு அடிச்சுப்பீங்களே. அதுல இதெல்லாம் சகஜம் சாமி...

    ReplyDelete
  102. கொத்தனாரே!
    என்ன இப்பிடி சொல்லிபுட்டீரு!! இதோ இந்த பின்னூட்டம் மத்த நேரத்திலயும் பாக்கறேங்கறத்துக்காக :-))))))
    இப்ப நம்பறீயளா?

    தியாக்

    ReplyDelete
  103. //இந்த தரம் 100 எனக்கு தான்...ஒரு துண்டை போட்டு வையும்...இல்ல கைகலப்பு ஆகிப் போயிரும் சொல்லிட்டேன் ஆமா!//

    பாருங்க கடைசி நிமிஷத்துல வந்து கொட்டிடுச்சு. ஆனா நீங்க இவ்வளவு ஆசையா (!) கேட்டம்போது உங்களுக்கு இந்த பெருமையைத் தர வேண்டாமா? அதுனால நம்ம கமெண்டையெல்லாம் இடம் மாற்றி உங்களுக்கே 100வது பின்னூட்ட பெருமையை குடுத்தாச்சு.

    மறக்காம அடுத்த தேர்தலிலும் நம்ம ஞாபகம் இருக்கட்டும். :D

    ReplyDelete
  104. நன்றி நன்மனம் ஸ்ரீதர் அவர்களே,

    எல்லாம் உங்களை மாதிரி நல்ல மனம் கொண்டவங்க உதவியாலத்தான். :)

    ReplyDelete
  105. //63லருந்து 90க்கு ஜெட்டாப் போயிட்டீரு!
    இதத்தான் 'பார்ம் எல்லாம் டெம்பொரரி , க்ளாஸ் தான் பர்மனெண்ட்' ங்கற்து....//

    ஹிஹி. ரொம்ப வெக்கமா இருக்கு.

    ReplyDelete
  106. பிரேமலதக்கா,

    அந்த விளையாட்டு நிறைய பதிவுல வந்திட்டு போயிடுச்சே. அது மட்டுமில்லாம, அது சரியான புதிர் இல்லை. நம்ம பதிவுல அதைப் போட்டா நிறையா பேரு உதைப்பாங்க.

    வேறே எதாவது இருந்தா அனுப்புங்க. கட்டாயம் போடறேன்.

    ReplyDelete
  107. "அது சரியான புதிர் இல்லை."

    இது என் தன்மானத்துக்கே ஒரு அவமானம்.

    சரி பரவால்ல, போனாப்பொகுதுன்னு விட்டுடறேன்.

    ReplyDelete
  108. //திட்டலெல்லாம் வேணாம். ஸ்மைலி போடலைனா, சும்மா புசுக்குன்னு பத்திக்கும். //

    மறந்து மன்னியுங்களப்பா: -)))

    கொத்ஸ்,
    எந்த பதிவு போட்டாலும் செஞ்சுரி போட்டுத்தான் ஆவேன்ன்னு அடம் புடிக்கறது கொஞ்சம் கூட நல்லால்லை :-)))

    பின்னுட்டம்ங்கற பேர்ல பப்ளிக் சாட் பண்ணிக்கிட்டிருக்கீங்க... :-)))

    கொச்சுக்காதீங்க... யாராவது உங்க காலை கொஞ்சம் வாரணுமில்ல:-)))

    ReplyDelete
  109. //வெளியிலே கடினம் உள்ளே ஸாஃப்ட் - வழுக்க தேங்காய்.

    வெளியிலே கடினம் உள்ளே அவ்வளவு சுலபமில்லை ஆனால் சுகம் - பலாப்பழம்//

    இதுவும் நல்லாத்தான் இருக்கு. இப்போ இதுக்கெல்லாம் உதாரணம் தேடணும் போல இருக்கே.

    ReplyDelete
  110. //யோவ் முந்திரி கொட்டை! என்னோட 99ஐ நூறாக்கிட்டீரே?//

    உம்ம 99 வந்ததே லேட்டு.ஐய்யோப் பாவம்ன்னு 100ஆவது அட்ஜ்ஸ்ட் பண்ணி போட்டு குடுத்திருக்கேன். பாவம் வலைப்பூ வேலையெல்லாம் பாக்கலியேன்னு.

    ரொம்ப பேசினீரு....

    ReplyDelete
  111. //இப்ப நம்பறீயளா?//
    தியாக் தம்பி,

    இப்போ நம்பறேன். ஆனா இப்படி வரும்போது அப்புறம் வரேன்னு சொல்லி ஒரு கர்சீப் போட்டு இருக்கலாமில்ல. அதைப் பண்ணாம, முடிஞ்ச அப்புறம் வந்து அழுதா எப்படி?

    ReplyDelete
  112. //இது என் தன்மானத்துக்கே ஒரு அவமானம்.

    சரி பரவால்ல, போனாப்பொகுதுன்னு விட்டுடறேன்.//

    அக்கா, நான் சொல்ல வந்தது உங்களை மாதிரி அறிவாளிங்க போடற லெவலில் இல்லை அந்த புதிர்ன்னு. ஹிஹி.

    இந்த தம்பியை கோச்சிக்க மாட்டீங்கன்னு தெரியும். :)

    ReplyDelete
  113. நிலாக்கா,

    இதுக்கெல்லாம் அசந்து போற ஆளில்லை. சொல்லிட்டோமில்லை இதுதான் நமக்கு தெரியும். எண்ணித் துணிக கருமம்ன்னு சொல்லறா மாதிரி பேசிப் பெருக பின்னூட்டம் அப்படின்னு ஒரு புது மொழி வேணும்னா வெச்சுக்கலாம்.

    என்ன வேணும்னாலும் சொல்லுங்க. தடித்த தோலுன்னு சொல்லியாச்சே. ஆனா நம்ம ஆளுங்க எப்படி சந்தோஷப் படறாங்கன்னு பாருங்க. அவங்க சந்தோஷத்தை கெடுக்கணுமா?
    //கொத்ஸ்!
    ஆனாலும் நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய ஆளு

    63லருந்து 90க்கு ஜெட்டாப் போயிட்டீரு!
    இதத்தான் 'பார்ம் எல்லாம் டெம்பொரரி , க்ளாஸ் தான் பர்மனெண்ட்' ங்கற்து......//

    //மறந்து மன்னியுங்களப்பா: -)))//
    ஆகா, எங்களை 16, 32 ன்னு சாரி கேக்க வச்சீங்க. இப்போ நீங்க சாரி கேக்கற லெவலுக்கு வந்தாச்சு. சபாஷ்.

    ReplyDelete
  114. அப்பாடா. கைப்பு, பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு, ஒரு வழியாய் உமது பிரச்சனைக்கு முடிவு கண்டிருக்கிறோம். நமது தம்பிகள் உங்கள் வலைப்பூவை மீண்டும் இயங்க வழி செய்து விட்டனர். இனியாவது அதிக ஆட்டம் போடாமல், அமைதியாய் தமிழ்த் தொண்டாற்றுமாரு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!