Tuesday, September 05, 2006

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நம்ம மக்கள் பியர் குடிக்கும்போது சும்மா குடிச்சாத்தான் தேவலையே. ஆனா சும்மா இருக்காம காரமா சைட் டிஷ் தேடி அலையறாங்க. அதுவும் வறுத்த ஐட்டமா இருந்தாதான் வசதியா இருக்கு. அது முறுக்கு, சிப்ஸ் அப்படின்னு ஆரம்பிச்சு சிக்கன் 65, சில்லி சிக்கன் அப்படின்னு போயி முடியுது. பியரை விட இந்த ஐட்டங்களில்தான் தொப்பை, தொந்தின்னு வந்து தங்கமணிங்க வாயில விழுந்து புறப்பட வேண்டியதா இருக்கு. அது மட்டுமில்லாம கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிஸரைட்ஸ் அது இதுன்னு வேற பயமுறுத்தறாங்க. இதுக்கெல்லாம் பயந்து அவனவன் பியர் குடிக்கறதையே விட்டுடுவான் போல இருக்கு.

இந்த போக்கே சரி இல்லையே. இவங்களுக்கு எல்லாம் நல்லதா எதாவது பண்ணணுமே அப்படின்னு ராத்திரி பகலுன்னு பார்க்காம நம்ம பக்கத்துல ஒரு ஆள் யோசிக்கிட்டே இருந்தாரு. அப்போ அவரு மூளையில திடீருன்னு உதிச்ச ஒரு உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய இந்த விஷயம்.



இதுதாங்க சில்லி பியர். மேட்டர் என்னான்னு படத்தைப் பார்த்தாலே புரிஞ்சு இருக்கும். " இந்த பியருக்கும் மத்த பியருக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மிளகாய். ஒரே ஒரு மிளகாய்" அப்படின்னு தமிழ் தெரியாத மெழுகு பொம்மை வந்து சொன்னாதான் புரியும் அப்படின்னு உங்களை நான் குறைச்சு மதிப்பிடாததுனாலதான் அதெல்லாம் பண்ணலை.

ஹேலப்பீனோ (Jalapeno) என்ற வகை மிளகாய் ஒன்றை எடுத்து ஒரு பாட்டில் பியருக்குள் போட்டு ஊற வைத்து விட்டார்கள். அதிலுள்ள காரம் எல்லாம் மெதுவாக இந்த பியருள் இறங்கி பியர் மிகுந்த சுவையோடு இருக்கிறது. நல்ல காரமாய் இருப்பதால் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். நமக்கு புரியற வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் -"அப்படியே சாப்பிடலாம்".

ஆகவே இந்த மாதிரி நம்ம மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரி ஒரு புதுமையான ஐட்டத்தைக் கண்டுபிடித்த மகானுபாவருக்கு ஒரு 'ஓ' போட்டுட்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்கப்பா!

42 comments:

  1. கொத்ஸ்,

    இன்னிக்கு ஆசிரியர்கள் தினமாச்சே. அப்ப குரு தட்சணையா இந்தப் பதிவு?:-)))))

    ReplyDelete
  2. டீச்சர், உங்க சார்புல உலகத்துக்கு இப்படிப்பட்ட விஷயங்களை வெளியிடறதுல நான் பெருமை அடையறேன்.

    யாருப்பா அங்க? டீச்சருக்கு ஒரு 12pack பார்ஸ்ஸேல்ல்ல்ல்ல்....

    ReplyDelete
  3. கொத்ஸ்!
    ஒரு சின்ன சந்தேககம். பீர்ல ஊற வச்ச மிளகாயை என்ன பண்ணுவாங்க? தூக்கி போட்டுருவாங்களா? இல்ல அதுவும் மோர் மிளகாய் மாதிரி பீர் மிளகாய் ஆயிடுமா?

    ReplyDelete
  4. கைப்பு, நான் சும்மா இருப்பேனா? அந்த மிளகாயையும் கடிச்சுப் பார்த்தேன். ஆனால் அதில் இருக்கும் காரம் எல்லாம் பியரில் இறங்கி விட்டதால் அதில் ஒரு சுவையும் இல்லை. அதனால் இப்போ எல்லாம் அதை கண்டுக்காம அப்படியே தூக்கிப் போட்டுடறது.

    ReplyDelete
  5. நாட்டுமக்களுக்கு ஓர் "இலவச(ம்)" நற்செய்தி! ;கொத்தனார் ;யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்!! வாழ்க உங்கள் நற்றொண்டு!!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  6. நன்றி யோகனார். (மகிழ்ச்சியைப் பார்த்தா சரக்கு பத்தி ஏற்கனவே தெரிஞ்சு அடிச்சா மாதிரி இருக்கு...)
    :-D

    ReplyDelete
  7. குறைந்தது எவ்வளவு நேரம் ஊறவிடவேண்டும், அதுவரை பாட்டிலை திறந்து வைத்திருப்பதால் காஸ் இறங்கிவிடாதா?

    இப்படிக்கு
    விழங்காப்பயல்.

    ReplyDelete
  8. வாழ்க உங்கள் திருப்பணி!

    இதையே நம்ம ஊருல கொஞ்சம் பாருமுலாவ மாத்தி சல்பேட்டா, பட்டை அப்படின்ற பேருல வருது அதைபத்தியும் எழுதணும்.

    ReplyDelete
  9. ஐயா விழங்காப்பயல் அவர்களே,

    இதெல்லாம் நம்ம பண்ணறது இல்லை. தயாரிக்கற இடத்துலயே உள்ள போட்டு மூடித்தான் அனுப்பறான். அது அப்படியே நாட்கணக்குல உள்ள கிடந்து ஊறுது.

    நம்ம வேலை சிம்பிள்தான். திறக்கணும், குடிக்கணும். அவ்வளவுதான்.

    ReplyDelete
  10. //இதையே நம்ம ஊருல கொஞ்சம் பாருமுலாவ மாத்தி சல்பேட்டா, பட்டை அப்படின்ற பேருல வருது அதைபத்தியும் எழுதணும். //

    ஆஹா! தம்பி, உங்க அடுத்த பிராஜக்ட் என்னன்னு தெரிஞ்சு போச்சு. இவ்வண்ணம், உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும், இ.கொ.

    ReplyDelete
  11. படத்தைப் போட்ட கொத்தனார், படத்தினடியில் 'குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என்று போட மறந்தாரா? அல்லது போடச் சொன்னவரை மறந்தாரா?

    இப்படி சமூகத்தை சீரழிக்கும் விதயங்களை எழுதுபவர்கள்/போடுபவர்கள் ஒரு டிஸ்கியும் (சரியாக வாசிக்கவும்.. க்ளக்...) சேர்த்து உள்ளே போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மத்தபடி இவ்விஷயத்தில் கருத்து சொல்வதில்லை என்பதால் உள்ளேன் ஐயா மட்டும்.. :)

    ReplyDelete
  12. பீர் பாட்டிலை திறந்துட்டாலே அதுக்குள்ள இருக்கிற 'மப்பு' காத்து போயிரும், அப்புறம் எப்படி மிளகாய் போடறது? கொஞ்சம் செயல் முறை விளக்கம் தந்தால் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொல்லித்தர வசதியா இருக்கும்ல.

    ReplyDelete
  13. //மத்தபடி இவ்விஷயத்தில் கருத்து சொல்வதில்லை என்பதால் உள்ளேன் ஐயா மட்டும்.. :) //

    அனுபவஸ்தர் நீங்களே கருத்து சொல்லாமப் போனா எப்படி? கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்.

    அப்புறம் மக்கள்ஸ் எல்லாரும் நம்ம வைத்தியர் சொல்லற விஸ்கியோட, சாரி சாரி, டிஸ்கியோட சேர்த்தே உள்ள தள்ளுங்கப்பா.

    ReplyDelete
  14. யோவ் இளா, அப்படி எல்லாம் பண்ணிறாதே. இங்க பாரு என்ன சொல்லி இருக்கேன்னு.

    //ஐயா விழங்காப்பயல் அவர்களே,

    இதெல்லாம் நம்ம பண்ணறது இல்லை. தயாரிக்கற இடத்துலயே உள்ள போட்டு மூடித்தான் அனுப்பறான். அது அப்படியே நாட்கணக்குல உள்ள கிடந்து ஊறுது.

    நம்ம வேலை சிம்பிள்தான். திறக்கணும், குடிக்கணும். அவ்வளவுதான். //

    ReplyDelete
  15. >>>கண்டுபிடித்த மகானுபாவருக்கு ஒரு 'ஓ' போட்டுட்டு >>>>

    ஓஓஓஓஓஓஓஓ !!!!!!!!!!!!!! அதான் சங்கதியா ;-)

    ReplyDelete
  16. ஐயகோ,

    கொத்ஸ் பதிவில் இவ்வளவு நேரமாகியும் 14 பின்னூட்டங்கள்தானா....?

    நான் மட்டுமே இன்று ஐம்பது பின்னூட்டமிட கைவிரல்கள் துடிக்கின்றன.....ஆனால் கடமை அழைக்கிறேதே.... :-)

    என் செய்வேன்.......

    ReplyDelete
  17. //ஓஓஓஓஓஓஓஓ !!!!!!!!!!!!!! அதான் சங்கதியா ;-) //

    அதேதான் வாத்தியாரே.... ;)

    ReplyDelete
  18. //என் செய்வேன்....... //

    என்ன செய்வதா? அதான் சொல்லிட்டேனே....

    //ஆகவே இந்த மாதிரி நம்ம மக்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இந்த மாதிரி ஒரு புதுமையான ஐட்டத்தைக் கண்டுபிடித்த மகானுபாவருக்கு ஒரு 'ஓ' போட்டுட்டு ஆக வேண்டிய வேலையைப் பாருங்கப்பா! //

    ReplyDelete
  19. குடி குடியை கெடுக்கும்ன்னு எச்சரிக்கை போடவேஇல்லை.உங்க மேலே 'ஆக்ஷன்" எடுக்கப்போறேன். அது சரி நம்ப ஊர்லே எங்க கிடைக்கும்ன்னு சொல்லவே இல்லையே

    ReplyDelete
  20. //குடி குடியை கெடுக்கும்ன்னு எச்சரிக்கை போடவேஇல்லை.//

    அதான் நம்ம வைத்தியர் வந்து விஸ்கி போட சொல்லிட்டாரே. நானும் போட்டுட்டேனே. அப்புறமும் என்ன?


    //அது சரி நம்ப ஊர்லே எங்க கிடைக்கும்ன்னு சொல்லவே இல்லையே //

    அடடா! அதை விட்டுட்டேனே. பேசாமா வாங்கி, பாட்டிலை ஓப்பனும் பண்ணித் தரேனே... :D

    ReplyDelete
  21. கப்பி,
    வேலையைத் தொடங்கியாச்சா? :D

    ReplyDelete
  22. சாமி நீங்க சொன்ன நாள்லே இருந்து தேடறன் எங்க கிராமத்திலே கிடைக்கலே. ஆனா இங்கே பீர் மூடி எல்லாமே ஸ்குரு டைப் தானே. காபல்ன்னு ஒரு மிளகாயை போட்டு மூடி ஒரு வாரம் கழிச்சி குடிக்க வேண்டியது தான்.

    என்னுடைய அடுத்த பதிவை பாரும் அதிலும் பியர்கள் உண்டு

    ReplyDelete
  23. //என்ன செய்வதா? அதான் சொல்லிட்டேனே....//

    எங்கே சொல்லவே இல்ல......

    ReplyDelete
  24. ராம்,

    அதுக்குக் கீழ வேற தனியா வெட்டி ஒட்டினேனே. புரியலையா?

    சரி, தூய தமிழில் சொல்லறேன்.

    அப்படியே போயி ஒரு பாட்டில் வாங்கி கப்புன்னு விட்டுக்கினு போவீயா...

    ReplyDelete
  25. //அதுக்குக் கீழ வேற தனியா வெட்டி ஒட்டினேனே. புரியலையா?

    சரி, தூய தமிழில் சொல்லறேன்.

    அப்படியே போயி ஒரு பாட்டில் வாங்கி கப்புன்னு விட்டுக்கினு போவீயா... //

    ஹீ ஹீ டாங்கீஸ் கொத்ஸ்,

    இந்த பிராண்ட் சரக்கு பெங்களூரிலே
    கிடைக்குமா.... இல்லன்னே ஊர்பக்கம் வரும்போது வாங்கிட்டு வாங்க.... யாருக்காவது கொடுக்கலாம்... :-)))

    ReplyDelete
  26. //இந்த ஐட்டங்களில்தான் தொப்பை, தொந்தின்னு வந்து தங்கமணிங்க வாயில விழுந்து புறப்பட வேண்டியதா இருக்கு. //

    :-)) அனுபவம், அனுபவம்... எவ்ளோ சிந்திக்க வைச்சுருக்கு. நானும் தேடறேன், தேடறேன் கிடைக்க மாட்டேங்கிது ஓய். நம்ம கடை ஆளு சொல்லியிருக்கிறார், எப்படியாவது கொண்டு வந்து இறக்கிப்படறேன் அப்படின்னு... விழித்துரு, தாகத்தோடுரு... ன்னு காத்துக்கிடக்கேன், பார்ப்போம்.

    இல்லென்னா நானே கலவை போட்டுட வேண்டியதுதான்... யப்பா, யாருகிட்டயாவது ரிசிபி இருந்த கொடுங்க... பெரிய பாக்யார்டு சும்மா கிடக்குது ;-)))

    ReplyDelete
  27. Here, Pinuoootta Kayamai is happening..

    Koths, Stop..

    ReplyDelete
  28. //வேலையைத் தொடங்கியாச்சா? :D//

    இப்போ தான் ஆபிஸ் வந்திருக்கேன்..இப்பவே வேலையை தொடங்கினா எப்படி? ;)

    ReplyDelete
  29. //ஆஹா! தம்பி, உங்க அடுத்த பிராஜக்ட் என்னன்னு தெரிஞ்சு போச்சு. இவ்வண்ணம், உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும், இ.கொ.//

    கொத்ஸ்,

    இதுல நான் படிக்க வேண்டியது நிறைய இருக்கு அதனால பிராஜெக்ட் எல்லாம் பின்னால. முதலில் அதை கற்று மறக்கணும் இல்லியா!

    ReplyDelete
  30. அடியாத்தி.....பெங்களூர்ல ஃபண்டா-னு ஒன்னு கிடைக்குது. ஃபன் + வடா. அதாவது வடைக்குள்ளையே துவையல வெக்கிறது. இவ்வளவுதாங்க நான் முயற்சி செய்ய முடியும். நீங்க சொல்றதெல்லாம் சோமா பாணம் சுறா பாணமா இருக்கும் போலவே!

    ReplyDelete
  31. இந்த பியர் குடித்தவர்கள் இங்கேயும் வந்து ட்ரை செய்யவும்

    ReplyDelete
  32. //இல்லன்னே ஊர்பக்கம் வரும்போது வாங்கிட்டு வாங்க.... //

    ராம், ஒரு தபா நம்ம அண்ணாத்தைக்கு ஒரு 6 பாக் வாங்கிக் குடுத்தேன். ஆனா இது கண்ணாடி பாட்டில் அதனால ஹேண்ட் பாக்கேஜ்லதான் எடுத்துட்டு வரணும். அதுக்கு இப்போ அனுமதி இல்லையே. :(

    ReplyDelete
  33. //காத்துக்கிடக்கேன், பார்ப்போம்.//

    தெக்கி, அடுத்த முறை பேசும் போது ஞாபகப் படுத்துங்க. பேரு, ஊருன்னு ஜாதகமே தரேன். அப்புறமாவது உங்க ஆளு வாங்கி வைக்கறாரான்னு பார்க்கலாம்.

    //பெரிய பாக்யார்டு சும்மா கிடக்குது//

    போட்டீங்கன்னா நமக்கு மறக்காம சாம்பிள் அனுப்புங்க.

    ReplyDelete
  34. //இப்போ தான் ஆபிஸ் வந்திருக்கேன்..இப்பவே வேலையை தொடங்கினா எப்படி? ;)//


    ஆபீஸ் வந்தா உடனே வேலையைத் தொடங்க மாட்டாங்களா?

    --- அப்பாவி ஆறுமுகம்

    ReplyDelete
  35. //முதலில் அதை கற்று மறக்கணும் இல்லியா! //

    மறக்க எல்லாம் வேண்டாம். வள்ளுவன் சொன்னா மாதிரி நிற்க அதற்குத் தக. கொஞ்சம் ஓவராகி நிக்க முடியலைன்னா ஓரமா சாய்ஞ்சு உக்காந்துக்கங்க.

    ReplyDelete
  36. //அதாவது வடைக்குள்ளையே துவையல வெக்கிறது.//

    அது துவையலா? சட்னியா? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? (ஆஹா, மகரந்தத்தில் அடுத்த பதிவுக்கான மேட்டர் கிடைச்சாச்சு)

    //நீங்க சொல்றதெல்லாம் சோமா பாணம் சுறா பாணமா இருக்கும் போலவே! //

    சோம பானம், சுரா பானம்தான் தெரியும். நீங்க சுறா புட்டு ஸ்பெஷலிஸ்ட் அப்படின்னு சொன்னாங்க சுறாவை பாணம் விட்டுப் பிடிக்கறதுலையும் எக்ஸ்பேர்ட்ன்னு சொல்லவே இல்லையே! :D

    ReplyDelete
  37. /இந்த பியர் குடித்தவர்கள் இங்கேயும் வந்து ட்ரை செய்யவும் /

    இலவச விளம்பரம்? இருக்கட்டும். இருக்கட்டும். இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு வாங்கறேன். வட்டியும் முதலுமா.

    ReplyDelete
  38. ஆமா பாட்டில் பாதிதான் இருக்கு புடிச்சி குடிச்சதா? இல்லை குடிச்சி புடிச்சதா ?

    போட்டோ?

    ReplyDelete
  39. நல்லா பாருங்க. மூடி கூட திறக்காம எடுத்த படமுங்க அது. பாட்டில் கழுத்து வரைதான் பியர் இருக்கும். ரொம்பி வழியற அளவு இருந்தா அது தண்ணி பாட்டில்.

    புடிச்சிக் குடிக்கற சரக்குக்கு பேரு டிராஃப்ட் பியர் (draught beer). ஆனா அதெல்லாம் பாட்டிலில் பிடிக்க மாட்டாங்க. நேர கிளாஸ்தான்.

    ReplyDelete
  40. தேவு தம்பி,

    நீ வந்ததைப் பாக்காமலேயே விட்டுட்டேனே. நல்லாயிருக்கையாப்பா? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? எப்பவும் போல வந்து போயிக்கிட்டு இருப்பா. என் ராசா..

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!