Sunday, January 13, 2008

படப் பெட்டியில் பல சரக்கு

மாசம் ஒரு முறை பதிவு போட நல்ல வாய்ப்பு தராங்க நம்ம PIT வலைக்குழுவினர். என்னமோ ரெண்டு படம் எடுத்தோமா பதிவைப் போட்டோமான்னு அப்படின்னு ஒரே ஜாலியா இருக்குங்க. ஆனாப் பாருங்க, இந்த முறை அவங்க குடுத்து இருக்கும் தலைப்பு அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாம். எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு ஒரே குழப்பம்தான். எடுத்ததில் தேறிய இந்த ஐந்து படங்களைப் போட்டு இருக்கிறேன். முதலிரண்டு படங்களை போட்டிக்கு அனுப்ப உத்தேசம். (பிற்சேர்க்கை : முதல் படம் தலைப்பிற்கேற்றதா என்ற குழப்பம் இருப்பதால் இரண்டாவது மற்றும் நான்காவது படங்களைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.)

இது வந்து அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் சேர்த்தியான்னு தெரியலை. ஆனா அன்றாடம் பயன் படுத்தும் இடங்களில் ஒன்று. வாயில் கதவைத் திறந்து வீட்டினுள் வரும் வழி. இதைப் பயன்படுத்தாம இருக்க முடியுமா? இதை சேர்த்துக்கலாமுன்னா இதுதாங்க நம்ம சாய்ஸ்!



இப்பருவத்தில் பொதுவாக அரிதான சூரிய வெளிச்சம் இந்த முறை சக்கை போடு போடுகிறது. அது ஜன்னல் வழியே வரும் காட்சியை படம் பிடிச்சது. கொஞ்சம் வடக்கே போனாக்கூட பனி கொட்டுது. ஆனா எங்களுக்குத்தான் ஒண்ணுமே இல்லை! :-(



என்னங்க தொழில் அப்படின்னு கேட்டா விற்பனை துறை அப்படின்னு சொல்லாம கையில் பை, கழுத்தில் டை, வாயில் பொய் அப்படின்னு சொல்லுவாங்க. இங்க நம்ம டை கழுத்தில் இல்லாம கீழ கிடக்கு. இந்த டைகள் எல்லாம் இப்படி சுத்தி வெச்சது நம்ம ஜூனியர்.



உலகத்தில் எல்லா அசைவிலும் இசை இருக்குன்னு சொல்லுவாங்க. இந்த சிடி அசைந்தால் இசை வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கு? நான் அசைந்தால் இசையும் அகிலமெல்லாமே!



போன் கண்டார் போனே கண்டார்...



அடுத்த மாசமாவது இம்புட்டு யோசிக்காம படம் எடுக்கற மாதிரி தலைப்பு குடுங்கப்பா. அப்புறம் எல்லாருக்கும் என்னோட பொங்கல் நல்வாழ்த்துகள்! உலகில் இன்று முக்கியமான தேவை அமைதிதான். அதனால இந்த அமைதி நாயகன் படத்தையும் போடறேன். நீங்களும் வேண்டிக்குங்க.



பி.கு. - இது போன வருடம் பொங்கலுக்குப் போட்ட பதிவு!

25 comments:

  1. நானும் மாசா மாசம் படமெடுத்து அனுப்பறேன். இந்த முறை சுந்தரையும் சர்வேசனையும் தனியா கவனிக்க வேண்டியதுதான் போல! :))

    ReplyDelete
  2. தலைவர் வருஷா வருஷம் இதே இடத்தில்தான் மரம் நடுவார்னு சொல்றா மாதிரி பொங்கலுக்கு பொங்கல் இதையே போடுவீங்களா?

    கதவு டை ப்ளைண்ட்ஸ் எல்லாம் சூப்பர் - என் சாதாக்கண்ணுக்கு.. போட்டோக்கார கலைக்கண் என்ன சொல்லுதுன்னு பாப்போம்!

    ReplyDelete
  3. வட்டுக்களும், கதவும் அருமை..

    ReplyDelete
  4. ஜூனியரின் கலாரசனைக்கு ஒரு ஓ போடுங்கப்பா!

    ReplyDelete
  5. எந்னுடைய விருப்பங்கள்:
    1. வட்டுகள்
    2. கழுத்துப் பட்டை (பொறுமையாக வைத்த கைகளுக்கு பாராட்டு :)

    ReplyDelete
  6. குறுந்தகடுகள் படம் வித்தியாசமா நல்லாருக்கு.

    //மாசம் ஒரு முறை பதிவு போட நல்ல வாய்ப்பு தராங்க நம்ம PIT வலைக்குழுவினர்.//

    இதை இப்படியும் மாத்தி எழுதலாம்:

    மாசம் ஒரு முறை நல்ல பதிவு போட வாய்ப்பு தராங்க நம்ம PIT வலைக்குழுவினர்.

    ஹாஹா சும்மானாச்சுக்கும் தான், கோச்சுக்காதீங்க

    ReplyDelete
  7. //தலைவர் வருஷா வருஷம் இதே இடத்தில்தான் மரம் நடுவார்னு சொல்றா மாதிரி பொங்கலுக்கு பொங்கல் இதையே போடுவீங்களா?//

    போன வருஷம் நட்ட மரம் அப்படின்னுதானே போஸ்டர் ஒட்டறோம் அப்புறம் என்ன?

    //கதவு டை ப்ளைண்ட்ஸ் எல்லாம் சூப்பர் - என் சாதாக்கண்ணுக்கு.. போட்டோக்கார கலைக்கண் என்ன சொல்லுதுன்னு பாப்போம்!//

    ம்ம் பார்ப்போம்!1

    ReplyDelete
  8. //வட்டுக்களும், கதவும் அருமை..//

    ரெம்ப்ளேற் பின்னூட்டத்துக்கு ரெம்ப்ளேற் பதில்தான் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விவ்ஸ்!! :))

    ReplyDelete
  9. //ஜூனியரின் கலாரசனைக்கு ஒரு ஓ போடுங்கப்பா!//

    போட்டுட்டாப் போச்சு!!
    ஓஓஓஓஓஓ!!
    :))

    ReplyDelete
  10. //எந்னுடைய விருப்பங்கள்:
    1. வட்டுகள்
    2. கழுத்துப் பட்டை (பொறுமையாக வைத்த கைகளுக்கு பாராட்டு :)//

    பாபா எல்லாரும் ஆசைப்படற மாதிரி வட்டுக்கள் போட்டிக்கு வந்தாச்சு.

    ReplyDelete
  11. //மாசம் ஒரு முறை நல்ல பதிவு போட வாய்ப்பு தராங்க நம்ம PIT வலைக்குழுவினர்.//

    தொடர் எழுதினாப் படிக்க மாட்டேன், பெருசா இருந்தா படிக்க மாட்டேன் அப்படின்னு வேற சொல்லறீங்க. அப்புறம் எது நல்லது கெட்டதுன்னு எப்படித் தெரியும்?

    ஆனா இதெல்லாம் மட்டும் சரியாச் சொல்லிடுங்க!

    ReplyDelete
  12. கழுத்துப்பட்டை இன்னும் வெளியே வரவில்லை..
    வட்டு தான் அருமையாக இருக்கு.

    ReplyDelete
  13. தலக் கலக்குறீங்க போங்க

    ReplyDelete
  14. போட்டிக்கு வட்டத்தகடு தேறுங்க.பின்ன கழுத்து துணில இடதுல இரண்டாவது எல்லா உடைகளுக்கும் சரிப்பட்டு வரும்.

    ReplyDelete
  15. ஜூனியர் சமத்து. அப்பாவுக்கு ஹெல்ப் செய்திருக்கான்.
    அதனால அவன் படத்துக்குத் தான் என் ஓட்டு.

    ReplyDelete
  16. //கழுத்துப்பட்டை இன்னும் வெளியே வரவில்லை..//

    என்ன சொல்லறீங்க குமார்? புரியலையே.

    //வட்டு தான் அருமையாக இருக்கு.//

    வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற குறுந்தகடு என்ற வட்டைப் போட்டிக்கு அனுப்பியாச்சு! :)

    ReplyDelete
  17. //தலக் கலக்குறீங்க போங்க//

    எங்கய்யா ரொம்ப நாளா ஆளையே காணும்? நல்லா இருக்கியா?

    ReplyDelete
  18. //போட்டிக்கு வட்டத்தகடு தேறுங்க.பின்ன கழுத்து துணில இடதுல இரண்டாவது எல்லா உடைகளுக்கும் சரிப்பட்டு வரும்.//

    நட்டு நீங்களும் குறுந்தகடுக்குத்தான் வோட்டா? இருக்கட்டும்.

    அப்புறம் இப்படி எல்லாம் ஓப்பனா ஸ்டேட்மெண்ட் விடக்கூடாது. நட்டுவே சொல்லிட்டாரு, எல்லா உடைக்கும் அந்த பட்டையைக் கட்டலாமுன்னு அதனால வேட்டி சட்டைக்கு அதைக் கட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்ல ஆட்கள் நிறையா பேரு இருக்காங்கப்பா!!

    ReplyDelete
  19. //ஜூனியர் சமத்து. அப்பாவுக்கு ஹெல்ப் செய்திருக்கான்.
    அதனால அவன் படத்துக்குத் தான் என் ஓட்டு.//

    இந்த மாதிரி கேண்டிடேட் யாருன்னு பார்க்காம கட்சி எதுன்னு பார்த்து ஓட்டு போடறதுனாலதான் இன்னிக்கு நாடு இப்படி இருக்கு!!

    நல்லா இருங்கப்பா!! :))

    ReplyDelete
  20. படங்கள் சூப்பர் தல.என் சாய்ஸ் கதவு தான்..sriraம் படம் மாதிரி இருக்கு..
    அதான் நம்ம p.c sriram

    ReplyDelete
  21. என்னோட சாய்ஸ் கதவு.. எங்கூட்ல வெளிச்சம் வந்து நாளாச்சி. எங்கும் ஒரே பனிமயம். :-)

    //உலகத்தில் எல்லா அசைவிலும் இசை இருக்குன்னு சொல்லுவாங்க. இந்த சிடி அசைந்தால் இசை வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கு? நான் அசைந்தால் இசையும் அகிலமெல்லாமே//
    ஹா ஹா ஹா... படத்துக்கேற்ப ரசனையான விளக்கம்.

    ReplyDelete
  22. //Boston Bala said...

    எந்னுடைய விருப்பங்கள்:
    1. வட்டுகள்
    2. கழுத்துப் பட்டை (பொறுமையாக வைத்த கைகளுக்கு பாராட்டு :)//

    ரிப்பீட்டே!!!

    ReplyDelete
  23. //படங்கள் சூப்பர் தல.என் சாய்ஸ் கதவு தான்..sriraம் படம் மாதிரி இருக்கு..
    அதான் நம்ம p.c sriram//

    அதுதான் எனக்கும் பிடிச்சது. ஆனா அதை போட்டிக்கு அனுப்பலையே....

    ReplyDelete
  24. //என்னோட சாய்ஸ் கதவு.. எங்கூட்ல வெளிச்சம் வந்து நாளாச்சி. எங்கும் ஒரே பனிமயம். :-)//

    எங்களுக்கு வடக்கேயும் பனி, தெற்கேயும் பனி. எங்களுக்கு மட்டும்தான் வரவே இல்லை :(

    //ஹா ஹா ஹா... படத்துக்கேற்ப ரசனையான விளக்கம்.//
    :))

    ReplyDelete
  25. //ரிப்பீட்டே!!!//

    வெட்டி,

    பாபாவுக்கு சொன்னதுதான் உங்களுக்கும் ரிப்பீட்டே!!! :))

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!