Wednesday, January 14, 2009

குறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009

எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த வருட ஆரம்பத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. அப்படி இருப்பதே கூட நல்ல விஷயம்தான். ஆனால் இந்த குறுக்கெழுத்துப் புதிரைச் செய்ய நேரமில்லாமல் போய்விட்டது. அதனால் வழக்கமாக ப்ரிவியூ பார்க்கும் பெனாத்தலார் இந்த முறை இணை இயக்குனராக மாறி பாதிக்கும் மேல் குறிப்பெழுதி இருக்கிறார். எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னா இதை அவரிடம் மொத்தமாக அவுட்சோர்ஸ் பண்ணிவிட ஒரு சான்ஸ் கிடைக்கும். :)

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.



1
2
3
4
5
6





7

8



910


1112

1314


15


16
17






இடமிருந்து வலம்
5 ஆசாரமாய் இருக்க மடக்கு அல்லது மரணமடை (2)
6 நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே (3,3)
7 கிழவி தைத்ததைப் பார்த்தால் முளைக்கப் போட்டது கிடைக்கும் (4)
8 மகளை நதியின் பெயர் சொல்லிக் கூப்பிடலாமா? (3)
9 கொஞ்சம் காரமாய் அம்மா திரும்பினால் மனைவியா ஆவாள்? (3)
11 நகரம் திரும்பினால் நாட்டை ஆளுமே (3)
13 சங்கடம் இங்கு இல்லா வட்டம் (4)
16 புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது (6)
17 இரவில் தெரியும் சூரியன் (2)


மேலிருந்து கீழ்
1 காயம் பட பாதம் கொண்டு மிதி (2,2)
2 அரை முத்தம் கொடு என்றால் தாக்கியதா? (5)
3 கலையின் தலையெடுத்து தலைகீழாய் பிச்சை கேட்கும் சிற்பமா? (3)
4 லட்சுமி நிலபுலன் கொண்டு வந்தால் நாமம்தான் (4)
10 மாது சற்றே ஓசை குறைத்துக் கொள்ள தூய்மையானது (5)
12 முப்பத்திரண்டையும் பாதுகாத்திட முருகனுக்குத் தேவையானது (4)
14 உலோக முரசைக் கொட்டியதால் இப்படிச் செவிடாகும் (4)
15 பாடு படாத ஈடுகோள் மட்டம் (3)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

109 comments:

  1. இந்த மாசப்போட்டி கொஞ்சம் ஈசியா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க்ஸ் ஸோ நானும் டிரைப்பண்றேன் இந்த முறை :)))))

    ReplyDelete
  2. நாளை மறுநாள் அலுவல் சம்பந்தமாக பயணம் செய்வதால் விடைகளுக்குப் பதிலளிப்பதில் தாமதமாகலாம். தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  3. உள்ளேன்.
    அப்புறமா வருவேன்.

    ReplyDelete
  4. இ -வ
    5 மடி
    8 காவேரி

    13 சகடம்
    17 ரவி

    மே-கீ
    1அடிஉதை

    14 டமாரம்

    ReplyDelete
  5. மீ த பர்ஸ்ட் போடவே இடம் கொடுக்கமாட்டீங்களா? :-)

    ReplyDelete
  6. ஆயில்ஸ், அடிச்சு ஆடுங்க. :)

    ReplyDelete
  7. ரீச்சர் நீங்கதான் மொத போணி. வியாபாரம் சரியா ஆகலை.... :)

    ReplyDelete
  8. குமார், ஆயில்ஸ் முந்திக்கிட்டாரு பாருங்க. நீங்க ரொம்ப சுறுசுறுப்பா இருக்கணும். :))

    ReplyDelete
  9. ரீச்சர்

    5 13 17
    1 14


    சரியான விடைகள்.

    ReplyDelete
  10. 12. மேலிருந்து கீழ் - முனைவேல்

    ReplyDelete
  11. வாங்க ஜி3

    12 - சரியான விடை.

    ReplyDelete
  12. 7. இடமிருந்து வலம் - முளைவிதை

    17. இடமிருந்து வலம் - நிலா

    ReplyDelete
  13. ஜி3

    7 17 ரெண்டுமே தப்பு :(

    ReplyDelete
  14. 15. மேலிருந்து கீழ் - சமன்

    ReplyDelete
  15. ஜி3

    15 சரி. 17 இன்னும் ம்ஹூம்.

    ReplyDelete
  16. இ-வ

    5.மடி
    6.தில்லை ---
    7.விதைத்த
    8.பெண்ணை
    9.தாரமா
    13.சகடம்
    17.ரவி

    மே-கி

    2.பாதித்ததா
    3.சிலையா
    4.திருமண்
    13.மாசற்றது
    14.டமாரம்

    ReplyDelete
  17. 17. ரவி

    14. டமாரம்

    ReplyDelete
  18. இலவசம்!
    இத்தளத்தின் குறுக்கெழுத்துப்புதிர்கள் மற்றும் (தென்றல்)வாஞ்சிநாதனின் குறுக்கெழுத்துப் புதிர்கள், இந்த ரெண்டின் தொகுப்புகளின் சுட்டிகளை மட்டும் இந்த பக்கத்தில் சேமித்திருக்கிறேன்! உபயோகப்படும் என நம்புகிறேன். வளரட்டும் ஒரு தொண்டு! (சற்றே க்ளிஷேவாக!)
    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  19. இது வரைக்கும் எதுக்கெல்லாம் பதில் போட்டேன்னு தெரில.. சரி.. கண்டுபிடிச்ச வரை லிஸ்ட் இங்கே :

    1. அடி உதை
    2. பாதித்ததா
    3. யா லை சி (தலைகீழாய் சிலையா)
    4.
    5. மதி
    6.
    7. விதைத்த
    8.
    9. தாரமா
    10. மாசற்றது
    11. தி மு க
    12. முனைவேல்
    13. சகடம்
    14. டமாரம்
    15. சமன்
    16. விவேகமற்ற
    17. ரவி

    ReplyDelete
  20. Small correction,

    5. மடி

    ReplyDelete
  21. விடுபட்டவை :

    4. திருமண்

    6. தில்லை வரும்

    8. பெண்ணை

    ReplyDelete
  22. http://i41.tinypic.com/2mmgsbo.jpg


    ஆபிஸிலே வேலை எதுவும் பார்க்கமே இதை தான் பண்ணிட்டு இருந்தேன்... சரியா'னு பார்த்து சொல்லுங்க...


    BTW எந்த உதவியும் பண்ணாதே பினாத்தல் ஒழிக.... :)

    ReplyDelete
  23. இடமிருந்து வலம்
    5. மடி
    6. தில்லை வருக
    7. விதைத்த
    8. பெண்ணை
    9. தாரமா
    11. கமுதி
    13.சகடம்
    16. விவேகமற்ற
    17. ரவி

    மேலிருந்து கீழ்
    1. அடிஉதை
    2. பாதித்ததா
    3. சிலையா
    4. திருமண்
    10. மாசற்றது
    12. முனைவேல்
    14. டமாரம்
    15. சமம்

    ReplyDelete
  24. ஓய்வொழிச்சல் இல்லாத வேலை. நாளையும் இணைய இணைப்பு இருக்காது. அதனால் பதில் சொல்ல முடியாது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  25. http://i41.tinypic.com/vo9276.jpg

    இப்போ சரியா போட்டுருக்கேனா?? :))

    ReplyDelete
  26. //ஓய்வொழிச்சல் இல்லாத வேலை. நாளையும் இணைய இணைப்பு இருக்காது. அதனால் பதில் சொல்ல முடியாது. மன்னிக்கவும்.//

    என்கிட்டே இதே அவுட் சோர்ஸ் பண்ணிங்கன்னா, யாருக்கிட்டேயும் பிளாக் மார்க்கெட்'லே பதில் விக்கமாட்டேன்னு அறுதியிட்டு உறுதி கூறிக்கொள்கிறேன்... :)

    ReplyDelete
  27. இ வ

    5.மடி
    7.விதைத்த
    9. தாரமா
    13. சகடம்
    17. ரவி

    மேகீ

    1 அடிஉதை
    2 அடித்ததா
    10 மாசற்றது
    14 டமாரம்

    ReplyDelete
  28. 7 விதைத்த

    8 கரம்

    11 அம்மா

    ReplyDelete
  29. எனது முதல் முயற்சி...ஆயில்யன் கூறுவது போல இந்த மாதம் கொஞ்சம் ஈசியோ ?
    இடமிருந்து வலம்
    5 மடி
    6 தில்லை வரும்
    7 விதைத்த
    8 பெண்ணை
    9 தாரமா
    11 கமுதி
    13 சகடம்
    16 விவேகமற்ற
    17 ரவி
    மேலிருந்து கீழ்
    1 அடிஉதை
    2 பாதித்ததா
    3 சிலையா
    4 திருமண்
    10 மாசற்றது
    12 முனிவேல்
    14 டமாரம்
    15 சமன்

    ReplyDelete
  30. இடமிருந்து வலம்
    5 மடி
    6 தில்லை வாரும்
    7 விதைத்த
    8 நதியா
    9 தாரமா
    11 --
    13 சட்டம்
    16 --
    17 ரவி


    மேலிருந்து கீழ்
    1 அடி உதை
    2 மிதித்ததா
    3 சிலையா
    4 திருமதி
    10 மாசற்றது
    12 வேலானது
    14 டமாரம்
    15 --

    நிறைய விடைகள் தவறாகத்தான் தோன்றுகிறது..

    ReplyDelete
  31. முடித்தவரை விடைகள் இங்கே.

    கமுதியெல்லாம் நகரமா?
    அம்மா திரும்பினால் - சரியாகப் புரியவில்லை

    நடராசர் பார்க்க வருவதில்லை? வந்திடும் இங்கே - தில்லை அருகே என்று வருமா?
    புத்தியற்ற புரவி இறுதியில் மெதுவாகச் சென்றது - சத்யமா புரியவில்லை.

    ReplyDelete
  32. ஜனவரி 09 விடைகள்
    இ-வ 5 மடி 6 தில்லை வருக
    7விதைத்த 8பெண்ணை 9தாரமா
    11திமுக(கமுதி) 13சட்டம்
    16விவேகமற்ற 17ரவி
    மே-கீ 1 அடி உதை 2மிதித்ததா
    3சிலையா 4திருமண்10 மாசற்றது
    12முனைவேல் 14 டமாரம் 15சமன்
    ராமையா நாராயணன்

    ReplyDelete
  33. பதில் சொன்னவர்கள் அனைவருக்கும் என் நன்றி. பணி நிமித்தம் வெளியூர் பயணம் அதனால் உடன் பதில் சொல்ல முடியவில்லை. இதோ ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  34. வாய்யா சங்கரு!!

    5 7 8 9 13 17 சரி
    2 3 4 10 14 சரி

    6 போட்ட பாதி சரி

    ReplyDelete
  35. ஜி 3

    1 2 7 9 10 12 13 14 15 16 17 எல்லாம் சரி.


    3 11 விடையைத் தலைகீழா எழுதி இருக்கீங்க! :)

    ReplyDelete
  36. ராம்

    முதலில் போட்ட படத்தில் சில தவறுகள் இருந்தாலும் இரண்டாவதாகப் போட்டதில் எல்லாம் சரி. முதலில் சரியாக முடித்தவர் நீங்கதான்!! :)

    ReplyDelete
  37. மஞ்சுளா

    இந்த முறை ரொம்ப எளிதாகப் போச்சு போல.

    6 இரண்டாவது பகுதி தவிர மற்றவை எல்லாம் சரி.

    ReplyDelete
  38. வாங்க விஜி

    5 7 9 13 17
    1 10 14

    எல்லாம் சரி.

    ReplyDelete
  39. ரீச்சர்

    7 சரி

    அத்த ரெண்டும் தப்பு.

    இப்படி ரீச்சர் பேப்பரைக் கரெக்ட் பண்ணறது ஜாலியாத்தான் இருக்கு. :)

    ReplyDelete
  40. வாங்க மணியன்

    ஆமாம். இந்த முறை கொஞ்சம் அவசரத்தில் போட்டது.

    6 இரண்டாவது பகுதியில் ஒரு காலைக் காணும்.

    12 எழுத்துப்பிழைதான் நினைக்கிறேன்.

    மற்றவை எல்லாம் ஓக்கே!

    ReplyDelete
  41. பாச மலர்

    5 6 7 9 17
    1 3 10 14

    இவை சரியான விடைகள்.

    ReplyDelete
  42. யோசிப்பவரே

    11 நகரம்தான்னு சொல்லறாங்க. நீங்க விடையைத் தலைகீழாப் போட்டுட்டீங்க.

    9 ஏன் புரியலை? விளக்கம் வரும் வரை காத்திருங்க! :)

    6 முதல் பாதி சரிதான். இரண்டாவது கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

    16 அவ்வளவு எல்லாம் கஷ்டம் இல்லை. ரொம்ப யோசிக்காதீங்க! :)

    ReplyDelete
  43. யோசிப்பவரே

    சொல்ல விட்டுப் போச்சு. மத்த விடைகள் எல்லாம் சரிதான்.

    ReplyDelete
  44. வாங்க ராமையா நாராயணன்

    5 7 8 9 16 17
    1 3 4 10 12 14 15

    11 - இரண்டு விடைகள் தந்திருக்கீங்க. சரியானதை எடுத்துக்கறேன்.

    6 இரண்டாவது பகுதி கொஞ்சம் மாத்தணும்.

    ReplyDelete
  45. 6. தில்லை வாரும்

    இப்போ சரியா?

    இந்த மாசம் கொஞ்சம் ஈசியா தான் இருந்தது. வேணும்னா, கொஞ்சம் கஷ்டமா, குறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009 - வெர்ஷன் 2 போடறீங்களா?!

    ReplyDelete
  46. மதிப்பெண்ணுக்கு நன்றி
    13 சகடம் 14/17 ஐ 15/17 ஆக்குங்கள்

    2ல் தாக்க முயலுகிறேன்
    6ல் தில்லையில் என்ன செய்ய தெரியவில்லை

    ராமையா நாராயணன்

    ReplyDelete
  47. வணக்கம் வசுப்ரதா.

    5 6 7 8 9 16 17
    1 3 4 10 14

    இவை சரியான விடைகள்.

    ReplyDelete
  48. மஞ்சுளா

    6 இப்போ ஓக்கே. எல்லாம் சரியாப் போச்சு. இந்த முறை கொஞ்சம் அவசரத்தில் போட்டது. அதான் இப்படி. அதுக்காக இந்த மாசம் ரெண்டாவது புதிர் கேட்கறது எல்லாம் டூ மச். :)

    ReplyDelete
  49. நாராயணன்

    13 இப்போ ஓக்கே.

    14ஐ 15 ஆக்கியாச்சு!! :)

    மத்த ரெண்டும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

    ReplyDelete
  50. 2.மிக மிக எளிதானது ! தாவு வாங்கிவிட்டது, அரையைப் பாதியாக்காததால் விடை : பாதித்ததா

    இன்னமும் ஒரு அரை திணற வைக்கிறது

    யோசிப்பவர் உதவலாம்

    நாராயணன்

    ReplyDelete
  51. நாராயணன்

    பல்லிடுக்கில் மாட்டிய நார் மாதிரி நம்ம புதிர் உங்களை வேற எதுவும் செய்ய விட மாட்டேங்குதா? :)

    இப்போ 2 சரி. ஆனா 6தான் காலைப் பிடிச்சு இழுக்குது போல! :)

    ReplyDelete
  52. சரியாகதான் சொன்னீர்கள், நாரை எடுத்துவிட்டீர்கள், காலை வாராமலேயே.உறங்க செல்ல இருந்தேன், பல்லும் கிளியராயிடுத்து

    6, தில்லை வாரும்.

    நாராயணன்

    ReplyDelete
  53. 13. சகடம்
    2. பாதித்ததா
    4. பெருமாள்

    இந்த முறை என்னவோ இரண்டாவது முயற்சியிலும் வார்த்தைகள் பிடிபடவில்லை..மீண்டும் வருகிறேன் விடை கிடைத்தால்..

    ReplyDelete
  54. இந்த முறை கொஞ்சம் கஷ்டம்தான்.

    இ-வ

    5) மடி
    6) தில்லை வாரும்
    7)விதைத்த
    8) பெண்ணே
    9) தாரமா
    13) சகடம்
    16) விவேகமற்ற
    17) ரவி

    மே-கீ

    1) அடி உதை
    2) பாதித்ததா
    3) சிலையா
    4) திருமன்
    10) மாசற்றது
    12) முனைவேல்
    14) டமாரம்

    ReplyDelete
  55. பாசமலர்

    13, 2 ஓக்கே

    4 சரி இல்லை!

    ReplyDelete
  56. மகேஷ்

    கஷ்டமா இருக்கா? நிறையா பேரைப் பாருங்க. ரொம்ப ஈசி ரொம்ப ஈசின்னு சொல்லறாங்க.

    5 6 7 9 13 16 17
    1 2 3 4(எழுத்துப்பிழை இருக்கு) 10 12 14

    இவை சரி

    ReplyDelete
  57. நாராயணன்

    நீங்க நிம்மதியாத் தூங்கணும்ன்னுதான் ஒரு க்ளூ குடுத்தேன். சரியாப் பிடிச்சுட்டீங்க. வாழ்த்துகள்! :))

    ReplyDelete
  58. இப்பொ எழுத்துப்பிழை சரி செய்தாச்சு. அதோட இன்னும் ஒரு விடையும் கிடைச்சுது.

    இ-வ

    8) பெண்ணை

    மே-கி
    4) திருமண்

    ReplyDelete
  59. //3 11 விடையைத் தலைகீழா எழுதி இருக்கீங்க! :)//

    அப்படிங்கறீங்க?

    சரி.. மாத்திருவோம்..

    3. க மு தி

    11. சி லை யா

    ReplyDelete
  60. //3 11 விடையைத் தலைகீழா எழுதி இருக்கீங்க! :)//

    அப்படிங்கறீங்க?

    சரி.. மாத்திருவோம்..

    11. க மு தி

    3. சி லை யா

    pona commentla no. maariduchu :(

    ReplyDelete
  61. இடமிருந்து வலம்
    -----------------
    5. மடி
    6. தில்லை வாரும்
    7. விதைத்த
    8. பெண்ணை
    9. தாரமா
    11. கமுதி ?
    13. சகடம்
    16. விவேகமற்ற
    17. ரவி

    மேலிருந்து கீழ்
    ---------------
    1. அடிஉதை
    2. பாதித்ததா
    3. சிலையா
    4. திருமண்
    10. மாசற்றது
    12. முனைவேல்
    14. டமாரம்
    15. சமம்

    ReplyDelete
  62. ஜி3

    முதலில் விடையை தலைகீழா மாத்தினீங்க.

    அப்புறம் குறிப்பின் எண்களை மாத்துனீங்க.

    ஆனா இப்போ 3 11 இரண்டுமே சரி. இந்த விடைகளுடன் அனைத்தையுமே போட்டுவிட்டீர்கள் போல. வாழ்த்துகள்!

    ReplyDelete
  63. பூங்கோதை

    15 தவிர மத்த விடைகள் அனைத்துமே சரி!! ஜூப்பரு!

    ReplyDelete
  64. வெண்பா வாத்தி

    சும்மா சின்னப்பையன் மாதிரி சண்டைக்கு வராதீரும்.

    6 கொஞ்சம் தட்டிப் போடும்.
    3 தலைகீழ்

    மற்றவை எல்லாம் சரி. மி தி பர்ஷ்ட்டூ எனச் சண்டை எல்லாம் போடக்கூடாது.

    ReplyDelete
  65. 1. அடிஉதை
    2. பாதித்ததா
    3. சிலையா
    4. திருமண்
    10. மாசற்றது
    12. முனைவேல்
    14. டமாரம்
    15. சமன்

    5. மடி
    6. தில்லை வரும்
    7. விதைத்த
    8. பெண்ணை
    9. தாரமா
    11. _மு_ :(
    13. சகடம்
    16. விவேகமற்ற
    17. ரவி

    ReplyDelete
  66. 11. கமுதி (திரும்பினால் திமுக சரியா?)

    இது தான் 1 மணி நேரமா தலை வலியை கொடுத்தது..

    ReplyDelete
  67. ஏஸ், அது என்னய்யா எல்லாரும் இடமிருந்து வலம் தொடங்கினா நீ மட்டும் மேலிருந்து கீழ் அப்படின்னு ஆரம்பிக்கற? :))

    6 இரண்டாம் பகுதியில் ஒரு காலைக் காணும். மத்தபடி ரெண்டு அட்டெம்ப்டில் எல்லாத்தையும் போட்டுட்டீரு!!

    ReplyDelete
  68. முதல் அடெம்ப்ட்:

    இடமிருந்து வலம்
    5 மடி
    6 தில்லைவருக
    7 விதைதது
    8 பெண்ணை

    13 சகடம்
    16 விவேகமற்ற
    17 ரவி


    மேலிருந்து கீழ்
    1 அடி உதை
    2 பாதிச்சது

    4 திருமண்
    10 மாசற்றது
    12 முனைவேல்
    14 டமாரம்
    15 சமன்

    ReplyDelete
  69. 7 சும்மா எழுதிப்பாத்தது பின்னூட்டத்திலே போட்டுட்டேன் போல இருக்கு. நீங்க சொல்கிறதுக்கு முன்னாலே தப்புன்னு நானே சொல்லிடறேன். :-))

    ReplyDelete
  70. வாங்க திவா

    காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு ஒண்ணு தரலாமுன்னு இருந்தேன்.

    5 8 13 16 17
    1 4 10 12 14 15
    சரி

    6 முதல்பாதி ஓக்கே

    ReplyDelete
  71. திவா

    நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் நாங்க சொல்லுவோமில்ல! :)

    ReplyDelete
  72. கீதாம்மா,

    பாதிக்குப் பாதி தோணலை தெரியலை புரியலை. மீதிக்கு ஒரு தெசாரஸ்ஸே பதிலா இருக்கு!! நடுவில ஆற்காட்டாருக்கு ஆப்பு!! நல்லா இருங்கம்மா. :))

    5 7 12 17
    1 2 3 (நீங்க தப்புன்னு சொன்னது சரி!)

    இதெல்லாம் சரியான விடை. ஆனா நீங்க கொடுத்த மல்டிபிள் சாய்ஸில் எது சரியான விடைன்னு நான் சொல்ல போறது இல்லை! :))

    ReplyDelete
  73. 11. மேஆளு
    12. ஆல்வேல்
    15. சமன்
    16. வீவேகமற்ற

    இன்னும் 2 மார்க் மைனஸ்...8 & 4..

    11 ம் சரியான்னு தெரியல..

    ReplyDelete
  74. பாசமலர்

    15 சரி
    16 எழுத்துப்பிழை.

    மத்தது எல்லாம் ம்ஹூம்.

    ReplyDelete
  75. \\ஓய்வொழிச்சல் இல்லாத வேலை.//
    அதே அதே... அதனால் விடை தாமதமாயிடுச்சு.

    இடமிருந்து வலம்
    5 - மடி
    6 - தில்லை வாரும்
    7 - விதைத்த
    8 - பெண்ணை
    9 - தாரமா
    11 - திமுக
    13 - சகடம்
    16 - விவேகமற்ற
    17 - ரவி

    மேலிருந்து கீழ்
    1- அடிஉதை
    2 - பாதித்ததா
    3 - சிலையா
    4 - திருமண்
    10 - மாசற்றது
    12 - முனைவேல்
    14 - டமாரம்
    15 - சமனி

    -அரசு

    ReplyDelete
  76. //இரண்டாம் பகுதியில் ஒரு காலைக் காணும். மத்தபடி ரெண்டு அட்டெம்ப்டில் எல்லாத்தையும் போட்டுட்டீரு!!
    //

    உண்மைய சொல்லனும்னா இப்ப தான் எனக்கு இந்த புதிரோட அர்த்தம் புரிந்தது.. :) நானும் என்னடா தில்லை எங்க வரும்னு யோசிச்சேன்.. அப்புறம், கொத்ஸ் சொன்னா எங்க வேணா வரும்னு விட்டுட்டேன். :)

    தில்லை வாரும்.

    ReplyDelete
  77. அரசு

    வந்தாச்சா?

    வழக்கம் போல நல்ல முயற்சி.

    11 தலைகீழாப் போச்சு.

    15 ஒரு சிறிய பிழை. எழுத்துப் பிழையாகக் கூட இருக்கலாம்.

    மத்தது எல்லாம் சரி.

    ReplyDelete
  78. ஏஸ்

    இப்போ புரிஞ்சு போச்சு இல்ல அப்புறம் என்ன?! நாட்டில் ஓட்டுப் போடும் போது சும்மா குத்திட்டு அப்புறம் எனக்கு இப்போ புரியுது இந்த ஆளோட மேட்டர் இவனுக்குப் போயா ஓட்டுப் போட்டேன் எனச் சொல்வது போல் இருக்கு! :))

    ஆல் ஓக்கே!! :))

    ReplyDelete
  79. கீதாம்மா

    14 17 ஓக்கே.

    மத்தபடி மீண்டும் வருக! :)

    ReplyDelete
  80. 12. வடிவேல்
    16. விவேகமற்ற

    ReplyDelete
  81. ம்ம்ம் கொஞ்சம் ஹேஷ்யம்தான். வண்டி சரியா ஓடலை!

    மேகீ

    2பாதித்ததா
    3 சிலையா

    இ-வ

    6 தில்லை, ஆருர்
    7 விதைத்த
    9 தாரமா
    11 கமுதி

    ReplyDelete
  82. திவா

    வாங்க, என்ன ஆரம்பத்திலேயே ஹேஷ்ய வண்டியில் ஏறிட்டீங்க?

    2 3 7 9 11 மட்டுமே சரி.

    ReplyDelete
  83. நினைச்சபடி 6 ரொம்பவே தண்ணி காட்டுது. ஹும் நாளை fரெஷ்ஷா பாக்கலாம்.

    ReplyDelete
  84. திவா

    6 தண்ணி காட்டுச்சுன்னா மத்தது எல்லாம் போடலாமுல்ல. :))

    ReplyDelete
  85. ம்ம்ம்ம்ம்..
    கொஞ்சம் அதிகமா வேலை பாக்கறீங்க போல இருக்கு!
    6 தவிர மீதி எல்லாமே போட்டாச்சே!
    திருப்பியும் போடனுமா?
    :-)

    ReplyDelete
  86. திவா

    இருங்க. கொஞ்சம் கன்பியூஷன். நீங்க மூணு பின்னூட்டம் போட்டு இருக்கீங்க. நான் ரெண்டுதான் பார்த்து இருக்கேன்.

    ReplyDelete
  87. திவா

    விட்டுப் போன பின்னுட்டத்தில் இருந்து

    2 3 7 9 11 ஓக்கே

    இப்போ சரி. 6 மட்டும்தான் மீதி.

    மாப்பு பார் தி கன்பியூஷன்! :)

    ReplyDelete
  88. சுரேஷ், மத்த விடை எல்லாம் இ.கொ முதல்லேயே பாத்துட்டாரு! :-)))))))))
    நோ நீட் பார் மாப்பு!

    ReplyDelete
  89. திவா

    சுரேஷ் எங்க வந்தாரு. கன்பியூஷன், மாப்பு எல்லாமே நாந்தேன்!!

    ReplyDelete
  90. பாலகிருஷ்ணன் சார்,

    4 8 - இது ரெண்டும் சரி.

    ReplyDelete
  91. திவா

    பிரச்சனை என்னான்னு இப்போ புரிஞ்சு போச்சு. முதல் இரண்டு பின்னூட்டங்களுக்கு அந்த ஸ்ப்ரெட்ஷீட்டில் இரண்டு வரிகளில் தனித்தனியா மார்க் குடுத்துட்டேன். அதான் கன்பியூஷன்.

    இப்போ எல்லாம் சரி பண்ணியாச்சு.

    ReplyDelete
  92. அரசு

    மின்னரட்டையில் சொன்ன 11 ஓக்கே. இன்னும் ஒண்ணே ஒண்ணுதானே. போடுங்க.

    ReplyDelete
  93. அரசு

    இப்போ 15 சரிதான்!!

    எல்லாம் போட்டாச்சா? வாழ்த்துகள்!

    ReplyDelete
  94. ஓ, பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்கறதையும் அவுட்சோர்ஸ் பண்ணியாச்சோன்னு நினைச்சேன்!

    இப்ப கூட... சரி சரி போகட்டும். 6 இ-வ போடலாம்னா சுரேஷ் வந்து அரெஸ்ட் பண்ணி பதில் எப்படி தெரியும்ன்னு கேப்பாரோன்னு பயமா இருக்கு!
    ;-)))))))))))))

    ReplyDelete
  95. இ-வ 6 தில்லை வாரும்

    ReplyDelete
  96. //ஓ, பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்கறதையும் அவுட்சோர்ஸ் பண்ணியாச்சோன்னு நினைச்சேன்!//

    பண்ணினேன். ஆனா பார்ட்டி பர்பார்ம் பண்ணலை! :)

    //இப்ப கூட... சரி சரி போகட்டும். 6 இ-வ போடலாம்னா சுரேஷ் வந்து அரெஸ்ட் பண்ணி பதில் எப்படி தெரியும்ன்னு கேப்பாரோன்னு பயமா இருக்கு!
    ;-)))))))))))))//

    அதெல்லாம் பண்ண மாட்டாரு. ஆனா திட்டிப் பதிவு போடுவாரு.

    ReplyDelete
  97. இ.வ.

    5. மடி
    7.விதைத்து
    17.ரவி

    மே.கீ

    1.அடிஉதை
    12. முனைவேல்
    14. டமாரம்

    ReplyDelete
  98. இ.வ.

    6. முதல் பாதி தில்லைன்னு தெரியுது

    மே.கீ
    3. சிலையா - யாலைசி

    ReplyDelete
  99. வாங்க சின்ன அம்மிணி

    இப்போதான் நேரம் கிடைச்சுதா?

    5 17 1 12 14 சரி

    7 கிட்டத்தட்ட சரி. ஆனா சரியில்லை!

    6 முதல் பாதி சரிதான்.

    3 முதல் விடை சரி!

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!