Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?

இன்னிக்கு வெட்டி போட்ட இந்தப் பதிவைப் படித்தேன். நமக்குத்தான் இந்த விஷயத்தில் பல தகவல்கள் தெரியுமே, அதைப் பத்தி சொல்லாம இருக்கலாமா அப்படின்னு நம்ம மனசாட்சி குத்தவேதான் இந்தப் பதிவு. என்னதான் ஆணி புடிங்கும் வேலை அதிகமா இருந்தாலும் தமிழ் வலைபதிவர்களுக்கான சேவையை சரியாச் செய்யணும் இல்லையா. அதனாலதான் இப்படி. இது பத்தின facts and figures எல்லாம் குடுத்து உங்க எல்லார் அறிவுக் கண்களை திறந்து விட்டுடலாம் என்ற கருத்துக்கு மதிப்பளித்து இதோ இந்தப் பதிவு.

இந்த க்ரீமீ லேயர் பத்தி பேசறதுக்கு முன்னாடி க்ரீம் அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும் இல்லையா? அதனால முதலில் அது பத்திப் பேசலாம். பாலில் நிறைந்து இருக்கும் கொழுப்புசத்தானது பாலின் மேற்புறத்தில் வந்து சேர்கிறது. இப்படி திரண்டு வரும் கொழுப்பானதே க்ரீம் என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கத்தைப் படிக்கும்போதே உங்களுக்கு அந்த கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பு மனக்கண்ணில் தெரிகிறது அல்லவா.

இன்று அமெரிக்காவில் இந்த கொழுப்புச் சத்து நீக்கப்படாத பாலினை Whole Milk எனச் சொல்லுவார்கள். படிப்படியாக இந்த கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் வகைகளை முறையே 2%, 1% மற்றும் ஸ்கிம் (Skim) பால் என அழைப்பார்கள். இவற்றில் உள்ள கலோரி மற்றும் கொழுப்பு சத்துக்களின் அளவுகளைப் பார்க்கலாமா? 8 அவுன்ஸ் (சுமார் 225மிலி) பாலில் உள்ள அள்வுகள் இது
வகை -------- கலோரி---கொழுப்புச்சத்து
முழுப்பால்--- 155----------8.5 கிராம்
2% பால்-------120----------4.5 கிராம்
1% பால்-------100----------2.5 கிராம்
ஸ்கிம் பால்---80----------0.0 கிராம்
இது கிட்டத்தட்ட ஒரு கிளாஸ் அளவு பாலில்! இது ரொம்ப அதிகமாகத் தெரியவில்லை என்றாலும் ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் பாலாவது அருந்துகிறோம் என்று எடுத்துக் கொண்டு, ஒரு பவுண்டு (சுமார் அரைக்கிலோ) எடையேற 3500 கலோரிகளே தேவையானது என்பதை நினைவில் கொண்டோமானால், கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் அரைக்கிலோ எடைக்கு உண்டான கலோரிகளை அதிகமாக அருந்துகிறோம்.

அது மட்டுமில்லாமல் இதில் உள்ள கொழுப்பானது நம் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மூன்று கிளாஸ் பாலில் நமக்கு ஒரு நாளைக்கு வேண்டிய அளவு கொழுப்பு இருக்கிறதாம். நாம் சாப்பிடும் மற்ற உணவுகளில் இருக்கும் கொழுப்பை எங்க கொண்டு போய் வைப்பது? அது மட்டுமில்லாமல் இந்த கொழுப்பில் அதிக அளவு இருப்பது Saturated வகையைச் சேர்ந்த கொழுப்பாம். இதனால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், கான்ஸர் எல்லாம் வரும் வாய்ப்பு அதிகமாம்.

அதனால் இன்று மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சிறு குழந்தைகளைத் தவிர மற்றவர்கள் இப்படி கொழுப்பு நீக்கிய பாலை அருந்துவதே நல்லதாம். ஒரு படிமேலே சென்று சோயாப்பால், அரிசிப்பால் என அருந்தினால் இதைவிட நல்லதாம். இப்படி வகை வகையாய் பால் கிடைக்காத இடங்களில் பாலைக் காய்ச்சின பின் மேல் வரும் பாலாடையை , அதாங்க க்ரீமீ லேயரை, நீக்கிவிட்டு பின் பாலைக் குடித்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் சேராது.

ஆகவே இன்று கொழுந்து விட்டு எரியும் இந்த பிரச்சனைக்கு விஞ்ஞானரீதியான எனது தீர்ப்பு க்ரீமி லேயரை நீக்குவது நல்லதே!!

டிஸ்கி: வெட்டி, ரொம்ப சீரியஸா நீர் எழுதி இருக்கும் பதிவின் பெயரை எடுத்து இந்த பதிவை போட்டதுக்கு மன்னிக்கவும்.

40 comments:

  1. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா இந்த பதிவை விக்கி பசங்க பக்கத்தில் மீள் பதிவு செய்வேன். :))

    ReplyDelete
  2. நல்லா இருக்கு கொத்ஸ்,
    இனிமே ஸ்கிம் மில்கே சாப்பிடறேன்...

    விக்கிலயும் போடலாம்...

    ReplyDelete
  3. வெட்டி, ஸ்கிம் மில்க் ஆனாலும் தண்ணியா இருக்கு. நம்மால 2%க்கு கீழ வரமுடியலையே!!

    ReplyDelete
  4. கொத்ஸ்,

    நம்ம பாலாஜி எழுதுனக்கே நான் என்ன கருத்து சொல்லுறதுன்னு புரியாமே இருக்கிறப்போ உங்களுக்கு என்ன சொல்லாமின்னு யோசிச்சா இப்பிடியொரு கும்பி பதிவா??

    அந்த ஆறு அழகே ஆரம்பிச்சது நீங்க தானே ஆபிசர்...???

    ReplyDelete
  5. //ஸ்கிம் மில்க் ஆனாலும் தண்ணியா இருக்கு.///

    அதென்னங்க, தண்ணின்னா உங்களுக்கு அவ்வளவு இழப்பமா? சும்மா போடுங்க .. I mean ... சும்மா குடிங்க...நல்லது.

    ReplyDelete
  6. ஏத்தமய்யா ஏத்தம்
    உமக்கு ரொம்ப
    ஏத்தமய்யா ஏத்தம்

    ReplyDelete
  7. //
    இலவசக்கொத்தனார் said...
    வெட்டி, ஸ்கிம் மில்க் ஆனாலும் தண்ணியா இருக்கு. நம்மால 2%க்கு கீழ வரமுடியலையே!!
    //

    எங்க வுட்ல 1% தான். என்னிக்கிகாவது 2% இல்ல fullcream குடிச்சிடேன்னு வய்யு, அன்னிக்கு தங்கமணி என்ன ஓட விட்டுரும்ல (ட்ரெட்மில்ல தான்).

    ReplyDelete
  8. கொத்ஸ்,

    ஸ்கிம் மில்க் இங்கே 'க்ரீன் டாப்'னு பேர் வச்சுருக்கு. 'கொழுப்பை அடக்கலாமு'ன்னு ஒரு நாள்
    குடிச்சுப் பார்த்தேன்...............யக்! வாந்தி தான். கொஞ்ச நாள் பழகுனா ருசி பிடிச்சுரும்போல.
    அந்தக் கொஞ்சநாள் எப்ப?

    தோழியின் குழந்தை அதை பாட்டிலில் குடிக்குதப்பா. நான் மூஞ்சியை எங்கே வச்சுக்கறது?

    தருமிக்கு:

    இழப்பம்- இளப்பம்

    ReplyDelete
  9. கொத்ஸ் ஆனாலும் இது ரொம்ப ஓவரு. அம்முட்டு ஆணிக்கு நடுவுல மனுசன் என்னவோ சொல்லி இருக்காருன்னு பாத்தா நல்லா இருங்கடே.

    ReplyDelete
  10. இங்கே அந்தப் பிரச்சினை இல்லை!
    கிரீமையெல்லம் கடைந்தூ எடுத்துவிட்டு வேண்டிய அள்விற்கு தண்ணியை ஊற்றித்தான் தருகிறார்கள்

    பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது எப்படி என்று ஒரு பதிவு போடுங்கள் இ.கொ!

    ReplyDelete
  11. //நம்மால 2%க்கு கீழ வரமுடியலையே!! //

    இதானே குசும்பு என்கிறது. வாங்கயா விளிம்பு நிலைக்கு அப்ப தெரியும் நிலமை என்னான்னு. அது சரி Irish Cream குடிச்சா எத்தனைப் % லே குடிப்பீங்க?. இது என்னுடைய க்ரீம் சாமி. சூப்பரா இருக்கு

    ReplyDelete
  12. ஒரு பவுண்டு (சுமார் அரைக்கிலோ) எடையேற 3500 கலோரிகளே தேவையானது


    Its Wrong....


    2400 Calories = 1 Pound

    ReplyDelete
  13. அனானி,

    இந்த விக்கிபீடியா சுட்டியின் கடைசி வரியைப் பாருங்கள். இன்னும் பல தளங்களில் 3500 கலோரி என்றுதான் சொல்லி இருக்கிறது. நீங்களும் எதாவது சுட்டிகள் இருந்தால் குடுங்களேன்.

    (இதைச் சொல்லித்தான் கொஞ்சமாவது சாப்பிடறேன். நீங்க அதையும் கம்மி பண்ணுணதை தங்கமணி படிச்சாங்களோ. அப்புறம் நான் அவுட்!)

    ReplyDelete
  14. கொத்ஸ் க்ரீமி லேயரைத் தூக்கிடலாம்.
    2% தவிர இன்மே வேற ஒரு பாலும் இறங்காது.
    நாமென்ன 2 காப்பிக்கு எட்டு ஸ்பூன் எடுத்துக்கறோம்.

    துளசி, குழந்தை ஆரம்பித்திலிருந்தே பழகிடுச்சில்ல.
    அதனாலேதான் அதுக்கு பிடிச்சிருக்கு.
    அதுக்காக பாட்டிலுக்காப் போக முடியும்:-0)

    ReplyDelete
  15. நக்கலா நல்ல விஷயத்த சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

    //எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா //

    நல்லா இருக்கு!! :)

    //ஸ்கிம் பால்---80----------0.0 கிராம்//

    நம்ம உடம்புக்கு,கொழுப்பு சத்து தேவையே இல்லயா?? யு.எஸ்ல, இப்படி 0% கொழுப்புன்னு எல்லாத்துலயும் வருதே.. இப்படி எல்லாமே கொழுப்பில்லாம சாப்பிட்டா என்னவாகும்..??

    கொழுப்பு சத்துக்கும் காலரிக்கும் என்ன சம்பந்தம்?? கொழுப்பு சத்து குறைய குறைய, காலரியும் குறையுதே... இல்ல காலரி குறையறதனால கொழுப்பு சத்து குறையுதா?? இல்ல, பால்ல தண்ணி கலக்கறதனால, காலரி குறையுதா??

    ReplyDelete
  16. பாலைப் பற்றி ஆராய்ந்து வைத்திருப்பதைப் பார்த்தால், சீக்கிரம் மாட்டுப் பண்ணை வைப்பதைப் பற்றி எழுதுவீங்க போல. தம்பி வந்து வறாட்டி தட்டிடுப் போக, நீங்க பால் வத்தி விவரிக்க..... எனக்கென்னமோ ராமராஜன் ஸ்டைல்ல முண்டாசும், கால்சட்டையோட பால் கறக்க போவீங்க போலவே!
    :)

    ReplyDelete
  17. அழகான விளக்கம்.

    ReplyDelete
  18. தலைவரே.. வெட்டி மேல உங்களுக்கு ஏன் இந்தக் கொலவெறி.. பாஸ்டன் சந்திப்புல்ல புள்ள எதுனாச்சும் உங்களைக் கலாய்ச்சு விட்டுருச்சா.. மாஞ்சு மாஞ்சுப் பய போட்டப் பதிவுக்கு இப்படி பால் ஊத்திப் பொங்க விட்டுட்டீங்களே...

    ஆனாலும் அந்தக் கொழுப்பு மேட்டர் நல்ல பாயிண்ட்ங்கண்ணா:-)

    ReplyDelete
  19. ரொம்பா நாளா எல்லாரும் கிருமி லேயர், கிருமி லேயர்னு சொல்லுறாங்களே, அதென்ன கிருமின்னு தெரியாம திரிஞ்சிட்டிருந்தேன். இப்போதான் தெரியுது. விளக்கி சொன்னதுக்கு தாங்க்ஸ். அது சரி, இந்த க்ரீமுக்கு ஏன் அல்லாரும் அடிச்சிக்கிறாங்கன்னும் கொஞ்சம் விளக்கிடுங்க, உங்களுக்கு புண்ணீயமாப் போகும்.

    ReplyDelete
  20. நல்ல 'கொழுப்பெடுத்த' பதிவு :))

    ReplyDelete
  21. யாரும் க்ரீமி லேயரை எடுக்கக்கூடாது...

    நான் விடமாட்டேன்..

    ஏன்னா எல்லாமே எனக்குதான்.. மிச்சவங்கள்லாம் வெறும்ன பிரட் தின்னுங்க. கேக்ல இருக்குற க்ரீமிலேயர் பத்தி இந்த பின்னூட்டம்.

    ஏன்னாக்க பதிவுக்கு சம்பந்தமா பின்னூட்டம் போட்டா அறிவுஜீவின்னு யாரும் ஒத்துக்கமாட்டாங்க.

    ReplyDelete
  22. நல்லா இருக்கு.

    (விக்கி பசங்க பக்கத்தில் சேறுங்க) ;-)

    ReplyDelete
  23. இப்படி சைண்டிபிக்கா சொன்னா என்னை போன்றோருக்கெல்லாம் எப்படி புரியும்?

    :-P

    ReplyDelete
  24. //நம்ம மனசாட்சி குத்தவேதான் //

    உள்ள இருக்கற மனசாட்சி குத்துனா இப்படியா மொக்கை போடறது?

    நாங்கள்ளாம் hot dog சாப்பிட்டா diet coke குடிச்சு சரிக் கட்டிடுவோம்ல.

    //மிச்சவங்கள்லாம் வெறும்ன பிரட் தின்னுங்க.//

    நாங்கள்ளாம் வெறும் விரல்லயே வெண்ணெய் வரவக்கிறவய்ங்க... தெரியும்ல!!!

    ReplyDelete
  25. கிரீமி லேயர நீக்கியே ஆகனும். ஆனா குழந்தைக்களுக்குக் கிரீமி லேயர் இருக்கனும். வயசு கூடுனவங்களுக்கு மொகத்துல மட்டுந்தாம் கிரீமி லேயர் இருக்கலாம். சினிமா நடிகைன்னா கை கால் வயிறு என்று எல்லா இடங்களிலும் கிரீமி லேயர் இருக்கலாம். நடிகருக்கு மூஞ்சீல மட்டும் இருந்தாப் போதும். ஏன்னா அவரு முழுக்க மூடிக்கிட்டு வருவாரு. அப்படி வரலைன்னா...யாரும் பாக்க முடியாது.

    கிரீமி லேயரை வயது வந்தவர்களுக்கு நீக்க வேண்டும் என்ற உங்களது இந்த சொந்தப் பதிவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். நானும் கிரீமி லேயரில் இருந்து நீங்கி விட்டேன். :-)

    ReplyDelete
  26. முகத்திற்கு தலைக்கு உடலுக்கு..
    எல்லாம் க்ரீம் மயம் என்பதால்தான்
    ஓமுக்கு அடுத்து க்ரீமை வைத்தானோ?

    ஒரு ஆரம்பகாலப் புதுக்கவிதை!(எழுதியவர் பேர் மறந்துவிட்டேன்)

    இவ்வளவு பிரசித்தி பெற்ற க்ரீமைத் தூக்கச் சொல்வதன் மூலம் உங்களுக்கு உள்ளே தூங்கும் மிருகம் (அதாங்க, பூனைக்குட்டி) வெளியே வந்துவிட்டது.

    நான் வன்மையாகக் கண்டிக்கும் பதிவு. என் டாக்டரும் இதேதான் சொல்கிறார் (க்ரீமை விலக்கச் சொல்கிறார்) - அவரைக் கண்டிக்க முடியாததற்கும் சேர்த்து உமக்குக் கண்டனம்.

    ReplyDelete
  27. பால்,தயிர்,மோர்,நெய்யுன்னு வரைமுறையில்லாம சாப்பிட்டு முன்னாடியும்,பின்னாடியும் தள்ளிக்கிட்டு இருக்கறவங்க தான் கவலைப்படனும்.

    இளந்தாரிக பேசுற பேச்சா இது.

    ReplyDelete
  28. //(விக்கி பசங்க பக்கத்தில் சேறுங்க) ;-)//

    ஏங்க மை ஃப்ரெண்ட்,

    விக்கியில் எந்த பதிவு அவ்வளவு மோசமா இருக்கு? சேறுன்னு திட்டற அளவு? சொல்லுங்க எடுத்திடலாம். இல்ல மொத்தமாவே சேறா இருக்கா? அப்படி இருந்தா எதாவது சேற்றில் முளைத்த செந்தாமரை வருமான்னு விட்டுப் பார்க்கலாமா?

    ReplyDelete
  29. //நம்ம பாலாஜி எழுதுனக்கே நான் என்ன கருத்து சொல்லுறதுன்னு புரியாமே இருக்கிறப்போ உங்களுக்கு என்ன சொல்லாமின்னு யோசிச்சா இப்பிடியொரு கும்பி பதிவா??//

    ராயலு அதுக்குப் பதில் சொல்லத் தெரிஞ்சா இது எதுக்கு? அது புரியலை அதான் இப்படி. ஹிஹி.

    ReplyDelete
  30. //அதென்னங்க, தண்ணின்னா உங்களுக்கு அவ்வளவு இழப்பமா? சும்மா போடுங்க .. I mean ... சும்மா குடிங்க...நல்லது.//

    பேராசிரியர் தருமி அவர்களே, தங்கள் அறிவுறுத்தலின் படி நடந்து இனி எப்பொழுது தண்ணி போட்டுக் கொண்டே மிதப்பேன். ச்சீ குடித்துக்கொண்டிருப்பேன் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  31. //ஏத்தமய்யா ஏத்தம்
    உமக்கு ரொம்ப
    ஏத்தமய்யா ஏத்தம்//

    தம்பி, எங்க இருந்து ஐயா இப்படி எல்லாம் பாட்டைப் பிடிக்கறீங்க? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மலையாளத்தில் நாம் நேந்திரம்பழம் என்பதற்கு ஏத்தம்பழம் எனச் சொல்லுவார்கள்.

    ReplyDelete
  32. //எங்க வுட்ல 1% தான். என்னிக்கிகாவது 2% இல்ல fullcream குடிச்சிடேன்னு வய்யு, அன்னிக்கு தங்கமணி என்ன ஓட விட்டுரும்ல (ட்ரெட்மில்ல தான்).//

    ஓடுங்க ஓடுங்க. எனக்கும் சேர்த்து நல்லா ஓடுங்க. :))

    ReplyDelete
  33. //கொஞ்ச நாள் பழகுனா ருசி பிடிச்சுரும்போல.
    அந்தக் கொஞ்சநாள் எப்ப?//

    அதேதான் டீச்சர் நமக்கும் பிரச்சனை.

    ReplyDelete
  34. //கொத்ஸ் ஆனாலும் இது ரொம்ப ஓவரு. அம்முட்டு ஆணிக்கு நடுவுல மனுசன் என்னவோ சொல்லி இருக்காருன்னு பாத்தா நல்லா இருங்கடே.//

    நல்ல விஷயம் சொன்ன என்னது இது சிறுபிள்ளைத்தனமா ஓவரு அண்டருன்னுக்கிட்டு. இனிமேல் whole milk குடிக்கமாட்டீர்தானே.

    ReplyDelete
  35. //பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது எப்படி என்று ஒரு பதிவு போடுங்கள் இ.கொ!//

    நான் என்ன அன்னப்பறவையா? அன்னம் , பறவை எனத் தனித்தனியாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்த ஆசாமி வாத்தியாரே.

    ReplyDelete
  36. //இதானே குசும்பு என்கிறது. வாங்கயா விளிம்பு நிலைக்கு அப்ப தெரியும் நிலமை என்னான்னு. அது சரி Irish Cream குடிச்சா எத்தனைப் % லே குடிப்பீங்க?. இது என்னுடைய க்ரீம் சாமி. சூப்பரா இருக்கு//

    வேண்டாத க்ரீம் எல்லாம் குடிச்சா இப்படி இல்லாத குசும்பு எல்லாம்தான் கண்ணுக்குத் தெரியும். :))

    ReplyDelete
  37. ஏஸ்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    //நம்ம உடம்புக்கு,கொழுப்பு சத்து தேவையே இல்லயா?? யு.எஸ்ல, இப்படி 0% கொழுப்புன்னு எல்லாத்துலயும் வருதே.. இப்படி எல்லாமே கொழுப்பில்லாம சாப்பிட்டா என்னவாகும்..??//

    இல்லை பொதுவா இங்க சாப்பிடும் சமாச்சாரங்களில் மிக அதிகமான கொழுப்பு சத்து இருக்கு. அதிலும் முக்கியமாக இறைச்சியில். அத்தனை கொழுப்பும் உள்ள போவதினால் உடற்பருமன் ஒரு வியாதியாகவே உருவெடுத்து விட்டது. அதனோட மற்ற வியாதிகளும். அதனைத் தடுக்க எங்கெல்லாம் கொழுப்பை குறைக்க முடியுமோ செய்கிறார்கள்.


    //கொழுப்பு சத்துக்கும் காலரிக்கும் என்ன சம்பந்தம்?? கொழுப்பு சத்து குறைய குறைய, காலரியும் குறையுதே... இல்ல காலரி குறையறதனால கொழுப்பு சத்து குறையுதா?? இல்ல, பால்ல தண்ணி கலக்கறதனால, காலரி குறையுதா??//

    நல்ல கேள்வி, இதை விக்கி பசங்களுக்கு ரிசர்வ் பண்ணிக்கறேன்.

    ReplyDelete
  38. நாங்க சோயாமில்க்கோடு தான் வாழுறம்...தகவலுக்கு நன்றி

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!