Wednesday, April 18, 2007

நான் ஏன் வைக்கணும் ஆப்பு?!!

வ.வா.சங்கம் ஆரம்பிச்சு வருசம் ஒண்ணாச்சாம். அதுக்காக ஆண்டு விழாவாம், ஆர்ப்பாட்டமாம் என்னென்னவோ செய்யுதாங்க அந்தப் பசங்க. அதுக்கு நடுவில அவங்குள ஆப்புரேசல் செய்யணுமாம். அதுவும் நாமதேன் செய்யணுமாம். இது எப்படி இருக்குன்னு பாத்தியாலே. நம்மூருல ஒரு வசனம் சொல்லுவாக - திருடன் கையில சாவியக் குடு. அப்பத்தேன் திருடாம இருப்பேம்முன்னு. அந்த மாதிரி இவுக ஆப்புரேசலுக்கு நம்மள கூப்புடுதாக. பின்ன என்னங்கேன். இவுக சங்கத்துல இல்லையே தவுர, இவுக சங்கம் ஆரம்பிச்ச அன்னையிலேர்ந்து இவனுங்க கூடவேத்தானேல நாமளுஞ் சுத்திக்கிட்டுக் கிடக்கோம். அப்படி சப்போர்ட் செய்யுத கூட்டாளி நம்மள போயி இந்த ஆப்புரேசலுக்குக் கூப்பிட்டா எப்படி? என்ன சப்போட்டுன்னால கேக்க, இப்படி ஒரு கூமுட்டைத்தனமா கேள்வி கேட்டா நான் என்னத்தச் சொல்ல?

அவங்க மொதப் பதிவுல ஆரம்பிச்சுப் பின்னூட்டம் போட்டு நல்லாயிருங்கடேன்னு சொன்னதச் சொல்லவா? இல்லை அவங்க நல்லது செய்யும் போதும் சரி, எங்கயாவது சார்ட் கட் அடிக்கும் போதும் சரி, அங்ஙன போயி அதச் சொல்லி அவங்களுக்கு நம்ம பாசத்தைக் காமிச்சதைச் சொல்லவா? இல்ல அவங்க தல ஆப்பு வாங்கும் போது சுத்தி நின்னு வேடிக்கை பார்த்ததத்தேன் சொல்லவா? இதெல்லாம் விடுங்கடே, நம்ம வலையுலகின் சுட்டிச் சுனாமியாய் வளய வரும் பாபா இருக்காருல்லடே, அவரே சொல்லி இருக்காரு , நாமதேன் சங்கத்தின் புகழை திக்கெட்டும் பரப்புரவங்களில் ஒருத்தர் அப்படீன்னு. இதுக்கு மேல என்னடே வேணும் புரூப்பூ?

இருந்தாலும் இதெல்லாம் நம்ம பசங்களுக்கும் தெரியாம இல்லை. எந்த விளையாட்டானாலும் சரி, நம்மளையும் வயசு வித்தியாசம் சேத்துக்கிடுதாங்கல்லா. இப்படித்தான் பாருங்க, அன்னைக்கு நம்மாள் ஒருத்தர் வந்து சேட் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அப்பம் நம்ம வயசக் கேட்டாரு. நாமளும் வெள்ளந்தியா நம்ம வயசச் சொன்னா நம்ப மாட்டேங்குதாரு. நீங்க எழுதறத பாத்தா அப்படித் தெரியலையேங்காரு. அது உண்மையாச் சொன்னாருன்னு வெச்சிக்கிட்டா அதுக்குக் காரணம் இந்த மாதிரி பசங்களோட சேர்ந்து சிரிச்சு வைக்கறதுனாலதானேடே. சிரிச்சா இளமையோட இருக்கலாமுன்னு சொல்லுவாங்க. அது சங்கத்துச் சிங்கங்களை பொறுத்த வரை சரிதானே. அவங்க எழுதுறதப் படிச்சா நம்ம இளமையா இருக்கோமில்ல. இந்த மாதிரி சிரிக்க வைக்கற பசங்களைப் போயி நாம என்னத்த ஆப்புரேசல் பண்ண?

அது மட்டுமில்லை. அவனுங்க எதாவது புதுசா செய்ய நினைச்சாங்கன்னு வெச்சுக்கோ அதை எல்லாம் டெஸ்ட் பண்ணறது நம்மளை வெச்சுத்தான். அது அவங்க ஆரம்பிச்சு வெச்ச அட்லஸ் திட்டமாகட்டும், இல்ல அனுப்பி வெச்ச கிரிக்கெட் டீமாகட்டும், அது எல்லாத்துலயும் நமக்கு இடம் உண்டு. அம்புட்டு ஏன் இந்த ஒரு வருஷக் கொண்டாட்டத்தில் அவங்க கொஞ்சம் சீரியசாக பாத்தாகளா? அதுக்கும் நாந்தேன் மாட்டிக்கிட்டேன். சும்மா கட் பேஸ்ட் பண்ணிட்டுப் போற நம்மளை டூத் பேஸ்ட் கணக்கா புழிஞ்சு எடுத்துட்டாங்கல்லா. இப்படி ஆசையாப் பாசமா இருக்குற பசங்களை, நம்மளை ஒண்ணுக்குள்ள ஒண்ணா வெச்சுப் பழகற பசங்களைப் போயி நாமாளே ஆப்புரேசல் செய்யலாமோ?

சரி, என்னதேன் தாயா மகளா இருந்தாலும் வாயும் வயிறும் வேறன்னு சொல்லுவாங்க இல்ல, அப்படி நமக்கும் இந்தப் பசங்களுக்கும் என்னதேன் ஒத்துப் போவாம இருக்கு அப்படின்னு பார்த்தா இந்த கட்சி மேட்டர்தான் இருக்கு. ஆனா அதையும் எங்க சின்ன மருத்துவர் ஐயா சும்மா இப்படி பிச்சி பிச்சு வெச்சுட்டாரு. அது மட்டுமில்லாம நம்மூரில மருத்துவர் கட்சியில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் வந்து பொறுப்பு வகிக்கிறாப்புல நம்ம தம்பி தேவு வேற நம்ம ரசிகர் மன்ற செயல் தலைவரா இருந்து அரும் பணி ஆத்திக்கிட்டு இருக்காரு. அவரு அப்படி அரும்பணி ஆத்த மீதி சங்கச் சிங்கம், புலி, எருமைன்னு எல்லாம் துணைக்கு நிக்கறாய்ங்க. இவங்களைப் போயி நாம என்னத்த ஆப்புரேசரது போங்க.

சரிய்யா. அதெல்லாத்தையும் விடுங்க, இங்க பாருங்க.


இந்த மாதிரி மொகத்தை வெச்சுக்கிட்டு இருக்குற ஒரு நல்லவரு தலமை தாங்குற சங்கமப்பா இது. அதுல இருக்குற பசங்களைப் போயா நாம ஆப்புரேசறது? ச்சீ. அதெல்லாம் சரி கிடையாதுப்பா.

அப்படியே ஆப்புரேசனமுன்னாலும் நாமதேன் முன்னமே இவங்களை ஆப்பிரேசியாச்சே. ஆப்புரேசலில் போன ஆப்புரேசலை எடுத்து அப்படியே தேதி மாத்தறதும் கூட ஒரு வகைதானேடே. அந்த மாதிரி அதையே இங்க எடுத்துப் போடறேன்.

முதலில் சங்க தல கைப்பூ , அவருக்குப் பின்னாடி வரிசையா மத்த சங்க சிங்கங்கள் மற்றும் புலி.

சங்கத் தலையவன் சிங்காரச் சென்னையில்
வங்கக் கடலோரம் வாழ்பவன் - எங்களின்
நல்லதொரு நண்பனாம் நம்மவன் கைப்புக்கு
எல்லோரும் தந்தாரே ஆப்பு

தேவாதி தேவன் சிரிப்புக் கதிபனவன்
கேவாத தலைக்குக் கரம்

ஜொள்ளு வடித்திடும் பாண்டியவன் வந்து
அள்ளும் கடலை பார்

கலாய்த்தலே தந்தொழிலாய் கொண்ட நம்மவர்
இளாவின் வறுத்தலே பார்

புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
புலியார்க்கு வெள்ளை மனசு!

அபிவரும் கோலங்கள் பார்த்தால் அழுகை
சிபியால் வருமே சிரிப்பு

கட்டாயம் கொல்டி கதைதான் நிஜமில்லை
வெட்டிதினம் சொல்லும் கதை

மேயலே வேலை சிறுவன் இவனுக்கு
ராயலெனும் பேரே சிறப்பு
சரி, நம்மளாலதான் ஆப்படிக்க முடியலை, யாரத்தேன் கூப்பிடலாமுன்னு பார்த்தா, இன்னைக்கு நாட்டுல நடக்குற கூத்து எல்லாத்தையும் அவரு பாணியில ஆப்படிக்கிற ஆப்பின் சிகரம் அண்ணன் இட்லிவடையார்தான் ஞாபகத்துக்கு வந்தாரு. அண்ணனையே அடுத்து ஆப்பு அடிக்குமாறு வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

55 comments:

  1. யப்பா, எழுத வரலைன்னு சொல்லறதை எம்மாம் பெரிசா எழுதிட்டோம். :))

    ReplyDelete
  2. //புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
    புலியார்க்கு வெள்ளை மனசு! //

    :-)))))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. //அவரு அப்படி அரும்பணி ஆத்த மீதி சங்கச் சிங்கம், புலி, எருமைன்னு எல்லாம் துணைக்கு நிக்கறாய்ங்க. இவங்களைப் போயி நாம என்னத்த ஆப்புரேசரது போங்க. //

    எங்கேடா ஆப்பைக் காணுமே அம்புட்டும் பாராட்டா இருக்கேன்னு நினைச்சேன்...

    தலயோட சின்னஞ்சிறு வயசுப் பட்டப் பேரை எல்லாம் எப்படியோ கண்டுபிடிச்சு இங்கேச் சொல்லி அவ்ருக்கு ஆப்படிச்ச கொத்தனார் வாழ்க.. :)))

    ReplyDelete
  4. //நாட்டுல நடக்குற கூத்து எல்லாத்தையும் அவரு பாணியில ஆப்படிக்கிற ஆப்பின் சிகரம் அண்ணன் இட்லிவடையார்தான் ஞாபகத்துக்கு வந்தாரு//

    நல்ல தேர்வு....

    ReplyDelete
  5. //அபிவரும் கோலங்கள் பார்த்தால் அழுகை
    சிபியால் வருமே சிரிப்பு
    கட்டாயம் //

    இது அல்டிமேட்....

    கொத்துஸ்... இது கவுஜு... இல்ல உடைச்சு உடைச்சு எழுதி இருக்கீங்களே... அதான் கேட்டேன்.

    ReplyDelete
  6. //அவரு அப்படி அரும்பணி ஆத்த மீதி சங்கச் சிங்கம், புலி, எருமைன்னு எல்லாம் துணைக்கு நிக்கறாய்ங்க//

    இதுல எருமை யாரு... குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கீன்றீரே....

    ReplyDelete
  7. //நாமளும் வெள்ளந்தியா நம்ம வயசச் சொன்னா நம்ப
    மாட்டேங்குதாரு. நீங்க எழுதறத பாத்தா அப்படித்
    தெரியலையேங்காரு.//

    பெரியமனுசனாச்சேன்னு 'ஆப்பு' வைக்கக் கூப்பிட்டா என்னடே இம்புட்டு
    ஆரவாரப் பதிவு. நல்லா இல்லெடே :-)))))

    ReplyDelete
  8. அப்புரைசல் நல்லாத்தான் இருக்கு. கைப்புள்ள இங்கயாவது attendance கொடுக்க வருவாரா? கேப்பை கஞ்சி குடிச்சதிலர்ந்து தல எங்கலயும் தலய காட்டறதே இல்லன்னு பேசிக்கிறாங்க... உண்மையா?

    ReplyDelete
  9. // நாகை சிவா said...
    //புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
    புலியார்க்கு வெள்ளை மனசு! //

    :-)))))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

    புலி நீனு இதுக்காக அவ்வுன்னு அழுதா நானும் //அபிவரும் கோலங்கள்//இந்த வரிக்காக அவ்வ்வ்வ்வ்வ்வ்

    நாங்களும் ரவுடிதானே, :-))))










    //அபிவரும் கோலங்கள் //

    ReplyDelete
  10. //இதுல எருமை யாரு... குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கீன்றீரே.... //

    நோ குழப்பம், அதுக்கு நாளை நடக்கும் பர்த்டே பார்ட்டில முடிவு கட்டிடலாம் சரியா:-)))

    ReplyDelete
  11. //கட்டாயம் கொல்டி கதைதான் நிஜமில்லை//
    கட்டாயம் கொல்டி'ன்னே போட்டு இருக்கலாமே. உண்மை சொன்னாமாதிரி இருக்கும்.

    எங்களுக்கெல்லாத்துக்கும் ஒரே பதிவுல wholesale ஆப்பு வைத்த சோடா செம்மல், பின்னூட்ட புயல் கொத்ஸ்க்கு நன்றிங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
  12. இதொரு கும்பி பதிவா எனத் தெரிந்து கொல்ல :) பிரியப்படுகிறேன் :)

    ReplyDelete
  13. ஒருத்தர் விடாம இப்படி எல்லாரையும் ஒட்டுமொத்தமா மீன்பாடிவண்டியில ஏத்திட்டீங்களே, கொத்ஸ்!

    ஆப்போ ஆப்பு.... சூப்பராப்பு!
    :)

    ReplyDelete
  14. கொத்ஸ்,
    ஆப்புரைஸல் நல்லா பண்ணிருக்கீங்க...

    //புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
    புலியார்க்கு வெள்ளை மனசு! //
    இதுக்கு எவ்வளவு செலவாகும் ;)

    ReplyDelete
  15. //ILA(a)இளா said...

    //கட்டாயம் கொல்டி கதைதான் நிஜமில்லை//
    கட்டாயம் கொல்டி'ன்னே போட்டு இருக்கலாமே. உண்மை சொன்னாமாதிரி இருக்கும். //

    யூ டூ விவ்???

    ReplyDelete
  16. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    புலி, புலி அளுவாதே. கலங்காதே ராசா, காலம் வரட்டும். உன்னையும் நான் கலாய்க்கும் நேரம் கிடைக்கும். :))

    ReplyDelete
  17. ////புலிப்பால் நிறமே தெரியா தெனக்கு
    புலியார்க்கு வெள்ளை மனசு! //
    இதுக்கு எவ்வளவு செலவாகும் ;) //

    இது பாசத்தின் வெளிப்பாடு... உனக்கு ஏன் இந்த குறுகிய மனப்பான்மை. பெருமைப்படு என்னை கண்டு பெருமைப்படு....

    ReplyDelete
  18. //பெரியமனுசனாச்சேன்னு 'ஆப்பு' வைக்கக் கூப்பிட்டா என்னடே இம்புட்டு
    ஆரவாரப் பதிவு. நல்லா இல்லெடே :-))))) //

    நல்லா கேளுங்க டீச்சர். ஒரு பெரிய மனுசன் என்ற நினைப்பே இல்லாமல் என்ன ஒரு சுய விளம்பரம் பாருங்க...

    ReplyDelete
  19. //புலி நீனு இதுக்காக அவ்வுன்னு அழுதா நானும் //அபிவரும் கோலங்கள்//இந்த வரிக்காக அவ்வ்வ்வ்வ்வ்வ்

    நாங்களும் ரவுடிதானே, :-)))) //

    நீங்களும் ரவுடி தான். ஆனா முதலில் உள்ளது பாராட்டு, அடுத்து உள்ளது என்னனு நான் சொன்னா உங்க மனசு கஷ்டப்படும் வேண்டாம்.....

    ReplyDelete
  20. ////கட்டாயம் கொல்டி கதைதான் நிஜமில்லை//
    கட்டாயம் கொல்டி'ன்னே போட்டு இருக்கலாமே. உண்மை சொன்னாமாதிரி இருக்கும். //

    யூ டூ விவ்??? //

    ஏன் பீல் பண்ணுற மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணுற .... நல்லாவா இருக்கு....

    அவரு என்ன அப்படி எல்லாம் இல்லானா வந்து சொல்ல போறார். அதான் சொல்ல வேண்டியது சொல்லிட்டாரே!

    ReplyDelete
  21. ஆப்பு ரொம்ப ஜோருங்க!

    என்ன மாதிரி புது மக்களுக்கு ஒவ்வொருத்தரையா அறிமுகம் கொடுத்துட்டீங்க! ;-))))

    ReplyDelete
  22. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.
    கீழ உள்ள வரியைப் பார்த்தா மேலும் மேலும் சிரிப்பு வருது.

    //அபிவரும் கோலங்கள் பார்த்தால் அழுகை
    சிபியால் வருமே சிரிப்பு //

    ReplyDelete
  23. சொன்னவுடனேயே ஆப்புரேசல் செஞ்சதுக்கு நன்னி!

    ReplyDelete
  24. சங்கத்திற்கு ஆப்பு வைக்க இத்தனை அவசரமா என்ற சந்தேகம் துளிர்க்கும் அதே நேரத்தில்

    ReplyDelete
  25. வெண்பாவெல்லாம் சிரமப்பட்டு எழுதிருப்பதால்...

    ReplyDelete
  26. என் பதிவுல செஞ்ச வில்லத்தனம் எல்லாம் இல்லாம நல்லத்தனமாத்தான் எழுதிருப்பீருன்னு நம்பி

    ReplyDelete
  27. நன்றி கூறி அமர்கிறேன்.. நன்னி..

    நல்ல பதிவு.

    ReplyDelete
  28. //இவுக சங்கத்துல இல்லையே தவுர, இவுக சங்கம் ஆரம்பிச்ச அன்னையிலேர்ந்து இவனுங்க கூடவேத்தானேல நாமளுஞ் சுத்திக்கிட்டுக் கிடக்கோம். //

    இது தெரிஞ்சுதான்யா தல உம்மள ரகசியமா கண்காணிக்கச் சொன்னாரு.. இப்ப நீரே ஆர்வத்துல மறந்துபோய் சபையில ஒத்துகிட்டீரு...

    ReplyDelete
  29. //நாமதேன் சங்கத்தின் புகழை திக்கெட்டும் பரப்புரவங்களில் ஒருத்தர் அப்படீன்னு.//

    மேற்கூறிய கமெண்டுக்கு அடிஷனல் quote இது...

    ReplyDelete
  30. //ஆத்த மீதி சங்கச் சிங்கம், புலி, எருமைன்னு எல்லாம் துணைக்கு நிக்கறாய்ங்க.//

    ஒவ்வொண்ணும் யாருன்னு விளக்கமாச் சொல்றது.. சொல்வதற்கு கொத்தனாருக்கு தைரியம் இருக்கிறதா என்று நான் கேட்கிறேன். ரோசமுள்ள சங்கத்துச் சிங்கங்களின் சார்பில் கேட்கிறேன்.

    நெஞ்சில் தில்லிருந்தால், உண்மையிலேயே மஞ்சா சோறு தின்பவரென்றால்...இதில் யார் யார் என்ன விலங்கு ஒரு match the following போடவும்...

    ReplyDelete
  31. //:-)))))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ//

    புலி, உணர்ச்சி வசப்படாதே. This too will pass!!

    ReplyDelete
  32. //தலயோட சின்னஞ்சிறு வயசுப் பட்டப் பேரை எல்லாம் எப்படியோ கண்டுபிடிச்சு இங்கேச் சொல்லி அவ்ருக்கு ஆப்படிச்ச கொத்தனார் வாழ்க.. :)))//

    ஆஹா, தம்பி தேவு, எங்க உம் பேரைச் சொல்லிடப் போறாங்களோன்னு அவசர அவசரமா வந்து அப்ஸ்காண்ட் ஆன தல பேர சொன்ன பாரு, நீதாண்டா உண்மையிலேயே அப்ரஸண்டி!!

    ReplyDelete
  33. //நல்ல தேர்வு....//

    அவரு ஆப்பு அடிச்சுக்கிட்டே இருக்கணும். நான் பார்த்துக்கிட்டே இருக்கணும்.

    ReplyDelete
  34. //இது அல்டிமேட்....//

    மேட் அப்படின்னா நண்பா, மச்சி அப்படின்னு பக்கத்து வீட்டு பாலகன் சொல்லி குடுத்து இருக்கான். அல்டின்னா என்ன புலி?

    //கொத்துஸ்... இது கவுஜு... இல்ல உடைச்சு உடைச்சு எழுதி இருக்கீங்களே... அதான் கேட்டேன்.//

    யோவ் அது வெண்பா. அதைக் கவுஜ அப்படின்னு சொல்லி அவமானப்படுத்தாதே! அப்புறம் நான் பொல்லாதவனா ஆயிடுவேன்.

    ReplyDelete
  35. //இதுல எருமை யாரு... குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கீன்றீரே....//

    இப்படி வெள்ளந்தியா கேள்வி கேட்கிற பாரு. அதான் உனக்கு வெள்ளை மனசு. தேவு பாத்தியா எம்புட்டு வெவரமா இருக்காரு.

    ReplyDelete
  36. //பெரியமனுசனாச்சேன்னு 'ஆப்பு' வைக்கக் கூப்பிட்டா என்னடே இம்புட்டு
    ஆரவாரப் பதிவு. நல்லா இல்லெடே :-)))))//

    பெரிய மனுசன்னு சொன்னா ஒரு ஆரவாரம் வேண்டாமா? அதான் டீச்சர், மத்தபடி கிளாசுக்கு உள்ள வந்த வழக்கம் போல(!) அமைதியா இருப்பேன் டீச்சர்!! :))

    ReplyDelete
  37. //அப்புரைசல் நல்லாத்தான் இருக்கு. கைப்புள்ள இங்கயாவது attendance கொடுக்க வருவாரா? கேப்பை கஞ்சி குடிச்சதிலர்ந்து தல எங்கலயும் தலய காட்டறதே இல்லன்னு பேசிக்கிறாங்க... உண்மையா?//

    ஓவர் டு சங்கம். ஏம்பா உங்க தல எப்போ ரிலீஸ் ஆவராரு?

    ReplyDelete
  38. //புலி நீனு இதுக்காக அவ்வுன்னு அழுதா நானும் //அபிவரும் கோலங்கள்//இந்த வரிக்காக அவ்வ்வ்வ்வ்வ்வ்

    நாங்களும் ரவுடிதானே, :-)))) //

    ஹலோ, அது சன் டீவி அபி. அதான் அழுதுக்கிட்டே இருக்கும். உம்ம அபி வந்தா மத்தவங்க இல்ல......

    அதனால நீர் அதுக்கெல்லாம் அழப்பிடாது. ஓக்கேவா?

    ReplyDelete
  39. //
    நோ குழப்பம், அதுக்கு நாளை நடக்கும் பர்த்டே பார்ட்டில முடிவு கட்டிடலாம் சரியா:-)))//

    முடிவாயிருச்சா? அப்படியே யாரு சிங்கம் யாரு புலி அப்படின்னு லிஸ்ட் போட்டு அனுப்புங்க. மேல ஒருத்தர் கேட்கறாரு பாருங்க.

    ReplyDelete
  40. //கட்டாயம் கொல்டி'ன்னே போட்டு இருக்கலாமே. உண்மை சொன்னாமாதிரி இருக்கும். //

    என்னய்யா சொல்ல வர விவ்ஸ்? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லப் பிடாதா? இல்லை நான் பாட்டுக்கு பின்நவீனத்துவமா எதாவது சொல்லப் போயி வம்பாயிடப் போகுது.

    ReplyDelete
  41. //இதொரு கும்பி பதிவா எனத் தெரிந்து கொல்ல :) பிரியப்படுகிறேன் :)//

    நம்ம பதிவில் எந்த பதிவு கும்பிப் பதிவு இல்லை என நினைத்து இந்த கேள்வியைக் கேட்ட ராயலைக் கேட்டுக் கொல்லப் ப்ரியா ப்படுகிறேன்.

    ReplyDelete
  42. //ஒருத்தர் விடாம இப்படி எல்லாரையும் ஒட்டுமொத்தமா மீன்பாடிவண்டியில ஏத்திட்டீங்களே, கொத்ஸ்!//

    சிங்கம் புலி எருமைன்னாலே டென்சனாவறாங்க. இங்க யாருக்கு மீன்பாடி? :))

    நன்றி வாத்தியாரே!

    ReplyDelete
  43. //இதுக்கு எவ்வளவு செலவாகும் ;)//

    இதெல்லாம் பப்ளிக்குலயா பேசறது? நேரா வா சொல்லறேன்.

    ReplyDelete
  44. //யூ டூ விவ்???//

    டூ ன்னா ரெண்டுன்னு பக்கத்து வீட்டு பாலகன் (இம்புட்டுப் பெரிசா எழுத முடியலை. இனிமே ப.வீ.பா) சொல்லி தந்திருக்கானே.

    அப்போ இளா ஒருத்தர் இல்லையா, ரெண்டு பேரா? அதான் கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் ஆன் லைன் வராரா?

    ஆமாம், உனக்கு எப்படித் தெரியும்? நீதான் பாஸ்டன் கழுகாரா?

    ReplyDelete
  45. //நல்லா கேளுங்க டீச்சர். ஒரு பெரிய மனுசன் என்ற நினைப்பே இல்லாமல் என்ன ஒரு சுய விளம்பரம் பாருங்க...//

    பெரிய மனுசன் என்ற நினைப்பு இல்லாததால்தான் இதோட நின்னுது. அந்த நினைப்பு மட்டும் வந்தது மவனே, நீங்க எல்லாம் என்ன ஆவீங்கன்னு யோசிச்சிப் பார்த்தீங்களா?

    ReplyDelete
  46. //என்ன மாதிரி புது மக்களுக்கு ஒவ்வொருத்தரையா அறிமுகம் கொடுத்துட்டீங்க! ;-))))//

    என்னது நான் எழுதறது புரியுதா? முதலில் நல்ல டாக்டரா பார்த்து செக் பண்ணிக்குங்க.

    ReplyDelete
  47. //சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.
    கீழ உள்ள வரியைப் பார்த்தா மேலும் மேலும் சிரிப்பு வருது. //

    சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன். :))

    ReplyDelete
  48. //சொன்னவுடனேயே ஆப்புரேசல் செஞ்சதுக்கு நன்னி!//

    செய்யச் சொல்லி சொன்னதுக்கு நன்றி. :)

    ReplyDelete
  49. //சங்கத்திற்கு ஆப்பு வைக்க இத்தனை அவசரமா என்ற சந்தேகம் துளிர்க்கும் அதே நேரத்தில்//

    அதாவதுங்க எத்தனை நாள்தான் ஒரே ஒரு மனுசனுக்கு ஆப்பு வைக்கிறது. அதான் மொத்தமா வைக்கச் சான்ஸு கிடைச்சுதா. அதான் இப்படி. ஹிஹி..

    ReplyDelete
  50. ///வெண்பாவெல்லாம் சிரமப்பட்டு எழுதிருப்பதால்...//

    சிரமமெல்லாம் முன்னாடியே பட்டது. இதெல்லாம் மீள்பதிவு. ஹிஹி...

    ReplyDelete
  51. //என் பதிவுல செஞ்ச வில்லத்தனம் எல்லாம் இல்லாம நல்லத்தனமாத்தான் எழுதிருப்பீருன்னு நம்பி//

    நம்பினோர் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு....

    நம்பறது நம்பாதது எல்லாம் உங்க இஷ்டம்.

    ReplyDelete
  52. //நன்றி கூறி அமர்கிறேன்.. நன்னி..

    நல்ல பதிவு.//

    நன்றி நன்றி.

    ReplyDelete
  53. //இது தெரிஞ்சுதான்யா தல உம்மள ரகசியமா கண்காணிக்கச் சொன்னாரு.. இப்ப நீரே ஆர்வத்துல மறந்துபோய் சபையில ஒத்துகிட்டீரு...//

    அடடா, நம்பர் 2 அப்படின்னு சொல்லிக்கிட்டு சும்மா உக்கார்ந்து இருக்கீரே அப்படீன்னு சொல்லி இருப்பாரு. கடுகையும் மிளகையும் கலந்து குடுத்துப் பிரிக்கச் சொல்லறது மாதிரி.

    ஆனாப் பாருங்க எனக்கு இவங்களோட இருக்கச் சொல்லி அசைன்மெண்ட் குடுத்ததே தலைதான்.

    ReplyDelete
  54. //மேற்கூறிய கமெண்டுக்கு அடிஷனல் quote இது...//

    சின்னப் பசங்க, வழி தெரியாம தொலஞ்சு போகப் போறாங்க. கூட இருந்து பக்குவமாச் சொல்லி கூட்டிக்கிட்டு வா அப்படின்னு சொல்லி அனுப்பின அவரோட பெருந்தன்மை எங்க, இப்படி சந்தில் சிந்து பாடும் உம்ம அற்பத்தனம் எங்க.

    ReplyDelete
  55. //ஒவ்வொண்ணும் யாருன்னு விளக்கமாச் சொல்றது.. சொல்வதற்கு கொத்தனாருக்கு தைரியம் இருக்கிறதா என்று நான் கேட்கிறேன்.//

    என்னமோ பர்த்டே பார்ட்டி நடக்குதான். அதுல அவங்களே முடிவு பண்ணிச் சொல்லறாங்களாம். வெயிட் ப்ளீஸ்.

    // ரோசமுள்ள சங்கத்துச் சிங்கங்களின் சார்பில் கேட்கிறேன்.//

    நீர் மேல போட்ட அதே அழுக்குக் quoteஐ நான் இப்போ போடவா? :))

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!