Sunday, June 03, 2007

அந்தரிகி வந்தனமு!!

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகிவந்தனமு! இந்நாட்டின் உயரிய மாந்தர்களுக்கு என் வணக்கங்கள்! (வேணுமுன்னா இந்த வலையுலகின் அப்படின்னு வெச்சுக்கலாமா?)

அப்பாடா!! ஒரு வாரம் ஆயிடுச்சுங்க. எனக்கே இப்படி இருந்தா உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நமக்கெல்லாம் இந்த ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் போடறது எல்லாம் ஒத்து வரலைங்க. எழுத ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆச்சு. இன்னும் 100 போஸ்ட் கூட போடலை. இந்த சற்றுமுன் பார்ட்டிங்க எல்லாம் என்னடான்னு 83 நாட்களில் சகத்திரம் போஸ்டுங்களாம். நமக்கெல்லாம் அந்த ஸ்ட்ரைக் ரேட் ஒத்து வராது. இனிமே இந்த மாதிரி ஒரு நாளுக்கு ஒண்ணுன்னு எல்லாம் சொன்னா ஒரு தடவைக்குப் பத்து தடவை யோசிக்கணும்.

அதுவும் பின்னூட்டங்களை வெளியிடறதும், அதற்குப் பதில் சொல்லறதும், அடுத்த பதிவு எழுதறதும், வழக்கம் போல மத்தவங்க பதிவுகளுக்குச் சென்று உள்ளேன் ஐயா என்பதுமாக மூச்சு முட்டி விட்டது. இனி ஒரு நாள் கூட தாங்கியிருக்காது என்றே நினைக்கிறேன். நல்லபடியாக ஒரு வாரம் ஓட்ட முடிந்ததே பெரிய விஷயம்.

மீள் பதிவு பண்ணியாச்சு, பயணக் கட்டுரை எழுதியாச்சு, சமையல் குறிப்பு போட்டாச்சு, புதிர் போட்டி, வெண்பா விளையாட்டு எல்லாம் விளையாடியாச்சு. நேயர் விருப்பத்தில் மீதி இருப்பது ஒரு இசைப் பதிவுதான். கச்சேரியில் மங்களம் பாடுவது மாதிரி நம்ம நட்சத்திர வாரத்தின் இறுதி பதிவாக ஒரு இசைப் பதிவு போடலாம் என்று எண்ணிய போது வந்தது மங்களம் பாடுவதைப் போட்டே நிறைவு செய்து விடலாமே என்ற இந்த ஐடியா.

பொதுவாக நாம் 'நீ நாம ரூபமுலகு' எனத் தொடங்கும் மங்களத்தைத்தான் பாடிக் கேட்டு இருப்போம். சில கலைஞர்கள் வேறு மங்கள பாடல்கள் பாடிக் கேட்டதே இல்லை. ஆகவே நாமும் அந்த பாடலையே முதலில் கேட்போம். சௌராஷ்ட்டிர ராகம், ஆதி தாளத்தில் அமைந்த இந்த பாடல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியகராஜரால் இயற்றப் பெற்றது.
Get this widget | Share | Track details


ஆனால் இது தவிர வேறு பல பாடல்கள் கூட ஒரு கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு இருக்கின்றன. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இது போன்று பல பாடல்களைப் பாடுவார் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தற்பொழுது இளைஞர்களில் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இப்படி வித்தியாசமான பாடல்களை தொடர்ந்து மங்களமாக பாடி வருகிறார்.



அவர் பாடியவைகளில் இருந்து எனக்குப் பிடித்த இரண்டு மங்களப் பாடல்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலாவது பாடல் 'ராமசந்த்ராய ஜனக' எனத் தொடங்கும் குறிஞ்சி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பத்ராசலம் இராமதாஸ் இயற்றிய பாடல். ஒரு கச்சேரியின் முடிவில் ஆரவாரமாக வரும் இந்த பாடலை கேட்கும் போதே ஒரு குஷி வரும் பாருங்கள்.

Get this widget | Share | Track details


அடுத்தது 'புஜகசாயினோ' எனத் தொடங்கும் யதுகுலகாம்போதி ராகம் ரூபக தாள பாடல். இப்பாடலை இயற்றியவர் சுவாதித் திருநாள் அவர்கள். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்ற உணர்வினைத் தரும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.


Get this widget | Share | Track details


அப்புறம் தமிழ்ப் பாடல்கள் இல்லையா என்று கேள்விகள் எல்லாம் வேண்டாமே என மத்யமாவதி ராகத்தில் அமைந்த நம் பாரதியார் பாடல் ஒன்று. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.

Get this widget | Share | Track details


இந்த மங்கள பாடல்களோடு நான் எனது நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன். இந்த வாய்ப்பைத் தந்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், வாழ்த்தி ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும், உப்புமா பதிவுக்கு உறுதுணையாக இருந்த பெனாத்தலாருக்கும் எனது நன்றிகள். அப்புறம் ரொம்ப முக்கியமாக இந்த வாரம் பூராவும் நம்மளை ஃப்ரீயாக (சிலேடை!!) விட்ட தங்கமணிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

இது போன்று இந்த நான்கு பாடல்களைப் போடப் போகிறேன் எனச் சொல்லி அனுமதி கேட்ட உடன் சிறிதும் யோசிக்காமல் தன் சம்மதத்தைத் தந்த கிருஷ்ணா அவர்களுக்கு என் நன்றிகள்.

பட உதவி : திரு. ஹரிஹரன் அவர்கள்.

32 comments:

  1. நான் போட்ட பாடல்கள் போதுமா? இல்லை விடுதலை விடுதலை விடுதலை என்ற பாடலை நேயர் விருப்பமாகக் கேட்பீர்களா? :))

    ReplyDelete
  2. இனிமையாகவும், ச்ச்வையாகாஉம், விறுவிறுப்பாகவும் போனது இந்த வாரம்.

    மங்களப்பாடல்கள் இன்னும் கேட்கவில்லை.

    முதலாக வந்து சொல்லணும் என்ற ஆர்வத்தில் அப்படி....ஹிஹிஹி!

    வாழ்த்துகள்.

    ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி என்ற பாடலையும் சேர்த்து இட்டிருக்கலம்!

    :))

    ReplyDelete
  3. //நான் போட்ட பாடல்கள் போதுமா? //

    போதாது!
    FREEயா போடு மாமே!

    ReplyDelete
  4. கொத்தனாரய்யா

    அருமையான வாரத்துக்கு நன்றி. இதுதான் சாக்குன்னு குமரன் மாதிரி நட்சத்திரவாரம் முடிந்தவுடன் ஒருவாரம் ரெஸ்ட் எடுக்க போயிடாதீங்க.

    ReplyDelete
  5. //'ராமசந்த்ராய ஜனக' எனத் தொடங்கும் குறிஞ்சி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த பத்ராசலம் இராமதாஸ் இயற்றிய பாடல்//

    மிக அருமையான தேர்வு, கொத்ஸ்!
    இதை பத்ராசலம் ராமதாசு என்ற தெலுங்குப் படத்திலும் பாடுவார்கள் என்று நினைக்கிறேன்!

    //ஒரு கச்சேரியின் முடிவில் ஆரவாரமாக வரும் இந்த பாடலை கேட்கும் போதே ஒரு குஷி வரும் பாருங்கள்//

    ஆமாம்!
    கச்ச்சேரி முடிந்து விட்டதே என்ற குஷியா....இல்லை வீட்டுக்குப் போகிறோமே என்ற குஷியா? :-)))
    ச்ச்சும்மா...

    பொதுவா, இந்த மங்களம் பாடலை மிகவும் ரசனையாகப் பார்த்து பார்த்து தேர்ந்து எடுப்பார்கள் பெரிய கலைஞர்கள்....இவ்வளவு நேரம் பாடியதற்கோ/வாசிச்சதற்கோ...க்ளைமாக்ஸ் அல்லவா? அதான்!

    சரி...இந்தப் பதிவு இசை இன்பம் வலைப்பூவில் தானே வந்திருக்கணும்! :-)

    ReplyDelete
  6. நல்லா இருந்தது ஒரு வாரம்......மங்களத்தோட முடிச்சுடீங்க.....வாழ்த்துக்கள் கொத்ஸ் !!

    ReplyDelete
  7. மங்களம் பாடாம திருப்புகழ் பாடி முடிச்சிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!!

    ReplyDelete
  8. கொத்ஸ்,
    இன்னும் பாட்டுக் கேட்கலை.மங்களம் சொன்னவருக்கு,
    அருமையாக தினம் ஒரு கருத்தாகப் பதிந்தவருக்கு,வேலை ரொம்ப இருந்தாலும் சிரத்தையா செய்தவருக்கு
    ரொம்ப நன்றி சொல்லவும் நாங்களும் கடமைப் பட்டு இருக்கோம்.

    ReplyDelete
  9. சிறப்பான நட்சத்திர வாரம். மிகவும் ரசித்தோம். நல்ல வெரைட்டியாக போட்டிருந்தீர்கள்.

    முக்கிமயமாக விவாத களத்தை சொல்லலாம். தமிழ்மணத்தில் விவாதம் என்றால் அரசியல் என்று ஆகிவிட்ட சமயத்தில் வேறுபட்ட களத்தை அமைத்து கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    இந்த நட்சத்திர வாரத்தை 'நட்சத்திர மாதமாக' ஆக்க தமிழ்மணத்திற்கு சிபாரிசு செய்கிறேன்.

    சரி... சரி... ரென்சன் ஆகாதீங்க :-))

    நன்றி!

    ReplyDelete
  10. சந்தோசம் பொங்குதே
    சந்தோசம் பொங்குதே
    சந்தோசம் விண்ணில் பொங்குதே

    ReplyDelete
  11. வாரம் முழுக்கவே அருமையான பதிவுகள் கொத்தனாரே. அதிலும் மங்களம் பாடிய விதம் அருமை.

    ReplyDelete
  12. //இனிமையாகவும், ச்ச்வையாகாஉம், விறுவிறுப்பாகவும் போனது இந்த வாரம்.//

    அப்படியா? மின்னரட்டையில் சொன்னது பார்த்தா அப்படித் தெரியலையே! ஒரு வேளை பொதுவில் விட்டுக் கொடுக்கக் கூடாதெனச் சொல்கிறீர்களா?

    //மங்களப்பாடல்கள் இன்னும் கேட்கவில்லை.//

    கேளுங்க. நல்ல பாடல்கள். என்ன ஒலிப்பதிவுதான் கொஞ்சம் சுமார்.

    //முதலாக வந்து சொல்லணும் என்ற ஆர்வத்தில் அப்படி....ஹிஹிஹி!//

    நீங்களுமா?

    //ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி என்ற பாடலையும் சேர்த்து இட்டிருக்கலம்!//

    இருக்கலாம்தான். முதல் பின்னூட்டம் பார்த்தீங்க இல்லை!! :))

    :))

    ReplyDelete
  13. //போதாது!
    FREEயா போடு மாமே!/

    இனி அடிக்கடி போடுகிறேன் ரவி.

    ReplyDelete
  14. //அருமையான வாரத்துக்கு நன்றி. இதுதான் சாக்குன்னு குமரன் மாதிரி நட்சத்திரவாரம் முடிந்தவுடன் ஒருவாரம் ரெஸ்ட் எடுக்க போயிடாதீங்க.//

    அவரு ஒரு வாரம் போனாரா? ரொம்ப நாளா போனாருன்னு நினைச்சேன். ;)

    நமக்குத்தான் தமிழ்மணமேட்டிஸ் வியாதி இருக்கே. அப்படி எல்லாம் ஒரேடியாக ஆப் ஆக முடியாது. கவலை வேண்டாம். :))

    ReplyDelete
  15. //மிக அருமையான தேர்வு, கொத்ஸ்!
    இதை பத்ராசலம் ராமதாசு என்ற தெலுங்குப் படத்திலும் பாடுவார்கள் என்று நினைக்கிறேன்!//

    அவர் இயற்றிய பாடல்தானே. இருக்கும்.

    //ஆமாம்!
    கச்ச்சேரி முடிந்து விட்டதே என்ற குஷியா....இல்லை வீட்டுக்குப் போகிறோமே என்ற குஷியா? :-)))//

    சிலர் பாடினால் நல்ல கச்சேரி முழுமையாகக் கேட்ட குஷி. வேறு சிலர் பாடக் கேட்டால் அப்பாடா! குஷிதான். :))

    //இந்த மங்களம் பாடலை மிகவும் ரசனையாகப் பார்த்து பார்த்து தேர்ந்து எடுப்பார்கள்//

    எங்க. பாதி பேர் நீ நாம விட்ட வேற தெரியவே தெரியாதோன்னு நினைப்பு வர அளவுக்கு அதேதான்....

    //சரி...இந்தப் பதிவு இசை இன்பம் வலைப்பூவில் தானே வந்திருக்கணும்! :-)//

    நட்சத்திர வாரத்தில் இந்த பதிவில்தான் எல்லாமே போடணும் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதான் வெண்பா பதிவு கூட இங்கயே போட்டாச்சு.

    ReplyDelete
  16. //நல்லா இருந்தது ஒரு வாரம்......மங்களத்தோட முடிச்சுடீங்க.....வாழ்த்துக்கள் கொத்ஸ் !!//

    நன்றி இராதா. உங்களுக்காக புதிர் போட்டியை இன்னும் ஒரு நாள் முடிக்காம வெச்சிருந்தேன் ஆனா ஆளையே காணுமே...

    ReplyDelete
  17. //மங்களம் பாடாம திருப்புகழ் பாடி முடிச்சிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!!//

    ஏன் என்பது என் கேள்வி! :)

    ReplyDelete
  18. //மங்களம் சொன்னவருக்கு,
    அருமையாக தினம் ஒரு கருத்தாகப் பதிந்தவருக்கு,வேலை ரொம்ப இருந்தாலும் சிரத்தையா செய்தவருக்கு
    ரொம்ப நன்றி சொல்லவும் நாங்களும் கடமைப் பட்டு இருக்கோம்.//

    வல்லியம்மா, உங்களை மாதிரி பெரியவங்க வந்து ஆசீர்வாதம் பண்ணினாலே எங்களுக்குப் புண்ணியம். வேற என்ன வேணும்? :)

    ReplyDelete
  19. //சிறப்பான நட்சத்திர வாரம். மிகவும் ரசித்தோம். நல்ல வெரைட்டியாக போட்டிருந்தீர்கள்.//

    நீங்க வேற. நம்ம நண்பர்கள் வந்து எதோ சுமார் அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. :)) இனிமே இதுக்கு மேல எதிர்பார்க்காதே. இதுதான் நம்ம லெவல் புரிஞ்சுக்கோன்னு சொல்லிட வேண்டியதுதான்.

    //முக்கிமயமாக விவாத களத்தை சொல்லலாம். தமிழ்மணத்தில் விவாதம் என்றால் அரசியல் என்று ஆகிவிட்ட சமயத்தில் வேறுபட்ட களத்தை அமைத்து கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி.//

    ஆமாங்க. ஆனா பாருங்க. அதெல்லாம் கருத்து சொல்லி, சொல்ல வெச்சு, அதுக்கு பதில் சொல்லி நல்ல வளர்க்க வேண்டிய பதிவு. ஆனா இந்த தினம் ஒரு பதிவு மேட்டரில் அதெல்லாம் செய்ய முடியாமப் போச்சு. வேற ஒரு சமயம் அது பத்திப் பேசலாம்.

    //இந்த நட்சத்திர வாரத்தை 'நட்சத்திர மாதமாக' ஆக்க தமிழ்மணத்திற்கு சிபாரிசு செய்கிறேன்.//
    செய்வீரு. அந்த மாதம் மீள்பதிவு மாதம் அப்படின்னு சொல்லிட்டு போங்கு விளையாட்டு விளையாடிடுவேன். :)

    //சரி... சரி... ரென்சன் ஆகாதீங்க :-))//
    ரென்சனா? தல ரொம்ப எங்கயோ போயிட்டீங்க!

    நன்றி!

    ReplyDelete
  20. //சந்தோசம் பொங்குதே
    சந்தோசம் பொங்குதே
    சந்தோசம் விண்ணில் பொங்குதே//

    புலி, இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை!! :)))

    (எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஹிஹிஹி)

    ReplyDelete
  21. //வாரம் முழுக்கவே அருமையான பதிவுகள் கொத்தனாரே. அதிலும் மங்களம் பாடிய விதம் அருமை.//

    நன்றி லக்ஷ்மி.

    ReplyDelete
  22. அருமையான மங்களங்களுடன் வாரத்தை முடித்திருக்கிறீர்கள்.

    எல்லா பாடல்களும் அருமை.

    "ராமசந்த்ராய ஜனக" பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடிக் கேட்டிருக்கிறீர்களா?

    அவருடைய பத்ராசலம் ராமதாசர் பாடல்கள் கேட்க மிக இனிமை.

    ReplyDelete
  23. Can you please post Dr.Murali Krishna's songs?

    ReplyDelete
  24. ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா?? நல்லதொரு சுவாரசியமான வாரம் அளித்ததற்கு நன்றி / வாழ்த்துக்கள் :D:D:D

    ReplyDelete
  25. அதுக்குள்ளே நட்சத்திர வாரம் முடிஞ்சுருச்சா. எல்லாப்பதிவுகளும் ரொம்ப நல்லா இருந்துது.

    ReplyDelete
  26. கொஞ்சம் வித்தியாசமான 'மங்களம்'தான்.

    நல்ல வாரம்தான் கொத்ஸ்.

    ReplyDelete
  27. //அருமையான மங்களங்களுடன் வாரத்தை முடித்திருக்கிறீர்கள்.//

    நன்றி ஜெயஸ்ரீ.

    //எல்லா பாடல்களும் அருமை.//
    எடுத்துப் போட்டதைத் தவிர நான் ஒண்ணும் செய்யலை. பாராட்டெல்லாம் பாடியவருக்கே.

    //"ராமசந்த்ராய ஜனக" பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடிக் கேட்டிருக்கிறீர்களா?//

    இல்லைங்க. கேட்டது இல்லை.

    //அவருடைய பத்ராசலம் ராமதாசர் பாடல்கள் கேட்க மிக இனிமை.//

    கேட்டுப் பார்க்கிறேன். எங்காவது சுட்டி கிடைத்தால் தாருங்கள்.

    ReplyDelete
  28. //Can you please post Dr.Murali Krishna's songs?//

    அனானி, நான் சுட்டிகளைத் தேடுகிறேன்.. கிடைத்தால் கட்டாயம் போடுகிறேன்.

    ReplyDelete
  29. //ஒரு வாரம் முடிஞ்சிடுச்சா?? //

    ஏஸ்,ரொம்ப நிம்மதியா இருக்கோ? :))

    //நல்லதொரு சுவாரசியமான வாரம் அளித்ததற்கு நன்றி / வாழ்த்துக்கள் :D:D:D//

    நன்றி நன்றி. :)

    ReplyDelete
  30. //அதுக்குள்ளே நட்சத்திர வாரம் முடிஞ்சுருச்சா. எல்லாப்பதிவுகளும் ரொம்ப நல்லா இருந்துது.//

    சின்ன அம்மிணி. அதுக்குள்ள முடிஞ்சுருச்சாவா? இதுக்கே பெண்டு கழண்டு போச்சு நீங்க வேற!!

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க. :)

    ReplyDelete
  31. //கொஞ்சம் வித்தியாசமான 'மங்களம்'தான்.//

    'கொஞ்சம்'தானா? !!

    //நல்ல வாரம்தான் கொத்ஸ்.//

    டீச்சர், நான் பாஸா? எம்புட்டு மார்க் வாங்கி இருக்கேன்? :)))

    ReplyDelete
  32. பாடல்கள் அனைத்தையும் கேட்டாச்சு. நாலு விதமா மங்களம்பாடியவர் நீங்க ஒருத்தர்தான் கொத்ஸ்.
    ராமசந்த்ராய ஜனக பாலமுரளியோடது
    கூட நன்றாக இருக்கும்


    மிகமிக நன்றி.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!