Sunday, September 14, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - செப்டம்பர் 2008

கொஞ்சம் பயந்துக்கிட்டே போட்ட போன மாத புதிருக்கு அமோகமான வரவேற்பு இருந்ததால இந்த மாதமும் அதைப் போன்ற ஒன்றினையே தரலாம் என நினைத்தேன். வழக்கம் போல வாஞ்சி அவர்களின் ஆலோசனைக்கு நன்றிகள் பல. கேஆர்எஸ் அண்ணாவைத் தொந்தரவு செய்யாமல் நானே இந்த முறை கட்டமும் போட்டுக்கிட்டேன். அதனால, ரவி அண்ணா, நீங்களும் போட்டியில் கலந்துக்கிடலாம்!

இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இந்தப் புதிரின் விடைகள் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். 


1234
56
789
10
1112
13
141516
17

இடமிருந்து வலம்

3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)
12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)
14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)

மேலிருந்து கீழ்

1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)
2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)
13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

210 comments:

  1. பதில் சொல்லும் பொழுது புதிர் பத்திய உங்களது விமர்சனத்தையும் சொல்லுங்க. அப்பதான் அடுத்த முறை இன்னும் சிறப்பா செய்ய முடியும்.

    ReplyDelete
  2. இந்த முறை ஒன்னுமே தேறாது போல இருக்கே.

    அப்புறம் வந்து இன்னொருக்கா முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. ரீச்சர் இப்படி எல்லாம் ஓடினா எப்படி? போன முறையை விட இந்த முறை இன்னுமே எளிமையா செஞ்சு இருக்கேன். ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்க.

    ReplyDelete
  4. எல்லாம் தலைக்கு மேலே ஃப்ளையிங்... ஏதாவது தீம் (சினிமா, வலைபதிவர்) என்று சொன்னால், விடையை எளிதாகச் சொல்லி விடலாம்.

    இந்த விளையாட்டுத் தொடரட்டும் :)

    ReplyDelete
  5. இடம் -> வலம்
    16.கஸ்தூரிபா
    17.துகள்

    ReplyDelete
  6. 14- இல் ஆகாச(ப்) புளுகன் : ப் வருமா :)

    ReplyDelete
  7. மேல்
    |
    v
    கீழ்

    4.நிலா
    15.காது

    ReplyDelete
  8. ஐ நோ ஒன்லி இங்கிலிபீஷ்!
    ஐ டோண்ட் நோ டமில்!

    ReplyDelete
  9. //இலவசக்கொத்தனார் said...
    பதில் சொல்லும் பொழுது புதிர் பத்திய உங்களது விமர்சனத்தையும் சொல்லுங்க. அப்பதான் அடுத்த முறை இன்னும் சிறப்பா செய்ய முடியும்.
    //

    பதில் அப்பாலிக்கா சொல்லிக்கிறேன்!

    விமர்சனம் இப்ப பர்ஸ்ட்டூ!

    நல்லா இருக்கு நொம்ப யோசிக்க வைக்குது ஸோ கண்டினியூ பண்ணுங்க!

    இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தால் இன்னும் நிறைய பேர் புதுசா டிரைப்பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  10. //துளசி கோபால் said...
    இந்த முறை ஒன்னுமே தேறாது போல இருக்கே.
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்!

    ReplyDelete
  11. //இலவசக்கொத்தனார் said...
    ரீச்சர் இப்படி எல்லாம் ஓடினா எப்படி? போன முறையை விட இந்த முறை இன்னுமே எளிமையா செஞ்சு இருக்கேன். ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்க.
    //

    உங்களுக்கு வேணும்னா எளிமையா இருக்கும் எங்களுக்கு....?!!!

    பட் டிரைப்பண்ணி பார்க்குறேன் :))

    ReplyDelete
  12. இடம் -> வலம்
    08.பாகல் காய் ?
    16.கஸ்தூரிபா
    17.துகள்

    மேல்
    |
    v
    கீழ்

    04.நிலா
    09.மாற்றுப்பாதை
    15.காது

    ReplyDelete
  13. இ.வ
    3. பழநி
    5. நிலைக்காத
    6. லாடு
    7. சுயம்
    8. கறவை மாடு
    11. அலைமகள்
    12. ??
    14. சகா
    16. கஸ்தூரிபா
    17. துகள்

    மே.கீ.
    1. அநியாய விலை
    2. பாக்கு
    3. பதற்றம்
    4. நிலா
    9. மாற்று பாதை
    10. நகங்கள்
    13. ஸ்தூபி
    15. காது

    ReplyDelete
  14. இடம் -> வலம்
    03.பழநி
    06.லாடு
    08.பாகல் காய் ?
    14.சகா
    16.கஸ்தூரிபா
    17.துகள்

    மேல்
    |
    v
    கீழ்

    04.நிலா
    09.மாற்றுப்பாதை
    13.ஸ்தூபி
    15.காது

    ReplyDelete
  15. இடமிருந்து வலம்
    3.பழநி
    6.லாடு

    மேலிருந்து கீழ்
    2.பாக்கு
    4.நிலா
    13.ஸ்தூபி

    ஈசியா இருந்ததை மட்டும் சொல்லியாச்சு திரும்பவும் வர்றேன் :)))

    ReplyDelete
  16. 3 பழநி
    5 நிலைக்காத (?)
    6, லாடு
    7 சுயம்
    8. கறவை மாடு
    11 ?
    12 ?
    14, சகா
    16. கஸ்தூரிபா
    17. துகள்

    =================
    1 ??
    2. பாக்கு
    3. பதற்றம்
    4. நிலா
    9. மாற்றுப்பாதை ??
    10. நகங்கள் ??
    14.ஸ்தூபி
    15. காது

    முடியலைப்பா, நான் தூங்கப் போறேன்

    ReplyDelete
  17. இடம் -> வலம்
    03.பழநி
    05.நிலைக்காத
    06.லாடு
    08.கறவை மாடு
    14.சகா
    16.கஸ்தூரிபா
    17.துகள்

    மேல்
    |
    v
    கீழ்
    02.பாக்கு
    03.பதற்றம்
    04.நிலா
    09.மாற்றுப்பாதை
    13.ஸ்தூபி
    15.காது

    ReplyDelete
  18. குறுக்கு

    3 - பழநி
    5 - நிலைக்காத
    6 - லாடு
    7 - சுயம்
    8 - கறவை மாடு
    11 - கலைமகள்
    12 - அறுவை (?)
    14 - சகா
    16 - கஸ்தூரிபா
    17 - துகள்

    நெடுக்கு

    1 - அநியாயவிலை
    2 - பாக்கு
    3 - பதற்றம்
    4 - நிலா
    9 - மாற்றுப்பாதை
    10 - நகங்கள் (?)
    13 - ஸ்தூபி
    15 - காது

    What else to say other than brilliant stuff. Keep going...

    -அரசு

    ReplyDelete
  19. பரவாயில்லையே மூணு நாலு பேர் வரை வந்து விடை சொல்லி இருக்காங்க!! :))

    விடைகளைப் பார்ப்போமா?

    ReplyDelete
  20. பாலராஜன் கீதா

    இவ 16, 17 - சரி

    ReplyDelete
  21. பாபா,

    நீங்களுமா!! வாழ்க!! :))

    ஆகாசப் புளுகன் - ப் வரும் போலத்தான் இருக்கு. மாத்திடறேன்.

    விடைகள் எங்க? (இன்னும் ஒரு கமெண்ட் இருக்கு, இருந்தாலும் வரிசைக்கிரமமா பதில் சொல்லும் பொழுது இப்படிக் கேட்போமில்ல!)

    ReplyDelete
  22. பாலா

    மேகி 9 - சரி

    இவ 8 - சரி இல்லை

    ReplyDelete
  23. பாபா

    கலக்கல்!!

    இன்னும் இவ 12 மட்டும்தான் போடணும் போல!!

    மேகி 9 - ஒற்றுப்பிழை இருந்தாலும் நீர் நம்ம கிட்ட ஒண்ணு கண்டுபிடிச்சதால மன்னிச்சு விட்டுடறேன்!!

    கலக்குங்க!!

    ReplyDelete
  24. பாலராஜன்

    இதுவரை சரியானவை

    இவ 3 6 14 16 17

    மேகி 4 9 13 15

    ReplyDelete
  25. வாய்யா ஆயிலு

    அம்புட்டு ஆர்பாட்டம் பண்ணி கடைசியா வந்தாச்சாக்கும்!! வாங்க வாங்க!!

    இவ 3 6

    மேகி 2 4 13

    என போட்டது எல்லாம் சரி. இப்போ மத்ததுக்கு க்ளூ கிடைச்சு இருக்கு இல்ல, அதையும் முயற்சி செய்யுங்க.

    ReplyDelete
  26. வாய்யா An&

    ரொம்ப நாள் ஆச்சு நம்ம பக்கம் வந்து!! உம்மை பாபாவை எல்லாம் கமெண்ட் போட வைக்க எம்புட்டு கஷ்டப்பட வேண்டியதா இருக்கு!! :))

    இவ 3 5 6 7 8 14 16 17

    மேகி 2 3 4 9 10 13 15

    என போட்டது எல்லாம் சரி. அதுல என்ன ரெண்டு மூணு மேட்டருக்குப் பின்னாடி கேள்விக்குறி? எல்லாம் சரிதான் மேன். மேகி 14 எனப் போட்டது 13 எனத் தெரிந்ததால் அதுவும் சரின்னு சொல்லியாச்சு!

    தூங்கி எழுந்து வந்து மீதியைப் போடுங்க.

    ReplyDelete
  27. பாலராஜன்

    இவ 3 5 6 8 14 16 17

    மேகி 2 3 4 9 13 15

    இதுதாங்க இப்போதைக்கு உங்க சரியான விடைகள்!!

    ReplyDelete
  28. வாங்க அரசு

    கலக்கல்

    இவ 3 5 6 7 8 12 14 16 17

    மேகி 1 2 3 4 9 10 13 15

    இவ 11 - தவறு

    இவ 12 சரியான விடை சொல்லி இருக்கீங்க. ஆனா அது எப்படி வந்ததுன்னு குழப்பம் போல! ஒரு அகராதியை எடுத்து விடையோட அர்த்தங்களைப் பாருங்க!! :))

    ReplyDelete
  29. யாராவது அந்த மதிப்பெண்கள் இருக்கும் பகுதி சரியாத் தெரியுதுன்னு சொன்னா நிம்மதியாப் போகும்!

    ReplyDelete
  30. கொத்தனாரே...

    இ.வ:

    3.பழநி

    5. நிலைக்காத

    6.

    7. வயது

    8.

    11. அலைமகள்

    12. பட்டு

    14. சகா

    16.

    17. துகள்

    மே.கீ:

    1. அநியாயவிலை

    2. பாக்கு

    3. பதற்றம்

    4. நிலா

    9.

    10. நகங்கள்

    13. பீடம்

    15. காது


    -சதிஸ்

    ReplyDelete
  31. வாங்க சதிஸ்

    இவ 3 5 11 14 17

    மேகி 1 2 3 4 10 15

    இவை அனைத்தும் சரி. மற்றவைகளை மீண்டும் முயலுங்களேன்.

    ReplyDelete
  32. மதிப்பெண்கள் இருக்கும் பகுதி அருமையாகத் தெரியுது :)

    12க்கு மட்டும் எதுவும் தெரியமாட்டேங்குது.

    ReplyDelete
  33. பாபா,

    //மதிப்பெண்கள் இருக்கும் பகுதி அருமையாகத் தெரியுது :)

    12க்கு மட்டும் எதுவும் தெரியமாட்டேங்குது.//

    இப்ப சூடுங்க :-)

    கொத்ஸ்.. நல்லா இருந்தது போட்டி.. 12 மட்டும் கொஞ்சம் பெண்டைக் கழட்டிடுச்சு.. பரிசுத் தொகை எவ்வளவு?

    ReplyDelete
  34. சென்ற முறை முழுவதும் சரியாக முடித்த ஸ்ரீதர் நாராயணன், கைப்புள்ள, திவா, வடகரை வேலன் எங்கே இருந்தாலும் மேடைக்கு உடனே வரவும்!!

    ReplyDelete
  35. அடடா! திடு திப்புன்னு போட்ட என்ன பண்னறது?
    நாளை காலை வரேண்ணா! இப்ப தூக்கம் வந்திருச்சு.
    ஆமா பிட்டுக்கு படம் போடாம என்ன செய்யறீங்க? ஒரு சிலந்தி வலை, கரையான் புத்து, தூக்கணாங்குருவி கூடு- எதுவுமா கிடக்கலே? :-(

    ReplyDelete
  36. மே.கீ.
    2.பாக்கு
    4.நிலா
    13.ஸ்தூபி
    15.காது

    இ.வ.

    3.பழநி
    6.லாடு
    14.சகா
    17.துகள்

    அடுத்தது எல்லாம் ஆணியோட சேந்து, அப்பறமா அனுப்பப்படும்.

    ReplyDelete
  37. வாய்யா பெருசு. என்ன ரொம்ப நாளா இந்தப் பக்கமே ஆளைக் காணும்.

    போட்டது எல்லாம் சரி.

    இவ 3 6 14 17
    மேகி 2 4 13 15

    ReplyDelete
  38. இடமிருந்து வலம்

    3. பழனி
    5. நிலைக்காத
    6. லாடு
    7. சுயம்
    8. கறவை
    11. மலைமகள்
    12. பிட்டு
    14. சகா
    16. கஸ்தூர்பா
    17. துகள்

    மேலிருந்து கீழ்

    1. அநியாய விலை
    2. பாக்கு
    3. பதற்றம்
    4. நிலா
    9. ?
    10. நகங்கள்
    13. ஸ்தூபி
    15. காது

    சரிங்களா. 12 தான் பெண்டக் கழட்டுது. தூக்கம் வருது. காலையில் போடுறேன்.

    அழச்சதுக்கு நன்றி

    ReplyDelete
  39. வாங்க வேலன். மடமடன்னு விடைகளைப் போட்டுட்டீங்க!!

    இவ 3 5 6 7 14 16 17

    மேகி 1 2 3 4 10 13 15

    இவை அனைத்தும் சரி.

    8 - பதிலில் ஒரு பகுதிதானே வந்திருக்கு. சரியாப் போடுங்க.

    11 12 - தப்பு

    ReplyDelete
  40. மே.கீ :


    //2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி//


    2. பாக்கு

    ReplyDelete
  41. மேலிருந்து கீழ்

    //4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா?//

    நிலா!

    ReplyDelete
  42. உள்ளேனய்யா மட்டும் போட்டுக்கறேன். போன முறை பிரிண்ட் எடுத்த மறுநாள் விடை எல்லாம் பப்ளிஷ் பண்ணியிருந்தீங்க...

    அது மாதிரி நடக்க, இந்த முறையும் 9ஆம் நாள் பிரிண்ட் எடுத்துக்கறேங்கண்ணா!!!

    ReplyDelete
  43. மேலிருந்து கீழ்:

    //13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது//

    ஸ்தூபி

    ReplyDelete
  44. சிபி அண்ணா, வாங்க வாங்க. நம்ம பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சு!! (வர வர இங்க வரும் எல்லாருக்குமே இதைச் சொல்ல வேண்டிய நிலமை. என்ன செய்ய!)

    மேகி 2 4 13

    இவ 6

    எல்லாமே சரி.

    ReplyDelete
  45. 3: படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
    பழநி

    5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
    நிலைக்காத

    6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
    லாடு
    7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
    சுயம்
    8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
    11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)
    அலைமகள்
    12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)
    14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
    சகா
    16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
    கஸ்தூரிம
    17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)
    துகள்


    1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)
    அநியாயவிலை
    2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
    பாக்கு
    3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
    4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
    நிலா
    9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
    10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)
    நகங்கள்
    13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
    ஸ்தூபி
    15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)
    காது


    மிச்சது இன்னும் தெரியலை. அப்புறமா வரேன்.

    ReplyDelete
  46. வாங்க சத்யா

    இவ 3 5 6 7 11 14 17
    மேகி 1 2 4 10 13 15

    இவை எல்லாம் சரி.

    இவ 16 - எழுத்துப்பிழையா தவறான விடையான்னு தெரியலை. இன்னும் ஒரு முறை போட்டுடுங்களேன்.

    ReplyDelete
  47. //சிபி அண்ணா//

    !???????????????????/

    ReplyDelete
  48. சிபி

    இன்னிக்கு அண்ணா நூற்றாண்டு விழாவாமே. அதனால பின்னூட்டம் போடறவங்களுக்கு எல்லாம் ஒரு அண்ணா இலவசம்!! :))

    இவ 1 இல்லவே இல்லையே. 3க்கா பதில் சொன்னீங்க? அது தப்பு!!

    ReplyDelete
  49. 2. பாக்கு
    3. பழநி
    4. நிலா
    15. காது
    13. ஸ்தூபா
    16. கஸ்தூரிபா

    இதெல்லாம் சரியானு சொல்லுங்க.. மீதி அடுத்து முயற்சி செய்யறேன் :))

    ReplyDelete
  50. வெட்டி

    இவ மேகி போடாம இப்படி குழைச்சு வந்த உப்புமா மாதிரி மொத்தமா போட்டு இருக்கீறே!!

    இவ 3 16
    மேகி 2 4 13 15

    போட்டது எல்லாம் சரி. மேகி 13 நீங்க வடமொழியில் சொல்வது மாதிரி சொல்லி இருக்கீங்க. நான் நம்ம ஊர் ஸ்டைலில் எதிர்பார்த்தேன். இருந்தாலும் ஓக்கே.

    மத்தது எல்லாமும் போடுங்க.

    ReplyDelete
  51. இ.வ

    //3.படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே//

    பழநி

    ReplyDelete
  52. இவ.

    16 கஸ்தூரிபா

    (இதற்கு மதிப்பெண் வேண்டாம்)

    ReplyDelete
  53. சிபி

    இவ 16 - இது சரியான விடைதான்.

    அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒரு ரூபாய்க்கு ஒரு மதிப்பெண் தர ஆசை இருந்தாலும் இதுக்கு மட்டும் மதிப்பெண் தரேன். எஞ்சாய்!

    ReplyDelete
  54. சிபி ரொம்ப உணர்ச்சிவசப்படலா? மேகியை மேகீ ஆக்கிட்டீங்களே!!

    மேகி 1 - சரியான விடைதான்யா!! :)

    ReplyDelete
  55. வெட்டி

    1 மேகி - சரியான விடைதான்!! அது என்ன அம்புட்டு சந்தேகம்! :)

    ReplyDelete
  56. என்ன கொத்ஸ்...இப்பிடிப் பண்ணீட்டீங்களே!

    ஒன்னும் தேறலை. நல்லா இருங்கய்யா... நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க. :)

    ReplyDelete
  57. இவ:

    7. பயன்
    11. அலைமகள்
    14. சகா
    17. துகள்

    மெகி:
    10: நகங்கள்


    (11 தவிர மீதி எல்லாமே கெஸ் தான் :) )

    சீக்கிரம் சொல்லுங்க.. அப்ப தான் அடுத்து முயற்சி செய்ய முடியும் :)


    அப்படியே போன பதிவுல நீங்க ரெஃபர் பண்ண அகர முதலி சொன்னீங்க இல்ல. அது சுட்டி வேண்டும் :)

    ReplyDelete
  58. இவ

    3. பழனி
    5. நிலைக்காத
    6. லாரி??? (திட்டிடாதீங்க)
    7. பயன்
    8. கறவை மாடு
    11. அலைமகள்
    12. அறுவை
    14. சகா
    15. துகள்

    மெகி
    1. அநியாய விலை
    2. பாக்கு
    3. பதற்றம்
    4. நிலா
    9. மாற்றுப்பாதை
    10. நகங்கள்
    13. ஸ்தூபா
    15. காது

    ReplyDelete
  59. வெட்டி

    7 தப்பு

    11 14 17 இவ - சரி

    10 - சரி

    நான் அதிகம் பயன்படுத்தும் அகராதியின் சுட்டி இது

    http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

    ReplyDelete
  60. வெட்டி

    இப்போ மொத்தத்தையும் போட்டாச்சா?!!

    சரி. விடைகளைப் பார்க்கலாம்.

    இவ 3 5 8 11 12 14 17

    மேகி 1 2 3 4 9 10 13 15

    இவ 3 எழுத்துப்பிழை. அண்ணா நூற்றாண்டை ஒட்டி மன்னித்தோம்.

    மேகி 13 பத்திப் பேசியாச்சு.

    ReplyDelete
  61. இமி
    3. பழநி
    6. லாடு
    14. சகா
    16. கஸ்தூரிபா
    17. துகள்

    மேகி
    2. பாக்கு
    4. நிலா
    13. ஸ்தூபி
    15. காது

    ReplyDelete
  62. இப்படிப் பட்ட புதிர்களை நமக்குக் கொடுக்கும் கொத்ஸ்க்கு தமிழ்ச் செம்மல் என்ற பட்டத்தைக் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  63. ஜிரா

    போன மச்சான் திரும்பி வந்தான் கதையா அம்புட்டு அழுதுட்டு வந்துட்டீரு விடைகளோட. வாங்க வாங்க.

    போட்டது எல்லாம் சரி!! :))

    இவ 3 6 14 16 17
    மேகி 2 4 13 15

    எல்லாம் சரி.

    ReplyDelete
  64. வெட்டி

    6 - சரியான விடை.

    எல்லாத்தையும் போட்டாச்சு வாழ்த்துகள் அப்படின்னு சொல்லலாமுன்னா இன்னும் முதலில் போட்ட பெனாத்தலுக்கே பதில் சொல்லை.

    அதனால அவருக்குச் சொல்லிட்டு அப்புறம் உங்களுக்குச் சொல்லறேன்.

    ReplyDelete
  65. இவ 8 பாகற்காய்
    மேகி 3 பதற்றம்
    இவ 16 கஸ்தூரிபா (இதைத்தானே அனுப்பினேன். இல்லையா?)

    யாராவது சொன்னாங்களா தெரியாது. மார்க்கெல்லாம் சரியாத்தெரியுது.

    ReplyDelete
  66. 8 கறவை மாடு
    9 மாற்றுப் பாதை
    11 அலை மகள்

    இது சரியான்னு சொல்லுங்க. 12 ஏதொ சுலபமான ஒன்னு. டக்குன்னு பிடிபட மாட்டேங்குது

    ReplyDelete
  67. 1. அநியாயவிலை
    2. பாக்கு
    3வ-இ. பழநி
    3மேகீ - பதற்றம்
    4. நிலா
    5. நிலைக்காத
    6. லாடு
    7. சுயம்
    8. கறவைமாடு
    9. மாற்றுப்பாதை
    10. நகங்கள்
    11. அலைமகள்
    12. வெறுமை
    13. ஸ்தூபி
    14. சகா
    15. காது
    16. கஸ்தூரிபா
    17. துகள்

    - கூட்டு முயற்சி (பொன்ஸ், சத்யா, செந்தில்)

    ReplyDelete
  68. போன தடைவை - ஒரு சிலவற்றை முயன்று, அப்புறம் முழுசா முடிக்க இயலாமலேயே போய்விட்டது. இந்த முறை முயல்கிறேன்.
    அப்புறம் மேக்கில் கட்டங்கள் சரியா தெரியவில்லை!

    ReplyDelete
  69. சத்யா

    இவ 8 - தப்பா இருக்கே

    இவ 16 - சரி
    மேகி 3 - சரி

    ReplyDelete
  70. வேலன்

    8 9 11 மூணுமே சரிதான்!!

    12 எளிமையான வார்த்தைதான்.

    ReplyDelete
  71. அம்மா பொன்ஸ், ஐயா செந்தில், ஐயா சத்யா,

    இப்படி கூட்டு எல்லாம் போட்டா யாருக்குன்னு மார்க் குடுக்க. போட்டது பொன்ஸ் பெயரில் என்பதால் அவருக்கே தரேன்.

    எல்லாமே சரிதான். இதில் யாரு யாருக்கு எவ்வளவு பங்கு? :)

    ஆனா இந்தப் பக்கம் வர மாட்டேன்னு சபதம் போட்ட பொன்ஸ் அக்காவை கூட்டிக்கிட்டு வந்ததுக்கு நன்னிங்கோவ்!! :))

    அப்புறம் புதிர் எப்படி இருந்ததுன்னு சொல்லறது....

    ReplyDelete
  72. பொன்ஸ் கூட்டணியினரே

    ஒண்ணு தப்பா இருக்கே. நம்பர் எல்லாம் கன்னா பின்னான்னு போட்டு நம்மளை குழப்பி விட்டுட்டீங்களே!!

    12 இவ தப்புங்க தப்பு!

    ReplyDelete
  73. கொத்ஸ்,
    அது தப்பாத் தான் இருக்கும்னு முதல்லயே நினைச்சோம்.. அது கண்டுபிடிக்க முடியலை.. அவ்ளோ தான் :)

    ReplyDelete
  74. Across
    3 - பழனி
    5 - நிலைக்காத
    6 - லாடு
    7 - சுயம்
    8 - கறவைமாடு
    11 - ?லைமகள்
    12 - ?
    14 - ?
    16 - கஸ்தூரிபா
    17 - துகள்

    Down
    1 - அநியாயவிலை
    2 - பாக்கு
    3 - பதற்றம்
    9 - மாற்றுப்பாதை
    10 - நகங்கள்
    13 - ஸ்தூபி
    15 - காது

    Hari/Mumbai

    ReplyDelete
  75. தனிமடலில் விடைகள் அனுப்பிய கௌசிகனின் பதில்கள் அனைத்தும் சரியே!!

    ReplyDelete
  76. மும்பை ஹரிஹரன்

    இவ 3 5 6 7 8 16 17
    மேகி 1 2 3 4 9 10 13 15

    இவை அனைத்தும் சரி. மற்றவை அடுத்த முறையில்!

    ReplyDelete
  77. இடைக்கால முயற்சி:
    இவ:
    3: பழனி
    5: கண்டிக்காத

    6: லாடு
    14: சகா

    16: கஸ்தூரிபா

    மேகீ:
    2: பாக்கு

    3: பதற்றம்

    4: நிலா

    13: ஸ்தூபி

    15: காது

    ReplyDelete
  78. ஜீவா

    வாங்க

    இவ 3 6 14 16
    மேகி 2 3 4 13 15

    இது சரி.

    இவ 5 - சரி இல்லை

    ReplyDelete
  79. கட்டம் நிரப்பி இருக்கேன்.அப்படியே வருமா உங்களுக்கு. இந்தத் தடவை எனக்கும் புரிந்தது.அதிசயம் ஆனால் உண்மை:)

    ReplyDelete
  80. வல்லிம்மா, கட்டம் நிரப்பும் வசதி உங்களுக்கு எளிதாகச் செய்ய. அது அப்படியே எல்லாம் எனக்கு வராது.

    நீங்க அந்த விடைகளை எனக்குப் பின்னூட்டமாத் தரணும். நான் உங்க பின்னூட்டத்தை வெளியிட மாட்டேன். எது சரி எது சரியில்லை அப்படின்னு ஒரு பின்னூட்டம் போடுவேன்.

    அப்புறம் பதிவில் ஒரு சுட்டி இருக்கு பாருங்க. அங்க போய் பார்த்தா உங்க மதிப்பெண்கள் தெரியும். அவ்வளவுதான் மேட்டர்.

    முதலில் உங்க விடைகளை எனக்குப் பின்னூட்டமாத் தாங்க.

    ReplyDelete
  81. இ.கொ.

    ஆணி அதிகமாயிட்டபடியால் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. முடிந்ததை இப்ப போட்டுக்கறேன். மிச்சம் இரவிலோ, நாளையோ போடறேன். வழக்கம் போல் அருமையான புதிர் போட்டிருக்கிறீர்கள். எங்க உங்க குருவைக் காணோம்?

    மேகி
    2 : பாக்கு
    3: பதற்றம்
    4. நிலா
    13. ஸ்தூபி

    இவ
    3. பழநி
    6. லாடு
    14: சகா
    16: கஸ்தூரிபா

    இவ்வளவுதான் முடிந்தது. இதில் எவ்வளவு தேறிச்சோ பாத்து சொல்லுங்க.

    ReplyDelete
  82. ஸ்ரீதர், உங்களுக்குமா ஆணி? அடப்பாவமே!!

    மேகி 2 3 4 13
    இவ 3 6 14 16

    போட்ட எல்லாமே சரி!!

    ReplyDelete
  83. கொத்ஸ்,

    இவ - 11 - மலைமகள் ?

    -அரசு

    ReplyDelete
  84. கொத்ஸ்,

    அறுவை -ன்னா துணியா? நாம நார்மலா யூஸ் பண்ணறது வேற அர்த்தம் ஆயிற்சே. எனிவே, புது அர்த்தம் கற்றுக் கொடுத்த வாத்தியார் வாழ்க என கூவிட்டு குந்திக்கிறேன்.

    -அரசு

    ReplyDelete
  85. வந்துட்டேன்.

    3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3) பழநி

    6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2) லாடு

    4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2) நிலா

    ReplyDelete
  86. அரசு

    12 - சரியான விடை.

    எதாவது கொஞ்சமாவது யூஸ் இருக்கணும் இல்லையா!! :))

    ReplyDelete
  87. வாங்க கைப்ஸ்

    போட்ட மூணும் சரிதான். இந்நேரம் வந்து முடிச்சு இருப்பீங்கன்னு பார்த்தேன். இது என்ன மூணே மூணு. சீக்கிரம் மத்தது எல்லாம் போடுங்க! :))

    3 6 4 சரியான விடை

    ReplyDelete
  88. 11 - அலைமகள் ?

    -அரசு

    ReplyDelete
  89. கொத்ஸ் நல்ல புதிர்தான். ஸ்வரம்தான் புரியலை.பாட்டுனு எடுத்துக்கணுமா,ஸ்ருதினு எடுத்துக்கணுமா. வெறும் ஸ் எடுத்துக்கணுமானு தெரியலை. கொஞ்சமே கொஞ்சம் எனக்குத் தெரிந்ததை அனுப்பி இருக்கேன். பார்த்து மார்க் போடுங்கப்பா.:)


    இ.வ
    3 ப ழ நி
    6 லா டு
    7 தூள்
    12 பட்டு
    14 ச கா
    16 கஸ்தூரி
    17 தூள்.


    மேகீ
    2 பாக்கு,
    4 நிலா 11 திருமகள்
    13 ஸ்தூபி

    இன்னும் யோசிக்கலாம். அடுத்த தடவை!!

    ReplyDelete
  90. வல்லிம்மா

    இவ 3 6 14 - சரி

    7 என்ன எதோ ஒரு பதில் போட்டு இருக்கீங்க.

    12 தப்பு

    16 விடை மொத்தம் 5 எழுத்து வேணும். நீங்க 4 எழுத்துதான் போட்டு இருக்கீங்க. போட்ட வரை சரி!!

    17 மூணு எழுத்து வேணும். ரெண்டுதானே இருக்கு. கொஞ்சம் பாருங்க.

    மேகி 2 4 13 சரி

    11 தப்பு

    ReplyDelete
  91. 16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5) கஸ்தூர்பா


    10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5) நகங்கள்
    13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3) ஸ்தூபி

    ReplyDelete
  92. 14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2) சகா

    17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3) துகள்

    15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2) காது

    ReplyDelete
  93. அடேயப்பா! இன்னும் பத்து நாளு இருக்கில்ல.......

    ReplyDelete
  94. கைப்ஸ்

    16 10 13 14 17 15 - எல்லாமே சரிதான்!!

    16 - வட நாட்டு பாணியில் சொல்லிட்டீங்க. இருந்தாலும் ஓக்கே!

    ReplyDelete
  95. 5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5) பதற்றம்

    7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3) சுயம்

    8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2) கறவை மாடு

    ReplyDelete
  96. இது வர போட்டது. இன்றைய பதிவை முடிச்சுட்டு மீதியை பாக்கறேன்.

    குறுக்கே:

    3.)பழநி
    5. ) நிலைக்காத
    6. ) லாடு

    8. கறவை மாடு

    12. அறுவா?
    14. சகா
    16. கஸ்தூரிபா
    17. துகள்

    மேலிருந்து கீழ்

    2. பாக்கு
    3. பதற்றம்
    4. )நிலா
    9. மாற்றுப்பாதை

    13. ஸ்தூபி
    15. காது

    ReplyDelete
  97. 3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே
    (3)

    பழநி

    5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
    நிலைக்காத

    6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)

    லாடு
    7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)

    சுயம் (பு)
    8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)

    கறவைமாடு
    11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)

    அலைமகள்

    12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)

    14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)

    சகா

    16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
    கஸ்தூரிபா

    17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)
    துகள்
    ----
    மேலிருந்து கீழ்

    1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)

    அநியாய விலை

    2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)

    பாக்கு

    3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
    பதற்றம்

    4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
    நிலா
    9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
    மாற்றுப்பாதை

    10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)

    நகங்கள்

    13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
    ஸ்தூபி

    15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)

    காது


    12 தெரிலபா. அப்பாலிக்க ரோசனை பண்ணிச் சொல்றேன் தெரிஞ்சா

    ReplyDelete
  98. இதோ இன்னோரு முயற்சி கொத்ஸ்.

    10 மேகி...சக்கைகள்.
    இவ.
    8 தயிர் உறை
    7அகம்
    16 கஸ்தூரிபா
    17 துகள்

    ReplyDelete
  99. 1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2) அநியாய விலை

    3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5) பதற்றம்

    11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5) கலைமகள்

    ReplyDelete
  100. 9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6) மாற்றுப்பாதை

    ReplyDelete
  101. 5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5) நிலைக்காத

    ReplyDelete
  102. 12 - உறுதி - ( க்ளூக்கு நன்றி கைப்ஸ் அண்ணாச்சி )

    ReplyDelete
  103. முடிவா இவ்வளவு தான். 12 தான் பெருத்த சந்தேகம்....தப்புக்கு ஏத்த மாதிரி பரிசுத்தொகையைக் குறைச்சுக்கிட்டாலும் ஓகே தான். புள்ளைக்குட்டிகாரன் பாத்து போட்டு குடுங்க.

    இடமிருந்து வலம்

    3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3) பழநி
    5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5) நிலைக்காத
    6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2) லாடு
    7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3) சுயம்
    8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2) கறவை மாடு
    11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5) கலைமகள்
    12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3) உறுதி
    14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2) சகா
    16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5) கஸ்தூரிபா
    17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3) துகள்

    மேலிருந்து கீழ்

    1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2) அநியாய விலை
    2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3) பாக்கு
    3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5) பதற்றம்
    4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2) நிலா
    9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6) மாற்றுப்பாதை
    10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5) நகங்கள்
    13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3) ஸ்தூபி
    15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2) காது

    ReplyDelete
  104. கைப்ஸ்

    5 அப்படின்னு சொல்லி மேகி 3 பதில் சொல்லி இருக்கீங்க. அதனால அதுக்குத்தான் மார்க் தந்திருக்கேன்.

    ReplyDelete
  105. திவா வாங்க!

    இவ 3 5 6 8 14 16 17

    மேகி 2 3 4 9 13 15

    இவை எல்லாம் சரியான விடைகள்.

    ReplyDelete
  106. வாங்க வெண்பா வாத்தி,

    கிட்டத்தட்ட எல்லாம் சொல்லிட்டீரு. ஆனா தமிழ் தலை உமக்கும் கூட 12ல் தடுமாற்றமா? சபாஷ்!

    இவ 3 5 6 7 8 11 14 16 17
    மேகி 1 2 3 4 9 10 13 15

    ReplyDelete
  107. வல்லிம்மா

    உங்க ரெண்டாவது இன்னிங்க்ஸில்

    இவ 16, 17 சரியான விடைம்மா. மத்தது மூணாவது இன்னிங்க்ஸில் பார்த்துக்கலாம்!! :))

    ReplyDelete
  108. கைப்ஸ்

    1 சரி

    3 ஏற்கனவே போட்டாச்சே

    11 ஜஸ்ட்ல மிஸ்! :)

    ReplyDelete
  109. கைப்ஸ்

    5 9 - ரெண்டுமே சரி!

    ReplyDelete
  110. வெண்பா வாத்தி,

    கைப்ஸ் உம்மை வெச்சு ஆடிட்டாரு. அவரே 12 போடலை ஆனா உமக்குக் க்ளு குடுத்தாராக்கும்!!

    அது சரியான்னு போட்டுப் பார்த்தாரு. நீரும் மாட்டிக்கிட்டீரு!

    அது தப்பு வாத்தியாரே!! :))

    ReplyDelete
  111. கைப்ஸ்

    இவ 11 12

    இது ரெண்டும் தப்பு.

    இதை சரி பண்ணிப் போடுங்க. அப்புறம் ஆட்டம் க்ளோஸ்! :))

    ReplyDelete
  112. இ-வ 12 அறுவா இல்லை அறுவை
    அகராதி பாத்து ஆச்சரியப்பட்டேன்!

    இன்னிக்கு நேரம் கிடைக்காம போச்சு.
    மீதி நாளைக்கு.

    ReplyDelete
  113. திவா

    அதே ஆச்சரியம்தான் எனக்கும், முதலில் பார்க்கும் பொழுது.

    12 - சரியான விடைதான்!! :))

    ReplyDelete
  114. நன்றாக உள்ளது.. வாழ்த்துகள்.

    ஆணிகள் அதிகம்னாலும் ஏதோ தெரிஞ்ச 1,2 பதில போடுவோம்..

    இ-வ:

    17. துகள்

    மே-கீ

    2. பாக்கு
    4. நிலா
    14. சகா
    15. காது

    மீதி நேரம் கிடைத்து, விடை கிடைத்தால் :D

    ---------------------------

    கட்டத்தின் கடைசியில் சென்று தட்டச்சியபின், முழு இடுகையும் இடதுபுறம் நகர்ந்து விட்டது.. முதல் வார்த்தைகள் தெரியவில்லை.. என் பிரவுசரின் கோளாறா தெரியவில்லை

    ReplyDelete
  115. 12 இ வ அறுவை

    ReplyDelete
  116. இவ
    07 சுயம் / சுயமா ?
    11 அலைமகள்

    மேகி
    01. அநியாய விலை

    ReplyDelete
  117. வாங்க ஏஸ்!!

    நீங்க சொன்ன விடைகள் எல்லாம் சரி, மத்ததையும் போடுங்க.

    நீங்க சொல்லும் பிரச்சனை மற்றவர்கள் சொல்லவில்லையே. எந்த பிரௌசர்? எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், க்ரோம் இவைகளில் சரியா வருது. மேக்கில் பிரச்சனை இருக்காம்.

    இவ 14 17
    மேகி 2 4 15

    சரியான விடைகள்.

    ReplyDelete
  118. வேலன்

    12 - சரியான விடை!!

    அகராதியில் போய் பொருள் பார்த்தீங்களா?

    :)

    ReplyDelete
  119. வாங்க பாலா

    இவ 7 11
    மேகி 1

    மூன்றுமே சரியான விடைகள்தான்!

    ReplyDelete
  120. //எல்லாம் தலைக்கு மேலே ஃப்ளையிங்... ஏதாவது தீம் (சினிமா, வலைபதிவர்) என்று சொன்னால், விடையை எளிதாகச் சொல்லி விடலாம்.

    இந்த விளையாட்டுத் தொடரட்டும் :)//

    பாபா இந்த மாதிரி விளையாட்டுக்களில் இனிமே சினிமாவை சேர்த்துக்க கூடாதுன்னு இருக்கேன். ரொம்ப திகட்டிப் போச்சு.

    தீமேட்டிக்கா போடறது கொஞ்சம் கஷ்டம். போகட்டும் அப்புறமா முயன்று பார்க்கலாம்.

    ReplyDelete
  121. //ஐ நோ ஒன்லி இங்கிலிபீஷ்!
    ஐ டோண்ட் நோ டமில்!//

    ட்ரை திஸ் இங்கிலிபீஷ் பசில் மேன்.

    ReplyDelete
  122. //பதில் அப்பாலிக்கா சொல்லிக்கிறேன்!//

    கொஞ்சம் சொன்னீங்க அப்புறம் ஆளையே காணுமே!

    //விமர்சனம் இப்ப பர்ஸ்ட்டூ!

    நல்லா இருக்கு நொம்ப யோசிக்க வைக்குது ஸோ கண்டினியூ பண்ணுங்க!//

    நன்னி. செய்யலாம்.

    //இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தால் இன்னும் நிறைய பேர் புதுசா டிரைப்பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்!//

    இதுவே ரொம்ப ஈசியா இருக்காம்பா!!

    ReplyDelete
  123. ////துளசி கோபால் said...
    இந்த முறை ஒன்னுமே தேறாது போல இருக்கே.
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்!//

    ரீச்சர், உங்களுக்கு ரிப்பீட்டேய் போட்டுட்டு அவரு மார்க் வாங்கறாரு. சாக்கிரதை!

    ReplyDelete
  124. //உங்களுக்கு வேணும்னா எளிமையா இருக்கும் எங்களுக்கு....?!!!

    பட் டிரைப்பண்ணி பார்க்குறேன் :))//

    எல்லாருக்குமே ஒண்ணு ரெண்டைத் தவிர மத்தது எளிதுதான். முயற்சி பண்ணிப் பாருங்க.

    ReplyDelete
  125. //மதிப்பெண்கள் இருக்கும் பகுதி அருமையாகத் தெரியுது :)

    12க்கு மட்டும் எதுவும் தெரியமாட்டேங்குது.//

    பாபா இப்போ பாருங்க. அதுவும் நல்லாவே தெரியுது!! என்ன கொஞ்சம் அடக்கி வாசிக்குது! :)

    ReplyDelete
  126. //இப்ப சூடுங்க :-)//

    ஆகா வந்துட்டாருய்யா பெனாத்தலு. இவரு ஆண்டாளு அவரு பெருமாளு (ஐயையோ அந்த குட்டிக்கதை எளக்கியவியாதி இல்லை!) இவரு சூடுங்கன்னு குடுத்து அனுப்பறதை அவரு சூடணும். என்னய்யா நடக்குது! :)))

    //கொத்ஸ்.. நல்லா இருந்தது போட்டி.. 12 மட்டும் கொஞ்சம் பெண்டைக் கழட்டிடுச்சு.. பரிசுத் தொகை எவ்வளவு?//

    நன்னி. தொகையாத் தரதா இருந்தா கணக்கு எதுக்கு. போட்டுக் குடுங்க சாமி!

    ReplyDelete
  127. இ- வ

    6 லாடு

    மே கீ

    2 பாக்கு

    4 நிலா

    13 ஸ்தூபி

    ReplyDelete
  128. //அடடா! திடு திப்புன்னு போட்ட என்ன பண்னறது?
    நாளை காலை வரேண்ணா! இப்ப தூக்கம் வந்திருச்சு.//

    திவா இனி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிவாக்கில் போடலாம் என ஐடியா. குறிச்சு வெச்சுக்குங்க.

    //ஆமா பிட்டுக்கு படம் போடாம என்ன செய்யறீங்க? ஒரு சிலந்தி வலை, கரையான் புத்து, தூக்கணாங்குருவி கூடு- எதுவுமா கிடக்கலே? :-(//

    அது ஒரு சோகக்கதை. அப்புறமாப் பேசலாம்.

    ReplyDelete
  129. //உள்ளேனய்யா மட்டும் போட்டுக்கறேன். போன முறை பிரிண்ட் எடுத்த மறுநாள் விடை எல்லாம் பப்ளிஷ் பண்ணியிருந்தீங்க...

    அது மாதிரி நடக்க, இந்த முறையும் 9ஆம் நாள் பிரிண்ட் எடுத்துக்கறேங்கண்ணா!!!//

    நல்லா இருங்க சாமி.

    ஆன்லைனில் மாட்டாமலா போவீங்க. இருங்க வெச்சுக்கறேன்.

    ReplyDelete
  130. //என்ன கொத்ஸ்...இப்பிடிப் பண்ணீட்டீங்களே!

    ஒன்னும் தேறலை. நல்லா இருங்கய்யா... நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க. :)//

    முயற்சி செய்யாம அழுதா எப்படி? முயற்சி செய்யுங்கப்பா. அப்புறம் வரலைன்னா வாங்க சொல்லித் தரேன்.

    ReplyDelete
  131. //இப்படிப் பட்ட புதிர்களை நமக்குக் கொடுக்கும் கொத்ஸ்க்கு தமிழ்ச் செம்மல் என்ற பட்டத்தைக் கொடுக்கிறேன்.//

    யப்பா ராசா, அண்ணா நூற்றாண்டு விழா பட்டிமன்றத்தில் உட்கார்ந்த மாதிரி இருக்கு. பேச வேண்டிய மேட்டரை விட்டுட்டு பட்டம், காத்தாடி எல்லாம் குடுத்துக்கிட்டு இதெல்லாம் நமக்கு வேண்டமப்பூ!!

    (ஒன் டவுட், பட்டிமன்றம் அப்படின்னு பேர் வெச்சதுனாலதான் அம்புட்டு நன்றி விசுவாதத்தைக் காமிக்கறாங்களா?) :))

    ReplyDelete
  132. //போன தடைவை - ஒரு சிலவற்றை முயன்று, அப்புறம் முழுசா முடிக்க இயலாமலேயே போய்விட்டது. இந்த முறை முயல்கிறேன்.
    அப்புறம் மேக்கில் கட்டங்கள் சரியா தெரியவில்லை!//

    ஜீவா,

    உலாவிகளைப் பொறுத்த வரை எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், க்ரோம் மூன்றிலுமே சரியாகத் தெரிகிறது. ஆனால் எல்லாமே விண்டோஸில்தான். மேக் பற்றித் தெரியலையே. நம்ம டெக் நண்பர்கள்தான் உதவணும்.

    மேக்கால தெரியலைன்னா என்ன கிழக்கால போய் பாருங்க சாமி! :)

    ReplyDelete
  133. //அடேயப்பா! இன்னும் பத்து நாளு இருக்கில்ல.......//

    வாத்தியார்கள் எல்லாம் என்ன சொல்லுவாங்க? கடைசி நேரம் வரைக்கும் சும்மா இருந்துக்கிட்டு அப்புறம் அவதி அவதின்னு எழுதாதீங்க. முதலிலேயே ப்ளான் பண்ணி எழுதுங்க அப்படின்னு.

    ஆனா இங்க இந்த வாத்தியாரைப் பாருங்கப்பா!

    ReplyDelete
  134. 3 பழனி

    17 துகள்

    2 பாக்கு

    4 நிலா

    17 ஸ்தூபா

    15 காது

    ரொம்ப யோசிக்க கூட இல்ல ஏதோ சட்டுன்னு தோணினத எழுதியிருக்கேன்.!!

    ReplyDelete
  135. ரீச்சர் பேப்பரைக் கரெக்ட் பண்ணக்கூடிய ஒரு வாய்ப்பு!! விட்டுடுவோமா!!

    அட ரீச்சர் போட்ட வரையில் நூத்துக்கு நூறு!! ஆனா 18 கேள்வியில் பதில் சொல்லி இருக்கிறது நாலே நாலுதானே!! சீக்கிரம் பேப்பரை எழுதி முடியுங்க ரீச்சர்!!

    இவ 6
    மேகி 2 4 13

    சரியான விடைகள்!

    ReplyDelete
  136. வாங்க ராதாக்கா!! ரொம்ப நாள் ஆச்சு!!

    இவ 3 17
    மேகி 2 4 13 15

    எல்லாமே சரி!! சபாஷ் சரியான துவக்கம்!! :)) இன்னும் ஒரு ரவுண்ட் வந்து மீதி விடைகளைப் போடுங்க!

    ReplyDelete
  137. //நன்னி. தொகையாத் தரதா இருந்தா கணக்கு எதுக்கு. போட்டுக் குடுங்க சாமி!//

    கொத்தனார் இஸ் பேட்.
    கொத்தனார் மோசமானவர்.
    கொத்தனார் கராப் ஆத்மி ஹை.

    இதை உங்க தங்கமணிக்கு அனுப்பி "போட்டுக் கொடுத்துட" லாமா சொல்லுங்க..

    ReplyDelete
  138. இடமிருந்து வலம்


    3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
    பழநி

    7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
    சுயம்


    14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
    சகா

    17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)
    துகள்

    மேலிருந்து கீழ்


    2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
    பாக்கு

    3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
    பதற்றம்*

    4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
    நிலா*

    13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
    ஸ்தூபி*(இது ரொம்ப நேரா இருக்கே?!)

    15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)
    காது


    மொதல்ல இதெல்லாம் கரீட்டான்னு சொல்லுங்க. மத்ததெல்லாம் அப்பாலிக்கா பாக்கலாம். "*" போட்டதெல்லாம் டவுட்டாருகு!!

    ReplyDelete
  139. இடமிருந்து வலம்


    3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3) - பழநி

    5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)- நிலைக்காத

    6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2) - குழப்பமாயிருக்கு!?

    7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3) - சுயம்
    8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2) - கறவை மாடு?!(கசப்பு உதைக்குது)
    11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)- மலைமகள்
    12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3) - என்னதுய்யா இது? "சலவை"யா?
    14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2) - சகா
    16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5) -கஸ்தூரிபா
    17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3) - துகள்


    மேலிருந்து கீழ்


    1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2) - அநியாய விலை (இதெல்லாம் ரொம்ப அநியாயம்யா!!)

    2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3) - பாக்கு
    3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5) - பதற்றம்
    4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2) - நிசி, நிலா, நில், இப்படி நெறைய தோனுது. கன்ப்ஃயூஸ்டா இருக்கு.
    9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6) - அடப் போங்கப்பா!!
    10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5) - நகங்கள்
    13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3) - ஸ்தூபி
    15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2) - காது

    ReplyDelete
  140. வாங்க யோசிப்பவரே!! காணுமே ஒரு மெயில் விட்டுக் கூட்டிக்கிட்டு வரணுமான்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்!!

    இரண்டு இன்ஸ்டால்மெண்டில் பதில் சொல்லி இருக்கீரு. மொத்தமாப் பாத்திடலாம்.

    இவ 3 5 7 8 14 16 17
    மேகி 1 2 3 4 10 13 15

    இவை எல்லாம் சரியான விடைகள். மற்றவை இன்னும் ஒரு ரவுண்ட் அடியுங்க. சிலது எல்லாம் புரியலைன்னு சொல்லி இருக்கீங்க. பதில் வரும் வரைக் காத்திருக்கவும். :))

    ReplyDelete
  141. //இதை உங்க தங்கமணிக்கு அனுப்பி "போட்டுக் கொடுத்துட" லாமா சொல்லுங்க..//

    உம்ம பேர் பெனாத்தல் சுரேஷா? இல்லை நாரதரா? ஒரே கன்பியூஷன்!! நாராயண நாராயண!

    ச்சீ அது நீர் சொல்ல வேண்டிய டயலாக். முடியலைப்பா!! :))

    ReplyDelete
  142. 11 இ.வ. கரெக்டு இல்லையா?

    ReplyDelete
  143. யோசிப்பவரே

    11 - சரியான விடை இல்லை. கொஞ்சம் யோசிச்சா நீங்க செஞ்ச தப்பு உங்களுக்கே தெரியும்!

    ReplyDelete
  144. 6) இ.வ. - லாடு
    9) மே.கீ - மாற்றுப்பாதை(இருய்யா! உன்னை உதைக்கிறேன்!!;-))
    11) அது பார்வதிக்கும், லக்ஷ்மிக்கும் சின்ன கன்ஃப்யூஷன் ஆயிருச்சு - அலைமகள்
    இன்னும் 12 மட்டும் பாக்கி.

    ReplyDelete
  145. பாக்கு,பழநிலாடு

    அம்முட்டுத்தான் தெரிஞ்சிச்சி

    ReplyDelete
  146. யோசிப்பவரே,

    6 9 11 மூணும் இப்ப சரி!!

    யாருக்கு ஆட்டோ அனுப்பறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருப்பீங்களோ!!

    இன்னும் ஒண்ணே ஒண்ணுதான்.

    ReplyDelete
  147. சங்கரு

    மூணு பதிலை ஒண்ணாப் போடத் தெரியுது. ஆனா அப்புறம் வேற எதுவும் தெரியாதுன்னு பம்மினா எப்படி!! வந்து வேலையைக் காட்டும்வோய்!!

    இவ 3 6
    மேகி 2 4

    போட்ட நாலும் சரி! :)

    ReplyDelete
  148. 12) ”அறுவை”யாம். மண்டபத்துல சொன்னாங்க. துணிக் குறிப்பு இல்லாமலிருந்தால்(என்னதான் செந்தமிழ் அர்த்தமிருந்தாலும்), ரொம்ப குழப்பியிருக்காதுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  149. யோசிப்பவரே

    இன்னைக்கு நைட் ஒழுங்கா தூங்குவீரு தானே!! :))

    12 - சரியான விடைதான்!! :))

    ReplyDelete
  150. Sorry, no tamil fonts at office..

    L-R:

    6. laadu
    16. ka-s-tu-ri-ba (kasturiba)

    T-B:

    10. Nakangal
    13. Stupa

    -singamle ace

    ReplyDelete
  151. L-R:

    3. pazani


    T-B:

    3. Pathatram

    ReplyDelete
  152. ஏஸ்! இந்த ரவுண்டில் போட்டது எல்லாமே சரி! சிங்கம்லே நீயி!! :))

    இவ 3 6 16
    மேகி 3 10 13

    ReplyDelete
  153. எத்தனை தவறோ அதைக் கழித்துக் கொண்டு ....

    இவ:
    3 பழநி
    5 **க்காத (இது எப்படி?)
    6 லாடு
    8 கறவை மாடு
    14 சகா
    17 துகள்

    மேகீ
    3 பதற்றம்
    4 நிலா
    10 நகங்கள்
    13 ஸ்தூபி
    15 காது

    ReplyDelete
  154. வாங்க தருமி!!

    ஏன் உனக்கு மயக்கம் ஏன் உனக்கு தயக்கம் ஏன் உனக்கென்ன ஆச்சு?! :))

    போட்டது எல்லாம் சரிதாங்க.

    இவ 3 6 8 14 17
    மேகி 3 4 10 13 15

    பத்தும் சரியான விடைகள்.

    எப்படி வந்ததுன்னு தெரியாத விடைகளுக்கு அடுத்த பதிவு வரை வெயிட் பண்ணுங்க. சொல்லறேன்.

    ReplyDelete
  155. ///ஆனா அப்புறம் வேற எதுவும் தெரியாதுன்னு பம்மினா எப்படி!! வந்து வேலையைக் காட்டும்வோய்!!///

    இதைப் படிச்சுட்டு யோசிச்சதுல இருக்குற கொஞ்ச நஞ்ச)மூளை கொதிச்சதுதான் மிச்சம்

    17-இவ---துகள்

    இத்தோட நான் அப்பீட்டு..மீதி விடைகளை கொத்தனார் நோட்ஸ் பாத்து தெரிஞ்சுக்குறேன்.

    ReplyDelete
  156. சங்கரு

    நோட்ஸுக்கு வெயிட் பண்ணப் போறீங்களா? நல்லா இருங்கடே!

    17 - சரியான விடை

    ReplyDelete
  157. எதோ என்னால் முடிந்தது:
    இவ
    3 பழநி
    6 லாடு
    7 சுயம்

    மே.கி

    1. அநியாய விலை
    2 பாக்கு
    4 நிலா
    13 ஸ்தூபி

    ReplyDelete
  158. கால்கரி சிவாண்ணா, போட்ட விடைகள் எல்லாம் சரி!! மத்தது கூட முயற்சி செய்யுங்க!!

    இவ 3 6 7
    மேகி 1 2 4 13

    சரியான விடைகள்!

    ReplyDelete
  159. ஆக இப்போதைக்கு முடிஞ்சது இம்புட்டுதான்:

    இவ.
    3 பழநி
    5 நிலைக்காத
    6 லாடு
    7
    8 கறவை மாடு
    11
    12
    14 சகா
    16 கஸ்தூரிபா
    17 துகள்

    மேகி
    1 அநியாய விலை
    2 பாக்கு
    3 பதற்றம்
    4 நிலா
    9 மாற்றுப் பாதை
    10 நகங்கள்
    13 ஸ்தூபி
    15 காது

    ReplyDelete
  160. தருமி

    போட்டது எல்லாம் சரிதான்.

    இவ 7, 11 முயற்சி செய்யுங்க. சுலபம்தான்.

    இவ 3 5 6 8 14 16 17
    மேகி 1 2 3 4 9 10 13 15

    இவை அனைத்தும் சரியே!! :)

    ReplyDelete
  161. கால்கரி சிவாண்ணா,

    இவ 14
    மேகி 15

    இது ரெண்டுமே சரியான விடைதான்!

    ReplyDelete
  162. இவ 12 அறுவை
    இது உங்கள் இடுகை குறித்த பின்னூட்டம் அல்ல.
    ;-)

    ReplyDelete
  163. பாலா

    12 இவ சரியான விடை! அகராதியைப் புரட்டிப் பார்த்தீங்களா? :)

    நல்ல வேளை இடுகையைப் பற்றின விமர்சனம் இல்லைன்னு சொல்லிட்டீங்க. உண்மையான ஆப்புரேசலா ஆகி இருக்கும்! :)

    ReplyDelete
  164. அடுத்த தவணை:
    இவ:
    5. நிலைக்காத

    7. சுயம்

    11. அலைமகள்

    17. துகள்


    மேகீ:
    1.அநியாயவிலை

    ReplyDelete
  165. ஜீவா

    இவ 5 7 11 17
    மேகி 1

    எல்லாமே சரியான விடை!!

    ReplyDelete
  166. இ -வ

    14 ஆகா

    மே-கீ

    15 காது

    ReplyDelete
  167. ரீச்சர்

    இவ 14 - இல்லையே!!

    மேகீ 15 - சரிதான்.

    ReplyDelete
  168. //அகராதியைப் புரட்டிப் பார்த்தீங்களா? :)//
    இல்லை. இடையெழுத்து தெரிந்தும் பதில் இவ்வளவு கடினமாக இருக்குமா ? ஏன் நமக்கு இவ்வளவு நேரம் ஆகிறது என்று "திட்டி"ப்பார்த்தவுடன் முதலெழுத்து கிடைத்துவிட்டது :-)

    உங்கள் அட்டவணையில் இடமிருந்து வலமாகக்கூட்டிப்பார்த்தால் புதிர்க்கேள்விகளின் எளிமை / கடினம் குறித்துத் தெரிந்துகொள்ளலாமா ?

    ReplyDelete
  169. இட- வலம்:

    7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3) சுயம்

    11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5) அலைமகள்

    மேலிருந்து கீழ்

    1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2) அநியாயவிலை

    ReplyDelete
  170. 10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5) பிள்ளைகள்

    ????????

    ReplyDelete
  171. இவ - 7. சுயம்

    11 & 12 :(

    ReplyDelete
  172. திவா

    இவ 7, 11
    மேகீ 1

    சரியான விடைகள்!

    ReplyDelete
  173. மேகீ 10 தவறான விடை.

    ஆத்திரத்தில் கடித்துத் துப்புவது இதுவா? ஐயா, உள்ள தள்ளிடப் போறாங்க!! :))

    ReplyDelete
  174. தருமி

    இவ 7 சரியான விடை!

    இவ 11 நீங்க நினைக்கிற அளவு கஷ்டம் இல்லைங்க!!

    ReplyDelete
  175. பாலராஜன்,

    நீங்கள் கேட்டுக் கொண்டது போல் இடது ஓரத்தில் ஒவ்வொரு கேள்விக்குமான சரியான விடைகளின் எண்ணிக்கை இப்பொழுது உள்ளது.

    இதிலிருந்து அனைவரும் எளிதாகப் போட்ட விடைகள் எவை, சிலரே போட்டு முடித்து இருக்கும் விடைகள் எவை எனத் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  176. அனேகமாக கடைசி தவணை (இவ 12 புரிபடலை!)
    இவ

    8. கறவை மாடு

    12. தூற்று
    (??)

    மேகீ

    10. ரகங்கள்
    9. மாற்றுப்பாதை

    ReplyDelete
  177. தாட் ப்ளாக் வந்திருச்சி.

    //ஆத்திரத்தில் கடித்துத் துப்புவது இதுவா? ஐயா, உள்ள தள்ளிடப் போறாங்க!! :)) //

    ம்ம்ம்...நமக்கு கோபம் வந்தா மாட்டிகிறது பாவம் வீட்டில இருக்கறவங்கதானே?! :-(
    // _ள்_கள்// கொஞ்சம்தண்ணி காட்டுது. :-))

    ReplyDelete
  178. ஜீவா

    இவ 8 சரி
    மேகீ 9 சரி

    மேகீ 10 - ஜஸ்ட்ல மிஸ்!
    இவ 12 - பயப்படக்கூடாது. தைரியமா போடுங்க.

    ReplyDelete
  179. திவா

    ஏன் தண்ணி காட்டுது தெரியுமா? வந்த எழுத்துக்களை சரியா நோட் பண்ணாம தப்பா போட்டு யோசிக்கறீங்க.

    கட்டத்தில் சம்பந்தப்பட்ட சொற்களை மீண்டும் நிரப்பி யோசிச்சுப் பாருங்க!!

    ReplyDelete
  180. //ஏன் தண்ணி காட்டுது தெரியுமா? வந்த எழுத்துக்களை சரியா நோட் பண்ணாம தப்பா போட்டு யோசிக்கறீங்க. //

    ஹிஹி...ஆமா.

    மே-கி 10: நகங்கள்.

    ReplyDelete
  181. இ.கொ

    புதிர் ரொம்ப கஷ்டமாயும் இல்லை, ரொம்ப சுலபமாயும் இல்லை.
    சரியான கடின பதம்ன்னு நினைக்கிறேன்.
    :-))
    ஒவ்வொரு மாசமும் 15 ஆம் தேதின்னு சொல்றீங்க. என்ன மாதிரி ஆசாமிக்கு சனி அல்லது ஞாயிறுதான் சரிப்படும்.
    ம்ம்ம்......... ஆனா வலையுலகமே வார நாட்கள்லதானே இயங்குது.
    போகட்டும். பரவாயில்லை. மீ த பர்ஷ்டு எனக்கு தேவையில்லை. போட முடிஞ்சா போதும்.

    நன்றி.

    ReplyDelete

மறுமொழியா? பின்னூட்டமா? பேரில் என்ன இருக்கு? ஆக வேண்டியதைப் பாருங்க!