இனி நான் தயார் செய்த புதிரைப் பாருங்க. இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
1 | 2 | 3 | ||||
4 | ||||||
5 | 6 | |||||
7 | 8 | |||||
9 | ||||||
10 | 11 | |||||
12 | ||||||
13 | 14 |
இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
மேலிருந்து கீழ்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)
புதிருக்கான ஆலோசனைகளைத் தந்த வாஞ்சிக்கும் இது போன்று நிரப்பக் கூடிய கட்டங்களை செய்து தந்த கே.ஆர்.எஸ்ஸுக்கும் எனது நன்றிகள்.
இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
128 comments:
ம்! ஸ்டார்ட் தி மியூஜிக்!! :)
மீ தி மியூஜிக் பர்ஷ்ட்டூ! :)
இந்த ஆட்டத்துக்கு மீ தி அலவுட்?
//மீ தி மியூஜிக் பர்ஷ்ட்டூ! :)//
உம்ம போணி! இன்னிக்கு வியாபாரம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
//இந்த ஆட்டத்துக்கு மீ தி அலவுட்?//
வொய் நாட்? 'மீதி' எல்லாரும் அலவுட்!! :))
நீங்களும் அலவுட்தான்வோய்! :))
இதே பதிவை மாதவி பந்ததலில் நேத்து பார்த்தேனே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இதே பதிவை மாதவி பந்ததலில் நேத்து பார்த்தேனே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
கிட்டத்தட்ட இதே பதிவை! :))
அவரு நமக்காக டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தாருங்க. எல்லாம் சரியான பின்னாடி நம்ம பதிவில் போட்டாச்சு. அம்புட்டுதான்.
(மத்தபடி நாந்தான் அந்த அழகிய ஆன்மீகச் செம்மல் என்ற கதையை நீங்கள் நம்ப வேண்டியது இல்லை!)
கொடுத்திருக்கிற புதிர்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப யோசிக்க வைக்கிது ரொம்ப சிம்பிளா சொல்லலாம்னா இதுதான் மாட்டுது!
//இலவசக்கொத்தனார் said...
ம்! ஸ்டார்ட் தி மியூஜிக்!! :)
//
ரிப்பிட்டேய்
நான் அப்பிடியே ஒரு ஓரமா குந்திக்கினு வெயீட்டீஸ் விட்டுக்கிறேன் அப்பாலிக்கா வந்து ஆன்ஸர் சொல்லிட்டு போங்கப்பு!
//தமிழ் பிரியன் said...
இதே பதிவை மாதவி பந்ததலில் நேத்து பார்த்தேனே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
கொத்தனார் "தெருவடிகளே" ஜரணம்! :)))
//(மத்தபடி நாந்தான் அந்த அழகிய ஆன்மீகச் செம்மல் என்ற கதையை நீங்கள் நம்ப வேண்டியது இல்லை!)//
ஆஹா! அவந்தானா நீயி!!
இவ்வளவு கஷ்டமான விளையாட்டா? மீ தி எஸ்கேப். ;-)
கொத்தனார்,
எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கு. ஒரு வருசத்துக்கு முன்னாடி நீங்க 'என்னால் முடியும் தம்பி'ன்னு சொன்னது. இப்ப cryptic குறுக்கெழுத்தா அதையே ஜிலேபி மாதிரி சுத்தி சுத்தி கொண்டு வந்திட்டிங்க.
ஏதாவது 1,2 பதில் கிடச்சதுன்னா மேல முயற்சிக்கலாம். இல்லைன்னா நானும் அப்படி ஓரமா குந்திக்கிட்டு கைதட்டிக்கிட்டு இருக்கேன்.
//'மீதி' எல்லாரும் அலவுட்!! :))
'மீதி', 'பாதி'ன்னு இன்னமும் 'சங்கர நாராயணன்' போஸ்ட்லேர்ந்து மீளலையா நீங்க?
//ஆஹா! அவந்தானா நீயி!!//
அது எப்படி பந்தல்ல ஆன்மீக அறுசுவையும், இலவசமா குறுக்கெழுத்துப் போட்டியுமா ஒரே ஆளு பல்வேறு அவதாரங்கள்ல அமர்க்களம் பண்றீங்க :-)
இடமிருந்து வலம்
4. மேரு
14. மரம்
10. இந்தியா
மேலிருந்து கீழ்
11.யாகம்
8. தந்தி
இப்போதைக்கு இது, மீதி யோசிச்சுட்டு வர்றேன்
ரொம்ப சுத்தலில் விடுறிங்க, விடையெல்லாம் கண்டுபிடித்துவிட்டேன். :)
வீணுக்கு நிறைய குழப்பம்.
விட்டுத் தள்ளுங்கையா!
அப்புறம், வீட்டுல ஒரு சின்ன வேலையிருக்கு .
இலவசமென்றில்லை;
காசும் கூடக்கொடுத்துவிடுகிறேன். கொஞ்சம் வந்து
பூசிக் கொடுக்கமுடியுமா?
இடமிருந்து வலம்
7.உதவி
12. காலை
13. திருடு
மேலிருந்து கீழ்
4. மேடு
இடமிருந்து வலம்
9. அம்மா
மேலிருந்து கீழ்
9..அந்தாதி
நெறைய பின்னூட்டம் வாங்குறதுக்கு இது ஒரு உத்தியோ ?
ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க.( எனக்கு மூளை கம்மி அப்பிடீங்குறதை வேறெப்பிடி ரீஜன்டா சொல்லுறது ?)
நாங்களெல்லாம் ராணி புத்தகத்தில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியையே ரொம்ப யோசிச்சு தப்பா போடுறவங்களாக்கும்.
குறுக்கே:
4. மலை
10. இந்தியா
12. காலை
14. மரம்
மே.கீழ்
2. கலை
8. தந்தி
11. யாகம்.
அவ்வளவுதான்.முடிந்தால் மீதியையும் எழுதுகிறேன்
சகாதேவன்.
புதிரைப் பார்க்கையிலே மிகக் கடினமானதாகத் தெரிந்தது. ஆனால் விளையாடிப் பார்க்கையிலே மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது. மிக நல்ல முயற்சி.
என்னுடைய பதில்கள்
இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) - வசவு?
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3) - கருது
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2) - மலை
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4) - கையூட்டு
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3) - இதம்
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3) - அம்மா
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4) - இந்தியா
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2) - காலை
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3) - திருடு
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3) - மரம்
மேலிருந்து கீழ்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3) - வருகை
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2) - கலை
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4) - துயரம்
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2) - மடு
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3) - யூகம்
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3) - தந்தி
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4) - அந்தாதி
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2) - இலை
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3) - யாகம்
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2) - காடு
இன்னும் விடை.
குறுக்கே
2. கருது
5. கையூட்டு
7. இதம்
13. திருடு
மே.கீழ்
4. மடு
6. யூகம்
12. காடு
சகாதேவன்
இன்னும் விடை.
குறுக்கே
2. கருது
5. கையூட்டு
7. இதம்
13. திருடு
மே.கீழ்
4. மடு
6. யூகம்
12. காடு
சகாதேவன்
Across
2 - கருது
4 - மலை
7 - இதம்
9 - அம்மா
10 - இந்தியா
12 - காலை
13 - திருடு
14 - கரம்
Down
2 - கலை
3 - துயரம்
4 - மடு
8 - தந்தி
9 - அந்தாதி
11 - யாகம்
12 - காடு
ஹரிஹரன், மும்பை. Id and password forgotten.
சின்ன அம்மிணி,
இ.வ. (இடமிருந்து வலம், இட்லி வடை இல்லை!)
4, 14 - தவறு
10 - சரி
7 - தவறு
12, 13 - சரி
9 - சரி
மே.கி. (மேலிருந்து கீழ். பஞ்சதந்திரம் ரம்யா கிருஷ்ணன் இல்லை!)
11, 8 - சரி
4 - தவறு
9 - சரி
சகாதேவன், புதுசா நம்ம பக்கம் வந்திருக்கீங்க போல! வாங்க வாங்க!
இவ
4,10,12 - சரி
14 - தவறு
2,5,7,13 - சரி
மேகி
2,8,11 - சரி
4,6,12 - சரி
தல கைப்ஸ்,
இவ
1, 14 - தவறு
2,4,5,7,9,10,12,13 - சரி
மேகி
1,2,3,4,6,8,9,10,11,12 - சரி
ரெண்டே ரெண்டுதான் போடணுமா! சபாஷ்!
ஹரிஹரன்,
இவ
2,4,7,9,10,12,13,14 - சரி
மேகி
2,3,4,8,9,11,12 - சரி
போட்டது எல்லாம் சரி! மீதி எங்க? :))
//கொடுத்திருக்கிற புதிர்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப யோசிக்க வைக்கிது //
ஆயில், புதிர் என்றால் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
//நான் அப்பிடியே ஒரு ஓரமா குந்திக்கினு வெயீட்டீஸ் விட்டுக்கிறேன் அப்பாலிக்கா வந்து ஆன்ஸர் சொல்லிட்டு போங்கப்பு!//
இப்படி எல்லாருமே குந்திக்கினு இருந்தா குதிக்கிறது யாரு? சொம்மா வந்து குதிம்மே!
//கொத்தனார் "தெருவடிகளே" ஜரணம்! :)))//
நல்லா இரும்! :))
//ஆஹா! அவந்தானா நீயி!!//
ஆஹா! ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க!!
இ-வ
14. அரம்
கைப்ஸ்.
14 இவ - இதுவும் இல்லை! :)
mmmm.
மீதி நாளைக்கு. இப்ப தூக்கம் வருது! ;-)
இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2) மலை
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4) ஊட்டி
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3) இதம்
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3) அம்சா ?
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4) இந்தியா
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2) காலை
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3) திருடு
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3) மரம்?
மேலிருந்து கீழ்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2) கலை
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4) துயரம்
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2) மடு
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3) யூகம்
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3) தந்தி
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4) அந்தாதி
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2) இலை
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3) யாகம்
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2) காடு
வாங்க திவா.
இவ
4 - சரி
5 - தவறு. நாலு எழுத்து வேணுமே.நீங்க மூணுதானே போட்டு இருக்கீங்க. கட்டங்களில் நிரப்பிப் பாருங்க.
7 - சரி
9 - தவறு
10,12,13- சரி
14- தவறு
மேகி
2,3,4,6,8,9,10,11,12 - சரி
நல்ல முயற்சி. முடிக்காம தூங்கப் போன தூக்கம் வருமா? :))
எங்கயா போயீருந்தீர் இவ்வளவு காலம்..
சென்னையில் பார்த்ததா யாரோ சொன்னார்களே
சரி அண்ணாச்சி சொல்றீங்களேன்னு கொஞ்சமா யோசிச்சது!
இடமிருந்து வலம்:-
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
நேபாள்
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும்
குடை
14.அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா?
கத்தி
மேலிருந்து கீழ்
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி
ஆகுதி
12.முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ
குடி
கொஞ்சமாச்சும் சரியா இருக்கா?
ஆயில்,
என் பேச்சைக் கேட்டு முயற்சி செஞ்சதுக்கு நன்றி. ஆனா நீங்க இந்த மாதிரி cryptic புதிர்களை விடுவிப்பது எப்படின்னு புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன்.
பதிவில் குடுத்து இருக்கும் சுட்டியில் வாஞ்சி அவர்கள் குடுத்து இருக்கும் அறிமுகத்தைப் படிச்சுப் பாருங்க.
சுருக்கமா சொல்லணமுன்னா ஒவ்வொரு குறிப்பும் இரு பகுதிகளைக் கொண்டது. ஒரு பகுதி விடையின் பொருளைச் சொல்லும். மற்றொன்று அதனை வேறுவிதமாக கண்டுபிடிக்க குறிப்புகள் தரும்.
உதாரணமாக -
நடு இரவில் சூரியன்! (2)
விடை: ரவி. இதன் பொருள் சூரியன், இந்த விடையே `இரவில்’ என்ற வார்த்தையின் நடுவில் வந்துள்ளது. விடை எத்தனை எழுத்துகள் கொண்டது என்பதை இறுதியில் இருக்கும் எண் குறிக்கிறது.
இக்குறிப்புகளைக் கொண்டு மீண்டும் முயன்று பாருங்களேன்!
இடமிருந்து வலம்
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (கருது)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (மலை)
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (இதம்)
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (அன்பு)
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (இந்தியா)
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (காலை)
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (திருடு)
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (கரம்)
மேலிருந்து கீழ்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (குருவி)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (கலை)
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (துயரம்)
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (மன்)
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (தந்தி)
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (அந்தாதி)
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (இலை)
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (யாகம்)
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (காடு)
சரியா?
1, 5, 6 க்கு ஏதாவது குறிப்புக் கொடுங்கள்.
இடமிருந்து வலம்
4. மலை
5. ஊட்டல்
7. இதம்
10 இந்தியா
12.காலை
13.திருடு
14 கரம்
மேலிருந்து கீழ்
2. கலை
8. தந்தி
11.யாகம்
12.காடு
வாங்க வடக்கரை வேலன்
இவ 2,4,7 - சரி
இவ 9 - என்ன அன்பு அப்படின்னு பதில் சொல்லிட்டீங்க. அதான் குறிப்பிலேயே இருக்கே.
இவ 10,12,13,14 - சரிதான்.
மேகி 1,4 - தவறு
மேகி 2,3,8,9,10,11,12 - சரி
1,5,6 குறிப்புதான் ஏற்கனவே இருக்கே!! :)) கொஞ்சம் இருங்க. மத்தவங்க எல்லாம் முயற்சி செய்யட்டும். அப்புறமா சொல்லறேன்.
தருமி,
இதுக்கா இவ்வளவு தயக்கம்!
இவ 4,7,10,12,13,14 - சரி
இவ 5 - சரி இல்லை
மேகி 2,8,11,12 - சரி
//2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3) கருது
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4) கையூட்டு//
5 கண்டு பிடிச்சுட்டேன். எழுதாம விட்டுட்டேன்.
தூக்கம்தானே? எப்ப வேணா எங்கே வேணா தூங்குவோம்!
sleeping over problem ன்னு கேள்வி பட்டு இருக்கீங்கதானே?
/14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3) கரம்//
ippa veelaikku ootaNUm mathiyam miithi 2
/1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3) வருகை//
//9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3) அம்மா//
1 இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) வசவு
இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) வ சவு
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3) கருது
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2) மலை
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4) கையூட்டு
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3) இதம்
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3) அம்மா
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4) இந்தியா
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2) காலை
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3) திருடு
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3) கரம்
மேலிருந்து கீழ்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3) வருகை
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2) கலை
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4) துயரம்
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2) மடு
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3) யூகம்
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3) தந்தி
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4) அந்தாதி
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2) இலை
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3) யாகம்
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2) காடு
இப்ப சில விடைகள். பிறகு மீதி.
இவ:
2: கருது
4: மலை
7: கீதம்
9: அம்மா
10: இந்தியா
13: திருடு
14: அரம்
மேகீ:
2: கலை
3: துயரம்
4: மடு
8: தந்தி
9: அந்தாதி
10: இலை
11: யாகம்
12: காடு
1, 5, 6 தான் சுத்தி விடுது. :-((
மேகீ:
6: யூகம்
கொத்தனாரே! அச்செடுக்காமல் விடைகளை நேரடியாக
நிரப்பும் வழியை வைத்து அசத்தியிருக்கிறீர்கள். உங்கள் நண்பர் கே. ஆர். எஸ்ஸுக்கும் பாராட்டுகள்.
அது சரி என்னைப் போய் புலி என்று சொல்லி வைத்துவிட்டீர்களே? பாய்ந்து காட்ட எல்லாம் நமக்கு முடியாது!
விடைகளை அம்பலப்படுத்தும்போது நான் கொஞ்சம் ஏதாவது கருத்து சொல்லை வைக்கிறேன்.
ஒரமா குந்தியிருக்கிறவர்களெல்லாம் எழுந்து வந்து குதியுங்கள் மைக்கெல் ஃபெல்ப்ஸ் மாதிரி ஏழெட்டு தங்கம் அள்ள முடியாவிட்டாலும் நமக்கே ஒரு திருப்தி வரும்.
கவிதை, கதையை ரசிக்கும் போது என்ன அழகாக சொல்லியிருக்க்இறார் என்று எழுதியவர்ஐப் பாராட்டுவோம். ஆனால் புதிர்களைத் தீர்க்க முயலும்போது ஆசிரியரைப் பாராட்டுவதோடு நமக்கும் விடை சிக்கிவித்தத்ஹே என்ர ஒரு பெருமிதம் வரும்.
---- வாஞ்சிநாதன்
இ-வ
14. கரம்
இதோ சில கரெக்ஷன்ஸ்
7 - இதம்
14 - மரம்
5 - கையூட்டு
1 (இவ) - பாதுகை
1 (மேகீ) - பாவம்
தவறுதலாக 1-க்கான விடைகளை மாற்றிப் போட்டு விட்டேன்.
1 (இவ): பாவம்
1 (மேகீ): பாதுகை
1: (இவ) - வம்பு
1: (மேகீ) - வருகை
14: (இவ) - கரம்
திவா,
2,5,14,1,9,
1 இவ - தவறு!
இது ஒண்ணுதான் இன்னும் சரியா போடலை. சீக்கிரம் வந்து போடுங்க! :))
ஸ்ரீதர் - முதல் முயற்சி
இவ
2,4,9,10,13 - சரி
7,14 - தவறு
மேகி
2,3,4,6,8,9,10,11,12 - சரி
கைப்ஸ்,
இவ 14 - சரியான விடை! இப்போ எல்லாம் போட்டாச்சா? இல்லையா?
ஸ்ரீதர் - இரண்டாம் முயற்சி
5,7 சரி
1,14 தவறு
ஸ்ரீதர் - மூன்றாம் முயற்சி
1, 14 - சரி
எல்லாம் போட்டாச்சோ? :))
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
//மகிழ்ச்சி இல்லா மருந்தும்//
இதான் உதைக்குது. பாக்கலாம். that was a shot in the dark.
இ.வ
4. மலை
5. இடுகாடு/சுடுகாடு
7.இதம்
10.இந்தியா
12.காலை
13.திருடு
14.போதும்
மெ.கீ
2.கலை
4.மடு
8.தந்தி
10.இலை
11.யாகம்
12.காடு
கொத்தனார் அவர்களே!
இவ:
1.
2.
4. மலை
5.கையூட்டு
7.இதம்
9.
10.இந்தியா
12.காலை
13.
14.மரம்
மேகீ:
1.
2.கலை
3.துயரம்
4.மடு
6.யூகம்
8.தந்தி
9.
10.இலை
11.யாகம்
12.காடு
_________________________________
இவ்வாறான புதிர்களில் எனக்கு ஆர்வம் இல்லை.உங்கள் புதிர் சற்று எளிதாக, ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. நான் Blogger அல்ல. உங்கள் Blog-ஐ தவறாமல் வாசிக்கும் ஒரு விசிறி. உங்கள் மூலம் பல நல்ல வலைப்பதிவுகளை அறிய கிடைத்தது சிறப்பு.
இடமிருந்து வலம்
4 மலை
9 பழநி
10 இந்தியா
12 காலை
13 திருடு
14 மரம்
மேலிருந்து கீழ்
1 குருவி
4 மடு
8 தந்தி
10 இலை
11 யாகம்
12 காடு
இ.வ
2 - கருது
4 - மலை
7 - இதம்
10 - இந்தியா
12 - காலை
13 - திருடு
14 - அரம்
மே.கி
2 - கலை
3 - துன்பம் (அ) துக்கம் (தப்புதான்!!)
4 - மடு
8 - தந்தி
10 - இலை
11 - யாகம்
12 - காடு
மீதியெல்லாம் தெரியலீங்கோவ்....
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) வன்னி //
இதுக்கு மேலே தோணலை. இது தீச்சொல்லுக்கு பொருத்தமானாலும் மருந்து சமாசாரம் பிடிபடவில்லை.
புத்திக்கு பயிற்சி கொடுத்ததுக்கு நன்றி!
இ.வ.
4.மலை
மே.கி
2. கலை
4. மடு
இ.கொ.,
எனக்கு ஒன்று கூடத் தெரியவில்லை. ஏதாவது ஒரு கொடுங்களேன். கேள்விகள் எல்லாம் எதைப் பற்றியவை? இல்லை பொதுவான கேள்விகளா?
யோசிப்பவரே. பொதுவான கேள்விகள்தான். நான் தந்திருக்கும் சுட்டியில் உள்ள குறிப்பைப் பாருங்கள் எப்படி இப்புதிரை விடுவிப்பது எனப் புரியும்.
//அப்புறம், வீட்டுல ஒரு சின்ன வேலையிருக்கு .
இலவசமென்றில்லை;
காசும் கூடக்கொடுத்துவிடுகிறேன். கொஞ்சம் வந்து
பூசிக் கொடுக்கமுடியுமா?//
ada, therinja nan kuda kupitirupene?? :P :P :P OK, innum puthirai padikkalai, athukkulle result vanthudumnu nambaren! :)))))
இ.கொ,
அலுவலகத்தில் கூகிள் டாக்ஸ் திறக்க முடியாது. அதனால் வேறு ஏதாவது சுட்டி இருக்கிறதா?
மே.கி
3. துயரம்
இ.வ.
2.கருது
7. இதம்
மே.கி
3. துயரம்
இ.வ.
14. கரம்
இ. கொ.,
நீங்கள் அனுப்பிய குறிப்புகளைக் கொண்டு, நான் இந்தப் புதிர் வகையை ஒரு மாதிரியாக புரிந்து கொண்டுள்ளேன்.
4) மலை
5) கையூட்டு
மேற்கண்ட விடைகள் சரியென்றால், எனது புரிதல் சரி என்று நினைக்கிறேன். சரியாக புரிந்து கொண்டிருக்கிறேனா? மேலும் தொடரலாமா?
சாமி,
இ-வ
1. வம்பு
இது ஒன்னு கண்டுபிடிக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சி
இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
(யோசிக்கிறேன்)
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
(யோசிக்கிறேன்)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
மலை
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
கையூட்டு
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
இதம்
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
அம்மா
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
இந்தியா
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
காலை
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
திருடு
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
கரம்
மேலிருந்து கீழ்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
(யோசிக்கிறேன்)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
(யோசிக்கிறேன்)
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
(யோசிக்கிறேன்)
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
மடு
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
(வி)யூகம்
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
தந்தி
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
அந்தாதி
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
இலை
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
(தி)யாகம்
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)
காடு
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
கருது
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
கலை
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
துயரம்
இன்னும் 1 மட்டும்தான் பாக்கி. இருங்கள் யோசிக்கிறேன். யாராவது முடித்து விட்டார்களா?
இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(வம்பு)
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (கருது)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (மலை)
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (கயூட்டு)
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (இதம்)
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (அம்மா)
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (இந்தியா)
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (காலை)
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (திருடு)
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (கரம்)
மேலிருந்து கீழ்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (வருகை)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (கலை)
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (துயரம்)
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (மடு)
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (யூகம்)
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (தந்தி)
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (அந்தாதி)
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (இலை)
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (யாகம்)
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (காடு)
சரியா?
இடமிருந்து வலம்
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
மலை
5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
கையூட்டு
7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
அம்மா
10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
இந்தியா
12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
காலை
13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
திருடு
14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
மரம்
1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
கலை
3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
மடு
6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
யூகம்
8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
தந்தி
9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
அந்தாதி
10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
இலை
11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
யாகம்
12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)
காடு
விடுபட்டவைகளை வேறு நாளில் பார்க்கலாம்
வாங்க மனதின் ஓசை!
இவ 4,7,10,12,13 - சரி
இவ 5,14 - தப்பு
மேகி 2,4,8,10,11,12 - சரி
வாங்க சதீஸ்,
நம்ம பதிவை தொடர்ந்து படிக்கறீங்களா!! :)) நன்றி!!
புதிர்களில் ஆர்வமில்லைன்னு சொல்லிட்டுக் கலக்கறீங்க!!
இவ 4,5,7,10,12 - சரி
இவ 14 - தவறு
மேகி 2,3,4,6,8,10,11,12 - சரி
வாங்க ரீச்சர்!! உங்களுக்கு நான் மார்க் போடப் போறேனா!! பேஷ் பேஷ்!!
இவ 4,10,12,13 - சரி
இவ 9,14 - தவறு
மேகி 4,8,10,11,12 - சரி
மேகி 1 - தவறு
வாங்க விஜய் ஆனந்த்
இவ 2,4,7,10,12,13 - சரி
இவ 14 - சரி
மேகி 2,4,8,10,11,12 - சரி
மேகி 3 - தவறு (ரெண்டு வார்த்தை சொல்லி இருக்கீங்க. அதோட இன்னும் ஒண்ணு யோசியுங்க!)
திவா
1 இவ நீங்க சொன்னது இல்லை!! ஒண்ணே ஒண்ணுதானே!! யோசியுங்க! :))
சின்ன அம்மணி
இவ 4
மேகி 2,4
எல்லாமே சரி!
சின்ன அம்மிணி
இவ 2,7
மேகி 3
எல்லாம் சரி
சின்ன அம்மிணி
இவ 14 - சரி
யோசிப்பவரே
இவ 4,5 சரி!! நீங்க சரியாத்தான் போடறீங்க!!
நடாத்துங்க!
கைப்ஸ்.
போட்டுட்டீரே!! சபாஷ்!!
ஆனாலும் மண்டையைப் பிச்சுக்கிட்டீரு போல!!
ஆனா முழுசும் போட்டதுக்கு வாழ்த்துகள்!
யோசிப்பவர்
இவ 2,4,5,7,9,10,12,13,14 - சரி
மேகி 2,3,4,6,8,9,10,11,12 - சரி
இன்னும் ஒண்ணுதான் போல!!
ஸ்ரீதர் மற்றும் கைப்ஸ் முழுசா முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன். இன்னும் ரெண்டு மூணு பேர் ஒரு வார்த்தைக்கு வெயிட்டிங்!
வாங்க வடகரை வேலன்
இவ 1,2,4,5,7,9,10,12,13,14 - சரி
மேகி 1,2,3,4,6,8,9,10,11,12 - சரி
சபாஷ்! முதல் முயற்சியிலேயே எல்லாம் போட்டாச்சு போல இருக்கே!!
வாழ்த்துகள்!!
வாய்யா வெண்பா வாத்தி. என்ன இம்புட்டு லேட்டு!
இவ 4,5,9,10,12,13 - சரி
இவ 14 - தவறு
மேகி 2,4,6,8,9,10,11,12 - சரி
//விடுபட்டவைகளை வேறு நாளில் பார்க்கலாம்// - அது சரி. நீங்க சொல்லியா நான் சொல்லியா? எம்புட்டு நாள் காத்திருக்கணும்? :))
தனி மடலில் அரசு அவர்கள் அனுப்பிய விடைகள் அனைத்தும் சரி. இவ 1 மட்டும் அவர் விடுவிக்க வேண்டும்!
அட என்னய்யா எல்லாமே சரின்னு சொல்லிட்டீரு? அந்த எழவெடுத்த ஒன்னுதானே வர மாட்டேங்குது? ஏதாவது தப்புன்னு சொல்லிருந்தீர்னா, அதுலேருந்து மறுபடி ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்!!
மேகி : 1)"வருகை"யா?
யோசிப்பவரே
மேகி 1 - சரி :))
இன்னும் என்ன இவ 1 மட்டும்தானே!!
ஆல் தி பெஸ்ட்!
சரி,
குருட்டாம்போக்கில் கடைசி முயற்சி. இ.வ. 1) "வத்தி"யா?
(பி.கு.: இதாவது தப்புன்னு சொல்லுய்யா!!;-))
யோசிப்பவர்,
நீங்க ஆசைப்பட்டது படி 1இவ தப்பு!!
14 - கரம்னு போட்டுக்கோப்பா
ஜீவ்ஸ்,
தனிமடலில் சொன்ன 14இவ சரியான விடைதான்!
கடேசி முயற்சி:
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) வஞ்சி
இது இல்லேன்னா நான் அம்பேல். கைய தூக்கிடறேன்.
//இலவசக்கொத்தனார் said...
கைப்ஸ்.
போட்டுட்டீரே!! சபாஷ்!!
ஆனா முழுசும் போட்டதுக்கு வாழ்த்துகள்!
//
முழுதும் போட்டு முடிச்சதுக்கு, கைப்ஸ்க்கு மட்டும் வாழ்த்துகளா? உம்ம நுண்ணரசியலைப் பாத்து (அப்பாடா இந்த பதிவுலயும் இதைக் கொண்டு வந்தாச்சு) பிரமித்து நிற்கிறேன். :-))
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இந்த ஆட்டத்துக்கு மீ தி அலவுட்?
//
மீ தி எஸ்கேப்பு-ங்கிறதைத்தான் நாஜூக்கா கேட்டிருக்கீங்களா அண்ணாச்சி? :-))
திவா
கையைத் தூக்குங்க! ஆனா இன்னும் ஒரு முயற்சி செய்யப் போவது யாரு என்ற கேள்விக்கா இருக்கட்டும்!! :))
//திவா
கையைத் தூக்குங்க! ஆனா இன்னும் ஒரு முயற்சி செய்யப் போவது யாரு என்ற கேள்விக்கா இருக்கட்டும்!! :)) //
அட விட மாட்டீர் போல இருக்கே!
சரி சரி, இந்தாங்க கடேசி. சரின்னே நினைக்கிறேன்.
1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3) வம்புபு
வ+ களிம்பு - களி
வம்பு என்பது வம்புபு ன்னு டைப் ஆயிடுத்தோ?
1 இ-வ வம்பு
சரியா?
திவா,
கடைசியா 1 இவ சரியாப் போட்டுட்டீங்க!! ஆனா போறேன் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தவரை இழுத்து வந்து போட வெச்சதுக்கு எனக்குத்தான் பரிசு தரணும் போல!!
நீங்க கடைசியாப் போட்ட விடை சரி! சரி! சரி!!
வாழ்த்துகள் திவா! :)
//கடைசியா 1 இவ சரியாப் போட்டுட்டீங்க!! ஆனா போறேன் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தவரை இழுத்து வந்து போட வெச்சதுக்கு எனக்குத்தான் பரிசு தரணும் போல!!//
உண்மைதான் இகோ.
க்ராஸ்வேர்ட் ஒரு அடிக்ஷன். நேரம் போறதே தெரியாம பொய்கிட்டே இருக்கும். அதனால இவ்வளோ நேரம்தான் இதுல செலவிடுவேன்ன்னு இறங்கினேன். உங்க தூண்டுதல் இன்னிக்கு இல்லாம முடிச்சு இருக்க மாட்டேன்.
ஒரு விஷயம் பாருங்க, இவ்வளவு தூரம் தண்ணி காட்டியது ஒரே நிமிஷத்தில் வந்து விட்டது. அதான் க்ராஸ்வேர்ட்!
// வாழ்த்துகள் திவா! :)//
நன்னி!
14 கரம்
இங்க பார்த்து மார்க் போடுங்க சாமி :D
1 ரொம்ப குழப்புது!
1. மே.கி வருகை
இ.வ படத்துல இருக்கறது இல்ல...வேற ஏதோ! காலைல தெம்பா யோசிக்க முயற்சிக்கறேன் :D
ரீச்சர்,
14 இவ - சரியான விடை!
கப்பி,
இப்படிப் படம் பார்த்து விடை சொல்ல வெச்சுட்டீங்களே!! :))
1, 14 இவ - தவறு
மத்தபடி போட்டதில் எல்லாமே சரி!
அப்புறமா வந்து சொன்ன 1 மேகி சரியான விடை! :)
2. கலை
8. தந்தி
6 குதிரை
14 பிளேடு
10.இந்தியா
12.குடை
தேவ்,
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீருன்னு சொன்னா உம்ம தலைவரை கிண்டல் பண்ணறதா நினைப்பீங்க! அதனால வெறும் வாங்க!!
நீங்க போட்டதில் சரியா 50% சரி!!
2,8,10 - சரி
6,12,14 - தவறு
கொஞ்சம் இவ / மேகி எல்லாம் போடுங்கப்பா. மண்டை காயுது!
கொத்ஸ்.. இவ்ளோ சிம்பிளாவா புதிர் போடுவீங்க?.. ச்ச..ச்ச.. இதெல்லாம் என் புத்திசாலித் தனத்துக்கு அவமானம் ஓய்.. நான் இதில் பங்கெடுத்துக் கொள்வது பற்றி யோசிக்கிறேன்..(எதாவது ஒரு பதிலாவது தெரிஞ்சா :P )
.. யய்யாடி.. எம்புட்டு பேர் இதுக்கும் பதில் சொல்லி இருக்காங்க..?.. யாராவது ஒரு பதிலாவது எனக்கு மெயில் பண்ணுங்கப்பு.. :((
கொத்தனாரே...
எனக்கு புதிர்களில் ஆர்வம் உண்டு. ஆனால் இம்மாதிரியான இம்மாதிரியான புதிர்களில் ஆர்வம் இல்லை.
காரணம் சற்று கடினமானவை. உங்கள் புதிர் ஒரு நல்ல தொடக்கம்...
-சதீஸ்
சதீஸ்,
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. அப்படி ஒண்ணும் கஷ்டம் இல்லை. எவ்வளவு பேர் போட்டு இருக்காங்க பாருங்க. இந்த முறை விடைகளைப் பார்த்துக்குங்க. அடுத்த முறை நீங்க கட்டாயம் முயற்சி செய்யணும்.
அப்புறம் எப்ப பாரு எளிதான புதிர்களையே போட்டுக்கிட்டு இருந்தா எப்படி?
கீதாம்மா
உங்களுக்காகத்தான் இன்னும் ஓடுது. நல்ல வேளை வந்தீங்களே!!
இவ 3
மேகீ 2 4 15
கீதாம்மா,
கட்டத்தில் நிரப்பாததினால் நிறையா பிரச்சனை. விடைகள் எவ்வளவு எழுத்துக்களில் இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறதே. அதையும் பாருங்கள்!
கொத்தனாரே, கேள்விகள் மிக அருமை. இருபுறமும் ஒருங்கே அமைந்த வடிவில் தமிழ் குறுக்கெழுத்தா, அருமை அருமை. இ-வ 1, புரிந்துகொள்ள முடியவில்லை. விளக்குங்களேன். நானும் குறுக்கெழுத்தினை வடிவமைக்க முயற்சி செய்துகொண்டிடுக்கிறேன். பார்ப்போம்.
அடுத்த பதிவில் விடைகளைக் கொடுத்தாச்சே!
எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
வம்பு - தவம் என்ற வார்த்தையின் எல்லைகளான த மற்றும் ம் போனால் மிஞ்சுவது வ. இதனோடு மருந்துக்கு இன்னொரு சொல்லான களிம்பு என்னும் சொல்லை எடுத்து அதில் மகிழ்ச்சிக்கு இணையான களி என்ற பகுதியை நீக்கிவிட்டால் ம்பு என்பது மிஞ்சுகிறது. இவை இரண்டையும் சேர்த்தால் வம்பு என்னும் சொல் தீச்சொல் என்னும் பொருள் கொண்டு வருகிறது. வசவு என்ற விடையை பலரும் தந்திருந்தார்கள். ஆனால் அதற்கு குறிப்பு எப்படிப் பயன்படும் என்பதை யோசிக்கவே இல்லை.
ஆன்லைனில் விளையாட வாருங்கள்
http://tamilthuli.com/weblog/?p=38
http://tamilthuli.com/weblog/?p=11
Post a Comment