Sunday, July 13, 2008

பொதுப்புத்தி அங்கலாய்ப்புக்கு புதரக பதில்

நியூயார்க் நகரில் இருக்கும் நம் தூதரகத்திற்குச் செல்ல வேண்டுமானால் கொஞ்சம் கடுப்புதான். ஒழுங்குமுறையற்ற கூட்டம், ஏகப்பட்ட கெடுபிடிகள் என்று ரொம்பவே கஷ்டப்படுத்தும் நினைவுகள்தான். அதுவும் அதிகாலையிலேயே எழுந்து, ரயிலைப் பிடித்து நியூயார்க் நகரம் சென்று வரிசையில் நிற்க வேண்டும் என்ற நினைப்பே சோகத்தைக் கிளப்பி விடும். இந்த அனுபவம் இல்லாதவர்கள் நம்ம டுபுக்கு எழுதி இருப்பதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வரவும். லண்டனில் அவர் சொல்லி இருக்கும் நிலமைதான் இங்கேயும். விஷயம் இது போல இருக்க நம்ம வீட்டுப் புது வரவுக்கு இந்திய நுழைவிசைவு (Visa, பொருள் சரியாத்தான் இருக்கு, கொஞ்சம் எளிமையா சொல்லி இருக்கலாமோ?) எடுக்க வேண்டும் என்ற நினைப்பே அலுப்பாக இருந்தது. சரி என்னென்ன ஆவணங்கள் தேவை எனத் தெரிந்து கொள்ள இந்திய தூதரகத்தில் வலைத்தளத்திற்குச் சென்றால் நுழைவிசைவு தொடர்பான வேலைகளை தனியார் வசம் அளித்துவிட்டதாக அறிவித்திருந்தனர்.

அமெரிக்காவில் ஐந்து நகரங்களில் இயங்கும் ட்ராவிசா என்ற நிறுவனம் இப்பொழுது நுழைவிசைவு குறித்த முதற்கட்ட வேலைகளை இவர்கள் எடுத்து செய்கிறார்கள். இவர்களது வேலை குறித்து ஒரே ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அது -

சபாஷ்!

முதலில் எல்லா விபரங்களையும் இணையத்தில் பதிவு செஞ்சுடச் சொல்லி இருக்காங்க. நானும் எத்தனையோ நாடுகளின் தூதரக வலைத்தளங்களில் சென்று இது மாதிரி படிவங்களைப் பூர்த்தி செஞ்சு இருக்கேன். ஆனால் இவ்வளவு எளிமையான வலைத்தளத்தைப் பார்த்ததே இல்லை. அனாவசியமாக என் முப்பாட்டனின் ஜாதகத்தை எல்லாம் கேட்கவில்லை. அங்கு நாம் பதிவு செய்ய வேண்டிய ஒவ்வொரு விபரத்திற்கும் அதன் அருகிலேயே உதவித் தகவல்கள் என அமர்க்களமாக இருக்கிறது வலைத்தளம்.


விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்த பின்னர் அதனோடு கொண்டு வர வேண்டிய மற்ற ஆவணங்களின் இடாப்பு ஒன்றினையும் தந்து விடுகிறார்கள். அதனால் நாம் கொண்டு செல்ல வேண்டியவை பற்றிய முழு விபரமும் நமக்குக் கிடைத்து விடுகிறது.

நியூயார்க் நகரில் இவர்களது அலுவலகம் சென்றால் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே வரவில்லை. முதலிலேயே ஒருவர் நம் விண்ணப்பத்தினை முழுவதும் சரி பார்த்துவிடுகிறார். நாம் தவறேனும் செய்திருந்தாலோ அல்லது இணையத்தில் பூர்த்தி செய்யாமல் வந்துவிட்டால் அங்கிருக்கும் பல கணினிகளில் ஒன்றினைப் பயன்படுத்தி நம் வேலையை முடித்துவிடலாம். இதற்காகவே ஓரிடத்தில் பத்துப் பன்னிரண்டு கணினிகளை நிறுவியுள்ளனர்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் பொழுதே நம் கடனட்டையின் எண்களையும் கொடுத்தாலும் நம் விண்ணப்பம் அவர்கள் கையில் சென்று சேர்ந்த பின்னரே அத்தொகை வசூலிக்கப்படுகிறது. கடனட்டை விபரமும் விண்ணப்பத்திலேயே இருப்பதால் அதிக நேரமாவதில்லை. நான் அங்கு செலவழித்த நேரம் மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே. நான் நண்பகல் நேரத்தில் சென்றதால் கூட்டம் குறைவாகவே இருந்திருக்கலாம். ஆனால் காலை நேரங்களில் கூட இது போன்று செம்மையாகச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தற்சமயம் இவர்கள் நுழைவிசைவு சம்பந்தப்பட்ட வேலைக்கு மட்டுமே இவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். கடவுச்சீட்டு குறித்த சேவைகள், மற்ற சேவைகளுக்கு இன்னமும் நேரடியாகத் தூதரகம்தான் செல்ல வேண்டும். இந்தப் பணி தனியார் வசம் வந்ததால் தூதரகத்தில் எதேனும் மாற்றம் உண்டா எனத் தெரியவில்லை. இந்த முடிவினை எடுத்த அதிகாரிகளுக்கு நம் பாராட்டுகள். Well done guys!

டிஸ்கி 1: மகளுக்கு நுழைவிசைவு எடுத்தது இந்தியா வருவதற்குத்தான். தற்போதைய திட்டத்தின் படி, பெரும்பாலும் மும்பையில் இருப்பதாகத்தான் இருக்கிறது. சென்னை வருவது இன்னும் உறுதியாகவில்லை.

டிஸ்கி 2: ஸ்ரீதர் வெங்கட் தனியாக வலைப்பதிவு ஒன்றினை துவக்கி எழுதத் தொடங்கி இருப்பதற்கும், நான் ஊரை விட்டு ஓடுவதற்கும் தொடர்பு கண்டுபிடித்தால் அவர்களுக்குப் பகூத் அறிவுப் பாவலர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

42 comments:

said...

இது பற்றி நம் தூதர் அளித்து இருக்கும் செய்தியினை இங்கு காணலாம்.

said...

Wow!! Outsourcing at Indian Embassy.
மும்பாய்க்கா? வெள்ள நிவாரப்பணிகளை பார்வையிடவா?

-அரசு

said...

பகூத் அறிவுப்பாவலர் பட்டம் வேண்டி: உங்கள் தொந்தரவு இல்லாத நாட்களில் ஆரம்பித்தால் உங்களுக்கு வரவேண்டிய பின்னூட்டங்களும் அவருக்கு வருமோ என்ற ஆசையோ?

பதிவுக்கு: பரவாயில்லையே.. என் ஆர் ஐயா இருந்துகிட்டே இந்தியத் தூதரக நடவடிக்கையைப் பாராட்டறீங்களே! புதரகத்துல யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க?

said...

நல்ல தகவல்தான்.

கிட்டத்தட்ட இதே ப்ராஸஸ்தான் சென்னையின் அமெரிக்க கான்ஸலேட்டுகளில். நேர விரயமே கிடையாது. அட அது அமெரிக்க கான்ஸலேட்டுதான் என்று எண்ணினால், பெங்களுரு கடவுச்சீட்டு அலுவலகமும் இப்படித்தான். என்ன உங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் நேரத்தை விட ஒரு 30-40 நிமிடங்கள் பின்னால் கூப்பிடுவார்கள். ஆனால் நேர விரயம் அதிகம் கிடையாது.

//ஸ்ரீதர் வெங்கட் தனியாக வலைப்பதிவு ஒன்றினை துவக்கி எழுதத் தொடங்கி இருப்பதற்கும், நான் ஊரை விட்டு ஓடுவதற்கும் தொடர்பு கண்டுபிடித்தால் அவர்களுக்குப் பகூத் அறிவுப் பாவலர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். //

அதைக் கண்டுபிடிச்ச பெருமை நம்ம கேஆர்எஸ் அண்ணாச்சிக்குதான் சேரும். அவர்தான் ஏதோ 'ட்ராகன்பிளை எஃபெக்ட்'ன்னு சொல்லிக்கிட்டிருந்தார். ஆனா ஊரைவிட்டு ஓடற அளவுக்கு அவ்வளவு மோசமாவா பதிவுகள் இருக்கு :-))

said...

பஞ்ச் அண்ணா எங்கே? எங்கே? எங்கே???

said...

நல்ல தகவல் தான். ஆனா நியூயார்க்குக்கும் நமக்கும் நெம்ப தூரமாச்சே?

வெல்கம் டு மும்பை
:)

said...

ம்ம்.. எல்லாம் 'பெரிய இடத்து' விவகாரங்கள் ..

said...

//டிஸ்கி 2: ஸ்ரீதர் வெங்கட் தனியாக வலைப்பதிவு ஒன்றினை துவக்கி எழுதத் தொடங்கி இருப்பதற்கும், நான் ஊரை விட்டு ஓடுவதற்கும் தொடர்பு கண்டுபிடித்தால் அவர்களுக்குப் பகூத் அறிவுப் பாவலர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். //

இது என்னமோ எங்கப்பா குதிருக்குள்ளே இல்லைங்கறாப்பலே இல்லை? :P :P:P

said...

மிக மிக அருமையான, உதவியான பதிவுக்கு நன்றி.

said...

நல்ல முறையாய் தான் தெரிகிறது.வாழ்க,வளர்க.,

//அதிகாலையிலேயே எழுந்து, ரயிலைப் பிடித்து நியூயார்க் நகரம் சென்று வரிசையில் நிற்க வேண்டும் என்ற நினைப்பே சோகத்தைக் கிளப்பி விடும்.//

அது சரி...பொடக்காளியில் இருக்கும் நியூயார்க்குக்கு ரயிலில் அல்லது காரில் போக என்னய்யா அத்தனை அலுப்பு வேண்டியிருக்கு? இதெல்லாம் நியாயமில்லை,சொல்லிபுட்டேன்:-)

said...

அனாவசியமாக என் முப்பாட்டனின் ஜாதகத்தை எல்லாம் கேட்கவில்லை
:-))
adisiyam than.

said...

ஹேப்பி ஜர்னி கொத்ஸ்!
இனிய பயண வாழ்த்துக்கள்!
:-)

said...

//ஆனா ஊரைவிட்டு ஓடற அளவுக்கு அவ்வளவு மோசமாவா பதிவுகள் இருக்கு :-))//

ஆனா ஊரைவிட்டு ஓடற அளவுக்கு அவ்வளவு மோசமாவா (இலவசப்) பதிவுகள் இருக்கு :-))

sridharblogs.com பார்த்து விட்டு, தன்னால் இது போல முடியாது என்று பயந்து போய் ஓடறாரு-ன்னு சொல்ல வாரீகளா? :-))

என்ன ஸ்ரீதர் இது?
கொத்சு-க்கே நுண்ணரசியலா?
எங்க விக்கிக்கே பீடியாவா?

said...

நல்ல செய்தி :)

said...

அட! ரொம்ப நல்ல சேதியா இருக்கே.

அரசாங்க வேலைன்னு மெத்தனமா இருக்கும் வழக்கத்தை யாரோ எங்கியோ தொடங்கிவச்சதுக்கு இப்படி ஒரு மாற்று வந்துருச்சா?

தனியார் வசம் இருக்கும் சேவைகள்தான் உருப்படியான சேவைகளா இருக்குன்னு சொல்லுங்க:-))))

said...

விவரம் எல்லாம் சரியாத்தான் இருக்கு. நல்ல விவரமா பதிவா போடுங்க.. இந்தியா ஒளிர்கிறதா?

said...

//இது என்னமோ எங்கப்பா குதிருக்குள்ளே இல்லைங்கறாப்பலே இல்லை? :P :P:P//

நாளைலேர்ந்து எங்கப்பன் ந்யூஜெர்சியில இல்லைன்னுதான் சொல்லனும் கீதாம்மா.

இப்பவே எத்தனை பேர் 'Dont come back!' அப்படின்னு கொடிபிடிக்கறாங்கப் பாருங்க. :-))

said...

//ஆனா ஊரைவிட்டு ஓடற அளவுக்கு அவ்வளவு மோசமாவா (இலவசப்) பதிவுகள் இருக்கு :-))//

இதுக்குப் பெயர்தான் 'இலவச' இணைப்பா? :-))

என்னோட பதிவுகளும் இலவசம்தான். அட... ப்ளாக்கரில இலவசம்தானுங்களே. நீங்க படிக்கிறதும் இலவசம்தானுங்களே.

உடனே கொத்தனார் என்ன காசா வாங்குறார்ன்னு கேக்காதீங்க. நீங்க பின்னூட்டம் போடலைன்னா மனுசன் பிச்சிப்பிடுவார் பிச்சி :-))

said...

உயர்திரு இலவசக் கொத்தனார் அவர்களுக்கு! தங்களின் வெண்பா பாடும் திறமையை இயன்றவரையில் இனிய தமிழ் வலைதளத்தின் மூலம் அறிந்தேன். நான் என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஈற்றடி வழங்கி பலரையும் ஈற்றடிக்கு வேண்பா எழுதச்செய்ய முயல்கிறேன். தாங்களும் என் வலைக்கு வந்து ஈற்றடிக்கு வாராவாரம் வேண்பா எழுதுமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

said...

தகவலுக்கு மிக்க நன்றி, கொத்ஸ்!



உலக வலைப்பூக்களில் முதல் முறையாக ...
இந்திய தூதரகத்தை பத்தி நல்லதா எழுதிருக்கீங்க..!! ;)

(எந்த நாடா இருந்தாலும் சரி.. நம்ம இந்திய தூதரகத்தின் 'வேலை' ஒரே மாதிரியாதான் இருக்கும்போல.. அந்த பட்டியலில SBI யையும் சேர்த்துக்கணும்..!!?)

said...

//Wow!! Outsourcing at Indian Embassy.
மும்பாய்க்கா? வெள்ள நிவாரப்பணிகளை பார்வையிடவா?

-அரசு//

வாங்க அரசு. நம்ம நேரம் இப்போ இங்க மழையே பெய்யலை!! வெறும் அவுட்சோர்ஸிங் மட்டுமில்லை. இந்தியா அவுட்சோர்ஸிங் டு அமெரிக்கன் கம்பெனி!! :))

said...

//பகூத் அறிவுப்பாவலர் பட்டம் வேண்டி: உங்கள் தொந்தரவு இல்லாத நாட்களில் ஆரம்பித்தால் உங்களுக்கு வரவேண்டிய பின்னூட்டங்களும் அவருக்கு வருமோ என்ற ஆசையோ?//

பெனாத்தல், உமக்கும் பகூத் அறிவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் தெளிவாக்கி இருக்கீரு! நன்னி!! நாங்க ஊரில் இல்லைனாலும் வலையில் இருப்போமில்ல!

//பதிவுக்கு: பரவாயில்லையே.. என் ஆர் ஐயா இருந்துகிட்டே இந்தியத் தூதரக நடவடிக்கையைப் பாராட்டறீங்களே! புதரகத்துல யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க?//

மாட்டாங்க. ஆனா நம்ம ஊரில்தான் அது எப்படி அந்தக் கம்பெனிக்குக் குடுத்தாங்க, எங்களுக்குத் தரலை. அப்படின்னு பேச்சு வரும். :)

said...

//
கிட்டத்தட்ட இதே ப்ராஸஸ்தான் சென்னையின் அமெரிக்க கான்ஸலேட்டுகளில். நேர விரயமே கிடையாது. அட அது அமெரிக்க கான்ஸலேட்டுதான் என்று எண்ணினால், பெங்களுரு கடவுச்சீட்டு அலுவலகமும் இப்படித்தான். என்ன உங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் நேரத்தை விட ஒரு 30-40 நிமிடங்கள் பின்னால் கூப்பிடுவார்கள். ஆனால் நேர விரயம் அதிகம் கிடையாது.//

ஸ்ரீதர், நானும் அங்க எல்லாம் போய் இருக்கேன். அதுவும் இந்த மாதிரி எளிமையா எங்கேயும் முடிஞ்சது இல்லை. அதுவும் அந்த புதரகப் படுத்தல்களுக்கு முன்னாடி இதெல்லாம் சும்மா ஜூப்பரு.

//ஆனா ஊரைவிட்டு ஓடற அளவுக்கு அவ்வளவு மோசமாவா பதிவுகள் இருக்கு :-))//

பார்த்த உடனே கண்ணில் பட்டது கவுஜதான். அப்புறம் ஓடாம என்னத்த செய்ய...

said...

// பஞ்ச் அண்ணா எங்கே? எங்கே? எங்கே??? //

இந்த மாதிரி போஸ்டுக்கு எல்லாம் அவர் வர மாட்டாரு!! :))

said...

//நல்ல தகவல் தான். ஆனா நியூயார்க்குக்கும் நமக்கும் நெம்ப தூரமாச்சே?

வெல்கம் டு மும்பை
:)//

அடுத்த ப்ராஜெக்ட் அங்க போட வேண்டியதுதானே!

நன்னி தல!

said...

// ம்ம்.. எல்லாம் 'பெரிய இடத்து' விவகாரங்கள் ..//

அப்படி எல்லாம் இல்லை தருமி. ஆபீஸ் சின்ன இடம்தான். அதுவும் முதல் மாடிதான். அதனால பெரிய இடம் என்பது உண்மையில்லை! :))

said...

//இது என்னமோ எங்கப்பா குதிருக்குள்ளே இல்லைங்கறாப்பலே இல்லை? :P :P:P//


டமாஸு?! நல்லா இருங்கம்மா!! :))

said...

// மிக மிக அருமையான, உதவியான பதிவுக்கு நன்றி.//

கீதாம்மா, இது என்னா? நார்மல் பின்னூட்டம் மாதிரி தெரியலையே!! :))

said...

//நல்ல முறையாய் தான் தெரிகிறது.வாழ்க,வளர்க.,//

ஆமாம் செல்வன் நல்ல முறைதான்.

//அது சரி...பொடக்காளியில் இருக்கும் நியூயார்க்குக்கு ரயிலில் அல்லது காரில் போக என்னய்யா அத்தனை அலுப்பு வேண்டியிருக்கு? இதெல்லாம் நியாயமில்லை,சொல்லிபுட்டேன்:-)//

எங்க ஊரில் இருந்து ரயில் பிடிச்சா அது பாம்பே ரயில் மாதிரி. நிக்க கூட இடம் கிடைக்காது. அதுவும் அங்க காலங்கார்த்தால கிளம்பிப் போய் வரிசையில் நிற்பது கொஞ்சம் போர்தான் செல்வன்.

said...

//அனாவசியமாக என் முப்பாட்டனின் ஜாதகத்தை எல்லாம் கேட்கவில்லை
:-))
adisiyam than.//

ஆமாங்க. அதிசயம்தான். அதான் தனியாச் சொல்லி இருக்கேன்.

said...

//ஹேப்பி ஜர்னி கொத்ஸ்!
இனிய பயண வாழ்த்துக்கள்!
:-)//

நன்னி தல!

said...

//sridharblogs.com பார்த்து விட்டு, தன்னால் இது போல முடியாது என்று பயந்து போய் ஓடறாரு-ன்னு சொல்ல வாரீகளா? :-))//

ஆமாமாம். சொல்லி இருப்பாரு!

//என்ன ஸ்ரீதர் இது?
கொத்சு-க்கே நுண்ணரசியலா?
எங்க விக்கிக்கே பீடியாவா?//

ஓவர் டு ஸ்ரீதர் அண்ணா!!

said...

//நல்ல செய்தி :)//

நல்ல செய்தின்னு சொன்னது எல்லாம் சரிதான். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்கும் சிரிப்பானைப் பார்த்தால்தான் ரென்சனா இருக்கு.

said...

//தனியார் வசம் இருக்கும் சேவைகள்தான் உருப்படியான சேவைகளா இருக்குன்னு சொல்லுங்க:-))))//

ரீச்சர், அசுரன் மற்றும் குழுவினரின் கோபம் என் மேல் பாய வேண்டும் என்று எவ்வளவு நாள் ஆசை?!!

said...

//விவரம் எல்லாம் சரியாத்தான் இருக்கு. நல்ல விவரமா பதிவா போடுங்க.. இந்தியா ஒளிர்கிறதா?//

விவரம் சரியா இருக்கு - சரி. அப்புறம் நல்ல விவரமாப் போடுங்கன்னா என்னத்த போட?

said...

//உடனே கொத்தனார் என்ன காசா வாங்குறார்ன்னு கேக்காதீங்க. நீங்க பின்னூட்டம் போடலைன்னா மனுசன் பிச்சிப்பிடுவார் பிச்சி :-))//

ஆமாம் பின்னூட்டம் போட்டா முல்லை போடாட்டா பிச்சி. ரெண்டுக்கு மேல போட்ட கதம்பம் அப்படின்னு எல்லாருக்கும் மாலைதான்! என்ன சொல்லறீங்க? :))

said...

//உயர்திரு இலவசக் கொத்தனார் அவர்களுக்கு! தங்களின் வெண்பா பாடும் திறமையை இயன்றவரையில் இனிய தமிழ் வலைதளத்தின் மூலம் அறிந்தேன். நான் என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஈற்றடி வழங்கி பலரையும் ஈற்றடிக்கு வேண்பா எழுதச்செய்ய முயல்கிறேன். தாங்களும் என் வலைக்கு வந்து ஈற்றடிக்கு வாராவாரம் வேண்பா எழுதுமாறு வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com///

கொஞ்சம் டயம் குடுங்க வரேன்!

said...

//உலக வலைப்பூக்களில் முதல் முறையாக ...
இந்திய தூதரகத்தை பத்தி நல்லதா எழுதிருக்கீங்க..!! ;)
//

டுபுக்கு என்ன சொல்லறாருன்னு பார்க்கணும். அவரோட பதிவுக்கு எதிர்வினைதானே இந்தப் பதிவு...

said...

//(எந்த நாடா இருந்தாலும் சரி.. நம்ம இந்திய தூதரகத்தின் 'வேலை' ஒரே மாதிரியாதான் இருக்கும்போல.. அந்த பட்டியலில SBI யையும் சேர்த்துக்கணும்..!!?)//

அந்த லிஸ்டில் வெறும் ரெண்டுதானா? எவ்வளவோ இருக்கே தல!! :))

said...

//ஆமாம் பின்னூட்டம் போட்டா முல்லை போடாட்டா பிச்சி. ரெண்டுக்கு மேல போட்ட கதம்பம் அப்படின்னு எல்லாருக்கும் மாலைதான்! என்ன சொல்லறீங்க? :))//

ரொம்ப உரக்க சொல்லாதீங்க. கண்ணன் பாட்டுல அப்புறம்

'மாலை சார்த்தினார் கொத்தனார் மாலை மாற்றினார்'னு

பாட்டெழுதி, 4 பேரு அந்தப் பாட்டைப் பாடி பதிவு போட்டுடுவாங்க. :-))

said...

அருமையான பயனுள்ள பதிவிக்கு நன்றி.கனவில்தான் நடக்கும் விசயங்கள் என் நாம் பேசுவை நிசத்தில்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

said...

நல்ல தகவல் கொத்ஸ்.
டெ ரென்ஷன் குறைவா எந்த வேலை நடந்தாலும் பாராட்டணும்.

மும்பைக்குப் போயிருக்கிறீர்களா. சரிசரி.