Monday, July 07, 2008

புதசெவி - 7/7/2008

போன புதசெவி பதிவை படிச்ச மக்கள் எல்லாம் அடுத்தது எப்போ எப்போன்னு கேட்கும் போது நாம தரும் சுவையான செய்திகளுக்காகத்தான் கேட்கறாங்கன்னு சந்தோஷப்பட்டேன். இன்னிக்கு ஸ்ரீதர் வெங்கட்தான் உம்ம பதிவு யாருக்கு வேணும் நாங்க பஞ்ச் அண்ணாவோட பஞ்சுக்கு இல்ல கேட்கறோம் அப்படின்னு குட்டை உடைச்சுட்டாரு. என்ன இருந்தா என்ன, மக்களின் ஏகோபித்த (ஏ இருக்கு. அதனால கோபித்த எனப் படிக்க வேண்டாம். ஏ இருக்கு என்பதால் இதையும் காமக்கதைகள் வரிசையில் சேர்க்க வேண்டாம்!) வேண்டுகோளுக்கு இணங்கி புதசெவி அடுத்த பாகம்.

செய்தி 1

தனக்கு வேலை கிடைக்காததினால் தன் தந்தை பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முந்திய நாள் அவரைக் கொலை செய்துவிட்டானாம் பிகாரில் ஒருவன். பணியில் இருக்கும் பொழுது மரணமடைந்தால் கருணை அடிப்படையில் தந்தையின் வேலை தனக்குக் கிடைக்கும் என்று திட்டம் போட்டதாகச் சொல்லி இருக்கிறான். இந்தக் கொலையைச் செய்ய கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறான். அந்தப் பணத்தில் ஒரு பெட்டிக் கடை வெச்சு இருக்க முடியாதோ?

உங்களுக்கென்ன.. சாதாரணமா சொல்லிட்டீங்க பெட்டிக்கடை வச்சு பொழைச்சுக்கலாமேன்னு! பெட்டிக்கடை வச்சா "பயப்படாதவன்" "சேனாதிபதி"ன்னு எல்லாம் பேரு வருமா? அப்பா முன்னே சம்மந்தம் வச்சுக்கிட்டிருந்த பெட்டிக்கடை காம்படிஷனை எப்படி முறியடிக்கறதுன்னு ரென்சன் வராதா? தம்பி தங்கச்சிங்க பேர்லே எல்லாம் நம்பிக்கை இருக்குமா? எல்லாத்துக்கும் மேலே, கொலைன்னு ஆனபிறகுதானே அவனைப்பத்தி நீங்களே பேச ஆரம்பிச்சிருக்கீங்க?

செய்தி 2

புதரகத்தில் எதுக்கு வேணாலும் வழக்குப் போடலாம் அப்படின்னு சொல்லி கேட்டு இருப்பீங்க. காப்பி சூடா இருந்ததுன்னு மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு எதிரா போட்ட வழக்கு பத்தி நிறையா பேருக்குத் தெரிஞ்சு இருக்கும். இந்த வழக்கு இன்னும் விநோதம். நடக்கும் பொழுது பறவை எச்சத்தில் வழுக்கி விழுந்ததால் அடிபட்டதாக அந்த பாதை இருந்த தோட்ட நிர்வாகத்தினை எதிர்த்து ஒருவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் அது ஒரு பறவைகள் சரணாலயம்! இவர் அங்கு சென்றது பறவைகளைப் பார்க்கவும் அவற்றைப் படம் பிடிக்கவுமாம். அங்கு நடைபாதையில் இது போன்று நடக்கலாம் என்ற எச்சரிக்கை பலகை இல்லாதது பெரும் குறையாம்!

என்னாது? "எச்ச"ரிக்கைப் பலகை வேணுமா? இவனுங்களையெல்லாம்.. ஒரு காகிதம் எடுத்து ரெண்டு பக்கமும் P.T.O போட்டுக் கொடுத்துடணும். வாழ்க்கை புல்லா திருப்பித்திருப்பி பாத்துக்கிட்டே இருந்துடுவான். அயர்ன் பாக்ஸிலே கூட "அணிந்திருக்கும் ஆடைகளை தேய்க்க முயலாதீர்கள்" ன்னு இவனை மாதிரி ஆளுங்களாலேதான் எழுதறாங்க போல உங்க புதரகத்துல!

செய்தி 3

எப்பொழுதும் கருப்பினத்தவருக்கு எதிராகவே இனவெறித் தாக்குதல்கள் நடப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் இந்தப் பரிதாபக் கதையைப் படியுங்கள். தான்சானியா நாட்டில் மரபணு குறையினால் வெள்ளையாக இருப்பவர்கள் (ஆல்பினோக்கள் என்று அறியப்படுபவர்கள்) தற்பொழுது தம் உயிருக்கே பயந்த நிலையில் இருக்கிறார்களாம். கருப்பின மக்கள் இடையே வெள்ளையாகத் தோற்றம் அளிக்கும் இவர்களுக்கு மந்திர சக்தி இருப்பதாகவும் அதனால் இவர்களைக் கொன்று இவர்களின் உடற்பகுதிகளை உண்டால் தமக்கும் மந்திர சக்தி கிடைக்கும் என்ற புரளி பரவி பலர் கொல்லப்பட்டு விட்டனராம். இது இப்பொழுது இந்நாட்டு எல்லைகளைத் தாண்டி கென்யா, காங்கோ போன்ற நாடுகளுக்கும் பரவி விட்டதாம். ரொம்பவே நோகச் செய்யும் செய்தித் தொகுப்பு. முழுமையாகப் படித்துப் பாருங்கள்.

இதுக்குதான் சூப்பர் ஸ்டார் சொன்னாரா? வெள்ளையாக இருக்கும் உணவுவகைகளைத் தவிருங்கள்னு! பாருங்கய்யா.. எங்க தலை எந்த ஊரு வரைக்கும் அட்வைஸ் பண்றாருன்னு!

செய்தி 4

இதுவும் ஆப்பிரிக்கா செய்திதான். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொடுமைகள் நடந்ததால் அதனால் பாதிப்படைந்தவர்களுக்கு பல விதமான சலுகைகளைத் தந்து வந்தது அந்நாட்டு அரசு. கருப்பின மக்கள், இந்திய வம்சாவழி மக்கள் என பல தரப்பு மக்களுக்கு கிடைத்த சலுகை சீன வம்சாவழியினருக்குக் கிடைக்க வில்லை. பல போராட்டங்களுக்குப் பின் அவர்களுக்கும் இந்த வசதி கிடைக்க நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்நீதிமன்றத் தீர்ப்பு என்னவென்று தெரியுமா? "தென்னாப்பிரிக்க சீன வம்சாவழியினர் இனி கருப்பினத்தவர்!"

கருப்பாக இருப்பவர்கள் மட்டுமே கருப்பினத்தவர் என்று நினைக்கும் உம்ம காழ்ப்புணர்ச்சிப் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது (6 நியூஸ்லே ஒருமுறைகூட வெளிய வராட்டி எப்படி?) கிரீம் கலரில் சீனாக்காரர்கள் இருப்பதால் அவர்களை கிரீமி லேயர் எனச் சித்தரிக்கும் உங்கள் பாசிஸப் போக்கு அருவருக்க வைக்கிறது. முற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்கள் மி. பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆகும் இன்றைய சூழலில் முன்னோர் செய்த தவற்றை ஒரு நீதிமன்றம் சரிசெய்வதைக்கூட தவறாக பார்க்கும் உங்கள் ______ முகம் வெளிப்பட்டு விட்டது - அப்படின்னெல்லாம் கமெண்டு வரும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் வராது!


செய்தி 5

புதரகத்தில் பணப்புழக்கம் ரொம்ப கம்மியானதுனால புது வகைத் திருட்டுக்கள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சு இருக்கு. மின்சாரக் கம்பிகளைத் திருடுதல், பாதாளச் சாக்கடை மூடிகளைத் திருடுதல் என்று நம்ம ஊர் நாளிதழ்கள் நூதனத் திருட்டு என வகைப்படுத்தும் திருட்டுகள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. செம்பு போன்ற உலோகங்களுக்கான விலை மிகவும் அதிகமாகிவிட்டதால் இப்படி உலோகங்களில் செய்யப்பட்டவற்றை பல கும்பல்கள் திருடத் தொடங்கி விட்டன. இப்படித்தான் டெட்டராயிட் நகரில் உள்ள ஒரு தேவாலய வாயிலில் இருந்த ஒரு எட்டு அடி யேசு சிலையை திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். ஒரே ஒரு பிரச்சனை. அது பிளாஸ்டர் ஆப் பாரிஸினால் செய்யப்பட்டது! அம்புட்டு அறிவு!

சரியாப் பாருங்கப்பா. அங்க சிலை உடைப்புப் போராட்டம் எதாவது ஆரம்பிச்சு இருக்கப் போறாங்க. நீங்க விஷயம் தெரியாம செம்பு கொம்புன்னுக்கிட்டு. இருந்தா என்ன, ஆரம்பிச்சு வெச்சவரு இல்லை அவரோட சிஷ்யர் யாராவது இன்னும் கொஞ்ச நாளில் மஞ்சள் இல்ல பச்சை அங்கி போட்டுகிட்டு, திருடின கடவுளை நாம ஏத்துக்கறோமா, கடவுள் நம்மை ஏத்துக்குவாரா ன்னு சிலைய வித்தவங்க வாங்கினவங்க கிட்ட பேச்சு வார்த்தை நடாத்திக்கிட்டு இருப்பார்.

செய்தி 6

இந்தப் படத்தைப் பாருங்க.Dangerous Turn - Funny home videos are a click away

சின்ன டயர் வண்டியெல்லாம்தான் ஒழுங்கா போகணும், பெரிய டயர்க்காரங்க கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாங்க.. இல்லாட்டி எப்படி அஞ்சு வருஷம் எதிர்த்திசையில ஓட்டறதாம்? மன்மோகன் சிங்குக்கே இப்ப புரிஞ்சிருக்கும் -இந்த நுண்ணரசியல்கூடத் தெரியாம எப்படித்தான் குப்பை கொட்டறீங்களோ!

60 comments:

said...

பஞ்ச் அண்ணாவை தேடிய அனைவரும் உடனே மேடைக்கு வரவும்.

said...

மீ த ஃபர்ஸ்ட்..

இல்லை வழக்கம் போல மொத மொய் கொத்ஸே வச்சுட்டாரா

சரவணன்

said...

என்ன கொடுமை இது சரவணன்?!!

நானே மொய் வெச்சுட்டேன். :)))

said...

// அவரோட சிஷ்யர் யாராவது இன்னும் கொஞ்ச நாளில் மஞ்சள் இல்ல பச்சை அங்கி போட்டுகிட்டு, திருடின கடவுளை நாம ஏத்துக்கறோமா, கடவுள் நம்மை ஏத்துக்குவாரா //

ஜூப்பரு...:)

said...

//முற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்கள் மி. பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆகும் இன்றைய சூழலில் முன்னோர் செய்த தவற்றை ஒரு நீதிமன்றம் சரிசெய்வதைக்கூட தவறாக பார்க்கும் உங்கள் ______ முகம் வெளிப்பட்டு விட்டது - அப்படின்னெல்லாம் கமெண்டு வரும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் வராது!//

ஏன் வராது...இந்த பதிவுல அந்த மாதிரியெல்லாம் வராட்டாலும், தனிப்பதிவா வருமுன்னு தோணுது :)

said...

ஆமாம், ஸ்ரீதர் சொன்னதென்னமோ உண்மை. பதிவில் வரும் செய்திகளை விட பஞ்ச் பரமசிவம் டயலாக் என்னமோ படுஜோராத்தான் இருக்கு.

பஞ்ச் அண்ணனுக்கு ஒரு ஜே!!

said...

//உங்களுக்கென்ன.. சாதாரணமா சொல்லிட்டீங்க பெட்டிக்கடை வச்சு பொழைச்சுக்கலாமேன்னு! பெட்டிக்கடை வச்சா "பயப்படாதவன்" "சேனாதிபதி"ன்னு எல்லாம் பேரு வருமா? //


:))

உள்குத்து எதாவது இருக்கா ? பொட்டிக்கடை சின்னதா ? பெருசா ?

said...

கொத்ஸ் இப்பல்லாம் மெக்டொனால்டு காபில அறிவிப்பு போட்டுட்டான்பா

'Warning - Contents may be hot.'

அதைவிட கொடுமை ஒரு கடையில் விக்கும் சூப்பர் மேன் உடையில் என்ன போட்டுருக்கானுங்கன்னா.. 'இந்த உடை அணிவதால் உங்களுக்கு பறக்கும் சக்தி வராது என்று'

சரவணண்

said...

//பெட்டிக்கடை வச்சா "பயப்படாதவன்" "சேனாதிபதி"ன்னு எல்லாம் பேரு வருமா? //

மதுரையிலிருந்து ஜாமான் செட்டோட ஆட்டோ இல்ல, சுமோ வர போகுது பாருங்க அண்ணாச்சி. :))

said...

பஞ்ச் அண்ணா ஆனாலும் ரொம்பத்தான் உள்குத்து வைக்கிறார் :-)). இப்பதைக்கு அவரோட கமெண்ட்டுக்கு 'நோ கமெண்ட்ஸ்'.

முதல் ந்யூஸ் - ரொம்பவே மனசை கஷ்டபடுத்தற விஷயம்.

இரண்டாவது ந்யூஸ் - அட இந்த மாதிரி வழக்குகள் நிறைய போடுவாங்க. ஆனா கடைசியில என்ன ஆச்சுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ரொம்பவும் சிக்கலாச்சுன்னா ஒரு நார்மல் அமௌண்டுக்கு அவுட் ஆப் த கோர்ட் செட்டில்மெண்ட் போட்டுக்குவாங்க. இதுல எந்த வழக்கும் டிரையல் கூட பாத்தது கிடையாதுன்னு நினைக்கிறேன்.

மூன்றாவது செய்தி - டாவின்சி கோடில் வரும் கொலைகாரன் ஒரு ஆல்புமின் நோயாளி. இவர்களின் நிலைமை பல இடங்களில் பரிதாபம்தான். இவர்களை சாத்தான் என்று சொல்லி ஒதுக்கிவிடும் மூடநம்பிக்கைகள் பல இடத்திலும் இருக்கின்றதுதான். பாவம்.

நான்காவது செய்தியில் நம்மவர்களுக்கு (இந்திய வம்சாவளியினருக்கு) ஒரு செய்தி இருக்கிறது போல.

அந்த அசைபடம் ஏதோ உட்டாலக்கடி மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு. இதெல்லாம் எங்கிருந்து ஐயா புடிக்கறீங்க?

said...

//முற்படுத்தப்பட்டவர்கள் ...... உங்கள் ______ முகம் வெளிப்பட்டு விட்டது - அப்படின்னெல்லாம் கமெண்டு வரும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் வராது!/

கமென்ட் ஏன் வராது? மதுரையம்பதி போட்டுட்டாரே!

said...

\\கருப்பின மக்கள், இந்திய வம்சாவழி மக்கள் என பல தரப்பு மக்களுக்கு கிடைத்த சலுகை சீன வம்சாவழியினருக்குக் கிடைக்க வில்லை\\ இங்கே நியூஸியிலும் ரொம்ப நாள் இனத்தின் அடிப்படைல வரி கட்டின ஒரே இனத்தவர்கள் சீனர்கள்தான். இந்தியர்கள் எல்லாம் பிரிட்டிஷ் என்று கொள்ளப்பட்டார்கள். சமீபத்தில தான் அரசாங்கம் மன்னிப்பு கேட்டது.

said...

//செம்பு போன்ற உலோகங்களுக்கான விலை மிகவும் அதிகமாகிவிட்டதால் இப்படி உலோகங்களில் செய்யப்பட்டவற்றை பல கும்பல்கள் திருடத் தொடங்கி விட்டன.// அந்த சிலைக்கு அடில நவபாஷாணம் இருக்கறது இன்னும் அவங்களுக்கு தெரியாதா!!!

ஆரம்ப காலத்துல நான் டிரைவிங் கத்துகிட்டப்ப நடந்ததெல்லாம் ஞாபகம் வருது அந்த அசைபடத்தை பாத்ததும்.

said...

\ இலவசக்கொத்தனார் said...
பஞ்ச் அண்ணாவை தேடிய அனைவரும் உடனே மேடைக்கு வரவும்.
\\

வந்துட்டேன்...;))

3வது செய்தி ரொம்ப பயங்காரமாக இருக்கே!!

said...

பஞ்ச் அண்ணனுக்கு பாராட்டை சொல்லிக்கிறேன். பதிவு பத்தி கமென் ட் அப்பாலிக்கா.

கி அ அ அனானி

said...

//சின்ன டயர் வண்டியெல்லாம்தான் ஒழுங்கா போகணும், //
பெரிய வண்டிய சின்ன வண்டி இடிச்சாலும், சின்ன வண்டிய பெரிய வண்டிய இடிச்சாலும் நஷ்டம் சின்ன வண்டிக்குத்தான். இதையேதான் விஜய.டி.ஆர் அன்னிக்கே சொல்லி வச்சாரு..
"அம்மா, முள்ளுமேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் கஷ்டம் என்னமோ சேலைக்குத்தான்"

இளா

said...

//ரொம்பவும் சிக்கலாச்சுன்னா ஒரு நார்மல் அமௌண்டுக்கு அவுட் ஆப் த கோர்ட் செட்டில்மெண்ட் போட்டுக்குவாங்க. இதுல எந்த வழக்கும் டிரையல் கூட பாத்தது கிடையாதுன்னு நினைக்கிறேன்//

சமிபத்தைய கேஸ் ஏதும் தெரியல்ல...ஆனா ஸ்ரீதேவி மூக்கு ஆப்ரேஷன் கேஸ் இந்த மாதிரி முடியலீங்கோ :)

said...

:))))

said...

பதிவு சூப்பரோ சூப்பர்...

தொடர்ந்து இந்த மாதிரி பதிவு போடவும் :-))

//இதுக்குதான் சூப்பர் ஸ்டார் சொன்னாரா? வெள்ளையாக இருக்கும் உணவுவகைகளைத் தவிருங்கள்னு! பாருங்கய்யா.. எங்க தலை எந்த ஊரு வரைக்கும் அட்வைஸ் பண்றாருன்னு!//

இது தான் பெஸ்ட் :-)

said...

மௌலி சார்,

ஸ்ரீதேவி மூக்கு ஆப்பரேஷன் பத்தி என்ன கேஸ்? அவங்க அம்மாவுக்குதான் மாத்தி ஆப்பரேஷன் பண்ணிட்டாங்க. அதுவும் நோட்டிஸ் செட்டில்மெண்ட் வரைதான் போச்சு.

கொத்தனார் சொல்ற மாதிரி கேஸ் எல்லாம் 'சில்லி கேஸ்' வகையறா. சும்மானாச்சுக்கும் கேஸ் போடுறது. கொஞ்சம் மீடியா கவனிப்பு வந்தவுடன சாந்தமாகி விடுவார்கள். ரொம்பவும் குடைச்சல் கொடுக்கிறவர்களை சம்பந்தபட்ட கம்பெனிகளின் லீகல் டிபார்ட்மெண்ட் சரிகட்டிவிடும்.

அதிகம் சிக்கிக் கொள்வது மருந்துக் கம்பெனிகள்தான். மொத்தமாக சேர்ந்து கேஸ் போடுவார்கள். இதற்கென்றே இருக்கும் சில அட்டர்னிகள் இருக்கின்றார்கள் (Eron Brokovich படத்தில் வரும் வக்கீல்கள்) சில கேஸ்கள் டிரையல் வரை போகும். டிரையல் போது கூட ஜட்ஜ்கள் முதலில் அறிவுறுத்துவது அவுட் ஆப் த கோர்ட் செட்டில்மெண்ட்தான். :-)

நமது நாட்டில் பெரும்பாலும் கட்டைப் பஞ்சாயத்தில் முடிந்து விடும். பல வக்கீல்களே கட்டைப் பஞ்சாயத்து ஸ்பெஷலிஸ்ட்கள்தான்.

said...

கொத்தனாரை விட பஞ்ச் அண்ணா கலக்குறாரே.... :)))))

said...

புதரகத்துல அல்லாருமே அப்படிதானா..........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

சரி மேடைக்கு வந்துட்டேன். எங்க பஞ்ச் அண்ணா:)

பாவம்பா அந்த ட்ரக் ஆளு! நம்ம ஊரில யாரொ ஒருத்தரை ரொம்பக் கேலி செய்வோமே. அவரை விட மோசமாக் கஷ்டப்பட்டு இருக்காரே இவர்!!

said...

//// அவரோட சிஷ்யர் யாராவது இன்னும் கொஞ்ச நாளில் மஞ்சள் இல்ல பச்சை அங்கி போட்டுகிட்டு, திருடின கடவுளை நாம ஏத்துக்கறோமா, கடவுள் நம்மை ஏத்துக்குவாரா //

ஜூப்பரு...:)//

மிஸ்டர் மதுரையம்பதி. இப்படி எல்லாம் அவரை ஏத்திவிடாதீங்க. நானே இப்படி விவகாரமா எழுதாம இருந்திருக்கலாம் அப்படின்னு சொல்லைனாலும் அப்படி எழுதாம இருந்திருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லப் பார்க்கிறேன். நீங்க வேற!

said...

//ஏன் வராது...இந்த பதிவுல அந்த மாதிரியெல்லாம் வராட்டாலும், தனிப்பதிவா வருமுன்னு தோணுது :)//

அது உம்ம பதிவில் வராது. நிச்சயமாத் தெரியும்!! :))

ஆனா இதைச் சொல்லி நைசா பின்னூட்டத்தில் உம்ம கருத்தைச் சொல்லி நுண்ணரசியல் பண்ணிட்டீரே!!

said...

//ஆமாம், ஸ்ரீதர் சொன்னதென்னமோ உண்மை. பதிவில் வரும் செய்திகளை விட பஞ்ச் பரமசிவம் டயலாக் என்னமோ படுஜோராத்தான் இருக்கு.

பஞ்ச் அண்ணனுக்கு ஒரு ஜே!!//

அண்ணா உச்சி குளிர்ந்து போய் இருப்பாருன்னு நினைச்சா நீர் ரொம்பப் பாவம். அவர் இதையும் தாண்டிப் புனிதமானவர்.

said...

//உள்குத்து எதாவது இருக்கா ? பொட்டிக்கடை சின்னதா ? பெருசா ?//

வாங்க கண்ணன் அண்ணா!! உங்க இரண்டாவது வரியைப் பார்த்த பின் முதல் வரியில் என்ன உள்குத்து இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!!

said...

//கொத்ஸ் இப்பல்லாம் மெக்டொனால்டு காபில அறிவிப்பு போட்டுட்டான்பா

'Warning - Contents may be hot.'//

அங்க மட்டும் இல்லை. எங்க காப்பி வாங்கிக் குடிச்சாலும் இந்த மேட்டர்தான். அதுல may be அப்படின்னு சொல்லி காப்பி ஆறிப் போனாலும் கேஸ் போட முடியாத படி செஞ்சுட்டாங்க!!

//அதைவிட கொடுமை ஒரு கடையில் விக்கும் சூப்பர் மேன் உடையில் என்ன போட்டுருக்கானுங்கன்னா.. 'இந்த உடை அணிவதால் உங்களுக்கு பறக்கும் சக்தி வராது என்று'//

:)) என்னாத்த சொல்ல!

ஆமாம் நீங்களும் முதலில் வந்த சரவணனும் ஒண்ணா? இல்லை சரவணன் வேற சரவணண் வேறயா? சரியா சொல்லிடுங்க ப்ளீஸ்!

said...

//மதுரையிலிருந்து ஜாமான் செட்டோட ஆட்டோ இல்ல, சுமோ வர போகுது பாருங்க அண்ணாச்சி. :))//

அவங்களா வரலையினாலும் நீ போன் போட்டு விஷயத்தைச் சொல்லி வர வெச்சுடுவ இல்லை. இந்த ரோட்டுக்கு மேக்கால இருக்கிற பசங்களே இப்படித்தாம்பா!! (இதுவே உங்க அண்ணனா இருந்தா ஆத்துக்கு அந்தப் பக்கம் அப்படின்னு டயலாக் மாறி இருக்கும்!)

said...

//பஞ்ச் அண்ணா ஆனாலும் ரொம்பத்தான் உள்குத்து வைக்கிறார் :-)). இப்பதைக்கு அவரோட கமெண்ட்டுக்கு 'நோ கமெண்ட்ஸ்'.//

பதிவுல நீர் தேடற மேட்டரைப் பார்த்துட்டு உம்மளை நண்பராக்கலாமான்னு நினைச்சவரை இப்படிப் பேசி இப்போ போட்டுத் தள்ளத் தேட வெச்சுட்டீங்களே!!

//முதல் ந்யூஸ் - ரொம்பவே மனசை கஷ்டபடுத்தற விஷயம்.//

ஆமாம். அரசுப் பணி மேல அப்படி ஒரு ஈர்ப்பு. என்னத்த சொல்ல...

//இரண்டாவது ந்யூஸ் - அட இந்த மாதிரி வழக்குகள் நிறைய போடுவாங்க. ஆனா கடைசியில என்ன ஆச்சுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. ரொம்பவும் சிக்கலாச்சுன்னா ஒரு நார்மல் அமௌண்டுக்கு அவுட் ஆப் த கோர்ட் செட்டில்மெண்ட் போட்டுக்குவாங்க. இதுல எந்த வழக்கும் டிரையல் கூட பாத்தது கிடையாதுன்னு நினைக்கிறேன்.//

லம்பா ஒரு அமௌண்ட் கிடைச்சா சரி. நாமளும் யாரையாவது பிடிக்கலாமா?

//மூன்றாவது செய்தி - டாவின்சி கோடில் வரும் கொலைகாரன் ஒரு ஆல்புமின் நோயாளி. இவர்களின் நிலைமை பல இடங்களில் பரிதாபம்தான். இவர்களை சாத்தான் என்று சொல்லி ஒதுக்கிவிடும் மூடநம்பிக்கைகள் பல இடத்திலும் இருக்கின்றதுதான். பாவம்.//

ரொம்பவே பாவம்தான்.

//நான்காவது செய்தியில் நம்மவர்களுக்கு (இந்திய வம்சாவளியினருக்கு) ஒரு செய்தி இருக்கிறது போல.//

என்ன செய்திங்க? விவகாரமாச் சொல்லுங்க. ச்சீ விபரமாச் சொல்லுங்க.

//அந்த அசைபடம் ஏதோ உட்டாலக்கடி மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு. இதெல்லாம் எங்கிருந்து ஐயா புடிக்கறீங்க?//

நம் வாசகர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரே காரணத்திற்காக அலைந்து திரிந்து கண்டெடுத்த முத்துக்கள் ஐயா!! :))

அதெல்லாம் போகட்டும் பஞ்ச் அண்ணாவிற்கு எப்போ பதில் சொல்லப் போறீங்க? :)

said...

//கமென்ட் ஏன் வராது? மதுரையம்பதி போட்டுட்டாரே!//

திவா சாமி பதிவு போடறவரு அப்படி எல்லாம் செய்ய மாட்டாரு!! அப்படின்னு ஒரு நம்பிக்கைதான்.

said...

//இங்கே நியூஸியிலும் ரொம்ப நாள் இனத்தின் அடிப்படைல வரி கட்டின ஒரே இனத்தவர்கள் சீனர்கள்தான். இந்தியர்கள் எல்லாம் பிரிட்டிஷ் என்று கொள்ளப்பட்டார்கள். சமீபத்தில தான் அரசாங்கம் மன்னிப்பு கேட்டது.//

ஓஹோ! இப்படி எல்லாம் வேற நடந்திருக்கா? ரீச்சர் கிட்ட சொல்லி இதைப் பத்தி ஒரு பாடம் நடத்தச் சொல்ல வேண்டியதுதான்.

said...

//அந்த சிலைக்கு அடில நவபாஷாணம் இருக்கறது இன்னும் அவங்களுக்கு தெரியாதா!!!//

அம்மிணி நீங்க பழனியா? (சதி லீலாவதி ஞாபகத்திற்கு வந்தால் நான் பொறுப்பில்லை!)

//ஆரம்ப காலத்துல நான் டிரைவிங் கத்துகிட்டப்ப நடந்ததெல்லாம் ஞாபகம் வருது அந்த அசைபடத்தை பாத்ததும்.//

இப்போ நீங்க ஓட்டும் பொழுது பார்த்த பலருக்கு இந்த அசைபடம் ஞாபகத்திற்கு வருமா? :))))

said...

//வந்துட்டேன்...;))

3வது செய்தி ரொம்ப பயங்காரமாக இருக்கே!!//

வாங்க கோபி!

:((

said...

//பஞ்ச் அண்ணனுக்கு பாராட்டை சொல்லிக்கிறேன். பதிவு பத்தி கமென் ட் அப்பாலிக்கா. //

வாங்க கிஅ^4

உங்க நண்பருக்குத்தானே உங்க சப்போர்ட்டும். அப்பாலிகா வரப் போறீங்களான்னு பார்க்கறேன்!

said...

தலைப்பைப் பார்த்தாலே ரொம்ப நல்ல பதிவுனு தெரியுது, படிச்சுட்டு வரேன், :P

said...

கண்டிப்பா பன்ச் அண்ணாவுக்குதான் சப்போர்ட். நீங்க பார்த்ததை /படிச்சதை/ கேட்டதை எழுதுரீங்க..இதுல என்னா இருக்குது..அது பத்தி பன்ச் கமெண்ட் வக்கிறாரே ..அது தெறமை.

இப்ப செய்திகளைப் படிச்சு எனக்குப் புரிஞ்சது

செய்தி-1

1 லட்சம் செலவு பண்ணி அப்பாவை போடுத்தள்ளிட்டு 12 வருஷம் (ஜெயிலில்) உக்காந்து சாப்பிட வழி பண்ணிக்கிட்டானாக்கும்.

செய்தி-2

2.உண்மையாலுமே பறவைதான் எச்சம் போட்டுச்சா இல்லை கேஸ் போடன்னுட்டே ப்ளான் பண்ணி அந்த ஆளு கையோட கொஞ்சம் எடுத்துட்டு போய் அங்க போட்டு அது மேல வழுக்கி விழுந்து கேஸ் போட்டானா? அப்படீன்னு சந்தேகம். நல்லா அலையுறாங்கப்பா.. கேஸ் போட.

செய்தி -3 செய்தி -4 & செய்தி 5

ஸ்பெஷல் கருத்து எதுவும் இல்லை :)


செய்திப்படம்-6

இந்த செய்திப்படத்தை வலை பதிந்ததுல இ கொ வோட நுண்ணரசியல் கலந்துருக்குறதா நான் நம்புகிறேன் :)
இந்த படத்துக்கு கீழே - Funny home videos are a click away -அப்படீன்னு போட்டுருந்ததை வெள்ளாந்தியா க்ளிக் பண்ணப் போய்
http://www.metacafe.com/watch/1473788/jelena_jankovic_put_your_panties_on/ இந்த படம் கண்ணுல பட்டுத் தொலச்சுது.

ஆனாலும் இம்புட்டு பேருக்கு முன்னால சிரிச்சுக்குனே ட்ரெஸ் மாத்துறதுக்கு அந்தப் பொண்ணுக்கு "தில்" ஜாஸ்திதான் :)

சரி..எனக்கு ஒரு சந்தேகம். இந்த மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் மாட்சுக்கு நடுவுல ப்ரேக் கேட்டா குடுக்க மாட்டாங்களா? இல்லை அந்த குறிப்பிட்ட ஆடை வடிவமைப்பாளர் நடுக் கோர்ட்டுலதான் மாத்திக்கணும் அப்படீன்னு ஸ்பான்சர்ஷிப் அக்ரிமென் ட் எதுனா போட்டுருப்பாங்களா ? இதைப் பத்தி பன்ச் அண்ணா என்ன சொல்லுறார்:)

கி அ அ அனானி

said...

//பெரிய வண்டிய சின்ன வண்டி இடிச்சாலும், சின்ன வண்டிய பெரிய வண்டிய இடிச்சாலும் நஷ்டம் சின்ன வண்டிக்குத்தான். இதையேதான் விஜய.டி.ஆர் அன்னிக்கே சொல்லி வச்சாரு..
"அம்மா, முள்ளுமேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் கஷ்டம் என்னமோ சேலைக்குத்தான்"//

யோவ் இளா, இங்க பஞ்ச் அண்ணா என்னடான்னா மன்மோகன் சிங்கை எல்லாம் இழுத்துக்கிட்டு வந்து சின்ன வண்டி இடிச்சாக்கூட இடைத் தேர்தல்ன்னு சொல்லறாரு, நீர் என்னமோ இன்னும் விஜய டி ஆர் ரேஞ்சிலேயே இருக்கீறே.

said...

/சமிபத்தைய கேஸ் ஏதும் தெரியல்ல...ஆனா ஸ்ரீதேவி மூக்கு ஆப்ரேஷன் கேஸ் இந்த மாதிரி முடியலீங்கோ :)//

யாருங்க இந்த ஸ்ரீதேவி? விஜயக்குமார் பொண்ணா? அவங்களை எல்லாம் தெரியற அளவு வயசானவரா நீரு? அவங்க மூக்கு ஆப்புரேஷனுக்கு அப்புறமா இப்படி இருக்கு?

said...

//:))))//

ராமு, மூத்த பதிவராக்கிட்ட போல! வாழ்த்துகள்!! :))

said...

//பதிவு சூப்பரோ சூப்பர்...

தொடர்ந்து இந்த மாதிரி பதிவு போடவும் :-))//

அப்பாடா! பதிவைப் பத்தியும் ஒருத்தர் சொல்லிட்டாருடே!! வெட்டி வாழ்க!

//இது தான் பெஸ்ட் :-)//

அடப்பாவி, நீயி பதிவுன்னு சொன்னது பஞ்ச் அண்ணா கமெண்ட் மட்டும்தானா?! இது தெரியாம....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

அதுக்குள்ளே இத்தனை கமெண்டா???அதுசரி, பதிவு எதைப் பத்தி?? ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கும்போலிருக்கு??? அதான் நீங்களே இத்தனை கமெண்ட் போட்டிருக்கீங்க! :P

said...

//ஸ்ரீதேவி மூக்கு ஆப்பரேஷன் பத்தி என்ன கேஸ்? அவங்க அம்மாவுக்குதான் மாத்தி ஆப்பரேஷன் பண்ணிட்டாங்க. அதுவும் நோட்டிஸ் செட்டில்மெண்ட் வரைதான் போச்சு. //

அவரே ஸ்ரீதேவி காலத்து ஆளான்னு கேட்கறேன். நீங்க மஞ்சுளா காலத்து ஆளா? ரொம்ப பெரியவருங்க நீங்க.

அவுட் ஆப் கோர்ட்டோ, கட்டைப் பஞ்சாயத்தோ. இந்த மாதிரி ஒரு கேஸ் ஒண்ணு போட்டு, லம்பா ஒரு அமவுண்ட் அடிச்சா அப்புறம் இந்த பெட்டி தட்டறது எல்லாம் விட்டுட்டு நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்லறீங்க?

said...

// கொத்தனாரை விட பஞ்ச் அண்ணா கலக்குறாரே.... :)))))//

தமிழ் பிரியன் - யூ டூ?!!

said...

//புதரகத்துல அல்லாருமே அப்படிதானா..........
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அல்லாருமா? நான் இதோட நுண்ணரசியலைப் பீராய ஆரம்பிச்சா உமக்கு ரொம்பவே பிரச்சனை. ஆகவே பேசாம விடறேன்!! :))

said...

நல்ல கமெண்ட்ஸ் இ.கொ. ரசித்துச் சிரித்தேன்.

said...

//சரி மேடைக்கு வந்துட்டேன். எங்க பஞ்ச் அண்ணா:)//

எங்க பஞ்ச் அண்ணா அப்படின்னு உரிமை கொண்டாடறீங்களா? இல்லை அவர் கமெண்டுகளில் அவரோட பஞ்ச் இல்லை என நினைத்து எங்கே பஞ்ச் அண்ணா என நுண்ணரசியல் செய்கிறீர்களா? அது இருக்கட்டும். அவர் உங்களுக்கும் அண்ணாவா?

//பாவம்பா அந்த ட்ரக் ஆளு! நம்ம ஊரில யாரொ ஒருத்தரை ரொம்பக் கேலி செய்வோமே. அவரை விட மோசமாக் கஷ்டப்பட்டு இருக்காரே இவர்!!//

அது யாரு நீங்க கேலி செய்யும் ஆள். அதைச் சொல்லுங்க முதலில்!

said...

//தலைப்பைப் பார்த்தாலே ரொம்ப நல்ல பதிவுனு தெரியுது, படிச்சுட்டு வரேன், :P//

அப்படியா? பதிவைப் படிச்சாச்சா?

said...

//கண்டிப்பா பன்ச் அண்ணாவுக்குதான் சப்போர்ட். //
அதான் தெரியுமே!

//நீங்க பார்த்ததை /படிச்சதை/ கேட்டதை எழுதுரீங்க..இதுல என்னா இருக்குது..அது பத்தி பன்ச் கமெண்ட் வக்கிறாரே ..அது தெறமை.//

தங்கமணி திட்டறதும் மீறி நேரம் செலவழிச்சு தேடித் தேடி எடுத்துப் போடறேன். எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

//1 லட்சம் செலவு பண்ணி அப்பாவை போடுத்தள்ளிட்டு 12 வருஷம் (ஜெயிலில்) உக்காந்து சாப்பிட வழி பண்ணிக்கிட்டானாக்கும்.//

12 வருஷ போர்டிங் அண்ட் லாட்ஜிங் 1 லட்சம்தானா? சீப்தான்.

//உண்மையாலுமே பறவைதான் எச்சம் போட்டுச்சா இல்லை கேஸ் போடன்னுட்டே ப்ளான் பண்ணி அந்த ஆளு கையோட கொஞ்சம் எடுத்துட்டு போய் அங்க போட்டு அது மேல வழுக்கி விழுந்து கேஸ் போட்டானா?//

ஆக மொத்தம் குடுத்த சுட்டியைப் பார்க்கலை. ஏன்னா அது ஆளு இல்லை. அம்மா!! இல்லை உம்ம ஈயம் இளிக்குதோ? :))

//ஸ்பெஷல் கருத்து எதுவும் இல்லை :)//

அப்போ சாதாரணக் கருத்தைச் சொல்லலாமே.

//இந்த செய்திப்படத்தை வலை பதிந்ததுல இ கொ வோட நுண்ணரசியல் கலந்துருக்குறதா நான் நம்புகிறேன் :)//

என் நுண்ணரசியலை விடுங்க. உங்க பார்வைதான் பப்ளிக்கா ஆயிடுச்சு. எங்களுக்கு எல்லாம் புதிய கார் டெக்னாலஜி, அமெரிக்க நாய்களின் சாகசங்கள் அப்படின்னு கண்ணில் படுது. உமக்குத்தான் தமிழ்மணம் மாதிரி ஜட்டிக் கதை எல்லாம் கண்ணில் படுது. இதுல நீர் வெள்ளந்தின்னு வேற படம் காட்டறீரு. அதுல சந்தேகம் வேற.

நல்லா இருங்க சாமீ!!

said...

//அவரே ஸ்ரீதேவி காலத்து ஆளான்னு கேட்கறேன்//

அண்ணாச்சி,

இது என்ன பதினாறு வயசில நீங்க பரட்டையா ஸ்டைல் பண்ணிகிட்டு திரிஞ்சதும், மூன்றாம் பிறை பாத்துட்டுதான் முழு உணவை சாப்பிடுவேன் அடம்பிடிச்சதும், கோகிலான்னு பேர் வச்ச பொண்ணாப் பாத்து பாத்து சைட் அடிச்சதும், தேவராகம் பாடி பரசவமானதும் எல்லாம் மறந்து போச்சா உங்களுக்கு?

ஹிந்தி தெரியாத ஒரே காரணதுக்காக இம்புட்டு கோவப் படக்கூடாது அவங்க மேல. பாவம். :-))

ஸ்ரீதேவி பேரைச் சொல்லி ஒரு 50 அடிச்சிக்கலாம் இப்ப. :-))

said...

//அதுக்குள்ளே இத்தனை கமெண்டா???அதுசரி, பதிவு எதைப் பத்தி?? ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கும்போலிருக்கு??? அதான் நீங்களே இத்தனை கமெண்ட் போட்டிருக்கீங்க! :P//

முதல் பின்னூட்டம் போட்டது - July 09, 2008 4:41 AM

அப்பவும் பதிவைப் படிக்கலை.

இரண்டாவது பின்னூட்டம் போட்டது - July 09, 2008 9:50 AM

அதாவது அஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம். ஆனா இப்பவும் பதிவைப் படிக்கலை.

ரொம்ப நன்றிம்மா!! :))

said...

// நல்ல கமெண்ட்ஸ் இ.கொ. ரசித்துச் சிரித்தேன்.//

ஐயய்யோ வெண்பூ, கமெண்ட் போட்டது நான் இல்லைங்க. அது பஞ்ச் அண்ணா. :))

said...

//ஐயய்யோ வெண்பூ, கமெண்ட் போட்டது நான் இல்லைங்க. அது பஞ்ச் அண்ணா. :))//

பேர் மாறிப் போச்சி. அவ்வளவுதான. அண்ணன் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு. கோச்சிக்க மாட்டாரு. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். என்னால்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு)

said...

//ஆமாம் நீங்களும் முதலில் வந்த சரவணனும் ஒண்ணா? இல்லை சரவணன் வேற சரவணண் வேறயா? சரியா சொல்லிடுங்க ப்ளீஸ்!//

ஷிப்டுல இருத்து விரலை எடுப்பதற்குள் வேகமா அடிச்சுட்டு இருக்கன், எப்படிங்க இப்படி நுணுக்கமா பார்கரீங்க.

என்ன இந்த பதிவுல பின்னூட்டம் ரொம்ப கம்மியா இருக்கு, கொத்ஸ் என்ன ஃபார்ம்ல இல்லையா

சரவண'ன்' (சரியா அடிச்சுட்டன்பா )

said...

//உண்மையாலுமே பறவைதான் எச்சம் போட்டுச்சா இல்லை கேஸ் போடன்னுட்டே ப்ளான் பண்ணி அந்த ஆளு கையோட கொஞ்சம் எடுத்துட்டு போய் அங்க போட்டு அது மேல வழுக்கி விழுந்து கேஸ் போட்டானா?//

கொத்ஸ் அந்த அம்மா பறவை எச்சம் கலெக்ட் பண்ண காட்டுக்குள்ள போகும்போது உண்மையிலேயெ பறவை எச்சத்துல வழுக்கி விழுந்துட்டாங்கன்னு வைங்க, இப்ப தோட்ட நிர்வாகத்து மேல கேஸ் போட்ட அந்த அம்மா.. அப்ப யார் மேல கேஸ் போடுவாங்க..

சரவணன்

said...

///
ஆக மொத்தம் குடுத்த சுட்டியைப் பார்க்கலை. ஏன்னா அது ஆளு இல்லை. அம்மா!! இல்லை உம்ம ஈயம் இளிக்குதோ? :))///

அதுல குடுத்த நியூசைத்தான் பதிவுல குடுத்திருக்கீரே, அப்புறம் போய் சுட்டியை க்ளிக் பண்ணி அன்னிய மொழில வேற அதே செய்தியை படிக்கணுமா? ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. படிக்குற நாங்களெல்லாம் பொம்பளையயே ஆம்பிளையாக்கி புரிஞ்சுக்குறா மாதிரி செய்திகளை தெள்ளத் தெளிவா குடுக்குறீங்க. இதுல //தங்கமணி திட்டறதும் மீறி நேரம் செலவழிச்சு தேடித் தேடி எடுத்துப் போடறேன். எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ///அப்படீன்னு அங்கலாய்ப்பு வேற.

அது சரி..இந்த செய்திக்கு பன்ச் அண்ணா குடுத்த கமெண்ட்டைப் பாருங்க :)


///என்னாது? "எச்ச"ரிக்கைப் பலகை வேணுமா? இவனுங்களையெல்லாம் .. ///

////"அணிந்திருக்கும் ஆடைகளை தேய்க்க முயலாதீர்கள்" ன்னு இவனை மாதிரி ஆளுங்களாலேதான் எழுதறாங்க போல உங்க புதரகத்துல!////

அப்ப அவரும் சுட்டியைப் படிக்காமதான் கமென்ட் சொன்னாரா ( என்னை மாதிரி)

கி அ அ அனானி

said...

கொத்ஸ் பஞ்ச் அண்ணா பின்னூட்டமெல்லாம் போடமாட்டாரா.

பதிவுக்கு பஞ்ச் மாதிரி பின்னூட்டத்துக்கு ஒரு பின்ச் கொடுக்க சொல்லுங்க அண்ணன்கிட்ட.

//இந்த வழக்கு இன்னும் விநோதம். //

இது வினோதமா இல்லை விநோதமா இரண்டும் ஒன்றா, ஒரு பொருள் தரும் இரு சொல்லா, தனித்தனி பொருள் தரும் இரு வேறு சொற்களா பஞ்ச் அண்ணாவை விட்டு பதிலுங்க அவர் சொன்னாதான் மறக்காத மாதிரி பஞ்சா சொல்லுவாரு.

சரவணன்

said...

///உங்க பார்வைதான் பப்ளிக்கா ஆயிடுச்சு. எங்களுக்கு எல்லாம் புதிய கார் டெக்னாலஜி, அமெரிக்க நாய்களின் சாகசங்கள் அப்படின்னு கண்ணில் படுது. உமக்குத்தான் தமிழ்மணம் மாதிரி ஜட்டிக் கதை எல்லாம் கண்ணில் படுது. ///

70 வயசுக்கு மேலே உள்ள பெருசுங்களெல்லாம் பேப்பரைத் தொறந்தாலே முதல்ல ஓபிச்சுவரி தான் பாப்பாங்களாம். நம்ம செட்டில் எந்த விக்கெட்டெல்லாம் நேத்திக்கு விழுந்துச்சுனு பாக்க. அது மாதிரி வயசுக்கு ஏத்த மாதிரியான விஷயம் கண்ணுல படுது. அது என் தப்பா? உங்க வயசுக்கு ஏத்த மாதிரி உமக்கு " அமெரிக்க நாய் சாகசம் " கண்ணுல படுது போல :) ஆனா உம்ம வயசைப் பத்தி ஸ்ரீதர் நாராயணன் ஏதோ பிரிச்சு மேஞ்சிருக்கிறாரு, பரட்டை,தேவராகம் அப்படீன்னுட்டு..அதான் ஒரே கன்ப்யூஸிங்.


//////என் நுண்ணரசியலை விடுங்க////

விட மாட்டேனுல்ல. :)
மேலே உள்ள பதில் பின்னூட்டங்களில் உங்க நுண்ணரசியல்

1 //எங்களுக்கு எல்லாம் புதிய கார் டெக்னாலஜி, அமெரிக்க நாய்களின் சாகசங்கள் // அப்படின்னு சொல்லி உம்ம கருத்தை ஏதோ நிறைய பேரின் கருத்து போல காட்ட முயன்றிருப்பது.

2./// தமிழ்மணம் மாதிரி ஜட்டிக் கதை எல்லாம் கண்ணில் படுது./// இதுக்கு விளக்கம் வேற கொடுக்கணுமா?

அப்புறம் எனது போன பின்னூட்டத்தில் கேட்ட சந்தேகங்களுக்கு (டென்னிஸ் பாவை பத்தி:)பதில் மற்றும் பஞ்ச் பரமசிவம் அண்ணனின் கருத்து இன்னும் வரலை என்பதையும் தாழ்மையுடன் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

கி அ அ அனானி

said...

சொல்ல விட்டுப் போச்சு.

///முதல் பின்னூட்டம் போட்டது - July 09, 2008 4:41 AM

அப்பவும் பதிவைப் படிக்கலை.

இரண்டாவது பின்னூட்டம் போட்டது - July 09, 2008 9:50 AM

அதாவது அஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம். ஆனா இப்பவும் பதிவைப் படிக்கலை.
////

உம்ம பதிவு படிக்கிறவங்க?!! கிட்ட பெற்றிருக்கும் வரவேற்பு இப்படி இருக்கு. அதை விட்டுட்டு பதிவை(மட்டும்) படிச்சு பின்னூட்டம் போட்ட என்னைப் பாத்து சுட்டியைப் படிக்கலை அதுனால " ஈயம் இளிக்குது, பித்தளை புளிக்குது " அப்படீன்னு சொல்றீங்களே.

நல்லா இருங்க :)

கி அ அ அனானி

said...

சொல்லாமல் விட்டுப் போன மற்றும் ஒன்று.

/// ஏன்னா அது ஆளு இல்லை. அம்மா!! ////

பாட்ரீசியா நிகோலா "அம்மா" அப்படீங்குறது உமக்கு எப்படி தெரியும் ???????????????????
கன்னிப் பொண்ணா இருந்தா " உம்ம பின்னூட்டத்தைப் படிச்சுட்டு???!!!" அதுக்கு ஒரு மான நஷ்ட வழக்கு போட்டுறப் போறாங்க. அதுனால இனிமே பொதுப்படையா சொல்லணும்னா "அம்மையார்" அப்படீனு சொல்லுங்க.
கலைஞர் " கோப்பி ரைட் " கேஸ் போட்டா நான் பொருப்பல்ல என்றும் இப்போதே சொல்லி விடுகிறேன்.

கி அ அ அனானி