இந்தியர்கள் கடைக்கு போய் கத்திரிக்காய் வாங்குவதால்தான் கத்திரிக்காய் விலையேறுகிறது என்று கண்டுபிடித்திருக்கும் கொத்தனார் -
இவர் ஒரு மூத்த பதிவர். நாலு விசயமும் தெரிஞ்ச நல்ல மனசுக்காரர். "நாலு பேர் பாக்குற மாதிரி நல்லா இரு"ன்னு சொல்லாம இப்படி நாலு பேரு பாக்குற மாதிரி கேள்வி கேக்குராரேன்னு யோசனையாத்தான் இருக்கு. இதில சோடி போட்டுகிட்டு வேற திரியறாங்கங்க. ஒருத்தர் கேள்வி கேப்பாராம். இன்னொருத்தர் பஞ்ச் கொடுப்பாராம்.
இதுகெல்லாம் அசந்துருவோமா. கைப்புள்ள! எடுறா உலாவியை! விடுறா மெயில்லை!
1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?
பதிவு எழுத தேவை கொஞ்சம் எழுத்து திறமை, வாசகர் வட்டம் பற்றிய தெளிவு, கொஞ்சம் 'தடித்த தோல்' மற்றும் நிறைய்ய்ய்ய நேரம். நம்ம வேலை நேரம் பத்தி சொல்லவே முடியாது. அதான் இப்படியே இருந்திட்டு இருக்கேன். சோம்பேறியா :-)
2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?
இது வரைக்கும் நான் எதுவும் வாங்கிக் கட்டிக்கலை. பொதுவா அவங்கதான் 'வாங்கிக் கட்டிப்பாங்க'. நாம வெறும் டவுசர் பார்ட்டிதானே.
3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றி :-). ரஜினி ராம்கி சண்டைக்கு வந்திடப் போறார் அப்புறம்.
பொதுவாக நாம் ஒரு படைப்பை அணுகும்போது பல முன்முடிவுகளோடே அணுகுகிறோம். முதல் பார்வையில் மோனாலிசா ஒரு இத்தாலிய சீமாட்டியின் போர்டிரெய்ட் படம். இது மிகச் சுலபமான புரிதல். "இதில் என்ன பெருமை இருக்கிறது? ரவி வர்மா இதைவிட பிரமாதமா வரைவார்" என்றோ, "போர்டிரய்ட் எல்லாம் எலிமெண்டரி ஆர்ட்" என்றோ சொல்லிவிட்டு வந்து விடலாம். ஒரு மாட்ர்ன் ஆர்ட் தலைகீழா மாட்டினாலும் யாரும் கண்டுபிடிக்கமாட்டாங்க அப்படின்னு சுலபமா ஜோக் அடிக்கலாம்.
Dan Brown மோனாலிசா பத்தி நிறைய எழுதறார். பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன.
கமல்ஹாசன் பல திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், அதில் பின் வரும் மூன்றும் ஒரு சில புள்ளிகளில் ஒன்று சேர்கின்றன. ஹேராம், அன்பே சிவம் இப்பொழுது தசாவதாரம். பாத்திரங்களின் பெயர்களுக்கு அவர் தரும் முக்கியத்துவம், மனிதனின் அகப்பயணம், சித்தாந்தங்கள் மற்றும் மொழியின் ஊடே நடக்கும் வெளிப்பயணங்கள், மனிதனின் இருப்பு சார்ந்த அலசல்கள், இறை நம்பிக்கை பற்றிய கேள்விகள் போன்ற பல விசயங்களை ஒரு திரையில் தீட்டுகிறார். அந்த பெரிய திரை நிறைய பேர் கண்ணுக்கு தெரிவதில்லை.
அட நமக்கு முதலில் புரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே என்றுதான் நினைத்தேன். எழுதினேன் :-)
4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?
இதுவரை அப்படி ஒரு சம்பவமும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கையை ரிவர்ஸில் எப்படி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்.
தொண்டு கிழமாக இருந்துவிட்டு, மீண்டும் உடலில் வலு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, 'தொல்லை கொடுக்கும் பெருசு'ல் இருந்து பிள்ளைகளுக்கு சூப்பர் மேனான அப்பாவாக மாறி, சப்பென்று இருக்கும் இல்லற வாழ்வில் மீண்டும் காதலை சந்தித்து, மீண்டும் கல்லூரி வாழ்க்கை வாழ்ந்து, பள்ளிப் பாடங்களை இப்பொழுதாவது புரிந்து படித்து, துன்பம் இல்லாத மழலைப் பருவத்தில் தவழ்ந்து, அந்த ஒரு நொடி சம்போகத்தில் ஒரு உயிரணுவாக மாறிப் பார்க்கலாம்.
நாம யாரை கேள்வி கேட்கிறது? அப்படியே கேட்டாலும் நம்மளை மதிச்சு யாரும் பதில் போடுவாங்களான்னு தெரியாது. 'ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்' அப்படின்னு வடிவேலுக்கு அப்புறம் இணையத்தில் இவரைத்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.
எங்கள் அருமை அண்ணன், சிலம்புச் செல்வன், கண்ணகியின் கோவலன், மாதவிப் பந்தலான், பதின்மூன்றாம் ஆழ்வார், இணைய தளபதி இப்படியெல்லாம் பில்டப் கொடுக்காமலே அவரைப் பத்தி நிறைய பேருக்கு தெரியும். இப்ப கேள்விகள் (இது வேறயா):
1. நான் வறட்டு ஆன்மீக பற்றாளன் இல்லை. ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆன்மீகம் பல புதிய புரிதல்களை தருகின்றன. நீங்கள் இறை மறுப்பாளராக இருந்து பின்னர் மாற்றம் கண்டதாக அறிகின்றேன். மாற்றங்கள் வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் ஆன்மீகத் தேடலைத் தாண்டி நீங்கள் ஆன்மீகம் வளர்க்க நிறைய சிரத்தை எடுக்கிறீர்கள். எதனால் இந்த மாற்றம்?
2. இத்தனைப் பதிவுகள், பின்னூட்ட மட்டுறுத்தல், தொடர்ந்து விவாதம் என்று எப்படி நேரப் பங்கீடு செய்கிறீர்கள்?
3. இந்த மாதிரி ஒரு தொடர் விளையாட்டில் உங்களை மூன்று பேர் ஒரே சமயத்தில் அழைக்கிறார்கள். ஒரு சங்கிலியில் தான் நீங்கள் பங்கு பெற முடியும் என்று விதி இருந்தால் (அட இருக்குன்னு சொல்றேன்!) யாருடைய சங்கிலியை தொடர வைப்பீர்கள்? ஏன்?
உங்களை தொடரச் சொல்லும் அந்த மூன்று பதிவர்கள்
அ) கோ. இராகவன்
ஆ) கோவி கண்ணன்
இ) வெட்டிப் பையல் பாலாஜி
4. உங்கள் நினைவில் ஆழப் பதிந்து போன சிறுவயது கதை? யார் அந்த கதையை உங்களுக்கு சொன்னார்கள்?
டிஸ்கி: பதிவுக் கயமைத்தனம் செய்வதற்காகவே நான் பதிவெழுதா ஸ்ரீதரைக் கேள்வி கேட்டதாகப் பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீதரின் பதில்களையும் கேள்விகளையும் இங்கு பதிவாய் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
108 comments:
ஸ்ரீதர், என் கேள்விகளுக்குப் பதில் அளித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில் உமது வரிகள் ஒவ்வொன்றிலும் பல பூனைக்குட்டிகளின் களியாட்டத்தைப் பார்க்கையில் வருத்தமாய் இருக்கிறது. அந்த நுண்ணரசியல் வாதங்களை நம்ம வாசகர்கள் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன். இல்லை நானே வருவேன்......
பதில்களில் ஒன்னும் நுண்ணரசியல் தெரியலையே.... (ஓ... நாங்க ஆரம்ப பதிவரோ.. அதனால தெரியாமல் இருக்கலாம்). ஆனால் கேள்விகளில் செம நுண்ணரசியலுங்கோ சாமியோவ்... வரட்டும் க.ர.ச... ;)
கொத்ஸு
என் செல்லத்தம்பிய இப்படில்லாம் வம்புக்கு இழுத்தா நான் ச்சும்மா இருக்கமாட்டேன் ஆமா(நானும் உங்களோட சேர்ந்துக்குவேன்:)) எனக்கே அவருகிட்ட இப்படில்லாம் கேட்க ஒரு திட்டம் இருந்தது!!
//ஒரு திரையில் தீட்டுகிறார். அந்த பெரிய திரை நிறைய பேர் கண்ணுக்கு தெரிவதில்லை//
ஏனென்றால் அவரே திரையை ஆக்கிரமிப்பதால்!!!
//பதில்களில் ஒன்னும் நுண்ணரசியல் தெரியலையே....//
வாங்க தமிழ்(ப்)பிரியன். அதெல்லாம் நான் அப்புறன் எடுத்துக் குடுக்கிறேன். அப்போ பாருங்க.
//ஆனால் கேள்விகளில் செம நுண்ணரசியலுங்கோ சாமியோவ்... வரட்டும் க.ர.ச... ;)//
அதே!
//கொத்ஸு
என் செல்லத்தம்பிய இப்படில்லாம் வம்புக்கு இழுத்தா நான் ச்சும்மா இருக்கமாட்டேன் //
ஷைலஜாக்கா, உங்க தம்பி பேரைப் போட்ட பின்னாடிதான் நம்ம பதிவுக்கு வழி தெரிஞ்சுதாக்கும். நிற்க.
உங்க தம்பியை வம்புக்கு இழுத்தது நான் இல்லை. இதுக்குதான் ரெகுலரா வரணும், வந்த பின்னாடி பதிவையும் படிக்கணும். விட்டா நானும் ஸ்ரீதரும் ஒரே ஆள்தான்னு சொல்லுவீங்க போல!!
//எனக்கே அவருகிட்ட இப்படில்லாம் கேட்க ஒரு திட்டம் இருந்தது!!//
ஓஹோ! ஒரு வேளை நீங்களும் ஸ்ரீதரும்தான் ஒரே ஆளா? திட்டம் இருந்ததுன்னு பாஸ்ட் டென்ஸல சொல்வது பார்த்தா இருந்தது, இப்போ கேட்டு நிறைவேத்தியாச்சு என்பதாகத் தெரிகிறதே!!
ஸ்ரீதர் சொன்னது "பதி'ன்'மூன்றாம் ஆழ்வார். உமது தலைப்போ "பதிமூன்றாம் ஆழ்வார்"
இதில் ஏதாவது நுண்ணரசியல் இருக்கா கொத்ஸ்!
//ஏனென்றால் அவரே திரையை ஆக்கிரமிப்பதால்!!!//
என்னாது, கமல் அம்புட்டு குண்டாயிட்டாரா? :))
தல, இன்னுமா இந்த மூடில் இருந்து வெளிய வரலை? அடுத்து குசேலன் வருது. டோண்ட் வொரி, பீ ஹேப்பி!!
இலவசக்கொத்தனார் said...
//ஷைலஜாக்கா, உங்க தம்பி பேரைப் போட்ட பின்னாடிதான் நம்ம பதிவுக்கு வழி தெரிஞ்சுதாக்கும். நிற்க. >>>//
என்ன கொத்சு நீங்களும் என் அன்புத்தம்பிதானே இப்படியா உங்க வீடுவந்தவளை அத்ட்றது? நிற்கச்சொல்லி தண்டனை வேற பயந்து நின்னுட்டே இருக்கென்:)
//பதிவு எழுத தேவை கொஞ்சம் எழுத்து திறமை, வாசகர் வட்டம் பற்றிய தெளிவு, கொஞ்சம் 'தடித்த தோல்' மற்றும் நிறைய்ய்ய்ய நேரம்//
அட என்ன ஸ்ரீதர் இப்பிடி புதுசா புதுசா கெளப்பி வுடறீங்க?
இதெல்லாம் இருந்து தானா நான் மட்டும் எழுதறேன்?
இதெல்லாம் ரொம்ப ஓவரு!
இலவசமாவே பதிவர் ஆகலாம் என்பது தான் வலையுலக புத்தராம் கொத்தரு சொல்லி இருக்காரு! அதை ஃபாலோ பண்ணுங்க! பதிவைத் தொறங்க! ரிப்பன் வேணும்னா சொல்லுங்க! ஆபீஸ் பொண்ணுங்க கிட்ட கேட்டுப் பாக்கறேன்! :-)
//அட நமக்கு முதலில் புரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே என்றுதான் நினைத்தேன். எழுதினேன் :-)//
எழுதினாப் பிறகு புரிஞ்சுதா ஸ்ரீதர்? :-)
//ஸ்ரீதர் சொன்னது "பதி'ன்'மூன்றாம் ஆழ்வார். உமது தலைப்போ "பதிமூன்றாம் ஆழ்வார்"
இதில் ஏதாவது நுண்ணரசியல் இருக்கா கொத்ஸ்!//
வைணவத்தில் தன்னைப் பெண்ணாக உருவகப்படுத்திக்கொண்டு அப்பெண் கண்ணன் மீது வைக்கும் காதலினால் வைகுண்டம் வசப்படும் என்று செய்தவர்கள் உண்டல்லவா
அது போன்று செய்யும் அசைவர் இந்த ரவி.
வெறும் கண்ணன் மட்டுமல்லாது ராமர் மேலும் பாலாஜி மேலும் காதல் கொண்ட இவருக்குப் பதி மூன்று
அதனால்தான் இவரைப் பதிமூன்றாம் ஆழ்வார் என அழைத்தோம்.
மத்தபடி ஸ்ரீதர் வந்து அவரோட எழுத்துப்பிழைக்கு தகுந்தபடி சப்பைக்கட்டு கட்டுவார்.
//'ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்' அப்படின்னு வடிவேலுக்கு அப்புறம் இணையத்தில் இவரைத்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.//
யோவ்!
இதுக்குப் பேரு நுண்ணரசியல் இல்ல!
அதையும் தாண்டி நுட்பமானது! :-)
//எங்கள் அருமை அண்ணன்//
என்னாது? அண்ணனா?
அண்ணா, கேஆரெஸ் தம்பி கிட்ட காசு வேணும்னா, அதுக்காக இப்படி எல்லாமா கால்-ல விழுந்து காசு வாங்க ஐடியா போடுறது?
அண்ணனும் நீயோ? அனானி ஆப்ஷனும் உன்னதோ?
உன்னை அறிந்தோ பதிவை ஓதினேன்?
:-)
//கண்ணகியின் கோவலன்//
சிலம்பைக் கொடுத்து அலம்பத் திட்டம் போடறீங்க!
பொற்கொ(கி)ல்லர் யாரு? கொத்ஸா? :-))
//இவருக்குப் பதி மூன்று//
அடிங் கொக்க மக்கா!
இன்னிக்கி உங்க பிரியாணிக்கு நான் மசாலாவா?
நடத்து ராசா நடத்து! :-)
ஸ்ரீதர்,
//அதான் இப்படியே இருந்திட்டு இருக்கேன். சோம்பேறியா :-)//அதெப்படி ஸ்ரீதர், நீங்க மட்டும் கேள்வி கேட்டுட்டு காணாம போயிருவீங்க! உங்களைப் பழி வாங்கணும்னா உங்க அட்ரஸ் எதுன்ன்னு தெரியாது..
கொத்தனார்!!
உம்ம எழுத்துப் பிழையை எல்லாம் இப்படியே அடுக்குத் தமிழ் பேசி அட்ஜஸ்ட் செஞ்சுடுங்க.. மத்தவங்க எழுத்துபிழைன்னா பாக்கமாட்டேன், சொத்தைக்கடலைன்னு பிட் அப் கொடுங்க!
//இவருக்குப் பதி மூன்று//
திருப்-பதி
பசு-பதி
வலைப்-பதி! :-))))
//என்ன கொத்சு நீங்களும் என் அன்புத்தம்பிதானே இப்படியா உங்க வீடுவந்தவளை அத்ட்றது? நிற்கச்சொல்லி தண்டனை வேற பயந்து நின்னுட்டே இருக்கென்:)//
சரி அக்கா செண்டிமெண்ட் எல்லாம் போட்டுட்டீங்க. இப்படி ஓரமா ஒக்காந்துக்குங்க.
ஏங்க அவராவது கொஞ்சநாள் இந்த 'சாக்கடை?!' சாகரத்துல விழுந்துராம இருக்கட்டுமே, விட்ருங்க பாவம். அவர் பின்னூட்ட மன்னராகவே ஜொலிக்கட்டும்!
//அட என்ன ஸ்ரீதர் இப்பிடி புதுசா புதுசா கெளப்பி வுடறீங்க?
இதெல்லாம் இருந்து தானா நான் மட்டும் எழுதறேன்?
இதெல்லாம் ரொம்ப ஓவரு! //
யோவ் உம்மை மட்டுமா சொன்னாரு. எல்லாம் தான் பதிவர் இல்லை என்ற மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடு.
தமிழ்(ப்)பிரியனே, இதுதான் முதல் இன்னும் இப்படி எவ்வளவு வருது பாருங்க.
//எழுதினாப் பிறகு புரிஞ்சுதா ஸ்ரீதர்? :-)//
ரவி, அந்த நுண்ணரசியல் புரியாம இருக்கீறே. அவரு சொல்ல வந்த மேட்டரே வேற. பதிவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாதாம். தெரியாத மேட்டர் பத்தி பதிவு போட்டு அதுல எதாவது சண்டை வந்து அப்பாலிகா எதாவது புரியுதான்னு பார்ப்பாங்களாம்.
நீர் என்னமோ அவரைப் பார்த்து புரியுதான்னு கேட்கறீரு.
தமிழ்(ப்)பிரியரே, இப்ப புரியுதா ஸ்ரீதரின் நுண்ணரசியல்? இன்னும் இருக்கு பாரும்.
//யோவ்!
இதுக்குப் பேரு நுண்ணரசியல் இல்ல!
அதையும் தாண்டி நுட்பமானது! :-)//
ஆமாம். இம்புட்டு எல்லாம் நுட்பமா இருந்தா அதுக்கு பேரு ஆப்புன்னு சொல்லுவாங்க!!
//இன்னிக்கி உங்க பிரியாணிக்கு நான் மசாலாவா?//
மீண்டும் அசைவர் என்பதை நிரூபிக்கத்தானே இந்த பிரியாணி எடுத்துக்காட்டு?
(டிஸ்கி: வெஜிடெபுள் பிரியாணி எல்லாம் ஒரு பிரியாணியாய்யா? த்தூ!)
கேள்விகளும்...பதில்களும்...நன்றாக இருக்கு... கேள்வி நாயகன் கொத்தனாருக்கும், பதில் பரந்தாமன் ஸ்ரீதருக்கும் பாராட்டுக்கள்.
ஆருயிர் தம்பி கேஆர்எஸை (வம்பில்) மாட்டி விட்டதற்கு மெத்த (மொத்த அல்ல) மகிழ்ச்சி.
:)
//பதிவு எழுத தேவை கொஞ்சம் எழுத்து திறமை, வாசகர் வட்டம் பற்றிய தெளிவு, கொஞ்சம் 'தடித்த தோல்' மற்றும் நிறைய்ய்ய்ய நேரம்//
ஹிஹி, ரொம்ப தெளிவா இருக்காங்க பா! முக்யமா அந்த தடித்த தோல் விவகாரம். :)))
//பதிவுக் கயமைத்தனம் செய்வதற்காகவே நான் பதிவெழுதா ஸ்ரீதரைக் கேள்வி கேட்டதாக//
பி.க-வுக்கு இலக்கணம் கண்ட கோமகன் கொத்தனார், இன்று
ப.க-வுக்கும் இலக்கணம் கண்டான் என்று வரலாறு பேசட்டும்! புலவர்கள் பாடட்டும்! பதிவர்கள் பதியட்டும்!
//விட்டா நானும் ஸ்ரீதரும் ஒரே ஆள்தான்னு சொல்லுவீங்க போல!!
//
அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு. அப்ப 'சர்வே'சன் யாரு? :p
//அதெப்படி ஸ்ரீதர், நீங்க மட்டும் கேள்வி கேட்டுட்டு காணாம போயிருவீங்க! உங்களைப் பழி வாங்கணும்னா உங்க அட்ரஸ் எதுன்ன்னு தெரியாது..//
யய்யா ராசா, இது என்ன புதுக்கதையா இருக்கு. அனானியா இருந்தாத்தான் கேள்வி கேட்கும் உரிமை கிடையாது. அட்ரஸ் இல்லைன்னா கூடவா?
//உம்ம எழுத்துப் பிழையை எல்லாம் இப்படியே அடுக்குத் தமிழ் பேசி அட்ஜஸ்ட் செஞ்சுடுங்க.. மத்தவங்க எழுத்துபிழைன்னா பாக்கமாட்டேன், சொத்தைக்கடலைன்னு பிட் அப் கொடுங்க!//
இப்போ என்ன? பதிமூன்று தப்பாய்யா? எங்க அங்கயற்கண்ணி மிஸ் அப்படித்தான்யா சொல்லிக்குடுத்தாங்க. பதின்மூன்று எல்லாம் உட்டாலக்கடி ஸ்பெல்லிங். அவரைக் கேளுங்க. ஆமாம்!
//திருப்-பதி
பசு-பதி
வலைப்-பதி! :-))))//
திருப்பதி சரி.
நடுவில் பசுபதி என்று போட்டு நீர் என்னமோ சைவர் ஆகலாமுன்னு பார்த்தாலும் அது அந்த ஆயர்குல கண்ணனைத்தான் சொல்லறீருன்னு எங்களுக்குத் தெரியும்.
அவங்க ரெண்டு பேர் பத்தி வலைப்பதின்னு என்னை வேற கன்வேர்ட் பண்ணறீரா?
//ஏங்க அவராவது கொஞ்சநாள் இந்த 'சாக்கடை?!' சாகரத்துல விழுந்துராம இருக்கட்டுமே, விட்ருங்க பாவம். அவர் பின்னூட்ட மன்னராகவே ஜொலிக்கட்டும்!//
டிபிஆர், அதெல்லாம் கவலைப்படாதீங்க. அண்ணன் தசாவதாரம் பத்தி தீஸிசே எழுதி இருக்காரு. அதனால சாக்கடைக்குள் இறங்குமுன் உடம்பில் உப்பு தேய்ச்சுக்கிட்டா நல்லதுன்னு அவருக்குத் தெரியும். சரியா செஞ்சுக்கிட்டு இறங்குவாரு!
//ஹிஹி, ரொம்ப தெளிவா இருக்காங்க பா! முக்யமா அந்த தடித்த தோல் விவகாரம். :)))//
அம்பி, நீங்க மூத்த பதிவர். உம்ம கிட்ட போய் இதுக்கு சிரிக்கறீரே வெக்கமா இல்லையான்னு கூட கேட்க முடியாது. (எல்லாம் அந்த தடித்த தோல் விவகாரம்தான்!)
//பி.க-வுக்கு இலக்கணம் கண்ட கோமகன் கொத்தனார், இன்று
ப.க-வுக்கும் இலக்கணம் கண்டான் என்று வரலாறு பேசட்டும்! புலவர்கள் பாடட்டும்! பதிவர்கள் பதியட்டும்!//
பெனாத்தல் போன பதிவில் சொன்ன ழான் கோ மான் பையன் தான் இந்த கண்ட கோ மகனா? என்னப்பா சொல்லறீரு? ஒண்ணும் பிரியலை!
//அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு. அப்ப 'சர்வே'சன் யாரு? :p//
அவரு பதிவுல எம்புட்டு எழுத்துப்பிழைகள். ஒங்கப்புரானே அது சத்தியமா நான் இல்லை!! :)))
//வெறும் கண்ணன் மட்டுமல்லாது ராமர் மேலும் பாலாஜி மேலும் காதல் கொண்ட இவருக்குப் பதி மூன்று
அதனால்தான் இவரைப் பதிமூன்றாம் ஆழ்வார் என அழைத்தோம்.
//
ஹிஹி, என்னமா உள்குத்து? ரசித்தேன். :))
//ஆருயிர் தம்பி கேஆர்எஸை (வம்பில்) மாட்டி விட்டதற்கு மெத்த (மொத்த அல்ல) மகிழ்ச்சி.//
மாட்டிக்கிட்டா அடுத்தது மொத்த வேண்டியதுதானே கோவி அண்ணா. அப்புறம் மொத்த அல்ல ன்னு டிஸ்கி போட்ட எப்படி?
நம்மையும் மதிச்சு நாலு கேள்வி கேட்டிங்க கொத்தனார் ஐயா. அதுக்கு முதல்ல ஒரு நன்னி!
மண்டபத்தில் யாராவது எழுதி கொடுப்பாங்க. ஆனா யாரு அதை பதிந்து வைப்பாங்கன்னு பயந்துகிட்டு இருக்கும் போது அதுக்கும் இடம் கொடுத்திட்டீங்க. இன்னொரு நன்னி!
//உமது வரிகள் ஒவ்வொன்றிலும் பல பூனைக்குட்டிகளின் களியாட்டத்தைப் பார்க்கையில் வருத்தமாய் இருக்கிறது. அந்த நுண்ணரசியல் வாதங்களை நம்ம வாசகர்கள் சொல்வார்கள் என எதிர்பார்க்கிறேன். இல்லை நானே வருவேன்......//
அப்புறம்தான் இதைப் படிச்சேன். ஆகா... ஆட்டை நல்லா குளிப்பாட்டி கூட்டிடுப் போறது 'போட்டு'த் தள்ளத்தானா...
நீங்களே சொன்ன மாதிரி உங்க நுண்ணரசியல் வெறும் சிர்ப்பானா சிரிக்கற மாதிரிதானே இருக்கும். :-)) நோ வொர்ரீஸ்!
வாங்க தமிழ்ப்பிரியன். நல்ல விசயத்தை எடுத்து சொன்னீங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
//ஆனால் கேள்விகளில் செம நுண்ணரசியலுங்கோ சாமியோவ்... //
அப்படிங்கறீங்க? இ.கொ. நானும் பாஸ் ஆயிட்டேடேடேன். :-)
//எனக்கே அவருகிட்ட இப்படில்லாம் கேட்க ஒரு திட்டம் இருந்தது!!//
வாங்க ஷைலஜாக்கா... சரியா கேள்வி எல்லாம் கேட்டிருக்கேனா?
திட்டம் எல்லாம் போட்டும் அவரை இவ்வளவு நாளா தப்பிக்க விட்டுட்டிங்களே. பச்சப் புள்ள மாதிரி நல்லாவே பில்டப் கொடுத்திட்டிருக்கார் :-)) விடாதீங்க!
//ஏனென்றால் அவரே திரையை ஆக்கிரமிப்பதால்!!!//
எஸ்கே ஐயா!
அது என்னவோ உண்மைதான். முதல் முறை பார்க்கிறவர்களுக்கு இந்த பத்து வேடங்களும்தான் பிரதானமாக தெரியும்.
//அதெல்லாம் நான் அப்புறன் எடுத்துக் குடுக்கிறேன்//
அப்'புறன்' புறம் சொல்லும் உம்'திறன்' மெச்சி
சொல்திறன் வல்ல செம்மல் என்று
தந்'திர(ம்)ன்' இன்றி சொல்லிச் செல்கிறேன் :-)
//நானும் ஸ்ரீதரும் ஒரே ஆள்தான்னு சொல்லுவீங்க போல!! //
//ஒரு வேளை நீங்களும் ஸ்ரீதரும்தான் ஒரே ஆளா?//
ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிடாங்க. :-))
இப்ப நானும் ஸ்ரீதரும் ஒண்ணா? இல்லையா?
//என்னாது, கமல் அம்புட்டு குண்டாயிட்டாரா? :))//
ஆனா என்னங்க? CGI வச்சி ஒல்லியா காமிச்சிக்கிடலாமே. விண்செண்ட் பூவராகன் மாதிரி :-))
எஸ் கே ஐயா,
யாரைப் பார்த்து 'அது இருக்கா'ன்னு கேக்கறீங்க?
காளமேகப் புலவர்கிட்ட சிலேடை இருக்கான்னு கேப்பீங்களா?
சேக்கிழார் பாட்டுல சந்தம் இருக்கான்னு கேப்பீஙகளா? :-))
//நிற்கச்சொல்லி தண்டனை வேற பயந்து நின்னுட்டே இருக்கென்:)//
அதான் அப்பாலீக்கா உக்கார சொல்லிட்டார் போலிருக்கே. இன்னுமா நின்னுகிட்டு இருக்கீங்க? உக்காந்துட்டேன் ஒரு பின்னூட்டம் போடுங்க :-)
(எப்படி இ.கொ.! பி.க. பிக்கப் ஆகுதா?)
//ஆபீஸ் பொண்ணுங்க கிட்ட கேட்டுப் பாக்கறேன்! :-)//
உங்க ஆபிஸ் பொண்ணுங்க கிட்ட ரிப்பன் கேட்டு, அவங்க ரிப்பன்னா உங்க ஊர்ல பகோடா பண்ணுவாங்களாமே-ன்னு கேக்க, 'இது'வா 'அது'வான்னு ஒரு பதிவு போடலாம்னு பிளான் பண்றீங்க போல :-))
//எழுதினாப் பிறகு புரிஞ்சுதா ஸ்ரீதர்? :-)//
:-)) கமலோட பேட்டிகள் மாதிரிதான். ஒரே சமயத்துல புரிஞ்சிடுமா என்ன?
உண்மையை சொல்லப் போனா இன்னமும் பல விசயங்கள் புரியாமல்தான் இருக்கு. உதாரணம் - கோதை இறக்கும் காட்சிக்கும் ஆண்டாள் அதே கல் மண்டபத்தில் தடுக்கி விழும் காட்சியும். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.
//இவருக்குப் பதி மூன்று
அதனால்தான் இவரைப் பதிமூன்றாம் ஆழ்வார் //
பதி மூன்றாக என்ன, ஒன்றாக இருந்தாலே ஆழ்வார் என்றா சொல்வார்கள்? நாச்சியார் என்று அல்லவா சொல்வார்கள்? அப்ப மாதவி நாச்சியார் என்று மாற்றிவிடலாமா?
//கால்-ல விழுந்து காசு வாங்க ஐடியா போடுறது?//
அடிச்சிட்டு அஞ்சு ரூவா கொடுக்கறதுன்னு கேள்விப் பட்டிருக்கேன். இது நல்லா இருக்கே :-))
only attendance,
இதிலேயாவது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கற பதில் இருக்காது. :P
//சிலம்பைக் கொடுத்து அலம்பத் திட்டம் போடறீங்க!
பொற்கொ(கி)ல்லர் யாரு? கொத்ஸா? :-))//
மாதவிப் பந்தல் அமைத்து மயங்கியிருக்கிறவருக்கு சிலம்பு ஞாபகம் இப்பதான் வருது போல :-)
சீக்கிரமா மதுரை வந்து சொக்கரைப் பாரும் ஐயா :-)
//...மனிதனின் அகப்பயணம், சித்தாந்தங்கள் ... மனிதனின் இருப்பு சார்ந்த அலசல்கள், இறை நம்பிக்கை பற்றிய கேள்விகள் போன்ற பல விசயங்களை ஒரு திரையில் தீட்டுகிறார்.//
இதில் நான் முக்கியமாக நினைப்பதை நீங்கள் சேர்க்கவில்லை. அது: "குணா".
கேயாரஸ் ஆழ்வாரான கதை பற்றியும் பதிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன்...அந்த பதிவு கிடைக்குமா கொத்ஸ்?
வேறொன்றும் இல்லை, யாம் பெற்ற இன்பம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்னும் நல்லாசைதான்..
பினாத்தல் ஐயா,
//ஸ்ரீதர், நீங்க மட்டும் கேள்வி கேட்டுட்டு காணாம போயிருவீங்க! உங்களைப் பழி வாங்கணும்னா உங்க அட்ரஸ் எதுன்ன்னு தெரியாது..//
அட்ரஸ் இல்லாத பயல் என்று நீங்கள் ஏளனம் செய்வது நன்றாகவே புரிகிறது. 'இருக்கறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு'-ன்னு கேள்விப்பட்டது இல்லையா என்ன? :-)
//மத்தவங்க எழுத்துபிழைன்னா பாக்கமாட்டேன், சொத்தைக்கடலைன்னு பிட் அப் கொடுங்க!//
தான் உடைச்சா பொன்குடம் ரேஞ்சுக்கு விளக்கம் வேற. பதி மூன்று இருந்தா எப்படி ஆழ்வார்-னு சொல்லுவாங்க? இதெல்லாம் கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சேன். நீங்களும் எஸ்கே ஐயாவும் அந்த குறையை நிவர்த்தி செஞ்சீங்க :-)
//ஏங்க அவராவது கொஞ்சநாள் இந்த 'சாக்கடை?!' சாகரத்துல //
டி.பி.ஆர் ஐயா,
என்ன இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு. மோசமான கருத்துகளை 'சா'டி நல்ல கருத்துகளை 'கடை'ந்து எடுக்கும் நல்லுலகம் இல்லவா நமது தமிழ் பதிவுலகம்.
என்னுடைய குறைபாடே நேரப் பங்கீடு சரியாக செய்யத் தெரியாதது. அப்புறம் கொஞ்சம் என்ன நிறையவே sensitive. என்னத்த பெரிசா எழுதிரப் போறோம்னு ஒரு சோம்பேறி மனப்பாணமை. அவ்வளவே. :-)
உங்கள் வரவுக்கும் ஒர் நன்றி!
//தான் பதிவர் இல்லை என்ற மேட்டிமைத்தனத்தின் //
நான் பதிவர் இல்லை என்ற 'Mad'டிமைத்தனம் என்று நீங்கள் சொன்னால் ஒத்துக் கொள்கிறேன். பதிவர் அல்லாதோர் எல்லாம் Mad. பதிவர்கள் எல்லாம் என்னவோ?
//தமிழ்(ப்)பிரியரே, இப்ப புரியுதா ஸ்ரீதரின் நுண்ணரசியல்? இன்னும் இருக்கு பாரும்//
அவர்தான் அப்பவே நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிட்டாரே. அப்புறம் என்ன அவரைப் போய் தொந்தரவு பண்ணிகிட்டு...
//தெரியாத மேட்டர் பத்தி பதிவு போட்டு அதுல எதாவது சண்டை வந்து அப்பாலிகா எதாவது புரியுதான்னு பார்ப்பாங்களாம்//
ஏதோ உங்கள் சொந்த அனுபவம் போலிருக்கு. :-))
நான் சொன்னது என்னைப் பற்றி. என்னைப் பற்றி மட்டுமே. என்னைப் பற்றி மட்டும் மட்டுமே. :-))
//இதுக்குப் பேரு நுண்ணரசியல் இல்ல!
அதையும் தாண்டி நுட்பமானது! //
நுண்ணரசியல் தாண்டி நுட்பரசியல் கண்டிருக்கும் நும்மை பாராட்டுகிறோம்.
//மீண்டும் அசைவர் என்பதை நிரூபிக்கத்தானே இந்த பிரியாணி எடுத்துக்காட்டு? //
அவர் எழுதினால் பலர் அசைவர்
பல பதிவுகளுக்கு அச்சு 'அவர்'
எழுத்தில் இல்லை ஏச்சு 'பவர்'
எங்கும் பொங்கிடும் ஆன்மீகச் சுவை
அச்சுவை நவப் பெரியோர் வாழ்த்த
அச்சு வைணவப் பெரியோர் என்று
அடையாளம் காட்டல் தகுமோ.
அட ரொம்ப எல்லாம் அர்த்தம் பார்க்காதீங்க. ச்ச்சும்ம்மா ட்மாஷ்:-)
//கேள்வி நாயகன் கொத்தனாருக்கும், பதில் பரந்தாமன் ஸ்ரீதருக்கும் பாராட்டுக்கள்.//
பாராட்டுகளுக்கு நன்றி கோவி அண்ணா. கேஆர்எஸ்-ஓட பதில்களுக்காக வெயிட்டிஸ்.
நாலு பேருக்கு மெத்த மகிழ்ச்சி அடைஞ்சா நாலு கேள்வி கேக்கலாம் இல்லையா? :-))
//ஹிஹி, ரொம்ப தெளிவா இருக்காங்க பா! //
தெள்ளெனத் தெளிவைத் தெளிவாக சுட்டிக் காட்டியதற்க்கு தெளிவான நன்றி. :-)
//அப்ப 'சர்வே'சன் யாரு?//
இப்பதான் பதிவு போடாத சோம்பேறி-ன்னு சொல்லிட்டு வர்றேன், அதுக்குள்ள இப்படி 'அளக்க' ஆரம்பிச்சிட்டிங்களே?
டய்ப்பர் எல்லாம் ஒழுங்கா மாத்தறீங்களா? :-))
//எங்க அங்கயற்கண்ணி மிஸ் அப்படித்தான்யா சொல்லிக்குடுத்தாங்க//
காந்திமதி மிஸ்-ன்னு சொன்னாக்கூட நம்பியிருப்போம். அங்கயற்கண்ணி எப்படிய்ய தப்பா தமிழ் சொல்லிக் கொடுப்பாங்க? சங்கம் வச்சு வளர்த்தோம் தெரியும்ல! :-)
//அவங்க ரெண்டு பேர் பத்தி வலைப்பதின்னு என்னை வேற கன்வேர்ட் பண்ணறீரா?//
ஆஹா... எட்டில் ஐந்து ஏன் கழியும்-னு இப்பதானே புரியுது :-))
//சாக்கடைக்குள் இறங்குமுன் உடம்பில் உப்பு தேய்ச்சுக்கிட்டா நல்லதுன்னு அவருக்குத் தெரியும்.//
உப்புத்தாள் போட்டு தேச்சுகிட்டா தோல் நல்லா தடிமனாயிடும் இல்லையா? :-))
/அம்பி, நீங்க மூத்த பதிவர்.//
அம்பிஅப்பாதான் மூத்த பதிவர்.
அம்பி பாட்டுக்கு நிம்மதியா டயப்பர் போட்டுகிட்டு தூங்கிகிட்டு இருக்காறாம். :-))
//ழான் கோ மான் பையன் தான் இந்த கண்ட கோ மகனா//
'பையன்'தான் 'மகன்' என்ற வரையில் புரியுது :-((
//அவரு பதிவுல எம்புட்டு எழுத்துப்பிழைகள். //
அதானே அங்க பொன்குடம். அப்புற'ன்' இங்க மட்டும் மண்குடம் :-))
//only attendance,//
அட்டெண்டண்ஸ்க்கெல்லாம் நன்னி சொல்ல மாட்டார் இ.கொ. பதிலுக்கு உங்க வீட்டுல ஒரு அட்டெண்டண்ஸ் போட்டுட்டு, இங்க வந்து போட்டாச்சு அப்படின்னு பதில் போடுவார் பாருங்க :-)
//அது: "குணா".//
தருமி ஐயா,
'குணா' கதை பாலகுமாரனோடது.
'தேவர் மகன்' இவரோட ட்ரீட்மெண்ட் இருந்தாலும் அது GodFather II ஒட்டி எடுக்கப்பட்ட படம். பிரபு ராஜதுரை விரிவாக ஒரு பதிவில் எழுயிருப்பார்.
'விருமாண்டி' தேவர் மகனின் தொடர்ச்சியாகவே கொள்ளப்பட்ட கதை.
'அவ்வை ஷன்முகி' ராபின் வில்லியம்சின் Mrs. Doubtfire-ம் டஸ்டின் ஹாப்மேனின் Tootsie-ம் கலந்த ஒரு கலவை. சிறப்பாகவே வந்த கதை என்றாலும் அது ஒரிஜினல் இல்லை.
'ஆளவந்தான்', 'இந்திரன் சந்திரன்' போன்ற இன்னமும் சில திரைக்கதைகள் எழுதியிருந்தாலும் அவை பயனிக்கும் தளங்கள் வெவேறு.
அதனால் நான் பதிவில் குறிப்பிட்டிருந்த மூன்று படங்களையும் இணைக்கும் புள்ளிகள் நிறையவே இருக்கின்றன. மருதநாயகமும் இந்த வரிசையில் வந்திருக்க வேண்டிய ஒன்று. வரும் என்று நம்புவோம். :-)
//யாம் பெற்ற இன்பம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் //
மௌலி சார்,
அவர் ஆழ்வாரானது உங்களுக்கு அவ்வளவு ஆனந்தமா? :-))
அதை அறிவிக்கதானே இந்தக் கேள்விகளே. :-) என்ன பதில் சொல்றாருன்னு பாப்போம்.
'அம்பி'யை வழிமொழிகிறேன் ;)
//'அம்பி'யை வழிமொழிகிறேன் ;)//
அம்பி அப்பாதான் ஏகப்பட்டது மொழிந்திருக்காரே. அதையே நீங்களும் ஏன் 'வழி'யில நின்னுகிட்டு மொழியறீங்க. ஆற அமர உக்காந்து சொல்லுங்களேன் :-))
பாபா இங்க வரவங்க எல்லாமே அம்பிதான்னு ஒரு பேச்சு இருக்கே. எந்த அம்பியைச் சொல்லறீங்க?
//அவர் ஆழ்வாரானது உங்களுக்கு அவ்வளவு ஆனந்தமா? :-))//
இல்லையா பின்னே?....:)
வீட்ல இருக்கும் சின்னக் குழந்தைக்கு விவேகானந்தர் வேஷம்/பாரதியார் வேஷம் எல்லாம் காட்டுறதுபோல...[சே..சே எ.கா சரியில்லன்னு தல கோவிச்சுக்க போறாரு...]கோவில் பெருமாளுக்கு தசாவதார அலங்காரங்கள் பண்ணி மகிழ்வது போல அவருக்கு ராமானுஜ பட்டம், எம்மாழ்வார் பட்டம், சிரிப்பு சித்தர், இப்படி குடுத்து மகிழும் கூட்டத்தை சார்ந்தவனல்லவா இந்த மெளலி... :-)
//அதை அறிவிக்கதானே இந்தக் கேள்விகளே. :-) என்ன பதில் சொல்றாருன்னு பாப்போம்.//
எப்படித்தான் அந்த கேள்விகளை உருவாக்கினீரோ!!!..உமக்கு ஒரு ஷொட்டு :-)
ஸ்ரீதர்,
நேற்று எனக்கு கொத்ஸ் நுண்ணரசியல் பற்றி ஒரு எக்ஸாம்பிள் சொல்லி விளக்கினாரு பாருங்க...அடாடா...ஜிம்பிளி ஜூப்பரு..
கொத்ஸ், நீங்க அதை தனிப்பதிவா போடணும்...அப்பத்தான் உப்புமா பதிவர்ங்க கெட்ட பெயரை அழிச்சு, நீங்க நல்ல இட்லி பதிவராகலாம்..
//நடுவில் பசுபதி என்று போட்டு நீர் என்னமோ சைவர் ஆகலாமுன்னு பார்த்தாலும் அது அந்த ஆயர்குல கண்ணனைத்தான் சொல்லறீருன்னு எங்களுக்குத் தெரியும். //
இது, இது...பாயிண்ட்ல பிடிச்சீரய்யா..கொத்ஸ்...
ஆமாம், ஸ்டாரானதுல இருந்து இப்படி டபிள் மினிங் பெயர்களை/நாமங்களை வச்சுக்கிட்டு சொற்ச் சிலம்பாடறாரு...:))
//அவங்க ரெண்டு பேர் பத்தி வலைப்பதின்னு என்னை வேற கன்வேர்ட் பண்ணறீரா?//
அட ஆமாம்!! :)
//அவர் எழுதினால் பலர் அசைவர்
பல பதிவுகளுக்கு அச்சு 'அவர்'
எழுத்தில் இல்லை ஏச்சு 'பவர்'
எங்கும் பொங்கிடும் ஆன்மீகச் சுவை
அச்சுவை நவப் பெரியோர் வாழ்த்த
அச்சு வைணவப் பெரியோர் என்று
அடையாளம் காட்டல் தகுமோ//
இது யார்க்கோ வச்ச ஆப்பு மாதிரி இருக்கே :))
சரி. இப்போ கொஞ்சம் நேரம் இருக்கு. நம்ம ஸ்ரீதர் எழுதி இருக்கறதுல என்னோட புரிதலைப் பார்ப்போமா....
//இந்த மாதிரி தொடர் விளையாட்டுகள் தமிழ்மணத்தில் நிறைய பார்த்திருக்கிறேன்//
பார்த்திருக்கிறேன். ஆனா இதெல்லாம் ஒரு பதிவுன்னு உட்கார்ந்து படிச்சது எல்லாம் இல்லை. ரொம்ப வேண்டப்பட்டவங்கன்னா பார்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்து ஒரு பின்னூட்டம். அடுத்த லெவலுக்கு ஒரு உள்ளேன் ஐயா. மூணாவது அடுக்குக்கு ஒரு சிரிப்பான். மத்தவங்களுக்கு வெறும் பெப்பே.
பார்த்திருக்கிறேன். மனுஷன் கில்லாடிய்யா.
//ஏம் வே! உமக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு?' என்று கேட்டா சிலருக்கு கோபம் வரலாம். //
சிலருக்கு!! பெரும்பான்மையான பதிவர்கள் கோட்டிப் பசங்க. அது அவங்களுக்கும் தெரியும். அதனால கோட்டின்னு சொன்னா கோவப்பட மாட்டாங்க. ஆனா மீதி சிலருக்கு அந்த மேட்டர் தெரியாது. அதனால கோபம் வரும்.
ஆக மொத்தம் பதிவு எழுதறவங்க எல்லாம் கோட்டிக்காரங்க. நான் அறிவாளி. அதான் பதிவெல்லாம் எழுதறது இல்லை!
அடேங்கப்பா. வரிக்கு வரி என்னா உகு!!
//ஆனால் 'ஐயா, weird தொடர்விளையாட்டில் உங்களையும் இணைத்திருக்கிறேன்' அப்படின்னு பதிவு போட்டா உடனே பதிவு போட நிறைய பேர் தயாரா இருக்காங்க.//
கவனமாப் படிங்கப்பா. ஐயா அப்படின்னு சொன்ன தயாரா இருக்காங்களாம். இதுல ரெண்டு மேட்டர் சொல்லறாரு. இந்த ஆண் பதிவர்கள் எல்லாம் ரொம்ப ஏமாளிகள், கொஞ்சமா சிரிச்சுக்கிட்டே அட கேனப்பசங்களான்னு சொன்னாக்கூட அது நாந்தாய்யான்னு வந்து நிப்பாங்களாம். அதனால இவரு அவங்களைப் போய் ஐயான்னு கூப்பிட்டு அழகா ஆங்கிலத்தில் பைத்தியக்காரப்பசங்களான்னு சொல்லுவாராம். அவனுங்களும் தலையாட்டுவாங்களாம்.
அடுத்தது என்னான்னு பார்த்தோமுன்னா பலர் பதிவில் இளிக்கும் ஈயம் பித்தளை எல்லாம் இவரு பதிவெழுதினா இளிக்காதாம். அதனால அவரு ஐயாமார்களை கோட்டிக்காரனுங்கன்னு சொன்னாக்கூட அம்மாக்களையும் அக்காக்களையும் சொக்கத் தங்கமுன்னு சொல்லுவாராம். அதன் மூலம் நம்ம நாட்டில் இருக்கும் போலி மதசார்பின்மை மாதிரி இவரு போலி நடுநிலமைவியாதி ஆகறாரு. என்னான்னு கேளுங்கப்பா.
யோவ் தமிழ்(ப்)பிரியரே. இன்னும் முதல் பத்தி தாண்டலை. என்ன எல்லாம் மேட்டர் இருக்கு பாரும். நீர் என்னடான்னா எனக்கு நுண்ணரசியல் தெரியலையேன்னு சிம்பிளா பின்னூட்டம் போடறீரு.
//இந்த தொடர் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பது ஒரு நல்ல அனுபவம்.//
இது அவர் பதிவின் முதல் பத்தியின் கடைசி வரி. இந்தப் பத்தியின் முதல் வரி என்ன தெரியுமா?
//இந்த மாதிரி தொடர் விளையாட்டுகள் தமிழ்மணத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். //
ஒரு நாலு வரி தாண்டலை நிலைப்பாட்டினை மாத்திக்கிட்டாரு. இந்த மாதிரி பச்சோந்திப் புத்தி இவரு இருப்பதைப் பார்த்தால் இவரு தமிழில் பேசவோ எழுதவோ தகுதியான ஆளாவே தெரியலையே!!
இத்துடன் முதல் பத்தி முற்றிற்று.
//இத்துடன் முதல் பத்தி முற்றிற்று.//
முற்றித்தான் போச்சுப் போல :-))
உரிச்சு உரிச்சு என்ன வெங்காயம், ஒண்ணுமே இல்லைன்னு சொல்லப் போறீங்க. அதுக்கு இத்தனை பில்டப்பா? :-))
//இவரு தமிழில் பேசவோ எழுதவோ தகுதியான ஆளாவே தெரியலையே!!//
அட அதத்தானே நானும் சொல்லியிருக்கேன்.
////அதனால அவரு ஐயாமார்களை கோட்டிக்காரனுங்கன்னு சொன்னாக்கூட ////
புள்ளியை மாத்தி கீத்தி வச்சிருந்தீங்களோ நான் அம்புட்டுதேன்.
//பார்த்திருக்கிறேன். மனுஷன் கில்லாடிய்யா.//
//நான் அறிவாளி. அதான் பதிவெல்லாம் எழுதறது இல்லை! //
என்னைக் கில்லாடி என்றும் அறிவாளி என்றெல்லாம் ரொம்பவே புகழ்கிறீர்கள். அதுக்கு நன்றி.
//அடேங்கப்பா. வரிக்கு வரி என்னா உகு!!//
நம்ம புரொபைல் படமே 'வரி'க்குதிரைதானே :-))
Weird tag-ல உங்க பதிவையும் பார்த்ததா ஞாபகம். :-))
//எப்படித்தான் அந்த கேள்விகளை உருவாக்கினீரோ!!!..உமக்கு ஒரு ஷொட்டு :-)//
மௌலி அண்ணா, ஷொட்டுவிற்க்கு நன்றி.
நுண்ணரசியல் பத்தி கொத்ஸ் பேசலைன்னாதான் ஆச்சர்யமே :-))
///இது வரைக்கும் நான் எதுவும் வாங்கிக் கட்டிக்கலை. பொதுவா அவங்கதான் 'வாங்கிக் கட்டிப்பாங்க'. நாம வெறும் டவுசர் பார்ட்டிதானே.///
திசை திருப்பாமல் பதில் சொல்லவும்!
பதிவுகளில் (வெட்டியாக - இது அந்த வெட்டி அல்ல!) மேய்வதற்காகத் திட்டு வாங்குவது உண்டா? இல்லையா?
//'அம்பி'யை வழிமொழிகிறேன் //
@பாபா, எங்கப்பன் குதிருக்குள் இல்லை...? :))
//பாபா இங்க வரவங்க எல்லாமே அம்பிதான்னு ஒரு பேச்சு இருக்கே. எந்த அம்பியைச் சொல்லறீங்க?
//
@koths, இது வேறயா? :p
இகொ
போன பதிவில் எனது பின்னூட்டம் பார்த்து ரென்சன் ( நன்றி..இ கொ) ஆகி இந்த திஸ்கி இல்லையே? சிரிப்பானைக் காணோம் அதனால் கேட்டேன்.
அல்லது..திஸ்கியில் சிரிப்பான் வரக்கூடாது என்றும் ஏதாவது நுண்ணரசியல் உண்டோ?
அங்க இன்னும் இரண்டு ஒஇன்னூட்டம் போடவேண்டியிருந்தது.மும்முறமாக ஆணி புடுங்கிக் கொண்டிருந்ததால் காலதாமதமாகி விட்டது.அதற்குள் அந்தப் பதிவு அவுட் டேடட் ஆகிப் போச்சு. :)
ஸ்ரீதர் நாராயணன் (இ கொவின் நுஅ வை)நல்லாவே சமாளித்து இருக்கிறார் :)
கி அ அ அனானி
//அவர் எழுதினால் பலர் அசைவர்
பல பதிவுகளுக்கு அச்சு 'அவர்'
எழுத்தில் இல்லை ஏச்சு 'பவர்'
........//
ஸ்ரீதர்...
ரொம்ப பயமா இருக்குங்க!
எங்க போட்டியா வந்துருவீங்களோ-ன்னு! :-)
ஏற்கனவே கொத்தனாருக்குப் போட்டியா நுண்ணரசியல் பண்றீங்களாம்!
இப்போ மாதவிக்கு வேற போட்டியா?
சரி, என்னமோ ஒன்னு! போட்டி-ன்னு வந்துட்டா, தனிப் பதிவு தொடங்கிறனும்! இப்படி இலவசப் பதிவில் எல்லாம் வெள்ளாடக் கூடாது! ஓக்கேவா? :-)
(ஸ்ரீதரை-ஜோதிக்குள் சேர்க்க இம்புட்டு நாடகம் ஆட வேண்டி இருக்கேப்பா! அவ்வ்வ்வ்வ்வ்)
//உதாரணம் - கோதை இறக்கும் காட்சிக்கும் ஆண்டாள் அதே கல் மண்டபத்தில் தடுக்கி விழும் காட்சியும். யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா//
உம்....
அதுக்கெல்லாம் உலக நாயகன் போல் உலகளவில் ஜிந்திக்கோணும்!
கோதை வாழ்வினை இழப்பது அந்தச் சிம்மக் கல் மண்டபத்தில்! இழந்த வாழ்வை பின்னொரு பிறவியில் மீண்டும் பெறுவதும் அதே சிம்மக் கல் மண்டபத்தில்!
நல்லாக் கவனிங்க...கமல் மேல் ஒரு "இது" வருவதும் சிங்கத்தின் மேல் இடிச்சாப் பிறகு தான்!
அன்னிக்கி இடிச்சி மாண்டவள், இன்னிக்கி இடிச்சி ஆண்டவள் ஆகிறாள்! இப்படி இடிச்சி இடிச்சி, கமல் அடிச்சி ஆடறாரு!
பூர்வ ஜென்ம வாசனை பத்திச் சொல்ல ட்ரை சேஸ்தாரு உலக நாயகுடு! அர்த்தம் ஆயிந்தா?
ஏமி ஜென்ம வாசம் காதா? பிரியாணி வாசம் ஒஸ்தாவா? :-)
அன்று ஒரு நெப்போலியன்! இன்று ஒரு சந்தான பாரதி!
அன்று சரணாகதி செய்யலை! கோவிந்தராசன் காப்பாத்தலை!
இன்று சரணாகதி செஞ்சிபுட்டா! பூவராகவன் காப்பாத்திட்டான்!
முப்பத்து முக்கோடி தேவர்கள் - பிரஸ் ரிப்போர்டர்களோடு பூவராகவன் ஒளி வெள்ளத்தில் தோன்றி துச்சாதனத்தனம் நிகழாமல் காத்து ரட்சித்தான்!
எப்படி உலக நாயகுடு டெக்னீக்? :-)
//முற்றித்தான் போச்சுப் போல :-))//
இதைத்தவிர வேற என்ன சொல்லி இருந்தாலும் ஆச்சரியப்பட்டு இருந்திருப்பேன்.
//உரிச்சு உரிச்சு என்ன வெங்காயம், ஒண்ணுமே இல்லைன்னு சொல்லப் போறீங்க. அதுக்கு இத்தனை பில்டப்பா? :-))//
திராவிட பாரம்பரியத்தைத் தாக்கும் இந்த வரிகளைக் கண்டிக்கிறேன்.
//அட அதத்தானே நானும் சொல்லியிருக்கேன்.//
நான் சொன்னது வேற நீங்க சொன்னது வேற. நான் சொன்னதுதான் நீங்களும் சொன்னது என்பது உண்மையானால் உங்களுக்கு கிடைக்கப் போகும் முத்திரைகளுக்கு என் வாழ்த்துகள்!
//போன பதிவில் எனது பின்னூட்டம் பார்த்து ரென்சன் ( நன்றி..இ கொ) ஆகி இந்த திஸ்கி இல்லையே? சிரிப்பானைக் காணோம் அதனால் கேட்டேன்.//
கி4அ, டிஸ்கியில் சிரிப்பான் எல்லாம் போடக்கூடாது. அதில் நுண்ணரசியல் இருக்கலாம். அதெல்லாம் படிக்கிறவங்களுக்குத் தோணற மாதிரிதான்.
//அங்க இன்னும் இரண்டு ஒஇன்னூட்டம் போடவேண்டியிருந்தது.மும்முறமாக ஆணி புடுங்கிக் கொண்டிருந்ததால் காலதாமதமாகி விட்டது.அதற்குள் அந்தப் பதிவு அவுட் டேடட் ஆகிப் போச்சு. :)//
என்ன இது சின்னப்புள்ளைத்தனமா, இப்போ கூட அங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்புறம் அவுட் டேட்டட் என சாவு மணி அளிப்பது உம் போன்றவர்களின் நுண்ணரசியலை பொதுவில் சொன்னதினால்தானேன்னு பரபரப்பு அறிக்கை எல்லாம் விட வெச்சுடாதீங்க. வந்து கருத்தைச் சொல்லும் வழியைப் பாருங்க. :)
மீண்டும் ஸ்ரீதரின் பதிவுக்கு வருவோம். முதல் பத்தியைப் பார்த்தோம். அதில் இருக்கும் நுண்ணரசியலில் நம் காலை நனைத்தோம்.
அடுத்த பத்தி எல்லாம் தனிமனிதத் தாக்குதல். தான் எந்த ஒரு தேர்ந்த பதிவருக்கும் குறைந்தவர் இல்லை என நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட பத்தி என நினைத்து அதனை ஒதுக்கி விடுவோம். இவருடைய கபட நாடகத்திற்கு அப்பாவி கைப்புள்ளையை பகடையாக்க நினைக்கும் சூதினைக்கூட விட்டு விடலாம். (ஏற்கனவே அவரு இங்க வர மாட்டேங்கறாரு. இனிமே சுத்தம்!)
கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம். முதல் பதில். இதில் நுண்ணரசியல் இல்லை. வெறும் அரசியல்தான். அதனால்தான் பல பதிவர்கள் அதைப் பத்தி பேசி இருக்காங்க. அதனால அதையும் விட்டுடலாம்.
//இது வரைக்கும் நான் எதுவும் வாங்கிக் கட்டிக்கலை. பொதுவா அவங்கதான் 'வாங்கிக் கட்டிப்பாங்க'. நாம வெறும் டவுசர் பார்ட்டிதானே. //
அதாவது இவரு தமிழன் இல்லையாம். வேட்டி வாங்கிக் கட்ட மாட்டாராம். ரவுசர்தான் போடுவாராம். நீங்க எல்லாம் கற்காலத்திலேயே இருக்கீங்க. நாங்க எல்லாம் முன்னேறியாச்சு என்ற மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடு.
சுப்பையா சாருக்கு ஒரு பின்குறிப்பு:
சார்வாள், அண்ணாச்சி கடைக்குப் போய் லக்ஸ் இருக்கான்னு கேட்டா அவரு லைப்பாய் தேய்ச்சுக்குங்க. அது ரொம்ப நாள் வரும் அப்படின்னு சொல்லுவாராம். இல்லை என்பது அவர் வாயில் வராது. அத மாதிரி இங்க ஸ்ரீதர் அண்ணாச்சி கேட்ட கேள்விக்கு நேரடி பதில் சொல்லலைன்னா நீங்களாப் புரிஞ்சுக்கணும். அதை விட்டுட்டு மேல மேல துருவிக்கிட்டு.
//மனிதனின் அகப்பயணம், சித்தாந்தங்கள் மற்றும் மொழியின் ஊடே நடக்கும் வெளிப்பயணங்கள், மனிதனின் இருப்பு சார்ந்த அலசல்கள், இறை நம்பிக்கை பற்றிய கேள்விகள் போன்ற//
இந்த மாதிரி கரடுமுரடா வார்த்தைகள் எல்லாம் என் பதிவில் வரணமுன்னு ரொம்ப நாள் ஆசை. அது நடக்க ரெண்டே ரெண்டு வழிதான் இருக்கு. ஒண்ணு எனக்கு தான் எழுதுவது தனக்கும் புரியாம அடுத்தவங்களுக்கும் புரியாம எழுதும் பிநவியாதி பிடிக்கணும். (பஞ்ச் அண்ணா பாணியில் சொல்லணுமுன்னா பயித்தியம் பிடிக்கணும்.) இரண்டாவது பதிவுக் கயமைத்தனம் பண்ணி உம்மை மாதிரி ஒருத்தரை பதிவு போட வைக்கணும். ரெண்டாவது வழி ஈசியாத் தெரிஞ்சதாலதான்.....
//இதுவரை அப்படி ஒரு சம்பவமும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கையை ரிவர்ஸில் எப்படி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்.//
இது வரை நினைத்ததில்லை. நினைச்சுப் பாருங்கன்னு கேள்வி கேட்டா இது வரை நினைத்ததில்லை அப்படின்னு ஒரு பதில்.
சரி அதோட நின்னுதா? இல்லை. ஒரே ஒரு சம்பவத்தை மாத்த முடியுமுன்னா அது என்னன்னு கேட்டா, அந்த சைக்கிள் கேப்பில் வாழ்க்கையையே ரிவர்ஸ் கியரில் ஓடவிட்டு வேடிக்கை பார்க்கறீரே.
நல்லா இருங்கடே!
ஆனா ஒண்ணு சொல்லணமய்யா. எனக்கு கேள்வி கேட்கத் தெரியலை. ஏனோதானோன்னு கேட்ட கேள்விகளுக்கு இப்படி எல்லாம் நுண்ணரசியல் பண்ணி பதில் சொல்லிட்டீரு.
நீர் கேட்ட கேள்விங்க எல்லாம் சும்மா சூப்பர்!!
வாத்தியார் ஐயா,
திசை திரும்பாமல் இருக்கு கொத்தனார்தானே நுண்ணரசியல் Compass வைத்து மிரட்டுகிறாரே :-))
அதாவது வீட்ல் கோபம் வந்து திட்டினாங்கன்னா அடுத்து என்ன நடக்கும்? அவங்க வாங்கி நாம பில் கொடுத்து அவங்க கட்டிக்க வேண்டியதுதானே :-)
ஜாதகப் பொருத்தம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க வாத்தியார் ஐயா? :-))
//ஸ்ரீதர் நாராயணன் (இ கொவின் நுஅ வை)நல்லாவே சமாளித்து இருக்கிறார் :)//
நன்றி கி அ அ அ. எல்லா 'அ'வும் சரியாப் போடேனான்னு தெரியல :-))
//போட்டி-ன்னு வந்துட்டா, தனிப் பதிவு தொடங்கிறனும்!//
மாதவிக்குப் பந்தலுக்கு போட்டியா கண்ணகி கோட்டம் ஆரம்பிச்சிடவா? :-))
//எப்படி உலக நாயகுடு டெக்னீக்?//
நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் அண்ணா. இங்கு சில பதிவுகள் சொன்னப் பிறகுதான் கவணித்தேன், எஸ்.வி. சகஸ்ரநாமும் இரண்டு வேஷங்களை ஏற்றிருக்கிறார். ஆண்டாளுக்கும், கோதைக்கும் அப்பாவாக. ஹ்ம்ம்ம் :-)
இ.கொ. அண்ணா,
நீங்க சொன்னதுக்கு மாற்றா என்னிக்கு நான் சொல்லியிருக்கேன். நீங்க முத்திரை விழாத மாதிரிதான் சொல்லுவீங்கன்னு நல்லாத் தெரியுமே. அதனால நோ வொர்ரீஸ் :-))
நுண்ணரசியல், தனிமனித தாக்குதல், அப்பாவிகளை பகடைக் காயாக பயன்படுத்துதல், வெறும் அரசியல், மேட்டிமைத்தனத்தின் வெளிப்பாடு, புரியாம எழுதும் பிநவியாதி எல்லாம் கண்டுபிடிச்சிட்டிங்க. சரி. முக்கியமான பாய்ண்டை விட்டுட்டிங்களே.
ஆன்மீகத்துக்கு பொதுவான கே ஆர் எஸ்ஸை ஆழ்வாரா ஆக்கினது மூலமா அவரை சைவர்களுக்கு எதிராக திருப்பிவிடும் கபட நாடகத்தை தோலுரிப்பீங்கன்னு நினைச்சேன். :-)) பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-))
//ஏனோதானோன்னு கேட்ட கேள்விகளுக்கு இப்படி எல்லாம் நுண்ணரசியல் பண்ணி பதில் சொல்லிட்டீரு. //
'ஏன்' என்று 'தானா'க கேட்ட ஏனைய கேள்விகளுக்கு
ஏனோ பதிலிறுத்தேன் என்று
எண்ணும்படி
கேள்விகளில் வேள்வி செய்து
கொண்ட பதில்களை கட்டுடைத்து
கோக்குமாக்காக போட்டுதாக்கிய
கொத்தனார் அண்ணாச்சி
நன்றிகள் பல :-))
//நீர் கேட்ட கேள்விங்க எல்லாம் சும்மா சூப்பர்!!//
அட, அவர் பாருங்க, அதை எப்படி மாத்திப் போடப் போறார்னு. :-))சூப்பர் எல்லாம் ஜுஜுபி ஆக்கிடுவார் பாருங்க.
இப்படியாக, 100 கமெண்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீதர், தன் முதல் (வாடகைப்) பதிவில்.
//இப்படியாக, 100 கமெண்டை //
அதில நானும் எங்க லாண்ட் லார்டும் போட்டதே ஒரு 60-க்கு மேல இருக்கும். :-)) அதையும் சொல்லிக்கனுமில்லையா :-)
உங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
100 :-)
இ.கொ.
கவனிச்சீங்களா? பாபாவும் அம்பியும் உங்களை 'அளக்க' பாக்கறாங்க.
'சர்வ'ம் இலவமா? அந்த 'ஈசனு'க்கே வெளிச்சம்.
பெனாத்தலாரின் ஆசிகளோடு ஒரு 100.
பெனாத்தல், ஒரே ஒரு கரெக்ஷன். நம்ம ஸ்ரீதரை வெச்சு ப.க. செஞ்சது இது முதல் முறை இல்லை. அதனால அவரோட முதல் பதிவு இது இல்லை.
அந்தப் பதிவு - http://elavasam.blogspot.com/2008/01/1.html
அப்போ 50+ அடிச்சவரு இப்போ 100+ அடிச்சு இருக்காரு.
நடாத்துங்க ஸ்ரீதர்!! :))
கொத்ஸ், எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் :) ...
ஒரு நாள் சம்பந்தமே இல்லாம "இலவசம்"ன்ற வார்த்தை "இல" +"வசம்" அப்படின்னு மண்டைக்குள்ள இரண்டு துண்டா வந்து விழுந்த வுடனே, ஆகா, அப்படின்னா "Liberal" என்னும் ஆங்கில வார்த்தைக்கு, சுத்தமான தமிழாக்கம் "இல வசம்" போல்ரிக்கேன்னு ஒரு எண்ணம் வர, நானே என்னப் பாராட்டிக்கிட்டு, கொஞ்சம் சந்தோஷமாகிக்கிட்டேன்.
ஆனாலும், சபைல பெரியவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சக்கலாம்னு ...
வேற யாரு சூட்டபிள் உங்களை விட்டா - இந்த கேள்விக்கு சரியான பதில் தரும் ஞானம், காரண காரியம் உங்களுக்கே இருக்குன்னு தோணீட்டு ....
சோ வந்திட்டேன் இன்னைக்கு உங்க வூட்டாண்டை! :)
யாருடைய வசமும் இல்லை, யாருக்கும் சொந்தம் இல்லை - இல வசம் - கரெக்டா இல்லையா? அப்படின்னா "Liberal்" என்னும் வார்த்தைக்கு இல வசம் நன்றாக பொருந்துகிறதுன்னு தோணுது. It feels more fanciful and interesting to translate it into "Liberal" than free (The word free though could mean இல வசம் it is always interpreted more in economic sense!)
Madura அவர்களே,
"தன்வசம் இல
தான்தோன்றி உலகநாயகன்... அதாவது உலகநாதன்"
(சுயம்புன்னு சொல்ல வந்தேங்க)
என்று தன்னோட புரபைல் படம் மூலமா அவர்தான் எப்பவோ சொல்லிட்டாரே. :-))
இதுல எல்லாம் அவர் ரொம்ம்ம்ம்பவே Liberal-தான். நான் ஜோடா குடிக்கிறதை மட்டும் சொன்னேங்க :-))
ஜோடா பாட்டிலா? இப்பதான் பாத்தேன்! :) எனக்கென்னவோ அது பூரா ப்ரிட்ஜ்வாட்டெர் கோவில் வெங்கடா ஜலம் தான் தெரியறார் ... அது லிபெரல்ன்ற வார்த்தைக்கும் ஜோடாவுக்கும் எந்த சம்பந்தமும் இலன்னு சொல்ல வருகிறார் வருகிறார் ஃப்ராமிங்காம் அருள் பெற்று ..... :) பராக் பராக்...
//லிபெரல்ன்ற வார்த்தைக்கும் ஜோடாவுக்கும் எந்த சம்பந்தமும் இலன்னு//
அது சரிதான். அரசியல்வாதின்னா லிபரல்லா (இலவசமா) ஜோடா குடிக்கலாம். இவரோ நுண்ணரசியல்வாதி. காசு கொடுத்துதான் குடிக்கனும் போல.
//ஃப்ராமிங்காம் அருள் பெற்று ..... :) //
அட்ரஸ் மாறி வந்துட்டீங்க போல :-)).இவரு 'சுவாமி நாராயணன்' அருள் பெற்றுதான் குறி சொல்றது வழக்கம். அந்த நாராயணன் நிச்சயம் நானில்லை :-)
Check out July 2008 issue of Thendral, page A12. (Sorry I mentioned as June 2008 earlier!)
Ensoy, Srini
அப்போ நம் வசம் இலா நரன், இந்த சத்ய யுகத்தில, சுவாமி கிருபையில, நாராயணன் ஆனாரா ஆகலையா? :)
நாராயணா நாராயணா உமக்கே எல்லாம் வெளிச்சம் :)
நான் சும்மா மண்டபத்தில நின்னு எம்பெருமான் சொக்கர் கிட்ட பேசிக்கிட்டுருக்கேன், நீங்க கண்டுக்காதீங்க ...
Post a Comment