Friday, June 13, 2008

Kamal, I spent $34.50 (plus extras) on you!

முன்னுரை
நாங்க தசாவதாரம் பார்த்தாச்சு. வீட்டில் இருந்து ஒரு 5 நிமிஷம் தள்ளி இருக்கும் திரையரங்கில்தான் போட்டு இருக்காங்க. வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்க தாத்தா பாட்டி இருந்ததால் நானும் தங்கமணியும் முநாமுகா (அதாங்க முதல்நாள் முதல்காட்சி) பார்க்க போயிட்டோம். உள்ளூர் விலையைக் கொஞ்சம் ஏத்திட்டாங்க. அதுவும் இணையத்தில் வாங்கியதற்காக $2.50 வேற தனியா வாங்கிக்கிட்டாங்க. அலுவலகத்தில் இருந்து நேராப் படம் பார்க்கப் போன இந்த யானையின் பசிக்கு வாங்கின சோளப்பொரி எல்லாம் சாய்ஸில் விட்டுடலாம். ஆனாலும் வடை என்ற பெயரில் தந்த வஸ்துவிற்கும் சமோசாவிற்கும் விலை ரொம்பவே அதிகம் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

நிறைகள்
எல்லாரும் எழுதிட்டாங்க. படம் நல்லா இருக்கு. ஒளிப்பதிவு உலகத்தரம். வரைகலை நல்லா இருக்கு. முக்கியமா முதலிலும் முடிவிலும். ஒவ்வொரு காட்சியிலும் கமல் மற்றும் மற்ற கலைஞர்களின் உழைப்பு தெரியுது. முக்கியமா மேக்கப்பில் எடுத்து இருக்கும் கவனம். அந்தப் பாட்டியின் கைகளில் என் பாட்டியின் கைகளில் இருப்பது போல சுருங்கிய தோலும் அதில் கரும்புள்ளிகளும் இருப்பதைப் பார்த்தீர்களா? இன்று நகைச்சுவை என்ற பெயரில் வழங்கப்படும் கடுப்பேற்றும் விஷயம் கிடையாது. இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. விரலைச் சுத்திக்கிட்டுச் சின்ன பசங்க எல்லாம் பேசும் பஞ்ச் வசனம் கிடையாது. குத்தாட்டம் கிடையாது. கனவில் ரீச்சர் வீட்டுக்குப் பின்னாடி போய் ஆடுவது எல்லாம் கிடையாது. வசனங்களில் இழைந்தோடும் நுட்பமான நகைச்சுவை.

எனக்குப் பிடிச்ச கமல் நம்ம பல்ராம் நாயுடுதான். மனுசன் பட்டையைக் கலக்கறாரு. எல்லாரும் இதைப் பத்தி எழுதறாங்க. அதனால இது போதும்.

குறைகள்
இது பத்தியும் நிறையா பேர் எழுதியாச்சு. ஆனா நான் நிறைகளை எழுதிட்டுக் குறைகளை எழுதலைனா என் நடுநிலமைவியாதி சரியாப் போச்சு அப்படின்னு மத்தவங்க நினைப்பாங்களே. அதுக்காக நானும் சொல்லறேன்.

மைக்கேல் மதன காமராஜனாகட்டும், அவ்வை ஷண்முகியாகட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் கமல் நடிக்க ஒரு காரணம் இருந்தது. அப்படி ஒரு காரணம் இல்லாது போனது ஒரு பெருங்குறையே. அதனால் எதற்காக இத்தனை பாத்திரங்களை இவர் செய்ய வேண்டும் என்பது புரியவே இல்லை.

அதிலும் அந்த வெள்ளைக்கார வில்லன் (கொஞ்சம் ஷேன் வார்ன் மாதிரி இல்ல?), புஷ், கலங்கரைவிளக்க முஸ்லீம், ஜப்பானில் கல்யாணராமன் எல்லாம் முகமூடி போட்டுக்கிட்டு அசிங்கமாவே இருக்காங்க. (பூவராகவனை இந்த லிஸ்டில் சேர்க்கலைப்பா!)

இப்படி இவரே இவ்வளவு வேஷம் கட்டினதுனாலதான் கேப்டன் மாதிரி துப்பாக்கியால கேன்சர் ஆப்பரேஷன் பண்ண வேண்டிய துரதிருஷ்டங்கள் எல்லாம். என்னவெல்லாமோ குறை எல்லாம் கண்டுபிடிச்சவங்க கண்ணில் இது படாம போச்சா இல்லை மத்த படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சா? வேற யாருமே எழுதலையே.

மொத்தத்தில் 10 கமலில் ஐந்து ஆறு பாத்திரங்களாவது அனாவசிய திணிப்பு. அதுவும் அந்த பூவராகவன் / அவதார் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே திணிப்புதான்.

நுண்ணரசியல்கள்

  • AASCAR நிறுவனம் பற்றிய தலைப்பு வரும் பொழுது அதில் வரும் சிறுவனின் சட்டையில் Captain என்று எழுதி இருப்பது.
  • அவனவன் பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் பதிவு எழுதி சிதம்பரம் சர்ச்சையில் தன் சார்பு நிலையை விளக்க முயல்கையில் "Chee Tam Brahm" எனச் சொல்லி தன் கருத்தைப் பதிவு செய்தது
  • தன் தாலி வீசி முட்டிச் செத்த அதே சிங்கத்தலையில் இக்கால அசினை முட்டிக்கொள்ள வைத்து அதன் மூலம் பெண்களுக்கு முட்டிக் கொள்வதுதான் வழி என ஈயம் பித்தளை இளிக்க வைத்தது.
  • இன்னும் இருந்தாலும் நிறுத்திக்கறேம்பா.
சபாஷ்
ஒரு கமல் இருந்தாலே திரையில் மத்தவங்களுக்கு இடம் இருக்காது. இங்க தசாவதாரம். அதுவும் போக நாகேஷ் முதற்கொண்டு பல ஜாம்பவான்கள். இத்தனை பேருக்கும் நடுவே தனக்கென இடம் பிடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு.

முடிவுரை
சமகால படங்களோடு சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது பல கட்டங்களில் தமிழ்த்திரைப்படங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறது இப்படம் என்பதில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குச் சந்தேகம் இல்லை என்கின்ற பொழுதில்... எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதறாங்களோ!! படம் நல்லாத்தான் இருக்கு. சில குறைகளை பெரிதாக எண்ணாமல், படத்தை சமுதாய அவலங்களுக்கு விடை தரும் சாதனமாக எல்லாம் எண்ணாமல் பொழுதுபோக்கா பாருங்க. நல்லாவே இருக்கு.

என்னளவில் கமல் இப்படி எல்லாம் ஒரு படம் பண்ணினால் அதனை அடுத்து ஒரு நகைச்சுவை படம் குடுப்பாரு. அதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

பஞ்ச் அண்ணா
பதிவை எழுதிட்டுப் பஞ்ச் அண்ணா கிட்ட அனுப்பினேன். அவர் சொன்னது

இந்தப்படத்தில் நுண்ணரசியல் மொழியின் மௌனங்களை க் கட்டமைக்கும் காட்சிகள் மெல்லியல் பார்வையற்று இருந்தாலும் வல்லியல் பார்வையோடு அழகியலும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. "சவுஞ்சாலயமும் ஒரு ஆலயம்தானே என்னும் நாயகன், அறிவாலயத்தையும் சேர்த்தே சாடல் பார்வை வீசுகிறான் என்பது நுண்ணிய நோக்கர்களின் பார்வைக்குத் தப்பாது. இப்படிப்பட்ட காட்சிவன்முறைகளின் ஊடே, ஆதங்க்வாதி என்று தேவபாடை பேசுபவர்களின் தீவிரவாதத்தையும் தோலுரித்துக்காட்டத் தவறவில்லை. மோடி வகையறாக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? கடலில் பள்ளிகொண்ட கோவிந்தராஜப்பெருமாள் கரையொதுங்கக் கொண்டு வந்த சுனாமி சர்ப் எக்ஸல் கரை போல நல்லது எனக்காட்ட கிருமிகளையும் அதையொழிக்க சோடியம் குளோரைடையும் சேர்த்தே கொண்டு வருவதன் பின்னால் உள்ள நோய்க்குறிகளையும் புறந்தள்ளிவிடலாகாது.

டிஸ்கி (நீ போடாம விட்டதால) : இதையெல்லாம் எழுதின பிறகு படிச்சுப்பாத்தா எனக்கே பைத்தியக்காரத்தனமாத்தான் தெரியுது.. இருந்தாலும் இந்த நுண்ணரசியல் எல்லாம் நாம பீராயாட்டி வேற யாரு செய்வாங்க?

79 comments:

said...

நான் மாங்கு மாங்குன்னு பதிவு எழுதுவேன். நீங்க எல்லாம் பஞ்ச் அண்ணா கமெண்டு சூப்பர் அப்படின்னு பின்னூட்டம் போடுவீங்க. நடக்கட்டும்.

said...

உங்க ஆசை வீண்போவானேன்.. பஞ்ச் அண்ணா கமெண்ட் சூப்பர் :-)

//என்னவெல்லாமோ குறை எல்லாம் கண்டுபிடிச்சவங்க கண்ணில் இது படாம போச்சா // அதானே?

said...

வாங்க...என்னடா மங்கலாவே இருந்த ஜோதி திடீர்னு பிரகாசம் ஆகுதேன்னு நெனச்சேன். பாத்தா..ஒங்க பதிவு.

படத்துல நெறைய நுண்ணரசியல் இருக்கு.

ஒரு சின்னப் பையன் கமல் மேல கல்ல விட்டு எறிவானே... அவனுக்கு மேக்கப்பைப் பாருங்க. அப்படியே ஆளுடைப்பிள்ளையார் போலவே இருக்கும். அப்படீன்னா யார்னு தெரியும் தானே? :-)

சீ-தாம்-பரம்...நானும் கவனித்தேன். அப்புறம் ராமசாமி நாயக்கர், கலைஞர்...இப்பிடி நெறைய இருக்கு.

நானும் ஏதோ விமர்சனம்னு ஒன்னு போட்டிருக்கேன்.

http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html

said...

அப்பிடில்லாம் சொல்லப் புகுந்தா ஆயிரம் சொல்லலாம்.
ஆனா, ஒரு கலைஞன் செஞ்ச முயற்சியில இதையெல்லாம் சொல்ல வேணாம்னு பார்த்தாலும்,
'ஆமையைத் திருப்பிப் போட்டு அடிச்சா செத்துபோவப்போவுது. அதை என் வாயால சொல்வானேன்' என்னும் நுண்ணரசியல் நல்லாவே தெரியுது சாமி!

said...

கமல் ஐஸ் வாங்க ரோடை க்ராஸ் பண்ணும் போது அவரை அடிக்க வர்ற லாரியில ஒரு சிவலிங்கம் தெரியுமே கவனிச்சீங்களா!

வீர வைஷ்ணவன்னு காட்றதுக்கு, கமலோட வலது தோள்ல சங்கு, இடது தோள்ல சக்கரம் குத்தி இருக்குமே!

பெருமாள் துலுக்க நாச்சியாரை கண்ணாலம் பண்ணினதுக்காவ, அவங்களை மட்டும் மசூதியில தங்க வைச்சது.. இப்படி நூறு சொல்லலாம்.

எல்லாம் விழலுக்கிறைத்த நீர்!

அதுதான் சோகம்.

said...

கலக்கல் விமரிசனம்

said...

2x Ticket 15$ x 2= $30
Net charges = $ 2
-------------------------Total $32

2.5$ கணக்கிலே உதைக்கிறதே கொத்தனாரே!

said...

//VSK said...

அப்பிடில்லாம் சொல்லப் புகுந்தா ஆயிரம் சொல்லலாம்.
ஆனா, ஒரு கலைஞன் செஞ்ச முயற்சியில இதையெல்லாம் சொல்ல வேணாம்னு பார்த்தாலும்,
'ஆமையைத் திருப்பிப் போட்டு அடிச்சா செத்துபோவப்போவுது. அதை என் வாயால சொல்வானேன்' என்னும் நுண்ணரசியல் நல்லாவே தெரியுது சாமி!
//
திரும்பச்சொல்லேய்!!

said...

கொத்ஸ், கலக்கல்! பஞ்ச் அண்ணா திஸ்கியும் சூப்பர்!!! ஆக மொத்தம் என்ன படம் சூப்பரா இல்லியா, வர வர கமல் மாதிரியே பேசறீங்க:-)))

said...

ஒரு கலைஞனின் (வியாபாரியின் அல்ல) படைப்பை போட்டு தாக்கும் பதிவுலக வலைஞர்களின் மேதாவிலாசத்தை வியப்பதுதான் என்னுடைய தற்போதைய பொழுதுபோக்கு.

- நீங்கள் 35 டாலர்கள் செலவழித்து படம் பார்த்ததை கமலிடம் மட்டும் சொல்வதின் மூலம் அந்த செய்கைக்கு அவரே பொறுப்பு என்று கூறுவதின் நுண்ணரசியல் என்னவோ? முதல் நாள் முதல் ஷோ பார்த்து ராவோடு ராவாக (அந்த 'ராவ்' இல்லேய்யா) விமர்சனம் போட்டு அதை ஜிடாக் ஸ்டட்டஸ் மெசேஜாக போட்டுத் திரிந்த சக பதிவர்களுக்கு கொஞ்சம் கூட க்ரெட்டிட் கொடுக்காதின் மர்மம் என்ன?

//மொத்தத்தில் 10 கமலில் ஐந்து ஆறு பாத்திரங்களாவது அனாவசிய திணிப்பு. அதுவும் அந்த பூவராகவன் / அவதார் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே திணிப்புதான்.//

- நீங்கள் கதையையே புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. chaos theory அடிப்படையில் அமைந்த கதை. பல தொடர்பில்லாத பாத்திரங்களுக்கு இடையே தொடர்பாக இருப்பது கோவிந்த ராஜ பெருமாள் (அமெரிக்காவிலிருந்து சிதம்பரம் வரும் வரையில் அவர் மிஸ்ஸாகிறார்). அவர் போகுமிடங்கள் எல்லாம் ஏதாவது ஒரு செயல் நடக்கின்றது. அதை ஒரு கடவுள் நம்பிக்கையாளளும் (ஆண்டாள்) அவநம்பிக்கையாளனும் (கோவிந்த்) நேரடியாக சந்திக்கின்றார்கள். நீங்கள் திணிப்பு என்று கருதும் பாத்திரங்கள் கிளைக்கதைகள். அவ்தார், கபிபுல்லா, பூவராகன், ரங்கராஜ நம்பி, கிருஷ்ணவேணி (ரங்கராஜ நம்பியின் குடும்ப வாரிசான் ஸ்ரீனிவாசனின் மனைவி) எல்லாமே கிளைக்கதைகள்தான்.

//என்னளவில் கமல் இப்படி எல்லாம் ஒரு படம் பண்ணினால் அதனை அடுத்து ஒரு நகைச்சுவை படம் குடுப்பாரு. அதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.//

:-)) மர்மயோகிக்கும் 'Kamal, I spent $40 on you'ன்னு ஒரு பதிவோட நீங்க வருவீங்கன்னு நம்பறேன்.

said...

//ஆளுடைப்பிள்ளையார் போலவே இருக்கும். //

கொண்டை போட்ட சைவப்பிள்ளைகள் (சிறுவர்கள் என்ற அர்த்ததில் சொல்கிறேன்) எல்லாம் ஆளுடைப்பிள்ளை என்று நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?

அப்படி வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு வைக்கப்பட்ட காட்சியாக இருந்தால், மூன்று மணிநேர திரைப்படத்தில் ஒரு விநாடி காட்சி 'மட்டும்' உங்கள் கண்ணுக்கு தெரிகிறது. என்னத்தை சொல்ல :-)

ஏன் இன்னொரு காட்சியில் 'உங்களைப் போல தெலுங்கு பேசுபவர்கள் வந்து தமிழ் வளர்ப்பார்கள்' என்று சொல்வதும் அந்தக் காட்சியை விட்டு எடுத்துப் பார்த்தால் தமிழக அரசியலை ஒட்டி பல அர்த்தங்களைக் கொடுக்கும். இல்லையா?

அவர் பரந்துபட்ட அறிவோடு திரைக்கதையை அமைத்திருக்கலாம். ஆனால் படத்தின் பாதையில் அந்த காட்சிகள் நெருடலாக இல்லை என்பதே எனது எண்ணம்.

said...

// Sridhar Narayanan said...

//ஆளுடைப்பிள்ளையார் போலவே இருக்கும். //

கொண்டை போட்ட சைவப்பிள்ளைகள் (சிறுவர்கள் என்ற அர்த்ததில் சொல்கிறேன்) எல்லாம் ஆளுடைப்பிள்ளை என்று நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?

அப்படி வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு வைக்கப்பட்ட காட்சியாக இருந்தால், மூன்று மணிநேர திரைப்படத்தில் ஒரு விநாடி காட்சி 'மட்டும்' உங்கள் கண்ணுக்கு தெரிகிறது. என்னத்தை சொல்ல :-)

ஏன் இன்னொரு காட்சியில் 'உங்களைப் போல தெலுங்கு பேசுபவர்கள் வந்து தமிழ் வளர்ப்பார்கள்' என்று சொல்வதும் அந்தக் காட்சியை விட்டு எடுத்துப் பார்த்தால் தமிழக அரசியலை ஒட்டி பல அர்த்தங்களைக் கொடுக்கும். இல்லையா?

அவர் பரந்துபட்ட அறிவோடு திரைக்கதையை அமைத்திருக்கலாம். ஆனால் படத்தின் பாதையில் அந்த காட்சிகள் நெருடலாக இல்லை என்பதே எனது எண்ணம். //

ஸ்ரீதர், ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். படத்தை ரசித்தேன். பார்த்தேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது என்பதே என் கருத்தும். நான் சொல்லிருப்பதையெல்லாம் வைத்துக் கொண்டு..படத்தைப் பார்க்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. பார்க்கப்பட வேண்டியபடம். பாராட்டவும் விமர்சிக்கவும் படவேண்டிய படம். விலக்கப்பட வேண்டிய படமல்ல.

said...

//துப்பாக்கியால கேன்சர் ஆப்பரேஷன் பண்ண //

Magic Bullet for Cancer-ன்னு ஒரு சொற்றொடர் கேள்விப்பட்டதில்லையா? :-))

said...

கமல் பொதுவா ஏமாத்தமாட்டார். ஒரு தடவை பார்க்கலானு சொல்லும் அளவுக்காவது இருக்கும் அவர் உழைப்பு.
\\கனவில் ரீச்சர் வீட்டுக்குப் பின்னாடி போய் ஆடுவது எல்லாம் கிடையாது\\
அதான் எல்லா செலவும் மேக்கப்புக்கே பண்ணிடறார். அப்புறம் அதுக்கெல்லாம் எங்க போறது தயாரிப்பாளர். தெனாலியோட நிப்பாட்டிடார்னு கேள்விப்பட்டேன்.

said...

\\இத்தனை பேருக்கும் நடுவே தனக்கென இடம் பிடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு.\\

ஆனந்த பவன் பாத்ததிலிருந்து நான், எம் எஸ் பாஸ்கருக்கு விசிறி. மனுசன் என்னமா நடிக்கறார்.சரியான வாய்ப்புகள் இருந்தா கமலுக்கு சரியான போட்டியாளர். படமே பாக்காத என் அப்பாவை, அன்பே சிவம் மூலம் சபாஷ் போடவைத்தார் கமல். கமல் ஏமாத்த மாட்டார்னு ஒரு பலத்த நம்பிக்கைதான். அது சரி , தாத்தா பாட்டியை படம் பாக்க அடுத்த காட்சிக்கு அனுப்பினீங்களா இல்லியா?

said...

படம் கண்டிப்பா பார்க்கணும்னு முடிவோட இருக்கேன். என்ன படம் இங்க தியேட்டர்ல போட இன்னும் ஒரு மாசம் ஆகும். சூடு எல்லாம் ஆறி அவலா போயிருக்கும்.

said...

இது பார்த்தே தீர வேண்டிய படமல்ல!

ஆனால், இந்த மாபெரும் கலைஞனுக்கு ஒரு மதிப்பளிக்கும் விதமாகப் பார்க்க வேண்டிய படம்!

அவனது உழைப்புக்காக!

முடியவில்லையா?

ஒரு ஐம்பது ரூபாயை மணியார்டர் பண்ணிடுங்க அவருக்கு!

He desrves it!

He should not lose and at the same time, should not make a profit to encourage him to do more like this!!

said...

இப்போ படம் நல்லா இருக்குன்னு சொல்லறீங்களா இல்லை நல்லா இல்லைன்னு சொல்லறீங்களா? ஐயோ.......

said...

அய்யா எஸ்கே, என்னதான் சொல்ல வரீங்க? படம் பாத்தே தீரவேண்டிய படமல்லன்னா விட்டுட்டு போங்க, பாக்கணும்னா பாத்துட்டுப் போங்க.. அதைவிட்டு உழைப்புக்கு மணியார்டர் அனுப்புங்கன்னு சொன்னா கமல் என்ன பிச்சையா எடுக்கிறார்? கானல் நீர்லே கூடத்தான் உழைப்பு இருந்தது - மணியார்டட் அனுப்பிட்டீங்களா? கமல் ப்ராபிட் பண்ணிடக்கூடாதுன்றதுல நீங்க காட்டுற ஆர்வம் புல்லரிக்குது. ஒருவேளை நிறைய பேர் நீங்க சொல்றதைக் கேட்டு மணியார்டர் அனுப்பி ப்ராபிட் பாத்துட்டா?

said...

இது சும்மா ஆஜர் பின்னூட்டம்.

படம் பார்க்குமுன் விமரிசனங்களைப் படிக்கும் வழக்கம் இல்லை.

பதிவின் முதல் பத்தி படிச்சேன்:-)

வடைன்னு ஒரு சொல் இருக்கே!

said...

"என்னளவில் கமல் இப்படி எல்லாம் ஒரு படம் பண்ணினால் அதனை அடுத்து ஒரு நகைச்சுவை படம் குடுப்பாரு. அதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்"

me too.... :-)

said...

படத்தை பத்தி எல்லாருமே பேசுறாங்க அதனால அதை விட்டுதள்ளுங்க!

//வீட்டில் இருந்து ஒரு 5 நிமிஷம் தள்ளி இருக்கும் திரையரங்கில்தான் போட்டு இருக்காங்க//

இதுல எதாவது நுண் அரசியல் இருக்கா?

அதைப்பத்தி சொல்லுஙக கொத்ஸ் :))

said...

//அப்படி ஒரு காரணம் இல்லாது போனது ஒரு பெருங்குறையே. அதனால் எதற்காக இத்தனை பாத்திரங்களை இவர் செய்ய வேண்டும் என்பது புரியவே இல்லை.//

அப்புறம் எப்படிதான் சாமி படத்துக்கு தசாவதாரம்னு பேர் வைக்கிறது. ஆனா படம் ரொம்பவே நல்லா தான் இருக்கு.. :) பூவராகவனும் பல்ராம் நாயுடுவும் நஷ். இந்த அசின் வாய்க்கு மட்டும் கொஞ்சம் பிசின் போட்டிருக்கலாம்.

said...

யப்பா...உங்க விமர்சனத்தையும் படிச்சிட்டேன் ;)

said...

இன்னிக்குத்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போறேன். நேற்றுத்தான் இன்னொரு படத்தைப் பார்த்துப் போட்டு கடியாகி உட்கார்ந்திருக்கேன், இந்தப் படம் அந்த ரணத்தை ஆற்றுமின்னு எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.

வும்ம விமர்சனம் அந்த கடைசி பஞ்ச்... இது எப்பயிலிருந்து :)).

said...

//சவுஞ்சாலயமும் ஒரு ஆலயம்தானே என்னும் நாயகன், அறிவாலயத்தையும் சேர்த்தே சாடல் பார்வை வீசுகிறான் என்பது நுண்ணிய நோக்கர்களின் பார்வைக்குத் தப்பாது//

இன்னுமா லக்கி அண்ணாச்சி இங்கிட்டு வராம இருக்காரு? :-)

said...

//He should not lose and at the same time, should not make a profit to encourage him to do more like this!!
//

VSK-வின் வைர வரிகளைச் சொல் ஒரு சொல்லாய் வழிமொழிகிறேன்!

said...

இலவசம்-ன்னு பேரு வச்சிக்கிட்டா இலவசமா கமல் படம் பாத்துறலாம்-னு நினைப்பா கொத்ஸ்?

என்னமோ $34.50 செலவழிச்சாராம்-ல? ரொம்ப சீப்பு! உங்க கிட்ட மட்டும் மினிமம் $100.00 ஆச்சும் வாங்கி இருக்கணும்! நுண்ணரசியல் பண்ண எம்புட்டு ஐடியா கொடுத்திருக்காரு கமல்?

நுண்ணரசியல் நுணக்கர், கண்ணரசியல் கணக்கர் கொத்தனார் வாழ்க!

said...

//அவனுக்கு மேக்கப்பைப் பாருங்க. அப்படியே ஆளுடைப்பிள்ளையார் போலவே இருக்கும். அப்படீன்னா யார்னு தெரியும் தானே? :-)//

ஆளுடைய பிள்ளையை உங்களுக்கும் தெரியும் தானே? :-)

படத்தில் சிறுவன் கொண்டை எல்லாம் போட்டிருக்க வில்லை! மேலும் ஆளுடைய பிள்ளையின் திருக்கரங்களில் உள்ள பொற்தாளங்கள் எல்லாம் அவன் கைகளில் இல்லை! ஓடி வந்து கல் எறியும் போது காற்சதங்கை கூட காணோம்!

சின்ன வயசுப் போட்டோவில் நாம கூட பல பேரு அப்படி தான் இருப்போம்!

ஒவ்வொரு சிறு குழுந்தையிடமும் ஆளுடைய பிள்ளையைக் காண வைத்த கமலின் பரந்துபட்ட பார்வையை என் சொல்லிப் புகழ்வது! :-)

ஜிரா...இன்னொரு தாடி வைத்த தாத்தா ஒருத்தரு ஓரமா நின்னுப் பாடுவாரே! அவரை பார்த்தா எனக்கு வாகீசர் மாதிரியே தெரியுது! வாகீசர்-ன்னா யார்னு தெரியும் தானே? :-)

//மூன்று மணிநேர திரைப்படத்தில் ஒரு விநாடி காட்சி 'மட்டும்' உங்கள் கண்ணுக்கு தெரிகிறது. என்னத்தை சொல்ல :-)//

படத்தை வெள்ளித் திரையிலும் பார்க்கலாம்!
அவங்க அவங்க மனத் திரையிலும் பார்க்கலாம்! அதான்! :-)

//'உங்களைப் போல தெலுங்கு பேசுபவர்கள் வந்து தமிழ் வளர்ப்பார்கள்' என்று சொல்வதும்//

:-))))
பலராம் நாயுடுவின் பல வசனங்கள் குபீர் குபீர் + நச் நச்

said...

யாரு பன்ச் அண்ணா ன்னு தெரியாம அவருக்கு கமெண்டெல்லாம் கொடுக்கமாட்டோம் .பயப்படாதீங்க:)

இப்ப என்ன தீர்ப்பு?
லாமா...கூடாதா???

said...

\\அய்யா எஸ்கே, என்னதான் சொல்ல வரீங்க? படம் பாத்தே தீரவேண்டிய படமல்லன்னா விட்டுட்டு போங்க, பாக்கணும்னா பாத்துட்டுப் போங்க.. அதைவிட்டு உழைப்புக்கு மணியார்டர் அனுப்புங்கன்னு சொன்னா கமல் என்ன பிச்சையா எடுக்கிறார்?\\

ஆமா. நல்லாஇருக்கு இல்லைன்னு சொல்ல உரிமை எல்லொருக்கம் இருக்கு. ஆனா கொச்சைப்படுத்துறது உரிமை இல்லை

said...

//உங்க ஆசை வீண்போவானேன்.. பஞ்ச் அண்ணா கமெண்ட் சூப்பர் //

இதுக்கெல்லாம் மட்டும் வந்திருங்க. உங்க கூட்டாளி எங்க ஆளையே காணும்?

said...

//வாங்க...என்னடா மங்கலாவே இருந்த ஜோதி திடீர்னு பிரகாசம் ஆகுதேன்னு நெனச்சேன். பாத்தா..ஒங்க பதிவு.

படத்துல நெறைய நுண்ணரசியல் இருக்கு.//

படத்தை விடுங்க. உங்க பின்னூட்டத்தில் இருக்கும் நுண்ணரசியல் பார்த்தா பயமா இருக்கே!!

said...

//வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்க தாத்தா பாட்டி இருந்ததால் நானும் தங்கமணியும் முநாமுகா (அதாங்க முதல்நாள் முதல்//

தாத்தா, பாட்டியைக் குழந்தைகளோடு வீட்டிலேயே விட்டுட்டுப் போனதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :P


தாத்தா, பாட்டிக்குக் கமல் பிடிக்காதா?? ஹையா, ஜாலி!!!!

said...

//உங்க ஆசை வீண்போவானேன்.. பஞ்ச் அண்ணா கமெண்ட் சூப்பர் //


ஹிஹிஹி, இதுக்கு ஒரு ரிப்பீட்டேஏஏஏஏ போட்டுட்டுப் போறேன், இந்த விமரிசனங்களிலேயே இதான் சூப்பர்!!! அதுவும், "மோடி வகையறாக்கள் இதற்கென்ன பதில் சொல்லப் போகிறார்கள்?"" சூப்பரோ சூப்பர்!!! பதிலையும் எதிர்பார்க்கும் அப்பாவி,
கீ.சா.

said...

/இதையெல்லாம் எழுதின பிறகு படிச்சுப்பாத்தா எனக்கே பைத்தியக்காரத்தனமாத்தான் தெரியுது.. //


படம் பார்க்க போறதே பிளாக்'லே போஸ்ட் போடுறதுக்குதானே??? அப்புறமென்னா இன்னும் எழுதுவீங்க.. இதுக்கு மேலே எழுதுவீங்க.... :)

said...

//கமல் ஐஸ் வாங்க ரோடை க்ராஸ் பண்ணும் போது அவரை அடிக்க வர்ற லாரியில ஒரு சிவலிங்கம் தெரியுமே கவனிச்சீங்களா!//

லாரி கமலை அடிக்க வராது!
அசினைத் தான் அடிக்க வரும்! கமல் காப்பாத்துவாரு!
நெற்றிக் கண்ணால் பாத்தீங்க போல? மொதல்ல சாதாரணக் கண் கொண்டே பார்க்கலாமே? :-)

சிவலிங்கம் லாரியின் பின்னால் தான் இருக்கும்! காப்பாற்றிய பின் வணங்கிக் கொள்ள வசதியாக!

சிறுவனை எமனிடம் இருந்து காப்பாற்ற சிவபெருமான் வந்தாரே! இங்கிட்டு மட்டும் அது போல வந்ததா உங்களுக்குத் தெரியலை போல! :-)

ஆனாச் சிவன் வந்து நீண்ட ஆயுளைக் கொடுத்திட்டுப் போனாரு! அதான் சுனாமியிலும் இருவரும் தப்பிக்கிறார்கள்! சிவ சிவ! :-)

//வீர வைஷ்ணவன்னு காட்றதுக்கு, கமலோட வலது தோள்ல சங்கு, இடது தோள்ல சக்கரம் குத்தி இருக்குமே!//

SK ஐயா
வலது தோளில் சக்கரமும் , இடது தோளில் சங்கும் இருப்பது தான் வழக்கம்! வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டே! நீங்கள் அறியாத பாட்டா? :-)

//பெருமாள் துலுக்க நாச்சியாரை கண்ணாலம் பண்ணினதுக்காவ, அவங்களை மட்டும் மசூதியில தங்க வைச்சது..//

அப்படின்னா அங்கிட்டு இருந்து மடிந்து போன மற்ற துலுக்கர்களின் கதி?
அவிங்க எல்லாம் துலக்க நாச்சியாரின் கண்ணாலத்துக்கு மொய் வைக்காதவங்கன்னு சொல்லுவீங்களா?

கமல் செய்ததாகச் சொல்லி வருத்தப்படுபவர்கள், கமல் செய்ததையே தான், தாமும் செய்கிறார்கள் போல! அது தான் வருத்தமும் கூட! :-(((((

said...

//கேப்டன் மாதிரி துப்பாக்கியால கேன்சர் ஆப்பரேஷன் பண்ண வேண்டிய துரதிருஷ்டங்கள் எல்லாம். என்னவெல்லாமோ குறை எல்லாம் கண்டுபிடிச்சவங்க கண்ணில் இது படாம போச்சா இல்லை மத்த படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சா? வேற யாருமே எழுதலையே//
அது வேறொன்னுமில்லைங்க, முத நாள் முத ஷோவுக்கு டிக்கட் கிடைச்சு படத்தை நிஜமாகவே பார்த்த பரவசத்தில எல்லாரும் எல்லா முக்கியமானதையும் மறந்திட்டாங்க போலருக்கு.இப்ப எல்லாரும் இடை நக்கல் பண்ணறாங்க பார்த்தீங்களா?

said...

கொத்ஸ்,

அசைகலையைப் புழங்கியிருப்பதைக் கவனித்தேன். நன்றி. :-)

அதென்ன யாருக்குமே பூவராகன்னு சொல்ல வரலியா? என் தங்கமணியும் பூவராகவன் பூதராகவன்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருக்காங்க.

said...

Please hear this podcast.

http://podbazaar.com/view/144115188075857182

said...

//அப்பிடில்லாம் சொல்லப் புகுந்தா ஆயிரம் சொல்லலாம்.
ஆனா, ஒரு கலைஞன் செஞ்ச முயற்சியில இதையெல்லாம் சொல்ல வேணாம்னு பார்த்தாலும்,
'ஆமையைத் திருப்பிப் போட்டு அடிச்சா செத்துபோவப்போவுது. அதை என் வாயால சொல்வானேன்' என்னும் நுண்ணரசியல் நல்லாவே தெரியுது சாமி!//

ஏங்க நான் என்ன அரசியலா பேசி இருக்கேன். வெறும் நம்ம பிராண்ட் நுண்ணரசியல்தானே. விடுங்க.

said...

//கமல் ஐஸ் வாங்க ரோடை க்ராஸ் பண்ணும் போது அவரை அடிக்க வர்ற லாரியில ஒரு சிவலிங்கம் தெரியுமே கவனிச்சீங்களா!

வீர வைஷ்ணவன்னு காட்றதுக்கு, கமலோட வலது தோள்ல சங்கு, இடது தோள்ல சக்கரம் குத்தி இருக்குமே!

பெருமாள் துலுக்க நாச்சியாரை கண்ணாலம் பண்ணினதுக்காவ, அவங்களை மட்டும் மசூதியில தங்க வைச்சது.. இப்படி நூறு சொல்லலாம்.//

இதுக்கெல்லாம் ஒரு வீர அசைவர் வந்து பதில் சொல்லி இருக்காரே. அதுக்கு எதாவது பதில் உண்டா?

said...

// கலக்கல் விமரிசனம்//

ஜோ, மெய்யாலுமேயா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா? :)))

said...

//2x Ticket 15$ x 2= $30
Net charges = $ 2
-------------------------Total $32

2.5$ கணக்கிலே உதைக்கிறதே கொத்தனாரே!//

விலை 15 அப்படின்னு நீங்களே முடிவு செஞ்சா எப்படி? எங்க ஊரில் 16.

அது மட்டுமில்லாமல் இணையத்தில் வாங்க 2.50 வாங்கிட்டாங்கன்னு பதிவுல சொல்லி இருக்கேன். நீங்க பதிவைப் படிக்காமல் பின்னூட்டம் போடறீங்க அப்படின்னு இப்படி வெளிப்படையா சொல்ல வேண்டாம்.

said...

//'ஆமையைத் திருப்பிப் போட்டு அடிச்சா செத்துபோவப்போவுது. அதை என் வாயால சொல்வானேன்' என்னும் நுண்ணரசியல் நல்லாவே தெரியுது சாமி!
//
திரும்பச்சொல்லேய்!!//

ஆமையை சாவடிச்சா திரும்பிப் படுக்கப் போகுது? அப்படின்னு சொல்லணுமா? அர்த்தமே இல்லையே...

said...

//கொத்ஸ், கலக்கல்! பஞ்ச் அண்ணா திஸ்கியும் சூப்பர்!!! ஆக மொத்தம் என்ன படம் சூப்பரா இல்லியா, வர வர கமல் மாதிரியே பேசறீங்க:-)))//

அதான் பாருங்க நல்லாவே இருக்குன்னு எழுதி இருக்கேனே. ஓ!! நீங்கதான் பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டம் போடறவராச்சே!!

said...

//ஒரு கலைஞனின் (வியாபாரியின் அல்ல) படைப்பை போட்டு தாக்கும் பதிவுலக வலைஞர்களின் மேதாவிலாசத்தை வியப்பதுதான் என்னுடைய தற்போதைய பொழுதுபோக்கு.//

நம்ம கருத்தைச் சொன்னா போட்டுத் தாக்கறதா? அதுக்கு மேதாவிலாசம் வேணுமா? மேட்டிமைப்பூனைக்குட்டி?

//முதல் நாள் முதல் ஷோ பார்த்து ராவோடு ராவாக (அந்த 'ராவ்' இல்லேய்யா) விமர்சனம் போட்டு அதை ஜிடாக் ஸ்டட்டஸ் மெசேஜாக போட்டுத் திரிந்த சக பதிவர்களுக்கு கொஞ்சம் கூட க்ரெட்டிட் கொடுக்காதின் மர்மம் என்ன?//
நானும்தான் முநமுகா. அதுக்கு அவங்களுக்கு எதுக்கு க்ரெடிட் தரணும்?

//பல தொடர்பில்லாத பாத்திரங்களுக்கு இடையே தொடர்பாக இருப்பது கோவிந்த ராஜ பெருமாள்//

இந்த பாத்திரங்கள் எல்லாமே கமலா இருக்கணுமா? அதான் புரியலை.

//:-)) மர்மயோகிக்கும் 'Kamal, I spent $40 on you'ன்னு ஒரு பதிவோட நீங்க வருவீங்கன்னு நம்பறேன்.//

அம்புட்டு விலை ஏறிடுமா? திருட்டி டிவிடிதான் அப்போ!!

said...

//அப்படி வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு வைக்கப்பட்ட காட்சியாக இருந்தால், மூன்று மணிநேர திரைப்படத்தில் ஒரு விநாடி காட்சி 'மட்டும்' உங்கள் கண்ணுக்கு தெரிகிறது. என்னத்தை சொல்ல :-)//

இது கலர் கண்ணாடி நுண்ணரசியல். வேற என்ன சொல்ல.

said...

//பார்க்கப்பட வேண்டியபடம். பாராட்டவும் விமர்சிக்கவும் படவேண்டிய படம். //

ரிப்பீட்டேய்!!

said...

//இந்த பாத்திரங்கள் எல்லாமே கமலா இருக்கணுமா? அதான் புரியலை. //

அதை அவரோட தீர்மாணம்தானே. இது படத்துக்கு ஒரு ஹைலைட் அதே சமயம் கொஞ்சம் டிஸ்டிராக்ஷனும்தான்.

மீண்டும் மீண்டும் பார்த்தா டிஸ்டிராக்ஷன்ஸ் குறையலாம் இல்லையா.

50 -அடிச்சிட்டீங்க. அடுத்த டார்கெட் செட் பண்ணலையா? :-)

said...

//Magic Bullet for Cancer-ன்னு ஒரு சொற்றொடர் கேள்விப்பட்டதில்லையா? :-))//

இதெல்லாம் ரொம்ப ரூஊஊ மச்சு!

said...

//கமல் பொதுவா ஏமாத்தமாட்டார். ஒரு தடவை பார்க்கலானு சொல்லும் அளவுக்காவது இருக்கும் அவர் உழைப்பு. //

ஆமாங்க சின்ன அம்மிணி. நடிகர் கமல், கதை திரைக்கதை வசனகர்த்தா கமல் இவங்களோட உழைப்பு Casting Director கமலோட சொதப்பலினால் பலன் இல்லாமப் போச்சு.

//அதான் எல்லா செலவும் மேக்கப்புக்கே பண்ணிடறார். அப்புறம் அதுக்கெல்லாம் எங்க போறது தயாரிப்பாளர். தெனாலியோட நிப்பாட்டிடார்னு கேள்விப்பட்டேன்.//

:))

said...

//ஆனந்த பவன் பாத்ததிலிருந்து நான், எம் எஸ் பாஸ்கருக்கு விசிறி. மனுசன் என்னமா நடிக்கறார்.சரியான வாய்ப்புகள் இருந்தா கமலுக்கு சரியான போட்டியாளர்.//

ஆமாங்க. அசாத்திய திறமை!!

//அது சரி , தாத்தா பாட்டியை படம் பாக்க அடுத்த காட்சிக்கு அனுப்பினீங்களா இல்லியா?//

தாத்தாவுக்கு வேண்டாமாம். அதனால பாட்டிக்குப் போக முடியலை!! கம்பெல் பண்ணி அனுப்பணும். (தாத்தா ரஜினி ரசிகர்!)

said...

//படம் கண்டிப்பா பார்க்கணும்னு முடிவோட இருக்கேன். என்ன படம் இங்க தியேட்டர்ல போட இன்னும் ஒரு மாசம் ஆகும். சூடு எல்லாம் ஆறி அவலா போயிருக்கும்.//

முடிஞ்ச அளவு தியேட்டரிலேயே பாருங்க.

said...

//இது பார்த்தே தீர வேண்டிய படமல்ல!

ஆனால், இந்த மாபெரும் கலைஞனுக்கு ஒரு மதிப்பளிக்கும் விதமாகப் பார்க்க வேண்டிய படம்!//

இப்போ வரும் திரைப்படங்களோடு பார்த்தால் இது கட்டாயம் பார்க்க வேண்டிய படம்தான்.

//ஒரு ஐம்பது ரூபாயை மணியார்டர் பண்ணிடுங்க அவருக்கு!

He desrves it!//

இதெல்லாம் ரொம்ப ரூஊஊ மச்.

said...

என்னது தாத்தாவுக்கு வேணாமா?

அப்பத் தங்கமணியை அம்மாகூட அனுப்பி வையுங்க:-)

said...

//இப்போ படம் நல்லா இருக்குன்னு சொல்லறீங்களா இல்லை நல்லா இல்லைன்னு சொல்லறீங்களா? ஐயோ.......//

பதிவைப் படிச்சா தெரியும் அனானி. :))

said...

//அய்யா எஸ்கே, என்னதான் சொல்ல வரீங்க? படம் பாத்தே தீரவேண்டிய படமல்லன்னா விட்டுட்டு போங்க, பாக்கணும்னா பாத்துட்டுப் போங்க.. அதைவிட்டு உழைப்புக்கு மணியார்டர் அனுப்புங்கன்னு சொன்னா கமல் என்ன பிச்சையா எடுக்கிறார்? கானல் நீர்லே கூடத்தான் உழைப்பு இருந்தது - மணியார்டட் அனுப்பிட்டீங்களா? கமல் ப்ராபிட் பண்ணிடக்கூடாதுன்றதுல நீங்க காட்டுற ஆர்வம் புல்லரிக்குது. ஒருவேளை நிறைய பேர் நீங்க சொல்றதைக் கேட்டு மணியார்டர் அனுப்பி ப்ராபிட் பாத்துட்டா?//

அவரு டூமச்சுன்னா நீர் த்ரீ மச்சு. என்னத்த சொல்ல....

said...

//இது சும்மா ஆஜர் பின்னூட்டம்.

படம் பார்க்குமுன் விமரிசனங்களைப் படிக்கும் வழக்கம் இல்லை.

பதிவின் முதல் பத்தி படிச்சேன்:-)

வடைன்னு ஒரு சொல் இருக்கே!//

ரீச்சர். நீங்களுமா சரியாப் படிக்கலை? :((

அது வடைன்னா சொல்லி இருக்கேன். வடை என்ற பெயரில் ஒரு வஸ்து. சரியாப் படியுங்க.

said...

//"என்னளவில் கமல் இப்படி எல்லாம் ஒரு படம் பண்ணினால் அதனை அடுத்து ஒரு நகைச்சுவை படம் குடுப்பாரு. அதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்"

me too.... :-)//

அனானி ஏன் ஆங்கிலம். அழகா தமிழில் ரிப்பீட்டேய்ன்னு சொல்லலாமே! :))

said...

//இதுல எதாவது நுண் அரசியல் இருக்கா?

அதைப்பத்தி சொல்லுஙக கொத்ஸ் :))//

ஆயில்யன். பெட்ரோல் விக்கிற விலைக்கு அம்புட்டு தூரம் ஓட்டிக்கிட்டு போயி அதுக்கு அப்புறம் 35 டாலர் குடுத்துப் படம் பார்க்கணுமா என்பது போன்ற டயலாக்குகளுக்கு வேலை இல்லாமல் போனது தவிர வேற என்ன அரசியல் இருக்க முடியும்?

said...

//அப்புறம் எப்படிதான் சாமி படத்துக்கு தசாவதாரம்னு பேர் வைக்கிறது. ஆனா படம் ரொம்பவே நல்லா தான் இருக்கு.. :) பூவராகவனும் பல்ராம் நாயுடுவும் நஷ். இந்த அசின் வாய்க்கு மட்டும் கொஞ்சம் பிசின் போட்டிருக்கலாம்.//

வேற பெயர் வெச்சு இருந்தா தசாவதாரம் தமிழ்ப் பெயரா என்ற பதிவு போட்டவங்களுக்கு எல்லாம் ஒரு பதிவு லாஸ். அதையும் சொல்லணும் இல்லையா? :)

said...

//யப்பா...உங்க விமர்சனத்தையும் படிச்சிட்டேன் ;)//

நன்னி கோபி!

said...

//வும்ம விமர்சனம் அந்த கடைசி பஞ்ச்... இது எப்பயிலிருந்து :)).//

தெக்கி தொடர்ந்து நம்ம பக்கம் வரதில்லைன்னு தெளிவா சொல்லிட்டீங்க நன்னி!

said...

//இன்னுமா லக்கி அண்ணாச்சி இங்கிட்டு வராம இருக்காரு? :-)//

அவரு இங்க எப்போ வந்திருக்காரு?

said...

//VSK-வின் வைர வரிகளைச் சொல் ஒரு சொல்லாய் வழிமொழிகிறேன்!//

பெனாத்தல் என்னமோ ப்ளாட்டினம் கேள்வி கேட்டு இருக்காரே. அதுக்குப் பதில் உண்டா?

said...

//நுண்ணரசியல் நுணக்கர், கண்ணரசியல் கணக்கர் கொத்தனார் வாழ்க!//

அதெல்லாம் செஞ்சாத்தானே உம்ம குவிஜுல எல்லாம் பதில் சொல்ல முடியுது.அதான்.

said...

//ஜிரா...இன்னொரு தாடி வைத்த தாத்தா ஒருத்தரு ஓரமா நின்னுப் பாடுவாரே! அவரை பார்த்தா எனக்கு வாகீசர் மாதிரியே தெரியுது! வாகீசர்-ன்னா யார்னு தெரியும் தானே? :-)//

:P

//படத்தை வெள்ளித் திரையிலும் பார்க்கலாம்!
அவங்க அவங்க மனத் திரையிலும் பார்க்கலாம்! அதான்! :-)//

:P

//பலராம் நாயுடுவின் பல வசனங்கள் குபீர் குபீர் + நச் நச்//

அதே அதே.

said...

//யாரு பன்ச் அண்ணா ன்னு தெரியாம அவருக்கு கமெண்டெல்லாம் கொடுக்கமாட்டோம் .பயப்படாதீங்க:)//

இது வேறயா....

//இப்ப என்ன தீர்ப்பு?
லாமா...கூடாதா???//

யூ டூ? பதிவைப் படியுங்கம்மா.

said...

//ஆமா. நல்லாஇருக்கு இல்லைன்னு சொல்ல உரிமை எல்லொருக்கம் இருக்கு. ஆனா கொச்சைப்படுத்துறது உரிமை இல்லை//

இதுக்கு பதில் சொல்ல வேண்டியது வீஎஸ்கேவும் ரவியும்தான்.

said...

//தாத்தா, பாட்டியைக் குழந்தைகளோடு வீட்டிலேயே விட்டுட்டுப் போனதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :P//

குழந்தை பார்க்கும் படியான படம் இல்லை. அதனாலதான் இப்படி.


//தாத்தா, பாட்டிக்குக் கமல் பிடிக்காதா?? ஹையா, ஜாலி!!!!//

தாத்தா மட்டும்தான் அப்படி. பாட்டி பாவம் ரொம்ப நல்லவங்க! :))

said...

//ஹிஹிஹி, இதுக்கு ஒரு ரிப்பீட்டேஏஏஏஏ போட்டுட்டுப் போறேன், இந்த விமரிசனங்களிலேயே இதான் சூப்பர்!!! அதுவும், "மோடி வகையறாக்கள் இதற்கென்ன பதில் சொல்லப் போகிறார்கள்?"" சூப்பரோ சூப்பர்!!! பதிலையும் எதிர்பார்க்கும் அப்பாவி,//

பதிலை எதிர்பார்க்கும் பொழுதே தெரியுது அப்பாவின்னு! :))

said...

//படம் பார்க்க போறதே பிளாக்'லே போஸ்ட் போடுறதுக்குதானே??? அப்புறமென்னா இன்னும் எழுதுவீங்க.. இதுக்கு மேலே எழுதுவீங்க.... :)//

எழுதுவோம். இப்போ அதுக்கென்ன? :))

said...

//கமல் செய்ததாகச் சொல்லி வருத்தப்படுபவர்கள், கமல் செய்ததையே தான், தாமும் செய்கிறார்கள் போல! அது தான் வருத்தமும் கூட! :-(((((//

யோவ் கேஆர்எஸ்ஸு என்னய்யா கட்சி மாறிட்ட? எஸ்கே ஐயாதான் பதிலைச் சொல்லக் காணும் :))

said...

//அது வேறொன்னுமில்லைங்க, முத நாள் முத ஷோவுக்கு டிக்கட் கிடைச்சு படத்தை நிஜமாகவே பார்த்த பரவசத்தில எல்லாரும் எல்லா முக்கியமானதையும் மறந்திட்டாங்க போலருக்கு.இப்ப எல்லாரும் இடை நக்கல் பண்ணறாங்க பார்த்தீங்களா?//

அது சரி. ஆமாம் அது என்ன இடை நக்கல்? படத்தில் யாரோட இடை பெருசா இருந்தது? :))

said...

//அசைகலையைப் புழங்கியிருப்பதைக் கவனித்தேன். நன்றி. :-) //

நான் தமிழ்ச் சொல்லைப் பாவித்ததற்கு நீங்கள் நன்றி சொல்வதின் மூலம் தமிழ் என்னவோ உங்கள் சொத்து என்பது போன்ற பொய்யான புரிதலை கற்பிக்க முன்வந்தார்ப்போல்..... நன்றிங்க கும்ஸ்! :))

//அதென்ன யாருக்குமே பூவராகன்னு சொல்ல வரலியா? என் தங்கமணியும் பூவராகவன் பூதராகவன்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருக்காங்க.//

அட ஆமாம். நீங்க சொன்ன பின்னாடிதான் கவனிச்சேன். ஆனா நிறையா பேரு அப்படி தப்பு பண்ணி இருக்காங்க!!

பூவராகன்
பூவராகன்
பூவராகன்
பூவராகன்
பூவராகன்
பூவராகன்
பூவராகன்
பூவராகன்
பூவராகன்
பூவராகன்

இத்தனைக்கும் எங்க ஊர் பெருமாள் பூவராகந்தான்!! :((

said...

//Please hear this podcast.

http://podbazaar.com/view/144115188075857182//

தல இன்னும் கேட்கலை. இன்னிக்கு கேட்கறேன்.

said...

//அதை அவரோட தீர்மாணம்தானே. இது படத்துக்கு ஒரு ஹைலைட் அதே சமயம் கொஞ்சம் டிஸ்டிராக்ஷனும்தான்.

மீண்டும் மீண்டும் பார்த்தா டிஸ்டிராக்ஷன்ஸ் குறையலாம் இல்லையா.//

அதான் என்னோட Pet Peeve. அவ்வளவுதான்.

//50 -அடிச்சிட்டீங்க. அடுத்த டார்கெட் செட் பண்ணலையா? :-)//

இப்போ எல்லாம் 50, அதை விட்டா 100 அதுக்கு என்ன தனியா செட் பண்ணிக்கிட்டு. :(

said...

//என்னது தாத்தாவுக்கு வேணாமா?

அப்பத் தங்கமணியை அம்மாகூட அனுப்பி வையுங்க:-)//

தங்கமணி எல்லாம் ரெண்டாவது வாட்டி படம் பார்க்க மாட்டாங்க. நான் வேணா போகலாமான்னு பார்க்கறேன்! :)