Saturday, June 07, 2008

மீண்டும் சிவாஜி வாயிலே ஜிலேபி!

நம்ம வெண்பா வாத்தி ஜீவா இருக்காரே. எதையாவது ஆரம்பிச்சு வைக்கிறதுல வல்லவருப்பா. வெண்பாப் பதிவு ஆரம்பிச்சாரு. அப்புறம் என்னமோ ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமானம் அப்படின்னு படம் பிடிக்கப் போயிட்டாரு. இப்போ அதையெல்லாம் தாண்டி கதை எழுதச் சொல்லி அழைப்பு விட்டு இருக்காரு.

"சிவாஜி வாயிலே ஜிலேபி" - இதுதாங்க தலைப்பு. இந்தத் தலைப்பில் அவர் எழுதி இருக்கும் ஒரு கதையைப் போட்டு இதே மாதிரி நீயும் எழுதுடா ராஜான்னு நம்மளைக் கூப்பிட்டு இருக்காரு. அவர் ஒரு மீள் பதிவு போட்டு அதே மாதிரி எழுதச் சொன்ன காரணத்தினாலும், ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒண்ணு போட்டு இருக்கும் காரணத்தினாலும், இப்போ இருக்கும் ஆணி புடுங்கல்ஸில் இதுதான் முடியும் என்ற காரணத்தினாலும் நானும் ஒரு மீள்பதிவு செஞ்சுக்கறேன்.

நிறையா படங்கள் இருக்கும் பதிவானதுனால அதை எல்லாம் எடுத்து இங்க போடுவதுக்குப் பதிலா அந்தப் பதிவின் சுட்டியைத் தரேன். சங்கடப்படாமல் ஒரு சொடுக்கு சொடுக்கி அங்க போய் ஒரு பார்வை பார்த்திட்டு வந்திடுங்கப்பா.இன்னிக்கு நம்ம வலையுலகில் பேசப்படும் ஒரு விஷயம் டிப்ஸ் (இதுக்குத் தமிழில் என்ன?) டிப்ஸ் தருவது தப்புன்னு ஒரு பக்கமும் குடுக்காமல் போனால்தான் தப்பு என்று பேசாமல் அப்போ அவனுக்குக் குடுத்தா சரியா என்று மறு பக்கமும் பேசப்படுவதை எல்லாரும் படித்து இருப்பீர்கள். டிப்ஸ் குடுக்க மாட்டேன் எனச் சொன்னால் முத்திரை குத்தப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் மேலே சொன்ன பதிவோடு இதோ என் டிப்ஸ்!

என்ன இதுவும் மீள்பதிவுதான். நம்ம பாபா வந்து ஒரு சமயம் ஆறு வார்த்தைகளில் கதை எழுதுவது பத்தி ஒரு பதிவு போட்டு இருந்தாரு. அந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைப்பது பத்தி எல்லாம் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதையொட்டி நான் எழுதியது

முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!

கடைசியா இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களின் பாரம்பரியத்தின் படி நாமும் மூணு பேரைக் கூப்பிட்டு யான் பெற்ற இன்பம் பெறுவீரே நீர் மூவரும் அப்படின்னு சொல்லணுமாம். அந்த முறையில் நான் அழைக்கும் மூவர்
  1. பெனாத்தல் சுரேஷ் (எழுத மேட்டர் கிடைக்காமல் சங்கடப்படுவது போல் தெரிவதால்)
  2. சென்னைக் கச்சேரி தேவ் (செயல் படாத தலைவர் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிய ஒரு வாய்ப்பு)
  3. வல்லிம்மா (அப்பாடா 33.33 சதவிகிதம் குடுத்தாச்சு!)

ஐயாமார்களே, அம்மாமார்களே! நீங்களும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பில் கதை / உவ்வேக் / கட்டுரை என்று எதாவது எழுதித் தொலைத்து மேலும் மூவரையும் அழைத்து அவர்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 (இது போடாம எப்படி?): மேல சிவப்பில் இருக்கும் உவ்வேக்கிற்கு பொருள் தெரியாமல் நீங்களா எதாவது எடுபட்டவை, விடுபட்டவைன்னு எதையாவது எழுத ஆரம்பிக்காம என்கிட்ட கேளுங்க. விஷயம் என்னான்னு சொல்லறேன்.

டிஸ்கி 2: தசாவதாரம் வெளிவரும் இந்த சமயத்தில் சிவாஜியை மறு வெளியீடு செய்யும் வெண்பா வாத்தியின் நுண்ணரசியலைக் கண்டு நான் பிரமித்து நிற்கிறேன். ஆனால் நட்பின் அடிப்படையில் அவருடைய சதி வேலைக்கு உடன்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்தான் இந்தப் பதிவு. இதனால் வரும் எல்லா வினைகளும் அவருக்கே!

47 comments:

said...

டிஸ்கி 3: டிஸ்கி இரண்டினை மேற்கோள் காட்டி நட்பின் அடிப்படையில் சதி வேலைக்கு உடன்பட இவர் பெரிய கர்ணன் என்ற ரீதியான பின்னூட்டங்கள் வெளியிடப்பட மாட்டாது. :))

said...

அந்த 3 பேருக்கு விளக்கம் கொடுத்திருப்பது சூப்பர் அதுவும் அந்த 33% தான் தூக்குது.

said...

//டிஸ்கி 3: டிஸ்கி இரண்டினை மேற்கோள் காட்டி நட்பின் அடிப்படையில் சதி வேலைக்கு உடன்பட இவர் பெரிய கர்ணன்//

நட்பின் அடிப்படையில் சதி வேலைக்கு உடன்பட இவர் பெரிய கர்ணன்

பின்குறிப்பு : டிஸ்கி 3ஐத்தான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். டிஸ்கி 2ஐ அல்ல.;-))

said...

athennayya //ஐயாமார்களே, அம்மாமார்களே! நீங்களும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பில் கதை / உவ்வேக் / கட்டுரை //


uvvEk ?

nalla thaan irukku aaru vaarththaik kathai.

( pucchhu kamputer. no tamil yet )

said...

ஹையா, ஜாலி, நான் ஆட்டையிலே இல்லையே?????

said...

//(எழுத மேட்டர் கிடைக்காமல் சங்கடப்படுவது போல் தெரிவதால்) //

சொன்னேனா உங்ககிட்டே? புலி பதுங்கறது பாயறதுக்குதான்னு தெரியாதா? வருது ஒரு மெகா மேட்டர்!

இவரு மீள்பதிவு வுட்டா ஆணியாம், நானு அமைதியா இருந்தா மேட்டர் இல்லாததாம்!அதென்னப்பா சொல்லுவாங்க? ஆங்.. நுண்ணரசியல்.. பூனைக்குட்டி வெளிய வந்து டிப்ஸு கேட்டு பல்லிளிக்குது!

said...

ஐயா ஆஜர் போட்டுக்கோங்க. 33அரை பேசறேன்.

படிச்சுட்டு கதை எழுதணுமா.எழுதிட்டு வெரிஃபை பண்ணனுமா.

எத்தனையோ பேர் இருக்க என்னை மாட்டினது ஏன். இப்படி எல்லாம் கேக்க மாட்டேன். செய்யறேன் சாமி. உங்க தலையெழுத்துப் போல நல்லா வரட்டும்:)

said...

//இவரு மீள்பதிவு வுட்டா ஆணியாம், நானு அமைதியா இருந்தா மேட்டர் இல்லாததாம்!அதென்னப்பா சொல்லுவாங்க? ஆங்.. நுண்ணரசியல்.. பூனைக்குட்டி வெளிய வந்து டிப்ஸு கேட்டு பல்லிளிக்குது!//

ரீப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

சரியாச் சொன்னீங்க பினாத்தலாரே...
இந்த இடுகையை படிச்சவுடன் எனக்கும் இதே தான் தோணிச்சு. :))

said...

//பூனைக்குட்டி வெளிய வந்து டிப்ஸு கேட்டு பல்லிளிக்குது!//

அப்பாடா! என்ன வார்த்தை பிரயோகம்!
:-))

said...

//தசாவதாரம் வெளிவரும் இந்த சமயத்தில் சிவாஜியை மறு வெளியீடு செய்யும் வெண்பா வாத்தியின் நுண்ணரசியலைக் கண்டு நான் பிரமித்து நிற்கிறேன்///

ஓ...! இதுல இம்புட்டு சேதி இருக்கா!

அண்ணன் ஜீவ்ஸ் வாழ்க :)))))))))))

said...

நானும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை, மூணு தடவை படிச்சிட்டேன். ஒரே சுட்டிகளும் டிஸ்கியாவும் இருக்கு. சரக்கு ஒண்ணும் இல்லியே. ஏதாவது விடுபட்டுடுச்சா? சீக்கிரம் அதையும் சேருங்க.

//அப்பாடா 33.33 சதவிகிதம் குடுத்தாச்சு!)//

பாருங்க இன்னமும் 'கொடுக்கற' நினைப்பாவே இருக்கீங்க. என்னிக்கு போகும் இந்த 'ஆதிக்க' மனப்பாண்மை?

//முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!//

தமிழர்களின் பழக்க வழக்கங்களான சினிமா, சிலை வைப்பது, அந்த சிலையை பராமரிக்காமல் இருப்பது ஆகியவற்றை தரக்குறைவாக சித்தரித்து என்று கொக்கரிக்கிறீர்களா? சகிக்கலை.

//athennayya //ஐயாமார்களே, அம்மாமார்களே! நீங்களும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பில் கதை / உவ்வேக் / கட்டுரை //


uvvEk ?
//

சீக்கிரம் சொல்லுங்க. அப்பாலீக்கா வந்து மேலும் சிலதை கட்டுடைக்கிறேன்.

said...

புரிந்துவிட்டது!

//கதை / உவ்வேக் / கட்டுரை//

பம்மல் கல்யாண சம்பந்தம் போல் உமக்கும் சிலதை உங்கள் வாயால் சொல்ல முடியாது போல். இருக்கட்டும்.

வெண்பா என்றால் மட்டும் வெண்ணை என்றும், வேறு பா என்றால் வேப்பங்காய் என்றும், களி கவிதையை புளி மாங்கா போல் குமட்டி எடுக்கும் கொத்தனாரே! உங்கள் பழமைவாதம் பல்லிளித்து விட்டது.

கவிதை, அகவிதை, நவீனத்துவம், பின் நவீனத்துவம், மிக பின் நவீனத்துவம், விளிம்பு நிலை இது எது பற்றியும் எந்த புரிதல் இல்லாத, தட்டையான பார்வை கொண்ட ஒரு மொட்டையான பதிவு என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் இப்போதைக்கு.

டிஸ்க்: சிரிப்பான் போட்டா மேலே இருக்கற மேட்டரோட சீரியஸ்னஸ் பாதிக்கும் என்பதால் தனியாக ஒரு டிஸ்கி.

said...

\\(அப்பாடா 33.33 சதவிகிதம் குடுத்தாச்சு!)\\
ஒத்துக்கறோம் ஈயம் பித்தளை உங்களுக்கு இல்லைன்னு,
அந்த சிவாஜிப்பதிவு ஏற்கெனவே படிச்சதுதான். மறுபடியும் படிச்சாச்சு. அப்ப சிவாஜி பாக்கலை. இப்ப பாத்தாச்சு.அவ்வளவு தான் வித்தியாசம்

said...

//அந்த 3 பேருக்கு விளக்கம் கொடுத்திருப்பது சூப்பர் அதுவும் அந்த 33% தான் தூக்குது.//

வடுவூராரே, நீங்க என்னமோ இப்படிச் சொல்லறீங்க. ஆனா இதுக்கு எப்படி எல்லாம் எதிர்வினை வருதுன்னு பார்க்கலாம்.

உங்க பின்னூட்டத்தைப் பார்த்துட்டே உங்க ஈயம் பித்தளை எல்லாம் பளபளக்குதுன்னு சொன்னாக்கூட ஆச்சரியம் இல்லை!! :)

said...

//பின்குறிப்பு : டிஸ்கி 3ஐத்தான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். டிஸ்கி 2ஐ அல்ல.;-))//

யோசிப்பவரே, சும்மா புதிர் எல்லாம் போட்டு உங்களுக்கு பாயிண்ட் எல்லாம் சும்மா டக்குன்னு பிடிக்க வருது.

க.க.க.போ!!

said...

//uvvEk ?

nalla thaan irukku aaru vaarththaik kathai.

( pucchhu kamputer. no tamil yet )//

அதான் எதோ ஒரு தளத்திற்கு சென்றால் தமிழில் தட்டச்சலாமாமே....

உவ்வேக் மேட்டருக்கு பதில் வந்திருச்சு பாருங்க.

said...

//ஹையா, ஜாலி, நான் ஆட்டையிலே இல்லையே?????//

வர வர இதெல்லாம் நீங்க போடறதா இல்லை உங்க போலியான்னு தெரியலை. அதனால நோ கமெண்ட்ஸ்.

வழக்கம் போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!! :)))

said...

//சொன்னேனா உங்ககிட்டே? புலி பதுங்கறது பாயறதுக்குதான்னு தெரியாதா? வருது ஒரு மெகா மேட்டர்!//

என் செலவில் உம்ம அடுத்த பதிவுக்குப் போஸ்டரா? நடாத்தும்!!

//இவரு மீள்பதிவு வுட்டா ஆணியாம், நானு அமைதியா இருந்தா மேட்டர் இல்லாததாம்!அதென்னப்பா சொல்லுவாங்க? ஆங்.. நுண்ணரசியல்.. பூனைக்குட்டி வெளிய வந்து டிப்ஸு கேட்டு பல்லிளிக்குது!//

அட என்னய்யா நீரு. நாங்க எல்லாம் எவ்வளவு ஆணி இருந்தாலும் மீள்பதிவாவது போடறோம். சும்மா அமைதி, பொறுமைன்னுக்கிட்டு புத்தர் மாதிரி உட்கார்ந்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? அப்படி எல்லாம்தான் பேசுவோம்!!

said...

//ஐயா ஆஜர் போட்டுக்கோங்க. 33அரை பேசறேன்.//

இது என்ன இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடுங்கற கதையா இருக்கு. முப்பத்தி மூணும் மூன்றில் ஒரு பங்கும்தான். அரை, முக்கால், மூக்காலே மூணு வீசை அப்படின்னு ஏத்திக்கிட்டே போக வேண்டாம். நல்ல கதையா இருக்கே!! :))

//எத்தனையோ பேர் இருக்க என்னை மாட்டினது ஏன். இப்படி எல்லாம் கேக்க மாட்டேன். செய்யறேன் சாமி.//

அது தெரிஞ்சுதானே கூப்பிடறது!! :))

//உங்க தலையெழுத்துப் போல நல்லா வரட்டும்:)//

அதெல்லாம் இப்போ எதுக்கு? உங்க பதிவு உண்மையிலேயே நல்லா வரும்!! :))

said...

//சரியாச் சொன்னீங்க பினாத்தலாரே...
இந்த இடுகையை படிச்சவுடன் எனக்கும் இதே தான் தோணிச்சு. :))//

இதுல இந்த பெனாத்தலுக்கு ஆமாஞ்சாமியா இன்னும் ரெண்டு பேரு!! என்னாத்த சொல்ல. பெருசுங்க எல்லாம் சேர்ந்துக்கிட்டு கும்மி அடிக்குது. நல்லா இருங்க சாமியோவ்!!

said...

//அப்பாடா! என்ன வார்த்தை பிரயோகம்! :-))//

திவா, அதான் பெனாத்தலா பூனைக்குட்டியான்னு, சாரி, கொக்கான்னு கேட்கறது!! :))

said...

//ஓ...! இதுல இம்புட்டு சேதி இருக்கா!

அண்ணன் ஜீவ்ஸ் வாழ்க :)))))))))))//

யப்பா ஆயில்யனாரே. அண்ணன் ஒரு வார்த்தை சொன்னாலும் அதுல நூறு அர்த்தம் இருக்கும்!!

சரி, இப்போ நீர் என்னாத்துக்கு இப்படி அநியாய நல்ல பிள்ளை வேஷம் கட்டிக்கிட்டு அலையறீரு?

said...

//முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!//

:))))!

said...

நல்ல தலையெழுத்தும் கையெழுத்தும் பதிவெழுத்தும் மிக்க கொத்தனார் சாமிக்கு வல்லிம்மா
அன்போட போடற கடிதம். இப்பவும்,இங்கும் பெரும் பணிகளுக்கு நடுவில்

தங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க (ஏதோ) ஜிலேபியைப் பதிந்து விட்டேன். மூணு பேரையும் அழைத்தாச்சு ஆட்டத்துக்கு.
ஸோ.. நம்ம பதிவை விட்டு பந்து வெளியே ஓடியாச்சு.:)

said...

தமிழ் பிரியன் பதிவிலிருந்து ஜீவீஸ்க்கு சென்று அங்கிருந்து இங்கு வந்தேன்.
பதிவு நல்லாயிருக்குன்னு சும்மா சொல்லிக்கிறேன்.
லிங்க் ரெம்ப குடுத்து தொந்தரவு செய்து விட்டீர்களே?

said...

//வர வர இதெல்லாம் நீங்க போடறதா இல்லை உங்க போலியான்னு தெரியலை. அதனால நோ கமெண்ட்ஸ்.//
grrrrrrrrrrrrrrr

said...

கவிதையை உவ்வேக் என கூறிய இலவசத்தை கண்டித்து கவிதை எழுதுவோர் ஒன்று கூடி போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்து கொள்கிறேன்.

கொளுத்தியாச்சு. ஆரம்பிக்கட்டும் பொதுமாத்து.

(மூனே வரியில இந்த கதை எப்டி இருக்கு அண்ணாச்சி?)

said...

வல்லியம்மா வீசிய பந்தைப் பிடித்த நான், நொந்து போகாமல் சந்திலே சிந்து பாடி விட்டேன். வல்லியம்மா மார்க் போட்டாச்சு. 'உங்க ஆளுங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்!'னு
சொன்ன எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் வந்து பார்த்து மார்க்கை வல்லியம்மாவுக்கும் சொல்லிடுங்க.
http://tamilamudam.blogspot.com/2008/06/blog-post_13.html

said...

//நானும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை, மூணு தடவை படிச்சிட்டேன். ஒரே சுட்டிகளும் டிஸ்கியாவும் இருக்கு. சரக்கு ஒண்ணும் இல்லியே. ஏதாவது விடுபட்டுடுச்சா? சீக்கிரம் அதையும் சேருங்க.//

சாதாரணமா டிஸ்கி, சுட்டிகளுக்கிடையே இருக்கும் கட் அண்ட் பேஸ்ட் மேட்டரைக் காணும் அப்படின்னு சொல்லறீங்களா? எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான்.

//பாருங்க இன்னமும் 'கொடுக்கற' நினைப்பாவே இருக்கீங்க. என்னிக்கு போகும் இந்த 'ஆதிக்க' மனப்பாண்மை?//

எடுத்தாலும் தப்பு, குடுத்தாலும் தப்பு. மனுசன் இப்போ என்னதான்யா செய்யறது?

//தமிழர்களின் பழக்க வழக்கங்களான சினிமா, சிலை வைப்பது, அந்த சிலையை பராமரிக்காமல் இருப்பது ஆகியவற்றை தரக்குறைவாக சித்தரித்து என்று கொக்கரிக்கிறீர்களா? சகிக்கலை.//

கொக்கும் அரிக்கலை படைசிரங்கும் அரிக்கலை. சிவாஜி சிலை சரியா செய்யலை சகிக்கலைன்னா அதுக்கு நான் என்ன செய்ய்?

//சீக்கிரம் சொல்லுங்க. அப்பாலீக்கா வந்து மேலும் சிலதை கட்டுடைக்கிறேன்.//

அதேதான். கட்டுக்கோப்பா இல்லாம கண்டபடிக்கு உடைச்சுப் போட்டு இருக்கும் சமாச்சாரம்தான்!! :))

said...

//பம்மல் கல்யாண சம்பந்தம் போல் உமக்கும் சிலதை உங்கள் வாயால் சொல்ல முடியாது போல். இருக்கட்டும்.//

அதே அதே.

அப்புறம் என்னவெல்லாமோ சொல்லி இருக்கீரு. நமக்குத்தான் புரியலை. எல்லாம் தெரிஞ்ச வல்லவரு நல்லவரு நீங்க தப்பாவா சொல்லி இருக்கப் போறீக!!

said...

//அந்த சிவாஜிப்பதிவு ஏற்கெனவே படிச்சதுதான். மறுபடியும் படிச்சாச்சு. அப்ப சிவாஜி பாக்கலை. இப்ப பாத்தாச்சு.அவ்வளவு தான் வித்தியாசம்//

பாத்துட்டீக இல்ல, நான் சொன்னது சரிதானே... அதையும் பத்தி ஒரு வார்த்தை சொல்லறது... :))

said...

////முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!//

:))))!//

:))))

said...

//நல்ல தலையெழுத்தும் கையெழுத்தும் பதிவெழுத்தும் மிக்க கொத்தனார் சாமிக்கு வல்லிம்மா
அன்போட போடற கடிதம். இப்பவும்,இங்கும் பெரும் பணிகளுக்கு நடுவில்

தங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க (ஏதோ) ஜிலேபியைப் பதிந்து விட்டேன். மூணு பேரையும் அழைத்தாச்சு ஆட்டத்துக்கு.
ஸோ.. நம்ம பதிவை விட்டு பந்து வெளியே ஓடியாச்சு.:)//

வேலை ஆவாதுன்னு தெரிஞ்சா நம்ம கிட்ட இருக்கும் ஆயுதம் அடுக்கு மொழிதான். அதைச் சரியா செஞ்சுட்டீங்க. அதோட அடுத்தவன் தலையில் மிளகாய் அரைக்கிறது. அதையும் உங்க ஆளுங்க மூணு பேர் கிட்ட சொல்லிட்டீங்க. அப்புறம் என்ன ஜமாய்!

said...

//தமிழ் பிரியன் பதிவிலிருந்து ஜீவீஸ்க்கு சென்று அங்கிருந்து இங்கு வந்தேன்.
பதிவு நல்லாயிருக்குன்னு சும்மா சொல்லிக்கிறேன்.
லிங்க் ரெம்ப குடுத்து தொந்தரவு செய்து விட்டீர்களே?//

வாங்க புகழன். நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க. நன்னி!

இந்தப் பதிவை லிங்க் இல்லாமப் போட்டா எப்படி இருக்கும்? எத்ரி பாருங்க.

said...

////வர வர இதெல்லாம் நீங்க போடறதா இல்லை உங்க போலியான்னு தெரியலை. அதனால நோ கமெண்ட்ஸ்.//
grrrrrrrrrrrrrrr//

கோபம் என் மேலேயா இல்லை போலி மீதா? :)))

said...

//கவிதையை உவ்வேக் என கூறிய இலவசத்தை கண்டித்து கவிதை எழுதுவோர் ஒன்று கூடி போராட்டம் நடத்துவார்கள் என தெரிவித்து கொள்கிறேன்.

கொளுத்தியாச்சு. ஆரம்பிக்கட்டும் பொதுமாத்து.

(மூனே வரியில இந்த கதை எப்டி இருக்கு அண்ணாச்சி?)//

அம்பி,

கவுஜயா உவ்வேக்? நடக்குமே போராட்டம். 'இலவசமே' பொதுமாத்து.

இப்படி ஆறு வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை வள வளன்னு மூணு வரியிலா சொல்லுவாங்க?

டூ பேட்!!

said...

//வல்லியம்மா வீசிய பந்தைப் பிடித்த நான், நொந்து போகாமல் சந்திலே சிந்து பாடி விட்டேன். வல்லியம்மா மார்க் போட்டாச்சு. 'உங்க ஆளுங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கலாம்!'னு
சொன்ன எக்ஸ்டர்னல் எக்ஸாமினர் வந்து பார்த்து மார்க்கை வல்லியம்மாவுக்கும் சொல்லிடுங்க.
http://tamilamudam.blogspot.com/2008/06/blog-post_13.html//

ஏங்க, நீங்க இங்க வந்து போஸ்டர் ஒட்டறதுக்கு முன்னாடியே உங்க இடத்துக்கு வந்து கருத்து சொல்லியாச்சே!! :))

said...

//ஏங்க, நீங்க இங்க வந்து போஸ்டர் ஒட்டறதுக்கு முன்னாடியே உங்க இடத்துக்கு வந்து கருத்து சொல்லியாச்சே!! :))//

ஆனா இங்க இன்னும் வரல :) ஆணி பிடுங்கி அடுக்கி வச்சது போக நேரம் மிச்சம் இருந்தா எட்டிப் பாருங்க!

http://kavinaya.blogspot.com/2008/06/blog-post_13.html

said...

கவிநயாவை அடுத்து நான் அழைத்த சதங்கா //ஜிலேபி, ஜிலேபிய்ய்ய்ய், ஜூடான ஜிலெபிய்ய்ய்ய்// என சுற்றிய ஜிலேபியைத் தங்கத் தட்டில் வைத்து ஆனை மேல் ஏற்றி உங்களிடம் கொண்டு வர சிரமப் பட வேண்டாமேயென நானே தண்டோரா போட்டு... சாரி..சாரி..போஸ்டர் ஒட்டி தெரிவித்திருக்கிறேன்.

http://vazhakkampol.blogspot.com/2008/06/blog-post_15.html

said...

//ஆனா இங்க இன்னும் வரல :) ஆணி பிடுங்கி அடுக்கி வச்சது போக நேரம் மிச்சம் இருந்தா எட்டிப் பாருங்க!//

வந்து பாத்தாச்சே கவிநயாக்கா!

said...

//கவிநயாவை அடுத்து நான் அழைத்த சதங்கா //ஜிலேபி, ஜிலேபிய்ய்ய்ய், ஜூடான ஜிலெபிய்ய்ய்ய்// என சுற்றிய ஜிலேபியைத் தங்கத் தட்டில் வைத்து ஆனை மேல் ஏற்றி உங்களிடம் கொண்டு வர சிரமப் பட வேண்டாமேயென நானே தண்டோரா போட்டு... சாரி..சாரி..போஸ்டர் ஒட்டி தெரிவித்திருக்கிறேன்.//

அங்கேயும் போய் மார்க் போட்டுட்டு வந்தாச்சே!!

said...

தண்டோரா போட்ட ராமலஷ்மி மேடம்க்கு ஒரு ஜே, வந்து எட்டிப் பார்த்த எலவசத்துக்கு ஜே ஜே ஜேலேபே :)))

said...

சதாங்கா, இந்த நமக்கு நாமே திட்டம் எல்லாம் நல்லாக் கத்துக்கிட்டீங்க போல!! நல்லா இருங்கடே!

said...

I found this site using [url=http://google.com]google.com[/url] And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!

Sorry for offtopic

said...

How I can download documents from WikiLeaks?
Hope for answer

said...

[url=http://dosugalmaty.com/]Проститутки Алматы[/url]

said...

[url=http://interesniykiev.com.ua/]Интересный Киев[/url]