Saturday, May 31, 2008

புதசெவி - 5/31/2008

செய்தி 1

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு சொன்னதை ரொம்பவே அக்கறையா எடுத்துக்கிட்டாங்க பிரிட்டனில் எஸ்ஸெக்ஸ் என்ற ஊரில் வாழும் காரியா தம்பதியினர். இவங்க இந்தியாவில் இருந்து இந்த ஊருக்கு வந்த பொழுது அருகில் கோவில் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். அதனால தன் வீட்டில் இருக்கும் அறை ஒன்றையே கோவிலா மாத்திட்டாங்களாம். மாத்தினது மட்டுமில்லாம, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு யாரு வேணா இந்தக் கோயிலுக்கு வரலாம் அப்படின்னு சொல்லிட்டாங்களாம். இது வரை அப்படி வந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு பேர் தெரியுமா? அதிகமில்லை 50,000 பேர்தானாம்!! இதில் வந்தவங்களுக்கு இவங்க குடிக்க தேநீர் போட்டுக் குடுக்கறாங்களாம். இவங்க உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் போகும் வரை வந்தவங்களுக்கு சாப்பாடே உண்டாம். பல நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடும் இந்தக் கோவிலுக்கு வயசு 29 வருடங்கள்! மேலதிக தகவல்கள் இங்கே!

29 வருஷமா வாழ்ந்தும் 50000 தான் ஹிட் ரேட்டாமே! இந்தக்கோயிலுக்கு வந்தவங்க, ஏறினவங்க, வழிபட்டவங்க மார்க்கெட்டிங் சரியாகப் பண்ணல போல!


செய்தி 2

இந்தச் செய்தி டோக்கியோ நகரத்தில் இருந்து. இங்கு வசிக்கும் ஒருவர் தன் வீட்டில் உணவுப் பொருட்கள் காணாமல் போவது குறித்துக் கவலை கொண்டாராம். அதற்காக ஒரு புகைப்படக் கருவி ஒன்றினை அமைத்து அதன் படங்கள் தனது செல்பேசியில் வருமாறு அமைத்தாராம். அதில் எதோ நடமாட்டம் தெரியவே காவலர்களைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு விரைந்திருக்கிறார். எல்லாக் கதவுகளும் மூடப் பட்டிருந்த வீட்டில் எங்கு தேடியும் யாரையும் காணவில்லை. கடைசியாக சாமான்கள் வைக்கும் அறையில் (எங்கள் ஊரில் குச்சில், பாவுள் என இரண்டு அறைகள் உண்டு!) ஒரு மேல்தட்டில் மூதாட்டி ஒருவர் பதுங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனராம். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு நாள் வீட்டைப் பூட்டாமல் சென்ற பொழுது உள்ளே நுழைந்தவர் அங்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்து, குளித்து, வசித்து வந்திருக்கிறார். இப்படி அவர் அங்கு இருந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகவாம். மேலதிகத் தகவல்கள் இங்கே!

இப்படிதான் ஒரு கதை சொல்லுவாங்க, டெல்லி சவுத் ப்ளாக்குல ஒரு புலி உள்ளே நுழைஞ்சு பல வருஷமா குமாஸ்தாங்களை அடிச்சு சாப்பிட்டுக் கிட்டிருந்ததாம், யாரும் கண்டே பிடிக்கலையாம்.. ஒரு நாள் டீ கொடுக்கற ஆளை அடிச்சு சாப்பிட்டுச்சாம், உடனே மாட்டிக்கிச்சாம்!

செய்தி 3

நான் நினைத்த நேரத்தில் நினைத்தது நடக்க வேண்டும் என்று பல வருடங்கள் தவம் இருந்த ஒரு அசுரன் வரம் கேட்பதை நாம் அம்புலிமாமா கதைகளில் கேட்டு இருக்கிறோம். இது உண்மையில் சாத்தியம் என்றால் எனக்குக் கீழ்பாக்கத்திற்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்புவதில் முனைப்பாக இருப்பீர்கள். ஆனால் இது இன்று சாத்தியமாகிவிட்டது என்பதுதான் உண்மை. புதரகத்தில் (வேற எங்க!) நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை ஒன்றில் குரங்குகளின் மூளையில் ஒரு கருவியைப் பொருத்தி அவை தமது சிந்தனையின் மூலமாக ஒரு செயற்கைக் கையை நகரச் செய்து உணவினைப் பெற்றுக் கொள்கின்றனவாம். உடல் செயலிழந்த நிலையில் இருப்பவர்களுக்கு தமது எண்ணங்களின் மூலமாக தமக்குத் தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்ளச் செய்வதற்கு இது முதல் படியாம். இந்தச் செய்தியைப் படியுங்கள் அங்கு இருக்கும் நகர்படத்தைக் கட்டாயம் பாருங்கள்.

அதாவது, டெல்லியில இருக்கற செயற்கைக் கைய வச்சு சென்னைலே இருக்கற ஆளைக் கண்ட்ரோல் பண்ணி கர்நாடகா எலெக்சன்லே ஜெயிக்க முயற்சிக்கறது போல! அது சரி குரங்குக்காவது இது வொர்க் அவுட் ஆகுதே!

செய்தி 4

நம்ம பசங்க நிறையா பேரு கண்ணுல தண்ணி வர வைக்கப் போகும் செய்தி இது. எகிப்து நாட்டில் கெய்ரோ நகரின் மிகப் பிரபலமான விடுதி கிராண்ட் ஹையாட் என அழைக்கப்படும் இவ்விடுதி. இவ்விடுதியின் சொந்தக்காரரான அப்துல் அசீஸ் அல் ப்ராஹீம் என்பவர் மது அருந்துவது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் இனி இவ்விடுதியில் மது பரிமாறப்படமாட்டாது என உத்தரவு போட்டு உள்ளார். அது மட்டுமில்லாது அங்கு இருந்து அனைத்து மதுபுட்டிகளையும் கழிவறையில் கொட்டச் சொல்லி விட்டார். அதனைச் செய்து முடிக்க ஒரு நாளுக்கும் மேல் ஆனதாம்!

எகிப்து இஸ்லாமிய நாடு என்பதால் இது சரி என்று ஒரு சாரரும் சர்வதேச விடுதிகள் நடத்தும் பொழுது அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருப்பது தவறு, ஒரு விமானத்தில் செல்லும் பொழுது எப்படி ஒரு இஸ்லாமியருக்கு ஹலால் உணவு வழங்கப்படுகிறதோ அது போல் மேலை நாட்டவருக்கு அவருக்குத் தேவையானதைத் தருவது தவறில்லையே என மற்றொரு சாரரும் வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த முடிவை எடுத்தவர் சௌதி மன்னரின் உறவினர் என்பதால் சௌதி அரசு எப்படி அவர்களது முடிவுகளை எகிப்து நாட்டில் திணிக்கப் பார்க்கின்றனர் என்று வேறு ஒரு கோணம். எது எப்படி இருந்தாலும் கீழே கொட்டாமல் நம்ம பசங்களுக்கு அனுப்பி இருக்கலாம். இது பற்றிய பிபிசி செய்திக்குறிப்பு இது.

இந்தத் தண்ணியால அங்க பிரச்சனை, அந்தத் தண்ணியால இங்க பிரச்சனை. அரசியலில் இதெல்லாம் தண்ணி பட்ட பாடுப்பா!

செய்தி 5

இரவின் மௌனத்தைக் கலைக்கும் துப்பாக்கிகளின் சத்தங்கள், அதனைத் தொடரும் அபாய சங்கின் ஒலி, இவைகளினூடே பெருத்த மூச்சுடன் ஓடும் மனிதர்களின் காலடி ஓசை. அந்த அமாவாசை இருளை அடித்து விரட்டி வி்டும்படியான தேடொளி. அதில் மாட்டிக் கொண்டவர்களின் கைகளில் விலங்கு மாட்டி அழைத்துச் செல்கிறது புதரக எல்லை ரோந்துப் படை. ஆனால் இது நடக்கும் இடத்தில் இருந்து புதரக எல்லை 400 மைல்கள் தொலைவு!

ஆம். வேலை வாய்ப்பும் நல்ல வாழ்க்கையையும் தேடி புதரகத்தினுள் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறி நுழைபவர்களில் மெக்ஸிகோ நாட்டினர்தான் அதிகம். அப்படி செய்வதற்கு முடியாதவர்கள் அதனை அனுபவிக்கவென்றே ஒரு பொழுதுபோக்குப் பூங்காவினைக் கட்டியுள்ளனராம். அங்கு நடக்கும் கூத்துதான் இது. மேலும் படிக்க இதோ சுட்டி.

இதெல்லாம் பூங்காவுல நடக்குற விளையாட்டா? இங்க எல்லாம் பூங்கா நடத்துறதையே விளையாட்டாச் செய்யறாங்க. பாவம் பிபி ஸ்ரீநிவாஸ்.

செய்தி 6

சுவிஸ் கைக்கடிகாரத் தயாரிப்பாளர்களான ரோமெய்ன் ஜெரோம் என்ற நிறுவனத்தார் புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் கைக்கடிகாரத்தின் பெயர் "Day & Night". மூன்று லட்சம் டாலர்கள் ($300,000) விலை பெறும் இந்த கடிகாரத்தின் சுவாரசியமே இதில் நேரம் பார்க்க முடியாது என்பதுதான்! பூமியின் புவியீர்ப்பினைக் கொண்டு பகலா இரவா என்று மட்டுமே தெரிவிக்குமாம். இந்நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பு, மூழ்கிப் போன டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட எஃகில் செய்யப்பட்ட கடிகாரங்கள். நல்லா ஊரை ஏமாத்தறாங்கப்பா. எதுக்கும் இதை ஒரு முறை படிச்சுக்குங்க.

ஆமாமாம், நம்ம ஊர்லே கூட ஒரு சோப்பு வித்தாங்க, சுத்தமான கங்கை நீர்லே தயாரிக்கப்பட்டதுன்னு.. மார்க்கெட்டிங் உலகத்துல இதெல்லாம் சாதாரணமப்பா!

டிஸ்கி 1: புதசெவி என்றால் புன்னகை தரும் செய்திகளும் விவகாரங்களும் என்பது என் புரிதல். அதான் அங்க இங்க தேடிப் பிடிச்ச சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக் கிட்டேன்.

புதசெவி - புதரகம் தயவு செய்து விலகவும் னு கம்யூனிஸ்டுகளும் போட்டுக்கொள்ளலாம், புண்ணாக்கு, தயவு செய்து விட்டுறுன்னு கொத்தனாரை நிறுத்தச் சொல்லலாம் - இதெல்லாம் விட்டுட்டு இந்த அவியலுக்குப் போயி டிஸ்கி!

டிஸ்கி 2: நம்ம பெனாத்தலாரின் பூர்வீக கிராமம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் குடிமுறை அரசுப் பணிக்கான தேர்வெழுதி (அதாங்க தமிழ்ல சிவில் சர்வீஸ் எக்ஸாம் என்று நாம் சொல்வது) அதன் தரவரிசையில் 156ஆக வந்து சாதனை படைத்துள்ளார். பல முறை தோல்வியுற்றாலும் விடா முயற்சியால் இந்த வெற்றியை பெற்ற அவருக்கு நம் வாழ்த்துகள். பொறியியல் படித்து பல வேலைகள் செய்துள்ள இவர் ஒரு சமயத்தில் ஒரு திரையரங்கின் கணினித் துறையில் வேலை செய்யும் பொழுது அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவும் பரிமாறியுள்ளாராம். ஆனால் இவரைப் பற்றிய செய்திக்குறிப்பிற்கு ரீடிப் தளம் தந்துள்ள தலைப்பு - " The waiter who will be an IAS officer". எதற்காக இப்படி ஒரு பரபரப்புத் தலைப்பு? புதசெவி.

பரபரப்புத் தலைப்பு வைப்பது என்ன தமிழ் வலைப்பூக்களின் தனி உரிமையா? எல்லாம் ஹிட் ரேட் ஏத்தத்தாம்பா -the Engineer who made an IAS Officer னு போட்டிருந்தா கொத்தனாராச்சும் போயி பாத்திருப்பாரா? வலையுலகில் இதெல்லாம் சகஜமப்பா.

107 comments:

said...

சொல்ல விட்டுப் போச்சு. ஒவ்வொரு செய்திக்கும் கீழ கலரா டயலாக் பேசுவது நம்ம பஞ்ச் பரமசிவம். அவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... :)

said...

குரங்கையும் வாழப்பழத்தையும் பார்த்தேன்.

said...

ரீச்சர், என்னைப் பத்தியா என்னமோ சொல்லி இருக்கீங்க?

said...

//29 வருஷமா வாழ்ந்தும் 50000 தான் ஹிட் ரேட்டாமே!//

அவங்க கொடுக்கற சாப்பாடு, டீ சரியில்லன்னு கூட்டம் வரலையோ? :))


ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி பதிவை விட நீளமா டிஸ்கிய போடறதுக்கு 'blogpost which will be a disclaimer'ன்னு இந்த மூனுமுழ நீள டிஸ்கியே பதிவா போடலாம் :))


//பேசுவது நம்ம பஞ்ச் பரமசிவம். அவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... :)//

ரிப்பீட்டு :)))

said...

////புதசெவி என்றால் புன்னகை தரும் செய்திகளும் விவகாரங்களும் என்பது என் புரிதல்.////

இந்த ‘புதசெவி'க்கு அர்த்தம் தெரியாமல் ஒரு வருடமாக அல்லாடிக்கொண்டிருந்தேன்

இன்று ஜென்ம சாபல்யம் பெற்றேன்.

நனறி கொத்தனாரே!

said...

பஞ்ச் பரமசிவத்தின் புகைப்படத்தைப் போடவும்!

பஞ்ச் கொடுக்கற வயசா அல்லது பஞ்ச் வாங்குகிற வயசா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

said...

ரீச்சர் வழக்கமாக பழங்கள் மட்டும்தானே உங்கள் கண்ணில் படும்! குரங்கு எப்படிப் பட்டது? அதுவும் முதலில் எப்படிப் பட்டது?

எல்லாம் கொத்தனாரின் போதாத காலம்! ஆசை ஆசையாய் பல செய்திகளுடன் பதிவு போட்டிருக்கிறார். அதெல்லாம் உங்கள் கண்ணில் படாமல் போனது வருந்தத் தக்க விஷயம்!

said...

சில செய்தி்கள் புன்னகை தரும். ஓக்கே! ஆனால் எந்த விவகாரமாவது புன்னகை தருமா?

சொல்லடை இடிக்கிறதே
கொத்தனாரே?

said...

//பேசுவது நம்ம பஞ்ச் பரமசிவம். அவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... :)//

மெத்த மகிழ்ச்சி ஐயா! அங்ஙன 'மஞ்சக் கலர்'ல போடுவாரே அவரா இவரு? :-)

ரிப்போர்டிங் சரி! அடுத்து கேள்வி-பதிலா? (விட மாட்டோம்ல. இப்படி ஏத்தி ஏத்தி விட்டுதான் பல பேருக்கு உடம்பை புண்ணாக்கி விட்டுர்றது)

said...

//நம்ம பஞ்ச் பரமசிவம். அவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.... :)//

மஹா சாதுவான எண்ட்ரியா இருக்கே......!

said...

மூன்றாவது செய்தி நேற்று இங்கு தமிழ் செய்தியில் காண்பித்தார்கள்.

said...

பஞ்ச் பரமசிவம் இனி எப்போது உங்ககூடத்தானா கொத்ஸ்! குட், வருக வருக ன்னு வரவேற்றோம்ன்னு சொல்லிடுங்க!

said...

ஒரு நாள் முழுக்க கீழே ஊத்தினாங்ககளா! அடப்பாவமே! என்ன கொடுமை சாரே!!

said...

// துளசி கோபால் said...
குரங்கையும் வாழப்பழத்தையும் பார்த்தேன்.
//

வர வர ரீச்சர் சொல்றது புரிய ரொம்ப கஷ்டமா இருக்கே, வயசாயிடுச்சோ!(நான் சொன்னது ரீச்சருக்கு)

said...

சுவராசியமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் படித்தது போல் இருந்தது

said...

புதசெவி விளக்கங்கள் - ரூம் போட்டு யோசிச்சீங்களா?

said...

//புதசெவி//
புண் தரும் செருப்படிகளும் வில்லங்கங்களும்.

said...

நல்லா இருந்திச்சி.. கொத்தனாரே..

குரங்கு பற்றிய அரசியல் கமெண்ட் அருமை..


நீங்க ஒரு ஹிட் ரேட் கன்சல்டண்டாப் போகலாமே..

said...

பஞ்ச் பரமசிவத்துக்கு ஒரு வணக்கஞ்-சொல்லிக்கறேன்.

எப்பவுமே இந்த ஹிட் ரேட்தானா?.. :)

கொஞ்ச நேரம் கழித்து ஒரிஜினல் பெயரில் மீண்டும் வருகிறேன்....


இப்படிக்கு,
கீதாமேடத்தின் போலி :)

said...

பி.பி. சீனிவாஸை ஏன் இழுக்கிறீர்?
கொத்தனாரே!
அவர் பாவம்! பாக்கெட் நிறைய பேனாக்களும் டைரி நிறைய கவிதைகளுமாக சுத்திக்கொண்டிருக்கிறார்? அவென்ன செய்தார் உங்களை?

said...

செய்திகளுக்கு நன்னி ;)

said...

ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு விதம். அந்த வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்ட பாட்டிதான் பயங்கர காமெடி நியூஸ் :D

மது அருந்த வழியில்லைன்னா மது விரும்பிகள் அந்த விடுதியை புறக்கணிக்க வேண்டியதுதான். ஹலால் உணவு இல்லைன்னா அதை உண்கிறவர்கள் மற்றதைப் புறக்கணிக்கிற மாதிரி.

heart broken kid அப்படீங்குற படத்துல அமெரிக்கர் ஒருத்தர் மெக்சிகோ போய் பாஸ்போர்ட் எல்லாம் தொலைச்சிட்டு.. திரும்ப வர்ரதுக்கு இந்த முயற்சியெல்லாம் செய்வாரு. ஒவ்வொரு வாட்டியும் அமெரிக்கன் போலீஸ் பிடிச்சி திரும்பவும் மெக்சிகோவுக்குள்ள விட்டுரும். அதுதான் நினைவுக்கு வருது.

ஆமா அந்த கங்கை சோப்புல குளிச்சீங்கதானே ;)

said...

பஞ்ச் பரமசிவத்தை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

குரங்கு வாழைப்பழம் பார்த்துட்டு மீண்டும் வருகிறோம்.:)
புதசெவி மாதிரி வியாழன் கண் உண்டா??/

said...

நட்சத்திரக் கப்பியே, வருகைக்கு நன்றி.

//அவங்க கொடுக்கற சாப்பாடு, டீ சரியில்லன்னு கூட்டம் வரலையோ? :))//

ஒரு பேச்சுக்குச் சொன்னா உடனே இப்படியா? பஸ், வேன் எடுத்துக்கிட்டு இவங்க வீட்டுக்கு வராங்களாம்பா!!

//ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி பதிவை விட நீளமா டிஸ்கிய போடறதுக்கு 'blogpost which will be a disclaimer'ன்னு இந்த மூனுமுழ நீள டிஸ்கியே பதிவா போடலாம் :))
//

என்ன செய்ய, நம்ம நிலமை அப்படி இல்ல இருக்கு. ஆனா பாருங்க நான் என்னமோ பதிவை முடிக்கத் தெரியாம டிஸ்கி போடறதா வலைச்சரத்தில் சொல்லறாரு!

//ரிப்பீட்டு :)))//

சொல்லிடறேன்.

said...

//இந்த ‘புதசெவி'க்கு அர்த்தம் தெரியாமல் ஒரு வருடமாக அல்லாடிக்கொண்டிருந்தேன்

இன்று ஜென்ம சாபல்யம் பெற்றேன்.

நனறி கொத்தனாரே!//

வாத்தியாரே, ரொம்பப் புளகாங்கிதம் அடையாதீங்க. அது வேற இது வேற. ஆனா அதுதான் இது!!! :))

said...

//பஞ்ச் பரமசிவத்தின் புகைப்படத்தைப் போடவும்!//

ஆகிற வயசுக்கு ஆசையைப் பாரு!! :)

//பஞ்ச் கொடுக்கற வயசா அல்லது பஞ்ச் வாங்குகிற வயசா என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?//

அவரையே கேட்டேன். அவருக்குப் பஞ்ச் குடுக்கிற வயசாம்.

said...

//ரீச்சர் வழக்கமாக பழங்கள் மட்டும்தானே உங்கள் கண்ணில் படும்! குரங்கு எப்படிப் பட்டது? அதுவும் முதலில் எப்படிப் பட்டது?//

அதானே. ரீச்சர் கண்ணுக்குப் படாம வேற யார் கண்ணுக்குப் பழம் படும்?:)

//எல்லாம் கொத்தனாரின் போதாத காலம்! ஆசை ஆசையாய் பல செய்திகளுடன் பதிவு போட்டிருக்கிறார். அதெல்லாம் உங்கள் கண்ணில் படாமல் போனது வருந்தத் தக்க விஷயம்!//

நல்லாச் சொல்லுங்க வாத்தியாரே. இந்த ரீச்சர் போக்கே வர வர சரி இல்லை. வயசானவங்க ரெண்டு பேரை சேர்த்துக்கிட்டு போடற கும்மியும் அதுவும்....

said...

//சில செய்தி்கள் புன்னகை தரும். ஓக்கே! ஆனால் எந்த விவகாரமாவது புன்னகை தருமா?

சொல்லடை இடிக்கிறதே
கொத்தனாரே?//

ஆஹா! அது அப்படி இல்ல தல!!

புன்னகை தரும் செய்திகள் தனி - அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

விவகாரங்கள் தனி - அது இந்தப் பக்கம் இருக்கட்டும்.

ஆக இது புன்னகை தரும் செய்திகள் + விவகாரங்கள். இதை எல்லாம் மிக்ஸ் பண்ணக் கூடாது.

said...

//மெத்த மகிழ்ச்சி ஐயா! அங்ஙன 'மஞ்சக் கலர்'ல போடுவாரே அவரா இவரு? :-)//

மஞ்சக் கலரில் ஹைலைட் செய்யும் தமிழக உணவைப் பெயர் கொண்ட அப்படின்னு கிசுகிசு பாணியில் சொல்லறீங்க. அவரா இவர்ன்னு எனக்குத் தெரியாதே!!! :))

//ரிப்போர்டிங் சரி! அடுத்து கேள்வி-பதிலா? (விட மாட்டோம்ல. இப்படி ஏத்தி ஏத்தி விட்டுதான் பல பேருக்கு உடம்பை புண்ணாக்கி விட்டுர்றது)//

அதுக்கெல்லாம் அசருவோமா. அதுவும் வரும்!!

said...

//மஹா சாதுவான எண்ட்ரியா இருக்கே......!//

அக்கா, என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? அவருக்கிட்ட சொன்னேன். பஞ்சு பரமசிவம் அப்படின்னு பேர் வெச்சுக்கிட்டதுக்குக் காரணம் முடிஞ்சாக் குடுக்கத்தானாம். வாங்கறதுக்கு எல்லாம் இல்லையாம். அதனால இப்படி சாதுவாவே இருந்த்துட்டுப் போறேன்னு சொன்னாரு ராதாக்கா!!

said...

//மூன்றாவது செய்தி நேற்று இங்கு தமிழ் செய்தியில் காண்பித்தார்கள்.//

ஆமாம் ரொம்ப சுவாரசியமான செய்தி இல்லையா? நீங்க நகர்படம் எதாவது போடப் போறீங்களா இது பத்தி? :)

said...

//பஞ்ச் பரமசிவம் இனி எப்போது உங்ககூடத்தானா கொத்ஸ்! //

யோவ் அபிஅப்பா, இதெல்லாம் நக்கல்தானே. அவனவன் கட்டின பொண்டாட்டியே பிச்சுக்கிட்டுப் போயிடறதாச் சொல்லறான். இதெல்லாம் ரூ மச்சா, சாரி டூ மச்சாத் தெரியலை?

//குட், வருக வருக ன்னு வரவேற்றோம்ன்னு சொல்லிடுங்க!//

டன்!

said...

//ஒரு நாள் முழுக்க கீழே ஊத்தினாங்ககளா! அடப்பாவமே! என்ன கொடுமை சாரே!!//

அக்காங்ப்பா!!

said...

//வர வர ரீச்சர் சொல்றது புரிய ரொம்ப கஷ்டமா இருக்கே, வயசாயிடுச்சோ!(நான் சொன்னது ரீச்சருக்கு)//

வயசுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். (அப்பாடா பல்முனைத் தாக்குதல்களில் இருந்து தப்பிச்சாச்சு) இதெல்லாம் தமிழ்மணத்தில் அதிகம் பிந பதிவுகள் படிச்சதால வரும் வினைகள். :P

said...

//சுவராசியமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் படித்தது போல் இருந்தது//

அண்ணா, பதிவு காமெடின்னு ஒத்த வார்த்தையில் சொல்லிட்டீங்க!!

ஆமா ரீடர்ஸ் டைஜெஸ்ட்ன்னா என்னமோ பெருசு பெருசா எழுதிட்டு கடைசியா ஒரு நகைச்சுவை துணுக்கு போடுவாங்களே. அந்தப் பொஸ்தகம்தானே? :))

said...

//புதசெவி விளக்கங்கள் - ரூம் போட்டு யோசிச்சீங்களா?//

நான் ஒண்ணே ஒண்ணுதானே சொன்னேன். அதுவும் போன பதிவு பின்னூட்டங்களில் சொன்னதோட திரிபு.

பஞ்ச் அண்ணாவிற்கு அதெல்லாம் தானா வரும்!! :))

said...

//புண் தரும் செருப்படிகளும் வில்லங்கங்களும்.//

இளா,

புண்ணாக்கு தவிடு செலவழிக்கும் விவசாயின்னும் கூட சொல்லலாமே. ஆமாம். விவசாயி பால்வியாபாரம் செய்யலாமா? :))

said...

//நல்லா இருந்திச்சி.. கொத்தனாரே..//

நன்றி சீமாச்சு அண்ணா.

//குரங்கு பற்றிய அரசியல் கமெண்ட் அருமை..//

எல்லாப் பெருமையும் பஞ்சுக்கே!

//நீங்க ஒரு ஹிட் ரேட் கன்சல்டண்டாப் போகலாமே..//

அதாவது கைப்புள்ளை ஆகலாமேன்னு ஆங்கிலத்தில் சொல்லறீங்க போல! ஏன்ண்ணா இப்படி? :))

said...

//பஞ்ச் பரமசிவத்துக்கு ஒரு வணக்கஞ்-சொல்லிக்கறேன்.//

அதையும் சொல்லப் போனா, நானே படிச்சுக்கறேன். நீ எதுக்கு நடுவில்ன்னு சொல்லறாரு.

//எப்பவுமே இந்த ஹிட் ரேட்தானா?.. :)//

உங்களை மாதிரி ஆளுங்க, என்ன நடந்தாலும் கும்பலா சேர்ந்துக்கிட்டு மொத்த ரெடியா இருக்கும் பொழுது ஹிட் ரேட்டுக்கு என்ன கவலை. ஒருத்தன் கிடைச்சாப் போதுமே. நல்லா இருங்கடா சாமி.

//கொஞ்ச நேரம் கழித்து ஒரிஜினல் பெயரில் மீண்டும் வருகிறேன்....

இப்படிக்கு,
கீதாமேடத்தின் போலி :)//

அட கீதாம்மாவுக்குப் போலியா? அம்மா நீங்க எங்கயோ போயிட்டீங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து அடுத்த கமெண்ட் போட்டு இருக்கிறது நானானி அம்மா. அப்போ.........

இது என்ன கலாட்டா!!

said...

//பி.பி. சீனிவாஸை ஏன் இழுக்கிறீர்?
கொத்தனாரே!
அவர் பாவம்! பாக்கெட் நிறைய பேனாக்களும் டைரி நிறைய கவிதைகளுமாக சுத்திக்கொண்டிருக்கிறார்? அவென்ன செய்தார் உங்களை?//

நானானி அம்மா,

முதலில் ஒரு விளக்கம். அவரை இழுத்தது நானில்லை. பஞ்ச் அண்ணா. அவர் வேறு நான் வேறு. இதுல அந்நியன் விளையாட்டு எல்லாம் இல்லை.

அப்புறம் அவரு (பிபிஎஸ்) எப்போதும் போற வுட்லண்ட்ஸை மூடிட்டாங்களா, அது பத்திதான் பஞ்ச் அண்ணா என்னமோ சொல்ல வந்திருக்காரு போல!!

பிகு: கீதாம்மா பாஸ்வேர்ட் எப்படிக் கிடைச்சுது!! :))))

said...

//அட கீதாம்மாவுக்குப் போலியா? அம்மா நீங்க எங்கயோ போயிட்டீங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து அடுத்த கமெண்ட் போட்டு இருக்கிறது நானானி அம்மா. அப்போ.........//

அட ஆமாம்...நானானியம்மா உங்களுக்கு ஒரு வணக்கம்...எத்தனை அவதாரங்கள் இப்படி :)))

said...

//செய்திகளுக்கு நன்னி ;)//

கோபி வெறும் செய்திகளுக்கு மட்டும்தானா? அப்புறம் பஞ்ச் அண்ணா கோவிச்சுக்கப் போறாரு.

said...

//உங்களை மாதிரி ஆளுங்க, என்ன நடந்தாலும் கும்பலா சேர்ந்துக்கிட்டு மொத்த ரெடியா இருக்கும் பொழுது ஹிட் ரேட்டுக்கு என்ன கவலை. ஒருத்தன் கிடைச்சாப் போதுமே. நல்லா இருங்கடா சாமி. //

ஆமாம், இவருக்கு பின்னூட்ட எண்ணிக்கைல ஆர்வமே கிடையாது....நாங்க தான் கும்பலா சேர்ந்துக்கிட்டு மொத்தறோம்.....நல்லாயிருங்கய்யா...:)

said...

//அதையும் சொல்லப் போனா, நானே படிச்சுக்கறேன். நீ எதுக்கு நடுவில்ன்னு சொல்லறாரு. //

அதானே, நானும் அவருக்குத்தானே சொல்லிக்கிட்டேன், நடுவுல நீங்க எதுக்கு நந்தியாட்டம்...."சற்றே வழி விடும் பிள்ளாய்".

said...

//ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு விதம். அந்த வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்ட பாட்டிதான் பயங்கர காமெடி நியூஸ் :D//

ஆமாம்!!

//மது அருந்த வழியில்லைன்னா மது விரும்பிகள் அந்த விடுதியை புறக்கணிக்க வேண்டியதுதான். ஹலால் உணவு இல்லைன்னா அதை உண்கிறவர்கள் மற்றதைப் புறக்கணிக்கிற மாதிரி.//

அதான் நடக்கும். சர்வதேச பயணிகள் வருவது குறையும். நட்சத்திர அந்தஸ்து கூட பறி போகலாம்.

//heart broken kid அப்படீங்குற படத்துல அமெரிக்கர் ஒருத்தர் மெக்சிகோ போய் பாஸ்போர்ட் எல்லாம் தொலைச்சிட்டு.. திரும்ப வர்ரதுக்கு இந்த முயற்சியெல்லாம் செய்வாரு. ஒவ்வொரு வாட்டியும் அமெரிக்கன் போலீஸ் பிடிச்சி திரும்பவும் மெக்சிகோவுக்குள்ள விட்டுரும். அதுதான் நினைவுக்கு வருது.//

அந்த (உங்க)காலத்துப் படம் போல. பஞ்ச் அண்ணா பார்த்திருப்பாரோ என்னவோ... :))

//ஆமா அந்த கங்கை சோப்புல குளிச்சீங்கதானே ;)//

எனக்கு என்ன தெரியும். ஓவர் டு பஞ்ச் அண்ணா....

said...

//நீங்க ஒரு ஹிட் ரேட் கன்சல்டண்டாப் போகலாமே..//

என்னங்க சீமாச்சண்ணா இப்படி நிதானமா சொல்றீங்க...நம்ம கொத்ஸ் தான் நிறையப் பேருக்கு ஆல்ரெடி கன்சல்டண்டாயிருக்காரே?...

எனக்கு, துளசி டீச்சருக்கு, வாத்தியாரய்யாவுக்கு, ரீஜண்டா கீதாம்மாவின் போலி கூட இவரை கன்சல்டண்ட்டா அமர்த்திக் கொண்டதாக காற்று வாக்கில் சேதி வந்தது. :))

said...

//பஞ்ச் பரமசிவத்தை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.//

நன்றி சொல்லச் சொன்னாரு.

//குரங்கு வாழைப்பழம் பார்த்துட்டு மீண்டும் வருகிறோம்.:)//

இம்புட்டு நேரமாச்சு. இன்னுமா பார்த்து முடிக்கலை?

//புதசெவி மாதிரி வியாழன் கண் உண்டா??//

அது தெரியாது ஆனா வெள்ளி கை, வெள்ளி கால் எல்லாம் உண்டு. திருசெந்தூர் கோவிலில் நேர்ந்துக்கிட்டு உண்டியலில் போடுவாங்களே!! :))

said...

//அட ஆமாம்...நானானியம்மா உங்களுக்கு ஒரு வணக்கம்...எத்தனை அவதாரங்கள் இப்படி :)))//

ஒருத்தர் பத்து அவதாரங்கள் அப்படின்னு ஓப்பனாச் சொன்னாரு. அது வெளிய வர வழியாத் தெரியலை. இந்த மாதிரி சைலண்ட் அவதாரம் எம்புட்டு இருக்கோ தெரியலையே.... :P

said...

/ஆமாம், இவருக்கு பின்னூட்ட எண்ணிக்கைல ஆர்வமே கிடையாது....நாங்க தான் கும்பலா சேர்ந்துக்கிட்டு மொத்தறோம்.....நல்லாயிருங்கய்யா...:)//


எதையும் தாங்கும் இதயம் அப்படின்னு சொல்லும் பொழுது இதெல்லாம் என்னா ஹிட்டு அப்படின்னு ஒரு கெத்தா அலையறதுதான்!! :))

said...

//ஒருத்தர் பத்து அவதாரங்கள் அப்படின்னு ஓப்பனாச் சொன்னாரு. அது வெளிய வர வழியாத் தெரியலை. இந்த மாதிரி சைலண்ட் அவதாரம் எம்புட்டு இருக்கோ தெரியலையே.... :P/

அட அதானே....இப்போ கீதாம்மாக்கு நானானி போலியா, இல்லை நானானிக்கு கீதாம்மா போலியா..

யாராவது ரெண்டு பேரையும் பார்த்தவங்க இருக்கீங்களாப்பா.. இருந்தா வந்து தரவு வைக்கவும்.

said...

//ஒருத்தர் பத்து அவதாரங்கள் அப்படின்னு ஓப்பனாச் சொன்னாரு. அது வெளிய வர வழியாத் தெரியலை. இந்த மாதிரி சைலண்ட் அவதாரம் எம்புட்டு இருக்கோ தெரியலையே.... :P/

அட அதானே....இப்போ கீதாம்மாக்கு நானானி போலியா, இல்லை நானானிக்கு கீதாம்மா போலியா..

யாராவது ரெண்டு பேரையும் பார்த்தவங்க இருக்கீங்களாப்பா.. இருந்தா வந்து தரவு வைக்கவும்.

said...

//அப்புறம் அவரு (பிபிஎஸ்) எப்போதும் போற வுட்லண்ட்ஸை மூடிட்டாங்களா, அது பத்திதான் பஞ்ச் அண்ணா என்னமோ சொல்ல வந்திருக்காரு போல!! //

ப்ளாக்குக்கு புதுசுதானே, அதான் பஞ்ச் அண்ணா ஏதோ சொல்ல வந்து ஏதோ சொல்லிட்டாரு போல...:))

அப்படித்தானே கொத்ஸ்?

said...

//அதானே, நானும் அவருக்குத்தானே சொல்லிக்கிட்டேன், நடுவுல நீங்க எதுக்கு நந்தியாட்டம்...."சற்றே வழி விடும் பிள்ளாய்".//

முதற்கண் சற்று விலகி இரும் பிள்ளாய் என்பதை இப்படிச் சிதைத்ததன் மூலம் ஒரு நல்ல பாடலுக்கு உரித்தான மரியாதையைத் தரத் தவறிவிட்டீர் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து இந்த சின்ன மேட்டருக்குள் சிதம்பரம், தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கம், அதிலேயே என்னைச் சற்று விலகச் சொல்லி நீர் பாதிக்கப்பட்டவர், நானோ உமக்கும் 'பரமசிவன்' அவர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படாமல் ஏஜெண்டாக இருப்பவன் என பல அடுக்குகளில் நீர் செய்யும் நுண்ணரசியல் என்னைப் பிரமிக்க வைக்கிறது.

யப்பா கண்ணைக் கட்டுதுப்பா!!

said...

//என்னங்க சீமாச்சண்ணா இப்படி நிதானமா சொல்றீங்க...நம்ம கொத்ஸ் தான் நிறையப் பேருக்கு ஆல்ரெடி கன்சல்டண்டாயிருக்காரே?...//

நான் கன்செல்டண்டா? எப்படி எப்படி?

//எனக்கு, துளசி டீச்சருக்கு, வாத்தியாரய்யாவுக்கு, ரீஜண்டா கீதாம்மாவின் போலி கூட இவரை கன்சல்டண்ட்டா அமர்த்திக் கொண்டதாக காற்று வாக்கில் சேதி வந்தது. :))//

இது என்ன கலாட்டா? ரீச்சர் வாத்தியார், நானானி அம்மா(!) இவங்க கூட நீர் எங்க வந்து சேர்ந்தீரு? இவங்க எல்லாமே ரீச்சர்கள். நான் என்னத்த சொல்லித்தர? மொத்தமா கன்பியூஸ் ஆகி இருக்கீருன்னு தெரியுது!

said...

//ப்ளாக்குக்கு புதுசுதானே, அதான் பஞ்ச் அண்ணா ஏதோ சொல்ல வந்து ஏதோ சொல்லிட்டாரு போல...:))

அப்படித்தானே கொத்ஸ்?//

ப்ளாக்குக்குப் புதுசா? அது சரி. அவரு பழம் கொட்டை எல்லாத்தையும் தின்னவருப்பா.

அவரு சொன்னது எல்லாம் சரியாத்தான் சொல்லி இருக்காரு!! 1000 கோடி ரூபாய்ல கட்டும் பூங்கா பத்தி நல்லாவே பேசி இருக்காரு!

said...

//முதற்கண் சற்று விலகி இரும் பிள்ளாய் என்பதை இப்படிச் சிதைத்ததன் மூலம் ஒரு நல்ல பாடலுக்கு உரித்தான மரியாதையைத் தரத் தவறிவிட்டீர் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

இதென்னமோ உண்மையின்னு சொல்லலாம்...நானும் ஏற்றுக்கொள்ளலாம் :))

// இந்த சின்ன மேட்டருக்குள் சிதம்பரம், தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கம், அதிலேயே என்னைச் சற்று விலகச் சொல்லி நீர் பாதிக்கப்பட்டவர், நானோ உமக்கும் 'பரமசிவன்' அவர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படாமல் ஏஜெண்டாக இருப்பவன் என பல அடுக்குகளில் நீர் செய்யும் நுண்ணரசியல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. //

இதெல்லாம் ரொம்பவே டூ மச்சு...
என்ன இருந்தாலும் நூண்ணரசியல் குருவே நீர் தானே....உம்மிடமே பரிசோதிப்போமா...

இப்படியெல்லாம் திங்க் பண்ணி எழுதின உமக்கே கண்ணைக் கட்டினால்..எனக்கு மயக்கமே வந்துடுச்சுய்யா...சாமி!!!

said...

//இது என்ன கலாட்டா? ரீச்சர் வாத்தியார், நானானி அம்மா(!) இவங்க கூட நீர் எங்க வந்து சேர்ந்தீரு? இவங்க எல்லாமே ரீச்சர்கள். நான் என்னத்த சொல்லித்தர? மொத்தமா கன்பியூஸ் ஆகி இருக்கீருன்னு தெரியுது!//

அவங்க எல்லோரும் ரீச்சர்கள், அதுல நான் இல்லை....ஆனா எங்க எல்லோருக்கும் நீங்க கன்செல்டெண்ட் அப்படிங்கறேன் :)

said...

//இப்படியெல்லாம் திங்க் பண்ணி எழுதின உமக்கே கண்ணைக் கட்டினால்..எனக்கு மயக்கமே வந்துடுச்சுய்யா...சாமி!!!//

இப்படி எல்லாம் சரண்டர் ஆனா எப்படி? கர்நாடக சங்கீதத்தில் ஒரே ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டதுக்கு இவ்வளவு கோபம் வரும் உமக்கு சிதம்பரத்தில் தமிழே பாட முடியாத நிலை இருந்த பொழுது, தமிழன் நுழையவே முடியாத நிலை இருந்த பொழுது இந்தக் கோபம் எங்கே போனது? இதன் மூலம் சகல உலகத்தாருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.....

இப்படி எல்லாம் எழுதினாப் பதில் போட முடியும். சும்மா சும்மா சரண்டர் ஆனா அப்புறம் டார்கெட் எல்லாம் அச்சீவ் பண்ணுவது எப்படி?

said...

//ஆஹா! அது அப்படி இல்ல தல!!

புன்னகை தரும் செய்திகள் தனி - அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

விவகாரங்கள் தனி - அது இந்தப் பக்கம் இருக்கட்டும்.

ஆக இது புன்னகை தரும் செய்திகள் + விவகாரங்கள். இதை எல்லாம் மிக்ஸ் பண்ணக் கூடாது.//

பஞ்ச் அண்ணா சொல்லறாரு அதை இப்படிக் கூட பார்க்கலாமாமே - புன்னகை தரும் செய்திகளும் விமர்சனங்களும்!

காரியத்தில் கண்ணா இருக்காரு சாமி!!

said...

கொத்ஸு.. என்ன திருந்திட்டீரா? போஸ்டு போட்டு தகவலே சொல்லலே? அதுவும் வீக்கெண்டுல பதிவெல்லாம் போடமாட்டீங்களே என்னாச்சு?

பஞ்ச் பரமசிவம் யாருன்னு ஒரு கெஸ் இருக்கு, தனியாச் சொல்றேன்!

said...

இந்த பொன்னான பதிவை எப்படி விட்டேன்?

எல்லா நியூஸும் ஓல்டு. கோல்டுன்னு மாத்தித் தான் உங்க கண்ணுல தெரியும். அதுனால தான் இது பொன்னான பதிவு.

சற்றே விலகி இரும் என்றது சிவன்! யாரவன் ந்னு மத்த வீரவைணவர் மாதிரி கேட்டுடுவீங்க. மதுரையம்பதி, தில்லையிலும் அவனே. (மௌலி சார் பாவம், மதுரைன்னு ஒத்துக்கிட்டாரு). சிவன் சொன்னது நந்தியிடம். அதை ஒத்துக்கப் பிடிக்காம //பல அடுக்குகளில் நீர் செய்யும் நுண்ணரசியல்// நுண்ணரசியல் செய்வது நீரே. இதுக்கும், வார்த்தைகளில் அரசியல் செய்து பின்னூட்டம் இடப் போகிறீர். தெரியாதா!

said...

புதசெவி ஒவ்வொன்றும் ஒரு விதம் கொத்ஸ். நல்லா சுவையா இருந்தன.

க.க., கி.அ.அ.அ, ம.ம., மாதிரி ப.ப.வும் நல்லா பிரபலம் ஆயிடுவாருன்னு நினைக்கிறேன். :-)

said...

\\எனக்கு, துளசி டீச்சருக்கு, வாத்தியாரய்யாவுக்கு, ரீஜண்டா கீதாம்மாவின் போலி கூட இவரை கன்சல்டண்ட்டா அமர்த்திக் கொண்டதாக காற்று வாக்கில் சேதி வந்தது. :))\\

கொத்ஸ்! மனசாட்சி மனசாட்சின்னு ஒருத்தர் மூன்று மூடிச்சு படத்திலே வருவாரே அவரை பத்தி உங்களுக்கு எதுனா தெரியுமா????

said...

//மஞ்சக் கலரில் ஹைலைட் செய்யும் தமிழக உணவைப் பெயர் கொண்ட அப்படின்னு கிசுகிசு பாணியில் சொல்லறீங்க. அவரா இவர்ன்னு எனக்குத் தெரியாதே!!! :))
//

அப்ப பூனைக்குட்டி வெளில வந்து முகமூடி போட்டுகிட்டு இலவசமா டிபனுக்கு இட்லி வடை சாப்பிட்டுகிட்டிருக்கு அப்படின்னு இரவுக் கழுகார், சாம்பு (இவங்கள்லாம் எங்க போய்ட்டாங்க) எல்லாரும் நூஸ் போட வேண்டிதான் போல.

அடுத்த வாட்டி வரும்போது இன்னும் பெரிய லிஸ்ட் கொண்டுட்டு வர்றேன். :-)

மதுரைம்பதி,

இப்படி பச்சப்புள்ளயா இருக்கீங்களே... ஹிட் ரேட்ட ஏத்தி விட கொத்தனார் கன்சல்டண்ட்டா? யாரோட ஹிட் ரேட்டன்னு தெளிவா கேட்டுகிட்டீங்களா சாமி? இந்தப் பதிவோட மொத்த பின்னூட்ட குத்தகையும் உங்க கிட்ட குடுத்து அவரோட பதிவோட ஹிட் ரேட்ட ஏத்தி விட்டுகிட்டிருக்காரு. நல்லாப் பிடிசீங்கய்யா கன்சல்டண்ட்டுட்டுட்டு... :-))))

said...

//முதற்கண் சற்று விலகி இரும் பிள்ளாய் என்பதை.....

......அடுத்து இந்த சின்ன மேட்டருக்குள் சிதம்பரம், தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கம், அதிலேயே என்னைச் சற்று விலகச் சொல்லி நீர் பாதிக்கப்பட்டவர், //

என்னது நீங்கதான் 'பிள்ளை'யா? நீங்க என்ன வழி விடறது அதான் கவர்மெண்ட் விட்டுடுச்சே வழி :-))

நீங்களும் ஈயம் பித்தளை விற்க கிளம்பிட்டீங்க போல. தில்லை கோவிந்தராசப் பெருமாள்தான் காப்பாத்தனும்.

said...

வாங்க ஸ்ரீதர்...

// இந்தப் பதிவோட மொத்த பின்னூட்ட குத்தகையும் உங்க கிட்ட குடுத்து அவரோட பதிவோட ஹிட் ரேட்ட ஏத்தி விட்டுகிட்டிருக்காரு//

தெரியாமலா இருக்கு...நமக்கும் நேரமிருந்து, விளையாட மனம் இருந்தாலும் எல்லா பதிவுலயுமா அதை பண்ண முடியும்?. கே.ஆர்.எஸ்/குமரன்/கீதாம்மா இன்னும் சிலர் பதிவுகளில் பின்னூட்டம் போடணுமானா நாம அதுக்காக தனியா படிக்கணும்....அதுக்கும் மேல போட்ட பின்னூட்டத்தை வச்சு நம்மிடம் பதிவினையே திசை திருப்பி கேள்வி-மேல கேள்வி கேட்டு பின்னிடுவாங்க....அந்த பிரச்சனை எல்லாம் இல்லாது சந்தோஷமா விளையாட கொத்ஸ் இடமளிக்கிறதால...போனா போறாருன்னு விட்டுடலாம் :)

said...

:))


சிரிப்பான் மட்டும் போட்டு போனா உங்க பரமசிவம் எதுவும் பஞ்ச் சொல்லுவாரா???

said...

கொத்தனாரே, பரமசிவத்தின் பஞ்ச் யாவும் தூள் கிளப்புது!

said...

////குமரன் (Kumaran) said...
புதசெவி ஒவ்வொன்றும் ஒரு விதம் கொத்ஸ். நல்லா சுவையா இருந்தன.

க.க., கி.அ.அ.அ, ம.ம., மாதிரி ப.ப.வும் நல்லா பிரபலம் ஆயிடுவாருன்னு நினைக்கிறேன். :-)///

நன்றி குமரன் .வாயார பிரபலம் அப்படீன்னு சொல்லுறீங்களே ! உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு :)

இ.கொ..தில்லி சவுத் பிளாக் கதையை இன்னும் கொஞ்சம் விலாவரியிருக்கலாம்."mejority missed the pun " என்றே தோன்றுகிறது.

கி அ அ அனானி

said...

//அவங்க எல்லோரும் ரீச்சர்கள், அதுல நான் இல்லை....ஆனா எங்க எல்லோருக்கும் நீங்க கன்செல்டெண்ட் அப்படிங்கறேன் :)//

நான் கன்செல்டெண்ட் அப்படின்னு சொல்லறீங்க. நீ என்ன டெண்டா? அதுவும் கன்னும் செல்லும் இருக்கிற டெண்டா அப்படின்னு பஞ்ச் கேட்கறாரு. அதுக்கும் பதில் சொல்லிடுங்க.

said...

//கொத்ஸு.. என்ன திருந்திட்டீரா? போஸ்டு போட்டு தகவலே சொல்லலே? அதுவும் வீக்கெண்டுல பதிவெல்லாம் போடமாட்டீங்களே என்னாச்சு?//

மின்னஞ்சல் வரலையா? :(( அதான் ரெகுலர் பார்ட்டிங்க நிறையா பேரு மிஸ்ஸிங் போல!

ஆமாம் பொதுவா வீக்கெண்டில் எல்லாம் பதிவு வராது. இந்தப் பதிவு கூட கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கணும். ஆனா பஞ்ச் அண்ணா கொஞ்சம் டிலே பண்ணிட்டார்!

//பஞ்ச் பரமசிவம் யாருன்னு ஒரு கெஸ் இருக்கு, தனியாச் சொல்றேன்!//

சொல்லுங்க. அவர் இல்லைன்னு சொல்லிடறேன்! :))

said...

//இந்த பொன்னான பதிவை எப்படி விட்டேன்?

எல்லா நியூஸும் ஓல்டு. கோல்டுன்னு மாத்தித் தான் உங்க கண்ணுல தெரியும். அதுனால தான் இது பொன்னான பதிவு.
//

அப்படின்னா நான் இணையத்தில் இருக்கும் நேரத்தை விட நீங்க இருப்பது அதிகம் போல!! ஏன்னா வேற யாருமே (வடுவூரார் தவிர) தெரிஞ்ச நியூஸ்ன்னு சொல்லவே இல்லை!! :))

//சற்றே விலகி இரும் என்றது சிவன்! யாரவன் ந்னு மத்த வீரவைணவர் மாதிரி கேட்டுடுவீங்க.//

நான் வீரவைணவனா? அது சரி. விட்டா நாந்தான் கேஆரெஸ்ன்னு சொன்னாலும் சொல்லுவீங்க போல! அவரோட சில பதிவுகளில் பின்னூட்ட விளையாட்டு விளையாடினேன் என்பதற்காக இப்படியா? அப்பனே முருகா!! :))


//மதுரையம்பதி, தில்லையிலும் அவனே. (மௌலி சார் பாவம், மதுரைன்னு ஒத்துக்கிட்டாரு).//

அவரு பாவம். உண்மையை அப்படியே சொல்லிடுவாரு!! :)

//சிவன் சொன்னது நந்தியிடம். அதை ஒத்துக்கப் பிடிக்காம //பல அடுக்குகளில் நீர் செய்யும் நுண்ணரசியல்// நுண்ணரசியல் செய்வது நீரே. இதுக்கும், வார்த்தைகளில் அரசியல் செய்து பின்னூட்டம் இடப் போகிறீர். தெரியாதா!//

தெரியாது!! :))

இப்போ என்ன சொல்லறீங்க. மதுரையம்பதி மேற்குடி அப்படின்னு நிரூபிக்கப் பார்க்கறீங்களா? :P

said...

//புதசெவி ஒவ்வொன்றும் ஒரு விதம் கொத்ஸ். நல்லா சுவையா இருந்தன.//

எல்லாப் பெருமையும் அவருக்கே!

//க.க., கி.அ.அ.அ, ம.ம., மாதிரி ப.ப.வும் நல்லா பிரபலம் ஆயிடுவாருன்னு நினைக்கிறேன். :-)//

ஆவாரு. அவரோட ட்ராக் ரெக்கார்ட் அப்படி! :P

said...

//கொத்ஸ்! மனசாட்சி மனசாட்சின்னு ஒருத்தர் மூன்று மூடிச்சு படத்திலே வருவாரே அவரை பத்தி உங்களுக்கு எதுனா தெரியுமா????//

தெரியாது. என்ன வேணுமுன்னு சொல்லுங்க. கேட்டுச் சொல்லறேன்.

ஒரு சின்ன சந்தேகம். இதுக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? எதாவது பெரிய உள்குத்து வெச்சு இருக்கீறா? :-X

said...

//அப்ப பூனைக்குட்டி வெளில வந்து முகமூடி போட்டுகிட்டு இலவசமா டிபனுக்கு இட்லி வடை சாப்பிட்டுகிட்டிருக்கு அப்படின்னு இரவுக் கழுகார், சாம்பு (இவங்கள்லாம் எங்க போய்ட்டாங்க) எல்லாரும் நூஸ் போட வேண்டிதான் போல. //

ஆமாம் தல. இப்படி எல்லாம் படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. நடுவில ஒருத்தர் போட்டாரு. அந்த லிஸ்டில் ஒரு பேரு கூடத் தெரியலை!

//அடுத்த வாட்டி வரும்போது இன்னும் பெரிய லிஸ்ட் கொண்டுட்டு வர்றேன். :-)//

வாங்க வாங்க.

//நல்லாப் பிடிசீங்கய்யா கன்சல்டண்ட்டுட்டுட்டு... :-))))//

சரியாச் சொன்னீங்க தல!! :))

said...

//என்னது நீங்கதான் 'பிள்ளை'யா? நீங்க என்ன வழி விடறது அதான் கவர்மெண்ட் விட்டுடுச்சே வழி :-))//

ஆமாம். ஆண் பிள்ளை!! ஓ! நீங்க அந்தப் பிள்ளைப் பத்திப் பேசறீங்களா? அது வெளிய வேற மாதிரி இல்ல பேசிக்கிறாங்க!

//நீங்களும் ஈயம் பித்தளை விற்க கிளம்பிட்டீங்க போல.//

இப்பத்தான் தெரியுமா? என்னய்யா நீரு?

//தில்லை கோவிந்தராசப் பெருமாள்தான் காப்பாத்தனும்.//

அவரும் ஒரிஜினல் கடலுக்கடியில் போயாச்சாமே. இப்போ இருக்கிறது போலியாமே? அப்படியா?

said...

//தெரியாமலா இருக்கு...நமக்கும் நேரமிருந்து, விளையாட மனம் இருந்தாலும் எல்லா பதிவுலயுமா அதை பண்ண முடியும்?. கே.ஆர்.எஸ்/குமரன்/கீதாம்மா இன்னும் சிலர் பதிவுகளில் பின்னூட்டம் போடணுமானா நாம அதுக்காக தனியா படிக்கணும்....அதுக்கும் மேல போட்ட பின்னூட்டத்தை வச்சு நம்மிடம் பதிவினையே திசை திருப்பி கேள்வி-மேல கேள்வி கேட்டு பின்னிடுவாங்க....அந்த பிரச்சனை எல்லாம் இல்லாது சந்தோஷமா விளையாட கொத்ஸ் இடமளிக்கிறதால...போனா போறாருன்னு விட்டுடலாம் :)//

ஆக மொத்தம் நமக்கு நல்லா ஆப்புரேசல் பண்ணிட்டீங்க. உருப்படியா பதிவு எழுதறவங்க அப்படின்னு மூணே மூணு பேர் சொல்லி இருக்கீங்க. அதுல உங்களுக்கு நிறையா கண்டனங்கள் வரலாம். வாழ்த்துகள்!!

அப்புறம் கீதாம்மா பதிவில் பின்னூட்ட விளையாட்டு விளையாட முடியாதுன்னு சொல்லி அவங்க கோபத்துக்கு ஆளாகிட்டீங்க. வாழ்த்துகள்!! அவங்க இல்லைனாலும் அவங்க போலி வந்து பொலி போடப் போறாங்க!

எதுக்கும் இந்தப் பதிவைப் பார்த்துக்குங்க.

http://sivamgss.blogspot.com/2007/04/test.html
தலைப்பு ஒரு வார்த்தை. அதுவும் ஆங்கிலம். பதிவுனுள் ஒரு சொல் கூட இல்லை. ஆன பின்னூட்டம் 29!!

இதெல்லாம் அம்மாவால்தான் முடியும்!! :P

இதே மாதிரி கே ஆர் எஸ், குமரன் எல்லாரும் பின்னூட்ட விளையாட்டுப் பதிவு போட்டு இருக்காங்க. அதனால உமக்கு நான் சொல்ல நினைப்பது எல்லாம் ஆல் தி பெஸ்ட்.

said...

//:))


சிரிப்பான் மட்டும் போட்டு போனா உங்க பரமசிவம் எதுவும் பஞ்ச் சொல்லுவாரா???//

சொல்லுவாராம்.

அதிகமாச் சிரிச்ச பொம்பளையும் அதிகமா ஆசைப்பட்ட ஆம்பிளையும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.

அப்படியாம்.

said...

//கொத்தனாரே, பரமசிவத்தின் பஞ்ச் யாவும் தூள் கிளப்புது!//

பெருமை யாவும் அவருக்கே!! :))

said...

//நன்றி குமரன் .வாயார பிரபலம் அப்படீன்னு சொல்லுறீங்களே ! உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு :)

இ.கொ..தில்லி சவுத் பிளாக் கதையை இன்னும் கொஞ்சம் விலாவரியிருக்கலாம்."mejority missed the pun " என்றே தோன்றுகிறது.

கி அ அ அனானி//

ஐயா கி அ அ அ, உம்மை எல்லாம் என் பதிவுக்கு வர வைக்க என்ன பாடு பட வேண்டியதா இருக்கு. குமரன் கிட்ட பின்னூட்டம் போடச் சொல்லி அதில் உங்க பேரைச் சேர்க்கச் சொல்லி, அதுவும் நல்லதா நாலு வார்த்தை சொல்லச் சொல்லி.... அப்பாடா!! :))

நம்ம பதிவுக்கு வரவங்க எல்லாருக்கும் நல்லாப் புரியுமாம். ஆனா பதிவுக்கு சம்பந்தப்பட்ட எதையும் சொல்லிடக்கூடாதேன்னு ஜாக்கிரதையா இருக்காங்களாம். பஞ்ச் அண்ணா சொல்லச் சொன்னாரு.

said...

//கே.ஆர்.எஸ்/குமரன்/கீதாம்மா இன்னும் சிலர் பதிவுகளில் பின்னூட்டம் போடணுமானா நாம அதுக்காக தனியா படிக்கணும்....அதுக்கும் மேல போட்ட பின்னூட்டத்தை வச்சு நம்மிடம் பதிவினையே திசை திருப்பி கேள்வி-மேல கேள்வி கேட்டு பின்னிடுவாங்க....அந்த பிரச்சனை எல்லாம் இல்லாது சந்தோஷமா விளையாட கொத்ஸ் இடமளிக்கிறதால...//

மதுரையம்பதி ஐயா,

ஒரே பதில்ல நாலு சிக்சர் அடிக்கறது உங்களால மட்டும்தாங்க முடியும் :-))

படிக்காத மேதைகளை பலரை உருவாக்குகிற கொத்ஸை பாராட்டுனம்கிறீங்க. செஞ்சிருவோம்.

பின்னூட்ட நாயகரின் ரசிகமன்ற தலைவர் தேவ் அண்ணாவுக்கு (ஆளையே காணோமே இப்பல்லாம்) அப்புறம் நீங்கதான் தலைமையேற்று களம் பல கண்டு வெற்றி வாகை சூடணும்னு கேட்டுக்கறேன்.

said...

///ஐயா கி அ அ அ, உம்மை எல்லாம் என் பதிவுக்கு வர வைக்க என்ன பாடு பட வேண்டியதா இருக்கு. குமரன் கிட்ட பின்னூட்டம் போடச் சொல்லி அதில் உங்க பேரைச் சேர்க்கச் சொல்லி, அதுவும் நல்லதா நாலு வார்த்தை சொல்லச் சொல்லி.... அப்பாடா!! :))////

இகொ

"இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டுதான ஒடம்பு புண்ணா..." அப்படீன்ற வடிவேலு டையலாக்கு நான் சொல்ற மாதிரி மேற்கண்ட பின்னூட்டத்தை டைப்படிக்கும் போது உங்களுக்கும் ஞாபகம் வந்ததா இல்லையா ?

பின்னூட்டம் போட வைக்க அப்படீன்னு வேணா சொல்லுங்க.. எல்லா(ர்) பதிவையும் படிச்சுக்கிட்டுதான் இருக்கோம். இந்தப் பின்னூட்டக் கலை மட்டும் நமக்கு இன்னும் புரியாத புதிராவே இருக்கு.

///நம்ம பதிவுக்கு வரவங்க எல்லாருக்கும் நல்லாப் புரியுமாம். ஆனா பதிவுக்கு சம்பந்தப்பட்ட எதையும் சொல்லிடக்கூடாதேன்னு ஜாக்கிரதையா இருக்காங்களாம். பஞ்ச் அண்ணா சொல்லச் சொன்னாரு.///

பப அண்ணனுக்கு ஒரு ஓஓஓஓஓ. இப்படியே போட்டு தாக்கச் சொல்லுங்க :)

அது சரி ..இது உங்க பதிவு பக்கம் வராதவங்களுக்கு ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே ? :)

கி அ அ அனானி

said...

பஞ்ச் அண்ணா அனுப்பிய பல பகுதி மின்னஞ்சலில் இருந்து....
---------------------------

பஞ்ச் பரமசிவத்துக்கு வரவேற்பளித்த கொத்தனார், கப்பி பய, என்புகைப்படத்தைக் காண ஆவலோடு இருக்கும் சுப்பையா, (என்னே விபரீத ஆசை?) மஞ்சக்கலர் ஹைலைட்டைத் தேடும் நுண்ணரசியல் மாணவன் ஸ்ரீதர் வெங்கட், சாதுவான எண்ட்ரி என்று ஆச்சரியப்படும் ராதா ஸ்ரீராம் (சேதுவா ஆக்கிட்டுவோமில்ல கூடிய சீக்கிறத்துல) அபி அப்பா ஆகியோருக்கு முதற்கண் நன்றி.

ஒரு பின்னூட்டத்துல மொத்த பேரும் சொல்ற மாதிரியா ஆள்சேத்து வச்சுருக்காரு கொத்ஸு? இரண்டாம் கண், மூன்றாம் கண்ணும் வரும் பாத்துக்கங்க!

said...

பஞ்ச் பாகம் ரெண்டு!
----------------------------

குரங்கு பற்றிய கமெண்டை ரசித்து, அதற்கு கொத்ஸுக்கு க்ரெடிட் கொடுத்து தவறிழைத்த சீமாச்சு, போலி கீதாமேடம், கங்கை சோப்புக்கு மட்டும் என்னைக் கண்டுகொண்ட ஜி ராகவன், வரவேற்ற வல்லி சிம்ஹன், மேட்டரைப் பற்றிக் கவலைப்படாமல் பின்னூட்ட மீட்டரைக் கூட்டிய மதுரையம்பதி, கெஸ் வைத்திருக்கும் பினாத்தல் சுரேஷ், நான் பிரபலம் ஆக வாழ்த்திய குமரன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.

said...

பஞ்ச் பாகம் 3
------------------------------
நுண்ணரசியல் பாடத்தில் வீட்டுப்பாடமாக லிஸ்டு போட்ட ஸ்ரீதர், சிரிப்பானை மட்டும் விட்ட இராம் (சொல்லாம விட்டுறுவோமா, கொத்ஸ் மூலம் பதில் சொல்லியாச்சில்ல!) பரமசிவத்தின் பஞ்சை மட்டுமே ரசித்த ராமலக்ஷ்மி (ஆயிரம் நன்றி உங்களுக்கு:-)) சவுத் பிளாக் கதையைரசித்த கி அ அ அனானி (குஷ்வந்த் சிங் புக்லே இருந்து உருவுனது சார் அது) ஆகியோருக்கு மூன்றாம் கண் நன்றி.

said...

பஞ்ச் பாகம் 4
--------------------------

எல்லார் பேரும் சொல்லிப்போட்டேன்னு நெனைக்கிறேன். எதாச்சும் மிஸ் ஆயிருந்தா அவங்க பெனால்டி நன்றியோட சேத்து ஒரிஜினல் நன்றியைக் க்ளெயிம் பண்ண இன்னொரு பின்னூட்டம் தண்டம் அழுமாறு கொத்தனாரின் ஆணைப்படி கேட்டுக் கொள்கிறேன்.

said...

//மதுரையம்பதி ஐயா,

ஒரே பதில்ல நாலு சிக்சர் அடிக்கறது உங்களால மட்டும்தாங்க முடியும் :-))//

மதுரையம்பதி அண்ணா, இதுக்குப் பின்னாடி இருக்கும் அரசியல் தெரியாம சிரிச்சு வைக்காதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன்.

//படிக்காத மேதைகளை பலரை உருவாக்குகிற கொத்ஸை பாராட்டுனம்கிறீங்க. செஞ்சிருவோம். //

ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க!! நல்லா இருங்கப்பா.

//பின்னூட்ட நாயகரின் ரசிகமன்ற தலைவர் தேவ் அண்ணாவுக்கு (ஆளையே காணோமே இப்பல்லாம்) அப்புறம் நீங்கதான் தலைமையேற்று களம் பல கண்டு வெற்றி வாகை சூடணும்னு கேட்டுக்கறேன்.//

ஆமாம். ஆளையே காணும். கல்யாணம் ஆன ஆளு இப்படிக் காணாமல் போனா ஒரே டவுட்டா இருக்கு. சென்னை ஆளுங்க ஒரு விசிட் விட்டு நிலமையைச் சொல்லுங்கப்பா.

said...

//இப்படி ஏத்தி விட்டு ஏத்தி விட்டுதான ஒடம்பு புண்ணா..." அப்படீன்ற வடிவேலு டையலாக்கு நான் சொல்ற மாதிரி மேற்கண்ட பின்னூட்டத்தை டைப்படிக்கும் போது உங்களுக்கும் ஞாபகம் வந்ததா இல்லையா ?//

கி.அ.அ.அ. அண்ணா (அப்பாடா, இன்னும் ஒரு அ சேர்த்தாச்சு!) அதெல்லாம் ஞாபகத்துக்கு வரலைன்னு நான் உண்மையையே சொன்னாலும் நம்பவா போறீங்க. :)

//பின்னூட்டம் போட வைக்க அப்படீன்னு வேணா சொல்லுங்க.. எல்லா(ர்) பதிவையும் படிச்சுக்கிட்டுதான் இருக்கோம். இந்தப் பின்னூட்டக் கலை மட்டும் நமக்கு இன்னும் புரியாத புதிராவே இருக்கு.//

இப்போ படிச்சீங்க, ஒரு கருத்து சொன்னீங்க. அதுக்கு நான் பதில் சொன்னேன். அதுக்கு நீங்க பதில் சொன்னீங்க. இப்போ அதுக்கு நான் பதில் சொல்லறேன். இதுக்கு நீங்க பதில் சொல்லாமாலேயா போவீங்க? அம்புட்டுதாங்க. எதுக்கும் இங்க போய் ஒரு பார்வையைப் பார்த்துக்குங்க.

http://koodal1.blogspot.com/2006/02/140.html

//பப அண்ணனுக்கு ஒரு ஓஓஓஓஓ. இப்படியே போட்டு தாக்கச் சொல்லுங்க :)

அது சரி ..இது உங்க பதிவு பக்கம் வராதவங்களுக்கு ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே ? :) //

பப பேசினாலே பஞ்ச்தான். நான் என்னத்த சொல்ல!! :))

said...

//மதுரையம்பதி அண்ணா, இதுக்குப் பின்னாடி இருக்கும் அரசியல் தெரியாம சிரிச்சு வைக்காதீங்க. அம்புட்டுதான் சொல்லுவேன். //

அதென்ன கருமம், அதயுந்தான் சொல்லறது :)

said...

//மேட்டரைப் பற்றிக் கவலைப்படாமல் பின்னூட்ட மீட்டரைக் கூட்டிய மதுரையம்பதி//

அட ஏதோ புது காரக்டர் அறிமுகமாயிருக்காரே, அவருக்கு கொத்ஸ் முறையில் மரியாதை பண்ணுவோம் அப்படின்னு பார்த்தா, எனக்கு இதுவும் வேணூம், இன்னமும் வேணூம். :))

said...

//மேட்டரைப் பற்றிக் கவலைப்படாமல் பின்னூட்ட மீட்டரைக் கூட்டிய மதுரையம்பதி//

இது ஒரு உப்புமா பதிவு, இதுக்கு கவலை வேற படணுமாம்....என்ன எதிர்பார்ப்பையா பஞ்சு?..

இந்த லஷணத்துல பின்னூட்ட பஞ்ச் வைக்கறதா நினைப்பு வேற உமக்கு....:))

said...

//இது ஒரு உப்புமா பதிவு, இதுக்கு கவலை வேற படணுமாம்..//

இப்படி ஒரு அவியலை கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் (ஆமாம், அவியலில் கருணை, சேம்பு எல்லாம் போடலாம்) உப்புமா (இதில் கருணைக்கு ஏது இடம்?) எனச் சொல்லும் மதுரையம்பதிக்கு என் வன்முறையான கண்டனங்கள்.

said...

மதுரையம்பதி,

//இது ஒரு உப்புமா பதிவு, இதுக்கு கவலை வேற படணுமாம்....என்ன எதிர்பார்ப்பையா பஞ்சு?..//

இது உப்புமா பதிவல்ல என்பதை உப்புமாப் பதிவுகளை உலகுக்கு அளித்தவன் என்ற முறையில் ஓங்கி உரத்தே சொல்லுவேன்.

said...

ஏன் சொல்லுகிறேன் என்றூ கேட்கிறீர்களா?

கூறுவேன் கேளும்:

உப்புமா என்பது உபயோகமற்றது அல்ல - உடனடிப் பலனை மட்டும் நோக்கியது. ஹிட் வரும் - பதிவுக்கும் பதிவருக்கும் - ஆனால் காலங்கடந்த எவ்விளைவையும் ஏற்படுத்தாது.

இப்பதிவோ, பஞ்சு பரமசிவம் என்ற ஒரு புது நஞ்சு உருவாகக் காரணமாகி, நெடுநாள் விளைவுக்கு அடிகோலுகின்றதே! (ப ப அண்ணா, சும்மா ஒரு ரைமுக்கு அடிச்சு விட்டது.. நீங்க ரொம்பநாள் இருப்பீங்கன்றதத்தான் அப்படிச் சொல்றேன்)..

இஃதெப்படி உப்புமா ஆகும்?

said...

//பஞ்சு பரமசிவம் என்ற ஒரு புது நஞ்சு //

கொஞ்சிப் பேசும் கொத்தனாரை விஞ்சி நிற்கும் பஞ்ச் பரமசிவம் - அப்படிக் கூடத்தான் சொல்லலாம்.

உள்ளுக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை உலகுக்கு அறிவித்து, பொய் முலாம் பூசிப் புன்னகை பூக்கும் உங்கள் புளித்துப் போன பினாத்தல்கள் (நல்லா வச்சிருக்கீங்க பேரு. ஒரே வார்த்தையில் ஒரு முழு உருவம் கிடைச்சிடுதே) இனி என்றும் எடுபடா.

தாளித்த உப்புமா. தொட்டுக் கொள்ள கொத்ஸு. அறுசுவை அவியல் என்று பல்சுவை பெருகிட பஞ்ச் அண்ணா (ஏன், அக்காவா இருக்கக் கூடாதா? கொத்ஸோட profiling இன்னுமா மேம்படலை...) வந்திட்டார். பராக்! பராக்!

said...

//அதென்ன கருமம், அதயுந்தான் சொல்லறது :)//

தெரிஞ்சா சொல்லி இருக்க மாட்டோமா. ஆனா அந்த ஆள் உள்குத்து இல்லாம பேசினதா சரித்திரமே கிடையாதே. அதான் அவ்வளவு கான்பிடெண்டா சொல்லறேன். :))

said...

//அட ஏதோ புது காரக்டர் அறிமுகமாயிருக்காரே, அவருக்கு கொத்ஸ் முறையில் மரியாதை பண்ணுவோம் அப்படின்னு பார்த்தா, எனக்கு இதுவும் வேணூம், இன்னமும் வேணூம். :))//

மோதிரக் கையால குட்டு கேள்விப்பட்டது இல்லையா? அதை மாதிரி இது பரமசிவம் கையால பஞ்ச். சந்தோஷமா இருங்க. எத்தனை பேருக்கு கிடைச்சு இருக்கும் இந்த பாக்கியம்! :))

said...

//இது உப்புமா பதிவல்ல என்பதை உப்புமாப் பதிவுகளை உலகுக்கு அளித்தவன் என்ற முறையில் ஓங்கி உரத்தே சொல்லுவேன்.//

ஆகா!! சந்தடி சாக்குல உப்புமா பதிவுகளுக்கு கோப்பிறைற் வாங்க முயற்சியா!! நல்லா இருங்க சாமி!!

said...

//இப்பதிவோ, பஞ்சு பரமசிவம் என்ற ஒரு புது நஞ்சு உருவாகக் காரணமாகி, நெடுநாள் விளைவுக்கு அடிகோலுகின்றதே! //

யோவ், எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன். உம்ம பதிவுக்கு வரதே நாலு பேர். சும்மானா இவரையும் கொண்டு வந்து அதை அஞ்சு பேரா ஆக்கலாமுன்னு பார்த்தா இப்படி எல்லாம் சொன்னா என்ன அர்த்தம்.

//(ப ப அண்ணா, சும்மா ஒரு ரைமுக்கு அடிச்சு விட்டது.. நீங்க ரொம்பநாள் இருப்பீங்கன்றதத்தான் அப்படிச் சொல்றேன்)..//

கீ.வி.மீ.ம.ஒ. என்பது மாதிரி இப்படி ஒரு சால்ஜாப்பு. பஞ்சுக்கு கெஞ்சு, மிஞ்சு, அஞ்சு, நெஞ்சு இப்படி எவ்வளவோ இருக்கும் போது அது என்ன நஞ்சு? என்னவோ, உம்ம போக்கே சரி இல்லை.

said...

//எனக்கு இதுவும் வேணூம், இன்னமும் வேணூம். :))//

நல்ல ட்ரெயினிங் போல. இன்னமும் வேணும் வேணும்னு 100 அடிச்சிட்டிங்களே கொத்ஸ். வாழ்க வளமுடன்!

said...

//உள்ளுக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை உலகுக்கு அறிவித்து,//

ஒரே நாளில் ரெண்டு பேர் உமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சியைப் பத்திப் பேசிட்டாங்க. இதில் இருக்கும் உண்மையை யோசித்துப் பார்த்து தகுந்த மாற்றங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

//தாளித்த உப்புமா. தொட்டுக் கொள்ள கொத்ஸு. அறுசுவை அவியல் என்று பல்சுவை பெருகிட பஞ்ச் அண்ணா (ஏன், அக்காவா இருக்கக் கூடாதா? கொத்ஸோட profiling இன்னுமா மேம்படலை...) வந்திட்டார். பராக்! பராக்!//

யோவ் அண்ணாவை அண்ணான்னு சொல்லாம, அக்கான்னு சொல்லணும் அப்படிங்கிறது எல்லாம் கொஞ்சம் ரொம்ப டூ மச்சா தெரியலை? அவரு பஞ்ச் அண்ணாதான்!!

said...

//நல்ல ட்ரெயினிங் போல. இன்னமும் வேணும் வேணும்னு 100 அடிச்சிட்டிங்களே கொத்ஸ். வாழ்க வளமுடன்!//

ஸ்ரீதர், வருகைக்கும் கருத்துக்கும் (100ஆவது கருத்தை சரியாச் சொல்லி இருக்கீங்களே, அதுக்கு!) வாழ்த்துக்கும் நன்றி! :))

said...

//புன்னகை தரும் செய்திகள் தனி - அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

விவகாரங்கள் தனி - அது இந்தப் பக்கம் இருக்கட்டும்.

ஆக இது புன்னகை தரும் செய்திகள் + விவகாரங்கள். இதை எல்லாம் மிக்ஸ் பண்ணக் கூடாது.//

புதசெவி - புன்னகை தரும் செய்திகளும் விபரங்களும்

இப்படிச்சொல்லுங்க! சரியாப்பூடும் ;)

said...

குமார், வாங்க. அதான் பஞ்ச் அண்ணா சொல்லிட்டாரே புன்னகை தரும் செய்திகளும் விமர்சனங்களுமாம். (அவர் மேட்டரை விட்டாக் கோபம் வருது!)

said...

குறிப்பா என் பெயரை சொல்லாமல் விட்டதுககுக் காரணம் என்ன? என்ன? என்ன? (எக்கோ)

//பெனால்டி நன்றியோட சேத்து ஒரிஜினல் நன்றியைக் க்ளெயிம் பண்ண இன்னொரு பின்னூட்டம் தண்டம்// இட்டாச்சு.

said...

//நான் நினைத்த நேரத்தில் நினைத்தது நடக்க வேண்டும் என்று பல வருடங்கள் தவம் இருந்த ஒரு அசுரன் வரம் கேட்பதை நாம் அம்புலிமாமா கதைகளில் கேட்டு இருக்கிறோம்.//

நேத்து என் தோழி ஒருத்தி கூட பேசிட்டு இருந்தேன்.. 2 நாள் முன்னாடி இங்க ஆலங்கட்டி மழை பெஞ்சதுனு சொன்னா.. அப்டியா அதுல என்ன விசேசம்னு கேட்டேன்.. அதுக்கு அவ சொன்னா " மழை வர மாதிரி இருக்கும் போது அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்.. ஆலங்கட்டி மழை பார்த்து ரொம்ப நாள் ஆச்சிமா.. இன்னைக்கு அப்டி மழை பெஞ்சதுனா நல்லா இருக்கும்மானு சொல்லிட்டிருந்தேன்.. என்ன ஆச்சாயம் .. கொஞ்ச நேரத்துல ஆலங்கட்டி மழை பெஞ்சது.."
.. இத்த என்னன்னுங்க்ணா சொல்றது? :(

said...

Nalla muyarchi!

Naanum eludhukiraen! (english il, tamil typing thadavudhu)

http://vijayashankar.blogspot.com

என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம்!