Wednesday, May 07, 2008

மை டியர் பெனாத்தலாரே (08-05-2008)

பெனாத்தலாருக்கு இலவசம் எழுதும் கடிதம். எல்லாரும் சாமிக்கு கடிதம் எழுதும் போது நம்ம ரேஞ்சுக்கு நம்ம ஒரு ஆசாமிக்காவது கடிதம் எழுத வேண்டாமான்னுதான் இந்தக் கடிதமே.

உங்கள் சமீபத்திய பதிவினை படித்தேன். படிக்கப் படிக்க உம்ம மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை கலந்த பயமும் ஜாஸ்தியாகிக்கிட்டே போகுது.அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி தெண்டனிட்டுக்கவும்தான் இந்தப் பதிவு.

முதலில் அந்த ஐபில் மேட்டர். (ஆமாம் இதை யாரும் இன்னும் படுத்தலையா?, சாரி தமிழ்ப் படுத்தலையா?)அது எப்படிங்க நீங்களும் நல்லா விளையாடிக்கிட்டு இருக்கிற அணியாப் பார்த்து உம்ம ஆதரவுக் கரத்தை நீட்டறீங்க. முதலில் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே ஒண்ணு இல்லை, ரெண்டு இல்லை, தொடர்ந்து மூணு போட்டியில் அவங்க காலி. அந்த நேரம் பார்த்து அவங்களை விட்டுட்டு ராஜஸ்தானுக்கே என் ஓட்டுன்னு போயிட்டீங்க. இப்படிப் போனதுக்கே உங்களை வெச்சு பல பதிவுகள் வந்திருக்கணும். பாவம் அவங்களுக்கெல்லாம் என்ன வேலையோ, வரக் காணும். ஆனா உங்க ஆதரவைப் பெற்ற நேரம் இன்னிக்கு ராஜஸ்தானும் காலி. அது எப்படிய்யா இதெல்லாம். சில சமயம் இதெல்லாம் நினைக்கும் போது அம்மா ஆதரவு பெற்ற வாஜ்பேயி ஞாபகம்தான் வருது!

************************
தமிழகத்தில் பிறந்து பெண்களூரில் வேலை செய்து தற்போது புதரகத்தில் இருப்பதாலும் அதை விட முக்கியமா சாப்பாட்டைப் பற்றி பேசி இருப்பதாலும் நீங்கள் இரண்டாவதாகத் தொட்டுச் சென்று இருக்கும் தலைப்பை தெரிவில் விட்டுட்டு அப்படியே உலக நாயகன் மேட்டருக்குப் போறேன்.


//ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். //

என்னதான் வேசம் கட்டினாலும் கமல் ஒரு(க்) கால் மறைத்த ஆச்சார்யங்கள் உள்ளே வைத்திருப்பவர் என்ற உண்மை தெரிந்ததால்தான் சிவாசிக்குச் செய்த பிளாச் போல (தமிழ் தெரியாத ஆரிய கூத்தாடிகளுக்காக - சிவாஜிக்கு செய்த ஃபிளாஷ் எனப் படிக்கவும்), போக்கிரிக்குச் செய்த விமர்சனம் போல இவருக்குப் போட மாட்டேன் என்ற நிலைப்பாடா என மற்றவர்கள் கேட்கும் முன் ஆச்சரியத்தைச் சரியா வெளிப்படுத்துங்க. அம்புட்டுதான்.

****************************

இன்னமுமா மக்கள் இந்த மாதிரி ஏமாற்று திட்டங்களுக்கு ஏமாந்து போய் காசை விட்டுக்கிட்டு இருக்காங்க? பேசாம இந்த பெட்டி தட்டற வேலையை எல்லாம் விட்டுட்டு நாமளும் இதுல இறங்க வேண்டியதுதான் போல. தமிழ்ன்னு சொல்லி ஏமாத்தறவன், பாலம் சாமின்னு சொல்றவங்க, பால சாமி தவிர மத்த சாமி எல்லாம் ஓக்கேன்னு சொல்றவங்க், இவன் தமிழன், இவன் ஆரியன்னு உறுதிப்படுத்தறவங்க, எந்தெந்த சாதி பேர் வெளிப்படையா சொல்லலாம்னு நிர்ணயம் செய்றவங்க, எல்லாம் நல்லாத்தானே இருக்கான். இவனுங்க மாதிரி நாமளும் தெரிஞ்சே ஏமாத்தினாக் கூட, நல்லாத்தான் இருப்போம். என்ன முதல் போட கொஞ்சம் பணம் வேணும். அடுத்து நைஜீரியாவில் இருந்து பல மில்லியன் டாலர் பணம் அனுப்புறவன் கிட்ட இருந்து சில மில்லியன்கள் மட்டுமாவது வாங்கிக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? சேர்ந்தே செய்யலாமா?

****************************

தமிழ்மணம் நல்லாத்தான் இருக்கு. என்ன முன்ன எல்லாம் ஸ்க்ரோல் (தமிழ்?) செய்யாமலேயே நிறையா பதிவுகள் பார்க்க முடிஞ்சுது. ஆனா இப்போ எழுத்து சின்னதா ஆகிக் கூட அதிகமா ஸ்க்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு! போகப் போக பழகிடும்ன்னு நினைக்கிறேன். கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை. அதை சரி செய்ய இளா சொல்லித் தரேன்னு சொல்லி இருக்காரு.

அப்புறம் இந்த உத்தப்புரத்தைப் பத்தி ஆளாளுக்கு எழுதறீங்க. எனக்கு ஒரே ஒரு கேள்வி. சுவரைக் கட்டி இருக்காங்க சரி. அது தப்புன்னு தெரியும் பொழுது அதை இடிச்சு தள்ளாம அது என்ன அதில் நிலைவாசல் வைக்கிறேன், நிலையில்லாத வாசல் வைக்கிறேன்னு வழவழா கொழகொழான்னு ஒரு முடிவு. அதுக்கு சபாஷ் சரியான தீர்ப்புன்னு சொல்ல நாலு பேரு. ஒண்ணும் சரியாப் படலையே?

**************************

நிறையா சினிமா பார்க்கறீரு. நீர் படும் பாட்டை நான் பார்த்து ரசிச்சுக்கறேன். அதே போதும் எனக்கு.

கடைசியா நம்ம பக்கத்தில் இருந்து ஒண்ணு. மன அழுத்தம் இருக்கிறவங்களுக்கு மருந்தா வலைபதியறது இருக்குன்னு சொல்லி இருக்காங்க. ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா கேள்விப்பட்டீங்களா? (நீங்க கேள்விப்படாட்டி வேற யாரு கேள்விப்படுவாங்க?) எனக்குத் தெரிஞ்சு எழுத்துப் பிழை இல்லாம எழுதும் பொழுதுதான் இந்த அழுத்தம் அதிகம் வருதுன்னு நினைக்கிறேன். "வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அதனால அப்படி ஒரு பதிவு வேணா போட்டுப் பாருங்களேன்!

இப்படிக்கு அன்புடன்
கொத்ஸ்

டிஸ்கி 1: கடிதமெழுதும் இட்லிவடை காணாமல் போய்விட்டார். படிக்க கடிதம் கிடைக்காமல் கை கால் உதறல் எடுப்பதால் நானே எழுதிவிட்டேன்.

டிஸ்கி 2: அசந்து தூங்கினால் ஆள் காலி எனச் சொல்லும் வலை உலகில், உள்ளேன் ஐயா பதிவு பெனாத்தலார் போட்ட பதிவின் தாக்கதால் நானும் போட்ட உள்ளேன் ஐயா பதிவு இது. மேட்டர் இல்லாத காரணத்தால் அவருடைய பதிவையே எடுத்து மொக்கை போட வேண்டியதாய் ஆயிற்று

டிஸ்கி 3: மேலே உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் கற்பனையே (இது சும்மா பாதுகாப்புக்காக. இதை எல்லாம் போடலைன்னா நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்.)

133 comments:

said...

என்னமோ இந்த மாசம் பதிவு போட மேட்டர் ஒண்ணும் சிக்க மாட்டேங்குதேன்னு நினைச்சேன். சரியா ஒரு மேட்டர் போஸ்ட் போட்ட பெனாத்தலாருக்கு நன்னி! :))

said...

////முதலில் தொடர்ந்து நான்கு வெற்றிகள் பெற்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ். உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே ஒண்ணு இல்லை, ரெண்டு இல்லை, தொடர்ந்து மூணு போட்டியில் அவங்க காலி./////

வ்.புகழ்ச்சி.அணி என்பார்களே இது தானா இது?

said...

தலீவா என்ன இது...உன் லெட்டர்ல்ல பிழை கீதுன்னு சொல்ல வச்சிட்டியே.. லெட்டரை முடிக்க சொல்ல.. இப்படிக்கு பாசக்கார நட்பு.. எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ரா போடாம கவுத்திட்டியே தலீவா...

அந்த ஒரு மேட்டர்ல்லா ஓலக டாப் லெட்டர்ல்ல இந்த லெட்டர் வராம மிஸ் ஆவப் போவுது பாருங்க...

said...

//வ்.புகழ்ச்சி.அணி என்பார்களே இது தானா இது?//

வாத்தியாரே, நான் ஒருத்தன் மட்டும்தானே கடிதம் எழுதி இருக்கேன், இதையே போய் அணி, பெருங்கூட்டமின்னுக்கிட்டு. ஏற்கனவே லாரிக்கு நாலு பேர் கம்மின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க, இப்போ ஒருத்தர் மட்டுமே இருக்கும் அணின்னு சொல்ல ஆரம்பிக்க போறாங்க. எதுக்கு இப்படி எல்லாம். :))

said...

தம்பி தேவு, நானே பதிவைப் படிச்சு அட இது மிஸ்ஸிங்காவுதேன்னு கரெக்ட் பண்ணா சொல்லோ சுகுரா வந்து வாத்தியாரே கோட்டை விட்டுட்டியேன்ன்ய் கூவுன பாரு நீதாண்டா தம்பி.

நம்ம விஜய டி கணக்கா நீதாண்டா தம்பி, சரியான தங்கக் கம்பி, நான் உன்ன நம்பி, குதிப்பேனே எம்பி, போட்றா பதிவுல கும்பி!!

இப்போ சரியாக்கீதான்னு பாரு.

said...

பாவி மனுஷா...எப்படிய்யா, இப்படி ஒரே பதிவுல எல்லா வகைக் குத்துக்களையும் வக்கிறீங்க?....:)

//சிவாசிக்குச் செய்த பிளாச் போல (தமிழ் தெரியாத ஆரிய கூத்தாடிகளுக்காக //

கலக்கல்....வாய்விட்டு சிரித்தேன்

said...

//நைஜீரியாவில் இருந்து பல மில்லியன் டாலர் பணம் அனுப்புறவன் கிட்ட இருந்து சில மில்லியன்கள் மட்டுமாவது வாங்கிக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க? சேர்ந்தே செய்யலாமா?//

செய்யலாமே!, நீங்க நைஜீரியாலருந்து வாங்கிக்கங்க...நான் உங்க கிட்ட வாங்கிக்கறேன்...:) (உங்க ஊர்/பேர்/அட்ரஸ் எல்லாம் நல்லா தெரியும்) :)

said...

கலக்கல் கொத்ஸ்.. அடங்கமாட்டீரு நீரு.. பொறுத்தது போதும் பெனாத்தலாரே பொங்கி எழும்.... அப்ப தான் இந்த மாதிரி நாலு கடுதாசி கிடைக்கும் நமக்கும் :))..

said...

// கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை. அதை சரி செய்ய இளா சொல்லித் தரேன்னு சொல்லி இருக்காரு.//

அப்படியா?, இளா இதை நீங்க ஒரு பதிவா போடுங்களேன்...நானும் இந்த குறையால் மன-அழுத்தத்தில் இருக்கேன் :)

பின்னூடமும் ரீடர் மூலமா போட முடிந்தால் அதையும் சொல்லிக்குடுங்க.

said...

//"வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்//

அந்தகாலத்து டிராமாக்கள்ல நகைச்சுவை, சிரித்தார்கள் அப்படிங்கறதை சொல்லும் போது, நாவலோ! நாவல்...அப்படின்னு எழுதியிருப்பாங்க...அந்த மாதிரி நக்கலோ, நக்கல்.........:)

said...

//மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். //

ரீப்பீட்டேய்ய்ய்ய் மட்டுமே போடற கூட்டத்தை விட்டுடீங்களே அண்ணாச்சி! :)))

//நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு//

என்னயா இப்படி குபீர்னு சிரிக்க வெச்சுட்டீர். :)

நம்மூர் பேச்சு எல்லாம் வெளிய வருது போற. தமிழ் மணத்துல இருந்து தூக்கிட போறாங்க . :p

said...

கடிதம் எழுதுவது ஒரு கலையாம். அக்கலையிலும் சிக்கலை உண்டாக்கும் நக்கலை உம்முடைய கடிதத்திலே கண்டேன். கடிதம் நக்கல் செய்த கொத்ஸ் வாழ்க வாழ்க என்று மனமார வாழ்த்துகிறேன்.

said...

ஆமாம்! A+B தானே இட்லிவடை....நீங்க மட்டும் பதிவு போட்டா அது இங்க தான் பப்ளிஷ் பண்ணனும்...கரெக்டா தான்ன் பண்ணியிருக்கீங்க. :)

said...

நல்லாத்தான் எசப்பாட்டு பாடியிருக்கீங்க. அங்க இப்பதான் போய் உங்க ரெண்டு பேரோட ராசியை பத்தி பேசிட்டு வரேன்.. இங்க நீங்களும் அதையே போட்டிருக்கீங்க.

பாவங்க இந்த புஷ் ஏந்தான் இப்படி கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆயிட்டாரோ. Root cause analysis-ல நாலு விசயமும் சொல்லுவாங்க. அந்த விசயத்தை விட அதுக்கான எதிர்வினையை பார்த்தால் சிரிப்பாத்தான் வருது. முன்னாடி இந்தியாவின் அமெரிக்க தூதர் சொன்ன 'headless chickens' என்ற விமர்சனம் பார்லிமெண்ட் வரை பேசப்பட்டது மாதிரிதான் இதுவும் இருக்கு.

அப்புறம்... அப்புறம்... அந்த 3-ம் டிஸ்கி என்னமோ சரியா தெரியலையே. சூடான இடுகைகள்ல வரனும்னா 'தலைப்புல' வைக்கனும் மேட்டர. உங்க ரெகுலர் வாசகர்கள்லாம் அப்படியே தாண்டி போயிடுவாங்க. டிஸ்கியில போய் "புத்தர்" சமாச்சாரம் எல்லாம் சொல்லிகிட்டு. ரசமா இல்லையே :-( (சாம்பார் மாதிரி இருக்கான்னு காமெடி பண்ணபிடாது)

said...

//இதை எல்லாம் போடலைன்னா நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு//

சூப்பரு....:)
கே.ஆர்.எஸ் சரித்திர சான்று கேட்க மாட்டாரு...தரவுதான் கேட்டு தாவு தீர்க்க வைப்பாரு.

said...

அப்பாடியோ, ஒரு மாதிரி நான் என் கடமையை செய்துட்டேன்.

said...

இன்னுமா தபால் ஆபீஸ்கள் இருக்கு?

said...

//இப்போ எழுத்து சின்னதா ஆகிக் கூட அதிகமா ஸ்க்ரோல் பண்ண வேண்டியதா இருக்கு! போகப் போக பழகிடும்ன்னு நினைக்கிறேன். //

வயசாயிடுச்சு இல்லை? கண்ணாடியை மாத்துங்க, போடலைன்னாப் போடுங்க!

அது எப்படி நீங்க மட்டும் இத்தனை பின்னூட்டக் கயமையாளரா, சீச்சீ, பின்னூட்டக் கெட்டிக்காரரா இருக்கீங்க?
அதுவும் மதுரையம்பதிக்கு மொத்தக் குத்தகையோ? :P

said...

// கூகிள் ரீடரில் பின்னூட்டங்கள் படிக்க முடியாதது ஒரு குறை //

தாராளமா படிக்கலாம்..

http://elavasam.blogspot.com/feeds/post/default - இது பதிவுக்கு
http://elavasam.blogspot.com/feeds/comments/default - இது பின்னூட்டத்துக்கு

என்ன ஒன்னு, எல்லா பின்னூட்டமும் ஒரே feedல இருக்கும்கிறதால எந்த பதிவுக்கு எந்த பின்னூட்டம்னு தெரியாம குத்து மதிப்பா படிச்சிக்க வேண்டியதுதான்...

ஒரு உதாரணத்துக்குத்தான் உங்க பதிவோட feeds.. தெரியாத்தனமா உங்க பின்னூட்ட feedஅ ரீடர்ல கொடுத்தா ரீடர் நொந்து நூடுல்ஸாயிடாது???

said...

ஒரிஜினல் பதிவுக்கு 9 பின்னூட்டம் அதை கலாய்க்கற பதிவுக்கு 19 பின்னூட்டமா இது நியாயமா அப்ப்டின்னு கேட்டு நான் ஒண்ணு போட்டா அது 21 ஆயிடும். என்னடா 19 + 1 = 20 தானேன்னு கப்பிதனமா யோசிக்ககூட்டாது பின்னூட்டத்துக்கு ஒரு பின்னூட்டம்னு நம்ம கொத்ஸு (டமில் தெரியாத திரவியங்களுக்கு - கொத்சு என்று படிக்கவும்) போடமாட்டாரா.

என்னமோ நல்லா இருங்கடே

சரவணன்

said...

இன்னிக்கு என் செலவில பொங்கல் வைச்சு 20 கமெண்டு தேத்திட்டீரு.. அதென்னய்யா ராசி உமக்கு, எனக்கு 14, உமக்கு 20?

சரி..

1. த ம தாவுக்கெல்லாம் பதில் சொல்றது இப்போதைய நாகரீகம் இல்லை.. என் பதிவைப் படித்துப் புரிந்துகொள்ள ஒரு தகுதி வேண்டும்..

2. எனக்குக் கடிதம் எழுதிய கொத்தனார், அதைப் பொதுவில் வைத்தது மனித உரிமை மீறல். அவர் கைது செய்யப்பட வேண்டும்.

3. பிழை இருந்தா என்னங்ணா, எவ்ளோ இருக்கோ அதுக்கேத்தாப்பல குறைச்சுகிட்டு பின்னூட்டம் போடறது.. மத்தபடி மாப்பு ஐயா மாப்பு..

இந்த 3 பதில்ல எது பிடிச்சிருக்கோ அதை வச்சுக்கங்க..

said...

//மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்//

இந்த கூட்டம் எங்கே இருக்குன்னு சொன்னீங்கன்னா - நான் அவங்களை contact பண்றதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்....:-))))

said...

ஏதேது, மனுஷன் நிம்மதியா கமெண்ட் கூட போடவிட மாட்டாங்க போல...

ஒருத்தரு வந்து காது-மூக்கு எல்லாத்து வழியாவும் புகை விட்டுட்டு போறாரு...இன்னுமொரு அம்மா குத்தகைக்கு ஆள் தேடுறாங்க....

அண்ணா, கொத்ஸண்ணா, என்ன நடக்கு இங்க?

said...

என்னங்க என்னோட போன பின்னூட்டத்தை நிறுத்திட்டீங்க, அதுல எதுவும் நிறுத்துற அளவுக்கு இல்லீங்கண்ணா..

சரவணன்

said...

டேங்க்ஸு என்னோட பின்னூட்டத்த ரிலீஸ் செஞசதுக்கு அப்படியே ஒரு இலவச விளம்பரம் போட்டுகரனே ( கொஞ்சம் இடம் கொடுக்ககூடாதே )

மாத்தி மாத்தி ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சு கலாய்ச்சு விளையாடி ரொம்ப களைப்பா இருப்பீங்க உலகின் ஆக சிறந்த ரீசார்ஜ் பத்தி கைப்புள்ள இப்பதான் போட்டுருக்காரு படிச்சுபாருங்க

http://kaipullai.blogspot.com/2008/05/blog-post_08.html

நன்றி கொத்தனார் அவர்களே

சரவணன்

said...

:)))

என்ன கொடுமை கொத்ஸ் இது..ஒரு கடுதாசி எழுதனும்னா கூட 1008 டிஸ்கி போட வேண்டியிருக்கு :)))

said...

// அசந்து தூங்கினால் ஆள் காலி எனச் சொல்லும் வலை உலகில்,//


:)

theivame enkeeyoo pooitinga...

said...

இதுக்கு எதிர் வினை பதிவு எதுவும் வருமா??? :)

said...

ஆமாம் A + B'கிறதுலே நீங்க A'யா? இல்ல B'யா? :-)

said...

---"வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. "---

:))

---கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள்---

:)))

said...

கொத்தண்ணா, பெனாத்தலார அங்கேயே இருக்கச்சொல்லுங்க. இன்னிக்கு நம்ம பசங்க கெலிச்சுட்டாங்க! ;-))

//இன்னமுமா மக்கள் இந்த மாதிரி ஏமாற்று திட்டங்களுக்கு ஏமாந்து போய் காசை விட்டுக்கிட்டு இருக்காங்க?//

ஒண்ணும் வேணாம். 8 வருசம் முன்ன வந்த பத்திரிகையெல்லாம் பாத்து அப்ப எப்படி ஏமாத்தினாங்கன்னு பாத்து அதே ஆட்டத்த திருப்பி ஆடலாம்! பாதி பணம் கட்டினா போதும் 30 நாள்ல கார் தரேன்ன்னு ஆரம்பிங்க. பிச்சுகிட்டு போகும்!

said...

//ambi said...
//மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். //

ரீப்பீட்டேய்ய்ய்ய் மட்டுமே போடற கூட்டத்தை விட்டுடீங்களே அண்ணாச்சி! :)))//

அம்பியா இது... :((

பதிவ மட்டும் படிக்காம மொக்கையா பின்னூட்டம் போட்டிருந்தா அவங்களுக்கு மரியாத கொடுத்து அத்தனை பின்னூட்டத்தையும் படிச்சு அதுல நம்ம மனசுக்கு புடிச்ச ஒரு கமெண்ட காப்பி & பேஸ்ட் பண்ணி அதுக்கப்புறம் அதுக்கு சுழி, அடியில ரெண்டு டபுள் ஸ்லேஷ் போட்டு அதுக்கு கீழே எண்டர ரெண்டு தபா பிரெஸ் செஞ்சு ரிப்ப்பீட்டேய்ய்ய்ன்னு சத்தமா என்னிக்காச்சும் போட்டிருக்கீங்களா...

நீங்க போட்டதில்லைன்னா போட்டுட்டு வந்து சொல்லுங்க.... அப்ப தெரியும்... :)

இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்..

இங்க குத்துறதுக்கும் ரிப்பீட்டேதான். தட்டணும்னாலும் ரிப்பீட்டேதான்...

இப்படிக்கு...

ரிப்பீட்டே கூட்டத்தில் ஒருவனான

சென்ஷி

(டிஸ்கி: என்ன கொடுமடா இது. பின்னூட்டத்துக்கெல்லாம டிஸ்கி கொடுக்கணும்.

இப்படி கொத்ஸோட எல்லா பின்னூட்டத்தையும் பொறுமையா படிச்சதாலதான் உங்க ரிப்பீட்டே மேட்டருக்கு பதில் சொல்ல முடியுது. :))

இதெல்லாம் ஆகற வேலையா)

said...

//ச்சின்னப் பையன் said...
//மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்//

இந்த கூட்டம் எங்கே இருக்குன்னு சொன்னீங்கன்னா - நான் அவங்களை contact பண்றதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்....:-))))//


ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீப்ப்பீட்டேஏஏஏஏஏஏஏ :))))

said...

பதிவுஜாக்கிங் அப்படிங்கிறது இதுதானா? இது நல்ல ஐடியாவா இருக்கே...

நாணும் ஆடு கொடுத்துக்கிரேண்!

படிவு போட்டு பள நாலாச்சுண்ணாலும் இண்ரே அளைகடளெணந் திரன்டு வாறீர்!

said...

உள்ளேன் ஐயா.

said...

//மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். //

!?!?!?!?!?!?!

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

said...

//நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்//

ஹிஹி
அசின் பாடல் காட்சிகள் (புடவை கட்டி ரவிக்கை போடாத அசின்) இன்னும் நாலு எக்ஸ்ட்ரா போட்டீங்கனா...நோ தரவு ஆஸ்கிங்? ஓக்கேவா கொத்ஸ் :-)

said...

//இராமநாதன் said...
பதிவுஜாக்கிங் அப்படிங்கிறது இதுதானா? இது நல்ல ஐடியாவா இருக்கே...//

தல
இது பதிவு ஹைஜாக்கிங் இல்ல!
பதிவு-கள் ஹைஜா-க்கிங்!
ஒன்னா ரெண்டா எத்தினி பதிவு ஹைஜாக் பண்ணி இருக்காரு பாருங்க! :-)

said...

//சென்ஷி said...
//ambi said...
//மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். //

ரீப்பீட்டேய்ய்ய்ய் மட்டுமே போடற கூட்டத்தை விட்டுடீங்களே அண்ணாச்சி! :)))//

அம்பியா இது... :((

பதிவ மட்டும் படிக்காம மொக்கையா பின்னூட்டம் போட்டிருந்தா அவங்களுக்கு மரியாத கொடுத்து அத்தனை பின்னூட்டத்தையும் படிச்சு அதுல நம்ம மனசுக்கு புடிச்ச ஒரு கமெண்ட காப்பி & பேஸ்ட் பண்ணி அதுக்கப்புறம் அதுக்கு சுழி, அடியில ரெண்டு டபுள் ஸ்லேஷ் போட்டு அதுக்கு கீழே எண்டர ரெண்டு தபா பிரெஸ் செஞ்சு ரிப்ப்பீட்டேய்ய்ய்ன்னு சத்தமா என்னிக்காச்சும் போட்டிருக்கீங்களா...

நீங்க போட்டதில்லைன்னா போட்டுட்டு வந்து சொல்லுங்க.... அப்ப தெரியும்... :)
////

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!


சென்ஷி கலக்கிட்டீங்க :)))

said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நம்ம கே ஆர் எஸ் சரித்திர சான்று எல்லாம் கேட்டு கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள் அப்படின்னு பதிவு போட்டாலும் போடுவாரு. அதான்//

ஹிஹி
அசின் பாடல் காட்சிகள் (புடவை கட்டி ரவிக்கை போடாத அசின்) இன்னும் நாலு எக்ஸ்ட்ரா போட்டீங்கனா...நோ தரவு ஆஸ்கிங்? ஓக்கேவா கொத்ஸ் :-)
//

ஜெனிலியா அல்லது ஹாசிணி படம் கூட போடலாம்:)))

said...

பதிவுல இருக்குற கடுதாசி மேட்டரை விட பின்னூட்டத்தில் பல மேட்டர் தேரும் போல இருக்கே!! ;))

said...

\\எனக்குத் தெரிஞ்சு எழுத்துப் பிழை இல்லாம எழுதும் பொழுதுதான் இந்த அழுத்தம் அதிகம் வருதுன்னு நினைக்கிறேன். "வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. " அப்படின்னு எழுதறவங்க பதிவைப் பாருங்க, மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். அதனால அப்படி ஒரு பதிவு வேணா போட்டுப் பாருங்களேன்\\

இங்கே தான் கொத்தனாரின் அ.கு. பொய்கள் டிஸ்கோ டான்ஸ் ஆடுது!!

அல்ட்டிமேட்:-)))))

said...

ஆக அடுத்த தேர்தலில் பெனாத்தலாரின் ஆதரவு விசயகாந்துக்கு நிச்சயம் வேணும்!

இப்படிக்கு
விசயகாந்து மன்றம்
துபை

said...

//பாவி மனுஷா...எப்படிய்யா, இப்படி ஒரே பதிவுல எல்லா வகைக் குத்துக்களையும் வக்கிறீங்க?....:)//

நம்ம பதிவில் குத்தா? என்னங்க சொல்லறீங்க? அதுவும் எல்லா வகை குத்தா? முகமது அலி போடும் குத்தா? இல்லை நம்ம மாளவிகாக்கா ஆடும் குத்தா? தேர்தல் நேரத்தில் நாம குத்தும் குத்தா, மாமன்காரன் மடியில் அமர்ந்து காது குத்தா?

சொல்லுங்கய்யா சொல்லுங்க.

//கலக்கல்....வாய்விட்டு சிரித்தேன்//

அப்போ நோய் விட்டுப் போயிருக்கும். டாக்டர் பில் அனுப்பறேன். செட்டில் பண்ணிடுங்கோ!!

said...

//செய்யலாமே!, நீங்க நைஜீரியாலருந்து வாங்கிக்கங்க...நான் உங்க கிட்ட வாங்கிக்கறேன்...:) //

ஐயா சாமி, ஏற்கனவே நானும் பெனாத்தலும் சேர்ந்து என்னடா பிஸினஸ் செய்யலாமுன்னு யோசிக்கறோம். நீங்க வேற!!

//(உங்க ஊர்/பேர்/அட்ரஸ் எல்லாம் நல்லா தெரியும்) :)//
அடுத்த முறை ஆட்டோ வரும் பொழுது யாரை சந்தேகப்பட வேண்டும் என்று நன்றாகவே தெரிறது.

said...

//கலக்கல் கொத்ஸ்.. அடங்கமாட்டீரு நீரு.. பொறுத்தது போதும் பெனாத்தலாரே பொங்கி எழும்.... அப்ப தான் இந்த மாதிரி நாலு கடுதாசி கிடைக்கும் நமக்கும் :))..//

வாய்யா சந்தோசு, எனக்கும் கலக்கல் அவருக்கும் பொங்கி எழு. நல்லாச் செய்யறீங்கப்பா நாரதர் வேலை!! நல்லா இருடே!

said...

//அப்படியா?, இளா இதை நீங்க ஒரு பதிவா போடுங்களேன்...நானும் இந்த குறையால் மன-அழுத்தத்தில் இருக்கேன் :)//

தல நான் குடுத்த சுட்டியில் போய் பாருங்க. அங்க அவர் பதிவாப் போடறேன்னு குடுத்த வாக்கு இருக்கு. அதே இடத்தில்தான் சொல்லிக் குடுக்கப் போறாரு போல. ஒரு கண் வெச்சுக்குங்க.

//பின்னூடமும் ரீடர் மூலமா போட முடிந்தால் அதையும் சொல்லிக்குடுங்க.//

இம்புட்டுக் கடமை உணர்ச்சியா?!! நீர்தான்யா நல்லவன், நல்லவனுக்கு நல்லவன்!! :))

said...

//அந்தகாலத்து டிராமாக்கள்ல நகைச்சுவை, சிரித்தார்கள் அப்படிங்கறதை சொல்லும் போது, நாவலோ! நாவல்...அப்படின்னு எழுதியிருப்பாங்க...அந்த மாதிரி நக்கலோ, நக்கல்.........:)//

சமீபத்தில் எனச் சொல்லாமல் அந்த காலத்தில் எனச் சொன்னதுக்கு கண்டனங்கள்.

அது என்ன நாவலோ நாவல்? அப்போ ஒரு நாவலில் சிரிப்பு சீன் வந்தா ட்ராமாவே ட்ராமான்னு எழுதுவாங்களா?

said...

//ரீப்பீட்டேய்ய்ய்ய் மட்டுமே போடற கூட்டத்தை விட்டுடீங்களே அண்ணாச்சி! :)))//

அம்பி, அதில் எத்தனை பேர் இங்க குடியிருக்காங்க. அவங்களை எல்லாம் பகைச்சுக்க முடியுமா? இதெல்லாம் ஓப்பனா சொல்ல வைக்கறீரே!!

//என்னயா இப்படி குபீர்னு சிரிக்க வெச்சுட்டீர். :)//

அது எப்படிய்யா குபீர் குபீர்ன்னு சிரிக்கறீரு? பக்கத்தில் இருக்கிறவன் எல்லாம் ஒரு மாதிரி பார்க்க மாட்டான்?

//நம்மூர் பேச்சு எல்லாம் வெளிய வருது போற. தமிழ் மணத்துல இருந்து தூக்கிட போறாங்க . :p//

யோவ். அவரு என்னமோ naked lies அப்படின்னு எழுதினாரு. நாமதான் முடிஞ்ச அளவு பதிவில் ஆங்கிலம் கலக்காம எழுதப் பார்ப்போமே. அதனால அதைத் தமிழில் எழுதினேன். இதுக்கு எல்லாம் தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடுவாங்களா?

said...

50, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இலவசக்கொத்தனாரே?

ஏறத்தாழ பாக்கும்போது இன்னும் பதில் சொல்லாதது எல்லாம் சேத்து சுலபமா 75-80 ஆக்கிடுவீங்க.. ஒரு தொழில்முறையாவேதான் செய்யாறீங்க போல!

said...

அவன் அவன் ஆணிபுடுங்கிட்டு வீட்டுக்கு போய் ஒரு நாள் தூங்கி எழுந்தே வந்தாச்சு, ஒரிஜினல் பெனாத்தலார் பதிவு காணோம் தமிழ்மண முக்ப்புல.. ஆன கொத்சு பதிவு இன்னும் ச்ச்சூடான இடுகைகள்ள இருக்கு என்னய்யா நடக்குது. அவியலை விட இந்த பொறாமை குவியலுக்கு மதிப்பா அய்யகோ என்ன கொடுமை

பினாத்தலார் இதற்கு எதிர்ப்பதிவு போட்டாகவேண்டும் அதற்கு சிங்கப்பூர் அனானிகள் ஆதரவு உண்டு.

சரவணன்

said...

//கடிதம் எழுதுவது ஒரு கலையாம். அக்கலையிலும் சிக்கலை உண்டாக்கும் நக்கலை உம்முடைய கடிதத்திலே கண்டேன். கடிதம் நக்கல் செய்த கொத்ஸ் வாழ்க வாழ்க என்று மனமார வாழ்த்துகிறேன்.//

தக்கலை தந்த தலைவா (நீர் தக்கலையில் பிறக்கலைனா எனக்கென்ன)

உம் விக்கலைப் பொருட்படுத்தாது
தென்கலை வடகலை பிரிவுகளை மறந்து இன்னும் இந்த நரகலை, எச்சிக்கலை, உனக்கு ஆப்பு வைக்கலை என்றெல்லாம் எழுத தோன்றினாலும் இது போதும் என்பதால்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜிரா!

said...

//ஆமாம்! A+B தானே இட்லிவடை....//

A+B = இட்லிவடையா? அது சர்வேசனுக்கான சூத்திரமா இல்லை சொன்னாங்க. ரொம்பக் குழப்பறீங்களே!

A+B+C+D+E+F+G+H+I+J + இட்லிவடைன்னு இல்ல சொன்னாங்க?

அப்புறம் A+B+C அப்படின்னு கூட ஒரு சூத்திரம் சொன்னாங்களே?!

//நீங்க மட்டும் பதிவு போட்டா அது இங்க தான் பப்ளிஷ் பண்ணனும்...கரெக்டா தான்ன் பண்ணியிருக்கீங்க. :)//

ஆமாம் நான் பதிவு போட்டா இங்கதான் போடணும். அதில் என்ன குழப்பம்?

said...

//நல்லாத்தான் எசப்பாட்டு பாடியிருக்கீங்க.//

எசப்பாட்டு பாடுனது அவரு, நாம பாடுனது எதிர்ப்பாட்டுல்லா!

// அங்க இப்பதான் போய் உங்க ரெண்டு பேரோட ராசியை பத்தி பேசிட்டு வரேன்.. இங்க நீங்களும் அதையே போட்டிருக்கீங்க.//

ரெண்டு பேர் ராசின்னு எல்லாம் கட்டம் கட்டாதீங்க. இன்னிக்கு அவரைக் கழட்டி விட்ட பின் நம்ம ஆளுங்க சும்மா சூப்பரா ஆடினாங்க இல்ல!

//பாவங்க இந்த புஷ் ஏந்தான் இப்படி கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆயிட்டாரோ. Root cause analysis-ல நாலு விசயமும் சொல்லுவாங்க. அந்த விசயத்தை விட அதுக்கான எதிர்வினையை பார்த்தால் சிரிப்பாத்தான் வருது. முன்னாடி இந்தியாவின் அமெரிக்க தூதர் சொன்ன 'headless chickens' என்ற விமர்சனம் பார்லிமெண்ட் வரை பேசப்பட்டது மாதிரிதான் இதுவும் இருக்கு.//

இப்படி எல்லாம் சீரியஸா, பெருசு பெருசா எழுதினா எனக்கு பதில் சொல்லத் தெரியாது. ஆமாம். சொல்லிட்டேன்.

//அப்புறம்... அப்புறம்... அந்த 3-ம் டிஸ்கி என்னமோ சரியா தெரியலையே. சூடான இடுகைகள்ல வரனும்னா 'தலைப்புல' வைக்கனும் மேட்டர. உங்க ரெகுலர் வாசகர்கள்லாம் அப்படியே தாண்டி போயிடுவாங்க. டிஸ்கியில போய் "புத்தர்" சமாச்சாரம் எல்லாம் சொல்லிகிட்டு. ரசமா இல்லையே :-( (சாம்பார் மாதிரி இருக்கான்னு காமெடி பண்ணபிடாது)//

அம்பிக்குச் சொன்னதைப் படியும். அப்படியே அம்பி சொன்னதையும் படியும். அதெல்லாம் எங்க ஊரு பாசை. கெட்ட வார்த்தை எல்லாம் இல்லை.

said...

//சூப்பரு....:)
கே.ஆர்.எஸ் சரித்திர சான்று கேட்க மாட்டாரு...தரவுதான் கேட்டு தாவு தீர்க்க வைப்பாரு.//

தரவு கேட்டாப் பரவாயில்லை நிறையா சமயம் வரவு இல்ல கேட்கறாரு! :))

said...

ஏங்க ஸ்ரீதர் உங்கள சீரியஸா கேக்கரேன் இந்த பதிவுக்கு இவ்வளவு சீரியஸ் & பெரிய பின்னூட்டமா??:)

said...

//அப்பாடியோ, ஒரு மாதிரி நான் என் கடமையை செய்துட்டேன்//

மதுரயம்பதி. எவனோ பீட்டர் ஒருத்தன் சொன்னா மாதிரி miles to go before i sleep ன்னு இருக்க வேண்டாமா? 10 போட்டா 25க்கு எய்ம் செய்யணும். 25 வந்துதா அடுத்து 50 மேல கண் வைக்கணும். சும்மா மேல மேல மேல போய்க்கிட்டே இருக்கணும். இப்படி என்னமோ கடமை முடிஞ்சதுன்னு உட்கார்ந்தா எப்படி?

said...

//இன்னுமா தபால் ஆபீஸ்கள் இருக்கு?//

ரீச்சர் எங்க எல்லாம் டவுசர் கிழியுதோ, சாரி கிழிஞ்ச டவுசர் இருக்கோ அங்க எல்லாம் தபாலாபீஸ் இருக்கும். இது இயற்கை நியதி. இது சின்ன வயசில் பள்ளிக்கூடத்தில் மட்டும் இல்லை இன்றைக்கு வலையுலகில் கூட சாஸ்வதம்.

said...

//வயசாயிடுச்சு இல்லை? கண்ணாடியை மாத்துங்க, போடலைன்னாப் போடுங்க!
//

வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் வேற வேற பவரா, மாத்திப் போட்ட சரியாத் தெரியலை. தலைவலிக்குது. எனி அதர் ஆப்ஷன்?

//அது எப்படி நீங்க மட்டும் இத்தனை பின்னூட்டக் கயமையாளரா, சீச்சீ, பின்னூட்டக் கெட்டிக்காரரா இருக்கீங்க?//

அது என்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் புத்தி (இதுவும் பொதுப் புத்தியும் ஒண்ணா?) இல்லை. அதையும் தாண்டிப் புனிதமானது.

//அதுவும் மதுரையம்பதிக்கு மொத்தக் குத்தகையோ? :P//

அவரை விட நல்லா பெர்பார்ம் செய்யறீங்களா? குத்தகையை உங்க பேருக்கு மாத்தித் தரேன்.
(மதுரையம்பதி, இதெல்லாம் சும்மா லுலுலுவாயி, நீர்தான் இந்தப் பதிவுக்கு குத்தகைதாரர்!)

said...

//என்ன ஒன்னு, எல்லா பின்னூட்டமும் ஒரே feedல இருக்கும்கிறதால எந்த பதிவுக்கு எந்த பின்னூட்டம்னு தெரியாம குத்து மதிப்பா படிச்சிக்க வேண்டியதுதான்...//

ஆகா இதுதான் மேட்டரா, இதைச் சொல்லத்தான் இந்த விவசாயி இம்புட்டு பெரிய பாத்தி கட்டறாரா? இருக்கட்டும் அவரு என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம்.

//ஒரு உதாரணத்துக்குத்தான் உங்க பதிவோட feeds.. தெரியாத்தனமா உங்க பின்னூட்ட feedஅ ரீடர்ல கொடுத்தா ரீடர் நொந்து நூடுல்ஸாயிடாது???//

ஆ!! பதிவுலதான் உள்குத்து இருக்கிறதா பேசிக்கிறாங்க. இங்க பாருடா, ஒரு எடுத்துக்காட்டில் ஏரோப்ளேனே வெச்சு இருக்காரு!!

அதெல்லாம் இருக்கட்டும். நல்ல விசயம்தானே சொல்லி இருக்கீங்க. அதுக்கு எதுக்கு எங்க தல பெயருக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கணும்? சும்மா உங்க பெயரிலேயே வந்து அட்டகாசம் செய்யலாமுல்ல....

said...

//ஒரிஜினல் பதிவுக்கு 9 பின்னூட்டம் அதை கலாய்க்கற பதிவுக்கு 19 பின்னூட்டமா இது நியாயமா அப்ப்டின்னு கேட்டு நான் ஒண்ணு போட்டா அது 21 ஆயிடும்.//

ஆமாம். ஆயிடும். இப்போ கரெண்ட் நம்பர்ஸ் பார்த்தீங்க இல்ல. இப்போ என்ன சொல்லறீங்க?

//என்னடா 19 + 1 = 20 தானேன்னு கப்பிதனமா யோசிக்ககூட்டாது பின்னூட்டத்துக்கு ஒரு பின்னூட்டம்னு நம்ம கொத்ஸு (டமில் தெரியாத திரவியங்களுக்கு - கொத்சு என்று படிக்கவும்) போடமாட்டாரா.//

சரியாச் சொன்னீங்க தல.

said...

//இன்னிக்கு என் செலவில பொங்கல் வைச்சு 20 கமெண்டு தேத்திட்டீரு.. அதென்னய்யா ராசி உமக்கு, எனக்கு 14, உமக்கு 20?//

அதுக்குத்தானே நன்றி எல்லாம் சொல்லி இருக்கேன். :))

//இந்த 3 பதில்ல எது பிடிச்சிருக்கோ அதை வச்சுக்கங்க..//

மூணுமே நல்லா இருக்கு. ஆனா ஒவ்வொண்ணுத்துக்கும் ஒரு பதிவா போட்டா இன்னும் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

said...

//இந்த கூட்டம் எங்கே இருக்குன்னு சொன்னீங்கன்னா - நான் அவங்களை contact பண்றதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்....:-))))//

அதெல்லாம் இப்படி பப்ளிக்காச் சொன்னா என்னை காண்டாக்ட் பண்ண த்ரீவீலர் வரும் என்பதால் ச்சின்னப்பையன் கேட்ட பெரிய மனுசங்க கேள்வி சாய்ஸில் விடப்படுகிறது.

said...

//ஏதேது, மனுஷன் நிம்மதியா கமெண்ட் கூட போடவிட மாட்டாங்க போல...//
அதானே!!

//ஒருத்தரு வந்து காது-மூக்கு எல்லாத்து வழியாவும் புகை விட்டுட்டு போறாரு...இன்னுமொரு அம்மா குத்தகைக்கு ஆள் தேடுறாங்க....//

அவங்க எல்லாம் இன்னிக்கு மட்டும் இல்லை. என்னிக்குமே இப்படிதான்.

//அண்ணா, கொத்ஸண்ணா, என்ன நடக்கு இங்க?//

இதுதாங்க அரசியல். இதை எல்லாம் சமாளிச்சு இன்னும் 10 பின்னூட்டம் போடுங்க பார்க்கலாம்.

said...

நாலு அப்டேட் போடணும், நேரமில்லைன்னு தவிச்சுகிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா, அவியல எடுத்து, திடீர் கூட்டு பண்ணியிருக்கீங்க.

நல்லாயிருங்க ஓய் ..

ஃப்ரீயா இருக்குறவுங்க, ஆளுக்கு ஒண்ணு ரெண்டு அவர் கடனாக் குடுக்கலாமில்ல? :)

said...

//என்னங்க என்னோட போன பின்னூட்டத்தை நிறுத்திட்டீங்க, அதுல எதுவும் நிறுத்துற அளவுக்கு இல்லீங்கண்ணா..

சரவணன்//

சரவணன் அண்ணா, அதை நீங்க போட்ட நேரம் பார்த்தீங்களாண்ணா! காலை 3:20 அண்ணா, அந்த நேரத்திலும் கண் முழிச்சுட்டு அடுத்த நாள் ஆபீஸ் போனா அப்புறம் அங்க என்னண்ணா செய்யறது. அதான் கொஞ்சம் கண் அயர்ந்துட்டேன். காலையில் எல்லாத்தையும் கழிச்சுக் கட்டியாச்சே, சாரி சாரி, ரிலீஸ் பண்ணியாச்சே!!

said...

//டேங்க்ஸு என்னோட பின்னூட்டத்த ரிலீஸ் செஞசதுக்கு அப்படியே ஒரு இலவச விளம்பரம் போட்டுகரனே ( கொஞ்சம் இடம் கொடுக்ககூடாதே )//

இதுக்கெல்லாம் கண்டிப்பா இடம் உண்டு. நடாத்துங்க.

//மாத்தி மாத்தி ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சு கலாய்ச்சு விளையாடி ரொம்ப களைப்பா இருப்பீங்க உலகின் ஆக சிறந்த ரீசார்ஜ் பத்தி கைப்புள்ள இப்பதான் போட்டுருக்காரு படிச்சுபாருங்க//

அங்க போயி நானும் போஸ்ட்ர் ஒட்டிட்டேன்ல்லா!

said...

//என்ன கொடுமை கொத்ஸ் இது..ஒரு கடுதாசி எழுதனும்னா கூட 1008 டிஸ்கி போட வேண்டியிருக்கு :)))//

அதை ஏன் கேட்கறீங்க, பதிவு விடுங்க. இப்போ எல்லாம் டிஸ்கிக்கே டிஸ்கி போட வேண்டியதா இருக்கு. என்னாத்த சொல்ல!

said...

//
theivame enkeeyoo pooitinga...//

இது இது இது!! இதைத்தான் சொல்லறேன். இம்புட்டு நாள் சும்மா இருந்துட்டு இப்போ வந்து நல்லா இருக்கும் போதே எங்கயோப் போயிட்டீங்க, ஐயோப் பாவம் சின்ன வயசு, என்ன பண்ண அதெதுக்கு வேளை வந்தா நடக்குதுன்னு எழுதினா நான் படிப்பேன்? :))

said...

//இதுக்கு எதிர் வினை பதிவு எதுவும் வருமா??? :)//

வரலாம். வராமலும் போகலாம். A போட்டாச்சு, B போட்டாசு அதனால அடுத்தது 'C' போட வேண்டாமா?

said...

//ஆமாம் A + B'கிறதுலே நீங்க A'யா? இல்ல B'யா? :-)//

ஏன் முதலில் AB
அடுத்தது A-B-
அப்புறன் AMBI
என என் பார்ப்பனீய ஏகாதிபத்திய பூனைக்குட்டியை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டு வரும் உங்களுக்கு என் கண்டனங்கள்.

said...

// அதெல்லாம் இருக்கட்டும். நல்ல விசயம்தானே சொல்லி இருக்கீங்க. அதுக்கு எதுக்கு எங்க தல பெயருக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கணும்? சும்மா உங்க பெயரிலேயே வந்து அட்டகாசம் செய்யலாமுல்ல.... //

அலாவ்... அது நாந்தாம்பா... ப்ளாகர்ல லாகின் பண்ண சோம்பேறிதனப்பட்டு அப்பப்ப இப்பிடி பண்றதுதான்... ஒரிஜினல் நான்னா http://mugamoodicomments.blogspot.com/ல ஒரு பிரதி இருக்கும்.. டூப்ளிகேட் நான்னா இருக்காது...

**

விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சி, பின்னூட்ட எண்ணிக்கைய உயர்த்திய மாதிரியும் ஆச்சி.. நம்ம ரெண்டு பேருக்குமே இது ஒரு வின் - வின் சிச்சுவேசன் இல்ல???

said...

//ஏன் முதலில் AB
அடுத்தது A-B-
அப்புறன் AMBI
//

என்ன ஏன்யா வம்புக்கு இழுக்கற? :))

said...

//இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்..
//

வாங்கண்ணே சென்ஷி அண்ணே!

இதுக்கு பதிலை விரிவா ஒரு பதிவே போடறேன்.
:))

said...

//Boston Bala said...

---"வளைப்பதிவுப் போட்டு மண அலுத்தம் குரைப்பதற்க்கான அர்புதமாண நேறம் இது.. "---

:))

---கொத்தனாரின் அம்மணக்குண்டி பொய்கள்---

:)))
//

ரெண்டு சிரிப்பான். இது நீங்கதான் பாபா. ஆனா இது தெரியாம, உங்க பெயரில் ஒரு போலி வந்து சில இடங்களில் வார்த்தைகள் எல்லாம் எழுதிடுடறான். பார்த்து. ஜாக்கிரதை!

said...

//கொத்தண்ணா, பெனாத்தலார அங்கேயே இருக்கச்சொல்லுங்க. இன்னிக்கு நம்ம பசங்க கெலிச்சுட்டாங்க! ;-))//

அதாம்பா. நானும் அதேதான் சொல்லிக்கிறேன். பெனாத்தலாரே, இப்போதைக்கு ராஜஸ்தான் / பஞ்சாப் அணியினருக்குத்தான் உங்க ஆதரவு தேவை!

//ஒண்ணும் வேணாம். 8 வருசம் முன்ன வந்த பத்திரிகையெல்லாம் பாத்து அப்ப எப்படி ஏமாத்தினாங்கன்னு பாத்து அதே ஆட்டத்த திருப்பி ஆடலாம்! பாதி பணம் கட்டினா போதும் 30 நாள்ல கார் தரேன்ன்னு ஆரம்பிங்க. பிச்சுகிட்டு போகும்!//

ஏன் 8 வருஷம்? 8 மாசம் முன்னாடி செஞ்சதையே கூட செய்யலாமுல்ல. அப்புறம் காரில் பாதியா? அப்போ ஆளுக்கு 50 ஆயிரம்தானே தருவாங்க.

said...

//அம்பியா இது... :((//

நல்லா கேளுப்பா சென்ஷி

//பதிவ மட்டும் படிக்காம மொக்கையா பின்னூட்டம் போட்டிருந்தா அவங்களுக்கு மரியாத கொடுத்து அத்தனை பின்னூட்டத்தையும் படிச்சு அதுல நம்ம மனசுக்கு புடிச்ச ஒரு கமெண்ட காப்பி & பேஸ்ட் பண்ணி அதுக்கப்புறம் அதுக்கு சுழி, அடியில ரெண்டு டபுள் ஸ்லேஷ் போட்டு அதுக்கு கீழே எண்டர ரெண்டு தபா பிரெஸ் செஞ்சு ரிப்ப்பீட்டேய்ய்ய்ன்னு சத்தமா என்னிக்காச்சும் போட்டிருக்கீங்களா...//

என்னா ரசனை, என்னா ரசனை!!

//இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்..

இங்க குத்துறதுக்கும் ரிப்பீட்டேதான். தட்டணும்னாலும் ரிப்பீட்டேதான்...//

சூப்பர் சூப்பர்!

said...

//(டிஸ்கி: என்ன கொடுமடா இது. பின்னூட்டத்துக்கெல்லாம டிஸ்கி கொடுக்கணும்.//

அடுத்த லெவல் டிஸ்கிக்கே டிஸ்கி போடறது!

//இப்படி கொத்ஸோட எல்லா பின்னூட்டத்தையும் பொறுமையா படிச்சதாலதான் உங்க ரிப்பீட்டே மேட்டருக்கு பதில் சொல்ல முடியுது. :))

இதெல்லாம் ஆகற வேலையா)//

இது கூட செய்யலைன்னா எப்படி? உங்களை எல்லாம் பதிவையா படிக்கச் சொல்லறேன்.

said...

//இந்த கூட்டம் எங்கே இருக்குன்னு சொன்னீங்கன்னா - நான் அவங்களை contact பண்றதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்....:-))))//


ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீப்ப்பீட்டேஏஏஏஏஏஏஏ :))))//

சின்னப்பையன், எங்க போகணுமுன்னு தெரிஞ்சு போச்சுல்ல!! :))

said...

//பதிவுஜாக்கிங் அப்படிங்கிறது இதுதானா? இது நல்ல ஐடியாவா இருக்கே...

நாணும் ஆடு கொடுத்துக்கிரேண்!
//

வாய்யா அங்க மொழ நீள பின்னூட்டம், இங்க ரெண்டே ரெண்டு வாரியா? உம்ம வெண்ணெய் சுண்ணாம்பு பிரிபரன்ஸ் நல்லா தெரியுது.

அப்புறம் இப்படி அரதப் பழசான பதிவுக்குப் போஸ்டர் ஒட்டிக்கிறது எல்லாம் ரொம்ப ரூ மச்சு....

said...

//குமரன் (Kumaran) said...

உள்ளேன் ஐயா.
//

அப்புறமா வந்து விலாவாரியான பின்னூட்டம் போடப் போறீங்க என எதிர்பார்க்கிறேன்.

said...

////மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். //

!?!?!?!?!?!?!//

என்ன கே ஆர் பி சார், எனி பிராப்பளம்? :))

said...

//ஹிஹி//

நல்லா வழியறீரு!!

//அசின் பாடல் காட்சிகள் (புடவை கட்டி ரவிக்கை போடாத அசின்) இன்னும் நாலு எக்ஸ்ட்ரா போட்டீங்கனா...நோ தரவு ஆஸ்கிங்? ஓக்கேவா கொத்ஸ் :-)//

என்னை மாதிரி சின்னப் பையன் கிட்ட உங்களை மாதிரி பெரியவரு பேசற பேச்சா இது!

said...

//தல
இது பதிவு ஹைஜாக்கிங் இல்ல!
பதிவு-கள் ஹைஜா-க்கிங்!
ஒன்னா ரெண்டா எத்தினி பதிவு ஹைஜாக் பண்ணி இருக்காரு பாருங்க! :-)//

நான் எதைய்யா ஹைஜாக் செஞ்சேன், கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கப்பா!!

said...

//ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!


சென்ஷி கலக்கிட்டீங்க :)))//

ஆயில்யன், ரிப்பீட்டேய்ய்ய்ய்!! :))

said...

//ஜெனிலியா அல்லது ஹாசிணி படம் கூட போடலாம்:)))//

என்னங்கய்யா லிஸ்ட் பெருசா ஆயிக்கிட்டே போகுது. சீக்கிரம் பைனலைஸ் பண்ணிடலாம். இல்லை அந்த அபிஅப்பா வந்து அந்த ரீவீ நடிகை பெயரைச் சொல்லிடப் போறாரு.

said...

//பதிவுல இருக்குற கடுதாசி மேட்டரை விட பின்னூட்டத்தில் பல மேட்டர் தேரும் போல இருக்கே!! ;))//

என்ன தேறுது கோபி? கொஞ்சம் விவரமா எடுத்து விடறது!

said...

//இங்கே தான் கொத்தனாரின் அ.கு. பொய்கள் டிஸ்கோ டான்ஸ் ஆடுது!!

அல்ட்டிமேட்:-)))))//

இனிசியலாப் நீர் போட்டாக்கூட அது கெட்ட வார்த்தைதான். ஆனா எங்க நெல்லை ஆட்களுக்கு மட்டும்தான் அது அலவுட். :)))

said...

//ஆக அடுத்த தேர்தலில் பெனாத்தலாரின் ஆதரவு விசயகாந்துக்கு நிச்சயம் வேணும்!

இப்படிக்கு
விசயகாந்து மன்றம்
துபை//

ஆஹா!!! ஜூப்பர்!!

கலக்கிட்டையா அபி அப்பா!

said...

//50, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இலவசக்கொத்தனாரே?//

ஆசையே அலை போலே. 50 அடிச்சா அடுத்து 100க்கு ஆசைப்படுவோம். அது இயற்கை நியதி.

//ஏறத்தாழ பாக்கும்போது இன்னும் பதில் சொல்லாதது எல்லாம் சேத்து சுலபமா 75-80 ஆக்கிடுவீங்க.. ஒரு தொழில்முறையாவேதான் செய்யாறீங்க போல!//

இப்படி எல்லாம் குறைச்சு சொல்லி உம்ம மன வருத்தத்தைப் போக்கிக்குங்க. பரவாயில்லை. ஆனா உண்மையில் இது 90ஆவது பின்னூட்டம். :))

said...

//அவன் அவன் ஆணிபுடுங்கிட்டு வீட்டுக்கு போய் ஒரு நாள் தூங்கி எழுந்தே வந்தாச்சு, ஒரிஜினல் பெனாத்தலார் பதிவு காணோம் தமிழ்மண முக்ப்புல.. ஆன கொத்சு பதிவு இன்னும் ச்ச்சூடான இடுகைகள்ள இருக்கு என்னய்யா நடக்குது. அவியலை விட இந்த பொறாமை குவியலுக்கு மதிப்பா அய்யகோ என்ன கொடுமை

பினாத்தலார் இதற்கு எதிர்ப்பதிவு போட்டாகவேண்டும் அதற்கு சிங்கப்பூர் அனானிகள் ஆதரவு உண்டு. //


நாரதரே, சாரி சாரி, சரவணன்,

நீங்களும் ரெண்டு நாளா முயற்சி பண்ணறீங்க, ஆனா சிண்டு முடியாம ரொம்பவே சிரமப்படறீங்க போல.

என்னதான் இருந்தாலும் நாங்க ஒரே கட்சி. அதனால உம்ம கொயபல்ஸ் வேலை பலிக்காது.

said...

//ஏங்க ஸ்ரீதர் உங்கள சீரியஸா கேக்கரேன் இந்த பதிவுக்கு இவ்வளவு சீரியஸ் & பெரிய பின்னூட்டமா??:)//

நல்லா கேளுங்க ராதாக்கா. இதுல என்னமோ மூஞ்சியை தூக்கி வெச்சுக்கிட்டு வேற போறாரு.

ஏங்க ராதா உங்களை சீரியஸா கேட்கறேன். வேற ஒண்ணுமேவா சொல்லத் தோணலை?

said...

//நாலு அப்டேட் போடணும், நேரமில்லைன்னு தவிச்சுகிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா, அவியல எடுத்து, திடீர் கூட்டு பண்ணியிருக்கீங்க.

நல்லாயிருங்க ஓய் ..//

அவியலை எடுத்துக் கூட்டு பண்ணலை. கூட்டு செஞ்ச அவியலை சுட்டு இருக்கேன். :))

//ஃப்ரீயா இருக்குறவுங்க, ஆளுக்கு ஒண்ணு ரெண்டு அவர் கடனாக் குடுக்கலாமில்ல? :)/

செய்யலாம்தான். ஆனா கடன் அன்பை முறிக்கும். அதனாலதான் செய்யலை. :))

said...

//அலாவ்... அது நாந்தாம்பா... ப்ளாகர்ல லாகின் பண்ண சோம்பேறிதனப்பட்டு அப்பப்ப இப்பிடி பண்றதுதான்... ஒரிஜினல் நான்னா http://mugamoodicomments.blogspot.com/ல ஒரு பிரதி இருக்கும்.. டூப்ளிகேட் நான்னா இருக்காது...//

தல நீங்களா வந்திருக்கிறது. இந்த மாதிரி உருப்படியா சொல்லும் பொழுதே நினைச்சேன் நீங்களாத்தான் இருக்குமுன்னு. நான் எலிக்குட்டி புலிக்குட்டின்னு பல குட்டிங்களைப் பார்த்தேன். எல்லாம் பெயில் ஆச்சா, அதான் டவுட்டு. இனிமே உங்க மெத்தேடுக்குப் போறேன்.

//விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சி, பின்னூட்ட எண்ணிக்கைய உயர்த்திய மாதிரியும் ஆச்சி.. நம்ம ரெண்டு பேருக்குமே இது ஒரு வின் - வின் சிச்சுவேசன் இல்ல???//

தல, இதெல்லாம் சொல்லித் தெரியணுமா? நீங்க வந்தாலே வின் வின் சிச்சுவேஷந்தானே!! :)))

said...

//என்ன ஏன்யா வம்புக்கு இழுக்கற? :))//

இழுத்தது யாரோ நாந்தானோ? தினம் ஒரு பதிவு நீதானோ..... :)))

said...

//வாங்கண்ணே சென்ஷி அண்ணே!

இதுக்கு பதிலை விரிவா ஒரு பதிவே போடறேன். :))//

அடுத்த தொடர் பதிவா? அம்பி, இதை ஒரு டேக் விளையாட்டாவே ஆக்கிடலாமா? :))

said...

//ஏங்க ராதா உங்களை சீரியஸா கேட்கறேன். வேற ஒண்ணுமேவா சொல்லத் தோணலை?//

இங்கேயாச்சும் பரவாயில்லை கொத்ஸு, அவங்க என் போஸ்டுல போட்டிருக்க கமெண்டை பாருங்க!

said...

//அலாவ்... அது நாந்தாம்பா... ப்ளாகர்ல லாகின் பண்ண சோம்பேறிதனப்பட்டு அப்பப்ப இப்பிடி பண்றதுதான்//

அதுல தப்பில்ல தல, கமெண்டுன்னா நாலு நக்கல், ரெண்டு உள்குத்து இல்லாம உங்க பின்னூட்டத்தை பாத்ததே இல்லை - இந்த கமெண்டு நேரா, "அண்ணாச்சி, ரெண்டு கிலோ சர்க்கரை கொடுங்க" ன்றா மாதிரி மெடீரியலிஸ்டிக்கா வேற இருக்கா, முகமூடிக்கு யாராச்சும் முகமூடி போட்டாங்காளோன்னு கன்பூஸ் ஆயிட்டோம்.

said...

//என்னதான் இருந்தாலும் நாங்க ஒரே கட்சி. அதனால உம்ம கொயபல்ஸ் வேலை பலிக்காது.//

வழிமொழிகிறேன் (சொன்னபடி அமவுண்ட் வந்து சேர்ந்தால்)

said...

என் பேர் போட்ட பதிவுல வேற யாரு 100 அடிப்பாங்க?

said...

// உம்ம கொயபல்ஸ் வேலை பலிக்காது //

அதெப்படி கரெகடா கண்டுபிடிக்கிறீங்க அப்ப இன்னைக்கு இங்கயும் ஃபைட் பார்கமுடியாதா ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே ..

//வழிமொழிகிறேன் (சொன்னபடி அமவுண்ட் வந்து சேர்ந்தால்)//

சரி பினத்தலாரே அமவுன்ட் என்ன பர்சென்டேஜ்ல பிரிச்சுகறீங்க, எதோ ஒரிஜினல் பதிவு போட்ட உங்களுக்கு ஒரு % ஆவது அதிகமா வரணும் இன்டெல்லக்டுவல் ப்ராபர்டி ரைட்ஸ் பத்தி எதுனா வேணும்னா உடனே வரன். பார்த்து உங்களை பார்த்த பச்ச மண்ணு மாதிரி இருக்கு ஏதோ தோணுச்சு சொல்லிட்டன். அப்ப நான் வரட்டா பார்த்து சூதானமா இருங்க

சரவணன்

said...

// உம்ம கொயபல்ஸ் வேலை பலிக்காது //

அதெப்படி கரெகடா கண்டுபிடிக்கிறீங்க அப்ப இன்னைக்கு இங்கயும் ஃபைட் பார்கமுடியாதா ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே ..

//வழிமொழிகிறேன் (சொன்னபடி அமவுண்ட் வந்து சேர்ந்தால்)//

சரி பினத்தலாரே அமவுன்ட் என்ன பர்சென்டேஜ்ல பிரிச்சுகறீங்க, எதோ ஒரிஜினல் பதிவு போட்ட உங்களுக்கு ஒரு % ஆவது அதிகமா வரணும் இன்டெல்லக்டுவல் ப்ராபர்டி ரைட்ஸ் பத்தி எதுனா வேணும்னா உடனே வரன். பார்த்து உங்களை பார்த்த பச்ச மண்ணு மாதிரி இருக்கு ஏதோ தோணுச்சு சொல்லிட்டன். அப்ப நான் வரட்டா பார்த்து சூதானமா இருங்க

சரவணன்

said...

என்ன நடக்குது இங்க. நூறெல்லாம் கொஞ்சம் ஓவர். (விஜய் படம் நூறு நாள் ஒடற மாதிரி இருக்கு)

said...

//மறக்காம வந்து சூப்பர் தலைவா, பின்னிட்டீங்கன்னு எல்லாம் பின்னூட்டும் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும்//

இந்த கூட்டம் எங்கே இருக்குன்னு சொன்னீங்கன்னா - நான் அவங்களை contact பண்றதுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்....:-))))//

இந்த கூட்டத்தில் இப்போதைக்கு membership நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

- தலைவர் ;)

said...

முரளி கண்ணன்,

//(விஜய் படம் நூறு நாள் ஒடற மாதிரி இருக்கு)//

அதானே.. அங்கே கமல் படம் 30 நாள்தான் தாண்டியிருக்கு!

said...

//இங்கேயாச்சும் பரவாயில்லை கொத்ஸு, அவங்க என் போஸ்டுல போட்டிருக்க கமெண்டை பாருங்க!//

பார்த்தேன் பார்த்தேன். என்னாத்த சொல்ல! உம்ம நிலமை ரொம்பவே மோசமாத்தேன் இருக்கு!

said...

//அதுல தப்பில்ல தல, கமெண்டுன்னா நாலு நக்கல், ரெண்டு உள்குத்து இல்லாம உங்க பின்னூட்டத்தை பாத்ததே இல்லை -//

அதே அதே!! :))

said...

//வழிமொழிகிறேன் (சொன்னபடி அமவுண்ட் வந்து சேர்ந்தால்)//

வழிமொழிகிறேன். (சொன்னபடி அமவுண்ட் வந்து சேர்ந்தால் - இப்படி இல்ல இருக்கணும். ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆகிப் போச்சு பாருங்க. :))

said...

//என் பேர் போட்ட பதிவுல வேற யாரு 100 அடிப்பாங்க?//

டாக்குடருதான் அப்படின்னு சொல்லி இருப்பேன். ஆனா இம்புட்டு முனைஞ்சு நீங்க ஆடி அடிச்சதாலும், உமக்கு அம்புட்டுப் பெரிய பின்னூட்டம் போட்ட அவரு எனக்கு இத்தினியூண்டு பின்னூட்டம் போட்டதாலும் உங்க பேர் போட்ட பதிவில் நீங்கதான் 100 அடிப்பீங்கன்னு சொல்லிக்கறேன். :))

said...

//அதெப்படி கரெகடா கண்டுபிடிக்கிறீங்க அப்ப இன்னைக்கு இங்கயும் ஃபைட் பார்கமுடியாதா ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே ...//

சண்டை போடறதைப் பார்த்தா கண்ணு கட்டுதேன்னு சொல்லுவாங்க. போடாத போதே கட்டுதா? நல்ல ஆளுங்கடா...

//சரி பினத்தலாரே அமவுன்ட் என்ன பர்சென்டேஜ்ல பிரிச்சுகறீங்க, எதோ ஒரிஜினல் பதிவு போட்ட உங்களுக்கு ஒரு % ஆவது அதிகமா வரணும் இன்டெல்லக்டுவல் ப்ராபர்டி ரைட்ஸ் பத்தி எதுனா வேணும்னா உடனே வரன். பார்த்து உங்களை பார்த்த பச்ச மண்ணு மாதிரி இருக்கு ஏதோ தோணுச்சு சொல்லிட்டன். அப்ப நான் வரட்டா பார்த்து சூதானமா இருங்க//

இப்போதான் உங்க வேலை பலிக்காதுன்னு சொல்லறேன் உடனேவே அடுத்த அட்டெம்ட்டா? நல்லா இருங்கடே!!

said...

//என்ன நடக்குது இங்க. நூறெல்லாம் கொஞ்சம் ஓவர். (விஜய் படம் நூறு நாள் ஒடற மாதிரி இருக்கு)//

முரளி, நீங்க ஆட்டத்துக்குப் புதுசு. சமீபத்தில் அந்த காலத்தில் அப்படின்னு நான் கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க.... :)))

said...

//இந்த கூட்டத்தில் இப்போதைக்கு membership நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

- தலைவர் ;)//

அனானி தலைவரே, அவங்க மெம்பரா சேர வரலை. உங்க கூட்டத்தை காண்ட்ராக்ட் பேசி அவங்க பதிவுக்குக் கூட்டிக்கிட்டுப் போக லாரியோட வந்திருக்காங்க. இப்போ என்ன சொல்லறீங்க?

said...

//அதானே.. அங்கே கமல் படம் 30 நாள்தான் தாண்டியிருக்கு!//

பெனாத்தல் - அதான் என்னமோ கிளாஸ் ஹீரோ, மாஸ் ஹீரோன்னு என்னாமோ பேசிக்கிறாங்க.

(சரி இவ்வளவு ஓட்டியாச்சு, இந்த பின்னூட்டத்திலாவது உம்மை கிளாஸ் ஹீரோ அப்படின்னு சொல்லி கொஞ்சம் சமாதானப்படுத்தலாம் அப்படின்னு இதைச் சொல்லி இருக்கிறேன் என சரவணன் சொன்னால் அதை நம்ப மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்!)

said...

அடப்பாவிகளா!! மதியம் கூட 60-70 கிட்ட இருந்தது, ஆணி அதிகமாயிருந்துச்சுன்னு விட்டுட்டு போனேன்...இப்படிய்யா கொத்ஸு?..

said...

//அதானே.. அங்கே கமல் படம் 30 நாள்தான் தாண்டியிருக்கு!//

என்ன செய்ய மதுரயம்பதி. ரொம்ப நாள் ஆச்சு அடிச்சு ஆடி. ஆனா கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தினா முன்னாடி இருந்த ஸ்ட்ரைக் ரேட்டுக்கு இதெல்லாம் என்ன ஜுஜுபி!! :)))

said...

//காலை 3:20 அண்ணா, அந்த நேரத்திலும் கண் முழிச்சுட்டு அடுத்த நாள் ஆபீஸ் போனா அப்புறம் அங்க என்னண்ணா செய்யறது. //

இது என்ன கேள்வி? மிச்சமுள்ள பின்னூட்டங்களை ரிலீஸ் பண்ண வேண்டியதான? :-)

ராதா,

நீங்க சொன்னப்புறம்தான் யோசிச்சு பாக்கிறேன். சரி விடுங்க. தல இப்பதான் ஃபார்முக்கு வர்றார். தமிழ்மண முகப்புல வேற விடாம தெரியுது போல. அப்ப மினிமம் ஒரு 300-வது வந்திடும் பாருங்க.

said...

ஒரு பொண்ணு தற்கொலை வரைக்கும் போயிருச்சாம். அதுக்கு முன்னாடி பதிவு போட்டதால அதுக்கு மன அழுத்தம் குறைஞ்சு நல்லபடியா ஆயிருச்சாம். இங்க என்னடான்னா பதிவு போட்டு பின்னூட்டமே வரலைன்னுதான் மன அழுத்தமே வருதாமே. அது பத்தி நீங்க எதனா //

இதல்லோ;)

said...

117?
too much.
சே பதிவு படிச்சுட்டு பின்னூட்டம் போடறதுக்குள்ள 117 எல்லாம் கொஞ்சம் அதிகம். இந்தச் சங்கிலி வெளங்கிரும். நானும் ஒரு உள்ளேன் ஐயா போட வெச்சுருவீங்க போல இருக்கே...

// உங்க கரத்தை நீட்டினீங்களோ இல்லையே //
அப்படி வேற இருக்கா? IPL பார்க்கவே இல்லை, நான் குடும்பஸ்தனாக்கும். ஒன்லி அஞ்சலி, கல்லூரிக்காதல், கஸ்தூரி, செல்வி, கோலங்கள், பொறந்தவீடா புகுந்த வீடா..

said...

நிஜமாவே எனக்கு ஓண்ணுமே தோண மாட்டேங்குதே கொத்ஸ் என்ன செய்ய..ஸ்ரீதர்ட்ட ட்யூஷன் ஏற்பாடு பண்ணிக்கட்டா?

said...

பின்னூட்டத்தை சரியான நேரத்தில பப்ளிஷ் பண்ணாம சதி பண்ணி 100ஆவது பின்னூட்டத்தை நீங்களே போட்டுக்கிட்டிங்க...அட்லிஸ்ட் 120ஆவது நான் போட்டதாக இருக்கட்டும் :)

said...

//ஸ்ரீதர்ட்ட ட்யூஷன் ஏற்பாடு பண்ணிக்கட்டா?//

ராதாக்கா... ஆனாலும் இது ஓவர். மொக்கையா ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேங்கிறதுக்காக இப்படி ஓட்ட வேணாம். பெரிய பெரிய தலைகளே மேட்டர் கிடைக்காம ஒரே பதிவ மாத்தி மாத்தி மொக்கை போட்டுகிட்டிருக்காங்க. நான்லாம் பச்சை மண்ணு தாயி :-))

அன்னையர் தின வாழ்த்துகள்.

said...

என்னங்க பின்னூட்டம் 121 ல நொண்டியடிக்குது சீக்கிரம் வந்து பிக்கப் பண்ணுங்க, பாருங்க 6 பின்னூட்டம் வந்திருக்கு நீங்க வந்து ஒண்ணுத்துக்கும் மூணு மூணு பதில் பின்னூட்டம் போடலாமுல்ல.. :-)

சரவணன்

said...

//இது என்ன கேள்வி? மிச்சமுள்ள பின்னூட்டங்களை ரிலீஸ் பண்ண வேண்டியதான? :-)//

வந்தா உடனே ரிலீஸ் பண்ணாம ஆபீஸ் போகும் வரை காத்திருக்கச் சொல்லும் ஸ்ரீதரே நீர் விலை போய் விட்டீரா?

//ராதா,

நீங்க சொன்னப்புறம்தான் யோசிச்சு பாக்கிறேன். சரி விடுங்க. தல இப்பதான் ஃபார்முக்கு வர்றார். தமிழ்மண முகப்புல வேற விடாம தெரியுது போல. அப்ப மினிமம் ஒரு 300-வது வந்திடும் பாருங்க.//

ஐயா ராசா, நம்ம கணக்கே தெரியாம இருக்கீங்களே, 100 தாண்டினா 125. அதைத் தாண்டினா 150 அப்படின்னு படிப்படியாத்தான் டார்கெட் ஏறுமே தவிர ஒரேடியாக 300 என நான் என்றுமே சொன்னதில்லை. இப்படி எல்லாம் களங்கம் கற்பிக்கும் நீர் சூட்கேஸ் வாங்கிவிட்டதாகக் கேள்பிப்படும் தகவலை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.

said...

//இதல்லோ;)//

இது அல்லோவா? சிலவங்க போன் எடுத்துப் பேசும் பொழுது அல்லோ அப்படின்னு சொல்லுவாங்க. அது ஒரு வித உள்ளேன் ஐயா.

இந்தப் பதிவும் ஒரு வித உள்ளேன் ஐயா பதிவாகவே இருப்பதை 'இது அல்லோ -> இதல்லோ" எனச் சொல்லி சுட்டிக் காண்பித்து இருக்கும் வல்லியம்மாவின் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது.

said...

//117?
too much.//

why?

//சே பதிவு படிச்சுட்டு பின்னூட்டம் போடறதுக்குள்ள 117 எல்லாம் கொஞ்சம் அதிகம். இந்தச் சங்கிலி வெளங்கிரும். நானும் ஒரு உள்ளேன் ஐயா போட வெச்சுருவீங்க போல இருக்கே...//

போடுங்கய்யா போடுங்க.

//அப்படி வேற இருக்கா? IPL பார்க்கவே இல்லை, நான் குடும்பஸ்தனாக்கும். ஒன்லி அஞ்சலி, கல்லூரிக்காதல், கஸ்தூரி, செல்வி, கோலங்கள், பொறந்தவீடா புகுந்த வீடா..//

நம்ம வீட்டில் கொஞ்ச நாளா இதெல்லாம் பார்க்க நேரமில்லை, அதனால ஐபிஎல்லுக்கு அனுமதி!

said...

//நிஜமாவே எனக்கு ஓண்ணுமே தோண மாட்டேங்குதே கொத்ஸ் என்ன செய்ய..ஸ்ரீதர்ட்ட ட்யூஷன் ஏற்பாடு பண்ணிக்கட்டா?//

இப்படி ஒரு கேள்வி, அதுக்கு நான் பதில் சொல்லுவேன், நீங்க நன்றி சொல்லுவீங்க. நடுவில் ஸ்ரீதர் வந்து அவர் பங்குக்கு எதாவது கொளுத்திப் போடுவாரு. அதுக்கு சரவணன் மதுரையம்பதி மாதிரி யாராவது மாட்டுவாங்க. இம்புட்டும் செஞ்சுட்டு, எனக்கு ஒண்ணுமே தெரியாது, எனக்கு ஒண்ணுமே தோண மாட்டேங்குது அப்படின்னு நல்லவங்க வேஷம் கட்டிக்குவீங்க.

சும்மாவா சொன்னாங்க ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்லன்னு. நல்லா இருங்கம்மா!!

said...

//பின்னூட்டத்தை சரியான நேரத்தில பப்ளிஷ் பண்ணாம சதி பண்ணி 100ஆவது பின்னூட்டத்தை நீங்களே போட்டுக்கிட்டிங்க...அட்லிஸ்ட் 120ஆவது நான் போட்டதாக இருக்கட்டும் :)//

மதுரையம்பதி, என்னதான் நீங்க இந்த பதிவின் ஆட்ட நாயகனா இருந்தாலும் இப்படி எல்லாம் வாய்க்கு வந்த படி பேசக்கூடாது.

எவ்வளவுதான் பின்னூட்ட விளையாட்டு விளையாடினாலும் அதுக்காக இருக்கும் விதிகளை (அது நாமே போட்ட ரூலா இருந்தால் கூட) மீறுவதே கிடையாது.

உதாரணத்திற்கு மைல்கல் பின்னூட்டங்களை பதிவின் ஆசிரியர் போட்டுக் கொள்ளக் கூடாதென்பது. இந்தப் பதிவையே எடுத்துக் கொண்டால் 50ஆவது பின்னூட்டமாகட்டும், 100ஆவது பின்னூட்டமாகட்டும். போட்டது பதிவின் நாயகன் பெனாத்தல்.

அது போகட்டும் சார் 120ஆவது பின்னூட்டம். எப்பேர் பட்ட மைல்கல்? அதைப் போட்டது யாரு? நானா? இல்லையே. சாட்சாத் நீங்கள்தானே?

உண்மை இப்படி இருக்க, அபாண்டமாக நானே 100ஆவது பின்னூட்டம் போட்டுக் கொண்டதாக புழுதியை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம்?

நீங்கள் உடனேயே இந்த குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொண்டு பொதுவில் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையேல் 100 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போடுவேன்.

said...

//ராதாக்கா... ஆனாலும் இது ஓவர். மொக்கையா ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டேங்கிறதுக்காக இப்படி ஓட்ட வேணாம். பெரிய பெரிய தலைகளே மேட்டர் கிடைக்காம ஒரே பதிவ மாத்தி மாத்தி மொக்கை போட்டுகிட்டிருக்காங்க. நான்லாம் பச்சை மண்ணு தாயி :-))//

மேட்டர் கிடைக்காமல் மொக்கை போடறோமா? பெனாத்தல் தொடங்கி என் வழியாக மருத்துவரிடம் வந்து அங்கிருந்து அம்பி சென்ஷி என ஒரு ஆல மரம் போல் தழைத்தோங்கி வளரும் இந்த சங்கிலியை மேட்டர் இல்லாத காரணத்தினால் போடுவதாகச் சொல்லும் ஸ்ரீதர் நாராயணன் அவர்களே? பெட்டி கை மாறியது பப்ளிக்காகத் தெரிகிறது என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.


//அன்னையர் தின வாழ்த்துகள்.//

பதிவு பதிவாப் போய் சொன்னாலும் நம்ம பதிவிலும் ஒரு ரிப்பீட்டேய் போட்டுக்கறேம்பா.

said...

//என்னங்க பின்னூட்டம் 121 ல நொண்டியடிக்குது சீக்கிரம் வந்து பிக்கப் பண்ணுங்க, பாருங்க 6 பின்னூட்டம் வந்திருக்கு நீங்க வந்து ஒண்ணுத்துக்கும் மூணு மூணு பதில் பின்னூட்டம் போடலாமுல்ல.. :-)//

யப்பா சரவணா, நீ யாரு பெத்த பிள்ளையோ.... சரியான நேரத்தில் வந்து நமக்கு ஞாபகப்படுத்தி பதில் சொல்ல வெச்ச பாரு, நீ நல்லா இருக்கணும்பா!!

(அப்படியே ரெண்டு மூணு பின்னூட்டத்தில் உம்ம பேரைச் சொல்லி என்னமோ சொல்லி இருக்கேன். அதுக்கெல்லாம் பதில் சொல்லிடு கண்ணா....) :)))

said...

//பெனாத்தல் தொடங்கி என் வழியாக மருத்துவரிடம் வந்து அங்கிருந்து அம்பி சென்ஷி என ஒரு ஆல மரம் போல் தழைத்தோங்கி வளரும் இந்த சங்கிலியை மேட்டர் இல்லாத காரணத்தினால் போடுவதாகச் சொல்லும் ஸ்ரீதர் நாராயணன் அவர்களே?//

இறுதியில் எதற்கு கேள்விக்குறி?


எந்த பெட்டியை சொல்கிறீர்கள். பாவம்... மண்டையை உடைத்து கொண்டு பேப்பர் பேப்ப்ராக, ப்ளாக் ப்ளாகாக, டிவி டிவியாக செய்தி சேகரித்து அவர் அழகாக அவியல் செய்து பதிவு போடுவாராம்... இவர் சும்மா ஒரு கடிதம் எழுதி அப்படியே பின்னூட்டங்களை இவர் பக்கம் திருப்பி கொண்ட நுண்ணரசியலை பார்த்து பிரமித்து நிற்கின்றேன். அவர் கிட்டயிருந்த பின்னூட்ட பெட்டிய கைமாற்றியது யார் என்று எல்லாருக்கும் தெரியும். இதில் என் மேல் ஒரு குற்றசாட்டு. அதுவும் தப்பான ஒரு பங்குசுவேஷனோட. இதெல்லாம் ஒரு ............. (இப்படி திட்டி பின்னூட்டம் போட இது வரைக்கும் வாய்ப்பே கிடைச்சதில்லை. இப்பவாவது... ஹி..ஹி..)

அப்பாடி இப்பவாவது நுண்ணரசியல் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே :-))

said...

இந்த நுண்ணரசியல் நுண்ணரசியல் அப்டீங்கறாங்களே . என்ன சார் அர்த்தம்.:)

said...

//இராம்/Raam said...
ஆமாம் A + B'கிறதுலே நீங்க A'யா? இல்ல B'யா? :-)//

அட ராமு...நீ வேறப்பா!
A+ve aa இல்லை B-ve aaன்னு கேக்காம விட்டுட்டியேபா! :-)

said...

அஞ்சு நாளாச்சு... இன்னுமா ஓட்டிகிட்டிருக்கீரு?

எதற்கும் இந்தப்பதிவையும, முக்கியமாத்தலைப்பையும், பார்க்கவும்.