Wednesday, April 30, 2008

டேக் கேர் கோவி!!

என்னதான் எதிர் அணியில் இருந்தாலும் சக மனிதர் ஒருவருக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தா அது நமக்கு கஷ்டமாத்தானே இருக்கு. ரொம்ப சாதாரணமா இப்படி எல்லாம் ஆடினா இப்படித்தான் என்றோ எல்லாம் தலைவிதி என்றோ சொல்லிவிட்டுப் போக முடியும் என்றாலும் அதையும் மீறிய பரிதாபத்தினால் ஐயோ பாவம் எனச் சொல்லி அவருக்காக ஒரு நிமிடம் பிரார்த்திப்பதில்தானே நம் மனிதத்தன்மை இன்னும் முழுதாக மறைந்துவிடவில்லை எனத் தெரிகிறது.

என்ன செய்ய. சில சமயங்களில் நாம செய்யும் வேலை நம்ம கட்டுப்பாட்டில் இல்லாம ஆயிடுது. இதனால நமக்கும் கஷ்டம் நம்ம சுத்தி இருக்கிறவங்களுக்கும் கஷ்டம். இது நாம பண்ணற தப்புனால இருக்கலாம் அல்லது நம்மளையும் மீறின சக்தியினாலும் இருக்கலாம். அந்த மாதிரி ஒரு விஷயம்தான் இப்போ நடந்து போச்சு!! இது கோவியையும் மீறின ஒரு செயலாத்தான் இருக்கு. ஆனா பாவம் அதனால அவருக்கு எவ்வளவு வேதனை! எவ்வளவு சங்கடம்!!

டேக் கேர் கோவி!!இன்னும் விஷயம் தெளிவாத் தெரியணுமுன்னா இதையும் பாருங்க.டிஸ்கி 1 : ஃபெராரி அணியின் ரசிகனான எனக்கு மெக்லேரன் அணியின் கோவி என்ற கோவலைனன் எதிர் அணியில் இருப்பவராக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்து கொடுமையானது. கடவுளின் கிருபையால் அவருக்கு பெரிதாக அடிபடவில்லை. மீண்டும் அடுத்த போட்டியில் நல்ல படியாக கலந்து கொள்ள என் வாழ்த்துக்கள்.

டிஸ்கி 2: சங்க சிங்கங்களின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகும் அண்ணன் கோவி கண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். டேக் கேர் கோவி!!

53 comments:

said...

ஒரு புறம் பார்முலா 1, மறுபுறம் ஐபில் 20-20. அப்புறம் இங்கிலிஷ் ப்ரீமியர் லீக், சேம்பியன்ஸ் லீக் என எல்லா போட்டிகளிலும் நம்ம அணி சூப்பரா விளையாடிக்கிட்டு இருக்காங்க.

பெராரி, சென்னை சூப்பர் கிங்க்ஸ், மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!!

said...

சரியாத் தூக்கம் இல்லைன்னா இப்படித்தான் எதாவது நடக்கும்:-)

said...

கோவிக்கும் சரியா தூக்கம் இல்லையா? அது பத்தி யாரும் சொல்லவே இல்லையே!! :))

said...

ஹாஹாஹா, பொண்ணு இப்போவே வேலை வாங்கறாளோ?????? பாவம், நீங்க! அது என்ன எப்போப் பார்த்தாலும் ஆனலைனில் இருந்தால் இப்படித் தான் ஆகும்! :P

நாங்க வரோம் உங்க பதிவுக்கு கரெக்டா! :P

said...

//அது என்ன எப்போப் பார்த்தாலும் ஆனலைனில் இருந்தால் இப்படித் தான் ஆகும்! :P//

நான் ஆன்லைனில் இருந்தா கோவிக்கு ஆக்ஸிடெண்ட் ஆகுமா? இது என்ன கதையா இருக்கு?

//நாங்க வரோம் உங்க பதிவுக்கு கரெக்டா! :P//

சரி சரி புரியுது. இனிமே ஒழுங்கா அங்க வரேன்!! :)))

said...

ஓஹோ, எதோ ரேசா? அதுல ஓட்டற ட்ரைவர்க்கு அடி பட்டுருச்சா..


நான் என்னவோ கோவனைன் (என்னய்யா பேரு இது, நீங்க சுருக்கினதே நல்லா இருக்கு) யார் கிட்டயோ அடி வாங்கி ஸ்ரீசாந்த் மாதிரி அழறாரோன்னு நினைச்சேன்.

said...

போன மச்சான் திரும்பி வந்தாங்கிற கதை மாதிரி இருக்கே. உள்குத்து வெக்காம பதிவு போட்டு இருக்கீங்க போல இருக்குங்ளே. அப்புறம் அட்லாஸா இந்த மாசம் வவாசவுல கோவியாம், இந்தக் கோவிய உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

said...

ரொம்பவே விவகாரம் பிடிச்ச மனுஷனய்யா நீர்... :)

said...

ஆமாம், இந்த A+B = சர்வேசன் அப்படிங்கறாங்களே, அது பற்றி உங்க கருத்தை சொல்லுங்களேன்? :)

said...

தலைப்பைவைத்து சிறிது பதற வைத்துவிட்டீரே சுவாமி!

said...

கொத்ஸ், இது அட்வைஸா, அனுதாபமா:)

எல்லாப்போட்டிகளையும் பார்க்கலைன்னா தூக்கம் வராதோ உங்களுக்கு.
எல்லோரும் எல்லாத்திலேயும் வெற்றி பெறட்டும். பொண்ணு வளர்க்கிறதலையும் தான்.:)

said...

லொள்ளு மன்னா!!

என்ன்ன ? 1000 அடிக்க உத்தேசமா?
:))

said...

கோவலன் கோவி ஆனாலும் ராவணன் ராவி ஆனாலும் நமக்கொண்ணும் கவலையில்ல. பொண்ணு பொறந்ததுக்கு வாழ்த்துக்கள பிடிங்க முதல்ல

said...

இரண்டாம் ஆண்டு என்பதற்காக "தலைப்பில்" எல்லாமே இரண்டாக போடனுமா? :-)கண்ணை சுத்துது.
வித்தியாசமான கொத்தனாராக இருக்கீங்களே!!

said...

//கோவிக்கும் சரியா தூக்கம் இல்லையா?//

அவரு தூங்கறதே இல்லையாமே! அப்படியா? :-))
டேக் கேர் கொத்ஸ்! :-)))

said...

பதிவுக்கு :)

தலைப்பு மேட்டர்... வடுவூரார் சொன்னப்புறம்தான் கவனிச்சேன்.

said...

1. சங்கத்தின் 2ம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்து
2.தலைப்பில் 2 , 2 எழுத்தா போட்டு சங்கத்தின் 2 போட்டியிலேயும் கலந்துகிட்ட மாதிரி ஆச்சு
3. கோவி அட்லாஸ் வாலிபரா ஆனதுக்கு விளம்பரம் செஞ்ச மாதிரி ஆயிடுச்சு
4.கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டிலும் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தின மாதிரி ஆச்சு
5.உள் குத்து மொக்கை போட்ட மாதிரியும் ஆச்சு

எனக்கு தெரிஞ்சு 5 மாங்காய் அடிச்சாச்சு, தெரியாம எத்தனை மாங்காய் கீழே விழுந்திருக்குன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!

said...

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பின்பு எனக்கு கொத்ஸ் பதிவு ஓப்பன் ஆகுது. அதனால எனக்கு நானே வாழ்த்திகறேன்!!

said...

குட்டி கொத்ஸ்க்கு ஆசீர்வாதங்கள்!!

said...

//ஓஹோ, எதோ ரேசா? அதுல ஓட்டற ட்ரைவர்க்கு அடி பட்டுருச்சா..//

அடப்பாவி நீயெல்லாம் அந்த ரேசுநாதருக்கு நண்பனா!!!!

//நான் என்னவோ கோவனைன் (என்னய்யா பேரு இது, நீங்க சுருக்கினதே நல்லா இருக்கு) யார் கிட்டயோ அடி வாங்கி ஸ்ரீசாந்த் மாதிரி அழறாரோன்னு நினைச்சேன்.//

யோவ். முதலில் அந்த ஆள் பேரு கோவலைனன். நீர் பாட்டுக்கு கோணையன், கேனையன் அப்படின்னு வாய்க்கு வந்த படி பேசறீரு!!

அடி வாங்கிக்கிட்டு அழுதா டேக் கேர் கோவின்னா பதிவு போட்டு இருப்பேன். க்ரோ அப் கோவின்னு போட்டு இருக்க மாட்டேன்!!! :))

said...

//போன மச்சான் திரும்பி வந்தாங்கிற கதை மாதிரி இருக்கே.//

யப்பா ராசா, நான் எங்கேயும் போகலை! இப்படி எல்லாம் கதை கட்டாதீங்க.

//உள்குத்து வெக்காம பதிவு போட்டு இருக்கீங்க போல இருக்குங்ளே. //

நான் என்னிக்கு உள்குத்து வெச்சு பதிவு போட்டு இருக்கேன். இன்னிக்கு ஸ்பெஷலா வந்து சொல்லி இருக்கீங்க?

//அப்புறம் அட்லாஸா இந்த மாசம் வவாசவுல கோவியாம், இந்தக் கோவிய உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை//

நம்ம கண்ணன் அண்ணாதான் அட்லஸா? அடடா, இது தெரியாமப் போச்சே!! இருங்க ஒரு டிஸ்கியை சேர்க்கறேன்!! :))

said...

ஹ்ம்ம்... பதிவு போட விசயம் கிடைக்கலன்னா இப்படியா?

இதில ஒரு ஆச்சர்யம் என்னன்னா... எனக்கு தெரிந்து Formula 1 போட்டிகளின் ரசிகர்கள் (நான் பார்ப்பதில்லை) எல்லாரும் Ferrari ரசிகர்கள்தான். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

said...

//நான் என்னிக்கு உள்குத்து வெச்சு பதிவு போட்டு இருக்கேன். இன்னிக்கு ஸ்பெஷலா வந்து சொல்லி இருக்கீங்க? //
இதுல இருக்கிற உள்குத்து மட்டும் சரியாப் புரியுதுங்கண்ணா..

said...

//ரொம்பவே விவகாரம் பிடிச்ச மனுஷனய்யா நீர்... :)//

ஐயா மதுரையம்பதியாரே,

எனக்குக் காரம் பிடிக்கும். பல பதிவுகளில் சொல்லி இருக்கேன். ஆனா விவகாரம் பிடிக்குமுன்னு சொன்னதே இல்லையே!!! :))

said...

//ஆமாம், இந்த A+B = சர்வேசன் அப்படிங்கறாங்களே, அது பற்றி உங்க கருத்தை சொல்லுங்களேன்? :)//

எனக்கென்னவோ இந்த மாதிரி புதிரை எல்லாம் பார்த்தா A+B = யோசிப்பவர் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

டிஸ்கி: சர்வேசன் பதிவுகளில் இரு நடைகள் தெரிவது பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை!! ;P

said...

//தலைப்பைவைத்து சிறிது பதற வைத்துவிட்டீரே சுவாமி!//

பதற வைக்கும் அளவு என்ன இருக்கு? எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களைப் பார்த்துக் கத்துக்கிறதுதானே!!

said...

//கொத்ஸ், இது அட்வைஸா, அனுதாபமா:)//

அட்வைஸ் செய்ய நாம யாரு? கொஞ்சம் செய்தி, கொஞ்சம் அனுதாபம். அம்புட்டுதான்.

//எல்லாப்போட்டிகளையும் பார்க்கலைன்னா தூக்கம் வராதோ உங்களுக்கு.//

தூக்கம் வந்தா மட்டும் தூங்க முடியுதா? :))

//எல்லோரும் எல்லாத்திலேயும் வெற்றி பெறட்டும். //

எல்லாரும் வெற்றி பெற்றா அப்புறம் என்ன விளையாட்டு? :)

//பொண்ணு வளர்க்கிறதலையும் தான்.:)//

நன்னி நன்னி.

said...

//லொள்ளு மன்னா!!

என்ன்ன ? 1000 அடிக்க உத்தேசமா?
:))//

நான் மன்னனா? அப்போ நீங்க?

1000 அடிக்கவா? அடி வாங்காம இருந்தா சரிதான்.

said...

//கோவலன் கோவி ஆனாலும் ராவணன் ராவி ஆனாலும் நமக்கொண்ணும் கவலையில்ல. பொண்ணு பொறந்ததுக்கு வாழ்த்துக்கள பிடிங்க முதல்ல//

கோவலன் -> கோவலைனன் என்று பார்முலா 1 போட்டிகளில் சரித்திரம் படைக்க இருக்கும் வீரர் தமிழன் என்ற அரும்பெரும் உண்மையை உலகுக்கு உணர்த்திய அதே நேரத்தில் ராவணன் பற்றி கவலை இல்லை எனச் சொல்லி பலரின் கண்டனங்களைச் சம்பாதிக்கப் போகிறீர்களே!! :)))

//பொண்ணு பொறந்ததுக்கு வாழ்த்துக்கள பிடிங்க முதல்ல//
நன்னி நன்னி.

said...

//இரண்டாம் ஆண்டு என்பதற்காக "தலைப்பில்" எல்லாமே இரண்டாக போடனுமா? :-)கண்ணை சுத்துது.
வித்தியாசமான கொத்தனாராக இருக்கீங்களே!!//

வடுவூராரே!! அது உங்க கண்ணில் மட்டும்தான் பட்டு இருக்கு பாருங்க. நான் வித்தியாசமா இல்லை நீங்களா? :))

said...

//அவரு தூங்கறதே இல்லையாமே! அப்படியா? :-))//
அதெல்லாம் உங்களுக்குத்தான் தெரியும். என்னைக் கேட்டா!!

//டேக் கேர் கொத்ஸ்! :-)))//

எனக்கேவா!! இருக்கட்டும் இருக்கட்டும். :))

said...

//பதிவுக்கு :)//

பாபா வழமையா வெறும் சிரிப்பான் தானே போடுவீங்க. இன்னிக்கு என்ன ஆச்சு? பதிவுக்கு அப்படின்னு ஒரு வார்த்தை வேற! :))

//தலைப்பு மேட்டர்... வடுவூரார் சொன்னப்புறம்தான் கவனிச்சேன்.//

கவனிச்சீங்க சரி. கருத்து என்ன சொல்லவே இல்லையே!!

said...

//வடுவூராரே!! அது உங்க கண்ணில் மட்டும்தான் பட்டு இருக்கு பாருங்க. //

பாத்தோம்ல நாங்களும். சரிதான் இராத்திரி பூரா கண் விழிச்சு குளிர்ல (!?) டைப் பண்ணிருக்காப்படின்னு நினச்சு லூஸ்ல விட்டுட்டோம் :-)

said...

//1. சங்கத்தின் 2ம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்து
2.தலைப்பில் 2 , 2 எழுத்தா போட்டு சங்கத்தின் 2 போட்டியிலேயும் கலந்துகிட்ட மாதிரி ஆச்சு
3. கோவி அட்லாஸ் வாலிபரா ஆனதுக்கு விளம்பரம் செஞ்ச மாதிரி ஆயிடுச்சு
4.கிரிக்கெட் தவிர மத்த விளையாட்டிலும் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தின மாதிரி ஆச்சு
5.உள் குத்து மொக்கை போட்ட மாதிரியும் ஆச்சு

எனக்கு தெரிஞ்சு 5 மாங்காய் அடிச்சாச்சு, தெரியாம எத்தனை மாங்காய் கீழே விழுந்திருக்குன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!//

அதாவது அபி அப்பா, எனக்கு ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருது. ஆனா அதை இங்க சொல்ல முடியுமான்னு தெரியலை. ஆனா உம்ம பின்னூட்டம் அந்த கதை மாதிரிதான் இருக்கு!! :)))

said...

//நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்கு பின்பு எனக்கு கொத்ஸ் பதிவு ஓப்பன் ஆகுது. அதனால எனக்கு நானே வாழ்த்திகறேன்!!//

ஒரு வேளை அமீரகத்தில் நம்ம பதிவை தடை செஞ்சு இருப்பாங்களோ?

said...

//குட்டி கொத்ஸ்க்கு ஆசீர்வாதங்கள்!!//

நன்னி நன்னி....

said...

//ஹ்ம்ம்... பதிவு போட விசயம் கிடைக்கலன்னா இப்படியா?//

விஷயம் நிறையா இருக்கு. நேரம்தான் இல்லை. அதான் கிடைச்ச நேரத்தில் இப்படி ஒண்ணு தேத்திக்கலாமேன்னு...

//இதில ஒரு ஆச்சர்யம் என்னன்னா... எனக்கு தெரிந்து Formula 1 போட்டிகளின் ரசிகர்கள் (நான் பார்ப்பதில்லை) எல்லாரும் Ferrari ரசிகர்கள்தான். அதுதான் எப்படி என்று தெரியவில்லை.//
அப்படி எல்லாம் இல்லை. என் நண்பர்கள் பல பேருக்கு பெராரின்னா அலர்ஜி. அதுவும் ஷுமேக்கர்ன்னா ரொம்பவே. உங்க நண்பர்கள் எல்லாம் நல்லவங்க போல, என்னை மாதிரி!! :))

said...

//இதுல இருக்கிற உள்குத்து மட்டும் சரியாப் புரியுதுங்கண்ணா..//

யோவ் பதிவில் கூட உள்குத்து இல்லைன்னு சொல்லறேன், நீர் என்னமோ வந்துட்டீரு பின்னூட்டத்தில் உள்குத்து கண்டுபிடிக்க.

போய்யா போய்யா போய்யா (நான் கையை நீட்டிக்கிட்டு வாயைக் கோணிக்கிட்டு அந்த பொண்ணு மாதிரி சொல்லறதா நினைச்சுப் பார்த்துக்குங்க.)

said...

//பாத்தோம்ல நாங்களும். //

பார்த்தீங்க இல்ல, அப்போ நல்ல பையனா என்ன செஞ்சு இருக்கணும். பார்த்தேம்பா நல்லா இருந்தது, சூப்பர், புதசெவி அப்படி இப்படின்னு எதாவது சொல்லி இருக்கணும். அப்படி இல்லாம இப்போ வந்து நானும் பார்த்தேன் நானும் பார்த்தேன்னா என்ன அர்த்தம்?

//சரிதான் இராத்திரி பூரா கண் விழிச்சு குளிர்ல (!?) டைப் பண்ணிருக்காப்படின்னு நினச்சு லூஸ்ல விட்டுட்டோம் :-)//

நல்ல வேளை லூஸுன்னு நினைச்சு விட்டேன்னு சொல்லாம இருந்தீங்களே. இப்போ என்னய்யா குளிரு? அதான் குளிர் விட்டுப் போச்சே!!!

said...

//சங்க சிங்கங்களின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகும் அண்ணன் கோவி கண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். டேக் கேர் கோவி//

:)

அடப் பாவிகளா!

அட்லாஸ் ஆனவர்கள் எல்லாம் அட் லாஸ்ட் ஆகிவிடுவதில்லை!

அதற்கு நீங்களே முன் உதாரணம்!

said...

//குட்டி கொத்ஸ்க்கு ஆசீர்வாதங்கள்!!//


வாழ்த்துக்களும் ஆசிகளும்!

said...

##போய்யா போய்யா போய்யா (நான் கையை நீட்டிக்கிட்டு வாயைக் கோணிக்கிட்டு அந்த பொண்ணு மாதிரி சொல்லறதா நினைச்சுப் பார்த்துக்குங்க.)##

பார்த்தேன், ஏன் சரியான மேட்சிங் தாவணியா போட கூடாதா:-)

said...

//ரொம்பவே விவகாரம் பிடிச்ச மனுஷனய்யா நீர்... :)//


இதை நான் வழிமொழிகிறேன்!

:)

விவகாரம் பிடிச்ச மனுஷன் என்றாலும் விவரமான மனுஷன் என்பதையும் வழி மொழிகிறேன்!

said...

//அடப் பாவிகளா!

அட்லாஸ் ஆனவர்கள் எல்லாம் அட் லாஸ்ட் ஆகிவிடுவதில்லை!

அதற்கு நீங்களே முன் உதாரணம்!//

அதான் டேக் கேர் சொல்லறேன்!! :)))

said...

//வாழ்த்துக்களும் ஆசிகளும்!//

நன்றி சிபி.

said...

//பார்த்தேன், ஏன் சரியான மேட்சிங் தாவணியா போட கூடாதா:-)//

தாவணியோ சீலையோ. நல்ல வேளை துணி போட்டு பார்த்தீங்களே. அந்த வரைக்கும் ரொம்ப சந்தோஷம். 'சதா' இந்த நினைப்புதானோ? :))

said...

//இதை நான் வழிமொழிகிறேன்!//

என்னத்த முழியறீங்களோ போங்க.

//விவகாரம் பிடிச்ச மனுஷன் என்றாலும் விவரமான மனுஷன் என்பதையும் வழி மொழிகிறேன்!//

முதலில் சொல்லறவங்க சொல்லணும். பின்னாடி வரவங்க வழிமொழியணும். இது என்ன வரும் பொழுதே வழிமொழிஞ்சுக்கிட்டு. என்னவோ போங்க....

said...

வெல்கம் பேக். பேபி கொத்ஸுக்கு வாழ்த்துகள்.

//பெராரி, சென்னை சூப்பர் கிங்க்ஸ், மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய் :)

//சங்க சிங்கங்களின் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகப் போகும் அண்ணன் கோவி கண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். டேக் கேர் கோவி!!//

ஸ்லீப்லெஸ்ஸாப் போனாலும் லொள்ளு போவலைய்யா உங்களுக்கு
:)

said...

நம்மூர்ல கிட்டுபுள்ளு அடிச்சு ஒரு பாட்டி மண்டைய உடச்சு ஊரை விட்டு ஓடி வந்த ஆளுக எல்லாம் பார்முலா ஒன் பத்தி பதிவு போடறது தான் உலகமயமாக்கலின் தாக்கமா அண்ணே? :p

உங்க வீட்ல விசேஷம் வருதுனு கேஆர்ரெஸ் இந்தியா வரும் போது சொன்னாரு. வாழ்த்துக்கள். :))

said...

//இலவசக்கொத்தனார் said...

ஒரு புறம் பார்முலா 1, மறுபுறம் ஐபில் 20-20. அப்புறம் இங்கிலிஷ் ப்ரீமியர் லீக், சேம்பியன்ஸ் லீக் என எல்லா போட்டிகளிலும் நம்ம அணி சூப்பரா விளையாடிக்கிட்டு இருக்காங்க.

பெராரி, சென்னை சூப்பர் கிங்க்ஸ், மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!!.//

ரிப்பீட்டேய்,,

said...

//வெல்கம் பேக். பேபி கொத்ஸுக்கு வாழ்த்துகள். //

ரெண்டுக்கு நன்னி தல!

//ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய் :)//

நீங்களும் அந்த மூணு அணிகளை சப்போர்ட் பண்ணறீங்களா!! இது நல்லா இருக்கே!!

//ஸ்லீப்லெஸ்ஸாப் போனாலும் லொள்ளு போவலைய்யா உங்களுக்கு
:)//

லொள்ளுக்கும் தூக்கத்துக்கும் என்னங்கய்யா சம்பந்தம்? :))

said...

//நம்மூர்ல கிட்டுபுள்ளு அடிச்சு ஒரு பாட்டி மண்டைய உடச்சு ஊரை விட்டு ஓடி வந்த ஆளுக எல்லாம் பார்முலா ஒன் பத்தி பதிவு போடறது தான் உலகமயமாக்கலின் தாக்கமா அண்ணே? :p//

உலகமயமாக்கல் அப்படின்னு கெட்ட வார்த்தை பேசுத வயசால உனக்கு? இந்த மாதிரி பொது இடத்தில் வந்தா சும்மா பொத்திக்கிட்டு இருக்கணும். அப்புறம் அசுரமாக்கள் எல்லாம் வந்து வகுந்து எடுத்துறுவாங்க தெரியுமில்ல

அப்புறமா அந்த பாட்டி மேட்டர் எல்லாம் இங்க எதுக்கு. நாங்கதான் அவுட் ஆப் கோர்ட் செட்டில்மெண்ட் பண்ணிக்கிட்டோமில்ல.

//உங்க வீட்ல விசேஷம் வருதுனு கேஆர்ரெஸ் இந்தியா வரும் போது சொன்னாரு. வாழ்த்துக்கள். :))//

விசேஷம் வந்திருச்சுல்லா. மேற்படி பின்னூட்டமெல்லாம் பாத்துக்கடே...

said...

//ரிப்பீட்டேய்,,//

நீங்களுமா!! எத்தினி பேரு இந்த காம்பினேஷனில் இருக்காங்கன்னு பார்க்கலாம் போல இருக்கே!!