Friday, February 22, 2008

IP, பதிவு, அறிவு, திருட்டு - ஒரே கொயப்பமாக் கீதே!

எல்லா விவாதங்களிலும் பங்கேற்று பல கருத்துக்களை தரும் வவ்வால்அவர்களின் இரு பின்னூட்டங்களைப் பார்த்ததினால் வந்த எண்ணங்கள் இவை. இரு விஷயங்களுமே அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Rights, இதுக்கு வேற தமிழ்ச் சொல் இருக்கா?) பற்றியவை என்பதால் இது பற்றி கொஞ்சம் பேசலாமே என்றுதான் இந்தப் பதிவு. எந்த விதமான தலைப்பென்றாலும் சளைக்காமல் தகவல்களை அள்ளி வீசும் வவ்வால் அவர்களுடைய கருத்தே தவறோ என்ற எண்ணம் வரும் பொழுது மற்ற சாமான்யர்களுக்கும் (சாமான்யன் சிவா, உங்களை மட்டும் இல்லை) இது பற்றிய புரிதல் எந்த அளவு இருக்கும் என்ற சந்தேகமும் உடன் எழுகிறது. அந்த இரு விஷயங்கள் எவை, அதில் எனக்கு புரியாத விஷயங்கள் எது என்று பார்த்துவிடுங்கள். கடைசியாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்கிறேன். அதற்கு உங்கள் பதிலைக் கட்டாயமாகச் சொல்லுங்கள்.

பின்னூட்டம் 1: என்றென்றும் அன்புடன் பாலா ஒரு பதிவு போட்டு இருக்காரு. பதிவு வழக்கம் போல மென்பொருள் துறையை போட்டுத் தாக்கும் பதிவுதான். வழக்கம் போல நம்ம பதிவர்களும் இரண்டு பக்கமும் நின்னுக்கிட்டு தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அப்படின்னு பல விஷயங்களைச் சொல்லி பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்காங்க. நானும் வழக்கம் போல வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவனா நின்னுக்கிட்டு இருந்தேன். அங்க வவ்வால்போட்ட பின்னூட்டத்தில் ஒரு பகுதி இது.

//
அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)//

அதாவது பொதுமக்கள் கடையில் சென்று வாங்கினாதான் மென்பொருள் மற்றவை எல்லாம் மென்பொருள் சார்ந்த சேவைகள் அப்படின்னு பொருள் வருவது மாதிரி சொல்லி இருக்காரு. அதுக்கு எடுத்துக்காட்டா அவர் சொல்லி இருக்கும் மென்பொருட்கள் எல்லாமே பொதுவாக பலரும் பயன்படுத்துவையாகவே இருக்கின்றன. அவர் குறிப்பிட்டிருக்கும் சிட்டி பேங்க் பற்றிய குறிப்பு என்னவென்றால் வேறொருவர் சிட்டி பேங்க் பயன்படுத்தும் ஒரு மென்பொருளைப் பற்றிச் சொல்லி இருந்ததற்குப் பதில். இதில் வவ்வால் அவர்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லாமல் போனதால் நானும் ஒரு பின்னூட்டம் போட வேண்டியதாகப் போயிற்று. அது இதுதான்.

ஒரே நம்பரா இருக்கு, அதுல எது நம்பறாப்புல இருக்குன்னே தெரியலை! போகட்டும். ஆனா இந்த ஒரு விஷயம் டக்குன்னு கண்ணில் பட்டுச்சு. கொஞ்சம் அதைப் பத்தி மட்டும் பேசலாமேன்னுதான் வந்தேன். மத்தபடி மென்பொருள் துறை என்ற கைப்புளையை காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு நமக்கு நேர வசதியோ அல்லது எண்களைக் கரைத்துக் குடிக்கும் பொறுமையோ இல்லை. அதனால சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு அப்படியே சைடில் குந்திக்கறேம்பா.

எது மென்பொருள், எது மென்பொருள் சேவை அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம். அதுவே காப்புரிமை வேறொருவரிடம் இருக்க, அதனை நிறுவவோ அல்லது பேணவோ தனது சேவைகளைத் தருவது மென்பொருள் சேவை எனக் கொள்ளலாம். பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்தும் சேவை என்பது சரியான வாதமே அல்ல.

இன்று இந்தியாவில் i-flex solutions (தமிழ்ப்'படுத்தாம' ஆங்கிலத்திலேயே எழுதறேன்.) உருவாக்கி இருக்கும் வங்கிகளுக்கான மென்பொருள் கடந்த 5 வருடங்களாக உலகத்திலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட வங்கிகளுக்கான மென்பொருள். இவர்களுக்குப் போட்டியாக TCS மற்றும் Infosys நிறுவனத்தாரும் மென்பொருட்கள் தயாரித்துள்ளனர். இவைகளை பொது மக்கள் பயன்படுத்தவில்லை என்பதால் இவைகள் சேவையாக மாறிவிடுமா? முன்பு சொல்லப்பட்ட ATM மென்பொருளும் இது போலத்தான். (எந்த நிறுவனம் எனத் தெரியாது.) இது மட்டுமின்றி மிகச் சிலரே பயன்படுத்தும் பல பொருட்கள் இங்கு செய்யப்படுகின்றன. இதனை ஓகை அவர்களும் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆக நுகர்வோராக பொதுமக்கள் இல்லாமல் போனாலும் கூட இவை எல்லாம் மென்பொருட்களே.

ஆனால் வவ்வால் அவர்களின் அளவுகோல் வேறாக இருக்கும் போலிருக்கிறதே. என்னைப் போல் இரண்டாம் வகுப்பு முடிக்காதவர்களும் வந்து போகும் இடமாக இருப்பதால் தனியாச் சொல்லணுமா எனக் கேட்காமல் தனியாகச் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பின்னூட்டம் 2: இது வந்து வவ்வால் எழுதின பழைய பதிவு ஒண்ணு. இது சமீபத்தில் பின்னூட்டமிடப்பட்டதால் மீண்டும் தமிழ்மண முகப்பில் வந்து நம்ம கண்ணில் பட்டது. அதில் ஜிரா சொல்லியிருந்த ஒரு தகவலுக்கு வவ்வால்சொல்லி இருக்கும் பதில் இது .

//
மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.//

ஆஹா இளையராஜா அந்த வேலை எல்லாம் செய்து இருக்காரா , நான் கேள்விபடாத தகவல் ,ஏற்கனவே சிம்பொனி போடாமலே போட்டதாக வெற்று பெருமை அடித்துகொண்டு இருக்கார் ராஜா இதில் அறிவு திருட்டு வேறா?

இதுல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. அதைப் பத்தி யாராவது சொல்லி இருக்காங்களான்னு பார்க்க வவ்வால் பதிவு, அங்க இருந்து ஜிரா பதிவு, அங்க இருந்து இசை இன்பம் அப்படின்னு போய் பார்க்கும் போது சந்தேகம் அதிகமாச்சே தவிர பதில் கிடைக்கலை. சரி இதில் என்னென்ன கேள்வின்னு பார்க்கலாமா? முதலில் அந்த மூணு ஸ்வரங்களில் பாட்டு போட்டது நான் மட்டுமேன்னு இளையராஜா சொல்லலை. அது மகதி ராகம் என்றும் சொல்லலை. அந்த இசைஇன்பம் பதிவில் கே.ஆர்.எஸ் சொன்னா மாதிரி மகதி நாலு ஸ்வரம் அப்படின்னுதான் இந்தத் தளமும் சொல்லுது. ஆனா திரச அவர்கள் வந்து மகதிக்கும் மூணு ஸ்வரங்கள் எனச் சொல்ல இளையராஜா போட்ட மூணு ஸ்வரப் பாட்டும் மகதி ராகம் அப்படின்னு முடிவுக்கு வந்துட்டாங்க போல!!

அது எல்லாத்தையுமே விட்டுடலாம். எம்.எஸ்.வி. ஒரு பாடலில் பயன்படுத்திய ராகத்தில் இளையராஜா வேறு ஒரு பாட்டு போட்டா அது அறிவுத் திருட்டா? அப்படிப் பார்த்தால் எந்த ஒரு ராகத்திலும் முதலில் பாடல் புனைந்தவருக்கு அந்த ராகத்துக்கான அறிவுசார் காப்புரிமை தரணுமா? கர்நாடக சங்கீதத்தில் (ராகங்கள் என வந்ததால்தான் இதைப் பத்தி சொல்லறேன். இதுக்காக தனியா முத்திரை எல்லாம் குத்தாதீங்கப்பா!) தோடி, கல்யாணின்னு போனா நூத்துக்கணக்குல பாட்டு இருக்கே. அந்த ராகத்தில் எல்லாம் யாரு முதலில் பாடினாங்க அப்படின்னு பார்த்து மத்தவங்க மேல எல்லாம் அறிவுத் திருட்டு அப்படின்னு வழக்கு போடணுமா?

இப்போ சொல்லுங்க

1)
மென்பொருள் என்றால் என்ன, மென்பொருள் சார்ந்த சேவை என்றால் என்ன என எப்படி வரையறுப்பது?
2) எது அறிவுத் திருட்டு (குறிப்பாக இசையில்) என எப்படி வரையறுப்பது?

67 comments:

said...

அறிவுசார் காப்புரிமை -- நல்லா இருக்கா? இதோட அறிவுசார் காப்புரிமை நம்மளுதுன்னு இப்போ சொல்லிக்கறேன்!! :))

said...

குழப்பம் தீர்ந்து, அதன் பிறகு என் குழப்பத்தையும் தீர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வாழ்த்துகள்!

said...

//1) மென்பொருள் என்றால் என்ன, எப்படி வரை"யறுப்பது"?
2) எது அறிவுத் திருட்டு (குறிப்பாக இசையில்) என எப்படி வரை"யறுப்பது"?//

தல! வரையறுத்திட்டீங்க தல! நீங்க வரையறுத்திட்டீங்க! :-)

சரி....அந்த மகதி சமாச்சாரத்தை இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க? :-)

said...

திலே எனக்குத் தெரிஞ்ச விஷயம் ஒண்ணும் கிடையாது.
வேணா
இல்லறம் மென்பொருள்.காப்புரிமை கொண்டவர்கள் கணவன் மனைவினு சொல்லி உங்களை மேலும் குழப்ப:)
இஷ்டமில்லை.

said...

இன்னிக்கு இங்கன நல்லாப் பொழுது போகும் போலிருக்கே.. சீக்கிரம் ஆரம்பிங்க கச்சேரியை..

said...

பொதுவா விக்கி பசங்ககிட்டதான் நாங்க கேள்வி கேப்போம். விக்கித் தலைவரே இப்படி விக்கித்து கேள்வி கேக்கற மாதிரி வவ்வாலு பண்ணிட்டாரே... :-(((

//இதோட அறிவுசார் காப்புரிமை நம்மளுதுன்னு //

கூகுளாண்டவர கேட்டா ஏற்கென்வே புழக்கத்துல இருக்கறதுன்னுதான் சொல்லுறார்.

இதப் பத்தி வேற யாராவது கேள்வி கேட்டு பதிவு போடுறதுக்கு முன்னாடி இங்கேயே ஒரு டிஸ்கி போட்டுகிடுங்க. (டிஸ்கி போடாம ஒரு பதிவு போட உடுவோமா என்ன?) :-))

said...

நல்ல கேள்விகள்...விடைகளுக்கு வெயிட்டிங் ;))

said...

ஆரம்பிங்க ஆரம்பிங்க வாழ்த்துக்கள் (முட்டிக்கிறாமாதிரி ஒரு ஸ்மைலி)

said...

ஸ்டார்ட் த ம்யூஜிக் ...

said...

இ.கொ,

அண்ணாத்த தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று முயல்வது வேறு, எதாவது கேள்விக்கேட்டு மடக்கிடனும் என நினைப்பது வேறு, உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன் :-))

//ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம்.//

இப்போ லினக்ஸ் அடிப்படையிலான இயங்கு தளங்களான , டிபியான், ரெட் ஹாட், உபுண்டு ஆகியவற்றின் காப்புரிமை உங்களிடம் இருக்கு, நீங்க பயன் படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்கு கொடுத்து இருக்கிங்க என்பதால் அதுலாம் மென்பொருளாகிறது என்று நீங்கள் சொல்லக்கூடும் :-))

உங்கள் வரை"யறை" அப்படித்தானே இருக்கு!

//முன்பு சொல்லப்பட்ட ATM மென்பொருளும் இது போலத்தான். (எந்த நிறுவனம் எனத் தெரியாது.)//

லேசர் சாப்ட் என்ற சென்னையை சேர்ந்த நிறுவனம் தான் atm மென்பொருள்(சேவை) முன்னணியில் உள்ளது, இன்னும் சிலரும் இப்பணியில் இருக்கக்கூடும்.

said...

வவ்வால் அண்ணாத்த கீழ இருக்கறதயெல்லாம் ப்ராடக்ட்ஸ்ன்னு ஒத்துக்குவாரா?

http://www.tallysolutions.com/product.shtml

http://www.k7computing.com/products.asp

http://www.myexonline.com/products1.htm

http://www.vedika.com/PRODUCTS/default.asp

http://www.pramati.com/product/index.jsp

http://www.ittiam.com/pages/products/products.htm

said...

என்னுடைய இரண்டணா -

லினக்ஸ் ஒரு open source மென்பொருளே. open source மென்பொருள்கள் இரண்டு வகையாக பயனீட்டாளர்களுக்கு அளிக்கப் படுகின்றன. இலவச மென்பொருள் மற்றும் கட்டண மென்பொருள்.

மைக்ரோசாப்டின் மென்பொருள்கள் எதுவும் open source கிடையாது. அவை பெரும்பாலும் கட்டண மென்பொருள்களே.

இந்த மென்பொருள்களை பணம் கொடுத்து வாங்கியோ, அல்லது இலவசமாக இருந்தால் அப்படியே தரவிறக்கியோ நிறுவி எனது பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால் நான் பயனீட்டாளர். அதில் சில / பல மாற்றங்கள் செய்து (அ) புதிதாக நானே தயாரித்த மென்பொருளை எனது நன்பர்கள் மற்றும் வேறு பலருக்கும் உபயோகப் படுத்த (இலவசமாகவோ / கட்டணத்திற்க்காகவோ) அனுமதி அளித்தால் அது மென்பொருள் சேவை.

உதாரணத்திற்க்கு கூகிள் ஒரு மென்பொருள் சேவையாக ப்ளாகரை நடத்துகிறார்கள். அதற்க்கு தேவையான மென்பொருளை அவர்களேஎ தயாரித்து, அவர்களேஎ நிறுவிக் கொள்கிறார்கள். அதன் உறுப்பினரான நான் அதன் மேல் எனது தயாரிப்பில் உருவான டெம்ப்ளேட்களை பயன்படுத்துகிறேன். அந்த டெம்ப்ளேட்டும் ஒரு மென்பொருள்தான். அந்த டெம்பிளேட்களை மற்றவரும் பயன்படுத்த அனுமதி அளித்தால் அது ஒரு மென்பொருள் விற்பனை.

பதிவின் கேள்விக்கு வருவோம் -

//சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு//

சிட்டி பேங்க் அளிப்பது வங்கி சேவை. அதற்க்கு சில மென்பொருள்கள் உபயோகபடுத்துகிறார்கள்.

//நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க?//

விற்பனை செய்தால்தான் மென்பொருள் என்பது தவறான விளக்கம்.

ஒரு மென்பொருளை நான் தயாரித்து அடுத்தவர்க்கு இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ள தரலாம். அல்லது அதை குறிப்பிட்ட அளவில் (single CPU, single user), குறிப்பிட்ட காலத்திற்க்கு (5 years, unlimited) உபயோகப்படுத்த அனுமதி (license) அளிக்கலாம்.

காப்புரிமை (patent) என்பது வேறு.

லைசன்ஸ், காபிரைட், பேடன்ட் எல்லாம் வெவ்வேறு.

நான் ப்ளாகருக்கு ஒரு வார்ப்புரு எழுதினால் அது மென்பொருள். அதை தரவிறக்க எனது தளத்தில் வசதி (கட்டணத்திற்க்கோ அல்லது இலவசமாகவோ) செய்து கொடுத்தால் அது மென்பொருள் சேவை. தரவிறக்கி கொள்கிறவர்களின் உபயோகத்தை வரையறுப்பது லைசன்ஸ். இந்த வார்ப்புருவை பயனீட்டாளர்கள் மற்றவர்களுக்கு இலவசமாகவோ (அ) கட்டணத்திற்கோ தராமல் இருக்க அதன் காபிரைட் உரிமை தேவை.

இப்படிப்பட்ட வார்ப்புருவில் உள்ள ஒரு தனித்துவம் எனது புத்துருவாக்கதினால் பல புதிய பயன்களை அளிக்க வல்லது என்ற பொழுது அந்த intelligence களவு போகாமல் பாதுகாக்க patent.

said...

//எனது நன்பர்கள் மற்றும் வேறு பலருக்கும் உபயோகப் படுத்த (இலவசமாகவோ / கட்டணத்திற்க்காகவோ) அனுமதி அளித்தால் அது மென்பொருள் சேவை.
//

சின்ன திருத்தம். மேலே சொல்ல வந்தது பாதியாக நின்றுவிட்டது.

நான் தயாரித்த மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிற்க்கு இலவசமாகவோ (அ) கட்டணத்திற்க்கோ கொடுப்பது மென்பொருள் விற்பனை.

அவர்களின் தேவைக்காக அந்த மென்பொருளை பயன்படுத்த உதவி (support) செய்துதருவது மென்பொருள் சேவை. இந்த சேவையில் அந்த மென்பொருளை பயனீட்டாளர்களுக்கான தேவைக்கு தகுந்த முறையில் மேம்படுத்தும் / மாற்றியமைக்கும் முனைப்புகளும் அடங்கும்.

said...

அய்யா சாமிகளே, கம்ப்பூட்டர உபயோகத்துக்கு கொண்டு வர எழுதப்படுகிற அனைத்து புரோகிராமுமே மென்பொருள்தான். இதுல போட்டொ ஷாப் மாதிரியான மென்பொருட்கள் உடனடியா அதாவது வாங்கி இன்ஸ்டால் செஞ்ச உடனே உபயோகப்படுத்தற "அவுட் ஆப் த ஷெல்ப்" மென்பொருட்கள்னு சொல்லலாம். மென்பொருள் சேவைன்னு ஒன்ன ஏம்ப்பா புதுசா கண்டு புடிச்சுக்கிட்டு தொங்கறீங்க?

இசையில ஒரு ராகத்த உபயோகப்படுத்துனா அது இசைத்திருட்டு இல்ல இல்ல இல்ல. ஆனா "மெட்"ட "ராகத்த" இல்ல மெட்ட அப்படியே காப்பி அடிச்சா அது திருட்டு. ஒரு உதாரனத்துக்கு "கண்ணல்ல கண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கண்ணங்கள் ரோஜாப்பூ" பாட்டும் "பேசும் மணி முத்து ரோஜாக்கள், பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்" பாட்டும் ஒரே மெட்டு. அது அறிவுத்திருட்டு.

said...

எப்படியோ, செமையா குழப்பிட்டீங்க. வெளங்கிரும்

said...

ஆரம்பிச்சுருச்சா வாக்கு வாதம். இல்லை விவாதமா?

நடுவர் வேணுமா?

ஓரமா உக்கார்ந்து பார்க்கிறேன்:-))))

said...

//அறிவுசார் காப்புரிமை -- நல்லா இருக்கா? இதோட அறிவுசார் காப்புரிமை நம்மளுதுன்னு இப்போ சொல்லிக்கறேன்!! :))//

ரொம்ப நாளைக்கு அப்புறம் என் பின்னூட்டத்துக்கு நானே பதில் சொல்லறேன்!!

நான் தமிழ் விக்ஷனரி எல்லாம் தேடிப் பார்த்தேன். அங்க இந்த சொல் இல்லை. ஆனா ஸ்ரீதர் புழக்கத்தில் இருப்பதாக சொன்னபின் கூகிளாண்டவரைக் கேட்டால் அவரும் அதையே சொன்னார். அதனால் இந்த காப்புரிமை எனக்கு இல்லை எனக்கு இல்லை!! :)

said...

//குழப்பம் தீர்ந்து, அதன் பிறகு என் குழப்பத்தையும் தீர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

எனக்கு லாட்டரி விழுந்தா பாதி உமக்குத்தான். ஓக்கேவா? :))

//ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வாழ்த்துகள்!//

இது என்ன உம்ம பதிவுன்னு நினைச்சீரா? இங்க எல்லாம் ஒரே ஆக்கபூர்வம்தான் போங்க!! :)

said...

//திலே எனக்குத் தெரிஞ்ச விஷயம் ஒண்ணும் கிடையாது.
வேணா
இல்லறம் மென்பொருள்.காப்புரிமை கொண்டவர்கள் கணவன் மனைவினு சொல்லி உங்களை மேலும் குழப்ப:)
இஷ்டமில்லை.//

வல்லிம்மா, இதெல்லாம் தெரிஞ்சுக்க கேட்கப்படும் கேள்விதானே... மேல குழப்பாததற்கு நன்னி!

said...

//இன்னிக்கு இங்கன நல்லாப் பொழுது போகும் போலிருக்கே.. சீக்கிரம் ஆரம்பிங்க கச்சேரியை..//

கச்சேரி ஆரம்பிச்சு, வரவேற்புரையும் படிச்சாச்சு. பாட வேண்டியது நீங்கதானே. வந்து பாடுங்க. :))

said...

//பொதுவா விக்கி பசங்ககிட்டதான் நாங்க கேள்வி கேப்போம். விக்கித் தலைவரே இப்படி விக்கித்து கேள்வி கேக்கற மாதிரி வவ்வாலு பண்ணிட்டாரே... :-(((//

அட என்னத்துக்கு இம்புட்டு அழுவாச்சி. அவரு என்ன நம்ம கேள்வி கேட்போமுன்னு நினைச்சா இதெல்லாம் சொன்னாரு? அது இயற்கையா அவர் எழுதினது. ஆனா நம்ம கேள்வி கேட்க காரணியா அமைஞ்சு போச்சு. நியூட்டன் தலையில் அழுகின ஆப்பிள் விழுந்தா மாதிரி!!

நியூட்டன் லெவலுக்கு அவரு என்னென்னமோ கண்டுபிடிச்சாரு. நம்ம லெவலுக்கு ரெண்டு கேள்வியாவது கேட்கலைன்னா எப்படி?

அது மட்டுமில்லாம நான் இருக்கும் இடத்தில் அடுத்தவங்க அறிவியல் பேசலாமான்னு தொடை தட்டிக்கிட்டா களத்தில் எறங்கி இருக்கோம். எல்லாரும் வந்து விவாதம் செஞ்சா விஷயம் என்னான்னு புரியப் போகுது.

//கூகுளாண்டவர கேட்டா ஏற்கென்வே புழக்கத்துல இருக்கறதுன்னுதான் சொல்லுறார்.//

ஓரு சேஞ்சுக்கு டிஸ்கியை தனிப் பின்னூட்டமா போட்டாச்சு. :)

said...

//நல்ல கேள்விகள்...விடைகளுக்கு வெயிட்டிங் ;))//

வாங்க கோபிநாத். நானும்தான் வெயிட்டிங்கில் இருக்கேன். :))

said...

//ஆரம்பிங்க ஆரம்பிங்க வாழ்த்துக்கள் (முட்டிக்கிறாமாதிரி ஒரு ஸ்மைலி)//

உஷாக்கா!

May you live in interesting times!! அப்படின்னு ஒரு சீன சாபம் ஒண்ணு இருக்காம். உங்க வாழ்த்தும் அது மாதிரி இல்ல தெரியுது!!

நல்லா இருங்க தாயி!

said...

//ஸ்டார்ட் த ம்யூஜிக் ...//

வாத்தியாரா லட்சணமா வந்து சந்தேகத்தைத் தீர்த்து வைக்காம என்ன இது சிறுபுள்ளத்தனமா இருக்கு.... :)

said...

//அண்ணாத்த தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று முயல்வது வேறு, எதாவது கேள்விக்கேட்டு மடக்கிடனும் என நினைப்பது வேறு, உங்களை சொல்லவில்லை, பொதுவாக சொன்னேன் :-))//

அண்ணாத்த, விளக்கம் சொல்வது என்பது வேறு, உபயோகமற்ற தகவல் கொடுத்து திசை திருப்பி ஏதோ பேசுவது வேறு. நானும் உங்களைச் சொல்லலைன்றதை நமக்கு நாமே கூட ஒப்புக்காட்டி எப்படி?

//இப்போ லினக்ஸ் அடிப்படையிலான இயங்கு தளங்களான , டிபியான், ரெட் ஹாட், உபுண்டு ஆகியவற்றின் காப்புரிமை உங்களிடம் இருக்கு, நீங்க பயன் படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்கு கொடுத்து இருக்கிங்க என்பதால் அதுலாம் மென்பொருளாகிறது என்று நீங்கள் சொல்லக்கூடும் :-))//

இப்போ என்ன சொல்ல வந்து இப்படி கம்பு சுத்தறீங்க? இருக்கிற குழப்பம் போறாதுன்னு இன்னும் குட்டையைக் குழப்ப லினக்ஸ் டிஸ்ட்ரோக்களையும் ஆட்டைக்கு சேர்த்து இருக்கீங்க. பசு மாட்டைப் பத்தி படிச்சுட்டுப் போன தேர்வில் பனை மரத்தைப் பத்தி கேள்வி வந்தா என்ன செய்யறது. நடக்கட்டும். ஆனா முதலில் பசு மாட்டைப் பார்க்கலாம் அதுக்குப் பின்னாடி பனை மரத்துக்கு வரலாம். ஒரே இடத்தில் ரெண்டையும் சேர்த்தா குழப்பம் வரும். அதிலும் பாருங்க இந்த டிஸ்ட்ரோக்கள் கூட வணிக டிஸ்ட்ரோக்கள், சமூக டிஸ்ட்ரோக்கள் அப்படின்னு பதம் பிரிச்சுக்கிட்டே போகலாம். ஆனா அதெல்லாம் அப்புறம். முதலில் மென்பொருள் என்றால் என்ன? இதுக்கு உங்க பதிலைச் சொல்லுங்க. முன்னாடி என்னமோ சொல்லி இருந்தீங்க கடைக்குப் போய் காசைக் கொடுத்து வாங்கும் படி இருந்தாத்தான் மென்பொருள் அப்படின்னு. அதுதான் இப்பவுமா? இல்லை அதில் எதேனும் மாற்றம் இருக்கா?

//லேசர் சாப்ட் என்ற சென்னையை சேர்ந்த நிறுவனம் தான் atm மென்பொருள்(சேவை) முன்னணியில் உள்ளது, இன்னும் சிலரும் இப்பணியில் இருக்கக்கூடும்.//
லேசர்சாப்ட் நிறுவனத்தின் வலைத்தளம் சென்று பார்த்தேன். அவர்களிடம் Card Management மற்றும் ATM Reconciliation போன்ற மென்பொருட்கள் (இப்படிச் சொன்னா திட்ட மாட்டீங்களே. உங்க வரை'யறை' என்னன்னு தெரியாததினால் வரும் குழப்பம்) குறித்த தகவல்கள் இருந்தாலும் பாலா பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் ATM Switchகளுக்கான மென்பொருள் செய்வதாகத் தெரியவில்லை.

அப்புறம் மென்பொருள் பத்தி ஒரு முடிவுக்கு வந்த பின் இசை பத்தின கேள்விக்குப் போகலாம் என நினைக்கிறீர்கள் போல. அதனால் என்ன. அப்படியே செய்யலாம்.

said...

//வவ்வால் அண்ணாத்த கீழ இருக்கறதயெல்லாம் ப்ராடக்ட்ஸ்ன்னு ஒத்துக்குவாரா?//

அனானி, இதுதானே வேண்டாங்கிறது. இப்போதான் பசு மாடு, பனை மரம் அப்படின்னு என்னென்னமோ சொல்லி இருக்கேன். நீங்க வேற வந்து ஆட்டுக்குட்டி அரச மரம் அப்படின்னு வேற எதை எதையோ இழுக்கறீங்க. இதெல்லாம் டூ மச்சா இல்ல? கொஞ்சம் பொறுமையா இருங்க.

said...

இப்பதிவுல இருக்கற மேட்டருக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...

நான் கருத்து சொல்லலாமா?

said...

என்ன இராமநாதன் கருத்து சொல்லலாமான்னு கேட்டுகிட்டு? எந்த ஏரியாவா இருந்தாலும் கேள்விப்பட்ட டீட்டெயில சொல்லிட்டு நாமதான் அத்தாரிட்டின்னு பிலிம் காட்டி எஸ் ஆவோமா அதை விட்டுபோட்டு!! எவ்வளோ சொல்லிக் கொடுத்தாலும் புரியாது!!

said...

இ.கொ,

பின்னூட்டம் வாயிலாக விளக்கம் சொல்வது என்பது தெரிந்ததை பகிர்வது, அது ஒரு தன்னார்வ செயல்.அது கூட நான் வாத்தியார் பாடம் எடுக்கிறேன் நீ படினு சொல்வது அல்ல?( நாங்கலாம் அறிவு சீவி ,கூகிள் இருந்தாலும் ,அதை விட என் கிட்டே கேள்வி கேளு , அப்பாலிக்கா வந்து பாடம் படினு தனி வலைப்பதிவு வைத்து ஜல்லி அடிக்கிறவங்களும் இருக்காங்க)

ஆனா ஒரு உரையில் வரும் சில சொற்களை மட்டும் தனியே பிரித்து அதுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கேட்பது வேறு, நான் சொன்னதை முழுவதாகப்பார்த்தால் அதன் பொருள் வேறு, அது தெரியவில்லையா?

ஒரு விண்டோவ்ஸ், போட்டோ ஷாப், கோரல் டிரா போல மென்பொருளை ஏன் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்கவில்லை என்பதே கேள்வி? இதை விட்டு விட்டு, அதில் சொல்லப்பட்ட மென்பொருள், மென்பொருள் சேவை என்றால் என்ன என்பதற்கு அதிக அழுத்தம் தர பெரிதாக ஒரு காரணமும் இல்லை.

இப்போ நீங்களே என்னை கேட்கும் போது, காப்புரிமை உள்ள ஒன்று என்று எப்படி மென்பொருளுக்கு விளக்கம் கொடுத்தீர்கள், அப்படி எனில் திரமூல மென்பொருள்கள் எல்லாம் என்னாவது?

நான் சொன்னதில் "literal " ஆக ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு நீங்கள் கேட்பதால் நானும் கேட்கலாமே,

மென்பொருள் என்றால் காப்புரிமை பெற்றது மட்டுமா? விளக்கம் தேவை!

said...

ஆடியன்ஸ் சைட் சந்தேகம்..
இசை திருட்டு அறிவு சார் வகையா இல்லை கற்பனை சார்ந்ததா?
ஒருவேளை கற்பனையும் அறிவு சார் வகையிலேயே வந்துவிடுமோ? :(
திரை பாடல்கள் அனைத்துமே எதாவது ராகத்தை கொண்டிருக்குமா? அல்லது எந்த ராகத்தயும் சாராத திரை இசை பாடல்களும் இருக்கிறதா?
... எனக்கு இசையை ரசிச்சி மட்டுமே பழக்கம்.. இது போன்ற தகவல்கள் தெரியாது... தெரிந்தவர்கள் விளக்கலாம்....

said...

//பின்னூட்டம் வாயிலாக விளக்கம் சொல்வது என்பது தெரிந்ததை பகிர்வது, அது ஒரு தன்னார்வ செயல்.அது கூட நான் வாத்தியார் பாடம் எடுக்கிறேன் நீ படினு சொல்வது அல்ல?( நாங்கலாம் அறிவு சீவி ,கூகிள் இருந்தாலும் ,அதை விட என் கிட்டே கேள்வி கேளு , அப்பாலிக்கா வந்து பாடம் படினு தனி வலைப்பதிவு வைத்து ஜல்லி அடிக்கிறவங்களும் இருக்காங்க)//

ஒரு கேள்வி கேட்டா அதுக்குப் பதில் சொல்லாம அடுத்தவங்களை கேலி பேசறது எப்படின்னு யாராவது வலைப்பதிவு நடத்தறாங்களா? இல்லை அதெல்லாம் நிறையாப் பின்னூட்டத்திலேயே கிடைக்குதேன்னு பதிவு போடாம விட்டுட்டாங்களா? அதை விட்டுத் தள்ளுங்க. நான் பேசும் இடத்தில் அவியலைப் பத்தி நீ எப்படி பேசலாம், பொரியலைப் பத்தி நீ எப்படி பேசலாம் என்று கொக்கரிக்கும் அறிவி சீவிகள் இருக்கும் இடத்தில் கேள்வி கேட்க பயப்படுபவர்கள் வந்து கேள்வி கேட்கும் இடமா அந்த வலைப்பதிவு இருக்கட்டுமே. என்ன சொல்லறீங்க? அப்படின்னு எழுத நினைச்சேன். ஆனா பெனாத்தலார் வந்து அது என்னடா அவியல் பொரியல் அப்படின்னு என் லேட்டஸ்ட் பதிவை கிண்டல் பண்ற, நீ சொல்ல வந்தது அறிவியல் அப்படின்னு தலையில் தட்டுவாரு. எதுக்கு வம்பு. அது மட்டும் இல்லாம உங்களுக்கு நல்லா கூகிள் பண்ணத் தெரியும் அப்படின்னு இருக்கறதால நாட்டில் எல்லாருக்கும் தெரியணுமா? இல்லை கூகிளைத் தவிர வேறு இடங்களில் தேடிடவே கூடாதா, இல்லை தொழில்முறையான கேள்விக்கு தன் அனுபவம் மூலம் விளக்கம் சொல்லக்கூடாதா? அப்படிக் கூகிள் பண்ணத் தெரிஞ்சவன் எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரி பின்னூட்டம் போடட்டும், எல்லாக்கேள்விக்கும் தனிப்பதிவு போட்டு பதில் சொல்லிக்கட்டும்! தெரியாதவன் அந்த பதிவில் கேள்வி கேட்கட்டும். கேள்வி கேட்டா உருப்படியா அங்க பதில் வரும். இங்க மாதிரி இல்லை!!

//ஆனா ஒரு உரையில் வரும் சில சொற்களை மட்டும் தனியே பிரித்து அதுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கேட்பது வேறு, நான் சொன்னதை முழுவதாகப்பார்த்தால் அதன் பொருள் வேறு, அது தெரியவில்லையா?
ஒரு விண்டோவ்ஸ், போட்டோ ஷாப், கோரல் டிரா போல மென்பொருளை ஏன் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் உருவாக்கவில்லை என்பதே கேள்வி? இதை விட்டு விட்டு, அதில் சொல்லப்பட்ட மென்பொருள், மென்பொருள் சேவை என்றால் என்ன என்பதற்கு அதிக அழுத்தம் தர பெரிதாக ஒரு காரணமும் இல்லை.//

அதாவதுங்க, நீங்க நிறையா இடங்களில் நிறைய கருத்து சொல்லறீங்க. அது எல்லாம் படிக்க நமக்கு நேரமில்லைன்னு வெச்சுக்குங்க. ஆனா நம்ம பாலா பதிவைப் படிக்கும் போது நீங்க சொன்னது கண்ணில் பட்டது. அதுல பாருங்க அங்க என்னென்னமோ விவாதமெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா நம்ம கண்ணில் பட்டது இந்த மேட்டர் மட்டும்தாங்க. அங்க ஒரு நண்பர் வந்து சிட்டிபேங்க் பயன்படுத்தும் மென்பொருள் ஒரு இந்திய கம்பெனியுடையதுதான்னு சொன்னாரு. அதுக்கு நீங்க குடுத்த விளக்கம்தான், என்னை இந்த பதிவைப் போட வைத்தது. என்ன சொல்லி இருக்கீங்க தெரியுமா?

//அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)//

எனக்கு தெரிந்த வரை மென்பொருள் என்றால் என்ன என இருந்த புரிதலுக்கு இது மாற்றாக இருந்ததால்தான் நான் இந்த பதிவையே போட்டேன். இதுல நான் என்னமோ முதல் வரியில் மூணு வார்த்தையும் மூணாவது வரியில் ரெண்டு வார்த்தையை மட்டும் எடுத்து நீங்க சொல்ல வந்ததையே திரித்து சொல்லற மாதிரி ஏன் இப்படி? தனியாச் சொல்லணும் போல அப்படின்னு சொல்லி இருக்கீங்க. சொல்லுங்க கேட்டுக்கறோமுன்னு சொல்லறேன். அதை மட்டும் சொல்லவே மாட்டேங்கறீங்க.

நீங்க சொல்லும் போது வேணா இந்த மென்பொருள், மென்பொருள் சேவைக்கான வரைமுறை பத்தி அதிக அழுத்தம் குடுக்காம இருந்திருக்கலாம். ஆனா இந்த பதிவுக்கான நோக்கமே அதுதான். அதைத் தெரிஞ்சுக்கத்தான் பதிவைப் போட்டதே. அதற்குக் காரணியாக இருந்தது உங்க பின்னூட்டம். அதுக்கு மேல ஒண்ணும் இல்லை. ஒரு நிமிஷம், பதிவுக்கான நோக்கமேன்னு சொல்லிட்டேனோ? நோக்கத்தில் பாதிதான் அது. ரெண்டு கேள்வி இருக்கே, இல்லையா!

அடுத்ததா இந்திய நிறுவனங்கள் ஏன் பெரும் வெற்றி பெற்ற மென்பொருட்களை உருவாக்கலைன்னு கேட்கறீங்க. உலக அளவில் வெற்றி பெற்ற வங்கிகளுக்கான மென்பொருட்களைப் பத்தி நான் சொன்னேன், நம்ம ஊர் அளவில் வெற்றி பெற்ற மென்பொருட்களை ஒரு அனானி சொல்லி இருக்காரு, Custom Software என ஓகை சொல்லி இருக்காரு. அதில் மேல்விபரம் வேணுமுன்னா அவரைக் கேட்கலாம். இதெல்லாம் உங்க கண்ணில் படவே இல்லை போல!

//இப்போ நீங்களே என்னை கேட்கும் போது, காப்புரிமை உள்ள ஒன்று என்று எப்படி மென்பொருளுக்கு விளக்கம் கொடுத்தீர்கள், அப்படி எனில் திரமூல மென்பொருள்கள் எல்லாம் என்னாவது?

நான் சொன்னதில் "literal " ஆக ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு நீங்கள் கேட்பதால் நானும் கேட்கலாமே,

மென்பொருள் என்றால் காப்புரிமை பெற்றது மட்டுமா? விளக்கம் தேவை!//

நல்ல கதையா இருக்கு. மென்பொருளா இருக்கறதை நீங்க சேவை அப்படின்னு சொல்லுவீங்களாம். அது எப்படி கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்சு இதுதானே மென்பொருள் அப்படின்னான்னு கேட்டா அதுக்கு பதில் கேள்வி கேட்பீங்களாம். ஆனா உங்க புரிதல்படி மென்பொருள் அப்படின்னா என்னான்னு சொல்லவே மாட்டீங்களாம். நல்ல போங்குதான் போங்க. எனக்கு திறமூல (திரமூல இல்லை, விக்கியில் திறமூலம் எனச் சுருக்காமல் திறந்த மூலம் என குறிப்பிடுவதுதான் சிறந்தது என விவாதம் நடந்தது. உடனே எழுத்துப்பிழை எல்லாம் சுட்டிக் காட்டறான்னு வராதீங்க. நீங்க சொல்வது எல்லாம் சரின்னு நிறையா பேரு இருக்கும் போது அவங்க தப்பாப் புரிஞ்சுக்கூடாது இல்லையா. அதுக்குத்தான்.) மென்பொருட்கள் பத்தின அறிமுகம் அவ்வளவு கிடையாது. ஆனா அதில் தொழில்முறையா தினமும் புழங்கும் நண்பர்கள் இருக்காங்க. அவங்களைக் கேட்டுச் சொல்லறேன். தெரியாத விஷயத்தில் தப்புத்தப்பா எதையாவது சொல்லிட்டு அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்கும் போது எதிர்கேள்வி கேட்டு பிரச்சனையைத் தலை கீழா திருப்ப நான் என்ன... சரி வேண்டாம் விடுங்க.

said...

இ.கொ,
//அண்ணாத்த, விளக்கம் சொல்வது என்பது வேறு, உபயோகமற்ற தகவல் கொடுத்து திசை திருப்பி ஏதோ பேசுவது வேறு.//

இதை கூட நீங்க தான் சொன்னிங்க, அது எப்படி யாராவது அவர்களுக்கு தெரிந்ததை சொல்ல முன் வந்தால் , உபயோகமற்ற தகவல் என்று சொல்விங்க, நீங்க சொன்னா அது உபயோகமானது தாங்கலை சாமி :-))

உங்களைப்பார்த்து கேள்விக்கேட்டுட்டா உடனே எப்படி அடுத்தவங்க சொல்றதுலாம் உபயோகமற்றதுனு சொல்றிங்க, ஆனா நான் சொல்லிட்டா, கிண்டல் செய்ய வந்துட்டார் அப்படினு சொல்றிங்க,

//ஒரு கேள்வி கேட்டா அதுக்குப் பதில் சொல்லாம அடுத்தவங்களை கேலி பேசறது எப்படின்னு யாராவது வலைப்பதிவு நடத்தறாங்களா?//

இதையே தான் உங்களையும் நான் கேட்கிறேன்!

//எனக்கு தெரிந்த வரை மென்பொருள் என்றால் என்ன என இருந்த புரிதலுக்கு இது மாற்றாக இருந்ததால்தான் நான் இந்த பதிவையே போட்டேன்.//
.
.
.
//எது மென்பொருள், எது மென்பொருள் சேவை அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம்.//
.
.
.//தெரியாத விஷயத்தில் தப்புத்தப்பா எதையாவது சொல்லிட்டு அப்புறம் மாட்டிக்கிட்டு முழிக்கும் போது எதிர்கேள்வி கேட்டு பிரச்சனையைத் தலை கீழா திருப்ப நான் என்ன... சரி வேண்டாம் விடுங்க.//

இதெல்லாம் நீங்க சொன்னது , உங்களுக்கே செமையா பொருந்துவது தான் விதி போல :-))

இப்போ ஒரு படத்தில கவுண்டமணி காமெடி வந்தது அதான் நினைவுக்கு வருது, ஷாருக் கான் படத்தை காட்டி சத்யராஜ் இவன் யாருனு தெரியலை தங்கச்சி லவ் பண்றா போல இருக்குனு சொல்வார்,

அதுக்கு கவுண்டர் பலமா சிரிச்சு இது கூட தெரியாம , ஜெனெரல் நாலேஜ்ஜ வளர்த்துக்கணும், இவர் தான் இந்தி நடிகர் சல்மான் கான் , ட்ரெயின் மேல தையா தையானு பாடுவாரே என்பார்!

அந்த காமெடி ஏனோ சம்பந்தமில்லாமல் எனக்கு நினைவுக்கு வருது :-))

*
மைக்ரோ சாப்ட் = இன்போசிஸ், இரண்டும் ஒரே வகையில் மென் பொருள் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளது.எனவே எந்த வித்தியாசமும் இல்லை.

இன்போசிஸ் என்பது மென்பொருள் சேவை செய்யவே இல்லை என்பதும் புரிந்துக்கொண்டேன்.

ஆனால் இன்போசிஸ் இணையதளத்தில் எல்லாம் இப்படித்தான் இருக்கு,
//Infosys' service offerings span business and technology consulting, application services, systems integration, product engineering, custom software development, maintenance, re-engineering, independent testing and validation services, IT infrastructure services and business process outsourcing.//

இதில கஸ்டம் சாப்ட்வேர் டெல்வெலப்மெண்ட் என்பது மட்டுமே நீங்க சொன்னது போல இருக்கலாம், ஆனால் எங்கப்பார்த்தாலும் சொலுஷன், செர்விஸ் என்று வருவதால் நான் இவர்களை மென் பொருள் சேவை வழங்குபவர்கள்னு நினைத்து விட்டேன் என்ன இருந்தாலும் 3 ஆம் வகுப்பு படிச்சவன் தானே.

ஓகை சொன்னாரே ஏற்கனவே கஸ்டம் சாப்ட்வேர் என்று கேட்கலாம், நான் போடும் பல பின்னூட்டங்களை நீங்கள் படிக்க முடியாதது போல எனக்கும் பல பின்னூட்டங்களை படிக்க முடிவதில்லை, அதில் கவனத்தில் வரமால் போய் இருக்கலாம்.

இதில் எனக்கு இன்னும் ஒரு சந்தேகம்(பதில் சொல்லாம திருப்ப கேள்விக்கேட்கிறேன் சொல்லக்கூடும், இந்த கேள்வியில் பதில் உள்ளது)

விண்டோவ்ஸ் எக்ஸ்பீ வாங்குகிறேன் என்றால் அதை கடைசிவரைக்கும் நான் பயன்ப்படுத்த முடியும், இத்தனைக்காலத்திற்கு பிறகு பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்போவதில்லை.

இப்போ கஸ்டம் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் என்று செய்துக்கொடுத்தாலும் , மென்பொருள் நிறுவனத்தின் சேவையை வைத்திருக்கும் வரையில் மட்டுமே அந்த "csd" பொருளை ஒரு வாடிக்கையாளர் பயன்ப்படுத்த முடியும், அப்போ அதுக்கு பேர் என்ன?

எனது புரிதல் மென்பொருள் சேவை என்பதாகும்.

ஒரு கார் சொந்தமாக வாங்கி நாமே ஒட்டிக்கொள்வது வேறு, வாடகைக்கு கார் (rent a car - selfdriving)எடுத்து ஓட்டிக்கொள்வது வேறு.

இப்போ கார்களை நம் தேவைக்கு வைத்திருந்து , கேட்கும் போது ஒரு குறித்த காலம் வரைக்கும் பயன்ப்படுத்த அளிப்பது சேவை என்று சொல்லலாமா இல்லை கார் விற்பனை என சொல்லலாமா?

அல்லது அப்படி வாடகைக்கு எடுத்த காரை "சொந்த வாடகை கார்" என்று நீங்கள் சொல்லிக்கொள்பவர் எனில் , நீங்கள் சொல்வது எல்லாமே சரி தான், நான் ஒதுங்கிக்கொள்கிறேன் :-))

customer, client , அப்படி என்கிற இரண்டு வார்த்தைக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருள் தான் ஆனா அதைப்பயன்படுத்தும் விதம் வேறு என்பது பொதுவாக எல்லாருக்கும் புரியும்.

இந்திய மென்பொருள் துறைல பெரும்பாலும் யாருக்கு வேலை செய்கிறார்களோ அவர்களை client,என்று தான் சொல்கிறார்கள் "customer" என்பதில்லை.

பெரும்பாலும் யார் ஒன்றை முழுசாக விலைக்கொடுத்து வாங்குகிறார்களோ அவரை கஸ்டமர் என பெரும்பாலும் அழைக்கிறார்கள்.

சேவையை பயன்ப்படுத்துபவர்களை client என்றே அழைக்கிறார்கள்.

இதுக்கும் மேல இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை, இது தான் எனது புரிதல். இதனை உபயோகமற்ற தகவல்களை கூறி திசை திருப்புவதாக எடுத்துக்கொண்டாலும் எனக்கு கவலை இல்லை.

காப்புரிமை பெற்ற மென்பொருள்களே மென்பொருள் என்ற உங்கள் புரிதலை விட எனது புரிதல் அத்தனை மோசமாக இல்லை என்றே நினைக்கிறேன் :-))

said...

Mr FreeMason,

You are hereby directed to look after your vivasayam. It has been noted that you spend too much time on commenting just for the sake of the comedy it invokes. Well, we are also pleased to read all these stuff and laugh our heart aloud. but since it saps too much of your time, immediately revert back to your vivasayam and teaching your children. (புள்ளகுட்டிகளை படிக்க வைங்கப்பா!)

your regular customer / client :-)

said...

வரவர நீங்க ரொம்பக் கேள்விகள் கேக்குறீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்லை சொல்லீட்டேன் :D

said...

இ.கொ,

"SaaS - Software as a Service " - இதை எப்படி மொழி மாற்றம் செய்வீர்கள்? மென்பொருள் சேவை??

said...

தெளிவா தெரிஞ்ச ஒன்னைப் பத்தி யாராவது பேசினா அங்க எனக்குத் தெளிவா தெரிஞ்சதைப் பத்திச் சொல்லாம போகலாமா? அதனால இந்தப் பின்னூட்டம்.

எனக்குத் தெளிவா தெரிஞ்சது: இங்கே பேசப்படும் இரண்டு விதயங்களைப் பற்றியும் ஒரு மண்ணுமே தெரியாதுங்கறது தான். :-)

குறிப்பு: பின்னூட்டங்கள் எல்லாம் மீண்டும் வந்து படிக்கிறேன். :-)

said...

ராகம் தாளம் விஷயத்திலே உள்ளே புகுந்துக்கலாம்ன்னு நினைத்தேன்! ஆனால் அதுக்கு முன்னே உங்க நேர் நிர்க்கும் பார்வை ஐ லைக் இட்!!!!

said...

http://www.rediff.com/money/2008/feb/25forbes.htm

கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு மேட்டர்!! :))

said...

இந்த வேடிக்கை பாக்குறதுல இருக்குற சொகம் இருக்கே...அடடா.... (இங்கே நெறய கேசு நம்மளப்போலத்தான் போல :)

சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா!

ஏங்க கொத்ஸு, கேக்குறதுதான் கேக்குறீங்க கொஞ்சம் புரியிற மாதிரி கேள்வி கேக்கக்கூடாதாப்பூ?? :)

said...

இது 40.

said...

இது 41.

முகப்புல இனிமே தெரியாதா..

நாலு நாலா முகப்புல பதிவு தெரியுது. படிச்சி பார்த்தா ஒரே கொயப்பமாத்தான் கீது.

இனி இந்த பதிவு கண்ணுல பட்டு கொயப்பாது இல்லை. :)

said...

தெளிவா தெரிஞ்ச ஒன்னைப் பத்தி யாராவது பேசினா அங்க எனக்குத் தெளிவா தெரிஞ்சதைப் பத்திச் சொல்லாம போகலாமா? அதனால இந்தப் பின்னூட்டம். //குமரன் என்ன இது? தெளிவா தெரிஞ்ச மேட்டரில் மட்டும்தான் கருத்து சொல்லணுமா? யார் சொன்னது :-))))

said...

//அவர்களும் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிகளைப் போன்றவர்கள் தான்!//

//அவர்களுக்கு நிலம் கிட்டியும், அது போதவில்லை என்று புகார் வேறு கூறுகின்றனர்!

சாலைகள் சரியில்லை என்று ஒரு புகார், ஆனால் எதற்காக அவர்களுக்கு வேண்டி இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரியவைல்லை, அவர்களது சமூகப் பொறுப்பை அவர்கள் சரியாக நிறைவேற்றாதபோது ! //

cnr.rao அவர்களின் பேட்டியில் இருந்து சில வரிகள் இவை, இந்த பேட்டியையை ஒட்டி , எ.அ.பாலா பதிவாக போட்டுள்ளார் அதில், ராவ் அவர்களின் கருத்தினை ஒட்டியே , இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மென் பொருள் சேவை செய்வன (ராவ் கூலித்தொழில் என்று சொன்னார்) என்று நான் சொன்னேன், ராவ் கருத்தில் எனக்கும் உடன் பாடே, ஏன் பாலாவுக்கும் உடன் பாடே, அதனால் தானே பதிவு போட்டார்.

ஆனால் நீ எப்படி மென் பொருள் சேவை என்று சொல்லலாம், அப்படினா என்ன என்று கேட்டார்(சரி நம்மால் ராவை, அல்லது பாலாவை கேட்க முடியாது , வவ்வாலையாவது கேட்போம் என்று கேட்டார் போல அல்லது வேறுக்காரணம் இருந்திருக்கலாம்)

கேட்பது தான் கேட்டார் கேள்வி மட்டும் கேட்கப்படாதா, மென்பொருள்னா என்ன, மென்பொருள் சேவைனா என்னானு விளக்கம் கொடுக்க போய் என் கிட்டே மாட்டிக்கிட்டார், கொத்தனார் தெரியாத்தனமா விட்டத நானும் பிடிச்சுக்கிட்டேன், இப்போ என்ன செய்வதுனு தெரியாம , சுற்றி வளைக்கிறார் அண்ணாத்த :-))

இப்போ நீ சொன்னது தப்பு இதான் சரினு சொல்லும் போது அதை சரியா சொல்லனும்ல!(காப்புரிமை பெற்றது தான் மென்பொருள் என்று சொல்லும் அளவுக்கு மடத்தனம் எதுவும் இருக்க முடியாது)

இதுக்கும் மேலவும் அவரை ஊரை சுற்ற வைக்கணுமா, எனவே அவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் , இங்கே நான் மேற்கொண்டு பேசும் அளவுக்கு சமாச்சாரம் எதுவும் இல்லை.

பின்குறிப்பு:

இங்கே பல அறிவு சீவிகள் வந்து அட்சதை தூவிட்டு போனார்கள் ஆனால் காப்புரிமை பெற்ற ஒன்று தான் மென்பொருள் என்று சொன்னதில் இருந்த பிழையை சுட்டிக்காட்டாமலே , அப்படியே ஒன்றும் தெரியாதவர்கள் போல , கை நாட்டுப்போல நல்லப்பிள்ளையாக போனார்களே அது எப்படி? இருக்கட்டும் நாளைக்கே நம்மைப்பார்த்து ஷார்ப்பா கேள்விக்கேட்கும் போது இதை பயன்ப்படுத்திக்கிறேன்!

said...

ஸ்ரீதர், நீங்க சொன்னது எல்லாம் படிச்சுப் பார்த்தேன் கொஞ்சம் குழப்பமா இருக்கு. கொஞ்சம் விபரமாச் சொல்லுங்களேன்.

//சிட்டி பேங்க் அளிப்பது வங்கி சேவை. அதற்க்கு சில மென்பொருள்கள் உபயோகபடுத்துகிறார்கள்.//

இதுல உங்க புரிதல் தவறு. முழு விஷயமும் பாலா அண்ணா பதிவில் இருக்கு. சிட்டி பயன்படுத்தும் ஒரு மென்பொருளைப் பத்தி ஒரு நண்பர் சொல்லி இருந்தாரு. அது மென்பொருள் இல்லை சேவைதான் அப்படின்னு வவ்வால் சொல்லி இருந்தாரு. வங்கி வழங்கும் சேவைகள் பத்தி பேசவே இல்லை. நீங்க பாலா அண்ணா பதிவில் பின்னூட்டங்களைப் பார்த்தா இதன் பின்புலம் கிடைக்கும்.

said...

//அய்யா சாமிகளே, கம்ப்பூட்டர உபயோகத்துக்கு கொண்டு வர எழுதப்படுகிற அனைத்து புரோகிராமுமே மென்பொருள்தான். இதுல போட்டொ ஷாப் மாதிரியான மென்பொருட்கள் உடனடியா அதாவது வாங்கி இன்ஸ்டால் செஞ்ச உடனே உபயோகப்படுத்தற "அவுட் ஆப் த ஷெல்ப்" மென்பொருட்கள்னு சொல்லலாம். மென்பொருள் சேவைன்னு ஒன்ன ஏம்ப்பா புதுசா கண்டு புடிச்சுக்கிட்டு தொங்கறீங்க?//

புதுசா எல்லாம் கண்டுபிடிக்கலை அனானி அண்ணா, இதெல்லாம் இருக்கறதுதான். எதோ ஒரு மென்பொருளை, நிறுவ அல்லது பேண தரும் சேவைகளை அல்லது அந்த மென்பொருள் தயாரிப்பில் ஒரு பகுதியாக கூலிக்கு கோட் எழுத தரும் சேவைகளைத்தான் இங்கு மென்பொருள் சேவை எனச் சொல்கிறோம்.

//இசையில ஒரு ராகத்த உபயோகப்படுத்துனா அது இசைத்திருட்டு இல்ல இல்ல இல்ல. ஆனா "மெட்"ட "ராகத்த" இல்ல மெட்ட அப்படியே காப்பி அடிச்சா அது திருட்டு. ஒரு உதாரனத்துக்கு "கண்ணல்ல கண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கண்ணங்கள் ரோஜாப்பூ" பாட்டும் "பேசும் மணி முத்து ரோஜாக்கள், பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்" பாட்டும் ஒரே மெட்டு. அது அறிவுத்திருட்டு.//

நான் நினைப்பதும் இப்படித்தான். ஆனா இந்த திருட்டை ஏன் யாரும் கண்டு கொள்வதே இல்லை? (இந்த கேள்வி இருக்குன்னு நீங்களாவது கண்டுக்கிட்டீங்களே. ரொம்ப நன்றி தல!)

said...

//எப்படியோ, செமையா குழப்பிட்டீங்க. வெளங்கிரும்//

இளா, இது என்னைப் பார்த்து சொல்லலைதானே?! :))

said...

//ஆரம்பிச்சுருச்சா வாக்கு வாதம். இல்லை விவாதமா?

நடுவர் வேணுமா?

ஓரமா உக்கார்ந்து பார்க்கிறேன்:-))))//

ரீச்சர், பசங்க ரொம்ப சத்தம் போட்டோமுன்னா வந்து ஒரு தட்டு தட்டுங்க. சரியா? :))

said...

//இப்பதிவுல இருக்கற மேட்டருக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...

நான் கருத்து சொல்லலாமா?//
ராமநாதன் அண்ணா, என்னதான் இந்தியாவுக்கு ரஷ்யாவுக்கும் தொலைவு அதிகம் என்பதால் இப்படி எல்லாம் சொல்லி டச் பண்ணக்கூடாதுண்ணா!

உங்களை மாதிரி எல்லாம் தெரிஞ்ச நல்லவரு வல்லவருங்க வந்து கருத்து சொல்லாம வேற யாருண்ணா சொல்லுவாங்க?

said...

//என்ன இராமநாதன் கருத்து சொல்லலாமான்னு கேட்டுகிட்டு? எந்த ஏரியாவா இருந்தாலும் கேள்விப்பட்ட டீட்டெயில சொல்லிட்டு நாமதான் அத்தாரிட்டின்னு பிலிம் காட்டி எஸ் ஆவோமா அதை விட்டுபோட்டு!! எவ்வளோ சொல்லிக் கொடுத்தாலும் புரியாது!!//

அல்லாம் தெரிஞ்ச அண்ணா, என்னைத் திட்டணமுன்னா நல்லாத் திட்டுங்கண்ணா. தெரியாம கேள்வி கேட்டுட்டேன். அந்த ஒரு விஷயத்துக்கே நல்லாத் திட்டுங்கண்ணா!!

said...

//என்னதான் இந்தியாவுக்கு ரஷ்யாவுக்கும் தொலைவு அதிகம் என்பதால் இப்படி எல்லாம் சொல்லி டச் பண்ணக்கூடாதுண்ணா!//

முதல்ல ப்ளாக்கர்.காம் சர்வர் இருக்கறது இந்தியால இல்ல. அமெரிக்காவுல. ஸோ, உம்ம போஸ்ட் அமெரிக்காவுல இருக்கு. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இருக்கற தூரத்த விட அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இருக்கற தூரம் அதிகம்.

இதுகூட தெரியாம பதிவு போடறேன் பதில் சொல்லுனு சின்னப்பிள்ளைத்தனமா அலைஞ்சால்லாம் கருத்து சொல்லமுடியாது.

முதல்ல எது எது எங்க இருக்குனு, ஒவ்வொரு ஊருக்கு இடையேயும் எத்தினி தூரம்னு எல்லாம் தெரிஞ்சுகிட்டு வாங்க.

said...

//ஆடியன்ஸ் சைட் சந்தேகம்..
இசை திருட்டு அறிவு சார் வகையா இல்லை கற்பனை சார்ந்ததா?
ஒருவேளை கற்பனையும் அறிவு சார் வகையிலேயே வந்துவிடுமோ? :(//

ஆடியன்ஸ் எனச் சொல்லி இசை சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்ட நகாசு வேலை அருமை!! வாங்க சஞ்சய்.

Intellectual Theft or Creative Theft என கேட்க முனைகிறீர்கள் என நினைக்கிறேன். கற்பனையில் உதித்த ஒரு பாடலை உருவாக்கிய பின் அதன் அறிவுசார் காப்புரிமை அந்த பாடலை இசையமைத்தவரிடம் வந்து விடுகிறது அல்லவா?

//திரை பாடல்கள் அனைத்துமே எதாவது ராகத்தை கொண்டிருக்குமா? அல்லது எந்த ராகத்தயும் சாராத திரை இசை பாடல்களும் இருக்கிறதா?//

ராக அடிப்படையில் இல்லாத பாடல்களும் அனேகம் என்றுதான் நினைக்கிறேன்.

//... எனக்கு இசையை ரசிச்சி மட்டுமே பழக்கம்.. இது போன்ற தகவல்கள் தெரியாது... தெரிந்தவர்கள் விளக்கலாம்....//

எனக்கும்தான்! ஆனாப் பாருங்க. கேள்வி கேட்டா பதில் கேள்விதான் வருது. என்ன செய்ய? :((

said...

//இதை கூட நீங்க தான் சொன்னிங்க, அது எப்படி யாராவது அவர்களுக்கு தெரிந்ததை சொல்ல முன் வந்தால் , உபயோகமற்ற தகவல் என்று சொல்விங்க, நீங்க சொன்னா அது உபயோகமானது தாங்கலை சாமி :-))

உங்களைப்பார்த்து கேள்விக்கேட்டுட்டா உடனே எப்படி அடுத்தவங்க சொல்றதுலாம் உபயோகமற்றதுனு சொல்றிங்க, ஆனா நான் சொல்லிட்டா, கிண்டல் செய்ய வந்துட்டார் அப்படினு சொல்றிங்க,//

என்னது, நான் உங்களைப் பார்த்து சொன்னேனா? நீங்க எதோ வலைப்பதிவை எல்லாம் பத்தி இங்க வந்து பொதுவா சொன்னீங்களே, அந்த மாதிரி நானும் பொதுவாத்தான் சொன்னேன். உங்களுக்கு ஏன் சுருக்குன்னுபடுது? ஒண்ணும் புரியலை போங்க!

//இதையே தான் உங்களையும் நான் கேட்கிறேன்!//

அதான் தெரியுமே, உங்களை ஒண்ணு கேட்டா, அதையே திரும்பி என்னையே கேட்பீங்க. வழக்கமா நடக்கறதுதானே. விட்டுத் தள்ளுங்க.

//இதெல்லாம் நீங்க சொன்னது , உங்களுக்கே செமையா பொருந்துவது தான் விதி போல :-))//

எனக்கு மென்பொருள் என்பதற்கு இருந்த புரிதல் நீங்கள் சொல்வதற்கு வேறு விதமாக இருந்ததால், சரியாகத் தெரிந்து கொள்ளலாமே என ஒரு கேள்வியைக் கேட்டேன். வெறும் கேள்வி கேட்காமல் என் புரிதல் இது, நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை என்பதால் விளக்க முடியுமா எனக் கேட்டேன். நீங்கள் அதற்குப் பதில் சொல்லாமல் திறந்த மூல மென்பொருட்கள் பற்றி எதிர் கேள்வி கேட்ட பொழுது எனக்கு திறந்த மூல மென்பொருட்கள் பற்றி பரிச்சியம் இல்லை. அதனால் அது பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை எனச் சொன்னேன். இதில் என்ன குழப்பம்?

என்னது, out of context ஆக ஒருவர் சொல்வதை எடுத்து எப்படி திசைதிருப்பலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொன்னீர்களா? சரியாப் போச்சு, அதை சொல்லி இருந்தா இப்படி மூச்சு முட்ட பதில் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேனே!!

//அந்த காமெடி ஏனோ சம்பந்தமில்லாமல் எனக்கு நினைவுக்கு வருது :-))//

சம்பந்தமில்லாமல் ஞாபகம் வருவது என்ன புதுசா? ஆனா காமெடின்னு சொல்லறீங்க, எனக்குத்தான் சிரிப்பே வரலை!

//மைக்ரோ சாப்ட் = இன்போசிஸ், இரண்டும் ஒரே வகையில் மென் பொருள் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளது.எனவே எந்த வித்தியாசமும் இல்லை.

இன்போசிஸ் என்பது மென்பொருள் சேவை செய்யவே இல்லை என்பதும் புரிந்துக்கொண்டேன்.//

மேலோட்டமா ஒரு பார்வை பார்த்து கருத்து சொல்லிட்டீங்க போல!! இன்போஸிஸ் மென்பொருள் சேவை செய்யலைன்னும் சொல்லலை, அவங்க வருமானத்தில் அது பெரும்பங்கு வகிப்பதையும் இல்லைன்னு சொல்லலை. ஆனா அவங்க வங்கிகளுக்கான ஒரு மென்பொருள் (சேவை இல்லை, மென்பொருள்தான்) செய்யறது பத்தி தெரியுமான்னுதான் கேட்டேன். நீங்க சொல்லும் அதே வலைத்தளத்தில்தான் இதுவும் இருக்கு, (http://www.infosys.com/finacle/index.asp)

Finacle, the universal banking solution from Infosys, empowers banks to transform their business leveraging agile new generation technologies. This modular solution addresses the core banking, treasury, wealth management, consumer and corporate e-banking, mobile banking and web based cash management requirements of retail, corporate and universal banks worldwide.

//ஆனால் எங்கப்பார்த்தாலும் சொலுஷன், செர்விஸ் என்று வருவதால் நான் இவர்களை மென் பொருள் சேவை வழங்குபவர்கள்னு நினைத்து விட்டேன் என்ன இருந்தாலும் 3 ஆம் வகுப்பு படிச்சவன் தானே.//

இதுல Solution என வருவதால் குழம்பிவிட்டீர்கள் போலத் தெரிகிறது. ரெண்டாவது முடிக்காத எனக்கே தெரிஞ்சது மூணாப்பு படிச்ச உங்களுக்குத் தெரியாமப் போனது ஆச்சரியம்தான்! இதே மாதிரி TCS வலைத்தளம் போனீங்கன்னாக்கூட அவங்க மென்பொருள் சேவைகளை பத்தி பேசும் பொழுது அவங்களோட மென்பொருள் பத்தியும் பேசும்.

//விண்டோவ்ஸ் எக்ஸ்பீ வாங்குகிறேன் என்றால் அதை கடைசிவரைக்கும் நான் பயன்ப்படுத்த முடியும், இத்தனைக்காலத்திற்கு பிறகு பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்போவதில்லை.//

ஆமாம். சொல்லப் போவதில்லை! இதுக்குப் பேரு Perpetual Licensing. இன்று நான் சார்ந்திருக்கும் துறையில் இது ரொம்ப சாதாரணம். இப்படி இருந்தாலும் அந்த நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அந்த மென்பொருளுக்கு தொடர்ந்து சப்போர்ட் தரப்போவதில்லை எனச் சொல்ல முடியும். இப்போ விண்டோஸின் முதல் வெர்ஷனுக்கு சப்போர்ட் உண்டா? ஆனால் எங்கேயாவது யாராவது அதனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அது அவர்களது சௌகரியம்.

//அல்லது அப்படி வாடகைக்கு எடுத்த காரை "சொந்த வாடகை கார்" என்று நீங்கள் சொல்லிக்கொள்பவர் எனில் , நீங்கள் சொல்வது எல்லாமே சரி தான், நான் ஒதுங்கிக்கொள்கிறேன் :-))//

உங்களுக்கு வந்தா மாதிரி சம்பந்தமில்லாமல் எனக்கும் ஒரு ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது. As a friend of mine says you cant buy beer, you only rent it! புரிஞ்சவங்களுக்கு சிரிப்பு வரும்.

//இந்திய மென்பொருள் துறைல பெரும்பாலும் யாருக்கு வேலை செய்கிறார்களோ அவர்களை client,என்று தான் சொல்கிறார்கள் "customer" என்பதில்லை.//

ஆக மொத்தம் மென்பொருள் என்னும் டாபிக்கில் இருந்து கார் வழியாக Client - Customer semanticsக்கு வந்தாச்சு, அடுத்து என்ன பேசலாம் காக்கா கடை கடலைமிட்டாயா? ஆனாலும் சும்மாச் சொல்லக்கூடாது, சூப்பர்ய்யா!!

//காப்புரிமை பெற்ற மென்பொருள்களே மென்பொருள் என்ற உங்கள் புரிதலை விட எனது புரிதல் அத்தனை மோசமாக இல்லை என்றே நினைக்கிறேன் :-))//

அண்ணாச்சி கடையில் கிடைப்பதுதான் மென்பொருள் என்பதை விட நான் சொன்னது ஒண்ணும் ரொம்ப தப்பாத் தெரியலை. (மெல்லும் பொருள் என்பது மென்பொருள் ஆகுமா? அதுதானே அண்ணாச்சி கடையில் கிடைக்கும், அதனால சந்தேகம்.) உங்க புரிதல் என்னான்னுதானே கேட்டு இருக்கேன். அதுக்குப் பதில் சொல்லாமத்தான் பனை மரத்தைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னா பசு மாட்டைப் பத்தி எழுதறீங்களே. இன்னும் என்னத்த சொல்ல!

said...

//Mr FreeMason,

You are hereby directed to look after your vivasayam. It has been noted that you spend too much time on commenting just for the sake of the comedy it invokes. Well, we are also pleased to read all these stuff and laugh our heart aloud. but since it saps too much of your time, immediately revert back to your vivasayam and teaching your children. (புள்ளகுட்டிகளை படிக்க வைங்கப்பா!)

your regular customer / client :-)//

ஐயா அனானி, விவசாயம் அப்படின்னு சொல்லிட்டீங்க. அப்புறம் களை புடுங்கலைன்னா எப்படி?

நான் இங்க களைன்னு சொன்னது என் சந்தேகங்களைத்தான் நீங்க வேற தப்பாப் புரிஞ்சுக்கப் போறீங்க.

அப்புறம் அது என்ன Customer / Client? இங்க வந்திருக்கும் விளக்கத்தை வெச்சு நான் விலை போயிட்டதா சொல்லிடப் போறாங்க!!

said...

//வரவர நீங்க ரொம்பக் கேள்விகள் கேக்குறீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்லை சொல்லீட்டேன் :D//

ஜிரா, மொத ஆளா வந்து இதைச் சொல்லி இருக்க வேண்டாமா? இப்ப டூ லேட்டு!! :)))

said...

//இ.கொ,

"SaaS - Software as a Service " - இதை எப்படி மொழி மாற்றம் செய்வீர்கள்? மென்பொருள் சேவை??//

ஆஹா!! கேட்ட ரெண்டு கேள்விக்கே பதில் வரலை இப்போ அடுத்ததா? நல்லா இருங்கடே!!

மென்பொருளே சேவையாய்!! இது நல்லா இருக்கா? :))

said...

//தெளிவா தெரிஞ்ச ஒன்னைப் பத்தி யாராவது பேசினா அங்க எனக்குத் தெளிவா தெரிஞ்சதைப் பத்திச் சொல்லாம போகலாமா? அதனால இந்தப் பின்னூட்டம்.

எனக்குத் தெளிவா தெரிஞ்சது: இங்கே பேசப்படும் இரண்டு விதயங்களைப் பற்றியும் ஒரு மண்ணுமே தெரியாதுங்கறது தான். :-)

குறிப்பு: பின்னூட்டங்கள் எல்லாம் மீண்டும் வந்து படிக்கிறேன். :-)//

ரொம்பத் தெளிவா சொல்லிட்டீங்க. பின்னூட்டம் எல்லாம் சாய்ஸில் விடுங்க. கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொன்னா நானே சொல்லி அனுப்பறேன்.

said...

//இந்த வேடிக்கை பாக்குறதுல இருக்குற சொகம் இருக்கே...அடடா.... (இங்கே நெறய கேசு நம்மளப்போலத்தான் போல :)//

நல்லா இருங்கடே!!

//சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா!//

அது சரி. கேட்டது ரெண்டு கேள்வி. அதில் ஒண்ணை யாருமே கண்டுக்கலை. ரெண்டாவது சும்மா சுத்தி சுத்தி வருதே தவிர மேட்டர் என்னமோ முடியற மாதிரி தெரியலை. என்னத்த சொல்ல...

//ஏங்க கொத்ஸு, கேக்குறதுதான் கேக்குறீங்க கொஞ்சம் புரியிற மாதிரி கேள்வி கேக்கக்கூடாதாப்பூ?? :)//

ஹிஹி... நாம ஒரு கேள்வி கேட்டோமுன்னா சும்மா.....:))

said...

//இது 40.//

இது 58ங்க!!

said...

//இது 41.

முகப்புல இனிமே தெரியாதா..//

நல்லா இருங்கடே!!

//நாலு நாலா முகப்புல பதிவு தெரியுது. படிச்சி பார்த்தா ஒரே கொயப்பமாத்தான் கீது.//

அதனாலதான் தலைவர் எட்டு எட்டா பிரிக்கச் சொல்லி இருக்காரு!! :))

//இனி இந்த பதிவு கண்ணுல பட்டு கொயப்பாது இல்லை. :)//

நீங்க அந்த ரெண்டாவது டேப் பக்கமே போறது இல்லையா? :))

said...

//தெளிவா தெரிஞ்ச ஒன்னைப் பத்தி யாராவது பேசினா அங்க எனக்குத் தெளிவா தெரிஞ்சதைப் பத்திச் சொல்லாம போகலாமா? அதனால இந்தப் பின்னூட்டம். //

குமரன் என்ன இது? தெளிவா தெரிஞ்ச மேட்டரில் மட்டும்தான் கருத்து சொல்லணுமா? யார் சொன்னது :-))))//

அதானே!! என்ன குமரன் இது? ஓ!! இந்தப் பதிவின் பின்னூட்டங்களை நீங்க படிக்கலையா?

ஆனா உஷாக்கா பாருங்க எம்புட்டுத் தெளிவா இருக்காங்க!! ;-)

said...

//இங்கே பல அறிவு சீவிகள் வந்து அட்சதை தூவிட்டு போனார்கள் ஆனால் காப்புரிமை பெற்ற ஒன்று தான் மென்பொருள் என்று சொன்னதில் இருந்த பிழையை சுட்டிக்காட்டாமலே , அப்படியே ஒன்றும் தெரியாதவர்கள் போல , கை நாட்டுப்போல நல்லப்பிள்ளையாக போனார்களே அது எப்படி? //

நல்லா சொன்னீங்க வவ்வால்! அறிவு சீவிங்க ன்னா தெரியுதோ தெரியலையோ எதோ ஒண்ணு எழுதித் தள்ளிக்கிட்டே இருந்து, அவனை மடக்கிட்டேன், இவனை மடக்கிட்டேன்னு பந்தா வுடறதுதான்ற சிம்பிள் லாஜிக் தெரியாத அறிவுசீவிங்களா இருக்காங்களே!

ஒரு கேள்வி கேட்டா அதுக்கு விளக்கம் தெரிஞ்சா மட்டும்தான் சொல்வேன், மத்தபடி விஷயம் தெரிஞ்ச யாராச்சும் எழுதினா அதைப்படிச்சுப் பார்ப்பேன் அப்படின்னெல்லாம் யூஸ்லெஸா சொல்றவங்களுக்கு அறிவு இருக்குன்னு எப்படி சொல்ல முடியும்? கைநாட்டுக் கிராக்கிகளேதான்!

கொத்தனார் தெரியலன்னு கேள்வி கேட்டா, அவருக்குத் தெரியலன்னு நீங்க தென்னைமரத்துல வெள்ளாட்டைக் கட்டி (பனைமரம் பசுமாடு போரடிக்குது) ப்ரூவ் பண்றதுக்குப் படற பாட்டை நினைச்சா எனக்கு கண்ணீர் வருது வவ்வால். அவர்தான் ஒத்துக்கிறாரே அப்புறம் ஏன் ப்ரூவ் பண்ணனும்ன்ற கேள்வி எல்லாம்தான் நம்ம வயக்கபயக்கத்துலயே கிடையாதே!

//மென்பொருள் சேவைனா என்னானு விளக்கம் கொடுக்க போய் என் கிட்டே மாட்டிக்கிட்டார், கொத்தனார் தெரியாத்தனமா விட்டத நானும் பிடிச்சுக்கிட்டேன்,//

உங்ககிட்டே மாட்டிக்கிறது என்ன அவ்வளவு கஷ்டமா? புத்தாண்டு அறிவிப்பு பத்தி போஸ்டு போட்டா ஜூலியஸ் சீசர்தான் அதை முதல்ல பண்ணான், திருவள்ளுவருக்கு இந்த வருசம் 60ஆவது மணிவிழா, மார்ச் மாசம் 7 ஆம் தேதி ராகுகாலத்துல சந்திராஷ்டமம், தமிழன் ஏப்ரல் 21 ஆம்தேதிதான் பஜ்ஜி சாப்பிடணும்னு பழந்தமிழர் வரலாறு சொல்லுது, இதை ஒத்துக்காதவங்க ஊரைவிட்டுப் போவணும்னு நாட்டாமை பண்றதே நமக்குச் சுலபமா இருக்குதே!

//ஆனால் நீ எப்படி மென் பொருள் சேவை என்று சொல்லலாம், அப்படினா என்ன என்று கேட்டார்(சரி நம்மால் ராவை, அல்லது பாலாவை கேட்க முடியாது , வவ்வாலையாவது கேட்போம் என்று கேட்டார் போல அல்லது வேறுக்காரணம் இருந்திருக்கலாம்)//

வவ்வாலைப் பாத்து மட்டும் கேட்கப்பட்டதா தெரியவில்லையே! சரி விடுங்க, உலகமே நம்மச் சுத்திதான் சுத்துதுன்னு நெனச்சே பழக்கப்பட்டுட்டோம்!

said...

//cnr.rao அவர்களின் பேட்டியில் இருந்து சில வரிகள் இவை, இந்த பேட்டியையை ஒட்டி , எ.அ.பாலா பதிவாக போட்டுள்ளார் அதில், ராவ் அவர்களின் கருத்தினை ஒட்டியே , இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மென் பொருள் சேவை செய்வன (ராவ் கூலித்தொழில் என்று சொன்னார்) என்று நான் சொன்னேன், ராவ் கருத்தில் எனக்கும் உடன் பாடே, ஏன் பாலாவுக்கும் உடன் பாடே, அதனால் தானே பதிவு போட்டார்.//

சரி, இப்போ அதுக்கு என்ன? நாந்தான் அதுக்கு முதலிலேயே டிஸ்கி போட்டாச்சே! - மத்தபடி மென்பொருள் துறை என்ற கைப்புளையை காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு நமக்கு நேர வசதியோ அல்லது எண்களைக் கரைத்துக் குடிக்கும் பொறுமையோ இல்லை. அதனால சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு அப்படியே சைடில் குந்திக்கறேம்பா. - அப்படின்னு.

//ஆனால் நீ எப்படி மென் பொருள் சேவை என்று சொல்லலாம், அப்படினா என்ன என்று கேட்டார்(சரி நம்மால் ராவை, அல்லது பாலாவை கேட்க முடியாது , வவ்வாலையாவது கேட்போம் என்று கேட்டார் போல அல்லது வேறுக்காரணம் இருந்திருக்கலாம்)//

ஆமாம், ராவையும் கேட்க முடியாது பாலாவையும் கேட்க முடியாது. ஏன்னா அந்த ஸ்டேட்மெண்ட் உங்களுது. அதான் உங்களைக் கேட்டேன். ஒரு வேளை நீங்க ஸ்டேட்மெண்ட் மட்டும்தான் விடுவீங்க. ஆனா அதில் சந்தேகம் வந்தா கேட்க வேற யாரையாவது அப்பாயிண்ட் பண்ணி இருக்கீங்களா? அப்படி எதாவது இருந்த கொஞ்சம் விபரம் ப்ளீஸ். ஆனா உங்களை மட்டுமே கேட்கலை இல்லையா? வந்த எல்லாரையுமே கருத்து சொல்லச் சொல்லி இருக்கேன். ஆனா நீங்க அடிக்கடி வரதுனாலேயோ என்னவோ மத்தவங்க எல்லாம் சைலண்டா இருக்காங்க. ஏன்னா இதுவும் அறிவியல் சம்பந்தப்பட்ட மேட்டர் இல்லையா. அதை எங்க பேசலாம், எங்க பேசக்கூடாதுன்னு இருக்கும் விதிமுறைகளை கொஞ்ச நாள் முன்னாடி படிச்ச ஞாபகம் இருக்கு.

//கேட்பது தான் கேட்டார் கேள்வி மட்டும் கேட்கப்படாதா, மென்பொருள்னா என்ன, மென்பொருள் சேவைனா என்னானு விளக்கம் கொடுக்க போய் என் கிட்டே மாட்டிக்கிட்டார், கொத்தனார் தெரியாத்தனமா விட்டத நானும் பிடிச்சுக்கிட்டேன், இப்போ என்ன செய்வதுனு தெரியாம , சுற்றி வளைக்கிறார் அண்ணாத்த :-))//

ஆமாம் நாந்தான் சுத்தி வளைக்கறேன். நீங்க அப்படியே கேட்ட கேள்விக்கெல்லாம் நேரா பதில் சொல்லறீங்க. ஒரு சந்தேகம் வந்தா, ஐயா நான் புரிஞ்சுக்கிட்டது இப்படி, நீங்க வேற மாதிரி சொல்லறீங்களே, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அப்படின்னு கேட்டா தப்பு. அப்படி எல்லாம் செஞ்சா உங்க கிட்ட மாட்டிப்போம். சிப்பு சிப்பா வருதுங்க.

//இப்போ நீ சொன்னது தப்பு இதான் சரினு சொல்லும் போது அதை சரியா சொல்லனும்ல!(காப்புரிமை பெற்றது தான் மென்பொருள் என்று சொல்லும் அளவுக்கு மடத்தனம் எதுவும் இருக்க முடியாது)//

அண்ணா அதேதான் சொல்லறேன், இந்த ரெண்டாங்கிளாஸ் முடிக்காத சின்னப் பையன் எதையோ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கேன். நீங்க இப்படிச் சொல்லறீங்களே, நான் வேற மாதிரி நினைச்சேன், கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கன்னு கேட்கறேன். மூணாப்பு முடிச்ச மூத்தவரு நீங்க கொஞ்சம் வெவரமாத்தேன் சொல்லிக்குடுங்களேன். அதை விட்டுட்டு ஏன் இப்படி அப்படின்னு கேட்டா அதுக்கு மட்டும் நேரா பதிலா சொல்லப் போறீங்க?

//இதுக்கும் மேலவும் அவரை ஊரை சுற்ற வைக்கணுமா, எனவே அவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் , இங்கே நான் மேற்கொண்டு பேசும் அளவுக்கு சமாச்சாரம் எதுவும் இல்லை.//

ஊரைச் சுத்த வெச்சீங்க, அந்த அளவுக்கு உண்மை, அவ்வளவு சுத்தினாலாவது பதில் வருமான்னு பார்த்தேன். வராது போல இருக்கு. நான் என்னத்த முடிவு பண்ணறது. வேற யாராவது எனக்குப் புரியும்படி விளக்கம் சொன்னா தெரிஞ்சுக்கறேன். அதுவரை நான் புடிச்ச முயலுக்கு மூணுகாலுன்னு இருந்துட்டுப் போறேன். மேற்கொண்டு பேசும் அளவுக்கா, இது வரை பேசினதையும்தானே படிச்சுப் படிச்சுப் பார்க்கறேன், அங்க எல்லாம் கூடச் சமாச்சாரமே இல்லீங்களே.

அப்புறங்க அண்ணா அந்த ரெண்டாவது கேள்வி உங்க கண்ணில் படவே இல்லீங்களாண்ணா? இல்லை ஒரே பதிவில் ரெண்டு கேள்வி கேட்டது என் தப்புங்களாண்ணா?

//இங்கே பல அறிவு சீவிகள் வந்து அட்சதை தூவிட்டு போனார்கள் ஆனால் காப்புரிமை பெற்ற ஒன்று தான் மென்பொருள் என்று சொன்னதில் இருந்த பிழையை சுட்டிக்காட்டாமலே , அப்படியே ஒன்றும் தெரியாதவர்கள் போல , கை நாட்டுப்போல நல்லப்பிள்ளையாக போனார்களே அது எப்படி? இருக்கட்டும் நாளைக்கே நம்மைப்பார்த்து ஷார்ப்பா கேள்விக்கேட்கும் போது இதை பயன்ப்படுத்திக்கிறேன்!//

இதெல்லாம் உங்களுக்கு எதுக்குண்ணா, கேள்வி மட்டும் எவனாவது கேட்டான் நாம சுத்திவிடற ஸ்பீடில் ஷார்ப் கேள்வி எல்லாம் மொண்ணை கேள்வியா ஆயிடாது? அப்புறம் எதுக்குண்ணா இதெல்லாம். ஆனா ஒண்ணுண்ணா காப்புரிமை மேட்டர் பிழைன்னு சொன்ன நீங்க எது சரின்னு சொல்லி இருந்தீங்கன்னா சரிண்ணா ஆனா நீங்க அதை மட்டும் செய்யவே இல்லீங்கண்ணா.

said...

இப்படி விட்டு விட்டு பதில் சொன்னதுனால சில பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்ல விட்டுப் போச்சு. அவர்கள் என்னை மன்னிப்பாராக.

முதலில் நம்ம ரவி அண்ணா. இவர் மன்னிப்பாருன்ன் தெரியும்.

//தல! வரையறுத்திட்டீங்க தல! நீங்க வரையறுத்திட்டீங்க! :-)//

என்னய்யா? ரொம்ப அறுத்திட்டேனோ? இப்படி ஸ்டெஸ் பண்ணிச் சொல்லறீங்க!!

//சரி....அந்த மகதி சமாச்சாரத்தை இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க? :-)//

ஞாபகத்தில் எல்லாம் இல்லை. அது பதிவு திடீரென முகப்பில் வந்ததா, அதான் பழைய ஞாபகம்! :))

said...

அடுத்தது அபி அப்பா

//ராகம் தாளம் விஷயத்திலே உள்ளே புகுந்துக்கலாம்ன்னு நினைத்தேன்! ஆனால் அதுக்கு முன்னே உங்க நேர் நிர்க்கும் பார்வை ஐ லைக் இட்!!!!//

இப்போ என்ன நடந்ததுன்னு புகுந்துக்காம இருக்கீங்க? அது போகட்டும் இது என்ன? - //உங்க நேர் நிர்க்கும் பார்வை //

என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே....

said...

இ.கொ,

//அவர்களின் தேவைக்காக அந்த மென்பொருளை பயன்படுத்த உதவி (support) செய்துதருவது மென்பொருள் சேவை. இந்த சேவையில் அந்த மென்பொருளை பயனீட்டாளர்களுக்கான தேவைக்கு தகுந்த முறையில் மேம்படுத்தும் / மாற்றியமைக்கும் முனைப்புகளும் அடங்கும்.//

மென்பொருள் சேவை என்பதை பற்றி ஸ்ரீதர் நாராயணன் தெளிவாகவே சொல்லி இருக்கார், இதில் கூட மென்பொருள் விற்பனை செய்வதை சொல்லவில்லை, ஒருவருக்கு முழுதாக விற்று விடுதல் செய்யாத மென்பொருள் வேலை சேவை , இதை போன்ற புரிதலில் தான் நானும் இந்தியாவின் மேஜர் மென்பொருள் நிறுவனங்களை ஒப்பிட்டு இருப்பேன்.

என்னிடம் மட்டும் பதில் எதிர் நோக்கவில்லை எனில் இதில் நீங்கள் திருப்தி பட்டிருக்கலாமே!

//அப்புறங்க அண்ணா அந்த ரெண்டாவது கேள்வி உங்க கண்ணில் படவே இல்லீங்களாண்ணா? இல்லை ஒரே பதிவில் ரெண்டு கேள்வி கேட்டது என் தப்புங்களாண்ணா?//

நீங்க தான் என்கிட்டே இருந்து "மட்டும்" பதில் எதிர்ப்பார்த்து பதிவு போடலைனு சொல்லிட்டிங்களே அப்புறம் ஏன் எதிர்ப்பார்ப்புடன் கேட்கறிங்க, அப்போ நீங்க அப்படி சொன்னதில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?

ஒரு சமீபத்திய பதிவில் இருந்து கேட்டு இருந்தால் ஆர்வத்தில் கேட்டதாக சொல்லலாம் , மிக பழைய பதிவில் இருந்தும் எடுத்து கேட்டிருக்கிறீர்கள், இப்போ மேல வந்திடுச்சு, ஆனாலும் உங்களிடம் வேற எதோ ஒரு ஆர்வம் இருப்பதாக
படுவதை இதுவே காட்டுகிறதே.

நீங்க எப்படி காப்புரிமை உள்ளது உங்கள் புரிதலோ அதே போல விலைக்கு விற்கப்படுவதை மென்பொருள் விற்பனை, அதனை பயன்ப்படுத்த மட்டும் தருவது சேவை இது என்புரிதல் என்று சொல்லிவிட்டேன்,அப்புறமும், அது எப்படினா எப்படி? அப்போ என் புரிதல் ஏன் அப்படினு நான் விளக்கனும் எதிர்ப்பார்க்கறிங்க, போதுமான அளவுக்கும் விளக்கியாச்சு, இப்போ நீங்க எப்படி காப்புரிமை பெற்றது மட்டும் மென்பொருள் என்று சொல்றிங்க ஏன் என்று கேட்டால், அது என் புரிதல் அவ்வளவு தான் சொல்றிங்க?

அதே போல ராவ் சொன்ன கூலி வேலை செய்தல் என்பது on par with மென்பொருள் சேவை செய்வது. அதனால் நான் சொன்னதன் மூலம் அது, என்னிடம் விளக்கம் கேட்டால் , நான் அங்கே இருந்து பெற்றேன் என்று சொல்லிவிட்டேன்.

எனவே இதில் கேள்விக்கேட்பதென்றால் அவரையும் கேட்கலாம் என்று சொன்னதும் புரியவில்லை போல எப்படியோ உங்களது "நோக்கம்" நிறைவேறனும் , அது சரியா நிறைவேறி இருக்கும், ஆனா கொஞ்சம் அவரசப்பட்டு தவறான விளக்கம் கொடுத்து நீங்களே வந்து மாட்டிக்கிட்டிங்க :-))

----------------------
சுரேஷ்,

//வவ்வாலைப் பாத்து மட்டும் கேட்கப்பட்டதா தெரியவில்லையே! சரி விடுங்க, உலகமே நம்மச் சுத்திதான் சுத்துதுன்னு நெனச்சே பழக்கப்பட்டுட்டோம்!//

அது எப்படிங்க இப்படிலாம் :-))

பதிவிலேயே அவர் இப்படி சொல்லி இருக்கார் எனக்கு விளக்கம் தேவை என்பதாக போட்டுவிட்டு இப்போ உங்களையா கேட்டார் பொதுவாக கேட்டார்னு சொல்வது,

அப்படி என்னை மட்டும் கேட்கலைனா நான் பதில் சொல்லாமல் விட்ட இரண்டாவது கேள்வி கண்ணில் படவில்லையா , அதுக்கு ஏன் பதில் சொல்லவில்லைனு கேட்கிறாரே எப்படி.

பழைய பதிவு மேல வந்துச்சு அதில் எனக்கு சந்தேகம் வந்துச்சு என்று எடுத்துக்கொண்டு வரும் போதே தெரியும் ஏன் இப்படி என்று,அதனால் தான் அதுக்கு பதில் சொல்வதை தள்ளிப்போட்டேன், இ.கொ வுக்கு மட்டும் இல்லை இப்போ எனக்கும் வலைப்பதிவில எப்படிலாம் பேசுவாங்கனு அறியும் சக்தி வந்திருக்கு(எல்லாம் இ.கொ ரெம்பிளேட் தயவு தான்)

சரி விடுங்க நான் சொன்னா அது தலைக்கீழா சொல்றதா சொல்லிட்டு போய்டுவிங்க, என் பேரை வச்சு.இனிமே நானும் உங்கள் பினாத்தல் என்ற பேரை வைத்து நீங்க சொன்னா அது பினாத்தலா தான் இருக்கும்னு எடுத்துக்கிறேன் :-))

said...

//குழப்பம் தீர்ந்து, அதன் பிறகு என் குழப்பத்தையும் தீர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வாழ்த்துகள்!//

ரிப்பட்டேய்ய்ய்...

said...

// இலவசக்கொத்தனார் said...

அறிவுசார் காப்புரிமை -- நல்லா இருக்கா? இதோட அறிவுசார் காப்புரிமை நம்மளுதுன்னு இப்போ சொல்லிக்கறேன்!! :)//

இது நச்..ஹா..ஹா..:))))))