Wednesday, January 30, 2008

பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு!! (பாகம் 2)

எல்லாரும் பிறந்த நாள் கொண்டாடினா அடுத்தவங்கதான் பரிசு குடுப்பாங்க. ஆனா நம்ம நண்பர் ஒருத்தருக்கு இன்னிக்கு பிறந்தநாள். ஆனா அவரு என்ன தெரியுமா செஞ்சு இருக்காரு. நமக்கு ஒரு பரிசு குடுத்து இருக்காரு. அதுதான் இந்தப் பதிவு. நான் கேட்டுக்கிட்டதுக்கு இணங்க நம்மளை ஆப்புரேசல் பண்ணி இருக்காரு பாலராஜன் கீதா. Happy Birthday Bala!!

இனி பாலா.

உங்களின் 2007 வருட இடுகைகளின் ஆப்புரேசலை எழுத என்னையும் அழைத்ததற்கு நன்றி.


டிஸ்கி:
இதற்கே இன்னும் எல்லா பின்னூட்டங்களையும் படிக்க நேரமில்லை. படித்திருந்தால் வாசகர்களின் பின்னூட்டம் குறித்தும் ஏதேனும் எழுதியிருக்கலாம். ஆகவே இந்த ஆப்புரேசல் உங்கள் இடுகைகளைக் குறித்து மட்டுமே என்று டிஸ்கிக்கிறேன்.


ஆனாலும் கொத்ஸின் ஆப்புரேசலில் பின்னூட்டம் பற்றி பேசாமல் எப்படி என அது பற்றி ஒரு சிறு குறிப்பு. இன்று வரை வந்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5503. ஆக சராசரியாக ஒரு இடுகைக்கு 85 பின்னூட்டங்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஆனால் புதிர்களின் இடுகைகளில் வந்துள்ள பின்னூட்டங்கள் 481, 393, 396, 230, 121 ; ஜிராவின் ஆப்புரேசலுக்கு வந்த பின்னூட்டங்கள் 382. இவற்றை நீக்கிவிட்டுக் கணக்கிட்டால் சராசரியாக 59 பின்னூட்டங்கள் என்று வைத்துக்கொள்ளலாம். எனவே கண்னை மூடிக்கொண்டு உங்களுக்குப் பின்னூட்ட நாயகன் என்ற பட்டத்தை அளித்துவிடலாம்
.

அடுத்தது சென்ற வருட இடுகைகளில் எனக்குப் பிடித்தது எனச் சொல்ல வேண்டுமானால் தமிழ், ஆங்கிலம், கணக்கு, வரலாறு, அறிவியல், புவியியல், வணிகம், கணினியியல், விளையாட்டு என்ற தலைப்புகளில் வந்த புதிர்களும் பிறகு நன்றிக்கு உரியவர்களையும் புதிர்களாக கேட்டிருந்த இடுகைகள். சில கேள்விகள் பலரையும் முதலில் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடும். அந்த வாரத்தில் பல வாசகர்களை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைத்திருந்தீர்கள் என்றுதான் கூறவேண்டும். கூகிளாண்டவரும் நன்றாக உதவினார். என்னால் முழு மதிப்பெண்கள் பெறமுடியவில்லையே என்று சற்றே வருத்தம் இருந்தது.

அடுத்ததாகப் பிடித்தது கைப்புள்ளயின் கோச்சிங் செண்டர் நோட்டீஸ். இந்த இடுகையைப் படிக்கும்போது நடிகர்கள் வடிவேலுவும் பார்த்திபனும் அப்படியே நடிப்பது போல நினைவிற்கு வரும். இந்த பிட் ஏன் இன்னும் ஏதேனும் திரைப்படத்தில் வரவில்லை என்று சந்தேகமாகவே உள்ளது.

எல்லா இடுகைகளையும் படித்துவிட்டேன் என நிரூபணம் செய்யும் வகையில் சென்ற வருடம் வந்த எல்லாப் பதிவுகள் பற்றியும் ஒரு சிறு குறிப்பு!
ரெண்டு பேர் ஆப்புரேசியாச்சே, இதோட முடிஞ்சுதான்னு பெருமூச்சு விடற ஜனங்களே, நல்லாப் படிச்சுப் பாருங்க. நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை!!

28 comments:

said...

மீ தி பர்ஸ்ட்!!!!

-அரசு

said...

அந்த ஸ்லைட்ஷோ (தமிழ்ப்'படுத்தி'யாச்சா? என்ன இதுக்கு?)
சரியாத் தெரியலைன்னா வலது கீழ் முனையில் ரெண்டு பசங்க இருக்கிற மாதிரி இருக்கும் கார்ட்டூனைச் சொடுக்கினா அது இந்த கோப்பு இணையைத்தில் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்க்கும். அங்கே 'Full' என்ற ஒரு பொத்தானைத் தெரிவு செய்தால் முழு வடிவில் தெரியும்.

ஆனா அங்க போய் பார்த்துட்டு அப்படியே ஜூட் விடக்கூடாது. இங்க வந்து கருத்து சொல்லிட்டுதான் போகணும். புரியுதா?!! :))

said...

வாங்க அரசு. என்னையே முந்திக்கிட்டீங்களே!! சரிதான், இப்போ நல்ல பையனா பதிவைப் படிச்சுட்டுக் கருத்து சொல்லுங்க பார்ப்போம்!! :))

said...

முதல்ல பாலராஜன் கீதாக்கு பிறந்த நள் வாழ்த்துக்கள்....சூபெர் அப்ரைசல்......ஒவ்வொவொறு பதிவுக்கும் ப்ரீF சம்மரியோ இல்ல ப்ரீF இண்ட்ரொடக்ஷ்னோ(whatever) கொடுத்து அசத்த்டீங்க....இந்த ஸ்லைட் ஷோ அய்டியா......பெனாத்லாருது??

//ரெண்டு பேர் ஆப்புரேசியாச்சே, இதோட முடிஞ்சுதான்னு பெருமூச்சு விடற ஜனங்களே, நல்லாப் படிச்சுப் பாருங்க. நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை!!//

இதுவேறையா...!!

said...

நீங்கள் எழுதியதில் பாதிக்கு மேல் நான் படிக்கவில்லை. ஆனால் பாலராஜன் அவர்கள் ஒவ்வொருப் பதிப்பையும் அற்புதமாக விவரித்து விட்டார். HATS OFF to him.

-அரசு

said...

பொறந்தநாள் அன்னிக்காவது மனுசனை நிம்மதியா விட்டிருக்கக்கூடாதா?

நல்லாவே இருக்கு:-)))))

said...

//துளசி கோபால் said...
பொறந்தநாள் அன்னிக்காவது மனுசனை நிம்மதியா விட்டிருக்கக்கூடாதா?//

Bingo!
Teacher, your questions are rocking! :-)

பாலராஜன் சார்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ரொம்ப பொறுமை சார் உங்களுக்கு! கொத்தனாரின் அத்தனை செங்கல்லையும்....சாரி...பதிவுகளையும் ஒவ்வொன்னா "படவில்லைக் காட்சி" ஆக்கியமைக்கு!

//இலவசக்கொத்தனார் said...
அந்த ஸ்லைட்ஷோ (தமிழ்ப்'படுத்தி'யாச்சா? என்ன இதுக்கு?)//

படுத்தியாச்சுய்யா! படுத்தியாச்சு! மேலே சூடு! :-))

said...

//ஆனால் புதிர்களின் இடுகைகளில் வந்துள்ள பின்னூட்டங்கள் 481, 393, 396, 230, 121 ; இவற்றை நீக்கிவிட்டுக் கணக்கிட்டால் சராசரியாக 59 பின்னூட்டங்கள் என்று வைத்துக்கொள்ளலாம்//

//எனவே கண்னை மூடிக்கொண்டு உங்களுக்குப் பின்னூட்ட நாயகன் என்ற பட்டத்தை அளித்துவிடலாம்//

இதுக்கு இம்புட்டு கணக்கு போடனுமா?
பால் மணம் மாறா விக்கி குழந்தைங்க கிட்ட கேட்டாக் கூட விக்கி விக்கிச் சொல்லிடுவாங்களே! - பின்னூட்ட நாயகன் இலவசக் கொத்தனார் வாழ்க! வாழ்க!!

said...

பாலராஜன் கீதா - பிறந்த நாள் வாழ்த்துகள். மிக அருமையாக அலசியிருக்கிறீர்கள்.

இ.கொ, உங்க டைமிங் மற்றும் பதிவு வடிவமைப்பு சூப்பர்.

KRS, கொத்தனாருக்கு பட்டதோ, படவில்லையோ உங்களுடைய மொழிமாற்றம் அருமை. :-). இன்னொரு புதிய வார்த்தை கற்று கொண்டேன். நன்றி.

said...

//சூபெர் அப்ரைசல்.....//

வாங்க ராதாக்கா. எனக்கு வர கோவத்துக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்படின்னு சொல்லிடத்தான் நினைத்தேன். அப்புறம் நீங்களாச்சேன்னு போனாப் போகுதுன்னு பதில் சொல்லறேன். ஆமாம். சூப்பர் ஆப்புரேசல்தான்.

//ஒவ்வொவொறு பதிவுக்கும் ப்ரீF சம்மரியோ இல்ல ப்ரீF இண்ட்ரொடக்ஷ்னோ(whatever) கொடுத்து அசத்த்டீங்க....//

இப்படிக் கலக்குவாருன்னு எதிர்பார்க்கலை.

//இந்த ஸ்லைட் ஷோ அய்டியா......பெனாத்லாருது?//

இப்படி எல்லாம் சொல்ல எவ்வளவு குடுத்தாரு? ஏன் எங்களுக்குன்னு சொந்தமா ஐடியாவே தோணாதா? ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்குங்க. அவரு ஃப்ளாஷ் கிங். அம்புட்டுதேன். :)) (பெனாத்தல், கடுப்பாயி இனிமே ஐடியா தர மாட்டேன்னு சொல்லிடாதேய்யா!)

//இதுவேறையா...!!//

என்னதான் மொக்கை போட்டாலும் அதையே போட மாட்டோமில்ல. அப்படியே மீள்பதிவு செஞ்சாலும் இவ்வளவு சீக்கிரம் செய்ய மாட்டோமே. அது வேற இது வேறதான் ராதாக்கா!! :)

said...

ஆப்புரேசல் - அப்படீன்னா என்னன்னு தெரியலை - அதனாலே மேல படிக்க முடியலை...

said...

//நீங்கள் எழுதியதில் பாதிக்கு மேல் நான் படிக்கவில்லை. //

இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களினால் ஆன பலன் யாதெனின் பழைய பதிவுகளை ஞாபகப்படுத்துவதுதான். இப்போ படிக்க ஆரம்பிச்சுடுங்க. இவர் 2007 பதிவுகள் பத்திதான் சொல்லி இருக்காரு. அதுக்கும் முன்னாடியும் இருக்கில்ல!

//ஆனால் பாலராஜன் அவர்கள் ஒவ்வொருப் பதிப்பையும் அற்புதமாக விவரித்து விட்டார். HATS OFF to him.//

:)

said...

இந்த பின்னு பின்றீங்களே சாமி!

பால்ராஜன் கீதாவைச் சொல்றேன்!

மிக அருமையாத் தொகுத்திருக்கிறார்!

சுருக்கமான அப்ரைஸல்!

ஆப்புதான் மிஸ்ஸிங்!
:))

said...

ராதா ஸ்ரீராம், அரசு, துளசி அக்கா, கேஆர்எஸ், ஸ்ரீதர் நாராயணன், (ஆப்புரேசலைப் படமாக மாற்றிக் காண்பித்த) கொத்ஸ்
உங்கள் எல்லோரின் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

//பொறந்தநாள் அன்னிக்காவது மனுசனை நிம்மதியா விட்டிருக்கக்கூடாதா?//

ரீச்சர், அன்னிக்கு மனுசன் கொஞ்சம் சந்தோஷமா இருப்பாரு. அன்னிக்குப் பிடிச்சாதான் ஆப்புரேசல் சுமாராவாவது போகும். மத்த நாளா இருந்தா வெறும் ஆப்பு மட்டும்தானே கிடைக்கும். அதான். நேரம் பார்த்து வேலை வாங்கிக்கறது! :))

//நல்லாவே இருக்கு:-)))))//
அடுத்தவன் ஆப்பு வாங்கறதைப் பார்க்கும் போது என்னா த்ருப்தி என்னா திருப்தி!!

said...

//Bingo!
Teacher, your questions are rocking! :-)//

இதுக்கு துணைக்கு நாலு பேரு!!

//ரொம்ப பொறுமை சார் உங்களுக்கு! கொத்தனாரின் அத்தனை செங்கல்லையும்....சாரி...பதிவுகளையும் ஒவ்வொன்னா "படவில்லைக் காட்சி" ஆக்கியமைக்கு!//

அதுல பெஸ்ட் என்னான்னா இதை மெயிலில் அனுப்பினார். படிச்சுட்டு பதில் சொன்னா, பொறுமையாப் படிச்சதுக்கு நன்றி அப்படின்னு சொல்லறார்!! :))

//படுத்தியாச்சுய்யா! படுத்தியாச்சு! மேலே சூடு! :-))//
அது என்ன படவில்லை, ஆரஞ்சு வில்லை, சூடன் வில்லைன்னுக்கிட்டு சின்னப் புள்ளைத்தனமா? கரடுமுரடா இல்லாம கொஞ்சம் நல்ல பேரா தாங்கப்பா!! இது கொஞ்சம் கூட சரியாப் படவில்லை!

said...

//இதுக்கு இம்புட்டு கணக்கு போடனுமா?
பால் மணம் மாறா விக்கி குழந்தைங்க கிட்ட கேட்டாக் கூட விக்கி விக்கிச் சொல்லிடுவாங்களே! - பின்னூட்ட நாயகன் இலவசக் கொத்தனார் வாழ்க! வாழ்க!!//

கூட்டிக் கழிச்சு பாருங்க சரியா வரும் அப்படின்னு சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு போல!! ஆனா பின்னூட்ட நாயகி மாதாமகி துளசி ரீச்சர் இருக்கும் போது நான் எல்லாம் அடக்கி வாசிக்கிறதுதான் முறை. அதனால இதை எல்லாம் லூஸ்ல விடுங்க. :)

said...

//இ.கொ, உங்க டைமிங் மற்றும் பதிவு வடிவமைப்பு சூப்பர்.//

நன்னி நன்னி.

//KRS, கொத்தனாருக்கு பட்டதோ, படவில்லையோ உங்களுடைய மொழிமாற்றம் அருமை. :-). இன்னொரு புதிய வார்த்தை கற்று கொண்டேன். நன்றி.//

யோவ், நான் சொன்ன பதிலையும் படிச்சுட்டு அப்புறமா கருத்து சொல்லும்.

said...

//ஆப்புரேசல் - அப்படீன்னா என்னன்னு தெரியலை - அதனாலே மேல படிக்க முடியலை...//

மேல படியுங்க புரியும். இல்லைன்னா இன்னும் புரியலைன்னு சொல்லுங்க. விளக்கம் தரேன்! :))

said...

//இந்த பின்னு பின்றீங்களே சாமி!//

கட்ட வேண்டிய நான் பின்னிக்கிட்டு இருக்கேன். போய் வேலையைப் பாருன்னு சொல்லறீங்களா?

//பால்ராஜன் கீதாவைச் சொல்றேன்!//
ஓ! அவரைச் சொன்னீங்களா!! அது என்ன அவரை ராமராஜன் ஸ்டைலில் பால்ராஜன் ஆக்கிட்டீங்க? :)


//மிக அருமையாத் தொகுத்திருக்கிறார்!

சுருக்கமான அப்ரைஸல்!//

அதாம்பா!!

//ஆப்புதான் மிஸ்ஸிங்! :))//

இதானே வேணாங்கிறது! அதுக்காகவே பொறந்த நாள் வரை வெயிட் பண்ணிட்டு போய் ஆப்புரேசல் வாங்கி இருக்கோமில்ல! :))

said...

//ராதா ஸ்ரீராம், அரசு, துளசி அக்கா, கேஆர்எஸ், ஸ்ரீதர் நாராயணன், (ஆப்புரேசலைப் படமாக மாற்றிக் காண்பித்த) கொத்ஸ்
உங்கள் எல்லோரின் வாழ்த்துகளுக்கும் நன்றி.//

பாலா, நீங்க படம் காட்டினதை படமாக் காட்ட என்ன பிரச்சனை. அப்படியே போட்டா ரொம்ப நீளமா வர மாதிரி இருந்தது. அதான் இப்படி பார்மேட் மாத்திட்டேன். தப்பா நினைச்சுக்கலையே!! (அதுக்குக் கூட பெனாத்தலார் ஐடியாவான்னு கேட்கறாங்க!!)

என்ன, இப்படிச் செஞ்சதுனால அந்த பதிவுகளுக்குச் சுட்டி தரமுடியாமப் போச்சு. இல்லைன்னா யாராவது ஒண்ணு ரெண்டு பேராவது அதைச் சொடுக்கிப் பழசை எல்லாம் படிச்சு இருப்பாங்க! இல்லையா! :(

said...

:-)

ராதா,பெனாத்தலோட ஐடியாவா இருந்திருந்தா லின்க்கும் வந்திருக்கும்.

இன்னும் எத்தனை பாகம்னு மட்டும் சொல்லிடுங்க கொத்ஸு.. பதிவைவிட அதிகமா போகாதே?

said...

//பதிவைவிட அதிகமா போகாதே?//

:-)))))))))

அப்புறம பிடிச்சதில எனக்கு பிடிச்சது எதுன்னு ஒரு பதிவு போடலாம் இல்ல.

என்னா கயமைத்தனம் பாருங்க...

said...

Slide Show is superb. அப்புறம் இந்த வருஷம் முழுசும் போன வருசத்துல புடிச்ச பதிவுன்னே போட்டு ஒப்பேத்த போறீங்களா?

said...

அடாடா கொத்ஸ் உங்கள ரொம்பவே நோக அடிச்சிட்டேன் போல இருக்கே....என்ன மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க......!!நான் நிஜமா...... அவருதானே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வாருங்கர்துனால அப்படி கேட்டுட்டேன்....உங்களுக்கு தெரியாதுங்கர அர்த்தத்துல இல்ல.

//இப்படி எல்லாம் சொல்ல எவ்வளவு குடுத்தாரு? ஏன் எங்களுக்குன்னு சொந்தமா ஐடியாவே தோணாதா? ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்குங்க. அவரு ஃப்ளாஷ் கிங். அம்புட்டுதேன். :)) //


ஏங்க கொத்ஸ் அவரு என்னிக்காவது என் பதிவுலலாம் பின்னூட்டமாவது போட்டு பாத்ருக்கீங்க??!! இப்படில்லாம் சொன்னா நான் அழுதுருவேன் ஆமா.ஏன்னா அந்த மாதிரி கேள்வியெல்லாம் நான் மட்டும்தான் கேக்கலாம்....:):)

said...

//ராதா,பெனாத்தலோட ஐடியாவா இருந்திருந்தா லின்க்கும் வந்திருக்கும்//

புரிஞ்சுகிட்டேன்.....அவர் கிட்ட sorry சொல்லிட்டேன்..:):)

said...

பாலராஜன் கீதா,
மேட்டர் இன்னான்னா, கொத்ஸு எழுதறத அவரே படிச்சிருக்கமாட்டாருன்னு இருக்கச்சே,
இத்தன பதிவையும் பொறுமையா படிச்சு பதவுரை எழுதுனதுக்கு முதல்ல வாழ்த்து!

இதுக்காக நான் பின்னூட்டவெறிக்கட்சிக்கு மாறியதாக யாரும் சொல்லவேணாம்.

said...

படிக்காமல் விடுப்பட்ட பதிவுகளையும் சுட்டியதற்க்கு நன்றிகள்.. எல்லாம் அருமை மாம்ஸ்.. மூன்றாம் பாகம் போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் :)