Thursday, January 10, 2008

இசலிகளின் இடாப்பும் இன்ன பிற டிஸ்கிகளும்!!

Everybody! Wish you all a happy new year!!



என்னடா இவன் புது வருஷம் பொறந்து இம்புட்டு நாளாச்சு, இப்ப போயி வாழ்த்து சொல்லறானே, அதுவும் 1982ஆம் வருஷ பாட்டு வேற போடறானேன்னு பார்க்கறீங்களா? சும்மா தேமேன்னு இருந்த என்னை இந்த மாதிரி புத்தாண்டு பதிவு போட வெச்சது நம்ம கீதாம்மாதான். அதனால குடுக்க வேண்டிய தண்டனை எல்லாம் நேரா அங்க பார்ஸேஏஏஏல். புத்தாண்டு பத்திப் பதிவு அப்படின்னா இந்த பாட்டு போட்டு ஆரம்பிக்கறாதுதானே நம்ம தமிழ்க்கலாச்சாரம். அதான் இப்படி. ஆனா புத்தாண்டு வாழ்த்து சொல்லி பதிவு போட்டா போறாதாம். அப்போ எடுத்துக்கிற சபதம் பத்தி எழுதணுமாம். இதைப் படிச்ச உடனே எப்படி தெரியுமா இருந்தது.

சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும் பொழுது இந்த டீச்சருங்க எல்லாம் புது வருஷம் பொறக்குதோ இல்லையோ, அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்தா மாதிரி உங்க புது வருஷ தீர்மானங்களைப் பத்தி கட்டுரை எழுதுன்னு சொல்லுவாங்க. அது வந்து இந்த "If you were the prime minister..", "If a wish of yours can come true.." ரேஞ்சில் நடக்காத விஷயம்தானேன்னு தெரிஞ்சதுனால என்ன வேணாலும் எழுதலாம். பொதுவா இனிமே சரியா ஹோம்வொர்க் பண்ணுவேன், கிளாசில் தூங்கினால் குறட்டை விடாமல் இருப்பேன், வாத்தியார் வேட்டியில் இங்க் அடிக்க மாட்டேன் அப்படின்னுலாம்தான் எழுதி வெச்சு இருப்போம். படிக்கிறவங்களுக்கு இது கட்டுரையா இல்லை இம்போசிஷனான்னே சந்தேகம் வரும்.

அப்புறம் கொஞ்சம் வளர்ந்தா ஒரு டைரி எழுதும் மோகம் பத்திக்கும். என்னமோ வருஷம் பூராவும் எழுதிக் கிழிக்கிற மாதிரி ஒரு நாளைக்கு ஒரு பக்கம் இருக்கிற டைரிதான் வேணும் அப்படின்னு தேடுவோம். தேடுவோமுன்னா காசு குடுத்து கடையில் வாங்கறது எல்லாம் இல்லை. ஓசியில் எங்க கிடைக்குதுன்னு பார்க்கத்தான். கடைசியில் எதாவது டாக்டர் வீட்டில் அனாதையாய் கிடக்கும் மருந்து கம்பெனி டைரி ஒண்ணு மாட்டும். அதில் ஜம்பமா பேரு அட்ரஸ் எல்லாம் எழுதிட்டு ஆரம்பிப்போம். முதல் நாள் பொதுவா இந்த வருஷம் பூராவும் டைரி எழுதுவேன் அப்படின்னு ஆரம்பிக்கறதுதான் சம்பிரதாயம். நிறையா வருஷங்களில் அது ஒண்ணு மட்டும்தான் எழுதி இருப்போம். அப்புறம் அம்மா சலவை கணக்கு எழுத புத்தகம் தேடும் பொழுது பெருந்தன்மையோட இதைத் தானம் பண்ணிடுவோம். அதுக்கு முன்னாடி பெர்சனல் விஷயங்களை எல்லாம் அடுத்தவங்க படிக்கக் கூடாதுன்னு அதை ஸ்டைலா கிழிச்சுட்டு குடுக்கறதில ஒரு பெருமை.

அப்புறம் கொஞ்ச வயசாச்சுன்னா ஒரு கவுஜ எழுதும் கிறுக்குப் பிடிக்கும். கவுஜ எழுதற கிறுக்குன்னு தனியா இருக்கா, கவுஜ எழுதினாலே அப்படித்தானேன்னு எல்லாம் கேட்கப்பிடாது. அப்போ பள்ளிக்கூடத்தில் நேர் நேர் தேமான்னு சொல்லிக் குடுத்தா அதை காதிலேயே போட்டுக்காம வெண்பா, விருத்தமுன்னு வீணா பேசிக்கிட்டு இருக்காரேன்னு வருத்தப்படறவன் இங்க வந்து
நான்
படித்தேன்
பா -
அவளோ
சொன்னாள்
போ!!!
அப்படின்னு ஆச்சரியக்குறி போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். அந்த டைரி முழுசும் இப்படி உடைச்சுப் போட்ட உரைநடை வரிகளால் ரத்தக்களறி ஆகி இருக்கும். இதுக்கு நடுவில் காதல் கிறுக்கு வேற பிடிச்சுது அம்புட்டுதான். ஒரு மாசத்தில் ஒரு வருஷ டைரி காலி ஆகி இருக்கும். ஆனா இந்த பித்து எல்லாம் நிறையா பேருக்கு கொஞ்ச நாள்தான். சரியாகிடும். அப்படி சரியாகாம போனாத்தான் பாவம் கவிஞரா ஆகிடறாங்க. என்ன செய்ய எல்லாம் விதி.

அப்புறம் ஒரு வழியா படிச்சு முடிச்சு, வேலை தேடி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, குண்டாகி, (ஆத்தாடி எம்புட்டு ஜிம்பிளா சொல்லிப்புட்டோம்!) மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் பார்த்து டென்ஷனாகும் பொழுது இந்த வருஷம் பூரா நொறுக்குத் தீனி திங்கக் கூடாது, ஒழுங்கா உடற்பயிற்சி எல்லாம் செய்யணும், சும்மா ஒரு மாசத்தில் அர்னால்ட் ஷ்வாஷ்னெக்கர் மாதிரி ஆகணும் அப்படின்னு ஒரே ஒரு நாள் எதையாவது செஞ்சு கண்ணாடி முன்னாடி போய் பைசெப்ஸ் எல்லாம் முறுக்கி பார்க்கறது. அடுத்த நாள் காலையில் உடம்பில் இதுவரை இருந்ததே தெரியாத இடங்கள் எல்லாம் வலிக்க ஆரம்பிக்க வழக்கம் போல் ரீவி முன்னால் உக்காந்துக்கிட்டு பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே என்னடா ஆடறாங்க இந்தப் பசங்க? ஒரு ஓவர்பிட்ச் பாலை ட்ரைவ் பண்ணத் தெரியலை அப்படின்னு விமர்சனம் பண்ணிக்கிட்டு கிரிக்கெட் பார்க்க வேண்டியதுதான்.

சரிடா, விஷயத்துக்கு வா. இந்த வருஷத்து சபதம் என்ன அதைச் சொல்லுன்னு ரென்ஷன் ஆகறீங்களா? புது வருட காலையில் அவசர அவசரமா குளிச்சுட்டு கோயிலுக்கு போய் பல மணி நேரம் வரிசையில் நின்னு, அரையே அரை நொடி சாமியைப் பார்த்து ஏடு கொண்டலவாடா, வேங்கடரமணா, கோவிந்தா கோஓவிந்தா அப்படின்னு சொல்லிட்டு உண்டியலில் கொஞ்சம் பச்சை நோட்டை நுழைச்சுட்டு, கீழ கேண்டீன் வந்து மீண்டும் சில மணி நேரம் வரிசையில் நின்னு ஒரு புளியோதரை, தயிர்சாதம் சாப்பிட்டுவிட்டு அப்படியே வீட்டுக்கு வந்து அப்பாடான்னு உக்கார்ந்தா எவ்வளவு டயர்டா இருக்கு. இதுல சபதம் போட எங்க நேரம் இருக்கு சொல்லுங்க!!

டிஸ்கி 1 : ஏற்கனவே லேட்டு, இதுல இன்னும் நாலு பேரைக் கூப்பிட்டு புதுவருஷ சபதம் எல்லாம் பத்தி எழுதச் சொன்னா காறி துப்புவாங்க. அதனால நான் அந்த பார்ட்டை மட்டும் சாய்ஸில் விடறேன். அப்படி யாரும் பதிவு போட வேற மேட்டரே இல்லாம இதை எழுத துடிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா நான் கூப்பிட்டதா நினைச்சுக்கிட்டு பதிவு போடுங்க. போட்டுட்டு இங்க வந்து இலவசமா போஸ்டர் ஒட்டிக்குங்க.

டிஸ்கி 2: இது எல்லாம் போறாதுன்னு மொக்கைப் பதிவு தொடர் ஒண்ணு ஓடுதாமே. அதுக்கு யாரும் கூப்பிடறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். அதுக்கும் சேர்த்துதான் இந்தப் பதிவு.

டிஸ்கி 3: இந்தப் பதிவுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யோசிக்கறீங்களா? அதுவும் தமிழ்தாங்க. இசலி அப்படின்னா சபதம், இடாப்பு அப்படின்னா அட்டவணை. சபதங்களின் அட்டவணை அப்படின்னு தலைப்பு வெச்சா வருவீங்க? ஆனா இசலிகளின் இடாப்புன்னு கரெக்ட்டா வந்து ஆஜராவீங்க இல்ல. அதான்! வர்ட்டா!!

42 comments:

said...

கீதாம்மா, கோனார் நோட்ஸில் தலைப்பு பத்தி சொன்னதுக்கு இது ப்ராக்டிகல் எடுத்துக்காட்டு இல்லையா! :))

said...

இசலி, இடாப்பு இதெல்லாம் எந்த ஊர் பாஷை?

பாஷையைத் தமிழ்ப்படுத்தாதது ஏன்னு உங்களுக்கே தெரியும்:-))))

said...

என்னாங்க இவ்வளவு அவசரம்? இன்னும் 352 நாள் இருக்கறதுக்குள்ள இப்பவே வந்து வாழ்த்து எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க?

ஓ... இது 2008-க்கா? ஹி..ஹி..

டைரி எழுதறது, கவிதை எழுதறது, புது வருட இசலிகள் இட்டுக்கறது... இதெல்லாம் எல்லாம் 'ஹேப்பி நியூ இயர்'ன்னு சொல்லிக்கற மாதிரி. 1-ம் தேதி மட்டும்தான் வால்யூ. ஒரே வாரத்துல புது வருட மோகம் எல்லாம் நீர்த்து போயிடும்.

//மருந்து கம்பெனி டைரி ஒண்ணு மாட்டும். அதில் ஜம்பமா பேரு அட்ரஸ் எல்லாம் எழுதிட்டு //

அப்படியே 'அடுத்தவரின் டைரியை படிக்காதே' அப்படின்னு முகப்பு பக்கத்தில ஒரு டிஸ்கி வேற :-))

said...

இன்னாபா இது இசலிகளின் இடாப்பு குஜிலிகளின் இடுப்புன்னு :)))

என்னிக்குமே நான் டைரி எழுதினதில்ல..ஆனா எங்கப்பாரு பழைய டைரிகளைப் புரட்டினா 'ஆபிசுக்கு போனேன்'களுக்கு நடுவில சுவாரசியமா நெறய சிக்கும்..எங்கம்மாவை பொண்ணு பார்த்தது முதல் கொண்டு :))

said...

அப்போ நீங்களும் என்னை மாதிரி புதுவருஷத்துக்கு இசலிகள் எல்லாம் எடுத்து இடாப்பு போட்டதில்லைன்னு சொல்ல வர்றீங்க?

said...

டைரி- இதை எழுதி நான் பட்ட அவஸ்தைகள் தான் அதிகம். :-((

said...

நல்ல இசலி, நல்ல இடாப்பு, சபதம் எடுத்துக்கலைன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே! அதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா? :P

//கீதாம்மா, கோனார் நோட்ஸில் தலைப்பு பத்தி சொன்னதுக்கு இது ப்ராக்டிகல் எடுத்துக்காட்டு இல்லையா! :))//

சரியான பிராக்டிகல் தான் போங்க! :P

said...

இதுக்கு வெத்திலை, பாக்கு வச்சு அழைப்பு வேறேயா? :P

said...

//இசலி, இடாப்பு இதெல்லாம் எந்த ஊர் பாஷை?

பாஷையைத் தமிழ்ப்படுத்தாதது ஏன்னு உங்களுக்கே தெரியும்:-))))//

வாங்க ரீச்சர். இசலி இடாப்பு எல்லாம் சம் ஓல்ட் லேங்குவேஜ் கால்ட் டேமில்.

பாஷை அப்படின்னு இருந்தா சரி. அதை வேற மாதிரி சொன்னா தமிழில் படுத்தறதா? நல்லா இருங்க!

said...

இடாப்பு என்றால் அட்டவணை என்பது சரிதான். ஆனால் இசலி என்ற சொல் ஓய்யமல் சண்டையிடும் பெண்ணையோ அல்லது பிணங்கும் பெண்ணையோ குறிக்கும். என்னிடம் இருக்கும் அகராதிகள் இந்த பொருளை மட்டுமே சொல்லுகின்றன.

கட்டாயம் விளக்கம் தேவை.

ஆனால் இடாப்பு என்கிற இக்காலத்தில் மிகவும் தேவைப்படுகிற ஒரு சொல்லை அறியத் தந்ததற்கு நன்றி.

said...

என்னாபா - சபதம் எடுக்கலே - ஒத்துக்கறோம் - அதுக்கு ஒரு பதிவா - இர்ந்தாலும் படிச்சென் ரசிச்சேன் - இசலி - இடாப்பு - ஏம்ப்ம்ம்ம்பு, வேற ஏதாச்சும் தூய தமிழ்ச் சொற்கள் இன்னுமிருக்கா

said...

//டிஸ்கி 3: இந்தப் பதிவுக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யோசிக்கறீங்களா? அதுவும் தமிழ்தாங்க. இசலி அப்படின்னா சபதம், இடாப்பு அப்படின்னா அட்டவணை. சபதங்களின் அட்டவணை அப்படின்னு தலைப்பு வெச்சா வருவீங்க? ஆனா இசலிகளின் இடாப்புன்னு கரெக்ட்டா வந்து ஆஜராவீங்க இல்ல. அதான்! வர்ட்டா!!//

எப்படியெல்லாம் திங் பண்றாங்கப்பா!!!

said...

கொத்ஸ்,
நீங்க எழுதுன கவுஜ சூப்பர்...
ஒரு டைரி ஃபுல்லா இப்படி எழுதியிருக்கீங்கனா நீங்க பெரிய ஆளு தான் ;)

said...

//என்னாங்க இவ்வளவு அவசரம்? இன்னும் 352 நாள் இருக்கறதுக்குள்ள இப்பவே வந்து வாழ்த்து எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க?

ஓ... இது 2008-க்கா? ஹி..ஹி..//

இந்த நக்கலுக்கு எல்லாம் மட்டும் குறைச்சலே இல்லை. அதான் பதிவு பத்து நாள் லேட் அப்படின்னு சொல்லியாச்சே. அப்புறம் என்ன...

//டைரி எழுதறது, கவிதை எழுதறது, புது வருட இசலிகள் இட்டுக்கறது... இதெல்லாம் எல்லாம் 'ஹேப்பி நியூ இயர்'ன்னு சொல்லிக்கற மாதிரி. 1-ம் தேதி மட்டும்தான் வால்யூ. ஒரே வாரத்துல புது வருட மோகம் எல்லாம் நீர்த்து போயிடும்.//

அதான் யாரையும் கூப்பிடலை!

//அப்படியே 'அடுத்தவரின் டைரியை படிக்காதே' அப்படின்னு முகப்பு பக்கத்தில ஒரு டிஸ்கி வேற :-))//

ஆமாம். இந்த டிஸ்கியை விட்டுட்டேனே. சரி இசலி டிஸ்கி அப்படின்னு நான் பதிவு போடற மாதிரி பின்னூட்டம் போடறீங்களே!! :))

said...

ஆஹா, //இசலி, a quarrel some woman// புத்தாண்டு முதல் பதிவிலியே ஈயம் இளிக்கிறதே (பத்த வச்சாச்சு!):-P

//எப்படியெல்லாம் திங் பண்றாங்கப்பா!!!// ரிப்பீட்டேய்!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

//அப்படி சரியாகாம போனாத்தான் பாவம் கவிஞரா ஆகிடறாங்க.// ஆஹா! கவிமடத்துக்கு சரியான் கேண்டிடேட் அய்யா நீர்..

//மொக்கைப் பதிவு தொடர் ஒண்ணு ஓடுதாமே. அதுக்கு யாரும் கூப்பிடறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். அதுக்கும் சேர்த்துதான் இந்தப் பதிவு.//

உங்களை, என்னை எல்லாம் அதுக்கு யாருமே கூப்பிட மாட்டாங்க.. டெய்லி வந்தா பௌர்ணமிக்கு என்ன மரியாதை?

said...

உள்ளேன்! (இவ்ளோ பெரிய பதிவெல்லாம் போட்டா படிக்கமாட்டேன்.. சொல்லிட்டேன்)

said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

டிஸ்கி ன்னு சொல்றீங்களே அது (வும்) தமிழ்ச் சொல்தானே? :-)))))

said...

ஓஹ், இது மொக்கைத் தொடர்ன்னு உள் அர்த்தம் இருக்குதுங்கோவ்...

said...

மொக்கையிலும் மொக்கையிதுன்னு சொல்ல முடியாத அளவுக்கு உப்புமால நெய் ஊத்திக் கிண்டியிருக்கீங்க...ம்ம்ம்ம்... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

//இன்னாபா இது இசலிகளின் இடாப்பு குஜிலிகளின் இடுப்புன்னு :)))//

அடப்பாவி, எப்பவுமே இடுப்பு ஞாபகம்தானா? :))

//என்னிக்குமே நான் டைரி எழுதினதில்ல..ஆனா எங்கப்பாரு பழைய டைரிகளைப் புரட்டினா 'ஆபிசுக்கு போனேன்'களுக்கு நடுவில சுவாரசியமா நெறய சிக்கும்..எங்கம்மாவை பொண்ணு பார்த்தது முதல் கொண்டு :))//

அப்பாவின் டைரிக் குறிப்பு அப்படின்னு அந்த சிக்கின பதிவு எல்லாம் போடவேண்டியதுதானே.
(டிஸ்கி: சிக்கினது என நான் உங்க அம்மாவை பெண் பார்த்ததைப் பத்தி சொல்லலை!)

said...

//அப்போ நீங்களும் என்னை மாதிரி புதுவருஷத்துக்கு இசலிகள் எல்லாம் எடுத்து இடாப்பு போட்டதில்லைன்னு சொல்ல வர்றீங்க?//

அதே அதே நீதான்யா நம்ம இனம்! :))

said...

//டைரி- இதை எழுதி நான் பட்ட அவஸ்தைகள் தான் அதிகம். :-((//

குமார், நாங்க எல்லாம் தொடர் ஆட்டப் பதிவு போடறோம். ஆனா நீங்க இந்த ஆட்டத்தை வெச்சு ஒரு தொடரே போடலாம் போல இருக்கே!! :))

said...

//நல்ல இசலி, நல்ல இடாப்பு, சபதம் எடுத்துக்கலைன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாமே! அதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா? :P//

நான் வேண்டாமுன்னுதான் சொன்னேன். நீங்கதானே மொக்கையைப் போடுங்க, உப்புமாவைப் போடுங்கன்னு புடுங்கி எடுத்தீங்க. இப்போ இப்படியா. நல்லா இருங்கம்மா!!

said...

//இதுக்கு வெத்திலை, பாக்கு வச்சு அழைப்பு வேறேயா? :P//

இதுக்கெல்லாம்தான் வெத்திலை பாக்கு வெச்சு அழைக்கணும். நல்ல பதிவா இருந்தா தானா வருவாங்க இல்ல! :))

said...

//இடாப்பு என்றால் அட்டவணை என்பது சரிதான். ஆனால் இசலி என்ற சொல் ஓய்யமல் சண்டையிடும் பெண்ணையோ அல்லது பிணங்கும் பெண்ணையோ குறிக்கும். என்னிடம் இருக்கும் அகராதிகள் இந்த பொருளை மட்டுமே சொல்லுகின்றன.//

ஓகை, நாந்தான் இப்படி எல்லாம் கேட்பீங்கன்னு தெரிஞ்சு அகராதிக்கு சுட்டி எல்லாம் குடுத்து இருக்கேனே. ஒரு தடவை சொடுக்கினா தெரியப் போகுது.

//ஆனால் இடாப்பு என்கிற இக்காலத்தில் மிகவும் தேவைப்படுகிற ஒரு சொல்லை அறியத் தந்ததற்கு நன்றி.//

எதையோ தேடப் போயி கிடைச்சுது. இனிமே இதுக்கு நிறைய பயன் இருக்கு இல்லையா! :)

said...

//என்னாபா - சபதம் எடுக்கலே - ஒத்துக்கறோம் - அதுக்கு ஒரு பதிவா - இர்ந்தாலும் படிச்சென் ரசிச்சேன் - //

வாங்க சீனா! அப்படிச் சொன்னா விட மாட்டேங்கறாங்களே. பதிவு போட்டாத்தான் ஆச்சுன்னு சொல்லறாங்க. அதான்....

said...

//எப்படியெல்லாம் திங் பண்றாங்கப்பா!!!//

ரெண்டு பதிவா வராத ஆளு வந்தீரா இல்லையா? புல் யூஸ் ஆப் கிட்னி மேட்!! :)

said...

//கொத்ஸ்,
நீங்க எழுதுன கவுஜ சூப்பர்...
ஒரு டைரி ஃபுல்லா இப்படி எழுதியிருக்கீங்கனா நீங்க பெரிய ஆளு தான் ;)//

களவும் கற்று மறன்னு சொல்லி இருக்காங்களே. அது மாதிரி இது கவுஜ எழுதித் தொலை அப்படின்னு வெச்சுக்கலாமா? அடுத்த முறை சென்னை போனா அதை எல்லாம் எடுத்தாந்து பதிவாப் போட்டு உங்களை படுத்தறேன். :)

said...

//புத்தாண்டு முதல் பதிவிலியே ஈயம் இளிக்கிறதே (பத்த வச்சாச்சு!):-P//

கெபி - இது முதல் பதிவு இல்லை, ரெண்டாவது!! ஆகையால் நீங்க சொன்னது எல்லாம் கேன்சல்! :))

//புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

அப்படி இப்படி பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல நேரம் வந்தாச்சு!! :)

said...

//ஆஹா! கவிமடத்துக்கு சரியான் கேண்டிடேட் அய்யா நீர்..//

கவி மடத்தில் சேரத்தானே ஆசை, ஆசை பட்டா எனக்கு ஏது தோசை!

நம்ம கட்சி ஆளைய்யா கொஞ்சம் ரெக்கமண்டு பண்ணய்யா, வாத்தியாரும் ஏத்துக் கொள்ளுவாரோ, வந்து என்னை சேர்த்துக் கொள்ளுவாரோ

//அப்படின்னு நான் பதிவு போடற மாதிரி பின்னூட்டம் போடறீங்களே!! :))//

இது!!!! :)))))

said...

//உள்ளேன்! (இவ்ளோ பெரிய பதிவெல்லாம் போட்டா படிக்கமாட்டேன்.. சொல்லிட்டேன்)//

தொடர் பதிவு போட்டா படிக்க மாட்டேன், பெருசாப் பதிவு போட்டா படிக்க மாட்டேன். யக்கா சேதுக்கு அரசி. ஆனாலும் இதெல்லாம் உங்களுக்கே டூ மச், த்ரீ மச்சா தெரியலை! :)

said...

//எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

டிஸ்கி ன்னு சொல்றீங்களே அது (வும்) தமிழ்ச் சொல்தானே? :-)))))//

கூகிளாண்டவரைக் கேட்டேன்

இசலி பத்தி கேட்டா வந்த பக்கங்களின் எண்ணிக்கை - 12

இடாப்பு பத்தி கேட்டாலோ - 17

டிஸ்கி அப்படின்னு தேடினா - 3310

இப்போ சொல்லுங்க எது தமிழ் எது தமிழ் இல்லை!! :))

said...

//ஓஹ், இது மொக்கைத் தொடர்ன்னு உள் அர்த்தம் இருக்குதுங்கோவ்...//

அப்படியா? அதைத்தான் வெளிப்படையா சொல்லியாச்சே. இப்போ என்னாத்த கண்டு பிடிச்சீரு!!

said...

//மொக்கையிலும் மொக்கையிதுன்னு சொல்ல முடியாத அளவுக்கு உப்புமால நெய் ஊத்திக் கிண்டியிருக்கீங்க...ம்ம்ம்ம்... இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

ஜிரா, அண்ணா, இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சுட்டீங்க, அப்புறம் நான் என்ன சொல்ல?

வழக்கம் போல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!! :))

said...

ஓ அதுக்குள்ள புது வருசம் வந்திருச்சோ? ஆமா இந்த வெண்பா பதிவு பக்கம் வரதில்லன்னு "இசலி" எதுனா "இடாப்பு"ல சேத்துருக்கீரோ? :)

என்னவோ. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

( அடிக்க வராதீங்க! புது வேல. மறுபடி அடலைக்கே வந்தாச்சு. இங்க ஆணியெல்லாம் நெறய இல்லன்னு சொன்னாங்க. இனிமே அடிக்கடி பதிவுக்கெல்லாம் வாரேன். ;) )

said...

இசலி, இடாப்பு - ரெண்டு புதிய / பழைய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி சொல் ஒரு சொல்லில் அண்மைக்காலமாக எந்த இடுகையும் வராத குறையை ஈடு செய்து விட்டீர்கள் கொத்ஸ். எந்த வகை இசலிகளின் பட்டியல்/இடாப்பு உங்களுக்குக் கிடைத்ததோ அதை வைத்துக் கொண்டு நலமாக வாழ வேண்டும் என்று இந்த புத்தாண்டு நேரத்தில் வாழ்த்திக் கொள்கிறேன்.

உண்மையைச் சொல்லணும்னா புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு படிச்சவுடனே பொங்கலைத் தான் புத்தாண்டுன்னு சொல்றீங்கன்னு நெனைச்சுட்டேன். அப்புறம் தான் ஆங்கிலப் புத்தாண்டைத் தான் இம்புட்டு நாள் கழிச்சு சொல்றீங்கன்னு புரிஞ்சது.

இன்னொன்னும் கேக்கணும்ன்னு இருந்தேன். இந்த 'இலவசம்' வலைப்பதிவுல நீங்க மட்டும் தானே எழுதுனீங்க (எழுதுறீங்க)?! ஆனா இடப்பக்கம் 'என்னைப் பற்றி'க்கு கீழே ஒரு இடாப்பு இருக்கே. அந்த இடாப்புல இருக்குறவங்க எல்லாம் இந்த 'இலவசம்' பதிவுல எழுதுறாங்களா? அந்த இடாப்ப 'இசலிகளின் இடாப்பு'ன்னு சொல்லலையே நீங்க?

said...

வாங்க புயலாரே,

//ஓ அதுக்குள்ள புது வருசம் வந்திருச்சோ? ஆமா இந்த வெண்பா பதிவு பக்கம் வரதில்லன்னு "இசலி" எதுனா "இடாப்பு"ல சேத்துருக்கீரோ? :)//

ஆமாம் அதுக்கு நேரம் கூடி வரலை. எல்லாரும் மொத்தமா கை விட்டுட்டாங்க. ஆரம்பிக்கணும். பிக்கலாம்.

//இங்க ஆணியெல்லாம் நெறய இல்லன்னு சொன்னாங்க. இனிமே அடிக்கடி பதிவுக்கெல்லாம் வாரேன். //

வாங்க வாங்க. வந்து கொஞ்சம் ஆதரவு தந்தா விக்கி, வெண்பா எல்லாத்தையும் ஆரம்பிக்கலாம்.

said...

வாங்க குமரன். ரொம்ப நாள் கழிச்சு உங்க கிட்ட இருந்து இவ்வள்வு பெரிய பின்னூட்டம். ரொம்ப நன்றி! :)

//இசலி, இடாப்பு - ரெண்டு புதிய / பழைய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி சொல் ஒரு சொல்லில் அண்மைக்காலமாக எந்த இடுகையும் வராத குறையை ஈடு செய்து விட்டீர்கள் கொத்ஸ்.//

பதிவில் எதாவது மேட்டர் வேண்டாமா? எழுத மேட்டர் இல்லைன்னா இப்படி எதாவது செய்யணும்தானே! :)

//எந்த வகை இசலிகளின் பட்டியல்/இடாப்பு உங்களுக்குக் கிடைத்ததோ அதை வைத்துக் கொண்டு நலமாக வாழ வேண்டும் என்று இந்த புத்தாண்டு நேரத்தில் வாழ்த்திக் கொள்கிறேன்.//
இப்போ எல்லாம் புத்தாண்டு இசலி எல்லாம் இல்லைங்க. வாழ்க்கையை வர மாதிரியே எடுத்துக்க வேண்டியதுதான்!

//உண்மையைச் சொல்லணும்னா புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு படிச்சவுடனே பொங்கலைத் தான் புத்தாண்டுன்னு சொல்றீங்கன்னு நெனைச்சுட்டேன். அப்புறம் தான் ஆங்கிலப் புத்தாண்டைத் தான் இம்புட்டு நாள் கழிச்சு சொல்றீங்கன்னு புரிஞ்சது.//

முதல் வரியிலேயே ஆங்கிலத்தில் சொல்லி அதை குறிப்பா காட்டியாச்சே! அது மட்டுமில்லாம எங்க வீட்டில் எல்லாம் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான்! ;-)

//அந்த இடாப்ப 'இசலிகளின் இடாப்பு'ன்னு சொல்லலையே நீங்க?//

அது ஆங்கிலத்தில் Marriage of Convenience எனச் சொல்வது போல் சாவகாச சகவாசம்! ஒருத்தர் அமீரகம், ஒருத்தர் உருசியா, ஒருத்தர் புதரகம். அதனால மறுமொழிகள் மட்டுறுத்தல் செய்ய வசதியா இருக்கா அதான் அப்படி. அவங்க பதிவிலும் நம்ம பேர் இருக்கும். ஆனா எழுதறது என்னவோ அவங்க அவங்க பதிவில்தான்! :)

said...

இசலிக்கு ஓகை ஐயா சொன்ன இன்னொரு பொருளை வைத்து கொஞ்சம் உள்குத்துகளுடன் எழுதியிருந்தேன் கொத்ஸ். நீங்க கவனிக்கலை போலிருக்கு. எப்பவும் ஒழுங்கா எழுதுறவன் உள்குத்து வச்சு எழுதுனா யாருக்குத் தான் அப்படி பாக்கத் தோணும்? இல்லையா?

(அப்பாடா. தனக்குத் தானே திட்டத்தின் கீழ் எனக்கு நானே புனித பிம்பத்தை உருவாக்கியாச்சு).

said...

//இசலிக்கு ஓகை ஐயா சொன்ன இன்னொரு பொருளை வைத்து கொஞ்சம் உள்குத்துகளுடன் எழுதியிருந்தேன் கொத்ஸ். நீங்க கவனிக்கலை போலிருக்கு. //

கவனிச்சேன். அந்த இடாப்பில் ஈயம் பித்தளைன்னு எதுவும் இல்லையேன்னு சொல்ல நினைச்சேன் விட்டுப் போச்சு! :))

//எப்பவும் ஒழுங்கா எழுதுறவன் உள்குத்து வச்சு எழுதுனா யாருக்குத் தான் அப்படி பாக்கத் தோணும்? இல்லையா? //

இல்லை படிக்கிறவன் அப்படி சூது வாது தெரியாத நல்லவனாக்கூட இருக்கலாமே! :)

//எனக்கு நானே புனித பிம்பத்தை உருவாக்கியாச்சு//

ஆஹா! அடி வாங்க அடுத்த ஆள் ரெடி. வாங்கடேய்!! :))


ஆக மொத்தத்தில் நம்மளை முகப்பில் இருந்து தூக்கிட்டீங்க! நல்லா இருங்கடே! :))

said...

இந்த பதிவுக்கே என்ன கமெண்ட் போடறதுன்னு யோசிச்சுகிட்டிருக்கேன்... என்னடான்னா அதுக்குள்ள போட்டோ போடுறீரு...

டெய்லி பதிவு ரிலீஸ் பண்ணா எப்படிய்யா? கமெண்ட் போடறவங்களோட கஷ்டத்தையும் கணக்கில் கொண்டு கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்....

அப்பாடா.. இந்த பதிவுக்கு கமெண்டாச்சு!