Sunday, January 06, 2008

பனியாய் பரவும் புகைப்படத் தொடர்

இந்த வருஷ ஆரம்பமே தொடர் விளையாட்டுக்களா இருக்கு. முதலில் நம்ம பாபா வந்து போன வருஷம் எடுத்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது அப்படின்னு சொல்லுங்க அப்படின்னு கூப்பிட்டாரு. அவரு கிட்ட டிமிக்கி குடுத்துடலாம் அப்படின்னு பார்த்தா பின்னாடியே நம்ம வெங்கட்டும் வந்து படத்தைப் போடய்யான்னு மிரட்டிட்டுப் போயிட்டாரு. வெங்கட் எடுத்த படத்தைப் பார்த்தால் நமக்கு அவ்வளவு பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் படம் எடுக்கிற பார்ட்டி வந்து நம்மளைக் கூப்பிடறாரே அப்படின்னு ஒரு யோசனை. அப்புறம் கமல் ரஜினி படத்துக்கே வடிவேலு தேவையா இருக்கே. அந்த மாதிரி இவங்க எல்லாம் விளையாடுற இடத்தில் நம்மளை ஊறுகாயா தொட்டுக்கறாங்க போல அப்படின்னு மனசைத் தேத்திக்கிட்டு துணிஞ்சு பதிவைப் போடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

அப்புறமா நம்ம கிட்ட இருக்கும் படங்களை எல்லாம் பார்த்தா இப்படி பொதுவில் போடற மாதிரி எதுவும் பெருசா இல்லை. முதலில் நம்ம எடுக்கும் முக்கால்வாசி படங்களில் நம்ம குடும்பத்தார் பல்லைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க இருக்கும் படத்தைப் போடும் அளவு நம்ம தமிழ் வலைப்பதிவுலகம் மேல நம்பிக்கை வரலை. அதனால அவை அனைத்தும் காலி. மீதி இருக்கும் கொஞ்சமே கொஞ்சம் படங்களில் சிலவற்றை ஏற்கனவே பல பதிவுகளில் போட்டாச்சு. அதனால போடாத படங்கள் அப்படின்னு பார்த்தா ரொம்பவே கொஞ்சம்தான் தேறுது. அதில் எனக்குப் பிடிச்சது இந்த படம்தான்.இந்தப் படத்தை எடுத்தது நியூயார்க் நகரில் உள்ள ப்ராக்ன்ஸ் மிருகக்காட்சி சாலையில் எடுத்தது. நாங்கள் சென்ற வேனிற்கால விடுமுறை நேரத்தில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறப்புக் கண்காட்சி ஒண்ணு வெச்சு இருந்தாங்க. ஒரு பெரிய கூடாரத்தின் உள்ளே விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள். நம் தோள் மேலே வந்து உட்காருது, காது அருகே படபடவென சிறகடிச்சுக்கிட்டுப் போகுது, சிறிதும் பெரிதுமாய், வண்ண வண்ணமாய் ஒரே பட்டாம்பூச்சிக் கொண்டாட்டம்தான். என் மகனைப் போலவே ஒரு இடத்தில் நிலைகொள்ளாத இந்த வண்ணத்துப்பூச்சிகளை படமெடுப்பது ஒரு சவாலாகவே இருந்தது. அங்கு சுட்டுத் தள்ளியவற்றில் எனக்குப் பிடித்தது இந்தப் படம்தான். இதில் பிற்தயாரிப்பு எதுவும் செய்யவில்லை.

அப்புறம் ஒத்த போட்டோ போட்டா வாஸ்து படி பதிவுக்கு ஆகாதாமே. அதுனால போன வருஷம் எடுத்த படங்களில் பிடித்தது இவை கூட. இது பத்தி முன்னமே இந்தப் பதிவில் சொல்லியாச்சு. படங்களில் விசேஷம் என்னன்னா சுமார் 300 அடி உயரத்தில் அந்தரத்தில் ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கும் போது எடுத்த படங்கள். இவ்வளவு நல்லா வரும் அப்படின்னு எதிர்பார்க்கவே இல்லை.அப்புறம் கடைசியா இந்த விளையாட்டு விளையாட இன்னும் பலரைக் கூப்பிடணுமாம். அதுல பாபா நாலு பேரை கூப்பிட்டு இருக்காரு. ஆனா அப்புறமா வந்த வெங்கட்டாகட்டும், அவர் கூப்பிட்டு வந்த சீவிஆர் ஆகட்டும் தலைக்கு மூணு பேரைத்தான் கூப்பிட்டு இருக்காங்க. அதிலேயும் இந்த சீவீஆர் நான் நினைச்ச ரெண்டு பேரை கூப்பிட்டுட்டாரு. அதனால நானும் மூணு பேரோட நிறுத்திக்கறேன். இவங்க எல்லாருமே படம் போட்டு பட்டையைக் கிளப்பறவங்கதான். அதுனால நல்ல பதிவா வரும் அப்படின்னு நம்பறேன். வந்து படத்தைப் போடுங்க அப்படின்னு நான் கூப்பிடும் மூவர்
  1. வைத்தியர் இராமநாதன்
  2. தல கைப்புள்ள
  3. மாதாமகி துளசி ரீச்சர் (அப்பாடா, நானும் 33% ஒதுக்கீடு குடுத்துட்டேன்!)
டிஸ்கி: அடுத்த பதிவும் ஒரு தொடர் பதிவுதாங்க. அதுக்கு வெயிட்டீஸ்!

31 comments:

said...

வழக்கம் போல படத்தை சொடுக்கிப் பார்த்தா பெருசாத் தெரியும்.

said...

நிஜமாகவே வேறு படமே இல்லையா?
சரி பெரியதாக்கி பார்கலாம் என்று பார்த்தால் அது பிகாசாவுக்கு போய் நிக்குது.

said...

வாங்க குமார்.

//நிஜமாகவே வேறு படமே இல்லையா?//

அவ்வளவு மோசமாவா இருக்கு? :(

//சரி பெரியதாக்கி பார்கலாம் என்று பார்த்தால் அது பிகாசாவுக்கு போய் நிக்குது.//

ஆமாம். அங்க நான் பகிர்ந்து கொண்டிருக்கும் ஆல்பம் இருக்குமே. அதில் பெரியதாகப் பார்க்கலாமே...

said...

வண்ணத்துப் பூச்சி படம் எனக்கு ரொம்பப்ப்ப்ப்ப் பிடிச்சிருக்கு

said...

சீனா, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!

said...

இது மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சி.

swan plant வீட்டுத் தோட்டத்திலே வச்சாப்போதும். இது வந்து குடியேறிரும்.

வெறும் 33% தானா?

said...

படம் சூப்பரா இருக்கு. அப்படியே ஒரு வீடியோ, podcast இப்படி பல தொடர்கள் தொடங்கிட வேண்டிதானே :-)

//கமல் ரஜினி படத்துக்கே வடிவேலு தேவையா இருக்கே. //

வடிவேலுதான் இப்ப தமிழ் சினிமாவின் most wanted person அப்படின்னு பேசிக்கிறாங்க :-))

said...

//இது மோனார்க் வகை வண்ணத்துப்பூச்சி.

swan plant வீட்டுத் தோட்டத்திலே வச்சாப்போதும். இது வந்து குடியேறிரும்.//

அட வரலாறு ரீச்சர் (வரலாறு ஆன ரீச்சர் இல்லை சரியாப் படியுங்க!) பயாலஜி எடுக்கறாங்களே!! தகவலுக்கு நன்றி. அது என்ன Swan Plant. கொஞ்சம் எடுத்து விடுங்க...

//வெறும் 33% தானா?//

எம்புட்டுக் குடுத்தாலும் போதாது. ஒரு satisfactionஏ இல்லாத கும்பல். குடுத்தவனுக்கும் சந்தோஷம் இல்லை, வாங்கினாலும் திருப்தி இல்லை...

ஓ, இது நீங்களா. நான் என்னவோ வீட்டு ஞாபகத்தில்... ஹிஹி...

said...

//படம் சூப்பரா இருக்கு. அப்படியே ஒரு வீடியோ, podcast இப்படி பல தொடர்கள் தொடங்கிட வேண்டிதானே :-)//

அதெல்லாம் தெரிஞ்சு செஞ்சா ஆரம்பிச்சு இருக்க மாட்டோம். நாங்களே அடக்கி வாசிக்கறோமில்ல. அப்பவே தெரிய வேண்டாம்...

//வடிவேலுதான் இப்ப தமிழ் சினிமாவின் most wanted person அப்படின்னு பேசிக்கிறாங்க :-))//

எப்போ, அந்த விஜயகாந்த் வீட்டு ஆளுங்களோட தகராறு செஞ்ச நேரத்தில் இருந்தா? யோவ் Most Wanted அப்படின்னா விஷயமே வேற. கொஞ்சம் கம்முன்னு இரும்.

said...

வண்ணத்துப் பூச்சி படம் நல்லாயிருக்கு தல..;))

அடுத்து என்ன சபதம்!? ;)

said...

//அந்த விஜயகாந்த் வீட்டு ஆளுங்களோட தகராறு செஞ்ச நேரத்தில் இருந்தா?//

:-)) அது மட்டுமல்ல... இப்ப மலேசியா கலை நிகழ்ச்சிக்கும் டிமிக்கி கொடுத்திட்டார் இல்ல... குண்டக்க மண்டக்கன்னு கேள்வி கேட்டு ('எந்த ஆர்மிக்கு கேப்டன்?') மக்காள்ஸெல்லாம் கொலை வெறியோட தேடிட்டு இருக்காங்களாம். அதுனாலதான் 'அப்படி' சொன்னேன். :-))

உங்கள் ஆல்பத்திலிருந்த மற்ற புகைப்படங்களும் அருமை. :-)

said...

இந்த DoF-ன்னு சொல்றாங்களே... அதெல்லாம் பயன்படுத்தி இருக்கீங்க போலிருக்கே...
இப்படிக்கு
பஸ்வோர்ட் பாலாஜி

said...

//வண்ணத்துப் பூச்சி படம் நல்லாயிருக்கு தல..;))

அடுத்து என்ன சபதம்!? ;)//

வாங்க கோபி. நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்னி. ஆனாலும் ரொம்ப சுட்டிதான் நீர்!! என்ன ஆனாலும் எடுத்த சபதம் முடிப்பேன்... :)))

said...

//:-)) அது மட்டுமல்ல... இப்ப மலேசியா கலை நிகழ்ச்சிக்கும் டிமிக்கி கொடுத்திட்டார் இல்ல... //

இது வேறையா. இந்த மேட்டர் தெரியாதே நமக்கு.

//மக்காள்ஸெல்லாம் கொலை வெறியோட தேடிட்டு இருக்காங்களாம். அதுனாலதான் 'அப்படி' சொன்னேன். :-))//

ஆஹா, நமக்கு ஆட்டோ அனுப்பாம ஓய மாட்டீங்க போல இருக்கே!!

said...

//இந்த DoF-ன்னு சொல்றாங்களே... அதெல்லாம் பயன்படுத்தி இருக்கீங்க போலிருக்கே...
இப்படிக்கு
பஸ்வோர்ட் பாலாஜி//

பஸ்வோர்ட் பாலாஜி அவர்கள் சமூகத்திற்கு,

அடியேன் இலவசம் தெண்டனிட்டு எழுதிக் கொள்வது. தாங்கள் சொல்லும் DoF மேட்டர் எல்லாம் அடியேன் சிற்றறிவுக்கு எட்டாக் கனி. அப்படி எதையாவது உபயோகப்படுத்தி இருந்தாலும் அது தெரியாமல் நிகழ்ந்ததே. அப்படி நிகழ்ந்ததிற்கு அடியேன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதற்கு யாரேனும் கோப்பிரைற் வைத்திருந்தால் அவர்களிடம் பேசி எனக்கு எந்த விதமான பிரச்சனையும் வராதவாறு பார்த்துக்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

said...

ஆஹா.. நட்பின் இலக்கணமே,

நமக்கு நாமேல நம்மள அடிச்சுக்க ஆளில்லேனு நிருபிச்சிட்டீரு...

நாளைக்கு போடறேன் பதிவ...

said...

ராம்ஸூ, வந்துட்டீங்களா, வாங்க வாங்க. ஆனா நம்ம படத்தைப் பத்தி ஒரு வார்த்தை கூடவா சொல்ல முடியலை. போகட்டும்.

அப்புறம் அந்த நமக்கு நாமே மேட்டரில் என்னய்யா சொல்ல வரீரு? விட்டா உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட அப்படின்னு பாட்டு பாடுவீரு போல. எல்லாம் நாம சேர்ந்து போட்ட நோட்ஸில் சொல்லி இருக்கும் மேட்டர்தானே....

நமக்கு நாமே திட்டத்தின் படி, நான் உம்ம பதிவில் வந்து கூப்பிட்டதா சொல்லணும். அதுக்கு நீர் அங்க நன்னி சொல்லிட்டு, இங்க வந்து கூப்பிட்டதுக்கு நன்றி அப்படின்னு நீர் சொல்லணும். அதனால என்ன அப்படின்னு நான் சொல்லணும், பதிவு போட்டுட்டு போட்டாச்சுன்னு நீர் சொல்லணும், போட்டதுக்கு நன்றி அப்படின்னு நான் சொல்லணும்.
அப்புறம் உம்ம பதிவில் வந்து நான் கேட்டதை மதிச்சு பதிவு போட்டதுக்கு நன்றி அப்படின்னு நான் சொல்லணும்
அதுக்கு நீர் நன்றி சொல்லணும்.
அப்புறம் நீர் கூப்பிட்ட ஆட்களோட இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடணும்.

இதுதானேப்பா இயற்கை நியதி. பண்டை தமிழர் பண்பாடு. நம்முடைய உயர்ந்த கலாச்சாரம்!

said...

ரொம்ப சாதாரணச் செடியாட்டம் இருக்கும் இது.

மேல் விவரம் ரெண்டு ' யும் இங்கே 'பாருங்க.

இங்கெஇங்கெ

said...

ரீச்சர், மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. அப்புறமா எழுதி இருந்ததுக்குப் பதிலே சொல்லலையே... :))

said...

//ஆனா நம்ம படத்தைப் பத்தி ஒரு வார்த்தை கூடவா சொல்ல முடியலை. போகட்டும். //
நல்லா இருக்குனு ரெண்டு வார்த்தைய வெறும் சம்பிரதாயத்துக்காக உதிர்த்துவிட்டு போவதைவிட இப்பேர்ப்பட்ட படத்துக்கு இணையாக முடியாது, துணையாகவாவது ஒரு பாராட்டை கொடுக்கவேண்டும் என்ற தேடுதல் முயற்சியில் இறங்கி தோற்றதன் காரணமாகவே அதை எழுதாமல் விடப்போகலாயிற்று.

அப்புறம் அம்ம பதிவு இதோ..

said...

33 சதவீதம் குடுத்தீங்க சரி... ஆனா டீச்சரை மூனாவது பேராப் போட என்ன காரணம்? அதுவுமில்லாம அவங்களுக்கு முன்னாடி இருக்குற எண் 3 மட்டும் கருப்பா இருக்கே. ஆம்பளைங்களுக்குப் போட்டிருக்குற எண் 1ம் 2ம் ஊதா நிறத்துல இருக்கே? அப்ப நீங்களும்.......... (யாருப்பா எங்க... கொடியத் தூக்குங்கப்பா...)

அப்புறம்.. படம் நல்லாருந்துச்சு.

said...

அந்தரத்திலிருந்து எடுத்தீங்களா?
எதுக்கு?????

அதனாலதான் நல்லா வந்திருக்கா:))
பட்டாம்பூச்சி உண்மையாவே நல்லா இருக்கு.
கண்கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு.
நீங்க சபதம் போட்டீங்களா.
அங்கே என்னடான்னா வரலாற்றம்மா கதை எழுதறாங்க...
சாமி.!!!

said...

தொடர்ப் பதிவு படிப்பவரே படிப்பார்
பாத்ரூம்கூடப் போகா தார்


தொடர் பதிவுன்னாலே காத தூரம் ஓடுவேன். அதனால இனிமே தொடர் பதிவுக்கெல்லாம் வரலைன்னா கண்டுக்கக்கூடாது.

எனக்குப் பிடிச்சது... லேக் ஜார்ஜ் படங்கள். பாரா செயிலிங்கின் போது எடுத்ததா? நானும் முந்தி அந்த வீரவிளையாட்டெல்லாம் செய்யணும்னு நினைச்சிருக்கேன், ஆனா இப்பலாம் பயம் வந்துருச்சு.

said...

//நல்லா இருக்குனு ரெண்டு வார்த்தைய வெறும் சம்பிரதாயத்துக்காக உதிர்த்துவிட்டு போவதைவிட இப்பேர்ப்பட்ட படத்துக்கு இணையாக முடியாது, துணையாகவாவது ஒரு பாராட்டை கொடுக்கவேண்டும் என்ற தேடுதல் முயற்சியில் இறங்கி தோற்றதன் காரணமாகவே அதை எழுதாமல் விடப்போகலாயிற்று.

அப்புறம் அம்ம பதிவு இதோ..//

என்னவோ சொல்லறீரு, ஒண்ணும் புரியலை. ஆனா சொன்ன வேலையைச் செஞ்சுட்டு சரியா போஸ்டர் ஒட்டிட்டீரு!! நல்லா இரும்!

said...

//33 சதவீதம் குடுத்தீங்க சரி... ஆனா டீச்சரை மூனாவது பேராப் போட என்ன காரணம்? அதுவுமில்லாம அவங்களுக்கு முன்னாடி இருக்குற எண் 3 மட்டும் கருப்பா இருக்கே. ஆம்பளைங்களுக்குப் போட்டிருக்குற எண் 1ம் 2ம் ஊதா நிறத்துல இருக்கே? அப்ப நீங்களும்.......... (யாருப்பா எங்க... கொடியத் தூக்குங்கப்பா...)//

இரண்டாவது ரன்னர் அப், முதல் ரன்னர் அப் யாருன்னு சொல்லிட்டுதானே வின்னர் யாருன்னு சொல்லுவாங்க. இது கூடவா உங்களுக்குத் தெரியலை? :)

அந்த நிற விளையாட்டு பிளாக்கர் சதி அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க?

//அப்புறம்.. படம் நல்லாருந்துச்சு.//

அப்பாடா! ரொம்ப நன்னிங்கோ!

said...

//அந்தரத்திலிருந்து எடுத்தீங்களா?
எதுக்கு?????//

அதான் சுட்டி எல்லாம் குடுத்து இருக்கேனே. போய் பாக்கறது.

//நீங்க சபதம் போட்டீங்களா.
அங்கே என்னடான்னா வரலாற்றம்மா கதை எழுதறாங்க...
சாமி.!!!//

கோபி சொன்னதைப் படிக்கலையா? :)

said...

//தொடர்ப் பதிவு படிப்பவரே படிப்பார்
பாத்ரூம்கூடப் போகா தார்//

தளை தட்டல் எல்லாம் இருக்கு. விரைவில் ஒரு வெண்பா க்ளாஸ் எடுக்க வேண்டியதுதான் போல!

//தொடர் பதிவுன்னாலே காத தூரம் ஓடுவேன். அதனால இனிமே தொடர் பதிவுக்கெல்லாம் வரலைன்னா கண்டுக்கக்கூடாது.//

அதெப்படி? ஓடுனா தொரத்துவோம்!!

//எனக்குப் பிடிச்சது... லேக் ஜார்ஜ் படங்கள். பாரா செயிலிங்கின் போது எடுத்ததா? நானும் முந்தி அந்த வீரவிளையாட்டெல்லாம் செய்யணும்னு நினைச்சிருக்கேன், ஆனா இப்பலாம் பயம் வந்துருச்சு.//

ஆமாம். லேக் ஜியார்ஜ்தான். பயமெல்லாம் இல்லைங்க. ரொம்ப நல்லா இருந்தது. போயிட்டு வாங்க.

said...

கொத்ஸ்,
உங்களை டேக் செய்திருக்கிறேன்.
கண்மணி என்னை அழைத்து பெஸ்ட் ஆஃப் போஸ்ட்ஸ்(நான் பதிவிட்டது)
குறிப்பிடச் சொன்னாங்க.
நான் உங்களை அழைத்திருக்கிறேன்.
சரியா???

said...

வல்லிம்மா, இன்னும் ஒரு தொடர் விளையாட்டா? கமிட் பண்ணிக்கிட்ட பதிவு எல்லாமே போட்டு முடிக்கலையே. கொஞ்சம் டயம் குடுங்கம்மா....

said...

இதுதானேப்பா இயற்கை நியதி. பண்டை தமிழர் பண்பாடு. நம்முடைய உயர்ந்த கலாச்சாரம்!
//

எங்கே போனது அந்த உயர்ந்த கலாச்சாரம்? மனம் கொதிக்கிறது இன்றைய கலாசார சீரழிவைக் கண்டால்..

சரி சரி.. அழாதீங்க.. இதை மட்டும் எழுதிட்டுப் போகலை.. போட்டோ எல்லாம் சூப்பர்..

said...

//எங்கே போனது அந்த உயர்ந்த கலாச்சாரம்? மனம் கொதிக்கிறது இன்றைய கலாசார சீரழிவைக் கண்டால்..//

நல்லா இருங்கண்ணா!!

//சரி சரி.. அழாதீங்க.. இதை மட்டும் எழுதிட்டுப் போகலை.. போட்டோ எல்லாம் சூப்பர்..//

இது! ரொம்ப டாங்க்ஸுங்கண்ணா!!