முகவுரை
பதிவெழுத ஆரம்பிச்ச புதுசில் என்ன எழுதணும் அப்படின்னு தெரியாம முழிச்ச நேரங்கள்தான் அதிகம். (ஆமாங்க, கட் பேஸ்ட் விளையாட்டெல்லாம் அப்போ தெரியாது.) அப்போ நம்ம டீச்சர்தான் ஒரு முக்கியமான அறிவுரை தந்தாங்க. கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்கோ, உன்னை சுத்தி நடக்கிற விஷயங்களை பாரு. எத்தனை பதிவுகள் எழுத வேண்டுமானாலும் மேட்டர் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. அதைத்தான் இன்னைக்கு வரை பின்பற்றிக்கிட்டு வரேன். அதனாலதான் நான் நட்சத்திரமா இருக்கும் இந்த வாரத்தில் அவங்களுக்கு முதல் பதிவு சமர்ப்பணம்.
அது மட்டுமில்லை. இன்னிக்கு பயணக்கட்டுரை அப்படின்னு சொன்னா உடனே அவங்க ஞாபகம்தான் நமக்கெல்லாம் வரும். இதுவும் ஒரு பயணக் கட்டுரை என்பதாலும் அவர்களுக்கு சமர்ப்பணம். ஒரு விஷயத்தில் அவங்களை மிஞ்சிட்டோமில்ல. ஏன்னா இது ஆன் லொகேஷன் பதிவு. டீச்சர், இதுக்கு என்ன சொல்லறீங்க.
முகவுரை முற்றிற்று.
____________________________________________________________________
இந்த வாரயிறுதி அமெரிக்காவில் ஒரு நீண்ட வாரயிறுதி. இந்த திங்கள்கிழமை மெமோரியல் தினம் என போரில் உயிர்நீத்தோரைப் பெருமைப் படுத்தும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது. நல்ல வெயில் வந்தபின் வரும் முதல் நீண்ட வாரயிறுதி என்பதால், அனைவரும் வெளியூர் சென்று கொண்டாடப்படும் நாட்களாகவே இருக்கிறது. நாங்களும் ஒரு நண்பர் குடும்பத்துடன் நியூயார்க் மாநிலத்தில் லேக் ஜியார்ஜ் என்ற இடத்திற்கு சென்று வந்தோம்.
நியூயார்க் மாநிலத்தின் வடப்பகுதியில் இருக்கும் இந்த ஏரி அடிராண்டேக் என்ற மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்து இருக்க்கிறது. கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் பரப்பளவும் 300 அடி வரை ஆழமும் கொண்டது இந்த ஏரி. இதன் தென்முனையில் இருக்கும் ஒரு கிராமம்தான் லேக் ஜியார்ஜ் கிராமம். இந்த வாரயிறுதியில் இந்தியர்களால், அதுவும் குறிப்பால் தமிழர்களால் முற்றுகை இடப்பட்டது என்றால் மிகையே இல்லை. அவ்வளவு தமிழர்கள்.
சுற்றுலா வரும் விருந்தினர்களையே நம்பி இருக்கும் கிராமம். ஊர் முழுவதும் ஹோட்டல்கள்தான். எல்லா விதமான உணவகங்கள், ஊரின் மையப்பகுதியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடி களிக்க கேளிக்கை இடங்கள், பல விதமான வீரவிளையாட்டுகள் என பொழுது போக்குவதற்காகவே இருக்கும் ஊர். வார நாட்களில் இவ்வளவு விருந்தினர்கள் இல்லாமல் எப்படி இருக்கும் என நினைத்தே பார்க்க முடியவில்லை.
இது மட்டுமில்லாமல், ஒரு பழைய கோட்டையும் இருக்கிறது. கோட்டை என்றால் உடனே நம்மூர் கோட்டை மாதிரி எல்லாம் எண்ணிப் பார்க்காதீர்கள். நம்மூர் அரசர்கள் எல்லாம் அவர்கள் குழந்தைகளுக்கு விளையாட கட்டிக் கொடுக்கும் கோட்டைகள் கூட இதை விடப் பெரிதாக இருக்கும். வில்லியம் ஹென்றி கோட்டை எனப் பெயர் கொண்ட இது இப்பொழுது ஒரு மியூசியமாகவும் ஒரு ஹோட்டலாகவும் இருக்கிறது. செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சண்டைகள் நடந்த இடம் இது. இன்று இதனை ஒரு டிராமா போல் செய்து காண்பிக்கிறார்கள். சிறார்களுக்கு அந்த வீரர்களைப் போன்று உடையணிவித்து, அவர்கள் படையில் சேர்ந்ததுக்காக ஒரு சான்றிதழும் தருகிறார்கள். (எல்லாவற்றிற்கும் தனித்தனி கட்டணம் உண்டு.)
நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் இடமில்லாமல் போய் எங்களை இந்த கோட்டையில் இருக்கும் ஹோட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். ஏரிக்கரையிலேயே அருமையான ஹோட்டல். அறையில் இருந்து பார்த்தால் ஏரியும் அதனைச் சுற்றியுள்ள சிறுவனமும் தெரிவது போன்ற அமைப்பு. ரொம்பவே சந்தோஷமாக ஆரம்பித்தது.
சுற்றிப் பார்க்கவும், செய்து பார்க்கவும் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ள இடம். ஏரியில் படகு வாடகைக்கு எடுத்து ஓட்டுவது, பெரிய கப்பலில் பிரயாணம் செய்வது, மீன் பிடிப்பது போன்றவைகள் இருந்தாலும் பேரா செய்லிங் (Para Sailing), ரிவர் ரேப்டிங் (river rafting), ரிவர் ட்யூபிங் (river tubing), பலூன் சவாரி (hot air ballooning) என பலவிதமான சாகச விளையாட்டுக்களும் உண்டு. இதில் நாங்கள் பேரா செய்லிங் மற்றும் ரிவர் ட்யூபிங் மட்டும் செய்தோம். பலூன் சவாரியின் விலை மிக அதிகமாக இருந்ததால் சாய்சில் விட வேண்டியதாகப் போயிற்று.
பேரா செய்லிங் என்றால் ஒரு படகில் ஒரு பேராசூட்டை கட்டி விட்டு அந்த படகு செல்லும் பொழுது மேலெழும் பாராசூட்டில் தொங்கிக்கொண்டு செல்வது. சுமார் 300 அடி உயரம் வரை அழைத்துச் செல்கிறார்கள். ஒரு ஊஞ்சலில் ஆடும் பொழுது வெகு உயரமாகச் செல்வது போல்தான் உணர்கிறோம். 5 - 7 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த சவாரி ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ட்யூபிங் என்றால் நம்ம ஊரில் லாரி ட்யூபை ஆற்றில் போட்டு அதில் மிதந்து செல்வதுதான். அதைக் கொஞ்சம் ஆர்கனைஸ்டாகச் செய்கிறார்கள். நியூயார்க் நகர் வரை வரும் ஹட்சன் நதியின் ஆரம்பப் பகுதிகளில் ட்யூபில் பயணம் செய்தது நன்றாகத்தான் இருந்தது. ஒர் இரவில் செய்த படகு பயணமும், அப்பொழுது கண்ட வாண வேடிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மற்றொரு விஷயம்.
மிக அதிகமான கூட்டம் இருந்தாலும் சற்றே சரியாக திட்டமிட்டதாலும் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்பதை விட பார்ப்பதை நன்றாக பார்க்க வேண்டும் என முடிவு செய்ததால் ரொம்பவும் அவதி அவதி என ஓடாமல், அழகாகக் கழிந்தது இந்த விடுமுறை. அமெரிக்க கிழக்கு கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இது. போகுமுன் என்னிடம் சொல்லுங்கள் மேலும் தகவல்கள் தருகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
129 comments:
இன்னும் கொஞ்சம் போட்டோ இருக்கு. வேற மேட்டர் கிடைக்கலைன்னா அதுவும் ஒரு போட்டோ பதிவா வரும்.
அப்புறம் அந்த பாராசூட்டில் இருக்கிறது நான் இல்லை. சொல்லிட்டேன்.
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!
அது நீங்க தான் கொத்ஸ்:-))) பார்க்க அசிங்கமா இருக்கப்பவே நெனச்சேன்:-))
ஆஹா... சூப்பரா இருக்கே.
இந்த சம்மர்ல ப்ளேன் போடறோம்...
பேரா செய்லிங் பண்ணும் போது பயமா இருந்துச்சா??/
அப்பறம் போட்டோல இருக்கறவருக்கு நீங்க அவர் படம் போடறது தெரியுமா?
வாங்க அபி அப்பா.
அது அசிங்கமா? நல்ல வேளை என் போட்டோவை போடலை. உமக்கு பயத்தில் ஜன்னியே வந்திருக்கும் போல.
வெட்டி, போயிட்டு வாங்க, உங்க ஊரில் இருந்தும் ஒரு 200 -250 மைல்தான்.
எனக்கு இல்லை. ஆனால் நண்பர் கொஞ்சம் பயமாக இருந்ததாகச் சொன்னார். ஒரு ஊஞ்சலில் போவது போல்தான் இருந்தது.
தெரியாது வெட்டி. அவர் யாருன்னு கூட தெரியாது. அந்த படகில் கூட வந்தார். நம்ம காமிராவில் சிக்கியதுதான் அவர் செய்த தப்பு.
பார சேய்லிங்.....க்கு எவ்வளோ ஆச்சு?? ரொம்ப நல்லாருக்கும் போல இருக்கே...கண்டிப்பா செய்யணும்!! age limit,height limit என்ன?
இராதா,
உயரம் பத்தி ஒண்ணும் சொல்லலை. எடை ஒரு 100 பவுண்டாவது இருக்கணும். இருவரின் மொத்த எடை 100 - 250 பவுண்ட்க்குள் இருந்தால் டபுள்ஸ் கூடப் போகலாம்.
குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்!!! நல்லா இருங்க.
நல்ல பதிவும் அருமையான படங்களும்.
டீச்சர், உங்களை மாதிரி வருமா? Imitation is the best form of flattery அப்படின்னு சொல்லுவாங்க. இங்க Flatteryக்கு வேலை இல்லை. அதனால Imitation is the best form of paying respects அப்படின்னு வெச்சுக்கலாமா? இது என்னாலான ஏழைக்கு ஏத்த பருப்புருண்டை!! :))
உயரம் பத்தி ஒண்ணும் சொல்லலை. எடை ஒரு 100 பவுண்டாவது இருக்கணும். இருவரின் மொத்த எடை 100 - 250 பவுண்ட்க்குள் இருந்தால் டபுள்ஸ் கூடப் போகலாம்//
அப்பொ எங்களுக்கெல்லாம் சான்ஸே இல்லையா.:-(
இந்த இடத்துக்கு நாங்க அங்க இருக்கும்போதே போயிட்டு வந்து சொல்லக் கூடாதோ.
கொத்ஸ்,படமெல்லாம் சூப்பர்.
நிதானமா ப்ளான் செய்து நிறைவேறும் வேலைகளுக்கு மகிழ்ச்சிதான் போனஸ்.
என்ன சாப்பாடு கிடைத்தது.
அதைச் சொல்லவே இல்லையே.:-))
//அப்பொ எங்களுக்கெல்லாம் சான்ஸே இல்லையா.:-(//
வல்லியம்மா, நீங்க ரெண்டு பேர் சேர்ந்து 100 பவுண்டு இருந்தாத்தான் டபுள்ஸ் போகலாமே. அப்புறம் என்ன! ஜமாய்தான்!! :)))
//இந்த இடத்துக்கு நாங்க அங்க இருக்கும்போதே போயிட்டு வந்து சொல்லக் கூடாதோ.//
எல்லாத்தும் ஒரு நேரம் வர வேண்டியதா இருக்கே. இப்போ என்ன அடுத்தது இங்க வந்துட்டு இந்தியா போங்க.
//கொத்ஸ்,படமெல்லாம் சூப்பர்.//
சித்திர ராமாயண ஸ்பெஷலிஸ்ட் கிட்ட இருந்து இந்த பாராட்டு வந்தது ரொம்பவே சந்தோஷம்.
//நிதானமா ப்ளான் செய்து நிறைவேறும் வேலைகளுக்கு மகிழ்ச்சிதான் போனஸ்.//
அதே அதே!!
//என்ன சாப்பாடு கிடைத்தது.
அதைச் சொல்லவே இல்லையே.:-))//
யாருடா கேட்கப் போறாங்கன்னு பார்த்தேன். நீங்கதானா?
இவ்வளவு இருந்தும் நம்மூர் சாப்பாடு கிடைக்கலை. அங்க ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாமான்னு ஒரு ஐடியா. நம்மூரு மக்கள் அம்புட்டு பேர் இருந்தாங்க.
அதனால சாப்பாடு எல்லாம் சாண்ட்விச், பாஸ்தா, பீட்ஸாதான். :-(
//நல்ல பதிவும் அருமையான படங்களும்.///
REPEAT!//
நன்றி டெல்பின்.
வழக்கம் போல பதிவு எல்லாம் நல்லா தான் இருக்கு.... ஆனால் உம் பதிவில் சில குற்றம் உள்ளது.
//ஏன்னா இது ஆன் லொகேஷன் பதிவு.//
//நாங்களும் ஒரு நண்பர் குடும்பத்துடன் நியூயார்க் மாநிலத்தில் லேக் ஜியார்ஜ் என்ற இடத்திற்கு சென்று வந்தோம்.//
இது ஆன் லொகேஷன் பதிவா... இல்ல ஆன் லொகேஷன்ல எழுத ஆரம்பித்த பதிவா????
வீர விளையாட்டு எல்லாம் விளையாடி நீர் வீரர் என்று நிருபித்து வீட்டீர். அந்த வீர விளையாட்டுக்கு எல்லாம் எம்புட்டு சார்ஜ் பண்ணுறாங்கனு சொன்னா வர சங்கதியர்க்கு புண்ணியமா போகும்ல??
//வழக்கம் போல பதிவு எல்லாம் நல்லா தான் இருக்கு.... ஆனால் உம் பதிவில் சில குற்றம் உள்ளது.//
என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா அல்லது பொருட்குற்றமா?
//இது ஆன் லொகேஷன் பதிவா... இல்ல ஆன் லொகேஷன்ல எழுத ஆரம்பித்த பதிவா????//
இன்னும் வீடு திரும்பவில்லை என்பதால் பயணத்தில் இருக்கும் பொழுதே போட்ட பதிவு என்று பொருள். :)))
//வீர விளையாட்டு எல்லாம் விளையாடி நீர் வீரர் என்று நிருபித்து வீட்டீர். அந்த வீர விளையாட்டுக்கு எல்லாம் எம்புட்டு சார்ஜ் பண்ணுறாங்கனு சொன்னா வர சங்கதியர்க்கு புண்ணியமா போகும்ல??//
நீர் அமெரிக்கா வரும் பொழுது விஷயத்தைச் சொல்லறேன். :))
ரொம்பவே தான் பாஸ்டா இருக்கீர்... தூக்கம் உங்கள் கண்களை தழுவ மறுக்கின்றதா? இல்லை கடமை அதை தடுக்கின்றதா?
வாழ்த்துக்கள்.
:-))
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
அபி அப்பாவை விட பெரிய echo.
கொத்ஸ் comment moderation இருந்தாலும் ஒன்னுதான் இல்லவிட்டாலும் ஒன்னுதான் போல இருக்கு ! :-)
இனிமையான விடுமுறைக்கு வாழ்த்துக்கள். கொலராடோவில் பௌல்டர் போல்டர் ஓடுவது வழக்கம். நீங்களும் புதுவகையாக பாரா செய்லிங் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
படங்கள் நல்ல அருமையாக வந்திருக்கிறது.
விடுமுறை சென்ற இடத்திலும் தமிழ்மணத்தின் தங்க தாரகனாக ஜொலிக்கும் தானைத் தலைவன் வாழ்க! வாழ்க!!
//ரொம்பவே தான் பாஸ்டா இருக்கீர்... தூக்கம் உங்கள் கண்களை தழுவ மறுக்கின்றதா? இல்லை கடமை அதை தடுக்கின்றதா?//
கடமைதான். ஆனாலும் கடைசியில் தூக்கம்தான் ஜெயித்து விட்டதே!!
நன்றி, சட்னி வடை அவர்களே!!
//அபி அப்பாவை விட பெரிய echo.//
இதுலேயும் கட் பேஸ்டா? அதுல போட்டி வேறயா? சிவ சிவா!!
வாங்க துர்கா!
//கொத்ஸ் comment moderation இருந்தாலும் ஒன்னுதான் இல்லவிட்டாலும் ஒன்னுதான் போல இருக்கு ! :-)//
எல்லாம் உங்களுக்கு காண்பிக்கத்தான். அது மட்டுமில்லாம ஒரு தடவையாவது பதில் சொல்ல ஆசை.
இனி மட்டுறுத்தல் சரியாக வேலை செய்யும்.
//இனிமையான விடுமுறைக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி ஸ்ரீதர் வெங்கட். ஸ்ரீதர்ன்னு கூப்பிடணுமா இல்லை வெங்கட்டா?
// கொலராடோவில் பௌல்டர் போல்டர் ஓடுவது வழக்கம். //
இது என்ன? கொஞ்சம் ஆங்கிலத்திலும் எழுதுங்க. சுவாரசியமான விளையாட்டா இருக்கும் போல இருக்கே.
//நீங்களும் புதுவகையாக பாரா செய்லிங் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//
ஆமாம். ரொம்ப நாள் ஆசை. செஞ்சாச்சு. இதை வெச்சு இன்னும் ஒரு பதிவு போடறேன். எப்பவாவது.
//படங்கள் நல்ல அருமையாக வந்திருக்கிறது.//
நன்றி நன்றி. தங்கமணியிடம் சொன்னால் அழகா இருக்கிற இடத்தை யார் படமெடுத்தாலும் நல்லாத்தான் வரும் அப்படிங்கறாங்க. நம்ம வாய் சும்மா இருக்குமா? அதான் உன்னை படமெடுக்க விடறது இல்லையான்னு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டேன். இப்போ திருப்தியாய்யா உமக்கு? ;-)
//விடுமுறை சென்ற இடத்திலும் தமிழ்மணத்தின் தங்க தாரகனாக ஜொலிக்கும் தானைத் தலைவன் வாழ்க! வாழ்க!!//
அண்ணா, நம்மளை போட்டின்னு நினைச்சு யாராவது ஆட்டோ அனுப்பப் போறாங்க. நிதானம்! நிதானம்!!
கொத்ஸ்.. மிக்க நன்றிகள். இடமும் அருமை.. புகைப்படங்களும் அருமை.. கொடுத்து வைச்சவர் நீங்க.. அங்கன இபோய் பாக்குற அளவுக்காச்சும் இருக்கீக. நல்லாயிருங்கப்பூ.. இது மாதிரி எங்கன போனாலும் ஒரு போட்டோ எடுத்துக்கின்னு எங்களுக்குக் காட்டுங்க.. அதைப் பார்த்த திருப்தியாச்சும் எங்களுக்கு இருக்கட்டும்..
//கொத்ஸ்.. மிக்க நன்றிகள். இடமும் அருமை.. புகைப்படங்களும் அருமை.. //
உண்மைத் தமிழரே, வாழ்த்துக்களுக்கு நன்றி.
//கொடுத்து வைச்சவர் நீங்க.. அங்கன இபோய் பாக்குற அளவுக்காச்சும் இருக்கீக. நல்லாயிருங்கப்பூ.. //
இந்த மாதிரி ஊர் சுத்தறது நம்ம வீட்டில் எல்லாருக்குமே பிடிக்கும். அதனால கவலையே இல்லை.
//இது மாதிரி எங்கன போனாலும் ஒரு போட்டோ எடுத்துக்கின்னு எங்களுக்குக் காட்டுங்க.. அதைப் பார்த்த திருப்தியாச்சும் எங்களுக்கு இருக்கட்டும்..//
கட்டாயம் போடறேங்க. (இல்லைன்னா பதிவு கவுண்ட் எப்படி ஏத்தறது? ஹிஹி)
வந்துட்டீங்களா? இப்ப ஒரு கேள்வி...
அது என்ன 'சமர்' 'பணம்'? சமர்-னா போர். அவங்க உங்களோட காபிரைட் சண்டை போடாம இருக்க 'பணம்' தர்றீங்களா?
ஒரு ஒற்றெழுத்து விட்டுப்போச்சுங்கறத நாங்க நேரடியா சொல்லமாட்டோம்ல.
நம்ம பேரு முத பாதிதாங்க. இரண்டாவது பாதி அப்பா பேருல முத பாதிங்க. :-))
//அதான் உன்னை படமெடுக்க விடறது இல்லையான்னு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டேன். இப்போ திருப்தியாய்யா உமக்கு?//
அபி அப்பா போட்ட கமெண்டை அவங்ககிட்ட காட்டுங்க. மனசு குளிர்ந்திடுவாங்க.
Bolder Boulder - பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக்கவும்.
அடுத்த முறை கண்டிப்பாகப் பார்க்கணும் இந்த இடத்தை என்னும் வகையில் எழுதியிருக்கீங்க!
நல்ல சாப்பாடு சாப்பிடும் போது ஒரு கல் பல்லில் கடிபடுவது போல, அந்த நாராச பதிவு ஏன், கொத்ஸ்?
அதான் பதில் சொல்லிட்டீங்கள்லே!
தூக்கிடுங்களேன்!
//அது என்ன 'சமர்' 'பணம்'? சமர்-னா போர். அவங்க உங்களோட காபிரைட் சண்டை போடாம இருக்க 'பணம்' தர்றீங்களா?//
பணமுன்னா பணம் இல்லை... பணமா பாசமா அப்படின்னு செண்டி போட்டால் டீச்சர் மடங்கிடுவாங்கல்ல.
//ஒரு ஒற்றெழுத்து விட்டுப்போச்சுங்கறத நாங்க நேரடியா சொல்லமாட்டோம்ல. //
ஆனா நாங்க புரிஞ்சுக்கிட்டு சரி பண்ணிடுவோமில்ல. :)) நன்றி தல.
//அபி அப்பா போட்ட கமெண்டை அவங்ககிட்ட காட்டுங்க. மனசு குளிர்ந்திடுவாங்க.//
உமக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா? அது அவங்க சொன்னா சரி. மத்தவங்க சொன்னா அவங்க சாய்ஸை தப்பா சொல்லற மாதிரி ஆகுமில்ல. அதனால அதெல்லாம் காண்பிக்க முடியாது. கொஞ்சம் கூட விவரம் தெரியாத ஆளா இருக்கீங்களே.
//Bolder Boulder - பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக்கவும்.//
நீங்க முதலில் பௌல்டர் போல்டர் எனப் போட்டதால் bolder, folder என எல்லாவற்றையும் தேடினேன்.
ஓடறதா. இதெல்லாம் நமக்கு வேலையாவாது மேன்.
//அடுத்த முறை கண்டிப்பாகப் பார்க்கணும் இந்த இடத்தை என்னும் வகையில் எழுதியிருக்கீங்க!//
அடுத்த பதிவர் மாநாடு அங்க போடலாமா? :))
//நல்ல சாப்பாடு சாப்பிடும் போது ஒரு கல் பல்லில் கடிபடுவது போல, அந்த நாராச பதிவு ஏன், கொத்ஸ்?//
நாராச பதிவா? நான் போட்டேனா? என்ன சொல்லறீங்க? அந்த பைத்தியம் போட்ட பின்னூட்டத்தையா. நம்ம சக வலைப்பதிவர்களின் தரம் தெரியட்டுமேன்னுதான். இனி வராது.
நல்ல பதிவு. நட்சத்திர வாழ்த்துகள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெசிலா.
anybody home?
//இதுலேயும் கட் பேஸ்டா? அதுல போட்டி வேறயா? சிவ சிவா!!
வாங்க துர்கா!
//
வாழ்க்கையிலே எல்லாமே போட்டிதான் கொத்ஸ் :-)
வாங்கக்கா. இங்கனதானே இருக்கோம். நீங்கதான் லேப்புக்கு கிளம்பிடுவீங்க லீவு நாளில் கூட!! ;-)
//எல்லாம் உங்களுக்கு காண்பிக்கத்தான். அது மட்டுமில்லாம ஒரு தடவையாவது பதில் சொல்ல ஆசை.
இனி மட்டுறுத்தல் சரியாக வேலை செய்யும்.
//
அனானி கமெண்ட் வந்தால் நீங்க மிகவும் பிரபலம் என்று அர்த்தம்.அதுவே போலி கொத்ஸ் வந்தால் இன்னும் பிரபலம் என்று அர்த்தம்.இது எல்லாம் நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்?
//இலவசக்கொத்தனார் said...
வாங்கக்கா. இங்கனதானே இருக்கோம். நீங்கதான் லேப்புக்கு கிளம்பிடுவீங்க லீவு நாளில் கூட!! ;-)
//
ச்சீ நான் அங்கே எல்லாம் போக மாட்டேன்.எல்லாம் ஊரு சுத்த போவேன்.லேப்,bacteria,chemical எல்லாம் செம போர் :-))
//இலவசக்கொத்தனார் said...
வாங்கக்கா. இங்கனதானே இருக்கோம். நீங்கதான் லேப்புக்கு கிளம்பிடுவீங்க லீவு நாளில் கூட!! ;-)
//
இப்படி அக்கா அக்கான்னு கூப்பிட்டு உங்க வயசை குறைக்க பார்க்கின்றீர்களா கொத்ஸ்?
இந்த மாதிரி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க?
//வாழ்க்கையிலே எல்லாமே போட்டிதான் கொத்ஸ் :-)//
இந்த லேக் ஜியார்ஜ் மாதிரி இடத்துக்கு போன எதுக்காக இந்த எலிப்போட்டின்னு தோணுது.
//இந்த லேக் ஜியார்ஜ் மாதிரி இடத்துக்கு போன எதுக்காக இந்த எலிப்போட்டின்னு தோணுது.
//
கும்மின்னு வந்தால் போட்டிதான்.40,50,100ன்னு யாரு அடிப்பது எனும் போட்டி.சரியா?
//அனானி கமெண்ட் வந்தால் நீங்க மிகவும் பிரபலம் என்று அர்த்தம்.அதுவே போலி கொத்ஸ் வந்தால் இன்னும் பிரபலம் என்று அர்த்தம்.இது எல்லாம் நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்?//
போலி கொத்ஸ் எல்லாம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. நீங்க வேற.
/ச்சீ நான் அங்கே எல்லாம் போக மாட்டேன்.எல்லாம் ஊரு சுத்த போவேன்.லேப்,bacteria,chemical எல்லாம் செம போர் :-))//
சரி, சொன்னாக் கேட்டுக்கறேன். போவேன்னு சொன்னீங்க கேட்டுக்கிட்டேன். போக மாட்டேன்னு சொன்னீங்க. கேட்டுக்கறேன்.
//போலி கொத்ஸ் எல்லாம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. நீங்க வேற.//
வாவ் வாழ்த்துக்கள் கொத்ஸ் :-)
நான் புதுசு அண்ணா.அதுனாலதான் எனக்குத் தெரியவில்லை
//இப்படி அக்கா அக்கான்னு கூப்பிட்டு உங்க வயசை குறைக்க பார்க்கின்றீர்களா கொத்ஸ்?
இந்த மாதிரி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க?//
அட இது வயசை குறைக்க இல்லை. இது வலைப்பதிவு பாரம்பரியம். தங்கச்சிக்கான்னு கேட்டது இல்லை.
//கும்மின்னு வந்தால் போட்டிதான்.40,50,100ன்னு யாரு அடிப்பது எனும் போட்டி.சரியா?//
உங்களுக்கு மருத்துவர் ராமநாதனைப் பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன். இது அவர் ஸ்பெஷாலிட்டி.
//சரி, சொன்னாக் கேட்டுக்கறேன். போவேன்னு சொன்னீங்க கேட்டுக்கிட்டேன். போக மாட்டேன்னு சொன்னீங்க. கேட்டுக்கறேன்.
//
கொத்ஸ் pratical இருந்தா தான் போவேன்.நான் மட்டும் இல்லை எல்லாரும் அப்படிதான்:-)
லீவு நாட்களில் காலேஜ் பக்கம் எல்லாம் தலை வைச்சு கூட படுக்க கூடாது என்பது மரபு :-)
/அட இது வயசை குறைக்க இல்லை. இது வலைப்பதிவு பாரம்பரியம். தங்கச்சிக்கான்னு கேட்டது இல்லை.
/
ஹிஹி.அக்காதங்கச்சியும் வேண்டாம்.தங்கச்சி அக்காவும் வேண்டாம்.துர்கான்னு கூப்பிடுங்க
//வாவ் வாழ்த்துக்கள் கொத்ஸ் :-)
நான் புதுசு அண்ணா.அதுனாலதான் எனக்குத் தெரியவில்லை//
போலி இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாத்தா அண்ணாவாகிட்டாரு. அந்த பயம் இருக்கட்டும். :))
//கொத்ஸ் pratical இருந்தா தான் போவேன்.நான் மட்டும் இல்லை எல்லாரும் அப்படிதான்:-)//
கேட்டுக்கறேன்.
//லீவு நாட்களில் காலேஜ் பக்கம் எல்லாம் தலை வைச்சு கூட படுக்க கூடாது என்பது மரபு //
இதையும்தான்.
//போலி இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாத்தா அண்ணாவாகிட்டாரு. அந்த பயம் இருக்கட்டும். :)) //
சரி பாவம்ன்னு அண்ணான்னு கூப்பிட்டேன்.மறுபடியும் நீங்க தாத்தாவாகிவிட்டீங்க.வாழ்த்துக்கள் தாத்தா
//ஹிஹி.அக்காதங்கச்சியும் வேண்டாம்.தங்கச்சி அக்காவும் வேண்டாம்.துர்கான்னு கூப்பிடுங்க//
சரிங்கக்கா. அப்படியே கூப்பிடறேன்க்கா.
//சரி பாவம்ன்னு அண்ணான்னு கூப்பிட்டேன்.மறுபடியும் நீங்க தாத்தாவாகிவிட்டீங்க.வாழ்த்துக்கள் தாத்தா//
நீங்க எவ்வளவுதான் தாத்தான்னு சொன்னாலும் ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான். அதுக்கு மேல கட்டுப்படி ஆகாது. :))
//சரிங்கக்கா. அப்படியே கூப்பிடறேன்க்கா.
//
இப்படி ஒரு old man என்னை அக்கான்னு கூப்பிடுவது கொடுமை :-((
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா கொத்ஸ்?
//நீங்க எவ்வளவுதான் தாத்தான்னு சொன்னாலும் ஒரு நாளைக்கு ஒரு பதிவுதான். அதுக்கு மேல கட்டுப்படி ஆகாது. :)) //
ஹிஹி..நீங்க என்னை விட பரவயில்லை போல.மாதம் ஒரு போஸ்ட் என்பதே எனக்கு கஷ்டம்.
//உங்களுக்கு மனசாட்சியே இல்லையா கொத்ஸ்?//
எங்க தங்கமணியைக் கேட்டால் மனசே கிடையாது இதில் எங்க மனசாட்சின்னு சொல்லுவாங்க.
//எங்க தங்கமணியைக் கேட்டால் மனசே கிடையாது இதில் எங்க மனசாட்சின்னு சொல்லுவாங்க.
///
அண்ணியை என்ன கொடுமை செய்தீர்கள் :-))
கொத்ஸ் May I come in for கும்மி
ஏன் comment Moderation ஜ எடுக்கவில்லை?
//அண்ணியை என்ன கொடுமை செய்தீர்கள் :-))//
அட என்னங்க நீங்க. இந்த மாதிரி பேச்சு கேட்க எல்லாம் தனியா எதாவது செய்யணுமா? அதெல்லாம் அப்படியே நேச்சுரலா வரதுதான். :)
//கொத்ஸ் May I come in for கும்மி//
சந்தோஷ், நீங்க இல்லாமலா? கட்டாயம் வாங்க.
//ஏன் comment Moderation ஜ எடுக்கவில்லை?//
என்ன சந்தோஷ் போன பதிவு பின்னூட்டம் எல்லாம் படிக்கலை போல. அதுக்குப் பனிஷ்மெண்ட் அதை எல்லாம் படிச்சு, உங்க கேள்விக்கு நீங்களே விடை சொல்லணும். அதுவும் இன்னிக்கே.
செய்வீங்கதானே....
எச்சூஸ் மீ! இங்க என்ன நடக்குது.
கும்மின்னா கூட்டமா அடிக்கனும்யா...
இங்க அண்ணாவோட தங்கையும் தங்கச்சியக்காவோட தாத்தாவுக்கும் one-on-one ஓடிட்டிருக்கு.
GTalk / Yahoo Messneger எல்லாம் இனிமேதான் கண்டுபிடிக்கனுமாம். :-P
ஸ்ரீதர், என்ன சொல்லறீங்க. கும்மியா எங்க நடக்குது? எனக்கும் பார்க்கணும் முடிஞ்சா கலந்துக்கணமுன்னூ ரொம்ப நாள் ஆசை.
சொல்லுங்க. நம்ம சேர்ந்தே போகலாம்.
ஆன் லொகேஷன் பதிவா?இணைய தொடர்ப்புக்கு எத்தனை கட்டணம்?பெரும்பாலும் பல ஓட்டல்களில் $10 per day வாங்குவாங்க. வாரம் முழுக்க ஆன் லொகேஷன்ன் பதிவு போட்டா $70 செலவு.அனேகமா காஸ்ட்லியான நட்சத்திரம் நீங்களாதான் இருப்பீங்க:))
செல்வன், இப்பொழுது எல்லாம் பெரும்பாலான ஹோட்டல்களில் இணையம் இலவசம்தான். நான் தங்கி இருந்த இடத்திலும் அப்படித்தான்.
அது மட்டுமில்லாம நாந்தான் திரும்ப வந்தாச்சே!!
//எச்சூஸ் மீ! இங்க என்ன நடக்குது.
கும்மின்னா கூட்டமா அடிக்கனும்யா...
இங்க அண்ணாவோட தங்கையும் தங்கச்சியக்காவோட தாத்தாவுக்கும் one-on-one ஓடிட்டிருக்கு.
GTalk / Yahoo Messneger எல்லாம் இனிமேதான் கண்டுபிடிக்கனுமாம். :-P //
இது கும்மியா?ஹிஹி.எங்க பாசத்தை பார்த்து பொறமையா என்ன?
கொத்ஸ்,
நானும் வாறேன் புதரகத்துக்கு.... வந்தா இங்கெயல்லாம் கூட்டிட்டு போவிங்கல்லா....????
;-)
//அப்புறம் அந்த பாராசூட்டில் இருக்கிறது நான் இல்லை. சொல்லிட்டேன்.//
அதான் போட்டோ அவ்வளோ அழகா இருக்கு... :)
பாராசெய்லிங்.....மலேசிய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள் கொத்ஸ். திரும்பவும் வாய்ப்பு கிடைத்தால் பாராசெய்லிங் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அற்புதமான அனுபவம். அதுனாலதான் அத வெச்சே நாங்களும் ஒரு பதிவு போட்டோம்ல. ஒங்க அளவுக்குக் கல்லா கெட்டலைன்னாலும் நல்ல வருமானம். :)
நல்லாத்தேன் படங்காட்றீரு
எல்லாத்துக்கும் தனித்தனி கட்டணம் என கப்பம் கட்டி கடன் அட்டை ஓடா தேய்ந்திருக்குமே
ஆன் சைட்டிலிருந்து பதிவிடும் இலவசம் வாழ்க
சரி சாமி, ராதா மேடம் கேட்டிருந்த விலை விவரத்தை சொல்லுங்க. பாரா செய்லிங்க் எவ்வளோ. என்ன ஆளுக்கு ஒரு 50$ இருக்குமா?
நல்ல பதிவுங்க.. இந்த இடத்தையும் பார்க்க வேண்டிய லிஸ்ட்ல சேத்துடறேன்.. :D
வாழ்த்துக்கள்...
ப்ளாசிட் ஏரி பக்கமும் செல்ல முடிந்ததா?
வெள்ளைமுகமேடும் ஏறினீங்களா??
பொதுவாக நியு யார்க் பக்கம் செல்பவர்கள் தங்களின் கடவுச்சீட்டு, பச்சை அட்டை, விசா எடுத்துச் செல்வது சாலச் சிறந்தது. கனடாவுக்கு அருகில் இருப்பதால் திடீர் கெடுபிடிகள் நடக்கும். சோதனைகளும் வரலாம் என்பதால் முன் ஜாக்கிரதையாக இருக்கலாம்.
---நன்றாக பார்க்க வேண்டும் என முடிவு செய்ததால் ரொம்பவும் அவதி அவதி என ஓடாமல்,---
அருவியும் இங்கு இருக்கிறது. இன்னொரு முறை செல்லும்போது தவறவிடாமல் செல்லவும்.
---நதியின் ஆரம்பப் பகுதிகளில் ட்யூபில் பயணம் செய்தது ---
தங்களுக்கு நீச்சல் தெரியுமா? நீந்தத் தெரிந்தவர்கள்தான் இந்த சுழலில் சிக்கி சரியாக மீள முடியும் என்று எச்சரித்ததாக நினைவு.
---பார்ப்பதை (பார்ப்பு அதை இல்லை, சரியா படியுங்க) நன்றாக பார்க்க வேண்டும்---
ரொம்ப அடிபட்டீங்க போல :)
சிறப்பான கட்டுரையில் எதற்காக ப்ராக்கெட் வசனம் :(
இது கும்மியா?ஹிஹி.எங்க பாசத்தை பார்த்து பொறமையா என்ன?//
அதானே, இந்த அக்கா தம்பி பாசத்தைப் பார்த்து உங்களுக்குப் பொறாமை. அதானே!!! :))
//நானும் வாறேன் புதரகத்துக்கு.... வந்தா இங்கெயல்லாம் கூட்டிட்டு போவிங்கல்லா....????//
இந்த மாதிரி இன்னும் நாலு பேர் கேட்கட்டும். இந்த ஆணி புடிங்கல்ஸ் எல்லாம் விட்டுட்டு ஒரு டூர் ஏஜெண்டா ஆயிடறேன். என்ன சொல்லறீங்க.
//அதான் போட்டோ அவ்வளோ அழகா இருக்கு... :)//
ராயலு, என்னை நேரில் பார்த்த நீர் இப்படிச் சொன்னா அதுக்கு பொறாமைதான் காரணம். வேற என்ன?
//பாராசெய்லிங்.....மலேசிய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள் கொத்ஸ். திரும்பவும் வாய்ப்பு கிடைத்தால் பாராசெய்லிங் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அற்புதமான அனுபவம்.//
ஆமாம். ரொம்பவே அழகா இருந்தது. இன்னும் ஒரு முறை சான்ஸ் கிடைச்சா கட்டாயம் செய்ய வேண்டிய விஷயம்தான்.
//அதுனாலதான் அத வெச்சே நாங்களும் ஒரு பதிவு போட்டோம்ல. //
அதுக்கு நாங்களும் வந்தோமில்ல. இதை வெச்சு இன்னும் ஒரு பதிவு போட்டாலும் போடுவோமின்னு பயமுறுத்தி வெச்சு இருக்கோமில்ல.
//ஒங்க அளவுக்குக் கல்லா கெட்டலைன்னாலும் நல்ல வருமானம். :)//
என் காலில் கல்லா கட்டினீங்களா? ஓ. கடையில் கல்லாவா? நட்சத்திரம் அப்படின்னு எதோ பரிதாபப்பட்டு வராங்க. நீங்க ரென்சனாவாதீங்க.
//Bolder Boulder ஓடறதா. இதெல்லாம் நமக்கு வேலையாவாது மேன்.//
பேசாம இங்கே வந்து ஒரு பஞ்சி ஜம்ப்( bungy jumping ) செஞ்சுட்டுப்போங்க.
குடல் எல்லாம் வாயிலே:-) உங்க ஊர் நாட்ஸ்பெர்ரி ஃபார்ம் ரோலர் கோஸ்டர் எல்லாம்
இதுகிட்டே பிச்சை வாங்கணும்:-)
இந்த இடத்திலேயே பாரா ஸெய்லிங், ஸ்கை ஸ்விங், ஸ்கை டைவிங்,
Rafting, Jetboating இப்படி பலதும் இருக்கு.
adrenaline adventuresன்னே இதுக்குப்பேர்.
//நல்லாத்தேன் படங்காட்றீரு//
நன்றி பெருசு... :))
//எல்லாத்துக்கும் தனித்தனி கட்டணம் என கப்பம் கட்டி கடன் அட்டை ஓடா தேய்ந்திருக்குமே//
ஆமாம். ஆமாம். அதை எல்லாம் இப்போ ரொம்ப அவசியமா ஞாபகப் படுத்தணுமா?
//ஆன் சைட்டிலிருந்து பதிவிடும் இலவசம் வாழ்க//
திரும்ப வந்தாச்சு சிவாண்ணா. இன்னமும் வாழலாம்தானே!! :))
பயணக்கட்டுரையும் நல்லா எழுதறீங்க. மிச்ச படங்களையும் போடலாமே. உங்களுக்கு பதிவுக்கு மேட்டர் இல்லாமையா போகும்?
அப்படியே போனாலும் இருக்கவே இருக்கு உப்புமா கிண்டிங் ))
//சரி சாமி, ராதா மேடம் கேட்டிருந்த விலை விவரத்தை சொல்லுங்க. பாரா செய்லிங்க் எவ்வளோ. என்ன ஆளுக்கு ஒரு 50$ இருக்குமா?//
இல்லை ஒரு 50% அதிகம். விட மாட்டேங்கறீங்களே. :))
/நல்ல பதிவுங்க.. இந்த இடத்தையும் பார்க்க வேண்டிய லிஸ்ட்ல சேத்துடறேன்.. :D//
நன்றி சிங்கம்லே Ace!!
கட்டாயம் போய்ப் பாருங்க.
7 படம், 22 வரியில எழுதிட்டு அதுக்கு சூப்பரா தலைப்பு வெச்சா ஆச்சா?
படத்துக்கும் தலைப்புக்கு என்ன சம்பாந்தம்?
(டூ)ஊர்க்கு போனா அது என்ன ஊரு, எதுக்கு போனோம், எப்படி போலாம்னு எழுதனும்.
//ப்ளாசிட் ஏரி பக்கமும் செல்ல முடிந்ததா?//
இல்லை பாபா. இரு நூத்துச் சொச்சம் மைல் தொலைவு. ஆனா போகும் போது 6 மணிநேரம் வரும் பொழுது 7 மணி நேரம். அதிலேயே ஒரு நாள் வீணாப் போச்சு. அதனால வேக வேகமா எல்லாத்தையும் பார்த்திருக்கலாம். அல்லது நிதானமாக சிலவற்றை மட்டும் பார்த்திருக்கலாம். பசங்களை எல்லாம் வெச்சுக்கிட்டு we chose the second option.
//வெள்ளைமுகமேடும் ஏறினீங்களா??//
இதுவும் இல்லை. நாங்க செஞ்சது எல்லாம் கிட்டத்தட்ட சொல்லியாச்சு. :))
//கண்ணையும் காதையும் திறந்து வெச்சுக்கோ, உன்னை சுத்தி நடக்கிற விஷயங்களை பாரு.//
டீச்சர், கொத்ஸ் ஊருல குளிருதாம், காதைப் பொத்தசொல்லி டாக்டர் சொல்லி இருக்காங்க(சும்மா டமாசு).
டீச்சர் சொன்னதோடு இன்னொன்னையும் சேர்த்துக்குங்க. மனசுல எது நிக்குதோ அதை மட்டுமே எழுதுங்க.(உட்காராதான்னு கேள்வி கேட்க கூடாது) இல்லைன்னா மொக்கையாகிரும்
//பொதுவாக நியு யார்க் பக்கம் செல்பவர்கள் தங்களின் கடவுச்சீட்டு, பச்சை அட்டை, விசா எடுத்துச் செல்வது சாலச் சிறந்தது. கனடாவுக்கு அருகில் இருப்பதால் திடீர் கெடுபிடிகள் நடக்கும். சோதனைகளும் வரலாம் என்பதால் முன் ஜாக்கிரதையாக இருக்கலாம்.//
ஆஹா! இது தெரியாமப் போச்சே!! நல்ல வேளை தப்பா ஒண்ணும் நடக்கலை. இதை உங்க அனுமதியோட பதிவில் சேர்த்துடறேன்.
//அருவியும் இங்கு இருக்கிறது. இன்னொரு முறை செல்லும்போது தவறவிடாமல் செல்லவும்.//
கட்டாயம் இன்னும் ஒரு முறை அதிக கூட்டம் இல்லாத நேரத்தில் செல்வோம். அப்பொழுது விட்டதை எல்லாம் பிடிக்க வேண்டியதுதான். :)
//அமெரிக்க கிழக்கு கடற்கரை ஓரம் வசிப்பவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இது//
வறேன் கொத்ஸ், கிழக்கைப் பத்தி சொன்னா வுட்டுருவோமா, நாளைக்கே உங்களுக்கு போட்டியா மேற்கைப் பத்தி எழுதறேன்.
//தங்களுக்கு நீச்சல் தெரியுமா? நீந்தத் தெரிந்தவர்கள்தான் இந்த சுழலில் சிக்கி சரியாக மீள முடியும் என்று எச்சரித்ததாக நினைவு.//
White water rafting - இதற்குத்தான் நீங்கள் சொல்வது போல் இருக்க வேண்டும். இந்த் ட்யூபில் மிதந்து செல்வதற்கு நீச்சல் எல்லாம் தெரிய வேண்டாம். நண்பரின் மூன்று வயது மகன் கூட ஒரு வித பிரச்சனையும் இல்லாமல் வந்தான்.
பிகு, எனக்கு நீச்சல் நன்றாகவே தெரியும்.
//போகுமுன் என்னிடம் சொல்லுங்கள்//
ஆட்டோக்காரர் "வுட்டுல சொல்லிக்கினு வந்தியா?"ன்னுதான் கேப்பாங்க. "கொத்ஸ் கையில சொல்லிகினு வந்தியா"ன்னா கேப்பாங்க?
//ரொம்ப அடிபட்டீங்க போல :)
சிறப்பான கட்டுரையில் எதற்காக ப்ராக்கெட் வசனம் :(//
பாபா, தப்புத்தான். எடுத்துட்டேன். அதே மாதிரி நம்ம வி.எஸ்.கே சொன்ன அனானி பின்னூட்டம் மற்றும் அதற்கான பதில்கள் எல்லாத்தையும் எடுத்திடறேன்.
//பேசாம இங்கே வந்து ஒரு பஞ்சி ஜம்ப்( bungy jumping ) செஞ்சுட்டுப்போங்க.//
டீச்சர், இதுக்கு இன்னும் நேரம் வரலை. ஆனா ஒரு நாள் உண்டு.
//குடல் எல்லாம் வாயிலே:-) //
அடடா, நாம குடல் சாப்பிடற நாள் எல்லாம் முடிஞ்சு போச்சே!!
//உங்க ஊர் நாட்ஸ்பெர்ரி ஃபார்ம் ரோலர் கோஸ்டர் எல்லாம்
இதுகிட்டே பிச்சை வாங்கணும்:-)//
பையன் இப்போதான் எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சு இருக்கான். இனிமேதான் இதெல்லாம்.
//இந்த இடத்திலேயே பாரா ஸெய்லிங், ஸ்கை ஸ்விங், ஸ்கை டைவிங்,
Rafting, Jetboating இப்படி பலதும் இருக்கு.//
ஒன் டிக்கெட் ப்ளீஸ்.
//adrenaline adventuresன்னே இதுக்குப்பேர்.//
இங்க Adventure sports அப்படின்னு சொல்லறாங்க.
//பயணக்கட்டுரையும் நல்லா எழுதறீங்க.//
மெய்யாலுமா? ரொம்ப டாங்ஸுங்கோவ்.
//மிச்ச படங்களையும் போடலாமே//
ரொம்ப படம் காமிச்சா லோட் ஆகாம இருக்குமோன்னு ஒரு பயம். அதான்.
//அப்படியே போனாலும் இருக்கவே இருக்கு உப்புமா கிண்டிங் ))//
என் மனதைப் படித்து விட்டீர்களே. இன்னிக்கு உப்புமாதான்!!
//7 படம், 22 வரியில எழுதிட்டு அதுக்கு சூப்பரா தலைப்பு வெச்சா ஆச்சா?//
ஆச்சே. இப்போதானே படிச்சீங்க. அப்புறம் என்ன?
//படத்துக்கும் தலைப்புக்கு என்ன சம்பாந்தம்?//
அதெல்லாம் யாரு பாக்கறா?
//(டூ)ஊர்க்கு போனா அது என்ன ஊரு, எதுக்கு போனோம், எப்படி போலாம்னு எழுதனும்.//
யோவ் பதிவை படிச்சீரா இல்லையா? எல்லாம் சொல்லி விக்கி சுட்டிகள் முதல் எல்லாம் தந்திருக்கேன். இன்னும் வேணுமானா என் கிட்ட கேளுங்கன்னு சொல்லி இருக்கேன். அப்புறம் என்ன?
//டீச்சர், கொத்ஸ் ஊருல குளிருதாம், காதைப் பொத்தசொல்லி டாக்டர் சொல்லி இருக்காங்க(சும்மா டமாசு).//
உம்ம நிலமை பாவமய்யா. நீரே இது தமாசு, இது தமாசு இல்லைன்னு சொல்ல வேண்டிய நிலமைக்கு வந்துட்டீரே....
//டீச்சர் சொன்னதோடு இன்னொன்னையும் சேர்த்துக்குங்க. மனசுல எது நிக்குதோ அதை மட்டுமே எழுதுங்க.(உட்காராதான்னு கேள்வி கேட்க கூடாது) இல்லைன்னா மொக்கையாகிரும்//
சரிங்கண்ணா. அப்படியே செய்யலாம். ஒரு டவுட்டு. இப்போ மட்டும் மொக்கையா ஆகாமலேயா இருக்கு?
//
வறேன் கொத்ஸ், கிழக்கைப் பத்தி சொன்னா வுட்டுருவோமா, நாளைக்கே உங்களுக்கு போட்டியா மேற்கைப் பத்தி எழுதறேன்.//
வாங்க, எழுதுங்க. படிக்கிறோம். நாங்களும் அங்க எல்லாம் போய் இருக்கோம். தப்பா எதனா எழுதினா பிஞ்சுரும். ஜாக்கிரதை.
//ஆட்டோக்காரர் "வுட்டுல சொல்லிக்கினு வந்தியா?"ன்னுதான் கேப்பாங்க. "கொத்ஸ் கையில சொல்லிகினு வந்தியா"ன்னா கேப்பாங்க?//
என்னைப் பார்த்து நிறையா ஆட்டோ வருது. அதனால நானும் ஆட்டோக்காரரா? ஐ! ஜாலி!
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் அப்படின்னு பாட்டு எல்லாம் பாடலாம்.
good morning.இன்னும் கும்மியா?கொத்ஸ் அடுத்த போஸ்ட் போடுங்க
//good morning.இன்னும் கும்மியா?கொத்ஸ் அடுத்த போஸ்ட் போடுங்க//
குட்மார்னிங்க்கா. நீங்க சொன்ன உடனே அடுத்த போஸ்ட் போட்டாச்சுக்கா.
அருமையான பதிவு. நேரில் உங்களோடு இருந்த நினைப்பு வந்தது. ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். அதற்குள் நீரே பதிலும் சொல்லி விட்டீர்.
//அப்புறம் அந்த பாராசூட்டில் இருக்கிறது நான் இல்லை. சொல்லிட்டேன்.//
நன்றி இரவி.
அப்படிப்போடு,
நியஸி ட்ராவல் & அட்வெண்சர் சானலுக்கு போட்டியா??
யோவ் மருந்து, சரியான நேரத்தில் எங்கய்யா போயி தொலைஞ்சீரு? இதுல கிளாசில் கோள் மூட்டற வேலை வேற. போட்டு சேனல் ஆரம்பிக்க, டீச்சர் என்ன என் பாட்டியா? :)
லேக் ஜார்ஜ் படங்கள் நல்லாருக்கு. நான் அங்கே போனதில்லை... போகணும்...
//லேக் ஜார்ஜ் படங்கள் நல்லாருக்கு. நான் அங்கே போனதில்லை... போகணும்...//
பதிவு போடும் போது படிக்காம இம்புட்டு நாள் கழிச்சு பார்த்துட்டு பின்னூட்டமும் போட்டது ரொம்ம்ம்ம்ம்பப் பெருமையா இருக்கு!!
உங்க ஊரில் இருந்து கூட ரொம்பத் தொலைவு இல்லை. போயிட்டு வாங்க.
Post a Comment