Tuesday, May 15, 2007

ஏதய்யா கதி - கர்நாடக சங்கீத பாடலும் பின்நவீனத்துவ ஆய்வும்

பல்லவி
ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி
ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி

அனுபல்லவி
மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லேது வேறேதய்யா கதி

சரணம்
பேதை எனக்குன்னருள் காட்டாது
என்னோடேதைய்யா விளையாட்டா
பூதல சலநாட்டா நின் தாள்தான் கதி
புகழ் கவி குஞ்சர தாசனுக்கேதய்யா கதி
ராகம் - சலநாட்டை தாளம் - ஆதி
புனைந்தவர் - கோட்டீஸ்வர ஐயர்
பாடியவர் - சஞ்சய் சுப்பிரமணியம்

பாண்டேஜ் பாண்டியன், மயிலை மன்னாரு, பவுர்ணமி பாண்டியன் வரிசையில் யாரும் வராததுனால பின்நவீனத்துவ விளக்கம் குடுக்க ஆள் இல்லாம போனதுனால, நம்மளே களத்தில் இறங்க வேண்டியதாப் போச்சு.

முதலில் வழக்கம் போல டிஸ்கிகள்.
1) நம்ம பதிவுக்கு பல விதமான மக்கள்ஸ் வராங்க. வெறும் கர்நாடக சங்கீத பாட்டு ஒண்ணு மட்டும் போட்டா, அது பிடிக்காதவங்க கோபப்படலாம் இல்லையா. அதான் இப்படி. பாட்டு வேணுமுன்னா பாட்டு, பின்நவீனத்துவம் வேணுமா அதுவும் இருக்கு. எல்லாரும் பாட்டையும் கேளுங்க. நல்ல பாட்டுங்க.

2) இந்த மாதிரி நினைச்சுப் பார்த்ததுக்கு நம்ம சின்ன மருத்துவரின் இந்தப் பதிவுதான் காரணம். அடிக்க வரவங்க நேரா ஒரிஜினல் பார்டியையே கவனிச்சுக்கலாம். யாரு கவுஜ எழுதினாலும் பின்நவீனத்துவமா போயி தும்மிட்டு வந்துடறீரே, அந்த காலத்து கர்நாடக சங்கீத பாட்டுக்கு அப்படி எழுத முடியுமான்னு ஒரு சவால் வந்ததால இப்படி.

3) நல்ல கர்நாடக சங்கீதப் பாடலை இப்படி எல்லாம் அர்த்தம் பண்ணிக் கெடுக்கணுமா படவா ராஸ்கல் அப்படின்னு திட்டறவங்க இதுக்கு மேல படிச்சு ப்ளட் பிரஷரை ஏத்திக்க வேண்டாம். கோட்டீஸ்வர ஐயர் என்னை மன்னிக்க.

4) இதைப் புனைந்தவர் பெயர் கோட்டீஸ்வர ஐயர் அப்படின்னு இருக்கே. பெயரில் ஐயர் அப்படின்னு ஜாதி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு வம்பெல்லாம் பண்ணக்கூடாது. அவரை எல்லாரும் அப்படித்தான் கூப்பிடறாங்க. நடேச, சரி வேண்டாம், நாகேஸ்வர ராவ் பார்க் அப்படின்னு அழகா தமிழில் சொல்லறது இல்லையா, அது மாதிரி இதையும் வெச்சுக்கலாம்.

5) இன்னிக்கு நடக்க போற விஷயத்தை அன்னைக்கே சொல்லிட்டாரு பாருப்பா எங்காளு, அதான் அறிவு அப்படின்னு சொல்ல வரவங்களும், அதுக்கு பதிலா காறித்துப்பறவங்களும் தனிப்பதிவு போட்டுக்குமாறு வேண்டிக்கறேன்.

அடுத்தது சிச்சுவேஷன்.

ஒரு பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, நம்ம எக்ஸ் மந்திரி தயாநிதி கீறாரு பாரு, அவருக்கு ஒரு கனவு வருது. ஒரே பாட்டுல பெரிய ஆளு ஆவுற ஹீரோ கணக்கா, இவரும் ஒரே தேர்தலில் பெரிய மினிஸ்டரு ஆவறாரு. அல்லாரும் ஆஹா ஓஹோன்னு கூவிக்கினுக்கீறாங்க. அது மட்டுமில்லாம சன் ரீவி, தினகரன் பேப்பருன்னு எல்லாமே இவங்க குடும்பம் கையுலதானே இருக்கு. அந்த மெதப்புல இவரு படுத்துக்குனு கனவு காணறாரு. கனவுல அவரோட தாத்தா கலிஞ்சரு வந்து இவராண்ட இந்த பாட்டு பாடறாரு.

இனி பின்நவீனத்துவம்

ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி
ஏதய்யா கதி எனக்கேதய்யா கதி

அதாவது ஆட்சி செய்ய இன்னைக்குத் தேவை படறது என்னவென்று பார்த்தால், மக்களிடம் நம் கருத்தைக் கொண்டு போய் சேர்க்கிற ஊடகங்கள்தான் முக்கியம். அதுல மழை பெய்தால் அது என் ஆட்சியினால்தான், அதுவே அதிகமாகி வெள்ளமானால் அதற்கு போன ஆட்சிதான் காரணம் என்று நமக்கு வேண்டியபடி செய்தி எல்லாம் தர வேண்டும். அது போன்ற ஊடகங்களில் முக்கியமானது சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளையோ, அழுது வடியும் தொடர்களையோ தந்து அறிவை வளர்க்கும் ரீவிதான் முதல். அதில் பிரபலமானதாக இருக்கும் சன் ரீவி உங்கள் குடும்ப சொத்து. அதனால் உன்னை விட்டால் எனக்கு ஏதய்யா கதி அப்படின்னு பாடறாரு.

அது மட்டுமா? இன்னைக்கு என்னதான் நாம இலவசமா ரீவி குடுத்தாலும், அதைப் பாக்க மின்சாரம் இருக்கிறதா? பவர் கட்டு எனச் சொல்லி மின்சாரம் குடுக்க முடியாமல் போனால் நாம் சொல்ல வந்த செய்தியை மக்களிடம் எப்படிச் சேர்ப்பது? அதுக்கு நமக்கு வேண்டியது ஒரு செய்தித்தாள். அதையும் சின்னப்புள்ளங்க எல்லாம் இடுப்பை அசைச்சுக்கிட்டு ஆடி நம்பர் ஒன்னா ஆக்கிக்கிட்ட பேப்பரும் உன் கையில்தான் இருக்கு. அதுனால இன்னொரு முறை ஏதய்யா கதின்னு பாடறாரு.

என்னதான் நம்பர் ஒன் அப்படின்னு நம்மளே சொல்லிக்கிட்டாலும், மிடில் கிளாஸ் எல்லாம் நம்ம பேப்பரையா படிக்கிறாங்க. அவங்க படிக்கிறது எல்லாம் நடிகைகள் படத்தை அட்டையா போட்டு சினிமா செய்தியா தர பத்திரிக்கைகள்தானே. அதுல பார்த்தா நம்ம பெஸ்ட் கண்ணா பெஸ்டுன்னு சொல்லி விக்கற குங்குமமும் உங்க கையிலதான் இருக்கு. பார்க்கறது பத்திச் சொல்லியாச்சி, படிக்கிறதைப் பத்திச் சொல்லியாச்சு. அடுத்து கேட்கறதுன்னு பார்த்தா, அங்கயும் 'கேட்டீங்களா'ன்னு நீங்கதான் சூரியன் எப்.எம் ரேடியோவை வெச்சுக்கிட்டு இருக்கீங்க. இதுக்காக இன்னும் ரெண்டு ஏதய்யா கதி. இப்படி எல்லாத்துக்குமே உங்களை விட்டா வழி இல்லைன்னு சொல்ல வெச்சுட்டீங்களேப்பா.

மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லேது வேறேதய்யா கதி

சாதா தயாநிதி அப்படின்னு இருந்த நீ ஒரே எலக்ஷனில் நின்னு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சு, முதல் முறை பாராளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கும்போதே காபினெட் மினிஸ்டரா நுழைஞ்சு, அப்புறம் என்னமோ ஒத்த ரூபா வித்தை எல்லாம் காமிச்சு நாடே உன்னைப் பாக்கும்படியா செஞ்சு, இன்னைக்கு மா தயாநிதியா ஆகிட்டியே.

உமா என அழைக்கப்படும் பார்வதியின் மறுபெயரைக் கொண்ட ப்ரியாவை மணந்து கொண்டவனே, தன் தந்தையின் பெயரும் புகழும் தொடரும்படியாக நடந்து கொள்ளும் தனயனே, மிகத் தெளிவாக நிதி பரிபாலனம் செய்து ஃபோர்ப்ஸ் பட்டியலில் பெயர் வருமாறு செய்த குடும்பத்தினனே! (குறிப்பு: வரநிதிகுண - அதாவது நிதி வரும் வழிகளை நன்றாக தெரிந்து கொண்ட என இருக்க வேண்டும். அதனை வரகுணநிதி எனச் சொல்வது பொயடிக் லைசென்ஸ்.)

இன்னிக்கு தமிழகத்தில் காங்கிரஸ் தயவில்தான் என் ஆட்சி நடக்குது. அந்த காங்கிரஸ் மேலிடம் இருக்கும் டெல்லியில் நீதானே இன்னிக்கு நம்ம சார்பில் இருக்க. அவங்க கிட்ட உனக்குத்தானே நல்ல பேரு. எனக்கு எதாவது காரியம் ஆகணமுன்னா அவங்களை மிரட்ட உன் மூலமாதானே போக வேண்டி இருக்கு. இப்படி எனக்கு பலவிதங்களில் ஊன்றுகோலா இருக்கும் நீ மட்டும் இல்லைன்னா என் கதி என்ன ஆவறதுன்னு பாடறாரு.

பேதை எனக்குன்னருள் காட்டது
என்னோடேதைய்யா விளையாட்டா
பூதல சலநாட்டா நின் தாள்தான் கதி
புகழ் கவி குஞ்சர தாசனுக்கேதய்யா கதி

நானும் ஐம்பது வருஷமா அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கேனேப்பா, ஆனா நான் இவ்வளவு வருஷங்களில் செய்யாத சாதனை எல்லாம் ஒரு ஐந்து வருஷம் கூட ஆகலை, இப்படி ஒரு சாதனை பண்ணிட்டு நிக்கிறியே, உனக்கு முன்னாடி நான் ஒரு பேதை. எனக்கு நீதான் அருள் காட்ட வேண்டும். எனக்கு பின்னாடி கட்சி மற்றும் ஆட்சி தலைமைக்கு யாரு வரணமுன்னு ஆசைப்படறேன்னு உனக்குத் தெரியாதா?

அதுக்கு இன்னிக்கு பிரச்சனை இருக்கறதுனாலதானே தள்ளாத வயசில் நானே இன்னும் ஆட்சிக் கட்டிலில் படுத்துக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் நடக்கணமுன்னா உங்க செய்தித்தாளான தினகரனில் அதுக்கு ஏத்தா மாதிரி செய்தி வர வேண்டாமா? அதை விட்டுட்டு இப்படி கருத்துக் கணிப்பு எல்லாம் போட்டு அந்த திட்டத்துக்கு ஆப்பு வெச்சா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டு இது?

கலைஞர் எனப் புகழ்பெற்ற தமிழ்க்கவியான எனக்கு, (திராவிடக்) குஞ்சுகளின் அரசனான அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அடியவனான எனக்கு இன்றைக்கு உன்னை விட்டால் வேறு ஏதைய்யா கதி எனப் பாடுகிறார்.


முடிவுரை

கனவுதான் கண்டாரு. அப்படியே சும்மா இருக்கலாமில்ல. அதைப் போயி தாத்தா கிட்ட சொன்னாரு. அவரு கடுப்பானதுனால இப்போ அண்ணன் ரன் அவுட்டு. அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம். அதுக்கு ஏத்தா மாதிரி வேற பாட்டு வரும்.

68 comments:

said...

பதிவு கொஞ்சம் லேட்தான். என்ன செய்ய. இவ்வளவும் நடந்த போது ஊரில் இல்லாம போயிட்டேன். Better late than never - இது உப்புமாவுக்கும் பொருந்தும் என உ.கு. பெனாத்தலாரின் அறிவுரைப்படி போட்டாச்சு.

டிஸ்கி:
உ.கு. - உப்புமா குரு. உள்குத்து இல்லை.

said...

நால்லாவே இருப்பே...:

said...

தாங்கலப்பா சாமி... பிளேன் வரும் போது இப்படி யோசிக்கிட்டே வந்தீங்களா.....

said...

வாய்ஸ் கூட அப்படியே பொருந்தி போகுது..

said...

//அதுக்கு ஏத்தா மாதிரி வேற பாட்டு வரும். //

இன்னும் வேற வருமா....

தாங்குதுடாப்பா சாமி... நான் ஜூட்..

said...

என்ன கொத்ஸ் சாரே! கொஞ்சநாளா காணுமே, தமிழ்மணம் த"விக்குது". பர பரன்னு இருக்கெ இந்த சமயத்துல ஒழிஞ்சாம் புடிச்சி விளையாடலாமா:-))

said...

//மின்னுது மின்னல் said...

நால்லாவே இருப்பே...: //

மின்னலு, இதெல்லாம் தேவையா? ஒண்ணையே தாங்க முடியலை இதுல நாலான்னு தங்கமணி கேட்கறாங்க...

said...

நான் ஃபர்ஸ்ட் இல்லையா?

என்னமோ டாபிக்கலா எழுதனும்னு ரொம்ப மெனக்கெடறீங்க... :-))

//இவ்வளவும் நடந்த போது ஊரில் இல்லாம போயிட்டேன்//

இப்பத்தான் வந்தீங்களா? பன்றி! பன்றி!...

ஐயையோ நான் உங்கள கன்னடத்துல வாங்க வாங்க-னு கூப்பிட்டேங்க...

ஆனாலும் உப்புமா கொஞ்சம் காரசாரம் கம்மித்தேங்... சட்னி, சாம்பார் இல்லாததனாலயா? அப்பாலீக்கா வாரேன்!

said...

//தாங்கலப்பா சாமி... பிளேன் வரும் போது இப்படி யோசிக்கிட்டே வந்தீங்களா.....//

புலி, உண்மையைச் சொல்லணமுன்னா இது பாரிஸ் ஏர்போர்டில் யோசிச்சது. எழுதினது வீட்டுக்கு வந்து ஒரு குட்டி தூக்கம் போட்ட பின்னாடி.

said...

//வாய்ஸ் கூட அப்படியே பொருந்தி போகுது..//

யார் வாய்ஸ் யாரோட பொருந்திப் போகுது? என்ன சொல்ல ட்ரை பண்ணறீங்க? ஒண்ணும் புரியலை. சுத்தம்.

said...

//இன்னும் வேற வருமா....

தாங்குதுடாப்பா சாமி... நான் ஜூட்..//

நாட்டுல என்ன நடந்தாலும் பரவாயில்லை. அதுக்கு ஏத்தா மாதிரி பாட்டு போட்டா மட்டும் தாங்காதா? என்ன அநியாயம்டா இது?

said...

//என்ன கொத்ஸ் சாரே! கொஞ்சநாளா காணுமே, தமிழ்மணம் த"விக்குது". பர பரன்னு இருக்கெ இந்த சமயத்துல ஒழிஞ்சாம் புடிச்சி விளையாடலாமா:-))//

அயலூரில் ஆணி புடுங்க அனுப்பிட்டாங்க. என்ன செய்ய? பரபரப்பா இருக்கும்போது நாம எதுக்கு? கொஞ்சம் மந்தமா இருந்தாத்தான் எதையாவது கொளுத்திப் போட நாம வேணும். நாராயண நாராயண....

said...

//நான் ஃபர்ஸ்ட் இல்லையா?//

இல்லை. இரண்டாவதும் இல்லை. மூணாவதும் இல்லை. :))

//என்னமோ டாபிக்கலா எழுதனும்னு ரொம்ப மெனக்கெடறீங்க... :-)) //

ரொம்ப மெனக்கிட்டு எழுதினா மாதிரியா இருக்கு?? அடுத்த முறை சரி பண்ணிடறேன்.

//இப்பத்தான் வந்தீங்களா? பன்றி! பன்றி!...

ஐயையோ நான் உங்கள கன்னடத்துல வாங்க வாங்க-னு கூப்பிட்டேங்க...//

ஸ்ரீதர் பன்றீங்க போங்க. ச்சீ, பின்றீங்க போங்க. :))

//ஆனாலும் உப்புமா கொஞ்சம் காரசாரம் கம்மித்தேங்... சட்னி, சாம்பார் இல்லாததனாலயா? அப்பாலீக்கா வாரேன்!//

இதுக்கே ஆட்டோ வரும் பார் அப்படின்னு சொல்லறாங்க. சட்னி இல்லைன்னா என்னையே சட்னி பண்ண வழி செய்யறீங்க போல தெரியுதே.... :))

said...

இலவசக்கொத்தனார் said...
//வாய்ஸ் கூட அப்படியே பொருந்தி போகுது..//

யார் வாய்ஸ் யாரோட பொருந்திப் போகுது? என்ன சொல்ல ட்ரை பண்ணறீங்க? ஒண்ணும் புரியலை. சுத்தம்.
///

இப்படி கேப்பிங்கனு நினைதேன் நான் அந்த பாட்ட தயாநிதி மாறன் பாடுன மாதிரி கற்பனை செஞ்சி பாத்துகிட்டே மெய்மறந்து போட்ட பின்னுட்டம்..

அதான் :)

said...

மின்னலு, விளையாட்டா எங்கயாவது வாரி இருந்தா மன்னிச்சு விட்றுங்க. நம்மளுக்கு ஆட்டோ வராம ஓய மாட்டீங்க போல இருக்கே.

சரி, இதே தயாநிதி பாடற மாதிரி நினைச்சு ஒரு பின்நவீன விளக்கம் போடுங்க பார்க்கலாம். :P

said...

//
சரி, இதே தயாநிதி பாடற மாதிரி நினைச்சு ஒரு பின்நவீன விளக்கம் போடுங்க பார்க்கலாம். :P
///


ஆஹா ஆட்டோவ இங்கிட்டு திருப்பி வுட்டான்யா வுட்டான்யா...

மின்னலு எஸ்கேப்

said...

வந்தோன்னயே அங்கதமா??? வாழ்க வளர்க!

சிச்சுவேஷன் சாங் போடுறதுலதான் நாம கில்லாடியாச்சே...

எப்படி மனம் - உசேனி - அருணாச்சலக் கவிராயர்

பல்லவி:
எப்படி மனம் துணிந்ததோ சுவாமி?
வனம் போய் வா என்று சொன்னால்.. இதை ஏற்குமோ பூமி?

அனுபல்லவி:
எப்பிறவியிலும் பிரியேன்... விடேன் என்று கைத்தொட்டிரே!

ஏழையான சீடனை நட்டாற்றிலே விட்டீரே..எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி.....

சரணம்:
கரும்பு முறித்தாற் போலே சொல்லால் ஆச்சுதோ...
ஒரு காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ?

வருந்தி வருந்தி பேரரீர் வெல்ல!
வார்த்தையால் கொல்லாமல் கொல்லவோ!
இரும்புமனதும் உண்டாச்சுதல்லவோ!
என்னைமட்டும் போய்வா என்று சொல்ல...

எப்படி மனம் துணிந்ததோ..

said...

//நாட்டுல என்ன நடந்தாலும் பரவாயில்லை. //

ஏன் இந்த வயிற்றெரிச்சல்

//அதுக்கு ஏத்தா மாதிரி பாட்டு போட்டா மட்டும் தாங்காதா? என்ன அநியாயம்டா இது? //

லோக்கலா எழுதி இருந்தா பரவாயில்ல, சுத்த கர்நாடகமால எழுதி இருக்கீங்க.....

said...

அருமையான சிச்சுவேஷன் பாடல் ஐயா. பொருளுரை மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. சும்மா வீடு கட்டி விளையாடுகிறீர்கள் :))

சஞ்சய் வழக்கமாகப் பாடும் இன்னொரு பாடலும் ஞாபகம் வருகிறது -

ராகம் : சஹானா

ஓ காலமே, உன் போல் எவர்க்குண்டு இந்திர ஜாலமே..

said...

// நல்ல கர்நாடக சங்கீதப் பாடலை இப்படி எல்லாம் அர்த்தம் பண்ணிக் கெடுக்கணுமா படவா ராஸ்கல்//

:-)))

Welcome back, Koths!

said...

//ஆஹா ஆட்டோவ இங்கிட்டு திருப்பி வுட்டான்யா வுட்டான்யா...

மின்னலு எஸ்கேப//

மின்னலு அடுத்தவனுக்கு ஆட்டோ அனுப்பம்போது அவ்வளவு ஆர்வமா இருந்தாப்ல, ஆனா ஆட்டோ யூ டர்ண் போட்டா என்ன இப்படி ஆப் ஆகறீங்க? :-D

சும்மா அடிச்சு ஆடுங்க, அப்படியே அடுத்த தொடர் ஆரம்பிச்சுடலாம்.

said...

//சிச்சுவேஷன் சாங் போடுறதுலதான் நாம கில்லாடியாச்சே...//

வாங்க மருந்து. அட்டகாசமான பாட்டை போட்டு அசத்திட்டீங்க. அங்கங்க உங்க கைமணம் தெரியுது!! நடத்துங்க. :))

said...

//லோக்கலா எழுதி இருந்தா பரவாயில்ல, சுத்த கர்நாடகமால எழுதி இருக்கீங்க.....//

புரியாத தமிழிலா இருக்கு பாட்டு? அப்படித் தெரியலையே. இருந்தாலும் நாமதான் புட்டு புட்டு வெச்சாச்சே. இன்னும் என்ன குழப்பம்? :))

said...

//அருமையான சிச்சுவேஷன் பாடல் ஐயா. பொருளுரை மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. சும்மா வீடு கட்டி விளையாடுகிறீர்கள் :)) //

வாங்க ஜடாயு. வாழ்த்துக்களுக்கு நன்றி. நான் மட்டுமா? மருந்தாகட்டும், நீங்களாகட்டும் சிச்சுவேஷன் பாட்டு போட்டு கலக்கறீங்க. பேசாம அடுத்தது இப்படி ஒரு தொடர் போட்டுடலாமா? :))

said...

//Welcome back, Koths!//

அதான் வந்துட்டோமில்ல. அது இருக்கட்டும். இம்புட்டு பெரிய பதிவுல நம்மளை ராஸ்கோலுன்னு திட்டற ஒரு வரிதான் கண்ணுக்குத் தெரிஞ்சுதாக்கும். இதுல சிரிப்பு வேற. நல்லா இருங்கடே!! :))

said...

நாட்டு 'நட'ப்பை விலாவரியா நேரில்போய் தெரிஞ்சுக்கிட்டு வந்த
உம்ம 'சரித்திர' ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.:-)

ஆமா........... சினிமாவுக்குப் பாட்டு எழுத ச்சான்ஸ் கிடைச்சதா?

இதை வச்சு மணிரத்தினம் படம் எடுப்பார்.

said...

யப்பா...ஊரிலே ஒரு சாதரண நிகழ்சி நடந்திரகூடாதே. என்னமா விளையாட்றீங்க. பாரிசுக்கு தனியா போனீங்களா

said...

கொத்ஸு

வந்தவுடனே கிள்ளி வெச்சத டீச்சர்கிட்டே சொல்லிட்டேன்.

said...

//ஆஹா ஆட்டோவ இங்கிட்டு திருப்பி வுட்டான்யா வுட்டான்யா...

//
ஆட்டோ எல்லாம் பழைய விஷயம்.இப்போ லேட்டஸ்டா லாரி ஃபுல்லா பன்றிகளை அனுப்பி வீட்டையே நாறடிக்கறாங்களாம் :)

said...

எப்படி இலவசம் இப்படில்லாம் திங்க் பண்றீங்க?:) எங்க பெங்களூரு தண்ணி(காவேரிதான்) உபயமோ?:0

said...

//நாட்டு 'நட'ப்பை விலாவரியா நேரில்போய் தெரிஞ்சுக்கிட்டு வந்த
உம்ம 'சரித்திர' ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.:-)//

நான் போன இடத்தில் சரித்திரம் படைக்கலை, சரித்திரம் படைத்த இடத்துக்கு நானும்தான் போகலை.

//ஆமா........... சினிமாவுக்குப் பாட்டு எழுத ச்சான்ஸ் கிடைச்சதா?//

பாட்டு எழுதறது எல்லாம் சின்ன மருத்துவர் வேலை. நமக்கு வெறும் பின்நவீனத்துவ விளக்கம் தரது மட்டுமே.

//இதை வச்சு மணிரத்தினம் படம் எடுப்பார்.//
நடந்தா நான் காப்பிரைட் கேஸ் போட்டா நீங்க வந்து சாட்சி சொல்லுவீங்கதானே?!!

said...

நல்ல பதிவுதான் போங்க!!

said...

"கண்ண கட்டுதே"...!!!

ஹப்பா
இந்த phrase அ ரொம்ப நாளா உபயோகிக்கணும்னு நெனைச்சிருந்தேன்!!
நல்ல சான்ஸ்:):)

said...

//தந்து அறிவை வளர்க்கும் ரீவிதான்

இருக்கும் சன் ரீவி உங்கள் குடும்ப சொத்து
இலவசமா ரீவி குடுத்தாலும்//

'டிவி' ய 'ரீவி' 'ரீவி' ன்னு ஏன் எழுதியிருகீங்க??

பின்நவீனத்துவத்தோட ஏதாவது technical jargon??

said...

//யப்பா...ஊரிலே ஒரு சாதரண நிகழ்சி நடந்திரகூடாதே. என்னமா விளையாட்றீங்க. //

என்ன சிவாண்ணா, இது போயி சாதாரண நிகழ்ச்சின்னா எப்படி? எத்தனை பேருக்கு அசாதா'ரண'மான நிகழ்ச்சி...

//பாரிசுக்கு தனியா போனீங்களா//
நாரதர் ஆண்டென்னா வேலை செய்யுது போல... நான் இந்தியா போனேன். வர வழியில் பாரிஸ் ஏர்போர்ட் மட்டும் பார்த்தேன்.

said...

//வந்தவுடனே கிள்ளி வெச்சத டீச்சர்கிட்டே சொல்லிட்டேன்.//

அங்க போய் என்னமோ சொல்லறீரு. இங்க வந்து என்னமோ சொல்லறீரு. பெருசு, உம்ம பேருக்கு ஏத்தா மாதிரி இல்லாம சின்ன பையன் மாதிரி விளையாடறீரே!!

said...

//ஆட்டோ எல்லாம் பழைய விஷயம்.இப்போ லேட்டஸ்டா லாரி ஃபுல்லா பன்றிகளை அனுப்பி வீட்டையே நாறடிக்கறாங்களாம் :)//

மணி, ஒரு ரெண்டு வாரம் இந்த பக்கம் வர முடியலை. இப்போ வந்து பார்த்தா எல்லாரும் பன்றி, நன்றின்னே விளையாடறாங்களே. என்ன மேட்டர்? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ். ...

said...

//எப்படி இலவசம் இப்படில்லாம் திங்க் பண்றீங்க?:) எங்க பெங்களூரு தண்ணி(காவேரிதான்) உபயமோ?:0//

அதான் தண்ணி தர மாட்டேங்கறீங்களே. முதல்வர் வேற மன வருத்தத்தோட இருக்கார்.

இதெல்லாம் தாமிரபரணி தண்ணிங்க. ஆரம்பம் முதல் முடிவு வரை தமிழகத்துக்குள் மட்டுமே.....

said...

//நல்ல பதிவுதான் போங்க!!//

என்ன ரவி, கொஞ்சம் அலுத்துக்கற மாதிரி இருக்கு? :))

said...

//"கண்ண கட்டுதே"...!!!

ஹப்பா
இந்த phrase அ ரொம்ப நாளா உபயோகிக்கணும்னு நெனைச்சிருந்தேன்!!
நல்ல சான்ஸ்:):)//

இதுக்கா இப்படி காத்திருந்தீங்க. இதுக்குன்னே எத்தனையோ பதிவு இருக்கே. சும்மா சூடான இடுகைகளா சிலவற்றை எடுத்துப்பாருங்க.

said...

//மணி, ஒரு ரெண்டு வாரம் இந்த பக்கம் வர முடியலை. இப்போ வந்து பார்த்தா எல்லாரும் பன்றி, நன்றின்னே விளையாடறாங்களே. என்ன மேட்டர்? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ். ...
//

நல்லா கோர்த்து விடறான்யா நம்மள :)

said...

//'டிவி' ய 'ரீவி' 'ரீவி' ன்னு ஏன் எழுதியிருகீங்க??

பின்நவீனத்துவத்தோட ஏதாவது technical jargon??//

அதாவது இந்த கீ போர்டில் T மற்றும் R பட்டன்கள் பக்கத்துப் பக்கத்தில் இருக்கா. அதான் இப்படி அடிக்கடி ஸ்பெல்லிங் மிஷ்டேக் ஆவுது.நீங்க இதெல்லாம் சாய்ஸில் விட்டு படியுங்க. :)))

said...

//நல்லா கோர்த்து விடறான்யா நம்மள :)//

என்ன மணி இப்படிச் சொல்லறீங்க? அதானே நட்புக்கு இலக்கணம். எடுக்கவோ,கோர்கவோன்னு கேட்டதுக்கே அம்புட்டு நல்ல பேரு, நான் கோர்த்தே விட்டுட்டேன், அப்போ எனக்கு எம்புட்டு நல்ல பேரு வரணும்?

said...

அடேங்கப்பா! நைனா....என்ன இது! இப்பிடிப் பெரிய விஷயமெல்லாம் பேசுறீங்க. நீங்க உண்மையிலேயே இலக்கியவாதிதானோ!

said...

ஜிராண்ணா,

நானெல்லாம் இளக்கியவியாதியா? என்ன இது அபாண்டமான குற்றச்சாட்டு? எதனா தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்கோ தல.

said...

கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

கும்மாங்கோ. கொய்யாங்கோ.
கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

said...

கொத்ஸ்,

))))

எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?

//இதெல்லாம் தாமிரபரணி தண்ணிங்க. ஆரம்பம் முதல் முடிவு வரை தமிழகத்துக்குள் மட்டுமே.....//

that was a good one !!

said...

வாங்க ரமத,

விஷயம் ரொம்ப சூடா போயிகிட்டு இருக்கு. நம்மால ஆனது கொஞ்சம் சிரிக்க வைக்கலாமே அப்படின்னு நினைச்சுதான்.

அந்த தாமிரபரணி மேட்டர் பத்தி சொன்னதுக்கு நன்றி. இன்னும் இந்த மாதிரி சின்ன சின்ன நையாண்டி செய்ய இந்த ஊக்கம் தேவைதானே... :))

said...

இதையும் இழுத்தும் அம்பது அடிக்காம விடறதில்லேன்னு கங்கணம் போலிருக்கு...

said...

50!

சந்தோஷமா?????

said...

51 ;)

said...

பெங்களூர்ல வெயில் அதிகமோ ;)

said...

சஞ்ஜய் சுப்பிரமணியம் - சஞ்சய் ராமசாமியோட அண்ணனா?

said...

எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சி போச்சி... இந்த சஞ்சய் சுப்பிரமணியம் சஞ்ஜய் ராமசாமிக்கு ஆப்போசிட்...

இவருக்கு எந்த விஷயமும் பதினைஞ்சி நிமிஷத்துக்கு அப்பறம் தான் ஞாபகம் வரும். ஒரு வரிய பதினைஞ்சி நிமிஷத்துக்கு திரும்ப திரும்ப பாடுவாரு. அப்ப தான் அடுத்த வரி ஞாபகம் வரும்...

இதுக்கு தமிழ்ல Long Term Memory lossnu பேரு

said...

// இலவசக்கொத்தனார் zei...
ஜிராண்ணா,

நானெல்லாம் இளக்கியவியாதியா? என்ன இது அபாண்டமான குற்றச்சாட்டு? எதனா தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்கோ தல. //

அதெப்படி மன்னிக்கிறது...நவீன இலக்கியத்தின் பாட்டனார் என்றழைக்கட்டும் அடிஸ்கோ பெஸ்லா என்ன சொல்கிறார்? இலவசத்தின் மூலக்கூறுகளின் உற்பத்தி நிலையம் என்பது பாடாத வாயும் மூடாத மூக்கும் காட்டும் வழி என்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவத்தின் தனிப்பெருங்கலவையை உருவாக்கிச் சிப்பங்களாக்கும் உங்கள் முயற்சியின் பலனால் கிடைத்த பட்டத்தை நீங்கள் விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

said...

// வெட்டிப்பயல் zei...
எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சி போச்சி... இந்த சஞ்சய் சுப்பிரமணியம் சஞ்ஜய் ராமசாமிக்கு ஆப்போசிட்...

இவருக்கு எந்த விஷயமும் பதினைஞ்சி நிமிஷத்துக்கு அப்பறம் தான் ஞாபகம் வரும். ஒரு வரிய பதினைஞ்சி நிமிஷத்துக்கு திரும்ப திரும்ப பாடுவாரு. அப்ப தான் அடுத்த வரி ஞாபகம் வரும்...

இதுக்கு தமிழ்ல Long Term Memory lossnu பேரு //

ஹா ஹா ஹா...வெட்டி ஒனக்கு இன்னொரு சஞ்சய் ராமசாமியைப் பத்திச் சொல்றேன். செவாசி தெரியுமா செவாசி...அதாவது சிவகாசி...செவாசிக்காரங்க அப்படித்தான் கூப்புடுவாங்க. அந்த செவாசிக்கு நாடாளுமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. இவரு நடிகை திருதேவி...அட ஸ்ரீதேவிப்பா...அவங்களோட மச்சினரு. ஸ்ரீதேவியோட சொந்த ஊரு செவாசி பக்கத்துல உள்ள மீனம்பட்டி.

said...

//இதையும் இழுத்தும் அம்பது அடிக்காம விடறதில்லேன்னு கங்கணம் போலிருக்கு...//

அடுத்த பதிவு வரை இதைத்தானே இழுத்து ஆக வேண்டி இருக்கு. என்ன பண்ண ஒரு நாளைக்கு நாலு பதிவு போடற மாதிரியா இருக்கு நம்ம நிலமை.

said...

//50!

சந்தோஷமா?????//

ரொம்ப சந்தோஷம். :))

said...

//51 ;)//

;-)

இப்படி எல்லாம் நம்பர் போட்டா பின்ன வேற என்ன பதில் போடறது!

said...

//பெங்களூர்ல வெயில் அதிகமோ ;)//

பெங்களூருவிலும் சரி, மும்பையிலும் சரி வெயில் அதிகம்தான்.

said...

//சஞ்ஜய் சுப்பிரமணியம் - சஞ்சய் ராமசாமியோட அண்ணனா?//

அண்ணன் தம்பிக்கு முதல் பேரு மாறும். ஆனா கடைசி பேரு ஒண்ணா இருக்கும். சஞ்சய் ராமசாமி, கார்த்திக் ராமசாமி இப்படி. ஆனா நீங்க சொன்னதுல அப்படி இல்லை மேட்டர். நீங்க புதுசா எதாவது குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க.

said...

//இதுக்கு தமிழ்ல Long Term Memory lossnu பேரு//

யப்பா ராசா, எல்லா தடவையும் ஒரே மாதிரியா பாடறாரு? வேற மாதிரி இல்ல பாடறாரு. இன்னும் கொஞ்சம் நாள் கர்நாடக சங்கீதம் கேளுங்க இந்த மாதிரி பாடும் போது வர சுகம் தெரியும்.

பி.கு. ஆரம்பத்தில் நானும் இந்த மாதிரிதான் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதனால நீங்க ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை.

said...

//இலவசத்தின் மூலக்கூறுகளின் உற்பத்தி நிலையம் என்பது பாடாத வாயும் மூடாத மூக்கும் காட்டும் வழி என்கிறார். //

இலவசம் நாந்தாங்க. நமக்கு பாடத் தெரியாது. மூக்கு மூடாது கப்படிக்கும் இடங்களுக்குப் போகும் போது தவிர.

//ந்த வகையில் பின்நவீனத்துவத்தின் தனிப்பெருங்கலவையை உருவாக்கிச் சிப்பங்களாக்கும் உங்கள் முயற்சியின் பலனால் கிடைத்த பட்டத்தை நீங்கள் விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.//

அது மட்டுமில்லை. எந்த பட்டம் வந்தாலும் விடக்கூடாது. அதை சேர்த்து வைக்கவே ஒரு ஆள் வேற அப்பாயிண்ட் பண்ணி இருக்கோமில்ல.

ஆனா இளக்கியவியாதி என்பது பட்டமா தல?

said...

//அந்த செவாசிக்கு நாடாளுமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. //

ஆமாங்க. எனக்குக்கூட இவரை ஞாபகம் இருக்கு. காங்கிரஸ்காரரோ? அது மறந்து போச்சே...

said...

// இலவசக்கொத்தனார் zei...
ஆனா இளக்கியவியாதி என்பது பட்டமா தல? //

இது தெரியாதா? அது அவரவர்க்குத் தம்-பட்டம். இப்போதைக்கு உம்-பட்டம். :)

said...

இலவசக்கொத்தனார்!
நல்ல பாடல் தந்ததற்கு நன்றி!

said...

ராகவண்ணா, ஒரு முடிவோடதான் இருக்கீங்க. சரி. என்ன ஆகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கறேன்.

said...

யோகன் அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.