Tuesday, May 29, 2007

நட்சத்திர உப்புமா (அ) பெனாத்தலாருக்கு சமர்ப்பணம்

எல்லாரும் வித்தியாசமான பல விஷயங்கள் தரும் இந்த வாரத்தில் நமக்கென்று இருக்கற ஸ்டைலை விட்டு விடலாமா? அதனால மக்களே இந்த வாரம் நட்சத்திர உப்புமா! உப்புமா பதிவு என்பதால் நம்ம உப்புமா குரு, மின்னொளி மன்னன் பெனாத்தலாரிடம் அனுப்பி சரி பார்க்கச் சொன்னேன். அவர் தந்த உப்புமா குறிப்புகள் இங்க இருக்கு. தேடிப் பார்த்தீங்கன்னா கிடைக்கும். அப்படி கிடைக்கலைன்னா கேளுங்க சொல்லறேன். இனி பதிவு.

இன்னிக்கு ஆணி புடிங்கறவங்க மத்தியில வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமா இருக்கு. அல்சர், எரிச்சல், வாயுத் தொல்லை எனப் பல விதமான பிரச்சனை இவர்களைத் தாக்குது. அளவுக்கதிகமான காபி, எழுந்து நடமாடாமல் இருக்கும் இடத்திலேயே வேலை என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும் மருத்துவர்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனைகளுக்குக் காரணமாகச் சொல்வது காலை உணவு உட்கொள்ளாததுதான். அதுனால இவங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் சமையற்குறிப்பு. அதிகமான பொருட்கள் வேண்டாம், சுலபமாகச் செய்திடலாம், அதிக நேரம் ஆகாது, சுவையாகவும் இருக்கும். இதுக்கு மேல் என்ன வேணும். சந்தோஷமா செய்து சாப்பிடுங்க மக்கா!

இன்னிக்கு பதிவெழுதறவங்க மத்தியிலே பலவிதமான பிரச்சனைகள் இருக்கு. ஜாதி மதம் போற்றும் / தூற்றும் பதிவுகள், வெள்ளீயம், காரீயம், இருத்தலீயம், பெரியாரீயம் னு பல ஈயம் தாங்கி வரும் பதிவுகள்னு நெறய வருது. இந்த ஹெவி பதிவெல்லாம் படிச்சு மனம் கனமாகிப்போயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் உப்புமா பதிவுகள் போட ஒரு ஸ்பெஷல் குறிப்பு. அதிகமா படிக்க வேண்டாம், சுலபமா செய்திடலாம், ஹிட்டும் வரும். இதுக்கு மேலே என்ன வேணும்? சந்தோஷமா உப்புமா கிண்ட ஆரம்பிங்க மக்கா!





தேவையான பொருட்கள்
அவல்இரண்டு கப் கணினி 1
உருளைக்கிழங்கு 1 மானிட்டர் 1
வெங்காயம்1 கீ போர்ட் 1
பச்சை மிளகாய்4 ஈ கலப்பை 1
எலுமிச்சம் பழம்1 லதா எழுத்துரு 1
மஞ்சள் பொடி1/2 தேக்கரண்டி இணைய இணைப்பு குறைந்தது 256Kbps
மிளகாய்ப் பொடி1 தேக்கரண்டி பிரவுஸர் 1
கொத்துமல்லிசிறிதளவு கிண்டல் தேவையான அளவு
கறிவேப்பிலைசிறிதளவு நையாண்டி தேவையான அளவு
உப்புதேவையான அளவு அறிவு பூர்வமான அணுகல் 0.00000%
தாளிக்க
வேர்க்கடலை2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு1 தேக்கரண்டி
எண்ணைசிறிதளவு


செய்முறை

1) வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், மாற்று போன்றவற்றை திறந்துவைத்துக்கொள்ளவும்.

2) அவலை நன்றாகக் தண்ணீரில் நனைத்து, களைந்து பின் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
அவற்றில் சூடான / அதிகம் பேர் பார்த்த / அதிக பின்னூட்டம் பெற்ற பதிவுகளை வடிகட்டி திறந்துவைத்துக்கொள்ளவும்.

3) களைந்தெடுத்த அவலில் உப்பும், மஞ்சள் பொடியையும் போட்டு நன்றாகப் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

திறந்து வைத்த இடுகைகளில் இருந்து இன்றைய சூடான கருத்துக்களம் எது என தெரிந்து கொள்ளவும்.

4) வாணலியில் எண்ணெய்யை விட்டு அதில் தாளிக்க வைத்திருக்கும் சாமான்களையும் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக வெடிக்க விடவும்.

இ கலப்பையைத் திறந்து, சூடான கருத்துக்களத்தைப் பற்றி ஆறிப்போன சில வரிகளில் தொடங்கவும்.

5) அதன் பின் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாகக் கிளறவும்.

பிறகு உங்களுடைய சொந்தமான சில சொதப்பல் வரிகளையும் சேர்க்கவும்.

6) சில நிமிடங்களுக்குப் பிறகு உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு ஒரு முறை முதல் 255 கேரக்டர்களைப் படித்துப் பார்க்கவும். பார்வையாளர்களை இழுக்கும் வன்மை இருக்கிறதா எனப் பார்க்கவும்.

7) காய்கறி நன்றாக வதங்கிய பின் அவலைப் போட்டு நன்றாக கிளறவும்.

பிறகு அற்புதமான ஒரு தலைப்பை பதிவுக்கு வைக்கவும். மிக முக்கியம், உப்புமா என்பது தலைப்பில் தெரிந்துவிடவே கூடாது.

8) 5 - 6 நிமிடங்கள் கிளறிய பின் அடுப்பை அணைத்திடவும்.
மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு, பப்ளிஷ் பொத்தானை அமுக்கிவிடவும்

9) சற்றே ஆறிய பின் எலுமிச்சை ரசத்தைச் சேர்த்து கிளறவும். மேலே கொத்து மல்லியைத் தூவிவிடவும்.

இடுகையைத் திறந்து, திரட்டிகளுக்குத் தகவல் அனுப்பவும்.

தடித்த அவல், மெல்லிய அவல் என இரு வகைகள் கிடைக்கும். மெல்லிய அவல் எளிதில் குழைந்து விடும். அதனால் தடித்த அவலே நல்லது. சாப்பிட்டு விட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க!

ஹார்ம்லெஸ் உப்புமா, கைப்புள்ள உப்புமா என்று இரு வகைகள் உள்ளன. ஹார்ம்லெஸ் படித்துவிட்டு மனதிற்குள் திட்டிவிட்டு ஓடிப்போய்விடுவார்கள். கைப்புள்ள ஸ்டைலில் படித்தவர்கள் பின்னூட்டம் போட்டு சண்டை போட்டு ஆப்புக்கு உத்திரவாதம் அளிப்பார்கள். ஹார்ம்லெஸ் வகையே நல்லது. போட்டுவிட்டு ஹிட்டு ஏறியிருக்கா என்று சொல்லுங்க!

இதோட இன்றைய உப்புமா பதிவு இனிதே முடிந்தது.

161 comments:

said...

ரொம்ப கேப் இல்லாமல் உப்புமா சாப்பிட்டால் கேஸ் பார்ம் ஆகாது. அதனால கேப் இருக்கும் இடங்களில் வெள்ளெழுத்துக்காரர்கள் கண்ணாடி போட்டுக் கொண்டு படிக்கவும்.

said...

Grrrrrrrrrrrrrr

said...

You too Koths!

said...

எல்லாம் செஞ்சு பார்த்தேன்.

எல்லாம் அப்படியே மொத்தையா நிக்குது.

அடுப்பை பத்தவைக்கச் சொல்லலியே!

பத்த வைக்கச் சொல்லலியே பரட்டை!

said...

என்ன விவ்ஸ் இம்புட்டு கோபம்? அதுவும் ஆங்கிலத்தில்? அவல் உப்புமா பிடிக்காதா? :))

said...

//You too Koths!//

இல்லீங்க. மீ ஒன் ஒன்லி.

said...

//எல்லாம் செஞ்சு பார்த்தேன்.

எல்லாம் அப்படியே மொத்தையா நிக்குது.

அடுப்பை பத்தவைக்கச் சொல்லலியே!

பத்த வைக்கச் சொல்லலியே பரட்டை!//

கடுகு வெடிக்கணும். பத்த வைக்காமலேயே வெடிக்கிற பார்ட்டிங்க இருக்காங்களே. அதான் தனியா பத்த வைக்கச் சொல்லலை.

said...

அவல் உப்புமா ரொம்ப புடிக்கும், ஆனா அதுக்குள்ள அவல், வெங்காயம்.... மட்டுமே இருக்கனும், இவ்வளவு இருக்கப்படாது. உப்புமாவுல இதெல்லாமா சேர்ப்பாங்க?

said...

/கடுகு வெடிக்கணும். பத்த வைக்காமலேயே வெடிக்கிற பார்ட்டிங்க இருக்காங்களே. அதான் தனியா பத்த வைக்கச் சொல்லலை//

இந்த மாதிரி டபுள் மீனிங்கல பேச கூடாது

said...

//அவல் உப்புமா ரொம்ப புடிக்கும், ஆனா அதுக்குள்ள அவல், வெங்காயம்.... மட்டுமே இருக்கனும், இவ்வளவு இருக்கப்படாது. உப்புமாவுல இதெல்லாமா சேர்ப்பாங்க?//

பார்த்தீங்களா இளா, அவசரமா அள்ளிப் போட்டுக்கிட்டா சுவையே தெரியாது. ஆற அமர ரசிச்சு சாப்பிடுங்க. அந்த சுவையே வேற. இல்லையா!! :))

said...

//ரொம்ப கேப் இல்லாமல் உப்புமா சாப்பிட்டால் கேஸ் பார்ம் ஆகாது. //

இப்படி பதிவு போட்டா போலீஸ் மாமா கிட்ட சொல்லி case போட சொல்லுவோம்

said...

//அதனால கேப் இருக்கும் இடங்களில் வெள்ளெழுத்துக்காரர்கள் கண்ணாடி போட்டுக் கொண்டு படிக்கவும். //

தவறான தகவல். இது மக்களை திசை திருப்ப பார்க்கும் திட்ட மிட்ட சதி.

said...

கண்ணாடியை துடைச்சுகிட்டு செஞ்சா, உப்புமா ரொம்ப நல்லா வருது!

ம்ம்ம்ம்

இன்னும் எத்தனை ரக உப்புமா கிண்டணுமோ, தெரியலியே சாமி!

பத்த வெச்சுட்டியே பரட்டை!
:))

said...

//இந்த மாதிரி டபுள் மீனிங்கல பேச கூடாது//

ராசா, இதுல ஒரே ஒரு மீனிங்தாம்பா இருக்கு. நீயா மீனிங் 2, மீனிங் 3ன்னு சொல்லிக்கிட்டே போனா எப்படி? எனக்கும் கொஞ்சம் சொல்லுப்பா.

said...

//இப்படி பதிவு போட்டா போலீஸ் மாமா கிட்ட சொல்லி case போட சொல்லுவோம்//

அது என்ன போலீஸ் மாமா?? கேட்டு வாசல், நடு செண்டர்ன்னு சொல்லற மாதிரி? :)))

said...

//ஆற அமர ரசிச்சு சாப்பிடுங்க. அந்த சுவையே வேற. இல்லையா!! :)) //
ம்ஹ்ஹ்ஹ்ம்ம் புரியுதுங்க. உப்புமான்னா அது உப்புமா இல்லே. அப்படின்னு புரியுது. இப்படி பதிவு போட்டா சலூனுக்கே போக வேண்டிய அவசியம் இல்லே. நாங்களே பிச்சுக்குவோம். அப்புறம் எதுக்கு சலூன் எல்லாம்

said...

இது என்ன சமர் - பணம் வாரமா?
ஒத்துக்கறேன். நீங்க ரொம்ப பிஸியோ பிஸி. உப்புமா நல்லாத்தேன் வந்திருக்கு.

நெக்ஸ்ட் மீட் பண்றேன். :-)

said...

//தவறான தகவல். இது மக்களை திசை திருப்ப பார்க்கும் திட்ட மிட்ட சதி.//

அப்படியா? மக்கள் யாரும் திசை திரும்பாதீங்கப்பா. மானிட்டருக்கு முதுகு காமிச்சா பதிவு தெரியாது. தெரியாது. தெரியவே தெரியாது!!

said...

//கண்ணாடியை துடைச்சுகிட்டு செஞ்சா, உப்புமா ரொம்ப நல்லா வருது!//

உப்புமா அதேதான், பார்க்கும் பார்வை வேணா மாறுதோ என்னவோ! கண்ணாடியைத் துடைச்சா ஒரு தெளிவு பிறக்குதுல்ல. அதான்.

//இன்னும் எத்தனை ரக உப்புமா கிண்டணுமோ, தெரியலியே சாமி!//

இதுக்கே இவ்வளவு கஷ்டம். இதுல இன்னும் ரகம் ரகமா வேணுமாக்கும்.

//பத்த வெச்சுட்டியே பரட்டை!
:))//

கண்ணாடியைத் துடைக்கும் முன்னும் இதே. துடைத்த பின்னும் இதே! மாறவே மாட்டீங்களா?!!

said...

//அவர் தந்த உப்புமா குறிப்புகள் இங்க இருக்கு. //

இல்ல போல இருக்கு? சுட்டிய மிஸ் பண்ணிட்டீங்களா, இல்ல நாங்க ஒழுங்கா படிக்கிறோம்னு செக் பண்றீங்களா? :-?

said...

//ம்ஹ்ஹ்ஹ்ம்ம் புரியுதுங்க. உப்புமான்னா அது உப்புமா இல்லே. அப்படின்னு புரியுது. //

அதாவது புரியற மாதிரி இருக்கு. ஆனா புரியலை. புரியாத மாதிரி இருக்கு ஆனா புரியுது. இல்லையா!!

//இப்படி பதிவு போட்டா சலூனுக்கே போக வேண்டிய அவசியம் இல்லே. நாங்களே பிச்சுக்குவோம். அப்புறம் எதுக்கு சலூன் எல்லாம்//

ஏங்க நான் சாப்பாட்டைப் பத்தி பேசினா நீங்க சவரத்தைப் பத்தி பேசறீங்க. என்னவோ போங்க.

said...

//இது என்ன சமர் - பணம் வாரமா?
ஒத்துக்கறேன். நீங்க ரொம்ப பிஸியோ பிஸி. உப்புமா நல்லாத்தேன் வந்திருக்கு.

நெக்ஸ்ட் மீட் பண்றேன். :-)//

ஸ்ரீதர், நீங்க போட்ட பின்னூட்டமும் இளாவும் எஸ்.கேவும் போட்ட முதல் பின்னூட்டமும் ஒரே மாதிரி இருக்கு. ஆனா அவங்க பதிவை பல முறை படிச்சு கண்ட தெளிவு அவங்களோட அடுத்து வந்த பின்னூட்டங்களில் தெரியுது. அந்தத் தெளிவு உங்களுக்கு வரலையா?

said...

//இல்ல போல இருக்கு? சுட்டிய மிஸ் பண்ணிட்டீங்களா, இல்ல நாங்க ஒழுங்கா படிக்கிறோம்னு செக் பண்றீங்களா? :-?//

குறிப்புகள் இருக்கு. அது சுட்டி இல்லை. வெறும் ஹைலைட்தான்.

said...

//கண்ணாடியை துடைச்சுகிட்டு செஞ்சா, உப்புமா ரொம்ப நல்லா வருது//

இப்பத்தான் கவணித்தேன். ஆஹா.... ஆஹா...

உப்புமாக்குள்ளும் இப்படி உள்ளுறைந்த பல உண்மைகளை உதிர்த்து விட்டிருக்கும் உங்களுக்கு உப்புமாமா என்ற பட்டம் அளிக்கின்றோம். :-)

said...

கடுகு வெடிக்கணும். பத்த வைக்காமலேயே வெடிக்கிற பார்ட்டிங்க இருக்காங்களே. அதான் தனியா பத்த வைக்கச் சொல்லலை.
உப்புமா செய்வதிலும் இவ்வளவு லொல்லா? :-)))

said...

//இப்பத்தான் கவணித்தேன். ஆஹா.... ஆஹா...//

கவனிச்சீங்களா!! :))

//உப்புமாக்குள்ளும் இப்படி உள்ளுறைந்த பல உண்மைகளை உதிர்த்து விட்டிருக்கும் உங்களுக்கு உப்புமாமா என்ற பட்டம் அளிக்கின்றோம். :-)//

இன்னும் ஒரு பட்டமா? இருந்துட்டுப் போகட்டும். ஆனா இந்த உப்புமா மேட்டருக்கு நம்ம குரு இருக்காரே. அவருக்கு குடுத்திடலாமா?

said...

//உப்புமா செய்வதிலும் இவ்வளவு லொல்லா? :-)))//

அந்த ஒரு வரிக்கே இப்படிச் சொன்னீங்கன்னா, மத்தவங்களுக்கு வந்த தெளிவு உங்களுக்கு வந்தா என்ன சொல்லுவீங்களோ!!!

said...

//அந்தத் தெளிவு உங்களுக்கு வரலையா? //

தெளிந்தேன் ஐயா... தெளிந்தேன்.

Reading between the lines -ல நாங்க எல்லாரும் நிபுனர்கள் தெரியுமோ?

தமிழ்மணத்துல பலரும் வரிகளுக்கிடையே பொறிகள் வைப்பார்க்ள். நீங்கள் அறிவுச்சுடர்களை ஆங்காங்கே அமுக்கி வைத்திருக்கிறீர்கள்.

said...

//ஆனா இந்த உப்புமா மேட்டருக்கு நம்ம குரு இருக்காரே. அவருக்கு குடுத்திடலாமா?//

ஒரு உப்புமாமா மேட்டருக்கு இவ்வளவு போட்டி வரும்னு எதிர்பார்க்கல.

மாமாவுக்கே மாமா என்பதால் (குருவுக்கே குரு என்று அர்த்தம் செய்து கொள்ளவும்) அவர் மா உப்புமாமா என்று அழைக்கப்படுவார் :-)

said...

உப்புமா
மா மா மா
மா மா மா
மா மா மா
மா....?
கொத்ஸ்!

இந்தப் பதிவிற்கு என்ன பெயர் என்பதையும் அருள் கூர்ந்து கிண்டவும்! சாரி விளக்கவும்! :-))

இதில் பெனாத்தலாரை இழுத்த கொத்தனாரை அமுச சார்பாகா வண்மையாகக் கிண்டு-கிறோம்!

said...

என் அறிவுக் கண்ணை தொறந்துட்டீங்க கொத்ஸ் :)))

said...

//தமிழ்மணத்துல பலரும் வரிகளுக்கிடையே பொறிகள் வைப்பார்க்ள். நீங்கள் அறிவுச்சுடர்களை ஆங்காங்கே அமுக்கி வைத்திருக்கிறீர்கள்.//

குறிப்புகள் பை பெனாத்தலார். அதை மறந்துவிடாதீர்கள் ஸ்ரீதர். அதான் அவருக்கு அந்த பட்டம் போய்ச் சேர வேண்டியது.

said...

//மாமாவுக்கே மாமா என்பதால் (குருவுக்கே குரு என்று அர்த்தம் செய்து கொள்ளவும்) அவர் மா உப்புமாமா என்று அழைக்கப்படுவார் :-)//

அவரே உப்புமாமா. அவரே மா உப்புமாமா. நாம எல்லாம் அவர் சீடர்கள் அம்புட்டுதான்.

said...

//இந்தப் பதிவிற்கு என்ன பெயர் என்பதையும் அருள் கூர்ந்து கிண்டவும்! சாரி விளக்கவும்! :-))//

ரவி - நட்சத்திர உப்புமா அல்லது பெனாத்தலாருக்கு சமர்ப்பணம்.

என்ன வேணாலும் சூஸ் பண்ணிக்குங்க.

//இதில் பெனாத்தலாரை இழுத்த கொத்தனாரை அமுச சார்பாகா வண்மையாகக் கிண்டு-கிறோம்!//

என்ன வேணா கிண்டுங்க. ஆனா குறிப்புகள் அவருது. அதனால அவரை இழுக்க எனக்கு தார்மீக உரிமை உண்டு.

said...

//என் அறிவுக் கண்ணை தொறந்துட்டீங்க கொத்ஸ் :)))//

கப்பி, தெரிஞ்சுதான் சொல்லறீங்களா? :)))

said...

//அவரே உப்புமாமா. அவரே மா உப்புமாமா. நாம எல்லாம் அவர் சீடர்கள் அம்புட்டுதான்.
//

ஆறிப்போன உப்புமாவை அருமையான அவல் உப்புமாவா ஆக்கிய உங்களுக்கு ஏதாவது கொடுத்தாகனுமேன்னு பரபரன்னு வருதுங்கோ...

அப்ப நீங்கதான் 'உப்போ உப்புமாமா' :-))))

said...

இந்த உப்புமாக்கு கூட உக்காந்து யோசிச்சு... இம்புட்டு பின்னூட்டம் போட்ட என்னய... என்னன்னு சொல்லி...

ஹ்ம்ம்... வேணா 'சும்மா உப்புமா'னு கூப்பிடலாம். :-((

said...

அவல் உப்புமா பெண்களுக்கான உப்புமாவா???

said...

ஏன் முன்னாடி அப்படி கேக்கறேனா அவள் விகடன் பெண்களுக்கான நாளிதழாச்சே ;)

said...

நட்சத்திர வாரத்தில் பெண்களை திருப்தி படுத்துவதற்காக போட்ட பதிவு தான் இது என மக்கள் பேசிக்கொள்கிறார்களே... அதுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்???

said...

நீங்கதன் இப்ப கண்ணாடியைத் துடைச்சுக்கணும்.
க.து.மு. சொன்னது "பத்த வைக்கச் சொல்லலியே பரட்டை"

க.து.பி. சொன்னது "பத்த வெச்சுட்டியே பரட்டை"

சரியான உப்புமாமா நீங்க!

:))

said...

கடுகு இங்கே மூணு (விதமான) சைஸ்லே கிடைக்குது. எந்த கடுகைப் போடலாமுன்னு
சொல்லுங்க .

நாந்தான் இந்த வம்பே வேணாமுன்னு (ஓட்ஸ்) அவலைப் பாலில் கலந்து தின்னுருவேன்:-)

எல்லாரும் இப்படி வந்து வட்டமா நில்லுங்க. ம்... ஆரம்பிக்கட்டும், கும்மி:-)

said...

உப்புமா கிண்டி உலகை உய்வித்த உன்னத தலைவர் கொத்தனார் அவர்களை வாழ்த்தி வணங்கி அண்ணனின் நட்சத்திர வாரத்து மூன்றாவது நாள் முன்னிட்டு 155, 156 வட்டங்கள் சார்பாக சென்னையில் இன்று அவல் உப்புமா அனைவருக்கும் வழங்கப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

தலைமை மன்றம்
கொட்டிவாக்கம்

said...

ஒரு சப்பை மேட்டர் உப்புமா செய்ய இவ்வளவு கஷ்டமா?? இதெல்லாம் ஆவறதில்ல.. நாங்க காலைக்கு பிரட் சாப்பிட்டுகிறோம்...

இந்த மாதிரி கஷ்டமான ஐட்டம்லாம் ராத்திரி டின்னருக்கு தான் சரி பட்டு வரும்.. :D:D

said...

தமிழனின் உயிர் உணவான உப்புமாக் கிண்டிய எங்கள் அன்பு அண்ணனைச் சீண்டிப் பார்க்கும் வகையில் அவர் பதிவில் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டு புதர் குடும்பத்தோடு கூட்டணி அமைக்க முயன்ற விவசாயி இளாவை எக்க எக்கசக்கமாய் கண்டிக்கிறேன்

தேவ்
தலைமை மன்றம் - கொட்டிவாக்கம்

said...

//
ஆறிப்போன உப்புமாவை அருமையான அவல் உப்புமாவா ஆக்கிய உங்களுக்கு ஏதாவது கொடுத்தாகனுமேன்னு பரபரன்னு வருதுங்கோ...

அப்ப நீங்கதான் 'உப்போ உப்புமாமா' :-))))//

சரிங்க. ரொம்ப கஷ்டப்படாதீங்க. நான் உப்புமாமா, அவரு மா உப்புமாமா. ஓக்கே?

said...

//இந்த உப்புமாக்கு கூட உக்காந்து யோசிச்சு... இம்புட்டு பின்னூட்டம் போட்ட என்னய... என்னன்னு சொல்லி...

ஹ்ம்ம்... வேணா 'சும்மா உப்புமா'னு கூப்பிடலாம். :-((//

நான் உப்புமாமா, பெனாத்தலார் மா உப்புமாமா. அப்போ நீங்க உப்புமா வாம்மா மாமா. சரிதானே!! :))

said...

//அவல் உப்புமா பெண்களுக்கான உப்புமாவா???//

அவல் உப்புமா எல்லாருக்கும்தான். அதன் குறிப்பு பெண்களுக்கா, ஆண்களுக்கா அல்லது ரெண்டு பேருக்குமேவா என்பது எல்லாம் ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட சமாச்சாரம்.

said...

//ஏன் முன்னாடி அப்படி கேக்கறேனா அவள் விகடன் பெண்களுக்கான நாளிதழாச்சே ;)//

அவனவன் பேசினாத்தான் ல,ள,ழ வித்தியாசம் தெரியலை (எஸ்.கே., கேப்டனை மட்டம் எல்லாம் தட்டலைங்க) உமக்கு படிக்கும்போதே பிராப்பளமா? கொடுமைடா சாமி.

said...

//நட்சத்திர வாரத்தில் பெண்களை திருப்தி படுத்துவதற்காக போட்ட பதிவு தான் இது என மக்கள் பேசிக்கொள்கிறார்களே... அதுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்???//

பெண்களை திருப்தி செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லீங்க.

said...

//சரியான உப்புமாமா நீங்க!

:))//

ஆமாங்க. போட்ட பிந்தான் பார்த்தேன். சரி நீங்க கரெக்ட் பண்ண, நான் ஆமாம் சொல்ல வர ரெண்டு பின்னூட்டத்தை ஏன் வேண்டாமுன்னு சொல்லணுமுன்னு அப்படியே விட்டுட்டேன். ஹிஹி....

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!!

said...

இது வலை உலகம் காணாத உப்புமா...

வெறும் கண்ணால் பார்த்தால் உப்புமா வெறும் உப்புமா

அறிவுக் கண்ணால் பார்த்தால் உப்புமா இல்ல இது ஆப்பும்மா

புரிஞ்சவங்க புரிஞ்சுக்கங்க....

said...

//கடுகு இங்கே மூணு (விதமான) சைஸ்லே கிடைக்குது. எந்த கடுகைப் போடலாமுன்னு
சொல்லுங்க .//

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? எதை வேண்டுமானாலும் போடுங்க.

//நாந்தான் இந்த வம்பே வேணாமுன்னு (ஓட்ஸ்) அவலைப் பாலில் கலந்து தின்னுருவேன்:-)//

அடடா அடுத்த சமையல் குறிப்பை இப்படி அனாவசியமா வேஸ்ட் பண்ணிட்டீங்களே!! :))

//எல்லாரும் இப்படி வந்து வட்டமா நில்லுங்க. ம்... ஆரம்பிக்கட்டும், கும்மி:-)//

டீச்சர், கண்ணால் காண்பதும் பொய். பதிவில் தெரிவதைப் படித்து அதுதான் பதிவு என முடிவு செய்யாதீர்கள்!! பெனாத்தலாரின் குறிப்புகளைத் தேடிப் படியுங்க.

said...

//சென்னையில் இன்று அவல் உப்புமா அனைவருக்கும் வழங்கப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்//

எனக்கும் ஒரு ப்ளேட் பார்ச்சேல்ல்ல்ல்ல்ல்

said...

//ஒரு சப்பை மேட்டர் உப்புமா செய்ய இவ்வளவு கஷ்டமா?? இதெல்லாம் ஆவறதில்ல.. நாங்க காலைக்கு பிரட் சாப்பிட்டுகிறோம்...//

தூங்கற சிங்கத்தைத் தட்டி எழுப்பாதீங்க. அப்புறம் நாங்க பிரட் சாப்பிட சமையல் குறிப்பு போடுவோம்.

//இந்த மாதிரி கஷ்டமான ஐட்டம்லாம் ராத்திரி டின்னருக்கு தான் சரி பட்டு வரும்.. :D:D//

எப்படியோ பண்ணி சாப்பிட்டா சரி. பெனாத்தலாரின் குறிப்புகள் வேண்டாமா?

said...

//தமிழனின் உயிர் உணவான உப்புமாக் கிண்டிய எங்கள் அன்பு அண்ணனைச் சீண்டிப் பார்க்கும் வகையில் அவர் பதிவில் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டு புதர் குடும்பத்தோடு கூட்டணி அமைக்க முயன்ற விவசாயி இளாவை எக்க எக்கசக்கமாய் கண்டிக்கிறேன்
//

நல்லா கேளு தேவு. எனக்குப் புரியாதுன்னு தெரிஞ்சும் வேணுமுன்னே அந்தாளு அப்படியே பேசுறாரு. என்னான்னு வந்து கேளு.

said...

//இது வலை உலகம் காணாத உப்புமா...

வெறும் கண்ணால் பார்த்தால் உப்புமா வெறும் உப்புமா

அறிவுக் கண்ணால் பார்த்தால் உப்புமா இல்ல இது ஆப்பும்மா

புரிஞ்சவங்க புரிஞ்சுக்கங்க....//

பாயிண்டைப் பிடிச்சான் பாரு! அதான்யா மேட்டரு. சோக்கா இருந்திச்சா?

said...

உப்புமாவை விட ஆப்புமா ரொம்ப சூப்பர். :-)

நன்றி கொத்ஸ்.

மதுரையம்பதி.

said...

உப்புமா குருவையே மிஞ்சிய உப்புமா வேந்தனே, நீ கிண்டிய இப் உப்புமாவை உண்டு உலகமே உய்ய வேண்டும்.....

said...

நான் வரதுக்குள்ள கும்மியெல்லாம் அடிச்சு முடிச்சாச்சா...:-)

4) வாணலியில் எண்ணெய்யை விட்டு அதில் தாளிக்க வைத்திருக்கும் சாமான்களையும் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக வெடிக்க விடவும்//

வெடிச்சப்புறம் எப்படிச் சாப்பிடறது?
//வெங்காயத்தை வெட்டவும்//
சாமி.!!

அவல்ல உப்புமா செய்வாங்களா?????
அடடா!!!!
//அதனால கேப் இருக்கும் இடங்களில் வெள்ளெழுத்துக்காரர்கள் கண்ணாடி போட்டுக் கொண்டு படிக்கவும்//

கண்டனம் தெரிவிப்பது
கண்ணாடி போட்டவர்கள்.

said...

இங்கே எதாவது அவல் கிடைக்குமா என்று எட்டிப்பார்த்தேன்.

ஆகா.. ஓகோ... கமகமக்கும் அவல் உப்புமா !

கிண்டிப்பார்க்க ஆவலை கிளப்பிட்டிங்க கொத்ஸ் !

said...

//பெண்களை திருப்தி செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லீங்க.//

ஹா..ஹா... :))))))))))

said...

பெனாத்தல் அண்ணாச்சிக்குன்னு ஸ்பெஷலா செஞ்ச இந்த உப்புமா பதிவை அண்ணாச்சி வந்து டேஸ்ட் பார்த்ததா தெரியலியே!

said...

நல்ல உப்புமா....

நேற்று ஜெயா டிவில வந்தீங்களே...அப்போவே உப்புமா பத்தி சொல்லியிருக்கலாமே

நல்லா களையாதான் இருந்தீங்க..ஆனா ராத்திரி 10மணிக்கு sun glass தேவையா? :)))

said...

இந்த உப்புப்பெறாத "அவல் உப்புமா" மேட்டருக்கு இத்தனை பின்னூட்டமா? யாரு அங்கே புகையுதான்னு கேட்கறது? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உப்புமாவிலே பச்சை மிளகாயைக் கடிச்சுட்டேன். அதான் எரியுது! :P

said...

//உப்புமாவை விட ஆப்புமா ரொம்ப சூப்பர். :-)

நன்றி கொத்ஸ்.

மதுரையம்பதி.//

வாங்க மதுரையம்பதி. ஆப்புமாவை பிடிச்சுட்டீங்களா? அது உங்களுக்குப் பிடிச்சதா? சந்தோஷம். :))

said...

//உப்புமா குருவையே மிஞ்சிய உப்புமா வேந்தனே, நீ கிண்டிய இப் உப்புமாவை உண்டு உலகமே உய்ய வேண்டும்.....//

உலகம் உய்யுமான்னு தெரியாது. ஒரு வேளை பசி அடங்கும். அம்புட்டுதான் தெரியும்.

said...

//நான் வரதுக்குள்ள கும்மியெல்லாம் அடிச்சு முடிச்சாச்சா...:-)//

முடிப்போமா? என்ன இது குழந்தைத்தனமா? :))

//வெடிச்சப்புறம் எப்படிச் சாப்பிடறது?//
வடிச்சாதான் சோறு, வெடிச்சாதான் கடுகு.

//சாமி.!!

அவல்ல உப்புமா செய்வாங்களா?????
அடடா!!!!//

அவலில் உப்புமா செய்யலாம். அதைச் சொல்லும் போது கூடவே வேறு வித உப்புமாவும் கிண்டலாம்.


//கண்டனம் தெரிவிப்பது
கண்ணாடி போட்டவர்கள்.//
கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு பாருங்கள். தெரியாத விஷயங்கள் தெரியக் கிடைத்தால் உங்களுக்கு புதிய உப்புமா தெரிய வரும்.

said...

//இங்கே எதாவது அவல் கிடைக்குமா என்று எட்டிப்பார்த்தேன்.

ஆகா.. ஓகோ... கமகமக்கும் அவல் உப்புமா !

கிண்டிப்பார்க்க ஆவலை கிளப்பிட்டிங்க கொத்ஸ் !//

வாங்க கண்ணன். போட்டபடி கிண்டினா உப்புமா கிடைக்கும். போட்டதையே கிண்டினா உங்க வாய்க்கு மெல்ல அவல் கிடைக்கும். கிண்டிப் பாருங்க.

said...

//ஹா..ஹா... :))))))))))//

வாங்க கவிதா. பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்ல கிடைக்கலையா?

said...

//பெனாத்தல் அண்ணாச்சிக்குன்னு ஸ்பெஷலா செஞ்ச இந்த உப்புமா பதிவை அண்ணாச்சி வந்து டேஸ்ட் பார்த்ததா தெரியலியே!//

அவர்தான் ப்ரிவ்யூ பண்ணி அவரோட குறிப்புகளை சேர்த்து இருக்காரே. அவரோட குறிப்புகள்தான் ஹைலைட்டே . ஆனா நிறையா பேரு அதை மிஸ் பண்ணிட்டாங்க.

said...

//நல்ல உப்புமா....//
இது பல லேயர் உப்புமாங்க. நீங்க பார்த்தது முதல் லேயர்தான். கொஞ்சம் ஆழமாப் பாருங்க.

//நேற்று ஜெயா டிவில வந்தீங்களே...அப்போவே உப்புமா பத்தி சொல்லியிருக்கலாமே//

எந்த இடத்தில் என்ன சொல்லணமுன்னு இருக்குல்ல. அதான்.

//நல்லா களையாதான் இருந்தீங்க..ஆனா ராத்திரி 10மணிக்கு sun glass தேவையா? :)))//

கலைஞரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகள், கனிமொழியைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாம் இட்லிவடையார் பதிவில். இங்க இல்லீங்க. :))

said...

//இந்த உப்புப்பெறாத "அவல் உப்புமா" மேட்டருக்கு இத்தனை பின்னூட்டமா? //

அதான் உப்பு தேவையான அளவுன்னு போட்டாச்சே. அப்புறம் என்ன?

நீங்க வெறும் தெரியற விஷயத்தைப் பார்க்கறீங்க. ஆனா தெரியாத விஷயத்தை விட்டுட்டீங்க. அதுக்குதான் பின்னூட்டமே.

ஒரு உண்மையைச் சொல்லறேன். பார்மேட்டிங் பிராப்பளம் எல்லாம் இல்லை. நடு நடுவே இவ்வளவு கேப் இருக்குன்னா அதுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. புரியுதா?

//யாரு அங்கே புகையுதான்னு கேட்கறது? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உப்புமாவிலே பச்சை மிளகாயைக் கடிச்சுட்டேன். அதான் எரியுது! :P//

புகையுதோ எரியுதோ, எல்லாம் இம்புட்டு காரம் இருக்கறதுனால்தான். :))

said...

நீர் கிண்டிய உப்புமா பல உப்புமா பதிவர்களுக்கு தெரியாமல் போனதன் மர்மம் என்ன....

said...

---இந்த பிரச்சனைகளுக்குக் காரணமாகச் சொல்வது காலை உணவு உட்கொள்ளாததுதான்.---

உருளைக்கிழங்கு வாயு! அவலுக்கு பதில் ஓட்ஸ் பயன்படுத்தவும்.

மூன்று வேளையும் ஆரோக்கியமாக உண்டு, நோய் நொடிப்பொழுதும் அணுகாமல், தொடர்ந்து உப்புமா கிண்டி பெருவாழ்வு பெருக :)

said...

//ஒரு உண்மையைச் சொல்லறேன். பார்மேட்டிங் பிராப்பளம் எல்லாம் இல்லை. நடு நடுவே இவ்வளவு கேப் இருக்குன்னா அதுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. புரியுதா? //

Ctrl A (Select all) பண்ணி முழு பதிவையும் படிச்சுட்டேனே ))

said...

//நீர் கிண்டிய உப்புமா பல உப்புமா பதிவர்களுக்கு தெரியாமல் போனதன் மர்மம் என்ன....//

அடுத்த பதிவைப் பார்க்கவும். :-(

said...

பாருடா....பாருடா.... போட்ட ஒரு உப்புமா பதிவுக்கு கமலை எல்லாம் வம்புக்கு இழுத்து.... ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல...

said...

//உருளைக்கிழங்கு வாயு! அவலுக்கு பதில் ஓட்ஸ் பயன்படுத்தவும்.//

பாபாண்ணா, அவலுக்குப் பதிலா ஓட்ஸ் சொன்னா பரவாயில்லை. உருளைக்குப் பதிலா ஓட்ஸா? என்னமோ உதைக்குதே!!

//மூன்று வேளையும் ஆரோக்கியமாக உண்டு, நோய் நொடிப்பொழுதும் அணுகாமல், தொடர்ந்து உப்புமா கிண்டி பெருவாழ்வு பெருக :)//

கிண்டறது நான் செஞ்சாலும் படிக்கிறவங்க நீங்களும் அதே பெரு வாழ்வு வாழ்க.

said...

வலிக்குது எனக்கு ரொம்பவே வலிக்குது.....

கமலை உங்க லெவலுக்கு இழுத்தை நினைத்தா, இல்ல நீங்க கமல் லெவலுக்கு போனதை நினைத்தா என்று தெரியல.... ஆனா எனக்கு வலிக்குது...

said...

--- மக்களே, அந்த பதிவில் பார்மேட்டிங் பிரச்சனைகள் இல்லை. வெள்ளைக் கலரில் சில பத்திகள் எழுதப் பட்டுள்ளன. முழு பதிவையும் ஹைலைட் செய்தீர்களானால் அந்த எழுத்துகள் தெரியும். பெனாத்தலாரின் குறிப்புகள் அவை. படித்து மகிழுங்கள். ----

முழு (ப் வருமா/வராதா? ஏன்) பதிவையும் எப்படி தேர்ந்தெடுப்பது?

படிக்க வேன்டும் என்று தேர்வு செய்துதானே வாசிக்கிறோம் :D

said...

//Ctrl A (Select all) பண்ணி முழு பதிவையும் படிச்சுட்டேனே ))//

நீங்க கேட்ட உப்புமா பதிவு நீங்க படிக்காம இருப்பீங்களா? படித்தால் மட்டும் போதுமா? நல்லா இருந்துதா? :)

said...

//பாருடா....பாருடா.... போட்ட ஒரு உப்புமா பதிவுக்கு கமலை எல்லாம் வம்புக்கு இழுத்து.... ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல...//

என்ன பண்ணறது? ஒரு படைப்பாளிக்குத்தானே இன்னொரு படைப்பாளியின் வலி புரியுது.

(படைப்பாளி ரஜினி படமாச்சே என்ற மொக்கை பதில் தடை செய்யப் படுகிறது!)

said...

தெய்வமே,
எங்கயோ போயிட்டீங்க

-வெட்டி (லாகின் பண்ண சோம்பேறி தனமா இருக்கு)

said...

//ஆனா எனக்கு வலிக்குது...//

வலிக்குதா? நீங்களும் விரைவில் படைப்பாளி ஆக வாழ்த்துக்கள்!

அப்போ இவ்வளவு நாள் எழுதியது என கேட்கும் மொக்கை பதில் தடை செய்யப் படுகிறது.

said...

//முழு (ப் வருமா/வராதா? ஏன்) பதிவையும் எப்படி தேர்ந்தெடுப்பது?//

CTRL+A என ஜெயஸ்ரீ சொல்லிட்டாங்களே. அப்புறம் என்ன!!

//படிக்க வேன்டும் என்று தேர்வு செய்துதானே வாசிக்கிறோம் :D//

அதெல்லாம் செஞ்சுட்டு அரைகுறையா படிச்சதுனாலதானே இந்த வலி, அதன் புரிதல் எல்லாமே!!

said...

சரி மொக்கை பதில் வேண்டாம், ஆனா படைப்பாளி என்று ரஜினி படம் ஏதும் வந்துச்சா என்ன?

said...

வெட்டி, இப்படி எல்லாம் சோம்பேறித்தனப் பட்டா அப்புறம் எப்படி படைப்பாளி ஆகறது. புலியைப் பாரு. எவ்வளவு சுறுசுறுப்பு!! :))

said...

//சரி மொக்கை பதில் வேண்டாம், ஆனா படைப்பாளி என்று ரஜினி படம் ஏதும் வந்துச்சா என்ன?//

வரலையா? நார்மலா அவரு படம்தான் உழைப்பாளி, தொழிலாளி, படைப்பாளின்னு வரும். அதான் ஒரு குன்ஸா சொல்லிட்டேன்.

வீ ஆர் கமல் ஃபேன்ஸ் யூ சீ!!

said...

அப்படியே கம்ப்யூட்டர் முன்னாடி காலை வைங்க.. இங்க இருந்தே தொட்டு கும்பிட்டுக்கறேன்...

said...

//தெய்வமே,
எங்கயோ போயிட்டீங்க//

எங்கயேயும் போகல, சும்மா ஆபிஸ்ல தேமமேனு வர்கார்ந்துட்டு போட்ட ஒரு உப்புமா பதிவுக்கு ஒரு விளக்கப்பதிவு போட்டுக்கிட்டு இருக்கார்.

said...

//ரொம்ப கேப் இல்லாமல் உப்புமா சாப்பிட்டால் கேஸ் பார்ம் ஆகாது. அதனால கேப் இருக்கும் இடங்களில் வெள்ளெழுத்துக்காரர்கள் கண்ணாடி போட்டுக் கொண்டு படிக்கவும்.//

என்னடா இதுனு யோசிக்கவேயில்லை... இப்ப தான் புரியுது... எங்கயோ போயிட்டீங்க

said...

//நாகை சிவா said...

சரி மொக்கை பதில் வேண்டாம், ஆனா படைப்பாளி என்று ரஜினி படம் ஏதும் வந்துச்சா என்ன? //

புலி,
உழைப்பாளி வந்துச்சு, படையப்பா வந்துச்சு. ரெண்டையும் சேர்த்து படைப்பாளினு அடுத்து ஒரு படம் வரலாம் ;)

said...

எங்க என் பின்னூட்டம் எல்லாம்???

எல்லாம் வெள்ளெழுத்தா மாறிடுச்சா?

said...

புதிய பதிவில் பின்னுட்டம் இட முடியவில்லை...:(

said...

//வரலையா? நார்மலா அவரு படம்தான் உழைப்பாளி, தொழிலாளி, படைப்பாளின்னு வரும். அதான் ஒரு குன்ஸா சொல்லிட்டேன்.//

மறுபடியும் தப்பு... ரஜினியை சீண்டி பாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது தெளிவாக புரிகிறது... ஆனா மக்கா எல்லாம் சிவாஜி டிரெயலர் பாத்துட்டு வெறிக் கொண்டு இருக்கோம்... சீண்டினா சிதைஞ்சு போயிடுவிங்க சொல்லிட்டேன்...

உழைப்பாளி மட்டும் தான் அவரு நடிச்ச படம். தொழிலாளி மக்கள் திலகம் என்று நினைக்குறேன். படைப்பாளி னு இன்னும் படமே வரல்...

said...

படைப்பாளி ரஜினி படமாச்சே

said...

படைப்பாளி என்பது பெண்களை மட்டும் குறிக்கும் சொல்லா!?

(லாகின் பண்ண சோம்பேறித்தனமா இல்ல :)

said...

//வீ ஆர் கமல் ஃபேன்ஸ் யூ சீ!! //

பழைய மொக்கை தான் வேற வழியில்ல....

ஒ... எங்க வீட்டுல எல்லாம் கிராம்டன் பேன்ஸ் தான் இப்ப. முன்ன கேத்தான் பேன்ஸ்.... ஆனா எப்பவும் உஷா பேன்ஸ் இல்ல.... ;-)

said...

நாங்க பதிவை படிக்க மாட்டோமினு தெறிய வேணாமா இகொ அந்த மேட்டர இதுலையே போடுறது

:)

said...

மக்களே, அந்த பதிவில் பார்மேட்டிங் பிரச்சனைகள் இல்லை. வெள்ளைக் கலரில் சில பத்திகள் எழுதப் பட்டுள்ளன. முழு பதிவையும் ஹைலைட் செய்தீர்களானால் அந்த எழுத்துகள் தெரியும். பெனாத்தலாரின் குறிப்புகள் அவை. படித்து மகிழுங்கள்.
///

இதை வெள்ளை கலரில் எழுதியிருந்தால் இன்னும் சூப்பராயிருந்து இருக்கும்...:)

said...

//(லாகின் பண்ண சோம்பேறித்தனமா இல்ல :)//

யூ டூ பாபா...

said...

//படைப்பாளி ரஜினி படமாச்சே //

எப்போல இருந்து.... பா.பா நீங்களுமா....

said...

//எப்படியோ பண்ணி சாப்பிட்டா சரி. பெனாத்தலாரின் குறிப்புகள் வேண்டாமா?
//

நாங்களாம் ஹார்ம்லெஸ் உப்புமா தான் :D :D

said...

"பிகஸ"

அதாவது "பின்னூட்ட கயமை ஸக்ரவர்த்தி" என்ற பெரும் புலமைப்பட்டம் பெ.மு.க
(பெருசுகள் முன்னேற்றக் கழகம் )
சார்பாக வழங்கப்படுகிறது.

said...

ஆக, அவல் உப்புமாவுக்குதானா 105 கமெண்டு.. நீர் மட்டும் என் பதிவு உப்புமாவை கருப்பிலே போட்டிருந்தா 210 இப்பவே ஆயிருக்கும் இல்ல?

(210 என்ன.. ஓரு கோடிங் போட்டா 1005 கூட ஆயிருக்கும்:-)

வெள்ளெழுத்துக்களை பாராட்டிய நண்பர்களுக்கு (மட்டும்) நன்றி.

said...

இப்போதான் தெரியுது கொத்ஸ் நீங்கதான் அந்தக் கோட் லாங்குவேஜ் டெவலப் செய்தவரா.

ஹ்ம்ம். ஒரே பதிவுக்கு இரண்டு பின்னூட்டங்களா.

இதுதெரியாம கண்ணாடி,முன்னாடி,பின்னாடினு
உப்புமா உளறல் செய்திட்டோமே.
நல்ல மணமான பதிவு.

said...

அடுத்து நட்சத்திர இட்லிவடை எப்படி பண்றதுன்னும் ஒரு பதிவு போட்டிங்கன்னா உபயோகமா இருக்கும்.

said...

---யூ டூ பாபா...---

டூ டைம்ஸ் பா வருதில்ல...

said...

---/படைப்பாளி ரஜினி படமாச்சே //

எப்போல இருந்து.... பா.பா நீங்களுமா....---

தலைப்பபைப் பார்த்தால் தங்கர் பச்சான் நெறியாள்கைக்கு உகந்ததாகப் படுகிறது.

said...

கிண்டிய உப்புமா சுவையோ சுவை!!

said...

உப்பிட்டவரை உள்ளளவும் நெனைக்கனும். இப்பிடி உப்புமாப் பதிவிட்டவரை...மயிலாரே..ஓடியாங்க...கொஞ்சம் என்னன்னு கேளுங்க!

said...

நாங்கெல்லம் உசாரா Ctl + A அமுக்கி புல்லா படிச்சிட்டோமில்ல.... :)

said...

இம்மாதிரியான அறிவார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய பதிவை உப்புமா பதிவு'ன்னு சொல்லாடல் செய்யும் கொத்ஸை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

said...

//வெள்ளெழுத்துக்களை பாராட்டிய நண்பர்களுக்கு (மட்டும்) நன்றி.//

அப்போ சரி...


பதிவு'க்கு உதவிய பினாத்தலர் வாழ்க! வாழ்க!!

said...

படிச்சுட்டுத் தான் "இரவல்" அல்லது "கோஸ்ட் ரைட்டர்" வச்சுட்டு இத்தனை பின்னூட்டமான்னு மிளகாயைக் கடிச்சுட்டுப் போனேன். நறநறநற, அது புரியாம இன்னொரு பதிவு போட்டு அதுக்குப் பின்னூட்டமும் இங்கேயா? எல்லாம் தலை எழுத்து! கமல் பேரைப் பார்த்துட்டு வந்தது என் தப்பு! :P

said...

உப்புமா கிண்டுவதன் அடிப்படை விதிகளை அளித்த உமக்கும், கிண்டுவதையய தொழிலாய்க் கொண்ட பெனாத்தலாருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!

said...

என்ன தல,

நேத்து உப்புமா பதிவே போட்டுட்டு, இண்டைக்கு அதுக்கு லின்க் குடுக்கிறத ஒரு பதிவா போட்டு ஒப்பேத்தீடீங்க!! இந்த ட்ரிக் எல்லாம் எங்களுக்கு டிப்ஸா கொடுக்க மாட்டிங்களா? நாலு நாள் நல்லா இருங்க சாமி!!

said...

எப்படியோ 'கமல் ரேஞ்சு'க்கு உயர்ந்தாச்சு.

'எல்லா'க் காட்சிகளும் உண்டுதானே?

நல்லா இருங்கப்பூ, நல்லா இருங்க.

ஃபார்முலாப் படக் குறிப்புலே ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சா?

அந்த அஞ்சு பாடல்களிலே மூணு வெளிநாடு( நியூஸி?)களில் எடுக்கணும், ஆமா:-)


ஆமாம். கமல் படமுன்னு இப்பச் சொல்லிட்டு, பதிவில்
தில்லானா மோகனாம்பாளா ஆனது...:-))))))))

said...

வீட்லே காலைல சுட்ட இட்லி மீந்து போனா அத பூ மாதிரி உதிர்த்து கடலைப்பருப்பு,கடுகு,
உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,வெங்காயம்,வரமிளகாய் எல்லாம் போட்டு தாளிச்சு, ஒரு தட்ல
போட்டுகிட்டு ,அப்படியே ஒரு காஃபிய சூடா பக்கத்துல வெச்சுகிட்டு ,இருங்க சிட்சுவேஷன் சொல்றேன்.
நல்லா மழை பேஞ்சு இல்லாட்டி ஜோ ன்னு பேஞ்சுகிட்டு இருக்கிற வேளையில , சாயந்திர நேரத்தில ஜன்னல்
ஓரமா நின்னுகிட்டே சாப்பிடுற இந்த ஐட்டத்துக்கு பேர்தான் விட்டேனா பார்.
இட்லி உப்புமா ன்னு கூட சொல்வாங்க
பேருக்கு ஏத்தா மாதிரி எவ்வளவு இருந்தாலும் பத்தாதுங்க.

said...

//அதன் பின் "வெட்டி" வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாகக் கிளறவும்//

இது அநியாயம்!
எங்க சங்கத்தின் சிங்கம், தல சிறந்த பதிவர்...வெட்டி காரு அவர்களை எப்படி நீங்க வெங்காயம் வைக்கச் சொல்லலாம்?

வெட்டி...நீங்க ஏன் போயும் போயும் வெங்காயம் வைச்சீங்க! :-)

said...

உப்பு(மா) பெறாத மேட்டருக்கு இவ்வளவு பின்னூட்டமா? தாங்காதுடா சாமி..

said...

என்னதான் உப்புமா பதிவாக இருந்தாலும், பின் நவீனத்துவம், சாதி/மதச்சண்டை, பெரியாரியல், தனி மனித தாக்குதல் போன்ற பதிவுகளை விட இது எவ்வளவோ மேல்(கண்டிப்பாக வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை)

said...

//அப்படியே கம்ப்யூட்டர் முன்னாடி காலை வைங்க.. இங்க இருந்தே தொட்டு கும்பிட்டுக்கறேன்...//

யப்பா ராசா, எழுந்திரு. இப்போ எல்லாம் காலில் விழுந்தாலும் தப்பு, விழலைன்னாலும் தப்பு. என்ன செய்யணமுன்னே தெரியலை. அதனால கொஞ்சம் பார்த்து நடந்துக்கப்பா.

said...

//எங்கயேயும் போகல, சும்மா ஆபிஸ்ல தேமமேனு வர்கார்ந்துட்டு போட்ட ஒரு உப்புமா பதிவுக்கு ஒரு விளக்கப்பதிவு போட்டுக்கிட்டு இருக்கார்.//

அதானே. உங்களை எல்லாம் படுத்தாம இருக்கணமுன்னு நான் எங்கயாவது போகணமுன்னு ஆசையா? அவ்வளவு சீக்கிரம் எல்லாம் போக மாட்டேன். ஆமா!!

said...

//என்னடா இதுனு யோசிக்கவேயில்லை... இப்ப தான் புரியுது... எங்கயோ போயிட்டீங்க//

யோவ் என்ன திரும்ப திரும்ப எங்கயோ அனுப்பறீரு. என்ன சதி நடக்குது? இருந்தாலும் இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீரே!!

said...

//புலி,
உழைப்பாளி வந்துச்சு, படையப்பா வந்துச்சு. ரெண்டையும் சேர்த்து படைப்பாளினு அடுத்து ஒரு படம் வரலாம் ;)//

அதானே. இதெல்லாம் கூட புரியாம, பேரு மட்டும் புலியாம் புலி!! :))

காப்பாத்துனதுக்கு டாங்க்ஸ் தல!

said...

//எங்க என் பின்னூட்டம் எல்லாம்???

எல்லாம் வெள்ளெழுத்தா மாறிடுச்சா?//

முதலில் சொன்னாப் புரியலை. இப்போ இதுக்கெல்லாம் மட்டும் வந்திடுங்க. :)

said...

//புதிய பதிவில் பின்னுட்டம் இட முடியவில்லை...:(//

மின்னல், பதிவைப் படித்தால் காரணம் புரியும். இப்படிப் பதிவைப் படிக்கவே மாட்டேன்னு அடம் புடிச்சா எப்படி?

said...

//மறுபடியும் தப்பு... ரஜினியை சீண்டி பாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது தெளிவாக புரிகிறது... ஆனா மக்கா எல்லாம் சிவாஜி டிரெயலர் பாத்துட்டு வெறிக் கொண்டு இருக்கோம்... சீண்டினா சிதைஞ்சு போயிடுவிங்க சொல்லிட்டேன்...//

அடுத்த படம் பாருங்க.

//உழைப்பாளி மட்டும் தான் அவரு நடிச்ச படம். தொழிலாளி மக்கள் திலகம் என்று நினைக்குறேன். படைப்பாளி னு இன்னும் படமே வரல்...//

வெட்டி சொன்னதைப் பாருங்க. ;-)

said...

//படைப்பாளி ரஜினி படமாச்சே//

பாபா :))))

said...

//படைப்பாளி என்பது பெண்களை மட்டும் குறிக்கும் சொல்லா!?

(லாகின் பண்ண சோம்பேறித்தனமா இல்ல :)//

பாபா - என் வாயில் அனாவசியமாக வார்த்தைகள் போட்டு ஆணாதிக்கவாதி, அது இதுன்னு முத்திரை வாங்க வைக்காதீங்க.

மீண்டும் :))))

said...

//
ஒ... எங்க வீட்டுல எல்லாம் கிராம்டன் பேன்ஸ் தான் இப்ப. முன்ன கேத்தான் பேன்ஸ்.... ஆனா எப்பவும் உஷா பேன்ஸ் இல்ல.... ;-)//

உஷாக்கா மீண்டும் பதிவு போட யத்தனிக்கும் நேரத்தில் இது போன்ற விஷமத்தனமான பின்னூட்டங்கள் போடும் புலியை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

said...

//நாங்க பதிவை படிக்க மாட்டோமினு தெறிய வேணாமா இகொ அந்த மேட்டர இதுலையே போடுறது

:)//

அடடா. பதிவு எண்ணிக்கை உயர்த்துவது எப்படி என்ற பாடத்துக்கு நீங்க வரவே இல்லை போல இருக்கே. இல்லை வந்து அங்கயும் பதிவைப் படிக்கலையா? ;)

said...

//இதை வெள்ளை கலரில் எழுதியிருந்தால் இன்னும் சூப்பராயிருந்து இருக்கும்...:)//

இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. எழுதினதைப் படிக்க ஆளைக் காணும். இப்போ இதை வேற அப்படி எழுதணுமாம். நினைக்க நினைக்க ஆத்திரமா வருது.....

said...

//யூ டூ பாபா...//

பாபா, என் சந்தேகம் சரிதானா? நீங்கள் ஒருவர் இல்லையா? இருவர் இருக்கும் குழுமமா?

said...

//எப்போல இருந்து.... பா.பா நீங்களுமா....//

பாபாவே சொல்லிட்டாரு. நீர் என்ன பெரிய இவரா?

பாபா, சூப்பரா ரெண்டு சுட்டி குடுங்க பாபா!

said...

//நாங்களாம் ஹார்ம்லெஸ் உப்புமா தான் :D :D//

அதான் உங்க முதல் பின்னூட்டம் பார்த்தாலே தெரிஞ்சுதே!!

said...

//அதாவது "பின்னூட்ட கயமை ஸக்ரவர்த்தி" என்ற பெரும் புலமைப்பட்டம் பெ.மு.க
(பெருசுகள் முன்னேற்றக் கழகம் )
சார்பாக வழங்கப்படுகிறது.//

யோவ் அது ஸ்க்ரவர்த்தியும் கிடையாது சக்கவரட்டியும் கிடையாது. சக்ரவர்த்தி. பட்டம் குடுக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஷ்டேக் எல்லாம் சரி பண்ணக்கூடாதா?

said...

//ஆக, அவல் உப்புமாவுக்குதானா 105 கமெண்டு.. நீர் மட்டும் என் பதிவு உப்புமாவை கருப்பிலே போட்டிருந்தா 210 இப்பவே ஆயிருக்கும் இல்ல?//

மிஸ்டர், உமக்கு பின்னூட்டத்தைப் பத்தி தெரியாதுன்னு இப்படி பப்ளிக்கா வந்து சொல்லணுமா? இப்போ புரிஞ்சு ஒண்ணு, புரியாம ஒண்ணுன்னு ஆளுக்கு ரெண்டு பின்னூட்டம் அதுக்கு ரெண்டு பதில் அப்படின்னு நடக்குது. உம்ம குறிப்பை கருப்பில் போட்டா அதுல சரி பாதிதான் வந்திருக்கும். இதெல்லாம் ஒரு டெக்னிக். உமக்கு புரியாதய்யா புரியாது.

//(210 என்ன.. ஓரு கோடிங் போட்டா 1005 கூட ஆயிருக்கும்:-)//

நாங்க எல்லாம் ஒரு கோடு போட்டுக் குடுத்தா ரோடே போட மாட்டோம். போனாப் போகுதுன்னு பார்த்தா.....

//வெள்ளெழுத்துக்களை பாராட்டிய நண்பர்களுக்கு (மட்டும்) நன்றி.//

இப்படி மத்தவங்களுக்குச் சொல்லாம alienate பண்ணிக்குங்க. அப்புறம் பின்னூட்டமே வரதில்லை அப்படின்னு அழுங்க. இதே வேலையாப் போச்சு!!

said...

//இப்போதான் தெரியுது கொத்ஸ் நீங்கதான் அந்தக் கோட் லாங்குவேஜ் டெவலப் செய்தவரா.//

இதெல்லாம் html code அப்படின்னு நினைக்கறேன். நாம இதெல்லாம் டெவலெப் செய்யறது இல்லை!!

//ஹ்ம்ம். ஒரே பதிவுக்கு இரண்டு பின்னூட்டங்களா.//

இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலை?!!

// இதுதெரியாம கண்ணாடி,முன்னாடி,பின்னாடினு
உப்புமா உளறல் செய்திட்டோமே.//

அதெல்லாம் புதுசா? அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போக வேண்டியதுதான்.

//நல்ல மணமான பதிவு.//
நன்றி வல்லியம்மா!!

said...

//அடுத்து நட்சத்திர இட்லிவடை எப்படி பண்றதுன்னும் ஒரு பதிவு போட்டிங்கன்னா உபயோகமா இருக்கும்.//

நாம உப்புமா போட்டாச்சு இல்ல அடுத்து வரவங்க இட்லி, வடை, பொங்கல் எல்லாம் போடுவாங்க. யூ நோ வொர்ரி!!

said...

//.

---யூ டூ பாபா...---

டூ டைம்ஸ் பா வருதில்ல...
//

ஆமாம்ப்பா பாபா. (இப்போ மூணு வாட்டி வருதே!! :))

said...

//தலைப்பபைப் பார்த்தால் தங்கர் பச்சான் நெறியாள்கைக்கு உகந்ததாகப் படுகிறது.//

பாபா, வர வர ரொம்பத்தான் திட்டறீங்க. நெறியாள்கை அப்படின்னா என்ன? நெறி கட்டியவரின் கை எனப் பொருளா?

said...

//கிண்டிய உப்புமா சுவையோ சுவை!!//

நன்றி இரவி. முதல் லேயரைச் சொல்லறீங்களா? இல்லை இரண்டாவது லேயருக்கும் சேர்த்தா?

said...

//உப்பிட்டவரை உள்ளளவும் நெனைக்கனும். இப்பிடி உப்புமாப் பதிவிட்டவரை...மயிலாரே..ஓடியாங்க...கொஞ்சம் என்னன்னு கேளுங்க!//

மயிலாரா? ஐய்யோ பயமா இருக்கே!! ஜிரா அவரு என்ன சொல்லறாருன்னு நீங்களே கேட்டுச் சொல்லுங்க.

said...

//நாங்கெல்லம் உசாரா Ctl + A அமுக்கி புல்லா படிச்சிட்டோமில்ல.... :)//

நீர்தான்யா புத்திசாலி. ஆனாலும் எல்லாத்தையும் நான் சொன்ன பின்னாடி வந்து இப்படிச் சொல்லறீரு பாரும். அங்கதான்யா நிக்கறீரு.

said...

//இம்மாதிரியான அறிவார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய பதிவை உப்புமா பதிவு'ன்னு சொல்லாடல் செய்யும் கொத்ஸை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....//

அறிவார்ந்த பதிவுன்னு சொன்னா வந்து படிப்பீங்களா? அதான் அப்படி எல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு.

said...

//
அப்போ சரி...


பதிவு'க்கு உதவிய பினாத்தலர் வாழ்க! வாழ்க!!//

மா உப்புமாமா வாழ்க!! வாழ்க!!

said...

//படிச்சுட்டுத் தான் "இரவல்" அல்லது "கோஸ்ட் ரைட்டர்" வச்சுட்டு இத்தனை பின்னூட்டமான்னு மிளகாயைக் கடிச்சுட்டுப் போனேன். நறநறநற, அது புரியாம இன்னொரு பதிவு போட்டு அதுக்குப் பின்னூட்டமும் இங்கேயா? எல்லாம் தலை எழுத்து! கமல் பேரைப் பார்த்துட்டு வந்தது என் தப்பு! :P//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாம்மா!! :))))

said...

//உப்புமா கிண்டுவதன் அடிப்படை விதிகளை அளித்த உமக்கும், கிண்டுவதையய தொழிலாய்க் கொண்ட பெனாத்தலாருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!//

இதெல்லாம் சரி. ஆள் எங்க அப்ஸ்காண்ட் ஆகிட்டீரு? உம்ம போக்கே சரி இல்லையே....

said...

//நேத்து உப்புமா பதிவே போட்டுட்டு, இண்டைக்கு அதுக்கு லின்க் குடுக்கிறத ஒரு பதிவா போட்டு ஒப்பேத்தீடீங்க!! இந்த ட்ரிக் எல்லாம் எங்களுக்கு டிப்ஸா கொடுக்க மாட்டிங்களா? நாலு நாள் நல்லா இருங்க சாமி!!//

இதாங்க பிராக்டிகல் கிளாஸ். வந்து ஒழுங்கா படியுங்க. எழுதுங்க. பாசாகுங்க. புரியுதா?

said...

//எப்படியோ 'கமல் ரேஞ்சு'க்கு உயர்ந்தாச்சு.//

அவரு என்ன விட குள்ளம் டீச்சர்.

//'எல்லா'க் காட்சிகளும் உண்டுதானே?//

சின்னப் பசங்க இருக்கிற கிளாசில் ஒரு டீச்சர் பேசற பேச்சா இது??

//நல்லா இருங்கப்பூ, நல்லா இருங்க.//

எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் டீச்சர்.

//ஃபார்முலாப் படக் குறிப்புலே ஒண்ணு சொல்ல விட்டுப்போச்சா?

அந்த அஞ்சு பாடல்களிலே மூணு வெளிநாடு( நியூஸி?)களில் எடுக்கணும், ஆமா:-)//

நியூசிலாந்தின் மார்க்கெட்டிங் மினிஸ்டர், புரட்சிச் செல்வம், அண்ணி வாழ்க!!


//ஆமாம். கமல் படமுன்னு இப்பச் சொல்லிட்டு, பதிவில்
தில்லானா மோகனாம்பாளா ஆனது...:-))))))))//

அவரும் பெரீய்ய்ய ஆக்டரு, இவரும் பெரீய்ய்ய ஆக்டரு. அதான் கனெக்க்ஷன். விடுவீங்களா....

said...

//வீட்லே காலைல சுட்ட இட்லி மீந்து போனா அத பூ மாதிரி உதிர்த்து கடலைப்பருப்பு,கடுகு,
உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,வெங்காயம்,வரமிளகாய் எல்லாம் போட்டு தாளிச்சு, ஒரு தட்ல
போட்டுகிட்டு ,அப்படியே ஒரு காஃபிய சூடா பக்கத்துல வெச்சுகிட்டு ,இருங்க சிட்சுவேஷன் சொல்றேன்.
நல்லா மழை பேஞ்சு இல்லாட்டி ஜோ ன்னு பேஞ்சுகிட்டு இருக்கிற வேளையில , சாயந்திர நேரத்தில ஜன்னல்
ஓரமா நின்னுகிட்டே சாப்பிடுற இந்த ஐட்டத்துக்கு பேர்தான் விட்டேனா பார்.
இட்லி உப்புமா ன்னு கூட சொல்வாங்க
பேருக்கு ஏத்தா மாதிரி எவ்வளவு இருந்தாலும் பத்தாதுங்க.//

யோவ் பெருசு, ஒரு பதிவு போட வேண்டிய மேட்டரை இப்படி வேஸ்ட் பண்ணிட்டயேய்யா. உனக்கு எப்பதான் பதிவு கயமைத்தனம் கிளாஸில் பாஸ் மார்க் போடப் போறேனோ தெரியலை.

போயி கடைசி பெஞ்சில் உக்கார்ந்துக்கோ போ!! :))

said...

//இது அநியாயம்!
எங்க சங்கத்தின் சிங்கம், தல சிறந்த பதிவர்...வெட்டி காரு அவர்களை எப்படி நீங்க வெங்காயம் வைக்கச் சொல்லலாம்?

வெட்டி...நீங்க ஏன் போயும் போயும் வெங்காயம் வைச்சீங்க! :-)//

அவருதான் ஏற்கனவே ஒரு பெரியார் பதிவு போட்டு இருக்காரே. அதைத்தான் சொன்னேன். அதுவும் காரசாரமா இருந்துதா அதான் வெங்காயமும் பச்சை மிளகாயும் அப்படின்னு சொன்னேன்.

ஸ்ஸ்ஸ் அப்பாடா. இப்பவே கண்ணைக் கட்டுதே... :))

said...

//உப்பு(மா) பெறாத மேட்டருக்கு இவ்வளவு பின்னூட்டமா? தாங்காதுடா சாமி..//

வாங்க கிஸ்மோ ப்ரீக். இது உப்பு(மா) பெறாத விஷயமா? நல்லா ஆழ்ந்து படிச்சீங்களா? :))

said...

//என்னதான் உப்புமா பதிவாக இருந்தாலும், பின் நவீனத்துவம், சாதி/மதச்சண்டை, பெரியாரியல், தனி மனித தாக்குதல் போன்ற பதிவுகளை விட இது எவ்வளவோ மேல்(கண்டிப்பாக வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை)//

ரொம்ப நன்றி தலைவா!!

said...

>>வாங்க கிஸ்மோ ப்ரீக். இது >>உப்பு(மா) பெறாத விஷயமா? >>நல்லா ஆழ்ந்து படிச்சீங்களா? :)

இரண்டாவது தடவை படிக்கும் போதுதான் , முழுசா புரியுது. (with Ctrl+A)

said...

//இரண்டாவது தடவை படிக்கும் போதுதான் , முழுசா புரியுது. (with Ctrl+A)//

இப்போ சொல்லுங்க, என்ன சொல்லப் போறீங்க? :))

said...

அடப்பாவி இலவசம், 157 பின்னுட்டம் காட்டுது. குன்சாவா எண்ணினா 79 பின்னுட்டம் உன்னுது.

said...

உஷாக்கா குன்சாவா? சரியாத்தான் எண்ணி இருக்கீங்க. அதாவது வர பின்னூட்டத்து எல்லாம் பதில் சொல்லறோம், அப்புறம் முதல் பின்னூட்டம் நம்மளுது. அதனால 80 பின்னூட்டம் வந்தா, நம்ம பதில் 80 ப்ளஸ் முதல் பின்னூட்டம். ஆக மொத்தம் 80+80+1 = 161.

கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வரும்!! :)))