Tuesday, May 01, 2007

நியூஜெர்ஸி பதிவர் சந்திப்பு - ஊடக விமர்சனங்கள்

எல்லாமே தலை கீழா நடக்குது.

எந்த ஒரு விஷயமானாலும் நாம எல்லாம் மாங்கு மாங்குன்னு பதிவு போடுவோம். நம்ம பாபா வந்து அப்படியே அதை ஒரு லிங்க் குடுத்து ஸ்னாப்ஜட்ஜ், கில்லி அப்படின்னு இணைச்சுட்டுப் போயிடுவாரு.

ஆனா பாருங்க, நியூஜெர்ஸி சந்திப்பு முடிஞ்ச கையோட பொட்டிய தூக்கிட்டு கிளம்ப வேண்டியதாப் போச்சு. அதனால அதைப் பத்தி நம்மளால ஒரு பதிவு போட முடியலை. கலந்துக் கிட்ட எல்லாரையும் அவங்க பார்வையில் சந்திப்பு குறித்த பதிவு போடச் சொல்லியாச்சு. அதன் படி முதன் முதலா பதிவு போட்டது நம்ம பாபாதான்! அதனால

(எப்படி ஏற்ற இறக்கத்தோட கத்திப் படிக்கோணமுன்னு தெரியுமில்ல!)
இதனைத் தொடர்ந்து மற்ற பதிவர்கள் சந்திப்பு பற்றி எழுதியவுடன் அவர்களது பதிவுக்கான உரல்களையும் இங்கு இணைத்து விடலாம். அது எல்லாரையும் போய்ச் சேர அவ்வப்பொழுது தேவையான பதிவு மற்றும் பின்னூட்டக் கயமைத்தனங்களையும் சரியாகச் செய்து விடலாம்.

ஸ்டார்ட் மியூஜிக்!!

(இது ஏன் வெட்டிப்பயலின் பதிவில் வந்தது? கே.ஆர்.எஸ்.சும் வெட்டியும் ஒருவரேதானா என்ற கேள்வி எல்லாம் கேட்கக் கூடாதாம். )

தென்றல் அவர்களின் பார்வையில்
(நீங்களும் க்ரீம் பிஸ்கட்டை விட்டுட்டீங்களே!)


வெட்டி அவர்கள் எழுதும் தொடரின் முதல் பகுதி

வெட்டி அவர்கள் எழுதும் தொடரின் இரண்டாம் பகுதி

(ஜாமூனை பற்றி சந்திப்பின் போது சொல்லாதது ஏன்?)

25 comments:

said...

//தமிழ்ப் பதிவுலகில் முதன் முறையாக பாபா பதிவெழுத, அதற்கு இலவசத்தில் சுட்டி!! //

தமிழ்ப் பதிவுலகில் இதுக்கு முன்னாடி பாபா எழுதினதே இல்லையா அப்படின்னு சின்னப்பிள்ளைத்தனமான கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது. சொல்லிட்டேன்!! :))

மத்த பதிவர்களும் பதிவு போட்ட உடனே கொஞ்சம் தெரியப் படுத்திடுங்கப்பா.

(இதுக்கும் அப்போ இவ்வளவு நேரம் படுத்தினது தெரியலையா என்ற கேள்வி அவுட் ஆப் சிலபஸ்!)

said...

இது மாதிரி கேள்வி வரக்கூடாதுன்னா, "முதன்முறையா" பக்கத்துல ஒரு [,] கமா போட்டிருக்கணும்.
அதை விட்டுட்டு மத்தவங்களைக் குறை சொன்ன எப்படி!
என்னமோ போங்க!
நல்லாருங்கப்பா!

said...

வணக்கம், கொத்ஸ்!

என்னடா நம்ம கலந்துகிட்ட 'சந்திப்பே' யாரும் ஒரு பதிவுகூட போடமாட்டேங்கிறாங்க-னு ரொம்ப "feelingஆ" இருந்தது...

ரொம்ப நன்றி-ங்கணோவ்வ்வ்வ்வ்! ;)

said...

//இது மாதிரி கேள்வி வரக்கூடாதுன்னா, "முதன்முறையா" பக்கத்துல ஒரு [,] கமா போட்டிருக்கணும்.//

அட என்னய்யா இவரு, விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பூன்னுக்கிட்டு.

அதான் 40க்கு மேல வந்தாலும் முகப்பில் வருமில்ல. இப்போ அந்த கமா போடாம நான் ஒரு திஸ்கி, நீர் ஒரு அறிவுரை, நான் ஒரு பதிலுன்னு போகுது இல்ல. அப்புறம் என்னத்துக்கு சரியா கமா எல்லாம் போட்டுக்கிட்டு.


முகப்பில் மாற்றம் செய்து நம்மை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு நம் நன்றிகள்!! :-))))

said...

யப்பா ராசா தென்றலு, சீக்கிரம் உம்ம பார்வையில் சந்திப்பைப் பற்றி பதிவு ஒண்ணு போடுமய்யா.

said...

//முகப்பில் மாற்றம் செய்து நம்மை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு நம் நன்றிகள்!! :-)))) //


இன்னொரு கேள்வியும் அவுட்!
:))

said...

sariyap pochu ponga padikalamnu vantha ippadiya ematharathu? :(

said...

கீதாம்மா,

என்ன கன்பியூஷன்? நம்ம பாபா எழுதின பதிவோட சுட்டி இருக்கு பாருங்க. அதை அப்படியே அமுக்கி அவரு பக்கமா போயி என்ன சொல்லி இருக்காருன்னு ஒரு எட்டு பாத்திட்டு வந்திடுங்க.

said...

சந்திப்பு நல்லா நடந்ததா?

வாழ்த்துக்கள்!

said...

இப்போ யார் இலவசக் கொத்தனார்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.
இப்போ இலவசத்தை தூக்கி போட வேண்டியதுதானே.

அதுசரி நியூயார்க்கின் தலையெழுத்தை புரட்டி போடறமாதிரி ஏதாவது முடிவு எடுத்தீங்களா? அல்லது தமிழ் வலைப்பதிவுகளை அடுத்தக் கட்டத்திற்கு நகத்த திட்டமிருக்கா?

என்னதான்யா பேசீனிங்க?

said...

சுட்டிக்கு நன்றி தலைவா :D

said...

ஆகா
பாபாவுக்கே ஸ்நாப் ஜட்ஜிங்கா....
நடத்துங்க நடத்துங்க!!

பாபா,
எதற்கும் கில்லியை நன்கு பூட்டி வைக்கவும்...

பதிவு ஹைஜாக்கிங் கேள்விப்பட்டுள்ளேன்!
ஒட்டு மொத்தமா Blog ஹைஜாக்கிங், இப்ப தான் கேள்விப்ப்டுகிறேன் சாமீ! :-)))

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்!:-))

said...

கொத்ஸ் ,
பதிவர் கூட்டம் நல்லபடியாக நடந்தது பற்றி சந்தோஷம்.
நாலு நாட்களாக ஊரில் இல்லை.

அதனால் மீட்டிங் போது உங்கள் எல்லோருடனும் பேச ஆசை இருந்தும்
முடியவில்லை.
வாழ்த்துக்கள்.

said...

பதிவுக்கு நன்றி. என்ன நடந்ததுன்னு நானே கேட்க நினைத்தேன்.

said...

ஜெயஸ்ரீ, வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கதான் வர முடியாமப் போச்சு. அடுத்து முறையாவது கட்டாயம் வாங்க.

said...

//இப்போ யார் இலவசக் கொத்தனார்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி.
இப்போ இலவசத்தை தூக்கி போட வேண்டியதுதானே.//

சிவாண்ணா, நம்மளை தெரிஞ்சவங்க எல்லாம் சேர்ந்து நம்மளைத் தூக்கிப் போடச் சொல்லிச் சொல்லறீங்களா? :))

//என்னதான்யா பேசீனிங்க?//

அடுத்து வந்திருக்கும் ரெண்டு பதிவுகளைப் பாருங்க. மேலும் பதிவுகள் வரும். :)

said...

//சுட்டிக்கு நன்றி தலைவா :D//

நாகரிகம்? பண்பாடு?

அப்போ இனிமே நாங்க எல்லாரும் நீங்க சுட்டி குடுக்கும் போது எல்லாம் நன்னி சொல்லணும்?

பாபா, இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலை? :))

said...

//ஆகா
பாபாவுக்கே ஸ்நாப் ஜட்ஜிங்கா....
நடத்துங்க நடத்துங்க!!//

அதாவது நம்ம பேரை சாமி அப்படின்னு மாத்திக்கச் சொல்லறீங்க.

அப்போதானே

திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலைக் கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா ன்னு பாட முடியும். ஆனா அடுத்த வரி

இருட்டுக்கடை அல்வாடா இட்லிக் கடை ஆயாடான்னு வருது. அப்புறம் நாமதான் அதுவுமான்னு ஒரு கதை கட்டி விட்டீங்கன்னா? அதான் கொஞ்சம் ரென்சனா இருக்கு!! :))

said...

//பாபா,
எதற்கும் கில்லியை நன்கு பூட்டி வைக்கவும்...//

எல்லாரும் நல்ல பதிவுகள் என்ன என்ன எனப் பார்க்க வரும் கில்லியைப் பூட்டச் சொல்வது ஏன்? அனைவரும்(!) வந்து போவது பிடிக்கவில்லையா?

//பதிவு ஹைஜாக்கிங் கேள்விப்பட்டுள்ளேன்!
ஒட்டு மொத்தமா Blog ஹைஜாக்கிங், இப்ப தான் கேள்விப்ப்டுகிறேன் சாமீ! :-)))//

யாரு எங்க என்ன செஞ்சாங்க? கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க. நாங்களும் சாக்கிரதையா இருப்போமில்ல!! :))

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ்!:-))///

நன்றி அபி அப்பா!! உங்க கிடேசன் பார்க் மீட்டிங் ஏப்ரல் 31ஆம் தேதி எப்படிப் போச்சு? பதிவு ஒண்ணும் காணுமே!! :))

said...

//நாலு நாட்களாக ஊரில் இல்லை.//

அதான் நீங்க ஒரு பெரீய்ய்ய்ய மலை அதுல ஒரு சின்ன குழி அப்படின்னு பார்க்கப் போயிட்டீங்களே!!

அங்க ஆறும் அது ஆழமில்லை, அது ஓடும் இந்த பள்ளமும் ஆழமில்லை ஆழம் அது ஐயா, இந்த வல்லி மனசுதான்யா அப்படின்னு பாட்டு எல்லாம் கிளம்புச்சாமே!! :))

நல்ல இடத்துக்குத்தான் போயிட்டு வந்திருக்கீங்க. போட்டோ எல்லாம் போட்டு பதிவு போடுங்க.

said...

//பதிவுக்கு நன்றி. என்ன நடந்ததுன்னு நானே கேட்க நினைத்தேன்.//

மொக்கை போட இப்படி மேட்டர் கிடைச்சு இருக்கு, சும்மா விடுவோமா? :))

said...

//திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலைக் கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா//

கொத்ஸ்
நன்றி தலைவா!
பாலாஜி...அடுத்த கண்ணன் பாட்டு ரெடி! :-)

//எல்லாரும் நல்ல பதிவுகள் என்ன என்ன எனப் பார்க்க வரும் கில்லியைப் பூட்டச் சொல்வது ஏன்?//

Snapjudgeஐ அவரிடம் இருந்து ஹைஜாக் செய்தீங்க-ல?
கில்லியாச்சும் அவர் கிட்டயே இருக்கட்டும்!
அதான் பத்திரமாய்ப் பூட்டிக், காட்சிக்கும் கருத்துக்கும் மட்டும் வைக்கவும் என்று சொன்னேன். :-)

இந்நேரம் பாபா செய்ய வேண்டியதைச் செய்து 128 bit security போட்டிருப்பார்...
கொத்தனார் ஹைஜாக்குக்கு
இரட்டைப் பூட்டு! :-))

said...

கே.ஆர்.எஸ், தென்றல் மற்றும் வெட்டியின் பதிவுகளுக்கான சுட்டி இணைக்கப் பட்டுள்ளது.