Saturday, May 19, 2007

MXXIV - பெனாத்தலாரின் வா சிஜி கோட்

டிஸ்கி: இது ஒரு விளம்பரப் பதிவு. படிக்கப் பிடிக்காதவர்கள் இன்னும் சில நாட்களில் நேரடியாக பெனாத்தலார் பதிவுக்குப் போகலாம்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
என்ற வள்ளுவர் வாக்கின் படி எண்ணும் எழுத்துமே ஒருவனின் இரு கண்களாக கருதப்படும் தமிழ் கூறும் நல்லுலகிலே இந்த எண்ணையும் எழுத்தையும் இணைத்து ஒரு புது வரலாறு படைக்க இருக்கிறார் நமது மின்னொளி மன்னன் பெனாத்தலார் அவர்கள். இது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

இதற்காக அவர் எடுத்துக் கொண்டிருக்கும் எண் 1024. அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த எண் சாதாரணமான எண் இல்லை. கணினித் துறையில் ஒரு முக்கியமான எண். 10 பைனரி ஸ்விட்சுகள் கொண்டு வைக்கக்கூடிய கணினி முகவரிகள் 1024. இதனால்தான் கணினியின் மெமரி 1024பைட் துண்டுகளால் அளக்கப்படுகிறது. பைனரியில் 1024 என்ற எண்ணை எழுத வேண்டுமானால் 10,00,00,00,000 என எழுத வேண்டும்.

இப்படிப் பட்ட 1024 என்ற எண்ணை வைத்து என்ன மாயம் செய்யப் போகிறார் நம் மின்னொளி மன்னன் எனப் பார்க்கலாமா. அதற்கு இன்னும் சில தினங்கள் காத்திருங்கள். அது வரை அவர் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைப் பின்னூட்டமாக போடுங்கள். சரியாக சொல்பவருக்கு ஒரு சர்'ப்ரைஸ்' இருக்கலாம்.

MXXIV - இது என்ன அப்படின்னு கேட்பவர்களுக்கு பதில் பின்னூட்டங்களில் வரும்.

அப்டேட் : பெனாத்தலாரின் 1024 பதிவு

25 comments:

said...

நம்ம விதியெல்லாம் மீறி இப்படி வாரயிறுதியில் போஸ்ட் போட விட்டுட்டாரே இந்த பெனாத்தலார்.....

said...

என்னனு தெறியல

ஃபிளாஷில் (சிவாஜி )படகாட்டுவாரோ
:)


MR.X

said...

பாசத்துக்காக கொள்கையைத் தளர்த்திய சிங்கமே, என் தங்கமே.. நீ வாழ்க!

மக்கள்ஸ்... மறந்துவிடாதீர் 1024!

said...

ஒன்னும் புரியலே கொத்ஸ். MXXIVனா ரோமன் நம்பர்ல 1024னு மட்டும் புரியுது :(

said...

எலேய்.. இப்படி எல்லாம் எழுதுனா பதில் போடுவோமாக்கும்.. போவியா வேலைய பாத்துப்புட்டு ( பதில் சொல்லிட்டு போ MXXIV அப்படின்னா என்னா ? ) இல்லாங்கட்டி ஊட்டாண்ட பிசாசினிய அனுப்பி கேக்க வைப்பேன்.. தோடா என்னா மொறைக்கிற... பேயடி கேள்வி பட்டிருக்கியா...

said...

என்ன சொல்றீங்கன்னே புரியலப்பா:0:)

said...

//என்னனு தெறியல//

என்ன இம்புட்டு கோவமா இருக்கீங்க? தெரியல அப்படின்னு ஜெண்டிலா சொன்னா போதாதா? அது என்ன அம்புட்டுக் கோவமா தெறியலன்னு தெறிக்கிறீங்க? :))

said...

//என்னனு தெறியல//

என்ன இம்புட்டு கோவமா இருக்கீங்க? தெரியல அப்படின்னு ஜெண்டிலா சொன்னா போதாதா? அது என்ன அம்புட்டுக் கோவமா தெறியலன்னு தெறிக்கிறீங்க? :))

ஞாயிறு காலையே இப்படித்தான் விடியனுமா!!
:-))

said...

அதுவும் புரியலை!
இதுவும் புரியலை!

என்னையாசொல்றீங்க!

கண்னைக் கட்டுதே!

:))

said...

நான் எப்ப வந்தாலும் 9 பேர் online இருக்கனுவோ என்னனு பாக்ககூடாதா..??


உங்களுக்கு ஒன்னும் ஆயிட கூடாதுங்கிற பாசந்தான்...:)

M

said...

//பாசத்துக்காக கொள்கையைத் தளர்த்திய சிங்கமே, என் தங்கமே.. நீ வாழ்க!//

கட்சிக்காக உயிரையும் விடுவேன் என சொல்லும் போது கேவலம் கொளுகை, அதைக்கூடவா விட்டுத்தர முடியாது!

said...

//ஒன்னும் புரியலே கொத்ஸ். MXXIVனா ரோமன் நம்பர்ல 1024னு மட்டும் புரியுது :(//

மணி, ரொம்ப வருத்தப் படாதீங்க. உங்களுக்குப் புரிஞ்ச இந்த மேட்டர் கூட நிறையா பேருக்குப் புரியலை.

MXXIVனா ரோமன் நம்பர்ல 1024!! இது மட்டும் நினைவில் இருக்கட்டும். பெனாத்தலார் ஆடும் 1024 விளையாட்டு என்னன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆமாம், அவருக்கு மின்னொளி மன்னன் அப்படின்னு பட்டம் குடுத்து இருக்கோமே. அது பத்தி ஒண்ணும் சொல்லக் காணும்?

said...

ஹிண்டு க்ராஸ்வேர்ட் மாதிரி சி,எல்,எக்ஸ் னு நம்பரைப் போட்டுக் கஷ்டப்படுத்தரீங்களே.
இதில பைனரி வேற.

நாங்கள் எல்லாம் கணக்குப் படிக்காமல் பாஸ் பண்ணவர்கள். ஆதலினால் நம்பர் விளையாட்டுப் புரியும்படி விளையாடவும்.:) :-) :)) :-))

said...

//MXXIV //

1024 ஐ ரோமன் எண்ணுருவில் எழுதி உள்ளீர்கள்!

:)

said...

//கட்சிக்காக உயிரையும் விடுவேன் என சொல்லும் போது கேவலம் கொளுகை, அதைக்கூடவா விட்டுத்தர முடியாது!
//

அதான!

said...

வாங்க பிசாசன் அண்ட் பிசாசனி,

//எலேய்.. இப்படி எல்லாம் எழுதுனா பதில் போடுவோமாக்கும்..//

அதான் போட்டுட்டீங்க இல்ல!!

//போவியா வேலைய பாத்துப்புட்டு ( பதில் சொல்லிட்டு போ MXXIV அப்படின்னா என்னா ? )//

நிறையா பேரு பதில் சொல்லியாச்சு பாருங்க.

//பேயடி கேள்வி பட்டிருக்கியா...//

எனக்கும் கல்யாணம் ஆயிருச்சு தெரியுமில்ல.. :))

said...

//என்ன சொல்றீங்கன்னே புரியலப்பா:0:)//

ரொம்ப கவலைப்படாதீங்க ஷைலஜா. பெனாத்தலாரின் லேட்டஸ்ட் பதிவுக்கு இது ஒரு விளம்பரம். அம்புட்டுதேன்.

said...

//ஞாயிறு காலையே இப்படித்தான் விடியனுமா!!
:-))//

அதானே! அதைக் கேட்க விட்டுட்டேனே குமார். இப்போ கேட்டுடறேன்.

ஞாயிறு காலையும் அதுவுமா ஏங்க அனானி அம்புட்டுக் கோவமா தெறிக்கறீங்க?

குமார், இப்போ ஓக்கேவா? :))

said...

//அதுவும் புரியலை!
இதுவும் புரியலை!

என்னையாசொல்றீங்க!

கண்னைக் கட்டுதே!

:))//

இதெல்லாம் சின்ன பசங்க மேட்டர் தல. புரியலைன்னா ரொம்ப டென்ஷனாவாதீங்க. :))

அதான் இப்போ பெனாத்தலார் பதிவே வந்தாச்சே. அக்கட சூடு.

said...

//நான் எப்ப வந்தாலும் 9 பேர் online இருக்கனுவோ என்னனு பாக்ககூடாதா..??//

அனானி, நான் பாக்கும் போது எல்லாம் 1 user online அப்படின்னுதான் காமிக்குது. இப்படி ஒண்ணை ஒம்போதாச் சொல்லறீங்களே! :))

ஆட்டோ, லாரி எல்லாம் போயி இப்போ கண்டெயினர் நிறையா பன்றி இல்ல அனுப்பறாங்களாம். பயமாத்தேன் இருக்கு.

said...

வாங்க வல்லியம்மா,

//ஹிண்டு க்ராஸ்வேர்ட் மாதிரி சி,எல்,எக்ஸ் னு நம்பரைப் போட்டுக் கஷ்டப்படுத்தரீங்களே.//

அதேதான் மேட்டர். ஒரு நம்பரின் ரோமன் நியூமரல்ஸ் அது, அம்புட்டுத்தேன். அந்த நம்பர் என்னான்னு கேட்டீங்கன்னா 1024. ஏன்னு கேட்டா பெனாத்தலாரைத்தான் கேட்கணும்.

//இதில பைனரி வேற.//

அதுவும் பைனரி 1024தாம்மா.

//நாங்கள் எல்லாம் கணக்குப் படிக்காமல் பாஸ் பண்ணவர்கள். //

பாஸ் அப்படின்னு சொன்னா நம்பிக்கறோம்.

//ஆதலினால் நம்பர் விளையாட்டுப் புரியும்படி விளையாடவும்.:) :-) :)) :-))//

ஓவர் டு பெனாத்தலார்.

said...

//1024 ஐ ரோமன் எண்ணுருவில் எழுதி உள்ளீர்கள்!

:)//

வாங்க சிபி, ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம்! வெல்கம் வெல்கம்!

ஆமாம் ரோமன் எண்ணுருதான். அதான் எல்லாம் சொல்லியாச்சே.

ஏன் என்ற கேள்விக்கு விடை பெனாத்தலார் பதிவில்.

said...

//கட்சிக்காக உயிரையும் விடுவேன் என சொல்லும் போது கேவலம் கொளுகை, அதைக்கூடவா விட்டுத்தர முடியாது!
//

அதான!//

அதானே!! :))

said...

அப்டேட் : பெனாத்தலாரின் 1024 பதிவுக்கான சுட்டி இணைக்கப்பட்டுள்ளது.

said...

இப்படி ஒரு உப்புமா பதிவு போட ஒரு வாய்ப்பு தந்து அதுக்கும் 25 கமெண்ட் வாங்கித் தந்த மின்னொளி மன்னன் பெனத்தலார் வாழ்க!!