Sunday, May 27, 2007

தமிழ்மணத்துக்கு ஏழு நாள் ஏழரை!!

எத்தனையோ பேர் வந்து நட்சத்திரமா ஜொலிச்சிட்டுப் போன இடத்தில் இந்த வாரம் நம்மளை நட்சத்திரமாகப் போட்டு இருக்காங்க. வேற யாருமே கிடைக்கலை போல. அதான் நம்ம பக்கம் எல்லாம் பார்வை திரும்பிடுச்சுன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தாக்கூட முன்ன ஒரு முறை செஞ்சா மாதிரி தமிழ்மணமே நட்சத்திரமாக இருந்திருக்கலாம். இப்போ வேலியில் போற ஓணானை மடியில் கட்டிக்கிட்ட மாதிரி நம்மளை இழுத்து விட்டு இருக்காங்க. ஏண்டா செஞ்சோமின்னு அவங்களும், ஏண்டா செஞ்சாங்க அப்படின்னு நீங்களும் கதறும்படியாச் செய்ய வேண்டியதுதான் நம்ம வேலை. செஞ்சிறுவோம்.

முதல் பதிவு நம்மளை பத்தின அறிமுகமா இருக்கணுமாமே. சரி. நாம மரபு மாறாம அதை வெச்சே ஆரம்பிக்கலாம். முதலில் ஒரு தபா இந்த நட்சத்திர அறிமுகம் அப்படின்னு தமிழ்மணத்தில் எழுதித்தரச் சொன்னதை பார்த்திடுங்க.

அடுத்து, நம்ம கிட்ட நிறையா பேரு கேட்கற ஒரு கேள்வி ஏன் உங்க பேரு இலவசக் கொத்தனார். அதுக்கு அப்புறம் உங்களுக்கு ஊர் என்ன ஏது அப்படின்னு. இது எல்லாமே முன்னாடி எழுதியாச்சு. அதனால அதோடு சுட்டிகள் எல்லாம் இங்க குடுத்து ஒரு பதிவா ஒப்பேத்த வேண்டியதுதான். அது மட்டுமில்லா மீள்பதிவு செய்யறது ஒரு மரபுதானே.

முதல் பதிவு
ஏன் இலவசக்கொத்தனார் - 1
ஏன் இலவசக்கொத்தனார் - 2
எனக்குப் பிடித்தவை (நான்கு விளையாட்டு)
மதுமிதாவிற்காக இலவச அறிமுகம்
அப்புறம் கடைசியா அழகுகள் ஆறு

அறிமுகம் ஆயிடிச்சு இல்ல. என்னடா இவன் முதல் பதிவே இப்படி மீள்பதிவா போட்டு சொதப்புறானே என நினைக்காதீங்க மக்களே. ஒரு நாளைக்கு ஒரு பதிவு எல்லாம் நமக்கே ஓவர் டோஸ், படிக்கிற உங்களைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. இருந்தாலும் உப்புமா பதிவு, விவாத மேடை, போட்டி எல்லாம் போடலாம். வெயிட்டீஸ் ப்ளீஸ்.

215 comments:

said...

அதாவதுங்க, நாள் கிழமை எல்லாம் பார்க்காம தமிழ்மணம் வந்து இது பத்தி சொன்னப்போ மண்டை ஆட்டிட்டேன். ஆனாப் பாருங்க, இந்த வாரயிறுதியில் எங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அதிகம் அதனால நான் குடும்பத்தோட வெளியூர் போயிட்டேன்.

இருந்தாலும் கொடுத்த வாக்கை காப்பாத்த இங்க இருந்தே முதல் போஸ்ட். அதனால ஒரு மீள்பதிவு.

ஓக்கேவா?

said...

வாங்க கொத்தனார்... வீடு கட்டவா போறீங்க...? ஏழரை என்றெல்லாம் தன்னடக்கம் கூடாது. ஆரம்பத்தைப் பார்த்தால் பதினைஞ்சு போல இருக்கிறது.

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்! கலக்குங்க(பக்கார்டில லெமனான்னு கேக்கப்பிடாது)

said...

ஒரு விஷயம் சொல்ல மறந்து போச்சே. நம்ம நட்சத்திர வாரம் பத்தி சொன்ன பொழுது பெனாத்தலார் உதிர்த்த பொன்மொழிதான் இந்த பதிவின் டைட்டில். நல்லா இருக்கிறதை சுட்டுக்கிட்டா தப்பு இல்லையே!!

said...

வாங்க தமிழ்நதி. இந்த ஏழரைக்கே அவனவன் அடங்குடா மவனேன்னு சொல்லும் பொழுது பதினஞ்சு எல்லாம் உங்களுக்கே டூ மச்சா தெரியலை? :))

said...

வாங்க அபி அப்பா, இப்போ எல்லாம் நாம கலக்கறதே இல்லை!! ஹார்லிக்ஸ்தான்!!

said...

தலைவா,
வாழ்த்துக்கள்!!!

இந்த வாரம் கலக்கல் தான்...

said...

வாய்யா வெட்டி. அது சரி, இன்னிக்கு என்ன எல்லாரும் கலக்கறதுலயே இருக்கீங்க?

said...

ஐ ! இந்த வாரமும் கும்மி யடிக்க இடம் கிடைச்சாச்சு ..

வாங்க கொத்ஸ்!! ஸ்டார்ட் மியூஜிக்
:)

said...

ஆஹா வாங்க வாங்க கொத்ஸ். வெண்பா ,தளைன்னு பாடம் நடத்தாம ச்ச்சும்மா வீடு கட்டி அடிங்க.படிக்கத்தான் நாங்க இருக்கோமில்ல.
எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க எங்க கும்மி கோஷ்டி தயாராயிருக்கு.அபிஅப்பாதான் லீடர்.என்ன ஒன்னு ரேட் ஜாஸ்தி[4 பகார்டியாம்...அது என்னன்னு நமக்கு சொல்ல மாட்டேன்றாங்க மக்கா]

said...

என்னது இப்ப தான் நட்சத்திரமா?
4வது தடவையாகவா?
நீங்க ஒரு வரி போட்டாலுமே தனியா ஜொலிக்குமே,மொத்தமாக எழுதப்போகிறீர்களா?வீட்டில் தான் திறந்து படிக்கமுடியும்.
பட்டயை கிளப்புங்க.

said...

ஆஹா வாங்க வாங்க கொத்ஸ். வெண்பா ,தளைன்னு பாடம் நடத்தாம ச்ச்சும்மா வீடு கட்டி அடிங்க.படிக்கத்தான் நாங்க இருக்கோமில்ல.
எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க எங்க கும்மி கோஷ்டி தயாராயிருக்கு.அபிஅப்பாதான் லீடர்.என்ன ஒன்னு ரேட் ஜாஸ்தி[4 பகார்டியாம்...அது என்னன்னு நமக்கு சொல்ல மாட்டேன்றாங்க மக்கா]

said...

அய்யனார், எப்போ வேணாலும் கும்மி அடிக்கத்தான் நம்ம இடம் இருக்கே. அது என்ன இந்த வாரமும்.

அது இருக்கட்டும். நம்ம பதிவாண்டயே வந்து, நமக்கே ஒரு வாங்க போட்டு பதிவு போட்டு ஓடிக்கிட்டு இருக்கிற நேரத்தில் ஸ்டார் மியூஜிக்குன்னு முதல்லேர்ந்து ஆரம்பிக்கறீரே, உம்மை என்னான்னு சொல்ல?

said...

அய்ஸ் [கு.கோஷ்டி விதிப்படி நானும் கூப்பிட்டுக்கிறேன்]
ஸ்டார்ட் மியூஜிக் இந்த வாரம் உங்களுக்கெல்லாம் கும்மியோ கும்மிதான்.ஆனா பாவம் மனுஷன் பதிவு படிச்சுட்டு கும்முங்கப்பா:(

said...

//ஆஹா வாங்க வாங்க கொத்ஸ்.//

அதான் வந்துட்டோமில்ல.

//வெண்பா ,தளைன்னு பாடம் நடத்தாம ச்ச்சும்மா வீடு கட்டி அடிங்க.படிக்கத்தான் நாங்க இருக்கோமில்ல.//

அதுவும்தான் வேணும். அதை வேண்டாமுன்னு சொன்னா எப்படி?

//எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க எங்க கும்மி கோஷ்டி தயாராயிருக்கு.அபிஅப்பாதான் லீடர்.என்ன ஒன்னு ரேட் ஜாஸ்தி//

ரன்ரேட்டா? அது ஜாஸ்தியா ஆனா நல்லதுதானே!!

//[4 பகார்டியாம்...அது என்னன்னு நமக்கு சொல்ல மாட்டேன்றாங்க மக்கா]//

நாம முன்ன ஒரு தடவை இது பத்தி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி பக்கா RD (research and development) அப்படின்னு சொன்னதை இவனுங்க பிடிச்சுக்கிட்டு இப்போ எப்ப பார்த்தாலும் பக்கார்டி பக்கார்டி அப்படின்னு சொல்லறாங்க. நீங்க ஒண்ணியும் ரென்சம் ஆவாதீங்க.

said...

எல்லாரும் கலக்குறாங்களா,கலங்கிப் போயிட்டாங்களா?:-))))))

வாழ்த்துக்கள் கொத்ஸ். நீங்க அறிமுகத்துல சொல்லி இருக்கிற அத்தனையும் உண்மை.
இத்தனை உரிமையோட யாரும் உறவுல கூட பேசினது இல்லை.

இப்போதான் தெரிகிறது, நம்ம முகம் எல்லாரையும் பயமுறுத்தி இருக்கு என்று.
நேரில் பார்க்காத நட்புகள் வாழ்க.

14 பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

said...

//என்னது இப்ப தான் நட்சத்திரமா?
4வது தடவையாகவா?//

அட இதாங்க முதல் முறை. இதுக்கே பாவம் அவங்க கதி என்ன ஆவ போகுதோ. நீங்க வேற.

//நீங்க ஒரு வரி போட்டாலுமே தனியா ஜொலிக்குமே,மொத்தமாக எழுதப்போகிறீர்களா?வீட்டில் தான் திறந்து படிக்கமுடியும்.//

ஒரு வார்த்தை போட்டு பட்டையை கிளப்பிய கீதாம்மா எல்லாம் இருக்கும் இடத்தில் நாமெல்லாம் பேசாம இருக்கணும். (இருக்கணும்தான். ஆனா இருக்க முடியுதா?)

//பட்டயை கிளப்புங்க.//

இன்னிக்கு என்ன பட்டை, பக்கார்டி, கலக்கல் அப்படின்னு எல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்காங்க?

said...

ஏழரைச் சனியில் - பொங்குசனி (elevation period) என்று உண்டு!
It is the second round of saturn in the birth rasi - ஆகவே உங்கள் நட்சத்திர வரவு வலைப் பதிவர்களுக்குப் பொங்கு சனியாக இருக்கட்டும்!
வாழ்த்துக்கள் கொத்தனாரே!

said...

//[4 பகார்டியாம்...அது என்னன்னு நமக்கு சொல்ல மாட்டேன்றாங்க மக்கா]//

நாலு பக்கார்டி கேட்டாலும் விளக்கம் ஒண்ணுதான். அதுக்காக இப்படி எல்லாம் ஒரே பின்னூட்டத்தை ரெண்டு மூணு தடவை எல்லாம் போடக் கூடாது.

said...

இந்த வாரம் கும்மி இங்கேதானா?hurrayyyyy

said...

comment moderation எங்க குடும்பத்துக்கு பிடிக்காத ஒன்னு.கொத்ஸ் இந்த ஒரு வாரம் இதை தூக்கிடுங்க.இல்லையென்றால் உங்களுக்குதான் கஷ்டம் ;-)

said...

//இந்த வாரம் உங்களுக்கெல்லாம் கும்மியோ கும்மிதான்.//

பாரம்பரிய கலையான கும்மியின் பெருமையை உலகறியச் செய்ய முயற்சிகள் எடுக்கும் நமக்கு கலைமாமணி விருது எதாவது வருமா?

//ஆனா பாவம் மனுஷன் பதிவு படிச்சுட்டு கும்முங்கப்பா:( //

இது எதுக்கு? அதான் கும்மறதுன்னு முடிவு பண்ணியாச்சே, அப்புறம் படிச்சா என்ன படிக்காட்டி என்ன?

said...

// பதிவு போட்டு ஓடிக்கிட்டு இருக்கிற நேரத்தில் ஸ்டார் மியூஜிக்குன்னு முதல்லேர்ந்து ஆரம்பிக்கறீரே, உம்மை என்னான்னு சொல்ல? /

ஒரு பாசத்துல சொல்லிட்டேன் கொத்ஸ் கோச்சுகிடதீங்க

டீச்சர் பகார்டி னா என்னன்னு நான் சொல்றேன்..ஆனா இங்கிட்டு இல்ல பகார்டி ரசிகர்கள் நிரம்பியிருக்க இடமிது சொன்னா அடிக்க வருவாய்ங்க

/பாவம் மனுஷன் பதிவு படிச்சுட்டு கும்முங்கப்பா:( /

அஃப்கோர்ஸ்..டீச்சர் சொன்ன பிறகு கேக்காம இருக்க முடியுமா..

said...

//பாவம் மனுஷன் பதிவு படிச்சுட்டு கும்முங்கப்பா:( ///

ஒகே...

said...

//எல்லாரும் கலக்குறாங்களா,கலங்கிப் போயிட்டாங்களா?:-))))))//

அதானே! யாராவது விடை தெரிஞ்சா சொல்லுங்கப்பூ...

//வாழ்த்துக்கள் கொத்ஸ். //

நன்றி வல்லியம்மா.

//நீங்க அறிமுகத்துல சொல்லி இருக்கிற அத்தனையும் உண்மை.//

அப்போ மத்த இடத்துல சொன்ன பொய் எல்லாம் கண்டு பிடிச்சுட்டீங்களா?

//இத்தனை உரிமையோட யாரும் உறவுல கூட பேசினது இல்லை.//

உறவா நட்பா அப்படின்னு விவாதக்களம் போடலாமா?

//இப்போதான் தெரிகிறது, நம்ம முகம் எல்லாரையும் பயமுறுத்தி இருக்கு என்று.//

அதுக்காக முகமூடி போட்டுக்கறேன்னு கிளம்பாதீங்க. அதுக்கெல்லாம் வேற ஆள் இருக்கு.

//நேரில் பார்க்காத நட்புகள் வாழ்க.//

பார்த்தவங்க மட்டும் என்ன பாவம் பண்ணினாங்க? இப்படி எல்லாம் சொல்லிட்டு அப்புறம் என் மூஞ்சியைப் பார்த்தா பயம் அப்படின்னு ஸ்டேட்மெண்ட் எல்லாம் விடலாமா?

//14 பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.//

முதலில் ஏழு பதிவு போட கட் பேஸ்ட் எதாவது மாட்டுதான்னு பார்ப்போம். அப்புறம் போகலாம் 14.

said...

/comment moderation எங்க குடும்பத்துக்கு பிடிக்காத ஒன்னு.கொத்ஸ் இந்த ஒரு வாரம் இதை தூக்கிடுங்க.இல்லையென்றால் உங்களுக்குதான் கஷ்டம் ;-)

ஹி..ஹி..இதை வழிமொழிகிறேன்

said...

//ஏழரைச் சனியில் - பொங்குசனி (elevation period) என்று உண்டு!
It is the second round of saturn in the birth rasi - ஆகவே உங்கள் நட்சத்திர வரவு வலைப் பதிவர்களுக்குப் பொங்கு சனியாக இருக்கட்டும்!//

உங்க ஜோதிட வகுப்புக்கு வரதில்லை. அதனால நீங்க சொன்னா சரிதான். ஆனா பாருங்க, நம்மளைப் பார்த்து படிக்கிறவங்க பொங்காம இருந்தா சரி.

//வாழ்த்துக்கள் கொத்தனாரே!//

நன்றி வாத்தியாரே.

said...

//இந்த வாரம் கும்மி இங்கேதானா?hurrayyyyy//

என்ன துர்க்கா, இந்த வாரம் மட்டும்தானா? :-(

said...

//ஒரு நாளைக்கு ஒரு பதிவு எல்லாம் நமக்கே ஓவர் டோஸ், படிக்கிற உங்களைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. //

இலவச வின்மீன் மின்ன வாழ்த்துக்கள் !

said...

//என்ன துர்க்கா, இந்த வாரம் மட்டும்தானா? :-(
//

இந்த வாரம் காலேஜ் விடுமுறை ஆகவே தரளமாக கும்மி அடிக்கலாம்.மற்ற நாட்கள் என்றால் கஷ்டம் கொத்ஸ்.கும்மி என்றால் சொல்லி அனுப்புங்க.கண்டிப்பாக வருவேன்

said...

//comment moderation எங்க குடும்பத்துக்கு பிடிக்காத ஒன்னு.கொத்ஸ் இந்த ஒரு வாரம் இதை தூக்கிடுங்க.இல்லையென்றால் உங்களுக்குதான் கஷ்டம் ;-)//

இல்லைங்க, நமக்கு நண்பர்கள் அதிகம். அதுல சிலவங்க பாருங்க, விளிம்பு நிலை வலி எல்லாம் பத்தி நல்லா தெரிஞ்சவங்க. அதனால அவங்க எழுதறது எல்லாம் நமக்கு சரிப்படாது. அந்த பொன்மொழிகளை எல்லாம் நீங்க படிக்க வேண்டாமே. அதான் மட்டுறுத்துதலை எடுக்கவில்லை.

said...

//ஒரு பாசத்துல சொல்லிட்டேன் கொத்ஸ் கோச்சுகிடதீங்க//

கோபமா? அது சரி. உங்களுக்கு என்ன பட்டம் குடுக்கலாமுன்னு இல்ல யோசிக்கிறேன்....

//டீச்சர் பகார்டி னா என்னன்னு நான் சொல்றேன்..ஆனா இங்கிட்டு இல்ல பகார்டி ரசிகர்கள் நிரம்பியிருக்க இடமிது சொன்னா அடிக்க வருவாய்ங்க //

அவங்களுக்கு சொல்லும் போது நமக்கும் ஒரு சி.சி. போட்டுடுமய்யா...

said...

அட கஷ்டக்காலமே!

வாழ்த்த வயதும் இல்லை அனுபவமும் இல்லை அதனால் வணங்கி மகிழலாம் என்று பார்த்தால் காலில் விழுந்து வணங்கினாலும் பிரச்சனை, விழுந்து வணங்கா விட்டாலும் பிரச்சனை.

அதனால ஏதோ நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை.....

said...

////பாவம் மனுஷன் பதிவு படிச்சுட்டு கும்முங்கப்பா:( ///

ஒகே...//

என்னா ரெஸ்பெக்ட்டு.... நம்ம கிளாஸுலயும் இருக்குதுங்களே....என்னாத்த சொல்லறது...

said...

//ஹி..ஹி..இதை வழிமொழிகிறேன்//

யப்பா அய்ஸூ, (இப்படித்தான் கூப்பிடணமாமுல்ல..)

நானு மேல சொன்னதை கொஞ்சம் பாரு ராசா. இந்த ஒரு விசயம் மட்டும் ரொம்ப கம்பெல் பண்ணாதீங்கப்பூ...

said...

நட்த்தீர வாரத்தில் சாதனைகள் பல படைக்க இருக்கும் கொத்தனார் வாழ்க, வாழ்க.

இந்த வாரம் கொத்தனார் வாஆஆஆராஅம்

said...

---கொடுத்த வாக்கை காப்பாத்த இங்க இருந்தே முதல் போஸ்ட்---

அது! :)


---என்னது இப்ப தான் நட்சத்திரமா?
4வது தடவையாகவா?
நீங்க ஒரு வரி போட்டாலுமே தனியா ஜொலிக்குமே,---

vialanguage-கிறேன் (வழிமொழிகிறேனுங்க :D)

said...

night vanthu kummi adikiren.now lab ku pooganum.tata

said...

////ஒரு நாளைக்கு ஒரு பதிவு எல்லாம் நமக்கே ஓவர் டோஸ், படிக்கிற உங்களைப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. //

இலவச வின்மீன் மின்ன வாழ்த்துக்கள் !//

கண்ணன், நீங்க எடுத்துப் போட்டு இருக்கிறதைப் பார்த்தா ஒரு முடிவோடதான் இருக்கிற மாதிரி தெரியுது!! :)

நடத்துங்க. :))

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்!

said...

//இந்த வாரம் காலேஜ் விடுமுறை ஆகவே தரளமாக கும்மி அடிக்கலாம்.மற்ற நாட்கள் என்றால் கஷ்டம் கொத்ஸ்.//

கும்மிக் கலையை அவமதிக்கும் சிறுமி துர்க்காவை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

யாருப்பா அங்க, இவங்களுக்கு ரெண்டு ஆட்டோ அனுப்புங்கப்பா...

//கும்மி என்றால் சொல்லி அனுப்புங்க.கண்டிப்பாக வருவேன்//

சரிங்க, இனி ஒரு ஒரு போஸ்டுக்கும் சொல்லி அனுப்புறேன்.

said...

//அட கஷ்டக்காலமே!//

புலி, அதே அதே!

//வாழ்த்த வயதும் இல்லை அனுபவமும் இல்லை அதனால் வணங்கி மகிழலாம் என்று பார்த்தால் காலில் விழுந்து வணங்கினாலும் பிரச்சனை, விழுந்து வணங்கா விட்டாலும் பிரச்சனை.//

தெனாலிக்கு பயம் மாதிரி உனக்கு பிரச்சனை போல இருக்கு. நல்ல டாக்டராப் போயி பாரு. (சரியா படி. டாக்டர், டாட்டர் இல்லை).

//அதனால ஏதோ நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை.....//

தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்.

said...

//நட்த்தீர வாரத்தில் சாதனைகள் பல படைக்க இருக்கும் கொத்தனார் வாழ்க, வாழ்க.//

டாலர். வாழ்த்துக்கு நன்றி. ரொம்ப ஓவர் பில்டப் குடுத்து, நம்ம வாரம் ஊத்திக்கப் போவுது பார்த்து.

said...

//---கொடுத்த வாக்கை காப்பாத்த இங்க இருந்தே முதல் போஸ்ட்---

அது! :)//

வாங்க பாபா, பின்ன என்ன. கொடுத்த வாக்கை காப்பாத்துவான் இந்த கொத்ஸ் அப்படின்னு வசனம் பேச வேண்டாமா?

//vialanguage-கிறேன் (வழிமொழிகிறேனுங்க :D)//

இதெல்லாம் உங்களுக்கே மச்மச்சா தெரியலை?

said...

//night vanthu kummi adikiren.now lab ku pooganum.tata//

லீவுன்னு சொன்னீங்க, இப்போ லாப் இருக்கு போகணமுன்னு சொல்லறீங்க. இந்த காலத்துப் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலைப்பா.

said...

நன்றி தென்றல்.

said...

வாழ்த்துக்கள் தலைவா...

said...

வாழ்த்துக்கள் குரு!

என்ன... இதுதான் முதல் நட்சத்திர வாரமா?

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்-ஆ வருவீங்கன்னு தெரியும். ஸ்டார்ட் மீஜிக்!!

பி.கு. 'பூமிதி' விழால்லாம் கூட ரெடி.

said...

பொன்ஸக்கா, நீங்க தலைவான்னு கூப்பிட்டாலே ரென்சனா இருக்கே.....ஏற்கனவே ஒருத்தரைக் கூப்பிட்டு அவர் மொட்டை அடிச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காரு பாவம். நான் புள்ளக்குட்டிக்காரன், கொஞ்சம் பார்த்துமா!!! :)))

said...

கண்மணி டீச்சர்:குட்டி பிசாசு ஓடியா ஓடியா அங்கன இன்னைலேர்ந்து ஒரு எடத்துல இலவசமா சோறு போட்றாங்களாம் .சாப்பிட்டுட்டு கும்மியடிக்கனும்.அடையாளம் நட்சத்திரம் போட்டிருக்கும்.அக்க்ககாங்ங்


கொத்ஸ் என் மாணவர் படையைத் திரட்டிக் கொண்டுருக்கிறேன்.இனி களத்தில் குதித்துகும்மி அடிச்சிட வேண்டியதுதான்.
ஆமா 1/2 அவருக்குள்ள ஈப்படி 40+ பக்கம் போனா என்ன ஆவுறது.ஸ்பீடு ஓவராயிருக்கே

said...

ஆகா மீ தெ 50?????

said...

//தலைவா,
வாழ்த்துக்கள்!!!

இந்த வாரம் கலக்கல் தான்...//

said...

//நல்ல டாக்டராப் போ பாரு. //

எங்க, நமக்குனே வந்து மாட்டுறாங்க சில டாக்டர்ஸ்.... :-((((

//(சரியா படி. டாக்டர், டாட்டர் இல்லை). //

டாட்டர் பத்தி பேசி ஏதுக்கு இப்ப அரசியலை உள்ள கொண்டு வறீங்க.... பாத்து இருங்க..

said...

//ஆமா 1/2 அவருக்குள்ள ஈப்படி 40+ பக்கம் போனா என்ன ஆவுறது.ஸ்பீடு ஓவராயிருக்கே //

இது எல்லாம் என்ன சும்மா ஜுஜுப்பி.... சில காலத்துக்கு முன்பு அரை அவர்க்கு சதத்தை எல்லாம் தாண்டி ஆடி இருக்கோம்.... வரலாற்றை புரட்டி பார்க்கவும்... ;-)

said...

//ஆமா 1/2 அவருக்குள்ள ஈப்படி 40+ பக்கம் போனா என்ன ஆவுறது.ஸ்பீடு ஓவராயிருக்கே //

நட்சத்திரத்துக்கு தனியா பகுதி இருக்கே... டீச்சர். அப்புறம் என்ன கேள்வி... அடிச்சு ஆடுங்க.

said...

//கொத்ஸ் என் மாணவர் படையைத் திரட்டிக் கொண்டுருக்கிறேன்.இனி களத்தில் குதித்துகும்மி அடிச்சிட வேண்டியதுதான்.
ஆமா 1/2 அவருக்குள்ள ஈப்படி 40+ பக்கம் போனா என்ன ஆவுறது.ஸ்பீடு ஓவராயிருக்கே//

நோ ரென்சன் ப்ளீஸ்! நான் தான் பசங்களை பிடிச்சு வச்சிருக்கேன். ஸம்திங் வெட்டினா அனுப்பி வைப்பேன், எப்டி வசதி!!

said...

//கண்மணி டீச்சர்:குட்டி பிசாசு ஓடியா ஓடியா அங்கன இன்னைலேர்ந்து ஒரு எடத்துல இலவசமா சோறு போட்றாங்களாம் .சாப்பிட்டுட்டு கும்மியடிக்கனும்.அடையாளம் நட்சத்திரம் போட்டிருக்கும்.அக்க்ககாங்ங்//

கண்மணி டீச்சர், என் கண்ணில் தண்ணி வருது.....

//கொத்ஸ் என் மாணவர் படையைத் திரட்டிக் கொண்டுருக்கிறேன்.இனி களத்தில் குதித்துகும்மி அடிச்சிட வேண்டியதுதான்.//

தன்யனானேன்.

//ஆமா 1/2 அவருக்குள்ள ஈப்படி 40+ பக்கம் போனா என்ன ஆவுறது.ஸ்பீடு ஓவராயிருக்கே//

இது எல்லாம் இந்த காலத்து சச்சின், அந்த காலத்து ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் உங்களுக்குத் தெரியாது போல. நம்மாளுங்களைக் கேட்டுப் பாருங்க..

said...

//ஆகா மீ தெ 50?????///

கண்மணி டீச்சர் தி 50. கங்கிராஜுலேஷன்ஸ் அண்ட் தேங்க்யூ.

மணி ரெண்டு ஆகப் போகுது நான் தூங்கப் போறேன். மீதி நாளைக்கு.

said...

நன்றி இரவி. மறுமொழிகிறேன் என்ற வார்த்தை விட்டுப் போச்சு போல, இருக்கட்டும். நன்றி, மீண்டும் நன்றி.

said...

கச்சிதமா தலைப்புலேயே 'எல்லாத்தையும்' சொன்னது
அருமையோ அருமை.

நம்ம மாணவன் இப்படி ஜொலிக்கறதைப் பார்த்தா.............
??????????????

ரொம்ப மகிழ்ச்சியா இருக்குன்னு சொல்லவந்தேன்.:-))))

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்.பை த பை ஜூஊஊப்பர் பதிவு :-)))))))

said...

//டாட்டர் பத்தி பேசி ஏதுக்கு இப்ப அரசியலை உள்ள கொண்டு வறீங்க.... பாத்து இருங்க..//

இதாவது பரவாயில்ல புலி! அங்கிட்டு பெனாத்தலார் "கலைஞர் டிவி நேர்முக தேர்வுக்கு கோனார் நோட்ஸ்"ன்னு ஒரு பதிவு போட்டிருக்கார்.

அதாவது இராஜ கண்ணப்பன் திமுக வில் இருக்கிறார்ன்னு உள்குத்து வச்சி பெனாத்தலார் பதிவு போட்டிருக்கார்! இதே கண்ணப்பன் வேற கட்சில இருந்தா "வெற்றி" நோட்ஸ்தான் போட்டிருப்பார்! ஒழிக ஜாதி அரசியல்:-))

said...

//எங்க, நமக்குனே வந்து மாட்டுறாங்க சில டாக்டர்ஸ்.... :-((((//

அதான் சொல்லறேன், நம்ம கிட்ட மாட்டுற டாக்டருகளை எல்லாம் பேசாம விட்டுட்டு நல்ல டாக்டராத் தேடி நீயே போ.

//டாட்டர் பத்தி பேசி ஏதுக்கு இப்ப அரசியலை உள்ள கொண்டு வறீங்க.... பாத்து இருங்க..//

என்னய்யா செய்ய. டாபிக்கலா பேசலையினா யாரும் நம்மளை சீந்த மாட்டாங்களே. அதான்....

said...

//இது எல்லாம் என்ன சும்மா ஜுஜுப்பி.... சில காலத்துக்கு முன்பு அரை அவர்க்கு சதத்தை எல்லாம் தாண்டி ஆடி இருக்கோம்.... வரலாற்றை புரட்டி பார்க்கவும்... ;-)//

அது ஒரு அது ஒரு கனாக்காலம்....

said...

//நட்சத்திரத்துக்கு தனியா பகுதி இருக்கே... டீச்சர். அப்புறம் என்ன கேள்வி... அடிச்சு ஆடுங்க.//

அது இந்த வாரம் மட்டும்தான். அதனால ஒரு பழக்கம் வர எப்பவுமே 40+ பக்கமும் ஒரு பார்வை பார்த்திடுங்க.

said...

நோ ரென்சன் ப்ளீஸ்! நான் தான் பசங்களை பிடிச்சு வச்சிருக்கேன். ஸம்திங் வெட்டினா அனுப்பி வைப்பேன், எப்டி வசதி!!//

நாட் பாஸிபிள். அதான் மத்த இடுகைக்கு எல்லாம்தான் பேரம் பேசுறோமே. நட்சத்திர வார முதல் பதிவு. இதுக்குக் கூட ப்ரீயா தரலைன்னா எப்படி?

said...

//இது எல்லாம் இந்த காலத்து சச்சின், அந்த காலத்து ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் உங்களுக்குத் தெரியாது போல. நம்மாளுங்களைக் கேட்டுப் பாருங்க.. //

ஏற்கனவே கூவிட்டேன் கொத்ஸ்....

said...

//கச்சிதமா தலைப்புலேயே 'எல்லாத்தையும்' சொன்னது
அருமையோ அருமை.//

எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்ட பாடம்தான். :)

//நம்ம மாணவன் இப்படி ஜொலிக்கறதைப் பார்த்தா.............
??????????????//

சீக்கிரமே ப்யூஸ் போயிடுமோன்னு பயப்படறீங்களா?

//ரொம்ப மகிழ்ச்சியா இருக்குன்னு சொல்லவந்தேன்.:-))))//

ஓ! ஓக்கே, ஓக்கே.... :)

said...

வாழ்த்துக்கள் தல... அடிச்சு ஆடுங்க :))

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ்.//

நன்றி மனதின் ஓசை.

//பை த பை ஜூஊஊப்பர் பதிவு :-)))))))//

பதிவை எல்லாம் படிக்கிறேன்னு சொல்லி தொட்டுட்டீங்களே!! உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன். ...

said...

//நாட் பாஸிபிள். அதான் மத்த இடுகைக்கு எல்லாம்தான் பேரம் பேசுறோமே. நட்சத்திர வார முதல் பதிவு. இதுக்குக் கூட ப்ரீயா தரலைன்னா எப்படி? //


சரி ஓக்கே, அக்ரீட்.பசங்களா ஓடியாங்க! ஆனா 1 கண்டிஷன் நீங்க 1/2மணி நேரம் பின்ன தான் தூங்க போகனும், சரியா?

said...

//இதாவது பரவாயில்ல புலி! அங்கிட்டு பெனாத்தலார் "கலைஞர் டிவி நேர்முக தேர்வுக்கு கோனார் நோட்ஸ்"ன்னு ஒரு பதிவு போட்டிருக்கார்.//

ஓவர் டு பெனாத்த்லார்....

said...

//ஏற்கனவே கூவிட்டேன் கொத்ஸ்....//

பார்த்து பாட்டெல்லாம் பாடிட்டேன் புலி. ரொம்ப தேங்க்ஸ்.

said...

///வாழ்த்துக்கள் தல... அடிச்சு ஆடுங்க :))//

நன்றி ஜி!

said...

//சரி ஓக்கே, அக்ரீட்.பசங்களா ஓடியாங்க! ஆனா 1 கண்டிஷன் நீங்க 1/2மணி நேரம் பின்ன தான் தூங்க போகனும், சரியா?//

நீங்க எல்லாம் சொன்னா தட்ட முடியுமா? ஆனா தூங்கிட்டேன்னா திட்டக் கூடாது. நாளைக்கு ரொம்ப நேரம் வண்டி ஓட்டணும்.

said...

//அது ஒரு அது ஒரு கனாக்காலம்.... //

ஆணிகள் அதிகம் இல்லா வசந்தக்காலம்.....

said...

புலி,

என்னையா கேட்கிறாய்?

என்னய்யா கேட்கிறாய்?

said...

சரி, நீயும் நானும் மாறி மாறி பாடினா, நாமதான் டூயட் பாடறோமுன்னு நினைக்கப் போறாங்க.

கட் இட் அவுட்.

said...

//பதிவை எல்லாம் படிக்கிறேன்னு சொல்லி தொட்டுட்டீங்களே!! உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேன். ... //

மறுக்கா அரசியலா?????

கைமாறு வேணாமாம் கைமாத்து கொடுத்தா போதுமாம்....

said...

புலி! சீக்கிரம் 100 அடிச்சு கொத்ஸை தூங்க அனுப்புப்பா!

said...

புலி அவருக்கு நீர் என்ன ஏஜெண்டா, இருக்கட்டும். ஐயாம் தி எஸ்கேப்பு.

said...

டார்கெட்டை சரியா புரிஞ்சுக்கிட்ட அபிஅப்பா வாளுக.

said...

//கைமாறு வேணாமாம் கைமாத்து கொடுத்தா போதுமாம்....//

ஆமா புலி! நானும் பசங்களை புடுச்சி வச்சி மெரட்டி கூட பார்த்தேன். மசியல, சரின்னு விட்டுட்டேன்!

said...

நாம் ரெண்டு பேர் தானா இருக்கோம் புலி, யாரையும் காணுமே!

said...

//ஆமா புலி! நானும் பசங்களை புடுச்சி வச்சி மெரட்டி கூட பார்த்தேன். மசியல, சரின்னு விட்டுட்டேன்!//

சரி, நாளை பார்த்துக்கலாம் விடுங்க.

said...

//நாம் ரெண்டு பேர் தானா இருக்கோம் புலி, யாரையும் காணுமே!//

ஏன்ய்யா பாதி ராத்திரியில் பதில் போடும் என்னைப் பார்த்தா மனுசன் மாதிரி தெரியலையா?

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ் !

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கொத்தனாரே...

(அப்பாடா...அரைச்ச மாவை அரைச்சாச்சு...)

said...

இகொ,

நட்சத்திர வாழ்த்துக்கள்!

// இருந்தாலும் உப்புமா பதிவு, விவாத மேடை, போட்டி எல்லாம் போடலாம். // அசத்துங்க!

உங்க பின்னூட்டப்பொட்டிய நினைச்சாத்தான் பாவமா இருக்கு! உழைச்சு உழைச்சே ஓடா தேயப்போகுது :)))

said...

//கும்மிக் கலையை அவமதிக்கும் சிறுமி துர்க்காவை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.

யாருப்பா அங்க, இவங்களுக்கு ரெண்டு ஆட்டோ அனுப்புங்கப்பா...

//

grandpa.ithu ellam over la man.i am one busy person u know.this week holiday start.innaiku ellam class irruku.after 2 days ennaku 2 weeks holiday.eppo puriyutha?

said...

ஆகா ...
கொத்ஸ்
வாழ்த்துக்கள்.

said...

கலக்கிப்போடுங்க இலவசம்....

(இ-கொ பதிவிகளையும் இப்பதான் படித்தேன்...என்னுள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது...மேலும் பல விடயங்கள் தெரிந்தது...நன்றி).

said...

கொத்ஸ்,
நட்சத்திர வார வாழ்த்துகள்!

லேட்டாத்தான் கொடுத்திருக்காங்க. இருந்தாலும் இப்பவாச்சும் தமிழ்வலைபபதிவுலகின் பின்னூட்ட சூப்பர் ஸ்டாருக்கு பைனலாக அங்கீகாரம் என்று மகிழ்ச்சி!

மக்கள்ஸ்,
இந்த வாரம் ரெக்கார்ட் ப்ரேக்கிங் வாரமாக மாத்திடணும்.. சரியா?

said...

ஏன்யா என்னையப் போய் வம்புக்கு இழுக்குறீங்க?

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

said...

அதற்குள் 86 பின்னூட்டமா?

டோண்டு பயலும் நீயும் ஒன்னுதான்!

இந்த பாப்பார பரதேசிப் பன்னாடைகளை திருத்தவே முடியாது.

கூட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் பயல்கள் வேறு எப்படி சிந்திப்பானுங்க? இப்படித்தான்.

தமிழ்மணம் விட்டு ஓடிய பாப்பார பரதேசி நாய்கள் ஏன் நட்சத்திரம் ஆக வேண்டும்? கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் செயலை செவ்வனே செய்ய வேண்டியதுதானே?

said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

said...

கொத்தனார்!

நட்சத்திரவாரம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்!

ஒரு மெயிலைப் போட்டிருந்தா நான் முதல் ஆளா ஓடியாந்திருப்பேனே!

அதான் நேத்து ஒரே அமைதியா இருந்தீங்களா?

said...

Vazhthukkal..!!! :)

said...

100

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ் !//

நன்றி மணியன்.

said...

//நட்சத்திர வாழ்த்துக்கள் கொத்தனாரே...

(அப்பாடா...அரைச்ச மாவை அரைச்சாச்சு...)//

நன்றி செந்தழல்.

(ஆப்பாடா, ச்சீ, அப்பாடா புளிச்ச மாவை வெச்சு தோசையே வாத்தாச்சு!) :))

said...

//இகொ,

நட்சத்திர வாழ்த்துக்கள்!//

நன்றி வாத்தி.

//உங்க பின்னூட்டப்பொட்டிய நினைச்சாத்தான் பாவமா இருக்கு! உழைச்சு உழைச்சே ஓடா தேயப்போகுது :)))//

நல்ல எக்ஸர்சைஸ் செஞ்சா அந்த இடம் நல்ல முறுகேறி வளருமே. அது மாதிரி நம்ம பின்னூட்ட பெட்டியும் ஸ்ட்ராங்கா ஆகும். கவலையை விடுங்க.

said...

//grandpa.ithu ellam over la man.i am one busy person u know.this week holiday start.innaiku ellam class irruku.after 2 days ennaku 2 weeks holiday.eppo puriyutha?//

//இந்த வாரம் காலேஜ் விடுமுறை ஆகவே தரளமாக கும்மி அடிக்கலாம்.மற்ற நாட்கள் என்றால் கஷ்டம் கொத்ஸ்.கும்மி என்றால் சொல்லி அனுப்புங்க.கண்டிப்பாக வருவேன்//

///night vanthu kummi adikiren.now lab ku pooganum.tata//

அப்பப்பா!! ஒரு வாரம் லீவா ரெண்டுவாரமா? லீவா இருந்தா ஏன் போகணும்.

மூன்று பின்னூட்டங்களில் எத்தனை முரண்கள். மீண்டும் சொல்லறேன், இந்த காலத்துப் பெண்களை புரிஞ்சுக்கவே முடியலைப்பா.

(அந்த காலத்துப் பெண்களை அந்த காலத்தில் பார்த்து இந்த காலத்தில் அடிக்கும் இதே கமெண்டை அடித்திருக்கிறோம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.)

said...

//கொத்ஸ்
வாழ்த்துக்கள்.//

நன்றி தம்பி.

said...

//கலக்கிப்போடுங்க இலவசம்....//

வாங்க மதுரயம்பதி. நேரா போட்டாலே நம்ம பதிவை யாரும் படிக்க மாட்டேங்கறாங்க. இதுல கலக்கி வேற போட்டா நாளைக்கு எனக்கே புரியாம போயிடுமோன்னு பயமா இருக்கே. :))

//(இ-கொ பதிவிகளையும் இப்பதான் படித்தேன்...என்னுள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது...மேலும் பல விடயங்கள் தெரிந்தது...நன்றி).//

நிறையா பேரு கேட்கறாங்க. அதான் இந்த பதிவு போட காரணமே. நன்றி.

said...

///கொத்ஸ்,
நட்சத்திர வார வாழ்த்துகள்!//

நன்றி மருத்துவ மாமணியே.

//லேட்டாத்தான் கொடுத்திருக்காங்க. இருந்தாலும் இப்பவாச்சும் தமிழ்வலைபபதிவுலகின் பின்னூட்ட சூப்பர் ஸ்டாருக்கு பைனலாக அங்கீகாரம் என்று மகிழ்ச்சி!//

இதெல்லாம் எதுக்கு. நம்ம பதிவு போட்டா வந்து படிக்க மக்கள் இருக்காங்களே. அதுதானே வேணும்.

//மக்கள்ஸ்,
இந்த வாரம் ரெக்கார்ட் ப்ரேக்கிங் வாரமாக மாத்திடணும்.. சரியா?/

வவாசவிற்கு பகிரங்க சவால். முடிவு என்ன? விரைவில் காண்பீர்.

said...

//ஏன்யா என்னையப் போய் வம்புக்கு இழுக்குறீங்க?//

உங்களை இல்லாமல் பின்ன வேற யாரை? இணையக் கோனாராகிய உங்களை ஆட்டத்திற்கு அழைக்காமல் இந்த கொத்தனார் வேறு யாரை அழைப்பது?

said...

//நட்சத்திர வாழ்த்துக்கள்//

நன்றி சின்னக்குட்டி.

said...

//அதற்குள் 86 பின்னூட்டமா?//

இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டது அய்யனார் மற்றும் துர்காவிற்காக. வந்த ஆபாசங்களில் இதுதான் கொஞ்சம் பெட்டர்.

பாருங்க. என்ன மாதிரி பின்னூட்டம் எல்லாம் வருது. இதுனாலதான் மட்டுறுத்தல் இருக்கு. இப்படி மனம் பிறழ்ந்தவர்கள் இருக்கையில் நமக்கு நாமே விலங்குகள் போட்டுக்கொள்வது விதி. என்ன செய்ய.

said...

//இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி மஞ்சூர் ராசா.

said...

//கொத்தனார்!

நட்சத்திரவாரம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.//

நன்றி மலைநாடான்.

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ்!//

நன்றி சிபி.

//ஒரு மெயிலைப் போட்டிருந்தா நான் முதல் ஆளா ஓடியாந்திருப்பேனே!//

பதிவு போட்ட உடனே மெயில் அனுப்பறேனே. வரது இல்லையா? இப்போ என்ன இந்த வாரம் பூரா நம்ம பதிவுதான் முகப்பில் இருக்குமே. நிதானமா வாங்க.

//அதான் நேத்து ஒரே அமைதியா இருந்தீங்களா?//

இல்லைங்க. ஊரில் இல்லை. அதனால வந்த வேலையை கவனிக்கப் போயிட்டேன். இன்று திரும்பிவிடுவேன்.

said...

//Vazhthukkal..!!! :)//

நன்றி மயூரேசன். தங்கள் வாழ்த்துக்கள்தான் இந்த பதிவில் 100ஆவது பின்னூட்டம். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

said...

//அபி அப்பா said...

100//

ஜஸ்ட் மிஸ். ஆனாலும் நீர்தான் மொய் பின்னூட்டம். அதான் 101!!

said...

இகொ என்னைய அபி அப்பா போக கூடாதுனு கட்டி போட்டாரு நா அத்துகினு வந்தேன்...:)

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்! அப்படியே சாப்பிடுங்க..:)


(கலக்குங்கனு சொல்லுறது அவ்வ்வ்வ்வ்மானமா இருக்கு)

said...

/இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டது அய்யனார் மற்றும் துர்காவிற்காக. வந்த ஆபாசங்களில் இதுதான் கொஞ்சம் பெட்டர். /

கொத்ஸ் இப்பதான் வந்திருக்கிறதால அழகான பக்கம் மட்டும்தான் தெரியுது இருண்ட பக்கம் ஒண்ணு இருக்கும்னு தெரிஞ்சாலும் நேரடி அனுபவம் ஏதுமில்லை..உதாரணத்தோடு விளக்கியதற்க்கு நன்றி.

said...

"intha varam kummi special"

koths!half o fullo, illa appo
neraya vaanga vaanga
vaalthukkal.

nalla irungade...........

said...

//இகொ என்னைய அபி அப்பா போக கூடாதுனு கட்டி போட்டாரு நா அத்துகினு வந்தேன்...:)//

மின்னிடும் மின்னலும் கட்டுண்டு போகுமோ, மின்னலை கட்டுதல் யார்க்கு இங்கே ஆகுமோ.

வாங்க மின்னல்.

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ்! அப்படியே சாப்பிடுங்க..:)


(கலக்குங்கனு சொல்லுறது அவ்வ்வ்வ்வ்மானமா இருக்கு)//

அதைத்தான் நானும் ஹார்லிக்ஸூன்னு சொன்னேன். நடக்கட்டும்.

said...

//கொத்ஸ் இப்பதான் வந்திருக்கிறதால அழகான பக்கம் மட்டும்தான் தெரியுது இருண்ட பக்கம் ஒண்ணு இருக்கும்னு தெரிஞ்சாலும் நேரடி அனுபவம் ஏதுமில்லை..உதாரணத்தோடு விளக்கியதற்க்கு நன்றி//

அழகான பக்கம் மட்டுமே தெரிந்து இந்த இருண்ட பக்கத்தின் இருப்பு தெரியாமலே நீங்கள் சிறப்பாக வாழ என் பிரார்த்தனைகள்.

(அப்புறம் இந்த ற்-க்குப் பின்னாடு மெய்யெழுத்து வரக்கூடாது. எப்பவுமே!)

said...

பாருங்க. என்ன மாதிரி பின்னூட்டம் எல்லாம் வருது. இதுனாலதான் மட்டுறுத்தல் இருக்கு. இப்படி மனம் பிறழ்ந்தவர்கள் இருக்கையில் நமக்கு நாமே விலங்குகள் போட்டுக்கொள்வது விதி. என்ன செய்ய.
///

அய்ஸ் மற்றும் துர்காவை ஏமாற்ற
இது உங்களுக்கு நீங்களே போட்டது தான் சரியா...:)

said...

//"intha varam kummi special"

koths!half o fullo, illa appo
neraya vaanga vaanga
vaalthukkal.

nalla irungade...........//

எஸ்பெனாலும் எழுதுவீரு என்ன ஆச்சு இன்னைக்கு இங்கிலிபீசு?

ஹாப், புல், ஆப்பு - இதெல்லாம் விடுங்க. ஓசியில் குடுத்தா பினாயிலும் குடிக்கிற பரம்பரை நம்ம பரம்பரை. அதனால அதெல்லாம் சரியாச் செய்வோம்.

நீரும் நல்லாயிருடே.

said...

//அய்ஸ் மற்றும் துர்காவை ஏமாற்ற
இது உங்களுக்கு நீங்களே போட்டது தான் சரியா...:)//

அடப்பாவிங்களா, அதில் என் எழுத்துநடையாய்யா தெரியுது? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல.

அப்புறம் அது வந்த ஐப்பீ, காக்காப்பீ எல்லாம் இருக்கு.

said...

(அப்புறம் இந்த ற்-க்குப் பின்னாடு மெய்யெழுத்து வரக்கூடாது. எப்பவுமே!)
//

கும்மி அடிக்க வந்தா பாடத்த ஆராம்பிச்சாசா..:)

said...

அடப்பாவிங்களா, அதில் என் எழுத்துநடையாய்யா தெரியுது? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல
///

லைட்டா அப்பவே எனக்கு டவுட்டு
இப்ப கண்ஃபாம் ஆயிடுச்சி

said...

தனியா மெயிலில் வாழ்த்தலாம்னு பார்த்தால் உங்க மெயில் எங்கே போட்டு வச்சேனு தெரியலை. இங்கே வந்து எல்லாரோடையும் சேர்ந்து கும்பலில் கோவிந்தா போட்டால் கண்டுக்கவா போறீங்க? இருந்தாலும் வாழ்த்துக்கள் பல.

said...

//கும்மி அடிக்க வந்தா பாடத்த ஆராம்பிச்சாசா..:)//

மின்னல், என்ன செய்ய. நம்ம புத்தி அப்படித்தான் போகுது. நாய் வாலுன்னு நினைச்சு விடுங்க.

said...

//லைட்டா அப்பவே எனக்கு டவுட்டு
இப்ப கண்ஃபாம் ஆயிடுச்சி//

நான் இல்லைன்னுதானே. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.
ஆனா இதைப் பார்க்கும்போது மின்னல்தாம் கும்மியடிப்பானோன்னு ஒரு சந்தேகம் கூட வருதே....

said...

என்ன கீதாம்மா இப்படிச் சொல்லிட்டீங்க? உங்க பதிவுல வந்து தனிமடல் விபரங்கள் திரும்பவும் தரேன்.

நீங்க எல்லாம் எங்க வந்து என்ன சொன்னாலும் கேட்போம். அதனால இந்தக் கவலை எல்லாம் வேண்டாம். பாருங்க எப்படி சூட்டோட சூடா பதில் வருது!!

அப்புறம் வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

அய்ஸ் மற்றும் துர்காவை ஏமாற்ற
இது உங்களுக்கு நீங்களே போட்டது தான் சரியா...:)
///

உனக்குள்ள இம்புட்டு தெரமையா
இகொவ பத்தி இம்புட்டு தெரிஞ்சிருக்கு

இகொ இவனுக்கு எதாவது பட்டம் குடுங்க..:)

said...

//அப்பப்பா!! ஒரு வாரம் லீவா ரெண்டுவாரமா? லீவா இருந்தா ஏன் போகணும்.

மூன்று பின்னூட்டங்களில் எத்தனை முரண்கள். மீண்டும் சொல்லறேன், இந்த காலத்துப் பெண்களை புரிஞ்சுக்கவே முடியலைப்பா.

(அந்த காலத்துப் பெண்களை அந்த காலத்தில் பார்த்து இந்த காலத்தில் அடிக்கும் இதே கமெண்டை அடித்திருக்கிறோம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.)
//

நோ கொத்ஸ்.உங்களுக்கு வயசு ஆச்சு.அதுனாலதான் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.அதுதான் உங்களை தாத்தான்னு கூப்பிட்டேன் கொத்ஸ்

said...

நான் இல்லைன்னுதானே. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.
ஆனா இதைப் பார்க்கும்போது மின்னல்தாம் கும்மியடிப்பானோன்னு ஒரு சந்தேகம் கூட வருதே....
//

இத கேட்க யாருமே இல்லையா..?


(மனசாட்சி : மின்னலு ஓவராக்ட் குடுக்காத ஒழுங்கா ஒத்துக்க..:))

said...

தனி மடல் கண்டு வாழ்த்தவந்தால்... யே அப்பா! ஏகப்பட்ட மடல்கள்(எல்லார் பேரும் நிஜம்தானே?:))நிஜமாவே ஸ்டார் அதுவும் துருவநட்சத்திரமா மின்னறீங்க!

said...

//உனக்குள்ள இம்புட்டு தெரமையா
இகொவ பத்தி இம்புட்டு தெரிஞ்சிருக்கு

இகொ இவனுக்கு எதாவது பட்டம் குடுங்க..:)//

அவன் யாருன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் மின்னல் அப்படித் தெரிஞ்ச உடனே பட்டம் என்ன பதக்கம் பரிசு எல்லாம் தரலாம்.

தப்பான இடத்தில் கமா போட்டு படிச்சால் நான் பொறுப்பல்ல.

said...

//நோ கொத்ஸ்.உங்களுக்கு வயசு ஆச்சு.அதுனாலதான் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.அதுதான் உங்களை தாத்தான்னு கூப்பிட்டேன் கொத்ஸ்//

சரிங்க. எனக்குப் புரிஞ்சுக்க முடியலை. தாத்தா, பாட்டன் அப்படின்னு என்ன வேணா கூப்பிடுங்க. நோ பிராப்பளம்.

said...

//இத கேட்க யாருமே இல்லையா..?


(மனசாட்சி : மின்னலு ஓவராக்ட் குடுக்காத ஒழுங்கா ஒத்துக்க..:))//

அதானே, ஒழுங்கா ஒத்துக்க.

said...

//தனி மடல் கண்டு வாழ்த்தவந்தால்... யே அப்பா! ஏகப்பட்ட மடல்கள்(எல்லார் பேரும் நிஜம்தானே?:))நிஜமாவே ஸ்டார் அதுவும் துருவநட்சத்திரமா மின்னறீங்க!//

ஷைலஜா வாழ்த்துக்களுக்கு நன்றி. மீதி பேரு எல்லாம் சரியா இருக்கு. ஆனா துளசி, கீதா, மணியன் - இந்த மாதிரி கொஞ்சம் பேருதான் சந்தேகமா இருக்கு. ஷைலஜா கூட. :))

said...

தப்பான இடத்தில் கமா போட்டு படிச்சால் நான் பொறுப்பல்ல.
//

எப்படி இப்படியெல்லாம்...

நான் எப்படி படிச்சாலும் அது எனக்கு தப்பு தப்பா தெரியுது...:((

said...

மின்னல், டிஸ்கி எல்லாம் போட்ட பின்னாடி அழுவாச்சி எல்லாம் போடக் கூடாது. ஒன்லி சிரிப்பான்.

said...

மின்னல், டிஸ்கி எல்லாம் போட்ட பின்னாடி அழுவாச்சி எல்லாம் போடக் கூடாது. ஒன்லி சிரிப்பான்.
//

:)

said...

மின்னல்,

அது!! :-D

said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

கலக்குங்க.

//ஏழரை என்றெல்லாம் தன்னடக்கம் கூடாது. ஆரம்பத்தைப் பார்த்தால் பதினைஞ்சு போல இருக்கிறது. //

இதுக்கப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு ?)))

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்!

போச்சு...இந்த வாரப் பின்னூட்டம் எல்லாம் வெண்பாப் பின்னூட்டமா இல்லை அன்பா, பின்னூட்டமா?

ஆறு விளையாட்டுக்கு அடுத்தது, ஏழு விளையாட்டு தானே! அதான் ஏழு நாளும் ஏழு விளையாட்டு!
எது எப்படியோ ஏழு நாளும், ஏழரை நொடிகளாகப் பறக்கப் போகுது போங்க! நாங்க ரெடி!!

said...

ஸ்டார் வீக் பானம் என்னவோ?
ஜிகிர் தண்டா இல்லாது புது பானத்தை அறிமுகப்படுத்துங்க தலைவா...

அபி அப்பா சொல்றா மாதிரி பக்கார்டில லெமனான்னு கேக்கப்பிடாது :-)))

"எலேய், கொத்தனார் பதிவுல கூழ் ஊத்தறாங்க டேய்!" -ன்னு நாங்களும் ஓடியாந்துடறோம்!

said...

---முதலில் ஏழு பதிவு போட கட் பேஸ்ட் எதாவது மாட்டுதான்னு பார்ப்போம். அப்புறம் போகலாம் 14.----

நீங்களே இப்படி சொன்னா, எங்க கதி என்னாவது :)

said...

---ஏற்கனவே ஒருத்தரைக் கூப்பிட்டு அவர் மொட்டை அடிச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கார---

நீங்க ஏற்கனவே க்ளீன் ஸ்லேட் என்று நெனச்சேனே :P

said...

---உங்க பின்னூட்டப்பொட்டிய நினைச்சாத்தான் பாவமா இருக்கு! உழைச்சு உழைச்சே ஓடா தேயப்போகுது ---

ப்ளாகரை ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் செய்த வீரர் வாழ்க.. வாழ்க.. . :)

said...

---அதான் நேத்து ஒரே அமைதியா இருந்தீங்களா?---

கருத்துக்கணிப்புக்கு முன் மதுரை மாதிரி என்று சொல்லுங்க!

said...

@இலவசம்.ஏழரை யாருக்கு எங்களுக்குத்தானே

said...

பின்னூட்டம் ஒன்று கூட இல்லாத கொத்தனார் பதிவு ஒண்ணு இருக்க முடியுமா?
நண்பர்களே, அதை உங்களால் நம்பத் தான் முடியுமா?


இந்தா...போய்ப் பாருங்க! எவ்வளவு பெரீய்ய்ய்ய்ய் அநியாயம் நடந்திருக்குதுன்னு தெரியும்!
ஏன் இலவசக்கொத்தனார் - 1

துர்கா...
கும்மி பற்றிக் கேட்டீங்களே! நீங்க இங்க கொஞ்சம் வரக்கூடாதா?

said...

கொத்ஸ்,

நட்சத்திர வாழ்த்துக்கள்.....


Pitcher Beer'ஆகா பின்னூட்டங்கள் பொங்கி வழிய வேண்டிக்கொல்கிறேன்.... :)

said...

மக்கள்களா, ஒரு 5 மணி நேரம் கார் ஓட்டணும். நண்பர் வீட்டுக்குப் போன உடனே பதில் போடறேன். நன்றி.

said...

வாழ்த்துக்கள் இ கொ.. :-)

said...

தல அடுத்த பதிவு எப்ப?

லேட்டஸ்டா வருவீங்கன்னு நம்பிகிட்டு உக்காந்திருந்தா... இப்படி லேட்டாக்கிட்டே இருக்கீங்களே.

said...

மொதல்ல பிடிங்க - வாழ்த்துக்கள்.

அதென்னங்க உங்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் இருக்கிற உறவு இப்படி ஸ்ட்ராங்கா இருக்கு ..
அடிச்சி ஆடுறீங்களே ..

சும்மாவே கிளப்புவீங்க .. இப்ப ஸ்டார் வேற .. நடத்துங்க.

said...

ஒண்ணுமில்லைங்க ..முந்தின பின்னூட்டம் என்னுது .. என்னுதுதான் அப்டின்னு சொல்றதுக்குத்தான் வந்தேன்.

அப்ப வர்ட்டா ..?

said...

வாழ்த்துக்கள் கொத்ஸ்!

said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

போட்டது ஒரு பதிவு. அதுல எழுதுனது நாலஞ்சு வரி. மிச்சமிருக்குற மூனு வரிகள் பழைய பதிவுகளுக்கு லிங்க்கு. அதுக்குள்ள 155 பின்னூட்டங்கள். நீங்க பெரிய ஆளுன்னு தெரியும். ஆனா..இவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியாது. அப்படியே இனியது கேட்கின்ல சேந்துட்டீங்கன்ன்னா....நல்லாயிருக்கும். :)

said...

தூள் கெளப்புங்க கொத்ஸ் (கொத்ஸ் னு சொல்லலமில்லை). படிக்க மட்டுமில்ல. கும்மி அடிக்கவும் நிறைய பேர் ரெடி.

said...

நட்சத்திர ஆனதுக்கு வாழ்த்துக்கள் கொத்ஸ்.

said...

ஏங்க, வாழ்த்த வந்தாக் கூடவா சந்தேகம்? பின்னூட்டம் போடலைன்னா படிக்கலைன்னு அர்த்தம் இல்லை. உங்க கோனார் நோட்ஸைப் படிச்சதின் பலன் தான் எனக்கு 50-க்கு மேலே ஏறாமல் பார்த்துக்கறேன். :P

said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாழ்த்தறேன், கொத்ஸ்!

வழக்கம் போல, ஆரம்பமே அசத்தல் அப்படி, இப்படின்னு சொல்லாம, ஒருவாரம் இந்தப் பக்கமே வரவேணாம்னு முடிவு செய்ய வெச்சதுக்கு ரொம்ப நன்றி!

கலக்கி வூடு கட்டுங்க!

மொத்தமா வந்து படிக்கறேன்!
:))

வாழ்த்துகள்!

said...

//வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

கலக்குங்க.//

ரமத, வாழ்த்துக்களுக்கு நன்றி.

//இதுக்கப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு ?)))//

யூ டூ?

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ்!//

ரவி, நன்றி.

//போச்சு...இந்த வாரப் பின்னூட்டம் எல்லாம் வெண்பாப் பின்னூட்டமா இல்லை அன்பா, பின்னூட்டமா?//

என்னங்க போச்சு? இப்படி வருத்தப்படறீங்க. போகட்டும்!

வெண்பாப் பின்னூட்டம், மதன்பாப் பின்னூட்டம் என்ன வேணா போடுங்க. இட் இஸ் ஓக்கே.

said...

//ஆறு விளையாட்டுக்கு அடுத்தது, ஏழு விளையாட்டு தானே! அதான் ஏழு நாளும் ஏழு விளையாட்டு!//

விளையாட்டுதானே விளையாடிடலாம். வினையாகாம இருந்தா சரி.

//எது எப்படியோ ஏழு நாளும், ஏழரை நொடிகளாகப் பறக்கப் போகுது போங்க! நாங்க ரெடி!!//

ரொம்ப எக்ஸ்பெக்டேஷனோ? பயமா இருக்கே....

said...

//ஸ்டார் வீக் பானம் என்னவோ?
ஜிகிர் தண்டா இல்லாது புது பானத்தை அறிமுகப்படுத்துங்க தலைவா...

அபி அப்பா சொல்றா மாதிரி பக்கார்டில லெமனான்னு கேக்கப்பிடாது :-)))

"எலேய், கொத்தனார் பதிவுல கூழ் ஊத்தறாங்க டேய்!" -ன்னு நாங்களும் ஓடியாந்துடறோம்!//

ஆஹா. ஒரு நாளைக்கு ஐடியா கிடைச்சாச்சு, போடலாம்.

said...

//நீங்களே இப்படி சொன்னா, எங்க கதி என்னாவது :)//

கட் பேஸ்ட் பத்தி பேசும் போது நீங்களே இப்படிச் சொல்லலாமா பாபா? அப்புறம் எங்க கதி என்ன ஆவறது? :)))

said...

//நீங்க ஏற்கனவே க்ளீன் ஸ்லேட் என்று நெனச்சேனே :P//

அல்மோஸ்ட்தானே. அல்ரெடி இல்லையே.... :))

said...

//ப்ளாகரை ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் செய்த வீரர் வாழ்க.. வாழ்க.. . :)//

பாபா, உங்க கிட்ட இருந்து இவ்வளவு பின்னூட்டமா? பயமாவே இருக்கே... :))

said...

//கருத்துக்கணிப்புக்கு முன் மதுரை மாதிரி என்று சொல்லுங்க!//

மக்கள்களா,இதைச் சொன்னது நான் இல்லை. தீர விசாரிப்பதே மெய். அதுக்கு அப்புறம் சரியான அட்ரசுக்கு ஆட்டோ அனுப்புங்கப்பா. :)

said...

//@இலவசம்.ஏழரை யாருக்கு எங்களுக்குத்தானே//

உங்களுக்கான்னு தெரியலை. ஏன்னா நீங்க நம்ம பதிவு எல்லாத்தையும் படிக்கிற மாதிரி தெரியலையே!! :)

ஆனா தமிழ்மணத்துக்குன்னு சொல்லியாச்சே. அதனால எல்லாருக்கும் சேர்த்துதான். :)

said...

//இந்தா...போய்ப் பாருங்க! எவ்வளவு பெரீய்ய்ய்ய்ய் அநியாயம் நடந்திருக்குதுன்னு தெரியும்!//

கே.ஆர்.எஸ்., ராசா. அதெல்லாம் அந்தக்கால பதிவு ராசா. அதுக்கு எல்லாம் இப்போ பிக பண்ணாதீங்க. ஏற்கனவே நிறையா பேரு ரொம்ப ரென்சனாகி இருக்காங்க.

said...

//Pitcher Beer'ஆகா பின்னூட்டங்கள் பொங்கி வழிய வேண்டிக்கொல்கிறேன்.... :)//

நல்ல வேளை எந்த கடை பிட்சர் அப்படின்னு வெவரமெல்லாம் சொல்லாம விட்டீங்களே. ஹிஹி...

said...

//மக்கள்களா, ஒரு 5 மணி நேரம் கார் ஓட்டணும். நண்பர் வீட்டுக்குப் போன உடனே பதில் போடறேன். நன்றி.//

கூட்டத்தில் 5 மணி நேரம் ஏழு மணி நேரமாகிப் போச்சு. அதான் லேட்.

(நம்ம பின்னூட்டத்துக்கு எல்லாம் பதில் போடறது கொஞ்சம் ரொம்ப டூமச்தான் இல்ல?) :))))

said...

//வாழ்த்துக்கள் இ கொ.. :-)//

நன்றி மங்கை!

said...

//தல அடுத்த பதிவு எப்ப?//

இந்தியாவில் மக்கள் எல்லாம் ஆபீஸ் வந்த பின் தான். அதானே நம்ம பாலிஸி. :)

//லேட்டஸ்டா வருவீங்கன்னு நம்பிகிட்டு உக்காந்திருந்தா... இப்படி லேட்டாக்கிட்டே இருக்கீங்களே.//

அதான் ஊரில் இல்லைன்னு சொன்னேனே. அப்புறமுமா இவ்வளவு ரென்சன் போடறது?

said...

//மொதல்ல பிடிங்க - வாழ்த்துக்கள்.//

நன்றி ஐயா.

//அதென்னங்க உங்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் இருக்கிற உறவு இப்படி ஸ்ட்ராங்கா இருக்கு ..
அடிச்சி ஆடுறீங்களே ..//

அதாங்க எனக்கும் தெரியலை. எல்லாம் நம்ம நண்பர்கள் ஆதரவும் உங்களை மாதிரி 'பெரியவங்க' ஆசியும்தான் போல!! :))

//சும்மாவே கிளப்புவீங்க .. இப்ப ஸ்டார் வேற .. நடத்துங்க.//

நாராயண! நாராயண! அப்படின்னு கிளப்பற விஷயத்தை எல்லாம் பத்தி சொல்லலையே. :-D

said...

//ஒண்ணுமில்லைங்க ..முந்தின பின்னூட்டம் என்னுது .. என்னுதுதான் அப்டின்னு சொல்றதுக்குத்தான் வந்தேன்.//

அது தெரியாதா? அதான் ஐயா, பெரியவங்க அப்படின்னு உங்களுக்கு பிடிச்ச வார்த்தை எல்லாம் சொல்லியாச்சே.

//அப்ப வர்ட்டா ..?//

அப்ப, இப்ப, எப்பவுமே வரலாமே...

said...

//வாழ்த்துக்கள் கொத்ஸ்!//

நன்றி மணி!!

said...

//நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.//

நன்றி ராகவண்ணா.

//போட்டது ஒரு பதிவு. அதுல எழுதுனது நாலஞ்சு வரி. மிச்சமிருக்குற மூனு வரிகள் பழைய பதிவுகளுக்கு லிங்க்கு. அதுக்குள்ள 155 பின்னூட்டங்கள். நீங்க பெரிய ஆளுன்னு தெரியும். ஆனா..இவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியாது.//

அண்ணா, பின்னூட்டம் வந்தா பெரிய ஆளா? இதெல்லாம் குறைகுடம் (நான் நிறையாத குடம் அப்படின்னு சொல்ல வந்தேன். அந்த பதிவரைப் பத்தி இல்லை) அதான் சத்தம் ஜாஸ்தி இருக்கு. நீங்க எல்லாம் நிறைகுடம்.

// அப்படியே இனியது கேட்கின்ல சேந்துட்டீங்கன்ன்னா....நல்லாயிருக்கும். :)//

அங்க வந்தும் கும்மி அடிக்கணுமா? விடுங்க தலைவா? அந்த பதிவு குவாலிட்டியே வேற, நான் எல்லாம் எப்படி?

said...

//தூள் கெளப்புங்க கொத்ஸ் //

செஞ்சுருவோம்.

//(கொத்ஸ் னு சொல்லலமில்லை).//

ஊரே அப்படித்தானே கூப்பிடுது, எல்லாம் ஒரு பெருசு வெச்ச பேரு.

//படிக்க மட்டுமில்ல. கும்மி அடிக்கவும் நிறைய பேர் ரெடி.//

அப்படியா? ஆச்சரியமா இருக்கே. கும்மிதான் அடிக்க ரெடின்னு நினைச்சேன். படிக்கக் கூடவா செய்யறாங்க?

said...

//நட்சத்திர ஆனதுக்கு வாழ்த்துக்கள் கொத்ஸ்.//

சந்தோஷம் சந்தோஷ்.

said...

//ஏங்க, வாழ்த்த வந்தாக் கூடவா சந்தேகம்? பின்னூட்டம் போடலைன்னா படிக்கலைன்னு அர்த்தம் இல்லை.//

ஹிஹி. நானும் அப்படிச் சொல்லலை. ஆனாலும்.....

// உங்க கோனார் நோட்ஸைப் படிச்சதின் பலன் தான் எனக்கு 50-க்கு மேலே ஏறாமல் பார்த்துக்கறேன். :P//

அடடா, வரவர உகு திலகமாகிட்டீங்களே.

said...

//லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாழ்த்தறேன், கொத்ஸ்!//

ரொம்ப நன்றி எஸ்.கே. (நீங்க கேப்டன் ரசிகருன்னு இல்ல நினைச்சேன்.)

//வழக்கம் போல, ஆரம்பமே அசத்தல் அப்படி, இப்படின்னு சொல்லாம, ஒருவாரம் இந்தப் பக்கமே வரவேணாம்னு முடிவு செய்ய வெச்சதுக்கு ரொம்ப நன்றி!//

நீங்க மட்டும் வராம இருந்துடுவீங்களோ? பகல் 10 மணி வரை தமிழ்மணம் பார்க்காம இருக்க முடியுமா? கை கால் எல்லாம் உதற ஆரம்பிச்சு, ஒரு வழியா ஆகிட மாட்டீங்க? அதுல நம்ம தலைப்பு பார்த்து சொடுக்காம இருந்தீங்கன்னா, எதோ பிராப்பளம். நல்ல டாக்டரா போயி பாருங்க.

//கலக்கி வூடு கட்டுங்க!//

அது செய்யலாம்.

//மொத்தமா வந்து படிக்கறேன்!
:))//

படித்தால் மட்டும் போதுமா? :-D

வாழ்த்துகள்!

said...

தலைவர் பின்னூட்டப் புயலார் அவர்களின் நட்சத்திர வாரத்தில் கும்மி (கும்பி) அடிக்க வந்திருக்கும் பெரியோர்களையும் ஆன்றோர் சான்றோர் என அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

தேவ்
அகில உலக பின்னூட்டப் புயல் கொத்தனார் தலைமை மன்றம்
கொட்டிவாக்கம்
சென்னை

said...

செயல் தலைவரே, எங்க இப்படி காணாம போயிட்டீங்க? எதிரிக் கட்சியினரின் சதியா?

இப்பவாவது வந்தீரே. தொழிலைக் கவனியும்.

said...

வாழ்த்துக்கள் கொத்தனாரே!! :-)

said...

நன்றி சிவிஆர்.

said...

நல்ல செய்தி:

ஏழரையில் ஒன்னரை போச்சு....

மிச்சம் ஆறே ஆறு தான் என்று தமிழ் பதிவுலகிற்கு கூறி கொள்கிறேன்.

said...

புலி, என்னய்யா எண்ணற. இரண்டு வந்தாச்சு தெரியுமில்ல. (இன்னும் ஒரு பதிவுக்கு எக்ஸ்ட்ரா போடணுமுன்னா மேட்டருக்கு நான் எங்க போக?)

said...

//செயல் தலைவரே, எங்க இப்படி காணாம போயிட்டீங்க? //

செயல் தலைவர் செயல் படாமல் போய் பல காலம் ஆச்சு...


//எதிரிக் கட்சியினரின் சதியா? //

இதுக்கு எதிரி கட்சி வேற சதி செய்யனுமாக்கும்....

//இப்பவாவது வந்தீரே. தொழிலைக் கவனியும். //

ஏதோ வந்து வாழ்த்திட்டு போவோம் என்று வாழ்த்திட்டு ஒடியே போயிட்டார், உம்ம செயல் தலைவர்.

அவர் தூக்கிட்டு வேற ஆக்டிவா இருக்குற ஒரு நல்ல ஆளா பிடிச்சு போடும்மய்யா...

said...

//புலி, என்னய்யா எண்ணற. இரண்டு வந்தாச்சு தெரியுமில்ல. (இன்னும் ஒரு பதிவுக்கு எக்ஸ்ட்ரா போடணுமுன்னா மேட்டருக்கு நான் எங்க போக?) //

நான் எங்க பதிவ எண்ணினேன், நாளை தான் எண்ணினேன்.... உமக்காக மேட்டர் பஞ்சம்... இல்ல நம் நாட்டில் தான் மேட்டரு இல்லை.... எடுத்து தரவா கொஞ்சம்

said...

புலி....இங்கே கண்டிப்பாக 200 அடிக்கனுமா?

said...

உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லமா போச்சு

said...

//இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டது அய்யனார் மற்றும் துர்காவிற்காக. வந்த ஆபாசங்களில் இதுதான் கொஞ்சம் பெட்டர்.

//

எங்கள் பெயரை சொல்லி escape ஆகுறீங்க.சரி விடுங்க.இப்படியே கும்மி அடிக்கிறோம்.

said...

//நான் எங்க பதிவ எண்ணினேன், நாளை தான் எண்ணினேன்....//

அதுவும் ரெண்டு நாள் ஆச்சய்யா

//உமக்காக மேட்டர் பஞ்சம்... இல்ல நம் நாட்டில் தான் மேட்டரு இல்லை.... எடுத்து தரவா கொஞ்சம்//

மேட்டர் பஞ்சம், நேரப் பஞ்சம், பணப் பஞ்சம் அப்படின்னு ஒரு பஞ்சப்பாட்டுதான் பாடணும்.

said...

இரட்டை சதம் அடித்தது யாரு இல்ல அடிப்பது யாரு