இருந்தாலும் அவரு கேட்ட கேள்வி நம்ம மனசுலையே சுத்திக்கிட்டு இருந்தது. அவருகிட்ட அழகுன்னா என்னன்னு சொல்லிட்டோம். அதன் படி அழகுன்னா நாம என்ன நினைக்கிறோம், அடுத்தவங்க என்ன நினைக்கறாங்கன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருந்தது. தன் பயித்தியக்காரத்தனம் என்னென்னன்னு லிஸ்ட் போட்ட மக்கள், தங்கள் பார்வையில் எது அழகுன்னு சொல்லாமலேயா இருக்கப் போறாங்க அப்படின்னு தோணுனதுனாலதான் இந்தப் பதிவு. இது வெறும் பதிவு மட்டும் இல்லைங்க. இது அடுத்த தொடர் விளையாட்டின் ஆரம்பம். அந்த தொடர்
அழகுகள் ஆறு!
அதாவதுங்க, அழகுன்னா ஐஸ்வர்யா ராய் என்ற அளவோட நிக்காம நம்ம பார்வையில் அழகான முகம், இடம், நிகழ்வு, குறும்பு, பரிசு என நீங்கள் அனுபவித்த அழகு ஐந்தையும் எந்த அழகான விஷயம் உங்களுக்குக் கிடைக்கவில்லை அல்லது விரும்புகிறீர்கள் என்பதையும் சேர்த்து ஆறு விஷயங்களைப் பத்திச் சொல்லலாமே. பதிவு, பின்னூட்டம் எல்லாம் சொல்லி இருக்கலாம், ஆனா ஏற்கனவே நம்ம பேர் ரிப்பேர் ஆகிக் கிடக்கிற இந்த நேரத்தில் அதெல்லாம் கேட்டு சொ.செ.சூ வெச்சுக்க வேண்டாமேன்னு அதை எல்லாம் சாய்ஸில் விட்டாச்சு. சரி, இந்த ஆறு அழகுகள் பற்றி நீங்கள் எழுத வேண்டும். எழுதிய பின் உங்களுக்குப் பிடித்த மூவரை கூப்பிட்டு எழுதச் சொல்ல வேண்டும். இதுதான் அழகுகள் ஆறு விளையாட்டு. விளையாடறவங்க எல்லாரும் "அழகுகள் ஆறு " என்றே தமிழ்மணத்தில் குறிச்சொல் தந்தால் தேடிப் படிக்க எளிதாக இருக்கும்.
சரி. ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா. முதலில் என்னோட ஆறு அழகுகள்.
1. முகம்
அழகான முகம் அப்படின்னு சொல்லும் போது உடனே மனதில் பல முகங்கள் வந்து போகின்றன. சில நேரங்களில் சில முகங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. ஹேர்கட் பண்ணிவிட்டு வீட்டுக்குப் போகும் பொழுது கடை வாயில்களில் இருக்கும் கண்ணடிக் கதவில் நம் முகத்தைப் பார்த்துக் கொள்வது, மேனேஜரிடம் சண்டை போட்டுவிட்டு வந்து நம் இருக்கையில் அமரும் பொழுது மேஜையில் இருக்கும் நம் குடும்பத்தாரின் முகம், சமீபத்தில் வாழ்நாள் விருது வாங்கிய என்றும் இளமையோடு இருக்கும் ரேகாவின் முகம், தேவர் மகன் படத்தின் பாதியில் சிகையலங்காரம் மாற்றி, தாடி எடுத்துப் பெரிய மீசையுடன் வந்து நம்மை ஆவெனப் பார்க்கச் செய்த கமல் முகம் என்று முகங்கள் பல இருந்தாலும், இத்தனை முகங்களுக்கு நடுவே ஒரு முகம் கொஞ்சம் அதிக அழகாக இருக்கும். அது உன்னுடன் முதல் வகுப்பில் அமர்ந்த முதல் நண்பியாக இருக்கலாம், கன்றுக் குட்டிக் காதல் வந்த அந்தப் பெண்ணாக இருக்கலாம் அல்லது உடன்பிறவா சகோதரியான பக்கத்து வீட்டு பத்மா அக்காவாக இருக்கலாம். அது போல் ஒரு முகம் எனக்குள்ளும் இருக்கிறது. அது எனக்கு மட்டுமேவாக இருந்துவிட்டுப் போகட்டுமே!
2. இடம்
இடத்திற்கும் பஞ்சமில்லை. எத்தனையோ இடங்கள். சலசலவென ஓடும் தாமிரபரணி ஆற்றின் நடுவே இருக்கும் பாறை, சிருங்கேரியில் துங்கா நதியில் காலை நனைத்தவாறு அமர்ந்திருக்கும் படித்துறை, நயாகரா நீர்வீழ்ச்சியில் நம் மீது தண்ணீர் விழும்படி நிற்க முடிந்த Cave of the winds, பிராத்தனா ட்ரைவ் இன் தியேட்டர், அமைதியான கோயில் பிரகாரங்கள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இவைகளுக்கு எல்லாம் மேல் எனக்கு அழகான ஒரு இடம் நான் வசித்த ஒரு வீட்டில் மா மரத்தின் கீழே இருந்த துணி தோய்க்கும் கல்தான். அதன் கீழ் அமர்ந்து சந்தோஷப் பட்ட, துக்கப்பட்ட, என்னை நானே கேள்விகள் பல கேட்டுக் கொண்ட தருணங்கள் பல. இன்று அந்த வீடும் இல்லை அந்த கல்லும் இல்லை. இருப்பதெல்லாம் வெறும் நினைவுகள்தான்.
3. நிகழ்வு
இதுக்கு ரொம்ப போட்டி இல்லைங்க. என் மகன் பிறந்து சில நிமிடங்களுக்குப் பின்னால் அழகாக ஒரு துணியில் சுற்றப்பட்டு நம்ம கையில் தரப்பட்டான் பாருங்க. உண்மையில் அந்த தருணத்துக்கு ஈடே இல்லைன்னு நினைக்கிறேன். நான் ஒரு தந்தை என்ற உணர்வாகட்டும், குழந்தையின் முகமாகட்டும், அவன் மீது நம் விரல் பட்ட ஸ்பரிசமாகட்டும், அதாங்க அழகு! இன்னும் சிலரைக் கேட்டா முதலில் சொன்ன முகத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமுமே அவங்களுக்கு அழகுதான்னு சொல்லுவாங்க. இல்லைன்னா சொல்ல முடியும்!
4. குறும்பு
நான் சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு போன் வந்தது. அந்தக் குரல் அமெரிக்காவில் இருக்கும் என் நண்பியின் (உறவும் கூடத்தான் ஆனால் உறவுக்கெல்லாம் மேல் நட்புதான்!) குரலைப் போலவே இருந்தது. உடனே உற்சாகத்தில் நானும் பேச ஆரம்பித்து விட்டேன். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் வந்து கொண்டிருந்தது. ஒரு அரை மணி நேரத்திற்கு பின்னால்தான் ஒரு கேள்விக்கு சொதப்பலாய் பதில் வர நான் பேசுவது வேறு யாருடனோ எனத் தெரிய வந்தது. உண்மையிலேயே அது ராங் நம்பர். அப்புறம் அவர்களோடு அடிக்கடி போனில் பேசுவது உண்டு. சென்னையில் இருந்த வரை நல்ல நண்பர்களாக இருந்த நாங்கள் பார்த்துக் கொண்டதே கிடையாது. சென்னை விட்டு வந்த பின் தொடர்பு விட்டுப் போனது. இன்று இணையத்தில் முகம் பார்த்திராமல் இத்தனை நண்பர்கள் இருந்தாலும் அன்றே அப்படி ஒரு நட்பு கிடைத்ததற்குக் காரணம், ராங் நம்பர் என்று சொல்லி பேச்சை நிறுத்திடாமல் வளர்த்த அவர்களின் குறும்புதானே! (நான் செய்த குறும்பைச் சொல்லி சொ.செ.சூ வைத்துக் கொள்வேன் என்று நினைத்தவர்களுக்கு என் அனுதாபங்கள்!!)
5. பரிசு
இதுவும் எவ்வளவு வேணாலும் எழுதற மேட்டர். பரிசு கிடைக்கிறது சின்னவங்களா இருந்தாலும் சரி, பெரியவங்களா இருந்தாலும் சரி, மனதில் ஒரு சந்தோஷம் வரது ஒரு இயற்கையான விஷயம்தான். இதைப் பத்தி சொல்லணுமுன்னா படிச்சப்போ வாங்கின பரிசுகள், குடும்பத்தார் தந்த பரிசுகள், மணமாகும் முன், மணமான பின் அப்படின்னு ஆரம்பிக்கலாம். தங்கமணியைக் கேட்டா நான் அவங்களுக்குன்னு செஞ்ச பிரத்யேகமான வாழ்த்து அட்டையைச் சொல்லலாம். (ஒரு காலத்தில் விளம்பரத் துறையிலும் இருந்தோமில்ல. நண்பர் ஒருவரின் கம்பெனி மூலம் நம்ம ஐடியா, கோவையில் விளம்பரப் பலகையா ஜொலிச்சு இருக்கு!) இல்லைன்னா எதிர்பாராத நேரத்தில் பையன் தரும் முத்தத்தைச் சொல்லலாம். எல்லாமே பரிசுதான். ஆனா வாழ்க்கையில் சில நட்புகள் அமையறதுதாங்க இருக்கிறதுலயே பெரிய பரிசு. அது அப்பா, அக்கா அப்படின்னு கூட இருக்கலாம். அந்த மாதிரி ஒரு நட்புதாங்க நம்ம வாழ்க்கையில் கிடைச்ச பெரிய பரிசு.
6. இல்லாத அழகு
நம் நாட்டில் எவ்வளவோ அழகு இருக்கு. ஆனா பாருங்க எவ்வளவு அழகு இருந்தாலும் நமக்கு நல்லா வெச்சுக்கத் தெரியலை. நாம தினமும் போய் வர ரோடாகட்டும் இல்ல ஒரு அமைதிக்காகச் செல்லும் ஒரு அருவியாகட்டும் எங்க போனாலும் நாம போயிட்டு வந்த சுவடா குப்பையைப் போட்டுட்டு வரதுல நாமதான் கிங். நம்ம நாட்டை விட்டுட்டு வெளிய வந்தாலே இது அவ்வளவு மோசமா இருக்கறது இல்லை. ஏன் நாம் மட்டும் இப்படி இருக்கோம்? வளர்ந்தவர்களை ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா பள்ளியில் பசங்களுக்குச் சொல்லித் தந்தால் அவர்களாவது நன்றாக வைத்துக் கொள்வார்களா? கற்றுக் கொடுப்பவர் வெளியில் போய் குப்பையை விட்டெறிவதை மாணவர்கள் பார்த்தார்களானால் அவர்களுக்கு சொல்லித் தந்ததைச் செய்யத் தோணுமா? இதுக்கு என்னதான் வழி?
சரி. நான் ஆடறது ஆடியாச்சு. அடுத்து ஆடறவங்களைக் கூப்பிட வேண்டியதுதான். சரி, ஒரு மூணு பேரைக் கூப்பிடலாம். அவங்க அழகை நாமளும் தெரிஞ்சுக்கலாம். ஒரு சிறு ஓடையாய்த் தொடங்கி இருக்கும் 'அழகுகள் ஆறு' என்ற தொடரைப் பெரிய ஆறா ஓடவிடும் பொறுப்பை இவங்க தலையில் வெச்சுடலாம். நான் அழைக்க விரும்பும் மூவர்
- தம்பி (நம்மளை இப்படி ஒரு தினுசா யோசிக்க வெச்சதுனால)
- துளசி டீச்சர்
- வல்லி சிம்ஹன் அம்மா
105 comments:
அழகுகள் ஆறு ஆட்டம் ஆரம்பம். அனைவரும் ஆதரவளியுங்கள்!!
ஆகட்டும். ஆதரவு அளிக்கின்றோம், ஆறுதலாக அடுத்தவாரம்:-)
வந்துட்டேன்:-)) படிச்சுட்டு வர்ரேன்!
ஆதரவு கொடுத்தாச்சு.
இரண்டு, மூன்றுநாள் கழித்து ஆறுதல
அறுவை இல்லாமல் அனுப்புகிறேன்.
ரசிச்ச சாப்பாடு கூட அழகுதானே.
சாமீ?
இயற்கை?
//ஆகட்டும். ஆதரவு அளிக்கின்றோம், ஆறுதலாக அடுத்தவாரம்:-)//
அஞ்சு அதிகமா? ஆறு அதிகமா?
அஞ்சே அதிகம்தான். ஆனா ஆறு அதைவிட அதிகம் அப்படின்னு அறுக்கக்கூடாது!! :)))
கொத்ஸ்,
நீங்க ஒரு ஆணாதிக்கவாதி இல்லைனு நிருபிக்க மூணுல ரெண்டு பேர் பெண் பதிவர்களாக அழைத்தாலும் யாரும் ஒத்துக்கொள்ள போவதில்லை...
அது என்ன wierdல ஆண் அழகுல பெண்கள்???
ஆண்களுக்கு wired தேட கஷ்டமா இருக்கும் பெண்களுக்கு மற்ற பொருட்கள்ல அழகு தேட கஷ்டமா இருக்கும்னு நீங்க யோசிச்சி பண்ணது கண்டிப்பா எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்க...
இருந்தாலும் துளசி டீச்சரும், வள்ளி அம்மாவும் நீங்க நினைக்கிற கேட்டகிரில இல்லை :-))
அதனால சாதரணமா six அடிப்பாங்க...
இப்பத்தான் வியர்டு முடிஞ்சுது. அதுக்குள்ளே இதென்ன புது விளையாட்டு,
நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கெல்லாம்!
உன்னை யாரு இப்ப கூப்ட்டாங்கன்றீங்களா!
அதுவும் சரிதான்!
ஜூட்!
நல்லாதான் இருக்கு இந்த கூத்து, நடத்துங்க, நமக்கு அழகுன்னா தீபாவெங்கட் தாம்பா:-))
அழகான ஆட்டமா... ம்ம்ம் நல்லா இருக்கு தலைவரே...
"அழகுகள் ஆறு
அருமை ஆக
இருக்குது
அம்மணிகள் ஆதரவும் பலம்மாக
இருக்குது"
துளசி டீச்சரும் வல்லி சிம்ஹன் அவங்களும் குடுக்கற ஆதரவைச்சொல்ரேங்க
ஆக குறும்புன்னு தலைப்புப் போட்டு நீங்க புல்லி பண்ண செய்திகளை மறைத்து உங்களை யாரோ புல்லிப் பண்ணியதாய் சொல்லி அதுவும் ஒரு பெண் புல்லி பண்ணியதாய் சொல்லி மீண்டும் நீங்கள் ஒரு ஆணியவாதி... ( இது ஆணியோடு சம்பந்தப் படுத்த வேண்டாம்.. ஆண்களோடு சம்பந்தப்பட்டது) என்று நிருபித்துள்ளீர்கள்...
மன்ற கண்மணி SHRIDHAR வெங்கிட் எங்கிருந்தாலும் உடனே வா.. தலைவருக்கும் புல்லிகளிடம் இருந்து பாதுகாப்பு தேவை...
ரொம்ப அழகான பதிவு! அப்படின்னு சொல்லிட்டு வெறும்ன போயிடலாமா என்ன?
//எனக்கு மட்டுமேவாக இருந்துவிட்டுப் போகட்டுமே!//
யப்பா.. கொத்தனாரோட தங்கமணிக்கு இத C&P பண்ணி மெயில்தட்டுங்கப்பா...
//உடனே உற்சாகத்தில் நானும் பேச ஆரம்பித்து விட்டேன்//
//நான் செய்த குறும்பைச் சொல்லி சொ.செ.சூ வைத்துக் கொள்வேன் என்று நினைத்தவர்களுக்கு என் அனுதாபங்கள்!!//
உளறுவாயன் என்பதை கன்பர்ம் பண்றீங்க. நல்லது. மேலே சொன்னது: ரிப்பீட்டேய்!
வளர்ந்தவங்களை ஏன் ஒண்ணும் செய்ய முடியாது? சிங்கப்பூர் போனா சும்மா இருக்கறதில்ல. ஆத்திரத்த போலவே அதையும் அடக்கலாமே. குப்பையையும் கைல வச்சுகிட்டு தேடலாம். ஆனா உமம் பாஷைல சொன்னா, தொட்டிய தேடுறவரைக்கும் நமக்கு கிடைக்கிற லுக்குகள் ஒரு அழகு.
அழகு ஆயிரம் உலகம் முழுவதும். இதுல ஆறு மட்டும் சொல்லனும்னா எப்பிடி? ஆறு அழகுதான். அதுனாலதான் ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்னு ஔவையாரு சொல்லீருக்காங்க. இந்த ஆறில்லா பதிவுக்கு அழகு பாழ்னு நீங்க சொல்றீங்க. இப்பத்தான் "நான் பைத்தியம் பைத்தியம்"னு கும்மரிச்சம் போட்டக் கூட்டம் அமைதியாயிருக்கு. அதுக்குள்ள அழகு. நடக்கட்டும். நடக்கட்டும்.
அழகு....
ஏகப்பட்ட அழகு இருக்கே, ஏத சொல்ல ஏதை விட....
//ஆண்களுக்கு wired தேட கஷ்டமா இருக்கும் பெண்களுக்கு மற்ற பொருட்கள்ல அழகு தேட கஷ்டமா இருக்கும்னு நீங்க யோசிச்சி பண்ணது கண்டிப்பா எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்க...//
பத்த வச்சுட்டியே பரட்ட.....
//நமக்கு அழகுன்னா தீபாவெங்கட் தாம்பா:-)) //
இந்த டிவி சீரியல் நடிக்குமே அதாங்க....
ஏன்ய்யா உம்ம வயசு என்ன அந்த புள்ள வயசு என்ன.... அது சரி அழகை ரசிக்க வயது எதற்கு.... கண்ணோட்டம் தானே முக்கியம்.... ஒரு குழந்தை பீலிங்ல சொல்லுறீங்க... அப்படி தானே தொல்ஸ்....
அழகுகள் ஆறு...
அன்பே ஆரூயிரேய விட இந்த தலைப்பு நல்லாத்தான் இருக்கு...
தேவையில்லாத சச்சரவுகளுக்கு இடம் தருகிற பதிவுகள விட இந்த மாதிரியான சிந்தனைகள் நல்லாத்தான் இருக்கு..
தொடரட்டும்...
ஆஹா....அடுத்த ஆட்டமா தலைவா ;-)))
கலக்கல இருக்கு உங்க அழகுகள் ஆறு
//ஏன்ய்யா உம்ம வயசு என்ன அந்த புள்ள வயசு என்ன.... அது சரி அழகை ரசிக்க வயது எதற்கு.... கண்ணோட்டம் தானே முக்கியம்.... ஒரு குழந்தை பீலிங்ல சொல்லுறீங்க... அப்படி தானே தொல்ஸ்.... //
புலி வேண்டாம் வுட்டுடு, 28 ல்லாம் சின்ன வயசுதான்:-))
கூப்பிட்ட தாய்க்குலங்கள் ரெண்டு பேரும் படிச்சதைச் சொல்லிட்டாங்க. இந்த தம்பியைக் காணுமே!!
கொத்ஸ்! நீங்க கூப்பிட்ட விஷயம் தம்பிக்கு தெரியாது. இன்னும் 15 நிமிஷத்துல சுறு சுறுன்னு வந்து கும்முவார் பாருங்க:-))
தல வந்துட்டேன்!
//அழகுன்னா ஐஸ்வர்யா ராய் என்ற அளவோட நிக்காம நம்ம //
எந்த உலகத்துல இருக்கிங்க நீங்க கொத்ஸ், ராய்க்கு அதிகாரபூர்வமா ரைட்ஸ் வாங்கிட்டாங்க. அதுவுமில்லாம அவங்ககிட்ட அழகு காணாம போய் ரொம்ப நாள் ஆச்சி. இப்பலாம் சேச்சிகள் ராஜ்ஜியம் நடக்குது
அகாங்..
ஒரு வழியா இப்பத்தான் வியர்டு முடிஞ்சது அதுக்குள்ள அ.ஆ வா ?
தாங்கல சாமீ ஆனாலும் தொடர் விளையாட்டுக்கள் ஜோர்தான்.
ஜோர்!
//புலி வேண்டாம் வுட்டுடு, 28 ல்லாம் சின்ன வயசுதான்:-)) //
தீபா வெங்கட்டுக்கு 28 வயசு ஆச்சா... பாக்க சின்ன புள்ள மாதிரி இருக்குனு நானும் பல தடவை சைட் அடிச்சு இருக்கேனே.... :-(
//எந்த உலகத்துல இருக்கிங்க நீங்க கொத்ஸ், ராய்க்கு அதிகாரபூர்வமா ரைட்ஸ் வாங்கிட்டாங்க. அதுவுமில்லாம அவங்ககிட்ட அழகு காணாம போய் ரொம்ப நாள் ஆச்சி. இப்பலாம் சேச்சிகள் ராஜ்ஜியம் நடக்குது அகாங்.. //
தம்பி, ஒரு குறுகிய வட்டத்தில் யோசித்து உன் குறுகிய மனபான்மையை இப்படி வெளியில் காட்டி விட்டாயே....
ராய் இன்னும் அழகு தான் என்ன சொல்லுற... ஒத்துக்கோ... அப்பால நான் அன்னை தெரசா வரைக்கும் போக வேண்டியது இருக்கும்.
//ஆதரவு கொடுத்தாச்சு.
இரண்டு, மூன்றுநாள் கழித்து ஆறுதல
அறுவை இல்லாமல் அனுப்புகிறேன்.//
வல்லியம்மா, உங்க பதிவைப் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்.
//ரசிச்ச சாப்பாடு கூட அழகுதானே.
சாமீ?
இயற்கை?//
ஆமாம். சாப்பாடு அழகு இல்லாம வேற எது? இயற்கை அழகே அழகு!! :))
அதான் இடம்,நிகழ்வு அப்படின்னு தலைப்புகள் இருக்கே. அடிச்சி ஆடுங்க.
கொத்ஸ் உங்க புண்ணியத்துல இதுவரைக்கும் வியர்டா இருந்த தமிழ்மணம் இப்போ அழகா ஆகப்போகுது.
இகொ,
சீச்சி! என்ன சின்னப்பிள்ளைத்தனமான பதிவு இது? இதையே சாக்கா வைச்சு ஒரு நிலா படம், ஒரு ஐஸ்வர்யா படம்னு பதிவை ஒரு கில்மாவா போடாம வெறும் பத்தி பத்தியா போட்டிருகீங்க?! படிக்கவே வறட்சியா இருக்கு.
நல்ல படங்களா நாலு போட்டாத்தான் திரும்பவந்து பதிவை முழுசா படிப்பேன் சொல்லிட்டேன்.
/*அழகுகள் ஆறு ஆட்டம் ஆரம்பம். அனைவரும் ஆதரவளியுங்கள்!! */
இ.கொ,
வரும் அழகுகள் ஆறுப் பதிவுகளை வாசித்து, பின்னூட்டம் எழுதி என் ஆதரவை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
/* தேவையில்லாத சச்சரவுகளுக்கு இடம் தருகிற பதிவுகள விட இந்த மாதிரியான சிந்தனைகள் நல்லாத்தான் இருக்கு..*/
ஜோசப் ஐயா அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்.
பிரசண்ட் சார்.....வீட்டுக்கு வந்தும் வேலை பார்க்க சொல்லுறாய்ங்கே... முடிச்சிட்டு வந்துறேன் :)
அழகை அழகா சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...
கிறுக்கை பற்றி கிறுக்குவதை விட அழகினை ஆராய்தல் எவ்வளவோ மேல்.. :)
//சரி. நான் ஆடறது ஆடியாச்சு//
இது நியாயமா?? 5 பந்துக்களை தான் விளையாடியிருக்கீங்க
//1.அது எனக்கு மட்டுமேவாக இருந்துவிட்டுப் போகட்டுமே!//
இப்படி சொல்லி ஒரு பந்தை வைட் பாலாக்கிட்டீங்க.. :))
its beautiful, this blog post
//சும்மா அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்த பொழுது நம்ம தம்பி வந்து ஒரு சந்தேகம் கேட்டாரு//
அந்த பய என்னையே போட்டு பாடாப்படுத்தி எடுத்துட்டான் கொத்ஸ்....
//அது உன்னுடன் முதல் வகுப்பில் அமர்ந்த முதல் நண்பியாக இருக்கலாம், கன்றுக் குட்டிக் காதல் வந்த அந்தப் பெண்ணாக இருக்கலாம் //
ஹி ஹி என்க்கு நிறைய ஞாபகம் இருக்கு :)
வாய்யா வெட்டி, உமக்கு பேசாம நாரதர் அப்படின்னு பேர் வெச்சுடலாமா?
//நீங்க ஒரு ஆணாதிக்கவாதி இல்லைனு நிருபிக்க மூணுல ரெண்டு பேர் பெண் பதிவர்களாக அழைத்தாலும் யாரும் ஒத்துக்கொள்ள போவதில்லை...//
வேண்டாம்.
//அது என்ன wierdல ஆண் அழகுல பெண்கள்???//
ஏற்கனவே நமக்கு பேரு பெத்த பேரு. இதுல அவங்க கிட்ட போயி நீ பயித்தியம்தானேன்னு கேட்டு வேற சொ.செ.சூ வெச்சுக்கணுமா? அழகுன்னா இந்த பிரச்சனை இல்லை. அதான் இப்படி. நீர் வேற எதாவது சொல்லி நம்மளை ப்ரொபைலிங் பண்ணுற அளவுக்குப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க.
//இருந்தாலும் துளசி டீச்சரும், வள்ளி அம்மாவும் நீங்க நினைக்கிற கேட்டகிரில இல்லை :-))//
அவங்க நான் நினைக்கும் கேட்டகிரிதான். அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப யோசிச்சுதான் கூப்பிட்டு இருக்கேன். :))
//அதனால சாதரணமா six அடிப்பாங்க...//
அது தெரிஞ்சுதானே கூப்பிட்டது!!
//உண்மையிலேயே அது ராங் நம்பர். அப்புறம் அவர்களோடு அடிக்கடி போனில் பேசுவது உண்டு//
அந்த நம்பரை மறக்காம டைரியில் குறிச்சு வச்சிருக்கீங்களா இல்லயா?
சரி, அது என்ன உங்களுக்குன்னு வர ராங் நம்பரெல்லாம் பெண்மணிகள் கிட்ட இருந்தே வருது?
ஒரு வேளை பெண்கள் மட்டும் தான் ராங் நம்பர், போடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
வெட்டி - நோட் திஸ் பாயிண்ட்! இது தான் மறைமுக ஆணாதிக்கத்தனம்! :-)
ஆறு அது ஆழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல...
ஆறு அது ஆழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல...
//அந்த தொடர்
அழகுகள் ஆறு!
//
டிவி சீரியல் மாதிரி ஒரு தொடர் முடியும்போதே அதே ஸ்லாட்ல அடுத்த தொடர் உடனே ஆரம்பிக்கறீங்களே எப்படிங்க?? :))
தூள்பா. நல்ல மேட்டரு.
இப்படி தத்துவத்தோட முடிச்சது இன்னும் சூப்பரு :)
//பள்ளியில் பசங்களுக்குச் சொல்லித் தந்தால் அவர்களாவது நன்றாக வைத்துக் கொள்வார்களா? கற்றுக் கொடுப்பவர் வெளியில் போய் குப்பையை விட்டெறிவதை மாணவர்கள் பார்த்தார்களானால் அவர்களுக்கு சொல்லித் தந்ததைச் செய்யத் தோணுமா? இதுக்கு என்னதான் வழி?//
பதிவு நல்லாத்தான் இருக்கு..''டிவி சீரியல் மாதிரி ஒரு தொடர் முடியும்போதே அதே ஸ்லாட்ல அடுத்த தொடர் உடனே ஆரம்பிக்கறீங்களே எப்படிங்க?? :)) // - இதுவும் நல்லா இருக்கு.ஆனா இதை இன்னும் அஞ்சு பேரு, ஆறு பேருக்கு தலைல கட்டிறத விட ஒவ்வொரு ஆளா மாட்டிவிட்டா, linear ஆக போயிட்டு இருக்குமே .. நல்லா இருக்குமில்லையா..
//மன்ற கண்மணி SHRIDHAR வெங்கிட் எங்கிருந்தாலும் உடனே வா.. தலைவருக்கும் புல்லிகளிடம் இருந்து பாதுகாப்பு தேவை...//
குட்மார்னிங் ஆபிசர்! தோ... வந்துட்டோம்ல...
இ. குரு,
Beauty is in the Beholder's eyes அப்படின்னு சொல்லுவாங்க. உங்க பார்வையும் அழகாவே இருக்கு. நீங்கள் ரசித்த இடங்கள், தருனங்கள் பலவும் நானும் ரசித்தவையே. உதாரணமாக 'cave of the winds'. அது ஆயிற்று 5 வருடங்கள். இன்னும் கண் முன்னாடியே நிற்கிறது. கடந்த வாரம்தான் நீங்கள் சொன்ன 'அழகான நிகழ்வு' எனது வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நல்லதொரு விளையாட்டை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். நன்றி!
இருப்பது இல்லாமல் போகும்பொழுது அழகு இருக்கலாம். இல்லாமல் இருக்கும் பொழுது அழகு இருக்கலாம். இல்லாதது இல்லாததாகவே இருக்கும்பொழுது அது அழகாக இருக்குமா இல்லையா?
இல்லாத அழகு இருக்கும் எது?
அது எப்படி ஆறில் அடங்கும்?
ஹ்ம்ம்ம்... வந்ததுக்கு ஒரு 'உருப்படியான' கேள்வி கேட்டாச்சு. அப்பீட்டேய்!!!
//இப்பத்தான் வியர்டு முடிஞ்சுது. அதுக்குள்ளே இதென்ன புது விளையாட்டு,
நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கெல்லாம்!//
ஒரு வியர்டு பதிவுக்கு ரெண்டு போட்ட விந்தை மனிதரே, அழகைப் பத்தி பேச உங்களுக்கா கசக்கப் போகுது. என்ன, கவுஜ போட்டு படுத்துவீங்களோன்னுதான் பயமா இருக்கு!!
//உன்னை யாரு இப்ப கூப்ட்டாங்கன்றீங்களா!
அதுவும் சரிதான்!
ஜூட்!//
உங்களுக்கும் காலம் வரும்.
காலம் வந்தால் பதிவு வரும்.
பதிவு வந்தால் அனைவருமே படித்திருப்போமே!!
//நல்லாதான் இருக்கு இந்த கூத்து, நடத்துங்க, நமக்கு அழகுன்னா தீபாவெங்கட் தாம்பா:-))//
நோ கமெண்ட்ஸ். To each his own!!
//அழகான ஆட்டமா... ம்ம்ம் நல்லா இருக்கு தலைவரே...//
இது வெறும் முதல் அடிதான். கொஞ்சம் சூடு பிடிச்சு எல்லாரும் எழுதட்டும் அப்போ இருக்கு பார் ஆட்டம்!!
"அழகுகள் ஆறு
அருமை ஆக
இருக்குது //
நன்றி. நன்றி.
//அம்மணிகள் ஆதரவும் பலம்மாக
இருக்குது"//
இதைப் படிக்கும் போது நிறையா பேருக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வரப் போகுது!
//துளசி டீச்சரும் வல்லி சிம்ஹன் அவங்களும் குடுக்கற ஆதரவைச்சொல்ரேங்க//
டீச்சரும் வல்லியம்மாவும் எப்பவும் குடுக்காத ஆதரவா! அவங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க!!
//நீங்க புல்லி பண்ண செய்திகளை மறைத்து உங்களை யாரோ புல்லிப் பண்ணியதாய் சொல்லி அதுவும் ஒரு பெண் புல்லி பண்ணியதாய் சொல்லி மீண்டும் நீங்கள் ஒரு ஆணியவாதி...//
இந்த Bully விஷயத்தை விட மாட்டேங்கறீரே!!! இதுல துணைக்கு வேற ஆளைச் சேர்த்துக்கறீரு.
//ரொம்ப அழகான பதிவு! அப்படின்னு சொல்லிட்டு வெறும்ன போயிடலாமா என்ன?//
கூடாது கூடாது. கூடவே கூடாது.
//யப்பா.. கொத்தனாரோட தங்கமணிக்கு இத C&P பண்ணி மெயில்தட்டுங்கப்பா...//
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!
//உளறுவாயன் என்பதை கன்பர்ம் பண்றீங்க. நல்லது. மேலே சொன்னது: ரிப்பீட்டேய்!//
அதான் அங்கங்க போயி வாயைக் குடுத்து வாங்கிக்கறதுலயே தெரியலை. என்னமோ நீர் கண்டுபிடிச்சா மாதிரி கதை விடறீரு?
//வளர்ந்தவங்களை ஏன் ஒண்ணும் செய்ய முடியாது? சிங்கப்பூர் போனா சும்மா இருக்கறதில்ல. ஆத்திரத்த போலவே அதையும் அடக்கலாமே.//
செய்யலாம். அது அடக்குமுறையால்தான் முடியும். அது நம்ம ஊரில் எந்த அளவு சாத்தியமுன்னு தெரியலை. குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்து பழக்கி விட்டோம் என்றால் இந்தப் பிரச்சனையே இல்லையே.
//குப்பையையும் கைல வச்சுகிட்டு தேடலாம். ஆனா உமம் பாஷைல சொன்னா, தொட்டிய தேடுறவரைக்கும் நமக்கு கிடைக்கிற லுக்குகள் ஒரு அழகு.//
இதைச் சொல்லறீங்களே. பல முறை பெசண்ட் நகர் பீச்சுக்குப் போகும் போது சும்மா இருக்காமல் கீழே இருக்கும் குப்பையை பொறுக்கிப் போட்டதும், அப்பொழுது உடன் வந்த நண்பர்களே பார்த்த பார்வையும் கூட அழகுதான். :(
வாங்க ஜிரா,
//அழகு ஆயிரம் உலகம் முழுவதும். இதுல ஆறு மட்டும் சொல்லனும்னா எப்பிடி? //
ஆமாங்க அண்டமே அழகு. ஆனாப் பாருங்க ஆறு சொல்லறதுக்குள்ள பதிவு இவ்வளவு பெரிசாப் போச்சு.
//ஆறு அழகுதான். அதுனாலதான் ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்னு ஔவையாரு சொல்லீருக்காங்க. இந்த ஆறில்லா பதிவுக்கு அழகு பாழ்னு நீங்க சொல்றீங்க//
ஆமாங்க. ஆனா ஒண்ணு. ஏற்கனவே போட்ட ஆறு பதிவு இந்த கணக்கில் வராது. ஹிஹி.
//நடக்கட்டும். நடக்கட்டும்.//
ஆறுன்னு சொல்லிட்டு நடக்கட்டும் அப்படின்னு சொன்னா எப்படி? ஓடட்டும் அப்படின்னு சொல்லுங்கய்யா. :)
புலி,
//அழகு....
ஏகப்பட்ட அழகு இருக்கே, ஏத சொல்ல ஏதை விட....//
அதுக்குத்தான் ஒரு அரை டஜன் அழகு எடுத்துக் குடுத்து இருக்கோமில்ல. யோசிச்சு வையும்.
//பத்த வச்சுட்டியே பரட்ட.....//
அதுல உமக்கு இம்புட்டு சந்தோஷமா? நீரும் நம்ம கட்சிதான் அதை மறந்துடாதீரும்.
//ஏன்ய்யா உம்ம வயசு என்ன அந்த புள்ள வயசு என்ன.... அது சரி அழகை ரசிக்க வயது எதற்கு.... //
அதே அதே!!
டிபிஆர்,
வாங்க வாங்க.
//அன்பே ஆரூயிரேய விட இந்த தலைப்பு நல்லாத்தான் இருக்கு...//
நன்றி.
//தேவையில்லாத சச்சரவுகளுக்கு இடம் தருகிற பதிவுகள விட இந்த மாதிரியான சிந்தனைகள் நல்லாத்தான் இருக்கு..//
ஒரு விளையாட்டு முடியும் போது அடுத்ததை ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம்தான் ஐயா.
//ஆஹா....அடுத்த ஆட்டமா தலைவா ;-)))
கலக்கல இருக்கு உங்க அழகுகள் ஆறு//
நன்றி கோபிநாத். :)
//புலி வேண்டாம் வுட்டுடு, 28 ல்லாம் சின்ன வயசுதான்:-))//
40க்குப் பக்கத்தில் 28 சின்ன வயசுதான். ஆனா 16க்குப் பக்கத்தில்?
//கொத்ஸ்! நீங்க கூப்பிட்ட விஷயம் தம்பிக்கு தெரியாது. இன்னும் 15 நிமிஷத்துல சுறு சுறுன்னு வந்து கும்முவார் பாருங்க:-))//
அபி அப்பா, நீர் சொல்லி முடிச்சதும் அவரு வந்தாச்சே! ஒரு வேளை நீர்தான் தம்பியா?
//தம்பி said...
தல வந்துட்டேன்!//
அபி அப்பா, சாரி, தம்பி
போன கேள்வியைப் பாருங்க. :))
//எந்த உலகத்துல இருக்கிங்க நீங்க கொத்ஸ், ராய்க்கு அதிகாரபூர்வமா ரைட்ஸ் வாங்கிட்டாங்க. அதுவுமில்லாம அவங்ககிட்ட அழகு காணாம போய் ரொம்ப நாள் ஆச்சி. இப்பலாம் சேச்சிகள் ராஜ்ஜியம் நடக்குது
அகாங்..//
தம்பி (அபி அப்பா?)
எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்கலைன்னா எப்படி? சிலது சீசனல் அழகு சிலது நிரந்திர அழகு. அப்புறம் அவங்களோட நிக்காம அதையும் தாண்டிப் புனிதமானது, ச்சீ அழகானதுன்னு வந்துக்கிட்டே இருக்கணும் இல்லையா.
//ஒரு வழியா இப்பத்தான் வியர்டு முடிஞ்சது அதுக்குள்ள அ.ஆ வா ?
தாங்கல சாமீ ஆனாலும் தொடர் விளையாட்டுக்கள் ஜோர்தான்.//
முடிஞ்சுதா? இன்னும் வியர்டு பதிவு வந்துக்கிட்டு இருக்குது கண்மணி. ஆமாம் எல்லா விளையாட்டுக்களும் ஜோர்தான். அதான் ஆரம்பிச்சாச்சு. உங்க டர்னுக்கு ரெடியா இருங்க.
//Boston Bala said...
ஜோர்!//
இலவசக்கொத்தனார் said...
நன்றி! :))
//தீபா வெங்கட்டுக்கு 28 வயசு ஆச்சா... பாக்க சின்ன புள்ள மாதிரி இருக்குனு நானும் பல தடவை சைட் அடிச்சு இருக்கேனே.... :-(//
புலி, ஏம்ப்பா இப்படி வயசு வயசுன்னு... பார்க்கிறதும் சரி, பார்க்கிறவங்களும் சரி, வயசு எல்லாம் கணக்கே இல்லைப்பா.
//தம்பி, ஒரு குறுகிய வட்டத்தில் யோசித்து உன் குறுகிய மனபான்மையை இப்படி வெளியில் காட்டி விட்டாயே....//
கரெக்ட் கரெக்ட்!!
//ராய் இன்னும் அழகு தான் என்ன சொல்லுற... ஒத்துக்கோ... அப்பால நான் அன்னை தெரசா வரைக்கும் போக வேண்டியது இருக்கும்.//
நல்லா பேசறப்பா. பேசாம இந்தியா போயி ஒரு கட்சியில் சேர்ந்துடு. பெரிய ஆளா வருவ!
//கொத்ஸ் உங்க புண்ணியத்துல இதுவரைக்கும் வியர்டா இருந்த தமிழ்மணம் இப்போ அழகா ஆகப்போகுது.//
அழகான தமிழ்மணத்தைப் பார்க்க எனக்கும் ஆசைதான் மணி!!
//இளவஞ்சி said...
இகொ,//
வாத்தியாரய்யா. நீங்களா நம்ம பக்கம் வந்திருக்கறது. ஐய்யய்யோ, கையும் ஓடலை காலும் ஓடலையே..நான் என்னத்த செய்வேன்.... :)
//சீச்சி! என்ன சின்னப்பிள்ளைத்தனமான பதிவு இது? இதையே சாக்கா வைச்சு ஒரு நிலா படம், ஒரு ஐஸ்வர்யா படம்னு பதிவை ஒரு கில்மாவா போடாம வெறும் பத்தி பத்தியா போட்டிருகீங்க?! படிக்கவே வறட்சியா இருக்கு.//
நிலாவா? சரிதான் நானே தேவலாம் போல இருக்கு. ரேகா படம், ஐஸ் படம் எல்லாம் எடுத்து வெச்சேன். ஆனா பதிவு இம்புட்டு நீளமாப் போச்சா அதான் சென்சார் பண்ணிட்டேன் தல.
//நல்ல படங்களா நாலு போட்டாத்தான் திரும்பவந்து பதிவை முழுசா படிப்பேன் சொல்லிட்டேன்.//
இப்படி எல்லாம் அடம் பிடிக்கப் பிடாது. நல்ல படியா படிச்சுட்டு கருத்தைச் சொல்லுங்க. உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் படப் பதிவே போடலாம்.
//இ.கொ,
வரும் அழகுகள் ஆறுப் பதிவுகளை வாசித்து, பின்னூட்டம் எழுதி என் ஆதரவை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.//
//ஜோசப் ஐயா அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்.//
நன்றி வெற்றி.
//பிரசண்ட் சார்.....வீட்டுக்கு வந்தும் வேலை பார்க்க சொல்லுறாய்ங்கே... முடிச்சிட்டு வந்துறேன் :)//
ராயலு, இந்த சின்ன வயசுல இம்புட்டு வேலை செய்யறயே. உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. :))
அழகை அழகா சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்...//
ஏஸ், முதல் முறை நம்ம பதிவில் பின்னூட்டமுன்னு நினைக்கிறேன். நன்றி.
//கிறுக்கை பற்றி கிறுக்குவதை விட அழகினை ஆராய்தல் எவ்வளவோ மேல்.. :)//
:))
//இது நியாயமா?? 5 பந்துக்களை தான் விளையாடியிருக்கீங்க//
இல்லீங்களே ஆறு பந்து போட்டாச்சு. சரியாப் பாருங்க.
//1.அது எனக்கு மட்டுமேவாக இருந்துவிட்டுப் போகட்டுமே!//
இப்படி சொல்லி ஒரு பந்தை வைட் பாலாக்கிட்டீங்க.. :)) //
ஹிஹி இதெல்லாம் கண்டுக்கப் பிடாது. :))
//பத்மா அர்விந்த் said...
its beautiful, this blog post//
பத்மா, வந்து இந்த மாதிரி உற்சாகப் படுத்தினதுக்கு நன்றி.
//அந்த பய என்னையே போட்டு பாடாப்படுத்தி எடுத்துட்டான் கொத்ஸ்....//
ராயலு, இதெல்லாம் ஒரு சந்தர்ப்பம். நானும் படுத்தாதேன்னு சொல்லிட்டுப் போய் இருந்தா இந்த ஆட்டம் எப்படி?
//ஹி ஹி என்க்கு நிறைய ஞாபகம் இருக்கு :)//
வெயிட் பார் யுவர் டர்ண்! :)))
//அந்த நம்பரை மறக்காம டைரியில் குறிச்சு வச்சிருக்கீங்களா இல்லயா?//
கே.ஆர்.எஸ். முதலில் ஒரு பத்து நாள் அவங்கதான் போன் பண்ணுவாங்க. அப்புறம் ஒரு நம்பிக்கை வந்த பிந்தான் நம்பரே தந்தாங்க. ஆனா அது இப்போ நம்ம கிட்ட இல்லை.
//சரி, அது என்ன உங்களுக்குன்னு வர ராங் நம்பரெல்லாம் பெண்மணிகள் கிட்ட இருந்தே வருது?//
யோவ் ஒரே ஒரு தடவை வந்ததுக்கு இப்படி ராங் நம்பரெல்லாஆஆஆம் அப்படின்னு இழுக்கறது உமக்கே நல்லா இருக்கா?
//ஒரு வேளை பெண்கள் மட்டும் தான் ராங் நம்பர், போடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
வெட்டி - நோட் திஸ் பாயிண்ட்! இது தான் மறைமுக ஆணாதிக்கத்தனம்! :-)//
ஏற்கனவே வெட்டிக்கு நாரதர் பட்டம் தந்தாச்சு. அவருக்கு யாராவது அஸிஸ்டெண்ட் இருக்காங்களா? உமக்குத்தான் புராணம் தெரியும். நீரே சொல்லும். உமக்கு அந்தப் பட்டம் தந்திடலாம். :)
//ஆறு அது ஆழமில்ல.. அது சேரும் கடலும் ஆழமில்ல...//
கப்பி, யூ டூ? இதுக்கு அடுத்த வரியை என்னைப் பாட வெச்சு மீண்டும் எனக்கு ஆ.ஆ. (அ.ஆ. இல்லை சரியாப் படியுங்க) பட்டம் வாங்கித் தரப் பாக்கறீங்க இல்லை. :-X
//டிவி சீரியல் மாதிரி ஒரு தொடர் முடியும்போதே அதே ஸ்லாட்ல அடுத்த தொடர் உடனே ஆரம்பிக்கறீங்களே எப்படிங்க?? :))//
அது அப்படித்தான். நாம செய்யலைன்னா அந்த ஸ்லாட் போயிடும் பாருங்க. அதான் அப்படி. ஹிஹி.
//தூள்பா. நல்ல மேட்டரு.//
டாங்க்ஸ் சர்வே!
//இப்படி தத்துவத்தோட முடிச்சது இன்னும் சூப்பரு :)//
யோவ் அது தத்துவமாய்யா? அழுது புலம்பல். நம்ம நாட்டை நாம அழகா வெச்சுக்கலைன்னா எப்படி? :((
//பதிவு நல்லாத்தான் இருக்கு..''டிவி சீரியல் மாதிரி ஒரு தொடர் முடியும்போதே அதே ஸ்லாட்ல அடுத்த தொடர் உடனே ஆரம்பிக்கறீங்களே எப்படிங்க?? :)) // - இதுவும் நல்லா இருக்கு.//
நன்றி ஐயா நன்றி!!
//ஆனா இதை இன்னும் அஞ்சு பேரு, ஆறு பேருக்கு தலைல கட்டிறத விட ஒவ்வொரு ஆளா மாட்டிவிட்டா, linear ஆக போயிட்டு இருக்குமே .. நல்லா இருக்குமில்லையா..//
இப்போ சுடர் நீங்க சொல்லுவது போல் நேர் கோட்டில்தான் செல்கிறது. ஆனாப் பாருங்க அதன் ஓட்டம் ரொம்பவே நிதானம். அது ஒருவரிடம் கொடுக்கப்பட்டு அவருக்கு உடன் அதனை தொடர முடியவில்லை என்றால் ஒரு தேக்கம் ஏற்படுகிறது.
இதற்கு நேர் எதிர் விந்தை விளையாட்டு மற்றும் முன்பு நடந்த நாலு ஆறு விளையாட்டுக்கள். அதிகம் பேரைக் கூப்பிட்டு ஒரே களேபரம். எங்கு பார்த்தாலும் அந்தப் பதிவுகள்தான். அது மட்டுமில்லாமல் சீக்கிரமே முடிந்து விட்டது.
அதனாலதான் இந்த நடுநிலை(!). ஆறில் பாதி மூணு அப்படின்னு மூணே மூணு பேரைக் கூப்பிடறது. சரிதானே?
//Beauty is in the Beholder's eyes அப்படின்னு சொல்லுவாங்க. உங்க பார்வையும் அழகாவே இருக்கு. நீங்கள் ரசித்த இடங்கள், தருனங்கள் பலவும் நானும் ரசித்தவையே. உதாரணமாக 'cave of the winds'. அது ஆயிற்று 5 வருடங்கள். இன்னும் கண் முன்னாடியே நிற்கிறது.//
ஆமாம் ஸ்ரீ.வெ., அற்புதமான இடம். இன்னும் ஒரு முறையாவது போக வேண்டும். :)
//கடந்த வாரம்தான் நீங்கள் சொன்ன 'அழகான நிகழ்வு' எனது வாழ்க்கையிலும் நிகழ்ந்தது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.//
ஆஹா! வாழ்த்துக்கள். அப்புறம் இங்க என்ன வேலை? போய் அங்க இருமய்யா. :))
//நல்லதொரு விளையாட்டை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். நன்றி!//
நன்றி நன்றி.
//இருப்பது இல்லாமல் போகும்பொழுது அழகு இருக்கலாம். இல்லாமல் இருக்கும் பொழுது அழகு இருக்கலாம். இல்லாதது இல்லாததாகவே இருக்கும்பொழுது அது அழகாக இருக்குமா இல்லையா?//
விசு உங்களுக்கு என்ன உறவு? மாமாவா சித்தப்பாவா? :)))
//இல்லாத அழகு இருக்கும் எது?
அது எப்படி ஆறில் அடங்கும்?//
நமக்கு வேண்டும் என்ற இடங்களில் நமக்கு வேண்டும் என்ற அழகு இல்லாமல் போவது. நான் சொன்னா மாதிரி நாட்டு நடப்பா இருக்கலாம். இல்லை உங்க வாழ்க்கையில் நடந்ததாக இருக்கலாம். மிஸ் ஆனதாகவும் இருக்கலாம், வராத காதலாகவும் இருக்கலாம். Make a wish!! :)))
//அதுக்குத்தான் ஒரு அரை டஜன் அழகு எடுத்துக் குடுத்து இருக்கோமில்ல. யோசிச்சு வையும். //
யோசிச்சு ஒரு கவுஜு சொன்னேன் அது எப்படி இருந்துச்சு.... ;-)
//அதுல உமக்கு இம்புட்டு சந்தோஷமா? நீரும் நம்ம கட்சிதான் அதை மறந்துடாதீரும். //
இது உள்கட்சி விவகாரம் தானே!
//நல்லா பேசறப்பா. பேசாம இந்தியா போயி ஒரு கட்சியில் சேர்ந்துடு. பெரிய ஆளா வருவ! //
நம்ம கட்சியவே பதிவு செய்தா என்ன? இல்லாட்டியும் ஒன்னும் பிரச்சனை இல்லை.... நமக்காக பல கட்சிகள் வெயிட்டிங்....
//அபி அப்பா, நீர் சொல்லி முடிச்சதும் அவரு வந்தாச்சே! ஒரு வேளை நீர்தான் தம்பியா?//
இந்த சந்தேகம் எல்லாருக்கும் வருதே என்ன விஷயம்?
அபி அப்பா அனுபவமுள்ள பழுத்த முதியவர்.
நானோ இப்பதான் 26ஐ தொட துடிச்சிகிட்டு இருக்கேன். எப்படிங்க ரெண்டு பேரும் ஒரே ஆளா இருக்க முடியும்...
//யோசிச்சு ஒரு கவுஜு சொன்னேன் அது எப்படி இருந்துச்சு.... ;-)//
தும்மல் வந்துச்சு. ஹச்சூ!
//இது உள்கட்சி விவகாரம் தானே!//
தான்!! :))
//நம்ம கட்சியவே பதிவு செய்தா என்ன? இல்லாட்டியும் ஒன்னும் பிரச்சனை இல்லை.... நமக்காக பல கட்சிகள் வெயிட்டிங்...//
இணையத்தில் ஏற்கனவே ப.ம.க. இருக்கு. அதனால பிரச்சனை இல்லை. ஆனா தமிழகத்துக்குப் போய் நம்ம கட்சியைப் பதிவு செஞ்சா பாதிக்குப் பாதி ஓட்டு அப்பவே போச்சே! என்ன செய்ய?
//இந்த சந்தேகம் எல்லாருக்கும் வருதே என்ன விஷயம்?//
எல்லாம் நடந்துக்கிற விதத்தினால்தான்.
//அபி அப்பா அனுபவமுள்ள பழுத்த முதியவர்.
நானோ இப்பதான் 26ஐ தொட துடிச்சிகிட்டு இருக்கேன். எப்படிங்க ரெண்டு பேரும் ஒரே ஆளா இருக்க முடியும்...//
அன்னியன், ரெமோ, அம்பி - இவங்க எல்லாம் ஒரே வயசுன்னு யாராவது சொன்னாங்களா? :))
அழகுகள் பற்றி அழகான பதிவு. அழகு உள்ளத்தைப் பொருத்தது. உருவத்தைப் பொருத்தது அல்ல.
நன்றி இரவி.
நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?
//இலவசக்கொத்தனார் said...
//இந்த சந்தேகம் எல்லாருக்கும் வருதே என்ன விஷயம்?//
எல்லாம் நடந்துக்கிற விதத்தினால்தான்.
//அபி அப்பா அனுபவமுள்ள பழுத்த முதியவர்.
நானோ இப்பதான் 26ஐ தொட துடிச்சிகிட்டு இருக்கேன். எப்படிங்க ரெண்டு பேரும் ஒரே ஆளா இருக்க முடியும்...//
அன்னியன், ரெமோ, அம்பி - இவங்க எல்லாம் ஒரே வயசுன்னு யாராவது சொன்னாங்களா? :)) //
அப்பாடா, பெரிய தீய பத்த வச்சுட்டீங்களே! இதுதான் சாக்குன்னு தம்பி "பழுத்த"ங்குறார். என்னப்பா நடக்குது இங்க:-))
ஏம்பா அனானி, நீ சொல்ற மேட்டருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்? இதே பின்னூட்டத்தை வேற பதிவுலையும் பார்த்தேன். ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பி இருக்கீங்களா?
பொண்ணு வேணுமுன்னா எதாவது மெட்ரிமோனி சைட் போங்க, இல்லை அந்த பெரியவர் சன் டிவியில் நடத்துறாரே அங்க போங்க. இங்க எல்லாம் வந்தா ரெண்டு பின்னூட்டம் வேணா கிடைக்கும் அம்புட்டுதான்.
//அப்பாடா, பெரிய தீய பத்த வச்சுட்டீங்களே! இதுதான் சாக்குன்னு தம்பி "பழுத்த"ங்குறார். என்னப்பா நடக்குது இங்க:-))//
நான் நீங்களும் தம்பியும் ஒரே ஆளுதான்னு நினைக்கிறேன் அப்படின்னு சொல்லறேன். அதுக்கு இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
//இணையத்தில் ஏற்கனவே ப.ம.க. இருக்கு. அதனால பிரச்சனை இல்லை. ஆனா தமிழகத்துக்குப் போய் நம்ம கட்சியைப் பதிவு செஞ்சா பாதிக்குப் பாதி ஓட்டு அப்பவே போச்சே! என்ன செய்ய?//
இந்த ப.ம.க -னு சொல்றீங்களே அது என்ன கட்சி? அதில 33% ஒதுக்கீடு எல்லாம் உண்டா? இதெல்லாம் தெரிஞ்சா உங்கள profiling பண்ண வசதியா இருக்கும். :-))
யோவ் உமக்கு இதே பொழப்பா போச்சி...அடுத்த செயின் ஆட்டமா...நடத்துமய்யா..
உங்க வியர்டு அழைப்புக்கு பதிவு போட்டாச்சு வந்து பார்க்கவும்...
//நான் நீங்களும் தம்பியும் ஒரே ஆளுதான்னு நினைக்கிறேன் அப்படின்னு சொல்லறேன். அதுக்கு இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். //
கலக்கல், அடுத்த பிரசனைக்கு சுழி போட்டாச்சா?;-))
கொத்ஸ்,
சொன்ன வண்ணம் செய்தாச்சு.
தப்பு கிப்பு இருந்தா பொறுத்துக்கணும்.
ரொம்ப நன்றி பா:-0)
ஸ்ரீ.வெ.
நீங்க புதுசா இருக்கறதுனால சும்மா விடறேன். இல்லை இந்த மாதிரி கேள்வி கேட்டதுக்கு உங்களை கட்டம் கட்டி முத்திரை குத்த வேண்டியது இருக்கும்.
இங்க போய் பாருங்க. அப்புறம் எதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க.
//யோவ் உமக்கு இதே பொழப்பா போச்சி...அடுத்த செயின் ஆட்டமா...நடத்துமய்யா..//
மானாட்டம் வண்ண மயிலாட்டம், இங்க வாலாட்டம் இல்லை இந்த செயினாட்டம்தான். உமக்கும் விரைவில் அழைப்பு வரும். அதையாவது நேரத்தோட போடுங்க.
//உங்க வியர்டு அழைப்புக்கு பதிவு போட்டாச்சு வந்து பார்க்கவும்...//
வந்து கருத்துச் சொல்லியாச்சுப் பார்க்கவும்.
//கலக்கல், அடுத்த பிரசனைக்கு சுழி போட்டாச்சா?;-))//
நாராயண! நாராயண! நான் என்னப்பா செய்கிறேன். எல்லாம் அவன் செயல்!
//சொன்ன வண்ணம் செய்தாச்சு.
தப்பு கிப்பு இருந்தா பொறுத்துக்கணும்.//
வல்லியம்மா, நம்மளையும் ஒரு பொருட்டா மதிச்சு பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி. வண்ணமயமான பதிவுதான். தப்பு என்னங்க தப்பு நம்ம பார்வையில் இதுதான் அழகுன்னு சொன்னா யாரு தப்புன்னு சொல்லப் போறாங்க!! :))
பில்லா ரங்கா பாட்ஷா தான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷாத்தான்!
வாஜி வாஜி சிவாஜி அடிக்கப்போற பலநூறுகளுக்கு இது ஒரு முன்னூட்டம்!
நூறு!
அதிரடீஈஈஈஈஈ.. ஜெகஜ்ஜோதீஈஈஈஈஈ
இகொ,
// நீங்களா நம்ம பக்கம் வந்திருக்கறது // நான் வந்து போய்க்கிட்டுதான் இருக்கேன். நீங்கதான் காட்டாறுல வெள்ளம் வந்தாப்புல ஓடற பின்னூட்டங்கள என்னை கண்டுக்கறதில்லை! :)
முகமும் பரிசு மேட்டரும் ரொம்ப நல்லா இருக்கு...
குறும்பு மேட்டருலதான் நீங்க அநியாயத்துக்கு நல்லவன்னு சொல்லறது கொஞ்சம் இடிக்குது! :)
//நூறு!//
யப்பா இதெல்லாம் சரியாத்தேன் செய்யறீக. :))
//நான் வந்து போய்க்கிட்டுதான் இருக்கேன். நீங்கதான் காட்டாறுல வெள்ளம் வந்தாப்புல ஓடற பின்னூட்டங்கள என்னை கண்டுக்கறதில்லை! :)//
அப்படியா? நார்மலா அப்படி நடக்காதே. மன்னிச்சுடுங்க. அடுத்த முறையில் இருந்து ஞாபகமா சிவப்புக் கம்பளத்தை விரிச்சு வைக்கிறேன். :))
//முகமும் பரிசு மேட்டரும் ரொம்ப நல்லா இருக்கு... //
நன்றிங்க. மத்த நண்பர்கள் சில பேரு இடம்தான் பெஸ்ட் அப்படின்னு சொல்லறாங்க. To each his own!!
//குறும்பு மேட்டருலதான் நீங்க அநியாயத்துக்கு நல்லவன்னு சொல்லறது கொஞ்சம் இடிக்குது! :)//
அந்த ஒரு விஷயத்தில்தானே அப்படி! அதான் டிஸ்கி எல்லாம் போட்டு நம்ம குறும்பை எல்லாம் கேட்கக் கூடாதுன்னு சொல்லியாச்சே!! :))
வெளியூர் போயிட்டு இப்ப தான் பதிவுகள் படிக்க வரேன். அ.ஆ. தலைப்பு பார்த்தவுடனே, அ.ஆ (அன்புடன் ஆண்டுவிழா!) கவிதைப் போட்டி பத்தி எழுதியிருக்கீங்க போலிருக்குன்னு குஷியா ஓடிவந்தேன்!! கடைசி நாள் வேற நெருங்கிட்டிருக்கே.. ஏப்ரல் 14! நீங்க போட்டிக்கு வெண்பா எழுதறதா இல்ல போலிருக்கு? ;-)
அம்மாடி சேதுக்கு அரசியே, உங்க போட்டிக்கு விளம்பரம் போடாதது என் தப்புதான் தாயே. அதுக்கு இன்னிக்கு ஒரு பரிக்காரம் பண்ணறேன்!
நமக்கு இந்த போட்டி எல்லாம் எதுக்கு. சும்மா அப்படியே வந்த வெண்பாவை வெளியிட்டுக்கலாம் என்ன. :)
Post a Comment