Tuesday, March 27, 2007

எக் மசாலாவும் எடுபட்ட பயலும்!!

நம்ம வீட்டுல எல்லாருக்கும் பிடிச்ச ஒரு ஐட்டம் முட்டை மசாலா. தமிழில் சொல்லணுமுன்னா எக் மசாலா. முழு முட்டையை வேக வெச்சு, க்ரேவி செஞ்சு அதுல போட்டு சாப்பிடற ஒரு மேட்டர் அது. ஆனாப் பாருங்க, நமக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தின்னு டாக்டர் சொன்ன உடனே முதலில் கட் ஆனது இந்த முட்டைதான். மஞ்சள் கருவில் ரொம்ப கொலஸ்ட்ரால் ஜாஸ்தியாமே. முட்டை வாங்கறது நின்னு போனதுனால இந்த ஐட்டம் செய்ய முடியாமப் போச்சு.

அப்புறமா Egg Substitutes எனப்படும் பதப்படுத்தப்பட்ட வெள்ளைக்கருவை வாங்க ஆரம்பிச்சோம். இதுல வந்து கொலஸ்ட்ரால், கொழுப்புச்சத்து எதுவுமே கிடையாது. அது திரவ வடிவில் அட்டை டப்பாவில் கிடைக்கும் சமாச்சாரம். ஆம்லேட் போன்ற முட்டையை உடைத்து அடித்து உபயோகப்படுத்தும் ஐட்டங்களுக்கு இது சரி வரும். ஆனாலும் எக் மசாலா செய்ய முடியாமலேயே இருந்தது. இந்த வார இறுதியில் சரி, புதுசா எதுனா செய்து பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஐட்டம் செய்யப் போக அது சூப்பராவே வந்தது. அதை உங்களோட பகிர்ந்துக்கத்தான் இந்தப் பதிவு.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - மீடியம் 1
பட்டாணி (உரித்தது) - 1 சிறிய கப்
வெங்காயம் - பெரிது 1 1/2
தக்காளி - பெரிது 1
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிதளவு
கசகசா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பொரிகடலை - 2 தேக்கரண்டி
மிளகு - 8
கொத்துமல்லி இலைகள் - அரை கப்
கறிவேப்பில்லை - கால் கப்
மஞ்சள் பொடி - சிறிதளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய்ப் பழம் - தாளிக்க
எண்ணெய், உப்பு தேவையான அளவு
முட்டை - 4

செய்முறை

  • உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டங்களாய் வெட்டி, பட்டாணியுடன் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். அரைகுறையாக வெந்திருந்தால் போதும்.
  • முட்டையை உடைத்து கலக்கி வைத்துக் கொள்ளவும். வெறும் வெள்ளையை எடுத்து அடித்து வைத்தால் உடம்புக்கு நல்லது.
  • தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, பூண்டு, இஞ்சி, சீரகம், கசகசா எல்லாவற்றையும் வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கி வைத்ததுடன் கொத்துமல்லி, கறிவேப்பிலை, பொரிகடலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்து வைத்துக் கொண்ட விழுதைப் போடவும். தேவையான அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் போடவும்.
  • அது நன்றாக காய்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வேக வைத்த காய்கறிகளைப் போட்டு கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நன்றாகக் கொதித்த பின் அதில் முட்டையை விட்டு நன்றாகக் கிளறவும்.
  • கொதிக்கும் க்ரேவி சட்டென்று நல்ல கெட்டியாகும். அதற்கேற்ற மாதிரி தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்.
  • சிறிது நேரம் கொதித்த பின் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம்.
  • கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்ப் பழத்தை தாளித்து க்ரேவியில் இடவும்.
  • காரம் வேண்டுபவர்கள் அதற்கேற்ப பச்சை மிளகாய் அதிகம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
  • உருளைக் கிழங்கு, பட்டாணியுடன் வேறு காய்கறிகளையும் போடலாம்.
  • அரைக்கும் பொழுது சிறிது தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.
சப்பாத்தி, ப்ரெட் போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். தோசை, இட்லியுடனும் சாப்பிடலாம். இது நானே முயன்று செய்த ஒரு ஐட்டம். அதனால் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எனச் சொன்னால் தெரிந்து கொள்வேன். இதுவே தொட்டுக் கொள்ளும் ஐயிட்டம் என்பதால் தொட்டுக் கொள்ள ஒன்றும் சொல்லவில்லை!

65 comments:

said...

யாராவது கேட்கும் முன் சொல்லிடறேன். எடுபட்ட பயல் நாந்தேன்.

(சும்மா ஒரு எதுகை மோனையா தலைப்பு வெச்சா என்னா வாரு வாரராங்கப்பா. )

said...

என்ன எதாவது சமையல் சானல் ஆரம்பிக்கும் உத்தேசமா?

முட்டையை வேகவைத்து மஞ்சளை தூக்கி எறிந்துவிட்டு வெள்ளையை மட்டும் சாப்பிட்டாலாமே.

உடைத்த முட்டையில் செயற்கை சாதனங்கள் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

said...

Has Thangamani gone to India??
(Second recipie of the month)

said...

சரி! நீங்க சொன்ன அளவு செஞ்சா கித்னா ஆத்மி துன்னலாம்:-))

said...

//Has Thangamani gone to India??
(Second recipie of the month) //

டுபுக்குக்கு வந்த வாழ்த்துகளைப் பாத்து ஐயா ஆசைப் பட்டுட்டாரோ.. யார் கண்டது:-))

said...

//சரி! நீங்க சொன்ன அளவு செஞ்சா கித்னா ஆத்மி துன்னலாம்:-))//
:)) ஆனாலும் நக்கலு. சரி கொத்ஸ் அப்படு துன்ன ஆத்மில கித்னா ஆத்மி உசுரோட இருப்பாங்க :))

said...

என்னாங்க கொத்தனாரே, முத்துலெட்சுமி அன் கோ-வுக்கு எதிர் கடை போடலாமுன்னு திட்டமோ?

said...

//தமிழில் சொல்லணுமுன்னா எக் மசாலா//

உங்க தமிள் அளகு

அன்புடன்...
சரவணன்.

said...

ஐயா கொத்தனாரே சொன்னதெல்லம் ஓரளவுக்கு ஓகே ஆனா கடைசியிலே சொன்னீங்க பாருங்க கடுகு,உ.பருப்பு தாளிப்பு அது முட்டை நான்வெஜ் அயிட்டெங்களுக்கு சரிவராது.வேணுமின்னா கிராம்பு,பட்டை தாளிக்கலாம்.

said...

தலைப்பு ஓகே...
அது என்ன.. நீங்க சாப்பிடாம மத்தவங்கள டெஸ்ட் பண்ணறீங்க.?
இது நல்லாயில்ல..

//சந்தோஷ் aka Santhosh said...
//சரி! நீங்க சொன்ன அளவு செஞ்சா கித்னா ஆத்மி துன்னலாம்:-))//
:)) ஆனாலும் நக்கலு. சரி கொத்ஸ் அப்படு துன்ன ஆத்மில கித்னா ஆத்மி உசுரோட இருப்பாங்க :)) //

இது மேட்டரு...

//
காட்டாறு said...
என்னாங்க கொத்தனாரே, முத்துலெட்சுமி அன் கோ-வுக்கு எதிர் கடை போடலாமுன்னு திட்டமோ? //

ஆல்ரெடி இங்க போட்டி அஞ்சப்பர், முனியாண்டி விலாஸ் ரேஞ்சுக்கு போகுது. விஷயம் தெரியாம நீங்க கேக்குறீங்க.. யப்பா.. எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன். சமைச்சதை சாப்பிட்டு பாத்து பதிவுல ஏத்துங்க. :))

சென்ஷி

said...

இங்கேயும் வந்துட்டோம்ல.. :-)

said...

அட,, நீங்க சூப்பரா சமைப்பீங்களா?

(இல்லை, இது தில் குல்ஃபி கதைபோல் சொதப்பிக்குமா?)

said...

//முட்டையை வேகவைத்து மஞ்சளை தூக்கி எறிந்துவிட்டு வெள்ளையை மட்டும் சாப்பிட்டாலாமே.//

அதானே!!!!

said...

//என்னாங்க கொத்தனாரே, முத்துலெட்சுமி அன் கோ-வுக்கு எதிர் கடை போடலாமுன்னு திட்டமோ? //

எதிரில் இடம் கிடைக்கல, அதான் பக்கத்திலே போட்டுட்டார்.

said...

ய்யொவ் இலவசம்

வெங்காயம் 11/2ன்னு போட்டிருக்கீரே. அப்படின்னா, அஞ்சரை வெங்காயம்னுதான அர்த்தம்? கொஞ்சம் வெளக்குமய்யா எடுப்பட்ட பயலே :-)

சாத்தான்குளத்தான்

said...

வி ஆர் வெஜி்டேரியன்ஸ்.

எனினும் ஒரு சந்தேகம்.

வெங்காயம் - பெரிது 1 1/2

ஒரு பெரிய வெங்காயம் ஒரு சிறிய வெங்காயம் எடுத்துக்கொள்ளலாமா ? இல்லை 3 சிறிய வெங்காயம் எடுத்துக்கொள்ளலாமா ?
:-) ;-) (ஒன்றரை சிரிப்பான் ?)

said...

//தமிழில் சொல்லணுமுன்னா எக் மசாலா. //

ஆரம்பமே வசூல்ராஜா கமல் மாதிரி கிண்டலோட ஆரம்பிக்குதே கொத்ஸ்

said...

அடிக்கடி சமையல் பதிவா போடுறீங்க.. இப்ப எல்லாம் நீங்க தான் சமையலா வீட்ல, கொத்ஸ்

said...

போட்டு தாக்குறீயளே...
செஞ்சு பாத்துட்டு சொல்றேன். வாசிக்கும் போது நல்லாத்தேன் இருக்கும் போல தெரியுது.

உம்ம செயின் போஸ்டுக்கு கொஞ்சம் டயம்குடுவே...நீரு பாட்டுக்கு சொல்லிப்புட்டீரு...கொஞ்சம் யோசிக்கவேண்டாமா...

said...

//வி ஆர் வெஜி்டேரியன்ஸ்.//

நானும் அப்படித்தான்.

said...

லப்-டப்பிற்கு எதிர் பதிவா இது?

ஒரே ஆளு 4 முட்டை சாப்பிட்டா உடம்பு என்ன ஆவுறது!

கூடவே உருளைக்கிழங்கும், எண்ணையும்!

கிழிஞ்சுது லம்பாடி லுங்கி!

என்னமோ பண்னுங்க !
:(

said...

//யாராவது கேட்கும் முன் சொல்லிடறேன். எடுபட்ட பயல் நாந்தேன்.//

இப்படி எடுபட்ட பயல் என்று உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளலாமா கொத்ஸ்?

எடுக்க எடுக்க, மீண்டும் பட்டுக் கொண்டே இருப்பது அட்சய பாத்திரம் அல்லவா?
அப்படின்னா நீங்க அட்சய பாத்திரமா? :-))

அதுவும் ஒரு வகையில சரி தான்!
பதி்வுகளை அட்சய பாத்திரம் போல் சுரந்து கொண்டே இருக்கிறீர்களே! ஆனாலும் பட்டம் எல்லாம் நாங்க தான் கொடுக்கோணும். நீங்களே எடுத்துக்கக் கூடாது!

யாரங்கே, பதிவுலக நளச் சக்கரவர்த்தி என்ற பட்டத்த எடுத்துகுன்னு வந்து நம்ம கொத்தனார் தலையில் சூட்டுங்கப்பா!!!!!

said...

//முட்டை - 4//

என்ன முட்டை என்று சொல்லவே இல்லையே! கூமுட்டை என்று எல்லாம் சொல்லக் கூடாது சொல்லிப்புட்டேன்! :-)))

அடுத்த ரெசிபி, கரியா? சாரி, கறியா? :-)))

said...

//யாராவது கேட்கும் முன் சொல்லிடறேன். எடுபட்ட பயல் நாந்தேன். //

தன்னிலை விளக்கம் தேவையில்ல தல.

said...

என்னங்க இது! முட்டைய உருளைக்கிழங்கு பட்டாணியோடல்லாம் கூட்டணி சேக்குறீங்க? இப்பல்லாம் முட்டையோட மஞ்சக்கருவ மட்டும் கலங்கால அலுங்காமக் குலுங்காமப் பிரிக்க பாத்திரங்க இருக்கு. அதப்பயன்படுத்திப் பாருங்க.

இந்த முட்டையோட வெள்ளைக்கருவ வெச்சி ஒரு லேசு ரெசிப்பி இருக்குய்யா....வடகம் அல்லது அப்பளத்தை எண்ணெய் இல்லாம பொரிச்சிக்கனும். மைக்ரோவேவ்ல அல்லது அதுக்குன்னே இப்ப வருதே. வேற வழியில்லாம எண்ணெய்ல பொரிச்சிக்கிட்டாலும் சரி.

அப்பளம்னா துண்டு துண்டா ஒடச்சிப் பொரிச்சிக்கோங்க. அடுப்புல வாணலிய வெச்சி......வெங்காயம் பச்சை மெளகாய் மட்டும் நறுக்கிப் போட்டு...எண்ணெய்லதாங்க..கொஞ்சமா விட்டுக்கோங்க....அதுல முட்டை வெள்ளைய ஒடச்சு ஊத்துங்க. மஞ்சக்கரு பிடிச்சவங்க அதையும் போட்டுக்கலாம். வெள்ளைக்கரு வேகும் முன்னாடியே பொரிச்சி வெச்ச அப்பளம் வடகமெல்லாம் அதுல கலந்து கிண்டுங்க. நல்லா வெந்ததும்...லேசா உப்புத்தூவி எறக்குங்க. அம்புட்டுதாங்க. அள்ளிக்கிட்டுப் போகும். பச்சை மெளகாய் பிடிக்காதவங்க....மெளகுப்பொடியும் போட்டுக்கலாம்.

said...

மிஸ்டர் எடுபட்ட பயல் அவர்களுக்கு,

இவ்வளவும் சொன்னீங்களே நாமே சமைச்சு பார்த்தா ருசி ருசி'ன்னு சொல்லுவாங்களே??? அது இருக்குமா???

said...

//லப்-டப்பிற்கு எதிர் பதிவா இது?

ஒரே ஆளு 4 முட்டை சாப்பிட்டா உடம்பு என்ன ஆவுறது!

கூடவே உருளைக்கிழங்கும், எண்ணையும்!
//

நாங்க அதெய்யலாம் தின்னுட்டு மறுநாள் காலையிலே ஜாக்கிங் போவோம், இல்லன்னா டிரெட்மில்'லே ஓடுவோம்.....

சரி இதிலே எதுவுமே செய்யலை'ன்னா கொஞ்சநாள் கழிச்சு உங்கக்கிட்டே ஊசிகுத்த வருவோம்...... வேற என்ன???

நான் சொன்னது சரியா எ.ப;)

said...

\\இராம் said...
மிஸ்டர் எடுபட்ட பயல் அவர்களுக்கு,

இவ்வளவும் சொன்னீங்களே நாமே சமைச்சு பார்த்தா ருசி ருசி'ன்னு சொல்லுவாங்களே??? அது இருக்குமா???\\

ராம் அண்ணே....இப்படி எல்லாம் கேட்டக்கூடாது.
பாவம் தல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-)

said...

//என்ன எதாவது சமையல் சானல் ஆரம்பிக்கும் உத்தேசமா?//

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை சிவாண்ணா. நமக்குத் தெரிஞ்சதைப் பிடிச்சதை எழுதலாமேன்னுதான். ஹிஹி.

//முட்டையை வேகவைத்து மஞ்சளை தூக்கி எறிந்துவிட்டு வெள்ளையை மட்டும் சாப்பிட்டாலாமே.//

லாமே. லாமே. பேஷா லாமே. ஆனா ஆம்லேட் போடும் போது எல்லாம் இந்த மஞ்சளைப் பிரிக்கறது கஷ்டமா இருக்கே. அதான் இப்படி.

//உடைத்த முட்டையில் செயற்கை சாதனங்கள் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.//

லேபிளைப் படித்த வரையில் அப்படி ஒண்ணும் தெரியலை. நம்ம டாக்டரும் ஓக்கே பண்ணுனாங்க. அதான் இப்படி.

said...

//Has Thangamani gone to India??
(Second recipie of the month)//

ஏங்க இப்படி எல்லாம்? அவங்க இருந்தா நான் சமயலறைப் பக்கம் வரக்கூடாதா? நீங்க இப்படி எதையாவது சொல்லிட்டுப் போயிடறீங்க. அப்புறம் ஃப்ரொபைலிங் ஆவறது என்னமோ நாந்தேன்...

said...

//சரி! நீங்க சொன்ன அளவு செஞ்சா கித்னா ஆத்மி துன்னலாம்:-))//

மூணு பேர் கட்டாயம் சாப்பிடலாம். நாலு பேர் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நீங்க எவ்வளவு பேர் சாப்பிடும் அளவுக்கு வருமுன்னுதானே கேட்டீங்க? எத்தை பேரை சாப்பிடலாமுன்னு இல்லையே!!

said...

//டுபுக்குக்கு வந்த வாழ்த்துகளைப் பாத்து ஐயா ஆசைப் பட்டுட்டாரோ.. யார் கண்டது:-))//

டுபுக்கு சமையல் குறிப்பு போட்டாரா? அது எப்போ? அவரு காமெடி கிங், நடிப்புத் திலகம், அவரைப் பார்த்து நான் சூடு போட்டுக்கிறதாவது....

said...

////சரி! நீங்க சொன்ன அளவு செஞ்சா கித்னா ஆத்மி துன்னலாம்:-))//
:)) ஆனாலும் நக்கலு. சரி கொத்ஸ் அப்படு துன்ன ஆத்மில கித்னா ஆத்மி உசுரோட இருப்பாங்க :))//

வாய்யா சந்தோசு, இப்போ சந்தோசமா? அவரு சொன்னது நக்கலு, ஆனா நீர் பாவம் அறியாப் புள்ள....

நல்லா இருங்கடா சாமிகளா...

said...

//என்னாங்க கொத்தனாரே, முத்துலெட்சுமி அன் கோ-வுக்கு எதிர் கடை போடலாமுன்னு திட்டமோ?//

எதிர் கடைன்னு வேணா வெச்சுக்குங்க. ஆனா எதிரி கடை இல்லை. நாங்க அவங்க கடையில் சாப்பிடுவோம் அவங்களும் நம்ம கடையில் சாப்பிடுவாங்க. ஒரு ஆத்திர அவசரத்துக்கு உப்பு புளி கைமாத்தாக் கூட வாங்கிக்குவோம். எல்லாருக்கும் இங்க இடமிருக்கு இல்லையா? :)

said...

////தமிழில் சொல்லணுமுன்னா எக் மசாலா//

உங்க தமிள் அளகு

அன்புடன்...
சரவணன்.//

பின்ன என்ன சரா, இன்னிக்கு எத்தனை பேர் முட்டை மசாலான்னு ஆர்டர் பண்ணறான்? எல்லாம் எக் மசாலா தானே. அதான். :P

said...

//ஐயா கொத்தனாரே சொன்னதெல்லம் ஓரளவுக்கு ஓகே ஆனா கடைசியிலே சொன்னீங்க பாருங்க கடுகு,உ.பருப்பு தாளிப்பு அது முட்டை நான்வெஜ் அயிட்டெங்களுக்கு சரிவராது.வேணுமின்னா கிராம்பு,பட்டை தாளிக்கலாம்.//

கண்மணி, நீங்க புதுசா, அதுனால் உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. நமக்கு இந்த மசாலா மேட்டர் எல்லாம் ஒத்துக்காது. அதான் இப்படி சப்ஸ்ட்டிட்யூஷன். :)

said...

//தலைப்பு ஓகே...
அது என்ன.. நீங்க சாப்பிடாம மத்தவங்கள டெஸ்ட் பண்ணறீங்க.?
இது நல்லாயில்ல.. //

//சமைச்சதை சாப்பிட்டு பாத்து பதிவுல ஏத்துங்க. :))//

இதுக்கெல்லாம் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனா பதிவைப் படிக்கும் போது மட்டும் கோட்டை விட்டுடுங்க. இதையாவது படியுங்க.

//இந்த வார இறுதியில் சரி, புதுசா எதுனா செய்து பார்க்கலாம் அப்படின்னு ஒரு ஐட்டம் செய்யப் போக அது சூப்பராவே வந்தது. //

நான் செஞ்சு பார்க்காமல் இல்லை. புரியுதா?

said...

//இங்கேயும் வந்துட்டோம்ல.. :-)//

வாங்க! வாங்க!

said...

//அட,, நீங்க சூப்பரா சமைப்பீங்களா?//

நல்லாவே சமைப்பேங்க. இப்போ என்னா டவுட்டு?

//(இல்லை, இது தில் குல்ஃபி கதைபோல் சொதப்பிக்குமா?)//

இது என்ன மேட்டர்? இந்த மாதிரி எல்லாம் கொளுத்திப் போட்டாக்க உரல் தரணும் தெரியுமில்ல.

said...

எக் மசாலா சரி..அதுகுங்க அந்த அடுத்த வார்த்தை..செஞ்சு பார்த்தேன்.. சாப்பிட்டவுங்க நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்ப்பா.. நாம சாப்பிடாத அயிட்டத்ததான் எப்பவும் முயற்சி செய்யறது...

said...

41... ;)


40வது கமெண்ட்'டிய மங்கை வாழ்க வாழ்க!!!!

said...

////முட்டையை வேகவைத்து மஞ்சளை தூக்கி எறிந்துவிட்டு வெள்ளையை மட்டும் சாப்பிட்டாலாமே.//

அதானே!!!!//

புலி, குட்டி போடும் இனத்தைச் சேர்ந்த உனக்கு முட்டையைப் பத்தி என்ன தெரியும் அப்படின்னு எல்லாம் கேள்வி கேட்கலை. நீர் அதானேன்னு சொன்னதுக்கு நான் சொன்ன பதிலைப் பார்த்துக்குங்க.

said...

//எதிரில் இடம் கிடைக்கல, அதான் பக்கத்திலே போட்டுட்டார்.//

எல்லாரும் நம்ம பக்கம் அப்படின்னு சொல்லிக்கலாம் பாருங்க.

said...

//ய்யொவ் இலவசம்

வெங்காயம் 11/2ன்னு போட்டிருக்கீரே. அப்படின்னா, அஞ்சரை வெங்காயம்னுதான அர்த்தம்? கொஞ்சம் வெளக்குமய்யா எடுப்பட்ட பயலே :-)

சாத்தான்குளத்தான்///

சாத்தாங்குளத்தானா இருக்கீரேன்னு பார்த்தா திடீருன்னு பெண்களூரானா மாறி பை 2 பத்தி எல்லாம் பேசறீங்க?
உமக்கு மட்டும் அதை மாத்திச் சொல்லறேன். அது 3/2 சரியா?

(அதை எழுதும் போதே இதுக்கே அஞ்சு பின்னூட்டம் கியாரண்டிடா கொத்ஸு அப்படின்னு நினைச்சேன். இதோ ரெண்டாச்சு! )

said...

//வி ஆர் வெஜி்டேரியன்ஸ்.//

முட்டையை சாய்ஸில் விட்டுட்டு செஞ்சு பாருங்க.

//வெங்காயம் - பெரிது 1 1/2

ஒரு பெரிய வெங்காயம் ஒரு சிறிய வெங்காயம் எடுத்துக்கொள்ளலாமா ? இல்லை 3 சிறிய வெங்காயம் எடுத்துக்கொள்ளலாமா ?//

கடைசியில் எல்லாத்தையும் மொத்தமா அரைக்கப் போறோம் அப்புறம் என்ன எடுத்தா என்ன, விளையாடுங்க.

:-) ;-) (ஒன்றரை சிரிப்பான் ?)

ஒரு சிரிப்பான் + ஒரு கண்ணடிப்பான் = ஒன்றரை சிரிப்பான்?? கணக்கு உதக்குதே.... :)

said...

//ஆரம்பமே வசூல்ராஜா கமல் மாதிரி கிண்டலோட ஆரம்பிக்குதே கொத்ஸ்//

வாங்க மு.க. அப்போ வேற எந்த படத்திலும் கமல் கிண்டலா நடிக்கலைன்னு சொல்லறீங்களா? நீங்க வெளிகண்ட நாதருக்கு ரிலேஷனா?

said...

//அடிக்கடி சமையல் பதிவா போடுறீங்க.. இப்ப எல்லாம் நீங்க தான் சமையலா வீட்ல, கொத்ஸ்//

எப்பவுமே நான் கொஞ்சம் அந்தப் பக்கம் போறது உண்டு. அதான் இப்படி.

said...

போட்டு தாக்குறீயளே...
செஞ்சு பாத்துட்டு சொல்றேன். வாசிக்கும் போது நல்லாத்தேன் இருக்கும் போல தெரியுது.//

செஞ்சு சாப்பிட்டு பாரும். இன்னும் நல்லவே இருக்கும்.

//உம்ம செயின் போஸ்டுக்கு கொஞ்சம் டயம்குடுவே...நீரு பாட்டுக்கு சொல்லிப்புட்டீரு...கொஞ்சம் யோசிக்கவேண்டாமா...//

இல்லாத விஷயம் பத்தியா எழுதச் சொன்னேன் இப்படி யோசிக்க? ஒரு வேளை problem of plentyயோ?

said...

////வி ஆர் வெஜி்டேரியன்ஸ்.//

நானும் அப்படித்தான்.//

முட்டை போடாம செஞ்சு பாருங்களேன். உங்க விஷயத்தில் செஞ்சு பார்க்கச் சொல்லுங்களேன்னு இல்ல இருக்கணும். :))

said...

//லப்-டப்பிற்கு எதிர் பதிவா இது?//

எனக்கு கொல்ஸ்ட்ரால் இருக்கு. அதனால முட்டை கட் அப்படின்னு சொல்லி ஒரு விழிப்புணர்வு கொண்டு வந்திருக்கேன். இப்படியா சொல்லறது?

//ஒரே ஆளு 4 முட்டை சாப்பிட்டா உடம்பு என்ன ஆவுறது!//

ஒரு ஆளுக்கு இல்லை சாமி. அளவான ஒரு குடும்பத்துக்கு. அதுவும் எப்பவோ ஒரு நாள் சாப்பிடத்தானே.

//:(//

இப்படி அழுவாச்சி எல்லாம் போடக்கூடாது. அப்புறம் நானும் அழுதிடுவேன். அவ்வ்வ்வ்வ்வ்

said...

//எடுக்க எடுக்க, மீண்டும் பட்டுக் கொண்டே இருப்பது அட்சய பாத்திரம் அல்லவா?
அப்படின்னா நீங்க அட்சய பாத்திரமா? :-))//

கே.ஆர்.எஸ். அண்ணா, கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ். பட்டுக் கொண்டே இருப்பதுன்னா என்ன? மரம் பட்டுப் போச்சுன்னா ஒரு அர்த்தம். கல்லடி பட்டுக்கிட்டே இருக்கும் காய்த்த மரம் அப்படின்னா ஒரு அர்த்தம். ஆனா அட்சய பாத்திரம் அண்ட் பட்டுப் போகறது புரியலையே.

//நீங்களே எடுத்துக்கக் கூடாது! //
ஆஹா! இப்படி வேற மேட்டர் இருக்கா!! என்ன எல்லாம் கொளுத்திப் போடறீங்க மக்கா.

//யாரங்கே, பதிவுலக நளச் சக்கரவர்த்தி என்ற பட்டத்த எடுத்துகுன்னு வந்து நம்ம கொத்தனார் தலையில் சூட்டுங்கப்பா!!!!!//

தம்பி தேவு, ஸ்டாரா ரொம்ப பிஸியா இருப்பே, அந்தக் களேபரம் எல்லாம் ஓஞ்ச பின்னாடி இங்க வந்து இதை நோட் பண்ணிக்கப்பா. :))

said...

//என்ன முட்டை என்று சொல்லவே இல்லையே! கூமுட்டை என்று எல்லாம் சொல்லக் கூடாது சொல்லிப்புட்டேன்! :-)))

அடுத்த ரெசிபி, கரியா? சாரி, கறியா? :-)))//

மரக்கறிக் கூட சாப்பிடாத மடத்தமிழன், சாரி மறத்தமிழன் நீங்க. இதெல்லாம் உங்களுக்குத் தேவையா? :))

said...

//தன்னிலை விளக்கம் தேவையில்ல தல.//

இதெல்லாம் கைப்ஸ் கத்துக் குடுத்தப் பாடம் தம்பி. "இந்தா பாரு, இதெல்லாம் நீயே முன்னாடி போயி நெஞ்ச நிமுத்துக்கிட்டு சொல்லிரு. அதில்லாம அடுத்தவன் வந்து சொன்னான் அவமானந்தேன்." அப்படின்னு அவரு சொல்லிக்குடுத்தாரா, நாமெல்லாம் ஃபாலோவிங்தான். :)

said...

//என்னங்க இது! முட்டைய உருளைக்கிழங்கு பட்டாணியோடல்லாம் கூட்டணி சேக்குறீங்க? //

ஜிரா, இப்போ எல்லாம் கூட்டணிக்குத்தானே மவுஸு!

//இப்பல்லாம் முட்டையோட மஞ்சக்கருவ மட்டும் கலங்கால அலுங்காமக் குலுங்காமப் பிரிக்க பாத்திரங்க இருக்கு. அதப்பயன்படுத்திப் பாருங்க.//

அப்படியே. இதைப் பார்க்கவே இல்லையே. கிடைச்சா வாங்கிட வேண்டியதுதான்.

//இந்த முட்டையோட வெள்ளைக்கருவ வெச்சி ஒரு லேசு ரெசிப்பி இருக்குய்யா..//

இதுவும் நல்லாத்தேன் இருக்கு படிக்க. செஞ்சு பாத்துற வேண்டியதுதான்.

said...

//மிஸ்டர் எடுபட்ட பயல் அவர்களுக்கு,//

எஸ், ஹூ காலிங்?

//இவ்வளவும் சொன்னீங்களே நாமே சமைச்சு பார்த்தா ருசி ருசி'ன்னு சொல்லுவாங்களே??? அது இருக்குமா???//

என்னா மேன் நீ. வீட்டுல அத்தினி பேரும் ஆஹா ஓஹோங்கரான். படிச்சவன் எல்லாம் பாராட்டறான். நீ என்ன நடுவில ஸ்டுபிட்டா கேள்வி கேட்டுக்கிட்டு.

நல்லாத்தேன் இருக்கும் போ. நீ செஞ்சு நல்லா வரலையின்னா உனக்குத்தான் கைப்பக்குவம் இல்லை. இங்க வந்து நம்மளை டேமேஜ் பண்ணப்பிடாது. புரிஞ்சுதா?

said...

//நாங்க அதெய்யலாம் தின்னுட்டு மறுநாள் காலையிலே ஜாக்கிங் போவோம், இல்லன்னா டிரெட்மில்'லே ஓடுவோம்.....

சரி இதிலே எதுவுமே செய்யலை'ன்னா கொஞ்சநாள் கழிச்சு உங்கக்கிட்டே ஊசிகுத்த வருவோம்...... வேற என்ன???

நான் சொன்னது சரியா எ.ப;)//

எஸ் எஸ். ஆனா அடுத்தவனுக்குத்தான் இதெல்லாம். நாம சாப்பிடறது கொலஸ்ட்ரால் கொழுப்பு இல்லாத முட்டையின் வெள்ளைக் கரு. இதெப்படி இருக்கு.

said...

//ராம் அண்ணே....இப்படி எல்லாம் கேட்டக்கூடாது.
பாவம் தல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-)//

நல்லாச் சொல்லுங்க கோபிநாத். (ஆஹா, இவனுங்க கிளம்பி இருக்காங்க. என்ன செய்யப் போறாங்களோ தெரியலையே.)

said...

//எக் மசாலா சரி..அதுகுங்க அந்த அடுத்த வார்த்தை..செஞ்சு பார்த்தேன்.. சாப்பிட்டவுங்க நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்ப்பா.. நாம சாப்பிடாத அயிட்டத்ததான் எப்பவும் முயற்சி செய்யறது...//

மங்கைக்கா, என்ன சொல்லறீங்க? ஒண்ணும் புரியலை. :(

said...

//41... ;)


40வது கமெண்ட்'டிய மங்கை வாழ்க வாழ்க!!!!//

ராமு, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமாமே. உமக்கு வந்து நாமும் இதையே பண்ணியாச்சில்ல.

பண்ணனமுன்னு இல்லை. ஆனா பழமொழி தப்பாப் போயிடக்கூடாது பாரு. அதான்.

said...

//எக் மசாலாவும் எடுபட்ட பயலும்//

அந்த 'எடுபட்ட பய' எதுக்குன்னு கேட்டேன்...

//40வது கமெண்ட்'டிய மங்கை வாழ்க வாழ்க!!!!//

ஆஹா ராமு தம்பி...இது என்ன அந்த சான்ஸ் உங்களுக்கு கிடைக்கலைன்னு ஆதங்கமா... எத்தன நல்லா செய்து பார்த்துட்டு வந்து பின்னூட்டம் போடறேன்...ம்ம்ம்..

said...

//அந்த 'எடுபட்ட பய' எதுக்குன்னு கேட்டேன்...//

அதான் மொத பின்னூட்டத்தில் பதில் சொல்லியாச்சே.

செஞ்சு பார்த்தீங்களா? எப்படி இருந்தது? என்னா ஓட்டு ஓட்டறாங்க பாத்தீங்களா? வந்து நல்லாச் சொல்லுங்க. :)

said...

//ஆனா அட்சய பாத்திரம் அண்ட் பட்டுப் போகறது புரியலையே.//

எடுக்க எடுக்க, மீண்டும் "கை" பட்டு எடுத்துக் கொண்டே இருப்பது அட்சய பாத்திரம் அல்லவா?
கை சேர்த்த பின்னால, இப்ப புரியுதுங்களா? :-))

படுதல் = உண்டாதல்; அதுவே பட்டுதல் ஆனது; தன்னொற்று இரட்டல் என்பது இலக்கண விதி!

"பல்கதிர்ச் செல்வன் பல்கிப் பட்டதே"; - கதிர்கள் பல உண்டாயின!
"ஈதல், இசைபட வாழ்தல்" என்பதிலும் இசை படுது பாருங்க!

போதும் போதும், முட்டைப் பதிவில், இதுக்கு மேல் பட்டால், நம்ம மேல முட்டை பட்டுடப் போவுது! பட்டுனு எஸ்கேப்!! :-))

said...

உப்பு புளி மொளகா கடன் வாங்க ஒரு இடம் கிடைச்சுடுச்சு , பத்தலன்னா நானும் அப்பப்ப வாங்கிக்கறேன் ..

செஞ்சு பாக்கறேன்.நல்லாருக்கும் போலத்தான் தெரியுது. கஷ்டப்பட்டு சமைக்க கத்துக்கிட்ட மங்கையே நல்லாவந்ததுன்னு சொல்லி இருக்காங்களே.

said...

//எடுக்க எடுக்க, மீண்டும் "கை" பட்டு எடுத்துக் கொண்டே இருப்பது அட்சய பாத்திரம் அல்லவா?
கை சேர்த்த பின்னால, இப்ப புரியுதுங்களா? :-))//

புரியுது புரியுது. சமாளிப்பு திலகம் நீருன்னு நல்லாவே புரியுது!! :))

//போதும் போதும், முட்டைப் பதிவில், இதுக்கு மேல் பட்டால், நம்ம மேல முட்டை பட்டுடப் போவுது! பட்டுனு எஸ்கேப்!! :-))//

பட்டுன்னு புரிஞ்சுக்கிட்ட உங்களுக்குப் பட்டம் கொடுக்கும் விழாவில் போர்த்த ஒரு பட்டாடை கொண்டு வந்தேன். அவ்விழாவில் பட்டாசு கொளுத்துவேன். எல்லாம் அந்த பட்டீஸ்வரர் கிருபை!! :))

said...

//உப்பு புளி மொளகா கடன் வாங்க ஒரு இடம் கிடைச்சுடுச்சு , பத்தலன்னா நானும் அப்பப்ப வாங்கிக்கறேன் ..//

உங்களுக்கு இல்லாததா தாயி!! எப்ப வேணாலும் வாங்க.

//செஞ்சு பாக்கறேன்.நல்லாருக்கும் போலத்தான் தெரியுது. //

நல்லாத்தான் இருக்கும். செஞ்சு பார்த்திட்டுச் சொல்லுங்க.

//கஷ்டப்பட்டு சமைக்க கத்துக்கிட்ட மங்கையே நல்லாவந்ததுன்னு சொல்லி இருக்காங்களே.//
நம்ம குறிப்புகள் எல்லாமே கொஞ்சம் எளிதாக இருக்கும். அப்படித்தான் நானே நினைச்சுக்கறேன். :))