Sunday, March 04, 2007

இளம் சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு

இன்றைக்கு வீட்டில் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் அதைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம் என நினைத்தே இந்த இடுகை.

என் நண்பன் அவர் குடும்பத்துடன் இந்த வாரயிறுதியை எங்களுடன் கழிக்க வந்திருந்தார். அவரது பையனுக்கு மூன்றரை வயதாகிறது. என் பையனுக்கு ஐந்தரை வயது. இருவரும் நல்ல நண்பர்கள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். இவர்களை வேடிக்கை பார்ப்பதே எங்களுக்கு ஒரு பொழுது போக்கு.

இன்று காலை இவர்களுள் ஒரு பலத்த வாக்குவாதம் நடந்தது போல் தோன்றியது. என்னவென்று சென்று பார்த்தால் இருவரும் அவரவர் தந்தையின் பெருமைகளைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். என் தந்தைதான் பலம் மிக்கவர், என் தந்தை செய்யும் வேலைதான் பெருசு என்றெல்லாம் பேசிக் கொண்டு இருந்தார்கள். இருவரும் தத்தம் தந்தைகளை ஒரு ஹீரோ அளவுக்கு உயர்த்திப் பேசியதும், தாங்கள் வளர்ந்த பின் தத்தம் தந்தைகளைப் போல் இருப்போம் எனச் சொன்னதும் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ வொர்ஷிப் அளவிற்கு இருந்தது.

இது எங்களிடையே ஒரு சுவாரசியமான பேச்சு ஒன்றைத் தொடங்கி வைத்தது. அதில் எழுந்த சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

  • அது எப்படி இவர்களுக்குத் தம் தந்தைதான் உயர்வானவர் என்ற எண்ணம் வருகிறது? தம் தந்தையரை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டும் எனத் தோன்றுகிறது?
  • இவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகளாக இருந்ததினால்தான் தந்தையரைப் பற்றிப் பேசினார்களா? இதுவே பெண் குழந்தைகளாக இருந்தால் தாய்மார்களைப் பற்றிப் பேசி இருப்பார்களா?
  • முதலில் பெற்றோர், பின் பள்ளி ஆசிரியர், பின் திரைப்பட நாயகர்கள் என்று எப்பொழுதும் நமக்கு ஏன் இப்படி வழிபாட்டிற்கு யாரேனும் தேவைப் படுகிறது?
  • இப்படி ஹீரோவாக இருப்பவர் சிறிய காலத்திற்குப் பின் மாறிக்கொண்டே இருப்பது ஏன்?

கேள்விகளை கேட்டாச்சு. 40க்கு எல்லாம் பயப்படாமா வந்து கருத்துக்களைச் சொல்லுங்கப்பா. இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு, உங்க இளமைக்கால ஹீரோக்கள் பத்தியும் சொல்லுங்க. தனிப் பதிவா போட்டா மறக்காம லிங்க் குடுங்க! :-D

53 comments:

said...

வழக்கம் போல நானே முதல் பதிவு. நம்மளை ஹீரோவா நம்ம பையன் பாக்குற இந்த சமயம் இன்னும் நிறையா நாட்கள் நீடிக்கணமுன்னு வேண்டிக்குங்கப்பா!!

said...

பெனாத்தல் தனிமடலில் அனுப்பியது, நான் அதர் ஆப்ஷன் மூலம் போட்டது.- கொத்ஸ்

ஒரு பழைய பழமொழி ஞாபகம் வருது
15 வயது வரை அப்பாதான் ஹீரோ
15-30 அப்பாதான் வில்லன்
30 - 45 அப்பா குணச்சித்திர நடிகர்
45-60 அப்பா ஒரு செட் ப்ராப்பர்டி

said...

கொத்ஸ்,
ஹீரோ வொர்ஷிப் பற்றி செல்வன் ரொம்ப காலம் முன்னால் ஒரு பதிவு எழுதி இருந்தார். அதில் உங்களுக்கான பதில்கள் சில கிடைக்கலாம்.

அடுத்து, ஒரு குழந்தை தன் பெற்றோரை ஹீரோவா பார்க்கிறதைக் கூட பையன், பொண்ணுன்னு பால்ரீதியா யோசிக்கிறதைப் பார்க்கும்போது கொஞ்சம் கடுப்பா இருக்கு! இன்னிக்கும் எங்க வீட்ல என்னோட, என் தங்கையோட ஹீரோ எங்கப்பா தான்.

எங்கப்பா போல் மெக்கானிகல் இஞ்ஜினியர் தான் ஆவேன்னு ரெண்டு பேருமே அடம்பிடிச்சதுண்டு. அவர் ஆசைப்பட்டாரேன்னு தான் கம்ப்யூட்டர் படிக்கவேண்டியதாப் போச்சு.. இப்போவும் அப்பா தான் ஹீரோ :).

said...

பினாத்தலாரே, கேள்விக்குப் பதில் கேட்டா என்னமோ பாக்கியராஜ் ரேஞ்சுக்குக் குட்டிக் கதை சொல்லறீரு. நம்ம கிட்டயும் ஒரு கதை இருக்கு, அப்புறமா சொல்லறேன்.

said...

வாங்க பொன்ஸ்.

//ஹீரோ வொர்ஷிப் பற்றி செல்வன் ரொம்ப காலம் முன்னால் ஒரு பதிவு எழுதி இருந்தார். அதில் உங்களுக்கான பதில்கள் சில கிடைக்கலாம்.//

அப்படியா? அவர் கிட்ட சுட்டி வாங்கிப் படிச்சுப் பார்க்கறேன். தகவலுக்கு நன்றி.

//அடுத்து, ஒரு குழந்தை தன் பெற்றோரை ஹீரோவா பார்க்கிறதைக் கூட பையன், பொண்ணுன்னு பால்ரீதியா யோசிக்கிறதைப் பார்க்கும்போது கொஞ்சம் கடுப்பா இருக்கு!//

இதுல கடுப்பாக என்ன இருக்குன்னு தெரியலையே? இரண்டு பசங்களும் அப்பா பத்தி பேசுனாங்க. அதுக்குப் பின்னாடி நாங்க பேசுன போது ஒரு முடிவுக்கு வர முடியலை. அதுனால இந்த பசங்க அப்பாவை பேசுனது மாதிரி பெண் பிள்ளைகள் அப்பாவை இந்த மாதிரி வழிப்பாடு செய்வார்களா அல்லது அம்மாவையான்னு கேட்டா கடுப்பா ஆக என்ன இருக்கு. வர வர எல்லாத்துக்கும் ரொம்ப கடுப்பா ஆகறீங்க போங்க!! :))) (சிரிப்பான் எல்லாம் போட்டாச்சுங்க, ரொம்ப திட்டாதீங்க!)

//இப்போவும் அப்பா தான் ஹீரோ :).//

இதுதாங்க கேட்டது. ஆக உங்களுக்கும் உங்க தங்கைக்கும் அப்பாதான் ஹீரோ! மத்தவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்க்கலாம்.

said...

பாத்து கொத்ஸு,
அப்புறம் 'இவன் ரொம்ப நல்லவன்டா. என்ன செஞ்சாலும் தாங்கிக்கிரான்" கதையாட்டம் ஆயிடப்போவுது!

said...

இதுக்கே இப்படி உணர்ச்சி வசப்பட்டுட்டா எப்படி?

பசங்க 'பதின்ம வயது ' வந்ததும் இப்படியே 'அப்பா ஒர்ஷிப்' பண்ணனுமுன்னு இப்பவே
வேண்டிக்கலாம்:-))))

said...

//அப்புறம் 'இவன் ரொம்ப நல்லவன்டா. என்ன செஞ்சாலும் தாங்கிக்கிரான்" கதையாட்டம் ஆயிடப்போவுது!//

எதோ பசங்க நல்லவரு வல்லவருன்னு சொன்னா ஒரேடியா நம்மளை கைப்ஸ் ரேஞ்சுக்கு கொண்டு போறீரே!! :-D

உம்ம ஹீரோ யாரு? சொல்லவேயில்லையே. (போனோ,ரஜினி, அப்புறம் அந்த நாஸ்கார் மெக்கானிக் என்ற கதையெல்லாம் வேண்டாம்!)

said...

அப்பாக்களத்தான் பசங்களும் பொண்ணுங்களும் ஹீரோவா பாக்க முடியும்!

இதுலேர்ந்து அம்மாக்களப் பத்தி என்ன தெரியுது?

said...

//இதுக்கே இப்படி உணர்ச்சி வசப்பட்டுட்டா எப்படி?//

டீச்சர், உணர்ச்சிவசப்படவெல்லாம் இல்லை. நம்ம நிலமை நம்மளுக்குத் தெரியாதா! ஹிஹி!

//பசங்க 'பதின்ம வயது ' வந்ததும் இப்படியே 'அப்பா ஒர்ஷிப்' பண்ணனுமுன்னு இப்பவே
வேண்டிக்கலாம்:-))))//

அப்படியா, நான் அடுத்த ஒண்ணு ரெண்டு வருஷத்துக்கே வேண்டியாகணமுன்னு நினைக்கிறேன். :))

said...

மீண்டும் பெனாத்தலார்

பெண் குழந்தைகளுக்கும் அப்பாதான் ஹீரோ.. அம்மா ஹீரோயினா வேணா இருக்கலாம்

said...

//அப்பாக்களத்தான் பசங்களும் பொண்ணுங்களும் ஹீரோவா பாக்க முடியும்!

இதுலேர்ந்து அம்மாக்களப் பத்தி என்ன தெரியுது?//

ஆஹா, சொல்லி வெச்சுக்கிட்டு வந்து இருக்கீங்களா? பெனாத்தல் சொல்லி இருக்கற பதிலைப் பாருங்க!! :)))

said...

//பெண் குழந்தைகளுக்கும் அப்பாதான் ஹீரோ.. அம்மா ஹீரோயினா வேணா இருக்கலாம்//

இதெல்லாம் நல்லா சொல்லுங்க. ஆனா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாதீங்க. நல்லா இருங்கடா!

said...

கொத்ஸ்! மயிலாடுதுறை பெரிய கோயில் யானை பாகன்தான் ஹீரோவா இருந்தார் அபி பாப்பாவுக்கு. அவ்ளோவ் பெரிய யானையை சும்மா நாய்குட்டி மாதிரி அவர் அழைச்சுகிட்டு போறது காரணமாக இருக்கலாம். பிறகு பாகனுக்கு 10 ரூபா குத்துட்டு பாப்பாவுக்கு நேர 2 கும்மாங் குத்து விட்டுட்டு நா ஹீரோவா ஆனது தனி கதை. இது திஸ்கி தான். கொஞ்சம் குண்டூசி பாக்கியிருக்கு. பிறகு விரிவான விளக்கத்தோடு வருகிறேன்.
பி.கு: இருந்தாலும் நீங்க பொன்ஸ்ஸக்காவ கடுப்பாக்கியுருக்க கூடாது!!

said...

கொத்ஸ்,

நீங்கள் சொல்வது உண்மைதான்.
நானும் பள்ளிக் கூடம் படிக்கும் சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் 'தந்தையின் பெருமைகளை அவர்களுடன் சேர்ந்து பட்டியல் இட்டு மகிழ்ந்திருக்கிறேன்'

உலகிலேயே என் அப்பாதான் பலசாலி என்று எல்லா சிறுவர்களுக்கும் தத்தம் அப்பா குறித்து எண்ணம் இருக்கும் !
:))

said...

//அவ்ளோவ் பெரிய யானையை சும்மா நாய்குட்டி மாதிரி அவர் அழைச்சுகிட்டு போறது காரணமாக இருக்கலாம்.//

//பி.கு: இருந்தாலும் நீங்க பொன்ஸ்ஸக்காவ கடுப்பாக்கியுருக்க கூடாது!!//

அபி அப்பா, ரொம்ப நன்றி. அப்பாடா நான் தப்பிச்சேன். :))

said...

கோவி,

உங்களுக்கு கொசுவர்த்தி சுத்த ஒரு சான்ஸ் குடுத்துட்டேன் போல இருக்கு. :))

//உலகிலேயே என் அப்பாதான் பலசாலி என்று எல்லா சிறுவர்களுக்கும் தத்தம் அப்பா குறித்து எண்ணம் இருக்கும் !//

அப்படித்தாங்க தெரியுது!!

said...

கொத்ஸ்,

எட்டாங்கிளாஸ் வரும் வரையில் இருவாரங்களுக்கு ஒருமுறை தந்தையைப் பார்த்து வளர்ந்ததாலும், நான் சின்ன வயசுல ஊமையோன்னு சந்தேகம் வரும் அளவுக்கு (இப்பவும் அப்படித்தாங்க!) அமைதியாக சூழலை உள்வாங்கிக் கொள்வதில் மட்டுமே கவனம் அதிகம் செலுத்தியதாலும் "ஹீரோவா" ஜீரோவான்னு வாக்குவாதத்தில் ஈடுபட்டதில்லை.

விடுதியில் கல்லூரிக் காலங்களில் என் தந்தை என்னைவிட முட்டாள் என நினைத்திருக்கிறேன்(கூடா நட்பு!):-))

தற்போது என் தந்தையை நினைக்கையில் கல்லூரிக்காலத்தில் நான் நினைத்த அளவுக்கு முட்டாளாக இருந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

அப்பாவோ, ரஜினியோ, தலைவனோ ஹீரோ வொர்ஷிப் ரேஞ்சில் சிந்தித்ததில்லை!

said...

//இலவசக்கொத்தனார் said...
கோவி,

உங்களுக்கு கொசுவர்த்தி சுத்த ஒரு சான்ஸ் குடுத்துட்டேன் போல இருக்கு. :))
//

என்னங்க கொத்தனாரே ! கருத்து சொன்னால் வீடுகட்டி அடிப்பிங்க போல இருக்கு.
:))

said...

//விடுதியில் கல்லூரிக் காலங்களில் என் தந்தை என்னைவிட முட்டாள் என நினைத்திருக்கிறேன்(கூடா நட்பு!):-))//

நான் பெனாத்தலாருக்கு சொல்லறேன்னு சொன்ன கதை இது பத்திதான். யூ ஆல்ஸோ வெயிட்!

//நான் நினைத்த அளவுக்கு முட்டாளாக இருந்திருக்க வாய்ப்பில்லை //

ஹாஹாஹா!!!

//அப்பாவோ, ரஜினியோ, தலைவனோ ஹீரோ வொர்ஷிப் ரேஞ்சில் சிந்தித்ததில்லை! //

வித்தியாசமான ஆளதான்யா நீர்!

said...

//என்னங்க கொத்தனாரே ! கருத்து சொன்னால் வீடுகட்டி அடிப்பிங்க போல இருக்கு.
:))//

தப்பா ஒண்ணும் சொல்லலைங்களே. அதில்லாம நீங்க மாற்றுக் கருத்தா சொல்லி இருக்கீங்க, உங்களை தர்ம அடி போட!!!! :))

said...

எதோ அறியாப்புள்ள உண்மை நிலவரம் தெரியாம வெள்ளந்தியாச் சொல்லிடுச்சு.

இதயெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க கொத்ஸு!

said...

ராம்ஸு, சின்னக்குழந்தைக்கு பொய் பேசத் தெரியாதப்பூ!!!

said...

//அப்படித்தாங்க தெரியுது!!//
இப்பவாவது புரிஞ்சுச்சே!

நீங்க பாட்டுக்கு சின்னபுள்ள சொல்லிச்சேனு ரொம்ப பில்ட் அப் கொடுத்துக்காதீங்க.

said...

சரிங்கண்ணா, இம்புட்டு வார்னிங் குடுக்கறீரு. அடக்கியே வாசிக்கறேன். கொஞ்சம் 'ஏமாந்தா' என்ன வெடியை தூக்கிப் போடுவீருன்னு தெரியாது!!

said...

இந்த கதையை கொஞ்சம் கேளுங்க!

மூன்று பையன்கள் :

1. எடுபிடி வேலைக்காரர் மகன் : எங்கப்பாதான் செம வேகம். வேலை முடிந்து 10 நிமிடத்திலேயே வீடு வந்திடுவாரு.

2.அலுவலுக வேலைக்காரர் மகன் : எங்கப்பா அத விட வேகம். வேலை முடித்த அடுத்த நிமிடமே வீடு வந்திடுவாரு.

3.அதிகாரி மகன் : எங்கப்பா அத விட ரொம்ப வேகம். வெலை முடிய 5 நிமிடத்திற்கு முன்னடியே வீடு வந்திடுவாரு!

நல்ல ஹீரோதான் போங்க!

said...

பொதுவா பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் ஹீரோவா இருப்பாங்க...எனக்கு தெரிஞ்சு ரெண்டு மூனு வீட்ல அப்படித்தான்..

பையன் ஹீரோவா பாக்கும்போதே ஒரு ஆட்டோகிராப் போட்ருங்க. பின்னால அது முடியாமப்போகலாம்...!!! :))

said...

வழிவழியாய் என்ற ஒரு பதிவை என் அம்மாவை வைத்து எழுதி இருக்கிறேன்.
சில விஷயங்களில் அம்மா தான் வழிகாட்டி. இன்னும் சில விஷயங்களில் அப்பா. அப்பா நடமாடும் டிக்ஷனரி மற்றும் நூலகம். எந்த வார்த்தை கேட்டாலும் அதன் அர்த்தத்திற்கு நாலு விதமான விளக்கமும் வரும். நாலு விஷயங்களை அலசி ஆராய்ந்தவிவாதம் செய்யும் அவர்கள் அடுத்தவர் மனம் காயப்படாமல் விவாதத்தை முடித்தும் வைப்பார்கள். அம்மா வா அப்பாவா ரோல் மாடல் என்று பட்டி மண்டபம் எல்லாம் வேண்டாம். பெற்றோர் .அவ்வளவு தான்.
நமக்கு தெரிந்து யாராவது சந்தோஷமாகவும் வெற்றிபெற்றும் இருக்கிறார்கள் என்றால் அவர்களைப் போல் ஆக ஆசைவருகிறது என நினைக்கிறேன்.

said...

இந்தியால ஒரு லைஃப் இன்ஷூரண்ஸ் நிறுவனத்தின் விளம்பரம்தான் ஞாபகத்துக்கு வருது...

"My Papa is taller that this hoarding"

பைக்கில் ஒரு அப்பாவும், பொண்ணும் ஒக்காந்திருப்பாங்க. அந்த அப்பாவ மட்டும் அந்த Hoardingக்கும் மேல எழுப்பியிருப்பாங்க....

ஆண் பெண் பாகுபாடெல்லாம் இதுல கெடயாது... எனக்குத் தெரிஞ்சு முக்கால்வாசி பேருக்கு அப்பாத்தான் ஹீரோ...

said...

அப்பாவைப் போற்றிடுதல் யாவர்க்கும் நல்லியல்பே
அப்படிப் பேசாமல் ஆகாதாய் தப்பாகப்
பேசிட்டால் குற்றமெல்லாம் பெற்றவனின் மேலன்றோ
பாசமென்றால் அப்பாதான் பார்.

said...

// இவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகளாக இருந்ததினால்தான் தந்தையரைப் பற்றிப் பேசினார்களா? இதுவே பெண் குழந்தைகளாக இருந்தால் தாய்மார்களைப் பற்றிப் பேசி இருப்பார்களா?//

பொன்ஸ்,
அவர்தான் தெளிவாக சொல்லுகிறாரே, அப்பறம் ஏன்
//ஒரு குழந்தை தன் பெற்றோரை ஹீரோவா பார்க்கிறதைக் கூட // என்று கூறுகிறீர்கள்?

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. ஒரு மாறுதலுக்காக கடுப்பாக விரும்பி இதை தேர்ந்துவிட்டீர்கள்!

(எனக்கு நேரம் சரியில்லையோ?)

said...

//ஹீரோவா நம்ம பையன் பாக்குற இந்த சமயம்...// விடுங்க, ஏதோ சின்னப் பையன் தெரியாம ஒண்ணு பண்ணிட்டா அதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணலாமுங்களா ... :)

said...

சந்தோஷபடுங்க இன்னும் கொஞ்ச காலம்தான். பிறகு ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் ஆற்றுவான் மகன் (எல்லாம் அனுபவம்தான்).

போனவாரம் ஜாப் சாடோ அசைன்மெண்ட்டுகு பையன் ஆபிஸிற்கு வந்திருந்தான். அங்கு நான் செய்யும் வேலையைப் பார்த்து அசந்துவிட்டான். பிறகு வீடு திரும்புகையில் ஆபிஸில் நீ ஹீரோ வாக இருக்கலாம் ஆனால் வீட்டில் நீ லொத்தை என்றான். சோ இதுவும் கடந்து போகும் என மனதை தேர்த்தி பதிவுகளில் கவனம் செலுத்தவும்

said...

//மாசிலா said...

இந்த கதையை கொஞ்சம் கேளுங்க!//

நானும் ஒண்ணு சேர்த்துக்கிடட்டுமா? :))

4.ஆணி புடுங்கும் கம்பெனி டாமேஜர் மகன்: எங்கப்பாதான் பெஸ்ட். Work from home office அப்படின்னு சொல்லிக்கிட்டு பாதி நாள் ஆபீஸே போகறது இல்லையே!!!

said...

கொத்ஸ்,
அம்மா சொல்லி தான் அப்பா ஹீரோ ஆகிறார்னு நினைக்கிறேன்.
பையன் தான் அப்பா ஆகிறவரைக்குமாவது உங்களை ஹீரோவாத்தான் பார்ப்பான்.,
அதாவது அவன் செய்யற செய்கைக்கு நீங்க ஆதரவு கொடுத்துக்கிட்டே இருக்கணும்.எதுக்கும் அவனோட அம்மாவையும் ஹீரோயினியா நடத்துங்க.:-)

said...

//பொதுவா பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் ஹீரோவா இருப்பாங்க...எனக்கு தெரிஞ்சு ரெண்டு மூனு வீட்ல அப்படித்தான்..//

இந்த ஆராய்ச்சியின் முடிவும் இப்படித்தான் போலத் தெரியுதே!

//பையன் ஹீரோவா பாக்கும்போதே ஒரு ஆட்டோகிராப் போட்ருங்க. பின்னால அது முடியாமப்போகலாம்...!!! :))//

வெறும் ஆட்டோகிராப் என்ன? தோள் மேல கை போட்டு போட்டோவே எடுத்துக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க?

said...

//அம்மா வா அப்பாவா ரோல் மாடல் என்று பட்டி மண்டபம் எல்லாம் வேண்டாம். பெற்றோர் .அவ்வளவு தான். //

அடடா, முத்துலெட்சுமி, இது ஒண்ணும் பெரிய பட்டிமண்டபம் எல்லாம் இல்லைங்க. நம்ம வீட்டு பசங்க இப்படி இருக்காங்களே, ஊரில் மத்தவங்க எப்படின்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம். அவ்வளவுதான்.

//நமக்கு தெரிந்து யாராவது சந்தோஷமாகவும் வெற்றிபெற்றும் இருக்கிறார்கள் என்றால் அவர்களைப் போல் ஆக ஆசைவருகிறது என நினைக்கிறேன்.//

நல்லா சொல்லி இருக்கீங்க.

said...

//ஆண் பெண் பாகுபாடெல்லாம் இதுல கெடயாது... எனக்குத் தெரிஞ்சு முக்கால்வாசி பேருக்கு அப்பாத்தான் ஹீரோ...//

எல்லாரும் சொல்லறது வெச்சு பார்த்தா அப்படித்தாங்க தெரியுது.

said...

//அப்பாவைப் போற்றிடுதல் யாவர்க்கும் நல்லியல்பே
அப்படிப் பேசாமல் ஆகாதாய் தப்பாகப்
பேசிட்டால் குற்றமெல்லாம் பெற்றவனின் மேலன்றோ
பாசமென்றால் அப்பாதான் பார்.//

வெண்பா பதிவு போட்டு நாளாச்சுன்னு சூசகமா சொல்லிட்டீங்க ஓகை. ஆவன செய்வோம். :)

//பாசமென்றால் அப்பாதான் பார்//
அம்மாக்கள் எல்லாம் அடிக்க வரப் போறாங்க பாத்து!! :)

இது நம்பர் 39,இனிமே "கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதிக்கு வந்து நம்மளைப் பாருங்கப்பா!

said...

//பொன்ஸ்,
அவர்தான் தெளிவாக சொல்லுகிறாரே, அப்பறம் ஏன்
//ஒரு குழந்தை தன் பெற்றோரை ஹீரோவா பார்க்கிறதைக் கூட // என்று கூறுகிறீர்கள்?

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. ஒரு மாறுதலுக்காக கடுப்பாக விரும்பி இதை தேர்ந்துவிட்டீர்கள்!

(எனக்கு நேரம் சரியில்லையோ?)//

ஓகை, அப்படித்தான் போலத் தெரியுது!!! :)))

said...

41 ஹி ஹி

said...

//விடுங்க, ஏதோ சின்னப் பையன் தெரியாம ஒண்ணு பண்ணிட்டா அதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணலாமுங்களா ... :)//

எல்லாம் நீங்க ஆகாத ஃபீலிங்கா? :)) என்னமோ சொன்னாரு, நமக்கும் ஒரு பதிவு போட மேட்டராச்சேன்னு போட்டாச்சு. நீங்க வேற!!

said...

//சந்தோஷபடுங்க இன்னும் கொஞ்ச காலம்தான். பிறகு ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் ஆற்றுவான் மகன் (எல்லாம் அனுபவம்தான்). //

தெரியுதுங்க. எல்லாம் நாமளும் செஞ்சுட்டு வந்ததுதானே!! This too will pass!!

//பிறகு வீடு திரும்புகையில் ஆபிஸில் நீ ஹீரோ வாக இருக்கலாம் ஆனால் வீட்டில் நீ லொத்தை என்றான்.//

This too will pass!! :))

said...

வாங்க வல்லியம்மா,

//அம்மா சொல்லி தான் அப்பா ஹீரோ ஆகிறார்னு நினைக்கிறேன்.//

உண்மைதான். அதுனாலதான் பசங்க முன்னாடி அப்பா அம்மா ரொம்ப சண்டை போடக் கூடாதுன்னு சொல்லறாங்க.

//பையன் தான் அப்பா ஆகிறவரைக்குமாவது உங்களை ஹீரோவாத்தான் பார்ப்பான்.,//

கால்கரி சிவாண்ணா சொல்லறதைப் பார்த்தா அப்படித் தெரியலையே. எனக்கு என்னவோ சிறுவயதில் ஹீரோவாக இருக்கும் அப்பா, பதின்ம வயதில் கிட்டத்தட்ட் எதிரியாகி பின் அவர்கள் அப்பாவாக ஆகும் பொழுது மீண்டும் ஹீரோவாக மாறுவார்கள் என்றே நினைக்கிறேன்.

//எதுக்கும் அவனோட அம்மாவையும் ஹீரோயினியா நடத்துங்க.:-)//

இதுக்கு இல்லைன்னாலும், அப்படித்தானே நடத்தியாகணும். :))

said...

//41 ஹி ஹி//

கூட கொஞ்ச நேரம் முகப்பில் இருக்கலாமுன்னு பார்த்தா, இப்படி பண்ணறீங்களே. இப்போ சந்தோஷம்தானே!! போயி நல்லாத் தூங்குங்க.!! :-D

said...

மாசிலா, கால்கரி மற்றும் வல்லியம்மாவிற்காக இந்தக் கதை

ஒரு வாலிபன் சொன்னானாம் - "எனக்கு 18 வயது ஆகும் போது நினைத்தேன் உலகத்திலேயே பெரிய முட்டாள் எங்க அப்பாதான் என்று. இன்றைக்கு எனக்கு 23 வயதாகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் என் அப்பாவிற்கு நிறையாவே அறிவு வந்துவிட்டது."!!!

கால்கரி, கவலைப்படாதீங்க, உங்க பையனும் படிச்சு முடிச்சு வேலைக்குப் போகும் போது இந்த மாதிரி சொல்வான். இப்போ இருக்கிற நிலமையை நினைச்சு கவலைப்படாதீங்க. This too will pass!!

said...

i will give a psychological answer to this.

For a child, his or her mother is giving food, but father is the only person who is capable of buying anything he or she wants. Moreover, any father is ready to fight for his chidlren in the school in the event of any problem either with the classmates or with class teacher. So, the child thinks father can do anything in this world. That is why, such thinking is evolved in the child's mind. At the same time, when the child is having a very good food or is waiting for such food, the mother is the omnipotent in this world.

said...

மனரீதியான கருத்துன்னு பார்க்கும் பொழுது நீங்க சொல்வது சரியாகத்தான் தோன்றுகிறது தேசிகதாசன் அவர்களே. விரைவில் தமிழில் நீங்கள் தட்டச்சுவதைப் பார்க்க ஆசை!

said...

நண்பர் ரவி தனிமடலில் அனுப்பியது.

இந்த விஷயத்தில் பையன் பொண்ணுன்னு வித்தியாசமே கிடையாது. ரெண்டு பேருக்குமே அப்பாதான் ஹீரோ. ஒரு வேளை பழைய பழமொழி போல 15 வயது வரை இருக்கலாம்.

said...

//ஒரு வேளை பழைய பழமொழி போல 15 வயது வரை இருக்கலாம்.//

அது என்ன பழமொழி? கேட்ட ஞாபகமே இல்லையே?!

said...

இலவசக் கொத்தனார் அவர்களே நான் இந்த வலைத்தளத்திற்குப் புதியவன். அப்பா-மகன் என்கிற உறவு காலத்திற்கு காலம் மாறுபடக் கூடியதுதான். இடத்திற்கு இடம், கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் பாச உணர்ச்சிகள் மாறுபடும்போது உறவுகளும் தங்களுக்குள் உள்ள உறவை இழப்பதோ, அல்லது அற்றுக் கொள்வதோ இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய விஷயம். இதை இப்போதைய இளைஞர்கள் உணர்வதே இல்லை. உதாரணம் கலிபோர்னியாவில் சிலிக்கான்வேலியில் அமர்ந்து கொண்டு தன் தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோவில் பார்த்து தன் இறுதிக் கடமையைச் செலுத்திய மகனை நான் சமீபத்தில்தான் சென்னையில் பார்த்தேன். இந்த நேரத்தில் இது போன்ற வினாக்கள் நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வது போன்றதுதான். வெல்டன் கொத்தனார் அவர்களே..

அன்புடன்
தமிழ்சரண்

said...

நண்பர் ரவி தனிமடலில் சொன்னது :

நான் சொன்ன பழமொழி பெனாத்தலார் சொன்ன அந்தப் பழமொழிதான்.

//ஒரு பழைய பழமொழி ஞாபகம் வருது
15 வயது வரை அப்பாதான் ஹீரோ
15-30 அப்பாதான் வில்லன்
30 - 45 அப்பா குணச்சித்திர நடிகர்
45-60 அப்பா ஒரு செட் ப்ராப்பர்டி//

said...

வலையுலக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன் தமிழ்ச்சரண் (உங்க பெயரில் இப்படி ஒற்று மிகுந்து வர வேண்டாமோ?)

தாங்கள் சொன்ன சம்பவம் உண்மையிலேயே மனசைக் கலங்கச் செய்கிறதே.

//இந்த நேரத்தில் இது போன்ற வினாக்கள் நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வது போன்றதுதான். வெல்டன் கொத்தனார் அவர்களே.. //

நன்றி தமிழ்ச்சரண்.