முதலாம் கிறுக்குத்தனம்
நமக்கு எல்லாமே ஒரு சீஸனுக்குத்தான் மதிப்பு. அதனால பிடிச்ச விஷயங்கள், பண்ணுற விஷயங்கள் வந்து அப்பப்போ மாறிக்கிட்டே இருக்கும். சின்ன வயதில் தீப்பெட்டி கலெக்க்ஷனா இருக்கட்டும் அதன் பின் ஆங்கில பாடல்கள், தமிழ்த்திரைப்படப் பாடல்கள், கர்நாடக சங்கீதம் என மாறும் ரசனையாக இருக்கட்டும் எல்லாமே சீஸனல். பிடித்த உணவகங்கள், பொழுது போக்கு அப்படின்னு எல்லாமே இந்த சுழற்சி முறைதான். தற்பொழுது சீஸனில் இருக்கும் ஐட்டங்கள் சமையல், கர்நாடக சங்கீதம் மற்றும் வலையுலகம். :)
இரண்டாம் கிறுக்குத்தனம்
இது முதலாம் கிறுக்குத்தனத்தின் தொடர்ச்சிதான். ஒண்ணு பிடிச்சா ஒரேடியா பிடிக்கும் இல்லைன்னா பிடிக்காமலேயே போயிடும். உதாரணத்துக்கு இப்போ கர்நாடக சங்கீதம் பிடிக்குதா, அதைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை. விழுந்து விழுந்து கேட்ட ஆங்கிலப் பாடல்கள் இப்பொழுது வேப்பங்காயாகக் கசக்கிறது. இது போன்றுதான் குறுக்கெழுத்தாகட்டும், சுடோகுவாகட்டும். ஒரு நாளைக்கு நாலைந்து புதிர்கள் போடுவதிலிருந்து இப்பொழுது திரும்பிக் கூடப் பார்க்காத நிலை வரை. வலைப்பூப் பக்கம் எப்போ வராம இருக்கப் போறீங்கன்ன்னு எல்லாம் கேட்கக் கூடாது!
மூன்றாம் கிறுக்குத்தனம்
தொழில்நுட்ப சாதனங்களின் மேல் காதல். இது காசைக் கரியாக்கும் ஒரு விஷயம். புதிதாக சந்தையில் என்ன வருகிறது, என்ன வாங்கலாம், எதன் விலை குறைந்து கொண்டே இருக்கிறது எனப் பார்த்துக் கொண்டே இருப்பது. அதீத ஆர்வத்தால் பல சாமன்கள் வாங்கிக் குமித்து வைப்பது. வாங்கும் சாமன்களில் உபயோகப்படுத்தாமல் இருப்பவை எத்தனை எத்தனையோ. மடிக்கணினி, கம்பியில்லா இணைய இணைப்பு, கம்பியில்லா ஒலிப்பான்கள், வெளிச்சத்தம் குறைக்கும் ஒலிப்பான்கள், ஐ-பாடுகள், அதன் ஒன்று விட்ட சகோதரர்கள், நீலப் பல் சமாச்சாரங்கள்.... என நீண்டு கொண்டே போகும் பட்டியல். நான் வாங்குவது போதாது என்று அடுத்தவர்களையும் வாங்க வைத்து விடுவேன். அதே போல நம்மிடம் கேட்காமல் எதையும் வாங்க மாட்டார்கள் நம் நண்பர்கள். :)
நான்காவது கிறுக்குத்தனம்
ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலை மாத்திரம் செய்ய முடியாது. தொலைபேசியில் பேசும் பொழுது வேறு எதாவது படிப்பது அல்லது ஒரு நேரத்தில் நான்கு டாகுமெண்ட்டுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வேலை செய்வது. வேலை செய்யும் பொழுது கூடவே நான்கு சாட் சாளரங்கள், தமிழ்மணம் எனத் திறந்து வைத்துக் கொள்வது, ட்ரெட்மில்லில் நடக்கும் பொழுது காதிற்குப் பாட்டு, கண்ணிற்கு புத்தகம் அல்லது மடிக்கணினி, சாப்பிடும் பொழுது பாட்டும் புத்தகமும் என பல வேலைகளை செய்யாமல் இருக்கவே முடிவதில்லை. சில மீட்டிங்கள் சென்றால் நாம் படும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும்! :)
ஐந்தாவது கிறுக்குத்தனம்
அஞ்சாவதா என்னத்தை சொல்லறது?
- ஒரு புத்தகத்தை எடுத்தா அதை முடிக்கும் வரையில் இரவும் பகலுமாகப் படிப்பதைச் சொல்லவா? (அது எத்தைகைய குப்பையாக இருந்தாலும் சரி!)
- மனதில் தோன்றுவதைச் சொல்லியே தீர வேண்டும் என வேண்டாத நேரங்களில் வாயைத் திறந்து விடுவதைச் சொல்லவா? (அதான் இந்த மாசத்திலேயே ரெண்டுவாட்டி மாட்டிக்கிட்டாச்சே!) :)
- ஒரு உணவகம் பிடித்திருந்தால் அங்கு அடிக்கடி சென்று மெனு கார்ட்டில் இருக்கும் ஐட்டங்கள் முழுவதையும் ஒவ்வொன்றாக ஒரு கை பார்த்துவிடுவதைச் சொல்வதா? (அதான் உடம்பையும் கொல்ஸ்ட்ரால் லெவலையும் பார்த்தா தெரியுதே - தங்கமணி)
- வீட்டில் சமைக்கும் பொழுது எதாவது சமையல் குறிப்பைப் பார்த்து அப்படியே செய்யாமல் அதனை மாற்றி எதையாவது செய்து விட்டு, அதை அடுத்த முறை செய்யும் பொழுது நான் செய்த மாற்றங்கள் என்னவென்று தெரியாமல் முழிப்பதைச் சொல்லவா? (என்ன தப்பு செஞ்சோமுன்னு தெரியாம அதையே திரும்பச் செஞ்சு மாட்டிகிறதுதான் வழக்கம்!)
- சொல்ல முடியாது!! ( :)) )
கிறுக்கு நம்பர் 1 - பெனாத்தல் சுரேஷ்
கிறுக்கு நம்பர் 2 - ரஷ்ய மருத்துவர் இராமநாதன்
கிறுக்கு நம்பர் 3 - தம்பி தேவ்
கிறுக்கு நம்பர் 4 - நடிப்புப் புயல் டுபுக்கு
கிறுக்கு நம்பர் 5 - நகைச்சுவைப் புயல் அபிஅப்பா
டிஸ்கி (இப்போ எல்லாம் இது போடாம எழுதவே பயமா இருக்கே)
இந்த பாருங்க முன்னாடி நடந்த நாலு விளையாட்டாகட்டும் இல்லை அதுக்குப் பின்னாடி வந்த ஆறு விளையாட்டாகட்டும், நாம கூப்பிட்டவங்கள்ள பாதி பேர் எழுதறதையே கிட்டத்தட்ட நிறுத்திட்டாங்க. அதுக்கும் மேல சொன்ன லிஸ்டுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை!
85 comments:
இழுத்துவிட்ட ஐவரில் மகளிர் கோட்டா எல்லாம் கேட்கக்கூடாது. நானே கிறுக்கு அது இதுன்னு சொல்லி இருக்கேன், அங்க மகளிரை நுழைச்சா ரொம்ப ஆபத்து. அதான் ஒரு சேஃப்பா....
அட! இது என்னப்பா புத்திசாலிகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கோம்? :-))))))
அட கிறுக்கு பயல்களா...
வாங்கய்யா கொத்தனார் ஐயா...
வரவேற்க வந்தோமய்யா
நீங்களும் கூட்டணியில் கலந்ததுக்கு!!!
இத்தன பொருட்களை வாங்கி வெச்சி...சும்மாப் போட்டு வெச்சிருக்கீங்களா! அடக்கடவுளே! அதுனால எல்லாரும் ஒங்ககிட்ட கேட்டுட்டுதான் வாங்குறாங்களா? சரி. அவங்க பொழைச்சாங்க. நீங்களுந்தான்.
அஞ்சுன்னு சொல்லீட்டு அஞ்சுற மாதிரி இத்தனை அடுக்கீருக்கீங்க. ஒரு தகவல் புரிஞ்சது. டிரெட் மில்லுல தினமும் நடக்குறீங்க..ஓடுறீங்க...ஓடிக்கிட்டே நடக்குறீங்க..நடந்துகிட்டே ஓடுறீங்க..சரியா?
இலவசனாரின் ரசிகர்கள் சார்பாக நாங்களே ஒரு 'டாக்' (tag) கட்டிகிட்டு சொல்றது என்னன்னா -
முதலாம் கிறுக்குத்தனம்-'இலவசம்' பெயர் வச்சிகிட்டு தமிழ் இணைய வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் நம்ம கொத்தனார், என்ன எழுதினாலும் வந்து ஒரு எட்டு பாத்திட்டு போறது... அது எதுகை மோனையோட இருக்கும் வெண்பா பதிவானாலும் சரி... எக்குதப்பா சவுண்ட் விடற பதிவானாலும் சரி...
இரண்டாவது கிறுக்குத்தனம் - அவசரமா அலுவலகம் போயிட்டிருக்க்ம்போது எதிர்ல வர அண்டை வீட்டுக்காரர பார்த்த உடன ஒரு சின்ன சிரிப்ப சிந்தற மாதிரி, எதை எழுதினாலும் உள்ள வந்து சின்னதா ஒரு 'உள்ளேன் ஐயா'-ஆவது சொல்லிட்டு போறது.
மூன்றாம் கிறுக்குத்தனம் - அப்ப அப்ப நாம போட்ட கமெண்ட் வந்திடுச்சா? வரலன்னா... 'எங்க என் கமெண்ட்' அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டு... அவரோட ஹிட் கவுண்டர ஏகத்துக்கு ஏத்தி விடறது...
நான்காவது கிறுக்குத்தனம்: பின்னூட்டம் வெளியிட்டாச்சுன்னா அதுக்கு எதுனா பதில் சொல்லியிருக்காரா? அதுக்கு ஒரு துணை கேள்வி... பதிவுக்கு சம்பந்தமோ இல்லையோ... அப்படியே தொடர்ந்து அலுக்காம பின்னூட்ட விளையாட்டு விளையாடிட்டே இருக்கறது..
ஐந்தாவது கிறுக்குத்தனம்: அட இது வேற நான் தனியா சொல்லனுமாக்கும்.
ஆங்! மறந்து போயிட்டனே... உங்க பதிவுகள படிச்ச அனுபவத்துல சொல்றேன்... நீங்க கிறுக்குத்தனம்னு நிறைய சொல்லியிருக்கீங்க... ஆனா நீங்க eccentric வகை மாதிரி அதிரடி கிறுக்கு இல்லனு தோனுது. ரொம்ப ஆழ்ந்த, அமைதியான, புத்திசாலி (?!) கிறுக்கா இருப்பீங்களோ என்னமோ :-))
தலிவரே எந்தக் கிறுக்கும் தன்னைக் கிறுக்குன்னு ஒத்துகிட்டது இல்லையாம்.. நீங்கச் சொல்லுங்க ஒத்துக்கலாமா? வேணாமா?
http://chennaicutchery.blogspot.com/2007/03/5.html
நம்மப் பட்டியலைப் பார்த்து யோசிச்சுட்டுச் சொல்லுங்க...
என்ன கொத்ஸ்! என் பினூட்டத்தின் மேல என் பேர் வராம ஸ்ரீதர்வெங்கட் பேர் வந்திருக்கு! தமிழ்மணத்துக்கு சொல்லனுமா?:-))
ஆஹா! சிங்கம் கெளம்பிடுச்சிடா கெளம்பிடுச்சிடா! யாராவது புடிச்சு கட்டுங்கப்பா:-)
ஆமா சிறு வயசுல்ல கே.பி.சுந்தரம்பாள்.. அப்புறம் ப்ரைமரில்ல சரோஜா தேவி... ஹை ஸ்கூல்ல கே.ஆர்.விஜயா.. இப்படி நீங்க சீசனல் என்ற பெயரில் வெளியிட மறந்த விசயங்களை உங்கள் தொண்டன் என்ற முறையில் நான் வெளியிட்டு இங்கள் மேலானப் பாராட்டுக்காக க் காத்திருக்கிறேன்..
அப்பா வெங்கட்.. நீ இம்புட்டு பெரிய கொத்ஸ் ரசிகனா.. கண்ணுக் கலங்குதுப்பா.. சரி சடுபுட்டுன்னு கிளம்பி வாங்க... களப்பணி காத்து இருக்கு... தலைவர் கிட்டச் சொல்லி ஒரு போஸ்டிங் ஏற்பாடு பண்றேன்.. :-)
எங்கே புலி! எங்க இருந்தாலும் இங்க வராம அபிஅப்பாகிட்ட போகவும். யாவாரம் டல் அங்க:-)
டீச்சர், அதான் அந்தக் காலத்து வெள்ளைக்காரங்க Wise People think alike அப்படின்னு சொல்லி இருக்காங்க. (பாருங்க அவங்க Men அப்படின்னு போட்டதை நான் பொலிட்டிக்கலி சரியா People அப்படின்னு மாத்தி இருக்கேன். ஆனாலும் நம்மை Profiling எல்லாம் பண்ணறாங்க.)
ஆனா பாருங்க இதை நம்ம கிளாஸ் ரூமில் சொன்னா எக்கோ - Fools seldom differ அப்படின்னு கேட்குதுங்க. அது ஏன்?? :))
//அட கிறுக்கு பயல்களா...//
அண்ணா, உங்க பதிவு வர வரைக்கும் நான் எந்த பதிலும் சொல்லப் போறது இல்லைங்கண்ணா.
//வாங்கய்யா கொத்தனார் ஐயா...
வரவேற்க வந்தோமய்யா
நீங்களும் கூட்டணியில் கலந்ததுக்கு!!!//
இந்தக் கூட்டணியில் இடம் இல்லாம நமக்கு எந்தக் கூட்டணியில் இடம் இருக்கப் போகுது!!
//அஞ்சுன்னு சொல்லீட்டு அஞ்சுற மாதிரி இத்தனை அடுக்கீருக்கீங்க//
பின்ன வெறும் அஞ்சே அஞ்சு சொல்லச்சொன்னா. எதை எடுப்பது எதை விடுவதுன்னு கன்பியூஷந்தான்.
//டிரெட் மில்லுல தினமும் நடக்குறீங்க.//
தினமும் அப்படின்னு ஒரு வார்த்தையை நடுவில் போட்டு தங்கமணியை முறைக்க விட்டுட்டீங்களே. :)
//இலவசனாரின் ரசிகர்கள் சார்பாக நாங்களே ஒரு 'டாக்' (tag) கட்டிகிட்டு சொல்றது என்னன்னா -//
ரசிகன்னா நீர் ரசிகன்ய்யா. தேவு, இவரு ஏரியா விசாரிச்சு, வட்டம், மாவட்டம் அப்படின்னு எதுனா பொறுப்பு குடுப்பா. அப்புறம் அவசரப்பட்டுக்கிட்டு ஓடாதே. நான் சொன்னது பொறுப்பு, பருப்பு இல்லை.
ஆனாலும் என்ன எழுதினாலும் என்ன எழுதினாலும் அப்படின்னு சும்மா சும்மா நக்கல் அடிக்கிறது உமக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை?
அப்புறம் வந்து பாக்கறது ஒரு கிறுக்குத்தனமுன்னா, உள்ளேன் ஐயா சொல்லறது இரண்டாவதா? மொக்கை பதிவு தெரியும், ஆனா இது மொக்கை லிஸ்டா இருக்கே.
லிஸ்டில் மூணும் நாலும் கிறுக்குத்தனமாய்யா, இது பின்னூட்ட கலையின் ஆணிவேர். இது பத்தின இணையக் கோனார் நோட்ஸ் எல்லாம் படிக்கலையா? தேவ், இவருக்கு ஒரு டெஸ்ட் வையப்பா.
//ஆனா நீங்க eccentric வகை மாதிரி அதிரடி கிறுக்கு இல்லனு தோனுது.//
அதுக்காக சார்ல்ஸ் மேன்சன் கணக்காவா அலைய முடியும்?? அது பார்ட்டி யாருன்னு தெரியலைன்னா விக்கி பசங்களைக் கேளு.
//ரொம்ப ஆழ்ந்த, அமைதியான, புத்திசாலி (?!) கிறுக்கா இருப்பீங்களோ என்னமோ :-))//
நல்லா நக்கல் அடிக்கறீங்கடா சாமீ!!
//நீங்கச் சொல்லுங்க ஒத்துக்கலாமா? வேணாமா?//
நீ சொன்ன ஒரு காரணத்துக்காகவே ஒத்துக்கணும். நாந்தேன் நாந்தேன்னு சவுண்ட் விடணும்.
//நம்மப் பட்டியலைப் பார்த்து யோசிச்சுட்டுச் சொல்லுங்க...//
அதெல்லாம் பார்த்தாச்சு. அதுக்கு ரோசனை வேறயா? என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?
இதெல்லாம் செய்யி. ஆனா மாங்கு மாங்குன்னு எழுதுன பதிவைப் பத்தி ஒரு வார்த்தை?
//என் பேர் வராம ஸ்ரீதர்வெங்கட் பேர் வந்திருக்கு! //
அபி அப்பா நீங்கதான் ஸ்ரீதருமா? டோண்டு ஸ்டைல் தப்பு பண்ணிட்டீங்களா? அப்போ அந்த ஆஸ்பத்திரி மேட்டர்? அந்த குழந்தை அப்பா பேரு ஸ்ரீதரா? நீங்க நம்ம சீரியல் கதாநாயகர்கள் மாதிரி டபுள் ஆக்டா?
பதில் சொல்லுங்கப்பா பதில் பதில்
//ஆஹா! சிங்கம் கெளம்பிடுச்சிடா கெளம்பிடுச்சிடா! யாராவது புடிச்சு கட்டுங்கப்பா:-)//
நம்ம பதிவு பக்கம் வந்து இருக்கற ரெண்டு பின்னூட்டத்தையும் தின்னுடப் போகுது. சீக்கிரம் பிடிச்சு கட்டுங்கப்பா.
ஆமா சிங்கம் பசித்தால் பின்னூட்டத்தை திங்குமா?
//ஆமா சிறு வயசுல்ல கே.பி.சுந்தரம்பாள்.. அப்புறம் ப்ரைமரில்ல சரோஜா தேவி... ஹை ஸ்கூல்ல கே.ஆர்.விஜயா.. //
நல்லவேளை ஹைஸ்கூலில் சரோஜாதேவின்னு சொல்லாம விட்டீங்களே. அதுக்கு மீனிங்கே வேற. இப்பவும் இங்க வந்து ப்ரைமரியிலேயே சரோஜாதேவியா தலைவா உங்க ரேஞ்சே வேற அப்படின்னு சவுண்ட் வந்தாலும் வரும்.
உங்களை மாதிரி ஆளுங்களை வெச்சு மேய்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுதடா சாமி.
//. தலைவர் கிட்டச் சொல்லி ஒரு போஸ்டிங் ஏற்பாடு பண்றேன்.. :-)//
சொல்லியாச்சு. டூ தி நீட்புல்.
//எங்கே புலி! எங்க இருந்தாலும் இங்க வராம அபிஅப்பாகிட்ட போகவும். யாவாரம் டல் அங்க:-)//
யோவ் இப்படி ஹைஜாக் பண்ணறது எல்லாம் உனக்கே நியாயமா இருக்கே, ஏற்கனவே 40 தாண்டுனா ஆள் வரது இல்லை. அதுக்காக பதில் சொல்லாம இருந்தா பதில் சொல்லு பதில் சொல்லுன்னு வேற ஒரு படுத்தல்.
சும்மா இருங்கப்பா.
நீங்க தான் பெரிய புல்லின்னு.. சாரி தலைவா.. பெரிய புள்ளின்னு பெயர் வாங்குனவராச்சே,... எப்படி நாங்க மறப்போம்.. வாழ்க நம் பெரும் புல்லி... சே பெரும் புள்ளி...
//ஆமா சிங்கம் பசித்தால் பின்னூட்டத்தை திங்குமா? //
அது தெறியாது, ஆனா புலி திங்கும்! அதுவும் நாகை புலி தினுட்டு நாக்கை வேற நக்கி நையாண்டி பண்ணும்:-))
ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலை மாத்திரம் செய்ய முடியாது. தொலைபேசியில் பேசும் பொழுது வேறு எதாவது படிப்பது அல்லது ஒரு நேரத்தில் நான்கு டாகுமெண்ட்டுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வேலை செய்வது. வேலை செய்யும் பொழுது கூடவே நான்கு சாட் சாளரங்கள், தமிழ்மணம் எனத் திறந்து வைத்துக் கொள்வது, ட்ரெட்மில்லில் நடக்கும் பொழுது காதிற்குப் பாட்டு, கண்ணிற்கு புத்தகம் அல்லது மடிக்கணினி, சாப்பிடும் பொழுது பாட்டும் புத்தகமும் என பல வேலைகளை செய்யாமல் இருக்கவே முடிவதில்லை. சில மீட்டிங்கள் சென்றால் நாம் படும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும்! :)
இது இது!!
இப்படி இருந்தாதான் நாம் ஒண்ணா இருக்க முடியும்.
பாட்டு,புத்தகம் இல்லாம என்னாலே சாப்பிடவே முடியாது. செவிக்கு,கண்ணுக்கு அப்புறம்தான் வயித்துக்கு. நல்ல பாலிசி தானே.:-0)!
துளசி!! நாம புத்திசாலிகள்தான்.:-0)
அண்ணா... தேவ் அண்ணா... ஏதோ நம்மாலானதுண்ணா. நல்ல போஸ்டிங்கா பாத்து போடுங்கண்ணா... அப்பப்ப வந்தமா, ஆப்பாப்பா வச்சமா, அப்பீட்டானமான்னு இருக்கற மாதிரி பணி இருந்த ரொம்ப நல்லதுங்க்ணா...
//இது பின்னூட்ட கலையின் ஆணிவேர்//
//அது பார்ட்டி யாருன்னு தெரியலைன்னா விக்கி பசங்களைக் கேளு.//
பின்னூட்ட கலையை விடுங்க. எங்கங்க இந்த பின்னலூட்ட கலையை கத்துகிட்டீங்க? இங்க ஏதாவது சொன்னா அப்படியே விக்கி பசங்களுக்கு இழுத்திட்டு போறீங்களே. இப்படி பின்னி பின்னி பின்னூட்ட பெடலெடுக்கறீங்களே.
விக்கி(ப்) பசங்களுக்கு சந்தி உண்டா அப்படின்னு நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில காணோம். வேற என்ன கேக்குறது அங்க...
//நாம புத்திசாலிகள்தான்.:-0)//
நாட்டாமை! Tag-ஐ மாத்தி கட்டு...
//என் பேர் வராம ஸ்ரீதர்வெங்கட் பேர் வந்திருக்கு! //
அபி! உங்க அப்பா நல்லவரா? கெட்டவரா? இப்படி ஒரு குழப்பத்த உண்டு பண்ணிட்டாரே.
என்ன இ.கொ.... ஊர்ரெல்லாம் IP Counter வச்சிகிட்டு மிரட்டுறாங்க. நீங்க ஒண்ணு வச்சிக்கிறது. எடுத்து போடலாம் இல்ல இப்ப...
"கோலங்கள் நாயகியின் தந்தையும் மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டரால் பாதிக்கப் பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது. அப்பப்ப பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பெயரில் வந்து 'கெக்கெ பிக்கெ' என்று பின்னூட்டம் இடுகிறார். அப்பா 'வெங்கடா'ஜலபதி! இது அடுக்குமா! மேஸ்திரியின் பதிவில் தானாகவே உளறி மாட்டிக் கொண்டது எல்லாருக்கும் தெரியும்" - அப்படின்னு ஒரு குறுஞ்(?!) செய்தி தட்டி விடவேண்டிதானே.
//தொழில்நுட்ப சாதனங்களின் மேல் காதல். இது காசைக் கரியாக்கும் ஒரு விஷயம். புதிதாக சந்தையில் என்ன வருகிறது, என்ன வாங்கலாம், எதன் விலை குறைந்து கொண்டே இருக்கிறது எனப் பார்த்துக் கொண்டே இருப்பது. அதீத ஆர்வத்தால் பல சாமன்கள் வாங்கிக் குமித்து வைப்பது. வாங்கும் சாமன்களில் உபயோகப்படுத்தாமல் இருப்பவை எத்தனை எத்தனையோ. மடிக்கணினி, கம்பியில்லா இணைய இணைப்பு, கம்பியில்லா ஒலிப்பான்கள், வெளிச்சத்தம் குறைக்கும் ஒலிப்பான்கள், ஐ-பாடுகள், அதன் ஒன்று விட்ட சகோதரர்கள், நீலப் பல் சமாச்சாரங்கள்.... என நீண்டு கொண்டே போகும் பட்டியல்.//
கொத்ஸ்,
என்க்கிட்டேயும் இருக்கு அந்த கிறுக்குத்தனம். ஏதாவது ஒன்னு புதுசா மார்க்கெட்'க்கு வந்தா போதும், அதை பத்தி விசாரிச்சுட்டு காசு கையிலே இருந்தா ஒடனே வாங்கிறது....! ;)
/தலிவரே எந்தக் கிறுக்கும் தன்னைக் கிறுக்குன்னு ஒத்துகிட்டது இல்லையாம்.. நீங்கச் சொல்லுங்க ஒத்துக்கலாமா? வேணாமா?
//
இதை நானும் வழிமொழிகிறேன்.....
கருத்து சொல்ல வேற விஷயமில்லை அதுதான் :)
கொத்தனாரே, அப்பவே படிச்சுட்டேன்!!
//இவரு புதிர் போட்ட போதெல்லாம் அங்க போய் முயற்சி செஞ்சப்பவே முடிவு பண்ணிட்டாரு போல!//
ஜஸ்ட் பதிவு போடுறதுக்கு பத்து நிமிஷம் முன்னடிதான் முடிவு பண்ணினேன்!!!;)
//ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலை மாத்திரம் செய்ய முடியாது. //
இந்த எழவு பிடிச்சது எனக்கும் உண்டு!
//ஆனா பாருங்க இதை நம்ம கிளாஸ் ரூமில் சொன்னா எக்கோ - Fools seldom differ அப்படின்னு கேட்குதுங்க. அது ஏன்?? //
;)))
//இழுத்துவிட்ட ஐவரில் மகளிர் கோட்டா எல்லாம் கேட்கக்கூடாது. நானே கிறுக்கு அது இதுன்னு சொல்லி இருக்கேன், அங்க மகளிரை நுழைச்சா ரொம்ப ஆபத்து. அதான் ஒரு சேஃப்பா.... //
நம் நாட்டு அரசியல்வாதிகள் போல் நீரும் இருப்பீர் என்று நான் நினைக்கவே இல்லை கொத்துஸ்.
என்னை வந்து பாரும், 40 % கொடுத்து இருக்கேன். நல்ல மனசு வேணும்ய்யா...
//ஐ-பாடுகள்//
ஐ - பாடு ஷ்புள் ஒன்னு நண்பருக்கு வாங்கி கொடுத்தேன். ஒரு அழிப்பான் அளவுக்கு தான் இருக்கு. நல்லாவும் இருக்கு, அடுத்த பதிவு அதை பற்றி தான் நம் பதிவில்.
//ஒரு புத்தகத்தை எடுத்தா அதை முடிக்கும் வரையில் இரவும் பகலுமாகப் படிப்பதைச் சொல்லவா? (அது எத்தைகைய குப்பையாக இருந்தாலும் சரி!)//
உமக்கு புத்தகம், எனக்கு திரைப்படம் :-(
//ஆனா நீங்க eccentric வகை மாதிரி அதிரடி கிறுக்கு இல்லனு தோனுது. ரொம்ப ஆழ்ந்த, அமைதியான, புத்திசாலி (?!) கிறுக்கா இருப்பீங்களோ என்னமோ :-)) //
கொத்துஸ், எப்படி இப்படி எல்லாம். இதுக்கே தனியா ஒரு பெரும் தொகை ஆகும் போல இருக்கே.....
//எங்கே புலி! எங்க இருந்தாலும் இங்க வராம அபிஅப்பாகிட்ட போகவும். யாவாரம் டல் அங்க:-) //
அங்க போயிட்டு தான் இங்க வரேன் தொல்ஸ்.
//நல்லவேளை ஹைஸ்கூலில் சரோஜாதேவின்னு சொல்லாம விட்டீங்களே. அதுக்கு மீனிங்கே வேற. இப்பவும் இங்க வந்து ப்ரைமரியிலேயே சரோஜாதேவியா தலைவா உங்க ரேஞ்சே வேற அப்படின்னு சவுண்ட் வந்தாலும் வரும்.//
மீனிங்கே வேற அப்படிங்குறது எங்களுக்கும் தெரியும், உமக்கு எப்படி தெரியும் அதை சொல்லும்... அந்த காலத்தில் இருந்தே இருக்காங்களா அவங்க ????? ;-)
//அது தெறியாது, ஆனா புலி திங்கும்! அதுவும் நாகை புலி தினுட்டு நாக்கை வேற நக்கி நையாண்டி பண்ணும்:-)) //
தொல்ஸ்.....வஞ்ச புகழ்ச்சி அணியா இல்ல நேரடியாவே திட்டுறீங்களா....
என் பின்னூட்டங்களை பல மணி நேரமாக வெளியீடாமல் இருக்கும் உம்மை கன்னாபின்னானு கண்டிப்பதோடு இல்லாமல் கண்டமேனிக்கும் கண்டிக்குறேன்.
தலீவரே உங்க மின்னஞ்சல் முகவரி என்னிடம் இல்லாததால் இங்கே...
இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:
அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்
பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஒரு "இலவச" அறிவிப்பு தரமுடியும்னா "இலவசமா" தந்தருளுங்க.. நன்றி :-)
//இந்த பாருங்க முன்னாடி நடந்த நாலு விளையாட்டாகட்டும் இல்லை அதுக்குப் பின்னாடி வந்த ஆறு விளையாட்டாகட்டும், நாம கூப்பிட்டவங்கள்ள பாதி பேர் எழுதறதையே கிட்டத்தட்ட நிறுத்திட்டாங்க. அதுக்கும் மேல சொன்ன லிஸ்டுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை!//
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்
//கொத்துஸ், எப்படி இப்படி எல்லாம். இதுக்கே தனியா ஒரு பெரும் தொகை ஆகும் போல இருக்கே.....//
இந்த கோணத்துல யோசிக்கவே இல்லையே.
புலியாரே... தாங்க்யூ! தாங்க்யூ! அப்படியே 'பில்' போட ஏதாவது 'டெம்ப்ளேட்' வச்சிருக்கீங்க? அனுப்பி விடுங்களேன்.
நானும் 'இந்த வாரம் இணையத்துல சம்பாதித்தது'-னு ஒரு இடுகை போட்டுடறேன்.
//என்னை வந்து பாரும், 40 % கொடுத்து இருக்கேன். நல்ல மனசு வேணும்ய்யா...//
அது என்ன தனியா ஒதுக்கீடு? அப்படி சொல்லும்போதே உம்ம 'ஆதிக்க மணப்பான்மை' தெரிஞ்சிடுச்சே. பூனைக்குட்டிய தூக்கி உள்ள போடுங்க.
கவலைப் படாதீங்க. 'அவங்க' இதெல்லாம் 'படிக்க' மாட்டாங்க. அவங்க சார்பா நாங்கதான் எடுத்து காட்ட வேண்டியிருக்கு.
ரொம்ப நேரம் இங்ஙனயே சுத்திகிட்டு இருக்காப்ல இருக்கே! சரி ஒரு பிரேக் விட்ருவோம்.
திரும்ப வருவோம்ல!
//நீங்க தான் பெரிய புல்லின்னு.. சாரி தலைவா.. பெரிய புள்ளின்னு பெயர் வாங்குனவராச்சே,... எப்படி நாங்க மறப்போம்.. வாழ்க நம் பெரும் புல்லி... சே பெரும் புள்ளி...//
இந்த மாதிரி முதுகுல குத்தி விடறவனை, சாரி தட்டிக் குடுக்குறவனை நினைச்சாலே பெருமையா இருக்கு! :))
//அது தெறியாது, ஆனா புலி திங்கும்! அதுவும் நாகை புலி தினுட்டு நாக்கை வேற நக்கி நையாண்டி பண்ணும்:-))//
அவரு திங்கறது இருக்கட்டும், நீர் இப்படி தமிழைக் குதறி கொத்துப் பரோட்டா போடறீரே. அதுக்கு என்ன பண்ணலாம்? :))
//இப்படி இருந்தாதான் நாம் ஒண்ணா இருக்க முடியும்.
பாட்டு,புத்தகம் இல்லாம என்னாலே சாப்பிடவே முடியாது. செவிக்கு,கண்ணுக்கு அப்புறம்தான் வயித்துக்கு. நல்ல பாலிசி தானே.:-0)!
//
இது இது!! அதே! அதே!!
//துளசி!! நாம புத்திசாலிகள்தான்.:-0)//
ஆமாங்க நம்மளே சொல்லிக்கிட்டாத்தான் உண்டு!
//அப்பப்ப வந்தமா, ஆப்பாப்பா வச்சமா, அப்பீட்டானமான்னு இருக்கற மாதிரி பணி இருந்த ரொம்ப நல்லதுங்க்ணா...//
களப்பணிக்குத் தயாராகச் சொன்னா, அப்பப்ப வருவீகளா? அப்படி எல்லாம் செஞ்சா ஆப்பு நீர் அடிக்க முடியாது. உமக்கு அடிச்சிடுவோம். பிரியுதா?
//பின்னூட்ட கலையை விடுங்க. எங்கங்க இந்த பின்னலூட்ட கலையை கத்துகிட்டீங்க? இங்க ஏதாவது சொன்னா அப்படியே விக்கி பசங்களுக்கு இழுத்திட்டு போறீங்களே. இப்படி பின்னி பின்னி பின்னூட்ட பெடலெடுக்கறீங்களே.//
சொல்லித் தெரிவதில்லை!! இதெல்லாம் அப்படியே பொங்கி வரணும்பா.
//விக்கி(ப்) பசங்களுக்கு சந்தி உண்டா அப்படின்னு நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில காணோம். வேற என்ன கேக்குறது அங்க...//
ஆமாம். நீர் பாட்டுக்கு கேட்டுட்டுப் போயிடுவீர். நான் தெரியாத்தனமா சந்தி உண்டுன்னு சொன்னேன் வெச்சுக்குங்க. அப்புறம் சந்தி உண்டுன்னா பூணுலும் உண்டா, விக்கி பசங்க எல்லாம் பாப்பாரப் பசங்களா, etc etc அப்படின்னு தனிமடல், பின்னூட்டம் எல்லாம் வரும். நம்மளை விடுங்க. அங்க சில நல்லவங்களும் இருக்காங்க. எதுக்கு இந்தத் தொந்தரவு அப்படின்னு பேரில் கூட சந்தி இல்லாம பண்ணிட்டோம். புரியுதா? :))
//நாட்டாமை! Tag-ஐ மாத்தி கட்டு...//
நாட்டாமை நம்ம பக்கம் எல்லாம் வர மாட்டாரே!! :)) ஸ்ரீதர் நீங்க ஆட்டத்துக்குப் புதுசு. இது உங்களுக்குப் புரியலைன்னா விளக்கம் எல்லாம் கேட்கக் கூடாது!!
tga, atg, agt, gat, gta - இவ்வளவுதாங்க மாத்திக்கட்ட முடியும்.
//அபி! உங்க அப்பா நல்லவரா? கெட்டவரா? இப்படி ஒரு குழப்பத்த உண்டு பண்ணிட்டாரே.//
யாரு யாரு, யாரு யாருன்னு யாருக்குமே தெரியலையே!!
//
"கோலங்கள் நாயகியின் தந்தையும் மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டரால் பாதிக்கப் பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது. அப்பப்ப பழம்பெரும் திரைப்பட இயக்குனர் பெயரில் வந்து 'கெக்கெ பிக்கெ' என்று பின்னூட்டம் இடுகிறார். அப்பா 'வெங்கடா'ஜலபதி! இது அடுக்குமா! மேஸ்திரியின் பதிவில் தானாகவே உளறி மாட்டிக் கொண்டது எல்லாருக்கும் தெரியும்" - அப்படின்னு ஒரு குறுஞ்(?!) செய்தி தட்டி விடவேண்டிதானே.//
அபி அப்பா, ஸ்ரீதர் மட்டும் இல்லாம நீர்தான் சாம்பு, இரவுக்கழுகார் எல்லாம் கூடவா? அப்படியே எழுதறீரு!!
//ஏதாவது ஒன்னு புதுசா மார்க்கெட்'க்கு வந்தா போதும், அதை பத்தி விசாரிச்சுட்டு காசு கையிலே இருந்தா ஒடனே வாங்கிறது....! ;)//
அதெல்லாம் செய்யாம சேர்த்து வெச்சிருந்தா இன்னேரம் கையில் கணிசமா ஒரு தொகை வந்திருக்கும். ஹூம்....
///தலிவரே எந்தக் கிறுக்கும் தன்னைக் கிறுக்குன்னு ஒத்துகிட்டது இல்லையாம்.. நீங்கச் சொல்லுங்க ஒத்துக்கலாமா? வேணாமா?
//
இதை நானும் வழிமொழிகிறேன்.....//
வழிமொழிஞ்சு ஒத்துக்கிட்டீங்களே!! :))
எங்கள் அண்ணன் பெரும் புல்லி... ச்சே பெரும் புள்ளி போன்ற பட்டங்களை விரும்பாதவர்.. அண்ணனை அன்போடு அண்ணன் என்று அழைத்தால் போதும் என அண்ணன் மீது உயிரையே வைத்திருக்கும் கோடானுக் கோடி தொண்டர்களையும் ரசிகர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
தேவ்
தலைமை மன்றம்
கொட்டிவாக்கம்
அண்ணனை இதையும் தாண்டி இந்தப் பட்டம் சொல்லி அழைப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கிறோம்.
//சில மீட்டிங்கள் சென்றால் நாம் படும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும்! :)
//
சேம் பிளட்..
//ஜஸ்ட் பதிவு போடுறதுக்கு பத்து நிமிஷம் முன்னடிதான் முடிவு பண்ணினேன்!!!;)//
ஆக மொத்தம் கிறுக்குன்னு நினைச்ச உடனே நம்ம பேர்தான் ஞாபகத்துக்கு வருது. நல்லா இருங்கடா சாமிங்களா!! :))
//என்னை வந்து பாரும், 40 % கொடுத்து இருக்கேன். நல்ல மனசு வேணும்ய்யா...//
அவங்கள்ள 40% பேரு கிறுக்குன்னு சொல்ல நல்ல மனசு வேண்டாம். தைரியம்தான் வேணும். அந்த அசட்டுத் தைரியம்தான் உமக்கு நிறையாவே இருக்கே. புகுந்து விளையாடுங்க!
//ஐ - பாடு ஷ்புள் ஒன்னு நண்பருக்கு வாங்கி கொடுத்தேன். ஒரு அழிப்பான் அளவுக்கு தான் இருக்கு. நல்லாவும் இருக்கு, அடுத்த பதிவு அதை பற்றி தான் நம் பதிவில்.//
அதுக்கும் அடுத்தது வந்தாச்சே ஒரு க்ளிப் மாதிரி, சட்டைப் பையில் மாட்டிக்கலாம். கொஞ்சம் நீளமா முடியிருந்தா அதில் கூட மாட்டிக்கலாம். ஆப்பிள் என்றாலே அட்டகாசம்தான். ஆனா அதுக்காக நாம கொடுக்கற விலை ரொம்பவே அதிகம். மீதி உங்க பதிவில் பின்னூட்டமா!!!!
//கொத்துஸ், எப்படி இப்படி எல்லாம். இதுக்கே தனியா ஒரு பெரும் தொகை ஆகும் போல இருக்கே.....//
இதெல்லாம் நம்ம ரசிகர் மன்றம் கவனிச்சுக்கறது. அடுத்த பில் கேர் ஆஃப் புலி, சூடான் கிளை!
(தேவு, நோட் திஸ் பாயிண்ட்)
//மீனிங்கே வேற அப்படிங்குறது எங்களுக்கும் தெரியும், உமக்கு எப்படி தெரியும் அதை சொல்லும்... அந்த காலத்தில் இருந்தே இருக்காங்களா அவங்க ????? ;-)//
யோவ் விட்டா என்னை டோண்டு காலத்து மனுசனாக்கிடுவீங்க போல இருக்கே. சரோஜாதேவி எல்லாம் சங்ககாலத்தில் இருந்தே இருக்காங்க.
//தொல்ஸ்.....வஞ்ச புகழ்ச்சி அணியா இல்ல நேரடியாவே திட்டுறீங்களா....//
அவர் ஒருத்தர்தான்னு நினைச்சேன். அவரே நாந்தான் ஸ்ரீதர் அப்படின்னு பிட்டை போட்டாரு.
நீங்க என்னடான்னா அவரை அணின்னு சொல்லறீங்க. அவரு என்ன 11 பேரா? ஐயாம் தி கன்பியூஷன்.
//என் பின்னூட்டங்களை பல மணி நேரமாக வெளியீடாமல் இருக்கும் உம்மை கன்னாபின்னானு கண்டிப்பதோடு இல்லாமல் கண்டமேனிக்கும் கண்டிக்குறேன்.//
என்னைக் கண்டிச்சா என்ன ஆவப் போகுது கண்ணடிச்சா என்ன ஆவப் போகுது. அதுக்குக் கூட நேரம் தராம ஆணி புடுங்கச் சொல்லறானே. அவனை நிறுத்தச் சொல்லு, நான் வெளியிடறேன்.
சேது,
ஹச்! ஹச்சூ!
அந்த கவுஜ வார்த்தை நமக்கு அலர்ஜின்னு தெரியாதா? இப்படிப் பண்ணிட்டீங்களே!
ஹச்சூ! ஹ.ஹ.ஹ.ஹச்சூ!
//நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்//
உம்ம பேரும் இருந்த்தது லிஸ்டில். குமரன் உங்களை கூப்பிடுவாருன்னு விட்டுட்டேன். :)
//புலியாரே... தாங்க்யூ! தாங்க்யூ! அப்படியே 'பில்' போட ஏதாவது 'டெம்ப்ளேட்' வச்சிருக்கீங்க? அனுப்பி விடுங்களேன். //
டெம்பிளேட் அவரு அனுப்பின உடனே, பில்லை அவருக்கே அனுப்பவும்.
//நானும் 'இந்த வாரம் இணையத்துல சம்பாதித்தது'-னு ஒரு இடுகை போட்டுடறேன்.//
சம்பாதித்ததாக நினைத்ததுன்னு போடுங்க.அங்க இருந்து எதுவும் வருமுன்னு எனக்குத் தோணலை.
//அது என்ன தனியா ஒதுக்கீடு? அப்படி சொல்லும்போதே உம்ம 'ஆதிக்க மணப்பான்மை' தெரிஞ்சிடுச்சே. பூனைக்குட்டிய தூக்கி உள்ள போடுங்க.
கவலைப் படாதீங்க. 'அவங்க' இதெல்லாம் 'படிக்க' மாட்டாங்க. அவங்க சார்பா நாங்கதான் எடுத்து காட்ட வேண்டியிருக்கு.//
அப்படிப் போடு!! அப்படிப் போடு!! :)))
//ரொம்ப நேரம் இங்ஙனயே சுத்திகிட்டு இருக்காப்ல இருக்கே! சரி ஒரு பிரேக் விட்ருவோம்.
திரும்ப வருவோம்ல!//
நீர் அபி அப்பாவா இருக்கலாம். அதுக்காக நிஜ வாழ்க்கையில் கமெர்சியல் ப்ரேக் எல்லாம் விடறது கொஞ்சம் டூமச்சா தெரியலை? :))
//எங்கள் அண்ணன் பெரும் புல்லி... //
யோவ் இப்படி நம்மளை bully bully ன்னு சொல்லி நீரே போட்டுக் குடுத்துடுவீரு போல இருக்கே!!
//அண்ணனை இதையும் தாண்டி இந்தப் பட்டம் சொல்லி அழைப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கிறோம்.//
ரௌடி அப்படின்னு ஒரே ஒரு பட்டம்தான் வாங்கலை. இதுக்கு அப்புறம் அதுவும் வந்திரும். இனிமே நிம்மதியாத் தூங்குவதானே!!!
//சேம் பிளட்..//
சேம் மீட்டிங்கா இருந்தாக்கூட நாம பேசிக்கிட்டாவது இருக்கலாம். இப்படி சேம் பிளட்டா இருந்து என்னாத்த செய்யறது சொல்லுங்க!
//அப்படிப் போடு!! அப்படிப் போடு!! :)))//
இவ்வளவு குஷியா? இருங்க... இருங்க... cieling repair முடிஞ்சவுடன உங்க profiling-ஐ திருப்பி ஓட விட்டு பாப்போம்.
சீக்கிரமே ஆ.ஆ.ப. பட்டம் வாங்கிடுவீங்கன்னு தோனுது.
//ஹச்! ஹச்சூ!//
கவுஜயெல்லாம் வெண்பாவாகிடாது ஆனா வெண்பால்லாம் கவுஜ தான். வெண்பா எழுதினா கவுஜ ஏழுதினா மாதிரி தான். சரி நீங்க எழுதுறீங்களோ இல்லியோ உங்க நண்பர்கள்ட்ட சொல்லிடுங்க.
// Sridhar Venkat said...
இலவசனாரின் ரசிகர்கள் சார்பாக நாங்களே ஒரு 'டாக்' (tag) கட்டிகிட்டு சொல்றது என்னன்னா -
முதலாம் கிறுக்குத்தனம்-'இலவசம்' பெயர் வச்சிகிட்டு தமிழ் இணைய வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் நம்ம கொத்தனார், என்ன எழுதினாலும் வந்து ஒரு எட்டு பாத்திட்டு போறது... அது எதுகை மோனையோட இருக்கும் வெண்பா பதிவானாலும் சரி... எக்குதப்பா சவுண்ட் விடற பதிவானாலும் சரி...
இரண்டாவது கிறுக்குத்தனம் - அவசரமா அலுவலகம் போயிட்டிருக்க்ம்போது எதிர்ல வர அண்டை வீட்டுக்காரர பார்த்த உடன ஒரு சின்ன சிரிப்ப சிந்தற மாதிரி, எதை எழுதினாலும் உள்ள வந்து சின்னதா ஒரு 'உள்ளேன் ஐயா'-ஆவது சொல்லிட்டு போறது.
மூன்றாம் கிறுக்குத்தனம் - அப்ப அப்ப நாம போட்ட கமெண்ட் வந்திடுச்சா? வரலன்னா... 'எங்க என் கமெண்ட்' அப்படின்னு சவுண்ட் விட்டுகிட்டு... அவரோட ஹிட் கவுண்டர ஏகத்துக்கு ஏத்தி விடறது...
நான்காவது கிறுக்குத்தனம்: பின்னூட்டம் வெளியிட்டாச்சுன்னா அதுக்கு எதுனா பதில் சொல்லியிருக்காரா? அதுக்கு ஒரு துணை கேள்வி... பதிவுக்கு சம்பந்தமோ இல்லையோ... அப்படியே தொடர்ந்து அலுக்காம பின்னூட்ட விளையாட்டு விளையாடிட்டே இருக்கறது..
ஐந்தாவது கிறுக்குத்தனம்: அட இது வேற நான் தனியா சொல்லனுமாக்கும்.
ஆங்! மறந்து போயிட்டனே... உங்க பதிவுகள படிச்ச அனுபவத்துல சொல்றேன்... நீங்க கிறுக்குத்தனம்னு நிறைய சொல்லியிருக்கீங்க... ஆனா நீங்க eccentric வகை மாதிரி அதிரடி கிறுக்கு இல்லனு தோனுது. ரொம்ப ஆழ்ந்த, அமைதியான, புத்திசாலி (?!) கிறுக்கா இருப்பீங்களோ என்னமோ :-)) //
மக்கா! நான் சொல்லவந்ததை ஸ்ரீதர் வந்து அழகா சொல்லிட்டு போயிட்டார். நான் ஜஸ்ட் "ரிப்பீட்டே!!"ன்னு சொல்லிட்டு போகாம ஒரு ஜாலிக்காக "என் பினூட்டத்துல ஸ்ரீதர்வெங்கட்ன்னு தெறியுதுன்னு சொன்னா அதுக்கு கோக்கு மாக்கா அர்த்தம் ஆயிடுத்தே! நாதான் ஒரிஜினல் கிறுக்கா:-))
கொத்ஸ் இதெல்லாம் உங்க நார்மல் குணங்கள்... வியர்டா எதாவது கொஞ்சம் சொல்லுங்க ;)
(இப்படித்தான் என்னையும் நொங்கெடுக்கறாங்க)
புதுசா ஒரு டேக் ஆரம்பிக்கனும் போல இருக்கு...
உங்ககிட்ட இருக்குற கெட்ட குணம் என்னனு ;)
//கவுஜயெல்லாம் வெண்பாவாகிடாது ஆனா வெண்பால்லாம் கவுஜ தான். வெண்பா எழுதினா கவுஜ ஏழுதினா மாதிரி தான்.//
தமிழ்மணத்தில் கவுண்டர் சீசன் முடிஞ்சு இப்போ விஜய.டி. சீசன் ஆரம்பிச்சாச்சு போல! :))
//சரி நீங்க எழுதுறீங்களோ இல்லியோ உங்க நண்பர்கள்ட்ட சொல்லிடுங்க.//
உத்தரவு. நாளைக்கே போடறேன்.
//மக்கா! நான் சொல்லவந்ததை ஸ்ரீதர் வந்து அழகா சொல்லிட்டு போயிட்டார். நான் ஜஸ்ட் "ரிப்பீட்டே!!"ன்னு சொல்லிட்டு போகாம ஒரு ஜாலிக்காக "என் பினூட்டத்துல ஸ்ரீதர்வெங்கட்ன்னு தெறியுதுன்னு சொன்னா அதுக்கு கோக்கு மாக்கா அர்த்தம் ஆயிடுத்தே!//
அதுக்காகத்தானே கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே ரிப்பீட்டே அப்படின்னு கண்டுபிடிச்சு வெச்சு இருக்கோம். அதை விட்டுட்டு நான் வித்தியாசமா செய்யறேன்னு கிளம்புனா அப்படித்தான்யா ஆகும்!!
//நாதான் ஒரிஜினல் கிறுக்கா:-))//
யாயா! (பாட்ஷா ரஜினி ஸ்டைலில் படித்துக் கொள்ளவும். அந்த காவியம் பார்க்காத பாமரர்களுக்கு அது ஆங்கிலத்தில் yeah ya!) :)))
அபிஅப்பா,
//தெறியுதுன்னு // இங்க அடிக்கடி தடுமாறிப் போறீங்களே! எவ்வளவுதான் பெரிசா தெரிஞ்சாலும் அது தெறிஞ்சதா ஆகாது.
ஏன் சொல்ல வரேன்னா இப்போதான் சீமாச்சு பதிவுக்குப் போனேன். அங்கேயும் உமக்குத் தெறிஞ்சு இருந்துதா, அதான் சொல்லலாமேன்னு.
எல்லாரும் சொல்லற மாதிரி தட்டெழுத்துப் பிழை அப்படின்னே சொல்லிக்குங்க. இட் இஸ் ஓக்கே. ஆனா இனிமே பண்ணாதீங்க.
//கொத்ஸ் இதெல்லாம் உங்க நார்மல் குணங்கள்... வியர்டா எதாவது கொஞ்சம் சொல்லுங்க ;)//
வியர்டா இருக்கறது சாதாரணமா ஆகும் பொழுது, சாதாரணமா இருக்கிறது வியர்ட் ஆகும். அது அப்படி வியர்ட் ஆகிவிட்டால் விதி எண் ஒன்றின் படி அது சாதாரணமாகத்தானே இருந்தாக வேண்டும். அப்படி அது சாதாரணமாக இருந்தால் விதி எண் இரண்டின் படி அது வியர்ட்தானே!
இப்பொழுது சொல்லுங்கள் நான் சொன்னவை சாதாரணமா? வியர்டா?
//
வியர்டா இருக்கறது சாதாரணமா ஆகும் பொழுது, சாதாரணமா இருக்கிறது வியர்ட் ஆகும். அது அப்படி வியர்ட் ஆகிவிட்டால் விதி எண் ஒன்றின் படி அது சாதாரணமாகத்தானே இருந்தாக வேண்டும். அப்படி அது சாதாரணமாக இருந்தால் விதி எண் இரண்டின் படி அது வியர்ட்தானே!
இப்பொழுது சொல்லுங்கள் நான் சொன்னவை சாதாரணமா? வியர்டா?//
கொத்ஸ்,
விசு படம் பார்த்த மாதிரி இருக்கு... ஏன் இந்த கொல வெறி???
//உங்ககிட்ட இருக்குற கெட்ட குணம் என்னனு ;)//
வேண்டாம்.
எனக்குள் தூங்கும் அந்த மிருகத்தை எழுப்பாதீங்க!
உள்ளே வியர்டு வெளியே அசடு விளங்க முடியா கவுஜ நான்.
தமிழ்மணத்துல எங்க பார்த்தாலும் இந்த வியர்டு விஷயமே கண்ணுக்குத் தெரியுதா, அதான் கொஞ்சம் கலங்கிடுச்சு.
அப்படின்னா விசுவிற்குப் பைத்தியமா அப்புறம் அவர் இடத்துக்கு வந்த விஜய.டிக்கு அப்படின்னு எல்லாம் கேட்கக்கூடாது:))
//தமிழ்மணத்துல எங்க பார்த்தாலும் இந்த வியர்டு விஷயமே கண்ணுக்குத் தெரியுதா, அதான் கொஞ்சம் கலங்கிடுச்சு. //
ரொம்ப டயர்டா இருக்குப்பா:-) இது 80:-)
வரிசையா ஒரே கிறுக்கு கிறுக்குன்னு இருக்கவும் மொதல்ல பாத்த உடனே பயந்து போயிட்டேன். எங்கடா அண்ணனுக்கு கிறுக்கு புடிச்சிகிச்சோன்னு. படிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சது நல்லவேளை அப்படி எதும் நடக்கலைன்னு... :)))
மகளிர் கோட்டா எங்க???
யாரங்கே! மகளிர் கோட்டாவை மறுத்த கொத்ஸ் அண்ணனை ஒரு மாதத்திற்கு எங்கேயும் பின்னூட்டம் போட விடாமல் தடை செய்யவும்...
சும்மா... லுலுலா... :)))
நீங்க சொல்லியிருக்கறதுல பலது எனக்கும் ஒத்துப் போகும் போலருக்கு.
இதான் இந்த பைத்தியங்களோட பிரச்சினையே.. யார பார்த்தாலும் அட! இவரு நம்மள மாதிரியே இருக்காரேன்னு தோனும்..
எனக்கும் டேஸ்ட் அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கும். ஒரு புத்தகத்த எடுத்த முடிக்கற வரைக்கும் விடமாட்டேன்.. சமையல் செய்யறப்போ போனதடவ என்ன பண்ணோம்னு ஞாபகம் வராது..இத்யாதி, இத்யாதி..
நாம மட்டும்தான் weird போலருக்குன்னு நினைச்சிப்பேன்.. இப்ப நம்மள மாதிரிதான் எல்லாருமே(?)ன்னு தெரிய வர்றப்ப சந்தோஷமாருக்கு:)))))))
//ரொம்ப டயர்டா இருக்குப்பா:-) இது 80:-)//
எனக்கும். அதான் இம்புட்டு லேட்டாப் பதில். :))
//படிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சது நல்லவேளை அப்படி எதும் நடக்கலைன்னு... :)))//
ஆர் யூ ஷுவர்? :))
//மகளிர் கோட்டா எங்க???//
அதான் விளக்கம் தந்தாச்சே.
//யாரங்கே! மகளிர் கோட்டாவை மறுத்த கொத்ஸ் அண்ணனை ஒரு மாதத்திற்கு எங்கேயும் பின்னூட்டம் போட விடாமல் தடை செய்யவும்...//
அது கூட பரவாயில்லை. ஆனா நம்ம பக்கம் யாரும் வரக்கூடாதுன்னு சொல்லாம விட்டீங்களே! :))
//இதான் இந்த பைத்தியங்களோட பிரச்சினையே.. யார பார்த்தாலும் அட! இவரு நம்மள மாதிரியே இருக்காரேன்னு தோனும்..//
இந்த வியர்டுத்தனம் எல்லார் கிட்டயும் இருக்குங்க. அது இந்த விளையாட்டில் நல்லாத் தெரிஞ்சது.
//எனக்கும் டேஸ்ட் அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கும். ஒரு புத்தகத்த எடுத்த முடிக்கற வரைக்கும் விடமாட்டேன்.. சமையல் செய்யறப்போ போனதடவ என்ன பண்ணோம்னு ஞாபகம் வராது..இத்யாதி, இத்யாதி..//
எனக்கும் உங்களை மாதிரி முடி கொட்டிடுமா? :))) (அட நீங்க வேற, இப்பவே அப்படித்தான் இருக்கு!!)
//நாம மட்டும்தான் weird போலருக்குன்னு நினைச்சிப்பேன்.. இப்ப நம்மள மாதிரிதான் எல்லாருமே(?)ன்னு தெரிய வர்றப்ப சந்தோஷமாருக்கு:)))))))//
மீ டூ! ஆனா நம்ம அந்த அளவு ஸ்பெஷல் இல்லைன்னு தெரிஞ்சது ஒரு சோகம்தான். :))
Post a Comment