வாழ்த்துக்கள் உலகப் பெண்ணினமே!
இப்போ நம்ம சொல்ல வந்த ஸ்பெஷல் மேட்டர். தமிழ் வலையுலகின் மூத்த பதிவாளர்களில் ஒருவரும், எங்கள் கிளாஸ் டீச்சரும், பின்னூட்ட நாயகியும், நம்ம விக்கி பசங்களில் ஒருவருமான துளசி டீச்சர் அவர்கள் இன்னைக்கு அவங்களோட 500ஆவது பதிவு போட்டு இருக்காங்க! ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் இல்லைங்க. உண்மையிலேயே 500ஆவது பதிவு! அது மட்டுமில்லை இதுல அவங்க வலைப்பூவான துளசிதளம் இல்லாமல், விக்கியில் எழுதிய பிரியாணிப் பதிவு உட்பட மற்ற இடங்களில் எழுதிய பதிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
இன்னைக்கு 50க்கு 100க்கும் விழா எடுக்கிற இந்த நேரத்தில் இந்த மாபெரும் சாதனையை அவங்க பதிவின் கடைசியில் ஒரே ஒரு வரியா போட்டு இருக்கும் தன்னடக்கத்தை என்னவென்று சொல்வது. ஒரு லெவலுக்கு மேல Numbers do not matter என்பது சரிதான் போல இருக்கிறது. வரலாறு, சமையற் குறிப்பு, கதைகள், மொக்கைப் பதிவு என எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து, எந்த விதமான சண்டை சச்சரவிலும் பங்கு கொள்ளாமல் அனைவரும் தன் மீது பெரு மரியாதை கொள்ளுமாறு இருக்கும் துளசி டீச்சரை மனதார வாழ்த்துவோம். இதே போல் தொடர்ந்து எழுதி விரைவில் ஆயிரம் பதிவு தந்த அபூர்வ துளசி என்ற பட்டம் பெற எங்கள் வாழ்த்துக்கள் டீச்சர். படிக்கும் நீங்களும் பின்னூட்டத்தில் உங்க மரியாதையை செலுத்திடுங்க!
அடுத்தது நம்ம உஷாக்கா போட்ட பெண் பதிவர்கள் டாப் என்ற பதிவு! பெண் வலைப்பதிவர்கள் பத்தி உஷாக்கா எழுதின இந்த பதிவில் கொஞ்சம் ஓவராகவே அவங்க நல்லவங்க அப்படின்னு எழுதி இருந்தாங்க. அதிலிருந்து
அதை நம்ம பாணியில் நான் கொஞ்சம் கலாய்க்கப் போயி அந்த சமயத்தில் நம்ம இட்லிவடையார் போட்டு இருக்கும் எந்த பெண் பதிவர் டாப் என்ற பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் பத்தி இப்படிப் பேசப் போக
கும்மி அடித்தல், அனாவசிய சச்சரவுகள், அனானி ஆட்டங்கள், வேண்டாத அரசியல் (பாலிடிக்ஸ்), பதிவில் இருக்கும் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு ஜல்லி அடிப்பது இவை எல்லாம் பெண் வலைப்பதிவர்களிடம் அறவே இல்லை.
எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உஷாக்கா, நீங்க இந்த ஒற்றுமை பத்தி எல்லாம் எழுதினதுனால உங்க கிட்ட கேட்கறேன். நம்ம இட்லி வடை இந்த பதிவு ஒண்ணு போட்டு இருக்காரு. அதுல பாருங்க வந்து இருக்கற எதிர்ப்பில் பெண்கள் எதிர்ப்புதான் அதிகம் இருக்கு. நமக்கு பிடிச்ச 5 பேரை சொல்லச் சொன்னா எதுக்குங்க இவ்வளவு எதிர்ப்பு? கொஞ்சம் விளக்குங்களேன்.நம்ம பிரேமலதாக்கா கன்னாப்பின்னான்னு டென்ஷனாகிட்டாங்க. அவங்க நம்ம கருத்துக்களை ஆணாத்திக்க கருத்துகள் என்ற ரீதியில் சொல்லப் போக, நானும் பதிலுக்கு வாயாட, கூட நம்ம தம்பி நாகை சிவா வந்து அவர் பங்குக்கு பிட்டைப் போட விவாதம் நல்லா களை கட்டுற நேரத்தில் உஷாக்கா தூங்கப் போயிட்டாங்க. போட்ட பின்னூட்டம் எல்லாம் தேங்கிப் போச்சு! அந்த பதிவில் 40 பின்னூட்டங்களுக்கு மேல போனதுனால இது ஒரு ஸ்பெஷல் விளம்பரம். எல்லாரும் இந்த ஆரோக்கியமான விவாதத்தில் பங்கெடுத்துக்கிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்கள்ஸ்.
பரபரப்பான அந்த விவாதத்தில் இருந்து சில பகுதிகள்
இப்படி கோபம் உண்டுபண்ணிவிட்டுட்டுப் போற ஆணின் "ஸ்பெஷல்", மற்றும் "புத்திசாலித்தனமான" ஸ்பெஷல் குணங்களைக் கொண்ட இலவசம் மற்றும் சாத்தான்(குளத்தான்) இன்னும் வரபோகும் மற்றும்பல "the great"களும் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்.
எல்லா சராசரி மனிதர்கள் கிட்ட இருக்கற குணங்கள் எதுவுமே பெண் பதிவர்கள் இடையே இல்லை அப்படின்னு உஷாக்கா சொன்னாங்க பாருங்க. அதுதான் கொஞ்சம் இடிச்சுது.
அதாவது போட்டி மனப்பான்மை ஆண்களுக்கே உரியதுன்னு சொல்ல வறீங்களா பிரேமலதாக்கா? நீங்களே இதை திரும்பி படிக்கும் போது உங்களுக்கு சிரிப்பு வரல?
இலவசம்,சாத்தான்(குளத்தான்), நீங்க ரெண்டுபேரும் MCP கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனா, சிலசமயம் "நல்லா இருங்க"ன்னு மட்டும் வாழ்த்திட்டுப் போற psychology தெரிஞ்சிருக்கணும்.
நார்மலா இருக்குறவங்க எல்லாரும், ஆம்பிள்ளையானாலும் சரி, பெண்பிள்ளையானாலும் சரி, சில நேரங்களில் சில இடங்களில், கும்மி, பாலிடிக்ஸ், வம்பு தும்பு எல்லாம் செய்யத்தான் செய்வாங்க. அதெல்லாம் இல்லை. அது ஆண்கள் மட்டுமே செய்வாங்க. பெண்கள் செய்ய மாட்டாங்கன்னு உஷாக்கா சொன்னதும், இப்போ நீங்க அதையே உங்க கன்க்ளூஷனா சொல்வதும்தான், முரணா இருக்கு. அதைச் சொல்ல வந்த எனக்கு நீங்க குடுத்த புத்திசாலி பட்டம் நல்லாவே இருக்கு.
63 comments:
ஒரு நாலைஞ்சு சுட்டி குடுக்கவே எனக்குப் பொறுமை இல்லையே. இந்த பாபா எப்படித்தான் இப்படி சுட்டி குடுத்துப் பதிவு போடறாரோ! Hats off தலைவா!
கொத்ஸ்,
அடடா................. இப்படி என்னை உணர்ச்சிப் பிழம்பா ஆக்கிட்டீங்களே! தழுதழுக்குதுப்பா ..........நாக்கு.
வாயிலிருந்து வார்ததைகள் எழும்பலை.
நன்றி . நன்றி.
//படிக்கும் நீங்களும் பின்னூட்டத்தில் உங்க மரியாதையை செலுத்திடுங்க//
இங்கேதானே? :-))))))
//இங்கேதானே? :-))))))//
பின்னே!!!
பின்னூட்ட நாயகியான உங்க மாணவன்னு ஃப்ரூவ் பண்ண வேண்டாமா? :)))
அவங்க 500 பதிவு போடுவாங்களாம்..நீங்க பின்னூட்டம் வாங்குவீங்களாம். கொத்தனாருக்கு "பின்னூட்ட வெறியர்" என்ற பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்.
துளசி அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
உஷாக்கா பதிவின் சண்டை பற்றி மீண்டும் (?) கருத்துக்கூற விரும்பவில்லை..
பின்னூட்டப் புயலுக்கே வகுப்பெடுத்து இன்று 500 பதிவுகளைக் கண்டிருக்கும் தமிழ் பதிவுலகின் மூத்தப் பதிவர் பாசத்துக்குரிய துளசி டீச்சருக்கு வாழ்த்துக்கள்..
பாஸ் கொத்ஸ் பிரேமலதாகிட்ட போயா மோதுறீங்க.... ம்கூம் செல்லாது செல்லாது... அதுவும் கேவலம் ஒரு ஆம்பளையான உஙக்ளுக்கு அவங்க கருத்துக்கு எதிர் கருத்துச் சொல்ல என்ன தகுதி இருக்கு? நீங்க ஆம்பளைங்கற ஒரே காரணம் போதும்... உங்க எந்தக் கருத்தும் செல்லாது செல்லாதுன்னு சொல்லிட்டு அக்கா ஸ்டைலா நடையைக் கட்டிருவாங்க...
இதுக்கு முன்னாடி நம்ம தலக் கைப்பு அக்கா கிட்டப் பேசி ரணகளம் ஆனக் கதை ஓங்களுக்கு தெரியாதா?
நெறைய எழுதுறவங்கன்னு தெரியும் .. ஆனா ஐந்நூறுல்லாம் இருக்கும்னு நினைக்கவேயில்லை; தெரியும்போது பிரமிப்பா இருக்கு. டீச்சர்னா டீச்சர்தான்.
வாழ்த்துக்கள் துளசி;வளர்க.
கொத்ஸ், ரெண்டு விஷயத்தைப் போட்டுக் குழப்பிட்டீங்களே. துளசியின் 500வது பதிவைப் பற்றி மட்டும் இதில் எழுதியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே. 'உஷாக்கா'வுக்குத் தனிப்பதிவு கொடுத்திருக்க வேண்டியதுதானே. அதே மாதிரி துளசியின் 500 பதிவுக்கு லின்க் கொடுத்திருக்க வேண்டாமா?
வாழ்த்துக்கள் துளசி அக்கா.. உங்களை இங்கிட்டும் ஒரு தரம் வாழ்த்திக்கிறேன் :)
டீச்சருக்கு வணக்கங்கள்!!!
இன்னும் 1000, 10,000னு அடிச்சி எங்களை எல்லாம் வழி நடத்த வேண்டுகிறோம்!!!
அப்பா. இப்போத்தான் என் ஜென்மம் கொஞ்சமாவது மீனிங்ஃபுல்லா இருக்கு. ஜோதில ஐக்கியமாயாச்சு. ஒரு வருஷமா ப்ளாக் எழுதிக்கிட்டிருக்கேன். பின்னூட்டமும் வரமாட்டேங்குது, என்னயத்திட்டி ரெண்டு பதிவும் வரமாட்டேங்குது-ன்னு நினைச்சேன்.
//Premalatha said...
அப்பா. இப்போத்தான் என் ஜென்மம் கொஞ்சமாவது மீனிங்ஃபுல்லா இருக்கு. ஜோதில ஐக்கியமாயாச்சு. ஒரு வருஷமா ப்ளாக் எழுதிக்கிட்டிருக்கேன். பின்னூட்டமும் வரமாட்டேங்குது, என்னயத்திட்டி ரெண்டு பதிவும் வரமாட்டேங்குது-ன்னு நினைச்சேன்.//
இதான் மேட்டரா..
ஹாட் டாபிக்கா பாத்து திட்டி பதிவு போடுங்க.. ஆளாளுக்கு கிழிச்சு தோரணம் போடுவாங்க.. பின்னூட்டம் அதிகமாகி நிறுத்திட்டீங்கன்னா பதிவாவே போடுவாங்க :))
சென்ஷி
துளசி டீச்சருக்கு எனது வாழ்த்துகள். நலமும் வளமும் பெற்று வாழ்க.
பிரச்சனைகள் பற்றி....எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு....ஆகையால் பொறுமை. பொறுமை. பொறுமை.
//இதுக்கு முன்னாடி நம்ம தலக் கைப்பு அக்கா கிட்டப் பேசி ரணகளம் ஆனக் கதை ஓங்களுக்கு தெரியாதா?//
தேவ், என்ன இது மனசுல வச்சுக்கிட்டே இருப்பீங்களா..? விடுங்க விடுங்க.. நம்மில் நிறைய பேர் உணர்ச்சி வசப்பட்டு கொண்டுத்தான் இருக்கிறோம். ஆனால் எப்பவும் இல்லை. எப்பவோ முடிந்துவிட்டது தேவ் இப்ப எதுக்கு?!!
கொத்ஸ்.. இட்லி வடை பதிவில் அது எதிர்ப்பு எல்லாம் இல்லை. கருத்து சொல்லியிருக்கோம் அவ்வளவே.. யாரை தேர்ந்தெடுத்தாலும் அதை பார்த்து பொறாமை படுமளவிற்க்கு நானும் அனிதாவும் நல்ல/சிறந்த பதிவர்கள் இல்லை.
சாதாரணமாக சொன்ன கருத்தை எதிர்ப்பு என்று மாற்றி விட்டீர்கள்.
என்னவோ செய்ங்க
இலவசம், நான் எந்த பின்னுட்டத்தையும் நிறுத்தலை. என்னால இருபத்திநாலு மணிநேரமும் இணையத்துடன் வாழ முடியாத
நிலை. அப்புறம் நான் ஏன் நிறுத்தணும்? எம் பதிவுல வேற ரெண்டு பேரூ சண்டை போட்டுக்கிட்டா, ஒதுங்கி நின்னு
வேடிக்கை பார்ப்பது சுகமா
இருக்கு :-) பிரேமலதா,ஜோதியில் ஐக்கியம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
துளசி, இன்றுப் போல் என்றும் வாழ்க.
பி.கு எல்லாரும் சொன்னதை, நானும் வழிமொழிந்துவிடுகிறேன். துளசிக்கு வாழ்த்து பதிவு தனியா போட்டு இருக்கலாம்.
மத்தவங்களுக்கு எல்லாம் பதில் அப்புறம் சொல்லறேன். முதலில் இந்த உஷாக்காவிற்கு.
அட என்னங்க நீங்க. இப்படி உணர்ச்சிப் பிழம்பா இருக்கீங்க. என்ன சொல்லி இருக்கேன்னு பாருங்க. நீங்க பின்னூட்டத்தை நிறுத்தினீங்கன்னா சொன்னேன்? தூங்கப் போயிட்டீங்க அதனால் நின்னு போச்சு. அங்க 40 பின்னூட்டத்துக்கு மேல போனதுனால தமிழ்மண முகப்பில் வராது அதனால இங்க உங்க பதிவுக்கு இலவச விளம்பரம். இதுதானே சொல்லி இருக்கேன்.
இப்படி உணர்ச்சிப் பிழம்புகளா இருக்கீங்களே!! யப்பாஆஆஆ!!
பதிவுலகின் லாரா என்ற பட்டத்தை நம் டீச்சர் துளசி அவர்களுக்கு மரியாதையுடன் வழங்கின்றேன்.
கிரிக்கெட் சீசனா இருக்குல....
கொத்ஸ், துளசிக்கு வாழ்த்து சொல்லியாச்சு.
சரி.
உஷஅ பதிவில எழுதியச்சு சரி.
அப்புறம் உங்களுக்கு இது எத்தனையாவது பதிவு, எப்போ 500பக்கம் போறீங்க ? எல்லாத்துக்கும் ஒரு பதிவு தேவை.
என்ன , ஒரு மேடைபோட்டு,அலங்காரமாப் பேசலாமேனுதான்:-)
நான் துளசிதளத்தில் போட்ட பின்னூட்டம்.
"ஒரு ஐம்பது ஐநூறை வாய் பிளந்து பார்க்கிறது. வாழ்த்த வாய் வர வில்லை. வணங்க கை வருகிறது."
கொத்தனாரே ஐநூறு போட்டவரை மனதார வாழ்த்துங்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன். ஆனால் இது எதற்கு?
//இன்னைக்கு 50க்கு 100க்கும் விழா எடுக்கிற இந்த நேரத்தில் ...//
சரி, பரவாயில்லை. பிழைத்துப் போங்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி கொத்தனாரே !!
துளசி, 500 பதிவு ஆச்சா? வாவ் !வாழ்த்துக்கள் !!
---பாபா எப்படித்தான் இப்படி சுட்டி குடுத்துப் பதிவு போடறாரோ---
ஆஹா... அவர் யாரு? சுட்டு கொடுங்களேன் ;)
---கொத்தனாருக்கு "பின்னூட்ட வெறியர்"---
'மறுமொழிவோர் மனமகிழ் மன்றம்' சார்பாக தலைவருக்கு 'பின்னூட்ட பற்றாளர்' என்னும் பட்டத்தை பாராட்டி இடுகிறேன் :D
துளசிக்கு வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரமே, பதிவுகள் இரட்டித்து நாலு இலக்கத்தைப் படிக்க, மகிழ், பகிர வேண்டும் :)
500 அடிச்ச துளசி அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதை உலகத்துக்கு தெரிவித்த அன்பு கொத்சுக்கும் வாழ்த்துக்கள்.உஷாக்கா சண்டை விவகாரம் தலையும் புரியலை,வாலும் புரியலை.எப்படியோ எல்லோரும் நல்லா இருந்தா சரி:))
துளசி டீச்சருக்கு வாழ்த்துக்கள்.. அவுங்களோட 'பிரியாணி' பதிவ தவிற வேற எதையும் நான் இதுவரை பாத்ததில்லை :(( (நான் பதிவுக்கு புதுசாக்கும்...)
//இதுக்கு முன்னாடி நம்ம தலக் கைப்பு அக்கா கிட்டப் பேசி ரணகளம் ஆனக் கதை ஓங்களுக்கு தெரியாதா? //
எப்படி தேவ்... நான் சொல்ல வந்ததை அப்படியே போட்டிருக்கீங்க??? :)))
இலவசம் இது ரொம்ப ஓவர். நா எங்க உணர்ச்சிவசப்பட்டேன். உங்களுக்கும் பிரேமலதாவுக்கும் நடந்த அடிதடியை ஆனந்தமாய்
இல்லே பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்த ஸ்மைலி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :))))))))))))))))))
நீங்க எழுதின அழகுல செல்வன் வேற உஷாக்கா சண்டை விவகாரம்ங்கரார்???
கொத்ஸு
உமக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக்
நாம போட்ட ரூல்ஸ்புக்லேர்ந்தே ஐட்டம்ஸ இங்க பாலோ செஞ்சு சிலரு உம்ம போட்டு பின்னி எடுக்கற மாதிரி இருக்கு.
-------------------------
இராமநாதன் said...
4. பின்னூட்டமே வரல. யாருமே நம்மள கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னா.. வெட்கமேயில்லாம விளம்பரம் கொடுக்கலாம். நிறைய அடி (ஹிட்) வாங்கற பதிவுகளுக்கு போய் உங்களோட கருத்துகளையும் (சம்பந்தமிருக்கோ இல்லியோ) பின்னூட்டமா போட்டுட்டு அதுலேயே உங்க பதிவுக்கும் விளம்பரம் கொடுத்துடலாம்.
February 02, 2006 4:48 AM
இராமநாதன் said...
4.1 மேல சொன்னபடி அடுத்தவங்க பதிவுக்கு போனீங்கன்னா, இன்னொரு ராடிகல் டெக்னிக் இருக்கு. அந்தப் பதிவாளர் சொல்றது தப்போ ரைட்டோ, நார் நாரா கிழிச்சு, இன்னா மேன் எழுதற நீயெல்லாம்னு மரியாதையா கேட்டீங்கன்னா.. கண்டிப்பா அந்தப் பதிவ படிக்கற எல்லாரும் உங்க விளம்பரம் மூலமா உங்க பக்கம் வருவாங்க. ஆனா, இது கொஞ்சம் ரிஸ்கி. ஏன்னா, பதிவாளர் விஷயம் தெரிஞ்சவரா இருந்து பதிலடி கொடுத்திட்டா. அப்படியும் கவலையில்லை. அம்பது சதவிகிதமாவது பாவப்பட்டு உங்க பக்கம் வருவாங்க.
-------------------
நான் தீர்க்கதரிசின்னு இப்பவாவது ஒத்துக்கங்கா மக்கா!
இராம்ஸு, குருவே, என்னமோ ரொம்ப உள்குத்தோட சொல்லி இருக்கீங்க. அதெல்லாம் நம்ம சிற்றறிவுக்கு ஏறலையே!!
ஆனா இந்த மாதிரி ரூல்ஸ் புக் போட்டதுக்காக உங்களுக்கு நான் அன்னைக்கே 'இணையக்கோனார்' அப்படின்னு பட்டம் குடுத்தாச்சே!! :))
//அவங்க 500 பதிவு போடுவாங்களாம்..நீங்க பின்னூட்டம் வாங்குவீங்களாம். கொத்தனாருக்கு "பின்னூட்ட வெறியர்" என்ற பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்.//
இன்னும் ஒரு பட்டமா? இவ்வளவு பட்டங்களை வெச்சுக்கிட்டு நான் என்ன செய்யறது? இருந்தாலும் ஏத்துக்கலைன்னா உங்க மனசு கஷ்டப்படும். அதனால இருக்கட்டும்.
தம்பி தேவு, நோட் பண்ணிக்கோப்பா!
//பின்னூட்டப் புயலுக்கே வகுப்பெடுத்து இன்று 500 பதிவுகளைக் கண்டிருக்கும் தமிழ் பதிவுலகின் மூத்தப் பதிவர் பாசத்துக்குரிய துளசி டீச்சருக்கு வாழ்த்துக்கள்..//
பாட்ஷா படத்தில் சொல்லற மாதிரி அவங்க எனக்கு மட்டுமா டீச்சர், இந்த வலையுலகிற்கே இல்ல டீச்சர்! :)
//இதுக்கு முன்னாடி நம்ம தலக் கைப்பு அக்கா கிட்டப் பேசி ரணகளம் ஆனக் கதை ஓங்களுக்கு தெரியாதா?//
தெரியும் தெரியாம என்ன? அதுக்காக நம்ம மனசில் பட்டதை சொல்லாம இருக்க முடியுமா? அதான் சொல்லிட்டேன். நம்ம இதையும் தாங்குவோம் இதுக்கு மேலையும் தாங்குவோம். அப்படி ரொம்ப முடியலைன்னா நம்ம கைப்ஸை பிடிச்சுக் குடுத்துட்டு வேடிக்கையும் பார்ப்போமில்ல! :)
//கொத்ஸ், ரெண்டு விஷயத்தைப் போட்டுக் குழப்பிட்டீங்களே. துளசியின் 500வது பதிவைப் பற்றி மட்டும் இதில் எழுதியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே.//
இருக்கலாம்தான். ரெண்டு விஷயம் சொல்ல வந்தேன். ஒரே பதிவா போட்டுட்டேன். அவங்க 1000 அடிக்கும் போது தனிப் பதிவே போட்டுடலாம். ஓக்கேவா?
//அதே மாதிரி துளசியின் 500 பதிவுக்கு லின்க் கொடுத்திருக்க வேண்டாமா?//
இது சரியா செஞ்சிருக்கேனே. போல்ட் எல்லாம் வேற செஞ்சு போட்டு இருக்கேனே.
//அப்பா. இப்போத்தான் என் ஜென்மம் கொஞ்சமாவது மீனிங்ஃபுல்லா இருக்கு. ஜோதில ஐக்கியமாயாச்சு. //
என்னால உங்க ஜென்மம் இதுவரை இல்லாம இப்போ மீனிங்ஃபுல்லா ஆச்சுன்னா சந்தோஷம்தான்.
//ஒரு வருஷமா ப்ளாக் எழுதிக்கிட்டிருக்கேன். பின்னூட்டமும் வரமாட்டேங்குது, என்னயத்திட்டி ரெண்டு பதிவும் வரமாட்டேங்குது-ன்னு நினைச்சேன்.//
இதுனால உங்க பதிவுக்கு பின்னூட்டம் வருதா? அப்போ விளம்பரத்துக்காக ஒரு பில் அனுப்பறேன். செட்டில் பண்ணிடுங்க. இப்பவும் உங்களைத் திட்டி பதிவு எதுவும் வந்ததா தெரியலையே? இந்த வலைப்பூவில் யாரையும் திட்டி பதிவெல்லாம் வராதுங்க.
//இதான் மேட்டரா..
ஹாட் டாபிக்கா பாத்து திட்டி பதிவு போடுங்க.. ஆளாளுக்கு கிழிச்சு தோரணம் போடுவாங்க.. பின்னூட்டம் அதிகமாகி நிறுத்திட்டீங்கன்னா பதிவாவே போடுவாங்க :))
சென்ஷி//
சென்ஷி, நீங்க சொல்லறது எல்லாம் பத்தி எங்க குரு ராம்ஸ் வந்து அந்தக் காலத்திலயே நோட்ஸ் எல்லாம் போட்டு இருக்கார். இப்போ கூட சுட்டி எல்லாம் தந்திருக்காரு பாருங்க. :)
//பிரச்சனைகள் பற்றி....எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு....ஆகையால் பொறுமை. பொறுமை. பொறுமை.//
பொறுமையாத்தானேங்க இருக்கேன். அடாவடித்தனமா எதுவும் சொல்லலையே. அப்புறம் என்ன? பொறுமையா இருக்கறதுன்னா பேசாம இருக்கறதுன்னு அர்த்தம் இல்லையே. :)
//கொத்ஸ்.. இட்லி வடை பதிவில் அது எதிர்ப்பு எல்லாம் இல்லை. கருத்து சொல்லியிருக்கோம் அவ்வளவே.. யாரை தேர்ந்தெடுத்தாலும் அதை பார்த்து பொறாமை படுமளவிற்க்கு நானும் அனிதாவும் நல்ல/சிறந்த பதிவர்கள் இல்லை.//
கவிதா, நீங்க இட்லிவடை பதிவில் சொன்னது இது - "குறிப்பாக பெண் பதிவர்கள் இந்த வாக்கெடுப்பில் இருப்பார்களா என்பது சந்தேகமே.. ஒற்றுமையை பிரித்து விடாதீர்கள் !! :))))"
அதென்னங்க? இருக்கறவங்கள்ள ஒரு ஐந்து பேர் நல்லா எழுதறாங்கன்ன்னு சொன்னா உங்களுக்குள் இருக்கிற ஒற்றுமை போயிடுமா? அது என்ன உங்க ஒற்றுமை அவ்வளவு Fragileஆ? அதைத்தான் நான் உஷாக்கா பதிவில் கேட்டேன்.
இட்லி வடையார் அந்த தேர்தல் நடத்துனது தப்பு என்ற ரீதியில் சில கருத்துக்களும், அதை ஆமோதிக்கும் படியா உங்க கருத்தும் இருந்ததுனால எதிர்ப்பு அப்படின்னு சொன்னேன். வேண்டாமா? மாற்றுக்கருத்து அப்படின்னு வேணா வெச்சுக்கலாம். ஆனா அதுவும் சரியா? அதானே என் கேள்வி. :)
//பி.கு எல்லாரும் சொன்னதை, நானும் வழிமொழிந்துவிடுகிறேன். துளசிக்கு வாழ்த்து பதிவு தனியா போட்டு இருக்கலாம்.//
ஹை! ஹை! அப்படிச் செஞ்சா உங்களுக்குத் தனிப் பதிவு கிடக்கும்னுதானே இப்படிச் சொல்லறீங்க! எனக்கு இந்த உள்குத்து வெளிக்குத்து எல்லாம் நல்லா புரியுது உஷாக்கா! :))))))
(உங்களை வெச்சுக்கிட்டு பயமா இருக்கே. நல்லா பாருங்க. சிரிப்பானெல்லாம் போட்டு இருக்கேன். வெறும் தமாசுங்க. டென்ஷன் எல்லாம் ஆவாம வந்து சிரிச்சுட்டுப் போங்க!)
//பதிவுலகின் லாரா என்ற பட்டத்தை நம் டீச்சர் துளசி அவர்களுக்கு மரியாதையுடன் வழங்கின்றேன்.//
ஏம்பா சிவா, அப்படின்னா என்ன? அவர் கூட இருக்கறவங்க எல்லாம் சரியா பதிவு போடறது இல்லைன்னு எதனா உள்குத்து இருக்கா? அது பொதுவா தமிழ் வலைப்பதிவர்கள் பத்தி சொல்ல வந்தியா இல்லை பெண் பதிவர்கள் டீமைப் பத்தியா?
இல்லை, ஏற்கனவே MCP அப்படின்னு பட்டம் வாங்கிட்டயா? அதான் கன்பியூஷன்.
//அப்புறம் உங்களுக்கு இது எத்தனையாவது பதிவு, எப்போ 500பக்கம் போறீங்க ? எல்லாத்துக்கும் ஒரு பதிவு தேவை.
என்ன , ஒரு மேடைபோட்டு,அலங்காரமாப் பேசலாமேனுதான்:-)//
வல்லியம்மா. நம்ம நம்பர் எல்லாம் சொல்லிக்கிற மாதிரி இருந்தா இந்நேரம் பட்டையை கிளப்பி இருக்க மாட்டோம். அடக்கி வாசிக்கும் போதே தெரியல நம்ம லட்சணம்.
ஆனாலும் அலங்காரமா பேச இந்த புள்ளி விபரம் எல்லாம் எதுக்கு? நம்ம தலைவருங்க பேச்சு எல்லாம் கேட்டதே இல்லையா? புள்ளி விபரம் எல்லாம் இல்லைன்னா கேப்டன் படம்தான் எடுக்க முடியாது. இல்லையா! :))
////இன்னைக்கு 50க்கு 100க்கும் விழா எடுக்கிற இந்த நேரத்தில் ...//
சரி, பரவாயில்லை. பிழைத்துப் போங்கள்.//
அடடா, தப்பா ஒண்ணும் சொல்லலை. 500 எம்மாம் பெரிய நம்பர் அதை இப்படி அடக்கி வாசிக்கறாங்களேன்னு சொன்னேன். உள்குத்து எல்லாம் ஒண்ணும் வைக்கலை சாமி.
//பொறுமையா இருக்கறதுன்னா பேசாம இருக்கறதுன்னு அர்த்தம் இல்லையே. :) //
ரீபிட்டு...........
//வாழ்த்துக்களுக்கு நன்றி கொத்தனாரே !!//
பாருங்க. ஒண்ணுக்கு ரெண்டு பதிவுல வாழ்த்து சொல்லி இருக்கேன். ஆனா பாருங்க நீங்க ஒருத்தர்தான் நன்றி சொல்லி இருக்கீங்க. அதுக்கும் ஒரு தனி நன்றிங்க.
மற்றபடி நமக்கு கிடைச்சது எல்லாம் psychology, decency பத்தின சில அறிவுரைகளும் புத்திசாலிப் பட்டமும்தாங்க. :)))
//ஏம்பா சிவா, அப்படின்னா என்ன? அவர் கூட இருக்கறவங்க எல்லாம் சரியா பதிவு போடறது இல்லைன்னு எதனா உள்குத்து இருக்கா? //
அடப்பாவிகளா எத எங்க கொண்டு போய் கோர்த்து விடுறாங்க பாருங்க மக்களே, நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய....
இல்லாதா உள்குத்த தேடிப்புடிச்சு ஒரு வெளிக்குத்து வைத்து இருக்கீன்றீரே. இதுக்கு என்னய்யா அர்த்தம்....
//அது பொதுவா தமிழ் வலைப்பதிவர்கள் பத்தி சொல்ல வந்தியா இல்லை பெண் பதிவர்கள் டீமைப் பத்தியா? //
என்னை விட்டுட்டுங்க சாமி!
//இல்லை, ஏற்கனவே MCP அப்படின்னு பட்டம் வாங்கிட்டயா? அதான் கன்பியூஷன். //
நீர் அப்படினு முடிவே பண்ணிட்டீரா.... தேவுடா தேவுடா....
இலவசனாந்தா அவர்களே,
என் பதிவில் உங்களுக்கு சொன்ன பதில், இங்கேயும் :-)
அது என்னய்யா இலவசம் அடிக்கடி உணர்ச்சிவசப்பாடாதேன்னு
ஒரு அறிவுரை :-) நானே சீரியசான மேட்டரையை ஜாலியா எடுத்துக்குற ஆளு. லோ பிபி ஏறுவனாங்குது. அப்படி உணர்ச்சிவசப்படாவாது நல்லதுன்னு பார்க்கிறேன். உமக்கு கொடுத்த பின்னுட்டம் ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே :-)
.
இ.கொத்தனாரே
இந்தத் தகவல்களைத் தந்தமைக்கு ரொம்ப நன்றி.
துளசிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இந்தக் காலத்தில் தான்தான் பெரிது என்றுநினக்கும் மனிதர் மத்தியில், மற்றவரின் சாதனைகளை, அதுவும் அவர்களே சொல்லாமல் இருக்க( துளசியின் தன்னடக்கம்) அதை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்கும் நல்ல மனம் வேணுமையா!
இலவசக் கொத்தனாரின் அந்த நல்ல மனசுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஏழு கோடி கொடுத்தாலும் போதாது!
ஞாபகமிருக்கா?
//Boston Bala said...
---பாபா எப்படித்தான் இப்படி சுட்டி குடுத்துப் பதிவு போடறாரோ---
ஆஹா... அவர் யாரு? சுட்டு கொடுங்களேன் ;)
//
ஏங்க சுட்டுக் குடுக்க அவரு என்ன சோளமா? உங்களுக்குத் தெரியலைன்னா விடுங்க. அவரைப் பத்தி இந்த உலகத்துக்கே நல்லாத் தெரியும்!! அவரோட வலைப்பதிவு தமிழ்மணத்தைவிட பாப்புலர். தெரியுமா?!! :)
//'மறுமொழிவோர் மனமகிழ் மன்றம்' சார்பாக தலைவருக்கு 'பின்னூட்ட பற்றாளர்' என்னும் பட்டத்தை பாராட்டி இடுகிறேன் :D//
ஒரு பாபா ஒரு தலைவர் வீட்டுக்குப் போயி விபூதி குடுத்தாரு. இந்த பாபா ஒரு தொண்டனைத் தேடி வந்து ஒரு பட்டமே குடுத்து இருக்கீங்களே!
நன்றி! நன்றி!!
//உஷாக்கா சண்டை விவகாரம் தலையும் புரியலை,வாலும் புரியலை.எப்படியோ எல்லோரும் நல்லா இருந்தா சரி:))//
செல்வன், நீங்களே ஒரு சண்டை புரியலைன்னா எப்படி! ;)
அந்த பதிவுக்குப் போயி படிச்சுப் பார்த்தீங்களா? அப்படியுமாப் புரியலை? சம்திங் ராங்!
//அவுங்களோட 'பிரியாணி' பதிவ தவிற வேற எதையும் நான் இதுவரை பாத்ததில்லை :(( (நான் பதிவுக்கு புதுசாக்கும்...)//
அட! நீங்க என்ன இது வரை துளசிதளம் பள்ளிக்கு வரலையா? கிளாஸ் லீடர் நான் சொல்லறேன், இனிமே ஒழுங்கா வந்திடுங்க.
//இலவசம் இது ரொம்ப ஓவர். நா எங்க உணர்ச்சிவசப்பட்டேன். //
ஆமாம், ஆமாம். ஏன் சொல்ல மாட்டீங்க. இங்க வந்து என்ன சொன்னீங்க?
//இந்த ஸ்மைலி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :))))))))))))))))))//
இதெல்லாம் இப்போ சரியா போடுங்க. ஆனா விவகாரமா ஒரு பின்னூட்டம் வந்தா மட்டும் கோட்டை விட்டுடுங்க.
//நீங்க எழுதின அழகுல செல்வன் வேற உஷாக்கா சண்டை விவகாரம்ங்கரார்???//
நான் என்ன புலிட்சர் விருது வாங்குன எழுத்தாளரா? நம்ம எழுத்து எல்லாம் அப்படித்தான் இருக்கும். :))))
//அது என்னய்யா இலவசம் அடிக்கடி உணர்ச்சிவசப்பாடாதேன்னு
ஒரு அறிவுரை :-) நானே சீரியசான மேட்டரையை ஜாலியா எடுத்துக்குற ஆளு. லோ பிபி ஏறுவனாங்குது. அப்படி உணர்ச்சிவசப்படாவாது நல்லதுன்னு பார்க்கிறேன். உமக்கு கொடுத்த பின்னுட்டம் ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே :-)//
எல்லாம் உங்க பதிவுல வந்து சொன்னதுதான். ஆனா ஆனா நீங்க தன்னிலை விளக்கம் குடுக்கறதும் அதுனால நாங்க தன்னிலை விளக்கம் குடுக்கறதுமா போகுதே. அதான் சொன்னேன்.
//இலவசக் கொத்தனாரின் அந்த நல்ல மனசுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//
ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி நம்ம பதிவு கவுண்ட் ஏத்திக்கிறேன். அதுக்குப் போயி இம்புட்டு உணர்ச்சிவசப் படறீங்களே!!! :)))
இருந்தாலும் வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க!!
//ஏழு கோடி கொடுத்தாலும் போதாது!
ஞாபகமிருக்கா?//
மறக்குமா இக்கால ஔவையாரே. அந்த நினைவு நம்ம மனதின் ஒரு கோடியில் இருந்துக்கிட்டேதான் இருக்கு.
இந்தப் பதிவில தானெ ஒருத்தர் 300 பின்னூட்டம் வாங்கினதா சென்னை யிலே பக்கத்தில பேசிக்கிட்டங்க.:-0)
அதை வச்சே நாலு பதிவு எழுதி இருக்கலாமே.
இப்பவும் ஒண்ணும் பிரச்சினை இல்ல. கின்னஸ்லே பதிவாயிடும்.அப்போ பார்ப்போம்.!
//இந்தப் பதிவில தானெ ஒருத்தர் 300 பின்னூட்டம் வாங்கினதா சென்னை யிலே பக்கத்தில பேசிக்கிட்டங்க.:-0)
அதை வச்சே நாலு பதிவு எழுதி இருக்கலாமே.//
வல்லியாம்மா, நீங்க கொஞ்சம் லேட்டு. வ.வா.சங்கத்துல நம்மளை அட்லாஸ் வாலிபராப் போட்ட போது 500, 600 எல்லாம் அடிச்சாச்சு!! :))
அதை எல்லாம் பத்தி எழுதலாமுன்னு உக்காந்தா, நம்ம தமிழ்மண 40 ரூல் வந்து ஒரே அழுகாச்சியா வருது! அதனால விடுங்க. :)))
துளசியக்காவுக்கு பாராட்டுக்கள்....
க்ளாஸ் லீடர் சார் , எய்தவருக்கும் அம்புக்கும் நன்றி சொல்லி தனிப்பதிவே போட்டாச்சு. இங்க பாருங்க. http://tcsprasan.blogspot.com/2007/03/500.html
அப்படியே உங்க வழிகாட்டுதல் படி இருக்கான்னு பார்த்து சொல்லுங்க.
ச்சும்மா இங்கயும் அதே பின்னூட்டம்.
கொத்ஸு,
இப்பத்தான் கொத்தனார் இலவசமா ஆண்கள் ஒற்றுமையை நுனிப்புல்லா இல்லாம ஸ்டிராங்கா பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லியிருப்பதைப் படித்து நானும் கொத்தனார் கருத்தை சித்தாளா சப்போர்ட் செய்துவிட்டு வந்தேன்!
வாழ்க ஆண்கள் ஒற்றுமை!
நண்பர் ரவி தனிமடலில் அனுப்பியது.
துளசிக்கு வாழ்த்துக்கள். சேவை மென்மேலும் தொடரட்டும்.
இதற்காகப் பதிவு போட்டது வரவேற்கத்தக்கது.
// மதுரையம்பதி said...
துளசியக்காவுக்கு பாராட்டுக்கள்...//
வாங்க மதுரையம்பதி. உங்க முதல் வரவுன்னு நினைக்கிறேன். இனிமே எல்லா பதிவுக்கும் வாங்க. நன்றி.
//ச்சும்மா இங்கயும் அதே பின்னூட்டம்.//
ச்சும்மா நன்றி பிரசன்னா!!
//இப்பத்தான் கொத்தனார் இலவசமா ஆண்கள் ஒற்றுமையை நுனிப்புல்லா இல்லாம ஸ்டிராங்கா பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லியிருப்பதைப் படித்து நானும் கொத்தனார் கருத்தை சித்தாளா சப்போர்ட் செய்துவிட்டு வந்தேன்!//
ஆமாம் ஆமாம். நானும் படிச்சாச்சு.
//வாழ்க ஆண்கள் ஒற்றுமை!//
இந்த மாதிரி ஏத்தி விட்டு ஏத்தி விட்டே வேடிக்கைப் பாருங்கய்யா!! :))
//துளசிக்கு வாழ்த்துக்கள். சேவை மென்மேலும் தொடரட்டும்.//
உண்மையிலேயே பெரிய சாதனைதான்.
//இதற்காகப் பதிவு போட்டது வரவேற்கத்தக்கது.//
நன்றி.
500 பதிவுகள் கண்ட துளசி அக்காவிற்கு வாழ்த்துகள். தனிப்பதிவாக போட்டிருந்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
முத்துக்குமரன், நம்ம பதிவு பக்கம் வந்ததிற்கு நன்றி.
எல்லாரும் சொல்லிட்டாங்க தனிப்பதிவா போட்டு இருக்கணமுன்னு. டீச்சர் சீக்கிரமே 1000ஆவது பதிவு போடணும். அதுக்கு நான் தனியா பதிவு போடணும்!!
Post a Comment