Wednesday, March 21, 2007

விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!

சமீபத்தில் வித்யா எழுதியிருந்த இந்தப் பதிவைப் படித்ததால் என்னுள் எழுந்த சில கேள்விகள்.

1) இந்தப் பதிவெழுதக் காரணம் ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருநங்கையாக வரும் ஒருவரை வில்லத்தனம் செய்ததாகக் காண்பித்ததால் வந்த கோபம். என் கேள்வி எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் சரி, ஆண்கள் வில்லன்களாக வரலாம். பெண்கள் வில்லிகளாக வரலாம். ஆனால் திருநங்கைகளை அப்படிக் காண்பிக்கக் கூடாதா?

(நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், நல்ல பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப் படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக எனக்குப் படவில்லை. காண்பித்து இருக்கலாம். ஏன் காண்பிப்பது இல்லை என்பது வேறு விவாதம். ஆனால் இதற்கான பதில் இல்லை என்பது என் கருத்து.)

2) இத்தொடரைத் தயாரிக்கும் ராடான் நிறுவனத்தின் படைப்புக் குழுத் தலைவர் (கெட் என்றால் என்ன என்று புரிவதற்கே சற்று நேரமானது. ஹெட் என எழுதி இருந்தால் கொஞ்சம் எளிதாகப் புரிந்து இருக்கும்.) ராதிகாவைப் பற்றி மிக மோசமாக, அருவருக்கத்தக்க வகையில்தான் எழுதி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் ராதிகா இதைப் படித்தால் இவர் மீது அவதூறு வழக்கு கூட போட முடியும்.

ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்? இது வித்யா மட்டுமில்லை. நம்மிடையே பலர் செய்து வருவதுதான். ஒருவர் எதிர்கருத்து சொன்னால் நீர் மட்டும் ஒழுக்கமோ என்றுதானே பெரும்பாலும் பதில் வருகிறது. இது வலையுலகில் மட்டும் இல்லை, அரசியலாகட்டும், சாமானியர்கள் சிலரிடையே நடக்கக்கூடிய விவாதங்களில் ஆகட்டும், கருத்தை விடுத்து கருத்து சொல்பவர் மீது தாக்குதல்கள் நடத்துவது எந்த விதத்தில் சரி? எந்த விதத்தில் ஆரோக்கியமானது? நம்மிடையே ஏன் இது இவ்வளவு தூக்கலாக உள்ளது?

3) இன்னும் ஒரு கேள்வி. இந்தத் திருநங்கை வேடம் ஏற்று நடிப்பவர் பிருத்வி என்ற நடிகராம். அவரைப் பார்த்து வித்யா கேட்டிருப்பது -
(எப்பா பிருத்வி எத்தனை முறை உன் குதத்தை காயப்படுத்தி சம்பாதித்திருக்கிறாய்..? அல்லது அத்தகைய அபாக்கியசாலிகளில் எத்தனை பேரை நேரில் கண்டிருக்கிறாய்...?)
பிருத்வி ஒரு நடிகர். அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா? அல்லது பிரதமராகவோ முதல்வராகவோ நடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா? ஆனால் திருநங்கையாக நடிக்க வந்தால் மட்டும் ஏன் குதத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்து இருக்கிறாய் என்ற கேள்வி? தெரியவில்லை.

டிஸ்கி 1: நான் குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பது இல்லை. அதனால் அதில் வரும் சம்பவங்கள் எனக்குத் தெரியாது. என் கேள்விகள் வித்யாவின் பதிவைப் படித்ததால் மட்டுமே.

டிஸ்கி 2: இதன் மூலம் திருநங்கைகளைத் தவறாகத்தான் காண்பிக்க வேண்டும் எனச் சொல்ல வரவில்லை. ஊனமுற்றவர்களை, சில குறிப்பிட்ட வேலை செய்பவர்களை, சில குறிப்பிட்ட சமுதாயங்களைச் சார்ந்தவர்களை, இவர்கள் போன்றே திருநங்கையர்களையும் தனியாகக் கட்டம் கட்டி கேலி செய்யாதிருத்தல் நலம்.

டிஸ்கி 3: நான் என் கேள்விகளில் தவறாகவோ மனதைப் புண்படுத்துவது போலவோ எதுவும் சொல்லவில்லை என்றே நம்புகிறேன். அப்படியே ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறேன். அதே சமயம் இங்கு ஆரோக்கியமான விவாதங்களை மட்டுமே அனுமதிக்க இருக்கிறேன். என் அடிவருடித்தனத்தைப் பற்றியோ, என் வந்தேறித்தனத்தைப் பற்றியோ அல்லது என் குதம் விற்பனைக்கோ வாடகைக்கோ கிடைக்குமா என்பது போன்ற பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. (கட்டாயம் இவைகள் வரும். வலையுலகில் நான் இருக்கும் சில காலத்தில் அறிந்து கொண்டது இது. காரணம் கேள்வி நம்பர் 2)

டிஸ்கி 4 : இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம் அப்படின்னு எல்லாம் கேட்கக் கூடாது. அதைப் பார்த்துதானே வந்தீங்க. அதுக்காகத்தான். அர்த்தம் எனக்கும் தெரியாது.

72 comments:

said...

வழக்கம் போல நம்மளுதுதான் முதல்!

said...

இன்றைய பொழுதை மிக அருமையான ஒரு பொழுதாக தான் ஆரம்பித்து உள்ளீர்.....

நடத்தும்...

said...
This comment has been removed by the author.
said...

நல்ல கேள்விகள்தான் கொத்தனாரே, ஆனாப் பாருங்க வித்யா இங்க வந்தும் ஒரு ஆட்டம் ஆடுவாங்களே தவிர, ஆக்கபூர்வமா ஒத்துக்க மாட்டங்க...இப்படித்தான் கடந்த முறை ஒரு சினிமாவிற்க்காக இயக்குனர், மற்றும் பலருக்கு இதே போன்ற அர்ச்சனை செய்தார்கள்...என்ன செய்வது வெள்ளத்தனையது மலர் நீட்டம்......

said...

:(

said...

அனானி,

இது வித்யாவை மட்டும் நோக்கி கேட்கப் பட்ட கேள்விகள் இல்லை. பொதுவான விவாதம்தான். தனிமனித தாக்குதல் இல்லாத வரை பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படும்.

தயவு கூர்ந்து இதனை வித்யாவை நோக்கி வைத்த கேள்விகளாக மாற்றி விட வேண்டாம். தங்கள் புரிதலுக்கு முன்கூட்டியே நன்றி.

said...

நிச்சயம் நல்ல கேள்விகள், நானும் தொடந்து சகோதரி வித்யாவின் பதிவைப் படித்து பின்னூட்டமிடுபவன்,

ஆனால் இன்றைய பதிவைப் படித்ததும் சில வார்த்தைப் பிரயோகங்களும்,சில கருத்துக்களும் எனக்கு ஒத்துப்போக மனமில்லை அதனாலேயே அங்கு எனது கருத்தை நான் சொல்லவில்லை, அடுத்தவர்களின் செயல் புண்படுத்தும்படி உள்ளது என்று கூறும் வித்யாவின் பதிவை அந்த அடுத்தவ்ர்கள் படித்தாலும் அவர்களின் மனதும் புண்படும், இது தொடரும் பட்சத்தில் இருவருக்கும் அதிகம் வித்தியாசம் இல்லையே...

தங்களின் சில கருத்துக்களில் நானும் ஒத்துப் போகின்றேன்,
முக்கியமான தனிமனிதத் தாக்குதல், நிச்சயமாக எனக்கு ராதிகாவோ, திருநங்கை பிரித்வி என்ற நடிகரோ வேண்டப் பட்டவர்கள் இல்லை, எனது கருத்து இது,

//பிருத்வி ஒரு நடிகர். அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா? அல்லது பிரதமராகவோ முதல்வராகவோ நடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா? ஆனால் திருநங்கையாக நடிக்க வந்தால் மட்டும் ஏன் குதத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்து இருக்கிறாய் என்ற கேள்வி? தெரியவில்லை.//

நல்ல கேள்வி...

அன்புடன்...
சரவணன்.

said...

நல்லா விளக்கினீர்கள் கொத்தனாரே, நன்றி.....

said...

//எப்பா பிருத்வி எத்தனை முறை உன் குதத்தை காயப்படுத்தி சம்பாதித்திருக்கிறாய்..? அல்லது அத்தகைய அபாக்கியசாலிகளில் எத்தனை பேரை நேரில் கண்டிருக்கிறாய்...?//

இந்தக் கேள்வி உங்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை அப்படின்னு நான் நினைக்கிறத மட்டும் சொல்லிக்கிறேன்.

பெட்ரோ அல்மட்ரோர் உடைய "All about my mother" பார்த்திருக்கிறீங்களா?

said...

கொத்துஸ்,

விவாதத்தில் கலந்துக்கவே இப்ப எல்லாம் பயமா இருக்கு. புது புது பட்டங்கள், இங்க ஒரு கமெண்ட் போட்டுட்டு நகர காட்டியும் பின்னால் தனிமடல்கள் பொங்கலுக்கு மட்டும் பொங்கு மத்த நாளில் பொங்காதே என்று.....

நான் என்ன பண்ணட்டும், சொல்லுங்க குருவே...........

said...

//நான் என்ன பண்ணட்டும், சொல்லுங்க குருவே...........//

கடமையைச் செய். பலனை இக்னோர் செய்துவிடு! :))

said...

//இந்தக் கேள்வி உங்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை அப்படின்னு நான் நினைக்கிறத மட்டும் சொல்லிக்கிறேன்.//

நம்ம கருத்து சாதாரணமானவங்களுக்கு போய் சேரணும் அப்படின்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்த புரியற மாதிரி எழுதறது நல்லது இல்லீங்களா? எனக்கு மட்டும் இல்லைங்க. நிறையா பேருக்கு இந்த கேள்வி தப்பாதான் புரிஞ்சு இருக்கு.

//பெட்ரோ அல்மட்ரோர் உடைய "All about my mother" பார்த்திருக்கிறீங்களா?//

இல்லீங்க. நம்ம சினிமா லெவல் எல்லாம் ரஜினி, விஜய்தாங்க. கொஞ்சம் மேல போனாக்கூட கமல் படம் ரேஞ்சுதாங்க. அதுக்கு மேல எல்லாம் புரியறது இல்லை. மன்னிச்சுடுங்க.

said...

இலவச கொத்தனாரே, வித்யா உபயோகித்த வார்த்தை பிரயோகங்கள் மிக மிக அதிகம்தான். ஆனால் சொல்லப்பட்டவர்களின்
வேதனைகளை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். வார்த்தை நாகரீகம் வேண்டும் என்பவர்களுக்கு அவர்களை நாம் மனிதர்களாவே மதிக்கிறோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். திருநங்கையர் என்றாலே இப்படித்தான் என்று காட்சிகளில் அவர்களை எவ்வளவு நாட்களுக்கு இழிவுப் படுத்திக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

said...

//கடமையைச் செய். பலனை இக்னோர் செய்துவிடு! :)) //

கொத்ஸ் அருமை, இதைவிட நேற்று சிபியின் "ஓய்வு எடுக்கப் போகிறேன்" பதிவில் இட்ட "ஓய் வெடுக்குனு வந்திடு" பின்னூட்டம் நல்ல நகைச்சுவை:))))))))))

புலிப் பாண்டி, இங்க ஆணி கொஞ்சம் கம்மி, வாங்களேன் இங்கேயே கொஞ்ச நேரம் கும்மி அடிப்போம்?

அன்புடன்...
சரவணன்.

said...

//ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்?//

7:1 டிஜிடல் சிஸ்டம் எபெஃக்டில் படிக்கவும்.

ஏன்??? ஏன்????? ஏன்???????????

//பொங்கலுக்கு மட்டும் பொங்கு மத்த நாளில் பொங்காதே என்று.....//

நாகை சிவா,

இந்த மடலுக்கே வருத்தமா? ரத்தபூமியில் இதெல்லாம் ஜுஜூபி!

நான் காபிக்கு பால் பொங்கப் பொங்க தினமும் காய்ச்சுபவன்னு அடிச்சுவிட்டா முடிஞ்சிடும் விஷயம் இது...:-)))

(முக்கியமா சிரிப்பான் போட்டுடணும் :-))

said...

உஷாக்கா,

எனக்குப் புரியலை. அப்படிக் காண்பிச்சவங்களை என்ன வேணா பேசலாமா?

//திருநங்கையர் என்றாலே இப்படித்தான் என்று காட்சிகளில் அவர்களை எவ்வளவு நாட்களுக்கு இழிவுப் படுத்திக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?//

ஆண்களில் கெட்டவர்கள் பெண்களில் கெட்டவர்கள் போல் திருநங்கையிரில் கெட்டவர்கள் எனத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுப்படுத்துதல் சரியா?

ஆண் நல்லவர்கள் போல், பெண் நல்லவர்கள் போல் திருநங்கை நல்லவர்களையும் காண்பிக்க வேண்டும் எனச் சொல்லுங்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன்.

அவர்களைப் பற்றிய கேலி கிண்டல் கூடது என்பதைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன். அது போன்ற காட்சிகள் திரைப்படத்தில் வரும் பொழுது ஆயாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் இங்கு கேட்கப் பட்ட கேள்விகளுக்கு தாங்கள் சொல்லி இருப்பது முழுமையான ஒரு பதிலாகத் தெரியவில்லையே.

said...

//வாங்களேன் இங்கேயே கொஞ்ச நேரம் கும்மி அடிப்போம்?//

சரவணன், ஒரு சேஞ்சுக்கு சீரியஸ் பதிவு போட்டாக்கூட கும்மி அடிக்க கிளம்புனா எப்படி? சரி. ஒரு 40 பின்னூட்டம் வரட்டும் அப்புறமா கும்மியை ஆரம்பியுங்க. ஓக்கேவா?

said...

//1) இந்தப் பதிவெழுதக் காரணம் ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருநங்கையாக வரும் ஒருவரை வில்லத்தனம் செய்ததாகக் காண்பித்ததால் வந்த கோபம். என் கேள்வி எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் சரி, ஆண்கள் வில்லன்களாக வரலாம். பெண்கள் வில்லிகளாக வரலாம். ஆனால் திருநங்கைகளை அப்படிக் காண்பிக்கக் கூடாதா? //

காட்டுங்கள்.. எல்லா படத்திலும் ஆண்கள் வில்லன்களாக மட்டும் தானே நடிக்கிறார்கள் அதனால் காட்டுங்கள், ரஜினி, கமல், விஜய், அஜித் எல்லாம் வில்லன்களாக மட்டும்தானே நடிக்கிறார்கள் அதனால் வில்லத்தனத்தோடு மட்டுமே காட்டுங்கள்..

காட்டுங்கள்.. எல்லா படத்திலும் பெண்கள் வில்லிகளாக மட்டும் தானே நடிக்கிறார்கள் அதனால் காட்டுங்கள், ரேவதி, ரோஹினி, ஜோதிகா, சிம்ரன், அஸின், திரிஷா, எல்லாம் வில்லிகளாக மட்டும்தானே நடிக்கிறார்கள் அதனால் இன்னும் இன்னும் வில்லத்தனத்தோடு காட்டுங்கள்..


// ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்? //

ஊடகங்களில் காட்டப்படுவது கருத்தா? கருத்தாக்கமா...? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

சரி, கருத்து என்றால் என்ன கருத்து...? லட்சக்கணக்கான பார்வையாளரை சேரும் ஊடகத்தில் உங்கள் தேவைக்கு ஒரு அபத்தை வைப்பீர்கள் அது கருத்தாகுமா..?

எனில், ராதிகா (ஊரறிந்த தேவிடியா) என்பது என் கருத்து.. அதை நான் சொல்கிறேன்... என்ன தப்பு...

அய்யா, வீட்டை விட்டு வெளியேற்றப்படும் எங்களின் நிர்கதியைப் பற்றி ஒரு காட்சி,

தெருவில் ஏளனப்படுதல் பற்றி ஒரு காட்சி.. கேட்டால் அதற்கும் பதில் தருகிறீர்கள் ,இது பதிலா..?

(நல்ல ஆண்கள் இருக்கிறார்கள், நல்ல பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப் படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக எனக்குப் படவில்லை. காண்பித்து இருக்கலாம். ஏன் காண்பிப்பது இல்லை என்பது வேறு விவாதம். ஆனால் இதற்கான பதில் இல்லை என்பது என் கருத்து.)


சரி வித்யா ராதிகாவை தூற்றுவது, அதன் வீச்சம் குறித்து முகம் சுளிக்கும் உங்களில் எத்தனை உத்தமர்கள் ஊடகங்கள் செய்வது தவறு என்று ஒரு சிறு மறுப்பையாவது இதுவரை சொல்லியிருப்பீர்கள்..


விளிம்புகளின் மீதான உங்களின் அரசியல் என்ன.. வித்யா முட்டாளகவே இருக்கட்டும், வித்யாவின் வார்த்தைகள் நாற்றமாகவே இருக்கட்டும், இதனைக் கடந்து ராதிகாவின் பாதகத்தை ஏன் எதிர்த்து ஒரு வரி இல்லை இலவசம்...?

// 3) இன்னும் ஒரு கேள்வி. இந்தத் திருநங்கை வேடம் ஏற்று நடிப்பவர் பிருத்வி என்ற நடிகராம். அவரைப் பார்த்து வித்யா கேட்டிருப்பது -
(எப்பா பிருத்வி எத்தனை முறை உன் குதத்தை காயப்படுத்தி சம்பாதித்திருக்கிறாய்..? அல்லது அத்தகைய அபாக்கியசாலிகளில் எத்தனை பேரை நேரில் கண்டிருக்கிறாய்...?) பிருத்வி ஒரு நடிகர். அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா? அல்லது பிரதமராகவோ முதல்வராகவோ நடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா? ஆனால் திருநங்கையாக நடிக்க வந்தால் மட்டும் ஏன் குதத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்து இருக்கிறாய் என்ற கேள்வி? தெரியவில்லை. //

அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா?

வேண்டாம் ஆனால் அவர் நடிப்பது பெண் டாகடராக இல்லையே...

அல்லது பிரதமராகவோ முதல்வராகவோ நடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமா?

வேண்டாம் ஆனால், அவர் பெண் பிரதமராகவோ, பெண் முதல்வராகவோ நடிக்கவில்லை.

இன்னும் சொல்வதென்றால், இத்தொடரில் கூட பிம்ப் ஆக நடிப்பதென்றால் ஆண் பிம்ப் ஆக நடிக்கட்டுமே../ ஏன் அலி பிம்பாக நடிக்க வேண்டும் என்பது தான் கேள்வி..

உங்களின் வித்தியாச கலை நயத்திற்கு அலிகள் நிர்வாணம் தான் இளக்காரமா...? தோழரே...

said...

//அவர்களை நாம் மனிதர்களாவே மதிக்கிறோமா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். திருநங்கையர் என்றாலே இப்படித்தான் என்று காட்சிகளில் அவர்களை எவ்வளவு நாட்களுக்கு இழிவுப் படுத்திக் கொண்டு இருக்கப் போகிறார்கள்? //

உஷா, பலரும் மதிப்பதில்லை என்பது உள்ளதுதான் ஆனால், இந்தமாதிரி பதிவு எழுதினால் மரியாதை ஏற்படும் என்பது கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்புத்தான். பல நல்ல வழிகளில் அவர்கள் போராடுகிறார்கள் (எலக்ஷனில் நிற்பதாகட்டும், வித்யாவின் கோர்ட் கேஸாகட்டும்), அது போல தார்மிக போராட்டங்கள், எழுத்துக்கள் இன்னும் நன்றாக எடுபடும், மேலும் அவர்கள் மீதான நன்மதிப்பினை கொடுக்கும்.

நான் முன்பே கூறியது போல, இந்த லாங்வேஜில் தாக்கி பதிவிட்டால் இது கோபத்தால் வந்ததாக மட்டும் கொள்ள முடியவில்லை....(முன்பு பட இயக்குனரைத் தாக்கியதாகட்டும் அல்லது தற்போது ராதிகாவை தாக்கியதாகட்டும்).

said...

வாழ்க்கையில் ஓரளவு செளக்ரியமாய் வாழ்ந்துக் கொண்டு நாகரீகத்தைப் பற்றி நீங்களும் நானும் பேசலாம். எத்தனை கோபம் யார் மீது வந்தாலும், ஒரு வார்த்தை அதிகமாய் என்னிடம் இருந்து வராது. இணையத்தில் கிடைக்கும் அட்டை கத்தி
வீச்சுகளையும் நான் சுலபமாய் ஒத்துக்கி தள்ளிவிட்டுப் போகிறேன். ஆனால் போகும் இடமெல்லாம் கிடைக்கும் அவமரியாதையும், கேலி பார்வைகளும் ஓட ஓட பின்னால் துரத்தப்பட, இந்த கோபத்தில், சுயபச்சாதாபத்தில் விழும் வார்த்தைகள், தார்மீக கோபமாய் பார்க்கிறேன். அவர் முன்பு இயக்குனர் கெளதம் மேனன் சம்மந்தமாய் போட்ட பதிவும், இந்த பதிவும் படிக்கும்போது
சத்தியமாய் எனக்கு தவறாய் படவில்லை.

said...

சரி கொத்ஸ், விவாதம் தொடங்கட்டும், நானும் தொடர்ந்து வரும் பின்னூட்டங்களை படித்துக் கொண்டிருக்கிறேன், பாண்டி வா.. நாம வேற ஒரு எடத்துக்குப் போவோம் ,

(கொத்ஸ் இந்தப் பின்னூட்டமும் 40 எண்ணிகையில் வரும் , எனவே விருப்பமில்லையெனில் delete பண்ணிவிடவும், நான் ஒன்றும் நினைத்துக் கொள்ளமாட்டேன், உங்களின் இன்னொரு கும்மிப் பதிவில் நாம் வந்து கலந்து கொள்கிறேன்).

ஏலேய் சரவணா! நீ இம்புட்டு நல்லவனாட?

அப்படீனு யாரும் பின்னூடமிட்டு எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டாம்.
(கும்மி அடிக்கலைனு சொல்லிகிட்டே அடிக்கிறானே, இதுல அடுத்தவனுக்கும் சொல்லி வேற கொடுக்கிறானே)

அன்புடன்...
சரவணன்.

said...

வித்யா,

நான் மீண்டும் கூறுகின்றேன். திருநங்கையரில் நல்லவர்களையும் காண்பிக்க வேண்டும் எனக் குரல் கொடுங்கள். நானும் சேர்ந்து குரல் கொடுக்கிறேன்.

தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் எத்தனையோ அபத்தங்களில் இதுவும் ஒன்று எனத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

//ஊடகங்கள் செய்வது தவறு என்று ஒரு சிறு மறுப்பையாவது இதுவரை சொல்லியிருப்பீர்கள்..//

கிண்டலும் கேலியும் செய்யக்கூடாதென்பதைத்தான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேனே. அதற்காக வில்லியாகக் காண்பிக்க கூடாதென்பது அபத்தம்.

//அவர் டாக்டர் வேடம் ஏற்று நடிக்க டாக்டருக்குப் படிக்க வேண்டுமா?

வேண்டாம் ஆனால் அவர் நடிப்பது பெண் டாகடராக இல்லையே...//

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒன்றும் புரியவில்லை. ஒரு திருநங்கையே இந்த வேடத்தை போட்டிருந்தால் சரியா? உண்மையில் புரியவில்லை.

மற்றபடி ராதிகாவின் தனிவாழ்க்கை பற்றி உங்களுக்கு தெரிந்த அளவு எனக்குத் தெரியாது, ஊரில் எத்தனை பேருக்குத் தெரியும் எனத் தெரியாது. இனி அது போன்ற பின்னூட்டங்கள் வருமேயானால் எடிட் செய்தே பப்ளிஷ் செய்யப்படும். புரிதலுக்கு நன்றி.

said...

சரி உஷாக்கா. உங்களுக்குத் தவறாகப் படவில்லை. ஆனால் ஒருவரின் கருத்தை எதிர்க்காமல் அவரை வாய்க்கு வந்தபடி திட்டுவது எனக்குத் தவறாகப் பட்டது. அது மட்டுமின்றி நான் சொன்னது இது இந்த சம்பவத்தில் மட்டும் இல்லை. பொது வாழ்க்கையிலும் எத்தனை முறை நீ யோக்கியாமா என கேட்கிறோம் அதையும் சேர்த்துத்தானே. நீங்களும் இப்படி திருநங்கைகளை மட்டும் கேட்பதாக நினைத்து பதில் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?

வித்யாவின் பதிவினால் வந்த கேள்விகளே தவிர கேட்ட கேள்விகள் பொதுவானவைதானே..

said...

லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவில் இரண்டு பகுதிகள்.

1. அவர் சொல்லும் கருத்து
2. அவர் சொல்லிய விதம்

அவர் சொல்லிய கருத்தில் நான் ஒத்துப் போகிறேன். ஆனால் அவர் சொல்லிய விதம் தவறு என்பதில் மறுகருத்து இல்லை.

இங்கு இன்னொன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் சொல்லிய விதத்தை இத்தனை முறை போஸ்ட்மார்டம் செய்யும் பதிவுகள் வருவதுண்டு. ஆனால் அவர் சொல்லும் கருத்துகளை வைத்து?

லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்கள் சொல்லும் முறை நிச்சயம் மாற வேண்டும். ஆனால் இப்பொழுது தொடங்கியிருக்கிறது. விரைவில் மாறும் என்று நம்புவோம். ஆனால் அவர்கள் தொடங்கும் போதே வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்று நீட்டிக்கொண்டு வருவதுதான் நடக்கிறது. பொதுவில் திருநங்கை என்றால் எல்லாரும் என்ன செய்வார்களோ...அதுதான்...விலக்கி வைக்கப்படுகின்றவனின் சொற்கள் இப்படித்தான் இருக்கும். சேர்த்துக்கொள்ளும் வரை.

லிவிங் ஸ்மைல் வித்யா, இது உங்களுக்கு. பார்த்தீர்களா...நீங்கள் சொன்ன கருத்தை விட்டு விட்டு சொல்லிய விதத்தை எவ்வளவு எளிதாக தாக்க முடிகிறது. ஆகையால் சொல்லும் கருத்தை நாகரீகமாக சொல்ல முயலுங்கள். இது என் கோரிக்கை. குறிப்பிட்ட நடிகை பலருடன் படுத்தாரா இல்லையா என்பதல்ல பிரச்சனை. அது அவரது தனி மனித சுதந்திரம். அதை நாம் விமர்சிக்கலாகாது. ஆனால் தொடர் சொல்லும் கருத்தை விமர்சிக்கலாம். சொல்ல வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

said...

//ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை எதிர்க்காமல் அந்த கருத்தைக் கொண்டவர் மீது தனிமனித விமர்சனம் வைக்கும் வழக்கம் நமக்கு வந்ததேன்?//

கொத்ஸ்,

சீரியஸாக இந்த attitudeஐ உற்றுப் பார்த்தால் இது ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு வெள்ளைக்காரனின் divide and ruleஉத்திக்கு உட்பட்டு பிளவுபட்ட சமூகமாக இருந்து, வெள்ளைக்காரனிடம் முறையிட்டு ஒரு விஷயத்தை முன்வைத்து ஒருதரப்பு பேசும் போது அடுத்த தரப்பு நண்டுமுயற்சியாக, "நீ மட்டும் என்ன ஒழுங்கோ" என்று முதல் தரப்பினரை வாரிவிடும் வகையாக தன் தரப்பு சர்வைவலுக்காக நம் சமூகத்தினுள் வந்து இன்றும் வழிவழியாகத் தொடரும் "Leftover colonial residue"-வால் உந்தப்படுகின்ற உளவியலால் விளையும் செயல்பாடு எனக் கருதுகிறேன்!

said...

கொத்ஸ்,
வித்யாவுக்காக மட்டுமே இந்தப் பின்னூட்டம். நீங்கள் கேட்கும் மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது.

உஷா ஏற்கனவே சொல்லிவிட்டது போல், வித்யா போன்ற ஒரு ஒதுக்கிவைக்கப்பட்ட பின்னணியிலிருந்து வந்திருப்பவரிடம், பாதுகாப்பாக வளர்ந்த "நமது" நாகரிக மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு பேசுவது நியாயமாகாது.

அரசியின் திருநங்கைக்கும், கௌதம் படத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களுக்கும், வித்யாவின் பதிவு வரும் வரை நம்மில் யாருமே எதிர்வினை செய்யவில்லை என்பது மிக முக்கியமான விசயம்.

எங்கோ ஒரு இடுகையில் படித்தது: இது போன்ற "நம் அளவில் நாகரிகம் குறைந்த" திட்டுக்களைப் பயன்படுத்துவது ஒரு அதிர்ச்சி மதிப்பீடுக்காக. ஸ்மைலி இடுகை, அப்படியொரு மொழியில் எழுதி இருப்பதாலேயே உங்களுக்கும் கூட விளிம்புநிலை மக்களையும் ஊடகத்தையும் தொடர்புப்படுத்திப் பார்க்க வேண்டும் என்றும், அது குறித்து எழுத வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. இல்லாவிட்டால், எல்லாரையும் போல் நாமும் ஒரு பின்னூட்டம் போட்டு, ஆதரவோ எதிர்ப்போ காட்டிவிட்டு அடுத்த இடுகையைப் படித்துக் கொண்டு போயிருப்போம்.

//நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப்படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக எனக்குப் படவில்லை//
அந்தப் பதிவின், வித்யாவின் மகளிர் தினக் கட்டுரையின், கௌதம் குறித்த பதிவின் என்று மூன்று வெவ்வேறு இடுகைகளில் இது மட்டுமே கேட்கிறார் வித்யா. அவர் கேட்பதில் என்ன தவறிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை! மேலும் மேலும் கேலிக்குரியவர்களாக மட்டுமே திருநங்கைகளைச் சித்தரிக்கும் நம் சினிமாக்கள், அவர்களை நல்லவர்களாக எத்தனை முறை காட்டுகிறது? அதைக் கேட்பது எப்படி சரியான வாதமில்லை?
அதே சமயத்தில், அவர்களை நல்லவர்களாக, சமூகத்தின் மீது அன்புள்ளவர்களாக சித்தரிக்கும் பம்பாய் போன்ற திரைப்படங்களையும், இன்னுமொரு தொடரையும் கூட குறிப்பிட்டுப் பாராட்ட ஸ்மைலை தவறவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய சமூகத்தில் பெண்களைப் பற்றிய எத்தனையோ வேண்டாத, உண்மையில்லாத பழமொழிகள் உலவுகின்றன. "பெண்ணிடம் ரகசியத்தைச் சொல்லாதே!" என்கிற பழமொழியுடன், ஒரு தொ.தொடரில், ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லப்பட்ட ரகசியம் வெளியே பரவுவதைக் காட்டிவிட்டார்கள் என்றால், அவ்வளவு தான். "பார்த்தாயா, பழமொழி பலித்துவிட்டது! பெண்களை வைக்கிற இடத்தில் வைக்க வேண்டும்" என்று பெண்களே சொல்லும் அளவுக்குத் தான் இன்னும் நம் சமூகத்தில் ஊடகத் தாக்கம் இருக்கிறது.

அதனால், தன் கையில் கிடைத்திருக்கும் ஒரு ஊடகத்தில் இந்தப் பிரச்சனையை முன்வைத்திருக்கிறார் ஸ்மைலி. அதைக் குறை சொல்லவும், அது தேவையற்றது என்றும் நான் நினைக்கவில்லை.

இருப்பினும் ஸ்மைலி, உங்களுக்கு ஒரு கோரிக்கை: இது விசயமாக, சமூகம் வைத்திருக்கும் so-called-நாகரிக அளவுகோலில், 'அவள்' போன்ற பத்திரிக்கைகளுக்கு ஒரு வரி விமர்சனம் அனுப்பி வையுங்களேன்! அந்தத் தொடரைப் பார்ப்பதில்லை, இல்லையெனில் நானே அனுப்பிவிடுவேன்!

said...

ராகவன், நான் முகம் காண்பித்து எழுதாதையும் தாக்குவீர்கள் என நினைத்தேன்...ஹாஹஹா...நன்றி

பல பஸ்டாண்டுகளிலும், இருளான பகுதிகளிலும் இன்னும் பல ஆண்கள் இவர்களால் சங்கடங்களுக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடைகளில் தின வசூல், மற்றும் வம்படியாக நெளிய வைத்து காசு பிடுங்குதல் மும்பை போன்ற இடங்களில் நடக்காததா என்ன?. சினிமாவிலோ அல்லது டிவியிலோ இல்லாததை ஒன்றும் காண்பிக்கவில்லையே..

மற்றபடி சாதி வழக்கங்களையும், ஆண்-பெண் வில்லன் - வில்லித்தனங்களையும் நாம் (என்ன சாதியானலும், நாம் வில்லன்/வில்லியாக இல்லாவிடினும்) டிவி, சினிமாவில் ஏற்றுக்கொள்ளும் போது திருநங்கைகள் ஏன் அவர்களது சக திருநங்கைகளது செய்கைகளை ஏற்காது தனிமனித தாக்குதல்?.....இதனைப் பார்க்கும் போது கருத்தை விட விளம்பரம் அதிகமாக தெரிகிறது, மற்றும் வக்ரம் வெளிவருகிறது...அஷ்டே.

said...

சினிமா, தொலைக்காட்சி ஊடகம் ஒரு வடிவமைக்கப்பட்ட முன்முடிவுகள் நிறைந்த களம்.

இந்தச் சினிமா, தொலைக்காட்சி ஊடகத்தில் பிராமணர்கள் என்றாலே நடுங்கும் கோழைகளாகச் சித்தரிக்கப்படுவது ஒரு கட்டமைக்கப்பட்ட முன்முடிவு.

திருநங்கைகள் பற்றியதும் இம்மாதிரியான கட்டமைக்கப்பட்ட முன்முடிவே!

ரொம்ப அதிகம் போய்ப் பார்த்தால் சினிமா, தொலைக்காட்சியில் வெற்றி "செண்டிமெண்ட்" என்பதற்காகத் திணிக்கப்பட்டதாகவும் இருக்கலாம்!

ஊடகம் சமூகத்தைபக் கண்ணாடியாக இருந்து உள்ளதை உள்ளபடியே பிரதிபலிக்கிறது என்றால் அதில் உண்மை எத்தனை சதவீதம் என்பது ஊடகத்தில் வேதனை தரும் அளவுக்குப் பிரதிபலிக்கப்பட்ட பிரிவினர் தீர்மானிக்கவேண்டியது!

ஊடகத்தின் வணிகத் தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்ட சமூகத்தின் சில பிரிவினர் மீதான முன்முடிவுடனான காட்சி அமைப்புகளுக்கு எதிரான தார்மீகமான கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என்றால் அது ஊடகங்களினால் பாதிக்கப்படும் அனைத்து தரப்பினரையும் உள்ளிருத்தியதாக இருத்தல் அவசியம்.

அதில் திருநங்கைகளுக்கு மட்டும் தான் கண்டனக் குரல் எழுப்பப்படும் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சமூக அபத்தங்களில் கூடுதலாக இன்னொன்று என்றே அமையும்!

தமிழகத்தின் அரசியல் சித்தாந்தம் என்பதே "Exploitation of the Less repelling" என்பது தானே! இந்தச் சித்தாந்ததின் தாக்கத்தில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனமும், தயாரிப்பாளரும் அதனைப் பிரதிபலிப்பது என்பது அதிர்ச்சி தரும் விஷயமா?

said...

இங்கு நடக்கின்ற பின்னூட்ட விவாதங்களை பார்க்கும்போது எனக்கு சற்று வருத்தமாகவும், அதிக மகிழ்ச்சியாகவும் உள்ளது..

வருத்தம் : வித்யாவின் பார்வை நோக்கு ஏன் இன்னும் மாறவில்லை என்பது..

சந்தோஷம் : பின்னூட்டத்தில் இதுவரை யாரும் பிரசினையை திசை திருப்ப முயலவில்லை.

பொன்ஸ் அவர்களுக்கு, தங்களின் பின்னூட்டத்தில் டிவி பார்க்கும் அனைவருமே அதே மனப்பான்மையோடுதான் நடந்து கொள்கிறார்கள் என்ற பாங்கு தென்படுகிறது. மன்னிக்கவும். இங்கு பேசப்படுவது நாங்கள் உங்கள் அனைவரையும் மதிக்கின்றோம்.. அல்லது மதிக்கின்றேன். ஏன் நீங்கள் தகுதியில்லாததை பற்றி பேசுகிறீர்கள் என்றுதான். ஒரு விஷயத்தை பற்றி அதிகம் விவாதிப்பதாலேயே அதன் கருப்பொருள் உயர்கிறது.

திருமதி ராதிகாவை பற்றி பேசுவதற்கு அவரது அந்தரங்கம் மட்டும் தான் உங்களுக்கு கிடைத்ததா..? பிறகு உங்களை எப்படி அவர்களிடமிருந்து வேறுபடுத்தி அறிவது.. கோபத்தை வெளிப்படுத்துவது சிறந்த குணம்தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் கோபத்தால் மட்டும்தான் எல்லாவற்றையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கைதான் தவறானது.

சென்ஷி

said...

//சினிமாவிலோ அல்லது டிவியிலோ இல்லாததை ஒன்றும் காண்பிக்கவில்லையே..//
அப்போ, இன்னமும் குடும்பத்தாராலும், வீட்டாராலும், ஏன், குழந்தைகளாலும் கூட கேலிபேசப்படும், ஒன்பது, அலி என்று நக்கலடிக்கப்படும் அவர்களது மிச்ச சொச்ச வாழ்க்கையைப் பற்றிக் காட்டவே மாட்டீங்க! ஒங்களுக்கு அதப் பத்தி கவலையில்லே! நல்லா இருக்கு ஞாயம்!

//மற்றும் வக்ரம் வெளிவருகிறது//
தோ பாருய்யா! அப்ப மேல சொன்னது இன்னா தொர?!

said...

//மற்றபடி சாதி வழக்கங்களையும், ஆண்-பெண் வில்லன் - வில்லித்தனங்களையும் நாம் (என்ன சாதியானலும், நாம் வில்லன்/வில்லியாக இல்லாவிடினும்) டிவி, சினிமாவில் ஏற்றுக்கொள்ளும் போது திருநங்கைகள் ஏன் அவர்களது சக திருநங்கைகளது செய்கைகளை ஏற்காது தனிமனித தாக்குதல்?.....//

இதை யாரு சொன்னான்னு தெரியலை, இன்னைக்கு வரைக்குமே ஒரு சில பர்டிகுலர் ஜாதிகளை/மதங்களைப் பற்றி எழுதக்கூட முடியாது. சினிமா டீவியில் காண்பிக்கிறாங்களாம்.

அண்ணாச்சி, எத்தனை படங்கள் இந்தப் பிரச்சனையால நின்னுப்போச்சு தெரியுமா?

சும்மா தமாசு பண்ணாதீங்க.

இலவசம் அண்ணாச்சி,

நமக்கு புரியாத மாதிரி ஒரு விஷயம் இருந்தா புரிஞ்சிக்க முயற்சி பண்ணனும். எல்லோராலையும் எல்லோருக்கும் புரியிற மாதிரி புடிக்கிற மாதிரி எழுத முடியறதில்லை, இல்லையா?

--

உண்மையிலேயே ஆங்கிலப் படங்கள் பார்க்க மாட்டீங்கன்னா சரி, அப்படியில்லைன்னா அந்தப் படம் பாருங்க சூப்பராயிருக்கும்.

பெனோலொப் குரூஸ் எல்லாம் இருக்காங்க படத்தில்(நான் டைரக்டருக்காகவும், பெனோலொப்காகவும் தான் பார்த்தேன் - கொஞ்சம் வழியிற ஜொள்ளோடன்னு வச்சுக்கோங்களேன்.)

said...

நாகரிகம்? எது நாகரிகம்? யார் சொல்வது நாகரிகம், நாம் சொல்லிக்கொண்டிருக்கும் நாகரிக கையேட்டை அவர்களிடத்தில் நம்மை வைத்து பார்த்தால் நம் நாகரிக கையேட்டை நம்மால் பின்பற்ற முடியுமா? இது தொடர்பான என் பதிவு இங்கே

said...

//பல பஸ்டாண்டுகளிலும், இருளான பகுதிகளிலும் இன்னும் பல ஆண்கள் இவர்களால் சங்கடங்களுக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடைகளில் தின வசூல், மற்றும் வம்படியாக நெளிய வைத்து காசு பிடுங்குதல் மும்பை போன்ற இடங்களில் நடக்காததா என்ன?. சினிமாவிலோ அல்லது டிவியிலோ இல்லாததை ஒன்றும் காண்பிக்கவில்லையே..//

இதற்கு சமூகமும் காரணம் என்பதை மறுக்க முடியாது நண்பரே. இதற்கு எதேனும் செய்ய வேண்டும் என்பதை விட்டு விட்டு சினிமாவில் வில்லனாய்க் காண்பிக்கக் கூடாதென்ற பிடிவாதம்தான் எனக்குத் புரியவில்லை.

said...

//நாகரிகம்? எது நாகரிகம்? யார் சொல்வது நாகரிகம், நாம் சொல்லிக்கொண்டிருக்கும் நாகரிக கையேட்டை அவர்களிடத்தில் நம்மை வைத்து பார்த்தால் நம் நாகரிக கையேட்டை நம்மால் பின்பற்ற முடியுமா? இது தொடர்பான என் பதிவு இங்கே//

குழலி, நாகரிகம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் உங்களுக்கு பிடிக்காத பதிவு ஒன்றை எழுதினால் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் நீங்கள் சொல்லலாமா? அதுதான் எனக்கு வருத்தம்.

said...

//சினிமாவில் வில்லனாய்க் காண்பிக்கக் கூடாதென்ற பிடிவாதம்தான் //
கொத்ஸு, அது வில்லியாய்க் காண்பிக்கக் கூடாதென்ற பிடிவாதம் இல்ல.. ஹிரோயினியாவும் ஏன் காண்பிக்கக் கூடாதென்ற பிடிவாதம்!
இங்க கூட பாருங்க, அவங்களோட கஷ்டங்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்னு கேட்டால், அவர்களை இருட்டில் வாழ வைத்த சமூகத்தில் நாமே அங்கமாக இருந்து கொண்டு வசதியாக, "அட, இல்லாததையா காட்டிட்டாங்க?" என்று கேட்க முடிகிறது பாருங்க!

அப்புறம் சென்ஷி, பெரும்பாலான மக்களின் மனநிலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஸ்மைலி மாதிரி ஒருவரின் அறிமுகமும் நட்பும் கிடைத்தபின் திருநங்கைகள் பற்றிய நமது பார்வை மாறி இருக்கிறது. ஆனால், இன்னும் சீரியல்கள் பார்த்து, அழுது கொண்டிருக்கும் நமது சமுகத்தில் எத்தனை பேருக்கு அப்படி ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது?

ராதிகாவின் தனிவாழ்க்கையைப் பற்றிப் பேசியது குறித்து எனக்கும் வருத்தம் தான். பொதுபுத்தியில் நடிகைகள் பாலியல் தொழிலாளிகள் என்ற ரீதியில் ஸ்மைலி பேசுகிறார் என்றால், அதே பொதுபுத்தியில் திருநங்கைகள் அனைவருமே அவர்தம் இயல்புப்படியே பாலியல் தொழிலாளிகள் என்கிற மாதிரி "அரசி" சித்தரிப்பதும் தவறு தானே!

இங்கோ, ராதிகா மட்டுமே பேசுபொருளாகி, "நல்ல திருநங்கைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த திரைப்படங்களில் என திரும்பிக் கேட்பது சரியான வாதமாக" படாமல் போய்விட்டது பாருங்க! அதுதான் எனக்குப் பெரிய விசயமாகத் தோன்றியது. அதற்கு மட்டுமே பதில் கருத்து வைத்திருந்தேன்.

said...

ஹரிஹரனின் நண்பர்: என்னடா ஷேவ் பண்ணும்போது மூஞ்சில வெட்டிகிட்டியா?

ஹரிஹரன்: இது ஆங்கிலேயர் சூழ்ச்சி என நினைக்கிறேன். ஷேவ் செய்யும் பழக்கத்தை அவர்கள்தான் உண்டாக்கினர்.

said...

//குழலி, நாகரிகம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் உங்களுக்கு பிடிக்காத பதிவு ஒன்றை எழுதினால் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் நீங்கள் சொல்லலாமா? அதுதான் எனக்கு வருத்தம்.//
அய்யா ராசா, உங்க தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எங்கேய்யா இல்லாததும் பொல்லாததும் சொன்னேன், எங்கேங்க உங்க தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பிட்டு எழுதியிருக்கேன்?

said...

//நான் உங்களுக்கு பிடிக்காத பதிவு ஒன்றை எழுதினால் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் நீங்கள் சொல்லலாமா? அதுதான் எனக்கு வருத்தம்.
//
புரியுது நீங்க எதை சொல்ல வர்றீங்கன்னு.... ஆனா பதிலை என்னிடம் கேட்காமல் உங்கள் மனசாட்சியிடம் கேட்கவும்....

said...

குழலி,

நீங்கள் அப்படிச் செய்தீர்கள் என்று சொல்ல வில்லை. செய்வீர்கள் என்பது என் எண்ணமும் இல்லை. அது போன்று நடந்தால் அது சரியா என்றுதான் கேட்டேன். அது போலத்தானே நடந்து இருக்கிறது இல்லையா!

said...

//புரியுது நீங்க எதை சொல்ல வர்றீங்கன்னு.... ஆனா பதிலை என்னிடம் கேட்காமல் உங்கள் மனசாட்சியிடம் கேட்கவும்....//

என் மனசாட்சிதான் தெளிவா பதில் சொல்லிடுச்சே. அப்படிச் செய்யக் கூடாது. அது தப்பு! தப்பு! தப்பு!

said...

//ராதிகாவைப் பற்றி மிக மோசமாக, அருவருக்கத்தக்க வகையில்தான் எழுதி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் ராதிகா இதைப் படித்தால் இவர் மீது அவதூறு வழக்கு கூட போட முடியும்.//

ராதிகாவின் பத்தினித்த்ன்மைக்கு அக்கறைப்படும் சமூக மனம் திருநங்கைகளுக்காக அக்கறைப்படுவது எப்போது. இ.கொ இது உங்களுக்கான கேள்வி அல்ல. பொதுவானதே.

said...

//ராதிகாவின் பத்தினித்த்ன்மைக்கு அக்கறைப்படும் சமூக மனம் திருநங்கைகளுக்காக அக்கறைப்படுவது எப்போது. இ.கொ இது உங்களுக்கான கேள்வி அல்ல. பொதுவானதே.//

விளிம்புநிலை மனிதர்கள் முன்னேற்றத்துக்கும் தனிமனிதத் தாக்குதலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை சமூகம் உணர்வதெப்போ.

முத்துக்குமரன், இது உங்களுக்கான பதில் மட்டும் அல்ல. பொதுவான அங்கலாய்ப்பே.

said...

//விளிம்புநிலை மனிதர்கள் முன்னேற்றத்துக்கும் தனிமனிதத் தாக்குதலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை சமூகம் உணர்வதெப்போ. //

இ.கொ. இங்கே விளிம்புநிலை மனிதர்களின் முன்னேற்றம் பற்றியா பேசிக்கொண்டிருக்கிறோம். விளிம்புநிலை மனிதர்களை கேவலப்படுத்தியதைப்பற்றி தானே பேசிக்கொண்டிருக்கிறோம்


தனியாக ஓரிரு கொலைகள் செய்தால் அது குற்றம்அதற்கு தூக்கு தண்டனை கூட உண்டு, ஆனால் கும்பலாக கும்பலாக நிறைய பேரை கொலைசெய்தால் அதை செய்தவனை எதிர்த்தால் தவறு அப்படித்தானே இருக்கிறது நியாயம்....

அதாவது இவர் அவர் என பெயர் சொல்லாமல் மொத்தமாக திருநங்கைகளை கேவலப்படுத்துவதை விட ராதிகா என்று பெயர் குறிப்பிட்டு அவரின் பத்தினித்தனத்தை கேள்வி கேட்பது தவறு, ஒரு வேளை கிரியேட்டிவ் ஹெட் என்று போடாமல் கிரியேட்டிவ் ஹெட்கள் என்று போட்டு ராதிகாவின் பெயர் போடாமல் இருந்திருந்தால் அது நாகரீகமாகி விட்டிருக்குமோ??

said...

எல்லோரும் சொல்லிய அதே கருத்துதான் என்னிளும் தோன்றியது.

அவர்களை கேலிச் சித்திரமாகவே காட்டும் ஊடகங்கள் எத்தனை சதவிகிதம் அவர்களை நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள்?

ஆண் என்றாலோ, பெண் என்றாலோ, வில்லன், வில்லியைத் தவிர ஹீரோ, ஹீரோக்களும் இருக்கின்றார்கள். ஆனால் திருநங்கை என்று வரும்போது மட்டும் பெரும்பாலும் வில்லியாகவோ, அல்லது ஒரு பாலியல் துறை நபராகவோ மட்டுமே காண்பிக்கின்றனர்.

இதே வித்யா திருநங்கையை நல்லவர்களாகக் காட்டிய மணிரத்னத்தைப் புகழ்ந்தார்கள்.

ஆனால், அவர்களின் கருத்து அவர்களின் சமூகத்தின் வலி, வேதனைகளால் ஏற்பட்டதாக இருந்தாலும், அதன் வெளிப்பாடு முகம் சுளிக்க வைப்பதாகவே இருக்கின்றது என்பதில் எனக்கும் ஐயமில்லை.

said...

//தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் எத்தனையோ அபத்தங்களில் இதுவும் ஒன்று எனத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். //

அதான் தீர்ப்பு சொல்லியாச்சே. கவனிக்காம நான் வேற பின்னூட்டம் போட்டட்டனோ?

said...

//இ.கொ. இங்கே விளிம்புநிலை மனிதர்களின் முன்னேற்றம் பற்றியா பேசிக்கொண்டிருக்கிறோம். விளிம்புநிலை மனிதர்களை கேவலப்படுத்தியதைப்பற்றி தானே பேசிக்கொண்டிருக்கிறோம்//

குழலி, அவர்களை வில்லிகளாய் காண்பிப்பதை நிறுத்துனால் அவர்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை. அதில் இவ்வளவு சக்தியை செலவழிக்காமல் ஆக்கபூர்வமாக படிப்பு சுயவேலைவாய்ப்பு எனப் பேசினால் உருப்படியாக எதாவது நடக்கும். அதுதான் நான் நினைப்பது.

//கிரியேட்டிவ் ஹெட்கள் என்று போட்டு ராதிகாவின் பெயர் போடாமல் இருந்திருந்தால் அது நாகரீகமாகி விட்டிருக்குமோ??//
அப்பொழுது கிரியேடிவ் ஹெட்கள் சார்பாக ஒருவர் வித்யாவைப் பெயர் குறிப்பிடாமல் தவறாக எழுதினால் உங்களுக்கு சம்மதமா? என்ன பேச்சு இது?

said...

//குழலி, அவர்களை வில்லிகளாய் காண்பிப்பதை நிறுத்துனால் அவர்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை.
//
முதலில் வில்லிகளாய் காண்பிப்பதை நிறுத்துவதிலிருந்து ஆரம்பிக்கட்டும்.... இதையே நாம் நம் சூழலில் இணைவைத்து பார்ப்போ,

திருநங்கைகள் இடத்தில் வலைப்பதிவர்கள்

அவர்களை ஆபாசமாக காண்பிக்கும் இடத்தில் போலி

இப்போ உங்கள் பதிலை நம் சூழலுக்கு எழுதினால் எப்படி இருக்கும்....

வலைப்பதிவர்களை ஆபாசமாய் போலி எழுதுவதை நிறுத்துனால் வலைப்பதிவர்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை.

இப்போ மேலே சொன்னது சரிதானா? இதைத்தான் நீங்கள் திருநங்கைகள் சூழலுக்கு சொல்லியிருக்கின்றீர்கள்

யோசிச்சி பாருங்க

டிஸ்க்கி:
என்ன செய்ய நம் மக்களுக்கு நம்முடைய சூழலிலிருந்து எடுத்து போட்டால் தான் தெரியும் போல

said...

குழலி, சும்மா பேசணும் அப்படின்னு ஒரு எண்ணத்தோட பேசற மாதிரி தெரியுது.

சினிமாவில் வில்லியா வரதும், உங்க வீட்டு பெண்களை பத்தி அசிங்கமா எழுதறதும் ஒண்ணா? ஆனா வித்யா ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்தது சரி. இல்லையா?

இப்படித்தான் உங்க விவாதம் அப்படின்னா நான் என்னன்னு சொல்லறது? :(

said...

Hi,

if one person's views are inspired by his caste background or lifestyle background ,then it is perfectly alright to criticize his caste or lifestyle.

please give honest reply.

said...

//குழலி, சும்மா பேசணும் அப்படின்னு ஒரு எண்ணத்தோட பேசற மாதிரி தெரியுது.
//
இ.கொ. முதலில் இப்படியும் அப்படியும் ஜம்படிப்பதை கொஞ்சம் நிறுத்துகின்றீரா? திருநங்கைகளை வில்லிகளாய் காண்பிப்பதை நிறுத்தினால் அவர்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை என்று நீங்கள் சொன்னதற்காகத்தான் இந்த போலி ஒப்பீட்டையே சொன்னேன், அதாவது திருநங்கைகளை வில்லியாக ஆபாசமாக காண்பிப்பதை நிறுத்தினால் அவாகளுக்கு முன்னேற்றமெதுவும் வரப்போவதில்லை என்னும்போது எனர்ஜியை இதில் ஏன் வீணாக்க வேண்டுமென்ற உங்கள் கேள்வியை அப்படியே நம் வலைப்பதிவு சூழலுக்கு ஒப்பிடுங்களேன் என்றேன்....

//சினிமாவில் வில்லியா வரதும், உங்க வீட்டு பெண்களை பத்தி அசிங்கமா எழுதறதும் ஒண்ணா?
//
நம்ம வீட்டு பொண்ணுங்களை அசிங்கமா எழுதறது நமக்கு தப்பு அதே சமயம் திருநங்கைகளை வில்லியா(வெறும் வில்லியாக மட்டும் காண்பிக்கவில்லையே)ஆபாசமா காண்பிப்பது ஒன்னும் பெரிய தவறில்லை, அதை கேட்டா ஆபாசமா திருநங்கைகளை காண்பிக்காமல் விட்டால் அவர்கள் வாழ்க்கை முன்னேறிவிடப்போகிறதா என்று ஒரு கேள்வி வேறு, நமக்கு நம்ம வீட்டு பொண்ணுங்களை ஆபாசமா எழுதுவது பெரிய தவறு, லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு அவர்களை போன்றோர்களை கேவலமாக ஆபாசமாக சித்தரிப்பது பெரிய தவறு... இதைத்தான் சொன்னேன் நம் நாகரிக கையேட்டை அவர்களிடத்தில் எடுத்துச்செல்லும் முன் அவர்களிடத்தில் நம்மை பொறுத்தி பாருங்கள் என்று.

said...

ஆக அரசியா சொன்னா தப்பில்லை. ராதிகாவா சொன்னாதான் தப்பு
அப்பதான் நீங்க கேள்வி கேப்பீங்க??.வார்த்தைகளைப் பிடித்து தொங்குவதை யாரும் நிறுத்தப்போவதில்லை போல.

சரி. ராதிகாவை விடுங்க.படைப்பாளிகள் என்னும் போர்வையில் இவர்கள் செய்வதற்கு எல்லாம் பதறாத மனம் வித்யா போன்றவர்கள் அதை விமர்சனத்திற்குள்ளாக்கும் போது எழுவது ஏன். தனி மனிதர்களை விமர்சிக்க கூடாது. ஆனால் சமூகத்தை அவர்கள் விரும்பிய வண்ணம் காண்பித்து கொள்ளலாம். அங்கு அது படைப்பு சுதந்திரம். மனித சுதந்திரங்களுக்கு இல்லாத மதிப்பு புனைவு சுதந்திரங்களுக்கு.

வித்யா கேட்டார்களே கருத்தா? கருத்தாக்கமா?. ஊடகங்கள் செய்வது எது. நேர்மையாக அணுகினால் புரியும்.

said...

நினைச்சேன் இன்னும் இந்த மாதிரி சுத்தி அடிக்கிற நிலமை வரலையேன்னு. வந்தாச்சு.

முதலாவது, நான் அவங்களை கண்டிக்கக் கூடாதுன்னா சொன்னேன். ஆனா கண்டிக்க வேண்டியதை விட்டுட்டு அதைச் செஞ்சவங்க தனிவாழ்க்கையை சாடி இருக்கறது சரியான்னு கேட்டேன்.

இரண்டாவது, வில்லியா காண்பிக்கறதை விட அவங்களுக்கு நல்லது நடக்கற மாதிரி போராடறது பெட்டர்ன்னு சொன்னேன்.

ஆனா அதைச் சுத்தி வளைச்சுப் பேசி, என் நேர்மையை சந்தேகப்பட்டு, போலியுடன் ஒப்பிட்டு, நான் ஜம்பமடிப்பதாகச் சொல்லி. சூப்பர். நடத்துங்க, நடத்துங்க. ஆக மொத்தம் கேட்ட கேள்விகள் காணாமப் போயிடுச்சு.

said...

//ஆனா அதைச் சுத்தி வளைச்சுப் பேசி, என் நேர்மையை சந்தேகப்பட்டு, போலியுடன் ஒப்பிட்டு, நான் ஜம்பமடிப்பதாகச் சொல்லி. சூப்பர். நடத்துங்க, நடத்துங்க. ஆக மொத்தம் கேட்ட கேள்விகள் காணாமப் போயிடுச்சு//

வாயா கொத்ஸ், வா! இப்படிக்கா குந்து,கையில இருக்கிற ஸோடாவக் கொஞ்சம் குடிச்சிக்கோ, இது இப்படித் தான் ஆகும்னு எங்களுக்கு அப்போவே தெரியுமே, கொஞ்ச நேரம் கும்மியடிக்கனும்னு கேட்டதுக்கு நீர் தான் விடலை, இப்போ என்னடானா அதைக் காணேம் இதைக் காணேம் அப்படீங்கிற!

// நாகை சிவா said...
இன்றைய பொழுதை மிக அருமையான ஒரு பொழுதாக தான் ஆரம்பித்து உள்ளீர்.....
//

புலிப் பாண்டி , வாத்தியாராண்ட ஜோசியம் கத்துருக்கியா, கரிக்கிட்ட சொல்லீட்ட....


ஒரு நல்ல விவாதப் பதிவு, அனைத்துப் பின்னூடங்களையும் பெறுமையாக படித்தேன், ஒரு கருத்து ஒவ்வொருவரின் பார்வையிலும் எப்படிப் பிரதிபலிக்கின்றது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது, நல்ல ஒரு விவாதப் பதிவு,நன்றி,

அன்புடன்...
சரவணன்,

said...

வாங்க சரவணன். சொன்ன வாக்கு தவறாம வந்துட்டீங்க. ஓவர் டு யூ!!

said...

தமிழ் இணையத்தில் கெட்ட வார்த்தை புழக்கம் என்பது விதைக்கப்பட்டு, தண்ணீரூற்றி, உரமிட்டு சீராட்டி, பாராட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. பதிவுகளின் மொழியாகவே இது மாறவேண்டும் என்ற குறிக்கோள் சிலருக்கு இருக்கலாம். உண்மையில் இணையத்தில் இதுவே தமிழ் என்ற நிலை வர தளர்வற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.

said...

If this same post has come from a different person, these same kuzhali and muthukumaran would be talking different things. Ask Lucky look and Senthazhal Ravi - they will tell you.

said...

//தமிழ் இணையத்தில் கெட்ட வார்த்தை புழக்கம் என்பது விதைக்கப்பட்டு, தண்ணீரூற்றி, உரமிட்டு சீராட்டி, பாராட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. பதிவுகளின் மொழியாகவே இது மாறவேண்டும் என்ற குறிக்கோள் சிலருக்கு இருக்கலாம். உண்மையில் இணையத்தில் இதுவே தமிழ் என்ற நிலை வர தளர்வற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.//

இதுவும் ஒரு பிரச்சனைதான். கருத்து நாகரிகம் தேவை என்பதில் இரு கருத்துகள் இல்லை என்கின்ற பொழுது எழுத்து நாகரிகம் மட்டும் தேவையில்லை என்பது போன்ற தோற்றம் தேவையற்றது. அதைச் சொன்னாத்தான் இப்படி ரவுண்ட் கட்டி அடி விழுது.

said...

அடேயப்பா..

டிவியில் சினிமாவில் திருநங்கையரை பெரும்பாலும் மட்டமாகத்தான் சித்தரிக்கின்றனர். உண்மைதான். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதும் அவசியம்தான். பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் அதை வித்யா அவர்கள் சொல்வது நியாயம் தான். குழுவினரின் empathy வேண்டுமென்றால் வார்த்தையில் நிதானம் வேண்டும். நேர்மை இருந்தால் மட்டும் போதாது.

ஒரு நிகழ்வை எதிர்த்து பதிவைக் கூட நிதானமாக யோசித்து எழுதமுடியாமல், தமிழிலுள்ள அனாடமிக்கல் சொற்கள் மற்றும் தகாத உறவுகள் என ரவுண்ட் கட்டி அடிப்பது எல்லாம் "Its oh so cool dude" ஹைஸ்கூல் வகையறா முதிர்ச்சி. இப்படி எழுதுவதன் மூலம் இருக்கும் ஆதரவையும் குறைத்துக்கொள்ள மட்டுமே முடியும். சொல்ல வந்த கருத்தை சொல்லாமல் அப்பன் தாத்தா என ஜாதகம் கணிப்பது பயனற்றது. சொல்லப்போனால் சொ.செ.சூனியம்.

இப்படி எழுதியது நாகரிகமற்றது என்பதுதான் இங்கே பேசப்படும் பொருள். அப்படி அமிலப்பேச்சுதான் அவர்களின் நாகரிகம், உங்கள் மேல்தட்டு நாகரிகக் கண்ணாடியைக் கொண்டு மதிப்பீடு செய்யக்கூடாது என்று வேறு ஜல்லிக்குரல்கள். எதிர்பார்த்தவைதான். பொதுவிடத்தில் relieve செய்துகொள்வது நாகரிகம் என்று கருதினால் இதுவும் நாகரிகம் தான். இதுதான் எங்கள் தராதரம், இப்படித்தான் இருப்போமென்றால் இருந்துவிட்டு போங்கள்.

ஊடகங்களில் பல சமூகங்கள் கிண்டலடிக்கப்பட்டுள்ளன. முழங்கால் தெரிய மடிசார் மாமிகள் வளையவந்து மீசை அரும்பும் பையன்களிடம் ஜொள்ளுவிடுவது, தொப்பி போட்ட பட்டாணி, நம்பள் நிம்பள் பேசும் மார்வாடி, முண்டாசு கட்டிய சர்தார்ஜி, பிகாரி பாபு, தெலுங்கர்களை கொல்டி என்பது இப்படி ஏகப்பட்ட அனாலஜிஸ் இருக்கிறது. திருநங்கையர் கிண்டலடிக்கப்படுவது அவ்வகையே.

சினிமா, டிவி போன்ற ஊடகங்களை பார்த்து தான் பெண்கள் முதற்கொண்டு அனைவரும் வாழ்க்கைப்பாடம் கற்கிறார்கள் என்றால் அது நாட்டளவில் நம் முதிர்ச்சியைத்தான் காட்டுகிறது. impulsive, dramatic, sensational but utterly immature!

said...

போன பின்னூட்டம் நண்பர் ஒருவர் தனி மடலில் அனுப்பியது. பெயர் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் பெயர் வெளியிடப் படவில்லை.

said...

சொல்ல விட்டது:

நாகரிகமாக எழுதினால் இந்துவைப் போன்ற வெகுஜன ஊடகங்களில் இடம் கிடைக்கும்..

இப்படி ஆவேசப்பட்டு எழுதினால் இதைப் போன்ற சந்துகளில் தான் சிந்து பாடிக்கொண்டிருக்க வேண்டும்.

said...

//If this same post has come from a different person, these same kuzhali and muthukumaran would be talking different things. Ask Lucky look and Senthazhal Ravi - they will tell you.//

யப்பா அனானி, எதுக்கு இதெல்லாம். ஒண்ணு வந்து பேர் போட்டு சொல்லுங்க. இல்லைன்னா ஏற்கனவே நம்ம நேர்மையை சந்தேகப் படறாங்க.... :)

said...

தனி மடலில் அனுப்பிய நண்பருக்கு. நீங்க சொன்னதுல பல விஷயங்கள் நான் சொன்னதுதான். ஆனா பாருங்க. ஆக்கபூர்வமா எதாவது செய்யணமுன்னு நான் சொன்னதுக்குத்தான் சத்தமே இல்லை.

said...

//நாகரிகமாக எழுதினால் இந்துவைப் போன்ற வெகுஜன ஊடகங்களில் இடம் கிடைக்கும்..//

யப்பா சாமி, அதுல எழுதினா பெரிய ஆளா, இதுல எழுதினா சின்ன ஆளா அப்படின்னு ஆரம்பிச்சு கஸ்தூரி ஐயங்கார் ஜாதகம் கிழியும். வேண்டாம் சாமி விட்டுடுங்க.

said...

கொத்தனார்,

நல்ல பதிவு மற்றும் விவாதங்கள்.

நீங்கள் பதிவில் சொன்னதை சுருக்கமாக ஜிரா சொல்லிவிட்டார்.

இதுவரை வந்துள்ள பின்னூட்டம் எதிலுமே வித்யாவின் கோபம் தவறு என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. என் கருத்தும் அஃதே. கோபம் சரி, மிகச்சரி, ராதிகாவும் கௌதமும் யோசிக்கத்தெரியாத சினிமா டிவி கும்பல்களும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. சமூகத்தின் ஒரு பகுதியை, தன்னளவில் எந்தத் தவறும் செய்யாத ஒரு பிரிவை இழித்துக்கூறி வயிறு வளர்க்க ஆசைப்படும் எவரையும் பசித்த புலி தின்னட்டும்.

ஆனால், உங்கள் கேள்வி வித்யாவின் பதிவு பற்றி மட்டுமே அல்லவே! அந்தக்கேள்விக்கு - எதை எதிர்ப்பது கருத்தையா கருத்துக்கூறியவரையா - என்ற சிம்பிள் கேள்விக்கு விவாதப்பின்னூட்டங்கள் மிகச் சொற்பமாயே வந்திருக்கின்றன.

வார்த்தைப் பிரயோகங்கள் அவரவர் கோப அளவையும் வளர்ந்த சூழ்நிலையையும் பொறுத்தது. சென்னைத் தெருவில் ..தா என்னும் சிறுவனுக்கு அந்த வார்த்தையின் அர்த்தங்களும் விபரீதங்களும் புரிந்துதானா சொல்கின்றான்? அதைவிட படித்த நாகரீகம் தெரிந்த ஒருவர் இழிபிறவி என்று சொல்வதன் தாக்கம் அதிகம்தான் -- இந்த கருத்தில் குழலியுடன் நான் முழுவதும் ஒத்துப்போகிறேன்.

அதே நேரத்தில், பொன்ஸ் உல்டாவாகக் குறிப்பிட்டுள்ளதுபோல, பொதுமைப்படுத்தல் செய்த ராதிகாவைக் கண்டிக்க இன்னொரு பொதுமைப்படுத்தலை எடுத்தது தவறே கிடையாதா? அல்லது கௌதமைத் திட்ட அவருடைய தாயாரைத் திட்டுவதும் சரியா? இந்தக் கேள்விகள் கேட்கவந்தவர்களை -- நீ அங்கே கண்டித்தாயா-- போன்ற கேள்விகள் காயப்படுத்தாதா?

இவைதான் என் கேள்விகள்.

பொதுவாக பதிவிலும், பின்னூட்டங்களிலும் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

said...

//Anonymous said...
If this same post has come from a different person, these same kuzhali and muthukumaran would be talking different things. Ask Lucky look and Senthazhal Ravi - they will tell you.
//
லக்கி மற்றும் செந்தழல் பதிவுகளை பார்க்கவும், அங்கேயே என் எதிர்ப்புகளை சொல்லியிருப்பேன்...

said...

வித்யாவின் இயக்குனர் கவுதம் குறித்த முந்தைய பதிவொன்றின் போது நான் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். உணர்ச்சிவசப்பட்டு அதற்கான எதிர்வினையையும் உடனே வைத்தேன். இப்போது இ.கொ. செய்திருப்பதைப் போல.

அதன் பின்னர் எனக்கு வந்த கண்டனங்களும், தோழர் இராம் போன்றவர்களின் நட்புரீதியான அறிவுறுத்தல்களும் பிரச்சினையின் இன்னொரு பரிமாணத்தின் தீவிரத்தை சரியாகப் புரியவைத்தது. வித்யாவுடனும் தொலைபேசியில் அப்பிரச்சினைக்கு பிறகு பேச நேர்ந்தது.

என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு ஹேராம் படத்தில் வரும் வசனத்தை மட்டுமே சொல்லமுடியும்

"ஓநாயாக இருந்து பார்த்தால் தான் ஓநாய் தரப்பின் நியாயத்தை உணர முடியும்"

said...

//தமிழ் இணையத்தில் கெட்ட வார்த்தை புழக்கம் என்பது விதைக்கப்பட்டு, தண்ணீரூற்றி, உரமிட்டு சீராட்டி, பாராட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. பதிவுகளின் மொழியாகவே இது மாறவேண்டும் என்ற குறிக்கோள் சிலருக்கு இருக்கலாம். உண்மையில் இணையத்தில் இதுவே தமிழ் என்ற நிலை வர தளர்வற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.//
ஆமாம். நீண்ட நாட்களாக உறங்கிக் கிடந்த உண்மைகள் வெளிவரத்துவங்கியிருக்கிறது. இழிபிறவி என்று சொன்ன இடங்களில் மெளனமாய் ரசித்தவர்கள் எல்லாம் அந்த சிலரில் ஒருவரா ஓகை??. கெட்ட வார்த்தைகள் எதுவென நிர்ணயிப்பது யாரோ??இணைய தாசில்தார் வேலை பார்ப்பவர்கள் அட்டவணை வெளியிட்டால் பதிவுலகிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

//எழுத்து நாகரிகம் மட்டும் தேவையில்லை என்பது போன்ற தோற்றம் தேவையற்றது. அதைச் சொன்னாத்தான் இப்படி ரவுண்ட் கட்டி அடி விழுது.//

எழுத்து நாகரிகம் தேவையில்லை என்று யாரும் சொல்லவில்லை. உங்கள் நாகரீக அளவுகோல்களின்படிதான் பாதிக்கப்பட்டவன் பேசவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்தான் என்பதுதான் சொல்லபடுவது. இதில் வட்டம் கட்டுதல் கட்டம் கட்டுதல் நடைபெறூகிறது என்று சொல்வதெல்லாம் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது.

said...

கொத்ஸ்,

அதான் 66 பின்னூட்டு வாங்கி முகப்பில் இருந்து பின்னால வந்தாச்சே! இனி கும்மி அடிக்கலாம்தானே?

//ஹரிஹரனின் நண்பர்: என்னடா ஷேவ் பண்ணும்போது மூஞ்சில வெட்டிகிட்டியா?

ஹரிஹரன்: இது ஆங்கிலேயர் சூழ்ச்சி என நினைக்கிறேன். ஷேவ் செய்யும் பழக்கத்தை அவர்கள்தான் உண்டாக்கினர்.//

யாருய்யா இந்த Gillette ஜெண்டில்மேன்? கலிங்கத்துப்பரணி படிச்சதில்லையா? அதிலே தலைமயிர் மழிக்க கூரான முள் இலை பயன்படுத்தினார்கள் எனும் குறிப்பு இருக்கிறது.

கலிங்கத்துப்பரணி காலத்திலேயே பயோ-ஆர்கானிக்-ஷேவிங் இந்தியர்களின் பாரம்பரியம் ஐயா! வெள்ளைக்காரன் அல்ல!

said...

இலவசம், என்னோட ஒரு கமெண்டு காணலையே? மாடரேஷன்ல இருக்கான்னு பாருங்க

said...

கொத்ஸ்,

உங்கள் பதிவுடனுன் நீங்கள் சொல்லும் கருத்துக்களுடனும் உடன்படுகிறேன்.திருநங்கைகளை இப்படி சித்தரிப்பதை தவிர்த்து அவர்களை நல்லபடியாக சித்தரிக்கும் திரைப்படங்களை எடுக்கவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

ராதிகாவோ, கவுதமோ தவறாக படம் எடுத்ததை கண்டித்து வழக்குபோடலாம்.அதை லிவின்க் ஸ்மைல் செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.அதற்கு என் ஆதரவு உண்டு.ஆனால் "உன் அம்மா விபச்சாரி" "உன் மனைவியை 10 பேர் கற்பழிக்க வேண்டும்" "நீ பத்தினியா" என்றெல்லாம் எழுதுவது முத்துகுமரன் சொல்வது போல் "இலவச கொத்தனாரின் நியாய அளவுகோல்" படி மட்டும் தவறல்ல.சட்டப்படியே இது தவறான வார்த்தை பிரயோகம்.

பெண்களின் உரிமை பற்றி வாய்கிழிய பேசுவோர் இந்த வார்த்தை பிரயோகங்களை ஆதரிப்பது எந்த விதத்திலும் நியாயமாக தெரியவில்லை.குறிப்பாக இன்னொருத்தன் மனைவியை கற்பழிக்க சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் எப்போதும் கிடையாது.அது எப்படி பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி.'நீ பத்தினியா" என்ர கேள்வியையும் எந்த பெண்னையும் பார்த்து கேட்கும் உரிமையும் யாருக்கும் கிடையாது(சட்டப்படி, நியாயப்படி)

லிவிங்ஸ்மைல் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் பிரதிநிதியாக நம் அனைவருக்கும் தெரிகிறார். இவரைபோல் படித்து நல்ல நிலையில் இருக்கும் இந்த சமூகபிரதிநிதிகள், அந்த சமூகத்தின் குரலாக மக்களுக்கு அறிமுகமாகிரவர்கள் கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு சாமான்யனான எனது எதிர்பார்ப்பு.

said...

// Anonymous said...
ராகவன், நான் முகம் காண்பித்து எழுதாதையும் தாக்குவீர்கள் என நினைத்தேன்...ஹாஹஹா...நன்றி //

:-)நண்பரே...நீங்கள் முகம் காட்டி எழுதியிருந்தாலும்....இதேதான். :-))) ஆனால் முகத்தை காட்டவில்லை என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் ;-)

// பல பஸ்டாண்டுகளிலும், இருளான பகுதிகளிலும் இன்னும் பல ஆண்கள் இவர்களால் சங்கடங்களுக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடைகளில் தின வசூல், மற்றும் வம்படியாக நெளிய வைத்து காசு பிடுங்குதல் மும்பை போன்ற இடங்களில் நடக்காததா என்ன?. சினிமாவிலோ அல்லது டிவியிலோ இல்லாததை ஒன்றும் காண்பிக்கவில்லையே.. //

உண்மைதாங்க. மறுக்க முடியாத உண்மை. ஆனால் ஏன்? ஒரு வேலைக்கு அவர்களால் போக முடியுமா? அந்த நிலைக்கு வருவதற்கு லிவிங் ஸ்மைல் வித்யா பட்ட கஷ்டங்களைத்தான் சொன்னாரே. அட...அவர்களால் பள்ளிக்கூடங்களில் மற்றவர்களோடு சேர்ந்து படிக்கத்தான் முடியுமா? படிக்க விட மாட்டீர்கள்! வேலைக்குப் போக விட மாட்டீர்கள்! ரேஷன்கார்டு தர மாட்டீர்கள்! பாஸ்போர்ட் கிடையாது! பெண் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள்! அட என்னதானய்யா செய்வது? பசி அவர்களுக்கும் வரும். ஒரு அரவாணி அரவாணியாகவே மற்றவர்களோடு பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று படித்து பட்டம் வாங்கி வேலைக்கும் செல்வதை இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டு...அதை நாட்டில் நிகழ்த்திக்காட்டி விட்டு...இத்தனை இருந்தும் இப்படிச் செய்கிறாயே என்று கேளுங்கள். நானும் உங்களோடு வருகிறேன். அதை விட்டு விட்டு...

// மற்றபடி சாதி வழக்கங்களையும், ஆண்-பெண் வில்லன் - வில்லித்தனங்களையும் நாம் (என்ன சாதியானலும், நாம் வில்லன்/வில்லியாக இல்லாவிடினும்) டிவி, சினிமாவில் ஏற்றுக்கொள்ளும் போது திருநங்கைகள் ஏன் அவர்களது சக திருநங்கைகளது செய்கைகளை ஏற்காது தனிமனித தாக்குதல்?.....இதனைப் பார்க்கும் போது கருத்தை விட விளம்பரம் அதிகமாக தெரிகிறது, மற்றும் வக்ரம் வெளிவருகிறது...அஷ்டே. //

திருநங்கைகளைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளாமல் விலக்கி வைத்திருக்கும் பண்பாட்டில் சிறந்த ஒரு சமுதாயம்......விமர்சனம் செய்யும் அருகதையை இழந்து விட்டது. அஷ்டே! அர்த்தாயித்தா!

said...

சம்பந்தப்பட்ட எல்லா பதிவுகளும் பின்னூட்டங்களும் படிச்சேன்...

உஷா அவர்கள் சொன்ன இதோட ஒத்துக்கறேன்:
//வித்யா உபயோகித்த வார்த்தை பிரயோகங்கள் மிக மிக அதிகம்தான். ஆனால் சொல்லப்பட்டவர்களின்
வேதனைகளை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்//

வித்யா, சகோதரி, உங்கள் வலி மிகப் பெரிய வலி. நான் இப்படி சொல்வது வெற்று வார்த்தைகள் இல்லை, உண்மையான நேசத்தோடு சொல்வது.

ஆனால், சொல்லும் முறையில் சொல்ல வந்த உண்மை காணாமல் போகக் கூடாது. ஜி.ரா. சொல்வது: //நீங்கள் சொன்ன கருத்தை விட்டு விட்டு சொல்லிய விதத்தை எவ்வளவு எளிதாக தாக்க முடிகிறது//. பொதுவில் சொல்லும் சொற்கள் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால் காலம் காலமாய் நிற்கும். நீங்கள் பயன்படுத்திய சொற்களுக்காக, அவதூறு வழக்கு என்று கூடப் போகலாம்:-((

பலரும் உங்களை அறிவர். உங்களுக்கு அழகு தமிழும் பழகு;-) தமிழும் இயல்பாய் கைவருகிறது. அருமையாக உங்கள் எண்ணங்களை சொல்லத் தெரிகிறது. திருநங்கைகளுக்கான பந்தம் உங்கள் கையில். கை சுடாமல், சுடர் ஏற்றுங்கள். உங்களுக்கான ஊடக reachஐ சரியாக பயன் படுத்த வேண்டும். சொல்லில் கவனம் என்பது எல்லோரையுமே வாழ்வில் ஜொலிக்க வைக்கும்.

என் (& என் போன்ற நண்பர்களின்) ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

உங்கள் சகோதரி.