Sunday, March 18, 2007

சடுதியில் சாம்பார் சாதம்!!

இந்த பதிவு நம்ம வெட்டிப் பயலுக்கு சமர்ப்பணம்! நம்ம முந்தைய சமையல் குறிப்பைப் பாராட்டினது மட்டும் இல்லாமல் அடிக்கடி பண்ணி சாப்பிடறோம் அப்படின்னு வேற சொல்லி நம்ம மனசைத் தொட்டுட்டாரு. அதனால நம்மளோட இந்த சமையல் குறிப்பு அவருக்காகவே!

அதாவது ரொம்ப வேலை இல்லாம சாம்பார் சாதம் செஞ்சு சாப்பிடுவது எப்படின்னு பார்க்கலாம். சாம்பார் பொடி எல்லாம் இல்லாம, சீக்கிரமா ஆனா சுவையா சாம்பார் சாதம் செய்ய ஒரு குறிப்பு இது. முதலில் என்னென்ன சாமான் வேணும் அப்படின்னு பார்க்கலாமா?

குக்கரில் வைக்க
அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பொடி
பெருங்காயம்

பொடி செய்து கொள்ள
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பழம் - 4
மிளகு - 10
கசகசா - 1 தேக்கரண்டி

காய்கறிகள்
வெங்காயம் - பெரிதாக 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
கத்திரிக்காய் - சிறிதாக 2
காரட் - பெரிதாக 1
உருளைக்கிழங்கு - பெரிதாக 2

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை
கொத்து மல்லி

தாளிக்க
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)

எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.

 1. முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.
 2. பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணை விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.
 3. காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
 4. புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.
 5. குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.
 6. அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்
 7. வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.
 8. காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
 9. பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 10. சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.
 11. நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.
 12. சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.
இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் செய்து சாப்பிட்டு விட்டு, அதற்குப் பின் டீவி, தமிழ்மணம் என அலையாமல் ஒரு தூக்கம் போட்டால் சுகானுபவம்தான். செஞ்சு பார்த்திட்டுச் சொல்லுங்களேன். நீங்க எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா இதையும் பரோட்டா பதிவை விக்கியில் போட்டா மாதிரி இதையும் போட்டுடலாம்.

40 comments:

said...

வழக்கம் போல போணி நம்மளுதுதான்! :))

said...

சமையல் துறை புது ரூமெட்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால், சீக்கிரம் முயற்சி செய்து பார்க்க முடியாத நிலை...

செய்து பார்த்துவிட்டு அவசியம் சொல்கிறேன் :-)

said...

சாம்பார் தனியா வெச்சு, சாதம் தனியா வெச்சு ரெண்டையும் கலந்து சாப்பிடற சுகமே தனிதான்!

இருந்தாலும் இதையும் ட்ரை பண்ணிப் பார்த்துட்டுச் சொல்றேன்!!
:))

said...

எனக்கென்னவோ "கொத்ஸ்" தான் ஈசியாக இருக்கும் என்று தோனுகிறது.ஏனென்றால் இப்போது தான் படித்தேன்.அதில் 280 க்கு பின்னூட்டம் இருப்பதால்,இங்கு போடுகிறேன்.:-))

said...

வீட்டுக்காரருக்கு இந்த ரெசிபியை அனுப்பியிருக்கிறேன். சமைத்ததும் சாப்பிட்டுப்பார்த்து சொல்லுகிறேன். அது சரி. இது துளசி டீச்சரோட பிரியாணிக்கு போட்டி மாதிரி இருக்கே

said...

பிஸிபேளா பாத் ரெஸிபின்னு வச்சுக்குங்க:-))))

பிஸியான நேரத்துக்குக் கை கொடுக்கும்.

said...

சில சந்தேகங்கள்... (கோச்சுக்க கூடாது. உங்கள் பதிவுக்கு வந்தாலே என்னமோ இப்படி சந்தேகமெல்லாம் தோனுது. மன்னிச்சுக்குங்க குரு. எல்லாம் உங்க பாடம்தான்)

//பொடி செய்து கொள்ள
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி//

என்ன விளையாடறீங்களா... எண்ணிப் பார்த்தா 6 தேக்கரண்டி வருது. அத்தனையும் எந்த மிக்ஸியில பொடி செய்யறதுன்னேன். பிளேடு எல்லாம் நெளிஞ்சு போயிடாது...

// அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்//

இத்துனூன்டு கடுகு-ல எங்கங்க திரி தேடி, பத்த வச்சு, வெடிக்க வைக்கறது... ஏதாவது ஆவற காரியமா சொல்லக் கூடாது!

//பொடி செய்து வைத்துள்ள பொடியைப்//

அதெப்படி பொடியை பொடி செய்யறது? எவ்வள்வு யோசிச்சாலும் இந்த பொடி மூளையில ஒரு பொடி ஐடியாவும் தோண மாட்டேங்குது...

//தேவையான அளவு தண்ணீர்//
//தேவையான அளவு உப்பு//

இந்த தேவையான அளவுக்கு ஒரு அளவு தேவை ப்ளீஸ்.

சரி அப்படியே சைட் டிஷ்ஷா தயிர் வெங்காயம், உருளைக்கிழங்கு பொடிமாஸ் மாதிரி எதையாவது போட்டு தாக்கலாம் இல்ல...

முக்கியமாக மீன் கொத்தி பத்தின 'பின் குறிப்பை' காணலையே... அதை வச்சு ஒரு 'அம்பது' அடிச்சிருக்கலாமே...

said...

//பிஸிபேளா பாத் ரெஸிபின்னு வச்சுக்குங்க:-))))//

ஆமாம்! இது கிட்டதட்ட அப்டீதான் இருக்கும்.

said...

நமக்கு சமையல் எல்லாம் தெரியாது. என் மனைவியைப் படிக்கச் சொன்னேன். கிட்டத்தட்ட பிஸிபேளா பாத் செய்யற மாதிரி இருக்கு இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பார்க்கறேன்னு சொன்னாங்க.

said...

First time visting a blog of urs that too a cooking blog hmmm...
[:-)]Great that men always better in everything, even blogging about cooking [;-)]

said...

Oh....It is not a blog about cooking...hmmmm...I persumed like that after seeing ur latest post
[:-D]...Well..the other posts are good too...

said...

மனசு விட்டுச் சொல்றேன். எனக்குக் கண்ணுல தண்ணி வருது. அவசரமா ஆப்பீஸ் வேலையா ஐதராபாத்துல இருக்கேன். வெயிலோ வெயில். அத்தோட..எதையும் வாயில வெக்க முடியல....அவ்வளவு ஒறைப்பு. மிளகாய்ச் சாந்துக்குச் சட்டினீன்னு பேரு. எவ்வளவு நாளைக்குத்தான் பிரியாணியச் சாப்பிட முடியும். பிரியாணி வெறுப்பே வந்துரும் போல இருக்கு. :-( இப்பிடி இருக்குறப்ப...இப்பிடிப் பதிவெல்லாம் நாயமா? சொல்லுங்க கொத்ஸ். நாயமா?

said...

http://ta.wikibooks.org/wiki/சமையல்

உங்க பதிவ இங்க வெட்டி ஒட்டிட்டீங்கன்னா புண்ணியமாப்போகும்

said...

//சமையல் துறை புது ரூமெட்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால்,//

ஏங்க வெட்டி, அது ரூம் மேட்டா ரூம் மேட்டியா? அவங்களோட தெலுகுலதானே மாட்லாடறது? :)))

said...

//சாம்பார் தனியா வெச்சு, சாதம் தனியா வெச்சு ரெண்டையும் கலந்து சாப்பிடற சுகமே தனிதான்!/

இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிடலாம். சாம்பாரில் முக்கி முழுகடித்தும் சாப்பிடலாம். ஆனா ருசி வேற வேற இல்லையா?! சும்மா ட்ரைப் பண்ணிப் பாருங்கப்பா.

said...

koths!!
naan oru yosanai solren.. thappa ninaichukaatheenga.. please...
oru cookerla ennai vittu vengayam vathaki.. adula indha kaikari, rice, parupu ellam potu aduliye antha podi appuram uppu , manjalpodi ellam potu cookerla konjam kooda thanni vitu vachi irakalame.. puli mathram thaniya kothika vechi cooker thorantha vudane adula vitta nalla sambar sadam ready...

said...

Hi,
Please visit http://yosinga.blogspot.com/2007/03/blog-post_20.html

I've tagged you

said...

//எனக்கென்னவோ "கொத்ஸ்" தான் ஈசியாக இருக்கும் என்று தோனுகிறது.//

கட்டாயம் அது ஈசிதாங்க. ஆனா அதுல ரெடிமேட் ஐட்டம் ஜாஸ்தி, இது பாருங்க, உங்க கைப்பக்குவத்தைக் காட்ட சரியான வழி!!

//ஏனென்றால் இப்போது தான் படித்தேன்.அதில் 280 க்கு பின்னூட்டம் இருப்பதால்,இங்கு போடுகிறேன்.:-))//

நல்ல வேலை. இந்த மாதிரி 30 வாங்காத பதிவா பார்த்து பின்னூட்டம் போட்டுக்கிட்டே வாங்க! :))

said...

//வீட்டுக்காரருக்கு இந்த ரெசிபியை அனுப்பியிருக்கிறேன். சமைத்ததும் சாப்பிட்டுப்பார்த்து சொல்லுகிறேன். //

சொல்லுங்க சொல்லுங்க. ஐயாம் தி வெயிட்டிங். அவரு நல்லாச் செய்வாருன்னு நம்பிக்கை இருக்கு. எதுனா டவுட்டுன்னா நம்மளாண்ட கேட்கச் சொல்லுங்க.

//அது சரி. இது துளசி டீச்சரோட பிரியாணிக்கு போட்டி மாதிரி இருக்கே//

அடடா. குடும்பத்தில் குழப்பத்தை 'உண்டு' பண்ணிடுவீங்க போல இருக்கே!! அதுக்காக டெய்லி பிரியாணியா சாப்பிட முடியும்? (வேணா ஜிராவைக் கேட்டுப் பாருங்க!) ஒரு சேஞ்சுக்குத்தாங்க. :)

said...

//பிஸிபேளா பாத் ரெஸிபின்னு வச்சுக்குங்க:-))))//

டீச்சர், பிஸிபேளா வேற சாம்பார் சாதம் வேறையா??

//பிஸியான நேரத்துக்குக் கை கொடுக்கும்.//

அதுவும் அந்த பொடியை முதல் தடவையே கொஞ்சம் ஜாஸ்தி பண்ணி வெச்சுக்கிட்டா ரொம்பவே சீக்கிரம் செய்யலாம். ஆனா அப்பப்போ செஞ்சா தனி வசனைதான்.

said...

வாய்யா ஸ்ரீதர் வெங்கட்டு, உம்மைத்தான் காணுமேன்னு பார்த்தேன். உமக்கு இத்தனை சந்தேகமா. சரி பதில் சொல்லிட்டாப் போச்சு.

//என்ன விளையாடறீங்களா... எண்ணிப் பார்த்தா 6 தேக்கரண்டி வருது. அத்தனையும் எந்த மிக்ஸியில பொடி செய்யறதுன்னேன். பிளேடு எல்லாம் நெளிஞ்சு போயிடாது...//

மத்தவங்க எழுதுன சமையல் குறிப்புகள் எல்லாம் படிச்சப்போ இப்படித்தான் இருந்த்துச்சு. நான் என்னமோ அதையெல்லாம் எடுத்து செஞ்ச பாத்திரத்தை எல்லாம் கழுவி வைக்கறேன் என்பதையே கவுண்டர் / பிரகாஷ்ராஜ் (உனக்கு வெக்கரண்டி ஆப்பு) வழியில் தே(ய்)கரண்டி அப்படின்னு சொல்லுவதாக அல்லவா நினைச்சேன்!

//இத்துனூன்டு கடுகு-ல எங்கங்க திரி தேடி, பத்த வச்சு, வெடிக்க வைக்கறது... ஏதாவது ஆவற காரியமா சொல்லக் கூடாது!//

விஷயம் தெரியாம இருக்கியே நைனா. அதுக்கெல்லாம் ரிமோட் வந்தாச்சு. உம்மை பின்லாடன் கிட்டதான் அனுப்பணும்.

//அதெப்படி பொடியை பொடி செய்யறது? எவ்வள்வு யோசிச்சாலும் இந்த பொடி மூளையில ஒரு பொடி ஐடியாவும் தோண மாட்டேங்குது...//

நான் எங்கய்யா பொடியை பொடி செய்து வெக்கச் சொன்னேன். நம்ம வீட்டில் மிக்ஸியை ஆன் ஆப் பண்ணறது ஜூனியர் வேலை. அந்த ஞாபகத்தில் பொடி செய்த பொடியை அப்படின்னு எழுதிட்டேன். ஓக்கேவா?

//இந்த தேவையான அளவுக்கு ஒரு அளவு தேவை ப்ளீஸ்.//

எந்த தேவையுமே ஒரு அளவோட இருக்கணும். இதைத்தான் பெரியவங்க விரலுக்கேத்த வீக்கம் அப்படின்னு சொல்லி இருக்காங்க. என்ன தண்ணியாகட்டும் உப்பாகட்டும் கிட்னியோட சம்பந்தப்பட்ட மேட்டர். இங்க அளவு ஜாஸ்தியா போச்சுன்னா விரல் இல்லை வயிறுதான் வீங்கும்.

//சரி அப்படியே சைட் டிஷ்ஷா தயிர் வெங்காயம், உருளைக்கிழங்கு பொடிமாஸ் மாதிரி எதையாவது போட்டு தாக்கலாம் இல்ல... //
ஆமாம் கொஞ்சம் லூஸா ஒரு ரைய்த்தா, கொஞ்சம் கெட்டியா உருளைக்கிழங்கு ரோஸ்ட், மொறுமொறுவென சிப்ஸ், புளிப்பா ஒரு ஊறுகாய். நல்ல வகையாத்தான் சாப்புடறீங்கப்பா.

//முக்கியமாக மீன் கொத்தி பத்தின 'பின் குறிப்பை' காணலையே... அதை வச்சு ஒரு 'அம்பது' அடிச்சிருக்கலாமே...//

மீன் கொத்தி பத்திச் சொல்லலையேன்னு ஒரு 25 பேர் கேட்டா பதில் சொல்லி 50 அடிக்கலாமேன்னு ஒரு ஆசைதான்.

இது சொன்னதுக்கே வந்து - வோட்டு போட்டுட்டு போயிருக்காங்க நீங்க வேற. ஆமா இதுல என்னத்தையா கண்டாங்க - வோட்டு போட, நம்ம ஜனங்களை புரிஞ்சுக்கவே முடியலையே! :((

said...

//ஆமாம்! இது கிட்டதட்ட அப்டீதான் இருக்கும்.//

யோவ் அபிஅப்பா, என்ன ஆமாம் பாட்டு பாடறீரு? அதுதானே இது. அவிங்க பாசையில பேரு சொன்னா இங்க கோபம் வருதேன்னு தமிழில் சொன்னா இது கிட்டத்தட்ட அதுதான்னு வந்து சொல்லறீரு.

சார்லி சாப்ளின் மாதிரி வேஷம் கட்டறவங்க போட்டிக்கு ஒரு தபா அவுரே போனாராம். ஆனா பாருங்க அவருக்கு மூணாவது பரிசுதான் கிடைச்சுதாம். அந்த கதைதான் ஞாபகத்துக்கு வருது.

said...

//நமக்கு சமையல் எல்லாம் தெரியாது. என் மனைவியைப் படிக்கச் சொன்னேன். கிட்டத்தட்ட பிஸிபேளா பாத் செய்யற மாதிரி இருக்கு இருந்தாலும் இந்த மாதிரி செஞ்சு பார்க்கறேன்னு சொன்னாங்க.//

குடுத்து வெச்சவருய்யா நீர். மேல சின்ன அம்மிணியைப் பார்த்தீங்க இல்ல! :))

said...

//First time visting a blog of urs that too a cooking blog hmmm...
[:-)]//

Pree,

தங்கள் வருகைக்கு நன்றி. விரைவில் தாங்கள் தமிழில் பின்னூட்டும் நாளை எதிர்பார்க்கிறேன்.

//Great that men always better in everything, even blogging about cooking [;-)]//

என்னைப் பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி எல்லாம் சொல்லிட்டுப் போனீங்கன்னா எனக்கு தர்ம அடி விழும். அப்படி ஒரு ஆசையா? :))

said...

//Oh....It is not a blog about cooking...hmmmm...I persumed like that after seeing ur latest post
[:-D]...Well..the other posts are good too...//

இங்க எல்லா விதமான சரக்கும் கிடைக்கும். எல்லாம் இலவசம்தான். அடிக்கடி வாங்க. பாராட்டுக்கு நன்றி.

said...

//மனசு விட்டுச் சொல்றேன். எனக்குக் கண்ணுல தண்ணி வருது. அவசரமா ஆப்பீஸ் வேலையா ஐதராபாத்துல இருக்கேன். வெயிலோ வெயில். அத்தோட..எதையும் வாயில வெக்க முடியல....அவ்வளவு ஒறைப்பு. மிளகாய்ச் சாந்துக்குச் சட்டினீன்னு பேரு. எவ்வளவு நாளைக்குத்தான் பிரியாணியச் சாப்பிட முடியும். பிரியாணி வெறுப்பே வந்துரும் போல இருக்கு. :-( இப்பிடி இருக்குறப்ப...இப்பிடிப் பதிவெல்லாம் நாயமா? சொல்லுங்க கொத்ஸ். நாயமா?//

கண்ணுல தண்ணி காரத்துனால வருதா அல்லது அழுகாச்சியா? மயிலார் தப்பா நினைச்சு நம்மளை கொத்திடப் போறார். உங்களுக்கு இந்தியாவிலேயே இம்புட்டு கஷ்டமா? ஒரு இட்லி தோசை கூடவா கிடைக்கலை? அடப்பாவமே.

said...

//Anonymous said...

http://ta.wikibooks.org/wiki/சமையல்

உங்க பதிவ இங்க வெட்டி ஒட்டிட்டீங்கன்னா புண்ணியமாப்போகும்
//

அதுக்கெல்லாம் ஒரு தராதரம் வேண்டாமா? நம்ம பதிவை போடலாங்கறீங்க? சரி. முயற்சி பண்ணறேன். நன்றி.

said...

//koths!!
naan oru yosanai solren.. thappa ninaichukaatheenga.. please...
oru cookerla ennai vittu vengayam vathaki.. adula indha kaikari, rice, parupu ellam potu aduliye antha podi appuram uppu , manjalpodi ellam potu cookerla konjam kooda thanni vitu vachi irakalame.. puli mathram thaniya kothika vechi cooker thorantha vudane adula vitta nalla sambar sadam ready...//

டுபுக்கு சிஷ்யை, எனக்குக் கோபம் கோபமா வருது. சொல்லிச் சொல்லி தமிழில் எழுத ஆரம்பிச்சீங்க. இது என்ன வேதாளம் திரும்ப முருங்கைமரம் ஏறினா மாதிரி தங்கலீஷ்?

அதுல பாருங்க. அந்த காய்கறி எல்லாம் குக்கரில் வெச்சா குழைஞ்சு போயிடும். கொஞ்சம் நறுக்குன்னு இருந்தாத்தான் டேஸ்டே. ஆனா அர்ஜெண்டா செய்யணமுன்னா அது கூட ஓக்கேதான்.

said...

//Hi,
Please visit http://yosinga.blogspot.com/2007/03/blog-post_20.html

I've tagged you//

யோசிப்பவரே, வெறும் அஞ்சு சொல்லச் சொன்னா எப்படி? இருக்கட்டும் வரேன். டாக்கியதற்கு நன்றி. :)

said...

ஹை... புது ஐட்டம். try பண்ணி பாக்கறேன். வைர மோதிரம் கிடைச்சா எனக்கு... வேற எதாவது கிடைச்சா உங்களுக்கு... டீல் ஓகேவா???

said...

நல்லாதான் சமாளிக்கறீங்கப்பு... எப்படி இதெல்லாம்... தானா வர்றதா அப்படியே?

//ஆமா இதுல என்னத்தையா கண்டாங்க - வோட்டு போட//

அதுதான் புரியல! வேணா அடுத்த பதிவா 'வேகமாக வெங்காய பக்கோடா' போட்டு பாருங்களேன். ஒருவேளை ஓட்டு மாறி விழலாம். ஹி..ஹி...

said...

இம்சை அரசி, இம்சைப் படுத்தறது அப்படின்னு முடிவு பண்ணியாச்சி. அப்புறம் என்ன, அடிச்சி ஆடுங்க.

said...

//நல்லாதான் சமாளிக்கறீங்கப்பு... எப்படி இதெல்லாம்... தானா வர்றதா அப்படியே?//

அதுக்கெல்லாம் ஞானம் வேணுமுன்னா, அது யாரு ஞானம் பக்கத்து வீடான்னு கலாய்ப்பீங்க. என்னத்த சொல்லறது. அவ்வ்வ்வ் ...

//வேணா அடுத்த பதிவா 'வேகமாக வெங்காய பக்கோடா' போட்டு பாருங்களேன்.//

பார்க்கலையா? அதுவும் போட்டாச்சு. சேம் ரிஸல்ட்!

said...

// இலவசக்கொத்தனார் said...
கண்ணுல தண்ணி காரத்துனால வருதா அல்லது அழுகாச்சியா? மயிலார் தப்பா நினைச்சு நம்மளை கொத்திடப் போறார். உங்களுக்கு இந்தியாவிலேயே இம்புட்டு கஷ்டமா? ஒரு இட்லி தோசை கூடவா கிடைக்கலை? அடப்பாவமே. //

இட்லி தோசையா! இப்பிடி வயித்தெரிச்சல கெளப்பாதீரும். அரைச்சு இட்லி தோசை சுடுறது நம்ம வழக்கம். கரைச்சுச் சுடுறது இங்கப் பழக்கம். :-( ஒரு நல்ல சைவ ஓட்டல்ல போய் இட்லி சாப்டேன். நெய்யில ஊறுன இட்லி தலையில அண்டா வெண்ணையக் கொட்டித் தந்தாங்க. நான் என்ன செய்வேன்?

said...

ரெண்டு மாசத்துக்கு முன்ன சொல்லியிருந்தா ரூம்மேட்டை செஞ்சு தர சொல்லி சாப்பிட்டிருப்பேன் :)))

said...

இலவசம்!!
மன்னிச்சிக்கோங்க!!! ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி புடுஙற்த்துக்கு நடுவில கமெண்டு போட்டேன் அது தான் தங்கலீஷ்ல

said...

//நான் என்ன செய்வேன்?//

ரொம்பப் பாவம்தான். சீக்கிரமே பெங்களூரு வரப் பிராப்திரஸ்து!! :)

said...

//ரெண்டு மாசத்துக்கு முன்ன சொல்லியிருந்தா ரூம்மேட்டை செஞ்சு தர சொல்லி சாப்பிட்டிருப்பேன் :)))//

இப்போ என்ன கெட்டுப் போச்சு? யாரு சமயலறை இன் சார்ஜோ, ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு போய் நீட்ட வேண்டியதுதானே? :))

said...

//இலவசம்!!
மன்னிச்சிக்கோங்க!!!

மன்னித்தோம்!!


// ஆபீஸ்ல கொஞ்சம் ஆணி புடுஙற்த்துக்கு நடுவில கமெண்டு போட்டேன் அது தான் தங்கலீஷ்ல//

அதுக்குத்தான் ஐடியா குடுத்து இருக்கோமே. சில இடங்களில் நீங்க ஈ கலப்பை இல்லாமக் கூட தமிழில் எழுதலாம். அங்க எழுதி ஒரு கட் பேஸ்ட் பண்ண வேண்டியதுதானே!!

said...

உயரெல்லை முன்னிட்டு ஒரு பி.க.