Sunday, June 25, 2006

ஆறிப் போகுமுன் ஒரு ஆறு பதிவு

இந்த ஆறு விளையாட்டுக்கு நம்மளை அழைத்தது குமரன். என்ன எழுதலாமுன்னு யோசிக்கும் போது எண்ணங்கள் ஆறா ஓடுனதுல ஒரு ஆறு சங்கதிகள் மட்டும் சொல்லறேன். அட இதுக்கே ஓடினா எப்படி? ஆறு மனமே ஆறு.

ஆறுதான் நம்ம எண்களிலேயே முதல் மாசறு எண் (Perfect Number). அதாவது ஒரு எண்ணை வகுத்தால் வரும் முழு எண்களைப் பெருக்கினாலோ, கூட்டினாலோ, வகுக்கப்பட்ட அதே எண் வந்தால் அது மாசறு எண்ணாகும். இங்கு ஆறை வகுத்தால் வரக்கூடிய எண்கள் 1,2 மற்றும் 3. இந்த மூன்று எண்களை கூட்டினாலோ, பெருக்கினாலோ 6 வருவதால் அது மாசறு எண் என அழைக்கப்படுகிறது. (இதுக்கு வேற பேர் இருக்காங்க? எனக்கு தெரியலை. சும்மா மாசறு எண் அப்படின்னு நானா மொழிபெயர்ப்பு செஞ்சுக்கிட்டேன்). சரி கணக்கு தெரியும் என கணக்கு காட்டியாகிவிட்டதா? இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்.

1) ஆறு பற்றி சொல்ல வந்தா முதலில் நம் ஆறுமுகனின் ஆறுபடைவீடுகள்தான் ஞாபகம் வரும். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு வரி செய்தி. தெரிந்தவர்கள் மேலதிக விபரங்கள் சொல்லுங்களேன். எல்லாம் பலவேறு இடங்களில் படித்தது. தப்பா இருந்தா சொல்லுங்கப்பூ.

திருப்பரங்குன்றம் - நக்கீரர் திருமுருகாற்றுப்படை எழுதியது இங்குதான்.

திருச்செந்தூர் - குன்றில் அமையாமல் கடற்கரையில் அமையப் பெற்ற கோயில் என கூறப்பட்டாலும் இக்கோயிலின் கருவறை அமைந்த இடம் ஒரு சிறு குன்று.

திருவாவினன்குடி - பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த கோவில்தான் அறுபடை வீடுகளில் ஒன்று. அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சுவாமிமலை - இங்கு கோயிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை பழைய தமிழ் முறைப்படி இருந்த 60 வருடங்களைக் குறிக்கின்றன.

திருத்தணி - முருகனே தனக்குப் பிடித்த மலையாக திருத்தணியை கூறியதாக கந்தபுராணம் கூறுகின்றது.

பழமுதிர்சோலை - சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.

2) விளையாட்டை எடுத்துக்கிட்டீங்கன்னா, பல விளையாட்டுகளில் இந்த எண் முக்கியமானதா இருக்கு. கிரிக்கெட்டில் ஆறு ரன்கள்தான் அதிகமாகப் பெறக்கூடியது. அதே போல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள். டென்னிஸில் ஒரு செட் முடிய ஆறு ஆட்டங்கள்தான் பொதுவாக ஜெயிக்க வேண்டும். அமெரிக்காவில் விளையாடும் ஃபுட்பாலில் டச்டவுண் செய்தால் ஆறு புள்ளிகள். ஆஸ்திரேலியாவில் விளையாடப்படும் ஒரு விதமான ஃபுட்பாலிலும் ஒரு கோல் அடித்தால் ஆறு புள்ளிகள். வாலிபாலில் ஒரு அணியில் ஆறு பேர்கள்தான் விளையாடுவார்கள். அதே கதைதான் ஐஸ் ஹாக்கியிலும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி என்ன ஆறுக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தம்? யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

3) இப்போ நமக்குப் பிடித்தமான ஒரு விஷயம் - சாப்பாடு! அறுசுவை விருந்து எனச் சொல்கிறோம். அந்த ஆறு சுவைகள் என்னன்னு கேட்டா தித்திப்பு, காரம், புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு அப்படின்னு ஒரு லிஸ்ட்டும் போடுவோம். ஆனா நம்ம ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில்லெல்லாம் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு சக்தி இருக்கிறதாவும் அதனால எல்லா விதமான சுவையையும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அளவாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இந்த பலன்கள் என்னவென்று பார்ப்போமா?

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

ஆனா நம்ம அலோபதி மருத்துவத்தில் இந்த மாதிரி இல்லை. இதைப் பற்றி அந்த துறை சார்ந்தவர்கள் கொஞ்சம் விவரமா சொல்லுங்க. எது சரி?

4) அடுத்ததா நம்ம மற்றொரு விருப்பமான விஷயமான சினிமாவுக்கு போகலாம். கெவின் பேக்கனின் ஆறு பாகைகள் (Six Degrees of Kevin Bacon ) அப்படின்னு ஒரு விளையாட்டு இருக்கு. இந்த கெவின் பேக்கன் ஒரு அமெரிக்க நடிகர். உலகத்தில் எந்த நடிகரை எடுத்துக் கொண்டாலும் அவருடன் இணைந்து நடித்தவர்களைச் சங்கிலியாகக் கொண்டு கெவின் வரை வர ஆறு இணைப்புகளே போதும் என்பதுதான் இந்த விளையாட்டு. உதாரணமாக நம்ம ரஜினியை எடுத்துக் கொண்டால் அவர் நடித்த கிஷன் கன்னேயா என்ற திரைப்படத்தில் உடன் நடித்தவர் சாயீத் ஜாப்ரி. இவர் டே ஆப் த சைரன்ஸ் என்ற படத்தில் ஜான் மொராய்ட்டிஸ் என்பவருடன் நடித்துள்ளார். ஜான், வேர் த ட்ரூத் லைஸ் என்ற படத்தில் கெவினுடன் நடித்துள்ளார். ஆகவே சூப்பர் ஸ்டாரின் கெவின் எண் 3. இதே போல் கமலை எடுத்துக்கொண்டால் அவர் இதே சாயீத்துடன் சாகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆகவே இவரின் கெவின் எண்ணும் 3. (அப்பாடா ரெண்டு பக்கமும் அடிக்க மாட்டாங்க). யாராக இருந்தாலும் ஆறு படிகளில் கெவினை அடைந்து விடலாமாம்.

இதற்காக வெர்ஜினியா பல்கலைகழகத்தில் ஒரு வலைப்பக்கம் அமைத்து இந்த விளையாட்டுக்காக வசதி செய்துள்ளார்கள். நீங்கள் விளையாடிப் பார்த்து யாருக்காவது ஆறு படிகளுக்கு மேல் வருகிறதா எனப் பாருங்களேன். (நம்ம புரட்சிக் கலைஞர் இந்த லிஸ்ட்டில் இல்லவேயில்லை. நீங்கள் அவர் பெயரைப் போட்டு விட்டு காணவில்லை என என்னை அடிக்க வராதீர்கள்.)

5) சினிமா பத்தி பேசும் போது மற்றொரு முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்ம தளபதி சிபி இருக்காரே. அவரோட ஃப்ரெண்டு (பின்ன என்ன வெறும் நட்புன்னுதானே அறிக்கை எல்லாம் விட்டுக்கறாங்க) நயன்தாராவிற்கு ஒரு கையில் ஆறு விரலாம். ஆனா அது வெளிய தெரியாத மாதிரி பாத்துக்கறாங்களாம். மெய்யாலுமாப்பா?

6) கடைசியா (உண்மையில் முதலிலேயே) ஆறு என எண்ணத் தொடங்கிய உடன் நினைவுக்கு வருவது சிக்ஸ் பேக் பியர்தான். அடிக்கிற வெயிலுக்கு அதுதான் சரிப்படும். வாங்கிட்டு வந்ததை கவனிக்கணும். அதனால இதோட ஆட்டம் க்ளோஸ்.

போறதுக்கு முன்னாடி நான் யாரையாவது ஆறு பேரைக் கூப்பிடணும். போன தடவை இந்த மாதிரி நாலு விளையாட்டு விளையாடும் போது கூப்பிட்ட நாலு பேரில் மூணு பேர் இப்ப எழுதவே காணும். அதனால வேண்டியவங்களைக் கூப்பிடவே பயமா இருக்கு. சரின்னு அந்த ஆறுமுகன் மேல பாரத்தைப் போட்டுவிட்டு கூப்பிடறேன். இதில் யாராவது ஏற்கனவே கூப்பிடப் பட்டிருந்தால் சொல்லுங்க. மாத்திடலாம்.

1. வெண்பா வாத்தி ஜீவா
2. வரலாற்று டீச்சர் துளசி
2.பாலர் கதை சொல்லும் பரஞ்சோதி
2. சங்கச் சிங்கம் ஜொள்ளுப்பாண்டி
3. டா கில்லி கோட் தந்த பெனாத்தலார்
3. செய்திகளைச் சூடாகத் தரும் ஆவி பறக்கும் இட்லிவடையார்
4. நம்ம ர.ம.செ.த, தேவு தம்பி
5. பமகவின் நிரந்தர தலை முகமூடியார் (உள்குத்து எல்லாம் இல்லாம சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு தலைவா.)
5. காமெடி ஸ்பெஷலிஸ்டாக உருவாகி வரும் கோவி.கண்ணன்
6. பெரியவர் ஹரிஹரன்ஸ் (இப்போவாவது மீண்டும் பதிவு போட ஆரம்பிக்கறாரான்னு பார்ப்போம்)

(சிலர் பல முறை அழைக்கப்பட்டு விட்டதால், அதே எண்களில் இன்னும் சிலர்.)

கஷ்டப்பட்டு எழுதியாச்சு. ஒரு 'ஆறு'தல் பரிசாவது தாங்கப்பா.

179 comments:

said...

கைப்ஸ், நீங்க கேட்டா மாதிரி வெண்பா எல்லாம் இல்லாம ஒரு பதிவு. வந்து ஆவன பண்ணிடுங்க.

said...

சிக்ஸர்ண்ணா.. :)

said...

பொறுமையா வந்து நம்ம பங்குக்கு கொஞசம் ரன் அடிக்கிறேன் இப்போ ஜூட்:)

said...

தேவு தம்பி,

மறக்காம பதிவ போடணும். என்னா நான் சொல்லறது?

said...

தனி மடலில் வந்த பெனாத்தலாரின் பின்னூட்டம்.

தம்பி இலவசம்,

உங்களுடைய பரந்த மனப்பான்மை தெரிகிறது. இப்படியெல்லாம் என் எழுத்தை நிறுத்திவிட முடியாது. இங்கே
எழுதியிருக்கிறேன்.

நல்லாத்தான் இருக்கு உங்க ஆறு. ஆனா, ப ம கவின் ஆறு கிளை அமைப்புகள், பினாத்தலாரின் ஆறு அற்புதக் குணங்கள் பத்தியெல்லாம் ஏன் எழுதல?

said...

//இப்படியெல்லாம் என் எழுத்தை நிறுத்திவிட முடியாது.//

அது தெரியும். ஆனா முயற்சி பண்ணலைன்னு யாருன் சொல்லிடக்கூடாது பாருங்க. அதான். :)

//ஆனா, ப ம கவின் ஆறு கிளை அமைப்புகள், பினாத்தலாரின் ஆறு அற்புதக் குணங்கள் பத்தியெல்லாம் ஏன் எழுதல? //

அட நீங்க வேற. ஏற்கனவே நான் பெரிய பெரிய பதிவா போடறேன்னு கம்பிளெயிண்ட். இதெல்லாம் பத்தி எழுத ஆரம்பிச்சா இன்னைக்கு முடியற விஷயமா? எப்பாவாவது தொடர்கதை எழுதற போட்டி வந்தா இதெல்லாம் போட்டு சரி பண்ணிருவோம். ஓக்கேவா?

said...

கொத்ஸ்,


ஆறை நான் ஆறப்போட்டு ஆறுநாளுக்கு மேலேயே ஆச்சுப்பா. ஆறுபேர் இதுவரை
நம்மளை ஆட்டத்துக்குக் கூப்புட்டாச்சு. (கூப்புட்டவங்க மெய்யாலும் மூணு பேருன்னாலும்,
எனக்கு ரெட்டைப்பார்வையாம் எல்லாம் ரெண்டு ரெண்டாத்தெரியுது.)

ஆறுதலாத்தான் வந்து ஆற அமர எழுதப்போறேன்.

said...

உங்க பதிவுல ஆறு பதிவை தேடிப் பார்த்தேன், இல்லை, அதான் கூப்பிட்டேன். எனக்கே உங்களை யாரும் கூப்பிடலையான்னு ஒரு ஆச்சரியம்தான். மத்தவங்களும் கூப்பிட்டாங்கன்னா நீங்க கேன்ஸல். நம்ம லிஸ்டில் இருந்து வேற ஒருத்தரை சேர்த்திருவோம்.

said...

//நயன்தாராவிற்கு ஒரு கையில் ஆறு விரலாம்//

அரிய செய்தி சொன்னதற்கு சங்க தளபதி (எங்கப்பா????????) சார்பாக நன்றி.

said...

இலவசத்தாரே!

முதலில் என்னை ஆறு விளையாட்டுக்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி.

நான் சொல்ல நெனச்ச 6 படை வீடுகள் பத்தி சொல்லிட்டீங்க. நல்லாவே சொல்லியிருக்கீங்க.

நாலு விளையாட்டில் 3 பேர் அழைத்தாங்க, நாலு பேர் அழைத்தால் தான் வருவேன்னு அடம் பிடித்தேன், நாலாவது யாரும் அழைக்கவில்லை. அது மாதிரியே ஆறும் இதுவரை 3 பேர் அழைச்சிட்டாங்க :)

நேரம் கிடைத்ததும் ஆறு அசத்தல் கதைகள் சொல்கிறேன்.

said...

ஆறை பத்தி, இருந்தாலும் ரொம்ப தான் ஆறாஞ்சி இருக்கீங்க...
நல்லா இருக்குங்க....

தேவு நீயும் ஆற போடாம சீக்கிரம் வந்து ஆற போடு...

said...

மாறுதலான ஆறு பதிவு :)

ஆமாம், இலவசக் கொத்தனார்கள் எல்லாரும் தங்கள் 400 வருட மறைந்திருப்பதிலிருந்து வெளி வரப் போகிறார்களாமே, உண்மையா ?

said...

நல்ல பல தகவல்களை உள்ளடக்கிய வித்தியாசமான 6 பதிவு.. :-)

said...

//அரிய செய்தி சொன்னதற்கு சங்க தளபதி (எங்கப்பா????????) சார்பாக நன்றி. //

நன்றி எல்லாம் ஓ.கே. மனசு. ஆனா அவரு எங்கப்பா? நயன் என்ற வார்த்தை உள்ள இந்த பதிவு வந்து இவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஆளைக்காணுமே.

said...

//அது மாதிரியே ஆறும் இதுவரை 3 பேர் அழைச்சிட்டாங்க :)//

உங்களையும் கூப்பிட்டாச்சா? எஸ்.கே வேற முகமூடியை கூப்பிட்டாச்சாமே. இப்போ இன்னும் ரெண்டு பேரை நான் மாத்தணுமா? சரி மாத்தறேன்.

அப்புறம் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி பரம்ஸ்.

said...

//தேவு நீயும் ஆற போடாம சீக்கிரம் வந்து ஆற போடு... //

:-D

said...

//மாறுதலான ஆறு பதிவு :)//

நன்றி மணியன்.

//ஆமாம், இலவசக் கொத்தனார்கள் எல்லாரும் தங்கள் 400 வருட மறைந்திருப்பதிலிருந்து வெளி வரப் போகிறார்களாமே, உண்மையா ? //

அவங்க எல்லாம் இலவசம் இல்லைன்னு கேள்விப்பட்டேனே. நான் சொல்லறது சரியா?

said...

//நல்ல பல தகவல்களை உள்ளடக்கிய வித்தியாசமான 6 பதிவு.. :-) //

மனதின் ஓசை,

நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி. ஆனா கடைசியில் ஒரு சிரிப்பானைப் போட்டுவிட்டீரே. எதனா உள்குத்தா? இருந்தா நேரா சொல்லுங்க. இல்லைன்னா இந்த மரமண்டைக்குப் புரியாது.

said...

பிடித்த ஆறுகளாக,
ஆற்று மணல், ஜல்லி, செங்கள், சித்தாள், சும்மாடு, கலவை சாந்துன்னு இருக்கும்னு நெனெச்சேன். மிஸ்ஸிங் .......... ஏமாற்றம் :)

said...

ஆறு ஆறாய மனித வாழ்வை ஆரா(றா)ய்ந்து பதிவிட்ட கொத்ஸை இத்தரணி இணைய பாட்ஷா என்று அழைக்கட்டும்.

said...

ஏமாற்றம் என உண்மையைக் கூறிய கோவி, நீவிர் வாழ்க. இந்த வலைப்பூ என்பது ஒரு பொழுதுபோக்குக்கு எழுதுவது. இதில் தொழில் கலக்கக்கூடாதென்பது என் அவா. அதனால்தான் இப்படி. ஆனா இந்த மண், செங்கல் பத்திதான் நம்ம வடுவூர் குமார் எழுதறாரே. படிச்சு பாருங்க.

இந்த மாதிரி எல்லாம் எழுதறதுனால நீங்களும் அழைக்கப்படுகிறீர்கள். ஆனா காமெடியாத்தான் எழுதணும். அதான் கண்டிஷன். நடத்துங்க. என்சாய்.

said...

//பழமுதிர்சோலை - சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம்.//

கோயமுத்தூர் அன்னபூர்ணா பக்கத்துல இருக்கே...அது தானே?

said...

//ஆறு ஆறாய மனித வாழ்வை ஆரா(றா)ய்ந்து பதிவிட்ட கொத்ஸை இத்தரணி இணைய பாட்ஷா என்று அழைக்கட்டும். //

இன்னுமொரு பட்டமா? இருக்கட்டும். இருக்கட்டும். தம்பி தேவு, இந்த பட்டமெல்லாம் நோட் பண்ணி வச்சுக்கவே ஒரு ஆளு போடணுமுன்னு சொன்னேனே. என்ன ஆச்சு?

said...

//கோயமுத்தூர் அன்னபூர்ணா பக்கத்துல இருக்கே...அது தானே? //

அடடா. அது வேற. சரியான பதிலை பாட்டி சொல்லி பாஸானதுக்கு ட்ரீட் குடுத்த இடம். நான் சொன்னது எக்ஸாம் ஹாலு. :)

said...

//கெவின் பேக்கனின் ஆறு பாகைகள் (Six Degrees of Kevin Bacon ) அப்படின்னு ஒரு விளையாட்டு இருக்கு. இந்த கெவின் பேக்கன் ஒரு அமெரிக்க நடிகர். உலகத்தில் எந்த நடிகரை எடுத்துக் கொண்டாலும் அவருடன் இணைந்து நடித்தவர்களைச் சங்கிலியாகக் கொண்டு கெவின் வரை வர ஆறு இணைப்புகளே போதும் என்பதுதான் இந்த விளையாட்டு. உதாரணமாக நம்ம ரஜினியை எடுத்துக் கொண்டால் அவர் நடித்த கிஷன் கன்னேயா என்ற திரைப்படத்தில் உடன் நடித்தவர் சாயீத் ஜாப்ரி. இவர் டே ஆப் த சைரன்ஸ் என்ற படத்தில் ஜான் மொராய்ட்டிஸ் என்பவருடன்...//

நீங்க சொல்ற வெசயம் எல்லாம் புச்சா இருக்கு கொத்சு. ஆச்சரியமாவும் இருக்கு. ஒரு சினிமா நடிகரை வெச்சு வெளயாட்டா? ஆனாலும் நம்ம கேப்டன், விஜய ராஜேந்தர், கவுண்டமணி, செந்தில் இவுங்களை எல்லாம் கோக்க முடியாத அளவுக்கு அம்மாம் பெரிய தில்லாலங்கடியா உங்க பேக்கரு
:)

said...

இல்லை கைப்பு. இவங்களை எல்லாம் கோக்க முடியாதுன்னு சொல்ல வரலை. இந்த பல்கலைக்கழகம் வச்சு இருக்கிற டேட்டாபேஸ்ல (விபரக்களஞ்சியம் அப்படின்னு சொல்லலாமா?) இவங்களைக் காணும். அவ்வளவுதான்.

நீங்களே ஒரு ரூட் போட்டு இவங்களோட பேக்கன் நம்பர் என்னன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.

said...

//நீங்களே ஒரு ரூட் போட்டு இவங்களோட பேக்கன் நம்பர் என்னன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.//

கொளுத்து! நாங்க மறத்தமிழர் ஐயா. ஒரு வெள்ளைக்காரனுக்கு ரூட்டுப் போடறதா? வேணும்னா உங்க வெர்ஜினியா பல்கலை காரங்களை நம்ம விருத்தாசல வேந்தன் கேப்டனுக்கு ரூட்டு போடு பேக்கனோட கேப்டன் நம்பர் கண்டுபிடிக்கச் சொல்லும் ஓய்.

said...

நீங்க வேற,நான் ரெண்டு பதிவே போட்டு காத்திருக்கேன்.

said...

ஆறு வெரல் இருந்தாலும் 'விழித்தாரகை' நம்ம தளபதிக்கு எப்பவும் பிரண்டு தான்.

said...

முதலில் இவரு ஏஜெண்டை காணாம போகடிச்சாரு. இப்போ இவரே அப்பீட்டு. என்னய்யா நடக்குது இங்க? கொஞ்சம் விசாரிச்சு சொல்லு மனசே.

said...

//உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது//

தல 'கொத்ஸ் ' உவர்ப்பு மட்டுமா உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது ?? :))

நம்மளை கூப்பிட்டு புட்டீயளே !! சீக்கிறபா பேட் பேடோட வாறேன் சிக்ஸர் அடிக்கனுமுள்ள?? :))

said...

\\போறதுக்கு முன்னாடி நான் யாரையாவது ஆறு பேரைக் கூப்பிடணும்\\
சத்தம் போட்டு கூப்பிடுங்க

said...

வழக்கமான நகைச்சுவை கலந்து, விவரமான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்!

ஆறுபடையில் ஆரம்பித்து அள்ளிவிட்டிர்கள்!

அதிலும் அந்த கெவின் பேகன் பற்றியது சூப்பர்.!

இப்பத்தான் ஐஸ் ஹாக்கியில் எங்க ஊரு டீம் சாம்பியன்ஷிப் கெலிச்சுது!

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் எல்லாம், வாதம், பித்தம், நாடி என்கிற 3 வழியில் உடல்கூற்றை அணுகுகின்றன.

அலோபதி உடற்கூற்றை[anatomy&physiology] முதலில் அறிந்து இந்த மூன்றுக்கும் காரணம் சொல்லுது.

இதான் சுருக்கமான என் பதில்.

விரிவா வேணும்னா அப்புறமா எழுதறேன்.

சரியாத்தான் சொன்னீங்க! தளபதி கொஞ்ச நாளா அடக்கி வாசிக்கிறாரு!

ஆட்டம் க்ளோஸ் ஆனதுக்கு அப்புறமா ஆறு பேரை அழைச்சதாலேத்தான், எல்லாம் ரெண்டு ரெண்டா தெரிஞ்சிருக்கு!!

நான் அழைத்துத்தான் வரவில்லை, உங்கள் அழைப்புக்காவது வருகிறாரா பார்ப்போம், முகமூடி.

said...

கொத்ஸ், இத்தனை பெரூஊஊஊசா எழுதினா எப்படிப் படிக்கிறதாம்?!!! இதை என்னோட அச்சாரமா வச்சிக்குங்க.. இன்னும் ஆறு வரும்.. எல்லாத்தையும் முழுக்க படிச்சபின்./.

மேலோட்டமா பார்க்கசொல்ல, ஒரே தகவல் களஞ்சியமா இருக்கு தலீவா :)

said...

கொத்து,
உங்களுக்குப் பின்னூட்டம் போடத் திறந்தாலே, யாராவது போன் செய்து ஏதாவது வேலையைக் கொ(கெ)டுத்துடுறாங்க.
இப்பக்கூட உடனே ஒரு போன், அவசர மீட்டிங்ன்னு வரச்சொல்லி. வீட்டுல வந்து பேசுறேன்.

said...

கொத்துண்ணே உங்களுக்கு பின்னூட்டம் போட பயமா இருக்கு. யாரவது என்னை கிழிச்சிருவாங்கணு, ஜிகர்தண்டா பதிவில் கிடைத்த சூடு.... இன்னும் ஆறவில்லை. :-(

said...

கைப்ஸ்,

விருத்தாச்சல வேந்தன் நல்ல இருக்கு. இன்னும் யாரும் யூஸ் பண்ணலைன்னா காப்பிரைட் போட்டு வச்சுக்கோங்க.

தங்கள் ஆணையை சிரமேற்கொண்டு பேக்கனின் காப்டன் நம்பரைக் கண்டுபிடித்தேன்.

கெவின் பேக்கன் -> வின்ஸ்டன் ந்ட்ஷோனா (தி ஏர் அப் தேர்) -> அம்ரீஷ் பூரி (காந்தி) -> ராதாரவி (பாபா) -> கேப்டன் (பல படங்கள்)

கமலும் ரஜினியும் பேக்கனிடமிருந்து மூன்றடியே தள்ளி இருக்க, பேக்கனோ கேப்டனிடமிருந்து நான்கடிகள் தள்ளி இருக்கிறார். இதிலிருந்தே தெரியவில்லையா யார் மறத்தமிழர். யாருக்கு தமிழ்நாட்டை ஆளும் தகுதி இருக்கிறதென்று.

said...

//ஆறு வெரல் இருந்தாலும் 'விழித்தாரகை' நம்ம தளபதிக்கு எப்பவும் பிரண்டு தான். //

அதைத்தானே நானும் சொல்லறேன். அவங்களும் சொல்லறாங்க. ஆனா நீங்க சொல்லும் போது மட்டும் ஏன் தீய்ஞ்ச வாசனை அடிக்குது?

said...

//தல 'கொத்ஸ் ' உவர்ப்பு மட்டுமா உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது ?? :)) //

ஆயுர்வேதத்தில் அப்படித்தானப்பா சொல்லியிருக்கு. நான்வெஜ் ஐட்டமெல்லாம் அங்க நாட் அலவுட். அதனாலதான். ;)

//நம்மளை கூப்பிட்டு புட்டீயளே !! சீக்கிறபா பேட் பேடோட வாறேன் சிக்ஸர் அடிக்கனுமுள்ள?? :)) //

வாங்க வாங்க

said...

//சத்தம் போட்டு கூப்பிடுங்க //

அட அப்படித்தானப்பா கூப்பிடறேன். ஆனா கூப்பிட்ட ஆளுங்களைப் பாருங்க. எல்லாரும் மாயண்ணன் கூப்பிட்டாக, மாப்பிள்ளை மொக்கச்சாமி கூப்பிட்டாக, மற்றும் நம் உறவினரெல்லாம் கூப்பிட்டாகன்னு பிலிம் காட்டறாங்க. சரின்னு சொன்ன ஜொள்ளுப்பாண்டியாவது சரியா ஜொள்ளினாருன்னா சரி.

said...

//வழக்கமான நகைச்சுவை கலந்து, விவரமான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்!//

எஸ்.கே. உங்களுக்கு நல்ல மனசு, நான் எழுதறதையெல்லாம் நகைச்சுவைன்னு சொல்ல வேண்டியிருக்கு. பாவம் எஸ்.கே. நீங்க.

//ஆறுபடையில் ஆரம்பித்து அள்ளிவிட்டிர்கள்!//

ஆறுன்னவுடனே அவன் ஞாபகம்தான். எழுதினதுல தப்பா ஒண்ணும் இல்லையே?

//அதிலும் அந்த கெவின் பேகன் பற்றியது சூப்பர்.!//

கொஞ்சம் விளையாடிப் பார்த்து அனுபவத்தை சொல்லுங்க. ஆனா ஜாக்கிரதையா சொல்லுங்க. இல்லைன்னா எதிர்வினை பின்னூட்டமெல்லாம் போட்டு கிழிச்சிடப் போறாங்க. ;)

//இப்பத்தான் ஐஸ் ஹாக்கியில் எங்க ஊரு டீம் சாம்பியன்ஷிப் கெலிச்சுது!//

எதோ எழுதிட்டேனே தவிர அந்த விளையாட்டு நமக்குப் பிடிக்கறது இல்லை. ரொம்ப முரட்டு விளையாட்டு. அடிக்கடி ரத்தம் வேற சிந்துறாங்களா, நம்ம கைப்ஸ் முகம் ஞாபகத்துக்கு வந்து கண்ணைக் கட்டுது.


//விரிவா வேணும்னா அப்புறமா எழுதறேன்.//

விரிவா எழுதுங்க. தனிப் பதிவு போடுங்க. இந்த மாதிரி மாறுபட்ட முறைகளைப் பற்றி தெரிஞ்சுகிட்டாத்தானே எதுக்கு எங்க போகணுமுன்னு ஒரு தெளிவு கிடைக்கும். காத்திருப்பேன்.

//சரியாத்தான் சொன்னீங்க! தளபதி கொஞ்ச நாளா அடக்கி வாசிக்கிறாரு!//

நட்புதான்னு அறிக்கை விட்டாலே அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுடறாங்க. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது....

//ஆட்டம் க்ளோஸ் ஆனதுக்கு அப்புறமா ஆறு பேரை அழைச்சதாலேத்தான், எல்லாம் ரெண்டு ரெண்டா தெரிஞ்சிருக்கு!!//

அதுக்கு நான் என்ன பண்ண? என்னை இப்போதானே கூப்பிட்டாங்க. :(
ஆனா அந்த ஆறாவது பாயிண்டுக்கும் இந்த ரெண்டு ரெண்டா தெரிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறேன். :)

//நான் அழைத்துத்தான் வரவில்லை, உங்கள் அழைப்புக்காவது வருகிறாரா பார்ப்போம், முகமூடி. //

நீ வருவாயென நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்....

said...

//கொத்ஸ், இத்தனை பெரூஊஊஊசா எழுதினா எப்படிப் படிக்கிறதாம்?!!! //

பாத்தீங்களா பெனாத்தலாரே. இதைத்தான் சொன்னேன். நீங்க சொல்லறது எல்லாம் எடுத்தா என்ன ஆவும்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

//இதை என்னோட அச்சாரமா வச்சிக்குங்க.. இன்னும் ஆறு வரும்.. எல்லாத்தையும் முழுக்க படிச்சபின்.//

வழக்கம்போல இல்லாம இந்த வாக்குறுதியையாவது நிறைவேத்தினா சரி.

//மேலோட்டமா பார்க்கசொல்ல, ஒரே தகவல் களஞ்சியமா இருக்கு தலீவா :)//

தலீவாவா? தலை சுத்துதே, கண்ணைக் கட்டுதே, எனக்கு என்ன ஆகுது?

said...

//கொத்து,
உங்களுக்குப் பின்னூட்டம் போடத் திறந்தாலே, யாராவது போன் செய்து ஏதாவது வேலையைக் கொ(கெ)டுத்துடுறாங்க.//

ஆ!! இது எதிரிக் கட்சியினரின் திட்டமிட்ட சதிதான். இதன் பின்புலமாக இருப்பது யாரென நமக்கு தெரியும். நம் கட்சியினர் ஆவேசப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம். (மண்ணெண்ணய் டின் எல்லாம் எடுத்து வெச்சாச்சாப்பா?) கட்டுக்கோப்பாக, கண்ணியமாக இந்த பிரச்சனையை எதிர்கொள்வதன் மூலம் அமைதியையும் நம் கட்சி கௌரவத்தையும் நிலைநாட்டுவோம்.

இந்த சமயத்தில் மட்டுமல்லாது உங்களுக்கு எந்த சமயத்திலும் வேலை கொடுக்க வரும் முதாலாளி வருக்கத்தினருக்கும் எங்கள் கட்சியின் சார்பாக எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

said...

//கொத்துண்ணே உங்களுக்கு பின்னூட்டம் போட பயமா இருக்கு. யாரவது என்னை கிழிச்சிருவாங்கணு, ஜிகர்தண்டா பதிவில் கிடைத்த சூடு.... இன்னும் ஆறவில்லை. :-( //

ராம் இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? சும்மா தைரியமா விளையாடுங்க. அப்படி எதாவது ஆச்சுனா உங்களை அந்த விஷயத்தில் ஸ்பெஷலிஸ்டான கைப்ஸ் கிட்ட ட்ரெயினிங்குக்கு அனுப்பறேன். :)

said...

//தலீவாவா? தலை சுத்துதே, கண்ணைக் கட்டுதே, எனக்கு என்ன ஆகுது? //

எல்லாம் அந்த சிக்ஸ் பேக் பியர் பண்ணும் வேலை..

திங்கக் கிழமை காலைலயாவது இதெல்லாம் இல்லாம... ம்ஹும்... ;)

said...

//நன்றி எல்லாம் ஓ.கே. மனசு. ஆனா அவரு எங்கப்பா? நயன் என்ற வார்த்தை உள்ள இந்த பதிவு வந்து இவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஆளைக்காணுமே.
//

எதுவும் பேசாம கவனிச்சிகிட்டுத்தான் இருக்கிறேன் கொத்தனாரே!

மனசு! ஆறு விரல் விஷயம் நம(என)க்கு முன்னாடியே தெரியும்.

said...

//ஆறு ஆறாய மனித வாழ்வை ஆரா(றா)ய்ந்து பதிவிட்ட கொத்ஸை இத்தரணி இணைய பாட்ஷா என்று அழைக்கட்டும்//

இணைய பாட்ஷா வாழ்க!

said...

//எதுவும் பேசாம கவனிச்சிகிட்டுத்தான் இருக்கிறேன் கொத்தனாரே! //

என்ன ஆச்சு உங்களுக்கு? கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கீங்க?

//மனசு! ஆறு விரல் விஷயம் நம(என)க்கு முன்னாடியே தெரியும். //

ஆமாம். ஆமாம். அவ்வளவு 'நட்பா' இருக்கீங்க. அது கூடவா தெரியாம இருக்கும். நாங்கதான் தினமலத்தையெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு. ஆனா ஒரு விஷயம் அங்க விரல்களுக்கேத்த வீக்கம்.... சரி சரி. வேணாம். அக்காங்களெல்லாம் அடிக்கறதுக்கு முன்னாடி நான் ஜூட். ;)

said...

//எல்லாம் அந்த சிக்ஸ் பேக் பியர் பண்ணும் வேலை..//

பொன்ஸு, உங்களுக்கு விஷயம் தெரியாதுன்னு எங்களுக்குத் தெரியும். ஒண்ணு சொல்லறேன் கேளுங்க.

You cannot own beer. You only can rent it. அதனால நேத்து கணக்கு நேத்தியே பைசலாயிருச்சு.

எல்லாம் நீங்க அன்பா கூப்பிட்டவிதந்தான். வேற ஒண்ணுமில்ல.

said...

நல்ல வேளை வெண்பா இல்லாம ஒரு பதிவு போட்டுட்டீங்க! எல்லாரும் வந்து பார்க்க முடியும்.

said...

//நல்ல வேளை வெண்பா இல்லாம ஒரு பதிவு போட்டுட்டீங்க!//

You too Sibi? :-X

//எல்லாரும் வந்து பார்க்க முடியும். //

வெண்பா போட்டாலும் எல்லாரும் பாக்கறாங்க. வெண்பா எழுத மாட்டேன்னுதான் அடம். அதுக்குதான் என்ன பண்ணறதுன்னு தெரியலை. பார்க்கலாம்.

said...

சிக்ஸ் பேக்கை இப்படி கொஞ்சம் தள்ளி விடுங்க ஆறுதல் என்ன கோல்டு கப்பயே கொடுதுவிடுகிறேன் தி ரா ச

said...

சிக்ஸ் பேக்கை இப்படி கொஞ்சம் தள்ளி விடுங்க ஆறுதல் என்ன கோல்டு கப்பயே கொடுத்துவிடுகிறேன் தி ரா ச

said...

தி.ர.ச.

இவ்வளவு லேட்டா வந்தா எப்படி? அதான் நேத்தே ஆட்டம் க்ளோஸுன்னு சொல்லியாச்சே. ஒரு வேளை புதுசா காலி பாட்டில், பழைய பேப்பருன்னு பிஸினஸ் ஆரம்பிச்சு இருக்கீங்களா?

எதுக்கும் சேஃப்பா ஒரு சிரிப்பானைப் போட்டு வைப்போம். :-D

said...

நீங்க ஆறு போட்டாலும் நூறு போட்டாலும் நூற்றுக்கு மேல பின்னூட்டங்கள் வருதே கொத்ஸ்....

வயிற்றெரிச்சலுடன்
குமரன்

இதுல பதிவ வேறப் படிச்சுப் பின்னூட்டம் போடணுமா? :-(

said...

மொதல்ல.... நம்ம பதிவுக்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி.

said...

ஆறு மாசறு எண்ணா? நான் 9 தெய்வீக எண் அப்படின்னு என்னோட 99வது பதிவுல சொல்லியிருந்தேன். அப்ப நிறைய பேரு சண்டைக்கு வந்தாங்க. நீங்க இப்ப ஆறு மாசறு எண் அப்படிங்கறீங்க. விட்டா எல்லா எண்களுக்கும் ஏதாவது சொல்லலாம் போல இருக்கே?!!! :-)

said...

கொத்ஸ். சொன்னா நம்ப மாட்டீங்க. நான் ஆறுன்னு எழுதத் தொடங்கினதும் ஆறுபடைவீடுகள் தான் முதல்ல நினைவுக்கு வந்தது. எழுதத் தொடங்கினதும் ஆறுபடைவீடுகள் பத்தி ஒரே பதிவுல எழுதி விட்டுடக்கூடாது; தனித்தனியா பதிவு போடணும்ன்னு தோணுனதால எழுதாம விட்டேன். நீங்க அழகா சிறுகுறிப்புகள் கணக்கா ஆறுபடைவீடுகள் பத்தியும் எழுதியிருக்கீங்க.

said...

//வயிற்றெரிச்சலுடன்
குமரன்//

You too Kumaran :-X

என்ன இன்னிக்கு எல்லாரும் இப்படி You two, you three அப்படின்னு எண்ண விட்டுட்டாங்க.

said...

திருவாவினன்குடியில் அகத்தியர் தமிழ் பயின்றாரா? அவர் தமிழ் பயின்று தமிழிலக்கண நூல் எழுதியது பொதிகை மலையில் தானே?

பழனியும் திருவாவினன்குடியும் ரெண்டுமே ஒரே படைவீடு தானப்பா. அதுல வேற வேறுபாடு சொல்ல வந்துட்டீரா?

சுவாமிமலையில் இருக்கும் 60 படிகள் 'பழைய தமிழ் முறைப்படி' இருந்த 60 வருடங்களைக் குறிக்கின்றனவா? அது என்ன பழைய தமிழ் முறைப்படி? இன்றும் அந்த 60 தமிழ் வருடங்கள் 'பிரபவ, விபவ...' தானே புழக்கத்தில் இருக்கின்றன?

said...

இதுக்கப்புறம் இருக்கற செய்தியெல்லாம் என் தலைக்கு மேல போகுது. அதனால இதோட நிறுத்திக்கறேன்.

said...

//மொதல்ல.... நம்ம பதிவுக்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி. //

நன்றி மறப்பது நன்றன்று, எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், இப்படி எல்லாம் படிச்சு தொலைச்சுட்டோமே என்ன பண்ணறது?

said...

//நீங்க இப்ப ஆறு மாசறு எண் அப்படிங்கறீங்க//

நான் சொல்லலை குமரன். ஆங்கிலத்தில் அதை Perfect Number அப்படின்னு சொல்லறாங்க. அதுக்கு தமிழில் பெயர் தெரியலை. அதனால மாசறு எண் அப்படின்னு சொன்னேன். யாராவது நம்ம பாட புத்தகத்தில் என்ன பேர் போட்டு இருக்காங்கன்னு சொல்லுங்களேன்.

In mathematics, a perfect number is defined as an integer which is the sum of its proper positive divisors, that is, the sum of the positive divisors not including the number.
Six (6) is the first perfect number, because 1, 2 and 3 are its proper positive divisors and 1 + 2 + 3 = 6. The next perfect number is 28 = 1 + 2 + 4 + 7 + 14. The next perfect numbers are 496 and 8128.

எண்ணத் தொடங்கினா எல்லா எண்களுக்கும் இப்படி எதாவது சொல்ல முடியுமே.

said...

//சொன்னா நம்ப மாட்டீங்க.//

கட்டாயம் நம்பறேன். எனக்கே அதுதான் தோணிச்சுனா உங்களுக்குத் தோணாமலையா போகும். நான் என்னால முடிஞ்சதா ஒரு வரி செய்திகள் போட்டேன். நீங்க பதிவைப் போடுங்க. நான் காத்துக்கிட்டு இருப்பேன்.

said...

உங்க ஆறு அருமைங்க...அதிலும் 6 பீர் கொன்னுடீங்க...இருங்க நானும் போய் ஒரு 6 பேக் எடுத்திடு வந்துடரேன்.....

said...

//திருவாவினன்குடியில் அகத்தியர் தமிழ் பயின்றாரா? //

அப்படித்தாங்க எங்கயோ படிச்சேன். தேடிப் பார்த்து சுட்டி எடுத்துத் தரேன். இங்க படிச்சிட்டு அங்க போயி எழுதினாரோ என்னவோ? நீங்க, ஜிரா, திரச, எஸ்.கே எல்லாரும்தான் எது சரி எது தவறுன்னு சொல்லணும்.

//பழனியும் திருவாவினன்குடியும் ரெண்டுமே ஒரே படைவீடு தானப்பா. அதுல வேற வேறுபாடு சொல்ல வந்துட்டீரா? //

இல்லைங்க அடிவாரம்தான் படைவீடு. அங்க ஆண்டி எல்லாரையும் மலை மேல வர வைக்கறதுனால இது பிராஞ்ச் ஆபீஸ் மாதிரி ஆகிப்போச்சு.

//இன்றும் அந்த 60 தமிழ் வருடங்கள் 'பிரபவ, விபவ...' தானே புழக்கத்தில் இருக்கின்றன? //

ஹிஹி. இந்த பேரு எல்லாம் வடமொழி மாதிரி இருந்துதா. அதான் வேற எதோ ஒரு லிஸ்ட் இருக்கு போலன்னு நினைச்சு அப்படி எழுதிட்டேன். தப்பு நடந்து போச்சு சாரே.

said...

என்ன கொத்ஸ். நம்ம பின்னூட்ட விதிகளை நீங்களே மீறினா எப்படி? :-(((

மூன்று பின்னூட்டங்களில் வரவேண்டியதை ஒரே பின்னூட்டம் இட்டு (அதுவும் உங்கள் பதிவிலேயே) நம் பின்னூட்ட விளையாட்டிற்கே அவமானம் இழைத்துவிட்டீர்கள். உங்களுக்குத் தகுந்த தண்டனை தர வேண்டும் என்று மருத்துவர் இராமநாதன் அவர்களுக்கு ஒரு பரிந்துரை மடல் அனுப்பப் போகிறேன்.

(பாத்து கொத்ஸ். கட்சியில இருந்து தூக்கினாலும் தூக்கிடுவாங்க. சொல்லிட்டேன்)

said...

//இதுக்கப்புறம் இருக்கற செய்தியெல்லாம் என் தலைக்கு மேல போகுது. அதனால இதோட நிறுத்திக்கறேன். //

இது என்ன அநியாயம்? நயனுக்கு ஆறு விரலுன்னு சுட சுட செய்தி குடுத்தா அதுல ஆர்வம் காட்டாம? சிபி, உங்க ஃப்ரெண்ட அவமதிக்கறாரு. வந்து என்னன்னு கேளுங்க.

ஆறு பதிவுக்கு ஆறு பின்னூட்டம் போட்ட குமரனுக்கு பின்னூட்ட செம்மல் அப்படின்னு ஒரு பட்டம் வழங்க வேண்டியதுதான். அனைவரும் இதை முழுமையாகவே உபயோகிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

பின்ன என்ன பி.செ. அப்படின்னா பிஞ்ச செருப்பா அப்படின்னு யாராவது கேட்டுட்டாங்கன்னா? அதான்.

said...

எங்கேடா இவர் அறுபடை வீட்டிலே ஆரம்பிச்சு நம்ம அரசக்கனியை மறந்திடப் போறார் என நினைச்சேன். நல்ல வேளை தப்பீத்தீர்கள்.

நூறு போடவேண்டிய ஆளு ஆறு போட்டா அடுக்குமா?

said...

கும்ஸ்,

இப்போ எல்லாம் ஒரு பின்னூட்டத்துக்கு ஒரு பதில் போட்டாலே நம்மளை ஒரு மாதிரி பாக்கறாங்க, திட்டி பதிவெல்லாம் வேற போடறாங்க. அதான் பயமா இருக்கு. மருத்துவர் இராமனாதனா அவருதான் வரதே இல்லையே.

ஒண்ணு சொல்லுங்க. ஒரு பக்கம் உனக்கு 100 100ஆ வருதேன்னு வயத்தெறிச்சல் இன்னொரு பக்கம் இப்படி கட்சி நடவடிக்கைன்னு பயமுறுத்தல். நான் என்னதான் செய்யறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

said...

வாங்க கௌபாய். அரசகனியோ மீனவனோ - பேருவச்ச நானே அதை மறப்பேனா (அபூர்வ சகோ. ஸ்டைலில் படிக்கவும்.)

நல்ல கேளுங்க. ஆனா அப்படி கேட்கற நீங்க 6ஆவது போட வேண்டாமா?

said...

//முதாலாளி வருக்கத்தினருக்கும் எங்கள் கட்சியின் சார்பாக எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//
கொத்து எப்ப கம்யூனிஸ்ட் கட்சியில் சேந்தீங்க?

said...

அட நீங்க வேற மகேஸு. இப்படி எல்லாம் சொல்லிக்கறதுதான் இப்போ ஃபேஷன். அப்புறமா நான் கட்சின்னு சொன்னது வேற.

said...

//திருத்தணி - முருகனே தனக்குப் பிடித்த மலையாக திருத்தணியை கூறியதாக கந்தபுராணம் கூறுகின்றது//
திருத்தணி மலையில ஜோடி ஜோடியா பக்தர்கள் (!?!?) உக்காந்து இருப்பதைப் பார்த்திருகிறேன். அதனால் தான் முருகனுக்கு அந்த இடம் பிடித்திருக்கிறதோ என்னவோ?

நானெல்லாம் முருகன் கட்சி. எத்தனை இடர்(?? :)) )வந்தாலும் சமாளிப்போம்.

said...

இப்படி வேற ஒரு ரூட் இருக்கா? அடப்பாவிங்களா!

:)

said...

போனவாரம் ஒரு innis and ginn ன்னுஆங்கிலேய சரக்கு அடிச்சேன். ஒன்னடிச்சா ஆறு அடிச்ச மாதிர் இருந்தது. அதை தமிழ் படுத்துவது

said...

//innis and ginn //

இதையெல்லாம் தமிழில் சொன்னால் அதுக்குப் பேரு தமிழ்ப் படுத்துவது இல்லை. தமிழில் படுத்துவது. ஆமாம் இதெல்லாம் தங்கமணி அலவ் பண்ணறாங்களா? இருங்க ஒரு போன் அடிச்சு பேசறேன்.

said...

"ஆறு" ஆறோ வந்துட்டு போறாங்க.

நானும் உள்ளேன் ஐயா.

said...

வாரும். வாரும். உம்மைத்தான் காணுமேன்னு பார்த்தேன். இவ்வளவு பெரிய பதிவு போட்டாலும் வெறும் உள்ளேன் ஐயாதானா. என்ன அநியாயமய்யா இது?

said...

அவசரத்து லபோட்ட தயாபின்னூட் டமடலே
அவ(தங்கமணி) சரத்து(கண்டிஷன்) போட்டதாலே

said...

அப்படி இப்படி வாரும்! வாரும்! அப்படின்னு
திருவிளையாடல் சிவாஜி கணக்கா
கூறும் கூறும் , கூறிப் பாரும்
சவுண்டு விடுறீரு.

ஏதோ சேந்ததிலிருந்தே ரெண்டே ரெண்டு வாரமா
வெண்பா கிளாஸ் பக்கம் வர்ல.

அதுக்காக கோச்சுட்டு இப்படி வெண்பா இல்லாம
பதிவு போடறதா.

எவ்வளவு அழகான டாபிக் ஆறு.

"போட்டு தாக்க வா."

அழகா அடி எடுத்து குடுத்துட்டேன்.

said...

அன்பும் பன்பும் உள்ள வவா சங்கத்தினரே, நம்ப சங்குத்துக்கு பங்கம் வராம இருக்கனும்னு நல்ல யோசிச்சி... யோசிச்சி நம்ம கைப்புள்ள ஒரு ஆறு போட்டிருக்காரு. வந்து பாத்துட்டு அண்ணணை வாழ்த்திட்டு போங்க கண்ணுங்களா.

http://govikannan.blogspot.com/2006/06/blog-post_115133137227354487.html

said...

//அவசரத்து லபோட்ட தயாபின்னூட் டமடலே
அவ(தங்கமணி) சரத்து(கண்டிஷன்) போட்டதாலே//

ஒத்துக்கறேன். அதுதாங்க முக்கியம். அதனால சும்மா விடறேன். அடுத்த பின்னூட்டமும் போட்டுடீங்களே. அதையும் பார்த்ததுனால.

said...

//அதுக்காக கோச்சுட்டு இப்படி வெண்பா இல்லாம
பதிவு போடறதா.//

நீங்க இப்படி சொல்லறீங்க. முதல் பின்னூட்டம் பாருங்க அவரு அப்படி சொல்லறாரு. நான் என்ன பண்ண? உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

//"போட்டு தாக்க வா."

அழகா அடி எடுத்து குடுத்துட்டேன். //

இதுக்குத்தான் கிளாசுக்கு எல்லாம் சரியா வரணமுன்னு சொல்லறது.

போட்டு தாக்க வா - முதலில் இது போட்டுத் தாக்க வான்னு இருக்கணும் இல்லைன்னா புணர்ச்சி விதிகள் படி தப்புன்னு ஒரு யானை வந்து குதிக்கும். அதனால அதை முதலில் சரி பண்ணலாம்.

அடுத்தது இதை அலகிட்டா - போட்/டுத் தாக்/க வான்/னு. இது தேமா தேமா தேமா (நேர்நேர் நேர்நேர் நேர்நேர்), ரெண்டு இடத்திலேயும் மா முன் நேர் வருது. வரலாமோ? கூடாது. அப்புரம் மோனைன்னு ஒரு விஷயம் இருக்கு. ஆன இப்போ அதை சாய்ஸில் விட்டுக்கலாம்.

இனிமேலாவது ஒழுங்கா கிளாஸுக்கு வர வழியைப் பாருங்க.

said...

// வந்து பாத்துட்டு அண்ணணை வாழ்த்திட்டு போங்க கண்ணுங்களா.//

இங்க வந்தே விளம்பரமா? இருந்தாலும் நான் சொல்லிப் போட்ட பதிவுன்னு சும்மா விடறேன். போ.போ.பொ.போ.

:)

said...

தனி மடலில் வந்தது.
//ஆறு பதிவுன்னு இப்படி கூறு போட்டச்சா? நடத்து மவனே - சங்கர்

said...

//உங்க ஆறு அருமைங்க...அதிலும் 6 பீர் கொன்னுடீங்க...இருங்க நானும் போய் ஒரு 6 பேக் எடுத்திடு வந்துடரேன்.....//

பதிவுல வேற என்ன எழுதினாலும் கண்ணுல படாதே. நல்ல பசங்கப்பா. நேத்தே படிக்கச் சொன்னா என்னடா இவன் ஆறு பதிவுக்குப் பதிலா 12 பதிவு போட்டு இருக்கான்னு கேட்க ஒரு சான்ஸ் இருந்ததால இப்போ சொல்லறேன். முழு பதிவையும் சூடு குரு.

said...

சங்கரு, நம்ம பதிவ எல்லாம் படிக்கயால? நல்லா இருக்கா? அப்பப்பம் வந்துட்டு போட மக்கா. அப்புறம் வந்தேன் போனேன்னு இருக்காம, இந்த மாதிரி நல்லா இருக்கு அப்படின்னு (என்னது, நல்லாயில்லைன்னாலா? அப்படி எல்லாம் பேசப்பிடாது) கருத்து சொல்லிட்டு போணும் என்ன?

அப்புறம் சீக்கிரம் தமிழில் டைப் அடிக்க கத்துக்கோ. நாந்தான் நீ இங்கிலிபீஸுல எழுதனத தமிழில் மாத்தி போட்டுப்பிட்டேன் பாத்தியா?

said...

// பமகவின் நிரந்தர தலை முகமூடியார்//

said...

//பமகவின் நிரந்தர தலை முகமூடியார்//

பமக என்றால் என்ன? ஒர் லெஜன்ட் பதிவை போடுங்கப்பா. என்ன மாதிரி ட்யூப் லைட்களுக்கு ஒன்னுமே புரிய மாட்டிங்கீது?

said...

அட என்ன இப்படி கேட்கறீங்க? முன்னமே ஒரு தடவை சுட்டி எல்லாம் குடுத்தேனே. இப்பவும் தரேன். நம்ம மருத்துவரோட இந்த பதிவுக்குப் போங்க. அதுல பின்னூட்டங்களில் இன்னும் பல சுட்டிகள் இருக்கு. அதெல்லாம் பாருங்க. அப்புறம் உங்களுக்கு நல்ல பதவியா ஒண்ணு போட்டுத் தரோம்.

உங்களை நம்ம வ.வா. சங்கத்தில எங்க ர.ம.செ.த. தேவுக்கு எதிரா நடந்த ஒரு மோசடி பத்தி விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷன் போட்டு அதுக்கு தலைவரா நியமனம் பண்ணியிருந்தேனே. அந்த மேட்டர் பத்தியும் கொஞ்சம் பாருங்க.

said...

பார்த்துட்டேன்..

said...

கட்சியில் சேர ஆசைன்னு ஒரு பதிவோ பின்னூட்டமோ போடுங்க. நல்ல பதவியா ஒண்ணு ரெகமென்டேஷனில் வாங்கித் தரேன்.

'கட்டாய கட்சி மாற்றம்' என்ற தலைப்பில் விரைவில் இங்கு ஒரு பட்டிமன்றம் நடைபெறுமென தெரிவித்துக் கொள்கிறேன். :-D

said...

ஆற்றலரசி ஒளவையார் கண்டுக்கலைன்னா கட்டாய கட்சிமாற்றம் பற்றிய பட்டிமன்றம் நடைபெறாது. இப்போ ஆற்றலரசியார் வேறு பணியில் இருக்கிறார் - அதனால் இது கவனத்திற்கு வராது என்று எண்ணுகிறேன். :-)

said...

குமரன், இதுதான் நல்ல சமயம். வாங்க வேட்டைக்கு கிளம்புவோம். முடிஞ்ச வரை கட்டாய கட்சி மாற்றம் செய்து கட்சிப் பணியாற்றுவோம்.

said...

கட்சிப் பணி தானே. ஆத்திட்டாப் போச்சு.

ஆனா பொன்னரசியார் எந்தப் பணி ஆற்றப் போயிருக்கிறார்ன்னு கேக்கலையே? நாமக்கல்லாருக்குத் தெரியும் அவர் எந்த வேலைக்குப் போயிருக்காருன்னு. நாராயண நாராயண.

said...

எந்த கட்சியில் சேரணும். சரி குமரன், இ.கொ வுடன் சேர்ந்துவிடலாம். ஆனால் ஒரு கண்டிஷன்...

said...

அந்த கண்டிஷன் என்னவென்றால். நான் நிரந்தர தொண்டன் சரியா?

said...

வணக்கம்... என்ன பேசறீங்கன்னு படிச்சி புரிஞ்சிக்க பொறுமை இல்லை.. இருந்தாலும் என் மொய் 6ல இது 3ஆவது..

said...

சிவா, உங்க வாத்து நல்லா இருக்குங்க.;. - கொத்ஸ், இதோட 100???

said...

//இன்னுமொரு பட்டமா? இருக்கட்டும். இருக்கட்டும். தம்பி தேவு, இந்த பட்டமெல்லாம் நோட் பண்ணி வச்சுக்கவே ஒரு ஆளு போடணுமுன்னு சொன்னேனே. என்ன ஆச்சு? //
இந்த டயலாக்கைக் காபி ரைட் வாங்காமல் பயன்படுத்தியதற்காக, உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் தயாராகிக் கொண்டே இருக்கிறது..

said...

போட்டு+தாக்க= போட்டுத்தாக்க

புணர்ச்சி விதிகளின்படி சரி.

ஆனால் இங்கு, போட்டு அப்புறமா தாக்கு
அப்படிங்கற அர்த்தத்துலச் சொல்றதாலே

போட்டு தாக்க வா,வரியை

போயிட்டு தாக்க வா

அப்படின்னு மாத்திக்கிறேன்.

இந்த முறை நாந்தேன் 100.

said...

//ஆனா பொன்னரசியார் எந்தப் பணி ஆற்றப் போயிருக்கிறார்ன்னு கேக்கலையே? நாமக்கல்லாருக்குத் தெரியும் அவர் எந்த வேலைக்குப் போயிருக்காருன்னு//
நாமக்கல்(நக்க)லாரே ,
அது என்னங்க பணி?

சொன்னீங்கன்னா, நானும் தெரிஞ்சிக்குவேன் :)

said...

//கஷ்டப்பட்டு எழுதியாச்சு. ஒரு 'ஆறு'தல் பரிசாவது தாங்கப்பா//

என்னுடைய ஆறுதல் என்றும் உண்டு

said...

6 தல் என்ன 100 ம் நமதே

said...

// நாமக்கல்லாருக்குத் தெரியும் அவர் எந்த வேலைக்குப் போயிருக்காருன்னு. நாராயண நாராயண. //

அட நீங்களே சொல்லுங்க. பாவம். அவங்களே வந்து என்னன்னு கேட்கறாங்க.

said...

//நான் நிரந்தர தொண்டன் சரியா? //

அடடா. இந்த ஒரு வரிக்காகவே நீங்க கால்கரி பகுதி கொ.ப.சே.வா அப்பாயிண்டட்.

(சேரும் போதே பதவி வாங்குவது எப்படின்னு கரைச்சு குடிச்சி இருக்கீங்க. சீக்கிரமே அகில உலகத் தலைவர் பதவிக்கு அடி போட்டாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை போல இருக்கே)

said...

//என்ன பேசறீங்கன்னு படிச்சி புரிஞ்சிக்க பொறுமை இல்லை.. //

மேட்டர் பதிவு போட்டாஇப்படி. வெட்டிப் பதிவு போட்டா மேட்டரே இல்லைன்னு திட்டறது. இப்போ நான் என்னதான் பண்ணறது?

(ஆனாலும் ரங்கமணியை நினைச்சா பாவமாத்தான் இருக்கு.)

said...

//கொத்ஸ், இதோட 100??? //

ஆமாங்க. இந்த தபா நீங்கதான் 100 அடிச்சது. இந்த சிபி என்ன ஆனாருன்னு தெரியலையே....

said...

//இந்த டயலாக்கைக் காபி ரைட் வாங்காமல் பயன்படுத்தியதற்காக, உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் தயாராகிக் கொண்டே இருக்கிறது.. //

அட நமக்குள்ள என்னங்க. இதுக்கெல்லாமா கோர்ட்டு கேஸுன்னு போறது?

விடுங்க. உங்களுக்கு நான் அனுப்புற வக்கீல் நோட்டிஸுகளில் ஒண்ணை குறைச்சுக்கிறேன். இதை நீங்களும் கேன்ஸல் பண்ணிருங்க.

ஓக்கேவா?

said...

//நாராயண நாராயண//

அதான் தெளிவாப் போட்டிருக்கேனே என்ன பணின்னு. நாமக்கல்லார் தான் சொல்லிக்கிட்டு இருந்தார். நம்ம பொன்ஸ் புதுசா நாரதராவும் பொறுப்பெடுத்துக்கிட்டு இருக்கிறதா...

said...

//போயிட்டு தாக்க வா //

பெருசு. என்ன சொன்னாலும் கேட்காம இந்த ஆட்டம் ஆடறயே. இன்னும் கிளாசுக்கு வந்து கத்துக்கிட்டா உன்னை சமாளிக்கவே முடியாது போல இருக்கே.

முதலில் இப்படி இருந்தாலுமே த் வரணும். போயிட்டுத் தாக்க வான்னு போட வேண்டாமா. உமக்கு யானை மிதித்து மரணம் அப்படின்னு எழுதியிருந்தா யாரால மாத்த முடியும்?

அப்புறம் போயிட்டு வந்துட்டுன்னு எல்லாம் எழுதக் கூடாது. வேணும்னா போய்விட்டுத் தாக்க வா அப்படின்னு போடணும். அப்படி போட்டாலும் தளை தட்டும். (தாக்க வா - மா முன் நேர்).

அதனால போய்விட்டுத் தாக்கவே வா அப்படின்னு வேணா வெச்சுக்கலாம். என்ன சொல்லறீங்க? :)

said...

//இந்த முறை நாந்தேன் 100. //

இல்லை பெருசு. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

said...

//சொன்னீங்கன்னா, நானும் தெரிஞ்சிக்குவேன் :) //

யோவ் சிபி,

அக்கா கேட்கறாங்க இல்ல. வந்து பதிலச் சொல்லு.

(ஆமாம் அக்காவுக்கு செக்ரட்டரியா எப்பைய்யா ஆன?)

said...

//என்னுடைய ஆறுதல் என்றும் உண்டு //

அதான் அரபி பதிவு எல்லாம் போடறது இல்லையா? ரொம்ப ஆறிப் போயிட்டீரு போல!

said...

//6 தல் என்ன 100 ம் நமதே //

ஆறுக்கும் நூறுக்கும் என்ன வித்தியாசம்.

ஆறு வந்து இந்து வாலிபன். நூரு முஸ்லிம் வாலிபி.

:) (யாரு சிரிக்கறாங்களோ இல்லையோ, நானாவது சிரிச்சி வைக்கறேன்.)

said...

//நம்ம பொன்ஸ் புதுசா நாரதராவும் பொறுப்பெடுத்துக்கிட்டு இருக்கிறதா...//

அடடா! இவங்க கையில் எதாவது பழம் மாட்டிச்சின்னா ஜாக்கிரதையா இருந்துக்கோங்கப்பா. இல்லை எவனாவது ஒருத்தன் துண்டைக்காணும் துணியைக் காணுமின்னு ஓட வேண்டியது இருக்கும்.

said...

யோவ்...என்னாய்யா...ஜெனரல்லா...பின்னூட்டம் மாதிரி பதிவப் போட்டுட்டு...பதிவு மாதிரி பின்னூட்டம் போடுவீரே ...என்ன மாறிட்டீரா?

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் நூத்துக்கு மேற்பட்ட பதிவுகள் வாங்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் ஆமா..நல்லா இருங்க...

said...

சொல்ல மறந்துட்டேனே...
நம்ம தமிழ் சங்க பிரசிடெண்ட் ஊருக்கு வந்திருந்தார் தெரியுமா?

said...

இலவசம்,

//துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது//

பல்கலை வித்தகர இருக்கீங்க... அசத்திப்புட்டீங்க... இப்பத்தான் இத்த மரமண்டைக்கு புரிஞ்சுச்சு அப்படின்னா பார்த்துக்கோங்க. ரெண்டு நாள என் மண்டை ரீ-பூட் ஆக மட்டேன்னு அடம் பிடிச்சுடுத்து சாரி...

சீரியஸ்லி ரொம்ப யூஸ்-ஃபுல் பதிவைய்யா இது :-)

said...

அண்ணாத்தே...

ஆறுன்னாவே நமக்கு நினைவுக்கு வர்ரது முருகர் தாம்பா


ஆறுமுகமான பொருள்
நீயருள வேணும்
ஆதியருனாசலத்தில்
அமர்ந்த பெருமானே..


ஆறுபடை வீடுகொண்ட
திருமுருகா அப்படின்னு...

ஐ ஐ... மொத்தத்தையும் இங்க எழுதிட்டா என்னோட ஆறு பதிவுக்கு என்ன எழுதறதாம் ;)

அழைப்புக்கு நன்றி.. விரைவில் எழுதுகிறேன்.

அன்புடன்
ஜூவா

said...

//ஐ ஐ... //

இங்கேயுமா?????

ஜீவா. நீங்க ஐ மட்டும் சொல்லிட்டுப் போயிட்டீங்க? ஒள யார் வந்து சொல்றது?

ஆமாம். நீங்கா ஜீவாவா ஜூவாவா?

said...

யோவ்...என்னாய்யா...ஜெனரல்லா...பின்னூட்டம் மாதிரி பதிவப் போட்டுட்டு...பதிவு மாதிரி பின்னூட்டம் போடுவீரே ...என்ன மாறிட்டீரா?//

இப்போ என்னதான் சொல்லறீரு. உம்மை மாதிரி எல்லாம் காமெடியா எழுதத் தெரியாது. நானும் என்னென்னவோ பண்ணிப் பார்க்கறேன்.

//ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் நூத்துக்கு மேற்பட்ட பதிவுகள் வாங்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் ஆமா..நல்லா இருங்க...//

ஹிஹி

said...

//சொல்ல மறந்துட்டேனே...
நம்ம தமிழ் சங்க பிரசிடெண்ட் ஊருக்கு வந்திருந்தார் தெரியுமா? //

அவரு அங்க வந்தது உங்களுக்குத் தெரிய காரணம் நாந்தான். உங்களுக்கு அது தெரியுமா?

said...

//பல்கலை வித்தகர இருக்கீங்க... அசத்திப்புட்டீங்க... //

நன்றி. நன்றி.

//இப்பத்தான் இத்த மரமண்டைக்கு புரிஞ்சுச்சு அப்படின்னா பார்த்துக்கோங்க. //

ரொம்ப இயற்கையோட ஒட்டி இருக்கீங்களா அதான் கொஞ்சம் பாசம் ஜாஸ்தியா ஆயிடிச்சோ என்னவோ :)

//சீரியஸ்லி ரொம்ப யூஸ்-ஃபுல் பதிவைய்யா இது :-) //

என்ன யூஸ கண்டீங்க? சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போமில்ல. ;)

said...

//அண்ணாத்தே...//

வாத்தி, இது ஞாயமா? நம்ம இமேஜையே கெடுத்துருவீங்க போல இருக்கே...

//ஆறுன்னாவே நமக்கு நினைவுக்கு வர்ரது முருகர் தாம்பா//

நம்ம எல்லாருக்குமே அப்படித்தானே.

//ஐ ஐ... மொத்தத்தையும் இங்க எழுதிட்டா என்னோட ஆறு பதிவுக்கு என்ன எழுதறதாம் ;)//

இதுவே இங்க எழுதினதுதானே. :D

//அழைப்புக்கு நன்றி.. விரைவில் எழுதுகிறேன்.//

நான் சொன்னா மாதிரி எழுதுங்க. :)

said...

//ஜீவா. நீங்க ஐ மட்டும் சொல்லிட்டுப் போயிட்டீங்க? ஒள யார் வந்து சொல்றது? ஆமாம். நீங்கா ஜீவாவா ஜூவாவா? //

எங்க வாத்தியை பத்தி இப்படி எல்லாம் பேசினா அழுதுறுவேன்.

ஔவ்வ்வ்வ்வ்வ்வ்...

said...

//நீங்கா ஜீவாவா ஜூவாவா?//

அவரு வீரத்துல சிங்கம், ஞாபக சக்தியில யானை, அழகுல மயில், பேசினா கிளி, ....

மொத்ததுல பாக்கறவங்க அவரு ஜீவா?ஜூவான்னு சந்தேகப்படுவாங்க.

said...

நடந்தா ஒட்டகம்

ஓடுனா குதிரை

கிளம்பிட்டாங்கய்யா ! கிளம்பிட்டாங்கய்யா !

said...

//நீங்கா //

இதுக்கு ஒன்னும் சொல்லலை? :-))

said...

//கிளம்பிட்டாங்கய்யா ! கிளம்பிட்டாங்கய்யா ! //

இதெல்லாம் கரெக்ட்டா படியுங்க. ஆனா கிளாசை மட்டும் கட்டடிச்சிட்டு போயிடுங்க.
:D

said...

ஐயா சாமிகளா.. தட்டச்சு பிழையப்பா என்னை விட்டுடுங்கோ.... பொழச்சு போறேன் :((

ஔவ்வ்வ்வ் ஔவ்வ்வ்வ்வ்வ்

said...

உங்களை எல்லாம் எதாவது சொல்ல முடியுமா? அதெல்லாம் அந்த கரிக்காரி (யானையை தன் பக்கம் கொண்ட தலைவி - சரியா?) வந்துதான் கேட்கணும். இது அவங்க டிபார்ட்மெண்ட். அப்புறம் வக்கீல் நோட்டீஸ் எல்லாம் அனுப்புவாங்க.

said...

// பொழச்சு போறேன் :((//

போ.போ.பி.போ.ன்னு நான் சொல்லுவேன் எதுக்கும் குமரனை வேண்டிக்குங்க!

said...

குமரனை வேண்டிக்கிறதா? வேண்டிக்குங்க. வேண்டிக்குங்க. முருகன் அருள் முன்னிற்கும்.

said...

//முருகன் அருள் முன்னிற்கும். //

ஆனா இது பத்தி பதிவு மட்டும் போட்டீங்க, எதிர்வினைப் பின்னூட்டங்கள் எல்லாம் வரும். தயாரா இருங்க.

வேணும்னா எஸ்.கே. கிட்ட ஒரு கிளாஸ் எடுத்துக்குங்க. :)

said...

// அதெல்லாம் அந்த கரிக்காரி (யானையை தன் பக்கம் கொண்ட தலைவி - சரியா?) வந்துதான் கேட்கணும். இது அவங்க டிபார்ட்மெண்ட். அப்புறம் வக்கீல் நோட்டீஸ் எல்லாம் அனுப்புவாங்க. //

கரிக்காரி நோட்டிஸ் கொடுத்தா உடனே நீங்க கால்கரி-காரர் தலைமைல ஒரு கமிட்டி போட்டுருவீங்க!! அவ்வளவு தானே :))

said...

//கால்கரி-காரர் தலைமைல ஒரு கமிட்டி போட்டுருவீங்க!! அவ்வளவு தானே //

கமிட்டி போட்ட உடனே அவரு பொன்ஸ்தான் பிராப்பளம்ன்னு கண்டுபிடிச்சு உங்களை விசாரணைக்கு கூப்பிடுவார். உங்களைக் கூப்பிட்டா உங்க யானையும் வருமா. அதனால அவரு யானையை கூப்பிடுபவர், அதாவது Callகரிகாரர்.

இப்போவாவது பெயர் காரணம் புரிஞ்சுதா?

said...

ஆகா... கடைசியா புரிஞ்சிடுச்சு கொத்ஸ்!!!
ஏன் இப்படி நான் லோகோவில் யானை போடுவதற்கு முன்னமே இப்படி கால்கரின்னு வச்சிருக்காரே, எப்படி இவருக்குத் தெரியும்?!!:)

said...

ஏன்னா அவர் ஒரு தீர்க்கதரிசி. அவரு அப்படி இருக்கிறதுனாலதான் அவரு கமிட்டி தலைவர், நீங்க அக்கியூஸ்ட். புரியுதா? :)

said...

கொத்ஸு ... ஆறு செங்கல்ல வச்சு, 140 அடிக்கு பெரிய வீட கட்டிவிட்டீர்...

said...

//ஏன்னா அவர் ஒரு தீர்க்கதரிசி//

தொண்டர், காரியதரிசி,தலைவர் கடைசியிலே தீர்க்கதரிசியா?

அப்பப்பா....புல்லரிக்கதுப்பா...ஒரு வெத்து பேப்பர்லே சைன் பண்ணி தந்துறேன். தீர்ப்பை நீங்களே எழுதிடுங்க.. வச்ச ஐஸிலே என்ன வேணாலும் பண்ணுவேன்

said...

//கொத்ஸு ... ஆறு செங்கல்ல வச்சு, 140 அடிக்கு பெரிய வீட கட்டிவிட்டீர்...//

கோவியாரே, 140 அடின்னா வாஸ்துபடி சரியில்லை. அதனால இன்னும் நாலு அடி சேர்த்தாச்சு பாருங்க. :D

said...

//என்ன வேணாலும் பண்ணுவேன் //

இந்த தகுதி இருக்கறதுனாலதானே நீங்க விசாரணைக் கமிஷன் தலைவரானது!

எதனை எவன் செய்வானென ஆராய்ந்து
அதனை அவன்கண் விடல்

said...

//எதனை எவன் செய்வானென ஆராய்ந்து
அதனை அவன்கண் விடல்//

அவன் இவன் என்ற ஏக வசனம் இங்கே வேண்டாம் (வீ.பா.க. பொம்மன் ஸ்டைலில் படிக்கவும்)

வேலையைக் கொடுத்தாச்சில்லே.
பேசாமே வேற வேலைய பார்ர்க போய்டணும். நாங்க ஆறிப் போன அரபிய அனுபவங்களயும் தூங்கி போன தேவதூதரையும் எழுப்பணும்

said...

//அவன் இவன் என்ற ஏக வசனம் இங்கே வேண்டாம் (வீ.பா.க. பொம்மன் ஸ்டைலில் படிக்கவும்)//

யோவ். நாங்க ஆண்டவனையே அட லூசுன்னு கூப்பிடற பரம்பரை தெரியுமில்ல. எங்களைப் போயி..("பித்தா பிறை சூடி" - மேலதிக விபரங்களுக்கு எஸ்.கே, குமரன், ஜிரா கம்பெனியினரை அணுகவும்)

//வேலையைக் கொடுத்தாச்சில்லே.//

கமிஷன் போட்டாச்சே. அவ்வளவுதான். அறிக்கையெல்லாம் யாருக்கு வேணும்? யாராவது கேட்டா கமிஷன் போட்டாச்சேன்னு சொல்லிக்கிட்டே இருக்கல்லாம். உமக்கும் ஒரு தலைவர் பதவி. அறிக்கை எதாவது குடுத்து காரியத்தை கெடுத்து வைக்காதேயும்.

//பேசாமே வேற வேலைய பார்ர்க போய்டணும்.//

பேசாமலேயா? ஐயா அது கஷ்டம். வேற வேலை இருந்தா இங்க ஏன் இப்படி. ஹிஹி....

said...

//நாங்க ஆண்டவனையே அட லூசுன்னு கூப்பிடற பரம்பரை தெரியுமில்ல//

அடங்க மாட்டீங்க போலிருக்கே.. எப்படியோ பரம்பரை பகையை வளக்கிறீங்க....

நல்லா இஙருங்கையா

said...

//எப்படியோ பரம்பரை பகையை வளக்கிறீங்க....//

நானா? சிவா, நீங்க கூடவா சில பதிவுகளை சரியா படிக்கறது இல்லை?

அட ச்ட். திரும்பி படிச்சா வேற மீனிங். வருதே. என்ன சொல்லறேன். என்னோட பதிவுகளை சரியா படிக்கறது இல்லை? :)

said...

//நீங்க கூடவா சில பதிவுகளை சரியா படிக்கறது இல்லை?
//

???????

said...

//கமிஷன் போட்டாச்சே.//

நமக்கு எவ்வளவு?

150?

said...

150

said...

பரம்பரை பகையை வளர்க்கறா மாதிரி பதிவுகள் வர வலைப்பூ நம்ம வலைப்பூ இல்லை..

புரிஞ்சுதா குமரன்? ;)

said...

நமக்கு எவ்வளவு?//

இப்படி பப்ளிக்லையா பேசறது...

150 நீங்கதான்!

said...

150 //

பொன்ஸ். Better Luck Next Time.

சண்டைக்கு வரதுக்கு முன்னாடி டிஸ்கி போடறேன்.

எனக்கு உங்க கையால 150 பெறும் அதிர்ஷ்ட்டம் அடுத்த முறையாவது வாய்க்க கிடைப்பதாக. :D

said...

நம்ம வெண்பா வாத்தி ஆறு பதிவு போட்டு இருக்காரு. சும்மா சூப்பரா புகுந்து விளையாடி இருக்காரு.

கொஞ்சம் இங்க போய் பாருங்க.

said...

// இணைய பாட்ஷா //

நோட் பண்ணியாச்சு தலைவா.. இல்ல தலீவ்வா.. எது கரெக்ட்ட்

said...

பாட்டிலுயர் ஆறுபடை வீட்டிலுயர் சரவணபவானந்த ஞானகுருவின் ஆறு வீடுகளையும் தொட்டு ஆறு பதிவு போட்டிருக்கீங்க கொத்சு. பாராட்டுகள்.

திருப்பரங்குன்றந்தான் முதல் படை வீடு. ஏன்னா? அந்த வரிசைலதான் நக்கீரர் திருமுருகாற்றுப்படைல சொல்லீருக்காரு. மதுரையில தொடங்கி மதுரையில முடிச்சிருப்பாரு. அதாவது திருப்பரங்குன்றத்துல தொடங்கி பழமுதிர்ச்சோலைல முடிச்சிருப்பாரு. மிகவும் அருமையான தமிழ் நூல். தமிழரின் முதல் இறைநூல்.

ஆறுசுவைகளும் அருமை. அட எதையாவது நாக்கு வேண்டாங்குதா? ம்ம்ம்ம்.

said...

கால்கரிகாரர், கரிக்காரி, மு.அ.முன்னிற்கும், 6 செங்கல்லை வெச்சு 150அடி வீடு, அப்பா!..... எவ்வளவு நிகழ்வுகள் இந்தக் களஞ்சியத்தில்!!

குமரனுக்கு எதிர்வினைப் பின்னூட்டம் எல்லாம் பற்றி நல்லாவே தெரியுமே!~
அவரும்தான் கூட இருந்தாரே!

ஆனா, இன்னிக்கு வேற ஒரு பதிவுல கொஞ்சம் மனவருத்தமா ஏதோ எழுதியிருந்தாரு.
படிச்சீங்களா!?

ப....ப...வை!

said...

//நோட் பண்ணியாச்சு தலைவா.. இல்ல தலீவ்வா.. எது கரெக்ட்ட் //

நோட் பண்ணிட்டீங்களா? வெரி குட்.

தலைவா வந்து ரொம்ப ஃபார்மல். அதனால நம்ம சப்ஜெக்டுக்கு தலீவா தான் சரி.

said...

//பாராட்டுகள்.//

உங்களைத்தான் காணுமேன்னு நினைச்சேன் ஜிரா.. இப்போதான் இந்த பதிவே முழுமையாச்சு.

//திருப்பரங்குன்றத்துல தொடங்கி பழமுதிர்ச்சோலைல முடிச்சிருப்பாரு. //

அதுதான் விஷயமா? அது எனக்கு தெரியாதே.

(ஜிரா: விஷயம் இதுதான்.
நான்: அதுதான் எனக்குத் தெரியுமே!
ஜிரா: எப்படி?
நான்: நீங்கதானே இப்படி சொன்னீங்க. )

//எதையாவது நாக்கு வேண்டாங்குதா? //

அதான் சசப்பு துவர்ப்புன்னு எல்லாத்தையும் போட்டு வாங்கறோமே. அப்புறம் என்ன?

சரி, சண்முகனைச் சொன்னீங்க, சாப்பாட்டைச் சொன்னீங்க. மத்த மூணையும் டிப்ளொமாட்டிக்கா விட்டுட்டீங்களே. இது என்ன ஞாயம்?

:D

said...

//எவ்வளவு நிகழ்வுகள் இந்தக் களஞ்சியத்தில்!!//

இந்த லிஸ்டில் பதிவு பத்தி ஒரு வார்த்தை கூட இல்லை. வஞ்சப் புகழ்ச்சி பொங்கி வழியுதே!

//குமரனுக்கு எதிர்வினைப் பின்னூட்டம் எல்லாம் பற்றி நல்லாவே தெரியுமே!~//

குமரனுக்குத் தெரியும். ஆனா அது நாங்க ஜீவ்ஸுக்கு சொன்னது. அவருக்கு அதெல்லாம் தெரியாதே.

//குமரனுக்கு எதிர்வினைப் பின்னூட்டம் எல்லாம் பற்றி நல்லாவே தெரியுமே!~//

இப்படி மொட்டைத்தாத்தா குட்டையில் விழுந்ததா சொன்னா எப்படி? கொஞ்சம் சுட்டியும் தந்தா போயி வேடிக்கை பார்ப்போமில்ல.

//ப....ப...வை! //
அதான் வச்சுட்டீங்களே!

said...

நானும் பட்டியல் போட்டு விட்டேன் வாங்க பாருங்க
http://sivacalgary.blogspot.com/2006/06/top-10_30.html

said...

கால்கரிக்காரரே, உம்ம பட்டியல் ரொம்ப பேசப்படப்போகுது. அவ்வளவுதான் சொல்லப்போறேன்.

said...

இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர். ஆனால் பல பின்னூட்டங்கள் வேறு விஷயங்களை விவாதிக்கின்றனவே!!.

இந்த பின்னூட்டத்திற்கும் பதிவுக்கும் கூட சம்பந்த்தம் இல்லை என்று சொல்லி விடாதீர்கள். பதிவு நன்றாக இருந்தது. எனவே, பிடியுங்கள் ஆறுதல் பரிசு.

said...

பாலசந்தர் கணேசன்,
எங்கே போனீர்கள் இத்தனை நாள்?

//யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர்.//

மெனக்கெட்டு எண்ணியிருக்கிறீர்களே! அதற்கே பாராட்டுக்கள்.

said...

//கால்கரிக்காரரே, உம்ம பட்டியல் ரொம்ப பேசப்படப்போகுது. அவ்வளவுதான் சொல்லப்போறேன்//

பார்க்கலாம்

said...

பாலசந்தர் கணேசன், என்ன ரொம்ப நாளா ஆளைக்காணும். நல்லா இருக்கீங்களா?

வர பின்னூட்டம் ஒண்ணு ஒண்ணுக்கும் தனித்தனியா பதில் போட்டா 50% என் பின்னூட்டம் இல்லாம என்ன இருக்கும்? அதனாலதான் 160-ல் சரிபாதி 80 பின்னூட்டம் என்னுதான். சரியாத்தான் எண்ணியிருக்கீங்க. :)

//பின்னூட்டங்கள் வேறு விஷயங்களை விவாதிக்கின்றனவே!!.//

அதெல்லாம் நான் ஒண்ணும் என் பதிவைப் பத்திதான் பேசணுமின்னு கட்டாயப் படுத்தறாங்க. மெயில் ஐ.டி. தெரியாதவங்க இங்க வந்து அவங்க சொந்தக் கதையெல்லாம் கூட பேசுவாங்க. நான் ஒண்ணும் சொல்லறது இல்லை.

//பதிவு நன்றாக இருந்தது. எனவே, பிடியுங்கள் ஆறுதல் பரிசு. //

ரொம்ப நன்றி கணேசன்.

said...

//மெனக்கெட்டு எண்ணியிருக்கிறீர்களே! அதற்கே பாராட்டுக்கள். //

நிறையா பேருக்கு நம்ம பதிவு கண்ணு உறுத்துது. கணேசன் அட்லீஸ்ட் நல்லதனமா நம்ம கிட்ட வந்து சொல்லறாரு. ஆனா வேற பதிவுல போயி வயறு எரியறவங்களைப்பத்தி என்னத்தா சொல்லறது? :D

said...

அன்புள்ள இகோ.
இது உங்களுக்கு முதல் பின்னூட்டம்.

இப்ப....
//ஆறிப் போகுமுன் ஒரு ஆறு பதிவு //
ஏன்யா ஆறிப்போனத இன்னும் ஜவ்வா இழுக்கிறீங்க. :))

கொத்தனாரு இப்ப பார்ம்ல இல்ல போல. 200 அடிக்க ரெம்பவே தினருறாரு. ஏதோ என்னால முடிஞ்சது இது ஒன்னு.

said...

இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர். ஆனால் பல பின்னூட்டங்கள் வேறு விஷயங்களை விவாதிக்கின்றனவே!!. //

பாலசந்தர், இ.கொ. என்ற பெயர் கேட்டாலே 100 தான் ஞாபகம் வரும். அதனால் தான்

said...

//பார்க்கலாம் //

இன்னும் கொஞ்சம் விவரம் கொடுத்து இருக்கலாமோ? ஏன் இந்த கூட்டணி அமைப்பு அப்படின்னு?

அப்புறம் ஏன் பாதி பதிவு ஆங்கிலத்தில்?

said...

//இது உங்களுக்கு முதல் பின்னூட்டம்.//

வாங்க ராபின்ஹூட். நீங்க வரது ரொம்ப சந்தோஷம்.

//கொத்தனாரு இப்ப பார்ம்ல இல்ல போல. 200 அடிக்க ரெம்பவே தினருறாரு. ஏதோ என்னால முடிஞ்சது இது ஒன்னு. //

அதாவது இப்போ நான் டார்கெட்டா 100 வெச்சா, நீங்க எல்லாம் ரெகுலரா வந்த அதை 150ஆ மாத்தலாமே. முதல் தடவைன்னால ஒண்ணு ஓக்கே. அடுத்த முறை 5ஆவது போடணும். ஓக்கே? :D

said...

//பாலசந்தர், இ.கொ. என்ற பெயர் கேட்டாலே 100 தான் ஞாபகம் வரும். அதனால் தான் //

மேலே பாருங்கள் கால்கரிக்காரரே. இனிமே 150 ஞாபகத்துக்கு வரணும். புரியுதா?

தவிர்க்க முடியாத காரணங்களினால் அடுத்த பதிவிலிருந்து நம் வாசகர்கள் தலைக்கு 7 பின்னூட்டங்கள் போட வேண்டுமென கேட்டு கொள்கிறேன். இதனைப் பொருட்படுத்தாமல் வழக்கமான ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

said...

//இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருந்தாலும், யார் இட்டது என்று பார்த்தால் கிட்டதட்ட 80 நீங்கள், கிட்டதட்ட 15 குமரன் மற்றும் பல பதிவர்கள் ஆளுக்கு 5 என்று இட்டுள்ளனர். //

Aaga ithu thaan matteraaaa? t'veli Aalunga alwa kindi kuduppaanganu summava solraanga! :)
@koths, kochukaatheenga, coz, Aruvathu sinam. :)
btw, really enjoyed your Aaru!

said...

//t'veli Aalunga alwa kindi kuduppaanganu summava solraanga! :)//

அம்பி, லேட்டாத்தான் வந்துருக்கேன்னு பார்த்தா ராங்க் ரூட்டில வேற போறியே. அவங்களுக்குச் சொன்ன பதிலும் பாக்கணமில்ல....

said...

thalaiva
i posted the next section in anjel enatha anmai:-)))

said...

Dollar S,

Have taken note. (enjoy your free advt.!)

said...

கொத்துஸ்,
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

said...

நன்றி சிவா அவர்களே... உங்களுக்கும் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.