Wednesday, April 18, 2007

கோச்சிங் செண்டர் நோட்டீஸ்!

இடம் : வ.வா.சங்கம்

கைப்பு வழக்கம் போல் பேண்டேஜ் பாண்டியனாக உள்ளே நொண்டியபடி வருகிறார். சங்கத்தில் தேவ், தம்பி, விவசாயி, புலி எல்லாரும் ஒரு பக்கமாக உக்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அருகே உட்கார்ந்து கொண்டு சங்கத்துக் கணக்கு வழக்கை எழுதிக் கொண்டு இருக்கிறார் வெட்டி. இதிலெல்லாம் சேராமல் புத்தகமும் கையுமாய் ஒரு ஓரத்தில் ராயல். இன்னொரு சைடில் பேனாவை முகவாயில் தட்டியபடி ஒரு கவுஜ எழுதும் மூடில் இருக்கிறார் சிபி. தல தலையைக் கண்டவுடன்....

தேவு: தல என்ன ஆச்சு? இன்னைக்கு யாரு முறைவாசல் வெச்சாங்க? அந்த பாழாப் போன கட்டதொரையா? இல்ல அந்த படுபாவி பார்த்திபனா? யாரு அடிச்சாங்க தல? இது யாரு வேல?

குறுக்கில் புகுந்த விவ்ஸ் : யாரு அடிச்சா என்னடா? தல, எங்கெங்க அடிச்சாங்க? எப்படி எப்படி அடிச்சாங்க அதச் சொல்லுங்க தல.

கைப்பு:
ஏண்டா நாதாறிப் பசங்களா, இங்க ஒருத்தன் கண்டபடி அடி வாங்கிட்டு வந்திருக்கேன், இப்படி நிக்க வெச்சு கதையாட கேட்கறீங்க? சினிமாவாடா பாத்துட்டு வரேன் உங்களுக்கு கதை சொல்ல? வாங்குனது பூரா அடிடா அடி. நான் அப்படி எல்லாம் அடி வாங்குறது உங்களுக்கு எல்லாம் மொறவாசல் வெச்சு செய்யுற வேல மாரியாடா தெரியுது?

சிபி: தல, எனக்கு ஒரு டவுட்டு, அடிக்கிற கைதான் அணைக்கும் அப்படின்னு சொல்லுவாங்களே. அடிச்ச பின்னாடி உங்களை அணைச்சாங்களா தல?

கைப்பு: ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா,கிளம்பிட்டாங்க. என்னடா கேள்வி கேக்குற. அவனுங்க எல்லாம் பாத்தா அணைக்கிற ஆளுங்க மாதிரியாடா தெரிஞ்சுது, அவனுங்க அணைச்சது எல்லாம் அவனுங்க குடிச்சுட்டுப் போட்ட சிகரெட்டைதாண்டா.

வெட்டி: தல, உங்களை அடிச்ச கூட்டத்துல ரெட்டி, ராவ் ஆளுங்க யாராவது இருந்தாங்களா? அப்படி எதனா இருந்தா சொல்லுங்க. நான் அப்படி சைலண்டா போயி உக்காந்துக்குறேன்.

புலி: வெட்டி, இப்படி தெலுங்கு வாசனை வீசுனாலே ஆஃப் ஆனா எப்படி? நடந்தது நடந்து போச்சு, நாட்டுல வேற ஊராடா இல்லை? சிக்கிம், கேரளா, கர்நாடகா, ஒரிஸ்ஸா அப்படின்னு லாட்டிரி விக்கிற ஊருங்க இன்னும் எத்தினி இருக்கு, அதுல எதாவது பிடிச்சிக்க வேண்டியதுதானே. இல்லைன்னா சூடான் பக்கம் வா, சூடா எதுனா புடிச்சித் தரேன்.

இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருக்கும் போது அங்கு ஒரு கண்ணாடியை ஸ்டைலாக சுத்திக் கொண்டு வரும் ஜொள்ளுப்பாண்டி, "ஹாய் பாய்ஸ். தல, வாட் ஹேப்பண்ட்? வொய் பேண்டேஜ்?" என்கிறார். அதுவரை அடங்கிப் போய் இருந்த கைப்பு ஆவேசமாக அழத் துவங்குகிறார்.

கைப்பு: எல பாண்டி, நாங்க பாட்டுக்குச் செவனேன்னுதானே இருந்தோம். சும்மா இருந்த பயலுவளை நீதானடா கோச்சிங் செண்டர் ஆரம்பிக்கறேன், கேச்சிங் செண்டர் ஆரம்பிக்கிறேன்னு உசுப்பி விட்ட. அது எங்க போயி முடிஞ்சிருச்சி பாருடா. பப்ளிக் எல்லாம் சேந்து என்னிய இப்படி சாத்திப்புட்டாங்க பாருடா.

சத்தம் தாங்க முடியாமல் புத்தகத்தில் இருந்து தலையை தூக்கிப் பார்த்து ராயல் " தல விசயத்தைச் சொல்லுங்க. இப்போ என்ன ஆச்சு? ஏன் இப்படி நம்ம பாண்டிய வையறீங்க? அவன மாரி உண்டா, அவன் ஸ்டைல் என்ன, அவன் நடை என்ன?" எனத் ஆரம்பிக்க.

கைப்பு: டேய் இருடா. இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? இந்த பாழாப் போன பாண்டி கோச்சிங் செண்டர் ஆரம்பிச்சானா, அதுக்கு நோட்டிஸ் அடிச்சு என் கிட்ட குடுத்தான். இத்தன அப்பரசண்டிங்க இருக்கீங்களேன்னு பார்க்காம நானும் போயி கடைவீதியில் நின்னுக்கிட்டு போறவன் வரவனுக்கெல்லாம் அந்த நோட்டீஸைக் குடுத்துக்கிட்டு இருந்தேன். அப்ப அங்க வந்தாண்டா அந்த பார்த்தி பய.

கைப்ஸ் மூஞ்சியில் கொசுவர்த்தி சுழல்கிறது.

தனக்கே உரிய நீல பட்டு சட்டை வேட்டியில் கைப்பு கடைத்தெருவில் நின்று கொண்டு நோட்டீஸ் குடுத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பின்னாடி நின்று கொண்டு அவரைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார் பார்த்தி.


கைப்பு தெருவில் செல்லும் ஒருவரிடம்: டேய் இங்க வாடா, நோட்டீஸ் குடுத்துக்கிட்டு இருக்கோமில்ல. வாங்கிட்டுப் போகணமுன்னு தெரியாதா? நீயெல்லாம் எதுக்குடா ரோட்டுல நடந்து வர? நாங்க யாருன்னு தெரியுமில்ல. ரௌடிடா ரௌடி.

பின்னால் இருக்கும் பார்த்தி முன்னால் வருகிறார். அவரைப் பார்த்தவுடன் மனதிற்குள் 'எங்க போனாலும் பின்னாடியே வரானே, இன்னைக்கு இவன் கிட்ட வாய குடுத்து மாட்டக் கூடாது' அப்படின்னு நினைச்சுக்கிட்டு பார்த்தியைப் பார்த்து சிரிக்கிறாரு கைப்பு.

கைப்பு:
வணக்கமுண்ணே.


பார்த்தி:
டேய், நான் என்ன உனக்கு அண்ணனா?


கைப்பு (மனதிற்குள்):
ஆஹா. வணக்கம் சொன்னாக்கூட வம்புக்கு இழுக்கறானே. இன்னிக்கி என்னென்ன செய்யப் போறானோ


பார்த்தி:
என்னடா மொனகுற? அது என்ன கையில?

கைப்பு:
அது ஒண்ணுமில்லை. வெறும் பேப்பரு.


பார்த்தி:
எதுக்குடா வெறும் பேப்பரை போறவன் வரவன் கையில எல்லாம் குடுக்குற? எதனா வேண்டுதலா? எனக்கும் குடுடா பார்ப்போம்.


கைப்பு:
இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? விடுங்க. (மனதிற்குள் - இத வெச்சுக்கிட்டு என்ன செய்வானோ, சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணணும். ஆண்டவா, நீதாண்டா என்ன காப்பாத்தணும்)

பார்த்தி: ஆண்டவன் கிட்ட அப்பீல் பண்ணுனா விட்றுவோமா? குடுன்னு ஒழுங்க கேட்டா குடுக்க மாட்ட இல்ல, உன்னிய...

கைப்பு:
ஐய்யோ, உங்களுக்கு இல்லாத பேப்பரா, ஒண்ணு என்ன எல்லாத்தையும் எடுத்துக்குங்க. நான் வரேன்.

பார்த்தி: டேய் நில்றா. நில்றான்னு சொல்லறேன் இல்ல. அப்படி என்னதான் போட்டு இருக்கு நீ ஊருக்கு எல்லாம் குடுக்குற பேப்பருல?

எந்த நேரத்தில் என்ன நடக்கப் போகுதோன்னு பயத்தில், சாதுவாய் கைப்பு பக்கத்தில் நிற்க, பார்த்தி பேப்பரை படிப்பதும், கைப்புவைப் பார்ப்பதுமாக இருக்கிறார். பேப்பரை பல தடவை படிக்கிறார்.


பார்த்தி:
டேய் இதுல என்ன போட்டு இருக்குன்னு தெரியுமா உனக்கு?


கைப்பு:
நம்மளை என்ன எழுதப் படிக்க தெரியாத ஆளுன்னு நினச்சியா? அதெல்லாம் தெரியாமத்தேன் குடுப்போமா? எல்லாம் நான் சொல்லித்தேன் நம்ம பசங்க பிரிண்ட் அடிக்கவே குடுத்தாங்க. இப்ப அதுக்கென்ன?


பார்த்தி:
அப்போ இதுல போட்டு இருக்கறது எல்லாம் நீங்க செய்யறீங்க.


கைப்பு:
செய்யறோம்.
செய்யறோம். அதுக்குத்தானே நோட்டீஸ் அடிச்சுக் குடுக்கறோம். சும்மாவா பின்ன. எல்லாம் நம்ம மக்களுக்காக சேவை. தெரியுமில்ல.

பார்த்தி பக்கத்தில் போகும் சனங்களைப் பார்த்து : ஐயா, கொஞ்சம் இங்க வாங்க. அம்மா நீங்களும் வாங்க. இந்த நோட்டீஸைப் பாருங்க. இதுல போட்டு இருக்கறதை எல்லாம் இவனுங்க செய்வாங்களாம். அதுல தெனாவட்டா வேற பேசறான். ஏண்டான்னு கேட்டா என்னையே முறைக்கிறான். இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க.

நோட்டீஸைப் படித்த சனங்கள் எல்லாம் வெறி ஏறி கைப்புவைப் போட்டு மொத்தி நார் நாராய் கிழிக்கிறது. எல்லாம் அடித்து விட்டு ஓயும் பொழுது பக்கத்தில் இருக்கும் பார்த்தியிடம்.

கைப்பு:
நீ வரும் போதே தெரியும் என் நிலம இப்படித்தான் ஆவப் போவுதுன்னு. இம்புட்டு அடிச்சாங்களே அப்படி என்னத்தய்யா சொன்ன அவங்க கிட்ட?


பார்த்தி:
நீ ஒரு நோட்டீஸ் குடுத்தியே, அதுல கடைசி வரிய படிச்சுப் பாருடா.


கொசுவர்த்தி ரிவர்ஸில் சுற்றி முடிக்கிறது.

கைப்பு: இதாண்டா நடந்தது. நமக்காக ஒரே ஒரு நோட்டீஸ் எடுத்துக்கிட்டு வந்தேன். அப்படி என்னடா போட்டு இருக்கு நம்மள இந்த அடி அடிக்க, கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கடா.

நோட்டீஸை வாங்கிப் படித்த அப்பரசண்டிகள் கிரேசி மோகன் டிராமாவில் காணாமல் போகும் நடிகர்கள் போல அப்பீட் ஆகிறார்கள். காற்றில் பறந்து கீழே விழுந்த நோட்டீஸ் இங்கே.

67 comments:

said...

மொத முறை இந்த மாதிரி எழுதி இருக்கேன். ரொம்ப கொத்தாதீங்க மக்களே!! :))

said...

யோவ் கொத்ஸ், நீரா? நீராய்யா இப்படி எழுதுனது?

அடடடா..........எங்கியோ போயிட்டீரேய்யா!!!!!

எல்லாரும் இப்படி லைன்லே வாங்கப்பா. கொத்ஸ், அப்படியே மானீட்டராண்டை
கொஞ்சம் காலை நீட்டிக்கய்யா. தொட்டுக் கும்புடறவங்க சீக்கிரம் வாங்கப்பா...
( நான் டீச்சராப் போயிட்டேன். இல்லாங்காட்டி..........)

said...

கொத்தரதா?
அருவாளோட வந்துகொண்டிருக்கோம்.:-))

said...

மொத தடவைக்கு ரொம்ப நல்லாவே வந்திருக்கு.....

இந்த trademark "ஆவ்வ்வ்வ்வ்வ்" வ விட்டுடீங்களே?? மன்னிச்சிடேன் போங்க!!

இருந்தாலும் நம்ம சங்கத்து ஆளெல்லாம் வந்து என்ன சொல்ராங்க பாப்போம்!!

said...

கொத்தற மாதிரி எழுதிட்டு கொத்தக்கூடாதுன்னா எப்படி?

said...

கொத்சு

எங்கள் தலைவர் கைப்புவை கிண்டல் செய்ததை கண்டித்து தலை கைப்பு உடனடியாக தீக்குளிப்பார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

said...

வச்சிட்டாங்கப்பூ வச்சிட்டாங்கப்பூ ஆப்பு...கொத்து பரோட்டா, பூமி ஆபத்துன்னு எழதிகிட்டு இருந்தவர சொறிஞ்சுவுட்டு எங்க பொழப்புல ஆப்பு வச்சுட்டாங்கப்பூ...அவ்வ்வ்வ்வ்வ்வ்:-))

said...

ஆகா, கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க.. இனி அடங்க மாட்டாங்க.. :)

நல்லாத்தேன் இருக்கு :)

said...

கொத்ஸ் கலக்கி எடுத்துடிங்க போங்க.

said...

//வெட்டி: தல, உங்களை அடிச்ச கூட்டத்துல ரெட்டி, ராவ் ஆளுங்க யாராவது இருந்தாங்களா?//

சூப்பர் தலைவா! கொத்திட்டீங்க போங்க!
வெட்டி, நீங்க ஏதாச்சும் தெலுங்குல நோட்டீஸ் போட்டுருந்தா, அதையும் சேர்த்து பப்ளிஷ் பண்ணிடுங்க! - ஆனா பாவம் தெலுங்குல வாங்குற ஒதைக்கு கைப்பு வேண்டாம். ஒரு மனுசன் எவ்வளவு தான் தாங்குவாருப்பா? :-)

said...

அருமை அருமை கொத்ஸ்.. எப்படி இப்படி ரகளையா எழுதுறீங்க நீங்க

said...

//துளசி கோபால் said...
யோவ் கொத்ஸ், நீரா? நீராய்யா இப்படி எழுதுனது?
( நான் டீச்சராப் போயிட்டேன். இல்லாங்காட்டி..........)//

டீச்சர்,
மாணவர் தலைவர் கொத்ஸ் நம்ம பள்ளிக்குக் கிடைச்ச பொக்கிஷம்! "சீத்தலைக் கொத்தனார்" - ன்னு ஒரு ஆண்டு விழா டிராமா போட்டுறலாமா? :-)கொத்ஸ் தான் கதை, வசனம், காமிரா, இயக்கம் எல்லாம்!

கொத்ஸ்
அடுத்து என்னாப்பா? டெவில் ஷோ, கிவில் ஷோ ஏதாவது?:-)

said...

நகைச்சுவைப் பதிவு எழுதுற ஆளுக நல்லா எழுதுறீங்க..அதுகூட பெருசு இல்ல..பின்னூட்டம் போடுறவங்களுமில்ல கலக்க ஆரம்பிச்சிட்டாங்க...பாருங்க நம்ம டீச்சரை..பின்னிட்டாங்கல்லா ..

இந்த நகைச்சுவைப் பதிவுகளே சரியான கொத்ஸ் வியாதியோ..சாரி..தொத்ஸ் வியாதியோ?

said...

யார் கொத்ஸ்ஸா? நெசமாவா? சத்தியமா? அவரா? சே சே இருக்காது. நம்ப முடியவில்லை..வில்லை...வில்லை.

said...

//கைப்பு உடனடியாக தீக்குளிப்பார் என்பதை தெரிவித்துகொள்கிறேன். //
டீ குடிக்க போவாருங்க. அவருக்கு தண்ணியிலியே குளிக்க மாட்டாரு. தீயாவது ஒன்னாவது

said...

சூப்பர் கொத்ஸ், KRS சொன்ன மாதிரி அடுத்தது டெவில் ஷோ தான்னு நினைக்கிறேன்.

said...

கொத்ஸு! வவாச க்குதானே இது? நினச்சேன்..பரிசு எனக்கில்ல எனக்கில்ல எனக்கில்ல!
அசத்றீங்களேப்பா!

said...

மொத முறையா?

நல்லாவே இருக்கு...

said...

சூப்பர்!!
அசல் சினிமாவுல பார்த்திபன் வடிவேலு காமெடி பார்க்கறா மாதிரியே இருந்தது!!:-)
கலக்கிட்டீங்க போங்க!! :-)

said...

கொத்ஸ், தலய கொத்துபுரோட்டா போட்டுட்டீங்களே..ஆனா இதுக்கு எல்லாம் அசர மாட்டார் எங்க தல...இன்னும் இந்த மாதிரி எத்தனை அடி அடித்தாலும் தாங்குவாரு :-)

said...

//
மொத முறை இந்த மாதிரி எழுதி இருக்கேன். ரொம்ப கொத்தாதீங்க மக்களே!! :))
//
மொத முறைக்கே இவ்வளவு ரணகளமா? யுத்த பூமிங்கரது சரியாத்தான் இருக்கு :-)

said...

//யோவ் கொத்ஸ், நீரா? நீராய்யா இப்படி எழுதுனது?

அடடடா..........எங்கியோ போயிட்டீரேய்யா!!!!!//

ரிப்பீட்டே!
ரொம்ப நல்லா இருக்கு.

said...

சூப்பரா வந்திருக்கு. :-)

வாழ்த்துக்கள்..

said...

கொத்ஸ்,
கலக்கிட்டீங்க...

இவ்வளவு திறமைய இத்தன நாளா எங்க மறைச்சி வெச்சீங்க???

said...

பின்னி பெடல் எடுப்பாங்க.... நீங்க பிச்சே எடுத்துட்டீங்க போங்க...

எப்படிங்கண்ணா.... உங்களா மட்டும் இப்படி எல்லாம்.....

said...

//நான் டீச்சராப் போயிட்டேன். இல்லாங்காட்டி......//

இல்லாங்காட்டி என்ன செஞ்சு இருப்பாங்களாம்?

said...

//யோவ் கொத்ஸ், நீரா? நீராய்யா இப்படி எழுதுனது?//

டீச்சர், நீங்களே சந்தேகப் படலாமா? நானேதான் எழுதினேன். மண்டபத்தில் யாரும் எழுதித் தரலை. மண்டபம் விடுங்க. ராமநாதபுரம் மாவாட்டம் பக்கமே போய் நாளாச்சு.

//அடடடா..........எங்கியோ போயிட்டீரேய்யா!!!!!//

எல்லாம் இங்கயேதான் இருக்கேன். நம்மளை அனுப்பாம விடமாட்டீங்க போல!

//( நான் டீச்சராப் போயிட்டேன். இல்லாங்காட்டி..........)//

யாரோ என்னமோ கேட்கறாங்க டீச்சர். எனக்கு பதில் தெரியலை. :))

said...

//கொத்தரதா?
அருவாளோட வந்துகொண்டிருக்கோம்.:-))//

குமார், ஏன் இந்தக் கொலை வெறி.

'பெருமாளே!' இவருக்கு நல்ல புத்திய குடுப்பா..... :))

said...

//மொத தடவைக்கு ரொம்ப நல்லாவே வந்திருக்கு.....//

டாங்க்ஸுங்கோவ்!

//இந்த trademark "ஆவ்வ்வ்வ்வ்வ்" வ விட்டுடீங்களே?? மன்னிச்சிடேன் போங்க!!//

ஆவ்வ்வ்வ்ன்னு விட்டா அது கொட்டாவி. தல அழுதா அது அவ்வ்வ்வ்வ். ஆனா பாருங்க. பார்த்தி இருந்தா தல அழவே மாட்டாரு. :))

//இருந்தாலும் நம்ம சங்கத்து ஆளெல்லாம் வந்து என்ன சொல்ராங்க பாப்போம்!!//

சொன்னால் மட்டும் போதுமா அப்படின்னு கேட்டுடலாம். :)

said...

//கொத்தற மாதிரி எழுதிட்டு கொத்தக்கூடாதுன்னா எப்படி?//

என்ன சொன்னாலும் கொத்தறதுன்னு ஒரு முடிவோட வந்திருக்கீங்க. அப்புறம் நான் என்ன சொல்லறது.

வழக்கம் போல "நானும் ரௌடிடா, நானும் ரௌடிடான்னு" கத்திக்கிட்டே ஜீப்ல ஏறிக்க வேண்டியதுதான்.

said...

//எங்கள் தலைவர் கைப்புவை கிண்டல் செய்ததை கண்டித்து தலை கைப்பு உடனடியாக தீக்குளிப்பார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.//

உம்ம தலைவர் கைப்புவா? வேற என்னமோ ஒரு ஒன் மேன் ஆர்மி நடத்திக்கிட்டு இருந்தீரே. அது என்ன ஆச்சு? அச்சச்சோ.... :))

said...

//வச்சிட்டாங்கப்பூ வச்சிட்டாங்கப்பூ ஆப்பு...கொத்து பரோட்டா, பூமி ஆபத்துன்னு எழதிகிட்டு இருந்தவர சொறிஞ்சுவுட்டு எங்க பொழப்புல ஆப்பு வச்சுட்டாங்கப்பூ...அவ்வ்வ்வ்வ்வ்வ்:-))
//

ரொம்பத்தான் அழ வேண்டாம். அதுக்காக இப்படி ஒரேடியா காமெடியா ரூட் மாறிடும் எனக் கவலை வேண்டாம். சமூக விழிப்புணர்ச்சிக்காக நமது சாட்டையடிப் பதிவுகள் மூலம் தமிழ்த் தொண்டு தொடர்ந்து நடைபெறும்! :)

said...

//உம்ம தலைவர் கைப்புவா? வேற என்னமோ ஒரு ஒன் மேன் ஆர்மி நடத்திக்கிட்டு இருந்தீரே. அது என்ன ஆச்சு? அச்சச்சோ.... :))//

என்ன தைரியம் இருந்தா கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட எங்கள் இயக்கத்தை ஒன்மேன் ஆர்மி என்று கிண்டலடிப்பீர்?எங்கள் இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் ஒன்மேன் ஆர்மிதான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்.

கைபுவின் தலைமையில் அமைந்த வ.வா சங்கத்துடன் எங்கள் கட்சி கூட்டணி கண்டு ப.ம.கவை வீழ்த்தியது அதற்குள் மறந்துவிட்டதா?மறந்தால் அதை நினைவுபடுத்த இயக்க காளைகள் தயாராகவே இருக்கிறார்கள்.

கூட்டணிதருமத்தை ஏற்று கூட்டணிக்கட்சி தலைவரையும் அன்புடன் தலைவர் என்று அழைப்பதே கூட்டணிமரபு என்பதால் கூட்டணி தொடரும்வரை அப்படியே அழைக்க அ.கு.மு.க அடலேறு அண்ணன் குமரன் ஆணைஇட்டுள்ளார்.

said...

நிஜ படத்துல வர காமெடி கணக்கா இருந்தது. மிகவும் ரசித்தேன். :)

said...

கொத்ஸ்,

கலக்கல் போஸ்ட்.....

/இதிலெல்லாம் சேராமல் புத்தகமும் கையுமாய் ஒரு ஓரத்தில் ராயல்.//

நான் எம்புட்டு நல்லவன்கிறது இந்த ஒரு வரியிலே நச்'ன்னு சொல்லிட்டிங்க....

நன்றி..நன்றி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//ஆகா, கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க.. இனி அடங்க
மாட்டாங்க.. :)

அடங்காம இருக்கணுமுன்னா ஒழுங்கா மருவாதியா நமக்கு பரிசு வந்து சேரணும். சொல்லிட்டேன். :))

//நல்லாத்தேன் இருக்கு :)//

நன்னி நன்னி!!

said...

கொத்ஸ் முன்னமே ஒரு பின்னூட்டம் போட்டேன்.காணலை ஓகே.
இப்ப போட்டியில அடிச்சி ஆடி செமி பைனல்ஸ்ல ஆஸியும்,ஸ்ரீலங்கா மாதிரி இருக்கறது நீங்களும் மை பிரண்ட்டும்.வெளாட்டுத்தனமா நான் பேர் குடுத்துட்டேன்.அப்பீட்டு ஆயிக்கீறேன்.
சூப்பரு
பாக உந்தி
சென்னா கிதூ
பகூத் அச்சா
நன்னாயிட்டு இருக்கி

said...

//கொத்ஸ் கலக்கி எடுத்துடிங்க போங்க.//

சந்தோஷ், சந்தோஷமா ஆயிட்டீங்களா? ரொம்ப நன்றி தல.

said...

//சூப்பர் தலைவா! கொத்திட்டீங்க போங்க!//

நன்னி வாத்தியாரே.

//ஒரு மனுசன் எவ்வளவு தான் தாங்குவாருப்பா? :-)//

தலைவா, என்ன சொல்லறீங்க. அவரு எம்புட்டு அடிச்சாலும் தாங்குவாரே. :))

said...

//அருமை அருமை கொத்ஸ்.. //

நன்னி தலைவா.

//எப்படி இப்படி ரகளையா எழுதுறீங்க நீங்க//

ஏன்? ஈ-கலப்பைதான். :))

said...

//கொத்ஸ் தான் கதை, வசனம், காமிரா, இயக்கம் எல்லாம்!//

கே.ஆர்.எஸ். இப்படி விஜய.டி. லெவலுக்குக் கொண்டு போயி ஓட்டறது எல்லாம் ரொம்ப டூ மச். சொல்லிட்டேன். :))

//கொத்ஸ்
அடுத்து என்னாப்பா? டெவில் ஷோ, கிவில் ஷோ ஏதாவது?:-)//

அந்தப் பசங்க பரிசு மட்டும் தராம போகட்டும், அப்புறம் டெவில் ஷோ என்ன, வெறும் டெவிலாவே ஆகலாம். :))

said...

//நகைச்சுவைப் பதிவு எழுதுற ஆளுக நல்லா எழுதுறீங்க..அதுகூட பெருசு இல்ல..பின்னூட்டம் போடுறவங்களுமில்ல கலக்க ஆரம்பிச்சிட்டாங்க..//

ஐயா, அதுதான் முதல். இந்தப் பதிவு எல்லாம் அப்புறம்தான்.

//.பாருங்க நம்ம டீச்சரை..பின்னிட்டாங்கல்லா ..//

டீச்சர் இஸ் எ குட் ஸ்டூடண்ட். :))))

said...

//யார் கொத்ஸ்ஸா? நெசமாவா? சத்தியமா? அவரா? சே சே இருக்காது. நம்ப முடியவில்லை..வில்லை...வில்லை.//

சரி, நம்பாதீங்க. போகட்டும். அது என்ன வில்லை? 25 பைசா ஆரஞ்சு வில்லை எல்லாம் தரப்பிடாது, பேசினபடி ரொக்கம்தான். :))

said...

//டீ குடிக்க போவாருங்க. அவருக்கு தண்ணியிலியே குளிக்க மாட்டாரு. தீயாவது ஒன்னாவது//

ஆனா அப்பப்போ அவரை பாராட்டு மழையில் நனைய விடறோமே, அது கணக்கில் கிடையாதா?

said...

//சூப்பர் கொத்ஸ், KRS சொன்ன மாதிரி அடுத்தது டெவில் ஷோ தான்னு நினைக்கிறேன்.//

ப்ரசன்னா, அவருக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்.

said...

//பரிசு எனக்கில்ல எனக்கில்ல எனக்கில்ல!//

ஷைலஜாக்கா, இப்படிச் சொன்ன ஆளுக்குத்தான் ஆயிரம் பொற்காசு கிடைச்சுது. அதனால இப்படி எல்லாம் சொல்லி பரிசை வாங்கிடலாமுன்னு ப்ளான் போடறீங்க. இல்லையா? :))

said...

//மொத முறையா?

நல்லாவே இருக்கு...//

என்னய்யா இது? ரெண்டு வரியில் 'நல்ல' பின்னூட்டமாவே போட்டு இருக்கீரே. என்ன உகு வெச்சு இருக்கீரு? எனக்கே புரியலையே!!

said...

//அசல் சினிமாவுல பார்த்திபன் வடிவேலு காமெடி பார்க்கறா மாதிரியே இருந்தது!!:-)//

நன்னி சிவிஆர்!

said...

//...இன்னும் இந்த மாதிரி எத்தனை அடி அடித்தாலும் தாங்குவாரு :-)//

இல்லைன்னு சொன்னேனா? அவரு இன்னும் ஆப்பு வாங்கணும், அதை நாங்கதான் அடிக்கணும். அதான் ஆசை!

said...

//மொத முறைக்கே இவ்வளவு ரணகளமா? யுத்த பூமிங்கரது சரியாத்தான் இருக்கு :-)//

யுத்தபூமி?!!! கரெக்ட்டா பாயிண்டைப் பிடிச்சிட்டீங்க!

said...

//ரிப்பீட்டே!
ரொம்ப நல்லா இருக்கு.//

ரமத, எங்க கொஞ்ச நாளா ஆளைக் காணும். பழைய பதிவு எல்லாம் ஒரு பார்வை பார்த்திடுங்க.

நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன்.

said...

//சூப்பரா வந்திருக்கு. :-)

வாழ்த்துக்கள்..//

டாங்ஸ்!

said...

//இவ்வளவு திறமைய இத்தன நாளா எங்க மறைச்சி வெச்சீங்க???//

வெட்டி, நக்கல்தானே. இவ்வளவு நாள் நான் எழுதின பதிவு எல்லாம் படிக்கிற மாதிரி இல்லை, அப்படி எல்லாம் ஏன்யா எழுதினீரு அப்படின்னுதானே உங்க கேள்வி.

அம்புட்டு மோசமாவாய்யா இருக்கு என் பதிவெல்லாம். அப்படியே இருந்தாலும் இப்படி பப்ளிக்காவா நம்ம மானத்தை வாங்கணும்?

சரி, வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு ரிவர்ஸா இருக்கே உம்ம உகு பின்னூட்டம், அதுக்கு பேர் என்ன?

said...

//பின்னி பெடல் எடுப்பாங்க.... நீங்க பிச்சே எடுத்துட்டீங்க போங்க...//

புலி, நான் எப்போ பிச்சை எடுத்தேன்?? ஓ! பிச்சு எடுத்துட்டேனா? என்னவோ போங்க, நீங்க எல்லாம் என்ன சொன்னாலும் இதுல என்னடா உகுன்னு பார்த்துப் பயப்படறதே வேலையாப் போச்சு.

said...

//இல்லாங்காட்டி என்ன செஞ்சு இருப்பாங்களாம்?//

ஓவர் டு டீச்சர்.... :))

said...

//என்ன தைரியம் இருந்தா கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட எங்கள் இயக்கத்தை ஒன்மேன் ஆர்மி என்று கிண்டலடிப்பீர்?//

கோடிக்கணக்கான அப்படின்னா இந்த தெற்கு வடக்கு மேற்கு கிழக்கு அப்படின்னு நாலு கோடி இருக்கே, அந்த கணக்குல நாலு பேரா? ஒருத்தரே ஒருத்தர் இருந்த உங்க இயக்கம் இப்படி நாலு பேரா வளர்ந்து நிக்கிறதுக்கு எங்க வாழ்த்துக்கள்பா.

//எங்கள் இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் ஒன்மேன் ஆர்மிதான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்.//

அதாவது தடி எடுக்கிறவன் தண்டல்காரன். ஏன்யா இருக்கறவங்க நாலு பேரு. அதுல கூட ஒத்துமை இல்லையா?

//கைபுவின் தலைமையில் அமைந்த வ.வா சங்கத்துடன் எங்கள் கட்சி கூட்டணி கண்டு ப.ம.கவை வீழ்த்தியது அதற்குள் மறந்துவிட்டதா?//

உமக்கு வந்த கனவு எப்படி ஐயா எனக்கு மறக்கும்? வர வர உம்ம உளறல் கொஞ்சம் ஜாஸ்தியாவே ஆகிப் போச்சு.

//மறந்தால் அதை நினைவுபடுத்த இயக்க காளைகள் தயாராகவே இருக்கிறார்கள்.//

சிங்கம் போச்சு, புலி போச்சு, இப்போ காளையா? பார்த்து ஸ்டேக் கண்ட்ரியில் இருக்கீரு, அப்படியே கபளீகரம் பண்ணிடப் போறாங்க.

//கூட்டணிதருமத்தை ஏற்று கூட்டணிக்கட்சி தலைவரையும் அன்புடன் தலைவர் என்று அழைப்பதே கூட்டணிமரபு என்பதால் கூட்டணி தொடரும்வரை அப்படியே அழைக்க அ.கு.மு.க அடலேறு அண்ணன் குமரன் ஆணைஇட்டுள்ளார்.//

ஆனாலும் எங்க கட்சியின் ஆன்மீகச் செம்மல் உங்களை இப்படி காமெடி ட்ராக் மாதிரி நடத்தறது தப்புத்தேன். நாஞ் சொல்லி போட்டு வைக்கேன் என்ன, அதுக்காவ நீ ஒண்ணும் கவலைப்படாதே.

வரட்டுமா ராஜா, உடம்பைப் பார்த்துக்கோ!!

said...

//நிஜ படத்துல வர காமெடி கணக்கா இருந்தது. மிகவும் ரசித்தேன். :)//

அம்பி மொத வரிய படிச்ச உடனே அம்புட்டு மோசமாவா இருக்குன்னு நினைச்சேன். நல்ல வேளை ரசித்தேன்னு போட்டு மானத்தைக் காப்பாத்துனீரு. :P

said...

///இதிலெல்லாம் சேராமல் புத்தகமும் கையுமாய் ஒரு ஓரத்தில் ராயல்.//

நான் எம்புட்டு நல்லவன்கிறது இந்த ஒரு வரியிலே நச்'ன்னு சொல்லிட்டிங்க....//

ராயலு, அப்படித் தோணுதா? அடங்கி போயி உக்காரணும். நான், நீர் நல்லவன் அப்படிங்கிற ரேஞ்சுக்கு எதுனா சொன்னேனா? இல்லை நீர் ஒதுங்கி உக்காந்து படிக்கிற புக்கு என்னான்னு சொன்னேனா? பொத்திக்கிட்டு இருக்கலாமில்ல.

அனாவசியமா, நீர் படிக்கிறது கன்னடப் பைங்கிளி பேர் கொண்டவர் எழுதுன புத்தகம், ஓரமா உக்காந்துக்கிறதுக்குக் காரணம் மத்த அப்பரசண்டிங்க உன்ன சேர்த்துக்கறது இல்ல இப்படி விலாவாரியா நான் எழுதணுமா?

சும்மா இருப்பீரா!!!

said...

//கொத்ஸ் முன்னமே ஒரு பின்னூட்டம் போட்டேன்.காணலை ஓகே.//

அப்படியா, வந்தது எல்லாம் ரிலீஸ் பண்ணிட்டேனே. கோபப்படாம வந்து இன்னொரு முறை சொன்னதுக்கு நன்றி ஆத்தா! (சரி, ஆத்தா வேணாமா, அக்காவே இருக்கட்டும்.)


//இப்ப போட்டியில அடிச்சி ஆடி செமி பைனல்ஸ்ல ஆஸியும்,ஸ்ரீலங்கா மாதிரி இருக்கறது நீங்களும் மை பிரண்ட்டும்.வெளாட்டுத்தனமா நான் பேர் குடுத்துட்டேன்.அப்பீட்டு ஆயிக்கீறேன்.//

செமிஸ் பைனல்ஸா செமி பைனல்ஸா? ஏன்னா ரெண்டு பேர்தான் இருக்கு அதான் கேட்டேன். தங்கச்சிக்கா உங்களை இந்த கண்மணி அக்கா அரை லூசுன்னு சொல்லுது, கொஞ்சம் என்னான்னு கேட்டுட்டுப் போங்க. (பத்த வெச்சுட்டயேடா பரட்டை!!)

//சூப்பரு
பாக உந்தி
சென்னா கிதூ
பகூத் அச்சா
நன்னாயிட்டு இருக்கி//

நீங்க எம்புட்டு பாஷையில் பேசினாலும் நமக்கு தெரிஞ்சது எல்லாம் தமிழ் மட்டும்தான் - ரொம்ப தாங்க்ஸுங்கோவ்!! :))

said...

பாவம்யா கைப்பு. இப்பிடி அடி வாங்க வெச்சிட்டீங்களே. ஹி ஹி ஹி...ஆனாலும் மயிலாருக்கு அந்த நோட்டீசு ரொம்பப் பிடிச்சிருந்ததாம். :-)

said...

அண்ணா, இவ்வளவு நாள் எங்க போயிட்டீங்க? உங்களைக் காணுமேன்னு காற்றில் பறந்த நோட்டீஸை நம்ம கிட்ட கொண்டு வந்து குடுத்ததே மயிலார்தான். இல்லைன்னா நமக்கு எப்படி இதெல்லாம். ஹிஹி..

said...

டெல்பைன்,

வாங்க, நல்லா இருக்கீங்களா? உங்களை அடிக்கடி நம்ம தெக்கி பதிவில் பார்ப்பேன். நம்ம பக்கம் வந்ததுக்கு நன்றி.

பெயர்க்காரணம் ஒண்ணும் பெருசா இல்லை. எல்லாம் முன்னமே சொன்னதுதான். இந்த மூணு சுட்டிகளைப் பாருங்க.

1) ஏன் இலவசம்
2) இலவசக் கொத்தனாரியல் 1
3) இலவசக் கொத்தனாரியல் 2


அப்புறம் போட்டோ வந்து நம்ம வ.வா.சங்கத்தில் நம்மளை அட்லஸ் வாலிபரா போட்டப்போ குடுத்த போட்டோ, நல்லா இருக்கேன்னு அதை அப்படியே பெர்மனெண்ட் பண்ணிட்டேன். :))

said...

டாக்டர் புருனோ வீட்டாண்டை நீங்க குடுத்துருந்த விளம்பரம் பாத்துட்டு இன்னைக்குத் தான் இதை படிச்சேன் கொத்ஸ். கடைசி வரி நல்லா இருந்தது. :-)

said...

குமரன், ஏற்கனவே எல்லாரும் ஒரு மாதிரி பேசிக்கறாங்க. நீங்க இப்படி ஒரு வருஷத்துக்கு அப்புறம் பின்னூட்டம் போடறீங்க!!!

சரி, //கடைசி வரி நல்லா இருந்தது.// அப்படின்னு சொன்னா அது மத்த வரிகளைப் பற்றிய விமர்சனமா?! நல்லா இருங்க சாமி.

அப்புறம் நாம பதிவு போட்டுட்டு அனுப்புற தனி மடல் எல்லாம் எங்க போய் சேருதுன்னு நல்லாவே தெரியுது!! :))))

said...

உங்க மடல் வழி உள்ள வந்து ஒரு முறை பாக்குறேன். பெரும்பாலும் வரி விடாம, சொல் விடாம, எழுத்து விடாம படிக்கிறேன். சில நேரங்கள்ல மட்டும் தான் பின்னூட்டம் போடற அளவுக்கு புரியுது!!! அதான் உங்களுக்கு அப்படி தோணுதுன்னு நினைக்கேன். :-)

நீங்க மயிலை அனுப்பாட்டியும் கருடர் (ரீடர்) நீங்க இடுகை போடறப்ப எல்லாம் வந்து எங்களுக்கு சொல்றாருல்ல? எப்படி படிக்காம விடுவோம்? இது மட்டும் எப்படி தப்பிச்ச்சுன்னு தெரியலை. ஒருக்கா நான் ஊராண்டை போயிருந்தப்ப படிக்காம உட்டேன் போலிருக்கு. (எந்த வட்டார மொழியையும் தேடாதீங்க. யாதும் ஊரே....)

said...

குமரன், எழுத்துக்கு எழுத்து படிக்கறீங்களா? அம்மாடி.... நான் உங்க விஷயத்தில் அப்படி எல்லாம் இல்லை. நீங்க எழுதும் மேட்டர் எல்லாம் ரொம்ப மேல இருக்கு. நமக்கு நிறையா விஷயங்கள் புரியறது இல்லை. ஆனா ரொம்ப ஆன்மீகம் இல்லாம பதிவு போட்டா நம்ம கருத்து கட்டாயம் சொல்லிடுவேன். :))

said...

சூப்பர் அப்பு.... நானும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கிறேன்... கிட்டத்தட்ட 10 வருடங்களாக... நிறைய சொதப்பல் மொழிபெயர்ப்பை எல்லாம் சரி செய்ய வேண்டி வரும்.. நிறைய மொழிபெயர்பாளர்கள், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பது வாடிக்கையாகிவிட்டது..


சூப்பர் பதிவு.... கலக்ஸ்

இன்னும் கோச்சிங் நடத்துரீங்களா? மேலும் தகவல்களை அனுப்பவும்... ;)