Thursday, April 26, 2007

ஆப்பு விமர்சனம் - பெனாத்தலாரின் ஆப்பு!

(முதலில் சன் ரீவியில் வரும் திரை விமர்சனம் நிகழ்ச்சியில் வருவாங்களே அந்தம்மா குரலில் படிச்சுக்கோங்க.)

இன்னிக்கு நாம விமர்சனம் பண்ணப் போற ஆப்புரேசல் பெனாத்தலாரின் ஆப்பு. வ.வா.சங்கத்தின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா வந்திருக்கிறது பெனாத்தலாரின் இந்த ஆப்பு.

ஒரேடியா பாராட்டாமலும் அதே சமயம் வெறும் குறைகளா அடுக்காம நடுநிலைவியாதியா இந்த ஆப்பைத் தந்திருக்காரு பெனாத்தலார். அதிலும் வீக்னஸ்களை அடுக்கி ஆரம்பித்த அவர் நேர்மையைப் பாராட்டியே ஆகணும்.

இந்த ஆப்புரேசல் பத்தி சிறப்பு விமர்சகர் கொத்ஸ் அவர்கள் என்ன சொல்லறாருன்னு பார்க்கலாம்.

(இனி கொத்ஸ் குரலில் படிக்கணும். என் குரலை கேட்டிராதவங்க சிம்மக்குரலோன் சிவாஜி குரலில் படிச்சுக்கோங்க.)

வீக்னெஸ் எல்லாம் சொல்லி ஆரம்பிச்சிருக்காரு. நல்ல விஷயம்தான். ஆனா பாருங்க. இந்த ஆப்புரேசலில் பல விஷயங்கள் ஒளிவு மறைவா இருக்கு. அதைப் பத்தி நாம இப்போ பார்க்கலாம்.

உதாரணமா அவருக்கு ஃபளாஷ் தெரியும் என்பதற்காக வெறும் எழுத்துக்களில் நகைச்சுவையைத் தரும் மற்ற அட்லஸ் வாலிபர்களை மட்டம் தட்டும் அதிகாரப் போக்கு ரொம்பவே கண்டிக்கப் படவேண்டியது.

(இந்த மாதிரி பேசறது கமல் பேட்டி மாதிரி ரொம்ப செயற்கையா இருக்கு, அதனால இனிமே அவரைப் பார்த்து பேசற மாதிரி சொல்லிடறேனே. சிம்பிளா இருக்கும்.)

//நகைச்சுவையை வெளிப்படுத்த எத்தனையோ மீடியங்கள் இருந்தாலும்//

இந்த ஒரு ஃப்ளாஷ் ஒண்ணைக் கத்துக்கிட்டீராக்கும். அதுனால எதுக்கு எடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ். அதாண்டி உனக்கு விக்கியில் வெச்சோம் ஆப்பு. புகைப்படக்கலை பெரியவர் ஆனந்த் வாயாலையே ஃப்ளாஷ் ஒரு வேஸ்ட் அப்படின்னு சொல்ல வெச்சாச்சு இல்ல.

//அனுபவ நகைச்சுவை, பொதுமைப்படுத்தப்பட்ட கேரக்டர்கள் என்ற இரு
பாகங்களிலேயே ஏறத்தாழ எல்லா பதிவுகளையும் வகைப்படுத்திவிடலாம்.//

கைப்புவிற்கு ஆப்பு ஸ்டைல் நாடகங்களைக் குறைத்துக் கொண்டு மற்ற வகையிலும் எழுத வேண்டுமென்பது என் ஆசையும் கூட. இந்த ஒரு விஷயத்தில் நானும் ஆமாஞ்சாமி போடறேன்.

அதே போல் சில சமயங்களில் வாரத்திற்கு ஏழு பதிவுகள், சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு பதிவு என இல்லாமல் சீரான அளவு பதிவுகள் வரணும். இதைப் பத்தியும் நீங்க ஒரு வரி சொல்லி இருக்கலாம்.

//நான் அட்லஸா இருந்தப்ப சிவாஜி ரீ-ரிலீஸ் பண்ணேன்..//

அவனவன் அட்லஸ் ஆகட்டும், அல்லது நகைச்சுவை போட்டியாகட்டும் மைண்ட் எல்லாம் கசக்கி புதுசு புதுசா எழுதுறான், இப்படி ரீரிலீ்ஸ் பண்ணறதே அசிங்கம், அதுல பெருமை வேற! த்தூ!!

இதுக்கு துணைக்கு வள்ளுவர் வேற, ஒரிஜினல் என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
உப்புமா பிராண்ட் பதிவு தவிர வேற எதாவது பதிவு போட்டு இருக்கீராய்யா? ;-)

(அப்பாடா, மாற்றுக் கருத்து சொன்னவன் யோக்கியதையைக் கேள்வி கேட்கணுமே என்ற தமிழ் மரபை மீறலை. என்ன நம்ம பின்புலம் அப்படி, அதனால விளிம்புநிலை மாந்தர்களின் வலி தெரியலை, அதனால நாகரீக அளவுகோல் இன்னமும் க்ரீமீ லேயர் லெவலிலேயே இருக்கு.)

//வெளியே போற சிரிப்புமூட்டிகளையும் மாசத்துக்கு ஒருத்தரா சேத்து விளையாடறதால //

உம்மைச் சேர்த்துக்கிட்டதுனால சும்மா சிரிப்புமூட்டின்னு சொல்லிக்குவீராய்யா? அம்புட்டு பேசறீரே அவங்க நடத்துன நகைச்சுவை போட்டியில் ஒருத்தனாவது அட்லஸாய்யா? வந்துட்டாரு என்னமோ பெருசா சொல்ல. அவங்க இளிச்சவாயனுங்களா யாரு மாட்டறாங்கன்னு பிடிச்சுப் போடறாங்க.

(இதுக்கு மேலும் வெற்றி பெற்றவர்கள் சங்கத்தில் அட்லஸ் வாலிபராக வருவார்களேயானால், காப்பிரைட் வழக்கு வழக்கம்போல் பாயும் என்பதைத் தெரிவித்துக் கொல்கிறேன்.)

//எவ்ளோ கஷ்டம்ங்கறது விக்கிக்கு கஷ்டப்படற கொத்தனாரைப் பாத்தபிறகுதான் புரிஞ்சுகிட்டேன்.//

வாராவாரம் உமக்கு பதிவு போடுன்னு அனுப்பற மெயில் எல்லாம் படிக்கறீரு போல. அட்லீஸ்ட் அது இன்னும் நேர டிலீட் பண்ணற அளவு போகலையே. அது வரை சந்தோஷம். :-D

//இப்படிப் பதிவிட்டால் பின்னூட்டம் வரும் //
//ஒத்தை வரிப் பின்னூட்டங்கள்//

என்னமோ புகையுற வாசனை அடிக்கலை?

//Opputunities//

'aappar' tuni 'tease'??

1. கும்பலோட கோவிந்தா. அடி வாங்குனாலும் ஆளுக்குக் கொஞ்சம்தான் விழும்.
2. புதிய மொந்தையில் பழைய (நகைச்சுவை) கள்?
3. சும்மா 100 பதிவு போட்டிக்கு வரணமுன்னு பழசு புதுசுன்னு எல்லாத்தையும் வாங்கி வெச்சுக்காதே. (நல்ல ஆளய்யா நீரு. உமக்கு பழசு எல்லாம் எடுத்துப் போட ஐடியா வரலைன்னதும், இப்படி எல்லாம் அறிவுரை!)
4. அதாவது இப்போ எழுதறதுக்கு சிரிக்க முடியலை. சிரிக்கணுமுன்னா அட்லீஸ்ட் ஒரு ஜோக்காவது போட்டு வை. இதானே சொல்ல வறீரு?

அடுத்தவனை ஆராயச் சொன்னா நல்லாத்தான்யா செய்யறீரு! கரும்பு தின்ன கூலியா வேணும்! :)))

(மீண்டும் சன் ரீவி அம்மா.)

இப்படி வீக்னஸ், ஸ்ட்ரெங்த், த்ரெட்ஸ், ஆப்பர்சூனிடீஸ் என பல விதமான கோணங்களில் சங்கத்தினைப் புரட்டிப் பார்த்த ஆப்புரேசல் இந்த ஆப்புரேசல்.

பெனாத்தலாரின் ஆப்பு சூப்பரப்பு.

36 comments:

said...

பெனாத்தலாரின் விமர்சனத்தைப் போடாமல், அவர் விமர்சனத்தை விமர்சனம் பண்ணி நாம போட்ட இந்த விமர்சனப் பதிவு பூங்காவில் வருமா?

ஹிஹி. தமாசுங்க. ரென்சன் ஆவ கூடாது. ஹிஹி.

said...

நாந்தான் பர்ஸ்ட்டா?

இப்படி ஒரு தடவையாவது கேக்கனும்னு ரொம்ப நாளா ஆசை.

ஹலோ... உங்க ஆப்புரைசலோட அவரோடது நல்லாவே இருந்திச்சு.

ஹிஹி. தமாசுங்க. ரென்சன் ஆவ கூடாது. ஹிஹி.

said...

//அம்புட்டு பேசறீரே அவங்க நடத்துன நகைச்சுவை போட்டியில் ஒருத்தனாவது அட்லஸாய்யா? //
இதுல ஒரு உள்குத்தும் இல்லே சாமீ.எங்க்ளை கவுத்துராதீங்க.

பெனாத்தலாரின்-கொத்ஸ்-ஆப்பு-
appar-சூன்ய-tease.

said...

இதைத்தான் சொந்த செலவில சூன்யம் வெச்சு எங்களையே டீஸ் பண்ணிக்கிறது.

ஆப்பு வைத்தவருக்கே ஆப்பு வைத்த புதுமைச் செம்மல் கொத்ஸ் இனி வரும் பதிவுகளுக்கு 39 பின்னூட்டங்களை 3 நிமிடங்களில் வாங்கி 4 வது நிமிடம் தமிழ்மணத்திலிருந்து அவரது பதிவு வெளியே போக வாழ்த்துகிறோம். 1 பின்னூட்டத்தை அவரே போட்டுக்குவதால் 39.

said...

//நாந்தான் பர்ஸ்ட்டா? //

இல்லை.

//இப்படி ஒரு தடவையாவது கேக்கனும்னு ரொம்ப நாளா ஆசை.//

கேட்டாச்சு இல்ல. சந்தோஷமா?

//ஹலோ... உங்க ஆப்புரைசலோட அவரோடது நல்லாவே இருந்திச்சு.//

இருக்கட்டும். அடுத்தவனைப் பிரிச்சு மேயறதுல அவர் அளவுக்கு நமக்கு டேலண்ட் இல்லைங்க. ;-)

//ஹிஹி. தமாசுங்க. ரென்சன் ஆவ கூடாது. ஹிஹி.//
அட இந்த Rஉம் Tஉம் பக்கத்து பக்கத்துல இருக்கிறதுல உமக்கும் கன்பியூஷனா? :)))

said...

//இதுல ஒரு உள்குத்தும் இல்லே சாமீ.எங்க்ளை கவுத்துராதீங்க.//

சொன்னாச் சரிதான் விவ்ஸ்! :))

//பெனாத்தலாரின்-கொத்ஸ்-ஆப்பு-
appar-சூன்ய-tease.//

Good One!!!

said...

//1 பின்னூட்டத்தை அவரே போட்டுக்குவதால் 39.//

பதில் சொல்ல ஆரம்பிச்சாச்சு. அதுனால சரி பாதி + 1 நம்மளுது. :))

said...

இந்த பதிவுற்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறேன்

said...

நீங்க என்ன ரொரன்ரோ வா? சொல்லலையே:-)) இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்:-)

said...

கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டதுக்கு நன்றி ராயர் தம்பி. ச்சீ ராயல் தம்பி. ;-)

said...

யோவ் அபி அப்பா, என்ன இது அனானி வேஷம்?

//நீங்க என்ன ரொரன்ரோ வா? சொல்லலையே:-))//

இல்லையே நான் எடிஸன், நியூ ஜெர்ஸி.

//இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்:-)//

அதெல்லாம் வேற செய்யறீரா? என்ன ஆச்சு உடம்புக்கு?

said...

நான் தான் கொத்ஸ், விண்டோ ஓப்பன் பண்ண அலுப்பு, அது தவிர நம்ம கடை யாவாரத்தியம் பாக்கனுமே அதான்! இதோ வர்ரேன்!

said...

உங்க கடையாண்ட போயிட்டு வரேன், உம்ம நகைச்'சுவை'க்குத்தான் எம்புட்டுக் கூட்டம். :))

said...

//பதில் சொல்ல ஆரம்பிச்சாச்சு. அதுனால சரி பாதி + 1 நம்மளுது. :)) //

இதாங்க இலவசனார் ட்ரேட்மார்க். களை கட்டுது பாருங்க.

////நாந்தான் பர்ஸ்ட்டா? //

இல்லை.
//
இந்த பி.பே. எல்லாம் கணக்கில சேக்க கூடாது. ஆமா 'பி.பே.'னா என்னாங்க?

//உம்ம நகைச்'சுவை'க்குத்தான் எம்புட்டுக் கூட்டம். :))
//

கிடேசன் கூட்டத்தின் கூச்சலை கண்டு கொத்தனார் கொந்தளிக்கலாமா?
சிறுமதியினரின் சத்தத்தை கேடு சிங்கம் சீறலாமா?
கும்மிகளின் சத்தத்தில் குருவின் மனசு வெம்பலாமா?
ஆணையிடுங்கள் அமுகவிற்கு இப்பொழுதே.
அங்கன போய் ஆட்டைய கலைப்போம்.

said...

எனக்குக் கூட என்ன கொடுமை சரவணா'
சொல்ல ஆசையாயிருக்கு.
இங்க சொல்லிக்கிடறேம்ம்ம்ம்.
:-)
கும்மிப் பதிவா இது??

said...

தம்பி பாணியில் சொல்கிறேன்:

இப்போதைக்கு இந்தப் பதிவை கன்னா பின்னா வென எதிர்க்கிறேன்.

முழுமையான (?!) பதில் பிறகு!

said...

எங்களுக்காக மிக அழகாகவும், அருமையாகவும், வேகமாகவும், விவேகமாகவும், ஆப்புரைசல் செய்த நம் கட்சியின் மூத்த தலைவரும், அமீரகத்தின் பொது செயலாளரும், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமும், "நாளை"ய விடி"வெள்ளி"யும் ஆகிய பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய பெனாத்தாலாரை கிண்டலும், நையாண்டியும் செய்யும் நோக்கத்துடன் எழுதப்பட்டு இருக்கும் இந்த பதிவை கண்டிப்படி கண்ணடிக்க முடியாமல் ( சேம் செக்ஸா இருப்பதால்)கன்னா பின்னா வென்று கண்டிக்குகிறேன்

said...

//முழுமையான (?!) பதில் பிறகு! //

தலைவரே! நீங்க பொறுமையாக வாங்க... நான் பாத்துக்குறேன், ஆனா சீக்கிரம் வந்துட்டுங்க... தனியா இவர்க்கிட்ட ரொம்ப நேரம் மாரடிக்க முடியாது.....

said...

// (முதலில் சன் ரீவியில் வரும் திரை விமர்சனம் நிகழ்ச்சியில் வருவாங்களே அந்தம்மா குரலில் படிச்சுக்கோங்க.) //

ரத்னா குரலிலா....

கடைசியா பைனல் டச் கொடுக்கும் போது, மொத்ததில் என்ற வார்த்தை போடனும்... விட்டுட்டீங்க....

said...

//இனி கொத்ஸ் குரலில் படிக்கணும். என் குரலை கேட்டிராதவங்க சிம்மக்குரலோன் சிவாஜி குரலில் படிச்சுக்கோங்க.)//

சிங்கம் இளைப்பாறினா சிறு எலி வந்து ஆட்டம் போடுமாம்.....

அவர் இல்லாம பலருக்கு துளிர்விட்டு போச்சு....

மொத்தத்தில் சத்திய சோதனை....

said...

//இந்த ஒரு ஃப்ளாஷ் ஒண்ணைக் கத்துக்கிட்டீராக்கும். அதுனால எதுக்கு எடுத்தாலும் ஒரு ஃப்ளாஷ். அதாண்டி உனக்கு விக்கியில் வெச்சோம் ஆப்பு. புகைப்படக்கலை பெரியவர் ஆனந்த் வாயாலையே ஃப்ளாஷ் ஒரு வேஸ்ட் அப்படின்னு சொல்ல வெச்சாச்சு இல்ல.//

அவரு எந்த ஃப்ளாஷ் சொல்லுறார், நீர் எந்த ஃப்ளாஷ் சொல்லுறீர்....

ஆனா இரண்டு கொத்துஸ், இரண்டு ஃப்ளாஷ்மே வேஸ்ட் என்பது என் கருத்து. முதல் ஃப்ளாஷ் எனக்கு தெரியாது, அதுனால வேஸ்ட், இரண்டாவது ஃப்ளாஷ் இருந்தா படம் சரியா வராது, அதுனால் இந்த ஃப்ளாஷும் வேஸ்ட்.

said...

//உப்புமா பிராண்ட் பதிவு தவிர வேற எதாவது பதிவு போட்டு இருக்கீராய்யா? ;-)//

இது இராம்ஸ் பிராண்ட்ல... பெனாத்தலும் அப்படி தானா கொத்துஸ்?

said...

//பெனாத்தலாரின் ஆப்பு சூப்பரப்பு. //

இந்த ஒத்து வரியை கடைசியில் சொல்லுறத்துக்கு அவர நார் நார் கிழித்து போட்டுடீரே.. இது நியாயமா? தர்மமா?

said...

இப்பதிவினை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இந்தப்பின்னூட்டத்தையிட்டு பி.க செய்யவேண்டாமென்று நினைத்தாலும், தலைவருக்கு என்னுடைய ஆதரவு என்பது தெரியாமலேயே போக வாய்ப்பிருப்பதால் இது..


இதுவே இப்பதிவில் நான் எழுதும் கடைசிப்பின்னூட்டம். இனிமேல் போட்டால் என்மேல் கேஸ் போடுங்கள் என்று கொக்கரிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

இவண்,
அண்ணன் பெனாத்தலார் உப்புமா சிரங்கு (எத்தனநாளைக்குத்தான் படை)
லெமூரியா (கமீலாட் சமீபம்)

said...

இப்பதிவை கடுமையாக கண்டிக்கிறேன்.!!!
பெரியவர் ஆனந்த் என்று எழுதியதற்காக.
இதற்காக ஒரு சிறப்பு பட்டையை ஈஸ்ட்மன் கலரில் விரைவில் வெளியிடுவேன் என்றும் எச்சரிக்கிறேன்.

said...

இந்த பதிவிற்கு இன்னுமொரு கண்டனத்தை பதிவு செய்கிறேன்

said...

இன்னும் 40'க்கு எவ்வளவு மீதம் இருக்குன்னு தெரிந்துக்கொல்ல பிரியப்படுகிறேன்

said...

//பின்னூட்டம் போட்டுக் கொல்லுவது (கொள்வது) இவர்களின் ஜோலி//

இட்லிவடை சொன்னது மாதிரி இன்னிக்கு எனக்கு இங்கே தான் ஜோலி :)

said...

என்னுடைய பின்னூட்டங்களை வெளியிடாத பின்னூட்டபுயலின் எதோச்சதிரகார போக்கினை கண்டித்து இப்`போதை`க்கு தூங்க போகிறேன்....

said...

தல இங்கையும் உண்டா..கும்மி

said...

What happenend.ரென்சன், Sun Reevee.

said...

ஓ..கும்மியா?

டீச்சர் ஆஜர் ஹோ:-)))))

said...

//
கிடேசன் கூட்டத்தின் கூச்சலை கண்டு கொத்தனார் கொந்தளிக்கலாமா?
சிறுமதியினரின் சத்தத்தை கேடு சிங்கம் சீறலாமா?
கும்மிகளின் சத்தத்தில் குருவின் மனசு வெம்பலாமா?
ஆணையிடுங்கள் அமுகவிற்கு இப்பொழுதே.
அங்கன போய் ஆட்டைய கலைப்போம்.//

ஸ்ரீதர், ரென்சனாவாதீங்க. எல்லாம் ஒரு பாராட்டுதான். யாரா இருந்தா என்ன ஒரு 40. அம்புட்டுதானே! :)))

said...

//எனக்குக் கூட என்ன கொடுமை சரவணா'
சொல்ல ஆசையாயிருக்கு.
இங்க சொல்லிக்கிடறேம்ம்ம்ம்.
:-)//

அப்பனே, சரவணா, சம்முகா, முருகான்னு சொல்லுங்க. என்ன கொடுமைன்னு ஏன்? :))

//கும்மிப் பதிவா இது??//

இப்படி எல்லாம் பேசப்பிடாது. :))

said...

அஞ்சே ஏழாலே பெருக்குனா.. எவ்வளோ??

said...

வர்ற விடையோட ஒன்ன கூட்டினா எவ்வளோ வரும்?