Tuesday, January 10, 2006

வந்துட்டான்யா வந்துட்டான்

இவ்வளவு நாள் மற்றவர்கள் பதிவுகளை படிப்பதும், பின்னூட்டமிடுவதுமாகவே இருந்துவிட்டு, இப்பொழுது நாமும் ஒரு பதிவு
தொடங்கினாலென்னவென்று ஒரு ஆசை. விதி யாரை விட்டது. சரி, புத்தாண்டில் தொடங்குவோம் என இருந்து இந்த வருடத்திலும் பத்து நாட்கள் ஓடிவிட்டன. இதோ தொடங்கிவிட்டேன். படிக்க வந்த அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

செய்ய வேண்டியது என்னவென்று பார்த்தால், முதலில் ஒரு பிளாக்கர் கணக்கு வேண்டும். தொடங்கியாயிற்று.

பின் ஒரு கவர்ச்சிகரமான பெயர் வேண்டும். ஆரம்பித்தது பிரச்சனை. என்ன எழுதபோகிறோம் என்று தெரிந்தால், அதனையொட்டி ஒரு பெயர் வைக்கலாம். சத்தியமாய் அது தெரியாது. என்னுலகம், உன்னுலகம், எண்ணம், வண்ணம், பார்வை, கோர்வை, பேசுகிறேன், எழுதுகிறேன் என்றெல்லாம் ஏற்கனவே பல பதிவுகள். ஒரு ஷாக் வேல்யூவிற்காக உளறல், வாந்தி, பேதி என்று வைக்க மனம் இடம் தரவில்லை. கவித்துவமான
பெயர் வைக்கலாமென்றால், நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஒரு சின்ன பெயருக்கே இவ்வளவு யோசனையா, நாமெல்லாம் என்ன எழுத
போகிறோம். இதெல்லாம் நமக்கு வராது. பேசாமல் பின்னூட்டங்களிலேயே காலந்தள்ளிவிட வேண்டியதுதான் என்று நினைக்கும்பொழுதுதான், காசா பணமா, எதேனும் ஒரு பெயர் வைப்போமே என்று ஒரு எண்ணம். காசு என்று நினைத்தவுடன், ஆகா, தமிழ் பேசும் நல்லுலகை கவர எளிதான ஒரு
வழி இருக்கிறதே என்று ஒரு பொறி.

அதனால்தான் பதிவிற்கு 'இலவசம்' என்று நாமகரணம். இந்த வார்த்தையை பார்த்துமா நம் மக்கள் வராமல் இருக்க போகிறார்கள்!

ஆக மொத்தம் பதிவு தொடங்கியாயிற்று. இனி வரும் பதிவுகளில் என்ன எழுதலாம் என்று பார்ப்போம்.
முதல் இலவசம் : Indibloggies-ல் டுபுக்கு ஜெயித்தால், நமக்கெல்லாம் ஒரு சொப்போ, ஸ்பூனோ தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். ஸ்பூன் வேண்டுமென்றால், டுபுக்குவின் சின்னத்தைப் பார்த்து போடுங்கைய்யா வோட்டு.

11 comments:

said...

பாட்டும் நானே. பாவமும் நானே. வேலை செய்கிறதா என்று பார்க்கத்தான்.

said...

அடடே! இதுதான் பெயர்க்காரணமா! நல்லாருக்கு. இன்னும் நெறைய எழுதுங்க.

said...

ராகவன் சார், நீங்கதான் முதல் பின்னூட்டம். ரொம்ப நன்றி. உங்கள் அளவு இல்லையென்றாலும், இடைவெளி விடாமல் பதிவு செய்ய முயல்கிறேன்.

said...

வாங்க வாங்க...கொத்தனாரே சும்மா புகுந்து விளயாடுங்க...
நன்றி வோட்டு போட்டதுக்கு :)

said...

அடுத்து எது எங்க இலவசமா கிடைகுமுனு கொஞ்சம் சொல்லுங்கலேன்...

said...

வாங்க கொத்தனாரே,
மக்கள் இதயத்துல நல்லா அடித்தளம் அமைப்பிங்கன்னு நினைக்கிறேன்.word verification ஜ எடுத்து விட்டிங்கனா நல்லா இருக்கும்.

said...

டுபுக்கு, நன்றி எல்லாம் சரி. சொப்பு ஸ்பூனை மறந்திடாதீங்க.

இலவசமா என்ன கிடைக்கும், எங்க கிடைக்கும், எப்படி கிடைக்கும் - ஒரு பட்டியலே போட்டு ஜமாய்க்கலாம் நெய்பர்.

அடித்தளம் மட்டுமில்லை, சாரம் போட்டு கட்டிடமே எழுப்பிடலாம். word verification இல்லைன்னா கன்னாபின்னான்னு பின்னூட்டம் விழுமாமே.

said...

கொத்தனாரே!
ராகவனோட வலைப்பதிவுல உங்க பேரைப் பார்த்தேன். பேர் சூப்பர். உங்க பேர் காரணத்தைத் தெரிஞ்சுக்க விகிபீடியா வரைக்கும் போயிட்டேன்.
http://en.wikipedia.org/wiki/Freemasonry
Freemasonry அமைப்பு பத்தி உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்சா ஒரு பதிவா போடுங்க.Blogosphereஐ ஒரு கலக்கு கலக்க வாழ்த்துகள்.

said...

இலவசக்கொத்தனார் என்று இருப்பது தான் சரி. ஆனா..நீங்க freeயா விடு மாமுன்னு tagline வைச்சிருகீங்க..அதனால freeயா விடுறேன் :)

said...

க் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி :)

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். வளர்க நின் ப்ளாகிங். உங்க உண்மை பெயர் தெரிஞ்சுக்கலாமா??

அன்புடன்
கீதா