Saturday, January 21, 2006

தாய்க்குப் பின் தாரம் - சில எண்ணங்கள்

சத்தியமா இதை எதிர்பார்க்கலைங்க. நாலு நாளா பதிவே போடலையே. ஒரு பதிவைப் போட்டு விட்டு தூங்கப்போகலாம். காலையில் ஒரு நாலு பின்னூட்டங்கள் வந்திருக்கும். அதற்கு பதிலைப் போட்டுவிட்டு விடைகளை பதிவு செய்யலாம் என நினைத்து பதிவை தட்டிவிட்டேன். ஆனால் போன டெஸ்டை பார்க்க முடியாத குறை தீர்ந்து போச்சுங்க. ராகுல் டிராவிட்டும், செவாக்கும் விளாசியது போல் விளாசிவிட்டார்கள், ஜெயஸ்ரீயும் சின்னவனும். ஒரு பின்னூட்டத்தை படிச்சி பதில் எழுதறத்துக்குள்ள மேலும் மூணு பின்னூட்டம் போட்டாங்க. தலைப்பில் கொடுத்த ரீபஸ்ஸை 'இன்னா மேன், இவ்வளவு ஈசியா கொடுத்து எங்கள இன்ஸல்ட் பண்ணற'ன்னு சொல்லி சின்னவன் அடிச்சார் பாருங்க ஒரு சிக்ஸர். அது சூப்பர்.

இவரு பொறுமையா பாலை பார்த்து சாத்தினாருன்னா அந்தம்மா ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடிக்காத குறை. போட்டு அடி பின்னிட்டாங்க.மணியன் வந்து கடைசி பாலில் ஒரு சிக்ஸர், நம்ம தோணி மாதிரி. இதுக்கப்புறம் தூக்கமாவது ஓண்ணாவது. சிவராத்திரிதான். ரொம்ப தாங்ஸுங்கோ.

இதுலே ஒரு காமெடி. நான் இந்த பதிவை இட்டபின் தமிழ்மணம் சென்று பார்த்தால், முதல் பக்கத்தில் கடைசி பதிவாக, ஏற்கனவே இருந்த பதிவுகளின் கீழ், இப்பதிவு சேர்க்கப்பட்டிருந்தது. அடுத்த பதிவு வந்ததும், இப்பதிவை முதல் பக்கத்திலிருந்து காணவில்லை. இதைவிட பழைய பதிவுகளெல்லாம் இன்னும் இருக்கின்றன. நான் மட்டும் என்ன பாவம் செய்தேனோ. அந்த காசி விஸ்வநாதருக்கே வெளிச்சம். ஆனாலும் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்த வண்ணமே இருந்ததால், 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் இருந்துகொண்டே இருந்தது. இதனால் மேலும் பலர் வந்து பார்த்தனர். பாத்தீங்களா பின்னூட்டத்தின் மகிமையை. இட்ட அனைவருக்கும் நன்றி. மற்றவர்களை இனி இடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு நாலு நாள் பதிவே போடலை. பணி நிமித்தம் வெளியூர் சென்றுவிட்டேன். இது போன்ற சிறு இடைவெளிகள் வரும். அதற்கு வருந்துகிறேன். இதற்குள் ஒருவர், என்ன சார் புதிரே போடக்காணுமே என்று மடலெழுதிவிட்டார். உங்களுக்கு ஒரு தனி வருந்துகிறேன். இந்த கொத்தனார் வெறும் புதிர் போடத்தான் லாயக்கு என்று ஒரு முத்திரை குத்தி வேறென்ன எழுதினாலும் படிக்காமல் போய்விடப் போகிறீர்கள். அது மாதிரியெல்லாம் பண்ணாதீங்க.

இன்னுமொரு தனிமடலில் ரீபஸுக்கும் குறுக்கெழுத்து புதிரின் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம் ஒரு நண்பர் என்று கேட்டிருந்தார். சற்று நேரத்திலே சின்னவனும் இதையொட்டியே ஒரு பதிவும் போட்டுவிட்டார். என்ன வித்தியாசம் என்று சரியாக சொல்ல தெரியவில்லை. க்ரிப்டிக் குறிப்புகள் பொதுவாக இரு பாகங்களைக்கொண்டதாக இருக்கும்.

ஒரு பகுதி விடையின் நேரடி அர்த்தமாகவும், மற்றொன்று வேறொரு வழியில் அவ்விடையை அடைவதாகவும் இருக்கும். இதில் சில வார்த்தைகளை வெட்டியோ, ஒட்டியோ, கலைத்தோ விடையை கண்டுபிடிக்க வேண்டியது வரும். இப்பகுதி ரீபஸாகவும் இருக்கலாம். ரீபஸ் பொதுவாக வார்த்தைகள் வரும் முறை மாறக்கூடாது. உதாரணமாக, நம் பதிவின் தலைப்பை எடுத்துக்கொண்டால் அம்மா, கொடு ஓல்டு மாங்க் என்பதுதான் தாய்க்குப் பின் தாரம் என்று வரும். இதை அம்மா, ஓல்டு மாங்க் கொடு என்று மாற்றக்கூடாது. இது என் கருத்து. சரியா என்பதை நிபுணர்கள் கூறினால் தெரிந்து கொள்ளலாம்.

இம்முறை மேல் என்ற பதத்தையும் உள் என்ற பதத்தையும் ஒட்டியே பல புதிர்கள் வந்துவிட்டன. அடுத்த முறை இதுபோல் அமையாது பார்த்துக் கொள்கிறேன். கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றி. பிரத்தியேக குறிப்பீடு பெற்ற நட்சத்திரங்களுக்கு மீண்டும் ஒரு 'ஓ'!

ஒவ்வொரு பதிவிற்கும் வந்து பின்னூட்டமிடும் G Raghavanனை இம்முறை காணவில்லை. I missed you Raghavan.

10 comments:

said...

இகொ. எப்படியோ போன பதிப்பைத் தவற விட்டுட்டேன். கண்ணுல படவேயில்லை. இப்ப இந்தப் பதிவ வச்சி அந்தப் பதிவுக்குப் போனா எல்லாம் முடிஞ்சிருச்சி. better luck next time டா ராகவான்னு தேத்திக்கிட்டேன். வேறென்ன செய்ய முடியும். இனிமே கொஞ்சம் விழிப்பா இருக்க வேண்டியதுதான்.

said...

"இன்னுமொரு தனிமடலில் ரீபஸுக்கும் குறுக்கெழுத்து புதிரின் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம் ஒரு நண்பர் என்று கேட்டிருந்தார்."

குறுக்கெழுத்தில் வார்த்தைகளை மட்டுமே உபயோக படுத்தவேண்டும். குறுக்கெழுத்துக்கு மிகவும் symmetric-ஆக அமைக்கப்பட்ட grid-ல்தான் விடைகள் எழுதப்பட வேண்டும். இலக்கணங்கள் கொஞ்சம் அதிகம்.


ரீபஸ்ஸில் வார்த்தைகள், படங்கள் என்று எதை வேண்டுமாலும் எடுத்து விடலாம். ரீபஸ் ஒரு புதுக்கவிதை மாதிரி. இன்னும் ஒரு தொல்காப்பியர் அதுக்கு வரலை.

said...

இராகவன்ஜி, அவர்களே, இந்த ஆங்கில ரீபஸ்ஸை முயலுங்களேன்:

ice ice ice

said...

மன்னிக்கவும், ice ice ice ல் பிழை இருக்கிறது. இந்த ஆங்கில ரீபஸ்ஸை முயலுங்க....

COXATME

said...

மொதல் புதிர்ல ஐஸ் க்யூப்னு சொல்ல முயற்சி பண்ணுனீங்களா? ஐஸ் x ஐஸ் x ஐஸ் போட்டாலே ஐஸ் க்யூப்தானே.

அடுத்த புதிரி....COME AT Xன்னு பிரிக்கிறேன். இதை எப்படியெல்லாம் சேக்கலாம்......தெரியலையே....

said...

ice cube-ன்னே வெச்சுக்கலாம். அதான் தவறான குறிப்புன்னு சொல்லிட்டாரே.

COXATME கொஞ்சம் கஷ்டமான குறிப்புதான். பதிவுல போட்ட புதிரையெல்லாம் ப்பூன்னு ஊதினாங்களேன்னு இப்படி குடுத்தா யாருமே திரும்பிக் கூட பாக்கலை.

COME வரைக்கும் நீங்க சரிதான். கொஞ்சம் கூட யோசிச்சு பாருங்க. முடியலைன்ன ரிடர்ன் வாங்க. விடையை சொல்லிடரேன்.

said...

தெரியலையா?
விடை : Income Tax Return

அதான் ரிடர்ன் வாங்கன்னு ஒரு க்ளூ குடுத்தேனே.

said...

இத நான் பார்க்கவே இல்லையே
:-(

said...

அடுத்த முறை தவற விடாதீங்க.

said...

அட இதுதான் விடையா...நல்லாருக்கு. சூப்பர்.