எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு .....என்னாடா இது மீண்டும் கருட புராணம் படிக்க ஆரம்பிச்சுட்டானேன்னு பாக்கறீங்களா? இதுவும் அது இல்ல. இந்த பதிவிலேயும் ஒரு புதிர் விளையாட்டைத்தான் பார்க்க போறோம். இந்த மாதிரி புதிருக்கு பெயர் ரீ-பஸ்.
உடனே அந்த ஸ-பஸ்ஸுக்கும் க-பஸ்ஸுக்கும் நடுவிலே வருமே, அந்த ரீ-பஸ்தானே அப்படின்னு கலாய்க்ககூடாது. இதன் ஆங்கில பெயர்தான் Rebus. தமிழ்க்குடிதாங்கிகளெல்லாம் அப்படியே ஒரு ஓரமாய் போய் இதற்கு 'மீண்டும் பேருந்து'-ன்னு பெயர் வைக்க வேண்டும்ன்னு கொரல் குடுங்க. ஆனா பாவம் மரத்தையெல்லாம் வெட்டாதீங்க. சரி, இப்போ விஷயத்திற்கு வருவோம்.
ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் வேறொரு வார்த்தையாலோ அல்லது ஒரு படத்தாலோ குறிப்பிடுவதே ரீபஸ் புதிராகும். ரீபஸ் என்றால் லத்தீனில் பொருட்களின் மூலம் என்று அர்த்தமாம். பொருளாலும் (meaning) பொருட்களாலும் (things) ஒரு சொல்லையோ சொற்றொடரையோ குறிப்பிடுவதுதான் ரீபஸ். சில எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் இவை எளிதில் விளங்கும். முதலில் ஆங்கிலத்தில்.
இவைகளின் விடைகள் முறையே - BACK DOOR, CROSS ROADS, SHUT UP AND SIT DOWN, SAILING OVER SEVEN SEAS, WHAT GOES UP MUST COME DOWN. புரிந்ததுதானே. இப்பொழுது தமிழில்.
1) வெட்டுதுண்டுதுண்டு
2) ர்பா
3)
பெண்
-------
மை
4) கோடுகோடு
5) மதராஸ், பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி
என்ன எல்லாத்தையும் கண்டுபிடிச்சீங்களா? ரொம்ப ஈசியாத்தானே இருந்தது. தெரியாதவங்களுக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லறேன். அட, அதாங்க விடை. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, திரும்பிப் பார், அடிமைப் பெண், இரு கோடுகள்,மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி (மணிப்பிரவாள ரீபஸ்). என்ன செய்யறது. சினிமா பெயரா போட்டாதான் பின்னூட்டம் போடறீங்க.
இப்போ இந்த பதிவின் முதலில் இருக்கும் ஐந்து புதிர்களின் விடைகளை கண்டுபிடியுங்கள். கூடவே இவைகளையும்.
ஆணை
-----
தாய்
பூனை
----
சுவர்
அழகர்
------
குதிரை
ணகி
மங்கை
-------------
அலர்
ரஜினி : "பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்"
வெள்ளம்
-----------------
தலை
இதெல்லாம் சரி. இந்த பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ஒரு ரீபஸ்தான். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பிரத்தியேக குறிப்பீடு (Special Mention) உண்டு. அட, அது இலவசமாத்தாங்க.
விடைகளை சில நாட்களுக்கு பின் தனிப்பதிவாக வெளியிடுகிறேன். இதெல்லாம் வெறும் சொற்களாலான ரீபஸ்கள். படங்கள், நிறங்கள் என்று புகுந்து விளையாடலாம். இடையில் உங்களுக்கு தோன்றும் ரீபஸ்களை பின்னூட்டத்தில் இடுங்களேன்.
இந்த பதிவிற்கு உதவிய இந்த பதிவிற்கு உதவிய ஹரிஹரன்ஸ் அவர்களுக்கு எனது நன்றி. அவர்களுக்கு எனது நன்றி.

42 comments:
ஐயகோ இது என்ன கொடுமை. நான் இந்த பதிவை இட்டபின் தமிழ்மணம் சென்று பார்த்தால், முதல் பக்கத்தில் கடைசி பதிவாக, ஏற்கனவே இருந்த பதிவுகளின் கீழ், இப்பதிவு சேர்க்கப்பட்டிருந்தது. அடுத்த பதிவு வந்ததும், இப்பதிவை முதல் பக்கதிலிருந்து காணவில்லை. இதைவிட பழைய பதிவுகளெல்லாம் இன்னும் இருக்கின்றன. நான் மட்டும் என்ன பாவம் செய்தேனோ. அந்த காசி விஸ்வநாதருக்கே வெளிச்சம்.
1. thai mel aanai
2. mathil mel poonai
3. pari mel azhagar
4. alar mel mangai
5. oro poyyai maraikka onbathu poi
6.thalaikku mel vellam
அன்புள்ள இலவசகொத்தனார் அவர்களே,
வணக்கம். நன்றாக வலை பதிகிறீர்கள். இணைய உலகில் பார்ப்பணீயத்தை வளர்க்க வந்த மாயவரத்தான், முகமூடி, டோண்டு மீது பயங்கர கோபத்தில் இருக்கிறேன்.
அவர்களின் தளம் சென்று நீங்கள் பின்னூட்டினால் இனிமேல் தகுந்த தண்டனை தருவேன்.
எச்சரிக்கை!
வாங்க அனானிமஸ். இப்படி பெயரைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே.
பதிவின் முதல் 5 ரீபஸ்களை சொல்லலையே. அதுபோல் பரிமேலழகரை அடுத்து இருக்கும் ரீபஸ்ஸும் தெரியலையா?
//oro poyyai maraikka onbathu poi // இது தவறான விடை.
மற்றவை எல்லாம் சரி. 5 ரீபஸ்கள் மேல் என்ற பதத்தை ஒட்டியே வந்திருக்கிறது. விடைகளை பார்க்கும்போதுதான் தெரிகிறது. மேல் இல்லாமல் மேலும் (அட இதிலின் மேல்) சில ரீபஸ்கள் தர முயல்கிறேன்.
தலைப்பு ரீபஸை முயலவில்லையா?
இன்னா கொத்தானாரே இம்புட்டு Easy யா கேட்கிறீங்க..
சரி எனக்கே பிரத்தியேக குறிப்பீடு !
தலைப்பு
தாய்க்குப்பின் தாரம்
2. kudaikkul mazhai
5. manasukkul mathappoo
1. enakkul oruvan
சின்னவன், உண்மையிலேயே நீங்க பெரிய ஆளுதான். பிடியுங்க உங்க பிரத்தியேக குறிப்பீடு.
எல்லாரும் சேர்ந்து சின்னவனுக்கு ஒரு 'ஓ' போடுங்க.
"ஓ".
அப்படியே மீதியிருக்கும் 5-6 ரீபஸ்களுக்கும் ஒரு பதில் போட வேண்டியதுதானே.
1. enakkuloruvan
kuruttu kannagi??
oru poi sonna pathu poi sonna mathiri
அனானிமஸ் - இன்னும் பேரை சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கறீங்களே. அனானிமஸ்ன்னு கூப்பிட கஷ்டமா இருக்குங்க.
குடைக்குள் மழை, மனசுக்குள் மத்தாப்பு - ரெண்டுமே சரி.
எனக்குள் ஒருவன், குருட்டு கண்ணகி - மீண்டும் ரெண்டும் சரி.
// oru poi sonna pathu poi sonna mathiri // - இல்லீங்க. இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணினா வந்திடும்.
நம்ம அனானிமஸ்ஸும் சின்னவனும் சூப்பர் கலக்கு கலக்கறாங்க. இன்னும் அவிழ்க்க வேண்டிய ரீபஸ்கள் எதெல்லாம்ன்னு பாக்கலாமா.
மல்மல்
வர்ளம்வர்
ரஜினி : "பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்,பொய்"
இது மூணுதான். சீக்கிரம் முடியுங்க. இந்த ரஜினி ரீபஸ் போட்டா இன்னுமொரு பிரத்தியேக குறிப்பீடு. வா ராஜா வா.
1.irumal
btw my name is Jayashree
மல்மல் - இருமல்
irumal
By the way, my name is Jayashree
வர்ளம்வர் -இருவர் உள்ளம்
ஜெயShree இன்னும் ஒன்னுத்தான் நீங்களே முடிச்சிடுங்க
ஜெயஸ்ரீ, தங்கள் வருகைக்கும் தங்களின் பெயரைத் தெரியப்படித்தியதற்கும் மிக்க நன்றி. மற்ற பதிவுகளையும் படித்து பாருங்கள்.
சின்னவன், இருமல் என்பது மிகச் சரியான விடை.
இன்னும் ரெண்டுதான் மீதி இருக்கு. இருக்குது இன்னுமொரு பிரத்க்தியேக குறிப்பீடு.
படிக்கிற மத்தவங்களும் திறமையைக் காமிங்கய்யா.
சின்னவன், இன்னும் ரெண்டு இருக்குங்கோவ். இப்படி கடைசி நிமிஷத்தில் விட்டு கொடுத்திராதீங்க.
"cr போட்டீங்கனா ஸ்ரீ வருங்க." எதோ தெரிஞ்சதை சொல்லலாமேன்னு. தப்பா எடுத்துக்காதீங்க.
சாரி. இருவர் உள்ளம் போட்டதை சரியா பாக்கலே. இன்னும் ஒண்ணுதான்.
கொத்தானாரே
தூக்கக் கலக்கத்தில் ரோசனை வர மாட்டேங்குது. சல்மான் பட் வேற இந்த அடி அடி அடிக்கிறான்.
ஏதாவது க்ளூ இருக்கா ?
இதுவும் ஒரு படப்பெயர்தானுங்க. தெரியலைன்னா சொல்லுங்க இன்னுமொரு க்ளூ தருகிறேன்.
உங்க வாய் முகூர்த்தம், பட்டை காலி பண்ணிட்டாங்களே நம்ம பசங்க.
ரூடி வாழ்க !!!
நாலு அவுட் இப்படி கொடுத்த இந்த மேட்ச் செயித்திடலாம்.
ம்ம்ம். ஒன்னும் தோண மாட்டேங்குது. காலையில் ஏதாவது தெரியுதா பார்க்கிறேன்.
சரி. நான் உங்களிடமிருந்து பதில் வரும் வரை காத்திருக்கிறேன். மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் மெயில் id கொடுக்கிறீர்களா ?
சின்னவன்,உங்கள் profileலில் இருக்கும் யாகூ mail idக்கு அனுப்பியுள்ளேன்.
சின்னவன்,
நீங்க 105-ஆ இல்ல 35-ஆ இல்ல கொடையா?
யாருங்க அது? என்ன சொல்ல வறீங்க?ஒண்ணு புரியலையே. சின்னவன், உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
ஆயிரம் பொய் ?
மணியன் சார். உங்க பதில் சரியானதே. எப்படின்னு மக்களுக்கு ஒரு விளக்கமும் போடறீங்களா?
நம்தும் கொஞ்சம் try பண்ணுங்க
Rjini oru thadavai sonna nooru thadavai donn mathiri.
Pathu poi = 1000 poi
Rajini oru thadavai sonna nooru thadavai sonna mathiri
10 poi= 1000 poi
ஜெயஸ்ரீ, ரொம்ப கரெக்ட்டுங்க. வாழ்த்துக்கள்.
சின்னவன், கலக்குங்க.
//சின்னவன்,
நீங்க 105-ஆ இல்ல 35-ஆ இல்ல கொடையா?//
கொஞ்சம் அதுக்கு மேலே பாருங்க!... சேர்த்து யோசியுங்க.
இப்படியும் சொல்லலாம்...
சின்னவன்,
நீங்க 105-ஆ இல்ல 35-ஆ இல்ல குடையா?
கொஞ்சம் அதுக்கு மேலே, மேலே, மேலே பாருங்க... சேர்த்து யோசியுங்க!.
இலவசக் கொத்தனார்...இப்பிடி ஆகிப் போச்சே............நான் இத எப்படி பாக்காம விட்டேன். எல்லாரும் எல்லாத்தையும் சொல்லீட்டாங்க. லட்டு மாதிரி பதிவு. அதுல புட்டு சுட வேண்டிய நான் விட்டுட்டு உக்காந்திருக்கேன்....
Post a Comment