Monday, January 23, 2006

இலவசம் - நீண்ட ஆயுள்

"இந்த உலகத்தில் நடப்பது பலதும் புரிவதில்லையா? அடிக்கடி உங்களை பார்த்து பலரும் மூளை இருக்கிறதா என்று கேட்கிறார்களா? உங்களுக்கே மேல்மாடி காலி போல தோன்றுகிறதா?" இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் "ஆமாய்யா. ஆமா" என்று பதில் கூறுகிறீர்களா? இன்றிலிருந்து காலையும் மாலையும் சுடோகு புதிர் போட ஆரம்பியுங்கள்.

என்னடா இது. வெவரமில்லாம பேசறானேன்னு பாக்கறீங்களா? ரொம்ப வெவரமாத்தேன் சொல்லுதேன். யூனிவெர்சிட்டி ஆப் எடின்ப்ராவில் டாக்டர் ஹார்டிங்கம் நடத்திய ஒரு ஆராய்ச்சியின் முடிவில் "மூளையில் உள்ள உயிரணுக்கள் அதிகமான தூண்டுதலுக்குள்ளாகும் பொழுது அதிகம் உபயோகிக்கப்படாத மரபணுக்கள் விழித்தெழுகின்றன. இவ்வாறு விழித்தெழும் மரபணுக்கள் மூளையை மேலும் ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மூளையை செயலிழக்க வைக்கும் நோய்களை அண்டவிடாமல் தடுக்க வகை செய்கின்றன." என்று ஒரு அறிக்கையை சமர்பித்துள்ளார்.

இதை நமது தினமலரில் அவர்களின் சொந்த சரக்கையும் சேர்த்து தங்களீஷில் பதிவு செய்துள்ளனர். இவ்விதழில் வரும் செய்திகளை நம்பாதவர்கள் இந்த ஆங்கில வலைத்தளதிற்கு செல்லலாம்.

அதென்னய்யா சுடோகு என்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. சுடோகு தெரியாதா இவன் என்னமோ எழுத வந்துட்டான் என பேசும் வீம்பிகள் இத்தளத்தில் தினமும் வரும் இலவச புதிரை போட பாருங்களேன்.

சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி. நமது முன்னேர்கள் குருகுலத்தில் கிளாசெல்லாம் கட்டடிக்காமல் சரியாக படித்து பல வித்தைகளை அறிந்து வைத்திருந்தனர். கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பலவிதமான மாயக்கட்டங்களை கண்டுபிடித்திருந்தனர். அதில் ஒருவகைதான் இந்த சுடோகு.

9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம். இதில் இட வல வரிசைகளை R1-R9 ஆக குறித்துக் கொள்வோம். மேல்-கீழ் வரிசைகளை C1-C9 ஆகவும், தடித்த கோடுகளால் காட்ட பெற்றிருக்கும் 3x3 உட்கட்டங்களை B1-B9 ஆகவும் குறித்துக் கொள்வோம்.



விதிகள்
1. ஒவ்வொரு இட-வல வரிசையிலும் (R1-R9), ஒவ்வொரு மேல்-கீழ் வரிசையிலும் (C1-C9) 1-9 என்ற எண்களை தலா ஒரு முறையே வருமாறு கட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இவைகளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு உட்கட்டத்திலும் (B1-B9) இவ்வெண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது.
3. தொடக்கத்தில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
4. காலியாக இருக்கும் கட்டங்களை மேற்கூறிய விதிகளுக்கிணங்கி நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு புதிர்


இந்த புதிரை எப்படி முடிப்பதென்று பார்ப்போம்.
உள்கட்டம் B4-ல் 1 இருக்கிறது. 2 எந்த கட்டத்தில் வரும்? R4-ல் ஏற்கனவே ஒரு 2 இருப்பதால் அங்கு இன்னுமொரு 2 வராது. எனவே மீதமிருக்கும் இரண்டு கட்டங்களில் எதாவது ஒன்றில்தான் வர வேண்டும். அதிலும் C2விலும் 2 இருப்பதால், வரக்கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். அது C1,R5.


அடுத்து உள்கட்டம் B5-ல் பார்த்தீர்களானால் R4, R5 ஆகிய இரண்டு வரிசைகளிலும் 2 இருக்கிறது. எனவே C6,R6 என்ற கட்டத்தில்தான் 2 வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 4. வரிசை R5-ல் ஏற்கனவே 4 இருப்பதால், C4,R4 என்ற கட்டத்தில்தான் வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 5. இது மீதி இருக்கும் கட்டமான C5,R5 என்ற கட்டத்தில்தான் வரும்.


இதைப்போன்று அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தால் விடை கீழ் காணும் படத்திலிருப்பது போல இருக்கும்.


இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்ததுதானே. மேலும் பல புதிர்களுக்கு மேற்கூறிய வலைத்தளத்திற்கு செல்லுங்கள். எடுத்துக்காட்டாக உபயோகித்த புதிர் இத்தளத்திலிருந்து எடுத்ததுதான். இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகளும் உண்டு.

சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன். நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.

20 comments:

said...

பாருங்க. இதுவும் நடுவில போய் மாட்டிக்கிடுச்சி. பின்னூட்டம் போட்டு காப்பாத்துங்க.

said...

உங்களுக்கு இ.கொத்தனார்னு பேர் வைக்கலாம். அதாவது e.mason.

சூப்பரா, அதே சமயம் சிம்பிளா இருக்கு உங்க நரேஷன்.

இந்த சூடோக்குக்காக நிறைய நேரம் பிச்சி பிச்சித்தான் என் தலையே சொட்டையாயிருச்சி (பார்க்க, என் புகைப்படம்)..

பிரிண்ட் எடுத்து வச்சிருக்கேன்.. செஞ்சி பாத்துட்டு சொல்றேன்..

said...

ஜோசப் சார். உங்ககிட்டேருந்து எனக்கு முதல் பின்னூட்டம். ரொம்ப நன்றி சார்.

முடி போனா என்ன சார். மூளை வளரும்ன்னு சொல்லறாங்களே. உங்க எழுத்து அதுக்கு சாட்சியா இருக்கே.

மத்த பதிவுகளையும் படிச்சி பாருங்க சார். உங்க கருத்துகளையும் போடுங்க.

said...

Freemason

Neat explanation. well done.
I am giving below my response to your feedback in my blog. (I guess u have not seen it)

கொத்தனார்,

உங்க ரீபஸ் புதிர் நல்லா இருந்தது. நாங்க மாணவர் சோலைன்னு ஒரு பகுதி வச்சிருக்கோம். அதுக்கு தமிழில் கொஞ்சம் ப்ரைன் டீஸர்ஸ் பண்ணித் தந்தீங்கன்னா நல்லா இருக்கும். நேரம் ஒதுக்க முடியுமா? உங்க மின்னஞ்சல் முகவரி காண முடியலை. எனக்குக் கொஞ்சம் எழுதுங்களேன்: nila at nilacharal dot com

said...

இ.கொ. இந்த சுடோகு பத்தி இன்னும் படிக்கலை. சரியாத் தெரியாததால. இப்ப இவ்வளவு சொல்லீருக்கீங்க. இதப் படிச்சுப் பாத்து முயற்சி பண்றேன்.

said...

கொத்தனாரே,
ஹிண்டுவுல வர இந்த சூடோகு வச்சுகிட்டு நம்ம பசங்கள்லாம் சால்வெல்லாம் பண்ணி சவடால் உட்டுகினிருந்தாங்க. நான் இது என்னடா நம்பர மாத்தி மாத்தி போடறதுன்னு முழிச்சிகிட்டுருந்தேன்.

இப்போ ஆபத்பாந்தவனாய் நீங்க வந்து விளக்கம் கொடுத்திட்டீங்க.

நன்றி நன்றி

said...

கொத்தனாரே!
ஏற்கனவே ப்ளாக் கிறுக்கு பிடிச்சு கிடக்கு. சுடோகு பத்தி வேற சொல்லிட்டீங்களா? விளங்குனாப்ல தான்

said...

adichi thool kilapareenga kothanar :))

Naan sudoku solve pannarathaala puthhi saalinu sollreengala?

(Inbtwn neenga yaarunu ippo than therijuthu...,namma kiitta sollave illa partheengala)

said...

Have linked this post in Desipundit

http://www.desipundit.com/2006/01/24/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

Cheers

said...

நிலா, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கு தனிமடலெழுதியுள்ளேன்.

said...

ராகவன், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். இதிலும் சிறப்புற வாழ்த்துக்கள்.

said...

இராமநாதன், போட ஆரம்பியுங்க. ஹிந்துல வர சுடோகு எல்லாம் சும்மா ஜுஜுபி. இதை விட கஷ்டமா எங்க கிடைக்கும்ன்னு வலைத்தளம் வலைத்தளமா அலைவீங்க. பாக்கத்தானே போறோம்.

said...

கைப்புள்ள, கிறுக்கு புடிச்சாச்சு. ஒரு விஷயத்துக்கு பிடிச்சா என்ன பல விஷயங்களுக்கு பிடிச்சா என்ன. புகுந்து விளையாடுங்க.

said...

கைப்புள்ளே, விளங்கினாத்தான் போட முடியும். ஹிஹி. (Pun-ன்னு. இதெல்லாம் நேரமுடான்னு, புலம்புது கேக்குது சாமியோவ்.)

said...

டுபுக்கு,
வாழ்த்துகளுக்கு நன்றி.

தேசி பண்டிட் இணைப்புக்கு நன்றி. (ஆனாலும் யாருமே வந்து பார்க்க மாட்டேங்குறாங்களே.) :(

யாருன்னு சொல்லலையா. ஒரு அவையடக்கம்தான். என்னடா எழுதற இ.கொ.ன்னு டின் கட்டினீங்கனா சொந்த பேருல பின்னூட்டம் போட போகலாமில்லை. அதான். ஹிஹி.

said...

சும்மாவே எனக்கு சுடோகு பிடிக்கும். நீண்ட ஆயுள் னு வேற சொல்லிட்டிங்க.. இனி தினமும் போட வேண்டியதுதான்.. (அது சரி சுடோகு போட்டு போட்டு மூளை வேலை நிறுத்தம் செய்தா அப்ப என்னா செய்யுறது?? )

said...

மூளை வேலை நிறுத்தம் செய்தால் தேர்தல் வருதே. போய் வோட்டு போட வேண்டியதுதான். வேலை செஞ்சா யாருக்காவது போட முடியுமா? :D

said...

Thanks Satheesh. If you google, you will find lot of sites where you can play sudoku online or print and play at your leisure.
(Travelling, no access to a machine with ekalappai and hence English Comments)

said...

Hi Everybody,

Am feeling great today. I had a visit from Poli Dondu himself! Not any anonymous comments but from the man himself. Feels like I have hit the big league.

Contents are R rated as usual and have been removed.

said...

good job mate! u make us all proud ;-)