Tuesday, January 10, 2006

மொத்த ஆளுமை விலை

முன்பெல்லாம் வன்பொருள் வாங்கினால் பல்வேறு மென்பொருட்களை இலவசமாக தருவார்கள். இன்றைக்கோ நிலமை தலைகீழ். வன்பொருள் விலைகள் சடசடவென சரிய, மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சில சமயம் சகாய விலையில் கிடைத்தாலும், upgrade செய்யும் பொழுது மூக்காலே அழ வேண்டியிருக்கிறது. ஜோசஃப் சாரை இது பற்றி விரிவாய் ஒரு பதிவு போட சொல்ல வேண்டியதுதான்.

மென்பொருள் என்றில்லை. ப்ரிண்டர்களை கிட்டதட்ட இலவசமாகவே கொடுத்து பின் அதற்கான கேபிள், மசி என்று கடனட்டையை நிரப்ப செய்யும் வியாபார யுக்திகள். இன்னும் சில தளங்களில், இலவசமாக உங்கள் புகைப்படத்தை அச்சிட்டு தருகிறோம், வெறும் தபால் கட்டணம் தந்தால் போதுமென விளம்பரம் செய்து பல மடங்கு கட்டணம் வசூல் செய்யும் வசூல்ராஜாக்கள். எங்களிடம் இரு வருட சேவைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால், இலவசமாய் razrயும் rokrயும் தருவோம் எனச்சொல்லி அதிக விலை திட்டங்களை தலையில் கட்டும் தொ(ல்)லைபேசி நிறுவனங்கள்.

இங்கு இதெல்லாம் போதாதென்று mail in rebate என்று ஒரு கொடுமை. (இதற்கு தனிப்பதிவுதான் போடவேண்டும்.)

எதற்காக இதெல்லாம் சொல்கிறேன் என்றால், இலவசமாய் கிடைக்கிறது, சகாய விலையில் கிடைக்கிறது என்று எதையாவது வாங்கிவிட்டு அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் கஷ்டப்படாதீர்கள்.

ரொம்ப சீரியஸாய் போச்சோ? வீட்டில் உள்ள (இலவசமாய் கிடைத்த) பிரிண்டரில் மசி தீர்ந்துவிட்டது. புதிய மசி தோட்டாவிற்கு (cartridge என்றால் தோட்டாதானுங்களே) கொடுத்த விலையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. அதான். :)

இதற்கு பின் இன்றைய இலவசமாய் ஒரு நகைச்சுவை துணுக்கு. சற்றே அசைவ வகை. ஆகவே பிடிக்காதோர் மன்னித்துவிட்டு அடுத்த பதிவிற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை ஆங்கிலத்திலே சொல்வது சற்றே எளிதாக இருக்கிறது. ஆகவே மற்றுமோர் மன்னிப்பு.

"There is sex for money and there is sex for free. And sex for free costs more!"

புரிந்ததா. இதைத்தான் TCO - Total Cost of Ownership (தமிழிலே என்னங்க?) என்று குறிப்பிடுகின்றனரோ.

2 comments:

said...

நான் தமிழ் தட்டச்சு செய்ய ஆரம்பித்து
விட்டேன்.உங்கள் தூண்டுதலே காரணம்.நன்றி

said...

வாங்க சிவஞானம்ஜி,
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நான் என்ன பண்ணினேன். உங்களுக்கு ஆசையிருந்துது. ஆரம்பிச்சுட்டீங்க. இனிமே பிச்சு உதறுங்க.

நம்ம பதிவு எல்லாமும் படியுங்க. படிச்ச அப்புறம் கட்டாயம்.... அதான் உங்களுக்கே தெரியுமே.