Friday, January 13, 2006

இதைப் படிங்க பார்ப்போம்

அக்னகவாக்னைகுதுல்ழ்கவம்பொநத்ள்ருஎங்ல்து

இல்லைங்க. இது கருட புராணத்திலிருந்து எடுத்தது இல்லை. பல பேர் Da Vinci Code படித்திருப்பீர்கள். பலரது வலைப்பூக்களில் Iris Rising போட்டிகளை முடித்துவிட்டதாக கூறியிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இது எளிதாகவே இருக்கும். தெரியவில்லை என்றால் விடை பின்னூட்டத்தில்.

13 comments:

said...

இதைப் போன்ற codes (தமிழில் என்னங்க? பரிபாஷை எனப் படித்த ஞாபகம்.) சீசர் பெட்டி (Ceasar Box) எனும் வகையை சார்ந்தவை. மன்னர் ஜூலியஸ் சீசர்தான் முதலில் இதை பயன்படித்தியதாக தகவல். வார்த்தைகளை நான்காகவே ஆறாகவோ பிரித்து கீழ்கண்டவாறு எழுதிக் கொள்ள வேண்டும்.

அக்னக அக்னகவாக்
வாக்னைகு னைகுதுல்ழ்க
துல்ழ்க வம்பொநத்ள்
வம்பொந ருஎங்ல்து
த்ள்ருஎ
ங்ல்து

இப்பொழுது மேலிருந்து கீழாக படிக்கவேண்டும்.

முதல் அட்டவணை இப்படி போகிறது - அவாதுத்ங்க்க்..... வார்த்தை அமைப்பு சரியில்லை
இரண்டாம் அட்டவணை - அனைவருக்கும்எனதுபொங்கல்நல்வாழ்த்துக்கள்.
சரியான இடங்களில் வார்த்தைகளை பிரித்தால் இது இப்படி வருகிறது.

அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

said...

அட்டவணைகள் சரியாக வரவில்லை. ஒன்றன் கீழ் ஒன்றாக இப்பொழுது அளித்திருக்கிறேன்.

அக்னக
வாக்னைகு
துல்ழ்க
வம்பொந
த்ள்ருஎ
ங்ல்து

அக்னகவாக்
னைகுதுல்ழ்க
வம்பொநத்ள்
ருஎங்ல்து

said...

என்னங்க நல்ல நாள் அதுவுமா இப்படி மண்டை காய வச்சிட்டிங்க. :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடன்

கீதா

said...

கீதா மேடம்,
இன்னைக்கு லீவுதானுங்களே. வீட்டுல டீவி பாக்கறதுக்கு பதிலா கொஞ்சம் மூளையை கசக்கவைக்கலாமேன்னு பார்த்தேன். உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

said...

மூளை (இருக்கா!?) மழுங்கிடுச்சு :-((
விடையைப் பார்த்தால் எளிதாக இருப்பது போல் பட்டாலும், கண்டு பிடிக்கலை :-((

said...

பாலா,
எப்பவுமே விடை தெரிஞ்சா இதை எப்படி விட்டோம்ன்னுதான் தோணும். நான் முன்னமே சொன்னா மாதிரி (iris rising) இதைப் போன்ற விளையாட்டுகளுக்கு இந்த வலைத்தளம் போய் பாருங்க - www.iimi-iris.com/iris/irising/klueLESS. டான் பிரௌனின் வலைத்தளத்திலும் (www.danbrown.com/) சில புதிர்கள் உண்டு. மேலும் சில புதிர்களை நானும் அப்பப்போ பதியறேன். ரொம்ப கவலைப் படாதீங்க. அதான் சொல்லிட்டேனே - free-யா விடு மாமே.

said...

கொத்தனாரா,

பார்த்ததுமே அது பொங்கல் வாழ்த்துன்னு தெரிஞ்சிருச்சி. ஒருவேளை எங்கே பார்த்தாலும் பொங்கல் வாழ்த்தா இருக்கறதால ஒரு இன்ட்யூஷனா இருக்கலாம். (இல்லை, நான் ஜீனியஸாகவும் இருக்கலாம்...:-))))). ஆனால் உங்கள் விளக்கம்தான் ரொம்ப குழப்புது.

said...

நிலா,
அதிலென்ன சந்தேகம். நீங்க ஜீனியஸ்தான். விளக்கத்திலே என்ன குழப்பம்.
1. அந்த வரியை நாலு நாலு எழுத்துக்களாகவோ, ஆறு ஆறு எழுத்துக்களாகவோ வெட்டவும்.
2.பிறகு வெட்டிய பகுதிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கவும்.
3. அப்படி அடுக்கியதிலிருந்து முதல் எழுத்துக்களை எடுத்து தனியாக எழுதிக்கொள்ளவும். (வரி 2)
4. பின் இரண்டாவது எழுத்துகளை எடுத்து வரி 2-ல் சேர்க்கவும்.
5. இதைப்போலவே 3,4,5 மற்றும் 6-ம் எழுத்துகளை எடுத்து முறையே வரி 2-ல் சேர்க்கவும்.
6. இப்பொழுது வரி 2-ல் சரியான இடங்களில் வார்த்தைகளை பிரித்தால் சொல்லப்பட்ட செய்தி ரெடி.
7. இந்த சுவையான புதிரை நீங்களும் உங்க வீட்டுல செய்து பாருங்களேன்.

இப்போ குழப்பமெல்லாம் தீர்ந்துதா :)

said...

perfect. tku

said...

இதுதாங்க. டீவி சமையல் குறிப்பு மாதிரி சொன்னா டக்குனு புரியிது. :D

கோச்சுக்காதீங்க. சும்மா டமாசு.

said...

எய்ன்னங்க, இய்னிப்படி நைநல்ல நைநாளிலே
முய்னூளையைப் பிய்னிச்சும்படி செய்னுச்சுட்டீங்க?

said...

வாழ்த்துக்களை கண்டுபிடிப்பதற்குல் அடுத்த பொங்கல் வந்து விடும் போல் இருக்கே!!!

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

said...

அந்த சமையல் குறிப்பு விளக்கம் சூப்பர் மாம்ஸ்!!